Monday, February 16, 2009

இஸ்லாத்தை வீழ்த்த அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்ற ஆங்கில நூலிலிருந்து- பகுதி 04

நம்பிக்கை சுதந்திரம் (Freedom of Belief)




முதலாளித்துவ கோட்பாட்டின்படி நம்பிக்கை சுதந்திரம் என்பது. ஒருசித்தாந்தத்தையோ. ஒரு மதத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட கருத்தையோநம்புவதற்கும் அதே சமயம் நம்பாமல் இருப்பதற்கும் ஒரு தனி மனிதனுக்குள்ளசுதந்திரமாகும், இன்னும் அவனுக்கு தனது மதத்தை மாற்றிக் கொள்ளவும் அல்லதுமதத்தையே நிராகரித்துக் கொள்வதற்கும் உரிமை உண்டு, தங்களை இஸ்லாமியசமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் குöப்பார்களின் சில தேய்ந்துபோன ஒலிநாடாக்கள் நம்பிக்ளை சுதந்திரம் என்பது இஸ்லாத்துக்கு முரணானதால்என்று கூறுகிறார்கள், தங்கள் வாதத்துக்கு ஆதரவாக பின்வரும் குர்ஆன் வசனத்தைகுறிப்பிடுகிறார்கள்.

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை. (குர்ஆன் 2:256)
ஏற்றுக்கொள்கிறவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும். இன்னும் நிராகரிக்க நாடுகிறவர்கள்நிராகரித்துக் கொள்ளட்டும். (குர்ஆன் 18:29)
இவர்கள் அறிந்து கொண்டேதான் இந்த வசனம் விவாதிக்கும் விஷயத்தைகண்டு கொள்ளாது விடுகிறார்கள், இந்த இரு வசனங்களின் உரையாடல்களும்நிராகரிப்பவருக்கு மட்டுமே உரியதாகும், முஸ்−லிஇஸ்லாத்தைஏற்றுக்கொள்வதோ அல்லது ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதோ தனிமனிதநிலைபாடாகும், அவர்களை முஸ்லிம்கள் ஒரு போதும் இஸ்லாத்தை நம்பும்படிநிர்பந்திக்க முடியாது.
ஆனால் இந்த நிலைபாடு முஸ்லிம் முற்றிலும் பொருந்தாது, இஸ்லாத்தைஏற்றபின் அதை நிராகரிப்பதற்கோ அல்லது விட்டுவிடுவதற்கோ வாய்ப்புஅவர்களுக்கு இல்லை, இஸ்லாத்தை விட்டு தன்னை தூரமாக்கிக் கொள்ளும் மதம்மாறியவர் அதற்குரிய பாவ மன்னிப்பை தேடியாக வேண்டும், தொடர்ந்து அவர்தனது நிராகரிப்பை வற்புறுத்துவாரேயானால் அவர் மீது பெரும் தண்டனைநிறைவேற்றப்பட வேண்டும். ஏனெனில்,
இறைதூதர்(ஸல்) கூறினார்கள். எவர் இஸ்லாத்திலிருந்து நிராகரிப்பின் பக்கம்திரும்பி விடுகிறாரோ அவரை கொல்லுங்கள்.
ஆகவே நம்பிக்கை சுதந்திரம். இஸ்லாத்தை ஏற்றபிறகு அதன் கொள்கை(Aqeedah)களை அறிந்து கொண்ட பிறகு முஸ்லிம்களுக்கு ஒரு போதும்வழங்கப்படுவதில்லை, முஸ்லிம்கள் வேறு எந்த ஒரு உண்மையான இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் அமைந்த கிருஸ்துவம். யூதமதம் போன்றமதங்கள் ஏற்பதற்கோ. முதலாளித்துவ சித்தாந்தம் அல்லது பொது உடமை சித்தாந்தம் போன்ற எந்த ஒரு கொள்கைகளை ஏற்பதற்கோ. வேறு எந்த ஒருகொள்கையின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கை முறையினை அமைத்துக்கொள்வதற்கோ. இஸ்லாத்தையன்றி வேறு ஒரு முதலாளித்துவவாதிகள் கோரும்நம்பிக்கை சுதந்திரம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவானவிஷயம், முடிவாக இந்த முதலாளித்துவ கோட்பாட்டை நிராகரிப்பதற்கும் இதைபிரச்சாரம் செய்பவர்களை எதிர்ப்பதற்கும் முஸ்−ம்கள் கடமைப்பட்டுள்ளனர்.
பேச்சு சுதந்திரம் ( Freedom of Expression)
இந்த சுதந்திரத்தின்படி ஒருவர் எத்தகைய விஷயம் குறித்தும் எத்தகையகருத்தையும் அபிப்ராயத்தையும் எந்த இடத்திலும் கட்டுபாடின்றிகூறிக்கொள்ளலாம்,இந்த சுதந்திரம் சில முஸ்லிம்களுக்கு கவர்ச்சியாக தென்படக்கூடும், ஏனெனில்காவல்துறையின் ஆதிக்கத்தில் இருக்கும் சில இஸ்லாமிய நாடுகளில் அதன்ஆட்சியாளர் குறித்த எந்த ஒரு கருத்தையே அல்லது அபிப்ராயத்தையோமுஸ்லிம்கள் கூறுவதற்கு வாய்ப்பில்லாமல் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் கருத்துக்கள் இஸ்லாத்துக்கு ஏற்புடையதாக இருந்த போதிலும்.இறைமறை குர்ஆனுக்கும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைக்கும்இசைவாக இருந்த போதிலும் அந்த ஆட்சியாளருக்கு எதிராக இருக்கும் பட்சத்தில்அதை கூறுவதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை, உதாரணமாக யூதர்களையும்.இணை வைப்பவர்களையும் விசுவாசிகளிடத்தில் அதிகமான பகைமை பாராட்டக்கூடியவர்களாக நீர் காண்பீர், (குர்ஆன் 5 82) போன்ற இறை வசனங்கள்யூதர்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவதாக இருப்பதால். அதுபோன்றகுர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் பொது இடங்களிலிருந்தும்இறைவசனங்களையும் ஹதீஸ்களையும் பொது இடங்களி−ருந்தும்இறைஇல்லங்களின் மதில் சுவர்களிலிருந்தம் நீக்கிவிடும்படி தங்களுடையஅடக்குமுறை அடிவருடிகளுக்கு ஒரு முஸ்லிம் நாட்டுக்கு ஆட்சியாளர் கட்டளைஇட்டிருக்கிறார், முஸ்லிம் சமூகத்தின் மீது அதன் ஆட்சியாளர்கள் தங்களதுகொடுங்கோன்மைகளையும் அல்லாஹ்(சுபு)வின் வரம்புகளை கடந்த அவர்களின்அக்கிரம அடக்கு முறைகளையும் ஏவிவிட்டிருந்த போதிலும். அந்தஆட்சியாளர்களால் சொல்லென்னா துயரங்களுக்கு முஸ்லிம்கள் ஆளாகி விட்டிருந்தபோதிலும் அல்லாஹ்(சுபு)விற்கு வெறுப்பான குöப்பார்களின் வழிமுறைகளைஏற்பதற்கு முஸ்−ம்களுக்கு அனுமதி இல்லை.
முதலாளித்துவ கோட்பாடு கூறும் பேச்சு சுதந்திரம். ஆட்சியாளர்களை விசாரணைசெய்யவும் அவர்களின் நடத்தைகளை விமர்சனம் செய்யவும் மட்டும்பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக. குöப்ரை வெளிப்படையாக ஆதரித்து பேசுவது.ஏக இறைவனை அல்லாஹ்(சுபு)வை நிராகரிப்பது. இஸ்லாத்துக்கு முரண்பாடானஅல்லது இஸ்லாம் அல்லாத கோட்பாடுகளி−ருந்து வெளிப்படும் கொள்கைகளைஆதரித்து பேசுவது. இஸ்லாமிய விதிமுறைகளை வட்டித்தொழில். சூதாட்டம்.மதுபானம். விபச்சாரம். பா−யல் வெறித்தனம் ஆகியவைகளை கோருவது என்றஅளவில் அதன் சுதந்திர எல்லைகள் விரிந்து கிடக்கின்றன, இந்த சுதந்திரம்.அல்லாஹ்(சுபு) மகிமை படுத்துமாறும் பாதுகாக்குமாறும் கட்டளையிட்டுள்ள பலஇஸ்லாமிய மாண்புகளை இழிவு செய்வதாக உள்ளது.
பேச்சு சுதந்திரம் பற்றிய பிரச்சாரம் என்பது மேற்கத்திய குöப்பார்களின்அவர்களது கங்காணிகளும். நயவஞ்சகர்களும். அல்லாஹ்(சுபு)வுக்கு மாறுசெய்கிறவர்களும். இஸ்லாத்தின் எதிரிகளும் இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமியசமூகத்தின் இருப்பை அழித்திடவும் வெளிப்படையாக மேற்கொள்ளும்முயற்சியாகும், இது சிதறுண்ட பல கூட்டங்களாகவும் ஆக்குவதற்கு பேசப்படும் பேச்சுகளுக்கு கொடுக்கப்படும் சுதந்திரமாகும், இஸ்லாம் நிராகரிக்கும் இனவாதத்தைஅது அனுமதிக்கிறது, ஆனால் இனவாதத்தை இஸ்லாம் தடை செய்துள்ளது,மேலும் இறைதூதர்(ஸல்) அவர்கள் இதை அழுகிப்போன கருத்து என்றுகூறியிருக்கிறார்கள், பேச்சு சுதந்திரம் பெண்களின் ஒழுக்கக்கேடு. தீமை.இறைமையின் புனிதத்தை கெடுக்கும் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆதரிக்கும்குöப்ருடைய கருத்துக்களை கோருவதாக உள்ளது, சல்மான் ருஷ்டி என்றஇஸ்லாத்தை விட்டு வெளியேறியவன் இறைதூதர்(ஸல்) அவர்களையும்விசுவாசிகளின் தாயார்களைப் பற்றியும் சித்தரித்துக் கூறிய கொடி கருத்துக்களைவெளியிடும் அளவுக்கும். அதை பல இடங்களில் வினியோகம் செய்யும்அளவுக்கும் இந்த பேச்சு சுதந்திரம் முதலாளித்துவவாதிகளுக்கு உதவியிருக்கிறதுஎன்பதை முஸ்லிம்களும் உலக மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் எந்த ஒரு விஷயம் குறித்தோ அல்லது பிரச்சனை குறித்தோதன்னுடைய கருத்தை கூறுவதற்கு ஒரு முஸ்லிமுக்கு அனுமதி வழங்கியேஇருக்கிறது, ஆனால் அவனுடைய கருத்து இஸ்லாமிய கோட்பாட்டிலிருந்துபெறப்பட்டதாகவோ. அல்லது அதன் மீது கட்டமைக்கப்பட்டதாகவோ அல்லதுஅதன் வரம்புகளுக்கு உட்பட்டதாகவோ இருக்க வேண்டும் என்பது நிபந்தனை,அவனுடைய கருத்து இஸ்லாமிய ஆட்சி தலைவரின் (கலீöபா) கருத்துக்கோஅல்லது அவர் அமல்படுத்துகின்ற விதிமுறைகளுக்கோ அல்லது பெரும்பான்மைமுஸ்லிம்களின் கருத்துக்களுக்கோ முரண்பட்டு இருந்த போதிலும். சரியே. அந்தகருத்து இஸ்லாமிய ஷரியத்தின் ஆதாரங்களோடு ஒத்துப்போவதாகவும் ஷரியத்தின்வரம்புகளை நிலைநிறுத்துவதாகவும் இருக்க வேண்டும், மேலும் கலீöபாஅல்லாஹ்(சுபு)வுக்கு வெறுப்பான ஒரு விஷயத்தை கூறினாலோ அதை செய்யும்படிகட்டளையிட்டாலோ அவரைக் கண்டிக்கும் விதத்தில் கருத்துக்களைக் கூறுவதற்குமுஸ்லிம்களை இஸ்லாம் பணிக்கிறது, அல்லாஹ்(சுபு)வுக்காக இந்த விஷயத்தில்ஆட்சி தலைவருக்கு எதிராக ஜிஹாது செய்யும் அளவுக்கு உறுதியான நிலைஎடுப்பதற்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது, இறைதூதர்(ஸல்) கூறினார்கள்.
உயர்தியாகிகளான ஷூஹதாக்களின் தலைவர் ஹம்ஸô இப்னு அப்துல்முத்தலிப் (ரலி) ஆவார், ஒரு மனிதர் கொடுங்கோல் ஆட்சியாளர் ஒருவருக்கு எதிராகநின்று கொண்டு அவனை நன்மையை ஏவவும் தீமையை தடுத்துக் கொள்ளவும்உபதேசம் செய்கிறார், அவன் அவரை கொலை செய்து விடுகிறான்,
இருந்த போதிலும் இஸ்லாத்திற்கு எதிராகவோ அதன் கொள்கைகளுக்குஎதிராகவோ அல்லது அதன்மீது கட்டமைக்கப்பட்டுள்ள எந்த ஒருநெறிமுறைகளுக்கு மாற்றமாகவோ எந்தக் கருத்தையும் கூறுவதற்குமுஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை.
இதன் அடிப்படையில் பெண் விடுதலை. தேசிய வாதம். தேசப்பற்று.மாநிலப்பற்று ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதற்கும். முதலாளித்துவ கோட்பாடு.பொது உடமை கோட்பாடு போன்ற குöப்ர் கொள்கைகளையோ அல்லதுஇஸ்லாத்துக்கு முரண்பாடான எந்த ஒரு கருத்தையோ கோருவதற்கோஆதரிப்பதற்கோ முஸ்−ம்களுக்கு அனுமதியில்லை.
ஆகவே முதலாளித்துவாதிகள் கோரும் பேச்சு சுதந்திரம் முஸ்−ம்களுக்குஅனுமதிக்கப்பட்டதல்ல, முஸ்லிம்கள் ஷரியத் வரம்புக்குட்பட்டோ தங்களதுசெயல்பாடுகளை அடக்கிக் கொள்ள வேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்,
எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கின்றாரோ அவர்நல்லவைகளை மட்டும் பேசட்டும். தீயவைகளை விட்டும் தவிர்ந்து கொள்ளட்டும்.இங்கு நல்லவை என்று குறிப்பிட்டது இஸ்லாத்தைப் பற்றியே ஆகும். அல்லது இஸ்லாம் அங்கீகரித்த விஷயத்தை பற்றியாகும். இஸ்லாத்துக்கு எதிரானவிஷயங்களின் பக்கம் பார்வையை செலுத்துவதைக் கூட இஸ்லாம் தடைசெய்கிறது. ஏனெனில் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். உங்களது விருப்பங்களும்உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களும், இறை வெளிப்பாடு மூலம் நான் எதைகொண்டு வந்தேனோ அதற்கு முற்றிலும் கீழ்படியும் வண்ணம் இல்லாத வரையில்நீங்கள் ஒரு விசுவாசி என்று சொல்லப்பட மாட்டீர்கள்.
சொத்துரிமை சுதந்திரம் ( Freedom of Ownership)
முதலாளித்துவ கோட்பாட்டின் அடிப்படையில் சொத்துரிமை சுதந்திரம் என்பது.ஒரு மனிதர் எந்தஒரு சொத்தையும எந்த வழியின் மூலமாகவும் அடைந்து கொண்டுஅதை எந்த வகையில் வேண்டுமானாலும் தன் விருப்பம் போல பயன்படுத்தஉரிமை உடையவர் என்பதாகும், இதில் ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால்முதலாளித்துவ கோட்பாடு கூறும் அடிப்படையில் மற்ற மனிதர்களின் உரிமையில்வரம்பு மீறக்கூடாது என்பதுதான், இந்த அடிப்படையில் அல்லாஹ்(சுபு)அனுமதித்து இருந்தாலும் அல்லது அனுமதிக்காவிட்டாலும் ஒரு மனிதன்எத்தகைய சொத்துக்களையும் அடைந்து கொள்ளலாம், மேலும் அல்லாஹ்(சுபு)அனுமதித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த சொத்துக்களை அவன் விருப்பப்படிபயன்படுத்தலாம்.
இந்த சுதந்திரத்தின் அடிப்படையில் ஒரு தனிநபர் எண்ணெய் வளம். கனிமவளம்ஆகிய பொது சொத்துக்களை அடைந்து கொள்ளலாம், இன்னும் கடற்கரைகள்.ஆறுகள். சமூகத்துக்கு அவசியமான நீர்வளங்கள் ஆகியவைகளையும்சொந்தமாக்கிக் கொள்ளலாம், மேலும் அல்லாஹ்(சுபு) அனுமதித்துள்ள குடியிருப்புவீடு. தோட்டம். வர்த்தக நிறுவனம். தொழிற்சாலை ஆகியவைகளையும்.அல்லாஹ்(சுபு) அனுமதி மறுத்துள்ள நாய்குட்டிகள். வட்டித் தொழில் செய்யும்வங்கிகள். பன்றி பண்ணைகள். விபச்சார விடுதிகள். ஆபாச நடன அரங்கங்கள்.நிர்வாண விடுதிகள். சூதாட்ட விடுதிகள். மதுபான விடுதிகள் ஆகியவைகளையும்வைத்துக் கொள்ளலாம், இன்னும் இதன் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவழிகளான வாரிசு உரிமை. அன்பளிப்பு. வியாபாரம். விவசாயம். வேட்டையாடுதல்மற்றும் பொருள் உற்பத்தி ஆகிய வழிகள் மூலமாக பணம் சம்பாதிக்கலாம், முதலீடுசெய்யலாம்.
அதே சமயத்தில் தடுக்கப்பட்ட வழிகளான சூதாட்டம். வட்டித் தொழில்.மதுபான விற்பனை. போதை பொருள் விற்பனை இன்னும் இதுபோன்ற எண்ணற்றவழிகள் மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம், முதலீடு செய்யலாம்,இத்தகைய சுதந்திரம் முற்றாக இஸ்லாத்திற்கு முரண்படுவதால் இதைஏற்றுக்கொள்வதை இஸ்லாம் தடை செய்கிறது, இந்த சொத்துரிமை சுதந்திரத்தைஏற்றுக் கொண்டதின் மூலம் முதலாளித்துவ நாட்டுமக்கள் பல்வேறு நோய்களுக்குஆளாகியிருக் கிறார்கள், ஒழுக்கக்கேடு. திட்டமிட்ட குற்றங்கள். சுயநலம். அடுத்தவர்கஷ்டத்தில் தனது இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வேட்கை ஆகியவைகள்நிறைவு பெற்ற சம்பிரதாயங்களின் வடிவமாக ஆகிவிட்டன, கொடிய நோய்கள்கடுங்குற்றங்கள். சமூக கட்டமைப்பான குடும்ப வாழ்க்கை சீர்கேடுகள். தொற்றுநோய்போல பரவும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவை மிகுதமாக மிகைத்து விட்டன,இதன் விளைவாக மக்களுக்கு நன்மையானதோ அல்லது போதை பொருள் போன்றதீமையானதோ அதன் விற்பனைகள் ஊக்குவிக்கப்படுகின்றன, இத்தகையசுதந்திரங்களின் விளைவாக தொழில் அதிபர்கள் என்று அழைக்கப்படுகின்ற சிறுஎண்ணிக்கையினர் வசம் சொத்துக்கள் குவிகின்றன, இப்பெரும் செல்வத்தினால்ஏற்பட்ட செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகள்செயல்பாட்டிலும் சமூக விவகாரங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் இவர்கள்ஆதிக்கம் செலுத்துகின்றார்கள், முதலாளித்துவ ஆட்சி அமைப்பு என்ற பெயர் இதற்கு பொறுத்த மானதுதான், அதன் முக்கியமான அம்சத்தின் விளக்கவெளிப்பாடாகவே இந்த பெயர் அமைந்துள்ளது, இந்த வியாபாரிகளாகவும் இருந்துகொண்டு தங்கள் நாட்டு அரசையும் உலக நாடுகளின் அரசுகளையும் தூண்டிவிட்டுயுத்த முஸ்தீபுகளை தோற்றுவிக்கிறார்கள், இத்தகைய யுத்தங்களால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இல்லை, ஆனால் இவர்களுக்கு தங்கள் லாபம்ஒன்றே குறிக்கோளாக உள்ளது, இவர்களின் ஆயுத வியாபாரம் மூலம் ரத்தம்சிந்தப்படுவது குறித்தோ உள்ளது, இவர்களின் தங்கள் லாபம் ஒன்றே குறிக்கோளாகஉள்ளது, இவர்களின் ஆயுத வியாபாரம் மூலம் ரத்தம் சிந்தப்படுவது குறித்தோஅதனால் விளையும் கொரும் துயரங்கள் குறித்தோ இவர்களுக்கு எந்த கவலையும்கிடையாது.
தனிமனித சுதந்திரம் ( Personal Freedom)
நான்காவதாக முதலாளித்துவாதிகள் கோரும் இந்த தனி மனித சுதந்திரத்தின்படிஒரு மனிதன் தன் சொந்த வாழ்க்கையில் அடுத்த மனிதரது சொந்த வாழ்க்கையில்வரம்பு கடக்காமல் எந்த விதத்திலும் வாழ்ந்து கொள்ள உரிமை உண்டு, ஒருவன்திருமண உறவுகளுக்கு அப்பால் ஒரு அவள் சம்மதத்தோடு எத்தகைய உறவைவேண்டுமானாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம், அவள் வயது வந்தவளாக இருக்கவேண்டும், பா−யல் வெறித்தனங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது, அதுபோலவே பொது விதிமுறைகளை அனுசரித்து ஒருவன் எதை வேண்டுமானாலும்உண்ணலாம், எதை வேண்டுமானாலும் பருகலாம் எத்தகைய ஆடைவேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்.
இந்த முதலாளித்துவவாதிகளுக்கு ஹராம். ஹலால் போன்ற எந்தவிதசிந்தனைகளும் சொந்த வாழ்க்கையில் கிடையாது, எதை சட்டம் என்றுவைத்திருக்கிறார்களோ அதனை அனுசரித்து ஒருவன் செயல்படுகிறவரை அவனுக்குஎந்தவித தடையும் கிடையாது, இந்த சட்டநெறிமுறைகளுக்கு உட்பட்ட நடத்தைகள்என்பதை பொறுத்தவரை ஒரு சமுதாயத்துக்கும் மற்றொரு சமுதாயத்துக்குமிடையேஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு பாரபட்சங்கள் அனுசரிக்கப்படுகின்றன.
மதத்துக்கு இந்த சுதந்திரங்கள் மீது எந்தவித அதிகாரமும் இல்லை,முதலாளித்துவ சித்தாந்தத்தின் அடிப்படை கொள்கைப்படி மதம் ஆட்சி அமைப்புஇரண்டிற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது, இந்த சுதந்திரங்களைமுதலாளித்துவ நாட்டுமக்கள் பிரயோகிப்பதின் விளைவாக பல்வேறு சட்டரீதியானஉறவுமின்றி ஒன்றாக வாழ்கிறார்கள், ஆண்களும் பெண்களும் சட்டத்தின்துணையோடு ஓரின சேர்க்கை (Homo Sex) போன்ற அருவருக்கத்தக்கசெயல்களில் ஈடுபடுகிறார்கள்.
தனிமனித சுதந்திரம் முதலாளித்துவ நாடுகளில் பா−யல் ரீதியான பல்வேறுவெறித்தனங்களையும் எண்ணிலடங்கா பூசல் களையும் தோற்றுவித்திருக்கிறது,மேலும் இதன் காரணமாக சமூகத்தில் பரத்தையர் இலக்கிய ஏடுகளும். விபச்சாரதிரைப் படங்களும். பாலியல் தொலைபேசி தொடர்புகளும். நிர்வாண அரங்குகளும்.இந்நாடுகளில் அதிகரித்துவிட்டன, சீர்கேடுகளும் ஒழுங்கீனமும் சமூகத்தை ந−யச்செய்து விட்டன, உண்மையான மனித பண்பாடு அதாள பாதாளத்தில் வீழ்ந்துகிடக்கிறது, ஒவ்வொரு சமுதாயத்திற்கிடையே இச்சுதந்திரங்கள் பாரபட்சமானஅளவுகோ−ன்படி கையாளப்படும் இந்த நிலை முதலாளித்துவ வாதிகளுக்கே உரியபண்பாகவும் இந்த கோட்பாட்டின் உண்மை முகம் சிறிது சிறிதாக வெளிப்படுகிறதுஎன்பதையும் காட்டுகிறது,கிருஸ்தவ தேவ ஆலயங்களின் பாதிரிகளால் ஆதரிக்கப்பட்ட மத்தியகாலஐரோப்பாவின் பிரபுத்துவ முறையின் மரபுகளும் கலாச்சாரங்களும் உள்ளடக்கியஅதன் சிதிலங்கள் மீது கட்டமைக்கப்பட்டதுதான் முதலாளித்துவ சமூகங்கள், இந்த மரபுகளும் கலாச்சாரங்களும் ஒரு கனத்தில் மாறிவிடாது என்றகாரணத்தால் இந்த சமூகங்கள் தங்களுக்குள் பிரிந்து கிடக்கின்றன, ஒரு குழு இந்தபழய மரபுகளையும் கலாச்சாரங்களையும் உடனடியாக கை விட வேண்டுமென்றுகூறுகிறது, சமூகங்களின் எதார்த்த நிலையை பரிசீ−த்து கால ஓட்டத்தில்நிலைபெறும் கலாச்சாரங்களை அனுசரித்து பழய மரபுகளும் கலாச்சாரங்களும்படிப்படியாக மாற்றப்படவேண்டும் என்று லிபரல்ஸ் (Liberals) என்றும்படிப்படியான மாற்றத்தை ஆதரிப்பவர்கள் கன்ஸர்வேடிவ்ஸ் (Conservatives)என்றும் அழைக்கப்படுகிறார்கள், மாடரேட்ஸ் (Moderates) என்றுஅழைக்கப்படுகிற ஒரு குழுவும் இந்த இரண்டு குழுக்களுக்கு மத்தியில் இருக்கிறது,இந்த மத்தியகுழு இருபிரிவாக இருக்கிறது, கன்ஸர்வேடிவ்ஸ் குழுவுடன்நெருக்கமாக உள்ளவர்கள் ரைட்டிஸ்ட்ஸ் (Rightists) என்றும். −பரல்ஸ் குழுவுடன்நெருக்கமாக உள்ளவர்கள் லெப்டிஸ்ட்ஸ் (Leftists) என்றும்அழைக்கப்படுகிறார்கள், முதலாளித்துவ நாடுகளில் இத்தகைய குழுக்கள்இன்றளவும் அந்த சமூகத்தில் இடம் பெற்றுள்ளன.
ஒரு முஸ்லிமுக்கு தனிநபர் சுதந்திரத்தை கோருவதற்கு இஸ்லாத்தில்அனுமதியில்லை, ஏனெனில் இந்த சுதந்திரம் அல்லாஹ்(சுபு)வால்தடுக்கப்பட்டவைகளை அனுமதிக்கிறது, மேலும் இத்தகைய கட்டுபாடற்றவாழ்க்கை முறை பல்வேறு சமூக அவலங்களுக்கு தொற்று நோய்களுக்கும்காரணமாக உள்ளது, தனிமனித சுதந்திரம் என்பது விபச்சாரம் செய்வதற்கும்.பாலியல் வெறித்தனங்களில் ஈடுபடுவதற்கும். ஒழுக்கக்கேடான செயல்களைச்செய்வதற்கும். மது அருந்துவதற்கும் இன்னும் பல்வேறு கண்ணியமற்றஅருவருக்கத்தக்க காரியங்களை செய்வதற்கும் கோரப்படுவதால் இதற்குஇஸ்லாத்தில் முற்றாக அனுமதியில்லை, இவைகள் தான் முதலாளித்துவ கோட்பாடுகோருவதும் அந்நாடுகளில் அமல் செய்யப்படுவதுமான நான்கு வகை சுதந்திரங்கள்,இந்த சுதந்திரங்கள் வைத்துக் கொண்டுள்ளதால் சில நேரங்களில் தங்கள்கோட்பாட்டை சுதந்திர சித்தாந்தம் (The Free ideology) என்றும் சுதந்திர உலகம் (The Free World) என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.
அமெரிக்கா கோரும் மனித உரிமை பற்றிய சிந்தனையின் அடிப்படை அம்சம்இந்த சுதந்திரங்கள்தான், இது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணாக இருப்பதால்இதை கோருவதிலிருந்து அனைத்து முஸ்லிம்களும் தடுக்கப்பட்டுள்ளார்கள்,உண்மைகள் இவ்வாறு இருப்பினும். பலமுஸ்லிம் நாடுகளில் அதன்ஆட்சியாளர்களும். அரசியல் தலைவர்களும் அரசின் ஆதரவாளர்கள். இதனைபரிந்துரைப்பவர்களும். மேற்கத்திய கலாச்சாரத்தில் மோகம் கொண்வர்களும்.வழிகேட்டில் தன்னை ஆக்கிக் கொண்டவர்களும். சில அப்பாவிகளும் இந்தமனிதஉரிமையை கோருகின்றவர்களாக இருக்கின்றார்கள், இவர்கள்அறியாமையால் வழிகேட்டிலும் இஸ்லாத்தின் வரம்புகளை மீறுகிறவர்களாகவும்குöப்பார்களாகவும் ஆகிவிடக்கூடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்,வாழ்வியலிலிருந்து மதத்தை பிரிக்கும் கோட்பாட்டிலிருந்து இந்த மனித உரிமைகருத்து என்பதையும் உணர்ந்து கொள்ளாமல் இதனை கோரும் ஒருவர் பாவி என்றேசொல்லப்படுவார், குöப்ர் சித்தாந்தத்திலிருந்து பெறப்பட்ட இந்த சிந்தனையின்அடிப்படையை அறிந்து கொண்ட ஒருவர் அதை கோரும் போது காöபிர் என்றேசொல்லப்படுவார், ஏனெனில் இத்தகைய ஒருவர் இஸ்லாத்தின் கோட்பாட்டைதழுவவில்லை என்றே சொல்லப்படும்.
மனித உரிமை கோரிக்கைகள் கி,பி,1789ஆம் ஆண்டு முதன் முத−ல் பிரன்சுபுரட்சியின் போது ஆதரித்து பேசப்பட்டது, பிறகு கி,பி,1791ல் உருவாக்கப்பட்ட பிரன்சுஅரசியல் சாசனத்தில் அது ஒரு ஆவணமாக சேர்க்கப்பட்டது, இதற்கு முன்பே கி,பி,1776ல் அமெரிக்க புரட்சியின்போது இதற்கு கோரிக்கை விடப்பட்டது, பிறகுமற்ற ஐரோப்பிய நாடுகள் இதை பத்தொன்பதாம் நூற்றாண்டு வாக்கில்நடைமுறைப்படுத்தின, எனினும் அதுவரை இந்த மனித உரிமை அமலாக்கங்கள்அந்தந்த நாடுகளின் உள்விவகாரமாகவே இருந்து வந்தது.
இரண்டாம் உலக போருக்குப் பிறகு கி,பி,1948ல் ஐக்கிய நாடுகள் சபைநிறுவப்பட்டு சர்வதேச மனித உரிமை அறிக்கை (International Declaration of Human Rights) வெளியிடப்பட்ட பின்புதான் மனித உரிமை சர்வதேசவிதிமுறையாக உருவெடுத்தது, பிறகு கி,பி,1961ல் உரிமையியல் மற்றும் அரசியல்மனித உரிமையின் சர்வதேச உடன்பாடு
(International Agreement of Human Civil and Political Rights)அதனோடு சேர்க்கப்பட்டது, மேலும் கி,பி,1966ல்பொருளாதாரம் கல்வி மற்றும் சமூக மனித உரிமைகளின் உலகளாவிய வாக்குறுதி (World Pledge for Economic Educational and Social Human Rights) என்ற அறிக்கை வெளியிடப்பட்டது,இந்த காலத்தில் மனிதஉரிமை கோரிக்கைகள் இக்காலகட்டத்தில் சர்வதேசஅளவில் மட்டும் இருந்து வந்தது.
கி,பி,1993ல் தான் உலகளாவிய விதிமுறையாகமாற்றுவதற்கு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன, அதாவது ஒரு நாட்டின்விதிமுறையாக இல்லாமல் உலக மக்கள் அனைவரின் விதிமுறையாக மாற்றதிட்டங்கள் வரையப்பட்டன, பொது உடமை கோட்பாடு வீழ்ச்சியுற்ற இரண்டுஆண்டுகளுக்கு பிறகு முதலாளித்துவ கோட்பாடு உலகில் ஆதிக்கம் பெறஆரம்பித்தது, வியன்னாவில் நடந்த சர்வதேச மாநாட்டில் அரசு சாராத மனிதஉரிமை அமைப்புகளை உருவாக்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது, மேலும்மனித உரிமை பற்றி அரசு சாராத அமைப்புகளின் வியன்னா அறிக்கை
(ViennaDeclaration for Non Governmental Organisation for Human Rights)வெளியிடப்பட்டது, இது மனித உரிமை சட்டங்களை சர்வதேச மரபுகள் என்றஅளவி−ருந்து உலகளாவிய (Universal) அளவில் மக்கள் பின்பற்ற வேண்டியமானுட நெறிமுறையாக சித்தரித்தது, மேலும் மனித உரிமை விதிமுறைகளைஉலகளாவிய அளவில் அமல்படுத்தவும். கல்வித் துறையிலும் பல்வேறுசட்டத்துறைகளிலும் இதை சமமாக அமல்படுத்துவதின் அவசியத்தை இந்தஅறிக்கை வ−யுறுத்துகிறது, ஒரு சமுதாயத்துக்கும் மற்றொரு சமுதாயத்துக்கும்இடையே இதை அமல்படுத்துவதின் அவசியத்தையும் இந்த அறிக்கைவ−யுறுத்துகிறது, ஒரு சமுதாயத்துக்கும் மற்றொரு சமுதாயத்துக்கும் இடையேஇதை அமல்படுத்துவதிலுள்ள முரண்பாடுகளைப் பற்றிய கோரிக்கைகளை இதுமுற்றிலும் நிராகரித்தது, இதன் பொருள் மனித உரிமை விதிமுறைகளை இஸ்லாமியநாடுகளில் அமல்படுத்தும் போது இஸ்லாமிய சட்டங்களின் குறுக்கீடுகளைமுழுவதுமாக புறக்கணித்து விடவேண்டியது என்பதுதான்.
மறைந்த அமெரிக்க அதிபர் கார்டரின் ஆட்சி காலத்தில் எழுபதுகளின் இறுதியில்மனித உரிமையை சர்வதேச விதிமுறை ஆக்குவதை வ−யுறுத்தும் வகையில்அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு தூணாக இது நடைமுறைபடுத்தப்பட்டது, அன்றைய தினத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் அமெரிக்க அரசுதுறைகள். மனித உரிமை விதிமுறைகளை உலகத்திலுள்ள இதர நாடுகள் எந்தஅளவு கடைபிடிக்கின்றன என்ற அறிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன,அமெரிக்க மக்களும் முடிந்த அளவு இதை கடைபிடிக்க அனுமதிக்கப்பட்டார்கள்,இந்த விதிமுறைகளை கடைபிடிக்காத நாடுகளுக்கு எதிராக சில அரசியல்நடவடிக்கைகள் எடுப்பதற்கு அமெரிக்கா கடும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது,இதற்கு உதாரணம் சோவியத் ரஷ்யாவிலுள்ள யூதர்களை இஸ்ரேலுக்குகுடிபெயருவதற்கு சலுகையாக அமெரிக்காவின் கோதுமை அங்கு விற்கப்பட்டது.
கி,பி,1994ல் மனித உரிமை மீறல் என்ற சாக்கில் ஹைதி (ஏஹண்ற்ண்) போன்ற நாடுகளில்அது ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது, சீனாவை போன்ற சில நாடுகளில்அரசியல் மற்றும் ராஜ்ய ரீதியிலான நடவடிக்கைகளை அது மேற்கொள்கிறது, இந்தஅனைத்து விதமான நடவடிக்கைகளும் அமெரிக்காவின் நலனை பாதுகாக்கும்நோக்கத்தோடுதான் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் தனது ஆதிக்கத்தைநிலைநிறுத்த அவ்வப்போது சில நாடுகளை பணிய வைக்கும் வேலையிலும் அதுஈடுபடுகிறது.
முஸ்−ம்களைப் பொறுத்தவரை மனித உரிமை விதிமுறைகளை நிராகரிப்பதற்குகாரணம் அது முதலாளித்துவ கோட்பாட்டின் வெளிப்பாடு என்பதுதான், இந்தகோட்பாடு கெட்டுப்போன கேடு விளைவிக்கும் சிந்தனையை சார்ந்ததாகும், மேலும்இது இந்தக் கோட்பாட்டின் ஒரு அம்சமாக இருக்கிறது, தனி நபர் மற்றும் சமூகம்குறித்த இந்த கோட்பாட்டில் மேலே விவரிக்கப்பட்ட நான்கு வகை சுதந்திரங்கள்வ−யுறுத்தப்படுகின்றன, இவைகள் அனைத்தும் குöப்ர் கோட்பாட்டின் மீதுகட்டமைக்கப்பட்டு இருப்பதால் இஸ்லாத்துக்கு இது முரண்பாடாக இருக்கிறது,முஸ்லிம்கள் இதை நிராகரிக்க வேண்டும், இதன் குறைகளை உலக மக்களுக்குவெளிச்சம் போட்டு காட்ட வேண்டும், இதை பிரச்சாரம் செய்பவர்களையும்.ஆதரிப்பவர் களையும் இதற்கு பரிந்து பேசுபவர்களையும் முஸ்லிம்கள் தீவிரமாகஎதிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment