Showing posts with label Economics. Show all posts
Showing posts with label Economics. Show all posts

Sunday, April 19, 2009

பொதுவுடமை தத்துவத்திலிருந்து தோன்றிய கம்யூனிஸம் தானாக அழிவைத் தேடிக்கொண்டது போல் முதலாளித்துவமும் தானாகவே தனது அழிவைத் தேடிக்கொள்ளும்.

உலகப் பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கும் பொருளாதார சீரழிவுகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் இஸ்லாத்திற்கு மட்டுமே ஆற்றல் இருக்கிறது.

ரியல்எஸ்டேட் விவகாரத்தில் வெடித்துக் கிளம்பிய பொருளாதார நெருக்கடி அமெரிக்காவின் அடமானமுறை வீட்டுக்கடன் திட்டத்தை (subprime mortgage programme) மூழ்கடித்து விட்டது, இந்தத் திட்டத்தில் கடன் பெற்றவர்களில் பெரும்பான்மையினர் கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்காவின் பிரதான வங்கிகளில் சிலவும் முன்னனி நிதிநிறுவனங்களில் சிலவும் அழிவை சந்தித்துவிட்டன இன்னும் சில அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருக்கின்றன, கவர்ச்சிமிக்க சலுகைத்திட்டங்கள் மற்றும் பெரும்குவியலாக லாபம் கிடைக்கும் என்ற பகிரங்க அறிவிப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்டு சர்வதேச வங்கிகளின் பணமும் நிதிச்சந்தை ஜாம்பவான்களாக விளங்கும் பல பன்னாட்டு நிதிநிறுவனங்களின் பணமும் அமெரிக்காவின் அடமானமுறை கடன் திட்டத்தை நோக்கி குவிந்தன, இந்த திட்டம் படுதோல்வி அடைந்து பல்லாயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதால் இதில் முதலீடு செய்த அமெரிக்க வங்கிகளும் நிதிநிறுவனங்கும் நொறுங்கி வீழ்ந்துவிட்டன, இந்த வங்கிகளும் நிதிநிறுவனங்கும் சர்வதேச அளவில் நிதியியல் தொடர்புகள் வைத்திருந்ததால் இதன் தீயவிளைவு முழு உலகத்திலும் பரவ ஆரம்பித்துவிட்டது, அமெரிக்கா என்ற நோயாளி தும்மியதில் வெளிப்பட்ட நோய்க்கிருமி உலக முழுவதிலும் தொற்றிக்கொண்டு நோயை பரப்பிக் கொண்டிருக்கிறது.


அடமானமுறை வீட்டுக்கடன் திட்டத்தில் (subprime mortgage programme) ஏற்பட்ட இழப்பு அமெரிக்காவைப் பொறுத்வரை 300 பில்லியன் டாலர் என்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்ட இழப்பு 550 பில்லியன் டாலர் என்றும் நிதித்துறை அமைப்புகள் சில மதிப்பீடு செய்துள்ளன. இதனடிப்படையில் இந்த திட்டத்தால் பாதிப்பு அடைந்த நாடுகள் குறிப்பாக செல்வந்த நாடுகளின் அரசுகள் நிதிச்சந்தை குறித்த நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்காகவும் நிதிநிறுவனங்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உயிரூட்டுவதற்காகவும் கோடிக்கணக்கான டாலர் பணத்தை ஒதிக்கியிருக்கின்றன, உண்மையாகக் கூறவேண்டுமானால் பிரிட்டன் அரசு செய்ததைப்போல சிலநாடுகள் தங்கள் நாட்டிலுள்ள சில பெரிய வங்கிகளை தேசியமயமாக்கும் நடவடிக்கûயில் இறங்கியிருக்கின்றன.

முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம் என்று கருதப்படும் தாராள வர்த்தகம். தடையற்ற வர்த்தகம் என்ற தாரகமந்திரம் தவிடுபொடியான கதையை நாம் கண்கூடாகக் காண்கிறோம், இவ்விரு கோஷங்களும் முதலாளித்துவவாதிகளின் அடிப்படை நம்பிக்கையாக விளங்கிவந்தன, நிதித்துறை நடவடிக்கைகளில் காணப்படும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிட்டு நிதிச்சந்தையில் எத்தகைய கட்டுப்படுகளும் இருப்பதை தடைசெய்யும் சட்டத்தை டிசம்பர் 1999 ல் அமெரிக்கசெனட் கொண்டுவந்தது, முதலாளித்துவ கொள்கையை தலமையேற்று நடத்திச்செல்லும் அமெரிக்காவிலேயே இந்தத் தவறான கொள்கையின் தீயவிளைவு வெளிப்பட ஆரம்பித்தது, அடமானமுறை வீட்டுக்கடன் திட்டத்தில் சிக்கி நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் ஆகியவை வினியோகம் செய்திருந்த பங்குப்பத்திரங்களை கொள்முதல் செய்துகொள்வதன் மூலம் தங்களின் பொருளாதாரத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அமெரிக்க அரசுக் கருவூலகத்தின் செயலாளர் (US secretary of govt. treasury) ஹென்ரி பால்ஸன் (Henry Paulson) கொண்டு வந்த திட்டத்திற்கு 700 பில்லியன் டாலர் பெய்லவுட் (bailout) தொகையாக ஒதுக்குவதற்கு அமெரிக்க செனட்டும் அமெரிக்க காங்கிரஸýம் அங்கீகாரம் அளித்ததின் மூலமாக நிதிச்சந்தையில் அமெரிக்கஅரசு தலையீடு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது, இத்திட்டம் அக்கீகரிக்கப்பட்ட சில நிமிடத்திலேயே கருவூலக செயலாளர் அதை நடைமுறைப் படுத்திவிட்டார், நிதித்துறையில் அரசு எந்தவிதமான தலையீடும் செய்யக்கூடாது என்ற முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படைக் கொள்கை இப்போது மீறப்பட்டிருக்கிறது, இதன்மூலம் முதலாளித்துவ சித்தாந்தத்தை உலகம் முழுவதிலும் நடைமுறைப்படுத்தும் திட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ள அமெரிக்காவும் பிரிட்டனும் அதன் கொள்கைக்கு முரண்பாடாக செயல்பட்டிருக்கினறன, பொதுவுடமை கோட்பாட்டின் அடிப்பûயிலுள்ள கம்யூனிஸம் தோல்வியுற்று புதையுண்டு போன அதே முறையில் இப்போது முதலாளித்துவமும் மரணப்படுக்கையில் கிடக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.

அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஏற்பட்ட இந்த நிகழ்வுகளின் காரணமாக உலக நாடுகள் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன, ஐரோப்பாவின் பிரதான நாடுகளான பிரிட்டன். பிரான்ஸ். ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஆய்வு செய்வதற்காக முறையான சந்திப்புகள் நடைபெறவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன, அதுபோலவே G7 (ரஷ்யாவை இதில் சேர்த்துக்கொண்டால் G8 நாடுகள்) நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கிகளின் மேலாளர்களும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சந்தித்து விரிவான ஆய்வு நடத்தவேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகள் முதலாளித்துவ பொருளாதாரத்தைக் காப்பாற்றுமா?

முதலாளித்துவ பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர்கள் அது அழிவை சந்தித்துவிட்டது என்பதை அல்லது அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள், அதை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முதலாளித்துவவாதிகள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் அனைத்தும் தற்காலிகமான நிவாரணத்தை மட்டுமே ஏற்படுத்தக்கூடும் ஏனெனில் முதலாளித்துவ பொருளாதாரம் நொருங்கிப் போனதற்கு காரணம் அது தவறான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதுதான், மேலோட்டமான சீரமைப்புகளால் அதை ஒருபோதும் காப்பாற்றமுடியாது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம் தவறானது என்பதற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன அவற்றை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

1) இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட பிரட்டன் உட்ஸ் (Bretton woods) உடண் படிக்கையின் அடிப்படையில் நாணயங்களுக்கு ஏற்புநிறை மதிப்பீடாக(gold standard) தங்கம் மட்டும் இருந்ததை மாற்றி அதற்கு இணையாக அமெரிக்க டாலர் கொண்டுவரப்பட்டது, 1970 க்குப் பின்னர் ஏற்புநிறை மதிப்பீட்டில்(gold standard) தங்கத்தை அறவே நீக்கிவிட்டு முழுக்க முழுக்க அமெரிக்க டாலர் மட்டுமே ஏற்புநிறை மதிப்பீடாக கொண்டுவரப்பட்டது, இதன் மூலமாக அமெரிக்கநாட்டின் காகிதநாணயமான டாலர் தங்கத்திற்கு இணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, இதனடிப்படையில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற பாதிப்புகள் இயல்பாகவே உலக பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன ஏனெனில் பல்வேறு நாட்டு நாணயங்களும் செலாவணியில் (exchange) தங்கத்துடன் இணைக்கப்படாமல் அமெரிக்க டாலருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன, ஐரோப்பாவின் யூரோ நாணயம் அறிமுகப் படுத்தப்பட்ட போதிலும் அமெரிக்க டாலர் பல்வேறு நாட்டு நாணயங்களுடன் இணைக்கப்பட்டிருபதால் தொடர்ந்து அதன் மதிப்பு குறையாமல் இருந்து வருகிறது.

எனவே நாணயங்ளுக்கு ஏற்புநிறை மதிப்பீடாக(Gold standards) தங்கத்தை மறுபடியும் கொண்டு வந்தால் ஒழிய இத்தகைய பொருளாதார பாதிப்புகள் உலக நாடுகளுக்கு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும், இன்றைய சூழலில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் வீழ்ச்சி உலக நாடுகளின் பொருளாதாரத்தில் வீழ்ச்சியைக் கொண்டு வருகிறது, அமெரிக்க அரசின் சில கொள்கைகளால்(Policies) அமெரிக்க டாலரில் ஏற்படும் பாதிப்புகள் உலக நாடுகளின் நாணயங்களில் பிரதிபலிக்கிறது, உண்மையைக் கூறவேண்டுமானால் ஏகாதிபத்திய செல்வாக்கு பெற்றுள்ள எந்தவொரு நாட்டின் காகித நாணயமும் தங்கத்தின் மதிப்பு அதற்கு பின்னனியாக கொள்ளப்படா விட்டால் உலகப் பொருளாதாரத்தில் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துவது இயல்பான விஷயம்தான்.

2) வட்டி அடிப்படையில் கொடுக்கப்படும் கடன்களால் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடிகள் தோன்றுகின்றன, காலஓட்டத்தில் கடன் கொடுக்கப்படும் தொகையின் மதிப்பு சிறிதுசிறிதாக குறைந்துகொண்டு வருகிறது என்றபோதிலும் தனிமனிதராக இருந்தாலும் சரி அல்லது ஒருநாட்டு அரசாக இருந்தாலும் சரி பலசமயங்களில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது, இதன்காரணமாக பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டு நெருக்கடிகள் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, மேலும் மத்தியதர வகுப்பினர் கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் நிதித்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டு பொருட்களின் உற்பத்தியிலும் பெரிய பாதிப்புகள் உருவாகின்றன.
3) இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் பொருளாதாரக் கொள்கையின் காரணமாக பொருளாதார நடவடிக்கை. நிதிச்சந்தை. பங்குச்சந்தை. நிதியியல் உபகரணங்கள் (காசோலை (cheque) வரைவுகாசோலை (demand draft) ரொக்கப்பத்தரம் (cash certificate) போன்றவை) . வர்த்தகப் பொருட்கள். கொடுக்கல் வாங்கள்(business transaction) ஆகியவற்றில் யூகவர்த்தக முறை (speculative trading) பின்பற்றப்படுகிறது, இதனடிப்படையில் பொருட்கள் கையிருப்பில் இல்லாத நிலையில் யூகத்தின் அடிப்படையில் வர்த்தகம் நடைபெறுகிறது, இது முறையற்ற வர்த்தகம் என்பதோடு மிக ஆபத்தான பொருளாதார நடவடிக்கையாகவும் இருக்கிறது, பொருட்களின் விலையில் முறையற்ற ஏற்ற இறக்கம் ஏற்படுவதோடு பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் இது காரணமாக இருக்கிறது, பொருளாதார சந்தையில் அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு உடனடி காரணிகளாகவும் உண்மையான பொருளாதாரத்திலிருந்து மக்களை திசை திருப்பிவிடும் தவறான வர்த்தகமுறை (wrong commercial practice)) யாகவும் இருக்கிறது, லாபநஷ்டங்கள் யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் குறைகளும் பாதிப்புகளும் சரியான முறையில் அறிந்து கொள்ளப்படாமல் இறுதியில் பெரும் நெருக்கடிகள் எற்பட்டு விடுகின்றன.

4) மிகமுக்கியமான விஷயம் என்னவென்றால் கிழக்கு நாட்டவராக இருந்தாலும் அல்லது மேற்கு நாட்டவராக இருந்தாலும் சொத்துரிமை தொடர்பான எதார்த்தமான உண்மைகள் பற்றிய அறிவை பெறாதவர்களாகவே இருக்கிறார்கள், பொதுவுடமைக் கோட்பாட்டிலிருந்து தோன்றிய கம்யூனிஸ சித்தாந்தம் (communist ideology)அனைத்து சொத்துக்களின் உரிமைகளையும் அரசுடமை ஆக்கியிருக்கிறது எனவே தனிமனிதர் எவரும் எத்தகைய சொத்துக்களையும் அடைந்துகொள்ள முடியாது, அதேவேளையில் முதலாளித்துவ சித்தாந்தம் (capitalist ideology) சொத்துரிமை அனைத்தையும் தனியார்மயம் ஆக்கியிருக்கிறது மேலும் தனிமனிதரின் சொத்துரிமையில் அரசு எந்தவிதமான தலையீடு செய்யாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது ஏனெனில் இந்த சித்தாந்தம் தாராள வர்த்தகக் கொள்கையை ஆதரிப்பதோடு உலகமயமாக்கல் என்ற கோஷத்தையும் எழுப்பிவருகிறது.

சொத்துரிமை பற்றிய முழுமையான அறியாமையின் காரணமாக அரசுகளிடம் காணப்படும் தவறான கொள்கைகள் பொருளாதாரத்தில் அதிர்வுகளையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்துகின்றன, ஏனெனில் சொத்துக்களை வைத்துக்கொள்ளும் உரிமை அரசிற்கு மட்டுமோ அல்லது தனிமனிதருக்கு மட்டுமோ உரியதல்ல மாறாக சொத்துரிமையில் மூன்று வகைகள் இருக்கின்றன.

பொதுச்சொத்து :

பூமியின் இயற்கை வளங்களான எண்ணெய் வளங்கள். கனிம வளங்கள். நிலவாயு நிலக்கரி போன்ற எரிபொருள் வளங்கள். மின்சாரம் போன்ற ஆற்றல் வளங்கள். காடுகள் மற்றும் புல்வெளிகள் போன்ற பசுமை வளங்கள். ஆறுகள் மற்றும் கடல்கள் போன்ற நீர் வளங்கள் . பூமிக்குள் இருக்கும் புதையல்கள் ஆகியவை பொதுச்சொத்து இனங்களில் அடங்கும், இவைகளை அரசே நேரடியாக நிர்வாகம் செய்து அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கை தன் செலவினங்களுக்கு எடுத்துக்கொண்டு மீதியுள்ள நான்கு பங்கை பொதுமக்கள் நலனுக்காக செலவு செய்யவேண்டும்.

அரசு சொத்து :

அரசினால் வசூலிக்கப்படும் அனைத்து விதமான வரிகளின் (ற்ஹஷ்ங்ள்) மூலம் கிடைக்கும் பணம். தனியார் சொத்து இனங்களில் அடங்காத விவசாயம். வர்த்தகம். கனரக தொழிற்சாலை. ஆயுத தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பணம். யுத்த கனீமத் பொருட்களிலிருந்து கிடைக்கும் ஐந்தில் ஒரு பங்கு பணம். இயற்கை வளங்களிலிருந்து கிடைக்கும் ஐந்தில் ஒரு பங்கு பணம் ஆகியவை இதில் அடங்கும், இந்தப் பணம் முழுவதும் அரசு செலவினங்களுக்கும் பொதுமக்கள் நலப்பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.

தனியார் சொத்து :

தனிமனிதர்கள் தங்கள் உழைப்பு மூலமாகவோ அல்லது வாரிசுரிமை மூலமாகவோ அல்லது அன்பளிப்புகள் மூலமாகவோ அடைந்து கொள்ளும் அனைத்து சொத்துக்களும் இதில் அடங்கும், ஷரியாவின் விதிமுறைப்படி பொதுச் சொத்துக்களை தனியார் அடைந்து கொள்ள முடியாது அதுபோலவே தனியார் சொத்தையோ அல்லது பொதுச்சொத்தையோ அரசுசொத்தாக மாற்றமுடியாது.

இந்த மூன்று வகை சொத்துரிமைகளும் வெவ்வேறானவை அவை ஒவ்வொன்றும் ஷரியாவின் விதிமுறைப்படியே நிர்ணயிக்கப்படுகின்றன, கம்யூனிஸத்தில் உள்ளது போல் இவை மூன்றையும் ஏகபோகமாக அரசுடமை ஆக்கினாலும் அல்லது முதலாளித்துவத்தில் உள்ளது போல் மூன்றையும் ஏகபோகமாக தனியார்மயம் ஆக்கினாலும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியும் நெருக்கடியும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும், அனைத்து வகையான சொத்துரிமைகளையும் அரசு எடுத்துக்கொண்டு தனிமனித உரிமைகளைப் பறித்ததால் கம்யூனிஸ பொருளாதாரம் வீழ்ச்சியுற்றது, சோவியத் ரஷ்யாவின் கம்யூனிஸ ஆட்சிக்காலத்தில் எண்ணெய் வளம். கனிம வளம். மற்றும் கனரக தொழிற்சாலை ஆகியவை அரசு நிர்வாகத்தில் இருந்ததால் அதன்மூலம் அதற்கு கணிசமான வெற்றி கிடைத்தது அதேவேளையில் தனியார் வசம் இருக்க வேண்டிய சிறுதொழில். விவசாயம். வர்த்தகம் ஆகியவற்றை அரசு தனக்கு உரிமையாக்கிக் கொண்டு நிர்வாகம் செய்ததால் பெரும் தோல்வி ஏற்பட்டு அந்த அரசு வீழ்ச்சியை சந்தித்தது, அதுபோலவே மேற்கத்திய நாட்டின் முதலாளித்துவ அரசுகளும் தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கின்றன, முதலாளித்துவ நாடுகளில் பொதுச்சொத்துக்கள் தனியார்மயமாக ஆக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் நலனுக்கு பயன்படவேண்டிய பூமியின் அரியவளங்கள் அனைத்தும் ஒரு சில தனிமனிதர்களிடத்தில் குவிந்து கிடக்கின்றன, கனரக தொழிற்சாலைகள். ஆயுத தொழிற்சாலைகள். ஆகியவை தனியாருக்கு சொந்தமாக ஆக்கப்பட்டதால் வர்த்தக சந்தையில் தலையீடு செய்வதிலிருந்து அரசு ஒதுக்கப்பட்டதோடு ஒரு அரசு நிலைத்திருப்பதற்கு உரிய வருவாய் ஆதாரங்களும் அரசின் இயல்பான உரிமைகளும் அதனிடமிருந்து பறிக்கப் பட்டுவிட்டன, தாராள வர்த்தகம். தடையற்ற வர்த்தகம். அரசியல் தலையீடற்ற பொருளாதாரம். உலகமயமாக்கல் ஆகிய கோஷங்களின் பெயரால் இந்த அத்துமீறல்கள் அனைத்தும் அரங்கேற்றப்படுகின்றன, தவறான இந்த பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்தும் முடிவுகள் தவிர்க்க முடியாததுõ தொடர்ச்சியான வீழ்ச்சி வேகமான அழிவுõ நிதிச்சந்தைகளும் நிதிநிறுவனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நொறுங்கிவிழும் துயரம். இவைதான் தவறான கொள்கை ஏற்படுத்திய இயல்பான முடிவு.

தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக அன்று கம்யூனிஸ அரசு வீழ்ந்தது. தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இன்று முதலாளித்துவ அரசுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன.
எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தத் துயரங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் அழிவுகளுக்கும் ஒரே மாற்றுத் தீர்வு இஸ்லாம் மட்டுமேõ ஏனெனில் பொருளாதாரத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தையும் இஸ்லாம் மட்டுமே தடைசெய்திருக்கிறது.

நாணயங்களுக்கு ஏற்புநிறை மதிப்பீடாக(gold standard) தங்கத்தை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் கட்டாயம் ஆக்கியிருக்கிறது, காகித நாணயத்தை அச்சிடும் பட்சத்தில் அதற்கு ஈடான மதிப்பிற்கு தங்கத்தையும் வெள்ளியையும் அரசு இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் மக்கள் விரும்பும்போது நாணயங்களை தங்கமாகவோ அல்லது வெள்ளியாகவோ மாற்றிக் கொள்வதற்கு ஏதுவாக அரசு கருவூலகங்களில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் இருப்பு இருக்கவேண்டும் என்பதையும் இஸ்லாம் கட்டாயமாக ஆக்கியிருக்கிறது, இதன்முடிவாக ஒரு நாட்டின் நாணயம் மற்றொரு நாட்டின் நாணயத்துடன் பிணைக்கப் படுவதை இஸ்லாம் தடைசெய்துள்ளது, இதனடிப்படையில் ஒரு நாட்டின் நாணயம் இதர நாட்டின் நாணயத்திலிருந்து சுதந்திரமாக இயங்கவேண்டும் என்றும் ஒவ்வொரு நாணயத்திற்கும் நிலையான மதிப்பு இருக்கவேண்டும் என்றும் இஸ்லாம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

மேலும் வட்டியை அதன் அனைத்து வடிவங்களிலும் இஸ்லாம் தடைசெய்துள்ளது, தேவையுள்ளவர்களுக்கு எந்தவிதமான வட்டியோ அல்லது கட்டணமோ இல்லாமல் கடனுதவி செய்யவேண்டும் என்பதை இஸ்லாம் கட்டாயமாக ஆக்கயிருக்கிறது, பைத்துல்மால் எனறழைக்கப்படும் அரசு கருவூலகம்(govt. treasury) தேவை உள்ளவர்களுக்கும் விவசாயிகளுக்கும் வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் வகையில் தனிகணக்கில் பணம் வைத்திருக்க வேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.

இதுபோலவே பொருட்களை கையிருப்பில் வைத்திருக்காத நிலையில் யூகத்தின் அடிப்படையில் விற்பனை செய்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது, முறையற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பங்குப்பத்திரங்கள். நியியல் உபகர்ணங்கள் (செக்.டிரா*ப்ட் போன்றவை) ரொக்கப்த்திரங்கள் மற்றும் டிரைவேடிவ்ஸ்(அசலான மதிப்பு இல்லாத நிதியியல் உபகர்ணங்கள்) ஆகியவற்றில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதை இஸ்லாம் தடைசெய்திருக்கிறது, மேலும் சொத்துரிமை சுதந்திரம் என்ற பெயரில் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை அனுமதித்துள்ள யூகவணிகம் Lm (speculative trading) போன்றவற்றை மேற்கொள்வதற்கும் இஸ்லாம் தடைசெய்துள்ளது, பொதுச்சொத்து இனங்களில் அடங்குகின்ற எண்ணெய் வளங்கள். கனிம வளங்கள். நிலவாயு போன்ற ஆற்றல் வளங்கள் போன்றவற்றை தனிமனிதர்களோ அல்லது தனியார் நிறுவனங்களோ அல்லது அரசுத்துறை நிறுவனங்களோ தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது, பொதுமக்களுக்கு சொந்தமான இந்த சொத்துக்களை ஷரியா விதிமுறைகளின் அடிப்படையில் அரசு பராமரித்து வரவேண்டும் என்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் பலன்கள் பொதுமக்கள் மத்தியில் வினியோகம் செய்யப்படவேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது, இவ்வாறாக மனிதனின் வரம்புமீறிய சுயநலத்தினாலும் மனிதநேயத்திற்கு முரண்படும் பேராசைகளாலும் விளையும் அனைத்து பொருளாதார சீரழிவுகளையும் இஸ்லாம் விளக்கிக் கூறியிருப்பதோடு அவற்றைக் குறித்து எச்சரிக்கையும் செய்திருக்கிறது, இஸ்லாம் என்ற இந்த கொள்கை பிரபஞ்சத்தைப் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் இறைவனிடமிருந்து வந்துள்ளது அவன் தனது படைப்புகளுக்கு நன்மையானவை எவை என்பதை நன்கு அறிந்தவன்.

(அனைத்தையும்) படைத்த அவன் அறியமாட்டானா? அவன் (தன் படைப்புகளிடத்தில்) மென்மையும் கனிவும் கொண்டவனாகவும் (அவற்றை) நன்கு உற்று நோக்குகிறவனாகவும் இருக்கிறான், ( 67 :14)

முஸ்லிம்களே!

தனது தூதர் முஹம்மது(ஸல்) மூலமாக இஸ்லாம் என்ற உயர்ந்த மார்க்கத்தை உங்களுக்கு வழங்கியிருப்பதால் அல்லாஹ்(சுபு) உங்களுக்கு ஒப்பற்ற கண்ணியத்தை கொடுத்திருக்கிறான்; மேலும் அவன் உங்களை எச்சரிக்கை செய்தும் இருக்கிறான், இஸ்லாத்தின் பொருட்டாகத்தான் அனைத்து சமுதாயத்திலும் சிறந்த சமுதாயமாக உங்களை உயர்த்தியிருக்கிறான், இந்த தீனை முழுமையாக செயல்படுத்துவதில்தான் உங்களுடைய கண்ணியமும் உயர்வும் அடங்கியிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், இந்த உயர்வு உங்களுக்கு மட்டும் உரித்தானதல்ல மாறாக அது முழு மனித சமுதாயத்திற்கும் உரித்தானது ஏனெனில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தவறான கொள்கைகளையும். செயலாக்கஅமைப்புகளையும் (man made systems) பல நூற்றாண்டுகளாக எதிர்த்து நின்று இஸ்லாம் வெற்றி அடைந்திருக்கிறது.

சங்கைக்குரிய குர்ஆனை தடிப்பான அட்டைகளில் மூடி வைத்திருப்பதால் இந்த மகத்தான மார்க்கத்தை நடைமுறைப் படுத்திவிட முடியாது மாறாக இஸ்லாத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் சத்திய செய்தியை உலகம் முழுவதற்கும் அழைப்புப்பணி (Daw'ah) மூலம் எடுத்துச்செல்லக்கூடிய கிலா*பாவை அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களின் முன்மாதிரி அடிச்சுவட்டில் நிர்மாணிப்பதின் மூலமாகவே அதை செய்யமுடியும், மனித சமுதாயத்தின் பாதுகாப்பிற்கும் உயர்வுக்கும் செழிப்பிற்கும் கிலா*பா மட்டுமே உத்திரவாதம் அளிப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளது, ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் சுகபோகத்தில் மூழ்கி இருப்பீர்கள் எனில் அல்லாஹ்(சுபு) தனது வானவர்களை அனுப்பி கிலா*பாவை நிர்மாணிக்கப் போவதில்லை மாறாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மதினாவில் இஸ்லாமிய அரசை நிர்மாணித்ததைப் போல் அவர்களது தோழர்களான ஸஹாபா பெருமக்களும் அவர்களை பின்துயர்ந்து வந்த முஸ்லிம்களும் தொடர்ந்து அதை நிலைநிறுத்தியது போல் இஸ்லாமிய அரசை நிர்மாணிப்பதையும் தொடர்ந்து அதை நிலைநிறுத்துவதையும் அல்லாஹ்(சுபு) உங்களுக்கு கடமை ஆக்கியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

முஸ்லிம்களே!

உவகை கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ்(சுபு) வின் திருப்பொருத்தத்தை அடைந்து கொள்ளும் வாய்ப்பபை நீங்கள் பெற்றுள்ளீர்கள். எழுந்து நில்லுங்கள். உங்களை நீங்களே தயார் படுத்திக் கொள்ளுங்கள்õ அல்லாஹ்(சுபு) அருட்செய்துள்ள கூட்டத்தினரோடு இணைந்திருப்பதின் மூலமாக அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். அல்லாஹ்(சுபு) நமக்கு அதிகாரத்தையும் வாரிசுரிமையையும் வழங்குவதாக வாக்களித்துள்ளான். நபித்துவத்தின் அடிச்சுவட்டில் கிலா*பா ஏற்படும் என்று அண்ணலார்(ஸல்) நமக்கு நற்செய்தி கூறியுள்ளார்கள்.

முஸ்லிம்களே!

மனிதசமுதாயத்திற்கு தலைமை ஏற்பதற்கும் அல்லாஹ்(சுபு) வின் அனுமதி கொண்டு அதை நேர்வழியில் இட்டுச் செல்வதற்கும் உரிய தகுதியை உங்களிடம் மட்டும்தான் அல்லாஹ்(சுபு) வழங்கியுள்ளான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

இவ்வாறே உங்களை நாம் (நீதி செலுத்தக்கூடிய) நடுநிலைச் சமுதாயமாக ஆக்கியுள்ளோம் மக்கள் மீது நீங்கள் சாட்சியாளர்களாக இருப்பதற்காக ... (2 :143)

முஸ்லிம்களே!

நீங்கள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட தூதரும்(ஸல்) அவர்களுடைய தோழர்களும் அவர்களை பின்பற்றி வந்த முஸ்லிம்களும் கடந்து வந்த அடிச்சுவட்டை நீங்கள் அறிந்து கொள்ள வில்லையா? அவர்கள் தங்கள் பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றிய விதத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வில்லையா? அல்லாஹ்(சுபு) உங்கள் மீது வாஜிபாக ஆக்கிய கடமையை நிறைவேற்றுவதில் நீங்கள் அசட்டையாக இருந்து விடாதீர்கள். அனைத்து மார்க்கங்களையும் இஸ்லாமிய மார்க்கம் வெற்றி கொண்டே தீரும் என்று அவன்(சுபு) விதித்திருப்பதால் அதன் வெற்றிக்காக உங்களை நீங்களே அர்பணித்துக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள், (12 : 21)

Tuesday, April 7, 2009

பொருளாதாரக் கொள்கை

வழமையான, மேன்மை பொருந்திய வரலாற்றைக் கொண்ட இஸ்லாமிய சமுதாயம் இன்றுகடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியிருக்கிறது. முதலாளித்துவமும், ஊழலும்,தகுதிக்கேடும் இன்று இஸ்லாமிய சமூகத்தை பீடித்திருக்கிறது. இதற்கு, மக்களைகட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார அமைப்பும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள்மேற்கொள்ளும் தவறான ஆட்சி முறையுமே காரணம் ஆகும். இஸ்லாமிய சமூகம் தங்கள்பிடியில் இருக்கும் படியும், தங்களின் (குடியேற்ற நாடுகளின்) தலைமையே இஸ்லாமியசமூகத்தை ஆதிக்கம் செலுத்தும் வகையிலுமே குடியேற்ற நாடுகளின் பொருளாதாரக்கொள்கைகள் இருக்கின்றன.
இவ்வாறாக, அமெரிக்கா மற்றும் அதைப்போன்ற நாடுகள் ,இஸ்லாமிய நாடுகளை தங்களின் பொருட்களை விற்கும் சந்தையாகவே கருதுகின்றன.குடியேற்ற நாடுகளின் பிடியிலிருந்து மீள முஸ்லீம் ஆட்சியாளர்கள் கையாள வேண்டியபொருளாதாரக் கொள்கைகள் இங்கே விளக்கப்பட்டுள்ளன. மேலும் இஸ்லாமியபொருளாதாரக் கோட்பாடுகள் குர்ஆன் மற்றும் திருநபியின்(ஸல்) போதனைப்படி அமையும்வழியையும் ,இக்கட்டுரை சுட்டுகிறது.
தனி மனிதனின் தேவையைக் கணக்கில் கொள்ளாமல், சமதர்மத்தை நிலைநிறுத்துவதுபற்றியும், மொத்த தேசிய உற்பத்தியை பெருக்குவது பற்றியும் மட்டுமே குடியேற்றநாடுகள் வலியுறுத்துகின்றன. இதன் தொடர்பாக, மேலை நாடுகள், பொருளாதாரத்தைப்பற்றி புத்தகங்கள் பலவற்றை பிரசுரித்து, தொழில் முன்னேற்றம் கண்ட தங்களுடன் சரிநிலையை அடைய, இஸ்லாமிய நாடுகள் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கின்றன.
மொத்த தேசிய உற்பத்தியை பெருக்கி-அதன் அடிப்படையில் பொருளாதாரத்தை அமைக்கும் வழிமுறையும் சமதர்மக் கொள்கையும், சமூக நீதி திட்டமும், சமூகத்திற்கு எவ்வித பயனும்தராமல் உண்மை நிலையிலிருந்து விலகியே நிற்கின்றன. சமூக நீதி கொள்கையானது, முதலாளித்துவக்கொள்கைக்கு கைகொடுக்குமெயன்றி வேறொரு பயனும் அளிக்காது என்பதை சம கால வரலாறு கூறிநிற்கின்றது.
இஸ்லாமிய சட்டங்களை மாற்ற முடியாத காரணத்தினாலும், அவை மட்டுமே மனிதசமூகம் உயர வழி கோலும் என்பதாலும், முஸ்லீம்கள் நிலையற்ற அல்லது பிற நாட்டைச்சார்ந்த பொருளாதாரத்திட்டத்தை பின்பற்றுவது உபயோகமற்றதாகும்.
இஸ்லாமியர்களின்பொருளாதார அமைப்பு திருக்குர்ஆன் கூறும் ஷரியத் சட்டப்படியும், சுன்னாஹ் எனப்படும்நபிகளாரின்(ஸல்) வழிகாட்டுதலின் படியும், சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்வின்படியும்(இஜ்மா-அஸ்-ஸஹாபா), கியாஸ்(ஒப்புநோக்குதல்) படியும் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.
இந்த அடிப்படையில் பின்வரும் நான்கு கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.
1. ஒரு தனி நபருக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தனிப்பட்ட தேவைகள் உண்டு எனஇஸ்லாம் கருதுகிறது.
2. ஒரு மனிதன் வாழ அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என இஸ்லாம்கருதுகிறது.
3. தொழில் சுதந்திரத்தையும், வேலையில் யாவரும் சமம் என்ற நிலையையும்,இறைவனின் வளங்களிலிருந்து பயனடைதலின் மூலம் பெற முடியும் என இஸ்லாம்கருதுகிறது.
4. உறவு முறைகளின் முக்கியத்துவத்தையும், மனிதர்களிடையே உள்ள தொடர்பையும்இஸ்லாம் இதற்காக நிர்வகிக்கிறது.
ஆகவே, மனிதன் உழைப்பதின் மூலமும், மனிதர்களிடையே உள்ள தொடர்பைஉறுதிப்படுத்துவதின் வாயிலாகவும், தனி நபரின் முக்கியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், அவனுடைய வாழக்கைத் தரத்தை உயர்த்தவும், அவனை முன்னேற்றமடையச்செய்யவும் இஸ்லாம் வழி சொல்கிறது.
எனவே உற்பத்தியைப் பெருக்குவதோ, சமதர்மக்கொள்கையோ, சமூக நீதி திட்டமோ-இவை அனைத்தும் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையாகாது. முஸ்லிம்உம்மாவிடையே, அல்லாஹ்வின் வளங்களை சமமாக பங்கிடுதலின் மூலமாக, ஒவ்வொருமனிதனின் அடிப்படைத் தேவைகளையும், அதிகப்படியான தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும் என இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை கூறுகிறது.
வளங்களை சமமாக பங்கிடுதல் மட்டுமல்லாமல் நிலத்தை உழுவதின் மூலமாக செழுமைப்படுத்தியும் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று இஸ்லாம் பொருளாதாரத்தை விளக்குகிறது.
1. பொருளாதாரக் கொள்கை.
2. பொருளாதார முன்னேற்றம்(பொருள் உற்பத்தியும் பெருக்கமும்).
பொருளாதாரக் கொள்கை
பொருளாதாரக் கொள்கைகளை இரு வகைகளாக வகுத்து நோக்கலாம்.
1. பொருளாதாரத்தின் முக்கிய வருமான வழிகள்
2. அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய முறைகள்
பொருளாதார முன்னேற்றம்
வளங்களை வளர்க்கும் வழிமுறைகள் என்பது கூர்ந்து நோக்க வேண்டிய ஒரு விசயமாகும். மனிததேவைகளை கருத்திற்கொள்ளாது உற்பத்தியை மட்டும் கருத்திற் கொள்வதால், நாட்டிற்குநாடு இது வேறுபடுகிறது. இஸ்லாமிய நாட்டில் தொழிற் புரட்சியின் வாயிலாக விவசாயஉற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறையினை கண்டறிவதே இதன் முக்கிய நோக்கமாகும்.அதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழிற்சாலைகள் முக்கிய பங்காற்றுமாறுசெய்யலாம். இவ்வணுகுமுறையை நான்கு பகுதிகளாக நோக்கலாம்.
1. விவசாயக் கொள்கை
2. இயந்திரமயமாக்கற் கொள்கை
3. திட்டங்களுக்கான மூலதனம்
4. வெளிநாட்டுச் சந்தை உருவாக்கம்
விவசாயக் கொள்கை
இது பண்ணை உற்பத்தி அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். இது பின்வரும்முறைகளை உள்ளடக்கியுள்ளது.
மண்ணின் விளைச்சலை அதிகரித்தல் : இது அதி நவீன இயந்திரங்களையும், இரசாயணபொருட்களையும், உற்பத்தித்திறன் மிக்க விதைகளையும் உபயோகிப்பதன் மூலமாகநடைமுறைப்படுத்தப்படுகிறது. இவற்றை கொள்முதல் செய்யமுடியாத விவசாயிகட்கு மானியங்கள் வழங்குவதையும்(கடன்கள் அல்ல), முடியுமானோரை ஊக்குவிப்பதையும் அரசுமேற்கொள்ளும்.
உற்பத்திக்கான நில அளவை அதிகரித்தல்: நில அளவை அதிகரித்தல் என்பதுவிவசாயிகளிடம் இருக்கும் உற்பத்தி நிலங்களை அதிகரித்தலாகும். இது உலர் நிலங்களைவிவசாயத்திற்கு ஏற்ற முறையில் மாற்றியமைக்க உதவுவதோடு நிலமற்ற சிறிய அளவிலானவிவசாயிகட்கு அரசாங்கத்தின் கைவசம் இருக்கும் நிலங்களை வழங்குவதன் மூலமாகவும்நடைமுறைப்படுத்தப்படுகிறது. விளைநிலத்தை, விளைச்சலின்றி மூன்று ஆண்டுகள்வைத்திருப்பது ஹராம் ஆதலால் அவ்வாறு செய்வோரின் நிலங்களை அபகரித்துவிவசாயத்திற்கு ஈடுபடுத்தப்படும்.
இவ்விரு முறைகளின் மூலமாக விவசாய உற்பத்தியில் முன்னேற்றம் காணப்படுவதோடுவிவசாயக் கொள்கையின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறது. இக்கொள்கையை அமுல்படுத்தும்நிலையில் வேறு சில விசயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். விளைச்சலைஅதிகரிப்பதோடு அதன் தரத்தையும் அதிகரித்தல் அவசியமாகும். இது நவீனதொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலமாக சாத்தியமடைவதால் இயந்திரத்தொழிற்புரட்சியை ஏற்படுத்துதல் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது.
ஆகவே விவசாயத் திறனை அதிகரிப்பதில் பின்வரும் நோக்கங்கள் அடிப்படையாகஅமையவேண்டும்.
1. அன்றாடத் தேவை, நீண்ட கோடை, விளைச்சல் சரிவு, வர்த்கத் தடைஎன்பனவற்றை மனதிற்கொண்டு இச்சந்தர்ப்பங்களை முகம் கொடுக்கும் வகையில்உணவு உற்பத்தியில் முன்னேற்றம் காண வேண்டும். இதன் போது விவசாயம் மற்றும்கால்நடை வளர்ப்பு இரண்டிலும் கவனம் செலுத்துதல் அவசியம்.
2. ஆடை அணிகட்கு தேவையான பருத்தி, பட்டு, கம்பளி போன்றமூலப்பொருட்களின் உற்பத்தியல் முன்னேற்றம் காணல். இதன் முக்கிய நோக்கம்வர்த்தகத்தடையின் போது இறக்குமதியினை சார்ந்திராது சுயதேவையினை பூர்த்திசெய்து கொள்வதேயாகும்.
3. வெளிநாட்டு சந்தையில் கிராக்கி நிலவும் பொருள்களின் உற்பத்தியல்முன்னேற்றம். அது ஆடை அணிகலன்களானாலும் சரி அல்லது உணவுப்பொருட்களான பெரித்தம் பழம் போன்றவையானாலும் சரி.
அணைகள் கால்வாய்கள் கிணறுகள் அமைத்தல் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் மிகஅவசியமாயின் முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும். இதன் நோக்கம்விவசாயப்புரட்சியினை மட்டும் ஏற்படுத்துவதல்ல. மாறாக இயந்திரப் புரட்சியினை,விவசாயத்தை புறக்கணிக்காமல் ஏற்படுத்தி, உற்பத்தியினை அதிகரித்தலாகும். இதன்முக்கிய நோக்கம் பொருள் அபிவிருத்தியினை உண்டாக்குவதே. இது இயந்திரப்புரட்சியன்றி சாத்தியமாகாது.
இன்றைய முஸ்லிம் உலகின் பொருளாதாரம் ஒரு சில தொழிற்சாலைகளுடன்,விவசாயத்தை மட்டுமே முழுமையாக ஒன்றியதாக உள்ளதால் பொருளாதார பின்னடைவுபெற்றதாக காணப்படுகிறது. அதனால் இயந்திரப் புரட்சி ஏற்படுத்த அதிகளவிலான முயற்சிமிக அவசியமாகும். குடியேற்ற சக்திகளின் நோக்கம் ஏனைய நாடுகளை விவசாயத்தில்மட்டும் கவனம் செலுத்தச் செய்து, இயந்திர தொழில் முயற்சிகளை தடைசெய்து,அவ்வியந்திரங்கட்காக மேற்குலகை நம்பியிருக்கவைப்பதாகும்.
ஆகவே விவசாயத்தினைமட்டும் ஊக்குவிக்க முனையும் இவர்களின் திட்டங்களை அலட்சியப்படுத்துதல் மிகஅவசியமாகும். ஷாPஆ முடிவை இவ்விடம் கூறுவது பயனளிக்கும். ""சமூகத்திற்குபயன்தரக்கூடிய வீண்விரயமற்ற செயல்திட்டங்கட்கு பொருள் விநியோகிக்க முடியுமானவிடத்துஅதனை மேற்கொள்ளல் கடமையாகும்'' அதாவது மூலதனம் இருக்குமாயின் அதனைமேற்கொள்ளல் அவசியமானது. அச்செயல்திட்டம் அதி முக்கியமாக இல்லாவிடில் வரிவிதித்தல் மூலமாகவோ அல்லது தன் நாட்டு மக்களிடையே கடன் வாங்கியோ மேற்கொள்ளக்கூடாது.
இயந்திரமயமாக்கற்கொள்கை
இக்கொள்கையின் முக்கிய நோக்கம் நாட்டை இயந்திரமயமாக்கலாகும். இக்குறிக்கோளைஅடையக்கூடிய முக்கிய வழியானது இயந்திரங்களை உற்பத்தி செய்வதாகும். பின் மற்றையஉற்பத்தித் தொழிற்சாலைகளை மேற்கொள்ளலாம். இவ்விலக்கை அடைய மாற்று வழியேதும்இல்லாததால் இயந்திங்களை வடிவமைக்கும் தொழிற்சாலைகளை நிறுவுவதில்முக்கியத்துவம் அளித்தல் மிக அவசியமானது. இதன் மூலம் உள்நாட்டில் உற்பத்திசெய்யப்பட்ட இயந்திரங்களால் இயங்கும் தொழிற்சாலைகளை அமைக்கும் வாய்ப்புவாய்க்கிறது. ''இயந்திரங்களை உற்பத்தி செய்வதானது அதிக காலம் எடுக்கும் ஒருநடைமுறை ஆதலால் நுகர்வோர் பாவனை பொருள் உற்பத்தியினை மேற்கொள்ளும்தொழிற்சாலைகளை முதலில் அமைத்தல் வேண்டும்"" என்பது அடிப்படையற்ற நாசகாரத்தைநோக்கிய ஒரு கருத்தாகும். இது இஸ்லாமிய நாடுகளை தன் பொருட்களின் சந்தையாகமாற்றுவதற்காக மேற்கத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட ஒரு கருத்தேயன்றி வேறில்லை.
மேலும் இந்நோக்கை அடைய இயந்திரத் தொழில்நுட்ப அறிவுடைய மனிதவளத்தைமுதலில் உருவாக்க வேண்டும் என்பதும் தவறான கருத்தாகும். மேற்குலகில் அளவிற்குஅதிகமாக காணப்படும் பொறியியலாளர்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் ஒப்பந்தமுறையில் வேலைக்கு அமர்த்துவதுடன் முஸ்லிம் இளைஞர்களை வெளிநாடுகளில்இத்துறைகளில் கற்கவைக்கலாம். மேலும் கற்றுக் கொண்டிருப்போரையும் உபயோகிக்கலாம்.ஆகையால் சிறு அல்லது நுகர்வோர் பாவனை பொருட் தொழிற்சாலைகளை உருவாக்கமுனைவதன் மூலம் இயந்திரமயமாக்கல் முயற்சி வீணடிக்கப்படக்கூடாது . முதல் படியேஇயந்திரங்களை உற்பத்தி செய்தலாக அமையவேண்டும். இக்கொள்கைக்கானபடிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளப்படாது ஒரே சமயத்தில் மேற்கொள்ளவேண்டும். ஒரு படியினை நிறைவேற்றிய பின்பே மற்ற படியினை ஆரம்பித்தல் என்பதுஇம்முயற்சிக்கு எதிரான ஒரு தடையாகும்.
தற்போதுள்ள நுகர்வோர் பாவனை பொருள் உற்பத்தித் தொழிற்சாலைகளை மேலும்விரிவுபடுததுவதில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து இயந்திரமயமாக்கலில் முழுகவனத்தையும் செலுத்துதல் அவசியம். சுய உற்பத்தியை ஆரம்பிக்கும் வரையில்தற்போதுள்ள இறக்குமதி கொள்கையினை, இஸ்லாமிய பொருளாதார கொள்கையை,அமலில் வைக்கலாம். அரசின் கீழுள்ள கனிமப்பொருள் அகழ்வுத்துறையும் இதேநுணுக்கத்தை கையாளலாம். இஸ்லாமிய கொள்கைகளின் பிரகாரம் இத்துறையின்பிரதிநிதியான இஸ்லாமிய அரசு, இத்துறைக்குத் தேவையான உபகரணங்களை சுயஉற்பத்தியில் மேற்கொள்ள முனைய வேண்டும். இந்நிலையினை அடையும் வரைஇறக்குமதியை மேற்கொள்வதோடு தன் கவனத்தை சிதறடிக்காது இயந்திரமயமாக்கலில்முழுதாக செலுத்தவேண்டும்.
திட்டங்களுக்கான மூலதனம்
அரசும், தனியார் துறையும் பொறுப்பேற்க வேண்டிய திட்டங்கள் எவை என இஸ்லாத்தில்தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை முற்றுமுழுதாக தனியார் வசம்செல்வதோடு, மானியம் வழங்கல் கட்டடங்களுக்கான முதலீடு மற்றும் அபிவிருத்தித்திட்டங்கள் ஆகியவற்றில் அரசு பங்கேற்கும். ஆனால் இயந்திரமயமாக்கலில் அரசு மற்றும்தனியார் ஆகிய இரு துறையும் பங்கேற்கும். ஆனால் எண்ணை கனிமப்பொருள் அகழ்வுஎனபன அரசின் கீழ் வருதல் கட்டாயமாகும். ஏனெனில் பூமியினின்றும் கிடைக்கும்கனிமப்பொருட்கள் முஸ்லிம் உம்மாவுக்கு சொந்தமானது. எனவே அதன் பிரதிநிதியானஇஸ்லாமிய அரசே அதனை பேணிப்பாதுகாக்க வேண்டும்.
தனியார் மற்றும் அரசு இரண்டும் திட்டங்களுக்கான மூலதனம் திரட்டல் அவசியம்.தனியார் துறையை பொருத்தமட்டில் இது தனியொருவரோ அல்லது பங்காளர்கள்இணைந்தோ சட்டவிரோதமற்ற, இஸ்லாத்திற்கு எதிரான முறையில் இல்லாமல் அமைத்துக்கொள்ளலாம். அரசினை பொருத்தமட்டில் இதற்காக வெளிநாட்டு உதவிகளை தவிர்த்தல் அவசியம். இது வறுமையையும் வெளிநாட்டினை சார்ந்திருக்கும் நிலையையும்உண்டாக்குகிறது. அதுமட்டுமன்றி வெளிநாட்டு கடன்கள் வட்டியை அடிப்படையாகக்கொண்டதாகும். வட்டி இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டுக் கடன்களைவிலக்குதல் அவசியம். ஆகையால் திட்டங்களுக்கான மூலதனத்திரட்டல், அது அதிமுக்கியத்திட்டமாக இருப்பின், தன் மக்களிடம் வரிவிதித்தல் மூலம் மேற்கொள்ளலாம்.இதன்போது இஸ்லாமிய வரிவிதிப்புக் கொள்கை செயல்படுத்தப்படவேண்டும்.திட்டங்களுக்கான மூலதனத்திரட்டல் தவணை முறையாலும் மேற்கொள்ளப்படலாம்.இதன்போது அதன் கொள்ளளவு விலையிலும் அதிகமாக காணப்படுமாயின் அது வட்டி ரிதியாக அமையாது விலை ரிதியில் அமையுமாயின் மேற்கொள்ளலாம்.
வெளிநாட்டுச்சந்தை உருவாக்கம்
பொருள் சந்தைப்படுத்தலானது வருமானத்தை தரக்கூடிய முக்கிய வழியாகும். பலநாடுகள் தன் பொருட்களுக்கான சந்தை உருவாக்கலில் அன்றுபோல் இன்றும் மும்முறமாகஈடுபட்டுள்ளன. பல பொருளாதார வல்லரசுகள் இதன் மூலம் உருவாகியுள்ளன. ஆகையால்இஸ்லாமிய அரசும் தன் பொருள்களை வெளிநாட்டு சந்தையில் சந்தைப்படுத்தல்முக்கியமாகும். ஆனால் இது ஒரு தனி நோக்கமாக அமையாது. இயந்திரமயமாக்கலுக்குதேவையான பொருள் கொள்முதல், தழும்பலற்ற அன்னியச்செலாவணி திரட்டு, முஸ்லிம்இளைஞர்கட்கு பொறியியல் வைத்தியத் துறைகளில் கல்வி என்பவற்றை கருத்தில் கொண்டுஅமையவேண்டும். வர்த்தகம், இயந்திரமயமாக்கலை நோக்காக கொண்டு அமையவேண்டும்.இதன்போது "வர்த்தகமீதி" யில் கவனம் செலுத்துவது அவசியமற்றது. வர்த்தகமானது,இயந்திரமயமாக்கலுக்கும், இஸ்லாமிய து}து ஏனைய நாடுகளை அடையும் வகையில்இருப்பின், ஏற்றுமதி இறக்குமதியிலும் அதிகமாகவோ, சமமாகவோ அல்லது குறைவாகவோஅமைதலைப்பற்றி சிந்திக்கவேண்டிய அவசியம் கிடையாது. இவ்வர்த்தகக் கொள்கை மற்றஅனைத்து நாடுகளது வர்த்தகக் கொள்கையிலும் வேறுபட்டது. அனைத்து நாடுகளும்பொருட்கள் எங்கு உற்பத்தியாகின்றன என்பதை நோக்குகின்றது. எனினும் நம் கொள்கைவர்த்தகர்கள் எந்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதில் கவனம் செலுத்துகிறது. அதன் மூலமேஇஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ள முடியும். இஸ்லாமிய நாட்டைச் சார்ந்தவர்த்தகர்கள் இஸ்லாமிய ஷாரிஆவால் அனுமதிக்கப்ட்ட வகையில் வர்த்தகம் செய்வர்.வெளிநாட்டவர் தன் சொந்த கொள்கையினை பின்பற்றி வர்த்தகம் செய்வர். இம்முறைஉற்பத்தியை அதிகரிக்க உதவும்.
சுருக்கம்
நாம் இன்று மேலைத்தேய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையால் பலஇன்னல்களுக்கு ஆளாகியுள்ளோம். சுதந்திர வர்த்தக நடைமுறைகள்("FREE TRADE"), உலகநிதி நிறுவனம்(IMF) பின்பற்றும் கொள்கைகள்(இது அடிப்படை தேவைகளில் நிறைவற்றதன்மையை உருவாக்கும்), இன்றைய இஸ்லாமிய நாடுகளில் சுரண்டல் ஆகியவற்றால்அல்லாஹ் தன் அருளால் வழங்கிய வளம் வீணாகி உபயோகமற்றதாகிவிடுகிறது. தெளிவானஒரு தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள, குர்ஆன் மற்றும் சுன்னாவினால்அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முறையான கிலாஃபா முறைக்கு திரும்புவதற்கு இதுவே தக்கதருணமாகும்.முஸ்லிம்களின் நோக்கம் அல்லாஹ்(சுபு)வின் மார்கத்தை அமுல்படுத்தி, இதனை முழுமனித சமுதாயத்திற்கும் சென்றடைய செய்வதாகும். இஸ்லாமிய பொருளாதாரகொள்கையானது இயந்திரமயமாக்கல் மூலம் ஒரு வல்லரசாகி தஆவா, ஜிஹாத் மூலம்இஸ்லாத்தை மற்றையோருக்கு சென்றடைய செய்வதுடன் தன் குடிமக்களின் அடிப்படைதேவைகளை பூர்த்தி செய்வதாகும். எனவே அமெரிக்கர், பிரிட்டிஷ் மற்றும் ஏனைய முஸ்லிம்அல்லாதோர்களின் கொள்கைகளை பின்பற்றாது அல்லாஹ்(சுபு)வின் போதனையை ஏற்றுஇக்காபிர்களின் கொள்கையை பின்பற்றும் அதிகாரத்தை மீற்பதன் மூலமே நம் இலக்குகளைநாம் அடையமுடியும்.
மேலும், (நபியே!) அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக நீர்அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றியும் விடாதீர். அன்றியும், உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்ததில்சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பி விடாதபடியும், நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாகஇருப்பீராக. (உம்முடைய தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால், அப்போது அல்லாஹ்(சுபு)நாடுவதெல்லாம் அவர்களின் சில பாவங்களின் காரணமாக அவர்களை அவன் (தண்டிக்க) பிடிப்பதைத்தான்என்பதை நீர் அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாவர்.
அறியாமை காலத்துத் தீர்ப்பையா அவர்கள் தேடுகின்றனர். உறுதியாக நம்பிக்கை கொண்ட சமூகத்திற்குத்தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வை விடவும் மிக்க அழகானவன் யார்? (ஸ_ரா 5:49,50 )

Wednesday, March 18, 2009

தங்கமாகவும், வெள்ளியாகவும் பணம் இருப்பதன் அவசியம்


இறை து}தர் காலத்தில் செலாவணியிலிருந்த நாணயமானது தங்கம், வெள்ளி ஆகியவற்றின் அளவிலேயே இருந்தது. அக்கால முஸ்லீம்கள் பைசாந்திய தினாரையும், பாரசீக திர்ஹத்தையும் தங்கள் நாணயமாகக் கொண்டிருந்தனர். இவ்வழக்கம் அப்துல் மாலிக் பின் மார்வன் ஆட்சிக்கு வரும் வரை மட்டுமே தொடர்ந்தது. இவர் புதிய நாணயத்தை, இஸ்லாம் கூறும் பிரத்தியேகமான வகைகளினாலும், வடிவங்களினாலும் வடிவமைத்தார். ஷரிஆ கூறும் தினார் மற்றும் திர்ஹத்தின் அளவை நிகராகக் கொண்டு தங்கம் மற்றும் வெள்ளியினால் இந்நாணயம் உருவாக்கப்பட்டிருந்தது. தங்கம் மற்றும் வெள்ளியின் அடிப்படை அளவிலும் ஷரிஆ கூறும் தினார் மற்றும் திர்ஹத்தின் மதிப்பை நிகராகக் கொண்டும் இந்நாணயம் உருவாக்கப்பட்டிருந்தது.

இஸ்லாம் தெளிவுபடுத்தும் இறை சட்டமானது தங்கம்; மற்றும் வெள்ளியின் அடிப்படையிலேயே பெறுமதியை வரையறுத்தது. ஓரு பொருளின் மதிப்பையோ அல்லது உழைப்பின் கூலியையோ தங்கம்; மற்றும் வெள்ளி நாணயங்களின் அளவிலேயே தீர்மானித்தது. தங்கம், வெள்ளியை பதுக்கிவைத்தலைத் தடுத்த இஸ்லாம், அவற்றின் பயன்பாட்டை பற்றிய மாற்ற முடியாத சட்டங்களை இயற்றியது. ஸகாத் எனப்படும் தானம், தங்கம், வெள்ளி நாணயத்திலேயே கூறப்பட்;டிருந்தது. தானத்திற்கான நிஸாப் எனப்படும் மிகக் குறைந்த அளவு, தினார் மற்றும் திர்ஹத்தின் அளவில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தியாஹ் எனப்படும் தண்டனைக் கட்டணம் ஓராயிரம் தினாருக்கு சமமான தங்கம் எனவும், பன்னிரெண்டாயிரம் திர்ஹத்திற்கு நிகரான வெள்ளி எனவும் குறிக்கப்பட்டிருந்தது. களவிற்கான தண்டனையான கைகள் வெட்டப்படுவதற்கு களவாடப்பட்ட பொருளின் குறைந்த அளவு 1.4 தினார் தங்கம் எனவும், மூன்று திர்ஹம் வெள்ளி எனவும் இஸ்லாம் வரையறை செய்தது.

இறைத்து}தரின் ஆட்சிக்காலத்தில் நாணயப்பரிமாற்றமும், பொருட்களின் மதிப்பும், உழைப்பின் ஊதியமும் தங்கம், வெள்ளியைக் கொண்டே அமையப்பெற்றிருந்தது. ஆகவே இஸ்லாம் தங்கம், வெள்ளி இவ்விரண்டை மட்டுமே நாணயமாகக் கருதுகிறது. எனவே இஸ்லாமிய அரசு தங்கம், வெள்ளியையே தனது நாணயமாகக் கொள்ள வேண்டும். இறைத்து}தரின் காலத்திலும், பின்னர்; கலீஃபாக்களின் ஆட்சி காலத்திலும் இருந்தது போன்றே, எந்த ஒரு இஸ்லாமிய அரசும் தினார் மற்றும் திர்ஹத்தை நேர்த்தியான வடிவில் அச்சிட வேண்டும். ஓரு தினாரின் எடை ஷாPஆவின் தினாருக்கு நிகராகவும் அல்லது 4.25 கிராம் தினாரானது ஓரு மிஸ்கல் எடை நிகராகவும் இருத்தல் வேண்டும். ஒரு வெள்ளி திர்ஹத்தின் எடை ஒரு ரியத்தின் திர்ஹத்திற்கு நிகராகவோ அல்லது 10 திர்ஹங்களானது 7 மிஸ்கல் எடைக்கு நிகராக (அதாவது ஒரு திர்ஹத்தின் எடை 2.975 கிராம்) இருத்தல் வேண்டும். இதைச் செயல் படுத்துவதன் மூலமே நாணயம் சார்ந்த பொருளாதார சிக்கல்களையும், பண வீக்க விகித பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். அயல் நாட்டு நாணயமாற்று வேற்றுமை விகிதத்தை நிலைப்படுத்தவும், பன்னாடு சார்ந்த வணிகத்தை மேம்பாடு அடையச் செய்யவும் தங்கம், வெள்ளி நாணயங்கள் பெரிதும் துணை புரியும். தங்கம்; மற்றும் வெள்ளியின் படியளவைக்கொண்டே அமெரிக்க டாலரின் ஒப்பீட்டிற்குரிய கட்டண அளவைக்குறைத்து அதன் தாக்கத்தை பன்னாட்டு வணிகத்தில் குறைக்க அல்லது அழிக்க முடியும்.

Wednesday, December 31, 2008

இன்சூரன்ஸ் ஹராம்!

ஆயுள் காப்பீடு, பொருள் காப்பீடு, வாகனக் காப்பீடு, சொத்துக் காப்பீடு அல்லது மற்ற எந்தவகையான காப்பீடு முறையாக இருந்தாலும் அவை அனைத்தும் ஓர் ஒப்பந்தமாகும் காப்பீடு நிறுவனத்திற்கும் காப்பீடு செய்து கொள்ளும் நபருக்கும் மத்தியில் ஏற்படும்ஒப்பந்தம்தான் இன்சூரன்ஸ் என்று அழைக்கப்படும் காப்பீட்டு முறையாகும், காப்பீடுசெய்யப்படும் பொருளுக்கு சேதமோ அல்லது அழிவோ ஏற்படும்போது அல்லது காப்பீடுசெய்துள்ள நபருக்கு விபத்து போன்றவற்றின் காரணமாக மரணம் ஏற்படும்போது ஒருகுறிப்பிட்ட தொகையை அல்லது ஒரு குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை அல்லது பொருளின்சந்தை விலையை தனக்கோ அல்லது தான் குறிப்பிடும் நபருக்கோ அல்லது தனது வாரிசுகளுக்கோகாப்பீடு நிறுவனம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காப்பீடு செய்யும் நபர் முன்வைக்கிறார்; அதற்காக காப்பீடு செய்யும் நபர் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறது,
ஆகவே ஒரு கோரிக்கையை காப்பீடு செய்பவர் முன்வைக்கிறார், அதை ஒரு நிபந்தனையின் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது, இவ்வாறு திட்டத்தை முன்வைத்தல் மற்றும் அதை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய ஒப்பந்தத்திற்குரிய நிபந்தனைகள் இதில் நிறைவேற்றப்படுவதால் இது ஓர் ஒப்பந்தம் என்று கருதப்படுகிறது,இதனடிப்படையில். காப்பீடு நிறுவனத்திற்கும் காப்பீடு செய்யும் நபருக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது, அதனடிப்படையில் காப்பீடு செய்யும் நபர்ஏற்றுக்கொண்ட நிபந்தனையின்படி குறிப்பிட்ட தவணைகளில் குறிப்பிட்ட தொகையை பிரீமியமாககாப்பீடு நிறுவனத்திற்கு செலுத்துகிறார், எதிர்பாராத விதமாக குறிப்பிட்ட கெடுவுக்குள் காப்பீடுசெய்யப்பட்ட நபருக்கு மரணம் ஏற்பட்டாலோ அல்லது காப்பிடு செய்யப்பட்டபொருளுக்கு சேதம் அல்லது அழிவு ஏற்பட்டாலோ அல்லது பொருள் திருடப்பட்டாலோ காப்பீடுசெய்யப்பட்ட தொகையை அல்லது இழப்பீட்டுத் தொகையை அல்லது பொருளின் சந்தைவிலையை அந்த நபருக்கு அல்லது அவர் குறிப்பிடும் நபருக்கு அல்லது அவருடைய வாரிசுகளுக்குகாப்பீடு நிறுவனம் கொடுத்துவிடுகிறது, இவ்வாறு காப்பீடு செய்தவருக்கு இழப்பீடு கொடுப்பது காப்பீடு நிறுவனம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பாகவும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்வது காப்பீடு செய்தவரின் உரிமையாகவும் இருக்கின்றன, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வு (விபத்து போன்றவற்றால் ஏற்படும் சேதம் அல்லது அழிவு) ஏற்படும்போது அது முறையானது என்றுநிறுவனம் கருதும் பட்சத்தில் அல்லது முறையானது என்று நீதிமன்றம் தீர்ப்புச் செய்யும் பட்சத்தில்நிறுவனம் உரிய தொகையை உரிய நபருக்கு செலுத்திவிடுகிறது,

இந்த ஒப்பந்தத்தில் - காப்பீடு – என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது, ஒரு நபருக்கோ அல்லது அவரது குடும்பத்திற்கோ அல்லது மனைவி. குழந்தைகள்போன்ற அவரது வாரிசுகளுக்கோ பயன் அளிக்கும் நோக்கத்தோடு காப்பீடு செய்யப்படுகிறது, இத்தகைய காப்பீட்டு முறையில் ஒரு நபருக்கோ. பொருளுக்கோ. சொத்திற்கோ.வாகனத்திற்கோ. அல்லது ஒருவருக்கு பயனளிக்கக்கூடிய எந்தவொரு விஷயத்திற்கோ (உதாரணம்:ஒர் ஓவியரின் தொழிலுக்கு அனுகூலமாக உள்ள அவருடைய கை அல்லது ஒரு பாடகருக்குஅனுகூலமாக உள்ள அவரது குரல் ஆகியவை) காப்பீடு செய்து கொள்ளலாம், இவ்வாறு காப்பீடுசெய்வதின் மூலமாக ஒருவர் காப்பீடு செய்யப்பட்டவற்றில் மக்களோடு கொடுக்கல் வாங்க−ல் ஈடுபடுகிறார், அவ்வாறு இல்லையெனில் அவர் தனது ஆயுளை காப்பீடுசெய்துள்ளார் என்று கூறமுடியாது. மாறாக அவருக்கு மரணம் ஏற்படும்போது ஒருகுறிப்பிட்ட தொகையை தனது மனைவிக்கோ அல்லது தனது குழந்தைகளுக்கோ அல்லது தான்குறிப்பிடும் நபருக்கோ வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துள்ளார் என்றே கூறமுடியும், இதேநிபந்தனைதான் காப்பீடு செய்யும் பொருட்களுக்கும் சொத்திற்கும் பிரயோகிக்கப்படும், உள்ளபடியே. தனது ஆயுளை காப்பீடு செய்து கொண்டவருக்கோ அல்லது காப்பீடு செய்யப்பட்ட பொருட்களுக்கோ இழப்போ அல்லது சேதமோஏற்படும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கிடும் உத்திரவாதம் என்பதுதான் காப்பீடு என்று கருதப்படுகிறது, இதுதான் இன்சூரன்ஸ் என்று கூறப்படும்காப்பீட்டு முறை பற்றிய உண்மை நிலையாகும்,
இதை ஆழமாக ஆய்வு செய்யும்போது இரண்டுகோணங்களில் இது ஷரியாவின் விதிமுறைகளுக்கு முரண்பாடாக இருக்கிறது என்பதைஅறியமுடிகிறது,முதலாவதாக: இரண்டு தரப்பினர்களுக்கு மத்தியில் ஏற்படும் உடன்படிக்கையாகஇருப்பதால் இது ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது, இதில் திட்டத்தை முன்வைத்தல்மற்றும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவை இடம் பெறுகிறது, காப்பீடுநிறுவனம் ஒரு திட்டத்தை முன்வைக்கிறது, அதை காப்பீடு செய்யும் நபர்ஏற்றுக்கொள்கிறார், இதை ஷரியாவின் அடிப்படையில் சட்டரீதியான ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் ஒப்பந்தத்திற்குரிய ஷரியாவின் விதிமுறைகள் இதில் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும், அப்போதுதான் அது சட்டரீதியானதாக இருக்கும், இல்லையென்றால் அது ஒருபொருளுக்கோ அல்லது ஒரு பலனுக்கோ உரிய சட்டரீதியானஒப்பந்தமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; மாறாக சட்டத்திற்கு முரண்பாடானதாவேகருதப்படும், ஏனெனில் விற்பது. வாங்குவது போன்ற வர்த்தக நடவடிக்கையின் அடிப்படையில் ஒருபொருளுக்கு மாற்றாக மற்றொரு பொருளை பெற்றுக் கொள்வது அல்லது அன்பளிப்பு வழங்குவதுஅல்லது இலவசம் வழங்குவது அல்லது ஒரு பயனை ஈடாக பெறும் பொருட்டு குத்தகை முறையில்ஈடுபடுவது அல்லது ஒரு பயனை ஈடாகப் பெறாமல் கடன் வழங்குவது ஆகிய அடிப்படைனளில்மட்டுமே சட்டரீதியான ஒப்பந்தம் ஏற்பட முடியும், அதாவது ஷரியாவின் அடிப்படையில்ஒப்பந்தம் என்பது பொருள் , அதன் பயன் மற்றும் சேவை ஆகியவற்றில் மட்டும்தான் ஏற்பட முடியும்,இதனடிப்படையில். காப்பீடு என்பது பொருள் அல்லது பயன் மற்றும் சேவைஆகியவற்றில் ஏற்படும் ஒப்பந்தமாக இல்லை,
மாறாக அது உத்திரவாதத்தில் ஏற்படும் ஒப்பந்தமாகவே இருக்கிறது, இந்த உத்திரவாதம் உபயோகிக்கக்கூடிய பொருளையோ அல்லது பெற்றுக் கொள்ளும் பயனையோ குறிப்பதாக இல்லை, எனெனில் இதில் ஒரு பொருளை குத்தகைக்கு விட்டு அதி−ருந்து பயனைபெற்றுக் கொள்வது என்ற நிலை இல்லை; பயனை பெற்றுக் கொள்ளாமல் கடன் கொடுப்பதுஎன்ற நிலையும் இல்லை; அல்லது இந்த உத்திரவாதத்தை வைத்து கடன் பெறும் நிலையும் இல்லை,

மாறாக இது ஒரு கொடுக்கல் வாங்கலாகவே இருக்கிறது, ஆகவே இன்சூரன்ஸ்என்பது பொருட்களின் மீதோ அல்லது அவற்றின் பயன்களின் மீதோ அல்லது சேவை மீதோஏற்படும் ஒப்பந்தம் அல்ல, ஏனெனில் பொருள் அதன் பயன் மற்றும் சேவை ஆகியவை தொடர்பாக ஏற்படும் ஒப்பந்தத்தில் இடம் பெறும் ஷரியா விதிமுறைகள் எதுவும் இதில்இடம் பெறவில்லை, ஆகவே இன்சூரன்ûஸ பொருட்கள் அல்லது பயன்கள் அல்லது சேவைஆகியவற்றில் ஏற்படும் ஒப்பந்தமாக ஏற்றுக் கொள்ள முடியாது,இரண்டாவதாக: சில நிபந்தனைகள் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் காப்பீடு செய்பவருக்கு ஒரு குறிப்பிட்ட வாக்குறுதியை அளிப்பதால் இதை நிறுவனங்கள்அளிக்கும் உத்திரவாதத்தில் ஏற்படும் ஒப்பந்தம் என்றே குறிப்பிட வேண்டும்,இதனடிப்படையில். இன்சூரன்ஸ் செய்வதை சட்டரீதியானதாக ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில்உத்திரவாதம்தொடர்பான ஷரியாவின் விதிமுறைகள் இதில் இடம் பெற்றிருக்க வேண்டும்,அப்போதுதான் அது சட்டரீதியான உத்திரவாதமாக ஏற்றுக் கொள்ளப்படும். இல்லையெனில் அதுசட்டரீதியான உத்திரவாதமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது,உத்திரவாதம் தொடர்பான ஷரியாவின் விதிமுறைகள் :ஒரு குறிப்பிட்ட உரிமையை நிறைவேற்றும்போது உத்திரவாதம் அளித்தவர் தனது பொறுப்பை உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டவரின் பொறுப்போடு இணைத்துக் கொள்கிறார், ஆகவே இன்சூரன்ஸில் ஒருவரின்பொறுப்போடு மற்றொருவரின் பொறுப்பை இணைக்கும் நிபந்தனை இடம் பெறவேண்டும்,மேலும் உத்திரவாதம் அளித்தவர், உத்திரவாதம் அளிக்கப்பட்டவர் , உத்திரவாதத்தை பெற்றுக் கொண்டவர் ஆகியவர்கள் அதில் இடம்பெற்றிக்க வேண்டும், ஆகவே உத்திரவாதம் என்பது ஓர் உரிமையைப் பொறுத்து கட்டாயம் நிறைவு செய்யவேண்டிய பொறுப்பாகும். அதில் எந்தவிதமான ஈட்டுத் தொகையையும்பெற்றுக் கொள்ளாமல் பொறுப்பு நிறைவு செய்யப்பட வேண்டும், நிகழ்காலத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய நிதியியல் சார்ந்த உரிமை அல்லது எதிர்காலத்தில் பெற்றுக் கொள்ளவேண்டியநிதியியல் சார்ந்த உரிமை ஆகியவை தொடர்பான நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தால் அந்தஉத்திரவாதம் சட்டரீதியாக செல்லுபடி ஆகக் கூடியதாக இருக்கும், ஆகவே உத்திரவாதம்நிகழ்காலத்தில் பெற்றுக் கொள்ள வேண்டிய நிதியியல் சார்ந்த உரிமை அல்லது எதிர்காலத்தில்பெற்றுக் கொள்ள வேண்டிய நிதியியல் சார்ந்த உரிமை ஆகியவை தொடர்பானதாகஇல்லையெனில் அது சட்டப்படி செல்லுபடி ஆகாது, ஏனெனில் உத்திரவாதம் என்பதுஓர் உரிமையை நிறைவு செய்வதில் உள்ள ஒருவருடைய பொறுப்பில் மற்றொருவர் இணைந்துகொள்வதாகும். எனவே உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டவரின் உரிமையை நிறைவேற்றுவதில்பொறுப்பு ஏற்கும் செயல் இடம் பெறாவிடில் பொறுப்பில் இணைந்து கொள்ளுதல் என்ற செயல்ஒருபோதும் நடைபெறாது, உரிமையை நிகழ்காலத்தில் நிறைவேற்றுவதைப் பொறுத்தவரையில் இதுதெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறையாகும்,உரிமையை எதிர்காலத்தில் நிறைவேற்றுவதைப் பொறுத்தவரை
“இன்ன மனிதரை திருமணம்செய்து கொண்டால் மஹருக்கு நான் உத்திரவாதம் கொடுக்கிறேன்” என்று ஒரு பெண்ணிடம்ஒருவர் கூறுவதற்கு ஒப்பாக இருக்கிறது, இந்த விவகாரத்தில். உத்திரவாதம் அளித்தவர் اபொறுப்பில் பிணை ஆக்கப்பட்டு இருப்பதைப்போல உத்திரவாதத்தைப் பெற்றுக்கொண்டவர் பிணையாக்கப்படும் விதத்திலும். உத்திரவாதத்தைப் பெற்றுக்கொண்டவரின் பொறுப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிற அதே முறையில் உத்திரவாதம் அளித்தவரின்பொறுப்பு உறுதி செய்யப்படும் விதத்திலும். உத்திரவாதம் அளித்தவர் தன்னுடைய
பொறுப்பை உத்திரவாத்தை பெற்றுக் கொண்டரின் பொறுப்போடு இணைத்துக்கொள்கிறார், அதேவேளையில் நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ நிறைவேற்ற வேண்டியபொறுப்பு இல்லையெனில் பிறகு உத்திரவாதம் அளிப்பதிலோ அல்லது ஒருவரின் பொறுப்பைமற்றவரின் பொறுப்போடு இணைப்பதிலோ எந்த அர்த்தமும் கிடையாது.
எனவே இத்தகையஉத்திரவாதம் சட்ட ரீதியாக செல்லுபடி ஆகாது,மேலும் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்ட நபருக்கு உடனடியாகவோ அல்லது பிறகோபயனை உறுதியான முறையில் பெற்றுக்கொள்ளும் உரிமை இல்லாவிடில் அந்த உத்திரவாதம்சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, ஏனெனில் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டவரின்பொருளுக்கு சேதமோ அழிவோ ஏற்படும்போது அல்லது அவர் கடனுக்கு ஆளாகும்போது அல்லதுஎதிர்பாராத விதத்தில் ஏற்படும் நிகழ்வால் அவர் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய நிதியியல்சார்ந்த பொறுப்பு அல்லது பிறகு அவர் நிறைவேற்ற வேண்டிய நிதியியல் சார்ந்த பொறுப்புஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு உத்திரவாதம் அளிப்பவர் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான்உத்திரவாதம் அளிப்பதற்கு நிபந்தனையாக இருக்கிறது,
ஆகவே உத்திரவாதம் அளிக்கப்பட்டவர்உடனடியாகவோ அல்லது எதிர்காலத்திலோ நிறைவேற்ற வேண்டிய பொறுப்பைநிறைவேற்ற தவறும்போது அவர் விஷயத்தில் எவர் உத்திரவாதம் அளித்தாரோ அவருடையஉத்திரவாதம் சட்டப்படி செல்லாததாக ஆகிவிடுகிறது, ஏனெனில் உத்திரவாதம் அளிக்கப்பட்டவர்நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கு அந்த விவகாரத்திற்கு எவர் உத்திரவாதம்அளித்தாரோ அவரும் பொறுப்பாளியாக இருக்கிறார்,இதற்கு உதாரணம் ஒன்றை இப்போது காண்போம் : ஒரு சலவைத் தொழிலாளி இருக்கிறார்,ஒருவர் மற்றொரு நபரிடம் கூறுகிறார். “அந்த சலவைத் தொழிலாளியிடம் துணிகளை அனுப்புங்கள்நான் அவற்றிற்கு உத்திரவாதம் அளிக்கிறேன்” என்கிறார்; பின்னர் அவரிடம் துணிகள்அனுப்பப்பட்டு அவை சேதமாகி விட்டன, இந்நிலையில் சேதமடைந்த துணிகளுக்கு சலவைத்தொழிலாளியின் சார்பில் நஷ்டஈடு கொடுப்பதற்குரிய பொறுப்பு உத்திரவாதம் அளித்தவருக்குஇருக்கிறதா அல்லது இல்லையா? இதற்குரிய பதில் பின்வருமாறு : சலவைத் தொழிலாளியின்செயல்பாடு காரணமாகவோ அல்லது அவரின் கவனக்குறைவு காரணமாகவோ துணிகள்சேதமடைந்திருந்தால் பிறகு உத்திரவாதம் கொடுத்தவர் எந்தவிதமான நஷ்டஈடும் கொடுக்கத்தேவையில்லை; ஏனெனில் உத்திரவாதம் கொடுக்கப்பட்ட சலவைத் தொழிலாளி சேதத்திற்குக்காரணமாக இருக்கவில்லை, ஆகவே உத்திரவாதம் கொடுக்கப்பட்டவர் இதில் பொறுப்பாளியாகஇல்லாத காரணத்தால் உத்திரவாதம் கொடுத்தவருக்கும் இதில் எந்தவிதமான பொறுப்பும் இல்லை,
எனவே உத்திரவாதம் பெற்றுள்ளவர் தமது துணிகளுக்கு உரிய நஷ்டஈட்டை மற்றொருநபரிடமிருந்துதான் பெற்றுக் கொள்ள முடியும், அந்த துணிகளை தயாரித்தவர்களிடமிருந்தோஅல்லது அவற்றை விற்பனை செய்தவர்களிடமிருந்தோ உடனடியாகவோ அல்லது ஒரு குறிப்பிட்டகாலத்திற்குப் பின்னரோ நஷ்ட ஈட்டை பெற்றுக் கொள்ளவேண்டும்,ஆகவே ஷரியா விதிமுறையின்படி உத்திரவாதம் பெற்றுள்ளவரின் உரிமை உடனடியாகவோஅல்லது எதிர்காலத்திலோ உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுதான் உத்திரவாதம் சட்டரீதியாகஇருப்பதற்கு நிபந்தனையாக இருக்கிறது, எனினும் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டவர் மற்றும் உத்திரவாதம் அளிக்கப்பட்டவர் ஆகியவர்களின் பெயர்கள்குறிப்பிடப்பட வேண்டும் என்பது நிபந்தனையல்ல, இவ்வாறாக இந்த இரு நபர்களின் பெயர்கள்குறிப்பிடப்பட்டாலும் அல்லது குறிப்பிடப் படாவிட்டாலும் உத்திரவாதம் சட்டரீதியாக செல்லபடிஆகக்கூடியதே, எனவே ஒருவர் மற்றொரு நபரிடம்
“உங்கள் துணிகளை சலவைத் தொழிலாளியிடம்கொடுங்கள்” என்று கூறுகிறார்; அதற்கு மற்றொருவர் “துணிகளை அவர் சேதப்படுத்தி விடுவார்என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறுகிறார், இந்நிலையில் முதல் நபர் கூறுகிறார். “சலவைத்தொழிலாளியிடம் துணிகளைக் கொடுத்து அவை சேதம் அடைந்தால் நஷ்ட ஈடு கொடுப்பதற்கு
நான் உத்திரவாதம் அளிக்கிறேன்” என்று சலவைத் தொழிலாளியின் பெயரைக் குறிப்பிடாமல்கூறினாலும் உத்திரவாதம் சட்டரீதியாக செல்லுபடி ஆகக்கூடியதுதான், இதனடிப்படையில் அவர்சலவைத் தொழிலாளியிடம் துணிகளைக் கொடுக்கிறார். பின்னர் அவை சேதமடைந்து விடுகின்றன,இந்நிலையில் உத்திரவாதம் அளிக்கப்பட்ட நபரின் (சலவைத் தொழிலாளி) பெயர் தெரியாதபோதும்உத்திரவாதம் அளித்தவர் சேதத்திற்கு பொறுப்பாளியாகி விடுகிறார், இதுபோலவே
“இன்ன மனிதர்சிறந்த சலவைத் தொழிலாளியாக இருக்கிறார் , எவர் அவரிடம் துணிகளைக் கொடுக்கிறாரோஅவருக்கு அவரது துணிகள் சேதப்படுவதி−ருந்து நான் உத்திரவாதம் அளிக்கிறேன்” என்று ஒருவர்கூறும்போது உத்திரவாதம் அளிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்படுகிறது. இந்நிலையிலும்உத்திரவாதம் சட்டப்படி செலலுபடி ஆகக்கூடியதுதான்,மேற்கூறப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் உத்திரவாதம் தொடர்பானஷரியாவின் தெளிவான ஆதாரங்களிபடி உத்திரவாதம் அளிக்கும்போது ஒருவரின் பொறுப்பு மற்றவருடன் இணைக்கப்படுகிறது என்பதையும் அந்த உத்திரவாதம் வாக்குறுதியைநிறைவேற்றுவதில் இருக்கும் பொறுப்போடு தொடர்புடையது என்பதையும் நாம்காண்கிறோம்,
மேலும் இந்த விவகாரத்தில் உத்திரவாதம் அளிப்பவர் உத்திரவாதம்அளிக்கப்படுபவர் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொள்பவர் ஆகியவர்கள்இடம் பெறுகிறார்கள் என்பதையும். உத்திரவாதம் கொடுப்பதற்கு ஈட்டுத்தொகை எதுவும்கோரப்படுவதில்லை என்பதையும் உத்திரவாதம் அளிக்கப்படுபவர் மற்றும் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொள்பவர் ஆகியவர்களின் பெயர்கள் குறிப்பிடபட்ட நிலையிலும் பெயர்கள்குறிப்பிடப்படாத நிலையிலும் உத்திரவாதம் அளிக்கப்படுகிறது என்பதையும் நாம் காண்கிறோம்,ஜாபிர் அறிவித்து அபூதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸில்கூறப்பட்டிருப்பதாவது :கடன் இருக்கும் நிலையில் அதை அடைப்பதற்கு எந்த ஏற்பாடுகளும் செய்யாதநிலையில் ஒரு மனிதர் மரணம் அடைந்து விட்டால் அவரின் ஜனாஸôவிற்குஅல்லாஹ்வின் தூதர் தொழுகை நடத்த மாட்டார்கள், ஒரு சமயம் ஒருமனிதரின் ஜனாஸô கொண்டு வரப்பட்டது. அவருக்கு ஏதேனும் கடன் இருக்கிறதா? என்றுஅல்லாஹ்வின் தூதர்  வினவினார்கள், ஆம் அவருக்கு இரண்டு தினார்கடன் இருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள், உங்கள் தோழருக்காக நீங்கள் தொழுது
கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் கூறிவிட்டார்கள், அப்போது.அல்லாஹ்வின் துதரே  அந்தக் கடனை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றுஅபூகதாதா கூறினார், பின்னர் அல்லாஹ்வின் தூதர் அவருக்காகதொழுகை நடத்தினார்கள், அல்லாஹ் ( ஜிஹாது மூலமாக ) அல்லாஹ்வின் தூதருக்கு சில நிலப்பரப்புகளை திறந்து விட்டபோது. “ஒவ்வொரு மூ*மின்களுக்கும்அவர்களைவிட அவர்கள் மீது நான் பொறுப்பு உடையவனாக இருக்கிறேன், ஆகவேஅவர்களில் எவரேனும் கடனை விட்டுச்சென்றால் அதை அடைப்பது என்மீதுபொறுப்பாக இருக்கிறது இன்னும் எவரேனும் சொத்துக்களை விட்டுச்சென்றால் அதுஅவர்களின் வாரிசுகளுக்கு சொந்தமாக இருக்கிறது” என்று கூறினார்கள்,
இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள ஆதாரத்தின் விளக்கமாவது :கடன் கொடுத்த ஒருவரின் கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பில் மரணமடைந்துவிட்ட ஒருவரின் பொறுப்போடு தனது பொறுப்பை அபூகதாதா இணைத்துக்கொண்டார் என்பதையும் இந்த விவகாரத்தில் உத்திரவாதம் அளித்தவர் (அபூகதாதா உத்திரவாதம் அளிக்கப்பட்டவர் (மரணமடைந்துவிட்டவர்). உத்திரவாதத்தை பெற்றுக் கொண்டவர்(கடன் கொடுத்தவர்) ஆகியவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் மரணமடைந்தவரும்அபூகதாதாவும் திருப்பிச் செலுத்துவதாக கொடுத்த உத்திரவாதம் கடன்கொடுத்தவருக்கு உரிய உரிமையோடும் உத்திரவாதம் கொடுத்தவர் நிறைவேற்ற வேண்டியபொறுப்போடும் தொடர்புடையது என்பதையும் அந்த உத்திரவாதம் எந்தவிதமானஈட்டுத்தொகையையும் பெற்றுக் கொள்ளாமல் அளிக்கப்பட்டது என்பதையும் உத்திரவாதம்பெற்றுள்ள நபரான கடன் கொடுத்த மனிதர் மற்றும் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள நபரானமரணமடைந்த மனிதர் ஆகியவர்களின் பெயர்கள் பற்றிய விபரங்கள் உத்திரவாதம்அளிக்கப்பட்டபோது குறிப்பிடப்படவில்லை என்பதையும் இந்த ஹதீஸின் ஆதாரம் தெளிவாகக்குறிப்பிடுகிறது,
இதனடிப்படையில் இந்த ஹதீஸ் உத்திரவாதம் சட்டரீதியாக இருப்பதற்குரியநிபந்தனைகள் எவை என்பதைக் கூறக்கூடியதாகவும் அந்த உத்திரவாதத்தின் அடிப்படையில்ஒப்பந்தம் செய்து கொள்வதற்குரிய நிபந்தனைகள் எவை என்பதைக் கூறக்கூடியதாகவும் இருக்கிறது,ஷரியாவின் விதிமுறைகள் அடிப்படையில் இவைகள்தான் உத்திரவாதம் தொடர்பான சட்டரீதியான நிபந்தனைகளாகும், இன்சூரன்ஸ் என்பது நிச்சயமாக ஒருஉத்திரவாதமாக இருப்பதால் உத்திரவாதம் தொடர்பான ஷரியாவின் விதிமுறைகளைஇன்சூரன்ஸ் முறை மீது பிரயோகம் செய்து ஆய்வு செய்யவேண்டும், அவ்வாறு செய்யும்போதுஉத்திரவாதம் மற்றும் அதை ஒப்பந்தம் செய்வது தொடர்பான ஷரியா விதிமுறைகள் எதுவும்இன்சூரன்ஸ் முறையில் இடம்பெறவில்லை என்பதும் இன்சூரன்ஸ் முறையில் இடம்பெற்றுள்ளஉத்திரவாதம் சட்டரீதியாக செல்லுபடி ஆகாதது என்பதும் தெளிவாகத் தெரிகிறது, இன்சூரன்ஸ்நிறுவனம் காப்பீடு செய்துள்ளவர் கொடுக்கவேண்டிய கடன் பொறுப்பில்எதையும் தன்னோடு இணைத்துக் கொள்வதில்லை என்ற காரணத்தால் இன்சூரன்ஸ் முறையில்ஒருவர் பொறுப்பை மற்றொருவர் பொறுப்புடன் இணைத்துக் கொள்ளும் எந்த நடைமுறையும்இடம்பெறுவதில்லை,
ஆகவே இதில் எந்தவிதமான சட்டரீதியான உத்திரவாதமும் இடம்பெறவில்லை என்பதால் இது சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, காப்பீடு செய்தவர்اகடனாளியாக இருக்கும் நிலையில் காப்பீடு நிறுவனம் கடன் கொடுத்தவருக்கு எந்தத்தொகையையும் வழங்குவதில்லை, காப்பீடு செய்யும் நபருக்கு இருக்கும் கடன் சுமையில்எந்தவிதமான பொறுப்பையும் காப்பீடு நிறுவனம் எடுத்துக் கொள்வதில்லை என்றகாரணத்தாலும் கடன் அளித்தவரின் நிதியியல் சார்ந்த உரிமையை எந்தவிதத்திலும்
நிறைவேற்றுவதில்லை என்ற காரணத்தாலும் காப்பீடு நிறுவனம் அளிக்கும் உத்திரவாதத்தைசட்டரீதியானது என்று ஏற்றுக் கொள்ளமுடியாது, காப்பீடு செய்யும் ஒருவருக்கு அவர்கொடுக்கவேண்டிய கடனைப் பொறுத்து எந்தவிதமான நிதியியல் சார்ந்த உரிமையையும் காப்பீடுநிறுவனம் அளிப்பதில்லை என்ற காரணத்தால் இன்சூரன்ஸில் எந்தவிதமான நிதியியல் சார்ந்தஉரிமையோ அல்லது ஷரியா அங்கீகரித்த உத்திரவாதமோ இடம்பெறுவதில்லை,
ஆகவேஇன்சூரன்ஸ்முறை சட்டப்படி செல்லுபடி ஆகாது,காப்பீடு செய்பவரிடமிருந்து ஒரு தொகையைப் முன்னதாகப் பெற்றுக்கொண்டுபின்னர் குறிப்பிட்ட நிபந்தனை அடிப்படையில் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாகவோ அல்லதுஇழந்த பொருளுக்கு விலையாகவோ காப்பீடு நிறுவனம் வழங்குவதை நிதியியல் சார்ந்தஉரிமை என்றோ அல்லது உத்திரவாதம் என்றோ ஏற்றுக் கொள்ளமுடியாது, காப்பீடு செய்தவர் நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ கொடுக்கவேண்டிய எந்தத் தொகைக்கும்காப்பீடு நிறுவனம் உத்திரவாதம் அளிப்பதில்லை என்ற காரணத்தால் அது கொடுக்கும்உத்திரவாதம் சட்டப்படி உண்மையான உத்திரவாதம் அல்ல, சட்டரீதியானஉத்திரவாதத்தில் உத்திரவாதம் அளிப்பவர் ,உத்திரவாதம் அளிக்கப்படுபவர் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொள்பவர் ஆகியோர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் இன்சூரன்ஸ் முறையில் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொள்பவர் எவரும்இடம் பெறுவதில்லை என்ற காரணத்தால் இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுக்கும்உத்திரவாதம் சட்டரீதியான உத்திரவாதம் அல்ல, உயிர் இழப்பு. பொருள் இழப்பு ஆகியவற்றிற்குகாப்பீடு நிறுவனம் நஷ்டஈடு கொடுப்பதற்கு முன்னதாக காப்பீடு செய்பவரிடமிருந்துபணத்தை(பிரீமியம்) பெற்றுக் கொள்கிறது. சட்டரீதியான உத்திரவாதத்தில் எந்தவிதமானஈட்டுத்தொகையயும் பெற்றுக் கொள்வதற்கு அனுமதியில்லை என்ற அடிப்படையில் காப்பீடுநிறுவனம் அளிக்கும் உத்திரவாதம் சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, ஷரியாநிர்ணயம் செய்துள்ள உத்திரவாதம் தொடர்பான ஷரத்துக்கள் எதுவும் இன்சூரன்ஸ் முறையில்இடம் பெறவில்லை என்பதாலும் உத்திரவாதத்தை சட்டரீதியாக ஆக்கும் நிபந்தனைகளைநிறைவேற்றுவதில் இன்சூரன்ஸ் முறை தவறிவிட்டது என்பதாலும் இன்சூரன்ஸ் செய்வதுசட்டவிரோதமானது, ஆகவே இன்சூரன்ஸ் நிறுவனம் அளிக்கும் வாக்குறுதி ஆவணம். உத்திரவாதம். இழப்பீடு. ஆகியவற்றில் சட்டரீதியான அம்சம் எதுவும்இல்லை என்ற காரணத்தால் ஒப்பந்தம் என்ற அடிப்படையிலும் உத்திரவாதம் என்றஅடிப்படையிலும் இன்சூரன்ஸ் முறையை ஷரியா அங்கீகரிக்கவில்லை,
ஆகவே இன்சூரன்ஸ்முறை ஷரியாவின் கண்ணோட்டத்தில் தடைசெய்யப்பட்ட விஷயமாக இருக்கிறது,இதனடிப்படையில். ஆயுள் காப்பீடு , சொத்துக் காப்பீடு வாகனக் காப்பீடு ,பொருள் காப்பீடு ஆகிய காப்பீடுகளும் இதரவகை காப்பீடுகளும் ஷரியாவினால் தடை செய்யப்பட்ட ஹராமான நிதியியல் நடவடிக்கைகளாகும், ஏனெனில் இன்சூரன்ஸ் என்று அழைக்கப்படும் காப்பீடு திட்டத்தில் இடம் பெறும்ஒப்பந்தம் மற்றும் வாக்குறுதி அடிப்படையிலேயே ஷரியாவின் விதிமுறைகளுக்கு முரண்பாடாக இருப்பதால் ஹராமானதாகும், ஆகவே இதி−ருந்து கிடைக்கும்பணம் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பான பணமாக இருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்வதும் ஹராமாகும்,

Saturday, December 20, 2008

G20 மாநாடுகளும் பின்னணிகளும்

உலகப்பொருளாதார நிலையை பற்றிகலந்துரையாடுவதற்காக G20 நாடுகளின் மாநாடு நவம்பர் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெற்றன. மாநாட்டpல் இடம்பெற்ற விடயங்களை விவரிக்க முன்பு பு20 தொடர்பான அடpப்படை விடையங்களை அறிந்து கொல்வது முக்கியமாகும்.
1994 – 95 காலப்பகுதியில் மெக்சிகோவிலும், 1997 இல் ஆசியாவிலும், 1998 இல் ரஷ்யாவிலும், 1999 இல் ஆஜன்டpனாவிலும் உலக நிதி முறைமை நிதிநெருக்கடpயை ஏற்படுத்தியது. இதன் பின்பு 1999 செப்டெம்பர் 26 இல் இடம்பெற்ற G7 நாடுகளின் நிதி அமைச்சர்களின் கூட்டத்தில் G20 அமைப்பை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது. ( முன்னர் இது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் குழு என அழைக்கப்பட்டது.) இவ் அமைப்பின் முதற் கூட்டம் 1999 டpசம்பர் 15 – 16 ஆம் திகதிகளில்பெர்லின் நகரில் இடம்பெற்றது.இருபது நாடுகலைச் சேர்ந்த மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் நிதி அமைச்சர்களைக்கொன்ட குழுவே பு20 என அழைக்கப்படுகிறது. உலகப்பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும் 19 நாடுகளுடன ஜரோப்பிய ஒன்றியமும் இதில் அங்கம வகிக்கிறது.
G20 இல் அங்கம் வகக்கும் பொரூளாதாரங்கள் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Global Gross National Product) 85% பங்கை வகிக்கின்றன. மேலும் உலக வர்தகத்தில் 80மூ பங்கை!ம் இவ்வமைப்பின் பொருளாதாரங்கள் கொன்டpருக்கின்றன ( ஜரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான வர்தகமும் இதில் அடங்கும்.) இந்த அமைப்பில அங்கம்வகிக்கும் நாடுகளின் சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்காகும். ஆஜன்டpனா, அவுஸ்ரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தொனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் கொரியா, தென்ஆபிரிகா, துருக்கி, ஜக்கிய இராஜியம், அமேரிகா மற்றும ;ஜரோப்பிய ஒன்றியம் ஆகியவையே பு20 குழுவில் அடங்குகின்றன. இதற்கு மேலதிகமாக இந்நாடுகளின் நிதி அமைச்சர்கள், உலக வங்கித்தலைவர்கள் உட்பட சர்வதேச நானய நிதியம் (ஐஆகு), உலக வர்தக அமைப்பு (WTO) என்பனவும் G20 கூட்டங்களில் கலந்து கொள்வது வலக்கம்.உலக நிதி முறையைப் பாதுகாப்பது,சர்வதேச நிதிக்கட்டமைப்பை பாதுகாப்பதினூடாக மேற்கத்திய சக்திகளின பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது மற்றும் தேசிய கொள்கை வகுப்பு,சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் போன்ற விடயங்களில கலந்துறையாட வாய்ப்பளித்தல் போன்றவையே G20 இன் பிரதான இலக்காகும. சாவதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு (WTO) என்பவற்றினூடாக வளர்ந்து வரும் நாடுகளில் G20 தொழிற்பட்டு வருகிறது. இதன் நோக்கம் அந்நாடுகளை உலக நிதி முறைமையிள் நன்கு உள்வாங்கிக் கொள்வதாகும்.பிரான்ஸ் ஐனாதிபதி நிகொலஸ் சர்கோசி, பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுன் போன்றவர்கள் ஐரோப்பியத் தலைவர்களின் கட்டளையின் காரணமாக வாஷிங்டனில ;நடைபெற்ற கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கடன் நெருக்கடியை உலக அளவில் பரவ விட்டது தொடர்பில் ஐரோப்பியத் தலைவர்கள் அமெரிக்கா மேல் விசனம் கொண்டிருந்தனர். டொலரை உறுதிப்படுத்துவதற்காக மசகு எண்ணெய்,உணவு மற்றும் ஏனைய பொருட்களின் விலையை அமெரிக்கா திரிபு படுத்தியது. இதன் விளைவாக ஐரோப்பாவில் உற்பத்திச் செலவும் பணவீக்கமும் அதிகரித்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதத்தைக் குறைப்பதைத் தவிர வேறெந்த வழியும் ஐரோப்பிய மத்திய வங்கிக்கு இருக்கவில்லை. இதன் விளைவாக ஐரோப்பிய பொருளாதாரம் சுரங்கத் தொடங்கியதுடன் முதலீட்டாலர்கள் !ரோவிலிருந்து டொலருக்கு மாறினர். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் நிலவிய குலறவான வட்டி வீதமும் பொருளாதார வளர்சசியும்முதலீட்டாளர்களை அமெரிக்காவின் பக்கம் கவர்ந்திழுக்கச் செய்தது. இதனால் !ரோவின் பெறுமதி வீழ்ச்சியடையத் தொடங்கியதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. போதிய பொருளாதார வளர்ச்சி ஏற்படாத காரணத்தால் வட்டி வீதத்தைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஐரோப்பிய மத்திய வங்கிக்கு ஏற்பட்டது.இதனால் டொலருக்கெதிரான யுரோவின் பெறுமதி மேலும் குறைவடைந்தது. இதற்கு மத்தியில் இந்த நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட கூட்டமொன்றை ஒழுங்கு செய்யுமாறு சர்கோசி,பிரவுன்,மேர்கல் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஜோர்ஜ் புஷ்ஷைக் கேட்டுக்கொண்டனர். ஒக்டோபர் 5 ஆம் திகதி பு 8 அமைப்pல் அங்கம் வகிக்கும் நாடுகளான பிரித்தானியா,பிரான்ஸ்,ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியன கூடி,உலக நிதி முறையில் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கென சர்வதேச மாநாடொன்றை அவசரமாக ஒழுங்கு செய்வதெனத் தீர்மானித்ததாக அசோசியேடட் பிரஸ் (AP) தெரிவித்தது.
2008 ஒக்டோபர் 12 ஆம் திகதி நடைபெற்ற ஐரோப்பய ஒன்றிய கூட்டமொனறில் நிதி நெருக்கடியை சமாளி;ப்பதற்கான பிரேரணை ஒன்றை கோர்டன் பிரவுன் சமர்ப்பித்தார் பிரஸ்ஸல்ஸில் 2008 ஒக்டோபர் 15-16 ஆம் திகதிகளில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் பத்திகையாளர் மாநாட்டின் இரண்டாவது தினத்தில் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய கமிஷனனின் தலைவர் மனவுல் பிரசோ (Manual Barosso) பின்வருமாறு தெரிவித்தார்
ஐரோப்பாதலைமை வகித்தால் மட்டுமே உலகளாவிய hPதியிலான ஓர் ஓப்பந்தம் ஏற்படும்.
பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசியும் ஐரோப்பிய கமிஷன் தலைவர் மனவுல் பிரசோ வும் ஜோர்ஜ் புஷ்ஷை 2008 ஒக்டோபர் 18 அன்று கேம்ப் டேவிட் இல் சந்தித்தனர்.
தற்போதுள்ள நெருக்கடி உலகளாவிய நெருக்கடி, எனவே இதற்கென உலகளாவிய தீர்வொன்றை எட்ட வேண்டும் என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்தவர்களினதும் நோக்கமாகும்__ என அங்கு சர்கோஸி தெரிவித்தார்.
உலக நிதி முறைமையின் அடிப்படைகன்,விதிமுறைகள்,அதன் நிறுவனங்கள் என்பன மறுசீரமைக்கப்பட வேண்டும். உலகளாவிய hPதியில் புதிய நிதி முறைமை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதனாலேயே சர்வதேச அளவிலான மாநாடொன்றை ஐரோப்பா நடாத்த விரும்புகிறது என பிரசோ தெரிவித்தார்.
உலக முதலாலித்துவத்தை மறுசீரமைப்பதற்கான முன்னெடுப்பை ஐரோப்பாவே மேற்கொள்ள வேண்டும் என 21 ஒக்டோபர்2008 அன்று சர்கோசி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போது தேவைப்படும் மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான தலைமைத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியமே ஏற்க வேண்டும் ஏனெனில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியமே தொடர்ந்து கூறி வருவதுடன் அமெரிக்கா இதற்கு சாதகமாக இல்லை என ஸ்பானிய பிரதமர் ஜேஸ் லுயீஸ் ரொட்ரிகஸ் செபடரோ தெரிவித்துள்ளார்.
மாணியம்,ஊக்குவிப்பு தொடர்பான எல்லா விடயங்களிலும் கட்டுபபாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதித்துறையைக் கட்டுப்படுத்த குறிப்பாக அமெரிக்காவில் போதிய முறைமை இல்லாமையே உலக நிதி நெருக்கடிக்குக் காரணமாகும். என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதானிகள் நம்புகின்றனர். இதை வேறு வழியில் கூறுவதெனில் அமெரிக்க முதலாலித்துவமே உலக நிதி நெருக்கடிக்கு காரணம் என அவர்கள் நம்புகின்றனர். உலகப் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப ஒருங்கிணைக்கப்பட்ட செயற்திட்டம் வேண்டுமெனவும், வட்டி வீதத்தைக் குறைப்பதன் மூலமும ;அரசசெலவை அதிகரிப்பதன் மூலமுமே இதை எட்ட முடியும் எனவும் அவர்கள் எதிர்;பார்க்கின்றனர். எதிர்கால சீர்திருத்தங்களை ஏற்படுத்தத் தேவையான திட்ட வரைவொன்றை இந்த கூட்டத்தில் ஏற்படுத்த முடியும் எனவும், சர்வதேச நாணய நிதியம் (IMF) ,உலக வங்கி போன்றவற்றிட்குத் தேவையான மாற்றங்களையும் அத்திட்ட வரைவு உள்ளடக்கும் எனவும் அவர்கள் நம்புகின்றனர். இதன் பின்னணியிலேயே நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் சர்வதேச மாநாடொன்று வாஷிங்டனில் கூட்ட புஷ் சம்மதித்தார் ஒரு சில மேலோட்டமான இலக்குகளையும், கொள்கைகளையும் வகுப்பதைத் தவிர தனித்துவமான தீர்வுகள் எதையும் G20 மாநாடு எட்டப்போவதில்லை எனத் தெரிகிரது.
மாநாட்டின் பின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் பின்வருமாறு இலக்குகள்
1. உலக நிதி நெருக்கடி ஏட்பட்டதற்கான அடிப்படைக் காரணிகள் தொடர்பில் புரிந்துனர்வு ஏற்பட்டது.
2. நெருக்கடியை சமாளிப்பதற்கு நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளும் குறுங்காலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகளும் ஆராயப்பட்டன.
3. நிதிச்சந்தைகளை சீரமைப்பதற்கான பொதுவான கொள்கைகளில் இணக்கம் காணப்பட்டது.
4. அக்கொள்கைகளை நடைமுறைப்படுத்த செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டன. மேலதிகமாக பிரேரணைகளை சமர்ப்பிக்க அமைச்சர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன் தொடர்ந்து வரும் மாநாடுகளில அவற்றைத் தலைவர்கன் ஆராய்வர்கள் எனவும் இணங்கப்பட்டது.
5. திறந்த சந்தைக் கொள்கைகளுக்கான அவர்களது பஙகளிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
கொள்கைகள் (PRINCIPLES)
1. நிதியியல் வெளியீடுகளின் (Financial Products)வெளிப்படுத்தல்களை (Disclosure) அதிகரிப்பதினூடாக வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தல்.
2. கடன் தரப்படுத்தல் நிறுவனங்களை (Credit Rate Agencies) மேற்பார்வை செய்வதினூடாக திறனான கட்டுப்பாடுகளை உருவாக்குதல்.
முன்னெச்சரிக்கை அபாய முகாமையை (Prudent Risk Management) ஏற்படுத்தல்.
3. சந்தையில் மோசடிகளைத் தவிர்ப்பதன் முலம் நிதிச்சந்தைகளில் நேர்மைத்தன்மையை அதிகரித்தல், முரண்பாடுகளை தீர்த்து வைக்க உதவுதல்.
4. நிதிச்சந்தையின் பல்வேறு பிரிவுகளுக்கும் கொள்கைகளை வகுப்பது தெரடர்பில் கொளகை வகுப்பாளர்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல், உள்ளுர் சட்டதிட்டங்களை சர்வதேச நியமங்களுக்கேற்ப வகுப்பதினூடாக சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்தல்.
5. சர்வதேச நிதி நிறுவனங்களின் நிர்வாகத்தையும் அங்கத்துவத்தையும் மாற்றியமைத்து அவற்றை மறுசீரமைத்தல். நடைபெற்ற மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கிடையில் போதிய இணக்கப்பாடு ஏற்படாமைக்கான காரணங்கள் பின்வருமாறு,
முதற்காரணி
உலக நிதி முறைமையில் முழுமையான சீர்த்திருத்தத்தைக் கொண்டுவர உள்ளுரிலோ சர்வதேச அரங்கிலோ ஜேர்ஜ் புஷ் போதிய அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. மேலும் புஷ்ஷின் பதவிக்காலம் முடிவடைய சில நாட்கலே இருப்பதால் ஒபாமா பதவி ஏற்கும் வரை தங்களது பிரேரணைகளை சமாப்;பிக்க உலக நாடுகளின் தலைவர்கள் காத்திருக்கின்றனர். திறந்த சந்தை முறைமையைப் பாதுகாக்கவும் அமெரிக்க முதலாலித்துவம் மீதான ஐரோப்பாவின் குற்றச்சட்டிலிருந்து கவனத்தை திசை திருப்பவுமே மாநாடு முழுவதும் புஷ் முயற்சி செய்து கொண்டிருந்தார்.
நிதித்துரையில் சீhத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் அதேசமயம், நிலைத்து நிற்கும் பொருளாதார் இப்பிரச்சினைக்கான நீண்ட காலத் தீர்வு__ என புஷ் தெரிவித்தார்
வளர்ச்சியை ஏறபடுத்துவதற்கான திறந்த சந்தையும் சுதந்திரமான மக்களுமே சிறந்த வழி__ என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் புஷ்ஷால் செய்ய முடிந்ததெல்லாம் திறந்த சந்தை தொடர்பில் (பார்க்க, இலக்கம் 5) ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியமையே. மிகுதி விடயங்களை அவர் அடுத்த ஜனாதபதி ஒபாமாவிற்கு விட்டு வைத்து விட்டார்.
இரண்டாவது காரணி
நிலையான நாணயமாற்று வீதத்தையும ;சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றையும் உருவாக்கிய பிரட்டன் (Bretton Woods) ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது தொடர்பில் சில ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கருத்துத்தெரிவித்திருந்தனர்.
உண்மையான அனைத்து சீர்திருத்தங்களையும் உள்ளடக்கிய சர்வதேச நிதி முறைமையில் ஏற்படுத்த பிரட்டன் கொண்டுவரப்பட வேண்டும்__ என என்கலா மெர்கலும் நிகலஸ் சர்கோஸியும் கூறியிருந்தார்.
புதிய பொருளாதார முறைமை ஒன்றை அமைப்பதற்கு உலகத் தலைவர்கள் முன்வர வேண்டும்__ என கோர்டன் பிரவுண் 2008 ஒக்டோபர் 13 அன்று தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து வரும் காலங்களுக்குத் தேவையான புதிய சர்வதேச நிதிக்கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த புதிய பிரட்டன் தேவைப்படுகிறது__ என மேலும் அவர் கூறினார்.
எனினும் பிரவுனின் அனுகுமுறையும்பிரட்டன் இன் அனுகுமுறையும்சற்று வித்தியாசமானவை. உலக மயமாக்கலைத் தொடர்ந்தும் திறந்த சந்தையை ஆதரிக்கவும் முக்கியத்துவம் கொடுத்து வரும் பிரிட்டனின் கொள்கையும் நிலையான நாணய மாற்றுக்குத் திரும்ப வேண்டுமென்ற கொள்கையும ஒன்றுக்கொண்று முரண்படுகின்றது. பிரவுனின் அனுகுமுறையுடன் இணங்க மறுக்கும் சர்கோஸி (Anglo Saxon) முறையிலான கட்டுப்பாடுகளற்ற சந்தைகள் தோல்வியடைந்துள்ளன என வாதிடுகிறார் இக்கருத்தை ஆதரிக்கும் இத்தாலிய பொருளாதாரத்துறை அமைச்சர் Giulio Tremonti
புதிய Bretton Woods ஏற்படுத்த 2009 ஆம் ஆண்டின் G7 தலைமைத்துவத்தை இ;தாலி பயன்படுத்தும்__ எனத் தெரிவித்தார். Bretton Woods தொடர்பில் அமெரிக்காவின் கருத்து ஐரோப்பாவின் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட. சர்வதேச நாணய நிதியம் (IMF) , உலக வங்கி , உலக வர்த்தக ஸ்தாபனம் (WTO) ஆகியவற்றிலிருந்து தனது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க அமெரிக்கா விரும்பவில்லை. மிதக்கும் நாணய மாற்று வீதம் (Floating Exchange Rates) உலக சந்தைகளை விட Wall Street இற்கு சாதகமாக இருப்பதால் அம்முறைமையை ஒழித்து விடவும் அமெரிக்கா விரும்பவில்லை. திறந்த முறைமையைத் தொடரும் அதேவேளை சர்வதேச நிதி நிறுவனங்களின் கட்டுப்பாட்டை தன் கீழ் வைத்துக் கொள்ளவும் பரித்தரியா விரும்புகிறது. தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொண்ட அமெரிக்காவின் பாரிய நிறுவனங்களை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பிரித்தானியா எதிர்;பார்க்கிறது. மேற் கூறிய இரண்டு காரணிகளாலும் இலக்குகள், கொள்கைகள் தவிர G20 ஆல் வேறு விடயங்கிற்கு தீர்வு காண முடியவில்லை. இதை பல்வேறு தலைவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எதிர்வரும் காலங்களில் நடக்விருக்கும் மாநாடுகளும் G20 கூட்டங்ளும் உலக நிதி முறைமையில் என்ன மாற்றம் ஏற்படும் எனத் தீர்மானிக்கக் கூடும்.
நவம்பர் 17 ,2008.

Saturday, December 6, 2008

கொந்தளிக்கும் பங்குச்சந்தைகள் – Turbulence of stock Markets ( காரணங்களும் ஷரியா விதிமுறைகளும்) - இறுதிப்பகுதி

பங்குச்சந்தைகள் தொடர்பான ஷரியாவின் விதிமுறைகள் :

PLC எனப்படும் பொதுத்துறை நிறுவன அமைப்பில் ஒரு நிறுவனம் வரையறைக்கு உட்பட்ட பொறுப்பு (limited liabilities) என்ற தனித்துவ அம்சத்தைப் பெற்றுக்கொள்கிறது, நிறுவனம் நஷ்டத்தை அடையும் பட்சத்தில் இந்த தனித்தன்மையின் மூலமாக அந்த நிறுவன முதலாளிகள் கடன் சுமையில் அகப்பட்டுக் கொள்ளாமல் பாதுகாப்பு பெற்றுக் கொள்கின்றனர், இத்தகைய நிறுவனங்களுக்கு கடன் வழங்கியவர்களும் அதன் பங்குகளில் முதலீடு செய்தவர்களும் நிறுவன முதலாளியிடமிருந்து தாங்கள் கொடுத்த கடன் தொகையையோ அல்லது முதலீடு செய்த பணத்தையோ அல்லது எந்தவிதமான நஷ்டயீட்டையோ பெற்றுக் கொள்ள முடியாது. அந்த முதலாளிக்கு எவ்வளவு அதிகமான சொத்துக்கள் இருந்தபோதும் சரியேõ நிறுவனத்தில் எஞ்சியுள்ள சொத்துக்களிலிருந்து கிடைக்கும் சிறிய தொகையை பெற்றுக் கொள்வதைத் தவிர சட்டரீதியாக வேறுவழி இல்லை, ஒவ்வொரு அம்சத்திலும் இது ஷரியாவிற்கு முரண்பாடாக இருக்கிறது, கடன் கொடுத்தவர்களுக்கு உரிய முழுத் தொகையையும் திருப்பித் தந்து விடவேண்டும் என்று ஷரியா கட்டளையிட்டிருக்கிறது, மேலும் கடன் தொகையில் எந்தவிதமான பிடித்தமும் செய்வதற்கு அது தடை விதித்திருக்கிறது,

அபூஹுரைரா(ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது:

மற்றவர்களிடமிருந்து வாங்கும் கடன்தொகையை நிச்சயம் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் கடன் வாங்குகிறவர்களுடைய கடனை அல்லாஹ்வே திருப்பிக்கொடுப்பான் ஆனால் மற்றவர்களிடமிருந்து கடன் பெறும்போது விரயம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்குகிறவர்களை அல்லாஹ் விரயம் செய்துவிடுவான்

வசதி உள்ளவர்கள் தங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் செய்வதை அநீதி என்று ஷரியா குறிப்பிட்டிருக்கிறது,

அபூஹுரைரா(ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது:

செல்வந்தர்கள் (கடனைத் திருப்பிக் கொடுப்பதில்) தாமதம் செய்வது அநீதியான செயலாகும்.

கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் செய்வது அநீதி என்றால் கடன் கொடுத்தவரின் பணத்தை மோசம் செய்வதும் கடனைத் திருப்பிச் செலுத்த மறுப்பதும் எவ்வளவு பெரிய பாவம்? உள்ளபடியே இது மிகப்பெரும் அநீதமாகவும் கடும் தண்டனைக்கு உரிய செயலாகவும் இருக்கிறது, கடன் வாங்கிய பின்னர் அதை முறையாக திருப்பிச் செலுத்துகிறவர்தான் சிறந்தவர் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) நமக்கு போதனை செய்திருக்கிறார்கள்,
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்.

முறையாக கடனை திருப்பிச் செலுத்துகிறவர்தான் உங்களில் சிறந்த மனிதராவார்.

ஆகவே பொதுத்துறை நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும்போது கடன் கொடுத்தவர்களின் பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கு மறுப்பது தடை செய்யப்பட்ட பாவமான செயலாகும், மாறாக நிறுவன முதலாளியின் சொத்திலிருந்து கடன் கொடுத்தவர்களுக்கு உரிய முழுத் தொகையையும் பட்டுவாடா செய்யப்படவேண்டும்,
பொதுத்துறை நிறுவனங்களுக்கு வரையறைக்கு உட்பட்ட கடன் பொறுப்புகளை சட்டரீதியாக ஆக்கியிருப்பது தொடர்பாக உள்ள ஷரியா விதிமுறைகள் என்னவென்றால். இந்த நிறுவனஅமைப்பு இஸ்லாத்தின் நிறுவனஅமைப்புச் சட்டங்களுக்கு முரண்பாடாக இருப்பதால் இவற்றை நடத்துவதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது, பொதுத்துறை நிறுவனத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட பணத்தை முதலீடு செய்வதன் மூலம் ஒரு நிதித்திட்டத்தில்(financial project) பங்கு கொள்கிறார்கள், இதனடிப்படையில் நிறுவனத்தின் லாபநஷ்டத்தில் பங்குகொள்கிறாôகள், இதுதான் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம், இந்த விளக்கத்தின் அடிப்படையிலும் பொதுத்துறை நிறுனங்களை உருவாக்கும் முறையிலுள்ள உண்மைநிலை அடிப்படையிலும் இணை நிதிநிறுவன அமைப்பு (joint stock company) அடிப்படையிலும் இது இரண்டு நபர்களுக்கு மத்தியிலோ அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்தியிலோ ஏற்படும் ஒப்பந்தமே அல்ல, ஷரியாவின் விதிமுறைகள் அடிப்படையில் இதை ஒர் ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது, ஏனெனில் ஷரியாவின் விதிமுறைப்படி ஒப்பந்தம் (contract) என்பது ஒருவர் ஒரு திட்டத்தை முன்வைத்தல் மற்றவர் அதை ஏற்றுக்கொள்ளுதல் (offer and acceptance) என்ற முறையில் ஏற்படுவதாகும், அதாவது ஒப்பந்தம் என்றால் அதில் இரண்டு நபர்கள் இருக்கவேண்டும் ‘நான் உங்களுடன் இன்ன விஷயத்தில் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என்றோ அல்லது அது போன்ற கருத்துடைய கூற்றையோ கூறுவதன் மூலம் ஒருவர் ஒரு ஒப்பந்தத்தை முன்வைப்பார்; ‘ஏற்றுக்கொள்கிறேன்’ என்றோ அல்லது ‘சம்மதிக்கிறேன்’ என்றோ மற்றொருவர் கூறி அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார், ஒரு ஒப்பந்தத்தில் குறைந்தது இரண்டு நபர்கள் பங்களிப்பு செய்யவில்லை என்றாலும் திட்டத்தை முன்வைத்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் நிகழவில்லை என்றாலும் ஒப்பந்தமே ஏற்படவில்லை என்று பொருளாகும். இவ்வாறு செய்யப்படாத எதுவும் ஒப்பந்தமாக ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.

ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை நிறுவனத்திடமிருந்து நேரடியாக வாங்குவதின் மூலமாக அல்லது ஏற்கனவே பங்குகளை வாங்கி வைத்திருப்பவரிடமிருந்து வாங்குவதின் மூலமாக ஒருவர் அந்த நிறுவனத்தின் நிதித்திட்டத்தில் பங்கேற்றவர் ஆகிறார், ஆனால் பொதுத்துறை நிறுவன சட்டப்படி இவ்வாறு பங்கேற்ற ஒருவருக்கு அந்த நிறுவன நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கோ அல்லது அந்த நிறுவனத்தில் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்து கொள்வதற்கோ அல்லது பங்குகளை வைத்திருக்கும் இதர நபர்களோடு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கோ அதிகாரமோ உரிமையோ கிடையாது.

ஒரு நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக அங்கீகாரம் பெறும்போது அதற்கு கூட்டமைப்பு தன்மையை (corporeal personality) நிர்ணயிப்பது. பங்கு வைத்திருப்பவர்களிடமிருந்து சுதந்திரமாக செயல்படும் அதிகாரத்தை வழங்குவது ஆகியவற்றை அரசுதான் நிறைவேற்றுகிறது, அந்த நிறுவனம் தொடர்பான கூட்டமைப்பு அறிவிப்பை (memorandum of Association) அரசுதான் வெளியிடுகிறது, நிறுவனத்தை தொடங்குவதற்கு அரசிடம் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் மட்டும்தான் நிறுவன முதலாளிகளுக்கு மத்தியில் ஏற்படும் ஒப்பந்தமாக இருக்கிறது, இவ்வாறு நிறுவனத்தின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் நிறுவன நடவடிக்கைகள் துவக்கப்பட்டு பங்குகளின் விற்பனை நடைபெற ஆரம்பித்து விடுகிறது, இந்த பங்குகளை நிறுவன முதலாளிகளும் (founders of the company) பொதுமக்களும் வாங்குகிறார்கள்.

பங்குகளை ஒருவர் வாங்கும்போது நிறுவனத்திற்கும் அவருக்கும் எந்த ஒப்பந்தமும் ஏற்படுவதில்லை, இருநபர்களுக்கு மத்தியில் ஏற்படும் ஒப்பந்தம் (contract), திட்டத்தை முன்வைத்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் (offer and acceptance) ஆகியவை எதுவும் நிறைவேற்றப் படுவதில்லை, ஆகவே பொதுத்துறை நிறுவனம் என்பது இருநபர்களுக்கு மத்தியில் ஏற்படும் ஒப்பந்தம் அல்ல மாறாக அது பங்கு வாங்குகிறவர் தன்னிச்சசையாக எடுக்கும் தீர்மானமே ஆகும், இந்தவகை செயல்பாட்டை ஒப்பந்தத்திற்கு ஒத்துப்போகுதல் என்று மேற்குநாடுகளின் சட்டநிபுணர்கள் வியாக்ஞானம் செய்துள்ளார்கள், இவர்களின் கூற்றின்படி பங்குகளை வாங்குவது என்பது ஒருவர் தனது விருப்பப்படி ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு தேர்ந்தெடுக்கும் ஒரு வழிமுறையாகும், அதில் அவர் மற்றொருவருடன் நேருக்குநேராக ஒருவிஷயத்தை தனது விருப்பப்படி முடிவுசெய்து கொள்கிறார் அல்லது பொதுமக்களுடன் நேருக்குநேராக ஒருவிஷயத்தை தனது விருப்பப்படி முடிவுசெய்து கொள்கிறார் இதில் மற்றவர் அல்லது பொதுமக்கள் ஆகியோரின் ஏற்பு அல்லது மறுப்பு ஆகியவை எவ்வாறு இருந்தபோதிலும் சரியே, இதுதான் பங்கு வாங்குகிற நபரின் நிலைப்பாடு குறித்து மேற்குநாடுகளின் சட்டநிபுணர்கள் கொடுக்கும் விளக்கம், இந்த விளக்கத்தின் அடிப்படையில் பங்குகளை வாங்குகிறவர்களுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் மத்தியில் எந்தவிதமான முறையான ஒப்பந்தமும் ஏற்படுவதாக கூறமுடியாது, ஆகவே ஷரியாவின் விதிமுறைகளின்படி பொதுத்துறை நிறுவனங்களில் இடம்பெறும் ஒப்பந்தம் சட்டத்திற்கு புறம்பானதாகும் ஏனெனில் ஷரியாவின் விதிமுறைகளின்படி ஒப்பந்தத்தில் இடம்பெறும் இருநபர்களுக்கு மத்தியில் நேரடி பங்களிப்பும் இணைப்பும் இருக்கவேண்டும் ஆனால் பொதுத்துறை நிறுவனங்களின் ஒப்பந்தத்தில் இந்த ஷரத்து இடம்பெறுவதில்லை.

இஸ்லாம் வரையறை செய்துள்ள நிறுவன அமைப்புகளுக்கு முரண்பட்டதாக பொதுத்துறை நிறுவன அமைப்பு இருக்கிறது, இஸ்லாத்தின் அடிப்படையில் இரண்டு நபர்கள் மத்தியிலோ அல்லது இரண்டு நபர்களுக்கு அதிகமாக உள்ளவர்கள் மத்தியிலோ லாபம் ஈட்டும் நோக்கத்தோடு ஏற்படும் நிதியியல் சார்ந்த ஒப்பந்தம்தான் நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது, ஆகவே இரண்டு அல்லது இரண்டு நபர்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு மத்தியில் ஏற்படுவதுதான் ஒப்பந்தமே தவிர தன்னிச்சையாக ஒருவர் எடுக்கும் தீர்மானத்தை ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது, பணத்தை செலுத்துவது மட்டும் ஒப்பந்தமாகாது மேலும் இதை நிறுவனத்தில் பங்களிப்பு செய்வது என்றும் கருதமுடியாது, ஆகவே நிதியியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடுவதுதான் நிறுவன ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சமாக இருக்கிறது.

இத்தகைய நிதியியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் ஈடுபடலாம் அல்லது அவர்களில் ஒருவர் மட்டும் ஈடுபடலாம் அல்லது அவர்களில் முதலீடு செய்த ஒருவர் சார்பாக மற்றொருவர் ஈடுபடலாம், ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களுமோ அல்லது குறைந்தது அவர்களில் ஒருவரோ நிறுவன நடவடிக்கைகளில் ஈடுபடும்போது உண்மையான பங்குதாரர் (physical partner) ஒருவர் நிறுவனத்தில் இடம்பெறுகிறார், ஆகவே இஸ்லாத்தின் விதிமுறைகள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவன அமைப்பிலும் குறைந்தது ஒரு உண்மையான பங்குதாரர் (physical partner) இருக்க வேண்டியது கட்டாயமாகும், மேலும் நிறுவன ஒப்பந்தங்களில் இது அடிப்படையான விதிமுறையாக இருக்கிறது இல்லையெனில் வர்த்தக கூட்டணி (partnership) ஏற்படாது, வர்த்தக கூட்டணி ஏற்படுவதற்கு உரிய ஷரியா நிபந்தனைகள் பொதுத்துறை நிறுவன அமைப்புகளில் நிறைவேற்றப்படுவதில்லை, உண்மையான பங்குதாரர் (physical partner) இருக்க வேண்டியது கட்டாயம் என்ற நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் இடம் பெற்றிருப்பவர்கள் முதலீட்டில் பங்குதாரர்களாக இருக்கிறார்களே தவிர உண்மையான பங்குதாரராக (physical partner) இருப்பதில்லை, பொதுத்துறை நிறுவனங்களில் வர்த்தக கூட்டணி (ல்ஹழ்ற்ய்ங்ழ்ள்ட்ண்ல்) முதலீட்டில் பங்குதாரர்களாக இருக்கிறவர்களை வைத்து முடிவு செய்யப்படுகிறதே ஒழிய அதில் உண்மையான பங்குதாரர் (physical partner) இடம் பெறுவதில்லை, பொதுத்துறை நிறுவனங்களில் உண்மையான பங்குதாரர் (physical partner) இல்லாத நிலையில் அதன் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது, ஷரியாவின் விதிமுறைகள் அடிப்படையில் முதலீட்டில் மட்டும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் நிறுவன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ அல்லது நிறுவனத்தில் உண்மையான பங்குதாரராக (physical partner) செயல்படுவதற்கோ அதிகாரம் கிடையாது, நிறுவனத்தை நடத்திச்செல்லும் அதிகாரமும் நிறுவனத்தில் பங்குதாராக செயலாற்றும் உரிமையும் உண்மையான பங்குதாரரோடு (physical partner) மட்டும் கட்டுப் படுத்தப் பட்டிருக்கிறது, பொதுத்துறை நிறுவனங்களின் வர்த்தக கூட்டணியில் (partnership) இருப்பவர்கள் முதலீட்டில் பங்குதாரர்களாக இருக்கிறார்களே தவிர ஒருவரோடு ஒருவர் பங்குதாரர்களாக இல்லை, ஆகவே எவரெல்லாம் அதிகமான பங்குகளை வைத்திருக்கிறாரோ அவருக்கு அதிகமான ஓட்டுகள் இருக்கின்றன அதேவேளையில் எவரெல்லாம் குறைவான பங்குகளை வைத்திருக்கிறாரோ அவருக்கு குறைவான ஓட்டுக்களே இருக்கின்றன, பொதுத்துறை நிறுவனம் கூட்டமைப்பு தன்மை (corporeal personality) கொண்டதாக இருந்தபோதும் அதற்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்று முதலாளித்துவவாதிகள் கூறுகிறார்கள், ஆனால் இந்த விஷயத்திலும் ஷரியாவின் விதிமுறைகள் மீறப்படுகின்றன, ஷரியாவின் விதிமுறைகளின்படி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முடிவெடுக்கும் திறனுள்ள ஒரு மனிதருக்கு கொடுக்கப்பட வேண்டுமே தவிர கூட்டமைப்புக்கு அல்ல, இவ்வாறு இல்லாத நிலையில் எடுக்கப்படும் எந்த தீர்மானமும் ஷரியாவின் விதிமுறைகளின்படி செல்லுபடி ஆகாது.

இதனடிப்படையில் நிறுவனத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை பொதுத்துறை நிறுவனத்தின் கூட்டமைப்புக்கு (corporeal personality) கொடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது, மாறாக அந்த அதிகாரம் முடிவெடுக்கும் திறனுள்ள ஒரு மனிதருக்கு கொடுக்கப்பட வேண்டும், ஷரியாவின் விதிமுறைகளின்படி கூட்டமைப்பு (corporeal personality) மூலமாக கொண்டு வரப்படும் தீர்மானங்கள் அனைத்தும் செல்லுபடி ஆகாது, எனவே நிறுவனத்தின் கூட்டமைப்புக்கு (corporeal personality) முடிவெடுக்கும் அதிகாரம் கொடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப் பட்டுள்ளது, இதனடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவைகளாகும், ஷரியாவின் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய உண்மைநிலை இதுதான்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் - - PLC shares :

இந்த நிறுவனங்கள் வினியோகம் செய்யும் பங்குகளைப் பொறுத்தவரை உண்மைநிலை என்னவென்றால்; பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படும் அனைத்தும் நிதியியல் சார்ந்த ஆவணங்களாகும் (financial papers) அதில் ஒன்றை கொள்முதல் செய்யும்போது அல்லது அதை மதிப்பீடு செய்யும்போது அது அன்றைய நிலையிலுள்ள பங்கின் மதிப்பை குறிக்கிறது ஆனால் பங்குகளை விற்பனை செய்த நிறுவனம் துவக்கப்பட்டபோது இருந்த அந்த பங்கின் மதிப்பை குறிக்காது, பங்கு என்பது அதனை விற்பனை செய்த நிறுவன அமைப்பின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறதே தவிர நிறுவன முதலீட்டின் பிரிக்கமுடியாத பகுதியாக இருப்பதில்லை மேலும் பங்குகள் தனித்துவத் தன்மை கொண்டதாகவோ அல்லது நிலையான மதிப்பு கொண்டதாகவோ இருக்காது மாறாக நிறுவனத்தின் லாபநஷ்டங்களின் அடிப்படையில் ஏற்றஇறக்கங்களைப் பெற்றுக்கொள்கிறது, பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவைகள் என்ற அடிப்படையில் அவற்றின் பங்குகளில் வர்த்தகம் செய்வதையும் அவற்றில் வர்த்தகம் நடைபெறும் பங்குச்சந்தைகளில் ஈடுபடுவதையும் ஷரியா தடை செய்துள்ளது, மேலும் சட்டத்திற்கு புறம்பான முதலீட்டிலிருந்தும் சட்டத்திற்கு புறம்பான லாபத்திலிருந்து பெறப்பட்ட பணத்திலிருந்தும் உருவான பொருளாதாரம் அவற்றில் கலந்திருக்கின்றன, ஒவ்வொரு பங்கும் சட்டவிரோதமான நிறுவனங்களின் சொத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது, ஷரியாவின் விதிமுறைகளுக்கு புறம்பான வழியில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல்வாங்கல் மூலமாக பெறப்பட்ட ஹராமான பணமாக இருப்பதால் அதில் வர்த்தகம் புரிவது ஹராமான செயலாகும், நிறுவனங்களின் பங்குப்பத்திரங்களும் (companies bonds) இதில் அடங்கும் ஏனெனில் அவற்றில் வட்டி அடிப்படையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் வினியோகிக்கும் ரொக்கப்பத்திரங்களும் இதில் அடங்கும் ஏனெனனில் அவற்றில் சட்டவிரோதமான முதலீடுகள் கலந்திருக்கினறன.

மேற்கூறப்பட்ட விஷயங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அவை வினியோகிக்கும் பங்குகள் ஆகியவற்றைப் பொறுத்த உண்மைநிலையாக இருக்கிறது, முதலாளித்துவ பொருளாதாரததிலும் உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் துயரமாக விளங்கும் வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளைப் பொறுத்தவரை அவைகளின் வட்டிவீதம் எவ்வாறு இருந்தபோதிலும் இஸ்லாத்தின் அடிப்படையில் அவைகள் திட்டவட்டமாக தடுக்கப்பட்டவைகளாகும், ஏனெனில் எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் வட்டியிலிருந்து கிடைக்கும் அனைத்துவகை பணமும் ஹராமானதாகும். இத்தகைய பணத்தை சொத்தாக வைத்தக்கொள்ள எவருக்கும் உரிமையில்லை ஆகவே அவற்றை வசூலித்த நபரிடம் திருப்பி ஒப்படைத்து விடவேண்டும்.

வட்டி ஏற்படுத்தும் கொடூர விளைவின் காரணமாக அதை உண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவர்களைப் போல் மறுமையில் எழுவார்கள் என்று அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
வட்டியை உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டவன் பைத்தியம் பிடித்து எழுவதுபோல் (மறுமையில்) எழுவார்கள், இதற்குக் காரணம் அவர்கள் நிச்சயமாக வியாபாரம் வட்டியை போன்றதுதான் என்று கூறியதாகும், அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமானதாக ஆக்கி வட்டியை தடைசெய்திருக்கிறான், எனினும் எவர் தனது இரட்சகனிடமிருந்து நல்லுபதேசம் வந்தபின் அதைவிட்டு விலகிவிடுகிறாரோ அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது, ஆனால் எவர்கள் (நற்போதனை வந்த பின்னர் இப்பாவத்தின் பக்கம்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள், அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். ( 2 : 275)
மேலும் வட்டியால் விளையும் சமூகத் தீமைகளின் காரணமாக வட்டி வரவுசெலவுகளில் ஈடுபடுபவர் அல்லாஹ்(சுபு) வுடன் போர் செய்பவர்கள் என்று அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (278) فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையான மூ*மின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் எஞ்சியுள்ள வட்டியை வாங்காமல் விட்டுவிடுங்கள், இவ்வாறு நீங்கள் செய்யவில்லை என்றால் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டுவிட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்) உங்கள் பணத்தில் அசல்தொகை உங்களுக்கு உண்டு, நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் அப்போது நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2 : 278,279)
மாற்றமுடியாத காகித நாணய முறையைப் (inconvertible paper money) பொறுத்தவரை உள்ள உணண்மைநிலை என்னவென்றால். பொருட்கள் மற்றும் சேவைகள் (goods and services) ஆகியவற்றின் மதிப்பீட்டை (valuations) குறிப்பதற்காக மக்கள் அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவைகள் தங்கம் அல்லது வெள்ளி ஆகியவற்றால் ஆனதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியே, அனைத்துப் பொருட்களும் மற்றும் சேவைகளும் இந்த மதிப்பீட்டைக் கொண்டுதான் அளவீடு (measurement) செய்யப்படுகின்றன, இஸ்லாத்திற்கு முந்திய காலத்தில் தங்கம் போன்ற உலோகத்தை ஏற்புநிறை மதிப்பீடாக(gold standard) பரவலான முறையில் பயன்படுத்தி வந்தார்கள், இஸ்லாத்தின் பிரவேசத்திற்குப் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய நாணயங்களான தினார் (dhinars) மற்றும் திர்ஹம் (dhirhams) ஆகியவற்றை நாணயமாக ஏற்று பயன்படுத்தி வந்தார்கள், அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் நிரந்தர மதிப்புள்ள முழுமையான நாணயமாக அவற்றை ஆக்கினார்கள்,முதலாம் உலகப்போருக்கு முன்புவரை உலகம் முழுவதும் தங்கமும் வெள்ளியும் நாணயமாக பயன்படுத்தப்பட்டு வந்தன, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலக நாடுகளிடையே பிரட்டன் வுட்ஸ் ஒப்பந்தம் (Bretten Woods Agreement) ஏற்பட்டது அதனடிப்படையில் ஏற்புநிறை மதிப்பீடாக (standard) தங்கத்தோடு இணைத்து அமெரிக்கடாலர் (gold standard or dollar standard)கொண்டு வரப்பட்டது, 1970 க்கு பின்னர் ஏற்புநிறை மதிப்பீட்டிலிருந்து தங்கத்தை அறவே நீக்கிவிட்டு அமெரிக்கடாலர் மட்டும் என்ற நியதியை அமெரிக்கா கொண்டு வந்தது, இதன் பின்னர் அமெரிக்கா முதற்கொண்டு உலக நாடுகள் அனைத்தும் நாணயங்கள் அச்சிடும்போது தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களை கையிருப்பில் வைத்துக் கொள்ளும் முறையை அறவே கைவிட்டுவிட்டன எனவே காகித நாணயம் மாற்றமுடியாத நாணயமாக (inconvertible paper money) ஆக்கப்பட்டது, நாணயங்களுக்கு மாற்றாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை இருந்தநிலை மாற்றப்பட்டதால் காகிதத்தில் அச்சடிக்கப்படும் இன்றைய நாணயங்களுக்கு உண்மையான மதிப்பு ஏதும் இருப்பதில்லை, சட்டங்கள் மூலமாக நிர்பந்தமான முறையில் காகித நாணயங்களுக்கு மதிப்பு கொடுக்கப்பட்டு அதை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி ஆக்கப்பட்டுள்ளது, ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் சுயநலங்களை பாதுகாக்கும் காலனியாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு காகித நாணயமுறையை ஒரு சாதனமாக (means) பயன்படுத்திக் கொண்டன, இந்த சக்திகள் உலக நாணயங்களில் தலையீடு செய்து தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொண்டதோடு அவ்வப்போது உலக நாடுகளின் பொருளாதாரத்தில் தலையீடு செய்து பொருளாதார அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன, முதலாளித்துவ அரசுகள் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி காகித நாணயங்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டதால் பணவீக்கம் ஏற்பட்டு நாணயத்தின் கொள்முதல் திறன் குறைந்து போனதோடு உலக பொருளாதாரத்திலும் நிதிநிலைகளிலும் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுவிட்டன.

முதலாளித்துவ பொருளாதார அமைப்பு. பொதுத்துறை நிறுவன அமைப்பு. வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கி அமைப்பு. மாற்றமுடியாத காகித நாணயமுறை ஆகியவை தவறான அடிப்படை கொண்டவை என்பதையும் ஊழல் நிறைந்தவை என்பதையும் பல குளறுபடிகளைக் கொண்டவை என்பதையும் முதலாளித்துவவாதிகளின் நலன்களை மட்டும் பாதுகாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டவை என்பதையும் மேற்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார அதிர்வுகள் வெட்டவெளிச்சம் ஆக்கியிருக்கிறது, மேலும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையும் அதன் செயலாக்க அமைப்புகளும் (Capitalism and its Systems) தவறான அடித்தளத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால் உலக நாடுகளில் அதன் ஆதிக்கம் இருக்கும்வரை உலகை சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியாது என்பதும் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது, அழிவை ஏற்படுத்தும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையிலிருந்து உலகை காப்பாற்ற வேண்டுமானால் அதற்கு ஒரேவழி பொதுத்துறை நிறுவன அமைப்பு. வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கி அமைப்பு. உண்மையான மதிப்பு இல்லாத மாற்றமுடியாத காகித நாணயமுறை ஆகிய தவறான பொருளாதார அமைப்புகளை உடனடியாக அழித்துவிட வேண்டும், இவ்வாறு செய்யும் பட்சத்தில் பொருளாதார சூதாட்டங்களுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஒழிக்கப்பட்டு அதற்கு மாற்றாக இஸ்லாமிய நிறுவன அமைப்புகள் உருவாகிவிடும் மேலும் தீயவிளைவுகளை ஏற்படுத்தும் வட்டியில் இயங்கும் வங்கிகளும் காகித நாணயமுறையும் ஒழிக்கப்பட்டு அதற்கு பதிலாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை நாணயத்திற்கு ஏற்புநிறை மதிப்பீடாகக் கொள்ளும் முறை ஏற்பட்டுவிடும்.

இதன்மூலமாக பொருளாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பணவீக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் மேலும் இதன்பின்னர் வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளுக்கு எந்தவிதமான தேவையும் இருக்காது, ஆகவே பெரும் துயரத்தையும் பேரழிவையும் உண்டாக்கும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பை நீக்கிவிடுவதின் மூலம் உலகின் பொருளாதார நிலையில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு நிதிநிலை நெருக்கடிகள் தீர்க்கப்பட்டு உலகப் பொருளாதாரத்தில் உறுதியான முன்னேற்றம் ஏற்படும், நிதிச்சந்தைகளும் யூகவணிகமுறைகளும் ஒழிக்கப்பட்டு விடுவதால் வர்த்தகத்துறையில் ஏற்படும் பொருளாதார அதிர்வுகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.
நமது தலைவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் மீதும் உத்தம ஸஹாபாக்கள் மீதும் உலகமுடிவு நாள்வரை அவர்களை உண்மையாக பின்பற்றும் முஸ்லிம்கள் மீதும் அல்லாஹ்(சுபு) வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் ஏற்படுவதாக, ஆமீன்.