Monday, March 24, 2008

கிலாபத் எவ்வாறு அழிக்கப்பட்டது - ஒரு சுருக்க வரலாறு


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களினால் இஸ்லாமிய கிலாபத் எப்போது மதீனாவில் நிறுவப்பட்டதோ அன்றைய தினத்திலிருந்து உதுமானிய பேரரசு 1924ம் ஆண்டு முஸ்தபா கமால் அதாதுர்க்கினால் வீழ்த்தப்படும் வரை கிலாபத் இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. கிலாபத் வீழ்த்தப்பட்ட குறித்த இந்த காலகட்டத்தில் கிலாபத் அரசு பலகீனமடைந்திருந்ததுடன் அதனது தூய்மையான சிந்தனைத்தரம் வலுவிழந்திருந்தது. முஸ்லிம் தேசத்தை ஆக்கிரமிப்பதற்காக முஸ்லிம்களின் படைகளுடன் போராடிப்போராடித் தோல்வி கண்டு களைத்துப் போயிருந்த காபிர்கள் இனிமேலும் இவர்களுடன் ஆயுத ரியாக போராடி வெற்றி கொள்ள முடியாது என்ற மனோ நிலைக்கு வந்திருந்தார்கள். எனவே அவர்கள் மாற்று திட்டம் குறித்து சிந்திக்கத் தொடங்கியிருந்த வேலையில் முஸ்லிம்களின் அடிப்படை வலிமையான இஸ்லாமிய சிந்தனையினை பலகீனப்படுத்துவதற்கு இக்காலகட்டத்தில் கிலாபத்தில் காணப்பட்ட பலகீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

அவர்கள் தமது சிந்தனைகளையும் தமது கலாசாரங்ளையும் முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரப்டுத்தி இஸ்லாமிய அரசின் அடிப்படை பலமான இஸ்லாமிய சிந்தனையினை ஆட்டங்காண வைப்பதன் மூலம் அதனது அத்திவாரத்தினையே தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள்.
இதனை சாத்தியப்படுத்துவதற்காக கிலாபத் ஆட்சியினுள் அவர்கள் மிஷனரிகளை அனுப்பவதன் ஊடாகவும், தமது பாடசாலை, வைத்தியசாலைகள் அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகிபதன் ஊடாகவும் தமது கருத்துக்களை பிரச்சாரப்படுத்தியதுடன் சில இரகசிய ஸ்தாபனங்களையும் அமைத்தனர். அவர்கள் சமூகத்தின் பல்தரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள்ளும் ஊடுருவினர். இவற்றுள் அவர்கள் இராஜதந்திர ரியாக, கல்வியியல் ரியாக விடயங்களிலேயே தமது கவனத்தை அதிகமாக செலுத்தினர். இத்தகைய முயற்சிகளினூடாக அவர்கள் பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் புத்திஜீவிகள் போன்றோரை கவர்ந்தனர்.

வளர்ந்து வந்த இந்த சிந்தனைப்போக்கு மேற்குலகின் கலாச்சாரத்தையும், நீதிப்பரிபாலனத்தையும் தமக்குள் உள்வாங்கிக் கொள்வதற்கு முஸ்லிம்களை தூண்டியது. இவர்கள் இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களை கிளப்பியதுடன் அது தற்கால நவீன உலகிற்கு எந்தளவில் பொருத்தமுடையது என்பன போன்ற வினாக்களைத் தொடுத்தனர். இவர்கள் தாம் இஸ்லாத்தை பின்பற்றவதாக காட்டிக்கொண்டு மேற்குலகின் கவர்ச்சியை நோக்கியே இழுத்துச்செல்லப்பட்டனர். இதன் விளைவாக கிலாபத்தின் கட்டமைப்பும் அதன் அத்திவாரமும் ஆட்டம் காண ஆரம்பித்தது. இதனால் உலகில் இஸ்லாத்தின் தஃவா தடைபட்டது. எனினும் காபிர்களுக்கு தமது சிந்தனைகள் இஸ்லாமிய தேசத்தினுள் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது.

கிலாபத்தின் இந்த வீழ்ச்சியில் குப்ர் அரசுகள் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராஜதந்திர மற்றும் ஏனைய உயர்மட்டங்கள் அதிகளவிலான பங்களிப்பினை செய்தன. கிலாபத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த பலகீனமான நிலையை மிகவும் கச்சிதமாக அவதானித்த குப்ர் அரசுகள் கிலாபத்தின் எல்லைகளை பகுதி பகுதியாக ஆக்கிரமித்தனர்.

அனைத்து மேற்குலக நாடுகளும் பேராசையில் மிதக்க ஆரம்பதித்தனர். பிரித்தானியாவுடனும் பிரான்சுடனும் சேர்ந்து தமது பங்கினையும் பெற்றுக்கொள்வதில் ஜேர்மன், ரஷ்யா போன்ற நாடுகள் முனைப்புடன் செயற்பட்டன. தமக்குள் காணப்பட்ட முரண்பாடுகளை கடந்து இஸ்லாத்;தினையும், கிலாபத் ஆட்சினையும் அழிப்பதிலும் அவர்கள் ஒன்று திரண்டார்கள். அவர்கள், ஆட்சியிலும், அரசியல், சமூக விவகாரங்களிலும் இருந்து இஸ்லாத்தினை நீக்கி அதற்கு பகரமாக மேற்குலகின் நீதிப்பரிபாலனம், முதலாளித்துவம், ஜனநாயகம் போன்ற சிந்தனைகளை அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை கிலாபத்தை நோக்கிச் செலுத்த யோசித்தனர். 1850 ம் ஆண்டு ஐரொப்பிய நாடுகள் பேர்லின் மாநாட்டில் ஒன்று கூடினர். இந்த மாநாட்டில் பிரித்தானியாவின் பிரதம மந்திரியான டிஸ்ரேலி என்ற யூதனும், ஜேர்மனியை பிஸ்மார்க்கும் பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்த மாநாட்டில் இஸ்லாத்தின் ஆட்சினை தடைசெய்து தமது பொதுச்சிவில் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என எச்சரிக்கின்ற ஒரு எச்சரிக்கைக் கடிதத்தினை அன்றைய கலீபாவிற்கு அனுப்புவதற்கு இவர்கள் தீர்மானித்தார்கள்.

இந்த கடிதம் கலீபாவிற்கு (இதன்போது ஆட்சியிலிருந்த கலீபா மேற்குலகின் கலாச்சரத்திற்கு ஆட்பட்டிருந்தார்.) கிடைத்தவுடன் அவர் மேற்குலகின் சிவில் சட்டத்தினையே அமுல்படுத்த வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினார். இது கிலாபத்தை பாதித்ததுடன் இராஜதந்திர மற்றும் கல்வியியல் மட்டக்களில் இஸ்லாமிய சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுவடைய ஏதுவாக அமைந்தது. பின்பு 1858ம் ஆண்டில் உதுமானிய சட்டம் கோவை (Penal code) மற்றும் உரிமைகளுக்கும் வர்த்தகத்திற்குமான சட்டக் கோவை (Code of Rights and Commerce) போன்ற சட்டத்தொகுப்புகள் அமுல்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சட்டப்புத்தகம் (law book) பின்பற்றப்பட்டதுடன் ஒரு அலகாக இருந்த நீதிமன்றமானது மரபு மற்றும் நிர்வாக நீதிமன்றங்களாக இரண்டாக பிரிக்கப்பட்டது. 1878இல் அவர்களின் பீனல் சட்டமும், நீதித்துறைக்கான அடிப்படைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதில் விசித்திரமான விடயம் என்னவென்றால் இத்தகைய குப்ர் சட்டங்கள், மார்க்க பத்வா பெறப்பட்டே அமுல்படுத்தப்பட்டதாகும். ஏனெனில் இந்த சட்டங்களுக்கு மார்க்க ரியான ஒரு போர்வையை போர்த்தும் போது அது பெரும்பாலான முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் என்ற அடிப்படையிலேயேயாகும்.

எகிப்தைப்பொருத்தவரையில் அது பிரான்ஸின் கைபொம்மையான முஹம்மத் அலி மற்றும் அவனது புதல்வர்களால் ஆளப்பட்டதால் கிலாபத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட மேற்கத்தியமயமாக்கும் வழிமுறைகளை அதேபாணியில் இங்கு பின்பற்றவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கவில்லை. எனவே எவ்வித தாமதமும், தடங்களும் இல்லாமல் அரசாங்கம் மேற்கத்திய சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. 1883ம் ஆண்டில் நாட்டின் சிவில் சட்டங்கள் யாவும் பிரஞ்சுச் சட்டங்களிலிருந்து பிரதிபண்ணப்பட்டதாகவும் பிரஞ்சு மொழியிலுமே காணப்பட்டன. இந்த சட்டங்கள் முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் இராஜதந்திர மட்டங்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதுடன் படிப்படியாக கனகச்சிதமான முறையில் இஸ்லாமிய சட்டங்களுக்கு பகரமாக மேற்கத்திய சட்டங்கள் அமுலுக்கு வந்தன. இதனால் கிலாபத்தின் வீழ்ச்சியானது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. முஸ்லிம் உம்மத் இஸ்லாத்தை தமது சமூக வாழ்விலிருந்து அந்நியப்படுத்தத் தொடங்கியது. குறிப்பாக இது அரச பரிபாலன மட்டங்களிலும், நீதித்துறையிலும் ஏற்பட்டது. இதன் விளைவாக அவர்கள் இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை முதலாளித்துவ சட்டங்களினு}டாக மாற்றீடு செய்வதற்கு வழி பிறந்தது.

இந்த நிகழ்வுகளையெல்லாம் முஸ்லிம்கள் பெரிதொரு விடயமாக உணராத நிலையிலேயே கிலாபத்தின் வீழ்ச்சியும் நடந்தேரியது. இதனால் இந்த அழிவுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் அரிதாகவே காணப்பட்டது. முஸ்தபா கமால் அதாதுர்க் அதிகார பூர்வமாக கிலாபத்தினை வீழ்த்தியபோது உம்மத்திலிருந்து வெளிவந்த எதிர்ப்பலைகளின் பலகீனம் இதனை மிகத்தெளிவாக காட்டுகிறது. அவன் இங்கிலாந்தின் அடிவருடி என்பதை சமூகம் அறிந்திருந்தபோதிலும் அவனது இந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தி, மீண்டும் இஸ்லாத்தின் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. இதை விடக்கேவலமான விடயம் என்னவெனில் பிரித்தானியாவின் கிலாபத்திற்கெதிரான இந்த சதிமுயற்சிற்கு அன்றைய ஹிஜாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஷரிப் ஹ{சைன்- Hussain ( நபி (ஸல்) அவர்களின் பரம்பரையைச்சேர்ந்தவன் என்று பொய்யாகக் கூறப்படுபவன்) என்பவன் உறுதுணையாக இருந்தது.

இவ்வாறு ஒருவாராக கிலாபத் வீழ்த்தப்பட்டு இஸ்லாம், முஸ்லிம் உம்மத்தின் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் அதனுள் திணிக்கப்பட்;;டு, இஸ்லாத்தின் பூமி பல பலகீனமான தேசங்களாக பிளவு படுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குப்பார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களையே இந்த தேசங்களின் தலைவர்களாக ஏற்படுத்தி அவர்களினு}டாக இஸ்லாத்தினை அழிக்கின்ற முயற்சியில் வெற்றிகண்டது. அவர்கள் உண்மையில் காபிர்களையே பிரதிநிதித்துவப்படுத்தினர். முஸ்லிம்களையல்ல. அவர்கள் கிலாபத்தினை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று செயற்பட்ட முஸ்லி;ம்களை கடுமையாக தண்டித்தனர்.

இவ்வாறாக காபிர்கள் முஸ்லிம்களை கட்டுப்படுத்தியதுடன் முஸ்லிம்கள் மேற்கத்தைய சிந்தனைகளின் ஆளுகைக்குள் உட்பட்டனர். இதன் விளைவாக முஸ்லிம்களும் அவர்களின் நிலங்களும் மேற்குலகின் சிந்தனைகளையும் பொருட்களையும் உள்வாங்கிக்கொள்ளும் சிறந்த சந்தைகளாக மாற்றமடைந்தன. இந்த அவல நிலையை தொடர்ந்து பேணுவதற்காகவும் முஸ்லிம்கள் மீண்டும் கிலாபத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் தடைகல்லாகவும் இஸ்ரேலை அரபுலகின் மையத்தில் இவர்கள் ஏற்படுத்தினார்கள்.

முஸ்லிம் உம்மத் பிறரின் ஆளுகைக்குட்பட்டிருப்பதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. எனவே இஸ்லாம் அனைத்து மேலாதிக்கங்களுக்கும் மேலாக தன்னை உயர்த்திக் கொள்ளவதை வலியுறுத்தவதால் இதனை நாம் மீண்டும் கிலாபதை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.
விசுவாசிகளுக்கு மேலான எந்தவொரு (அதிகாரத்தையும்) வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான்.(4:141)

விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதுகாவலர்களாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்.(3:28)

விசுவாசிகளே! ஏன்னுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் உங்களுடைய உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டாம்.(60:1)

விசுவாசிகளே! உங்களையன்றி மற்றவர்களை உங்களுடைய அந்தரங்க செய்திகளை அறிபவர்களாக நீங்கள் ஆக்;கிக்கொள்ளவேண்டாம். (ஏனெனில்) அவர்கள் உங்களுக்கு தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. மேலும், நீங்கள் துன்புறவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்ச்சொற்களிலிருந்தே (அவர்களுடைய கடுமையான வெறுப்பு திடமாக வெளிப்பட்டு விட்டது.) எனினும் அவர்களின் மனதில் மறைந்திருப்பது இதைவிட மிகவும் மோசமானதாகும். (3:118)

‘பயங்கரவாதம்’ – அமெரிக்கா விரிக்கும் அகில வலைபயங்கரவாதம் (அல் இர்ஹாப்) என்ற பண்புப்பெயர்சொல்லானது மொழியியல் ரிதியில் ஆராயும்போது அது பயமுறுத்துதல் (அர்ஹபா) என்ற வினைச்சொல்லிலிருந்தே தோன்றுகின்றது. எனினும் 1979-ம் ஆண்டு அமெரிக்காவினதும், இங்கிலாந்தினதும் உளவுத்துறையினர் மாநாடொன்றினை நடத்தி “அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக சமூகத்தின் பொது விருப்பத்திற்கு எதிராக வன்முறையை பிரயோகித்தல்” என்பதே பயங்கரவாதம் என்று அதன் அர்த்தத்தை அரசியல் ரிதியில் மாற்றின. இதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் பல கருத்தரங்குகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், சட்டங்கள் இயற்றப்பட்டும் எந்த இயக்கங்கள், சங்கங்கள், கழகங்ககள், நாடுகள் (அவர்களின் வரைவிலக்கணப்படி) பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றன என்பன போன்ற பல தகவல்கள் வெளியிடப்பட்டன. இந்த சட்டங்களும், பாகுபாடுகளும், எந்நாடுகள் இவற்றை இயற்றினவோ, அந்நாடுளின் அரசியல் சுயலாபத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி கொல்லப்பட்டதை “பயங்கரவாதம்"; என அமெரிக்கா கொள்கிறது. மன்னர் ஃபைசல் கொல்லப்பட்டதையும், ஜோன் கென்னடி கொல்லப்பட்டதையும் அது பயங்கரவாதம் என ஏற்றுக்கொள்ளவில்லை. FBI எனப்படும் அமெரிக்காவின் புலனாய்வுத்துறையின் கட்டிடம் தகர்க்கப்பட்ட பொழுது, அச்செயல் பயங்கரவாதத்தின் சதி வேலை என்று கூறிய அமெரிக்கா தன் நாட்டின் ஒரு குழுவே அதை செய்தது என்று தெரிந்த பின், அச்செயலை பயங்கரவாதம்; என சொல்வதை விடுத்து, சாதாரணக் குற்றம் என்ற அடிப்படையில் அப்பிரச்சனையை அணுகியது.

இவ்வாறு 1970ற்குப்பின் பயங்கரவாதத்திற்கு தன் விருப்பப்படி பொருள் புணைந்து அதை உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் பிரகடனப்படுத்திற்று அமெரிக்கா. 1980இல் பெய்ரூட்டில் TWA என்னும் அமெரிக்க விமானம் கடத்தப்பட்டதையும், அமெரிக்காவிற்கு சொந்தமான அல் கூபார் படைத்தளம் சவூதி அரேபியாவில் தகர்க்கப்பட்டதையும் அது காரணம் காட்டி 1996 ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஜி7 (G7) நாடுகளின் கூட்டமைப்பில், பயங்கரவாதத்தை எதிர்க்கும் 40 கோரிக்கைகளை கொண்டு வந்தது. நியுயோர்க்கிலுள்ள உலக வர்த்தக மையம் தகர்;க்கப்பட்டதையும் காரணம் காட்டி அமெரிக்கா, பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களை இயற்றியது. இதற்கு 1997- ம் ஆண்டு அமெரிக்க மேல் சபை ஒப்புதலும் வழங்கிற்று. இதன் விளைவாக பயங்கரவாதத்தின் பெயரில் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் அந்நாடு கண்டித்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் நீதிமன்றத்தில் வாதிட்டு வெற்றி பெற இயலாதபடி அவரை கைது செய்யவோ, நாடு கடத்தவோ, அந்த நபருக்கு குடியுரிமை மறுக்கப்படுவது அல்லது அதிகபட்ச தண்டனை வழங்குவது போன்ற அனைத்தையும் செய்யத் துணிந்தது அமெரிக்கா.

அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகளான வடகொரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகளுக்கும் இஸ்லாமிக் ஜிஹாத், ஹமாஸ், எகிப்தில் இயங்கி வரும் ஜமாஹ் இஸ்லாமிய்யாஹ், லிபியாவின் FIS போன்ற இயக்கங்களுக்கும், தமது பூர்வீக பூமியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டத்தையும் அமெரிக்கா பயங்கரவாதச் சாயம் பூசி தண்டிக்க முனைகிறது.

தான் இயற்றிய சட்டங்களைக் கூறி எந்த ஒரு நாட்டின் (ஈராக், லிபியா) மீதும் பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. இதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் முன்னாள் வெளி உறவுச் செயலாளர் ஜோர்ஜ் சல்ட்ஷ் பின்வருமாறு ஒரு முறை கூறியிருந்தார். “தீவிரவாதிகள் முயன்று தப்பி செல்ல முடியுமேயன்றி, அவர்கள் ஒளியவோ, மறையவோ முடியாது". இவ்வாறு பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை வகுத்து முழு உலகையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறது அமெரிக்கா.

கம்யூனிச உலகின் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்காவின் பிரதான எதிரியாக இஸ்லாம் விளங்குவதாக அமெரிக்கா கருதுகிறது. இஸ்லாமிய உலகில் மீண்டும் இஸ்லாமிய அரசை ஏற்படுத்தும் எண்ணத்துடன் பல இயக்கங்களும், முஸ்லிம் சமூகமும் செயற்படுகின்ற வேளையில் அவர்களை உடனடியாக அடக்கி தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து பேண வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. எனவே இஸ்லாமிய சிந்தனையை அடிப்படையாகக்கொண்ட ஒரு து}ய இஸ்லாமிய உலகு (கிலாபா ராஷிதா) தோற்றம் பெறுவது குறித்து அமெரிக்கா பயப்படுகிறது. இதன் விளைவாக பயங்கரவாதத்திற்கு எதிரான தனது வியூகங்களை செயற்படுத்தும் முக்கிய பிராந்தியமாக முஸ்லிம் மற்றும் அரபுலகை அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ளது. இதன் விளைவாக முஸ்லிம் உலகெங்கும் போராட்டங்களையும், வன்முறைகளையும் து}ண்டி நிலையற்ற அரசியல் பொருளாதார நிலையை தோற்றுவிப்பதில் அமெரிக்கா பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி பல இஸ்லாமிய இயக்கங்களை அமெரிக்கா “பயங்கரவாத இயக்கங்கள்" எனக் கூறி இஸ்லாமிய ஆட்சி நோக்கி அழைக்கும் எந்த ஒரு அமைப்பையும் அமெரிக்கா பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதன் மூலமாக அவற்றுக்கு எதிராக அதியுச்ச தடைகளை ஏற்படுத்த முனைந்துள்ளது. இதற்காக அமெரிக்கா ஏனைய நாடுகளையும், வற்புறுத்தியும், அவற்றை ஒன்று திரட்டியும் இந்த இயக்கங்களை ஒடுக்க முற்படுகிறது. இதில் பலிகடாவாக ஆக்கப்படுவது கிலாபா ஆட்சியைக் கொண்டு வர முயலும் முஸ்லீம்களே ஆவர்.

எது எவ்வாறெனினும் முஸ்லீம்கள் முற்றுமுழுதாக இஸ்லாமியர்களாக வாழ வேண்டும் என்பது அவர்கள் மீது அல்லாஹ்வால் சுமத்தப்பட்ட மார்க்கக்கடமையாகும். எனவே இது முழுமையாக சாத்தியப்படுவதற்கு கிலாஃபா ஆட்சி முறையைக் கொண்டு முஸ்லிம்கள் ஆழப்பட வேண்டியது அவசியமாகும். இதையே ஷரியா வலியுறுத்துகிறது.

எனவே இஸ்லாத்திற்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளையும், முஸ்லிம்களின் எழுச்சியையும் அமெரிக்கா பயங்கரவாதம் என்ற சாயம் பூசி தண்டிக்க நினைத்தால் நீதி செலுத்துவதற்காக அனுப்பட்ட சமூகம் என்ற அடிப்படையில் அதற்கெதிராக அல்லாஹ்வின் வழிகாட்டலின்படி போராட வேண்டியது முஸ்லிம் உம்மத்தின் தார்மீகக் கடமையாகும்.

என் ஈராக்கிய சகோதரனுக்கு!

நீ வாழும் பூமி
அராஜக அதிகாரங்கள் தரும்
அவலங்கள் அழுகுரல்கள் நிறைந்த
மக்கிப் போய்விட்ட மனிதாபிமானச் சான்று!

எண்ணெய் வயல்களின் ஏப்பத்தோடு
நவீன தாத்தாரியரின்
வெட்கத்தனமான வேட்டைக்காடு!

நீ சுயங்கொண்டெழும்வரை
அன்றாடக் கண்ணீரும்
‘அபு குரைபும்’
அவமான அடையாளங்கள் தாம்!

அற்பப் பொருட்களுக்காய் மலையேற்றிய
கண்ணியமான இறந்த காலத்தை – நீ
மீளப்பார் உன் சத்திய சாம்ராஜியம்
சரிந்தது சதிகளால் மட்டுமல்ல!

‘இஸ்லாம்’ அற்ற ‘இஸம்கள்’
இயக்கத் தொடங்க
ஆன்மீக வறுமை அரவணைத்து
மறுமை மறந்த இம்மை வாங்கி
மனித அடிமைத்தனத்தில் கோழையானாய்!

நிரந்தர வெற்றிக்காக நீ
அஸ்தமனத்தை நிலையாக்கும்
‘தாகூத்ய’ பொதி சுமக்கும்
கழுதைத் தனத்தை விட்டுவிடு

உதயத்தை அல்குர்ஆனிய
உயிரோட்டத்தில் மட்டும் தேடு
மீண்டும் தூய நாகரிகத்தை
உலகத்திற்கே கற்றுக் கொடுப்போம்.

கிலாபத்தின் வீழ்ச்சியே மனிதகுலத்தின் சாபக்கேடு!


முஸ்லிம் உலகின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாபா (இஸ்லாமிய அரசு) 1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதியில் (28 ரஜப் மாதம் ஹிஜ்ரி 1342) முஸ்தபா கமால் அதாதுர்க்கினால் துருக்கிய தலைநகரான ஸ்தான்புலில் நிர்மூலமாக்கப்படடு 2008ம் ஆண்டுடன் 84 வருடங்கள் கடந்துவிட்டன. கிலாபத்தை அழித்ததன் மூலம் காலனித்துவ பிரித்தானியாவும், முஸ்லிம் உலகிலே அவர்களின் கைம்பாவையாக தொழிற்பட்ட ஆட்சியாளர்களும் முஸ்லிம் உம்மத்திற்கு பாரியதொரு அதிர்ச்சியினையும், கேவலத்தினையும் ஏற்படுத்தினார்கள். இருபதாம் நு}ற்றாண்டு முழுவதும் முழு உலகும், முஸ்லிம் உம்மத்தும் ஒட்டுமொத்த அழிவை நோக்கி பயணிக்க வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் உம்மா பொருளாதார பலமற்ற, சர்வதேச பொருளாதார நிதியத்தினதும் (IMF), உலக வங்கியினதும் கால்களில் மண்டியிடும் சிற்சிறு தேசிய அரசுகளாக கூறுபோட்டு பிரிக்கப்பட்டது. முஸ்லிம் உம்மத் இராணுவ அரசுகளையும், சர்வாதிகார ஆட்சியாளர்களையும், ஜனநாயக கொடுங்கோலர்களையும், மிகவும் பின்தங்கிய அரசியல், பொருளாதார, தொழிற்நுட்ப கட்டமைப்பையும் கொண்ட சேதமுற்ற தேசமாக மாறிவிட்டது.

இருபதாம் நு}ற்றாண்டு முழுவதும் முஸ்லிம்களும், அவர்களின் நிலங்களும் குப்பார்களின் தொடர்ந்தேர்ச்சையான வன்முறைகளுக்கு இலக்காகியது. யூதர்கள், பிராஸ்ஸியர்கள், பிரித்தானியர்கள், இந்துக்கள், இத்தாலியர்கள், அமெரிக்கர்கள், சேபியர்கள், ரஸ்யர்கள், சீனர்கள் என அனைவர்களும் மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் அவலத்திற்கும், கண்ணீருக்கும் காரணகர்த்தாக்களாக இருந்துள்ளனர். ஸ்திரமற்ற பொருளாதார நிலையினையும், உணவுக்கும், வாழ்விடத்திற்கும் அகதிமுகாம்களில் தஞ்சம் புகும் அவலத்தையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டும், படுகாயமடைந்தும் இருக்கின்றனர். இந்த மனித அவலத்தினை விளங்கிக்கொள்ள உங்கள் மனக்கண்முன் பலஸ்தீனம், ஈராக், ஆப்கானிஸ்;தான், செச்னியா, காஷ்மீர், கொசோவா, பொஸ்னியா, அரிட்ரியா போன்ற எமது பூமிகளின் கொடூரமான நிலவரத்தினை நிலைநிறுத்திப்பாருங்கள். இந்த அகோர நிலை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா போன்ற நாடுகள் பின்பற்றும் மிகக்கொடூரமான உலக ஒழுங்கினால் மென்மேலும் மோசமடைந்துள்ளது. உம்மத்தின் வளங்கள் அனைத்தும், குறிப்பாக எண்ணெய் வளம் முழுவதும் இஸ்லாத்தின் எதிரிகளின் கைகளால் கட்டுப்படுத்தப்பட்டு இஸ்லாத்திற்கு எதிரான குப்பார்களின் போர் இயந்திரத்தினை பலப்படுத்த பயன்பட்டு வருகிறது. இதனு}டாக முழு முஸ்லிம் உம்மத்தினையும் தமது இரும்புச்சப்பாத்திற்குள் அடக்குவதற்கு எதிரிக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.

இருபதாம் நு}ற்றாண்டு இரு உலக மகா யுத்தங்களை சந்தித்ததுடன் அறுபது மில்லியன் மனித உயிர்களையும் அது பலிகொண்டது. பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், எங்கும் வியாபித்த வறுமை, சமூக நோய்கள், பயங்கரவாதம், வாழ்வியல் சிதைவுகள், மனித விழுமிய வீழ்ச்சிகள் போன்றன உலகில் எங்கும் வியாபித்து இருபதாம் நு}ற்றாண்டை அவல நு}ற்றாண்டாக மாற்றின. அணுவாயுத யுத்தங்களும், பொருளாதார அனர்த்தங்களும் முழு மனித வர்க்கத்திற்கே பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலக அரங்கில் நீதியின் அச்சாணியாகத் திகழ்ந்த இஸ்லாமிய அரசின் வீழ்ச்சியின் இயற்கையான பின்விளைவுகளே முஸ்லிம்களுக்கும், ஏனைய உலக மக்களுக்கும் எதிராக நிகழ்ந்த கொடூரமான மனிதப்படுகொலைகளும், இன அழிப்புகளுமாகும் என்பதை முழு உலகமும் சேர்ந்தாலும் மறுக்க முடியாது. இந்நிலையில் இஸ்லாமிய முறைமை அரச மட்டத்திலும், பொருளாதார, சமூக, அன்றாட வாழ்வியல் மட்டத்திலும் பரிபூரணமாக அமுல்படுத்தப்படுவதே, குப்ரின் கொடுமையில் களைத்துப்போன மனிதகுலத்திற்கு ஒரேயொரு விமோசனமாகும்.

“ (நபியே) உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை” (அல் அன்பியா: 107)
முஸ்லிம்களே! அல்லாஹ்(சுபு) எம்மை முழு மனிதகுலத்திற்கும் சாட்சியாளர்களாய் நியமித்துள்ளான் என்பதை மறந்து விட்டீர்களா?
அல்லாஹ்(சுபு) தனது திருமறையிலே கூறுகிறான்:

“ மேலும் (விசுவாசிகளே!) நீங்கள் ஏனைய மனிதர்களுக்கு சாட்சியாளர்களாக ஆகுவதற்காகவும், (நம் து}தர்) உங்களுக்கு சாட்சியாளராக இருப்பதற்காகவும் நீதி செலுத்தும் சமுதாயத்தினராக நாம் உங்களை ஆக்கினோம்.”(அல் பகறா: 143)

எனவே முழு மனிதகுலத்திற்குமான சாட்சியாளர்களாய் திகழும் பணி உறுதியான பலம், சுதந்திரமான அரசியல் நிலைப்பாடு, அரசியல் அதிகாரம் இவை எல்லாவற்றிற்கும் அடித்தளமான இஸ்லாமிய சிந்தனை என்பவற்றை கொண்ட ஒரு தலைமையின் கீழான முஸ்லிம் உம்மாவால் மாத்திரம்தான் முடியும்.
முஸ்லிம்களே! நாம் வாழ்ந்துவரும் சிதைவுற்ற வாழ்விலிருந்து து}ய்மைபெற்று இஸ்லாமிய வாழ்க்கை முறையை நோக்கி எழுச்சியடைய வேண்டிய பணி எமது கடமையும், அமானிதமுமாகும். இருபதாம் நு}ற்றாண்டில் நாம் இழந்த இஸ்லாமிய கிலாபாவை மீண்டும் நிலைநாட்ட வேண்டியது எமது அதிமுக்கிய கடமையாகும். ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு கலீபாவிற்கு தனது சத்தியப்பிரமாணத்தை (பையத்) செய்திருக்க வேண்டியது கடமையாகும்.
இப்னு உமர் (ரழி), ரசூல்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்,“கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் (பையத்) இல்லாத நிலையில் யார் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய மரணத்தை அடைந்தவராவர்.” (முஸ்லிம்)
முஸ்லிம்களே! முழு முஸ்லிம் உம்மத்தும் இன்றுவரை அனுபவித்துவரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இதுவரை காலமும் எமது மாநாடுகளிலும், கூட்டங்களிலும், நிறுவனங்களிலும், இயக்கங்களிலும் நாம் ஆராய்ந்து வரும் தீர்வுகள் முறையான நிவாரணத்தையும், நிரந்தரமான தீர்வினையும் வழங்கவில்லை என்பதை எம்மால் மறுக்க முடியாது. மாறாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அவலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதற்கு காரணம் எம்மை அழிக்க நினைக்கும் எதிரியை எதிர்கொள்வதற்கும், நாம் எதிர்நோக்கும் ஆபத்துக்களிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கும் இறைது}தர் கேடயமாக உவமித்த நேர்வழிபெற்ற கலீபா எமக்கு இல்லாமையேயாகும்.

நபிகளார் (ஸல்) கூறியதாக அபுஹ_ரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்:“ இமாம் ஒரு கேடயம் போன்றவர்;. அவர் பின் நின்றே நீங்கள் போராட வேண்டும். அவர் மூலமாகவே நீங்கள் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டும்.” (முஸ்லிம்)
முஸ்லிம்களே! கிலாபாவை மீண்டும் நிலைநாட்டுவது என்பது ஒரு சில நல்ல முஸ்லிம்களின் கனவல்ல. அதேபோல அது வெறுமனவே எமது விருப்பத்திற்குரிய ஒரு சிந்தனை மட்டுமல்ல. அது முஸ்லிம்கள் அனைவரினதும் கடமையும், மனிதகுலத்தின் தேவையுமாகும். அதற்கான முன்னெடுப்பு பிரார்த்தனை செய்வதுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, மாறாக அது ஒரு ஜீவ மரணப் போராட்டமாகும். முஸ்லிம்களே! கிலாபா என்பது ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தனது மரணத்திற்கு பின்னர் முஸ்லிம்களின் முக்கிய பொறுப்பாக விட்டுச்சென்றதாகும்.
அபுஹாசிம் அறிவிப்பதாக முஸ்லிமில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
“ நான் அபுஹ_ரைராவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அடிக்கடி கூறிய ரசூலுல்லாஹ்வின்(ஸல்) கூற்று: ''நபிமார்கள் மக்கள் நலன்களை பேணிக்காத்தனர். ஒரு நபியின் மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் தோன்றினர். ஆனால் எனது மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் யாரும் வரமாட்டார்கள். ஆனால் அதிகமாக கலீஃபாக்கள் தோன்றுவார்கள்."" அப்போது ஸஹாபாக்கள் ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்களிடம் “ அந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ” என வினவினார்கள். அதற்கு ரசூலுல்லாஹ்(ஸல்) கூறினார்கள் “ முதலாமவருக்கு பையத் செய்யுங்கள், பின்னர் அவரைத் தொடர்ந்து வருபவர்களுக்கும் பையத் செய்யுங்கள். அவர்களுக்கு அவர்களுடைய உரிமைகளை வழங்குங்கள். அல்லாஹ்(சுபு) அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள் குறித்து கவனித்துக் கொள்வான்.” என்றார்கள்.
கிலாபா ஆட்சி முறை என்பது அபு பக்ர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி), அலி (ரழி) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆட்சிமுறையாகும். மேலும் அந்த ஆட்சி முறைக்கு கீழ்த்தான் சுமார் 13 நு}ற்றாண்டுகள் முஸ்லிம் உம்மத் தனது விவகாரங்களை தொடர்ந்து பராமரித்து வந்திருக்கிறது. எனவே எமதருமை முஸ்லிம்களே! எம்மால் 21ம் நு}ற்றாண்டை கிலாபா ராஷிதாவின் மீள் வருகையால் ஒளிர்வூட்ட முடியுமா? ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை நாம் புதுப்பிக்க முடியுமா? அல்லாஹ்(சுபு)வும், ரசூலுல்லாஹ் (ஸல்)வும் எமக்கு வாக்களித்த கிலாபத்தின் மீள்வருகையின் பயணத்தில் நாமும் பங்காளர்களாக முடியுமா?
“ மனிதர்களே! உங்களில் விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை அதிபதிகளாக்கிய பிரகாரமே, நிச்சயமாக பூமிக்கு அதிபதிகளாக்கி வைப்பதாகவும், அவன் அவர்களுக்கு பொருந்திக்கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களுடைய பயத்திற்கு பிறகு அமைதியை கொண்டு நிச்சயமாக மாற்றிவிடுவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கின்றான். அவர்கள் எனக்கு யாதொன்றையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள். இதன் பின்னர் உங்களில் எவர் நிராகரிப்பவராகி விட்டாரோ நிச்சயமாக அவர்கள்தாம் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்காத பாவிகள்.” (அந்நு}ர்: 55)

முஸ்லிம்களே! எம் தோள்களிலே அல்லாஹ்(சுபு) சுமத்திய பணியை எம்மால் தாங்கிக்கொள்ள முடியுமா? வாழ்வில் மீண்டும் இஸ்லாத்தை கொண்டுவருவதன் மூலம் எமது கௌரவத்தை நாம் மீண்டும் பெற துணிவுடன் இருக்கின்றோமா? நீதி செலுத்தும் உம்மத் என்ற அடிப்படையில் முழுமனிதகுலத்திற்கும் சாட்சியாளர்களாக எம்மை நாம் மாற்றிக்கொள்ள எமக்கு தென்பிருக்கிறதா? கஃபாவை விட பரிசுத்தமான ஒன்றை பாதுகாப்பதற்காக எம்மால் உறுதிப்பிரமாணம் எடுக்க முடியுமா?

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“ ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கஃபாவை சுற்றி வரும் போது அதனைப் பார்த்து கூறினார்கள், “ உனது (கஃபா) சிறப்பு எத்தகையது! உனது (கஃபா) நறுமணமும், புனிதமும் எத்தகையது! ஆனால் எவனுடைய கரத்தில் இந்த முஹம்மத்தின் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக, ஒரு விசுவாசியின் ஒரு துளி இரத்தமும், அவனது உடமைகளும் அல்லாஹ்(சுபு) முன்னிலையில் உன்னை (கஃபா) விட புனிதமானது. நல்லதைக்கொண்டல்லாமல் ஒரு விசுவாசியை கருத வேண்டாம்” ( சுனன் இப்னு மாஜா)

எனவே முஸ்லிம்களே! முஸ்லிம் தேசத்தின் ஒரு அங்;குலத்தையேனும் நாம் விடுதலை செய்யாமல் விடமாட்டோம் என கங்கனம் கட்டுவோமா? முஸ்லிம் பெண்களின் கௌரவத்தை பாதுகாக்க உயிரையும் துரப்போம் என உறுதிபூணுவோமா? எமது சிறார்கள் பட்டினியால் மடிவதை இனியும் பொறுக்க மாட்டோம் என சத்தியம் செய்வோமா? முழு மனித சமூகத்திற்கும் இஸ்லாத்தின் அருளை பரப்ப சிடகங்கட்பம் பூணுவோமா?

முஸ்லிம்களே! எமது பாதை ஜன்னத்தின் பாதையா? எம்மை நாம் ஜஹன்னத்தின் பிடியிலிருந்து பாதுகாக்க முடியாதா? ஜாஹிலிய மரணமாக எமது முடிவு அமைவதை தவிர்க்க, அல்லாஹ்(சுபு) ஷாPயா இந்த பூமியில் நிலைபெற்றிருக்க, தாஹ}த்களுக்கு சாவுமணி அடிக்க மீண்டும் கிலாபத்தை நிலைநாட்டும் பணியில் நாம் களம் இறங்கக் கூடாதா?

“ விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், (அவனது) து}தருக்கும் - உங்களை வாழ வைப்பதன்பால் (அல்லாஹ்வின் து}தராகிய) அவர் உங்களை அழைத்தால் பதில் அளியுங்கள்.” (அல் அன்பால்: 24)

Wednesday, March 19, 2008

வாருங்கள் மாற்றலாம்!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹீஅழிவின் விளிம்பில் மனித குலம் நிற்கிறது. மனிதர்களை மனிதர்களே கொன்று வயிறு நிரப்புகிறார்கள். ஆளும் வர்க்கம் மனிதனின் இரத்தத்தை உருஞ்சி தனது அரச இயந்திரத்தை இயக்குகிறது. அஃறினைகள் கூடச் செய்யத்தயங்கும் அசிங்கங்களை மனிதன் அன்றாடம் செய்து வருகின்றான். நாசங்களையெல்லாம் நாகரிகம் என்கிறார்கள். சத்தியத்தின் வாய்களை அசத்தியத்தின் கரங்கள் கிழித்து விடுகின்றன. நீதியின் நிழல் பூமியின் ஒரு அங்குலத்திலேனும் நிலைபெறாமல் நகர்ந்து விடுகிறது. அழிவின் பாதையை அகலத்திறந்து ‘சுதந்திரம்’ என அழைக்கிறார்கள். ஒரு கண்டத்தின் வருவாயை ஒரு கம்பனியின் முதலாளி விழுங்கி ஏப்பம் விடுகிறான். விலங்கிடுபவர்களே ‘விடுதலை’ பற்றி பேசுகிறார்கள். இதுதான் இன்றைய (அ)நாகரிக உலகம். இது தான் மானிடன் இயற்றிய சட்டத்தின் (அவ)லட்சணம்.

அப்படியானால் அந்தோ கதி! மனித குலத்திற்கு தீர்வில்லையா? சத்தியத்திற்கு வாய்ப்பில்லையா? மானிடருக்கு விடுதலை கிட்டாதா? கிட்டும். நிச்சயமாக கிட்டும். இவ்வுலகில் மாத்திரமல்ல; மறுமையிலும் கிட்டும். ஆனால் அதற்கொரு விலை இருக்கிறது. அதுதான் மனிதன் மீதான மனிதனின் ஆட்சியை இல்லாதொழித்து மனிதன் மீதான இறைவனின் ஆட்சியை நிலை நிறுத்துவது. அந்த விலையை செலுத்த நீங்கள் தயாரா? வாருங்கள் அந்த இலக்கை நோக்கி ‘விடுதலை’ உங்களை அழைத்து செல்லும் இன்ஷா அல்லாஹ்.