அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் முஸ்லிம்கள் கடைபிடிக்க வேண்டும்என்று வற்புறுத்தும் மூன்றாவது கோஷம் மனித உரிமையாகும், இஸ்லாமிய நாட்டுஆட்சியாளர்களின் அத்துமீறல். கொடுங்கோன்மை. சித்திரவதை ஆகியவற்றுக்குஇலக்காகி துன்பத்தை அனுபவிக்கும் முஸ்லிம்கள் பலரை இந்த கோஷம்கவர்ந்திருக்கிறது, முதலாளித்துவ கோட்பாட்டின் ஒரு அம்சமாக விளங்கும் இந்தசிந்தனை. மனிதனுடைய இயற்கை இயல்புகளையும் தனி நபருக்கும்சமூகத்துக்கும் உள்ள தொடர்புகளையும். சமூகத்தின் யதார்த்த நிலைகளையும்.அரசின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்கிறது,அதனுடைய இந்த ஆய்வின்படி மனிதனுடைய இயற்கை குணத்தை அதுபரிசீலிக்கிறது, மனிதன் நன்மை தீமை ஆகிய இரண்டையும் கொண்டவனாகஇருக்கிறான், மனிதன் தன்னுடைய விருப்பங்கள் தடை செய்யப்படும்போது தீமைசெய்கிறான், ஆகவே மனிதனிடமுள்ள நன்மையை வெளிக் கொணரும் அவனதுஎண்ணங்கள் தளர்த்தப்பட வேண்டும் என்று இந்த கோட்பாடு கூறுகிறது,இந்த அடிப்படையில் சுதந்திரம் என்ற கருத்து பிறந்தது, சுதந்திரம் என்ற இந்தகருத்து முதலாளித்துவ கோட்பாட்டில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது, இதன்படிதனிநபர் மற்றும் சமூகம் ஆகிய இரண்டிற்கும் உள்ள தொடர்புகள் ஒன்றுக்கொன்றுமுரண்பாடானது, ஆகவே சமூகத்திடமிருந்து தனிநபர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்,அவனுடைய சுதந்திரம் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும், அமெரிக்காவின்தனி நபர் உரிமையை விட சமூகத்தின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்ற ஐரோப்பாவின் மத்திய கால (Medieval Age) பிரபுத்துவஅமைப்பு (Feudal System) கொண்ட கருத்துக்கு முரணாக உள்ளதை இங்கு நாம்கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமூகத்தின் பார்வையை பொறுத்தவரை பல இயல்புகளை உடைய பல்வேறுதனிநபர்கள் பலபிரிவுகளாக அதில் வாழ்கிறார்கள், ஆகவே தனி நபர்களின் நலன்பாதுகாக்கப்பட்டால் சமூக நலனும் தானாகவே பாதுகாக்கப்படும் என்றுமுதலாளித்துவவாதிகள் எண்ணுகிறார்கள்.
மனிதனுடைய இயல்பு. தனிநபர் மற்றும் சமூகம் ஆகிய இவற்றுக்குஇடையிலுள்ள தொடர்புகள். சமூகத்தின் யதார்த்த நிலை. அரசின் செயல்பாடுகள்ஆகியவற்றை குறித்த முதலாளித்துவ வாதிகளின் கருத்துக்கள் அனைத்தும்தவறானவை, இவர்கள் எண்ணுவது போல மனிதன் இயல்பு ரீதியாக நல்லவனும் அல்ல கெட்டவனும் அல்ல, தேவ ஆலயங்களின் மதாச்சாரியர்கள். முதல் மனிதர்ஆதமின் பாவத்தை மனிதர்கள் அனைவரும் மரபுரீதியாக பெற்றிருப்பதாகவும்.மனிதர்கள் பாவ மீட்சி பெற்று தனது பழய உயர்ந்த நிலைக்கு திரும்ப வேண்டும்என்றும் போதிக்கிறார்கள்.
மனிதனைப் பற்றிய சரியான கருத்து என்னவென்றால். அவனுக்கு உடல்ரீதியானதேவைகள் இருக்கிறது, அவைகளை அவன் நிறைவு செய்ய வேண்டும்,அல்லாஹ்(சுபு) அவனும் மனம் என்னும் அருட்கொடையை வழங்கியிருப்பதால்அவன் தனது இயல்பான தேவையை நிறைவு செய்து கொள்ளும் வழியை தனதுவிருப்பப்படி தேர்வு செய்து கொள்கிறான், சரியான வழியில் அவன் தனதுதேவைகளை நிறைவு செய்து கொண்டால் அவன் நன்மை செய்தவனாகிறான்,தவறான வழியிலோ அல்லது இயல்புக்கு புறம்பான வழியிலோ தனது தேவையைநிறைவு செய்து கொண்டால் அப்போது அவன் தீமை செய்தவனாகிறான், ஆகவேஇயல்பாகவே மனிதன் நன்மையோ அல்லது தீமையோ செய்யும் நிலையில்இருக்கிறான், இவை இரண்டையும் மனிதன் தன் சுய விருப்பப்படியே தேர்வு செய்துகொள்கிறான், இதுதான் இஸ்லாம் மனிதனைப் பற்றி கொண்டுள்ள கருத்து, இதைஅல்லாஹ்(சுபு) தனது வார்த்தைகளில் திருமறை குர்ஆனில் விளக்குகின்றான்.
ஆன்மாவின் மீதும் அதனை செவ்வையாக்கியவன் மீது சத்தியமாக பின்னர்அதற்கு அதன் தீமையையும் அதற்குரிய நன்மையையும் உணர்த்தினான். (91:7,8)
மேலும் இருவழிகளை அவனுக்கு நாம் காண்பித்துவிட்டோம். (குர்ஆன் 90:10)
நிச்சயமாக நாம் அவனுக்கு (நன்மை, தீமை பற்றிய) வழிகளை தெளிவுசெய்தோம். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கலாம் அல்லது நன்றிகெட்டவனாக இருக்கலாம். (குர்ஆன் 76:3)
மேலும் தனிநபருக்கும் சமூகத்துக்கும் இடையிலுள்ள உறவு ஒன்றுக்கொன்றுமுரண்பாடானது, சமுதாய நலனைவிட தனி மனித நலனை பேணுவது தான்அவசியம் என்று கூறும் முதலாளித்துவ கருத்தும். தனிநபர் நலனைவிட சமூகத்தின்நலனே முன்னுரிமைக்கு தகுதியானது என்று கூறும் மத்திய கால ஐரோப்பாவின்பிரபுத்துவவாதிகளின் கருத்தும். சமூகம் என்ற சக்கரத்தின் இணைப்பு கம்பிகள்தான்தனிநபர்கள் என்ற மாக்ஸிய பொது உடமை வாதிகளின் கருத்தும் முற்றிலும்தவறானது,தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையிலுள்ள உறவுகள் என்பதுஒன்றோறொன்று இணக்கமாகவும். ஒவ்வொன்றும் அதன் குறிக்கோளைஅடைவதற்கேற்ப இணக்கமாகவும் இசைவாகவும் இருக்க வேண்டும் என்று ஒருசரியான உறவு முறையினை இஸ்லாம் பரிந்துரைக்கின்றது, ஒரு மனிதனின் இருகரங்களும் அவனுடைய உடலின் ஒரு பகுதியாக எவ்வாறு இருக்கிறதோ அதுபோல தனி நபர் ஒவ்வொருவரும் சமூகம் என்ற உடலின் பகுதிகளாக இருக்கிறார்கள்என்று இஸ்லாம் இயம்புகிறது, உடலை எவ்வாறு கரங்களி−ருந்து பிரிக்கமுடியாதோ அது போல உடலிலிருந்து கரங்கள் பிரிக்கப்பட்டு விட்டால் அதுபயனற்றுப் போகும்.
இஸ்லாம் தனி நபருக்கும் சமூகத்துக்கும் அதனை தன் உரிமைகளைவகுத்திருக்கிறது, இந்த உரிமைகள் இசைவானதும் முரண்பாடு இல்லாததும்.ஒன்றை மற்றொன்று நிறைவு செய்வதாயும் இருக்கிறது, மேலும் இஸ்லாம் இவைஒவ்வொன்றின் மேலும் சில கடமைகளையும் விதித்திருக்கிறது, இந்த இரண்டின்சமநிலையினை நிலைநிறுத்தவும். இவை ஒவ்வொன்றும் மற்றதின் மீது ஆதிக்கம்செலுத்தாமல் தனது கடமைகளை நிறைவேற்றி உரிமைகளை பெற்றுக் கொள்ளவும்இஸ்லாமிய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளது.
இறைதூதர்(ஸல்) தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவுகள் எந்த வகையானது என்று அழகாக விளக்கியிருக்கிறார்கள், அல்லாஹ்(சுபு)வின்வரம்புகளை பேணிக் கொள்ளாத தனிமனிதனுக்கு உதாரணமானது. ஒருகப்ப−லுள்ள மனிதர்களைப் போன்றது, சிலர் மேல் தட்டிலும். சிலர் கீழ் தட்டிலும்இருந்தார்கள், கீழ்தட்டியிலுள்ளவர்களுக்கு குடிநீர் தேவைப்படும் சமயத்தில்அவர்கள் மேல் தட்டிற்கு சென்று எடுத்து வர வேண்டும், இந்நிலையில்கீழ்தட்டியிலுள்ளவர்கள் மேல்தட்டிற்கு சென்று நீர் எடுத்து வருவதற்கு பதிலாக ஏன்கப்பலில் துவாரம் இட்டு நீர் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுகிறார்கள்,இப்போது மேல்தட்டில் உள்ளவர்கள் இவர்களை தடுக்காவிடில் அனைவரும்கடலில் மூழ்கி இறக்க வேண்டியதுதான், அதை தடுத்து விட்டாலோ அனைவரும்பிழைத்துக் கொள்ளலாம்,முதலாளித்துவவாதிகள் சமூகம் என்பது அதில் வாழும் தனி நபர்களின்கூட்டுத்தொகையே அன்றி வேறில்லை என்று கோருகிறார்கள்.
இது முற்றிலும்தவறானதாகும், சமூகம் என்பது தனிநபர்களை கொண்டிருப்பது மட்டுமல்லஅதனை உள்ளடக்கிய ஒரு வடிவமாகும், அந்த சமூகத்தில் வாழும் தனிநபர்கள்ஒவ்வொருவரின் எண்ணங்களும் கருத்துக்களும் அவர்களை வழிநடத்துகின்றஆட்சி அமைப்போடு சேர்ந்து அவர்கள் மீதே இயக்கப்படும் அல்லதுநடைமுறைப்படுத்தப்படும், சமூகம் என்பதற்கு சரியான விளக்கம் நிரந்தரஉறவுகளைக் கொண்ட தனிநபர்களின் குழு என்பதாகும், கப்ப−லோ அல்லது புகைவண்டியிலோ உள்ள பயணிகள் - அவர்கள் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில்இருந்தாலும் - ஒருபோதும் சமூகம் என்று சொல்லப்பட மாட்டார்கள், ஒருகிராமத்தில் வாழும் மனிதர்கள் அவர்கள் நூற்றுக்கு குறைவாக இருந்தாலும் - ஒருசமூகம் சொல்லப்படுவார்கள்.
இந்த உண்மைகளின் அடிப்படையில் சமூகம். தனி மனித இயல்புகள் மற்றும்அவற்றிற்கிடையில் உள்ள உறவுகள் பற்றி முதலாளித்துவவாதிகள் கொண்டுள்ளகருத்து தவறானதாகும், மேலும் அரசியல் பற்றியும் அரசின் கடமைகள் மற்றும்அதன் செயல்பாடுகள் பற்றியும் இவர்கள் கொண்டுள்ள கருத்தும் தவறானது, அரசுஎன்பது தனி மனிதனுக்கு உரிமைகளையும் நலன்களையும் பெற்றுக் தருவதற்கும்.அதனை பாதுகாப்பதற்கும் உரிய சாதனம் மட்டுமல்ல. மாறாக. தனிமனிதஅளவிலும் சமுதாய அளவிலும் சமூக அளவிலும் அதன் உள் விவகாரங்களிலும்குறிப்பிட்ட ஆட்சி அமைப்பு நிறுவியுள்ள பல தரப்பினரின் உரிமைகளையும்கடமைகளையும் நிலைநிறுத்தி சமநிலைப்படுத்துகின்ற ஒரு அமைப்பாகும்.
மேலும்அந்த அரசு எந்த கோட்பாட்டின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளதோ அதன் செய்தியைஉலகெங்கிலும் எடுத்துச் செல்லுதலும். வேறு எந்த பரிசீலனைக்கும் இடம்கொடாமல் மனித சமுதாயத்திடம் அதன் மாண்புகளுக்கேற்றவாறு அந்த செய்தியைஎடுத்துரைப்பதும் அதன் கடமையாகும்,முடிவாக மனித இயல்பு. தனிநபர். சமூகம் அவற்றிக்கு இடையிலுள்ள உறவு.தனி நபர் நலன்களை பெற்றுத் தந்து அதனை பாதுகாக்கும் அரசின் பங்களிப்புஆகியவை குறித்து முதலாளித்துவ கோட்பாட்டின் கருத்து பின்வரும் நான்குவிதமான தனிநபர் சுதந்திரத்தை கோருவதாக உள்ளது, அவையாவன.
• நம்பிக்கை சுதந்திரம்
• பேச்சு சுதந்திரம்
• சொத்துரிமை சுதந்திரம் மற்றும்
• தனிமனித சுதந்திரம் ஆகியனவாகும்,
இந்த சுதந்திரங்களின் அடிப்படையிலிருந்துதான் மனித உரிமை கோரிக்கைஉதயமாகிறது, இவைகள்தான் முதலாளித்துவ சமூகங்கள் அடைந்துள்ள பெருந்துயரங்களின் காரணிகள், இதன் விளைவாக பலமுள்ள மிருகங்கள்பலஹீனமானவைகளை பசியோடு விழுங்கும் கொடிய வனவிலங்குகளின்வசிப்பிடமான காடுகளாக அந்த சமூகம் மாறிவிட்டது, மனிதன் வனவிலங்கின் கீழ்நிலைக்கு பின் நோக்கி சென்று விட்டான், மேலும் மனிதன் தன் இயல்புகளிலும் தன்இயற்கை தேவைகளை நிறைவு செய்து கொள்ளுவதிலும் எந்தவித கட்டுப்பாடும்இல்லாத பண்பற்ற நிலைக்கு சென்றுவிட்டான், மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழும்மனிதர்கள் தங்கள் உடல் இன்பத்தை எவ்வளவு அதிகமாக அனுபவிக்கவேண்டுமோ அவ்வளவு அனுபவிப்பதில் குறியாக இருக்கிறார்கள், முதலாளித்துவசித்தாந்தம் இதை இன்பத்தின் உயர்ந்த நிலை என்று வர்ணிக்கிறது, அதன்சமுதாயத்துக்கு உண்மையான இன்பம் என்னவென்று அறியாததினால் இதைஏற்றுக் கொண்டுள்ளது, ஆனால் உண்மையில் அந்த சமூகம் கஷ்டத்திலும்.குழப்பத்திலும். முடிவில்லாத மன உளைச்சலிலும் உழன்று கொண்டிருக்கிறதுஎன்று கூறினால் அது மிகையாகாது.
No comments:
Post a Comment