Wednesday, August 25, 2010

ரமதான்-வெற்றியின் மாதம்!

புகழனைத்தும் அகில உலகங்கள் அனைத்தின் அதிபதியாகிய அல்லாவிற்கே உறித்தாகுக. அவனே தனது அருள்மறையில் விவரிக்கின்றான்..



உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2:185)



ரமதான் எனும் இப்புனித மாதத்தில் அல்லாஹ்(சுபு) தனது படைப்பினங்களை சோதனைக்கு ஆட்படுத்தி தனது அருட்கொடையைப்பெற ஒரு வாய்ப்பினை வழங்குகின்றான். முஸ்லிம்களின் ஈமானும் இஸ்லாத்தின் மீதான ஈடுபாடும் ஒரே தலைமையின் கீழ் போர்க்களத்தில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதும் இம்மாதத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.



நபிகளார்(ஸல்) அவர்களும் சஹாபா பெருமக்களும் கூட்டாக ஒன்பது ரமதான்களை கடந்து வந்தனர். அக்காலங்களில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.

அல்லாஹ்(சுபு)ன் கட்டளைகளை உயர்வாகப்போற்றி அதனை மெய்ப்பிக்கப் பாடுபடுவதற்கான மும்மாதிரியாக அவை விளங்குகின்றன. அல்லாஹ்(சுபு)வின் பாதையில் தியாகம் செய்வதற்கும், அவனது கட்டளைகட்கு கீழ்படிந்து அவைகளை மெய்ப்பிக்கப் பாடுபடுவதற்கும் சிறந்த உதாரணங்களாக அச்சம்பவங்கள் திகழ்ந்தன.



மதீனாவிலிருந்த பொய்யர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு எண்ணி அல்திரார் எனும் ஒரு மசூதியை கட்டினர். ரமதான் மாதத்தில் தபூக்கிலிருந்து திரும்பிய நபிகளார்(ஸல்) அதனை உடனடியாக இடித்துவிடுமாறு உத்தரவிட்டனர்.



ரமதான் 17ம்நாள் 2ம் ஹிஜிரி அல்லாஹ்(சுபு) பத்ர் போரின் போது முஸ்லிம்கட்குசிறந்த ஒரு வெற்றியை அளித்தான்.



'பத்ர்" போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: 'உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்டமூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப்போதாதா?" என்று.(ஆல் இம்ரான் 3:123 124)



இஸ்லாமிய வரலாற்றில் இது முதல் போரும் முதல் வெற்றியுமாகும். 313 படைவீரர்கள்2 குதிரைகள் 70 ஒட்டகங்களுடன் நபிகளார் தலைமையில் மதீனாவினின்று சென்றஇஸ்லாமிய படையானது 1000 வீரர்கள் 100 குதிரைகள் 700 ஒட்டகங்களுடன் மக்காவினின்றும்அபு ஜஹல் தலைமையில் வந்த படையை வீழ்த்தியது. அப்போரின் போது இறைவன்நபிகளாருக்கு(ஸல்) வஹீ மூலம் அறிவிக்கின்றான்.



உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: '(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். (8:9)



இதனைக் கேட்ட நபிகளார்(ஸல்) மகிழ்சியுற்று 'ஓ அபூபக்கர்! அல்லாவின் வெற்றி நம்மை வெகுவிரைவில் வந்தடையும். அல்லாவின் மீதாக ஜிப்ரயீல் குதிரையில் வருவதை என்னால் காணமுடிகிறது" என்றனர். இதனைப்போன்றே யூத அரசுக்கெதிரான போரில் வெற்றி பெருவோம் என்பது மட்டுமன்றி இஸ்லாத்தின் ஆதிக்கம் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் என்பதையும் பல ஹதீத்கள் விளக்குகின்றன. அதற்காக நாம் துஆ செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து ஒரே உம்மத்தாக நின்று ஒரே இஸ்லாமிய அரசினை நிலைநாட்டி அதன்மூலம் அவ்வெற்றிகளுக்காக பாடுபடவேண்டும் என்பது இஸ்லாம் நம்மீது விதித்த கடமையாகும்.



பத்ர் போரின் வெற்றி முஸ்லிம்களின் இறைநம்பிக்கையை வலுப்படுத்தி மதினாவில் ஒரு வலுவான அரசினை நிலைநாட்டி அதனை அரசியல், ஆன்மீக, ராணுவ மையமாக ஆக்கியது.

ஆறாம் ஹிஜிரி ஆண்டில் வாதி அல் குரா எனுமிடத்தின் அரசியாய் திகழ்ந்தஃபாத்திமா பின் ராபியாவை எதிர்கொள்ள சயித் இப்ன் ஹரிதா அனுப்பப்பட்டார். அதற்குமுன்பு ஒருமுறை அவ்வரசி சயித் தலைமை தாங்கிச்சென்ற குழுமத்தை தாக்கி அவர்களின்பொருட்களை அபகரித்தார். ஃபாத்திமா பின் ராபியா அரேபியப் பகுதிகளில் மிகவும் காவல்மிகுந்த அரசியாகக் கருதப்பட்டார். மேலும் அவர் வெளிப்படையாக இஸ்லாத்தைஎதிர்ப்பவராகவும் அறியப்பட்டார். அவர் ரமதான் மாதத்தில் நடைபெற்ற முஸ்லிம்கட்குஎதிரான போரில் கொல்லப்பட்டார்.



எட்டாம் ஹிஜிரி ரமதானில் ஹ_தைபியா ஒப்பந்தம் மீறப்பட்டதனால் இஸ்லாமியப்படையானது பைசன்டைன் படையை எதிர்த்துப் போரிட்டது.

அரேபிய தீபகற்பத்தில் இறைமறுப்பை அடியோடு அழிக்க எண்ணிய நபிகளார்(ஸல்) ரமதான் மாதத்தில் மக்கா நகரை வெற்றி கொண்டனர். இது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதன் பிறகே இஸ்லாம் அரேபியாவில் வலுவாக வேறு}ண்றியது. அச்சமயம் மக்காவின் தொழுவுருவங்களை

அழித்தபிறகு, அரேபியாவின் மற்ற பகுதிகளில் சிறப்பானதாகக் கருதப்பட்ட அல்-லாத், மனாத், சுவா போன்ற தெய்வவுருவங்களும் அழிக்கப்பட்டன.



இவ்வாறாக ரமதான் மாதம் நபிகளார்(ஸல்) அவர்களின் காலத்தில் பல வெற்றிகளைக் கொண்டதாக இருந்தது. நல்லவற்றை ஏற்று தீமையை ஒதுக்கித்தள்ளி தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அல்லாஹ்(சுபு)வின் வார்த்தைகளை மெய்ப்படுத்திஇஸ்லாமை ஒரு மேன்மையான தீனாக நடைமுறைப்படுத்த விழைந்தனர். நபிகளாரின்(ஸல்) மறைவிற்குப்பிறகு முஸ்லிம்கள் அந்த சுன்னாவை தொடர்ந்தனர். இவ்வாறாகரமதான் மாதம் பல முக்கிய நிகழ்வுகளை தம்மிடத்தே கொண்டதாக இருந்தது.



ஹிஜ்ராவின் 92 ஆண்டுகட்குப்பிறகு ரமதான் மாதத்தில் வடஆப்பிரிக்காவின் உமையத் ஆளுநரான மூசா இப்ன் நுசைர் என்பவர் தன்; வீரமிக்க தளபதியான தாரிக் இப்ன் சையத் உடன் சேர்ந்து ஸ்பெயின், சிசிலி மற்றும் ஃபிரான்சின் ஒரு பகுதியை இஸ்லாமிய அரசுடன்இணைத்தனர். இது அப்பகுதிகளின்(அல்-அந்தலுஸ்) பொற்காலத்தின் தொடக்கமாயிற்று.இங்கு முஸ்லிம்கள் 700 ஆண்டுகட்கும் மேலாக ஆண்டனர்.



682ம் ஹிஜிரி சலாஹ_தீன் அல் அய்யூபி சிலுவைப்போர்ப் படைவீரர்களை சிரியாவினின்றும் விரட்டியடித்து ஆக்கிரமிப்பிலிருந்த அனைத்துப் பகுதிகளையும் ரமதான் மாதத்தில் விடுவித்தார்.



ஹிஜிரி ஏழாம் நு}ற்றாண்டில் மங்கோலியர்கள் ஆசியா முழுவதும் தமது ஆதிக்கத்தை பரப்பினர். செங்கிஸ்கான் தன்னை மனிதகுலத்தின் பாவத்திற்காக தண்டிக்கும் கடவுளின் சாட்டை எனக் கருதினான். 617 ஹிஜிரியில் சமர்க்கண்ட், ரே, ஹம்தான் போன்ற பகுதிகள் அவனின் வாள் வீச்சிற்கு 70,000 மக்கட்கும் மேலானோர் கொல்லப்பட்டனர்.656ஹிஜிரி யில் செங்கிஸ்கானின் பேரனான ஹ_லாகு அப்பேரழிவினைத் தொடர்ந்தான்.இஸ்லாமிய அரசின் தலைநகரான பாக்தாதும் இதிலிருந்து தப்பவில்லை. இப்படையெடுப்பில்1,800,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கிறிஸ்தவர்களும்முஸ்லிம்களும் சொல்லொணாத் துயரங்கட்கு ஆட்படுத்தப்பட்டனர். மசூதிகளில் மதுபானம்தெளிக்கப்பட்டது. தொழுகைக்கு அதான்(பாங்கு) சொல்வதும் தடைசெய்யப்பட்டது.



இத்தகைய கொடுமைகட்கு மத்தியில் இஸ்லாமிய பகுதிகள் அனைத்துமே அதே நிலைக்கு ஆளாகிவிடலாம் என்ற நிலையில் ஸைபுதீன் குத்ஸ் என்பவர் முஸ்லிம் படையை ஒருங்கிணைத்து ஐன் ஜலுத் எனுமிடத்தில் 26ம் ரமதான் 658ல் மங்கோலியப் படையை வீழ்;த்தினார். இறைவனது உதவியால் கிட்டிய இவ்வெற்றியினால் முழு உலகும் நிம்மதிப்பெருமூச்சுவிட்டது.



இதுவே ரமதான் மாதம் தரும் ஊக்கமாகும். இந்த ஊக்கத்தின் காரணமாகவே நமது முன்னோர்கள் சவாலாகத்தோன்றிய செயல்களையும் செவ்வெனே செய்து முடித்தனர். பகலை போர்க்களத்திலும், இரவை இறைவனிடம் இறைஞ்சியும் அவர்கள் தமது ரமதானை கழித்தனர்.



இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய உலகமானது அன்னிய ஆக்கிரமிப்புகளாலும், தாக்குதல்களாலும், பரவலான ஊழல் மிக்க கொடுங்கோல் ஆட்சியாலும் வியாபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கட்கு எதிரான போரானது முழு வீச்சில் நடைபெறுகிறது. ஆகவே இறைவனின் விசுவாசிகளே எழுச்சி கொள்வீராக. நபிகளாரும்(ஸல்), சஹாபா பெருமக்களும், தாரிக் இப்ன் சையித், குத்து}ஸ், சலாஹ_தீன் போன்றோரும் காட்டிய வழியில் சென்று வெற்றி காணப்பாடுபடுவீர். இறைமறுப்பாளர்கள் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் இருந்து, இறைவிசுவாசிகளிடம் அன்புடன் நடந்து முழுமையான நோன்பு நோற்று ரமதானில் இறையருளை பெருவீராக.



அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்(சுபு), கிலாஃபாவை மறுபடியும் நிலைநாட்டி இஸ்லாத்தை உலகெங்கும் பரவச்செய்யும் தலைமுறையில் நம்மை ஆக்கியருள்வானாக. அதற்கான முறையான அடித்தளத்தை அமைக்க நமக்கு ஊக்கமும் சக்தியும் அளிப்பானாக! ஆமீன்!

Monday, July 26, 2010

ஒரே சமுதாயம் - ஒரே பிறை - ஒரே பெருநாள்

இது இந்தியாவில் வெளியிடப்பட்ட ஓர் துண்டுப்பிரசுரம்...காலத்தின் தேவை கருதி மறு பிரசுரம் செய்யப்படுகின்றது...


“மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னும் பிரிந்து விடாதீர்கள்”. ( 3:103)

ரமளான் நோன்பை ஆரம்பிப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட்டு செயல்படுவது கடமையாகும் (Fardh). இது அல்லாஹ் (சுபு) முஸ்லிம்களுக்கு விதித்த கட்டளையாகும். இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமைக்குரிய நிரூபணமாகும். ஆனால் தலைப் பிறையை தீர்மானிப்பதில் வட்டார வாரியான அளவுகோல் பின்பற்றப்படுவதால் முஸ்லிம்கள் பிளவுபட்டு நிற்கிறார்கள். இதனால் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், பெருநாள் கொண்டாடுவதும் வெவ்வேறு (மூன்று நாட்கள் வித்தியாசம்) நாட்களில் நிகழ்கிறது. அல்லாஹ் (சுபு) குறிப்பிட்ட பகுதி என்று எல்லையை பிரிக்காமல் அமைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவாகவே கட்டளையிட்டுள்ளான்.

“நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது. (இதனால்) நீங்கள் இறையச்சமுடையோர்களாக ஆகலாம்.” (3:183)

இங்கு அல்லாஹ் (சுபு) நம்பிக்கையாளர்களே என்று ஒட்டுமொத்தமாகவே குறிப்பிடுகிறான். எனவே நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், நோன்பை நிறைவு செயவதும் எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான கட்டளையாகும். எனவே ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை ஏனைய பகுதியினரை கட்டுப்படுத்தாது என்பது சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயலாகும். யாரெல்லாம் இப்பிரிவினைக்கு ஊக்கமளிக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் (சுபு) விற்கும், அவனுடைய தூதருக்கும் எதிராக செயல்படுகறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

“(தேய்ந்து வளரும்) பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். அவை மனிதர்களுக்கான காலங்காட்டியகாவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன என்று கூறுவீராக”. (3:183)

இவ்வசனத்தில் பிறைகளை முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது முழு மனித சமூகத்திற்கான காலங்காட்டியாக அல்லாஹ் (சுபு) குறிப்பிடுகிறான். எனவே பிறையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் சந்திர காலண்டர் இடத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடுவது முரண்பாடானதாகும். ஆனால் இன்றைய நடைமுறையில் சந்திரமாதத் துவக்கம் வட்டார வாரியாக வேறுபடுவதால் ஹிஜ்ரா காலண்டர் (சந்திர காலண்டர்) நடைமுறைக்கு ஒத்து வரவில்லையே என்பதாக முஸ்லிம்கள் வருந்துகின்றனர். ஆனால் சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காலண்டர் (Gregorian Calender) இத்தகைய வேறுபாடின்றி இருப்பதால் அதை முதன்மைப்படுத்த வேண்டிய அவல நிலையிலுள்ளனர்.

நபி (ஸல்) நோன்பின் ஆரம்ப நாளையும், பெருநாளையும் எவ்வாறு தீர்மானிக்க வேண்டு மென்பதை மிகத் தெளிவாக நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

“பிறையைப் பார்க்காதவரை நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காதவரை நோன்பை நிறைவு செய்யாதீர்கள். மேகமூட்டமாக இருந்தால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்”. (அபூஹீரைரா (ரலி) முஸ்லிம்)

“பிறையைப் பார்க்காதவரை நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காதவரை நோன்பை நிறைவு செய்யாதீர்கள். மேகமூட்டமாக இருந்தால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்”. (இப்னு உமர் (ரலி), புகாரி)

இங்கு பிறை பார்க்க இடப்பட்ட கட்டளை பொதுவான (aam) தாகவே உள்ளது. இந்த ஹதீஸில் இடம்பெறும் சூமூ (Soomoo) என்ற வினைச்சொல் பன்மையாகும். எனவே முழு உம்மாவையும் கட்டுப்படுத்தும். மேலும் ருஃயத் (Ru'yath) என்ற சொல்லும் பொதுவான பொருளிலேயே பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனவே உலகின் எந்தப் பகுதியிலும் பார்க்கப்படும் பிறை அனைத்து முஸ்லிம்களையும் கட்டுப்படுத்தும். நபி (ஸல்) காலத்தில் முஸ்லிம்கள் பல பகுதிகளில் வாழ்ந்து வந்த நிலையிலும், ஒரே நாளில் நோன்பை ஆரம்பித்தும், பெருநாள் கொண்டாடியுமுள்ளனர். எனவே நபி (ஸல்) காட்டித் தராத நடைமுறையை நாம் பின்பற்றக் கூடாது.

“ரமளானுக்காக ஷஅபான் மாதத்தை கணக்கிட்டு வாருங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்”. (அபூஹூரைரா (ரலி), திர்மிதி)

எனவே ரமளான் மாதத்தின் துவக்க நாளை சரியாகக் கணக்கிட்டு ஷஅபான் மாதத்தை துல்லியமாக கணக்கிட்டாக வேண்டும். ஷஅபான் சரியாக கணக்கிடப்பட வேண்டுமெனில் ரஜப் மற்றும் அதற்கு முந்தைய மாதங்களை சரியாக கணக்கிட்டிருக்க வேண்டும். இவ்வாறு கணக்கிட்டால்தான் முஸ்லிம்கள் ஒரே நாளில் ஒற்றுமையாக நோன்பையும், பெருநாளையும் கடைபிடிக்க இயலும்.

பிறையைப் பார்ப்பது என்பதைப் பொறுத்தவரை முஸ்லிமான ஒருவர் பார்த்து விட்டதாக சாட்சி கூறினாலே ஏற்கத்தக்கதாவிடும். நபி (ஸல்) முஸ்லிமான ஒருவர் பார்த்து சாட்சியமளித்த போது அதை ஏற்று செயல்பட்டுள்ளார்கள்.

“பிறையைப் பார்க்காத காரணத்தால் முஸ்லிம்கள் நோன்பை ஆரம்பிக்காம லிருந்தனர். அப்போது மதீனாவில் குடியிருக்காத ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பிறையைக் கண்டதாக கூறினார். நபி (ஸல்) அவரிடம் மு°லிமா? என்று வினவினார். அவர் ஆம் என்று பதிலளித்தார். உடனே நபி (ஸல்) அல்லாஹூ அக்பர்! ஒருவர் பார்த்தாலே அனைத்து முஸ்லிம்களுக்கும் போதுமானது என்றவர்களாக தானும் நோன்பு நோற்க ஆரம்பித்தார்கள். மக்களையும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள்”. (இப்னு அப்பாஸ் (ரலி), அபூதாவூது)

ஹனபி மத்ஹபின் பிரபலமான இமாமான ஸர்கஸி (ரஹ்) மேற்கண்ட ஹதீஸை சுட்டிக்காட்டி பிறை பார்க்காமல் நோன்பு நோற்கலாகாது என்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். (A1 - Mabsoot: 3: 52))

மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் நபி (ஸல்) அம்மனிதரிடம் எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்கவில்லை. இதே போன்று தகவலை ஏற்று செயல்பட்டதாக கிடைக்கப்பெறும் மற்ற ஹதீஸ்களிலும் நபி (ஸல்) தூரத்தை அளவுகோலாக நிர்ணயிக்கவில்லை. எனவே நபி (ஸல்) காட்டித்தராத நடைமுறையை நிர்ணயிக்க யாருக்கும் அதிகாரமில்லை. பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும். ஆனால் ஒரு பகுதி முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடும் போது பிறபகுதியினர் (ஒட்டிய பகுதியில் வாழ்ந்தாலும் கூட) நோன்பை தொடர்கின்றனர். இச்செயல் ஹீகும் ஷரியா விற்கு மாற்றமான பாவமான காரியமாகும்.

“நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரு தினங்களிலும் நோன்பு நோற்பதற்கு நபி (ஸல்) தடை விதித்தார்கள்” (ஆயிஷா (ரலி), முஸ்லிம்)

“யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்விட்டார்”. (அம்மார் (ரலி), புகாரி)

நபி (ஸல்) அவர்களும், முஸ்லிம்களுக்கு நோன்பு நோற்ற நிலையிலிருந்த போது பிற பகுதியிலிருந்து பிறை பார்த்தவர்கள் தகவலை காலதாமதமாக வந்து கூறியபோது நோன்பை தொடர அனுமதிக்காமல் உடனடியாக நோன்பை விட்டுவிட கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் இன்று பல பகுதிகளில் பெருநாள் கொண்டாடப்படும் தகவல் நமக்கு உடனுக்குடன் கிடைக்கப்பெற்றாலும் செயல்படுத்த தயங்குகிறோம். இதனால் அறிந்து கொண்டே பெருநாள் தினத்தில் நோன்பு நோற்கும் ஹராமான காரியத்தை செய்து வருகிறோம்.

“நாங்கள் முப்பதாம் நாள் காலை நேரத்தை அடைந்தோம். அப்போது இரு கிராமவாசிகள் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்பதாக சாட்சி கூறினார்கள். உடனே நபி (ஸல்) நோன்பை விட்டுவிடுமாறு மக்களுக்கு கட்டளையிட்டார்கள்”. (அபூமஸ்வூத் அல்அன்ஸாரி (ரலி), தாரகுத்னி)

"மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தென்படவில்லை. எனவே நாங்கள் நோன்பு நோற்ற நிலையிலிருந்தோம். அப்போது பகலின் இறுதிப்பகுதியில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபி (ஸல்) நோன்பை விடுமாறும் மறுநாள் பெருநாள் தொழுமாறும் கட்டளையிட்டார்கள். (அபூஉமைர் (ரலி), அபூதாவூது, அஹ்மது, தாரகத்னி)

வெவ்வேறு நாட்களில் நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை முடிவு செய்ய நபி (ஸல்) காலத்திற்கு பின்னர் இப்னு அப்பாஸ்(ரலி) காலத்தில் நடைபெற்ற பின்வரும் வரலாற்று சம்பவத்தை சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

"உம்முல் பழ்ல் (ரலி) என்னை ஷாமிலிருந்த முஆவியாவிடம் அனுப்பி வைத்தார்கள். நான் ஷாமிற்கு சென்று அவரது வேலையை முடித்தேன். நான் ஷாமிலிருக்கும்போது ரமளானின் முதல் பிறை எனக்கு தெரிந்தது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் இறுதியில் மதீனாவிற்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னை விசாரித்தார்கள். பிறகு பிறையைக் குறித்து கேட்டார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவு பிறையைப் பார்த்தோம் என்றேன். நீயே பிறையைப் பார்த்தாயா? என்றார்கள். ஆம். மக்களும் பார்த்தார்கள். நோன்பு நோற்றார்கள். முஆவியாவும் நோன்பு நோற்றார்கள். நாங்கள் சனிக்கிழமை இரவில் பிறையை பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பதை பூர்த்தியாகும் வரை நோன்பை தொடர்வோம் என்றார்கள். முஆவியா பார்த்ததும் நோன்பு நோற்றதும் போதாதா? என்றேன். அதற்கவர்கள் போதாது நபி (ஸல்) இவ்வாறு தான் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்று விடை யளித்தார்கள். (குரைப், முஸ்லிம்)

இது ஹதீஸ் அல்ல. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் கருத்து ஆகும். பிறை பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என்ற நபி (ஸல்) கட்டளையை இப்னு அப்பாஸ்(ரலி) ஒவ்வொரு பகுதியினரும் பார்த்தாக வேண்டும் என்று விளங்கிருந்ததால் அவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் பிறபகுதியில் பார்த்த தகவலை ஏற்று செயல்பட்டுள்ளதால் மேற்கண்ட சம்பவத்தை ஏற்கத்தக்க ஆதாரமாக கொள்ள முடியாது.

இதை இமாம் ஸவ்கானி (ரஹ்) உறுதி செய்கிறார்கள். அவர் நைலுல் அவ்தார் என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்: ஏற்றுக் கொள்ளத்தக்க ஆதாரம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்த நபி (ஸல்) அவர்களின் ஹதீஸில் தெளிவாக இருக்கிறது. இத்தகைய தெளிவான ஆதாரத்தை மக்கள் விளங்குவது போல் அவரது கருத்திலிருந்து பெற முடியவில்லை. எனவே ஷரியாவிற்கு முரணாகவோ அல்லது சந்தேகம் கொள்ளும்படியோ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று இருந்தால் அதை நாம் பின்பற்றத் தேவையில்லை. நபி (ஸல்) கூறியதையே நாம் பின்பற்ற வேண்டும்.

“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளவும்” (2:185) என்ற வசனத்தை வைத்து ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாட்களில் ரமளானின் துவக்க நாளை அடைவதாக சமீபகாலமாக தவறாக விளக்கப்பட்டு வருகிறது. இவ்வசனத்தில் அந்த மாதத்தை அடைந்து விட்டவர் மீது நோன்பு நோற்பது கட்டாயமாகும் என்பதாகத்தான் அல்லாஹ் (சுபு) குறிப்பிடுகிறான். ஒவ்வொரு பகுதியனிரும் வெவ்வேறு நாட்களில் ரமளானை அடைவதாக குறிப்பிடவில்லை. குர்ஆனை விளங்குவதற்கென்ற அடிப்படை விதிமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக விளங்கிக் கொண்டால் இத்தகைய ஃபித்னா ஏற்படவே செய்யும்.

“யார் எவ்வித ஞானமின்றி குர்ஆனைப் பற்றி பேசுகிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்”. (திர்மிதி, அஹ்மது) என்ற நபி (ஸல்) எச்சரிக்கையை சமர்ப்பிக் கின்றோம். குர்ஆனில் நாஸிக் (மாற்றக்கூடியது), மன்ஸூக் (மாற்றப்பட்டது) என்ற விதிமுறையுடைய வசனங்கள் உள்ளன. 2:184 வசனம் மன்ஸூக் ஆகும். 2:185 வசனம் நாஸிக் ஆகும், தப்ஸீர் இப்னு கதீரில் இதற்கு தெளிவான விளக்கம் கிடைக்கிறது. ஆரம்ப காலத்தில் நோன்பு நோற்பது கட்டாயம் என்ற நிலையிலிருந்து விதி சற்று தளர்த்தப்பட்டிருந்தது. அப்போது 2:183, 2:184 ஆகிய வசனங்கள் அருளப்பட்டிருந்தன. நோன்பு நோற்க சக்தியிருந்தும் நோற்கவில்லையெனில் ஒர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாயிருந்தது. இதனால் விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் (Fidya) செய்து வந்தனர். எனவே தான் “நோன்பின் நன்மையை நீங்கள் அறிவீர்களாயின் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்தை அறிந்து கொள்வீர்கள்”) என்பதாக அல்லாஹ் (சுபு) குறிப்பிடு கிறான். அதன்பின் இச்சட்டத்தை மாற்றி அந்த மா தத்தை அடைந்து விட்டாலே நோன்பு நோற்றாக வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. ஸலமா பின் அக்வஃ (ரலி) அறிவிக்கும் பின்வரும் ஹதீ° சான்று பகர்கின்றது.

“நோன்பு நோற்க சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கவில்லையெனில்) அதற்கு பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் என்ற (2:184) வசனம் அருளப்பட்டபோது விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் செய்து வந்தனர். பின்னர் இச்சட்டத்தை மாற்றி உங்களில் என்றவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் என்ற வசனம் (2:185) அருளப்பட்டது”. (புகாரி - 4507)

நாம் இங்கு பகல் நேரத்திலிருக்கும்போது உலகின் மற்ற பகுதியினர் இரவு நேரத்திலிருப்பர். எனவே நோன்பும், பெருநாளும் வெவ்வேறு நாட்களில் (மூன்று நாட்கள் வித்தியாசத்தில்) வந்தே தீரும் என்ற அடிப்படையற்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. பின்வரும் வசனத்தை சிந்தித்தாலே தெளிவு பிறக்கும்.

“இன்னும் ஃபஜ்ரு நேரம் எனற் வெள்ளை நூல் (இரவு என்னும்) கருப்பு நூலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். பின்னர் இரவு வரும்வரை நோன்பை நிறைவு செய்யுங்கள்.” (2:187)

இவ்வசனத்திலிருந்து நோன்பை ஆரம்பிக்கும் நேரமும் (Imsak), நோன்பை நிறைவு செ ய்யும் நேரமும் (Iftar) பூமியெங்கும் மாறுபடக்கூடியது என்பதை விளங்கிக் கொள்ளலாம். எனவே உலகெங்கும் நோன்பு நோற்க ஆரம்பிக்கும் நேரமும், அதை நிறைவு செய்யும் நேரமும் பகுதி வாரியாக மாறுபட்டாலும், அந்த நாள் என்பது மாறுபடாது. இதை இன்னும் இலகுவாக விளங்கிக் கொள்ள ஜூம்ஆ தினம் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என்பதை சிந்தித்தாலே விளங்கும். ஜூம்ஆ தொழுகை என்பது ஒரே நாளில்தான் பூமியெங்கும் நிறைவேற்றப்படுகிறது ஒரே நேரத்திலுமல்ல. ஒரே நாளுக்குள் (24 மணி நேரத்திற்குள்) உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றி முடிப்பதை நாம் அறிந்தே வைத்துள்ளோம். வெவ்வேறு நாட்களில் நிறைவேற்றப் படுகிறது என்று யாரும் கூறுவதில்லை. எனவே பெருநாள் தொழுகை என்பது பூமியெங்கும் வெவ்வேறு நேரத்தில் நிறைவேற்றப்பட்டாலும் ஒரு நாளுக்குள் (24 மணி நேரத்துக்குள்) நிகழ்ந்து விட வேண்டும். எனவே இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவிலிருப்போர் பிறையைக் கண்டு பெருநாள் கொண்டாடுவார்களாயின் அவர்களைப் பின்பற்றி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருப்போரும் அந்நாளில் பெருநாள் கொண்டாடியாக வேண்டும். ஜகார்தாவில் பார்க்கப்படுவது முழு முஸ்லிம் உம்மாவையும் கட்டுப்படுத்தும்.

மேலும் பிறையைப் பார்க்காமல் வானியலை (ஹளவசடிnடிஅல) மட்டும் அடிப்படையாகக் கொண்டு நோன்பையும், பெருநாளையும் முடிவு செய்யலாம் என்ற கருத்து ஹூகும் ஷரியவிற்கு மாற்றமானதாகும். ஆனால் வானியலை அடிப்படையாகக் கொண்டு முன்கூட்டியே மாதங்களைக் கணக்கிட்டு பின்னர் பிறையைப் பார்த்து முடிவு செய்ய தடை இல்லை. மத்ஹபு இமாம்களின் குறிப்புகளிலிருந்து உலகம் முழுவதும் ஒரே நாள்தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஹனபி மத்ஹபின் இமாம்களில் ஒருவரான கஸானீ (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்:- முழு உம்மத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட பிறை பார்த்தலை (பகுதிவாரியாக) பின்பற்றுவது என்பது பித்அத் ஆகும். இதிலிருந்து மற்ற கருத்துக்கள் அனைத்தும் எவ்வளவு பலவீனமாகது என்பதை இமாம் அவர்கள் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதை அறியலாம். இமாம் ஜூஸைரி (ரஹ்) ஹனபி மத்ஹபில் பிறையை தீர்மானிக்கும் விதத்தை குறிப்பிடும்போது:
1, எந் ஒரு முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவன், ஆண் அல்லத பெண் ஆகியயோர் பிறை பார்த்ததை அவர் ஃபாஸிக் ஆயிருந்தாலும் விசாரணையின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2. அவர் ஃபாஸிக் ஆனவரா? இல்லையா? என்பதை காதி (இஸ்லாமிய நீதிபதி) முடிவு செய்து கொள்வார். (Fiqh al Madhaahib al Arba’a)

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்:-

"ஒருவர் பிறை பார்த்ததை யார் உரிய நேரத்தில் அறிந்து கொள்கிறாரோ அவர் அதை பின்பற்றி நோன்பை ஆரம்பித்தல், நோன்பை முடித்துக் கொள்ளல், குர்பானி ஆகியவற்றை நிறைவேற்றிட வேண்டும். இதை குறிப்பிட்ட தூரத்திற்கோ அல்லது நாட்டிற்கோ வரையறைப்படுத்துவது ஷரியாவிற்கு மாற்றமானதாகும். (A1- Fatawa Volume 5, page, 111)

தாருல் உலூம் தேவ்பந்த் நிறுவனர் மவ்லானா ரசீத் அஹமது காங்கோஹி (ரஹ்):- கல்கத்தா மக்களுக்கு வெள்ளக்கிழமையன்று ரமளானின் பிறை தெரிந்தது. ஆனால் மக்காவிலோ வியாழக்கிழமை பிறை பார்க்கப்பட்டது. கல்கத்தா மக்களுக்கு இத்தகவல் பின்னர் தெரியவந்தால் மக்காவை பன்பற்றி பெருநாளை கொண்டாட வேண்டும் பிறகு விடுபட்ட முதல் நோன்பை களா செய்திட வேண்டும். (Sharh Tirmizi, Kaukab un Durri, pge - 336)

தமிழகத்தின் தாய்க்கல்லூரியான வேலூர் பாகியாத்துஸ்ஸாலிஹாத் நிறுவனர் அஃலாஹழரத் (ரஹ்) உலகில் எங்கு பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்று செயல்படுவது அவசியமாகும். (பாகியாத்துஸ்ஸாலிஹாத் ஃபத்வா தொகுப்பு)

தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவின் ஃத்வா: பிறை பார்க்கப்பட்ட தகவல் எங்கேனும் உறுதிப்படுத்தப்பட்டால் மக்கள் எவ்வளவு தொலைவிலிருப்பினும் ஆயிரக்கணக்கான மைல்கள். தூரத்திலிருப்பினும் அதை செயல்படுத்தியாக வேண்டும். (Fatawa Darul Uloom Deoband,Volu, 6, page - 380)

மௌலானா ஸஃபீகுர் ரஹ்மான் நத்வி, லக்னோ: ஒரு பகுதியில் பிறை பார்க்கப்பட்டது உறுதியாவிவிட்டால் அனைவர் மீதும் நோன்பு நோற்பது கடமையாகிவிடும். (Fikhul Myassir, page - 133)

இதே போன்று ஃபிக்ஹீ கிரந்தங்களிலும் தெளிவான சான்றுகள் கிடைக்கின்றன. ஓர் ஊரில் இறையச்சமுடைய ஒருவரால் பிறை பார்க்கப்படுமேயானால் அது இவ்வுலகிலுள்ள மற்ற அனைவர் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். (ரஹ்மத்துல் உம்ம)

தெளிவான அறிவிப்புகளின்படி கருத்து வேறுபாட்டிற்கு பிறை உதிக்குமிடத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. (ஃபதாவா ஆலம்கீரி, ஃபதாவா காழிகான்) பிறையைக் கண்டுவிட்ட செய்தி யாரையெல்லாம் சென்றடைகிறதோ அவர்கள் தொலை தூரக் கணக்கின்றி நோன்பு நோற்பது கடமையாகிவிடும் (மஜ்மஉல் ஃபதாவா)

ஓர் ஊரார் பிறையைப் பார்த்தால் அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். (அல்முஃனி, அன்இன்ஸாப்)

பிறையைப் பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். பிறையைப் பார்த்து நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) கூறியுள்ளதால் ஓர் ஊரார் பிறையைப் பார்த்திடும்போது அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். நபி (ஸல்) கட்டளை முழு உம்மத்தினரையும் முன்னிலைப்படுத்தியே கூறப்பட்டதாகும். எனவே இந்த உம்மத்தினிரில் எவரொருவர் எந்த இடத்திலாவது பிறையைப் பார்ப்பது முழு உம்மத்தினரும் பிறையைப் பாத்தது போன்றதாகும். (ஃபிக்ஹ் சுன்னாஹ்).

சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் வரை இந்தியத் துணைக் கண்டத்தின் முஸ்லிம்கள் கந்தஹாரிலிருந்து கொழும்பு வரை; அதே போன்று ரங்கூனிலிருந்து கராச்சி வரை ஒற்றுமையாக நோன்பை ஆரம்பித்தும், பெருநாள் கொண்டாடியும் மகிழ்ந்தனர். திடீரென்று ஒரு நவீனம் தோன்றி இந்த உம்மா பிளவுபடுத்தப்பட்டு (1947 தேசப் பிரிவினைக்குப் பின்னர்) வேறுபட்ட நாட்களில் நோன்பும், பெருநாளும் என்ற பித்அத் உருவாக்கப்பட்டது. மேலும் 1971 க்குப் பின்னர் வங்க தேச தகவலை (1971 வரை கிழக்கு பாகிஸ்தான்) ஏற்பதில்லை என்ற பித்அத்தை பாகிஸ்தான் முஸ்லிம்கள் உருவாக்கினர். அதே போன்று சில வருடங்களுக்கு முன்னர் வரை இலங்கை வானொலியின் அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்து ஒற்றுமையாக பெருநாள் கொண்டாடிய தமிழக முஸ்லிம்கள் மத்தியில் தத்தம் பகுதி தனிப்பிறை என்ற பித்அத் உருவாகியது. தமிழக முஸ்லிம்கள் கேரள மாநிலத்திலிருந்து தகவல் கிடைக்கப்பெற்றால் அதை ஏற்பதில்லை. ஆனால் அதைவிட தூரமான இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து கிடைக்கும் தகவலை ஏற்றுக் கொள்கிறார்கள். இது எதனால்? கேரளாவின் எல்லையை ஒட்டிய ஊர்களிலுள்ளோர் (கன்னியாகுமரி மாவட்டம்) பெரும்பாலான சமயங்களில் கேரளத்தையும், சில சமயங்களில் தமிழகத்தையும் பின்பற்றி முடிவெடுக்கின்றனர். தேசியம், வட்டாரம், மொழி உணர்வு போன்ற அளவுகோலைக் கொண்டு மனோ இச்சையின்படி முடிவெடுக்க நபி (ஸல்) கற்றுத் தந்தார்களா?

நபி (ஸல்) அவர்கள் இது குறித்து கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

“எவர் ஒருவர் அஸபிய்யாவிற்காக (தேசியவாதம்) மக்களை அழைக்கிறாரோ, அஸபிய்யாவிற்காக போராடுகிறாரோ, அஸபிய்யாவிற்காக மர ணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல”. (அபூதாவூது).

எனவே, முஸ்லிம்களே! உங்களில் ஓர் ஆடவரோ அல்லது மகளிரோ அவர் எந்த பகுதியை சார்ந்தவராயினும் பிறையைப் பார்த்தது உறுதி செய்யப்பட்டால் அதை ஏற்று செயல்படுங்கள். அத்தகவல் அஸ்ஸாம் மாநிலத்தின் டிக்பாய் பகுதியிலிருந்து அல்லது பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவிலிருந்து கிடைக்கப் பெற்றாலும் சரியே. எனவே எந்த மனிதருடைய காலதமாதமான அறிவிப்பிற்காக காத்திருக்க வேண்டாம். நீங்கள் நோன்பை நோற்பதும் அதை நிறைவு செய்வதும் அல்லாஹ் (சுபு) வின் திருப்பொருத்தத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அல்லாஹ் (சுபு) விற்கும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களக்கும் கட்டுப்பட்டு ஒரே உம்மாவாக செயல்பட அல்லாஹ் (சுபு) உலக முஸ் லிம்கள் அனைவர்களுக்கும் அருள்பாலிப்பானாக.

“எவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்த பிறகும் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையோர்களுக்கு மகத்தான் வேதனை உண்டு”. ( 3: 105)

Monday, July 5, 2010

எங்கே செல்கிறாய்?

மடிந்து விழுந்து நெழிந்து தவழ்ந்து புரண்டு விரைந்து
சிதறும் புணலில்...
இடிந்து குழைந்து அழிந்து விழுந்து விரண்டு மறைந்த பதராய்…
எழுந்து விளைந்து குவிந்து அலைந்து திரண்டு ஒளிர்ந்த
படரும் சுடரில்...
ஒடிந்து தளர்ந்து குணிந்து வளைந்து மிரண்டு அழிந்த சிறகாய்…



நீ… எங்கே செல்கிறாய்?



அம்மா வாசைப் பௌணர்மியாய்
ஆழிப் பேரலை அகிம்சையாய்
இம்மையின் மறுமையாய்
ஈராக்கின் அமைதியாய்…



நீ… எங்கே செல்கிறாய்?



இறக்கப் பிறந்த நீ…
பறக்க நினைத்தாய்!
உயரப் பறக்க
சிறகை ஒடித்தாய்!




நீ… எங்கே செல்கிறாய்?



ஒரு நாள் நீ வல்லரசு!
இன்னாள்…இல்லை…
உக்கில்லை ஓர் அரசு!
நீ சொன்னாய்… பரவாயில்லை…
இன்று நான் நான் அல்ல…
இன்று நான் நாம்!
ஐம்பது, ஐம்பது சிற்றரசு! பெரிசு…ஐம்பதா ஒன்றா? ஐம்பது…




நான் புதுப்பாவை… எனக்கேன் பொல்லாப்பு?
பேரரசு பெருமைக்கா?
போர் செய்ய முட்டாளா?



தேசியம் தேனாக…
ஜன நாயகம் பாலாக…
கபிடலிஸம் மதுக்கோப்பை!
கொம்யூனிஸம் விலைமாது!
இஸ்லாம் இருக்கட்டும்…அழையா விருந்தாளி!
மொடர்ண் இஸ்லாம்…
ஆஹா… உல்லாசம்!




நீ பாவை அல்ல – அப்பாவி
இல்லை - நீ பாவி!
மேற்குலகின் காலனி…



அண்ணார் என்றான்- ஐரோப்பா
அவனிடமிருந்ததோ இராட்சத சிலந்தி வலை
பலம் அல்ல – வெறும் பிரமாண்டம்



ஏமாந்தாய்…அண்ணார்ந்தாய் - கொக்கின் கழுத்து கட்டையானது அண்ணார்ந்தாய் - அவனை(அல்லாஹ்வை) அழைக்கவல்ல
அன்னியனை அரவணைக்க!




நீ… எங்கே செல்கிறாய்?




விடுதலை என் முற்றம்
சுதந்திரம் என் கொல்லை
அதில் வீடு உலகாயதம்
பெண்ணாட்டி அமெரிக்கா!
வைப்பாட்டி ஐரோப்பா!
விளையாட இஸ்ரவேலு…
வாரிசு டொமோகரசி!
வழக்கென்றால் ஐயன்னா நாவன்னா…
இதுதானே உன் உலகம்…



நீ… எங்கே செல்கிறாய்?



மின்னல் மிலேனியத்தில் மில்லத்துந் இம்ராஹீமா…
ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவுமா?
குர்ஆனும் ஏடுதானே!
ச்ச்சும்மா வாசிக்க வைத்திருப்போம்…
அதில் பூஜிக்க ஒன்றுமில்லை…
இதுதானே உன் கொள்கை…



நீ… எங்கே செல்கிறாய்?
அக்ஸா அலுப்பென்றால் கஃபாவை கைமாற்றுவோம்!
விசுவாசியின் குருதி அதை விட மேலானது…
அதையே ஓட்டி விட்டோம்…
இது என்ன கல்தானே…
இதுதானே உன் தீர்வு


 நீ… எங்கே செல்கிறாய்?




மறுமையா மண்ணாங்கட்டி…
இதுதான்(இம்மை) உள்ளங்கை நெல்லிக்கனி!
கேள்வியா கணக்கா…ஐய்யோ… ஐய்யோ
நாளைக்கு பிளைப்பைப் பாரப்பா…
இதுதானே உன் வாதம்




நீ… எங்கே செல்கிறாய்?

நில்… நில்…அக்கினிப்பிளம்பொன்றில் அகோரமாய் ஓர் காட்சி!

கருகிக் கருகிக் கதறிக் கதறி ஓர் ஓசை!

அதோ…அதோ அது பிர்அவ்னா?

இல்லை அது ஹாமான்…

இல்லை நம்ரூத்… ஐய்யோ அல்ல அது ஜஹ்ல்…

அபு ஜஹ்ல்…



நீ… எங்கே செல்கிறாய்?

Tuesday, May 11, 2010

இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு - இஸ்லாமிய முறைமை - System of Islam - Nidam Al Islam

முஹம்மது(ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்(சுபு) அருளிய மார்க்கம்தான் இஸ்லாம். அது மனிதர்களுக்கும் படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வுக்கும் இடையிலுள்ள உறவையும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள உறவையும் ஒழுங்குபடுத்துகிறது. மனிதர்களுக்கும் படைப்பாளனுக்கும் இடையிலுள்ள உறவு அகீதா என்ற அடிப்படை கோட்பாடு மற்றும் வணக்க வழிபாட்டு (IBADAH)  செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆகவே வாழ்வியல் குறித்த அனைத்து விவகாரங்களையும் பற்றி பேசக்கூடிய ஒரு சித்தாந்தமாக இஸ்லாம் விளங்குகிறது. எந்த வகையான புரோகித சடங்கு சம்பிரதாய விவகாரங்கள் குறித்து விவாதிக்கின்ற சமய தத்துவமாக அது விளங்கவில்லை. ஏகாதிபத்தியம் என்ற எதேச்சதிகாரத்திலிருந்து அது தன்னை தூரமாக்கிக் கொண்டுவிட்டது. ஏனெனில் புரோகிதர்கள் குழுவோ அல்லது வாழ்வியல் விவகாரங்களை மட்டும் கவனிக்கின்ற உலகாயுத குழுவோ இங்கு கிடையாது. இஸ்லாத்தை தழுவுகின்ற அனைவரும் முஸ்லிம்கள் என்றே கருதப்படுகிறார்கள். இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் கடமையிலும் உரிமையிலும் அனைவரும் சமமே. ஆகவே மதகுரு என்பவரோ அல்லது மதசார்பற்றவர் என்பவரோ இங்கு கிடையாது. ஏனெனில், இஸ்லாத்தின் ஆன்மீக அம்சம் என்பதன் பொருள் என்னவெனில், அனைத்துப் பொருட்களும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டு அவனுடைய கட்டளைப்படி ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பதாகும். மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றியும் அவைகளை சூழ்ந்துள்ளது எது என்பது பற்றியும் அவைகளோடு தொடர்புடையது எது என்பது பற்றியும் விளக்கும் இந்த மகத்தான கருத்து, கண்ணோட்டம் நமக்கு  காண்பிப்பது என்னவென்றால் இந்த அனைத்துப் பொருட்களும் குறையுள்ளவை (Naaqis)  முழுமையற்றவை (a’ajiz)  தேவையுள்ளவை (Multtaj)  என்பதைத்தான். இவை அனைத்தும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டு அவனுடைய கட்டளைப்படி நிர்வகிக்கப்படுகின்றன என்பதையும் மனிதன் இந்த வாழ்க்கையில் அவனுடைய உள்ளார்ந்த விருப்பங்களையும் (Instinct)  உடல்சார்ந்த தேவைகளையும் (Organic Needs)  நிறைவு செய்து கொள்ளும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு செயலாக்க அமைப்பு (System- Nidam) தேவை என்பதையும் எந்தவித சந்தேகமுமின்றி உறுதிப்படுத்துகிறது. மனிதன் முழுமையற்றவனாக இருப்பதாலும் நிறைவான அறிவற்றவனாக இருப்பதாலும் இந்த செயலாக்க அமைப்பு அவனிடமிருந்து உருவாக முடியாது. மேலும் இந்த அமைப்பை உருவாக்கும் மனிதனது ஆற்றல் வேறுபாடுகளுக்கும் மாறுபாடுகளுக்கும் முரண்பாடுகளுக்கும் உட்பட்டதாக இருக்கும். இது இந்த அமைப்பில் முரண்பாடுகளை உருவாக்குவதற்கும் மனிதனை துயரத்தில் ஆழ்த்துவதற்கும் வழிவகுத்துவிடும். ஆகவே செயலாக்க அமைப்பு அல்லாஹ்(சுபு)விடமிருந்துதான் வரவேண்டும். எனினும் இஸ்லாமிய செயலாக்க அமைப்புக்கு (System of Islam) இணக்கமாக இருக்கும் மனிதன் அது அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்துள்ளது என்பதை கருத்திற்கொள்வதைவிட இந்த அமைப்பின் உலகாயுத பயன்களை அடைந்து கொள்வதை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டால், அங்கே ஆன்மீக அம்சம் அற்றுப்போகிறது. ஆகவே மனிதன் செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது, ஆன்மா (RUH) அவனிடத்தில் இருக்கும் வகையில், அல்லாஹ்(சுபு)வுடம் அவனுக்குள்ள உறவை விளங்கிக் கொண்ட அடிப்படையில், அவனுடைய (சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக தன்னுடைய செயல்பாடுகளை கண்டிப்பாக ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். இது ஏனெனில், ரூஹ் என்பது அல்லாஹ் (சுபு)வுடன் மனிதனுக்கு உள்ள உறவை அவன் உணர்ந்து கொள்வதாகும். செயல்பாடுகளை மேற்கொள்ளும் தருணத்தில் அல்லாஹ்(சுபு)வுடன் மனிதனுக்கு உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வு மனிதனுக்கு ஏற்படுவதுதான் இயற்பொருட்களையும் (Matter)  ஆன்மாவையும் (RUH)  ஒன்று கலப்பது என்பதாகும். ஆகவே அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வின் அடிப்படையில் மனிதன் அவனுடைய (சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக செயல்படுகிறான். செயல் என்பது இயற்பொருளாகும் (Matter).  அந்த செயலை மேற்கொள்ளும்போது அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்ளும் உணர்வுதான் ஆன்மாவாகும் (Spirit). எனவே அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வோடு அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் விளங்கிக்கொண்ட உணர்வோடு அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளின்படி ஒருவரின் செயல் வழி நடத்தப்படுவதுதான் இயற்பொருளை ஆன்மாவுடன் கலப்பது என்பதாகும். இதனடிப்படையில் குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் கொண்டு வரப்பட்ட அஹ்காம் ஷரிஆவின் அடிப்படையில் ஒரு முஸ்லிம் அல்லாதவர் செயல்படும் போது அவரது செயல் ஆன்மாவினால் வழிநடத்தப்படுவதில்லை. மேலும் இயற்பொருளையும் ஆன்மாவையும் ஒன்று கலக்கும் அம்சமும் அவரது செயலில் இடம் பெறுவதில்லை. அவர் இஸ்லாத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை அவர் விளங்கிக் கொள்ளவில்லை என்ற உண்மைதான் இதற்கு காரணம். அவர் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பை (System of Islam) மட்டும் பாராட்டி ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் தன் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டார்.






அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வுடன் அவனது(சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு முஸ்லிமின் நிலைக்கு இது நேர் மாறானது. அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு ஒரு முஸ்லிம் இணங்கி நடப்பதன் நோக்கம் அவனுடைய(சுபு) உவப்பை பெறுவதற்கே தவிர அமைப்பின் உலக பயன்களை பெற்றுக் கொள்வதற்காக அல்ல. ஆகவே இயற்பொருட்களில் ஆன்மீக விஷயங்கள் இடம்பெற்றிருப்பதும் செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது மனிதனிடம் ஆன்மா இடம் பெற்றிருப்பதும் அவசியமாகும். அனைவருக்கும் தெளிவாக விளங்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆன்மீக விஷயம் (Spiritual Aspects) என்பதன் அர்த்தம் அனைத்துப் பொருட்களும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். அதாவது, படைப்பினங்கள் படைப்பாளனுடன் உள்ள உறவை உணர்வது என்பதுதான் ஆன்மா எனப்படும். ஆகவே ஆன்மா என்பது படைப்பாளனுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்வது, அதாவது அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்வது. இதுதான் ஆன்மா (ரூஹ்), ஆன்மீகம் (ரூஹான்யா), ஆன்மீக விஷயங்கள் (நாஹியத் ரூஹ்யா) ஆகியவற்றைப் பற்றிய மிகச்சரியான சிந்தனையாகும். மற்ற சிந்தனைகள் தவறானவை. மனிதன் வாழ்வு பிரபஞ்சம் ஆகியவற்றைப் பொருத்த தீர்க்கமான மற்றும் பிரகாசமான (Spiritual Aspects) கண்ணோட்டம் இதுதான். இந்த சரியான கண்ணோட்டம் சரியான விளைவுகளை நோக்கியும் சரியான சிந்தனையின் பாலும் இட்டுச் சென்றுள்ளது.







சில மதங்கள் (Religion) பிரபஞ்சத்தில் புலன் உணர்வுக்கு உட்பட்டது (Mahsoos) புலன் உணர்வுக்கு மறைவானது (Mughayyah) ஆகிய இரண்டு அம்சங்கள் இருப்பதாக வாதிடுகின்றன. ஆன்மீக உயர்வு மற்றும் உடல்சார்ந்த விளைவு ஆகிய இரண்டையும் கொண்டவனாக மனிதன் இருக்கிறான் என்றும், மனித வாழ்வு இயற்பொருள் அம்சத்தையும் (Meterialistic) ஆன்மீக அம்சத்தையும் உடையதாக இருக்கிறது என்றும் கூறுகின்றன. புலன் உணர்வுக்கு உட்பட்டவைகள் புலன் உணர்வுக்கு மறைவானவைகளோடு முரண்படக்கூடியவை என்றும், ஆன்மீக உயர்தன்மை உடல்சார்ந்த விளைவுகளோடு இருக்க முடியாது என்றும், இயற்பொருட்கள் ஆன்மாவிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த மதங்கள் கூறுகின்றன. அவை இரண்டின் தன்மையின் காரணமாக ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணிக் கொள்வதில் இம்மதங்கள் திருப்தியடைகின்றன. ஆகவே அவை இரண்டும் ஒன்று கலக்க முடியாதது என்றும், ஒன்றின் மிகுதி மற்றொன்டின் குறைவுக்கு வழிகோலும் என்றும் கூறுகின்றன. இதன் முடிவாக மறுமையை விழைபவர்கள் ஆன்மீக பரிமாணத்தை பெற்றிருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த கருத்தின் அடிப்படையில் கிருஸ்தவத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் உருவாகின. “சீஸருக்கு கொடுக்க வேண்டியதை சீஸருக்கு கொடு, தேவனுக்கு கொடுக்க வேண்டியதை தேவனுக்கு கொடு” என்பதாக கிருஸ்தவம் கூறுகிறது. இதன்படி ஆன்மீக அதிகார அமைப்பை கையில் வைத்துக் கொண்டிருந்த கிருஸ்தவ பாதிரிகளும், மதகுருமார்களும் ஆன்மீக விஷயங்களுக்கு முன்னுரிமை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வாழ்வியல் அதிகார அமைப்பை கையில் எடுத்துக் கொள்ள கடும் முயற்சி மேற்கொண்டார்கள். இதன் விளைவாக இவ்விரு சாரர்களுக்கும் இடையில் கடும் போராட்டம் உருவாகியது. இதன் உச்சகட்ட நிகழ்வாக கிருஸ்தவச் திருச்சபை ஆன்மீக அதிகாரத்தோடு மட்டும் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் வாழ்வியல் விவகாரங்களில் தலையீடு செய்வதை விட்டும் தடுக்கப்பட்டது. மதம் புரோகிதத்தைச் சார்ந்தது என்றபடியால் அது வாழ்வியலிலிருந்து பிரிக்கப்பட்டது.






வாழ்வியலிலிருந்து மார்க்கத்தை பிரித்து வைக்கும் இந்த கொள்கைதான் முதலாளித்துவ சித்தாந்தத்தின் அடிப்படை கோட்பாடாக இருக்கிறது. மேற்கத்திய நாகரீகத்திற்கும், அறிவார்ந்த தலைமைக்கும் இதுதான் அடித்தளமாக விளங்குகிறது. மேற்கத்திய காலனி ஆதிக்கவாதிகள் அழைப்பு விடுப்பதும் உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்வதும் இந்த கொள்கையைத்தான். அதன் கலாச்சாரத்தின் பிரதான தூணாக இந்த சிந்தனை விளங்குகிறது. இந்த கோட்பாட்டின் அடித்தளத்தில் நின்று கொண்டுதான் மேற்கத்தியர்கள் முஸ்லிம்கள் இஸ்லாத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை அசைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். கிருஸ்தவத்துடன் ஒப்புநோக்கி இஸ்லாத்தை அவர்கள் கணக்கிடுகிறார்கள். இவை இரண்டையும் மதங்கள் என்று எண்ணுகிறார்கள். எனவே வாழ்வியலிலிருந்து மார்க்கத்தை பிரிக்க வேண்டும் என்ற இந்த கருத்தை எவர் கொண்டிருக்கின்றாரோ அவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்கத்திய அறிவார்ந்த தலைமையினால் இயக்கப்படும் முகவர் (Agent)  ஆவார். அறிந்த நிலையிலோ அல்லது அறியாத நிலையிலோ மேற்கத்திய காலணி ஆதிக்கத்தின் முகவராகவே அவர் பணியாற்றுகின்றார்.






நமது புலனறிவு விளங்கிக் கொண்ட பொருட்களை இயற்பொருள்  (Matter)  என்றும், அவைகள் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டுள்ளன என்ற உண்மை அவைகளிடமுள்ள ஆன்மீக அம்சத்தை தீர்மானிக்கிறது என்றும் இஸ்லாம் கருதுகிறது. ஆன்மா என்பது அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்வதாகும். ஆகவே இயற்பொருளிலிருந்து அதன் ஆன்மீக அம்சம் எப்போதும் பிரியாதிருக்கின்றது. எனவே ஆன்மீக உயர்தன்மை என்ற ஒன்றோ அல்லது உடல்சார்ந்த விருப்பம் என்ற ஒன்றோ இங்கே இருப்பதில்லை. மாறாக, மனிதனுக்கு உடல்சார்ந்த தேவையும், உள்ளார்ந்த உணர்வுகளும் இருக்கின்றன. அவைகளை அவன் நிறைவு செய்ய வேண்டும். மனிதனிடம் இடம் பெற்றுள்ள உள்ளார்ந்த உணர்வுகளில், அடிபணியும் உள் உணர்வு (Reverence Instinct)  ஒன்றாகும். இதன் அர்த்தம் அவனுக்கு ஒழுங்குபடுத்தும் (Organiser)  ஒரு படைப்பாளன் தேவை என்பதாகும். இந்த உணர்வு அவனிடம் இயல்பாக இடம்பெற்றுள்ள உள்ளார்ந்த பலவீனத்தின் விளைவாகும். உள்ளார்ந்த உணர்வுகளை நிறைவு செய்து கொள்வதை இயற்பொருள் அம்சமாகவோ (Meterial Aspect)  அல்லது ஆன்மீக அம்சமாகவோ (Spiritual Aspect)  அழைக்க முடியாது. மாறாக, அதை நிறைவேற்றுதல் என்றே கருத வேண்டும். அல்லாஹ்(சுபு) அருளியுள்ள செயலாக்க அமைப்புக்கும் அவனோடு(சுபு) உள்ள உறவுக்கும் இணக்கமான முறையில் உடல் சார்ந்த தேவைகளையும் உள்ளார்ந்த உணர்வுகளையும் மனிதன் நிறைவு செய்து கொண்டால், இந்த நிறைவு செய்தல் ரூஹ்ஹினால் இயக்கப்படுகிறது என்று பொருள். அதே சமயத்தில் இந்த நிறைவு செய்தல் ஒரு செயலாக்க அமைப்பு இன்றியோ அல்லது அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்படாத ஒரு செயலாக்க அமைப்பின் அடிப்படையிலோ நிறைவு செய்யப்பட்டால் அது இயற்பொருள் (Meteialistic)  அடிப்படையில் நிறைவு செய்யப்படதாக இருக்கும். அது மனிதனின் துன்பத்திற்கு வழி வகுத்துவிடும். இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வு (procreation instinct) ஒரு செயலாக்க அமைப்பின்றியோ அல்லது அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்படாத ஒரு செயலாக்க அமைப்பின்படியோ நிறைவு செய்யப்பட்டால் அது மனிதனை துன்பத்திற்கு உள்ளாக்கிவிடும். இதற்கு மாறாக அல்லாஹ்(சுபு) அருளிய திருமணம் என்னும் செயலாக்க அமைப்பின்படி அதாவது இஸ்லாத்தின் அஹ்காம் ஷரிஆவின்படி நிறைவு செய்யப்பட்டால் அது மன அமைதியை விளைவிக்கின்ற திருமணமாக இருக்கும். அடிபணியும் உள்ளார்ந்த உணர்வு ஒரு செயலாக்க அமைப்பு இன்றியோ அல்லது மனிதர்களையும் சிலைகளையும் வணங்கி வழிபடுவது போன்ற அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்படாத செயலாக்க அமைப்பின்படியோ நிறைவு செய்யப்பட்டால் அது இணைவைத்தல் (ஷிர்க்) அல்லது நிராகரித்தலாகவே (குஃப்ர்) இருக்கும். இஸ்லாத்தின் அஹ்காம் ஷரிஆவின்படி அது நிறைவு செய்யப்பட்டால் அது இபாதத் ஆகும். ஆகவே மனிதனுக்கு அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வின் அடிப்படையில் ஒவ்வொரு பொருட்களிலும் ஆன்மீக அம்சத்தை அவசியம் உணர வேண்டும். மேலும் அனைத்து செயல்பாடுகளையும் அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக மேற்கொள்ள வேண்டும். வேறு வகையில் கூறினால் செயல்கள் யாவும் ஆன்மாவினால் இயக்கப்பட வேண்டும். ஆகவே செயல்பாடுகளில் இரண்டு பகுதி என்பது கிடையாது. உண்மையில் அது ஒன்றே ஒன்றுதான். அதுதான் செயல் (Action). ஒரு செயலை இயற்பொருள் அம்சத்தை மட்டும் உடையது என்றோ அல்லது ஆன்மாவினால் இயக்கப்பட்டது என்றோ விளக்குவது அந்த செயல்பாட்டைக் கொண்டு அல்ல, மாறாக இஸ்லாத்தின் விதிமுறைகளுக்கு (அஹ்காம் ஷரிஆ) ஏற்றபடி அது இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை பொறுத்ததுதான். உதாரணமாக ஒரு முஸ்லிம் எதிரியை போர்க்களத்தில் கொல்லும்போது அது ஜிஹாத் என்று கருதப்படுகிறது. அந்தச் செயலுக்கு நற்கூலி உண்டு. ஏனெனில் அந்த செயல் இஸ்லாத்தின் அஹ்காம் ஷரிஆவினால் இயக்கப்பட்டது. அதே மனிதர் முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத ஒரு அப்பாவி மனிதனைக் கொன்றால் அவரது செயல் ஒரு கொலையாக கருதப்படும். அதற்காக அவர் தண்டிக்கப்படுவார். ஏனெனில் அது அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு எதிரானது. இரண்டு செயல்களும் கொல்லுதல் என்ற ஒன்றுதான். மேலும் அவை மனிதனிடமிருந்தே வெளிப்படுகின்றன. எனினும் ஆன்மாவினால் இயக்கப்படும்போது கொல்லுதல் வணக்கமாகிவிடுகிறது (Worship - Ibadah).  அவ்வாறு நடைபெறாத போது அது கொலையாகி விடுகிறது. ஆகவே ஒரு முஸ்லிம் தன்னுடைய செயல்களை ஆன்மாவின்படி இயக்குவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளான். இயற்பொருளையும் ஆன்மாவையும் ஒன்று கலப்பது சாத்தியமானது மட்டும் அல்ல, மாறாக கடமையானதும்கூட. ஆன்மாவிலிருந்து இயற்பொருளை பிரிப்பதற்கு அனுமதியில்லை. வேறு வகையில் கூறுவதென்றால் மனிதனுக்கு அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வின் அடிப்படையில்; அவனுடைய(சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளின்படி செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் நிலையிலிருந்து எந்த செயலையும் பிரிப்பதற்கு அனுமதியில்லை. இதனடிப்படையில் இயற்பொருள் அம்சத்திலிருந்து ஆன்மீக அம்சத்தை பிரிப்பதை மறைமுகமாக குறிப்பிடும் அனைத்தையும் நீக்க வேண்டும். ஆகவே இஸ்லாத்தில் மதகுரு அல்லது மதப் புரோகிதர் என்பவர் கிடையாது. எந்தவிதமான புரோகித பணி செய்யும் ஆன்மீக அதிகார அமைப்பும் கிடையாது, மார்க்கத்திலிருந்து பிரிக்கப்பட்ட வாழ்வியல் விவகார அதிகார அமைப்பும் கிடையாது. மாறாக இஸ்லாம் என்பது ஒரு மார்க்கம். அதன் பிரிக்க முடியாத பகுதி இஸ்லாமிய அரசு ஆகும். தொழுகையைப் போன்ற அரசு என்பதும் அஹ்காம் ஷரிஆவின் ஒரு தொகுப்பு ஆகும். இஸ்லாத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும், இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழிமுறையாக அது இருக்கிறது. ஆகவே மார்க்கத்தை ஆன்மீக அச்சத்தோடு சுருக்கி, அதை அரசியலை விட்டும், ஆட்சியை விட்டும் பிரிக்கும் எந்த ஒன்றையும் கட்டாயம் அழித்துவிட வேண்டும். ஆகவே ஆன்மீக விவகாரங்களை மட்டும் பிரத்தியேகமாக கவனித்துக் கொள்ளும் அனைத்து அமைப்புகளையும் உடனே ஒழித்துவிட வேண்டும். இந்த வகையில் பள்ளிவாசல் திணைக்களங்கள் ஒழிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். ஷரிஆ நீதிமன்றங்களும் உரிமையியல் நீதிமன்றங்களும் ஒழிக்கப்பட்டு இஸ்லாத்தின் அடிப்படையில் நீதித்துறை ஒன்றாக மாற வேண்டும். ஏனெனில் இஸ்லாத்தின் அதிகார அமைப்பு ஒன்றுதான். இஸ்லாம் என்பது அகீதாவும் அதன் செயலாக்க அமைப்பும் (System-Nidam)  கொண்டது. அகீதா என்பது அல்லாஹ்(சுபு) மீதும், மலக்குகள் மீதும் வேதங்கள் மீதும், தூதர்கள் மீதும், நியாயத்தீர்ப்பு நாள் மீதும் நன்மை தீமை அல்லாஹ்(சுபு)விடமிருந்து வருகின்றன எனக்கூறும் அல்களாவல்கத்ர் மீதும் நம்பிக்கை கொள்வதாகும். பகுத்தறிவைக் கொண்டு அறிந்து கொள்ளும் விதத்தில் இஸ்லாம் அகீதாவை அறிவின் மீது கட்டமைத்து இருக்கிறது. இதில் அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை (Existence of God)  முஹம்மது(ஸல்) அவர்களின் தூதுத்துவம் மற்றும் இறைமறை குர்ஆன் ஆகியவை அடங்குகின்றன. நியாயத்தீர்ப்பு நாள், மலக்குகள், சுவனம், நரகம் ஆகிய புலன் அறிவுக்கு அப்பாலுள்ள அகீதாவின் விஷயங்கள் சங்கைமிக்க குர்ஆன் மற்றும் ஹதீஸ் முத்தவாத்திர் ஆகிய திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட ஆதார மூலங்களின் அடிப்படையில் நம்பப்படுகின்றன. இவை இரண்டும் அறிவார்ந்த ஆதாரத்தின் மீது நிறுவப்பட்டவைகள். இஸ்லாம், அறிவை (சட்ட ரீதியான) பொறுப்புக்கு அடிப்படையாக ஆக்கியிருக்கிறது.






இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு (System - Nidam)  அஹ்காம் ஷரிஆவாகும். அது மனிதர்களின் விவகாரங்களை ஒழுங்குபடுத்துகிறது. இஸ்லாமிய செயலாக்க அமைப்பு பொதுவான முறையிலும் பொதுவான அர்த்தங்களிலும் மனிதனின் அனைத்து விவகாரங்களையும் கையாண்டுள்ளது. இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும்போது, இந்த பொது அர்த்தங்களிலிருந்து அதன் விரிவான சட்டங்களை ஒருவர் பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே குர்ஆனும் சுன்னாவும் பொதுவான அர்த்தங்களைக் கொண்டது. மனிதன் என்ற அந்தஸ்த்தில் அது அவனது பிரச்சினைகளை கையாள்கிறது. இந்த பொது அர்த்தங்களிலிருந்து வெவ்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு இடங்களிலும் உருவாகும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை முஜ்தஹிதீன்கள் கொண்டு வருவார்கள்.





மனிதர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் இஸ்லாம் வேறுபாடு இல்லாத ஒரே அணுகுமுறையைக் கொண்டதாக இருக்கிறது. விளங்கிக் கொள்ளும்வரை பிரச்சினையை முழுமையாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்து, சரியாக அதை விளங்கிக் கொண்டு பிறகு அதனோடு தொடர்புடைய ஷரிஆ ஆதாரங்களை ஆய்வு செய்து இறுதியில் அந்த ஆதாரங்களின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை கொண்டு வருவதற்காக முஜ்தஹீதுகளை இஸ்லாம் வரவேற்கிறது. இவ்வாறுதான் ஒரு முஜ்தஹீத் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதற்காக ஷரிஆ ஆதாரங்களிலிருந்து குக்கும் ஷரிஆவை முடிவு செய்கிறார். வேறு எந்த வழிமுறைகளும், இஸ்லாத்திற்கு பயன்படாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் மனிதன் எதிர்கொள்கின்ற எந்த பிரச்சினையாக இருந்தாலும், அதை மனித வர்க்கத்தின் பிரச்சினையாகவே ஆய்வு செய்ய வேண்டும். பொருளாதாரம், சமூகம், அரசியல் அல்லது வேறு எந்த வகை பிரச்சினையாக இருந்தாலும் அதை தனிப்பட்ட துறைக்கு சார்புடையதாக ஆய்வு செய்யக்கூடாது. மாறாக, பிரச்சினைக்கு தொடர்புடைய அல்லாஹ்(சுபு)வின் குக்குமை அறிந்து கொள்ளும் பொருட்டு குக்கும் ஷரிஆ தேவைப்படும் மனித இனத்தின் ஒரு பிரச்சினையாகவே அதை ஆய்வு செய்ய வேண்டும்.







Monday, April 26, 2010

இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறை - (Daw'ah)

இஸ்லாமிய அழைப்புப்பணி பற்றி சிந்திக்கும்போது சில முக்கிய விடயங்களை தெளிவாக முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவற்றில் முக்கியமானதொரு விடயம்தான் இஸ்லாத்தை பின்பற்றுவதால் முஸ்லிம்கள் உலகில் பின்னடைவு எய்திடவில்லை. மாறாக, இஸ்லாத்தை பின்பற்றுவதை கைவிட்ட நாளிலிருந்துதான் அவர்களின் பிற்போக்கு நிலை துவங்கியது என்பதுபற்றிய விடயமாகும். அந்நியக் கலாச்சாரம் தங்கள் மண்ணில் நுழைவதற்கும், மேற்கத்திய சிந்தனை தங்கள் நெஞ்சங்களை ஆட்கொள்வதற்கும் முஸ்லிம்கள் அனுமதித்தார்கள். இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை கைவிட்டதாலும், அதனுடைய அழைப்புப் பணியை (Daw'ah) புறக்கணித்ததாலும், அதன் சட்டங்களை தவறாக செயல்படுத்தியதாலும் அவர்கள் வீழ்ச்சியுற்றார்கள். ஆகவே, இன்று முஸ்லிம்கள் வந்து அடைந்திருக்கும் அதளபாதாளத்திலிருந்து அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும் வேண்டுமெனில் முஸ்லிம்கள் முற்று முழுதாக இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு கட்டாயம் திரும்பிட வேண்டும். எனினும் இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்வதன் மூலமும், இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை உலகெங்கிலும் எடுத்துச் செல்வதன் மூலமும், ஒரு இஸ்லாமிய அரசை நிறுவினாலன்றி முழுமையான இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு முஸ்லிம்களால் திரும்பிவிட இயலாது. பின்னர் அந்த அரசு இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை அழைப்புப்பணி மூலம் உலகெங்கிலும் எடுத்துச் செல்லும்.ஏனெனில், இஸ்லாம் மட்டுமே உலகை சீர்திருத்தும் ஆற்றல் பெற்றது. மேலும் இஸ்லாத்தின் மூலமாக அல்லாமல் உண்மையான மறுமலர்ச்சியை கொண்டு வர இயலாது. அது முஸ்லிம்களுக்கு என்றாலும் அல்லது மற்றவர்களுக்கு என்றாலும் சரியே.







அறிவார்ந்த தலைமையாக உலகெங்கும் அழைப்புப்பணி எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதிலிருந்து செயலாக்க அமைப்பு (முறைமை) (System - நிதாம்) பிறக்கிறது. மேலும் அனைத்து சிந்தனைகளும் இந்த அறிவார்ந்த தலைமை மீதுதான் கட்டமைக்கப்படுகின்றன. மேலும் இத்தகைய சிந்தனையிலிருந்துதான் விதிவிலக்கு ஏதுமின்றி ஒருவரை ஆதிக்கம் செலுத்தும் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தின் அனைத்துக் கருத்துக்களும்(Concepts) பிறக்கின்றன.








கடந்த காலங்களில் அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட்ட அதே முறையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் உதாரணத்தோடு அவர்களின்(ஸல்) வழிமுறையிலிருந்து சற்றும் விலகிச் செல்லாமல் இன்றைய நாட்களிலும் அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும். கால மாற்றத்தின் வேறுபாட்டிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் இவை சாதனங்களிலும், தோற்றங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களே ஒழிய அடிப்படையில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை. யுகங்கள் மாறிய போதிலும், மக்களும் இடங்களும் மாறியப் போதிலும் வாழ்க்கையின் சாரமும் (Essence of life) உண்மை நிலையும் மாறிவிடவில்லை. அவை மாறவும் இயலாது.







ஆகவே அழைப்புப்பணி மேற்கொள்வதற்கு வெளிப்படையான அணுகுமுறையும், மன உறுதியும் ஆற்றலும் சிந்தனையும் தேவைப்படுகின்றன. மேலும், இஸ்லாத்தின் சிந்தனைக்கும் அதன் வழிமுறைக்கும் (Fikrah & Tareeqah - Thought and Method)  முரண்பாடாக உள்ள அனைத்தையும் தீவிரமாக எதிர்க்கக்கூடிய மனோதிடமும் வேட்கையும் அழைப்பின்போது தேவைப்படுகின்றன. அழைப்புப்பணியைச்சூழவுள்ள சூழலும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அழைப்பாளர்களுக்கு பாதகமாகவோ, அல்லது சாதகமாகவோ இருந்த போதிலும் சமூகத்தில் ஊடுருவியிருக்கின்ற தவறான அடிப்படைகளை வெட்ட வெளிச்சமாக்குவதும் அவற்றை எதிர்ப்பதும் அழைப்பாளர்களுக்கும் அதன் இயக்கத்திற்கும் மிக முக்கிய கடமையாகிறது.







இங்கே மக்களோடு ஒத்துப் போவதாக இருந்தாலும், அல்லது ஒத்துப்போகவில்லையென்றாலும், அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தாலும் மக்களின் மரபுகளுக்கு இணக்கமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இறுதியான இறையாண்மை (Sovereignty - Siyadah) இஸ்லாமிய சித்தாந்தத்திற்கே மட்டுமே உரியது என்பதை நிலைநாட்டும் விதமாக அழைப்புப்பணி மேற்கொள்வது அவசியமாகிறது.





அழைப்புப்பணி செய்பவர்கள் மக்களுக்கு முகஸ்துதி செய்ய மாட்டார்கள். அதிகாரமுடையவர்களுக்கு அடிபணிய மாட்டார்கள். மக்களின் மரபுகளையும், பாரம்பரியத்தையும் லட்சியம் செய்ய மாட்டார்கள். மக்கள் தங்களை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது ஏற்றுக்கொள்ளவில்லையா என்பதில் கவனம் செலுத்த மாட்டார்கள். மாறாக, அவர்கள் சித்தாந்தத்தை மட்டும் பின்பற்றுகிறவர்களாகவும், அதைத் தவிர வேறு ஒன்றையும் பொருட்டாக எண்ணாதவர்களாகவும், அதனை மட்டுமே முழுமையாக எடுத்துரைப்பவர்களாகவும் இருப்பார்கள். மேலும் ஏனைய சித்தாந்தங்களை பின்பற்றுகிறவர்களிடம் அதனை அவர்கள் பின்பற்றிவருமாறு கூறுவதற்கு எங்கும் அனுமதியில்லை. இதற்கு மாறாக, நிர்பந்தம் ஏதுமில்லாமல் இந்த சித்தாந்தத்தை (இஸ்லாம்) தழுவுவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஏனெனில் அழைப்புப் பணிக்கு தேவைப்படுவது என்னவென்றால், இஸ்லாத்திற்கு இணையாக எந்த சித்தாந்தமும் இருக்க முடியாது என்றும், இஸ்லாத்திற்கு மட்டும்தான் இறையாண்மை (Sovereignty - Siyadah)  உரியது என்றும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதும் அதனை எடுத்தியம்புவதும்தான்.






அவன்தான் தனது தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் ஏனைய தீன்களை(வாழ்வொழுங்குகளை) மிகைக்கும் பொருட்டு அனுப்பி வைத்தான். இதனை இணை வைப்பவர்கள் வெறுத்த போதிலும் சரியே. (அத்தவ்பா : 33)






இறைதூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மகத்தான செய்தியுடன் இந்த உலகத்திற்கு வந்தார்கள். முழு உலகத்திற்கும் வெளிப்படையாக அறைகூவல் விடுத்தார்கள். அவர்கள்(ஸல்) தனது சத்தியத்தை உறுதியுடன் விசுவாசித்தார்கள். மக்களை சத்தியத்தின் பால் அழைத்தார்கள். மேலும், கருப்பர்களையும், வெள்ளையர்களையும், ஆட்சியாளர்களையும், சாமானியர்களையும் அவர்களின் பாரம்பரியம், மரபு, மதம், கோட்பாடு ஆகியவற்றின் வேறுபாடு எதையும் பாராமல் அனைவரையும் இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். இஸ்லாத்தின் மகத்தான செய்தியை விடுத்து வேறு எது ஒன்றின்பாலும் அவர்கள் (ஸல்) கவனம் செலுத்தவில்லை. குறைஷியர்களின் பொய்யான தெய்வங்களை கடுமையாக சாடுவதின் மூலம் தங்கள் அழைப்புப்பணியை ஆரம்பித்தார்கள். அவர்கள்(ஸல்) தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தன்னந்தனியாக நின்ற போதிலும் குறைஷியர்களின் அடிப்படை கோட்பாட்டினை கடுமையாக எதிர்த்து அதை சாடினார்கள். அவர்களுக்கு (ஸல்) உதவி செய்பவர்கள் யாரும் இல்லை. அவர்கள்(ஸல்) அழைப்பு விடுக்கும் இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத தீவிரமான நம்பிக்கை ஒன்றைத் தவிர எந்தவிதமான ஆயுதமோ உதவியோ அவர்களிடத்தில்(ஸல்) இல்லை. அரபு மக்களின் பாரம்பரியம், மரபு, மதம் கோட்பாடு ஆகியவற்றை அவர்கள்(ஸல்) துளியளவு கூட லட்சியம் செய்யவில்லை. இந்த வகையில் அவர்கள்(ஸல்) எந்த விதமான மரியாதையையோ அல்லது பணிவையோ அவர்களிடம் காண்பிக்கவில்லை.







இதுபோலவே, அழைப்புப்பணி செய்பவர்கள் அனைத்தையும் எதிர்த்து ஆக வேண்டும். அவர்கள் எதிர்ப்பவற்றில் மக்களின் பாரம்பரியம், மரபு, தவறான சிந்தனை மற்றும் தவறான கருத்துக்கள் ஆகியவைகள் அடங்கும். வெகுஜனக் கருத்து (Public Opinion)  தவறாக இருக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக கடும் போராட்டம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதை செய்ய வேண்டும். அவற்றை பின்பற்றுகிறவர்களுடைய வெறித்தனங்களுக்கு ஆளாக நேரிடினும், உருக்குலைந்த கொள்கைகளில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களின் கடும் பகையை எதிர்கொள்ள நேரிடினும், அவர்களின் மதத்தையும், அடிப்படை கோட்பாட்டினையும் எதிர்த்தெ ஆக வேண்டும்.






இலேசான சலுகை கூட காட்டாமல், இஸ்லாமிய நெறிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கரிசனம் அழைப்புப்பணி மேற்கொள்கிறவர்களுக்கு அவசியமாக இருக்க வேண்டும். எந்தவிதமான சமரசத்தையோ, சலுகையையோ ஏற்றுக் கொள்ளக்கூடாது. கவனக்குறைவையும், காரியங்களை ஒத்திப்போடும் பழக்கத்தையும் அறவே விட்டொழிக்க வேண்டும். இதற்கு மாறாக பிரச்சினைகளை, முழுமையாக நிர்வாகம் செய்து, உறுதியான முறையில் அவறிற்கான உடனடித் தீர்வு காண வேண்டும். சத்தியத்திற்கு இடையூறான எந்த பரிந்துரையையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. தாக்கீஃப் கோந்திரத்தார், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு நிபந்தனையாக, தமது வழிபபாட்டுச்சிலையான அல் லாத்தை (Al laat)  உடைத்தெறியாது, மூன்று வருடங்கள் தம்முடன் வைத்துக் கொள்வதற்கும், தொழுகையிலிருந்து விலகி இருப்பதற்கும் அனுமதிகோரி அனுப்பி வைத்த தூதுக்குழுவினரின் வேண்டுகோளை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு வருடங்களுக்கு அல்லாத்தை விட்டு வைக்க வேண்டும். அல்லது ஒரு மாதத்திற்கேனும் அதை விட்டு வைக்க வேண்டும் என அவர்கள் கேட்டதைக்கூட இறைதூதர்(ஸல்) மறுத்துவிட்டார்கள். இந்த வேண்டுகோளை அவர்கள் உறுதியாகவும், இறுதியாகவும் எந்தவித தயக்கமோ அல்லது இரக்கமோ காட்டாமல் மறுத்து விட்டார்கள். இது ஏனெனில் ஒன்று மனிதன் விசுவாசம் கொள்ள வேண்டும் அல்லது நிராகரித்து விட வேண்டும். அதன் விளைவாக ஒன்று சுவனம் செல்ல வேண்டும் அல்லது நரகம் செல்ல வேண்டும் என்பதுதான். எனினும் தங்கள் கைகளால் அந்த உருவச்சிலை உடைபட வேண்டாம் என்ற அவர்களின் கோரிக்கையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதன்படி அபூ சுஃப்யானையும், அல்மூஹீரா இப்னு ஷீஆபாவையும் அதனை உடைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். முழு அகீதாவிற்கும், அதனை நடைமுறைப்படுத்த தேவையானவற்றிற்கும் குறுக்கே நிற்கும் எந்த ஒன்றையும் நிச்சயமாக அவர்கள்(ஸல்) ஏற்றுக் கொள்ளவில்லை. நடைமுறைப்படுத்துவதில் இடம்பெறும் சாதனத்தையும் (Means)  தோற்றத்தையும், அமைப்புகளையும் (Forms)  பொறுத்தவரை அவைகளுக்கு இஸ்லாமிய அகீதாவோடு எந்தவித தொடர்பும் இல்லை என்ற காரணத்தினால் அவற்றை அவர்கள் (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் தருணத்தில் இஸ்லாமிய சிந்தனையிலும் அதன் வழிமுறையிலும் (குமைசயா ரூ வுயசநநஙயா) எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் சிந்தனை மற்றும் அதன் செயலாக்க அமைப்பு (Fikrah & Tareeqah)  ஆகியவற்றை முழுமையாக பாதுகாக்கும் விதத்தில் செயல்பட வேண்டும். அதற்கு தேவைப்படும் எந்த சாதனத்தையும் (Means) பயன்படுத்துவதில் கேடு ஒன்றும் கிடையாது.






இஸ்லாமிய அழைப்புப்பணி மேற்கொள்ளப்படும்போது, ஒரு குறிப்பிட்ட இலக்கோடு ஒவ்வொரு செயலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பணியாளர்கள் எப்பொழுதும் இந்த நோக்கத்தைக் குறித்து விழிப்புணர்வோடு இருந்து அதை நிறைவேற்ற வேண்டும். இதில் அவர் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டு, அதை நிறைவேற்றுவதற்கு அயராது பாடுபட வேண்டும். ஆகவே, பணியாளர் செயலாக்கம் இல்லாத சிந்தனையில் நிறைவு கொள்ள மாட்டார். அவ்வாறெனில் அதை உறக்க நிலை தத்துவம் (Hyprotic Philosophy)  என்றோ அல்லது அலங்கார தத்துவம் (Fanciful Philosophy)  என்றோதான் கருதுவார். அதுபோலவே குறிக்கோள் இல்லாத சிந்தனையிலும் செயலிலும் அவர் நிறைவு அடைய மாட்டார். இறுதியில் அக்கறை இன்மையிலும், அவநம்பிக்கையிலும் முடிவுறும் சுழற்சி இயக்கமாகவே (Spiral Motion)  அதை கருதுவார். இதற்கு மாறாக, அழைப்புப் பணியாளர் சிந்தனையுடன் செயலை இணைப்பதை வலியுறுத்த வேண்டும். இவ்விரண்டையும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்திற்காக இணைத்து செயல்படுத்த வேண்டும். அது நடைமுறைக்கு ஏற்றாற்போலவும் குறிக்கோளை நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.








மக்கமா நகரத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். அங்குள்ள சமூகம் இஸ்லாத்தை செயலாக்க அமைப்பாக (System) ஏற்றுக் கொள்ளாது என்பதை உணர்ந்தபொழுது மதினாவின் சமூகத்தை தயார்படுத்தினார்கள். மதினாவில் அவர்கள்(ஸல்) இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். அதன் மூலம் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தினார்கள். இஸ்லாத்தின் செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு பின்னர் அதை எடுத்துச் செல்லும் விதமாக இஸ்லாமிய உம்மாவை தயார்படுத்தினார்கள். இறைத்தூதர்(ஸல்) காட்டித்தந்த அதே வழியில் இந்த பணியினை முஸ்லிம்கள் தொடர்ந்தார்கள். ஆகவே கிலாஃபா அரசு இல்லாத இந்த சூழலில், இஸ்லாமிய அழைப்புப் பணியினை மேற்கொள்ளும்போது இஸ்லாத்தை நோக்கி மக்களை அழைப்பது, இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தி, அதன் செய்தியை உலகெங்கிலும் எடுத்துச் செல்லும் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கு செயலாற்றுவதன் மூலம் மக்களை இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்பச் செய்வது ஆகிய பணிகள் அதில் அடங்கியிருக்க வேண்டும். இதன்மூலம், இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்காக உம்மாவில் மேற்கொள்ளப்படும் அழைப்புப்பணி உலகம் முழுவதையும் இஸ்லாத்தின்பால் அழைக்கும் இஸ்லாமிய அரசின் அழைப்புப்பணியாக மாற்றம் பெறும். மேலும் இஸ்லாமிய உலகில் மட்டும் மேற்கொள்ளப்படும் அழைப்புப்பணி (Local Da’wah)  அகிலம் அனைத்திற்கும் உரிய பொதுவான அழைப்புப்பணியாக மாற்றம் பெறும்.







தற்சமயம் நிலைபெற்றுள்ள அடிப்படை கோட்பாடுகளை (Doctrines- Aqeedah)  சரிபடுத்துவது, அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள தொடர்பை பலப்படுத்துவது ஆகியவற்றை தெளிவாக உள்ளடக்கியதாக இஸ்லாமிய அழைப்புப்பணி இருக்க வேண்டும். மேலும் எல்லா துறைகளிலும் அழைப்புப்பணி பிரகாசமாக மேற்கொள்ளப்பட்டு மக்களின் அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வுகள் வழங்கப்படும் விதமாக இருக்க வேண்டும். எனவேதான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் எதிர்நோக்கிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற ஒவ்வொரு வினாவுக்கும் முழுமையாக விடையளிக்கும்படியாக திருமறை வசனங்களை இறக்கிக்கொண்டேயிருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கீழ்கண்ட இறைவசனங்களை மக்காவில் ஓதுபவர்களாக இருந்தார்கள்.


அபூலஹபின் இருகரங்களும் நாசமடைவதாக. (அல் மஸ்த்:1)



நிச்சயமாக இது கண்ணியமிக்க ஒரு தூதரின் வார்த்தையாகும். இது கவிஞனின் வார்த்தையல்ல. நீங்கள் சொற்பமாகவே விசுவாசம் கொள்கிறீர்கள். (அல் ஹாக்க:40,41)



(அளவிலும், நிறுவையிலும்) மோசடி செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து வாங்கும் போது முழு அளவை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் மனிதர்களுக்கு கொடுக்கும் போது அளவையிலும், நிறுவையிலும் (குறைபதன்மூலம்) நஷ்டம் ஏற்படுத்துகிறார்கள். (அல் முதாஃப்பிஃபின்:1,3)




விசுவாசம் கொண்டு நற்கருமம் செய்பவர்களுக்கும் சுவனம் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதுதான் மகத்தான் வெற்றியாகும். (அல் புருஜ்:11)



மேலும் மதினாவில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.



தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத்தை கொடுத்து வாருங்கள். (அல்பகரா:43)



கனத்தவர்களாகவோ, இலேசானவர்களாகவோ புறப்படுங்கள். உங்கள் செல்வங்களைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் போராடுங்கள். (அத்தவ்பா:41)



மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதினார்கள்.



விசுவாசம் கொண்டவர்களே! உங்களுக்கிடையில் குறிப்பிட்ட தவணைக்கு கடன் கொடுக்கும் சமயத்தில் அதை எழுத்து மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள். (அல் பகரா:282)



உங்கள் மத்தியிலுள்ள செல்வந்தர்களுக்கு இடையில் மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்காதிருக்கும் பொருட்டு...(அல்ஹஷர்:7)



நரகத்தின் தோழமையைக் கொண்டவர்களும் சுவனத்தின் தோழமையை கொண்டவர்களும் சமமானவர்கள் அல்ல. சுவனத்தின் தோழமையை பெற்றுக் கொண்டவர்களெ வெற்றியாளர்கள். (அல் ஹஷ்ர்:20)



இவ்வாறு மனிதனை மனிதன் என்ற அந்தஸ்த்தில் வைத்து, அவனைப் பற்றி முழுமையாக இஸ்லாம் உரையாடுகிறது. அதன் மூலம் அவனிடம் முழுமையான மற்றும் தீவிரமான மாற்றத்தை அது கொண்டு வருகிறது. இதனடிப்படையில் இஸ்லாமிய அழைப்புப்பணியின் வெற்றி என்பது, மக்கள் தங்கள் அன்றாட வாழ்வியல் விவகாரங்களை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பை (System of Islam - Nidam al Islam)  அவர்களிடம் எடுத்துச் செல்வதிலேயே தங்கியிருக்கிறது. எனவே இந்த அழைப்புப்பணியை வாழ்வின் இலக்காகக்கொண்டு அழைப்புப்பணியாளர்கள் தமது பயணத்தை மிக மிக முனைப்புடன் தொடரவேண்டும்.






குறையற்ற வகையிலும், நிறைவாகவும், முழுமையாகவும் பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலை தங்களிடத்தில் ஏற்படுத்திக் கொள்ளாத வரையில் அழைப்புப் பணியாளர்கள் தீவிரமான முறையில் பணியாற்றி தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பது சாத்தியம் இல்லாத விஷயமாகும். நிரந்தரமாக சத்தியத்தை தேடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். எந்த அந்நிய சிந்தனையிலிருந்தும் தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும் விதமாக தொடர்ந்து சத்தியத்தை தேடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அவர்களிடத்தில் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ள அந்நிய சிந்தனைகளிலிருந்தும் அவற்றிற்கு நெருக்கமாக உள்ள சிந்தனைகளிலிருந்தும் அவர்கள் தங்களை தூரமாக்கிக் கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கை தாங்கள் சுமந்து செல்லும் சிந்தனையை பரிசுத்தமாகவும் தெளிவாகவும் வைத்துக் கொள்ள உதவிடும். சிந்தனையில் பரிசுத்தம் (Purity in Thought),  அதில் தெளிவு (Clarity in Thought)  ஆகிய இரண்டு மட்டும்தான் இஸ்லாத்தின் வெற்றிக்கும், தொடர்ந்து அந்த வெற்றியை நிலைபடுத்துவதற்கும் உத்திரவாதம் அளிக்கக்கூடியதாகும்.






அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்த கட்டளையாக எண்ணி இந்த கடமையை அழைப்புப் பணியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ்(சுபு)வின் உவப்பை மாத்திரம் எதிர்பார்த்தவர்களாக ஆனந்தத்துடனும், மிகுந்த உற்சாகத்துடனும் இந்த பணியினை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். மக்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டையோ அல்லது வேறு எந்த உலக இலாபங்களையோ நிச்சயமாக அவர்கள் தேடக்கூடாது. அல்லாஹ்(சுபு)வின் உவப்பை பெறுவதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது.

Tuesday, April 20, 2010

இஸ்லாமிய நாகரீகம் - Islamic Civilisation - Al Hadarah Al Islamiyyah



நாகரீகம் (Hadarah)  என்பதற்கும் பொருளியல் முன்னேற்றம் ; (Madaniyyah)  என்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. நாகரீகம் என்பது வாழ்க்கையைப் பற்றிய அனைத்து சிந்தனைகளையும் உள்ளடக்கியதாகும். ஆனால் பொருளியல் முன்னேற்றம் என்பது வாழ்வியல் நடவடிக்கைகளில் பயன்படுத்தும் புலன் உணர்வுக்கு உட்பட்ட (Sensed Objects)  பொருட்களின் தொகுப்பு ஆகும். நாகரீகம், வாழ்க்கையைப் பற்றிய குறிப்பிட்ட கண்ணோட்டத்தின் அடிப்படையில் உருவான சிந்தனையாக இருப்பதுடன், பொருளியல் முன்னேற்றம் குறிப்பிட்ட ஒன்றாகவோ அல்லது பொதுவானதாகவோ இருக்கலாம். ஆகவே, நாகரீகத்தின் படைப்பான உருவச்சிலைகள் போன்றன குறிப்பானவைகளாக இருக்கும் அதே வேளையில் அறிவியலாலும், (Science)  அதன் முன்னேற்றத்தாலும், தொழிற்துறைகளாலும், அதன் பரிணாம வளர்ச்சியினாலும் உற்பத்தியாகும் பொருளியல் படைப்புகள் பொதுவானவைகள். மேலும் அவை குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ அல்லது நாட்டுக்கோ மட்டும் சொந்தமானவைகள் அல்ல. மாறாக அவை தொழிற்துறைகள், விஞ்ஞானம் ஆகியவற்றைப் போன்று பொதுவானவைகளாகும் (universal).







நாகரீகத்திற்கும், பொருளியல் முன்னேற்றத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை நாம் எப்பொழுதும் கவனிக்க வேண்டும். மேலும் நாகரீகத்தின் விளைவாக ஏற்படும் பொருளியல் முன்னேற்ற அம்சங்களுக்கும், அறிவியல் மற்றும் தொழிற்சாலைகளால் உருவாகும் பொருளியல் முன்னேற்ற அம்சங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டினையும் நிச்சயமாக நாம் கவனிக்க வேண்டும். பொருளியல் முன்னேற்றத்தினால் உருவான ஒரு பொருளை நாம் ஆராயும்போது அதற்கும் நாகரீகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை அறிந்திட இது அவசியமாகிறது. அறிவியல் மூலமாகவும், தொழிற்துறையாலும் விளைந்த மேற்கத்திய பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக எவ்வித தடையுமில்லை. எனினும் எக்காரணத்தைக் கொண்டும் மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாக உருவான பொருட்களை நாம் ஏற்றுக்கொள்ளவே கூடாது. ஏனெனில் மேற்கத்திய நாகரீகத்தை ஏற்றுக் கொள்வதற்கு நமக்கு அனுமதியில்லை. இதற்கு காரணம் அந்த நாகரீகம் நிறுவப்பட்டிருக்கும் அடித்தளத்தின் முதற்படியோடும், வாழ்க்கையைப் பற்றிய அதன் கண்ணோட்டத்தோடும், மனிதனின் மகிழ்ச்சி தொடர்பாக அதன் அர்த்தத்தோடும் இஸ்லாம் முற்றாக முரண்பட்டு நிற்கிறது.








மார்க்கத்தை வாழ்வியலிலிருந்து பிரிக்கும் கொள்கையிலிருந்து மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வாழ்வியல் விவகாரங்களில் மார்க்கம் ஆதிக்கம் செலுத்துவதை அது மறுக்கிறது. எனவே அரசியலிலிருந்து மார்க்கத்தை அது பிரித்து வைத்திருக்கிறது. வாழ்க்கையிலிருந்து மார்க்கத்தை பிரித்து, வாழ்வியல் விவகாரங்களில் அதன் பங்களிப்பை மறுப்பவர்களுக்கு இந்த பிரிவினை இயல்பான ஒன்றாக இருக்கக்கூடும். இந்த அடித்தளத்தில்தான் அதன் வாழ்வியலும், வாழ்வியல் செயலாக்க அமைப்புகளும் (System of life) நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாகரீகம், மனிதனின் முழு வாழ்க்கையையும், உலக பயன்களை மட்டும் தேடி அடைந்து கொள்ளும் செயல்பாட்டுத் தளமாக கருதுகிறது. எனவே வாழ்க்கையின் செயல்பாடுகளுக்கு அதன் அளவுகோள் ஆதாயமேயாகும். ஆகையால் ஆதாயத்தின் அடிப்படையிலேயே அதன் வாழ்வியல் செயலாக்க அமைப்புகளும் (System of life - Nidam) அதன் நாகரீகமும் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன. அதன் செயலாக்க அமைப்புகளிலும் நாகரீகத்திலும் உலக பயன்கள்தான் முக்கியமான சிந்தனையாகவும் (Thoughts)  வெளிப்படையான அம்சமாகவும் திகழ்கின்றன. இது ஏனெனில் வாழ்க்கையை உலக பயன்கள் அடிப்படையில்தான் அது விளக்குகிறது. அவர்களுடைய பார்வையில் மகிழ்ச்சி என்பது அதிகபட்சமான புலன் இன்பத்தை மனிதனுக்கு கொடுக்கக்கூடியதாகவும், அதனை அடையும் சாதனங்களை பெற்றுக் கொள்வதாகவும், இருக்கிறது. இதனடிப்படையில் உலக பயன்களை அறுவடை செய்ய வேண்டும் என்ற ஆசையின் மீது மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உலக பயன்களைத் தவிர வேறு எந்த ஒன்றுக்கும் அங்கீகாரமோ அல்லது பரிசீலனையோ கொடுப்பதற்கு முகாந்திரமே இல்லாத விதத்தில் அதன் வாழ்வியல் செயலாக்க அமைப்புகளின் அளவுகோள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே ஆன்மீக விவகாரம் தனிமனித அளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. சமூக கட்டமைப்பில் அதற்கு எந்த தலையீடும் கிடையாது. கிருஸ்தவ தேவ ஆலயத்திற்குள்ளும் அதன் மதகுருமார்களின் கைகளுக்குள்ளும் ஆன்மீக விவகாரங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இதன் முடிவாக மேற்கத்திய நாகரீகத்தின் எந்தவிதமான ஒழுக்க மாண்புகளோ அல்லது ஆன்மீக மற்றும் மனித பண்புகளோ கிடையாது. மாறாக பொருளியல்வாத அடிப்படை மட்டுமே இருக்கிறது. இதன் காரணமாக மனிதநேய நடவடிக்கைகள் அரசிடமிருந்து பிரிக்கப்பட்டு செஞ்சிலுவை சங்கம், மிஷனரிகள் போன்ற சமூக அமைப்புகளிடத்தில் தஞ்சம் புகுந்துவிட்டன. பொருளியல்வாத அடிப்படையிலுள்ள உலக பயன்கள் நீங்களாக மற்ற அனைத்து மாண்புகளும் வாழ்க்கையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. இவ்வாறான வாழ்வியல் சிந்தனைகளைக் கொண்டதாகவே மேற்கத்திய நாகரீகம் இருக்கிறது.







இஸ்லாமிய நாகரீகத்தைப் பொருத்தவரை அது மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டுள்ள அடிப்படைக்கு முற்றிலும் முரண்பட்ட அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் வாழ்வியல் கண்ணோட்டமும், மகிழ்ச்சி பற்றி அது கொண்டிருக்கும் அர்த்தமும் மேற்கத்திய நாகரீகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் அவன்(சுபு) பிரபஞ்சம், வாழ்வு, மனிதன் ஆகியவற்றிற்கு ஒரு செயலாக்க அமைப்பை ((Nidam- System)  அமைத்திருக்கின்றான் என்ற நம்பிக்கை மீதும் இஸ்லாமிய நாகரீகம் நிறுவப்பட்டுள்ளது. அவன்(சுபு) மனித குலத்திற்கு இஸ்லாம் என்ற ஒரே மார்க்கத்துடன், முஹம்மது(ஸல்) அவர்களை அனுப்பி இருக்கிறான். இதற்கு பொருள் என்னவென்றால், அல்லாஹ்(சுபு) மீதும் அவனுடைய (சுபு) மலக்குகள் மீதும், அவனுடைய(சுபு)வேதத்தின் மீதும் அவனுடைய(சுபு) தூதர்கள் மீதும், மறுமைநாள் மற்றும் அல்களா வல்கத்ர் ஆகியவற்றின் மீதும் உள்ள நம்பிக்கையை உள்ளடக்கிய இஸ்லாமிய அகீதாவின் மீதுதான் இஸ்லாமிய நாகரீகம் நிறுவப்பட்டுள்ளது என்பதாகும். ஆகவே, அகீதாதான் நாகரீகத்தின் அடித்தளமாக இருப்பதால் ஆன்மீக அடிப்படை மீது அதன் நாகரீகம் அமைக்கப்பட்டுள்ளது.







இஸ்லாமிய நாகரீகத்தில் வாழ்க்கை முறை என்பது இஸ்லாமிய அகீதாவிலிருந்து பிறக்கும் இஸ்லாமிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அகீதாவின் மீதுதான் வாழ்க்கை மற்றும் அதன் செயல்பாடு ஆகிய இரண்டும் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன. ஆன்மாவையும் (Spirit)  இயற்பொருட்களையும் (Matter)  ஒன்று கலக்கக்கூடியதாக இஸ்லாமிய தத்துவம் இருக்கிறது. அதாவது அஹ்காம் ஷரிஆவினால் மனிதனின் செயல்பாடுகள் வழிநடத்தப்படும் இந்த வழிமுறைதான் வாழ்க்கையின் அடிப்படையாக விளங்குகிறது. அதே வேளையில் மனிதனின் செயல்பாடுகள் பொருளியல் அடிப்படையில் இருக்கும் நிலையில் அவன் செயல்பாடுகளை ஹராம் ஹலால் அடிப்படையில் மேற்கொள்ளும்போது அல்லாஹ்(சுபு)வுடன் அவனுக்கு இருக்கும் தொடர்பை அவன் கவனத்தில் கொள்வதுதான் ஆன்மா (Spirit - RUH) எனப்படுகிறது. இதன் மூலம்; ஆன்மாவையும் இயற்பொருட்களையும் ஒன்று கலக்கும் செயல் ஏற்படுகிறது. இதன்படி, அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகள் முஸ்லிம்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறன. அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக தன் செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு முஸ்லிமுடைய இறுதி லட்சியம் அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்துவதே அல்லாமல் உலக பயன்களாக இருக்க முடியாது. எனினும், செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது உடனடியாக தேடப்படுவது பொருளியல் பயனாக இருக்கலாம். அது செயல்களுக்கு ஏற்ப மாறுபடும். வர்த்தகத்திலோ அல்லது வியாபாரத்திலோ ஈடுபட்டிருக்கும் ஒருவரின் எண்ணம் இலாபம் ஈட்ட வேண்டும் என்ற பொருளியல் பயனாக இருக்கலாம். எனினும் அவருடைய வியாபாரம் பொருளியல் பயன் (Meterialistic)  சார்ந்த செயல்பாடாக இருந்தாலும்கூட அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்திடும் பொருட்டு அவனுடைய(சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகள் மூலமாக அவனுடன்(சுபு) அவருக்குள்ள தொடர்பை உணர்ந்து கொள்ளும் விதமாக அவர் அதில் இயக்கப்படுகிறார். அதே வேளையில் அந்த செயல்பாட்டை மேற்கொள்வதன் மூலம் அவர் அடைந்து கொள்ள எண்ணிய இலாபம் பொருளியல் பயனாக இருக்கிறது.







தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்ற ஆன்மீகம் சார்ந்த பயனாகவும் அது இருக்கலாம். உண்மையை கடைபிடித்து நேர்மையாக இருத்தல், நன்றி உணர்வை வெளிப்படுத்துதல் போன்ற ஒழுக்க மாண்புகள் சார்ந்த பயனாகவும் இருக்கலாம். நீரில் மூழ்க இருக்கும் ஒருவரை காப்பாற்றுதல் அல்லது ஏழைகளுக்கு உதவுதல் போன்ற மனித நேயம் சார்ந்த பயனாகவும் இருக்கலாம். மனிதன் தன் செயல்பாட்டை மேற்கொள்ளும்போது இந்த பயன்களை கவனத்தில் கொண்டு அவைகளை அடைய எண்ணுகிறான். எனினும், மனிதனின் செயல்பாடுகளுக்கு பின்னணியிலிருந்து அவனை இயக்கும் ஆற்றல் இந்த பயன்களாகவோ, அவன் நோக்கமாக கொண்ட இறுதி இலட்சியமாகவோ அவை இருப்பதில்லை. அவை செயல்பாட்டின் பலன்களாக இருப்பதுடன் அவை செயல்பாட்டின் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகின்றன.







மகிழ்ச்சி என்பது அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்துவதேயன்றி மனிதன் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் இல்லை. ஒருவன் தன்னுடைய வாழ்வை பாதுகாத்துக் கொள்வதற்காக உடல்சார்ந்த தேவைகளையும் (Organic Needs)  உள்ளார்ந்த உணர்வுகளின் விருப்பங்களையும் (Instinctual Desise)  நிறைவு செய்து கொள்வது அவசியமான விதிமுறையாக இருக்கிறது. ஆனால், இவைகளை நிறைவு செய்து கொள்வது மட்டும் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்காது. இங்கு தொகுத்துக் கூற விரும்பும் சுருக்கமான கருத்து யாதெனில்: வாழ்வியல் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் இதுதான். இந்த கண்ணோட்டம்தான் இஸ்லாமிய நாகரீகத்தின் அடிப்படை. ஒவ்வொரு அம்சத்திலும் மேற்கத்திய நாகரீகம் இஸ்லாமிய நாகரீகத்திலிருந்து முரண்படுகிறது என்பது தெளிவாக விஷயம். இஸ்லாமிய நாகரீகத்தின் விளைவாக உருவாகும் பொருளியல் முன்னேற்றத்தின் அடிப்படையிலுள்ள குறிப்பிட்ட பொருட்கள் இஸ்லாத்திற்கு மட்டும் பிரத்தியோகமாக உரியவை. அவை மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாக உருவாகும் பொருளியல் முன்னேற்ற அடிப்படையிலுள்ள பொருட்களோடு முரண்படுவதாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு நிழற்படம் (Photograph)  என்பது பொருளியல் முன்னேற்றத்தின் விளைவாக உருவான பொருளாகும். (Madaniyya Objects)  ஒரு பெண்ணின் உடல் அழகை வெளிப்படுத்தும் நிர்வான நிழற்படத்தை மேற்கத்திய நாகரீகம் ஒரு கலை அம்சமாக கருதுகிறது. அந்த நிழற்படம் மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாக உருவாகிய பொருளியல் முன்னேற்றத்தின் குறிப்பிட்ட பொருளாக இருக்கிறது. மேலும் அது பெண்கள் குறித்த அதன் வாழ்க்கை கண்ணோட்டமாகவும் இருக்கிறது. ஆகவே மேற்கத்திய சமூகத்தைச் சார்ந்த ஒரு மனிதன் அதை கலை அம்சமாக கருதுகிறான். அதில் பெருமை பாராட்டுகிறான். எனினும், இந்த பொருள் இஸ்லாமிய நாகரீகத்திற்கும், பெண்களின் கௌரவம் என்று கருதி எவைகளை பாதுகாக்க வேண்டும் என்று இஸ்லாம் கருதுகிறதோ அத்தகைய சிந்தனைகளுக்கும் முரண்படுகிறது. இதன் முடிவாக இத்தகைய நிழற்படங்கள் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில் அவை பாலியல் வேட்கையை தூண்டக்கூடியதாக இருக்கின்றன. இதன் விளைவாக சமூகத்தின் ஒழுக்க மாண்புகள் தளர்ந்து போவதற்கு இவை உடனடி காரணங்களாக இருக்கின்றன. இது போலவே வீடு என்பது மற்றொரு பொருளியல் முன்னேற்றம் சார்ந்த பொருளாக இருக்கிறது. ஒரு முஸ்லிம் தனக்கு வீடு கட்ட எண்ணும் போது வெளியில் இருப்பவர்களுக்கு வீட்டினுள் இருக்கும் பெண்கள் தெரியாத வகையில் வீட்டின் அமைப்பு இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனம் செலுத்துவார். இதனடிப்படையில் ஒரு முஸ்லிம் வீட்டைச் சுற்றி மதில் சுவர் எழுப்புகிறார். ஆனால் மேற்கத்தியர்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. மேற்கத்திய நாகரீகத்தின் அடிப்படையில் உருவான பொருளியல் முன்னேற்றம் சார்ந்த அனைத்து பொருட்களுக்கும் இது பொருந்தும். உதாரணமாக உருவ சிலைகளை கூறலாம். இது போலவே நிராகரிப்பவர்களின் பிரத்தியோகமான ஆடைகளை அணிவது முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அவைகள் வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கின்றன. எனினும் இதர ஆடைகளை அணிவதற்கு தடையில்லை. உதாரணமாக, தேவைக்காக அணியும் ஆடைகள் அழகூட்டும் ஆடைகள். இவைகளில் குஃப்ர் அம்சங்கள் இல்லையெனில் அவற்றை அணியலாம். அவைகள் பொதுவான பொருட்களாகும். அவற்றை உபயோகிப்பதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி உண்டு.







அறிவியல் மற்றும் தொழிற்துறைகள் மூலமாக உருவாக்கப்பட்ட பரிசோதனை கூட உபகரணங்கள், மருத்துவத்துறை மற்றும் தொழிற்துறை கருவிகள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகிய பொருளியல் முன்னேற்றம் சார்ந்த பொருட்கள் பொதுவானவைகளாகும். நாகரீகத்தின் விளைவாக உருவாகாததும், அதனோடு தொடர்பு இல்லாததுமான இத்தகைய பொருட்களின் உபயோகத்திற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி உண்டு.





இன்றைய உலகை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் மேற்கத்திய நாகரீகத்தை மேலோட்டமாக பார்வையிட்டால் மனிதனின் மன அமைதிக்கு அதனால் உத்திரவாதம் அளிக்க முடியாது என்பது தெளிவாக விளங்கும். இதற்கு மாற்றமாக மனித சமூகத்தில் ஆழமாக இடம்பெற்றுள்ள துன்பத்திற்கும் துயரத்திற்கும் அதுவே காரணமாகவும் இருக்கிறது. வாழ்வியலிலிருந்து மார்க்கத்தைப் பிரிப்பதை அடிப்படையாக ஏற்றுள்ள இந்த நாகரீகம், மனிதனின் இயற்கை தன்மைக்கு முரண்படுகிறது. ஆகவே சமூகத்தில் ஆன்மீக விஷயங்களுக்கு அது முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வாழ்க்கையை உலக இலாபங்களின் தொகுப்பாக அது கருதுகிறது. உலக இலாபங்களை அடைவதுதான் மனிதர்களுக்கிடையிலுள்ள உறவின் அடிப்படையாக அது கருதுகிறது. எனவே, ஓயாத துன்பத்தையும் மனப்போராட்டங்களையும் அது உருவாக்குகின்றது. வாழ்வின் அடிப்படையாக உலக இலாபங்கள் கருதப்படும்வரை இயல்பாகவே அதற்கான போராட்டமும் கூடுதலாகவே இருப்பதுடன் இங்கே மனிதர்கள் மத்தியில் உறவைப்பேணுவதற்கு வலிமையை பிரயோகிக்கவேண்டிய நிலையும் இயல்பாகவே காணப்படும். எனவே இந்த நாகரீகத்தை பின்பற்றுகிறவர்களுக்கு காலனியாதிக்க சிந்தனை ஏற்படுவது இயல்பான விஷயமாகும். ஏனெனில் வாழ்க்கையின் அடிப்படையாக உலக பயன்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. அங்கு எந்த வகையான ஒழுக்க மாண்புகளுக்கும் இடம் கிடையாது. ஆகையால், ஆன்மீக மாண்புகள் உதாசீனப்படுத்தப்பட்ட அதே வழியில் அனைத்து ஒழுக்க மாண்புகளும் அந்த சமூகத்தில் மங்கிப்போவது இயற்கையான நிகழ்வுதான். எனவே அங்கு போட்டி, போராட்டம், ஆக்கிரமிப்பு, காலனியாதிக்கம் ஆகியவற்றின் மீது வாழ்வு நிறுவப்பட்டுள்ளது. மக்களிடம் ஆன்மீக நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக ஓயாத மனப்போராட்டம் ஏற்பட்டுவிட்டது. இதனால் உலகம் முழுவதிலும் பரவலாக தீமை விளைந்திருப்பது மேற்கத்திய நாகரீகம் ஏற்படுத்தியிருக்கின்ற தீய விளைவுகளாக இருக்கின்றன. இதனால் மனித சமூகம் கடும் கோபமுற்று குற்றம் சாட்டும் வகையில் இன்று நிலைமை இருக்கிறது. உலகில் இந்த நாகரீகம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதின் காரணமாக அழிவை கொண்டுவரும் பல விளைவுகளை நோக்கி மனித சமூகம் சென்று கொண்டிருக்கிறது. முடிவாக மனித வர்க்கத்தின் செயல்பாட்டிற்கு இன்று மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.







கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலகில் ஆதிக்கம் பெற்றிருந்த இஸ்லாமிய நாகரீகத்தை ஆய்வு செய்யும் பட்சத்தில், அது காலனி ஆதிக்க கொள்கையை ஒருபோதும் கொண்டதாக இருக்கவில்லை. உண்மையில் இஸ்லாத்தின் கொள்கைக்கு காலனி ஆதிக்கம் அந்நியமானது. ஏனெனில் முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் எந்தவித வேறுபாடும் அது காட்டுவதில்லை. எனவே, அதன் நெடிய ஆட்சிகாலம் முழுவதும் தங்களை அதனிடம் ஒப்படைத்துக் கொண்ட மக்கள் அனைவருக்கும் நீதத்தை பெற்றுத் தந்திருக்கிறது. இது ஏனெனில், ஆன்மீக அடிப்படை மீது கட்டமைக்கப்பட்டுள்ள நாகரீகமாக அது இருக்கிறது என்பதுதான். பொருளியல், ஆன்மீகம், ஒழுக்க மாண்புகள் மற்றும் மனித நேயம் ஆகிய அனைத்து மதிப்பீடுகளையும் அது நிறைவு செய்கிறது. வாழ்வியலில் அகீதாவிற்கு உச்சகட்டமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளினால் வாழ்க்கை கட்டுப்படுத்தப்படுகின்றது. மகிழ்ச்சி என்பது முற்றிலும் அல்லாஹ்(சுபு)வின் உவப்பை அடைந்து கொள்வதுதான் என இஸ்லாம் கருதுகிறது. கடந்த காலங்கள் போல மறுமுறையும் இஸ்லாமிய நாகரீகம் ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில் இன்று உலகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கும் என்பதற்கு உத்திரவாதம் உண்டு. மேலும் மனித வர்க்கம் முழுமைக்கும் அது நன்மையை பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.