Sunday, June 28, 2009

முஸ்லிம் நாடுகளில் ஒபாமாவின் ஆக்கிரமிப்பு! - துருக்கியில் ஆரம்பித்து சவுதியை கடந்து எகிப்தில் ...

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்தமுறை துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திற்கு மேற்கொண்ட பயணம் முடிவடைந்து இரண்டு மாதங்கள் கூட கடந்திராத நிலையில் இப்போது அவர் துருக்கி. அரபியதீபகற்பம். மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் விரிவான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார், 2009 ஜூன் 4ம் தேதி வியாழனன்று எகிப்திய அரசு சிகப்புக்கம்பளம் விரித்து மாபெரும் வெற்றி வீரரைப்போல் ஒபாமாவை வரவேற்றது õ அவர் வந்த விமானம் காலை 9 மணிக்,கு தரையிறங்குவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பாகவே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அதிகப்பட்சமான பாதுகாப்பு ஏற்பாடுகள் விமானநிலையத்தைச் சுற்றி போடப்பட்டிருந்தன, பாதுகாப்புப்படை வீரர்கள் அனைத்து திசைகளையும் சுற்றிவளைத்து கண்காணித்துக்கொண்டிருந்த அதேவேளையில் ஆப்கானிஸ்தான். ஈராக். மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் எண்ணற்ற முஸ்லிம்களின் இரத்தக்கறைகளை தனது கரத்தில் சுமந்துகொண்டு காபிர்களுக்கு தலைமையேற்றிருக்கும் அமெரிக்க அதிபரான ஒபாமாவிற்கு அலங்காரவண்டிகள் அணிவகுக்க கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் அணியணியாகச் செல்ல பாண்டுவாத்தியங்கள் முழங்க வலதுபுறமும் இடதுபுறமும் நாட்டின் மிகஉயர்ந்த பாதுகாப்புபடையினர் புடைசூழ பிரமாண்ட வரவேற்பு ஒன்றை அமெரிக்க அதிபர் ஒபாமாற்கு எகிப்துஅரசு வழங்கியது, அல்குப்பா என்றழைக்கப்படும் அதிபர் மாளிகையின் வாயிலில் எகிப்து அதிபர் மாபெரும் அரசு மரியாதையுடன் ஒபாமாவை வரவேற்றார். பின்னர் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் உரையாற்றுவதற்காக அவர் சகல மரியாதைகளுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

முஸ்லிம்கள் மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் போர். பாலஸ்தீன விவகாரம். சட்டவிரோத யூதஅரசோடு அமெரிக்கா கொண்டுள்ள நெருக்கமான உறவு. அணுஆயுத விவகாரம். முஸ்லிம்களுக்கும் அமெரிக்காவிற்கும் மத்தியிலுள்ள பெரிய மற்றும் சிறிய விவகாரங்கள் இவை எதுவொன்றிலும் முந்தைய அமெரிக்க அதிபர்களின் கொள்கையிலிருந்து ஒபாமா சற்றும் வேறுபடாதவர் என்பதை அவருடைய பேச்சு தெளிவாக பறைசாற்றியது, அவரது பேச்சின் முழுஅளவிலும் அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதில் அவர் கொண்டுள்ள அக்கறை வெளிப்படையாகத் தெரிந்தது. மேலும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவான கருத்து ஏற்படவேண்டும் என்ற நோக்கத்தை மனதில் கொண்டு அவர் நளினமாகவும் மென்மையாகவும் பேசியதோடு முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கா மேற்கொண்ட போரினால் ஏற்பட்ட மாபெரும் துயரங்களை முஸ்லிம்கள் மறந்திடவேண்டும் என்பதற்காக தந்திரமான வார்த்தைகளை அவர் சாதுர்யமாக பிரயோகித்தார்.

முந்தைய அமெரிக்க அதிபர்களின் வஞ்சனை மிகுந்த தந்திரபேச்சுக்களை மீறும் அளவுக்கு ஒபாமா மென்மையாகவும் இனிமையாகவும் உரையாற்றினார், நிச்சயமாக இது முஸ்லிம் மக்களை கவர்வதற்கும் அவர்களோடு உறவை வலுப்படுத்திக் கொள்வதற்கும் ஒபாமா மேற்கொண்டுள்ள கபட நாடகம் என்பதில் ஐயமில்லை.

وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُون
இவர்களை நீர் பார்த்தால் இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும் அன்றியும் இவர்கள் பேசினால் இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்து) கேட்பீர் எனினும் இவர்கள் (நேர்மையாளர்கள் அல்லர். சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர், ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று அவர்கள் கருதுகிறார்கள். இவர்கள்தாம் (உமது) பகைவர்கள், ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக, அல்லாஹ் இவர்களை அழித்துவிடுவான். இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்? ( அல்முனாபிகூன் : 4 )
ஒருபுறம் முஸ்லிம் மக்களிலுள்ள அப்பாவி மனிதர்களிடம் நற்பெயர் ஈட்டும் நோக்கத்தோடு ஒபாமா பேசினார். மறுபக்கம் வெளிப்படையாக முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்து பேசியதோடு முஸ்லிம்களிடத்திலும் அவர்கள் விவகாரங்களிலும் விவரிக்க முடியாத வெறுப்பையும் விரோதத்தையும் அவர் கொண்டுள்ளார் என்பதையும் அவரது பேச்சு தெளிவாக பறைசாற்றியது.
وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ
அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் பெரியதாகும்... ( ஆலஇம்ரான் : 118 )
ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் வாழும் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அச்சுறுத்திப் பேசியதோடு அவர்களின் செயல்களை தான் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று கொக்கரித்தார். மேலும் அவர்களுக்கு எதிராக போராட உலகநாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார், மேலும் ஆப்கானிஸ்தானிலுள்ள முஸ்லிம்களுக்கு எதிராக போரிடுவதற்கு 46 நாடுகளின் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கியிருப்பது குறித்து பெருமையடித்துக் கொண்டார், பாகிஸ்தானில் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் ஏவுகணைகளை வீசிய அடாத செயல் குறித்து வருத்தம் தெரிவிக்காத இந்த மனிதர் அங்கு கொல்லப்பட்ட பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியவர்களின் மரணத்தை நியாயப்படுத்தி பேசினார்.
இத்தகைய ஏவுகணை வீச்சுகள் ஆப்கானிஸ்தானில் மறுபடியும் மறுபடியும் நிகழ்ந்தபோதும் அவற்றை எதிர்பாராத தவறுகள் என்று கூறுவதற்கு ஒபாமா துளிகூட வெட்கம் கொள்ளவில்லை, அங்கு மரணமடைந்த பெண்களையும் குழந்தைகளையும் பற்றிய செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படும் நிலையில் கொல்லப்பட்ட பிரிவினைவாதிகளின் பட்டியலில் அவர்கள் சேர்க்கப்பட்டுவிட்டனர், தங்களுடைய தீனை பின்பற்றும் முஸ்லிம்களையும் தங்களுடைய நாடு அமெரிக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை விரும்பாத முஸ்லிம்களையும் தங்களுடைய புனிதபூமியில் யூதர்கள் அத்துமீறி நுழைந்திருப்பதை சகித்துக்கொள்ள முடியாத முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் ஒபாமா கருதுகிறார் என்பதுதான் உண்மையாகும்
தன்னுடைய அடாத தீயசெயல்களை தொடர்ந்து அரங்கேற்றிக்கொண்டிருக்கும் அதேவேளையில் ஈராக். ஆப்கானிஸ்தான். பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களை ஈவுஇரக்கமின்றி கொன்று குவித்துக் கொண்டிருக்கும் கொடிய செயலை நிறுத்தமின்றி நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அதேவேளையில் தான் இஸ்லாத்திற்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் போரிட விரும்பவில்லை என்று துருக்கியில் கூறிய அதே வார்த்தைகளை இப்போது மறுபடியும் ஒபாமா கூறியிருப்பது பெரும் மோசடி செயலாகும்.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) தனது சங்கைமிக்க ஹதீஸில் கூறினார்கள்.
إِذَا لَمْ تَسْتَحِ فَاصْنَعْ مَا شِئْت நீ வெட்கம் கொள்ளவில்லையெனில் விரும்பியவாறு செய்துகொள்...
அமெரிக்க படைகள் முஸ்லிம் நாடுகளில் படுகொலைகளை செய்துவருகின்றன. இரவும் பகலும் தாக்குதல் நடத்தி அவர்களின் இரத்தத்தை ஓட்டுகின்றன. ஈவுஇரக்கமின்றி முஸ்லிம்களின் உயிர்களை பறிப்பதோடு அவர்களை அவர்களின் தாய்மண்ணிலிருந்து வெளியேற்றுகின்றன... இருந்தபோதிலும் தான் முஸ்லிம்களுக்கு எதிராக போர் செய்யவில்லை என்று ஒபாமா மறுபடியும் மறுபடியும் கூறிவருகிறார்.
இவ்வாறு பேசியதற்குப் பின்னர் அவருடைய பேச்சு பாலஸ்தீனத்தை நோக்கி திரும்புகிறது. பாலஸ்தீன பூமியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள யூதஅரசுடன் அமெரிக்கா கொண்டுள்ள இஜ்ôணுவ உறவும் மற்றதுறைகளில் கொண்டுள்ள இருதரப்பு உறவும் பிரிக்கமுடியாத நிரந்தார உறவாக இருக்கும் என்ற பலமான அறிவிப்பை முஸ்லிம்கள் மத்தியில் வெளியிட்டார், மேலும் யூதஅரசு பாலஸ்தீன மண்ணில் நிரந்தரமாக இருக்கும் என்று அறிவித்ததோடு இந்த நிலைக்கு மாற்றாக வேறு எதுவொன்றையும் தான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதையும் திட்டவட்டமாக அறிவித்தார், இதன்பின்னர் ஒபாமா தனது இருஅரசு திட்டத்தை உறுதியான முறையில் வலியுறுத்தி பேசினார், அதாவது பெரும்பான்மையான பாலஸ்தீன மண்ணின் மீது யூதர்களுக்கு உரிமை இருக்கிறது என்று கூறியதோடு இதற்கு முஸ்லிம்கள் உத்திரவாதம் கொடுக்கும் பட்சத்தில் அதற்கு மாற்றாக பாலஸ்தீனத்தின் ஒரு சிறிய முக்கியத்துவமற்ற பகுதியை முஸ்லிம்கள் தங்களின் சொந்த வசிப்பிடமாக ஆக்கிக்கொள்வதற்கு உத்திரவாதம் அளிக்கப்படும் என்று கூறினார், இதன்பின்னர் காஸ மற்றும் மேற்குகரை ஆகிய பகுதிகளில் யூதர்கள் அமைத்துள்ள சட்டவிரோதமான குடியிருப்பு பற்றி ஒபாமா பேசிளார், இத்தகைய குடியிருப்புகள் அதிகரித்துக்கொண்டு செல்வதற்கு ஒரு முடிவு காண தான் விரும்புவதாக கூறி அப்பாவி மக்களின் உணர்வுகளை தனக்கு சாதகமாக வளைக்க முயற்சித்தார், இந்த பேச்சின் பின்னணியில் முஸ்லிம்களை வஞ்சிக்கும் ஒபாமாவின் நோக்கம் மறைந்திருக்கிறது, இதுவரை அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்றுவதற்கு எந்த திட்டத்தையும் அவர் முன்வைக்கவில்லை, உறுதியான பெரும் கோட்டைகளையும் பாதுகாப்பு அரண்களையும் அமைத்தால் ஒழிய இந்த பகுதிகளில் யூதர்கள் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் புதிய குடியிருப்புகளை அமைக்க அவர்கள் இப்போது தயாரில்லை, முஸ்லிம்களை ஏமாற்றும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா நிபந்தனைகளை வேறு விதித்திருக்கிறது, யூதஅரசு மீது இனிமேல் முஸ்லிம்கள் பகைமை பாராட்டக்கூடாது என்ற நிபந்தனையோடு அமெரிக்காவின் "புதிய எல்லை வரைபடத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒபாமா கூறுகிறார்.

உலக அணுஆயுத விவகாரம் பற்றி தடுமாற்றத்துடன் பேசிய ஒபாமா ஈரானின் பக்கம் கவனத்தை திருப்பினார், மத்தியகிழக்கு ஆசியாவை அணுஆயுத போட்டியில்லாத பிராந்தியமாக காண விரும்புவதாக தெரிவித்தார் ஆனால் அணுஆயுதம் வைத்துள்ள யூதஅரசை கண்டுகொள்ளாமல் வசதியாக மறந்துவிட்டார்.

தன்னுடைய முழுப்பேச்சிலும் முஸ்லிம்களை அச்சுறுத்தும் விதத்தில் ஒபாமா கருத்து கூறியபோதிலும் ஆப்கானிஸிதானிலும் பாகிஸ்தானிலும் அவரும் அவருடைய படைகளும் அப்பாவி முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டிய கொடிய செயலுக்கு சமாதானம் கூறுவதுபோல நளினமாக பேசி பாசாங்கு செய்த இந்த மனிதரை எகிப்துஅரசு வரவேற்று சிறப்பித்தது õ இவரின் விஷமம் தோய்ந்த பேச்சுக்களை எகிப்து மக்கள் வரவேற்று பாராட்டினார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு கணிசமான கூட்டத்திரை திட்டமிட்டு குவித்திருந்தது, ஒபாமாவை வரவேற்கும் விதமாக அவர்கள் அவ்வப்போது கைதட்டி ஆரவாரம் செய்ததோடு அவருக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள்.

தனது கண்களை மூடிக்கொள்ளாமல் திறந்து வைத்துக்கொண்டுள்ள எந்த மனிதரும் இந்த கூட்டப்பட்ட கூட்டத்தினர் எழுப்பிய பாராட்டு கரவொலியின் அர்த்தத்தை புரிந்துகொள்வார், இருநாடு என்ற திட்டத்தை எவ்வாறு ஒருவர் ஏற்றுக்கொண்டு பாராட்டு தெரிவிக்க முடியும்? எந்த முஸ்லிமும் இதை ஏற்றுக்கொள்வாரா? இஸ்ரா வும் மி*ராஜ் ம் நிகழ்ந்த புனிதபூமியை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் திட்டத்தை ஏற்றுக்கொண்டு பாராட்டுவாரா?
குர்ஆன் வசனத்தை அதற்கு தொடர்பு இல்லாத விஷயத்தோடு இணைத்து பேசிய பேச்சிற்கு ஒரு முஸ்லிம் எவ்வாறு பாராட்டுதல் தெரிவிப்பார்,

مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا
நிச்சயமாக எவனொருவன் கொலைக்கு பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்திற்காக அல்லாமல் மற்றொருவரை கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான், ( அல்மாயிதா : 32 )
அமெரிக்காவுடன் போராடும் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரிப்பதற்காக ஒபாமா குர்ஆனின் இந்த வசனத்தை குறிப்பிட்டுக் கூறியுள்ளார், இந்த வசனம் பனீஇஸ்ராயீல் மக்களை குறித்து அருளப்பட்டதாகும், ஆனால் தன்னுடைய தீனை காப்பதற்காகவும் தன்னுடைய மக்களை பாதுகாப்பதற்காகவும் முஸ்லிம்கள் மீது வரம்பு மீறுபவர்களை மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவர்கள் என்று கருதி அவர்களுடன் ஜிஹாது செய்யும் முஸ்லிம்களுடள் இந்த வசனத்தை இணைத்துப்பேசி உலகசமுதாயத்தை ஏமாற்ற முனைகிறார் அமெரிக்க அதிபர்õ அப்பாவி முஸ்லிம்களை இரக்கமின்றி கொலை செய்து அவர்களின் சொந்த மண்ணை ஆக்கிரமித்து அவர்களின் தாய் மண்ணிலிருந்து அவர்களை வெளியேற்றி அவர்கள் புனிதமாக கருதுபவற்றை இழிவுபடுத்தி அவர்களுக்கெதிராக கொடுமைகளையும் அச்சுறுத்தல்களையும் கட்டவிழ்த்துவிடும் யூதஅரசின் அடாத செயல்களை இந்த ஒபாமா கணக்கில் எடுத்துக் கொள்வதுமில்லை அவற்றை மனிதஇனத்தை அழிக்கும் கொடுஞ்செயல்களாக சித்தரிப்பதுமில்லை, மேலும் அமெரிக்க படைகள் செய்யும் கொலைகளை அவர் மனிதஇனத்தை அழிக்கும் செயல்களாக கருதுவதுமில்லை õ அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ إِنْ يَقُولُونَ إِلَّا كَذِبًا
அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாவமானதாகும் அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை, ( அல்கஹப் : 5 )
ஏற்கனவே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் ஒரு பிரச்சினையல்ல. புதிதாக அமைக்கப்படும் குடியிருப்புகள்தான் பிரச்சினை என்று கூறும் ஒபாமாவிற்கு எவ்வாறு பாராட்டுதலும் வரவேற்பும் அளிக்கமுடியும்? உண்மை என்னவென்றால் இந்த இரண்டுவகை குடியேற்றங்களுமே சட்டவிரோதமானவைதான், சிந்திக்கும் திறனற்ற கோமாளிகளால்தான் இவரின் பேச்சை கைதட்டி வரவேற்கமுடியும், அல்குத்ஸ் புனிதபூமியை யூதர்களிடமிருந்து முதன்முதலில் உமர்(ரலி) விடுவித்து அங்கு யூதர்கள் குடியிருப்பதற்கு அனுமதியில்லை என்று அறிவித்தார், பிறகு மறுபடியும் ஸலாஹூதீன் அதை சிலுவை யுத்தக்காரர்களிடமிருந்து மீட்டெடுத்தார், இவ்வாறு இருந்தபோதிலும் அல்குத்ஸ் பகுதி யூதர்களுக்கும் கிருஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவான தாயகம் என்று ஒபாமா கூறுகிறார், அவர் அல்குத்ஸின் கிழக்கு பகுதியை குறிப்பிடுகிறாரே ஒழிய மேற்கு பகுதியை அல்ல என்றபோதும் ஒபாமாவின் இந்த பேச்சுக்கு எவ்வாறு அவரை பாராட்ட இயலும், உண்மையில் ஒபாமாவிற்கு எழுந்த பாராட்டு கரகோஷம் அனைத்தும் போலியானதும் செயற்கையாக உருவாக்கப்பட்டதுமாகும், இந்த அருவருக்கத்தக்க விஷயத்தை உருவாக்கிய எகிப்து அரசால் அதன் உண்மைநிலையை மறைக்க இயலவில்லை, ஒபாமாவை முஸ்லிம்களின் நண்பராக முன்நிறுத்திக்காட்டவும் அவரை நீதிமானாகவும் சகிப்புத்தன்மை உடைய மனிதராக சித்தரிக்கவும் எகிப்து அரசு கடும்முயற்சி மேற்கொண்டிருந்தது, பாலஸ்தீன விவகாரத்தில் நடுநிலையான கருத்தை கொண்டிருப்பதாகவும் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ளவர்களையும் மண்ணின் மைந்தர்களாக உரிமைபெற்றுள்ள பாலஸ்தீன முஸ்லிம்களையும் சமமாக பாவிப்பதாக கூறிக்கொண்டு அந்த சமநிலையில் யூதர்களுக்கு சாதகமாக சாய்ந்துகொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு கைப்பாவையாக செயல்படும் எகிப்து அரசின் துரோகத்தை மறைப்பதற்காகவும் பெரும் முயற்சிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன, முஸ்லிம்களேõ தன்னுடைய சுயரூபத்தை மறைத்து புனிதமான துறவியாக வேடம் தரித்துக்கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா உங்களிடம் வந்துள்ளார், உங்கள் மீதுள்ள பகையை மறைக்காமல் வெளிப்படையாக காண்பிப்பவர்களைவிட இவர் மிகவும் ஆபத்தானவர், உங்கள் விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கு இவரிடம் நீங்கள் தஞ்சம் புகவேண்டும் என்று விரும்புகிறார், நினைவில் கொள்ளுங்கள் õ அதிபர் புஷ்ஷின் தலைமையில் செயல்பட்ட அமெரிக்கா நிகழ்த்திய கொடுமைகள் உங்களைவிட்டும் கடந்துபோய்விடவில்லை, அமெரிக்காவின் ஏவல்களை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் நாடுகளில் கைப்பாவை ஆட்சியாளர்கள் பலர் இருந்தபோதும் உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதை அமெரிக்கஅரசு தேர்ந்தெடுத்தது, அதனிடம் குவியலான ஆயுதங்களும் போர்க்கருவிகளும் இருக்கும் நிலையில் உங்கள் மீது அது பகைமையை வெளிப்படுத்தியது, இருந்தபோதும் உங்களைப்பற்றிய வியப்பும் அச்சமும் இப்போது அமெரிக்காவை பீடித்துக்கொண்டுவிட்டது, உங்கள் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு உங்கள் மக்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் ஒபாமாவிற்கு கைதட்டி வரவேற்பு அளிக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார், உங்களை ஏமாற்றுவதற்காக அவர் தனக்கே உரித்தான புன்னகையை வெளிப்படுத்தியவராகவும் உங்கள் நலம் நாடுபவர் போலவும் உங்களுக்கு விஸ்வாசம் உடையவர் போலவும் தன்னைக் காட்டிக்கொள்கிறார், அவர் தன்னுடைய இனிய நாவுடன் உங்களிடம் வந்துள்ளார் ஆனால் அவர் குள்ளநரியைப் போன்ற தந்திரமும் சாதுர்யமும் கொண்டவர் ஆவார், يعطيك من طرف اللسان حلاوةً ويَروغُ منك كما يَروغُ الثعلبஎன்ற கவிதை வரிகளுக்கு ஒபாமா மிகவும் பொருத்தமானவர்.
முஸ்லிம்களே! முஸ்லிம்களுக்கு மத்தியில் உரையாற்றுவதற்கு ஒபாமா இந்த மூன்று இடங்களை தேர்வுசெய்தது தற்செயலாக நடந்ததல்ல. மாறாக மிகவும் கவனத்துடனும் ஆழ்ந்த அர்த்தத்துடனும் இந்த இடங்களை அவர் தேர்வு செய்துள்ளார், துருக்கியின் இஸ்தான்புல்லில் தனது பயணத்தை துவக்கி அரபியதீபகற்பம் வழியாக எகிப்து மண்ணை அடைந்துள்ளார், சுல்தான் அல்*பாதிஹ் அவர்களுடைய மண்ணாக இஸ்தான்புல் இருப்பதுடன் பாலஸ்தீனத்தை யூதர்கள் ஆக்கிரமிப்பதற்கு தடைக்கல்லாக அது இருந்து வந்திருக்கிறது என்பதை ஒபாமா நன்கு அறிவார். அரபிய தீபகற்பம் முதல் இஸ்லாமியஅரசு நிறுவப்பட்ட பூமியாகும் அங்கிருந்து தோன்றிய உமர்(ரலி) அல்குத்ஸ் புனிதபூமியை அல்லாஹ்வின் எதிரிகளிடமிருந்து விடுவித்தார் என்பதையும் அவர் நன்கு அறிவார். மேலும் அல்குத்ஸ் பகுதியை சிலுவை யுத்தக்காரர்களிடமிருந்து விடுவிப்பதற்கு மகத்தான போரை எகிப்து மண்ணில்தான் சலாஹூதீன் நிகழ்த்தினார் என்பதையும் ஒபாமா நன்கு அறிவார். இந்த அனைத்து உண்மைகளையும் ஒபாமா நன்கு அறிந்துள்ள காரணத்தால். ""பெருமையும் உயர்வும் கொண்டிருந்த உங்கள் காலம் மலையேறிவிட்டது இப்போது ஆதிக்கமும் அதிகாரமும் ஒபாமாவிற்கும் அவருடைய கூட்டாளிகளுக்கு மட்டும்தான் உரியது என்ற செய்தியையும் ""விரிந்துபரந்த ஆதிக்கஉரிமை அமெரிக்காவிற்கு மட்டும்தான் இருக்கிறது என்ற செய்தியையும் தாங்கியவராக ஒபாமா உங்களிடம் வந்துள்ளார்,
முஸ்லிம்களில் பலர் அறியாத உண்மைகளை காலனியாதிக்க குப்பார்கள் நன்கு அறிவார்கள், உண்மையான அதிகாரமையம் எதுவென்றும் பலத்தின் ஆதாரமூலம் எதுவென்றும் அவர்கள் நன்கு அறிவார்கள், நமது வரலாற்றை அவர்கள் ஆழ்ந்து ஆய்வுசெய்துள்ளார்கள் நமது ஆழமான நம்பிக்கையையும் நமது பலத்தின் ஆதாரமூலம் எதுவென்றும் அவர்கள் அறிவார்கள் மேலும் இந்த உம்மாவின் சிறப்புமிக்க நற்பண்புகள் பற்றியும் அவர்கள் அறிவார்கள், குர்ஆனின் இந்த வசனத்தின் அர்த்தத்தை ஒபாமா கூறியது தற்செயலாக நடந்த நிகழ்வல்ல.
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்தே படைத்துள்ளோம் நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு (பல) கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் நாம் ஆக்கியுள்ளோம், , , , ( அல்ஹூஜூராத் : 13 )

இந்த வசனத்தின் அர்த்தத்தை நிறைவுசெய்யும் அதன் இறுதி பாகத்தை வேண்டுமென்றே விட்டுவிட்டு ஒபாமா குறிப்பிட்டுள்ளார், அந்த இறுதி வரிகளில் கூறப்பட்டிருப்பதாவது.

إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ
நிச்சயமாக தக்வா உடையவர்கள்தான் அல்லாஹ்விடத்தில் மேன்மையானவர்கள்...

தக்வாதான் முஸ்லிம் உம்மாவை சிறந்த சமுதாயமாக ஆக்கியிருக்கிறது என்பதையும் அது அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் இழிவிற்கும் தலைகுனிவிற்கும் ஆளாக்கியிருக்கிறது என்பதையும் வேண்டுமென்றே மறந்துவிட்டார் ஒபாமா!
முஸ்லிம்களே! உலகத்திற்கு தான்தான் ஆட்சியாளராகவும் அதிபராகவும் இருப்பதுபோலவும் இஸ்லாமிய மண்ணில் இன்றுள்ள அரசுகள் அவருக்கு ஏவல் செய்யும் அடிமைகள் போலவும் அவர் விரும்புவதையெல்லாம் நிறைவேற்றி வைப்பதற்கு அவைகள் சித்தமாக இருப்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒபாமா முயற்சிக்கிறார், அவர் தனது சொந்த நாட்டில் பெற்றிராத மரியாதையையும் ரோஜா மலர்களோடு கூடிய உற்சாக வரவேற்பையும் இஸ்லாமிய மண்ணிலுள்ள ஆட்சியாளர்கள் அவருக்கு அளித்திருக்கிறார்கள். எகிப்தின் பிர்அவ்னைப் போலவும் அவனுடைய மக்களைப் போலவும் ஒபாமா இருக்கிறார்.

فَاسْتَخَفَّ قَوْمَهُ فَأَطَاعُوهُ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ

அவன் தன் சமூகத்தாரை இலேசாக மதித்தான் அவர்களும் அவனுக்கு கீழ்படிந்துவிட்டார்கள், நிச்சயமாக அவர்கள் வரம்புமீறிய சமூகத்தாராக ஆகிவிட்டார்கள், ( அல்ஜூக்ரு*ப் : 54 )
ஒபாமா திறன்பெற்றவராகவும் அறிவாற்றல் கொண்டவராகவும் சொல்நயம் உடையவராகவும் தந்திரசாலியாகவும் இருக்கலாம். தனது நளினமான பேச்சின் வாயிலாக அவற்றை வெளிப்படுத்தவும் முயற்சிக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை அவர் உணர்ந்து கொள்ளவேண்டும்: இஸ்தான்புல்லும் அரபியதீபகற்பமும் எகிப்துநாடும் உண்மையாக அவரை வரவேற்கவில்லை என்பதையும் முஸ்லிம்களில் பெரும்பகுதியினரின் வெறுப்புக்கும் கண்டனத்திற்கும் ஆளாகியிருக்கும் துரோகிகளான ஆட்சியாளர் குழுதான் அவரை வரவேற்றுள்ளது என்பதையும் அவர் உணர்ந்து கொள்ளவேண்டும், அவரது நளினமான ஏமாற்று பேச்சுகளுக்கு பின்னணியிலுள்ள தந்திரத்தை முஸ்லிம்கள் கவனிக்காமல் விட்டுவிடவில்லை என்பதை அவர் அறிந்து கொள்ளவேண்டும், இந்த உற்சாக வரவேற்பும் பாராட்டுதலும் சுயநலத்தை மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள் வழக்கமாக செலுத்தும் போலியான மரியாதைதான் என்பதை ஒபாமா நிச்சயமாக அறிந்திருப்பார், ஒபாமாவிற்கும் ஒட்டுமொத்தமாக முழு உலகத்திற்கும் ஹிஸ்புத் தஹ்ரீர் அறிவிப்பது என்னவென்றால் உண்மையான நம்பிக்கையையும் எந்த தருணத்திலும் அல்லாஹ்(சுபு) விற்காக எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக உள்ள ஒப்பற்ற மனிதர்களை இஸ்லாம் கொண்டுள்ளது, அவர்கள் நிச்சயமாக இஸ்லாமிய அரசை உலகத்தில் நிர்மாணிப்பார்கள், அது உலக நாடுகளை காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தியோ அல்லது அவற்றின் வளங்களை கொள்ளையிட்டோ அல்ல. மாறாக நீதியை நிலைநிறுத்துவதன் மூலமாகவும் அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் முற்றாக நீக்குவதன் மூலமாகவும் உரிமையள்ள அனைவருக்கும் அவர்களின் உரிமைகளை பாதுகாத்து வழங்குவதன் மூலமாகவும் மட்டுமே.
அப்போது ஏகாதிபத்திய அமெரிக்கா அதற்கு தகுதியான இடத்தை நிச்சயமாக பெற்றுக்கொள்ளும் õ தலைகுனிந்தவாறு அடங்கிப்போவதைத் தவிர்த்து வேறெந்த வழியும் அதற்கு கிடையாது. பாலஸ்தீனத்தின் புனிதபூமியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள யூதர்களும் அவர்களது பரிவாரங்களும் முற்றாக துடைத்தெரியப்பட்டு பாலஸ்தீனத்தின் முழுப்பகுதியும் இஸ்லாமியஅரசிடம் கொண்டுசேர்க்கப்படும். கிலாபா எனும் இஸ்லாமியஅரசு தோன்றும்போது இவைகலெல்லாம் நிகழ்வதையும் உலகத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் சுபிட்சமும் செழிப்பும் நீதியும் நீக்கமற நிறைந்திருப்பதையும் நிச்சயமாக இந்த உலகம் கண்டு வியப்புறும்.
وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் ஆனால் மனிதர்களில் பெரும்பான்மையினர் (இதை) அறிந்துகொள்ளமாட்டார்கள். ( யூஸப் : 21 )

Sunday, June 21, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 9

இஸ்லாமியக் கோட்பாடுகளும் கலாச்சாரமும்

ஆறாவது அத்தியாயத்தில் இஸ்லாத்தின் முதல் அடிப்படையாம் லாஇலாஹ இல்லல்லாஹ_ முஹம்மதுற் றஸ_லுல்லாஹ் என்பதன் பொருளை விரிவாகப் பார்த்தோம். அதில் அனைத்து அதிகாரமும் ஆற்றலும் ஆளுமையும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதைத் தெளிவுப்படுத்தினோம். இந்த அத்தியாயத்தில் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அறிவும் ஆற்றலும் அவனுக்கே சொந்தம் என்ற அடிப்படையில் அறிவுத்துறையின் சில யதார்த்தங்களைப் பார்ப்போம். அத்தோடு அறிவியல் அறிவு கலைகளைப் பற்றிய அறிவு இவற்றிற்கும் அல்லாஹ்வின் ஆளமைக்கும் (அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வருவதே - அறிவும் ஞானமும் அவனிடமிருந்து வருவதே என்பதற்கும்) உள்ளத் தொடர்புகளையும் விவாதிப்போம். அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் அனைத்தின் மீதும் அல்லாஹ்வே ஆற்றல் பெற்றவன். எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பனவான இவற்றின் பொருள் ஒருவன் தன் வாழ்வில் கடைப்பிடிக்கும் அத்தனை நீதி நெறிகளும் அல்லாஹ் அருளிய வழிகாட்டுதல்களிலிருந்தே பெறப்பட வேண்டும் என்பதே. இறைவனின் சட்டங்கள் என்ற ஷாPஅத் சட்டங்கள் வாழ்வின் எல்லா துறைகளையும் தழுவி நிற்பன. அவை வணக்க வழிபாடுகள் குறித்து எழும் சர்ச்சைகளோடு மட்டுமோ முஸ்லிம்களுக்கிடையே எழும் பாகப்பிரிவினை, கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றைப் பற்றிய சர்ச்சைகளோடு மட்டுமோ சம்பந்தப்பட்டவையல்ல. இறைவனின் ஷாPஅத் மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் ஒன்று போல் தழுவி நெறிப்படுத்தித் தருவது. இதில் இறைவனை நம்புவது, மறைவானவற்றை நம்புவது என்பனவாக வரும் நம்பிக்கை பற்றிய விதிகள் நாட்டு நடப்புகளை நெறிப்படுத்தும் நியமங்கள், நிர்வாகத்துறையின் வரையறைகள் ஒழுக்க நெறிமுறைகள் நீதித்துறையின் சட்டங்கள் பரிபாலனம் மனித உறவுகளின் அடிப்படைகள் குறித்த வரம்புகள் இப்படி இவை போன்ற அனைத்தும் அடங்கும்.

ஷாPஅத் என்ற இஸ்லாமியச் சட்டங்களில் இறைவனின் தனிப்பெரும் பண்புகள் இந்தப் பிரபஞ்சத்தின் இயல்புகள் இந்த உலகில் நாம் வாழும் வாழ்க்கையின் தன்மைகள் நமது வாழ்வின் இரகசியங்கள் மனிதனின் இயல்புகள் இவையெல்லாவற்றிற்கும் இடையேயுள்ள உறவுகள் இவையும் அடங்கும். இதேபோல் ஷாPஅத் என்ற இறைவனின் சட்டங்களில் மனிதனின் அரசியல் வாழ்க்கை அவனது பொருள் சேர்க்கும் வாழ்க்கை அவனது சமுதாய வாழ்வை வகைப்படுத்தும் கோட்பாடுகள் சிந்தனைகள் இவையும் அடங்கும். இவை அனைத்தும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுடைய அறுதித்தூதர் (ஸல்)அவர்களின் வழிகாட்டுதல்களின் வழி அமைக்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை. இதே போல் நாம் பெறும் அனைத்து அறிவுகளுக்கும் அடிப்படையாக அல்லாஹ்வே இறைவனே இருக்கின்றான். இந்த வகையில் விஞ்ஞான அறிவுக்கும் கலைகளைப் பற்றிய அறிவுக்கும் (கலைகளைப் பற்றிய அறிவு என்பது விஞ்ஞானப் படிப்பு அல்லாத பொருளியலைப் பற்றியபடிப்பு. வணிகவியலைப் பற்றியக் கல்வியைக் கற்பது, உளவியலைப் பற்றியக் கல்வியைக் கற்பது போன்ற கலைக்கல்லூரிகளில் பயிற்றுவிக்ப்படும் அனைத்துக் கல்வியையும் குறிக்கும்.) அந்த இறைவனே ஆதாரமாக இருந்திட வேண்டும். இது இன்று இஸ்லாமிய அறிஞர்கள் எழுத்தாளர்கள் என்றெல்லாம் இருக்கின்ற அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தலாம். ஆனாலும் இதுவே உண்மை. இந்தக் கலைகளைப் பற்றிய அறிவைக் குறித்து ஏற்கனவே ஒரு நூல் எழுதப்பட்டு வெளிவந்து விட்டது. (செய்யித் குதுப் அவர்களின் தம்பி முஹம்மத் குதுப் அவர்கள் எழுதிய வுhந Pசinஉipடநள ழக யுசவ என்ற நூலையே செய்யித் குதுப் அவர்கள் இங்கே குறிப்பிடுகின்றார்கள்.) கலை உலகைப் பற்றிய எல்லாப் பாடங்களும் எல்லா எழுத்துக்களும் எல்லாப் பாடநூல்களும் மனிதன் வளர்த்துக் கொண்ட சில குறுகிய கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. மனிதன் வளர்த்துக்கொண்ட இந்தக் கோட்பாடுகளில் இறைவனோ இறைவன் தான் இந்த உலகைப் படைத்தான் என்ற உண்மையோ அந்த இறைவனுக்கே அனைத்து அதிகாரங்களும் சொந்தம் என்பதோ அந்த இறைவனே அனைத்தையும் அறிந்தவன் என்ற உண்மையோ எள்ளளவும் இடம் பெறவில்லை. ஆனால் ஒரு முஸ்லிம் தனக்கும் இந்த உலகிலிருக்கும் ஏனையவற்றிற்கும் இடையேயுள்ள தொடர்புகளையும் உறவுகளையும் அல்லாஹ் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்ற அடிப்படையிலேயே அமைத்து;க கொண்டிருக்கின்றான்.

இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது. அவனே நம்மையும் படைத்தான் என்ற அடிப்படையிலேயே ஒரு முஸ்லிம் இந்த உலகிலிருக்கும் ஏனைய பொருள்களைப் பார்;க்கின்றான். பழுகுகின்றான். இந்த உலக வாழ்க்கையில் நமக்கென்று கடமைகளும் பொறுப்புகளும் இருக்கின்றன. இந்த உலக வாழ்க்கைக்கென உயர்ந்த இலட்சியம் ஒன்றிருக்கின்றது. இந்த உலகத்தோடு நமது வாழ்க்கை முடிந்து போவதில்லை. இறப்பிற்குப் பின்னால் இன்னொரு நிலையான வாழ்க்கை இருக்கிறது என்பன போன்ற அடிப்படைகளை ஒரு முஸ்லிம் அழுத்தமாக நம்புகின்றான். அவன் இந்த உலகில் இருக்கும் ஏனையவற்றை எதிர்கொள்ளும் போது இந்த உண்மைகளைக் கவனத்தில் கொள்கின்றான். இந்த உண்மைகளைக் கவனத்தில் கொண்டே பாடநூல்களைப் படிக்கிறான். அந்தப் பாடநூல்களின் மேல் சென்று செய்யப்படும் ஆராய்ச்சிகளையும் அணுகுகின்றான். ஆக அல்லாஹ்வே இந்த உலகைப் படைத்தான். அவனே அதனை நிருவகித்து வருகிறான் என்பனவற்றை நம்புகின்ற ஒருவன் இந்த உலகில் இருப்பவற்றோடு கொள்ளும் உறவுகளுக்கும் மேற்கொள்ளும் அணுகுமுறைகளுக்கும் முயன்று செய்யும் ஆராய்ச்சிகளுக்கும், இந்த உண்மைகளை எல்லாம் நம்பாத ஒருவன் இந்த உலகில் இருப்பவைகளோடு கொள்ளும் உறவுகளுக்கும் மேற்கொள்ளும் அணுகுமுறைகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் இடையே எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன. அதே போல் ஒரு முஸ்லிம் இலக்கியங்களைப் படிப்பதற்கும் ஏனையோர் இலக்கியங்களைப் படிப்பதற்கும் இடையே எத்தனையோ வேறுபாடுகளும் மாறுபாடுகளும் இருக்கின்றன. ஒரு முஸ்லிம் இறைவனை நம்புவதற்கு இறைவனின் அழகியப பண்புகளைப் புரிந்து கொள்வதற்கு சுருங்கச் சொன்னால் ஈமான் என்ற இறை நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இறைவனைத் தவிர இன்னொரு வழி காட்டுதலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த வாழ்க்கையின் இலட்சியம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள அவன் அல்லாஹ்விடமே அவன் அருளிய திருக்குர்ஆனிடமே முகந்திரும்பிட வேண்டும். இந்த உலகில் நாம் என்ன இலட்சியத்தை இலக்காய்க் கொண்டு படைக்கப்பட்டோம் என்பதை அறிந்திட ஒரு முஸ்லிம் இக்கால எழுத்தாளர்கள் எனப்படுவோரும் தத்துவ மேதைகள் எனப்படுவோரும் பேரறிஞர், மூதறிஞர், பகுத்தறிவு பாசறைகள் என்றெல்லாம் புகழப்படுவோரும் கற்பித்தவற்றைத் தேடி செல்ல வேண்டியதில்லை. இந்த உலகில் செய்யப்படும் கொடுக்கல் வாங்கல்கள், பரிவார்த்தனைகள் இன்னும் இவை போன்றவற்றையும் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களாம் திருக்குர்ஆன் நபிமொழி ஆகியவற்றில் இருந்து அவன் பெற்றுக் கொள்ளலாம். அதே போல் இந்த உலகில் மனிதன் எப்படித் தோன்றினான்? அவன் யாரால் படைக்கப்பட்டான்? மனித வரலாறு என்பது எங்கிருந்து எப்படித் தோன்றிற்று? என்பனவற்றை அறிந்திட அவன் இந்தத் துறைகளில் எழுதிக் குவிக்கப்பட்டிருக்கும் குப்பை எழுத்துக்களைத் தேடிச் சென்றிடத் தேவை இல்லை. இந்த விஷயங்களில் அல்லாஹ்வும் அவனது ரசூலும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் தீர்வுகளைத் தந்திருக்கின்றார்கள். இந்த விஷயங்களில் அவன் இன்னும் அதிகமான விளக்கங்களை அறிந்திட விரும்பினான் என்றால், அவன் திருமறையாம் திருக்குர்ஆன், அதன் விளக்கமாம் நபிவாழ்வு ஆகியவற்றில் தேர்ச்சிப் பெற்ற ஓர் இஸ்லாமிய அறிஞரிடமே சென்றிட வேண்டும். இந்த இஸ்லாமிய அறிஞர் இஸ்லாத்தை நம்பி ஏற்று அதன் வழிகாட்டுதல்களில் அக்கறையும் ஆர்வமும் கொண்டு வாழ்பவராகவும் இருக்க வேண்டும். அல்லாமல் இஸ்லாமிய அறிஞர் எனப் பீற்றிக் கொண்டு மாற்று சிந்தனைகள் வேற்றுக் கொள்கைகள் ஆகியவற்றிற்கு விலைபோனவராக இருந்திடக்கூடாது. ஆனால் அறிவியலில் நுணுக்கங்களையும் அதன் விரிவான விளக்கங்களையும் அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளையும் அறிந்திட பௌதீகம் உடற்கூறு, உடலின் பல்வேறு உறுப்புகளின் இயக்கம், இவற்றில் ஊறு வந்தால் கைக்கொள்ளப்படும் மருத்துவம் ஆலைகளின் தொழிற்சாலைகளின் விவசாயத்தின் புதிய கண்டுபிடிப்புகள் அவற்றைப் பயன்படுத்துமு; பாங்கு இவற்றின் நுணக்கங்கள் அந்த நுணுக்கங்களின் விளக்கங்கள் இவையெல்லாம் அறிந்திட ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிடம் அல்லது முஸ்லிம் அல்லாத ஒருவரிடம் செல்லலாம். ஆதே போல் இராணுவத் துறையில் விஞ்ஞானத்தில் வளர்ந்திருக்கும் புதிய நுணுக்கங்களையும் புதிய யுக்திகளையும் அறிந்திட ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிடம் அல்லது முஸ்லிம் அல்லாதவரிடம் செல்லலாம்.

இதிலும் அவன் சில சுவனங்களைச் செலுத்தியாக வேண்டும். கொடுக்கல் வாங்கல்களில் வட்டியை அடிப்படையாகக் கொண்ட நுணுக்கங்களைக் கற்றுத் தந்திடும் போது அவன் ஆக வட்டியின்றி இவ்வுலகமில்லை என்று எண்ணிடத் தலைப்பட்டு விடக்கூடாது. அதேபோல் உற்பத்திகளின் விதிகளையோ அவற்றின் நுணுக்கங்களையோ அவன் அறிந்திட அடுத்தவர்களை அண்டிடும் போது அவர்கள் இறைவனுக்கும் இந்த உலகில் இருப்பனவற்றிற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை எனக் கற்றுத் தந்தால் இந்த உலகில் கிடைக்கும் கச்சாப் பொருள்கள், அல்லது மூலப் பொருள்கள் அனைத்தும் இயற்கையால் தரப்பட்டவை. அவை தானாகத் தோன்றியவை எனப் போதித்தால் அவன் (முஸ்லிம்) அப்படியா இனி இறைவன் தான் எல்லாம் படைத்தான் என்பதை ஏற்பதற்கில்லை என்பனவாய்த் தடுமாறிடக் கூடாது. அந்த முஸ்லிம் பாவம் இந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த இயற்கையையும் அதன் இயக்கத்தையும் ஆக்கியவன் இறைவன் தான் என்பதைக் கண்டு கொள்ள முடியாதவர்கள் என்பதை உணர்ந்திட வேண்டும். இங்கே இன்னொன்றையும் நாம் அவசரமாய்க் கவனிக்க வேண்டும். நாம் மேலே குறிப்பிட்ட துறைகளில் போதுமான அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கித் தருவது இஸ்லாமிய சமுதாயத்தின் மிகவும் முக்கியமான கடமையாகும். அசல் இஸ்லாமிய சமுதாயம் என்பது செயலில் வந்ததும் அது அவசரமாய் நிறைவேற்றிட வேண்டிய கடமையாகும் இது. மேலே நாம் எடுத்துக் காட்டிய துறைகளில் அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் பெருகிட தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தருவது இஸ்லாமிய சமுதாய அமைப்பின் கடமையாகும். அரசின் கடமையாகும். அறிவியல் துறையில் அதாவது விஞ்ஞானத்த துறையில் அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் தோன்றிட தேவையான சூழ்நிலைககைள இஸ்லாமிய சமுதாய அமைப்பு ஏற்படுத்தித் தரவில்லை என்றால் அந்த இஸ்லாமிய சமுதாய அமைப்பு ஒரு பெரும் பாவத்தைச் செய்து விட்டது என்று பொருள். ஓர் உண்மையான முழுமையான இஸ்லாமிய சமுதாய அமைப்பு செயலில் இல்லாத போது ஒரு முஸ்லிம் இந்தத் துறைகளில் முஸ்லிம் அல்லாதவர்களிடம் பாடம் பயிலுவது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. இவை நீங்களே உங்கள் வியாபாரத்தை நன்றாக அறிவீர்கள் என்ற நபிமொழியின் பாற்படும். ஆனால் ஒரு முஸ்லிம் அறிவையும் அது சார்ந்த ஆராய்ச்சியையும் பெறச் செல்வது அவன் ஏற்கனவே பெற்ற நம்பிக்கைகள் பற்றியதாகவோ அல்லாஹ் அவனுக்கு வகுத்தளித்திருக்கும் சட்டங்களைப் பற்றிய சர்ச்சையாகவோ இருக்கத் தேவை இல்லை. காரணம் இவற்றிற்கெல்லாம் ஐயங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் அவனுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுவிட்டன. இந்த வரையறைகளுக்குள் நின்று ஒரு முஸ்லிம் அறிந்தவர்களிடம் பாடங்கற்றால் அவன் அந்த (ஜாஹிலிய்ய) அஞ்ஞான சமுதாயங்களின் வலையிலே வீழ்ந்திடும் ஆபத்து இல்லை. இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். ஒரு முஸ்லிம் ஜாஹிலிய்யா சிந்தனையாளர்கள் என்ற இஸ்லாமியர் அல்லாத சிந்தனையாளர்களின் எழுத்துக்களைப் பயின்றிடலாம்.

அவர்களின் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் கற்றிடலாம். அதன் மூலம் இந்த வேற்றுச் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் எங்கே தவறுகளைச் செய்கின்றார்கள் என்பதைக் கண்டு பிடிக்கலாம் அவற்றைச் சுட்டிக்காட்டி அவர்களை அந்தத் தவறுகளில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதே போல் விஞ்ஞான நுணுக்கங்களை அவற்றில் புகுந்திருக்கும் அடிப்படைத் தவறுகளைப் புரிந்து கொள்ள அடுத்தவர்களிடம் கற்றிடலாம். எங்கே தவறு நடந்திருக்கின்றது விஞ்ஞான ஆராய்ச்சிகளில் என்பதைக் கண்டுபிடித்து விட்டால் அவற்றைத் தெளிவான இஸ்லாமிய அடிப்படைகளின் கீழ் அமைத்திடலாம். இப்படி இஸ்லாமிய அடிப்படைகளின்படி மாற்றி அமைத்திட அல்லாஹ்வின் வழியில் அவற்றைப் பயன்படுத்திட எந்த அறிவியலையும் அவன் யாரிடமும் கற்றிடலாம். இன்றைக்கு உலக வழக்கிலிருக்கும் அத்தனைக் கல்வி இயல்களும் தத்துவங்களும் வரலாற்று வியாக்யானங்களும் ஒழுக்க விதிகளும் தெய்வீகச் சித்தாந்தங்களும் பண்பாட்டுச் சிந்தனைகளும் குடும்ப அமைப்பு முறைகளும் ஜாஹிலிய்யா என்ற இறைவனின் வழிகாட்டுதல்களுக்கு எதிரான கொள்கைகளால் பாதிக்கப்பட்டவை. இவற்றில் மௌட்டீகத்தின் முத்திரை பதிந்தே கிடக்கின்றது. இதனால் தான் இவை உலகில் எதிர்ப்படும் நிஜங்களோடு மோதுகின்றன. இதே காரணத்தால் தான் இவை இஸ்லாத்தின் அடிப்படைகளோடும் மோதுகின்றன. இவற்றைக் கற்றிடும்போது இவற்றின் சிந்தனைகள் முஸ்லிம்களிடம் வந்திடும். அவர்கள் மிகவும் கவனமாக இருந்திட வேண்டும். மனிதனின் சிந்தனைகள் கருத்துக்கள் எனப்படுவனவற்றிற்கும் விஞ்ஞான நுணுக்கங்கள் அறிவியல் ஆராய்ச்சிகள் எனப்படுவனவற்றிற்குமிடையே வேறுபாடுகள் உண்டு.

விஞ்ஞான நுணுக்கங்கள் ஆராய்ச்சி ஆராய்ச்சி முறைகள் இவற்றை முஸ்லிம்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவையே கொள்கைகள் கோட்பாடுகள் என்ற வடிவம் பெற்று மனித வாழ்வின் அடிப்படைகளைக் கை வைக்க வந்திடும் என்றால் அவற்றில் கவனமாக இருந்திட வேண்டும். எடுத்துக்காட்டாக டார்வின் மேற்கொண்ட முடிவுகளை எடுத்துக்கொள்வோம். மனிதன் எப்படித் தோன்றினான் என்பதைக் கண்டு பிடிக்க முனைந்த அவன் சில கோட்பாடுகளைக் கொள்கைகளைச் சொன்னான். அதில் ஒன்று மனிதன் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சிப் பெற்று மனிதனாக ஆனான் என்பது. இந்தக் கோட்பாட்டைக் கொண்டு மனித வரலாறு என்பது விலங்கினங்களின் வரலாறு என்பதைச் சாதிக்க விரும்புகின்றான். அத்தோடு மனிதனின் தோற்றத்தை விவரிக்க நாம் நம் கண்களுக்குப் புலப்படாத கண்களுக்கு எட்டாத சிலவற்றைக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம் எனவும் பரிந்துரைத்தான் டார்வின். டார்வின் மேற்கொண்ட இந்த முடிவுகளுக்கு எந்த நடைமுறை ஆதாரங்களும் இல்லை (டார்வினின் கற்பனைகளை முழுமையாகப் பொய்யென்று நிரூபிக்கும் நூல் : மனிதன் எப்படித் தோன்றினான்? இது ஆயிஷா லெமு என்ற சகோதரியால் எழுதப்பெற்றது.) இங்கே தான் முஸ்லிம்கள் கவனமாக இருந்திட வேண்டும் என எச்சரிக்கின்றோம். மனிதன் எப்படித் தோன்றினான் என்பதை அல்லாஹ் தன் அருள்மறையாம் திருக்குர்ஆனில் விளக்கமாகத் தெளிவுபடுத்தி இருக்கின்றான். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்தத் தெளிவுகளே போதுமானவையாகும். டார்வின் ஏதேனும் புதிய ஆராய்ச்சி யுக்திகளைச் சொல்லித் தந்தால் அதன் பலா பலன்களைப் பற்றி ஆலொசிக்கலாம்.

முஸ்லிம்கள் அதற்காக அவன் மனித வரலாற்றிலும் வாழ்விலும் புகுத்த விரும்பும் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. கலாச்சாரம் அறிவு அறிவியல் இவை மனித இனத்தின் பாரம்பரியச் சொத்து. இப்படியொரு முழக்கம் சில நாள்களாக ஒலிக்கக் கேட்கின்றோம். இப்படியொரு முழக்கம் சரிதான். இந்த முழக்கத்தைத் தொடர்ந்து ஓர் துணைத் தத்துவம் பேசப்படுகின்றது. அது அறிவின் எல்லைகளில் மதம் தன் மூக்கை நுழைக்கக் கூடாது என்பதே. இதை நாம் உற்றுக்கவனிக்க வேண்டும். நிரூபிக்கப் பட்ட உண்மைகளைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம். இந்த உண்மைகளை வெளிப்படுத்திட உதவி செய்தவன் இறைவன். இந்த உண்மைகளை உருக்குலைக்கவும் இந்த உண்மையை ஏற்று வாழும் இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையின் உறுதியைக் குலைக்கவும் இது போன்ற முழக்கங்கள் பயன்படுத்தப்படும் போது நாம் கவனமாக இருந்திட வேண்டியதிருக்கின்றது. உண்மையில் இந்த முழக்கங்களுக்குப் பின்னால் ஒரு பெரும் சூழ்ச்சியே புதைந்து கிடக்கின்றது. மேலே சொன்ன இந்த முழக்கம் அதாவது கலாச்சாரம் அறிவு அறிவியல் இவை மனித இனத்தின் பாரம்பரிய சொத்து இதன் பின்னே வைக்கப்படும் அறிவின் எல்லைகளில் மதம் தன் மூக்கை நுழைக்கக் கூடாது என்ற முழக்கம் இவை ய10தர்களிடமிருந்து வந்தவை. பின்னால் சொல்லப்படும் இந்தத் துணை முழக்கம் வேறு எந்த மதத்திற்கு வேண்டுமானாலும் பொருந்தலாம். ஆனால் நிச்சயமாக அது இஸ்லாத்திற்குப் பொருந்தாது. ஆனால் ய10தர்கள் இந்த முழக்கத்தை முன்னே வைத்தது. முஸ்லிம்களை அறிவியல் என்ற பெயரைப் பயன்படுத்தித் தங்கள் இறை நம்பிக்கையில் இருந்து தடம் பிறழச் செய்திடத் தான். அத்தோடு அவர்கள் தங்கள் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் புகுந்து தங்கள் தகிடுதத்தங்களைக் கட்டவிழ்த்துவிட இந்த முழக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த ய10தர்களின் அடுத்த ஆயதம் வட்டியும் வட்டியின் வழி வந்த பொருளாதார முறைகளும். இந்த வட்டி முறையில் எல்லாப் பொருளாதார முறைகளையும் வீழ வைத்தப் பின்னர், இந்த வட்டி நிறுவனங்களின் மூலம் அவர்கள் உலகப் பொருளாதாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புகின்றார்கள்.

இதுவே ய10தர்களின் கலாச்சாரம். சூதும் வாதும் நிறைந்த ய10தர்களின் கெடுமதியைப் போலல்லாமல் இஸ்லாம் இரண்டே கலாச்சாரங்களைத்தான் ஏற்றுக் கொள்கின்றது. ஒன்று இஸ்லாமியக் கலாச்சாரம் இன்னொன்று ஜாஹிலிய்யா என்ற அஞ்ஞான கலாச்சாரம் அல்லது இஸ்லாத்திற்கு அந்நியாயமான கலாச்சாரம். இஸ்லாமியக் கலாச்சாரம் என்பது இறைவனை முன்னிறுத்தி அவனது வழிகாட்டுதல்கள் வழியாக வாழ்ந்து காட்டும் கலாச்சாரம். அல்லாதவை இறைவனை மறுப்பவை அல்லது இறைவனின் வழிகாட்டுதல்கள் வழி வாழ மறுப்பவை. இந்தச் சமுதாயங்கள் மனிதர்களின் சிந்தனையையும் அறிவையும் கடவுளாக மதித்து வழிபடுபவை. இஸ்லாமியக் கலாச்சாரம் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தழுவி நிற்பது. மனிதனின் திறமைகள் முழு அளவில் வெளிப்படவும் வளரவும் வழியமைத்துத் தருவது இஸ்லாமியக் கலாச்சாரம். மிகவும் முக்கியமானதோர் தகவலை அனைவரும் மனதிற் கொள்ள வேண்டும். இன்றைக்கு ஐரோப்பிய கலாச்சாரம் உலகெங்கும் வியாபித்து நிற்கின்றது. அறிவுத் துறையில் வைத்த அகலக் கால்களால் இவர்கள் உலகின் கடிவாளம் கைவரப் பெற்றவர்களாய் அறியப்படுகின்றார்கள். ஆராய்ச்சியும் ஆராய்ச்சிப்ப10ர்வமான அறிவும் இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தன தெரியுமா? இஸ்லாத்திலிருந்தும் இஸ்லாம் கோலோச்சிய ஸ்பெயின் பிரதேசத்தில் இருந்தும் தான். ஆராய்ச்சி செய்பவர்கள் மதத்தின் எதிரிகள் என்று அறிவித்துத் தன் அறியாமையை உலகுக்கு அறிவித்துக் கொண்டிருந்த இந்த ஐரோப்பா. ஆராய்ச்சி முடிவுகளை நெஞ்சுரத்தோடு வெளியே சொன்னார்கள் விஞ்ஞானிகள் என்ற குற்றத்திற்காகவே விஞ்ஞானிகளை நெருப்பிட்டு சாம்பலாக்கிய சகாப்தத்திற்குச் சொந்தக்காரர்கள் இந்த ஐரோப்பியர்கள். இந்த ஐரோப்பா ஆராய்ச்சி செய்வது ஆகாது என அடாவடித்தனம் செய்து கொண்டிருந்த போது சிந்தியுங்கள் உங்களைச் சூழ்ந்திருக்கும் வனப்பும் விந்தையும் நிறைந்த இந்த இயற்கையைப் பற்றி நீங்கள் சிந்தியுங்கள். சிந்திக்கும் மக்களுக்கு அநேக அத்தாட்சிகள் கிடைக்கும். ஆராய்ச்சி செய்யுங்கள். உங்களைச் சுற்றிக் கவ்வி இருக்கும் இயற்கையை என்று ஆராய்ச்சியின் பக்கம் அறிவின் பக்கம் உந்தித் தள்ளியது இஸ்லாம். இந்த ஊகத்தால் உற்சாகம் பெற்று உயர்ந்து நின்றது கார்டோவா (அந்தலூசியா) (அந்தலூசியா என்பது ஸ்பெயின் நாட்டைக் குறிக்கும்). பல்கலைக்கழகம். வர்த்தக வாணிபங்களை உலக கலாச்சாரமாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது இந்தப் பல்கலைக்கழகம். ஆராய்ச்சி செய்வது அனுபவத்தால் அறிந்து குறைகளைக் களைந்து நிறைகளைக் காப்பது இவை எல்லாம் அங்கிருந்து கற்றவைதான். இந்த படிப்பினைகளின் அடிப்படையில் இந்த ஐரோப்பா அறிவியல் துறையில் மெல்ல மெல்ல முன்னேறியது. அறிவியல் கண்டு பிடிப்புகளில் பல்வேறு சிகரங்களையும் எட்டிப் பிடித்தது. அதே நேரத்தில் முஸ்லிம் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தில் இருந்து வெளியேறிடத் துவங்கிற்று. இதனால் ஆராய்ச்சி சிந்தனை என்றெல்லாம் உற்சாகமாகவும் பரபரப்பாகவும் வாழ்ந்துக் கொண்டிருந்தவர்கள் செயல் இழந்தார்கள். இப்படி அவர்கள செயலிழந்து நின்ற தருணம் பார்த்து ய10தர்களும் கிருஸ்தவர்களும் தங்கள் ஆக்கிரமிப்பை லாவகமாக நடத்தினார்கள். இவர்களின் ஆக்கிரமிப்பு முழுமையடைந்த போது இஸ்லாம் கற்றுத் தந்த விஞ்ஞான அடிப்படைகள் கொஞ்சம் கொஞ்சமாக விஞ்ஞான உலகை விட்டு வெளியேறின.

ஆராய்ச்சிகளும் அறிவுத் துறை முன்னேற்றங்களும் அல்லாஹ்வின் வழியில் எடுத்து வைக்கப்படும் அழகிய வணக்கங்கள் என்று கற்றுத் தந்தது இஸ்லாம். ஆகவே ஆராய்ச்சிகளும் அறிவியல் முன்னேற்றங்களும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களின் வழி அமைந்தவை அந்த இஸ்லாமிய உலகில். இந்த உலகை ய10தர்களும் கிருஸ்தவர்களும் ஆக்கிரமித்த போது, ஆராய்ச்சிகளும் அறிவியல் முன்னேற்றங்களும் ஆண்டவனுக்கு எதிராகத் தொடுத்த போரில் கிடைத்த வெற்றியின் சின்னங்கள் எனப் போற்றப்பட்டன. காலப்போக்கில் அறிவியல் முன்னேற்றம் என்பது ஆண்டவனுக்கு எதிரான வெற்றி என்ற கொள்கை வலுப்பெற்றது. கிருஸ்தவ விஞ்ஞானகிகள் தங்கள் மதத்திற்கு எதிராகப் போராடி வென்ற போது விஞ்ஞானம் எல்லா இங்கிதங்களையும் இழந்தது. இறைவனுக்கும் விஞ்ஞானத்திற்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி ஏற்பட்டது. அது முதல் மனிதனின் வாழ்வுக்குப் பயன்பட வேண்டிய விஞ்ஞானம் மனிதனின் அழிவுக்குக் கட்டியங் கூறும் அதிசய பொருளாய் ஆனது. இப்படி ஐரோப்பாவின் சிந்தனைகள் முற்றாக மௌட்டீகங்களால் ஆட்கொள்ளப்பட்டது. இஸ்லாமிய சிந்தனைகள் வெளியேறின. காலப் போக்கில் இவை இஸ்லாத்திற்கு எதிராகவும் மாறிப் போயின. இதனால் தான் கூறுகின்றேன் ஒரு முஸ்லிம் திருக்குர்ஆன் நபிமொழி நபிவழி ஆகியவற்றிடமே வழிகாட்டுதல்களைத் தேடிட வேண்டும். வாழ்க்கையை வழி நடத்தும் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் ஒரு முஸ்லிம் திருக்குர்ஆன் நபிவழி நபிமொழி ஆகிவற்றிடம் மட்டுமே திரும்பிட வேண்டும். அறிவு அது எங்கே கிடைத்தாலும் பெற்றுக் கொள்ளுங்கள் எனச் சொல்லப்படுவது ஈமான் என்ற இறை நம்பிக்கை ஒழுக்க விதிகள் பழக்கங்கள் வழக்கங்கள் மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகளை நிர்ணயிப்பது ஆகியவற்றிற்குப் பொருந்தாது. இந்த விவகாரங்களில் முஸ்லிம்கள் திருக்குர்ஆன் நபிமொழி ஆகியவற்றின் வழிகாட்டுதல்களையே பெற வேண்டும். ஏனைய அறிவியல்களின் நுணுக்கங்களை முஸ்லிம்கள் ஏனைய விஞ்ஞானிகளிடமும் வல்லுநர்களிடமும் கற்றுக் கொள்ளலாம். இதற்கும் ஒரு நிபந்தனை முஸ்லிம்களில் அத்தகைய விஞ்ஞானிகளும் வல்லுநர்களும் இல்லாமலிருக்க வேண்டும். நான் இந்த விஷயங்களை இவ்வளவு அழுத்தமாகவும் பின்னிப்பின்னியும் சொல்வதற்கு ஓர் நிரந்தரமான காரணம் உண்டு. அது என்னுடைய சொந்த அனுபவமாகும். இவற்றை எல்லாம் எழுதுகின்ற நான் என்னுடைய வாழ்க்கையில் நாற்பது ஆண்டுகளை மனித அறிவியல்களின் ஆராய்ச்சிகளைப் படிப்பதில் செலவு செய்திருக்கின்றேன். மனிதர்களால் கண்டெடுத்து வைத்திருக்கின்ற அறிவு எனப் போற்றப் பெற்றவற்றை அல்லும் பகலும் பயின்றேன்.

இன்னும் சில் அறிவியல் துறைகளில் நான் சிறப்புப் பயிற்சிகளையும் பெற்றேன். இன்னும் பலவற்றை என்னுள் எழுந்த தனியான தணியாத ஆர்வத்தால் கற்றேன். பின்னர் தான் இஸ்லாம் என்ற இந்த இறை நம்பிக்கையின் அடிப்படையில் ஆழமான கவனத்தைச் செலுத்தினேன். மனம்விட்டு உங்கள் இதயங்களுக்கு என் இதயத்தைத் திறந்து சொல்லுகின்றேன். இந்த இறை நம்பிக்கையின் அடிப்படைகளைக் கற்றபின் நான் இந்த நாற்பது ஆண்டுகாலமும் கற்றவை ஒன்றும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். ஆனால் இந்த நாற்பது ஆண்டுகளையுமோ நான் அவற்றில் காலங்கழித்ததையோ அவற்றைக் கற்றதையோ எண்ணி வருந்தவில்லை. காரணம் நான் ஜாஹிலிய்யாவின் பல பகுதிகளையும் பயின்றதால் அதன் மௌட்டீகத்தை அதிகமாகப் புரிந்து கொண்டேன். அத்தோடு இஸ்லாத்தின் அழகையும் அருமையையும் தெரிந்து தெளிந்தேன். ஜாஹிலிய்யா என்ற இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கைகள் எப்படி முஸ்லிம்களை இடறத் துடித்திடும் என்பதையும் கண்டு கொண்டேன். ஜாஹிலிய்யா என்ற மௌட்டீகம் எப்படி எங்கே தவறு செய்கின்றது என்பதையும் அனுபவத்தால் அறிந்திட முடிந்தது. இதே போல் ஜாஹிலிய்யா என்ற மௌட்டீகம் எப்படியெல்லாம் பொய்யான தோற்றங்களைத் தரித்து பெருமையடிக்கும் என்பதையும் நேரடியாகக் கண்டு கொண்டேன். இறுதியாக வெளிச்சம் போட்டுக் காட்டியதைப் போல் இன்னொரு மகத்தான உண்மையையும் கண்டு கொண்டேன். அது தான் ஒரு முஸ்லிம் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களையும் ஜாஹிலிய்யாவின் வழிகாட்டுதல்களையும் ஒன்றாக இணைத்திட இயலாது. இவையெல்லாம் என் சொந்த அனுபவம் என்றாலும் இது என்னுடைய அனுபவமும் கருத்தும் மட்டுமல்ல. முஸ்லிம்கள் தங்களுடைய விவகாரங்களில் தீர்ப்பு வழங்கிட அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களைத் தவிர வேறு வழிகாட்டுதல்களின் பக்கம் திரும்பிடக் கூடாது என்பது அல்லாஹ்வின் அறுதியான வழிகாட்டுதலாகும். இறைவனின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும். இறைவனின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் இதுதான். நாம் முஸ்லிம்கள் வேற்று வழிகாட்டுதல்களின் பக்கம் திரும்பிடுவோம் என்றால் அவர்கள் நம்மை வழிகெடுக்கவே முனைவார்கள். குறிப்பாக ய10தர்களும் கிருஸ்தவர்களும் இதை இலக்காகக் கொண்டே செயல்படுவார்கள். அல்லாஹ் தன் அறுதியான வழிகாட்டுதலாம் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

வேதத்தையுடையோரில் பெரும்பாலோர் உங்கள் விசுவாசத்தின் பிறகு உங்களை நிராகரிப்போராக மாற்றி விட மாட்டோமா என்று விரும்புகின்றார்கள். அவர்களுக்கு உண்மை (இன்னதென்று) தெளிவாகத் தெரிந்த பின்பும் அவர்களுக்கு (உங்கள் மீது) ள்ள பொறாமையின் காரணமாகவே (இவ்வாறு அவர்கள் விரும்புகிறார்கள்). ஆகவே அல்லாஹ்வுடைய (மற்றொரு) கட்டளை வரும் வரையில் (அவர்களை) நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் மிகவும் ஆற்றலுடையோன். (அல்குர்ஆன் 2:109)


(நபியே) ய10தர்களும் (சரி)கிறிஸ்தவர்களும் (சரி) நீர் அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றாமல் இருக்கும் வரையில் உம்மைப் பற்றி அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே அவர்களை நோக்கி) அல்லாஹ்வின் வழி(யாகிய இஸ்லாம்) தான் நிச்சயமாக நேரான வழி. (அதனையே பின்பற்றுவேன்) எனக் கூறிவிடும். அன்றி உமக்கு மெய்யான ஞானம் வந்த பின்பும் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றுவீரானால் அல்லாஹ்விடத்தில் (அதற்காக விசாரணை செய்யப்படும் நாளில்)உம்மை இரட்சிப்பவனுமில்லை. (உமக்கு)உதவி செய்பவனுமில்லை. (அல்குர்ஆன் 2:120)


விசுவாசிகளே வேதத்தை உடையவர்களில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு நீங்கள் வழிப்பட்டால் நீங்கள் விசுவாசங் கொண்ட பின்னரும் நிராகரிப்போராக உங்களைத் திருப்பி விடுவார்கள். (அல்குர்ஆன் 3:100)


இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். வேதத்தையுடையோரிடம் எதைப் பற்றியும் கேட்காதீர்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டவே மாட்டார்கள். அவர்களே வழிகெட்டவர்கள். நீங்கள் அவர்கள் சொல்வதைச் செவி மடுத்தால் நீங்கள் வழிகேட்டையே ஏற்றுக் கொள்ள வேண்டியது வரும். அல்லது சத்தியத்தை நிராகரிக்க வேண்டியது வரும். இறைவனின் பெயரால் கூறுகின்றேன். மூஸா (அலை) அவர்களே இன்று உயிருடன் இருந்தால், அவர்களுக்கும் அல்லாஹ் என்னைப் பின்பற்றுவதைத் தவிர இன்னொரு அனுமதியை வழங்கியிருக்க மாட்டான். அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களும் இவ்வளவு தெளிவாக எச்சரித்த பின்னரும் ய10தர்களும் கிருஸ்தவர்களும் கூட நல்லதைச் சொல்வார்கள் நம் விஷயத்தில் என நம்பிச் செல்வோர் வழி கெட்டவர்களே. இந்த ய10தர்களும் கிருஸ்தவர்களும் எழுதி வெளியிட்டுள்ள இஸ்லாமிய இலக்கியங்களையும் இஸ்லாமிய வரலாறுகளையும் படித்துவிட்டு நமக்கு பாடஞ் சொல்லித்தர வருபவர்கள். நமது ஈமானை இறை நம்பிக்கையை தடம் பிறழ்ந்திட செய்திட விரும்புபவர்களே.

அல்லாஹ்வின் வழியாகிய இஸ்லாம் தான் நிச்சயமாக நேரான வழி (அல் குர்ஆன் 2:120)


என அல்லாஹ் தெளிவாக அறிவித்த பின்னரும் அடுத்தவர்களிடம் வழிகாட்டுதல்களைப் பெற விரும்புவோர் வழிகேட்டில் வாழ விரும்புகின்றார்கள் என்றே பொருள். மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள இறைமொழி ஒரு முஸ்லிம் எங்கே தன் வழிகாட்டுதல்களைத் தேடிட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. அதே போல் முஸ்லிம்கள் வேறு எங்கேயும் எந்த வழிகாட்டுதலையும் பெற்றிடக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ்வை நினைவு கூருவதில் இருந்து நம்மைத் திசைத் திருப்பிட விரும்புவோரின் சதிகளில் நாம் சிக்கிடக் கூடாது. இன்னும் இந்த உலகத்தை மட்டுமே இலட்சியமாக கொண்டு வாழ்வோரின் இதோபதேசங்களிலும் நாம் வீழ்த்திடக் கூடாது. இந்த உலகத்தை இலக்காகக் கொண்டவர்கள் வெறும் அனுமானங்களை நம்பியும் ய10கங்களை நம்பியும் உலகில் அமிழ்ந்து கிடப்பவர்களே இவர்களுக்கு இந்த உலகின் யதார்த்தம் எள்ளளவும் புரியவில்லை என்பதே உண்மை. இவர்கள் கண்ணுக்குத் தெரிபவற்றை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். அவர்கள் மறுமையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.


இது குறித்து அல்லாஹ் இப்படி வழிகாட்டுகின்றான்:


(நபியே) எவன் நம்முடைய நினைவுறுத்தலைப் புறக்கணித்து இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (மறுமையை) விரும்பாதிருக்கின்றானோ அவனை நீர் புறக்கணித்து விடும். இவர்களுடைய கல்வி ஞானம் இவ்வளவு தூரந்தான் செல்கின்றது. (இதற்கு மேல் செல்விதில்லை) நிச்சயமாக உமதிறைவன் தன்னுடைய வழியில் இருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவன் யாரென்பதையும் அவன் நன்கறிவான். (அல்குர்ஆன் 53:29-30)


அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் உள்ள வெளிப்படையானதையே அறி(ந்து கவனிக்)கின்றனர். ஆனால் மறுமையைப் பற்றி அவர்கள் முற்றிலும் பாராமுகமாயிருக்கின்றனர். (அல்குர்ஆன் 30:7)


இறைவனைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் இந்த உலகை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழ்பவர்கள் அத்தனை பேரும் இந்த உலகில் தங்கள் கண்களுக்கெட்டியவற்றை மட்டுமே பார்ப்பவர்கள். இன்றைக்கு விஞ்ஞானிகள் என அறியப்படுவோர் அனைவரின் நிலையும் இதுவே. இந்த விஞ்ஞானிகள் அல்லாஹ்வைப் பற்றியோ இறப்பிற்குப் பின் வரும் மறு உலக வாழ்க்கையைப் பற்றியோ கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை. ஏனெனில் இவையெல்லாம் அவர்களின் கண்ணெதிரே புலப்படவில்லை. இத்தகைய அறிவை மட்டுமே பெற்றவர்களிடம முஸ்லிம்கள் கல்விகற்றிட நேர்ந்தால் முழுக்க முழுக்க அவர்களைச் சார்ந்த அறிவைப் பெற்றிடுவது ஆபத்துக்களை விளைவிக்கலாம். ஆதலால் இவர்களிடம் அனுமதிக்கப்பட்ட வரையறைகளுக்குள் நின்றே ஒரு முஸ்லிம் அறிவைப் பெற்றிட வேண்டும். அதாவது இவர்களிடம் அறிவியல் நுணுக்கங்களையும் அந்த நுணுக்கங்களின் விளக்கங்களையுமே கற்றிடலாம். இறைவன் இவ்வுலகவாழ்க்கை அதன் நோக்கம் வாழ்க்கையை வழிநடத்தும் பாங்கு ஆகியவற்றில் முஸ்லிம்கள் வேறுயாரையும் இந்த விஞ்ஞானிகள் உட்பட நம்பிடக்கூடாது. இதையே அல்லாஹ் இப்படிக் கேட்கின்றான்:


அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?


இந்த வினாவை விடுக்கும் முழுவசனமும் இதோ

எவன் மறுமையைப் பயந்து தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து இராக்காலங்களில் நின்றவனாகவும் சிரம்பணிந்தவனாகவும் (அல்லாஹ்வை) வணங்கிக் கொண்டிருக்கின்றானோ (அவன் விசுவாசங்கொள்ளாது நிராகரிப்போனைப் போலாவானா? நபியே) நீர் கேளும். அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோரெல்லோரும் (கல்வி) அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)


ஒருவன் இப்படி இறைவனை அஞ்சி இரவெல்லாம் நின்று வணங்குகின்றான். மரணத்திற்குப் பின்வரும் மறுமை வாழ்க்கையைப் பற்றிப் பயப்படுகின்றான். தன்னைப் படைத்த இறைவனின் கருணைக்கு மன்றாடுகின்றான்.இவன் தான் உண்மையில் அறிந்தவன் ஞானமுடையோன். இவனுடைய அறிவைத்தான் இறைவன் மேலே உள்ள இறைவசனத்தில் குறிப்பிடுகின்றான். எந்த அறிவெல்லாம் இறைவனை நோக்கி இட்டுச் செல்கின்றனவோ அவையேதாம் உண்மையான அறிவு. எந்த அறிவெல்லாம் இறைவனை மறுக்கின்ற அளவில் மனிதனை பயிற்றுவிக்கின்றனவோ அவை அறிவே அல்ல. ஏற்கனவே நாம் ஓர் உண்மையை விளக்கிச் சொல்லியிருக்கின்றோம். விஞ்ஞானம் அறிவியல் என்றலெ;லாம் இன்று பேசப்படுகின்ற அத்தனையும் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களின் கீழ் தோன்றி மெல்லமெல்ல வளர்ந்து மாட்சிபெற்றவை. அல்லாஹ்வின் பிரதிநிதி மனிதன் என்ற அளவில் அவன் சுமந்தப் பொறுப்பை நிறைவேற்றிடும் வகையில் அவன் இந்த உலகை அகழ்ந்த போது கண்டெடுததவையே அறிவியலின் அதிசயமான ஆராய்ச்சி முறைகள். இவை ஐரோப்பாபின் கைகளுக்கு மாறியபோதே விஞ்ஞானத்தின் அத்தனை அடிப்படைகளும் மாற்றப்பட்டு அது இறைவனுக்கு எதிராகவும் அதனால் மனிதனுக்கு எதிரிhகவும் மாறிப்போயிற்று. பின்னர் இந்த விஞ்ஞான அறிவு முழுக்க முழுக்க இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகக் கிளர்ந்தன. பிற்றை நாள்களில் வளர்ந்த அத்தனை விஞ்ஞான அறிவும் அறிவியல் அறிவும் இந்த மேலை நாட்டுச் சிந்தனைகளில் தோன்றியவையே. ஆகவே இவை இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான சிந்தனைகளைப் பக்குவமாய்ப் பாய்ச்சின அவற்றைக் கற்றோரிடம். இஸ்லாத்திற்கு எதிரான இந்தப்போக்கு ஏதோ யதார்த்தமாய்த் தோன்றியதன்று. மாறாக அது ஓர் தெளிவான சூழ்;ச்சியின் கீழ் வகுக்கப்பெற்றது. அதே போல் திட்டம் போட்டு முஸ்லிம்களை நோக்கிப் பாய்ச்சப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் முஸ்லிம்களை முதன் முதலில் அவர்களின் இறை நம்பிக்கையை ஈமானை அசைப்பதும் காலப்போக்கில் அவர்களை இறை மறுப்பாளர்களையும் நிராகரிப்பாளர்களாகவும் மாற்றுவதே. இந்த முக்கிய நோக்கத்தைத் தொடர்ந்து இறுதி நோக்கம் என்னவெனில் இஸ்லாம் அரும்பாடுபட்டுப் போற்றிவரும் குடும்ப அமைப்பையும் கட்டுப்பாடான தாம்பத்திய உறவுகளையும் உடைப்பதே. இப்பயொரு தெளிவான சூழ்ச்சி இந்த மேலைநாட்டுச் சிந்தனையில் உறைந்திருக்கின்றது. இதைத் தெரிந்த பின்னரும் நாம் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளத் தவறுவோமேயானால் நாம் கண்ணிருந்தும் குருடர்களே. ஒன்றுக்கு இருமறை நான் எச்சரித்தது போல் விஞ்ஞானத்தின் அறிவியலின் கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி முறைகளை ஆராய்ச்சிகளை அங்கே கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் அல்லாஹ்வின் அழகியப்பணியைச் செய்யும் பொருளாக அவற்றை மாற்றுங்கள். அவர்கள் உங்களை அல்லாஹ்வை நினைவு கூருவதிலிருந்து தடுத்திடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய அளவே அவர்களின் சிந்தனையால் ஆட்கொள்ளப்படுவீர்;களேயானால் அது தௌ;ளத் தெளிவான அறிவின் ஊற்றாம் இஸ்லாத்திலிருந்து உங்களைத் திசைத் திருப்பிவிடும். எச்சரிக்கை!.

தொடர்ந்து வரும்...

Friday, June 19, 2009

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் - இறுதிப்பகுதி

கிலாஃபா இயக்கம்

கிலாஃபா இயக்கம் (1919-1924) 1919 செப்டெம்பரில் மௌலானா முஹம்மது அலி அவர்களின் சகோதரர் சௌகத் அலி, மௌலானா அப்துல் கலாம் ஆசாத், DR.முக்தார் அஹமத் அனசாரி, ஹஸ்ரத் மொஹானி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. கிலாஃபாவை எவ்வாறாவது பாதுகாப்பதே அவர்கள் நோக்கமாக இருந்தது. கிலாஃபா மாநாடுகளை இந்தியாவின் வடக்கு நகரங்களில் அவர்கள் ஒழுங்கு செய்தார்கள். கிலாஃபா இயக்கத்திலிருந்த அறிஞர்கள் வேறுபட்ட பின்னணியிலிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் ‘கைர் தக்லீதி’ (மத்ஹப்பை தக்லீத் செய்வது தடுக்கப்பட்டது) என்ற நிலைப்பாட்டிலிருந்தவர். எனினும் மௌலானா முஹம்மது ஹஸன் ஹனபி மதஹபை சார்ந்திருந்தார். ஆயினும் தமது வேறுபாட்டை கடந்து இவர்கள் அனைவரும் கிலாஃபாவை பாதுகாக்கும் நோக்கத்தில் ஒருங்கிணைந்தனர்.

இதன்படி 1919 பம்பாய் கிலாஃபத் குழு இரு முக்கிய இலக்குகளை வகுத்தது. முதலாவது ‘துருக்கிய சுல்தானின் பௌதீக ரீதியான அதிகாரத்தை தொடர்ந்து நிலைகொள்ள வலியுறுத்துவது’, இரண்டாவது ‘இஸ்லாமிய புனிதத் தளங்கள் மீதான சுல்தானின் கட்டுப்பாட்டை உறுதிப் படுத்துவது’.

1920ல் கல்கத்தாவில் இடம்பெற்ற வங்காள மாகாண கிலாஃபா மாநாட்டில் தலைமை உரையை ஆற்றிய மௌலானா ஆசாத் கிலாஃபாவின் முக்கியத்துவம் பற்றி பின்வருமாறு உரையாற்றினார்கள். “இந்த இயக்கத்தின் இலக்கு, முஸ்லிம் சமூகத்தை சரியான பாதையில் ஒழுங்குப்படுத்தி, நீதியை நிலைநாட்டி சமாதானத்தை உருவாக்கி, இறைவனின் வார்த்தைகளை உலகம் முழுக்கப் பரவச் செய்வதாகும். இவையனைத்தையும் செய்வதற்கு அதிகாரமிக்க கலீஃபா இருக்க வேண்டும்.” என அவர்கள் கூறினார்கள். இமாம் இல்லாத வாழ்வு இஸ்லாமிய முறையில் இருக்காது எனவும், இதனால் மரணத்தின் பின் இறைவனின் தண்டனையை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும் அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.

1920ல் மஸ்லா-ஏ-கிலாபத் என்ற நு}லை மௌலானா ஆசாத் அவர்கள் வெளியிட்டார்கள். அதில் “கிலாஃபா இல்லாமல் இஸ்லாத்தின் இருப்பு சாத்தியமில்லை” இந்திய முஸ்லிம்கள் அதற்காக முழுமுயற்சியுடன் உழைக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்கள்.

இரண்டு வகை அஹ்காம் ஷரிஆக்கள் இருக்கின்றன. ஒன்று தனிப்பட்ட ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய பர்ளுகளும் வாஜிப்களுமாகும். மற்றையது உம்மத்தினால் நிறைவேற்றப்பட வேண்டியதாகும். இது ஒரு கூட்டுப்பொறுப்பாகும். நாடுகளை கைபற்றல், அரசியல் பொருளாதார சட்டங்களை வகுத்தல் என்பன இதில் அடங்கும்” என இதே புத்தகத்தில் மௌலானா ஆசாத் அவர்கள் கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்களின் அரசியலையும் மதத்தையும் பிரிக்கும் ஒரு முஸ்லிமை நிராகரிப்பாளராகவே மௌலானா ஆசாத் கருதியதாக Peter Hardy தெரிவிக்கிறார். இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் பலம் பரிபோனமையும் கலீஃபாவின் அதிகாரத்துக்கு பல்வேறு சக்திகள் அச்சுறுத்தல்; விடுத்தமையும் முஸ்லிம் சமூகத்தலைவர்களை கவலையடையச்செய்தது. இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்ய வேண்டும் என பத்வா கொடுக்கும் அளவுக்கு அவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.“பிரித்தானியருக்கு ஒத்துழைக்காமல் இருப்பதற்கு மாற்றமாக ஹிஜ்ரத் செய்ய முடியும்” என 1920 ஜுலை 30ல் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் அஹ்லே ஹதீஸ் என்ற பத்திரிகையில் பத்வா வழங்கிருந்தார்கள்.மௌலானா அப்துல் பாரி பின்வருமாறு ஒரு பத்வாவை வழங்கிருந்தார்கள்.“இங்கு வாழும் முஸ்லிம்கள் யாரும் பிரித்தானியருக்கு ஒத்துழைப்புக் கொடுக்க கூடாது. அது சாத்தியமில்லை எனில் அவர்கள் ஹிஜ்ரத் செய்ய வேண்டும்”.அர்ப்பணிப்புள்ள முஸ்லிம்கள் யாவரும் இந்தியாவிலேயே தொடர்ந்து ஒத்துழைக்காமல் வேலை செய்வார்கள் என நம்புகிறோம். இது சாத்தியமாகாவிடில் அவர்கள் ஹிஜ்ரத் செய்யட்டும்” என கிலாஃபத் குழு சார்பில் மௌலானா சௌகத் அலி அறிக்கை வெளியிட்டார்கள். இந்த பத்வாவின் விளைவால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்து ஹிஜ்ரத் செய்ய விரும்பினார்கள்.கிலாஃபா என்பது அரசியலுடன் மட்டும் தொடர்புடைய ஒரு பிரச்சனையல்ல. நரகின் தண்டனைக்கும் நரக விடுதலைக்கும் இடையிலான ஒரு பிரச்சினையாகும். துருக்கி அதன் எல்லைகளை இழந்தால் இஸ்லாமிய சித்தாந்தம் அபாயத்துக்குள்ளாகிவிடும். 1923 டிசெம்பர் 7இல் நடந்த கிலாஃபத் மாநாட்டின் பத்தாவது அமர்வில் இதை உறுதிப்படுதிப் பேசிய மௌலானா சௌகத் அலி அவர்கள்,“ஜஸீரதுல் அரபின் ஒரு அங்குளமாவது முஸ்லிம் அல்லாதவரின் ஆக்கிரமிப்பிற்குற்பட்டால் முஸ்லிம்கள் மன நிம்மதியுடன் வாழ முடியாது” என கூறினார்கள். (The Muslims, Shan Muhammad, Meenakshi Prakashan, 1981, Vol 2 page 209)

மொஹமத் ஆஸிப் அலி 1921 நவம்பர் 2ல் எழுதிய கடிதமொன்றில் கிலாஃபாவை நிலைநாட்டுவதன் இஸ்லாமியப் பொறுப்பை பின்வருமாறு கோடிட்டு காட்டினார்கள்.“துருக்கியின் பெருமை இஸ்லாத்தின் பெருமைக்கு நிகரானது உஸ்மானிய சாம்ராஜியத்தி;ன் இருப்பு முஸ்லிம் இனத்தின் வளர்சிக்கு இன்றியமையாதது, உஸ்மானிய சாம்ராஜியத்தி;ன் வீழ்ச்சியுடன் இஸ்லாமிய நாகரீகத்தின் பலம் இல்லாமல் போய்விடும், துருக்கி வீழ்ந்து விட்டால் இஸ்லாத்தால் நிலைக்க முடியாது, ஆகவே துருக்கியே இஸ்லாத்தின் முதுகெலும்பாகும்”. இக் கருத்தை ஆதரித்த மௌலானா முஹமது அலி அவர்கள் முஸ்லிம்களின் பொதுவான கருத்தை இது பிரதிபலிக்கிறது எனக் கூறினார்கள்.
பிராங்கி மஹால் (Firanqi Mahal) இன் ஆதரவுடன் 1919 ஜனவரி 26ல் லக்னோவில் இடம்பெற்ற Anjuman- Moid-ul-Islam தின் கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் எட்டப்பட்டது. “பிராங்கி மஹால் (Firanqi Mahal) தனது உண்மையான நம்பிக்கையை சுல்தான் முஹம்மது 6 அவர்களுக்கு தெரிவிப்பதுடன், இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் துருக்கியின் தற்போதைய சுல்தான்தான் கலீஃபா என்றும், கிலாஃபத் தொடர்பான தீர்மானத்தில் முஸ்லிமல்லாதவர்களின் தலையீடு இருக்கக் கூடாதென்றும் அறிவிக்கிறது.”சைய்யத் சுலைமான் நத்வி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் கூட கலீஃபாவி;ன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியள்ளார்கள். “அல்லாமா நஸ்வி, இமாம் ராஸி, காஸி உலூத் ஆகியோர் இது தொடர்பில் விளக்கமாக ஆராய்ந்துள்ளனர். அவர்களின் முடிவே இறுதியானதாக இருக்க வேண்டும். பைஅத் இல்லாமல் மரணிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் ஜாஹிலிய்யத்தில் மரணிக்கிறார்கள் என சஹீஹ் முஸ்லிமில் ரஸ{ல்(ஸல்) கூறியதாகப் பதியப்பட்டுள்ளது. (The Muslim Outlook, March 1920).
(1920 இல் பாரிஸ் நகரில் ஆற்றிய உரையொன்றில் மௌலானா முஹமது அலி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார் “ கிலாஃபத்தே உலக முஸ்லிம்களின் முக்கியமான அமைப்பாகும், துருக்கிய சுல்தானே நம்பிக்கையாளர்களின் தளபதியும் கலீபாக்களின் வழித்தோன்றலுமாவார் என உலகின் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். கிலாஃபத்துக்கென்று போதுமான பிரதேசம் இருக்க வேண்டுமென்பதும் போதுமான இராணுவ வளங்களும் நிதி வளமும் இருக்க வேண்டும் என்பதும் இந்த அகீதாவின் முக்கிய பகுதியாகும்.
”முஹம்மது அலி உரையாற்றிய அதே கூட்டத்தில் சைய்யத் ஹ{சைன் பின்வருமாறு கூறுகிறார். “இஸ்லாம் இந்த உலகில் நிலைக்க வேண்டுமெனில் அதற்கு கிலாஃபத் இருக்க வேண்டியது மிகக் கட்டாயமாகும். 1400 ஆண்டுகால இஸ்லாமிய வரலாறும் இதையே காட்டுகிறது.” மௌலானா மொஹமத் அலி ஜோஹர் பின்வருமாறு கூறுகிறார் “துருக்கிய சுல்தானே கலீஃபா, அமீருல் முஃமினின், நம்பிக்கையாளர்களின் தலைவர், ரஸ{ல்(ஸல்)அவர்களின் வழித்தோன்றல். குர்ஆன் சுன்னா போன்றே கிலாஃபாவும் எமது மத விடயங்களில் ஒன்று” (My life a fragment, Mohamed Ali Johar p.g 41)
உலமாக்களே கிலாஃபா இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

1920 ஏபரல் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் இந்தியாவில் இடம்பெற்ற கிலாஃபா மாநாட்டில் பல்வேறு உலமாக்கள் கலந்து கொண்டு அங்கே பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில கீழ்வருமாறு:

1வது : கிலாஃபா தொடர்பில் மக்கள் அபிப்பராயத்தை ஏற்படுத்த உலமாக்கள் பாடுபட வேண்டும்.
2வது : கிலாஃபத்திற்கு எதிரான அறிஞர்கள் எனப்படுவோரும், முனாபிக்குகளும் புறக்கணிக்கப்படல் வேண்டும்.
7வது: தமது உயிரை கிலாஃபா பற்றி பேசவும் எழுதவும் அர்ப்பணிக்க வேண்டுமென தம்மை பின் பற்றுபவர்களிடம் உலமாக்கள் வாக்குறுதி வாங்க வேண்டும்.
9வது : அரசியலமைப்பு ரீதியிலான தேர்தல்களில் இருந்து முஸ்லிம்கள் விலகியிருக்க வேண்டும்.
டெல்லியில் 1920 நவம்பர் 19ம் 20ம் திகதிகளில் இடம்பெற்ற ஜம்மியதுல் உலமா ஹிந்தினுடைய அகில இந்திய நாட்டில் கிலாஃபாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆங்கிலேயர்களே முஸ்லிம்களின் பிரதான எதிரிகள், எனவே அவர்களை எதிர்ப்பது பர்ளாகும். உம்மத்தையும் கிலாஃபத்தையும் பாதுகாப்பது மிகத் தெளிவான இஸ்லாமியத் தேவையாகும். எனவே இந்த நாட்டிலுள்ள சகோதரர்கள் இதற்காக உதவிகளையும், ஒத்துழைப்பினையும் வழங்குவார்களேயானால் அதற்காக அவர்கள் நன்றிக்குறியவர்களாவார்கள்.
தாருல் உலும் தியோபத்தின் தலைவர் ஹெய்குல் ஹிந்த் மௌலானா மஹ்மூத் ஹஸன் அவர்கள் 1920 ஜுன் 8அன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். தனது விடுதலையின் பின்னர் கிலாஃபத் இயக்கத்தில் அவர் தன்னை ஈடுத்திக்கொண்டார்கள.; இதுகுறித்து மௌலானா ஹ{சைன் அஹமத் மதனி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“சிறையில் கடும் கஷ்டங்களை அனுபவித்துவிட்டு ஷெய்குல் ஹிந்த் இந்தியா திரும்பிய போது கூட காலனித்துவவாதிகளுக்கெதிரான அவரது போராட்ட மனப்பாங்கிலும், அவர் பிரித்தானியரை எதிர்த்த விதத்திலும் எவ்வித மாற்றமும் இருக்கவில்லை. martial law அமுலாக்கம்;, ரவ்லாத் சட்டத்தின் (Rawlatt law) அமுலாக்கம், நாட்டினுள் இடம்பெற்ற ஜாலியன்வாலா பாஹ் படுகொலைகள், உஸ்மானிய சாம்ராஜியத்திலிருந்தான பிரிவு, துருக்கிருக்கெதிராக இந்தியாவுக்கு வெளியே மனிதாபிமானமற்ற முறையில் இடம்பெற்ற நிகழ்வுகள் போன்றன அவரை கவலையடையச் செய்திருந்தன. அவர் பம்பாயில் காலடி எடுத்து வைத்தவுடன் மௌலானா அலியையும் கிலாஃபா இயக்கத்தின் மற்றைய உறுப்பினர்களையும் சந்தித்தார். லக்னோ Firqani Mahal இலிருந்து மௌலானா அப்துல் பாரியும் அஹமதாபாதிலிருந்து மகாத்மா காந்தியும் ஷெய்குல் ஹிந்தை வரவேற்க பம்பாய்க்குச்சென்றிருந்தனர். அவர்களுடனும் கிலாஃபத் இயக்கத்தின் ஏனைய உறுப்பினர்களுடனும் தனிப்பட்ட ரீதியிலும் பொதுவாகவும் கலந்துரையாடிய அவர்கள் இந்தியாவை விடுதலைக்காக அகிம்சைப் வழிப்போராட்டத்துக்கு ஒப்புக்கொண்டார்கள் (Naqsh - e – hayat, Vol 2, P. 247)
காலனித்துவவாதிகளுடன் ஒன்றாக செயற்படுவது தொடர்பில் ஷெய்க் அவர்கள் ஒரு பத்வாவை வழங்கியிருந்தார்கள். 1920இல் வெளியிடப்பட்ட அந்த பத்வா இன்றைய நிலைக்குக்குக்கூட பொருத்தமாக காணப்டுகிறது. அந்த பத்வாவில், “இஸ்லாத்தின் கௌரவத்தையும் மரியாதையையும் சீர்குலைக்க எதிரிகள் சகல வழிகளையும் கையாண்டுவிட்டனர். ரஸ{ல் (ஸல்) அவர்களினதும் ஸஹாபாக்களினதும் அதற்குப் பின் வந்தவர்களினதும் கடுமையான தியாகத்தின் விளைவாக வெற்றி கொள்ளப்பட்ட ஈராக், பலஸ்தீன், சிரியா ஆகியன பிரதேசங்கள் மீண்டும் எதிரிகளின் இலக்காகியுள்ளன. கிலாஃபத்தின் மரியாதை தடுமாறிக் கொண்டிருக்கிறது. பூமியிலுள்ள முஸ்லிம் உம்மத்தை ஒன்றிணைக்க வேண்டிய, இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய, முஸ்லிம்களின் உரிமைகளையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டிய அல்லாஹ்வின் வசனங்களை நிலைநாட்ட வேண்டிய கலீஃபா தற்போது எதிரிகளால் சு10ழப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இஸ்லாமியக்கொடி கீழிறங்கி பறக்கிறது. ஹஸ்ரத் அபூ உபைதா(ரழி), சாத் பின் அபி வகாஸ்(ரழி), காலித் பின் வலீத்(ரழி), அபூ அயூப் அன்சாரி(ரஹ்) போன்றோரின் ஆத்மாக்கள் இன்று அமைதியடையாமல் உள்ளன. முஸ்லிம்கள் தமது மதிப்பையும், கௌரவத்தையும், சுய மரியாதையும் இழந்தமையே இதற்குக்காரணமாகும். வீரமும், மார்க்கப்பற்றுமே அவர்களது விருப்பமாகவும் செல்வமாகவும் இருந்தது. கவனயீனத்தாலும், இலட்சியமின்மையாலும் அவர்கள் இதனை இழந்து விட்டார்கள்.”“முஸ்லிம்கள் சகல முஸ்லிம்களுக்கும் உதவாமலிருந்தது கஷ்டமான காலங்களில் மட்டுமல்ல. துரதிர்ஷ்டவசமாக காபிர்களின் நன்மதிப்பையும் நட்பையும் பெரும் பொருட்டு முஸ்லிம்களே தமது சகோதரர்களை கொலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். முஸ்லிம்களே தமது சகோதரர்களின் இரத்தத்தில் நீந்த ஆரம்பித்து விட்டார்கள்.”
“இஸ்லாத்தின் குழந்தைகளே ! இந்த தேசத்தை விரும்புவர்களே ! இஸ்லாமிய உலகை எரித்து கிலாஃபாவைத் தீயிட்ட இடியும் நெருப்பும் அரபிகளிடமிருந்தும் இந்தியர்களிடமிருந்தும் தான் பெறப்பட்டது என்பதை என்னை விட நீங்கள் நன்கு அறிவீர்கள். முஸ்லிம் தேசங்களை கட்டுப்படுத்த கிறிஸ்தவர்கள் பயன் படுத்திய அதிகாரத்தையும் வளத்தையும் உங்களின் கடும் உழைப்பிலிருந்தே அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.” “கிறிஸ்தவர்களுடன் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் விளைவுகளை அறியாத முட்டாள் முஸ்லீம்கள் யாரும் இருக்கிறார்களா(From Fatwa of Moulana Mahmood Hasan on 16th Safar 1339 Hijri, Corresponding to October 29th, 1920, Georgian year, The Prisoners of Malta, (Asira’h - e- malta), Moulana Syed Muhammed Mian, Jamiat ulama- l- hind, English edition, page 78-79.)
இன்றைய உலமாக்களில் பலர் கூறுவது போல் இஸ்லாமும் அரசியலும் வேறுபட்டது என்பதற்கு மாற்றமாக இஸ்லாமும் அரசியலும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத விடயங்கள் என்பதை அன்றைய உலமாக்கள் உணர்ந்திருந்தனர். கிலாஃபத்தின் வீழ்சிக்கு சில நாட்களுக்கு முன்பு ஜம்மியதுல் உலமா ஹிந்துடைய 4வது அமர்வு 1923 டிசம்பர் 24ல் காயாவில் நடைபெற்றது. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்த இஸ்லாமிய அறிஞர்கள், முஸ்லீம் சமூகத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து ஆழமாக கலந்து உரையாடினார்கள். நீண்ட ஆலோசனைகளின் பின் மதமும் அரசியலும் இஸ்லாத்தின் பிரிக்க முடியாத இரு அங்கங்கள் என்ற முடிவுக்கு வந்தனர்.இந்தியாவில் கிலாஃபா இயக்கத்தின் பரந்த அளவிலான செல்வாக்கினை பார்த்து இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படும் இந்துமதத்தைச் சார்ந்த மோகன்தாஸ் காந்தியும் கிலாஃபா இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரானார்.
முஸ்தபா கமாலினால் 1924 மார்ச் 3 அன்று கிலாஃபா வீழ்தப்பட்டதுடன் கிலாஃபா இயக்கமும் மறைந்துவிட்டது. கிலாஃபாவை மீளமைப்பது சாத்தியம்மற்றது எனக் கருதிய பலர் பின்நாளில் பிரத்தானிய காலனித்துவ வாதிகளிடமிருந்து இந்தியாவை விடுதலை அடையச் செய்வதில் கவனத்தை செலுத்தினர். கிலாஃபா வீழ்தப்பட்ட அடுத்த நாளின் மௌலானா முஹம்மது அலி கௌஷர் கூறியதாக TIMES பத்திரிகை 1924 மார்ச் 4ல் பின்வரும் செய்தியை வெளியிட்டது.

“கிலாபாவின் வீழ்ச்சி இந்திய முஸ்லிம்களின் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என எதிர்வு கூறுவது கடினமாகும். இஸ்லாத்திற்கும் நாகரிகத்திற்கும் இது ஒரு அழிவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இஸ்லாமிய ஒற்றுமையின் சின்னம் என முஸ்லிம் உலகால் அறியப்பட்ட அமைப்பின் வீழ்ச்சி ஒற்றுமையீனத்தை ஏற்படுத்தும்…”கிலாஃபாவின் வீழ்ச்சிக்குப்பின் அவர் கூறிய அதே விடயங்களை நாம் இன்று காண்கிறோம். எனினும் கிலாஃபா வீழ்தப்பட்டு 80 ஆண்டுகளைத்தாண்டியுள்ள நிலையில் கிலாஃபா என்பது மேற்கின் அரசியல்வாதிகளினதும், தலைவர்களினதும், சிந்தனையாளர்களினதும் பேசுபொருளாக மாறிவிட்டதுடன் கிலாஃபாவை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்ற உணர்வு முஸ்லிம்களிடையே வலுப்பெற்று வருவதைக்கண்டு அவர்கள் தயக்கம் கொள்வதை எம்மால் வெளிப்படையாகவே காண முடிகின்றது. 2006 அக்டோபர் அன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் ஜோர்ஜ் டபிள்யு புஷ் பின்வருமாறு கூறியிருந்தார்.
“ புத்திஜீவிகளை மிரட்டி மிதவாத அரசாங்களைக் கவிழ்த்து கிலாஃபத்தை நிலைநாட்டி விரிபுபடுத்த தீவிரவாதிகள் முயற்சிக்கின்றனர். தங்களது இலக்கை இடைய தீவிரவாத சக்திகள் மதத்தை உபயோகிக்கின்றனர். நாங்கள் வெளியேறுவதையே விரும்பும் அவர்கள் அரசுகளை கவிழ்க்க நினைக்கின்றனர். சுதந்திரத்துக்கு இடம் வழங்காத சித்தாந்த ரீதியான கிலாஃபத்தை; நிலைநாட்ட நினைக்கின்றனர்.”
கிலாஃபா இஸ்லாத்தின் உள்ளாந்த பகுதிகளின் ஒன்று என்பதை மேற்கு உணர வேண்டியிருக்கிறது. எனவே கிலாஃபத்தின் மீள்வருகைக்கு எதிராக பேசுவதை தவிர்த்துக்கொண்டு அது மீள வரும்போது எவ்வாறு அதனுடன் சேர்ந்து இயங்க முடியும் என்பதை சிந்திப்பதே அவர்களுக்கு சிறந்ததாகும்.
கிலாஃபாவின் அவசிய தேவையை இந்திய உபகண்ட முஸ்லிம்கள் மறந்து விடவில்லை. உபகண்டத்திற்குள்ளேயே அதை மீள நிலைநாட்ட இயக்கங்களும், சிந்தனையாளர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள் என்பது திருப்தியளிக்கிறது. எனினும் இன்னும் பாரிய முயற்சிகள் ஓர் தலைமைக்குக்கீழ் மேற்கொள்ளப்பட்டு முன்னெடுக்கப்படவேண்டும். கிலாஃபா மீள நிலைநாட்டப்படும் என்பதையும் அது இந்திய உபகண்டததை மீளவும் கைபற்றும் என்பதையும்; பின்வரும் ஹதீஸ் தெளிவாக குறிப்பிடுகிறது.
நபி (ஸல்) கூறியதாக அபு ஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,“உங்களில் ஒரு கூட்டம் இந்தியாவை கைபற்றும்”.
மற்றொரு ஹதீஸில்“இரு கூட்டத்தாரை அல்லாஹ் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து விட்டான். ஒரு கூட்டம் இந்தியாவை வெற்றிகொண்ட கூட்டம், மற்றையது ஈஸா இப்னு மர்யமுடன் இருக்கும் கூட்டம். (அஹமத், நஸாஈ)
எனவே மேல் குறிப்பிடப்பட்ட அல்லாஹ்வின் வாக்குறுதியை விசுவாசித்து எமது முன்னைய தலைவர்களின் தலைநிமிர்ந்த போராட்டங்களின் வழித்தடங்களிலே நாமும் விரைவாக முன்னேறுவதற்கு திடசங்கற்பம் பூணுவோம்.

Thursday, June 11, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8

இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்

இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதாயங்கள்தாம் உண்டு. ஒன்று இஸ்லாமிய சமுதாயம் இன்னொன்று ஜாஹிலிய்ய சமுதாயம் என்ற அஞ்ஞான சமுதாயம். இஸ்லாமிய சமுதாயம் என்பது அல்லாஹ் ஒருவனே என்பதை நம்பி அந்த அல்லாஹ் காட்டிய வழியில் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் அமைத்துக் கொள்கின்ற சமுதாயம். ஜாஹிலிய்ய சமுதாயம் என்பது அதாவது அஞ்ஞான சமுதாயம் என்பது இஸ்லாத்தைப் பின்பற்றாத சமுதாயம். ஒரு சமுதாயத்தில் அங்கம் வகிப்பவர்கள் தங்களை முஸ்லிம்கள் என அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தொழுகை நோன்பு ஹஜ் போன்றவற்றையும் நிறைவேற்றி வருகின்றார்கள். ஆனால் ஷாPஅத் என்ற அல்லாஹ்வின் சட்டங்களைச் சட்டை செய்வதில்லை. இந்தச் சமுதாயத்தை இஸ்லாமிய சமுதாயம் எனக் கொள்ள முடியாது. இன்றைக்கிருக்கின்ற சூழ்நிலைகளுக்கேற்ப வாழும் இஸ்லாத்தைக் கற்றுத் தருகின்றோம். இது தான் நவீன இஸ்லாம் முன்னேற்றமான இஸ்லாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்(ஸல்)சொல்லாதவற்றையும் செய்யாதவற்றையும் கண்டுபிடித்து இஸ்லாத்தில் நுழைக்கின்றார்களோ அவர்களையும் பின்பற்றிச் சிலர் வாழுகின்றார்களே அந்தச் சமுதாயம் இஸ்லாமியச் சமுதாயமல்ல. ஜாஹிலிய்ய சமுதாயம் இறைவனின் வழிகாட்டுதல்களை அறவே அறிந்திடாத சமுதாயம். இது பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திடும். சுpல நேரங்களில் இந்த அஞ்ஞான சமுதாயம் இறைவனைப் பட்டவர்த்தனமாக மறுப்பது என்ற அளவில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும். அது மனித வரலாற்றையே பொருளாதாரப் போராட்டத்தின் வரலாறு எனப் பேசிக் கொள்ளும். பொன்னையும் பொருளையும் சுற்றி வாழ்வதே மனித வாழ்க்கை என சித்தாந்தம் பேசி சிந்தையைக் குழப்பும். மனித இனம் வாழவும் வளம் பெறவும் விஞ்ஞானப் பொதுவுடைமை என்றொரு போலித் தீர்வை முன்வைக்கும். மனிதன் சீரோடும் பேரோடும் வாழ இறைவனை இல்லை என்று சொல் அவனை இருக்கின்றான் என்று சொல்பவனை சாடு எனப் பறையறிவிக்கும். இந்த ஜாஹிலிய்யா இந்த மௌட்டிகம் இன்னும் சில காலங்களில் வேறொரு வேடம் ப10ண்டு தன் உருவை வெளிக்காட்டும். இங்கே அது இறைவன் இருக்கின்றான் என்பதைப் பகிரங்கமாக மறுப்பதில்லை. அது இறைவன் இருக்கின்றான் ஆனால் அவன் தன் ஆட்சியை ஆகாயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விதானத்தில் நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றான். உலகில் வாழும் மனிதர்கள் வாழ்வுக்கும் அவனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அந்த ஆண்டவனின் ஆட்சி ப10மியைத் தொடவில்லை என்n;றல்லாம் வீம்பு பேசித் தன்னை வெளிப்படுத்திடும். ஷாPஅத் என்ற இறைவனின் சட்டங்களுக்கும் மனிதனின் வாழ்க்கை நெறிமுறைகளுக்கும் அவன் தன் வாழ்க்கைக்காகப் போட்டுக் கொள்ளும் திட்டங்களுக்கும் எந்த நிலையிலும் எந்தத் தொடர்புமில்லை என்றெல்லாம் தன்னை விளம்பரப்படுத்தி வெளிக்காட்டிக் கொள்ளும். இப்படித் தத்துவம் தந்து மக்களை மடையர்களாக மாற்றித் தன் கையில் வைத்துக் கொள்ளும் இந்த அஞ்ஞானம், மக்களை நீங்கள் மஸ்ஜிதுகள் என்ற பள்ளிவாயில்களுக்குச் சென்ற அல்லாஹ்வை தொழ வேண்டாம் எனத்தடுப்பதில்லை. அதேபோல் ஆலயங்களுக்கோ மடாலயங்களுக்கோ போக வேண்டாம் எனத்தடை விதிப்பதில்லை. தாராளமாய்ப் பின்பற்றுவோம் என அடம் பிடிக்காதீர். இந்த உலக வாழ்க்கையில் நாங்கள் தருகின்ற சட்டங்களைப் பின்பற்றி நாங்கள் வழங்கும் விதிகளுக்குட்பட்டு எங்களைத் தலை தாழ்த்தி வாழுங்கள் எனக் கட்டாயப்படுத்தும். அல்லாஹ்வின் ஷாPஅத்தைத் தான் நாங்கள் பின்பற்றுவோம் என உறுதியாய் நிற்பவர்களை இவை பொறுத்துக் கொள்ளமாட்டா. இப்படி இந்த அஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட மௌட்டீக சமுதாயங்கள் தங்கள் இறைமறுப்பை பக்குவமாகவும் பாங்காகவும் வெளிப்படுத்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளும். ஆனால் அல்லாஹ் அருள் மறையாம் திருக்குர்ஆனில் அழுத்தந்திருத்தமாகக் கூறுகின்றான்:
வானத்திலும் அவன் தான் இறைவன் ப10மியிலும அவன் தான் இறைவன். ஆவனோ மிக்க ஞானமுடையோனும் நன்கறிந்தோனுமாக இருக்கின்றான் (அல்குர்ஆன் 43:84)

அல்லாஹ் தனது ஆட்சியும் ஆளுமையும் ப10மியிலும் வானங்களிலும் இருக்கும் என அறிவிக்கும் போது அது ப10மியில் இல்லை. வேண்டுமானால் வானத்தில் இருக்கட்டும். ப10மியில் எங்கள் ஆட்சியே நிலைக்கும் என்று இறைவனின் அதிகாரத்தை அபகரிக்கும் இந்தச் சமுதாயங்கள் அஞ்ஞான சமுதாயங்களே. இறைவன் இன்னும் கூறுகின்றான் :
..சகல அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கேயன்றி (மற்றெவருக்கும்)இல்லை. அவனைத் தவிர (மற்றெவரையும்)நீங்கள் வணங்கக்கூடாதென்று அவனே கட்டளையிட்டிருக்கின்றான்.. (அல்குர்ஆன் 12 : 40)
இந்த இறைமொழி நாம் மேலே விவரித்த சமுதாயங்கள் மௌட்டீக சமுதாயங்களே என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இதனால் தான் நாம் கூறுகின்றோம் இஸ்லாமிய சமுதாயம் மட்டுந்தான் நாகரிகமான பண்பாடான சமுதாயம் அதன் இயல்பினாலேயே அஃதோர் நாகரிகமான சமுதாயம். இதற்கு நேர் எதிராக அஞ்ஞான சமுதாயங்கள் மௌட்டீகத்தைச் செயல்முறையாகக் கொண்டு வாழும் சமுதாயங்கள், ஆண்டவனை வானத்தோடு நிறுத்திவிட்டு தங்கள் ஆதிக்கத்தைப் ப10மியில் நிலைநாட்டி வாழும் சமுதாயங்கள் பிற்போக்கானவை. இந்த உண்மையைச் சற்று விளக்கிச் சொல்லிவிடுவது இங்கே இன்றியமையாதது. ஓருமுறை நான் என்னுடைய நூல் ஒன்றுக்கு இஸ்லாமிய சமுதாயமே நாகரிகமான சமுதாயம் எனப் பெயரிட்டேன்.
அந்நிலையில் அந்த நூல் அச்சாகிக் கொண்டிருந்தது. விளம்பரங்கள் வெளிவந்தன. இந்த விளம்பரங்கள் அல்ஜீரிய எழுத்தாளர் ஒருவரின் பார்வையிலும் பட்டது. இப்படி ஒரு சமுதாயத்தைத் தலைக்குமேல் தூக்கிவைத்துப் பேசுவது ஆணவமானது என்றும் இது என்னுடைய சிந்தனையின் முதிர்ச்சியற்ற நிலையையே காட்டுகின்றது என்றும் சாடினார் அவர். நான் அந்த எழுத்தாளரை மன்னித்துவிட்டேன். காரணம் இவர் ஏன் இப்படிக் கடிந்து விழுகின்றார் என்பதை நானறிவேன். நானும் ஒரு காலக்கட்டதத்pல் இந்த அல்ஜீரிய எழுத்தாளரைப் போல் இஸ்லாமிய சமுதாயம் என்பது என்னவென்று தெரியாமல் வாழ்ந்தவன் தான்.
அந்நிலையில் நான் மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் முழுமையாக அமிழ்ந்திருந்தேன். என்னுடைய சிந்தனை அந்த மேலை நாட்டுப் பாணியில் சிந்தித்துப் பழகிப் போயிருந்தது. நான் இந்த மேலைநாட்டுப் பாணியில் என்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தபோது கூட இஸ்லாத்தின் பால் நேசங்கொண்ட ஒருவனாகவே என்னை நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இந்த வெளியேயுள்ள சிந்தனைகள் என்னுடைய அறிவை ஆக்கிரமித்திருந்ததை நான் அறிந்திடவில்லை. என் அறிவைக் கவ்வியிருந்த இந்தக் காரிருள் விலகியப் பின்னர்;தான் நான் இஸ்லாத்தின் வெளிச்சத்தைக் கண்டேன். புதியதோர் ஒளி புதியதோர் உலகம் இல்லை புதியதோர் பிரபஞ்சமே என்னை வரவேற்றது. எனது அறிவையும் உணர்வையும் ஆழப்படுத்தியது. ஆகலப்படுத்தியது இஸ்லாம். அப்போது தான் இஸ்லாமிய சமுதாயத்தின் பல்வேறு பரிணாமங்களும் எனது பார்வையில் பட்டன. ஆழ்ந்து அதில் முத்தெடுத்தேன். இஸ்லாமிய சமுதாயம் மட்டுந்தான் உண்மையான நாகரிகமான சமுதாயம் என்பதைத் தெளிந்தேன். அதனை எழுத்தாய்த் தந்தேன். இந்த அல்ஜீரிய எழுத்தாளர் என்னுடைய பழைய மனநிலையில் இருக்கின்றார். அவருடைய சிந்தனை அந்த மேலை நாட்டு மோகத்தில் வெளிச்சத்தைக் காணவில்லை இன்னும் என்னுள் ஏற்பட்ட எத்தனையோ மாற்றங்கள் அவருள் ஏற்படவேண்டியதிருக்கின்றது. அவரது அறிவைக் கல்வி அழுத்திக் கொண்டிருக்கும் அஞ்ஞான சிந்தனையிலிருந்து விடுதலை பெறும் வரை மன்னிப்பதே மாண்பு இஸ்லாமிய சமுதாயந்தான் உண்மையான நாகரிகமான சமுதாயம் என்பதை விளக்கவந்த வழியில் தான் இந்த அல்ஜீரிய எழுத்தாளரைப் பற்றியக் குறிப்பைத் தந்தேன்.
இப்போது நாம் இஸ்லாமிய சமுதாயந்தான் நாகரிகமான சமுதாயம் என்பதன் விளக்கத்தைப் பார்ப்போம். முதன் முதலில் நாகரிகம் என்பதன் பொருளைப் புரிந்து கொள்வோம். ஒரு சமுதாயம் இருக்கின்றது. இந்தச் சமுதாயத்தில் இறைவனே அதிகாரி. ஆட்சியாளன். இந்தச் சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கமும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் வழியே வாழ்கின்றன. இந்தச் சமுதாயத்தின் ஒவ்வொரு அசைவும் அந்த அல்லாஹ்வின் ஷாPஅத் படியே அசைகின்றன. இந்தச் சமுதாயத்தில் யாருக்கு யாரும் அடிமையல்ல. ஒவ்வொரு மனிதனும் உண்மையான முழுமையான சுதந்திரத்தைப் பெற்று வாழுகின்றான். ஒவ்வொருவரும் தனது திறமைகளையும் ஆற்றல்களையும் தாராளமாகப் பயன்படுத்திடும் உரிமை அங்கே இருக்கின்றது. இந்த உரிமையைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தி விளைவிக்கும் பலன்கள் அந்தச் சமுதாயத்தின் வாழ்வுக்குப் பயன்படுகின்றது.
இப்படி முழுமையான சுதந்திரத்தோடு வாழும் ஒரு சமுதாயமே நாகரிகமான சமுதாயம். இதுவே மனித நாகரிகம். நாகரிகம் என்பதன் அடிப்படையே எல்லோருக்கும் முழுமையான விடுதலை. சுதந்திரம் என்பதன் அடிப்படையில் ஏற்படுவதே. மனித நாகரிகம் என்பதன் உயிர் மூச்சே எல்லோரும் சமம், யாருக்கும் யாரும் குறைந்தவனல்ல யாருக்கு யாரும் அடிமையல்ல என்ற அடிப்படையின்மேல் எழுப்பப்படும் பண்பாடுதான். இதற்கு நேர்மாறாக ஒரு சமுதாயம் இருக்கின்றது. இந்தச் சமுதாயத்தில் சில மனிதர்கள் சீமான்களாகவும் கோமான்களாகவும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்கள் தாம் சட்டங்களையும் தங்களுக்குத் தாழ்பணிபவர்கள் எப்படி வாழ வேண்டும் என்ற விதிகளையும் வகுத்துத் தருகின்றார்கள். இதே சமுதாயத்தின் இன்னொரு பிரிவினர் அடிமைகளாக வாழ்கின்றார்கள். இவர்களுக்கு இந்தச் சீமான்கள் சொன்னதைச் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்றொரு நிலை. தங்கள் திறமைகளைப் பயன்படுத்திட சுதந்திரம் வழங்கப்படவில்லை. தங்கள் ஆற்றல்களைப் பயன்படுத்தி ஆளாக முடிவதில்லை. இவர்கள் தங்கள் ஆற்றல்களையும் திறமைகளையும் அந்தக் கோமான்களின் போக வாழ்வுக்குத்தாரை வார்த்துத் தந்திட வேண்டியதிருக்கின்றது. இந்தச் சமுதாயமே நாகரிமற்ற சமுதாயம்.
இங்கே ஓர் கருத்தைத் தெளிவுபடுத்திடுவது அவசியம். சில சடங்குகள் சம்பிரதாயங்கள் இவைகளைக் குறித்து சில நெறிமுறைகளை வகுப்பது தான் சட்டம் என்றொரு கருத்து பரவலாகப் புழக்கத்திலிருக்கின்றது. ஷாPஅத் என்ற அல்லாஹ்வின் சட்டங்களுக்கும் இப்படித் தான் மிகக் குறுகலானதொரு பொருள் தரப்படுகின்றது. இல்லை இது நிச்சயமாகத் தவறு. இந்தக் குறுகலான பொருள் ஏனைய சட்டங்களுக்குப் பொருந்தலாம் நிச்சயமாக இறைவனின் சட்டங்களாம் ஷாPஅத்திற்குப் பொருந்தாது. ஷாPஅத் சட்டங்கள் மனிதனின் சிந்தனை அவனது எண்ணம் இவற்றால் விளையும் அவனது செயல் வாழ்க்கையில் அவன் கொள்ள விரும்பும் தத்துவங்கள் செயல்முறைகள் பண்பாடுகள் கலாச்சாரங்கள் மண ஒப்பந்தங்கள் பண ஒப்பந்தங்கள் ஆன்மீக விருப்பங்கள் உணர்வுகள் கோபதாபங்கள் வணக்கங்கள் உறவுகள் இப்படி அனைத்தையும் தழுவி நிற்பன. இத்தனை விவகாரங்களிலும் வாழ்வின் அத்தனை விவகாரங்களிலும் மனிதர்கள் மீது ஒரு சிறு கும்பல் சீமான்கள் சட்டங்கள் எனத் தங்கள் தான்தோன்றித் தனத்தைத் திணித்துக் கொண்டிருப்பது தான் அநாகரிகம் நாகரிகம் என்பதற்கு எதிரானது.
இந்தச் சமுதாயந்தான் இஸ்லாமிய சொல்லாட்சியில் அஞ்ஞான சமுதாயம் என அழைக்கப்படுகின்றது. எந்த ஒரு சமுதாய அமைப்பில் மனிதர்களின் மனதிலே வாழும் நம்பிக்கையும் அவர்களின் வாழ்க்கையிலே வெளிப்படும் வழிகாட்டுதல்களும் இறைவன் ஒருவனே என்ற கொள்கையை அடியொற்றி அமைந்திருக்கின்றதோ அந்தச் சமுதாயமே கண்ணியமிக்க சமுதாயம். அந்தச் சமுதாயத்தில் அங்கம் வகிப்பவர்களே கண்ணியத்தோடு வாழ்ந்திட முடியும். எந்தச் சமுதாயங்களில் மனிதனின் கண்ணியம் அவனது தோல் சார்ந்த நிறத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றதோ எந்தச் சமுதாயத்தில் மனிதனின் கண்ணியம் அவன் பிறந்த நிலத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றதோ அந்தச் சமுதாயங்கள் நிம்மதி இழந்து நிலை குலைந்தே வாழும். அங்கே ஒரு சாரார் எல்லாக் கண்ணியங்களையும் இழந்து இன்னொரு சாராருக்கு அடிமைகளாகக் குற்றேவல் புரிந்து குனிந்தே வாழ்ந்து வருவார்கள். இந்தச் சமுதாயத்தை எப்படி ஒரு கண்ணியமான சமுதாயமாகக் கருத முடியும்?. அதே போல் எந்தச் சமுதாயத்தில் மனிதர்களின் கண்ணியம் அவன் பிறந்த இனம் அல்லது குலம் என்பதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றதோ அந்தச் சமுதாயத்தையும் பண்பாடான கண்ணியமான நாகரிகமான சமுதாயமாகக் கொள்ள முடியாது. மனிதன் தான் கொண்ட கொள்கையை மாற்றிடும் மனத்திடமும் அறிவுப் பலமும் பெற்றவன். தான் நம்பிய கொள்கை தவறானது என்பதை அறிந்தவுடன் அதனை மாற்றிட முடியும். தான் ஏற்றுக் கொண்ட இறை நம்பிக்கை தவறு என உணர்ந்தால் அவனால் அதை மாற்றிட முடியும். தனது நிறந்தான் தான் கண்ணியக்குறைவாக நடத்தப்படுவதற்குக் காரணம் என்பதை அறிந்தாலும் அவனால் அதை மாற்றிட இயலுமா? தான் பிறந்த இடந்தான் தனக்கு உரிமைகள் மறுக்கப்படுவதற்குக் காரணம் என்பதை அறிந்தாலும் அவனால் அதை மாற்றிட முடியுமா? தான் பிறந்த இனந்தான் தான் அடிமையாக நடத்தப்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்பதை உணர்ந்தாலும் அவனால் அதை மாற்றிட இயலுமா? எந்த இடத்தில் பிறந்;தாலும் எந்த இனத்தில் பிறந்தாலும் எந்த நிறத்தில் பிறந்தாலும் மனிதன் மனிதனே அவனது உணர்வுகள் உறவுகள் உரிமைகள் எல்லாம் எல்லோரையும் போன்றது தான். ஓர் இடத்தில் பிறந்தது ஓர் இனத்தில் பிறந்தது ஒரு மொழி பேசுவோரிடையே பிறந்தது ஒரு குறிப்பிட்ட நிறத்தோடு பிறந்தது ஒரு மனிதனின் தவறன்று.
இப்படி அவன் செய்யாத தவறைக் காரணங்காட்டி அவனது உரிமைகளைப் பறிப்பது திறமைகளை மாய்ப்பது கண்ணியத்தைக் களங்கப்படுத்துவது எந்த நியதியின் கீழும் வராது. இதனால் தான் இந்தப் பேதங்களைக் கற்பிக்கும் சமுதாங்களை நாகரிகமான சமுதாயங்கள் என ஏற்றுக் கொள்வதற்கில்லை. அதனால் தான் இந்தச் சமுதாயங்களை என அழைக்கின்றது இஸ்லாம். இந்தச் சமுதாயங்களுக்கு நேர் எதிரானது இஸ்லாமிய சமுதாயம். அங்கே மேலே சொன்னவற்றால் மனிதன் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதில்லை. அங்கே எல்லோரும் மனிதர்களாகவே மதிக்கப்படுகின்றார்கள். ஆதலால் தான் இஸ்லாமிய சமுதாயமே நாகரிகமான சமுதாயம் எனப் போற்றப்படுகின்றது. உலகிலிருக்கும் ஏனைய எல்லா சமுதாயங்களிலும் இஸ்லாமிய சமுதாயம் மட்டுமே மனித உறவுகளையும் கண்ணியத்தையும் மனிதன் ஏற்றுக் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்புகின்றது.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவன் கறுப்பு நிறத்தை உடையவனாக இருந்தாலும் வெள்ளை நிறததை உடையவனாக இருந்தாலும் அவன் அரபு மொழியை பேசுபவனாக இருந்தாலும் இதர மொழிகளைப் பேசுபவனாக இருந்தாலும் கிரேக்கத்து தேசியத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் பாரசீகத்துப் பேரரசைச் சார்ந்தவனாக இருந்தாலும் கண்ணியத்தில் உரிமையில் உறவில் சமமானவனே. இறை நம்பிக்கையின் அடிப்படையில் மனிதர்களை ஏற்றத்தாழ்வின்றி நடத்திடும் ஒரே கொள்கை இஸ்லாமே. மனிதர்களுள் கண்ணியமானவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் ஒழுக்கத்தில் சிறந்தவர்களே. இந்த ஒரு விதிவிலக்கை விடுத்துவிட்டால் எல்லோரும் எல்லா நிலைகளிலேயும் சமமானவர்களே குறிப்பாக சட்டத்தின் முன் அனைவரும் ஒன்றுபோல் நடத்தப்படுவர். ஏனெனில் இந்தச் சமுதாய அமைப்பில் அதாவது இஸ்லாமிய சமுதாய அமைப்பில் சட்;டங்கள் அனைவரையும் படைத்த ஆண்டவனால் அருளப்பெற்றது. அல்லாமல் சில மனிதர்களால் தொகுக்கப் பெற்றதன்று. மனிதனுக்குச் சிறந்த கண்ணியத்தை வழங்குகின்ற சமுதாயம் அதிலும் ஒழுக்கத்தில் விழுப்பம் நிறைந்தவர்களைப் பெரிதாகப் போற்றிவாழும் ஒரு சமுதாயமே நாகரிகமான சமுதாயம். எத்துணை ஒழுக்கக் கேடுகளில் வேண்டுமானாலும் வீழட்டும். கண்ணைமூடிக்கொள் அவனிடம் பணமிருக்கின்றதா பார். பணமிருந்தால் அவனே உயர்ந்தவன் எனப்பேசிடும் சுகபோகிகளையும் அடுத்தவர்களைச் சுரண்டி வாழ்வதைத் தங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் கொள்கையாகக் கொண்ட சமுதாயத்தையும் எப்படி நாகரிகமான சமுதாயம் என ஏற்றுக் கொள்ள இயலும். இப்படி ஒரு சமுதாய அமைப்பை நாம் ஐரோப்பாவில் பார்க்கின்றோம். இதே போன்றதொரு அமைப்புதான் அமெரிக்காவிலும் செயலில் இருக்கின்றது. இந்தப் போகவாழ்வின் மோகத்தில் அவர்கள் மனித மாண்புகள் அனைத்தையும் மண் தோன்றிப் புதைத்து விட்டார்கள். இருப்பினும் அவர்கள் தாங்கள் தாம் நாகரிகமானவர்கள் என வாய்கிழியப் பேசிக் கொள்கின்றனர். கொலையும் சூதும் சுரண்டலும் விபச்சாரமும் மலிந்து கிடக்கும் ஒரு சமுதாயத்தை எப்படி நாகரிகமான சமுதாயம் எனப் பேசிட முடியும். இதே போல்தான் கம்ய10னிச நாடுகளும் கம்ய10னிசத்தைத் தங்கள் வாழ்க்கை வழியாக எடுத்துக்கொண்ட சமுதாயங்களும். மனித வரலாறும் வாழ்க்கையும் வயிற்றை நிரப்பிட போடும் போரின் விளைவுகளே எனப் பேசுகின்றன கம்ய10னிச நாடுகள். இதே போரில் மனிதனிடம் வெளிப்பட்டு வளர்ந்திட வேண்டிய அத்தனை மாண்புகளும் மனிதத்தன்மைகளும் மறக்கப்பட்டு விடுகின்றன. உடலின் தேவைகளை மட்டுமே பிரச்னையாக்கி மனிதனிடம் இயல்பாகவே இருந்திடும் அருங்குணங்களை அழிக்கத்துடிக்கும் ஒரு சமுதாயத்தை எப்படிப் பண்புள்ள சமுதாயமாக நாகரிகமான சமுதாயமாக எடுத்திட இயலும். இதனால் தான் இந்தச் சமுதாயங்களெல்லாம் இஸ்லாத்தின் பார்வையில் அஞ்ஞான சமுதாயங்கள்.
மௌட்டிகத்தை மூலதனமாகக் கொண்ட சமூக அமைப்புகள். இஸ்லாம் மனிதனின் அடிப்படைத் தேவைகளையோ அவன் நியாயமாக இந்த உலகில் அனுபவிக்க வேண்டியவற்றை அள்ளிப் பருகிவிடுவதையோ மறுக்கவில்லை. நியாயமான இந்தத் தேவைகளுக்குப் போதிய ஏற்பாடுகளைச் செய்து தருகின்றது. ஆனால் இஸ்லாம் ஒரு போதும் இந்தத் தேவைகளெல்லாம் தான் மனிதவாழ்வு இந்தத் தேவைகளின் அடிப்படையில்தான் சமுதாயங்களின் தராதரங்கள் நிர்ணிக்கப்பட வேண்டும் என எடுத்துக் கொண்டதில்லை. அடிப்படைத் தேவைகளுக்க அவசியமான கவனத்தைச் செலுத்திய பின்னர் இஸ்லாம் மனிதனின் நல்ல ஒழுக்கத்திற்கே எல்லா முக்கியத்துவத்தையும் தருகின்றது. அங்கே ஒழுக்கத்தைக் கொண்டே தராதரங்கள் கணிக்கப்படுகின்றன. அல்லாமல் பணம் நிறம் மொழி இனம் ஆகியவற்றைக் கொண்டு அங்கே கண்ணியங்கள் கணிக்கப்படுவதில்லை. நல்ல பண்புகளும் நல்ல ஒழுக்கங்களும் தான் மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டிடுவது. ஆகவே மனிதனை அல்லது மனித நாகரிகத்தை மிருகங்களைப் போன்ற இயல்புளைக் கொண்டு கணக்குப் போடாமல் ஒழுக்கங்களைக் கொண்டு கணக்குப் போடுவதே முறையானது. ஏழைகள் விவசாயிகள் உழைப்பாளர்கள் தனவந்தர்கள் தொழில்கள் முதலீடு செய்து உற்பத்தியைப் பெருக்கும் முதலாளிகள் நாட்டின் நிர்வாக இயந்திரத்தை இயக்கும் அலுவலர்கள் ஆட்சியாளர்கள் அத்தனைபேரும் நல்ல ஒழுக்கத்தின் குன்றாய் நின்றிட வேண்டும் என விரும்புகின்றது இஸ்லாம். இதைக் கொண்டே நாகரிகம் பண்பாடு கலாச்சாரம் என்பனவற்றை நிர்ணயிக்கின்றது இஸ்லாம். ஒரு சமுதாயம் என்பது பல குடும்பங்களின் கோர்வை. குடும்பம் என்பது தனிமனிதர்களால் வேயப்படுவது. இந்தத் தனிமனிதர்கள் எப்படி இருக்கின்றார்களோ அப்படியே அமையும் குடும்பம். குடும்பங்கள் எப்படிக் கோர்க்கப்படுகின்றனவோ அப்படியே அமையும் குடும்பம். ஆகவே குடும்பங்கள் எப்படிப் பராமரிக்கப்டுகின்றனவோ அதில் அங்கம் வகிக்கும் தனிமனிதர்கள் எப்படி வளர்க்கப்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்தே சமுதாங்கள் பரிணாமமெடுக்கும்.
நல்ல பண்பாடுமிக்க ஒழுக்கமிக்க சமுதாயங்கள் உருவாக வேண்டும் என்றால் குடும்பங்கள் தங்கள் உறுப்பினர்களான தனிமனிதர்களை நன்றாகத் தயாரித்திட வேண்டும். குடும்பங்களைத் தாங்கி நிற்பவர்கள் குடும்ப உறுப்பினர்களை பயிற்றுவிப்பவர்கள் தாயும் தந்தையுமே. ஓரு குடும்பத்தின் தலையாயப்பணி குழந்தைகளை சீலமிக்கவர்களாக வளர்த்தெடுப்பதே. தாயும் தந்தையும் தாங்கள் ஆற்றிடவேண்டிய பணிகளைத் தங்கள் இயல்புகளுக்கேற்ப பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அதில் குழந்தையை வளர்க்கின்ற பணிக்குத் தலையாய மதிப்பதை; தந்திட வேண்டும். தந்தை உழைத்து உண்ணத் தருவார். தாய் உருவாக்குவாள் குழந்தைகள் ஒழுக்கமிக்கவர்களாக. இந்த அமைப்புப் பாங்குற பரிபாலிக்கப்படுகின்ற ஒரு சமுதாயமே நாகரிகமான பண்பாடு மிக்கச் சமுதாயம். இஸ்லாம் வகுத்துத் தந்துள்ள குடும்ப அமைப்பில் இந்த அமைப்பு அப்படியே செயல்படுத்தப்படுகின்றது. இதனால் இஸ்லாம் சொல்லும் ஒழுக்க மாண்புகள் இளைய தலைமுறையிடம் இனிவரும் புதிய தலைமுறையிடம் அப்படியே சென்று சேருகின்றது. இந்த ஒழுக்கங்களை மனித மாண்புகளை புதிய தலைமுறையிடம் கொண்டுவந்திட இருக்கும் ஒரே வடிகால் குடும்ப அமைப்பே. இதற்கு பெற்றோர்கள் ஒரு பெரும் பொறுப்பை முறையாகச் சுமந்து நிறைவாக நிறைவேற்றிட வேண்டியதிருக்கின்றது. பெற்றோர்கள் இந்தப் பொறுப்புக்களை நிறைவாக நிறைவேற்றிட வேண்டிய சமூக விதிகளை நிறைவாக வகுத்துத் தந்திருக்கின்றது இஸ்லாம். இதற்கு நேர்மாறாக பெண்களும் ஆண்களும் விருப்பம் போல் கலந்து விரும்பும் விதத்தில் கூடலாம். அதில் குடும்ப விதிகளுக்கு எதிராக குழந்தைகளைப் பெறலாம். இந்தக் குழந்தைகள் எதிர்வரும் நாள்களில் சட்டத்திற்குப் புறம்பான குழந்தைகள் என அழைக்கப்படலாம்.
அது சமுதாயத்தின் கவலை இல்லை என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு சமுதாயங்கள் இயங்கத் தொடங்கினால், அந்தச் சமுதாயத்தில் ஒழுக்கங்கள் எப்படித் தழைக்கும். கணவன் - மனைவி ஆகியோருக்கு இடையேயுள்ள உறவும் பிணைப்பும் நல்ல பண்புகளால் பின்னப்படாமல் உடல் தாகங்களைக் கொண்டே பிணைக்கப்பட்டால் எதிர்வரும் தலைமுறையினர் என்ன ஆவார்கள்? கணவனும் மனைவியும் தங்கள் பணிகளைத் தாங்கள் சுமக்கும் பொறுப்பின் அடிப்படையில் பிரித்திட வேண்டும். அத்தோடு பொறுப்புக்கள் ஆணின் இயல்புகளுக்கேற்பவும் பெண்ணின் இயல்புகளுக்கேற்பவும் பகிரப்பட வேண்டும். அல்லாமல் பெண்கள் உடல் தாகம் தணிக்கும் கவர்ச்சிப் பொருள்களாகவும் காதல் பொருள்களாகவும் மட்டுமே பார்க்கப் படுவார்களேயானால் அங்கு குடும்பப் பொறுப்புக்களைப் பகிர்ந்திடுவதில் குளறுபடிகளே மிஞ்சும். பேண்கள் புதிய தலைமுறையைக் கண்காணித்து வளர்ப்பது அதாவது குழந்தைகளின் பராமரிப்பு வளர்ப்பு என்ற விமானங்களில் பறந்து செல்லும் செல்வந்தர்களை உபசரித்து உற்சாகப்படுத்தப் போய்விட்டால் அவள் குடும்பப் பொறுப்புக்களிலிருந்து விலகிக் கொண்டு ஹோட்டல்களின் வரவேற்பு அறைகளில் அலங்காரமாக அமர்ந்து வந்தாரை வராத புன்முறுவலை வரவழைத்துக்கொண்டு வரவேற்கப் போய்விட்டால் அவள் குடும்ப பொறுப்பிலிருந்து மிரண்டு கப்பல்களிலும் வியாபார நிறுவனங்களிலும் உற்பத்தி நிர்வாகங்களிலும் உள்ளே புகுந்து உழைக்கின்றேன் என்று போய்விட்டால் குடும்பங்கள் குலையும் இளையதலைமுறையினர் எடுப்பார் கைப்பிள்ளைகளாக தறுதலைகளாக ஆக்கப்படுவார்கள். பெண்கள் குடும்பப் பொறுப்பை உதறித்தள்ளிவிட்டு வெளியே சென்று உழைக்கப் போவதற்கு ஆயிரம் காரணங்களை அள்ளித்தரலாம். அது அவளது உரிமை இன்றைய சமுதாயத் தேவை என்றெல்லாம் முழங்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் ஆபத்து குடும்பத்தைக் கவ்விக் கொள்கின்றது.
அது புதிய தலைமுறையை நெறி கெடவைத்து விடுகின்றது. இதனால் குடும்பங்களும் அந்தக் குடும்பங்களின் கோர்வையாக அமையும் சமுதாயங்களும் பாழ்பட்டுப் போகும் என்பது உண்மை. நடைமுறை வாழ்க்கைகள் நமக்குப் புகட்டும் பயனுள்ள பாடம். இது எதனால் நடக்கின்றது சமுதாயங்கள் பொருள்களை உற்பத்தி செய்து செல்வத்தைக் குவித்துக் கொள்வதே வாழ்வின் ஒரே இலட்சியம் எனக் கொண்டு வாழ்வதால் தான். இங்கே ஒழுக்கங்களை விட பொருளும் பணமுமே முக்கியம் எனக் கருதப்படுகின்றது. இதனால் தான் இந்தச் சமுதாயங்களைப் பிற்போக்கான சமுதாயங்கள் நாகரிகமடையாத சமுதாயங்கள் என்கின்றோம். இஸ்லாத்தின் சொல்லாட்சியில் இதற்கு ஜாஹிலிய்யா அஞ்ஞான சமுதாயம் என்று பெயர். இன்றைக்கிருக்கின்ற எல்லாச் சமுதாயங்களிலும் ஒழுக்கம் என்பது மிகவும் குறுகலான ஒரு பொருளிலேயே எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இன்னும் சொன்னால் மிகவும் குளறுபடியானதோர் பொருளிலேயே புழங்கப்படுகின்றது. மனிதனை விலங்கிலிருந்து பிரித்துக்காட்டும் உயர்ந்த ஒழுக்கங்கள் இன்றைய சமுதாயங்களின் கணக்கில் வரவே இல்லை. இந்த ஒழுக்கங்கள் இன்றைய சமுதாயங்களின் சிந்தனைக்கும் செயலுக்கும் வெளியேதான் இருந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சமுதாயங்களில் திருமண ஒப்பந்தங்களின் மூலம் கைப்படித்த காரிகைகளை மறந்து கண்டவர்களோடு கூடுவது தவறில்லை என்றொரு மனநிலை நிலவுகின்றது. ஏன்? ஒருபால் புணர்ச்சி இந்த உணர்ச்சியற்ற சமுதாயங்களில் தனிமனித உரிமை என்ற சாக்கில் புனிதமாகிவிட்டது. ஒழுக்க நெறிமுறைகள் என்பன அங்காடிகளில் விலைக்குக் கிடைக்குமா என வினவும் சமுதாயங்கள் இவை. ஒரு முறை ஒரு வெட்கங்கெட்ட ஒரு விவாதம் ஆங்கிலேயர்களின் நாடாளும் மன்றத்தில்.. பிரஃபீமோ என்றொரு அமைச்சர் இவருக்கும் கிரிஸ்டைன் கீலர் என்றொரு அழகிக்கும் கூடா காதல். அரசியல் அந்தஸ்தில் இருவருங்கூடி பால்வினை நோய்களுக்கு எதிர்க்கலாம் ஒன்று வேண்டுமே என முழுமூச்சாய் உழைத்துக்கொண்டிருந்தனர். இந்த அந்தரங்க சங்கமம் சந்திக்கு வந்தது. சபை கூடி விவாதித்தது. அது போது கிரிஸ்டைன் கீலர் என்ற இந்த அழகிக்கு இன்னொரு படுக்கை துணை உண்டென்பது ஊரெல்லாம் உலகமெல்லாம் தெரியவந்தது. இந்த அம்மணியின் இரண்டாவது உடல் கவர்ந்த காதலன் ரஷ்யாவின் கப்பற்படை அதிகாரி. இப்படி தனது உடலை அரசியல் அந்தஸ்து உள்ளவர்களுக்கு விளையாட்டு அரங்கமாக அமைத்து ஆனந்தித்துக் கிடந்தாள் இவள். இந்த உண்மைகள் ஆங்கில நாடாளுமன்றத்தில் நிரூபிக்கப்பட்டன.
பிரஃபீமோ என்று அந்த ஆங்கில அமைச்சர், பொய்யைச் சொல்லி தப்பிக்கப் பார்த்தார். அதற்குள்ளால் இந்த அழகி ஆங்கில அமைச்சருக்குத் தன் உடலைத்தந்து இராணுவ இரகசியங்களுக்குத் தன் உள்ளத்தில் இடத்தைப் பிடித்திருந்தாள் என்பது உலக அரங்கில் பேசப்பட்டது. இந்த மொத்த விவகாரத்திற்கு அவனியிலே கீர்த்தியும் கித்தாப்பும் பெற்ற ஆங்கில நாடாளுமன்றம் தந்ததீர்ப்பு என்ன தெரியுமா? அழகியொருத்தியோடு ஆங்கில அமைச்சர் ஆனந்தக்கூத்தாடியது தவறில்லை. அது பண்பாட்டின் வரையறைக்கு உட்பட்டது தான். ஆனால் அதில் இராணுவ இரகசியங்கள் சிக்கியது தான் சிலாக்கியமில்லாமல் போய்விட்டது என்பது தான். கோமான்களின் சபையும் சீமான்களின் அவையும் இப்படிப்பார்த்தது இந்தப் பிரச்னையையென்றால் அந்தச் சமுதாய அமைப்பில் வாழ்ந்த சாமான்யர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? மாதுவின் மோகத்தில் மந்திரி மயங்கியது தவறில்லை. ஆனால் இராணுவ இரகசியங்கள் ரஷியா போனதுதான் சற்று நெருடலாக இருக்கின்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக அந்த நாடாளும் மன்றத்தில் அந்த அமைச்சர் விழுந்து விழுந்து பொய் சொன்னார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து அமைச்சர் பொய் சொல்கின்றார் என்பதை நிரூபித்தார்கள். இதையாரும் கண்டுகொள்ளNவு இல்லை. மக்கள் பிரதிநிதி பொய் சொன்னது குற்றமில்லை. அமைச்சர் பெருமகன் அழகியோடு கொண்ட கூடா உறவில் குற்றமில்லை என்பது அந்தச் சமுதாயத்தில் வேரூன்றி வளர்ந்துவரும் பண்பாடு. இந்தக் காமக்களியாட்டத்தின் நடுவே இராணுவ இரகசியங்கள் அகப்பட்டது தான் சிக்கலாய் போய்விட்டது அந்த மக்களுக்கு இந்தச் சமுதாயத்தைப் பண்பாட்டின் முகட்டில் நிற்கும் சமுதாயம் எனப் பிரச்சாரம் செய்தால் ஏற்றுக் கொள்வார்களா ஏற்றமிகு ஒழுக்கத்தை உயிராய்க் கொண்ட இஸ்லாமிய சமுதாயத்தினரா? மாந்தர்கள் அனைவரும் ஒப்பானவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தோரை உயர்ந்தவர் எனப்போற்றும் சமுதாயம் மேலே நாம் விவாதித்த சமுதாயத்தை ஒத்துக்கொள்ளுமா? அதனால் தான் இந்தச் சமுதாயங்கள் இந்தச் சமுதாயத்தில் வளரும் பண்பாடுகள் அனைத்தும் அநாகரிகமானவை.
இஸ்லாத்தின் மொழி அகராதியில் அவற்றிற்கு (ஜாஹிலிய்ய சமுதாயம்)அஞ்ஞான சமுதாயம் என்று பெயர். இதே போல் எத்தனையோ விவாதங்கள் காமவெறியின் களிநடனங்கள் சல்லாப சர்ச்சைகள் அமெரிக்காவின் நாடாளும் மன்றத்திலும் ஆங்கில நாடாளும் மன்றத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. வேவு பார்க்க பெண்களை வேசிகளாக மாற்றுவது இவர்களின இராஜயுக்திகளில் ஒன்று. இந்த வேசிகளும் அவர்களிடம் தாகந்தணித்துக் கொள்பவர்களும் பின்னர் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்திடுவது வாடிக்கை. இந்தச் செயல்களெல்லாம் ஒழுக்க நெறிகளை மீறிய செயல்கள் என்பதால் தவறானவை என இந்தச் சமுதாயங்கள் கருதுவதில்லை. இவற்றிலெல்லாம் நாட்டின் பாதுகாப்பிற்கும் பங்கம் தரும் செயல்கள் சம்பந்தப்பட்டு விட்டனவோ என்பதால் தான் இந்தச் சமுதாயங்கள் கவலைப்படுகின்றன. இதனால் தான் இந்தச் செயல்களைத் தவறானவை எனக்கருதுகின்றன. இதனால் தான் இஸ்லாம் இவற்றை அஞ்ஞான சமுதாயங்கள் என அழைத்திட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகுகின்றது. இந்த அஞ்ஞான சமுதாயங்களில் எழும் எழுத்தாளர்கள். வரும் பத்திரிகையாளர்கள் வாணிபம் பெருக்கும் விளம்பரதாரர்கள் இவர்களெல்லாம் ஒருபெரும் ஒழுக்கத்தைப் பிரச்சாரம் செய்கின்றார்கள். அது திருமணமான தம்பதிகளும் திருமணமாகாத இளைஞர்களும் தகாத உறவுகளில் தாராளமாக ஈடுபடலாம் என்பதே. (என் மகள் திருமணமாகும் வரை தன் கற்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என நான் கருதவில்லை என்ற கூறும் தாய்மார்களை உருவாக்கியது இந்த எழுத்தாளர்களின் சாதனை - மொழிபெயர்ப்பாளர்) இந்த ஒழுக்கத்தை நிலைநாட்டிய பின்னர் அவர்கள் இன்னொரு பண்பாட்டுப் புரட்சிக்குப் படை நடத்திச் செல்கின்றனர். தாம்பத்திய உறவு என்ற கோட்டையை அவர்கள் குறிவைத்துத் தாக்குகின்றார்கள். திருமணமான தம்பதியரில் மனைவிக்கு விருப்பமில்லாத நேரத்தில் கணவன் அவளைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளச் செய்தால் அது கற்பழிப்பு என்ற கொடிய குற்றத்தின் கீழ் வருமாம். அதேபோல் பெண்ணொருத்தி ஒருவனுக்கு மனைவியாகிவிட்டாள். காலப்போக்கில் அவள் இன்னொருவனுக்குத் தன் இதயத்தில் இடந்தந்து விட்டாள். இதயத்தில் மட்டுமல்ல இல்லத்திலும் இடம் கொடுத்துவிட்டாள். இதை அவன் தட்டிக்கேட்கலாமா? கூடாது.
அப்படி அவன் தட்டிக்கேட்டால் அவன் மனைவியின் தனிப்பட்ட உரிமையில் கைவைத்து விட்ட குற்றத்தைச் செய்துவிட்டான். இந்த அநாகரிகத்தை விதியாக ஆக்கிடத் துடிக்கின்றனர் ஒரு சில் எழுத்தாளர்கள் (திருமணமான முதல் இரவிலேயே தன் கணவனை வெளியே இருத்திவிட்டு தன் உள்ளங்கவர்ந்த கள்வனோடு அறையிலே களித்துக் கொண்டிருந்தாள் ஒரு வங்காள தேச எழுத்தாளர். பெண்கள் தங்கள் கருப்பைக்குள் தாங்கள் விரும்பும் ஆணின் விந்துவைப் பெறும் உரிமையைப் பெற்றாக வேண்டும். இந்த விந்து அவளுடைய கணவனுடையதாகத் தான் இருந்திட வேண்டும் என்றில்லை. குசநநனழஅ ழக வாந ருவநசரள கருப்பையின் சுதந்திரம் என்கிறார் இந்த வங்காள மொழி எழுத்தாளர் இந்த எழுத்தாளருக்கு உலகப் பெண் விடுதலை தலைவி எனப் பாராட்டு பதக்கம் பரிசு பாதுகாப்பு குடும்பம் என்ற நல்லதொரு பல்கலைக்கழகத்தை விபச்சார மடமாக ஆக்கிடத்துடிக்கும் இந்தப் பெண்ணை எதிர்த்த முஸ்லிம்கள் அநாகரிகமானவர்களாம். தீவிரவாதிகளாம் இந்தப் பெண்ணுடைய விபச்சார எழுத்துக்களை மலிவு விலையில் அச்சிட்டு குறைந்த விலையில் விநியோகம் செய்து பரிசும் பதக்கமும் தந்தவர்கள் நாகரிகமானவர்களாம். இந்த அம்மணிக்கு ஐரோப்பாவில் நாள் தவறாமல் விருந்து அந்த விருந்திற்கு உலகெங்கும் தொலைகாட்சியில் விருந்து. இந்த எழுத்தாளர் தான் தஸ்லீமா நஸ்hPன் - மொழி பெயர்ப்பாளர்). அதன் வழியில் ஒழுகப் பணிக்கும் இஸ்லாமே உண்மையான நாகரிகம் என்றால் அது மிகையாகாது. மனிதன் தன்னுள் புதைந்து கிடக்கும் மிருக உணர்வுகள் தலையெடுத்துத் தன்னை ஆட்டிப் படைத்திடாமல் தடுத்திட வேண்டும். மனிதன் தன்னுள் கொட்டிக் கிடக்கும் மனித மாண்புகளைப் பட்டைத் தீட்டி பளபளக்கச் செய்திட வேண்டும். மனிதன் தன் மிருக உணர்வுகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திட இருக்கும் மிகப்பெரிய கடிவாளந்தான் குடும்பம். இந்தக் குடும்பம் என்ற புண்ணி இடத்தில் அவனது மிருக உணர்வுகள் தாகம் தீர்த்துத் திருப்தியைப் பெறுகின்றன. இந்தக் குடும்பம் என்ற கலாசாலையில் தான் இளைய தலைமுறையினர் இனிவரும் தலைமுறையினர் தங்கள் முதல் பாடத்தையும் முத்தான பயிற்சியையும் பெறுகின்றனர். இந்தப் பயிற்சியும் பாடமும் தான் அவர்களை எதிர்வரும் நாட்களில் ஏற்றத்தோடு வாழவைக்கின்றது. இந்த ஏற்றமிகு வாழ்க்கையிலிருந்து தழைப்பது தான் அடுத்து வரும் தலைமுறை. இதற்கு நேர் எதிராக மனிதர்கள் தங்கள் காமத்திற்குக் கரைகளை அமைக்காமல் காமத்தைக் காட்டாற்று வெள்ளமாய் எல்லா ஒழுக்க நெறிகளையும் அடித்துச் செல்ல விட்டுவிட்டால் குடும்பம் குலைந்து விடும்.
எந்த நீதியும் நெறியுமில்லாத தறுதலையான இளைய சமுதாயம் தோன்றிவிடும். இந்த ஒழுக்கமற்ற இளைய தலைமுறை இருப்பதும் இறப்பதும் எதற்கு என்பதை அறியாமல் தட்டலைந்திடும். குழப்பம் கொந்தளிப்பு இவற்றால் சமுதாயம் போர்க்களமாகக் குரதியைக் கொட்டிக் கொண்டிருக்கும். இதில் மனித இயல்புகள் வாழ்வதற்கு உபாயங்களே இல்லை என்றாகிவிடும். இதனால் தான் குடும்பங்கள் ஆழமாய் வேர்விட்டு ஆலமரமாய்த் தழைக்க வேண்டும் என்பதில் இஸ்லாம் தனிககவனத்தைச் செலுத்துகின்றது. நிலையான முறையான ஒழுக்க வரம்புகளை செயலில் கொண்டு வந்து அந்தக் குடும்பங்களைத் தற்காத்து வருகின்றது இஸ்லாம். இந்த ஒழுக்க நீதிகளையும் வரையறைகளையும் எந்த நிலையிலேயும் இஸ்லாம் தாழ்த்தவோ தளர்த்தவோ தயாராக இல்லை. இஸ்லாத்தின் உறுதியான இந்த ஒழுக்க நெறிகள் மனித இனம் தழைக்கப் பெரிதும் துணை நிற்கின்றன. இனிவரும் தலைமுறைக்கும் தக்கதோர் தளம் அமைத்துத் தருகின்றன. இதனால் தான் அது உண்மையான நாகரிகம் பண்பாடு எனப் போற்றப்படுகின்றது. இறுதியாக ஒரு கருத்தை நாம் விரிவாக விவாதிக்க வேண்டும். மனிதனைப் படைத்த இறைவன், ப10மியில் மனிதனுக்கு தனியானதோர் கண்ணியத்தை வழங்கியுள்ளான். அந்தக் கண்ணியம் மனிதன் இந்தப் ப10மியில் இறைவனின் பிரதிநிதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பதே. இந்தப் பிரதிநிதி என்ற பொறுப்பை அவன் இறைவனுக்கு முற்றாகக் கீழ்ப்படிந்து நடப்பதன் மூலம்தான் நிறைவேற்றகின்றான். இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் அவன் இறைவனையன்றி வேறு யாருக்கும் கீழ்ப்படிவதில்லை. அவன் இறைவன் வகுத்துத் தந்த உன்னதமான குடும்ப அமைப்பைக் கூடுதல் குறைவின்றி நிலை நாட்டுகின்றான். வேறு எந்தச் சமுதாய அமைப்புக்களையும் அவன் ஏற்றுக் கொள்வதில்லை. அவன் அல்லாஹ் வழங்கிய ஷாPஅத் சட்டங்களையன்றி வேறு எந்தச் சட்டங்களையும் தன் வாழ்க்கையில் ஏற்று நடப்பதில்லை. அல்லாஹ்வின் பிரதிநிதி என்ற உயர்ந்த கண்ணியத்திற்கு உரித்தான அவன் அல்லாஹ் நியமித்த ஒழுக்க நியதிகளைக் கிஞ்சிற்றும் பிறழாமல் அப்படியே கடைபிடிக்கின்றான். இத்தனையிலும் அவன் அந்த இறைவனை மகிழ்விக்கின்றான். பெருமையுறச் செய்கின்றான். இத்தனைப் பாங்கோடும் பணிவோடும் அவன் தன் வாழ்வை அதை;துக் கொள்ளும் போது அவன் இயற்கையை ஆராய்ச்சி செய்கின்றான். மனித இனத்திற்குப் பயன்படுமு; எத்தனையோ கனிவளங்களை அகழ்ந்தெடுக்கின்றான். இந்த ஆராய்ச்சிகளையும் அந்த ஆராய்ச்சியின் பயனாய் கிடைத்த இயற்கை வளங்களையும் அவன் இறைவனின் வழியில் தான் மேற்கொண்ட முயற்சியில் கிடைத்ததாய்க் கருதுகின்றான். இறைவன் அவனுக்குக் கொடுத்த அருள்கொடையாம் அறிவைப் பயன்படுத்தி தொழிற் சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை இயற்கையிலிருந்து அகழ்ந்தெடுக்கின்றான். இறைவன் மனிதனுக்காக மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கும் அதிசயமான வளங்களைக் கண்டு ஆச்சரியப்படுகின்றான். அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுகின்றான்.
மனிதனுக்குக் கேடு பயப்பனவற்றைத் தவிர்த்து விடுகின்றான். மனித இனத்தை அழிக்கின்ற எந்தச் சிறு ஆராய்ச்சியையும் அவன் செய்வதில்லை. இத்தனையிலும் அவன் இறைவன் தந்த கண்ணியமாம் பிரதிநிதி என்பதைப் பணிவோடு நிறைவேற்றுகின்றான். இஸ்லாம் வெறும் புதிய கண்டுபிடிப்புகளை எந்தச் சமுதாயம் வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம். இறைமறையாம் திருமறை இதுபற்றி தெளிவாகவே கோடிட்டு காட்டி இருக்கின்றது.
ஆது (என்னும் ஜனங்களும் நம்முடைய)தூதரைப் பொய்யாக்கினார்கள். அவர்களுடைய சகோதரர் ஹ_து அவர்களை நோக்கி நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா? நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பெற்ற நம்பிக்கையான ஒரு தூதனாவேன். ஆதலால் நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிப்பட்டு நடவுங்கள். இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் உலகத்தார் யாவரையும் சிருஷ்டித்துப் போஷிப்போனிடமே இருக்கின்றது, நீங்கள் உயர்ந்த இடங்களிலெல்லாம் ஞாபகச் சின்னங்களை வீணாகக் கட்டுகின்றீர்களா? நீங்கள் (அழியாது) என்றென்றும் இருப்பவர்களைப் போல் (உங்கள் மாளிகைகளில் உயர்ந்த) வேலைப்பாடுகளையும் அமைக்கின்றீர்கள். நீங்கள் (எவரையும்)பிடித்தால் (ஈவிரக்கமின்றி)மிக்கக் கொடுமையாக நடத்துகின்றீர்கள். நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிப்பட்டு நடவுங்கள். நீங்கள் அறிந்த பல பொருள்களையும் எவன் உங்களுக்கு(க் கொடுத்து)உதவி புரிந்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள். சந்ததிகளையும் ஆடு மாடு ஒட்டகங்களையும் உங்களுக்கு (க் கொடுத்து) உதவி செய்திருக்கின்றான். தோட்டாந்துரவுகளையும் (அவனே உங்களுக்கு அளித்திருக்கின்றான். அவனுக்கு நீங்கள் மாறு செய்தால்) நிச்சயமாக நான் மகத்தானதொரு நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று பயப்படுகிறேன் என்று கூறினார் (அல்குர்ஆன் 26:123-135) நபி ஸாலிஹ் (அலை) அவர்கள் தங்களுடைய மக்களிடம் நீங்கள் (பாபத்தைத்)தவிர்த்துக் கொள்ள வேண்டாமா? நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பெற்ற மிக்க நம்பிக்கையான ஒரு தூதனாவேன். ஆதலால் நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிப்பட்டு நடவுங்கள். இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி யாவும் உலகங்கள் யாவையும் சிருஷ்டித்துப் போஷிப்போனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை. இங்கு (உள்ள சுகபோகங்களில் என்றென்றுமே) அச்சமற்று (வாழ) விட்டு வைக்கப்படுவீர்களா? ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிப்பட்டு நடவுங்கள். வரம்பு மீறுவோரின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படியாதீர்கள். அவர்கள் ப10மியில் விஷமம் செய்வார்களேயன்றி நன்மை செய்ய மாட்டார்கள் என்று கூறினார். அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்து விடவே (அவர்களைச் சோதிக்கும் பொருட்டு) ஒவ்வொரு பொருளின் வாயில்களையும் நாம் அவர்களுக்குத் தி;றந்து விட்டோம். (அவர்களுக்கு வேண்டுவனவெல்லாம் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தன) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு அவர்கள் ஆனந்தமடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நாம் வேதனையைக் கொண்டு) அவர்களைத் திடு கூறாய்ப் பிடித்துக் கொண்டோம். அந்நேரத்தில் அவர்கள் செயலற்று விட்டளர் (அல்குர்ஆன் 6:44)
இவ்வுலக வாழ்க்கையின் உதாரணம் மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் நீரை ஒத்திருக்கின்றது. அது கால்நடைகளும் மனிதர்களும் புசிக்கக் கூடிய புற்ப10ண்டு முதலியவைகளுடன் கலந்து அடர்ந்த பயிராக வளர்ந்து (ப10த்துக் காய்த்துக் கதிர்விட்டுப்) ப10மியை அலங்காரப்படுத்திக் கொண்டிருக்கும் தறுவாயில் அதன் சொந்தக்காரர்கள் (நாம் செய்த வேளாண்மை அறுவடைக்கு வந்துவிட்டது. நாளைக்கு) அதனை நிச்சயமாக நாம் அறுவடை செய்துவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயம் இரவிலோ பகலிலோ நம்முடைய கட்டளையினால் ஓர் ஆபத்து வந்தது. அதனால் அவை நேற்றையதினம் அவ்விடத்தில் இருக்கவே இல்லை என்று எண்ணிக் கூடியவாறு அவைகளை நாம் அழித்துவிட்டோம். (இந்த உதாரணத்தைச்) சிந்தித்துணரக்கூடிய மக்களுக்கு (நாம் நம்முடைய) வசனங்களை இவ்வாறு (தெளிவாக) விவரிக்கின்றோம். (அல்குர்ஆன் 10:24)
இங்கே நாம் ஒன்றை உறுதியாகக் கவனிக்க வேண்டும். இந்த உலகிலே கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புக்கள், அறிவியலின் அதிசயமான முன்னேற்றங்கள் இவற்றிற்கு இஸ்லாம் எதிரானது அல்ல. இதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கின்றோம். இஸ்லாம் அவற்றை இறைவனின் அருட்கொடைகள் எனப் பார்க்கின்றது. அவை மனிதனின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். மனிதனின் நல்வாழ்வை மனதிற்கொண்டு அகழ்ந்தெடுக்கப்படும் அத்தனைக் கண்டுபிடிப்புகளும் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் அழகிய வழிபாடு எனப் போற்றுகின்றது இஸ்லாம். திருமறையாம் திருக்குர்ஆன் இறைவன் மனிதனுக்கு அள்ளித்தந்திருக்கும் அருள்கொடைகளைப் பற்றிய வாக்குறதிகளை ஏராளமாகப் பார்க்கின்றோம். ஆனால் இதற்கோர் நிபந்தனை. அது மனிதன் அல்லாஹ்வுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடந்திட வேண்டும். நூஹ் (அலை) அவர்கள் சொன்னார்கள்
(நான் என் மக்களிடம் சொன்னேன்) உங்கள் இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மன்னிப்பவன். (அவ்வாறு செய்வீர்களானால் தடைபட்டிருக்கும்)மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாய் பொழியச் செய்வான். பொருள்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்குத் தோட்டங்களiயும் உற்பத்தி செய்து ஆறுகளை உங்களுக்காக ஓட்டிவைப்பான். (அல்குர்ஆன் 71: 10-12)
அவ்வ10ர்களில் இருந்தவர்கள் விசுவாசங் கொண்டு அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்திருந்தால் அவர்களுக்காக வானத்திலும் ப10மியிலுமுள்ள பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும் அவர்கள் (நபிமார்களை விசுவாசிக்காது) பொய்யாக்கினார்கள். எனவே நாம் அவர்கள் தேடிக் கொண்டதன் காரணமாக (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக்கொண்டோம். (அல்குர்ஆன் 7:96).
ஆனால் ஒன்று, மனிதன் இறைவனின் அருட்கொடைகளைக் கொண்டு என்னென்ன செய்கின்றான் என்பது மிகவும் முக்கியம். அவன் மனித இனத்தின் வாழ்வுக்கு உதவி செய்பவற்றை உற்பத்திச் செய்தால் அவன் நாகரிகம் அடைகின்றான். அதை மனித இனத்தின் அழிவுக்குப் பயன்படுத்தினால் அநாகரிகமானவன். நல்ல ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் உருவாகும் சமுதாயமே அல்லாஹ்வின் அருள்கொடைகளை மானிடர்களின் நல்வாழ்வுக்குப் பயன்படுத்திடும் என்பது ஊரறிந்த உண்மை. ( சிறு நீரகங்களை மாற்றலாம் என்பது ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பு . இது கண்டுபிடிக்கப்பட்ட அன்று முதல் அப்பாவி மக்களின் சிறுநீரகங்களை அவர்களுக்கே தெரியாமல் மாற்றி தேவையானவர்களுக்கு விற்பனை செய்கின்றார்கள். இதனால் சிறுநீரக அங்காடி என்றொன்று சர்வதேசிய அளவில் உருவாகி இருக்கின்றது. விஞ்ஞானத்தின் புதிய கண்டுபிடிப்புகள், இறைவனைப் பற்றிய எண்ணமும் அச்சமும் இல்லாதவர்களின் கைகளிலே சிக்கிடும் போது இப்படித்தான் செயல்படும் -- மொழிபெயர்ப்பாளர்) நாகரிகம் என்ற சொல்லுக்கு நாம் மேலே தந்துள்ள விளக்கம் ஏதோ நூல்களிலே நுகர்ந்துவிட்டு விட்டு விடப்பட வேண்டியதல்ல. அல்லது இது கடந்து போன காலங்களில் வாழ்ந்து மடிந்த ஒரு நாகரிகமுமல்ல. அது மனித இனத்தில் என்றும் வாழ்ந்திட வேண்டிய ஒன்று. இத்தகையதொரு நாகரிகம், அந்த நாகரிகம் உயிருடன் உலாவிய இஸ்லாமிய சமுதாயம் அன்று போல் இன்றும் இன்று போல் என்றும் தேவைப்படுகின்றது. இன்னும் சொல்லப் போனால் அது மட்டுமே மனித இனத்தை எதிர்நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஒழுக்க அழிவுகளிலிருந்து காப்பாற்றிடும்.
இது அறிவியல் துறையிலே அதிசயமான முன்னேற்றங்களை சாதனைகளை நடத்திக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு மட்டுந்தான் தேவை என்றில்லை. அதே போல் பொருளாதார வளங்கள் வாய்க்கப் பெற்ற நாடுகளுக்கு மட்டுந்தான் தேவையென்றில்லை. இந்த நாகரிகம் இந்த இஸ்லாமிய பண்பாடு, பொருளாதாரத் துறையிலும் இதர துறைகளிலும் பின்தங்கிய நாடுகளுக்கு மிகவும் அவசியம். வரலாற்றில் இந்த நாகரிகம் வனப்போடு வாழ்ந்து பலன் தந்தது இஸ்லாமிய வரலாற்றில் தான். ஒழு முழுமையான இஸ்லாமிய சமுதாய அமைப்பில் மட்டுமே இந்த நாகரிகம் முழமையாகப் பரிணமித்திட இயலும். இப்படிச் சொல்லி விடுவதால் இந்த நாகரிகம் எழுத்துக்களோடு வாழ்ந்திட வேண்டிய ஒன்று தானா? என வினவிடத்தோன்றும். இல்லை, இதை இன்றும் மனித வாழ்வில் முகிழ்ந்திடச் செய்திட இயலும். இதற்கு ஒரே ஒரு வாய்ப்புத்தான் உண்டு. அது இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகவும் முறையாகவும் பின்பற்றிடுவதே. இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகவும் முறையாகவும் பின்பற்றினால் எந்தச் சூழ்நிலையிலும் இப்படியொரு சமுதாயத்தை நிறுவிடலாம். அது பொருளாதாரத்தில் முன்னேறிய சமுதாயமானாலும் சரி பொருளாதாரத் துறையில் பின்தங்கிய சமுதாயமாக இருந்தாலும் சரியே. ஆது விஞ்ஞானத்தில் விண்ணைத் தொட்டுத் தழுவி நிற்கும் சமுதாயமாக இருந்தாலும் சரி, அறிவியல் வளர்ச்சியில் தவழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயமாக இருந்தாலும் சரி. நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியதைப் போல் பொருளாதார வளம் பெறுவதும் அறிவியல் துறையில் அதிசயங்களை நிகழ்த்துவதும் இஸ்லாத்தால் உற்சாகமும் உதவியும் தந்து வளர்க்கப்படுபவை. இவற்றை இறைவனுக்குச் செய்யப்படும் தொண்டு எனப் போற்றி உற்சாகம் தருகின்றது இஸ்லாம்.
அத்தோடு நிற்காமல் மனிதன் இறைவனின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவன் நிறைவேற்றித் தீரவேண்டிய பொறுப்பு எனவும் பணிக்கின்றது இஸ்லாம். இந்த அடிப்படையில் அறிவியல் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் முன்னேற முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நாடுகளுக்குத் தீர்க்கமானதோர் வழியைக் காட்டுகின்றது இஸ்லாம். இந்த நாடுகளை நீங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்திடாமல் உழைத்து முன்னேறுங்கள். இறைவனின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் நீங்கள் நிறைவேற்றிட வேண்டிய பொறுப்புக்களை நிறைவேற்றிட வேகமாக முயற்சி செய்யுங்கள் என உந்தித் தள்ளுகின்றது இஸ்லாம். இப்படி வளர்ந்து வாழும் சமுதாயங்களை முறைப்படுத்தும் கொள்கை இஸ்லாம். அதே போல் வளராத சமுதாயங்களை வளர்ச்சியை நோக்கிப் பிடித்துத் தள்ளும் ஆற்றல் பெற்றது இஸ்லாம். இதனால் தான் இஸ்லாம் எல்லா சமுதாயங்களுக்கும் ஏற்புடைய ஒரு கொள்கை ஒரு நாகாPகம். உண்மையைச் சொல்வதானால் எல்லாச் சமுதாயங்களுக்கும் அவசரமான தேவை இஸ்லாம். இஸ்லாமிய நாகரிகம் மிகவும் முன்னேறிய சமுதாயத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் அது மனித இனத்தின் இவ்வுலக வாழ்க்கைக்கும் மறுவுலக வாழ்க்கைக்கும் வகை செய்யும். பின்தங்கிய சமுதாயங்களில் அது ஒழுக்கங்களை நெறிப்படுத்தி அவர்களைப் பண்பாட்டின் பாதையிலும் பாங்கான வளர்ச்சியின் பாதையிலும் இட்டுச் செல்லுகின்றது. இந்த மாறுபட்ட வளர்ச்சி நிலைகளையுடைய சமுதாயங்களில் இஸ்லாமிய நாகரிகத்தின் பணி பலவாக இருந்தாலும் இந்த இஸ்லாமிய நாகரிகம் அமைக்கப்படும் அடிப்படைகள் மாறமாட்டா, அந்த அடிப்படைகள் இறைவன் ஒருவனே அவனை மட்டுமே மனிதர்கள் அனைவரும் வணங்கிட வேண்டும். மனிதர்களுக்கிடையில் உள்ள உறவுகள் இறைவன் ஒருவனே என்ற அடிப்படையில் தான் அமைக்கப்பட வேண்டும்.
மனிதன் தன் மிPருக இச்சைகளைக் கட்டுப்படுத்தி மனித மாண்புகளை வளர்த்திட வேண்டும். குடும்ப அமைப்பையும் பொறுப்பான குடும்ப வாழ்க்கையையும் அவன் ஏற்று வாழ்ந்திட வேண்டும். இந்தச் சமுதாய அமைப்பை உருக்குலைக்கும் செயல்களை அவன் செய்திடக் கூடாது. மனிதன் இறைவனின் பிரதிநிதி என்ற கண்ணியத்தைக் காப்பாற்றிடும் வகையில் தனது ஒழுக்கங்களை இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களின் வழி சீரமைத்திட வேண்டும். இறைவனின் சட்;டங்களான ஷாPஅத் சட்டங்களையே வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றிட வேண்டும். இஸ்லாமிய நாகரிகத்தின் இந்த அடிப்படைகளில் எந்த மாற்றமும் எந்த நிலையிலும் இல்லை. மாறாக இந்த அடிப்படைகளைக் கொண்டு மாறிவரும் சூழ்நிலைகளோடு நின்று அந்தச் சூழ்நிலைகளை மானுடம் வாழ மாற்றிடும் ஆற்றல் பெற்றது இஸ்லாம். இப்படித்தான் இநத் இஸ்லாம் சொல்லும் நாகரிகம் ஆப்பிரிக்காவில் நுழைந்து அந்த மக்களை ஆடையணியக் கற்றுத் தந்தது. அவர்களுக்கள் நிலையான நிம்மதியான சமுதாய அமைப்புக்களை ஏற்படுத்தித் தந்தது. இந்த உலகத்தின் இதரப் பகுதிகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று தனித்துக் கிடந்த அந்த மக்களை இந்த உலகத்தின் ஏனைய பகுதியில் வாழும் மக்களோடு பிணைத்தது. சமுதாயத் துறையில் முன்னேறி அவர்கள் நாகரிகத்திலும் முன்னேறினார்கள். உழைப்பில் அவர்களுக்கு ஓர் ஈடுபாட்டை ஏற்படுதத்pத் தந்தது. அதனால் அவர்கள் உழைப்பில் ஓர் உயர்ந்த சுகம் இருப்பதைக் கண்டார்கள். அதன் பயனாய்த் தங்கள் வாழ்க்கை முன்னேறுவதையும் கண்டார்கள்.
இனம் குலம் எனச்சுரங்கிக் கிடந்த மக்கள் இஸ்லாம் என்ற உலக சமுதாயத்தின் அங்கங்களாக ஆனார்கள். அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக ஆகினார்கள். அத்தோடு தாங்கள் கண்மூடித்தனமாக வழிபட்டு வந்த தெய்வங்களையும் சிலைகளையும் தூக்கியெறிந்தார்கள். உலகைப்படைதது, உலகைப் பரிபாலித்துவரும் படைத்தவனின் பிரதிநிகளாக உலகமா சமுதாயத்தில் சங்கமித்தார்கள். (இதைப் போல் இந்தியாவில் இஸ்லாம் ஒரு பெரும் மனிதக் கடலை மௌட்டீகத்திலிருந்து விடுவித்து உண்மையான நாகரிகத்தில் இணைத்தது. தீண்டாமை பிறப்பின் பெயரால் போற்றப்படும் பேதங்கள் இவற்றிலிருந்து மக்களை விடுவித்து உலகெங்கும் பரவி வாழும் உலக இஸ்லாமிய சமுதாயத்தின் அங்கங்களாக ஆக்கிற்று). (மொழிபெயர்ப்பாளர்). இது போன்ற எண்ணற்ற வீரவரலாறுகளையும் சாதனைகளையும் தன்னகத்தே கொண்ட இஸ்லாமே உண்மையான நாகரிகம். எல்லா சூழ்நிலைகளுக்கும் அறிவியல் வளர்ச்சிப் பெற்ற சமுதாயங்களுக்கும் பொருளாதார வளர்ச்சி பெற்ற சமுதாயங்களுக்கும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட அமுக்கப்பட்ட சமுதாயங்களுக்கும் ஏற்புடைய ஒரே நாகரிகம் இஸ்லாமே. இந்தத் தனிமைத்தன்மைகளால் அது அனைத்து மௌட்டீக சமுதாயங்களின் நாகரிகங்களிலிருந்து அது வேறுபட்டும் மாறுபட்டும் நிற்கின்றது.
அல்லாஹ்வுடைய வர்ணத்தை(க் கொண்டே ஞானஸ்னானம்) அடைவோம். அல்லாஹ்வை விட வர்ண அழகன் யார்? (அல்குர்ஆன் 21:38)
தொடர்ந்து வரும்...