பங்குச்சந்தைகள் தொடர்பான ஷரியாவின் விதிமுறைகள் :
PLC எனப்படும் பொதுத்துறை நிறுவன அமைப்பில் ஒரு நிறுவனம் வரையறைக்கு உட்பட்ட பொறுப்பு (limited liabilities) என்ற தனித்துவ அம்சத்தைப் பெற்றுக்கொள்கிறது, நிறுவனம் நஷ்டத்தை அடையும் பட்சத்தில் இந்த தனித்தன்மையின் மூலமாக அந்த நிறுவன முதலாளிகள் கடன் சுமையில் அகப்பட்டுக் கொள்ளாமல் பாதுகாப்பு பெற்றுக் கொள்கின்றனர், இத்தகைய நிறுவனங்களுக்கு கடன் வழங்கியவர்களும் அதன் பங்குகளில் முதலீடு செய்தவர்களும் நிறுவன முதலாளியிடமிருந்து தாங்கள் கொடுத்த கடன் தொகையையோ அல்லது முதலீடு செய்த பணத்தையோ அல்லது எந்தவிதமான நஷ்டயீட்டையோ பெற்றுக் கொள்ள முடியாது. அந்த முதலாளிக்கு எவ்வளவு அதிகமான சொத்துக்கள் இருந்தபோதும் சரியேõ நிறுவனத்தில் எஞ்சியுள்ள சொத்துக்களிலிருந்து கிடைக்கும் சிறிய தொகையை பெற்றுக் கொள்வதைத் தவிர சட்டரீதியாக வேறுவழி இல்லை, ஒவ்வொரு அம்சத்திலும் இது ஷரியாவிற்கு முரண்பாடாக இருக்கிறது, கடன் கொடுத்தவர்களுக்கு உரிய முழுத் தொகையையும் திருப்பித் தந்து விடவேண்டும் என்று ஷரியா கட்டளையிட்டிருக்கிறது, மேலும் கடன் தொகையில் எந்தவிதமான பிடித்தமும் செய்வதற்கு அது தடை விதித்திருக்கிறது,
அபூஹுரைரா(ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது:
மற்றவர்களிடமிருந்து வாங்கும் கடன்தொகையை நிச்சயம் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் கடன் வாங்குகிறவர்களுடைய கடனை அல்லாஹ்வே திருப்பிக்கொடுப்பான் ஆனால் மற்றவர்களிடமிருந்து கடன் பெறும்போது விரயம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்குகிறவர்களை அல்லாஹ் விரயம் செய்துவிடுவான்
வசதி உள்ளவர்கள் தங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் செய்வதை அநீதி என்று ஷரியா குறிப்பிட்டிருக்கிறது,
அபூஹுரைரா(ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது:
செல்வந்தர்கள் (கடனைத் திருப்பிக் கொடுப்பதில்) தாமதம் செய்வது அநீதியான செயலாகும்.
கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் செய்வது அநீதி என்றால் கடன் கொடுத்தவரின் பணத்தை மோசம் செய்வதும் கடனைத் திருப்பிச் செலுத்த மறுப்பதும் எவ்வளவு பெரிய பாவம்? உள்ளபடியே இது மிகப்பெரும் அநீதமாகவும் கடும் தண்டனைக்கு உரிய செயலாகவும் இருக்கிறது, கடன் வாங்கிய பின்னர் அதை முறையாக திருப்பிச் செலுத்துகிறவர்தான் சிறந்தவர் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) நமக்கு போதனை செய்திருக்கிறார்கள்,
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்.
முறையாக கடனை திருப்பிச் செலுத்துகிறவர்தான் உங்களில் சிறந்த மனிதராவார்.
ஆகவே பொதுத்துறை நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும்போது கடன் கொடுத்தவர்களின் பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கு மறுப்பது தடை செய்யப்பட்ட பாவமான செயலாகும், மாறாக நிறுவன முதலாளியின் சொத்திலிருந்து கடன் கொடுத்தவர்களுக்கு உரிய முழுத் தொகையையும் பட்டுவாடா செய்யப்படவேண்டும்,
பொதுத்துறை நிறுவனங்களுக்கு வரையறைக்கு உட்பட்ட கடன் பொறுப்புகளை சட்டரீதியாக ஆக்கியிருப்பது தொடர்பாக உள்ள ஷரியா விதிமுறைகள் என்னவென்றால். இந்த நிறுவனஅமைப்பு இஸ்லாத்தின் நிறுவனஅமைப்புச் சட்டங்களுக்கு முரண்பாடாக இருப்பதால் இவற்றை நடத்துவதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது, பொதுத்துறை நிறுவனத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட பணத்தை முதலீடு செய்வதன் மூலம் ஒரு நிதித்திட்டத்தில்(financial project) பங்கு கொள்கிறார்கள், இதனடிப்படையில் நிறுவனத்தின் லாபநஷ்டத்தில் பங்குகொள்கிறாôகள், இதுதான் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம், இந்த விளக்கத்தின் அடிப்படையிலும் பொதுத்துறை நிறுனங்களை உருவாக்கும் முறையிலுள்ள உண்மைநிலை அடிப்படையிலும் இணை நிதிநிறுவன அமைப்பு (joint stock company) அடிப்படையிலும் இது இரண்டு நபர்களுக்கு மத்தியிலோ அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்தியிலோ ஏற்படும் ஒப்பந்தமே அல்ல, ஷரியாவின் விதிமுறைகள் அடிப்படையில் இதை ஒர் ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது, ஏனெனில் ஷரியாவின் விதிமுறைப்படி ஒப்பந்தம் (contract) என்பது ஒருவர் ஒரு திட்டத்தை முன்வைத்தல் மற்றவர் அதை ஏற்றுக்கொள்ளுதல் (offer and acceptance) என்ற முறையில் ஏற்படுவதாகும், அதாவது ஒப்பந்தம் என்றால் அதில் இரண்டு நபர்கள் இருக்கவேண்டும் ‘நான் உங்களுடன் இன்ன விஷயத்தில் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என்றோ அல்லது அது போன்ற கருத்துடைய கூற்றையோ கூறுவதன் மூலம் ஒருவர் ஒரு ஒப்பந்தத்தை முன்வைப்பார்; ‘ஏற்றுக்கொள்கிறேன்’ என்றோ அல்லது ‘சம்மதிக்கிறேன்’ என்றோ மற்றொருவர் கூறி அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார், ஒரு ஒப்பந்தத்தில் குறைந்தது இரண்டு நபர்கள் பங்களிப்பு செய்யவில்லை என்றாலும் திட்டத்தை முன்வைத்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் நிகழவில்லை என்றாலும் ஒப்பந்தமே ஏற்படவில்லை என்று பொருளாகும். இவ்வாறு செய்யப்படாத எதுவும் ஒப்பந்தமாக ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை நிறுவனத்திடமிருந்து நேரடியாக வாங்குவதின் மூலமாக அல்லது ஏற்கனவே பங்குகளை வாங்கி வைத்திருப்பவரிடமிருந்து வாங்குவதின் மூலமாக ஒருவர் அந்த நிறுவனத்தின் நிதித்திட்டத்தில் பங்கேற்றவர் ஆகிறார், ஆனால் பொதுத்துறை நிறுவன சட்டப்படி இவ்வாறு பங்கேற்ற ஒருவருக்கு அந்த நிறுவன நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கோ அல்லது அந்த நிறுவனத்தில் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்து கொள்வதற்கோ அல்லது பங்குகளை வைத்திருக்கும் இதர நபர்களோடு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கோ அதிகாரமோ உரிமையோ கிடையாது.
ஒரு நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக அங்கீகாரம் பெறும்போது அதற்கு கூட்டமைப்பு தன்மையை (corporeal personality) நிர்ணயிப்பது. பங்கு வைத்திருப்பவர்களிடமிருந்து சுதந்திரமாக செயல்படும் அதிகாரத்தை வழங்குவது ஆகியவற்றை அரசுதான் நிறைவேற்றுகிறது, அந்த நிறுவனம் தொடர்பான கூட்டமைப்பு அறிவிப்பை (memorandum of Association) அரசுதான் வெளியிடுகிறது, நிறுவனத்தை தொடங்குவதற்கு அரசிடம் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் மட்டும்தான் நிறுவன முதலாளிகளுக்கு மத்தியில் ஏற்படும் ஒப்பந்தமாக இருக்கிறது, இவ்வாறு நிறுவனத்தின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் நிறுவன நடவடிக்கைகள் துவக்கப்பட்டு பங்குகளின் விற்பனை நடைபெற ஆரம்பித்து விடுகிறது, இந்த பங்குகளை நிறுவன முதலாளிகளும் (founders of the company) பொதுமக்களும் வாங்குகிறார்கள்.
பங்குகளை ஒருவர் வாங்கும்போது நிறுவனத்திற்கும் அவருக்கும் எந்த ஒப்பந்தமும் ஏற்படுவதில்லை, இருநபர்களுக்கு மத்தியில் ஏற்படும் ஒப்பந்தம் (contract), திட்டத்தை முன்வைத்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் (offer and acceptance) ஆகியவை எதுவும் நிறைவேற்றப் படுவதில்லை, ஆகவே பொதுத்துறை நிறுவனம் என்பது இருநபர்களுக்கு மத்தியில் ஏற்படும் ஒப்பந்தம் அல்ல மாறாக அது பங்கு வாங்குகிறவர் தன்னிச்சசையாக எடுக்கும் தீர்மானமே ஆகும், இந்தவகை செயல்பாட்டை ஒப்பந்தத்திற்கு ஒத்துப்போகுதல் என்று மேற்குநாடுகளின் சட்டநிபுணர்கள் வியாக்ஞானம் செய்துள்ளார்கள், இவர்களின் கூற்றின்படி பங்குகளை வாங்குவது என்பது ஒருவர் தனது விருப்பப்படி ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு தேர்ந்தெடுக்கும் ஒரு வழிமுறையாகும், அதில் அவர் மற்றொருவருடன் நேருக்குநேராக ஒருவிஷயத்தை தனது விருப்பப்படி முடிவுசெய்து கொள்கிறார் அல்லது பொதுமக்களுடன் நேருக்குநேராக ஒருவிஷயத்தை தனது விருப்பப்படி முடிவுசெய்து கொள்கிறார் இதில் மற்றவர் அல்லது பொதுமக்கள் ஆகியோரின் ஏற்பு அல்லது மறுப்பு ஆகியவை எவ்வாறு இருந்தபோதிலும் சரியே, இதுதான் பங்கு வாங்குகிற நபரின் நிலைப்பாடு குறித்து மேற்குநாடுகளின் சட்டநிபுணர்கள் கொடுக்கும் விளக்கம், இந்த விளக்கத்தின் அடிப்படையில் பங்குகளை வாங்குகிறவர்களுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் மத்தியில் எந்தவிதமான முறையான ஒப்பந்தமும் ஏற்படுவதாக கூறமுடியாது, ஆகவே ஷரியாவின் விதிமுறைகளின்படி பொதுத்துறை நிறுவனங்களில் இடம்பெறும் ஒப்பந்தம் சட்டத்திற்கு புறம்பானதாகும் ஏனெனில் ஷரியாவின் விதிமுறைகளின்படி ஒப்பந்தத்தில் இடம்பெறும் இருநபர்களுக்கு மத்தியில் நேரடி பங்களிப்பும் இணைப்பும் இருக்கவேண்டும் ஆனால் பொதுத்துறை நிறுவனங்களின் ஒப்பந்தத்தில் இந்த ஷரத்து இடம்பெறுவதில்லை.
இஸ்லாம் வரையறை செய்துள்ள நிறுவன அமைப்புகளுக்கு முரண்பட்டதாக பொதுத்துறை நிறுவன அமைப்பு இருக்கிறது, இஸ்லாத்தின் அடிப்படையில் இரண்டு நபர்கள் மத்தியிலோ அல்லது இரண்டு நபர்களுக்கு அதிகமாக உள்ளவர்கள் மத்தியிலோ லாபம் ஈட்டும் நோக்கத்தோடு ஏற்படும் நிதியியல் சார்ந்த ஒப்பந்தம்தான் நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது, ஆகவே இரண்டு அல்லது இரண்டு நபர்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு மத்தியில் ஏற்படுவதுதான் ஒப்பந்தமே தவிர தன்னிச்சையாக ஒருவர் எடுக்கும் தீர்மானத்தை ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது, பணத்தை செலுத்துவது மட்டும் ஒப்பந்தமாகாது மேலும் இதை நிறுவனத்தில் பங்களிப்பு செய்வது என்றும் கருதமுடியாது, ஆகவே நிதியியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடுவதுதான் நிறுவன ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சமாக இருக்கிறது.
இத்தகைய நிதியியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் ஈடுபடலாம் அல்லது அவர்களில் ஒருவர் மட்டும் ஈடுபடலாம் அல்லது அவர்களில் முதலீடு செய்த ஒருவர் சார்பாக மற்றொருவர் ஈடுபடலாம், ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களுமோ அல்லது குறைந்தது அவர்களில் ஒருவரோ நிறுவன நடவடிக்கைகளில் ஈடுபடும்போது உண்மையான பங்குதாரர் (physical partner) ஒருவர் நிறுவனத்தில் இடம்பெறுகிறார், ஆகவே இஸ்லாத்தின் விதிமுறைகள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவன அமைப்பிலும் குறைந்தது ஒரு உண்மையான பங்குதாரர் (physical partner) இருக்க வேண்டியது கட்டாயமாகும், மேலும் நிறுவன ஒப்பந்தங்களில் இது அடிப்படையான விதிமுறையாக இருக்கிறது இல்லையெனில் வர்த்தக கூட்டணி (partnership) ஏற்படாது, வர்த்தக கூட்டணி ஏற்படுவதற்கு உரிய ஷரியா நிபந்தனைகள் பொதுத்துறை நிறுவன அமைப்புகளில் நிறைவேற்றப்படுவதில்லை, உண்மையான பங்குதாரர் (physical partner) இருக்க வேண்டியது கட்டாயம் என்ற நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் இடம் பெற்றிருப்பவர்கள் முதலீட்டில் பங்குதாரர்களாக இருக்கிறார்களே தவிர உண்மையான பங்குதாரராக (physical partner) இருப்பதில்லை, பொதுத்துறை நிறுவனங்களில் வர்த்தக கூட்டணி (ல்ஹழ்ற்ய்ங்ழ்ள்ட்ண்ல்) முதலீட்டில் பங்குதாரர்களாக இருக்கிறவர்களை வைத்து முடிவு செய்யப்படுகிறதே ஒழிய அதில் உண்மையான பங்குதாரர் (physical partner) இடம் பெறுவதில்லை, பொதுத்துறை நிறுவனங்களில் உண்மையான பங்குதாரர் (physical partner) இல்லாத நிலையில் அதன் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது, ஷரியாவின் விதிமுறைகள் அடிப்படையில் முதலீட்டில் மட்டும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் நிறுவன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ அல்லது நிறுவனத்தில் உண்மையான பங்குதாரராக (physical partner) செயல்படுவதற்கோ அதிகாரம் கிடையாது, நிறுவனத்தை நடத்திச்செல்லும் அதிகாரமும் நிறுவனத்தில் பங்குதாராக செயலாற்றும் உரிமையும் உண்மையான பங்குதாரரோடு (physical partner) மட்டும் கட்டுப் படுத்தப் பட்டிருக்கிறது, பொதுத்துறை நிறுவனங்களின் வர்த்தக கூட்டணியில் (partnership) இருப்பவர்கள் முதலீட்டில் பங்குதாரர்களாக இருக்கிறார்களே தவிர ஒருவரோடு ஒருவர் பங்குதாரர்களாக இல்லை, ஆகவே எவரெல்லாம் அதிகமான பங்குகளை வைத்திருக்கிறாரோ அவருக்கு அதிகமான ஓட்டுகள் இருக்கின்றன அதேவேளையில் எவரெல்லாம் குறைவான பங்குகளை வைத்திருக்கிறாரோ அவருக்கு குறைவான ஓட்டுக்களே இருக்கின்றன, பொதுத்துறை நிறுவனம் கூட்டமைப்பு தன்மை (corporeal personality) கொண்டதாக இருந்தபோதும் அதற்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்று முதலாளித்துவவாதிகள் கூறுகிறார்கள், ஆனால் இந்த விஷயத்திலும் ஷரியாவின் விதிமுறைகள் மீறப்படுகின்றன, ஷரியாவின் விதிமுறைகளின்படி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முடிவெடுக்கும் திறனுள்ள ஒரு மனிதருக்கு கொடுக்கப்பட வேண்டுமே தவிர கூட்டமைப்புக்கு அல்ல, இவ்வாறு இல்லாத நிலையில் எடுக்கப்படும் எந்த தீர்மானமும் ஷரியாவின் விதிமுறைகளின்படி செல்லுபடி ஆகாது.
இதனடிப்படையில் நிறுவனத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை பொதுத்துறை நிறுவனத்தின் கூட்டமைப்புக்கு (corporeal personality) கொடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது, மாறாக அந்த அதிகாரம் முடிவெடுக்கும் திறனுள்ள ஒரு மனிதருக்கு கொடுக்கப்பட வேண்டும், ஷரியாவின் விதிமுறைகளின்படி கூட்டமைப்பு (corporeal personality) மூலமாக கொண்டு வரப்படும் தீர்மானங்கள் அனைத்தும் செல்லுபடி ஆகாது, எனவே நிறுவனத்தின் கூட்டமைப்புக்கு (corporeal personality) முடிவெடுக்கும் அதிகாரம் கொடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப் பட்டுள்ளது, இதனடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவைகளாகும், ஷரியாவின் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய உண்மைநிலை இதுதான்.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் - - PLC shares :
இந்த நிறுவனங்கள் வினியோகம் செய்யும் பங்குகளைப் பொறுத்தவரை உண்மைநிலை என்னவென்றால்; பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படும் அனைத்தும் நிதியியல் சார்ந்த ஆவணங்களாகும் (financial papers) அதில் ஒன்றை கொள்முதல் செய்யும்போது அல்லது அதை மதிப்பீடு செய்யும்போது அது அன்றைய நிலையிலுள்ள பங்கின் மதிப்பை குறிக்கிறது ஆனால் பங்குகளை விற்பனை செய்த நிறுவனம் துவக்கப்பட்டபோது இருந்த அந்த பங்கின் மதிப்பை குறிக்காது, பங்கு என்பது அதனை விற்பனை செய்த நிறுவன அமைப்பின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறதே தவிர நிறுவன முதலீட்டின் பிரிக்கமுடியாத பகுதியாக இருப்பதில்லை மேலும் பங்குகள் தனித்துவத் தன்மை கொண்டதாகவோ அல்லது நிலையான மதிப்பு கொண்டதாகவோ இருக்காது மாறாக நிறுவனத்தின் லாபநஷ்டங்களின் அடிப்படையில் ஏற்றஇறக்கங்களைப் பெற்றுக்கொள்கிறது, பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவைகள் என்ற அடிப்படையில் அவற்றின் பங்குகளில் வர்த்தகம் செய்வதையும் அவற்றில் வர்த்தகம் நடைபெறும் பங்குச்சந்தைகளில் ஈடுபடுவதையும் ஷரியா தடை செய்துள்ளது, மேலும் சட்டத்திற்கு புறம்பான முதலீட்டிலிருந்தும் சட்டத்திற்கு புறம்பான லாபத்திலிருந்து பெறப்பட்ட பணத்திலிருந்தும் உருவான பொருளாதாரம் அவற்றில் கலந்திருக்கின்றன, ஒவ்வொரு பங்கும் சட்டவிரோதமான நிறுவனங்களின் சொத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது, ஷரியாவின் விதிமுறைகளுக்கு புறம்பான வழியில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல்வாங்கல் மூலமாக பெறப்பட்ட ஹராமான பணமாக இருப்பதால் அதில் வர்த்தகம் புரிவது ஹராமான செயலாகும், நிறுவனங்களின் பங்குப்பத்திரங்களும் (companies bonds) இதில் அடங்கும் ஏனெனில் அவற்றில் வட்டி அடிப்படையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் வினியோகிக்கும் ரொக்கப்பத்திரங்களும் இதில் அடங்கும் ஏனெனனில் அவற்றில் சட்டவிரோதமான முதலீடுகள் கலந்திருக்கினறன.
மேற்கூறப்பட்ட விஷயங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அவை வினியோகிக்கும் பங்குகள் ஆகியவற்றைப் பொறுத்த உண்மைநிலையாக இருக்கிறது, முதலாளித்துவ பொருளாதாரததிலும் உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் துயரமாக விளங்கும் வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளைப் பொறுத்தவரை அவைகளின் வட்டிவீதம் எவ்வாறு இருந்தபோதிலும் இஸ்லாத்தின் அடிப்படையில் அவைகள் திட்டவட்டமாக தடுக்கப்பட்டவைகளாகும், ஏனெனில் எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் வட்டியிலிருந்து கிடைக்கும் அனைத்துவகை பணமும் ஹராமானதாகும். இத்தகைய பணத்தை சொத்தாக வைத்தக்கொள்ள எவருக்கும் உரிமையில்லை ஆகவே அவற்றை வசூலித்த நபரிடம் திருப்பி ஒப்படைத்து விடவேண்டும்.
வட்டி ஏற்படுத்தும் கொடூர விளைவின் காரணமாக அதை உண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவர்களைப் போல் மறுமையில் எழுவார்கள் என்று அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
வட்டியை உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டவன் பைத்தியம் பிடித்து எழுவதுபோல் (மறுமையில்) எழுவார்கள், இதற்குக் காரணம் அவர்கள் நிச்சயமாக வியாபாரம் வட்டியை போன்றதுதான் என்று கூறியதாகும், அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமானதாக ஆக்கி வட்டியை தடைசெய்திருக்கிறான், எனினும் எவர் தனது இரட்சகனிடமிருந்து நல்லுபதேசம் வந்தபின் அதைவிட்டு விலகிவிடுகிறாரோ அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது, ஆனால் எவர்கள் (நற்போதனை வந்த பின்னர் இப்பாவத்தின் பக்கம்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள், அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். ( 2 : 275)
மேலும் வட்டியால் விளையும் சமூகத் தீமைகளின் காரணமாக வட்டி வரவுசெலவுகளில் ஈடுபடுபவர் அல்லாஹ்(சுபு) வுடன் போர் செய்பவர்கள் என்று அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (278) فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையான மூ*மின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் எஞ்சியுள்ள வட்டியை வாங்காமல் விட்டுவிடுங்கள், இவ்வாறு நீங்கள் செய்யவில்லை என்றால் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டுவிட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்) உங்கள் பணத்தில் அசல்தொகை உங்களுக்கு உண்டு, நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் அப்போது நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2 : 278,279)
மாற்றமுடியாத காகித நாணய முறையைப் (inconvertible paper money) பொறுத்தவரை உள்ள உணண்மைநிலை என்னவென்றால். பொருட்கள் மற்றும் சேவைகள் (goods and services) ஆகியவற்றின் மதிப்பீட்டை (valuations) குறிப்பதற்காக மக்கள் அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவைகள் தங்கம் அல்லது வெள்ளி ஆகியவற்றால் ஆனதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியே, அனைத்துப் பொருட்களும் மற்றும் சேவைகளும் இந்த மதிப்பீட்டைக் கொண்டுதான் அளவீடு (measurement) செய்யப்படுகின்றன, இஸ்லாத்திற்கு முந்திய காலத்தில் தங்கம் போன்ற உலோகத்தை ஏற்புநிறை மதிப்பீடாக(gold standard) பரவலான முறையில் பயன்படுத்தி வந்தார்கள், இஸ்லாத்தின் பிரவேசத்திற்குப் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய நாணயங்களான தினார் (dhinars) மற்றும் திர்ஹம் (dhirhams) ஆகியவற்றை நாணயமாக ஏற்று பயன்படுத்தி வந்தார்கள், அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் நிரந்தர மதிப்புள்ள முழுமையான நாணயமாக அவற்றை ஆக்கினார்கள்,முதலாம் உலகப்போருக்கு முன்புவரை உலகம் முழுவதும் தங்கமும் வெள்ளியும் நாணயமாக பயன்படுத்தப்பட்டு வந்தன, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலக நாடுகளிடையே பிரட்டன் வுட்ஸ் ஒப்பந்தம் (Bretten Woods Agreement) ஏற்பட்டது அதனடிப்படையில் ஏற்புநிறை மதிப்பீடாக (standard) தங்கத்தோடு இணைத்து அமெரிக்கடாலர் (gold standard or dollar standard)கொண்டு வரப்பட்டது, 1970 க்கு பின்னர் ஏற்புநிறை மதிப்பீட்டிலிருந்து தங்கத்தை அறவே நீக்கிவிட்டு அமெரிக்கடாலர் மட்டும் என்ற நியதியை அமெரிக்கா கொண்டு வந்தது, இதன் பின்னர் அமெரிக்கா முதற்கொண்டு உலக நாடுகள் அனைத்தும் நாணயங்கள் அச்சிடும்போது தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களை கையிருப்பில் வைத்துக் கொள்ளும் முறையை அறவே கைவிட்டுவிட்டன எனவே காகித நாணயம் மாற்றமுடியாத நாணயமாக (inconvertible paper money) ஆக்கப்பட்டது, நாணயங்களுக்கு மாற்றாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை இருந்தநிலை மாற்றப்பட்டதால் காகிதத்தில் அச்சடிக்கப்படும் இன்றைய நாணயங்களுக்கு உண்மையான மதிப்பு ஏதும் இருப்பதில்லை, சட்டங்கள் மூலமாக நிர்பந்தமான முறையில் காகித நாணயங்களுக்கு மதிப்பு கொடுக்கப்பட்டு அதை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி ஆக்கப்பட்டுள்ளது, ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் சுயநலங்களை பாதுகாக்கும் காலனியாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு காகித நாணயமுறையை ஒரு சாதனமாக (means) பயன்படுத்திக் கொண்டன, இந்த சக்திகள் உலக நாணயங்களில் தலையீடு செய்து தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொண்டதோடு அவ்வப்போது உலக நாடுகளின் பொருளாதாரத்தில் தலையீடு செய்து பொருளாதார அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன, முதலாளித்துவ அரசுகள் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி காகித நாணயங்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டதால் பணவீக்கம் ஏற்பட்டு நாணயத்தின் கொள்முதல் திறன் குறைந்து போனதோடு உலக பொருளாதாரத்திலும் நிதிநிலைகளிலும் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுவிட்டன.
முதலாளித்துவ பொருளாதார அமைப்பு. பொதுத்துறை நிறுவன அமைப்பு. வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கி அமைப்பு. மாற்றமுடியாத காகித நாணயமுறை ஆகியவை தவறான அடிப்படை கொண்டவை என்பதையும் ஊழல் நிறைந்தவை என்பதையும் பல குளறுபடிகளைக் கொண்டவை என்பதையும் முதலாளித்துவவாதிகளின் நலன்களை மட்டும் பாதுகாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டவை என்பதையும் மேற்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார அதிர்வுகள் வெட்டவெளிச்சம் ஆக்கியிருக்கிறது, மேலும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையும் அதன் செயலாக்க அமைப்புகளும் (Capitalism and its Systems) தவறான அடித்தளத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால் உலக நாடுகளில் அதன் ஆதிக்கம் இருக்கும்வரை உலகை சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியாது என்பதும் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது, அழிவை ஏற்படுத்தும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையிலிருந்து உலகை காப்பாற்ற வேண்டுமானால் அதற்கு ஒரேவழி பொதுத்துறை நிறுவன அமைப்பு. வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கி அமைப்பு. உண்மையான மதிப்பு இல்லாத மாற்றமுடியாத காகித நாணயமுறை ஆகிய தவறான பொருளாதார அமைப்புகளை உடனடியாக அழித்துவிட வேண்டும், இவ்வாறு செய்யும் பட்சத்தில் பொருளாதார சூதாட்டங்களுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஒழிக்கப்பட்டு அதற்கு மாற்றாக இஸ்லாமிய நிறுவன அமைப்புகள் உருவாகிவிடும் மேலும் தீயவிளைவுகளை ஏற்படுத்தும் வட்டியில் இயங்கும் வங்கிகளும் காகித நாணயமுறையும் ஒழிக்கப்பட்டு அதற்கு பதிலாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை நாணயத்திற்கு ஏற்புநிறை மதிப்பீடாகக் கொள்ளும் முறை ஏற்பட்டுவிடும்.
இதன்மூலமாக பொருளாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பணவீக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் மேலும் இதன்பின்னர் வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளுக்கு எந்தவிதமான தேவையும் இருக்காது, ஆகவே பெரும் துயரத்தையும் பேரழிவையும் உண்டாக்கும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பை நீக்கிவிடுவதின் மூலம் உலகின் பொருளாதார நிலையில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு நிதிநிலை நெருக்கடிகள் தீர்க்கப்பட்டு உலகப் பொருளாதாரத்தில் உறுதியான முன்னேற்றம் ஏற்படும், நிதிச்சந்தைகளும் யூகவணிகமுறைகளும் ஒழிக்கப்பட்டு விடுவதால் வர்த்தகத்துறையில் ஏற்படும் பொருளாதார அதிர்வுகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.
நமது தலைவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் மீதும் உத்தம ஸஹாபாக்கள் மீதும் உலகமுடிவு நாள்வரை அவர்களை உண்மையாக பின்பற்றும் முஸ்லிம்கள் மீதும் அல்லாஹ்(சுபு) வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் ஏற்படுவதாக, ஆமீன்.
No comments:
Post a Comment