Saturday, December 6, 2008

சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹ் - இஸ்லாத்தைச் சீரழிப்பதற்கான புதிய ஃபிக்ஹ் பகுதி 3

2.1 ஷாஃபி (ரஹ்) இன் முறைமையில் ஏற்பட்ட மாற்றம்

இமாம் ஷாஃபி (ரஹ்) மாபெரும் இமாம். மதீனாவிலிருந்து பக்தாத்திற்கும் அங்கிருந்து கெய்ரோவிற்கும் சென்ற போது அவர்கள் கையாண்ட முறைமை மாற்றமடைந்தது என்ற கருத்தை பல்வேறு நியாயங்களுக்கு மத்தியில் ஒன்றாக, சிறுபான்மையினருக்கான சட்டவியல் ஒன்றை உருவாக்கப்படுவதைச் சரி காண்பதற்கான அடிப்படையாக முன்வைக்கின்றனர்.

அஸீஸா வை அல் ஹிப்ரி தனது கட்டுரை ஒன்றில் (Islamic and American Constitutional Law: Borrowing Possibilities or a History of Borrowing? Journal of Constitutional Law – Universsity of Pennsylvania; Vol.1) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:“உதாரணமாக, மிகப் பெரும் அறிஞரும், அவரது பெயரைக் கொண்டு வழங்கப்படும் ஒரு (ஃபிக்ஹ்) சிந்தனைப்பிரிவின் நிறுவனருமான இமாம் அல் ஷாஃபி, ஈராக்கிலிருந்து எகிப்துக்கு இடம்பெயர்ந்த போது அவரது சட்டத்தொகுதியை மாற்றிச் சீரமைத்தார். இதற்கான சாதாரண விளக்கம் என்னவென்றால், புதிய சூழல்களின் ஒளியில் புதியதொரு சட்டத்தொகுதி உருவானது என்பதுதான். சட்டத்தொகுதி மாற்றிச் சீரமைக்கப்பட்ட இந்த உதாரணத்தின் விளைவாக, சட்டவியலாளர்கள் பொதுவாகவே ‘காலமும் இடமும் மாறுபடுவதற்கு இணங்க சட்டங்களும் மாறுபடும்’ என்ற விதிமுறையை ஏற்றுக் கொள்கின்றனர்.”

இந்த விதிமுறையை முன்வைப்பவர்கள், தமது நிலைமையை நியாயப்படுத்துவதற்கு சட்ட hPதியான ஆதாரம் எதனையும் கொண்டு வரத் தவறிவிட்டனர். உதாரணமாக, இமாம் ஷாஃபி (ரஹ்) ஈராக்கிலிருந்து எகிப்துக்கு இடம்பெயர்ந்ததன் காரணமாக மாத்திரமே அவரது பிக்ஹை மாற்றினார் என்ற நியாயம் உண்மையில் நடந்த நிகழ்வுகளை மிக மிக எளிமையானதாய்ச் சித்தரிக்க முயற்சிக்கிறது. அவ்வாறு கூறுவது மிகவும் தவறானதொரு விஷயமாகும். அசல் காரணம் என்னவென்றால், இந்த மாபெரும் இமாம் அவர்கள் ஈராக்கிலும், எகிப்திலும் வௌ;வேறு சிந்தனைப்பிரிவுகளைச் சார்ந்த பல்வேறு முஜ்தஹிதீன்களுடன் தொடர்பு கொண்டதன் காரணமாகவும், மூல நு}ற்களை ஆய்ந்து பார்க்கும் அவர்களின் வழிமுறை, மேலும் அவற்றிலிருந்து சட்டங்களைப் பெறும் அவர்களின் முறைமை ஆகியவற்றின் காரணமாகவும், தனது முறைமையை மாற்றிக்கொண்டார்கள் என்பதுதான். இது இஜ்திஹாத் படிமுறைகள் சம்பந்தப்பட்ட வரையில் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் சிந்தனைகள் முதிர்ச்சி அடைவதற்கும் தெளிவடைவதற்கும் வழிகோலியது.

இமாம் அஹ்மத் இப்னு; ஹன்பல் (ரஹ்) அவர்கள், ஒருமுறை முஹம்மது பின் முஸ்லிம் அர் ராஸியினால், இமாம் ஷாஃபியின் நு}ற்களில் எதனைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டபோது, இமாம்; அஹ்மத் அவர்கள், “எகிப்தில் எழுதப்பட்ட நு}ற்களைத் தேர்ந்தெடுங்கள். ஈராக்கில் அவர்கள் எழுதிய நு}ல்கள் நல்ல முறையில் தயாரிக்கப்படவில்லை. அதன் பிறகு அவர்கள் எகிப்து சென்றபோது, தங்கள் நு}ற்களை முன்னை விட மிகவும் ஆழமான அறிவுடனும், திறனுடனும் எழுதினார்கள்.” எனக் கூறினார்கள். (கலாநிதி முஹம்மத் பல்தாஜி- ‘மனாஹிஜ் உல் தஸ்ரி அல் இஸ்லாமி ஃபில் கர்ன் அல் தானி அல் ஹிஜ்ரி’ பாகம் 1 பக்கம் 31)

3) கேள்வியை மீளப்பார்த்தல்

“சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹை“ ஆதரிப்பவர்கள், ‘மரபு hPதியான’ பதில்கள் கொடுக்கப்படத் தேவையில்லை என்றும் இஸ்லாமிய சட்டத் துறையில் உண்மை நிலைகள் நன்கு தெரிந்திருந்த போதிலும், நாம் கேள்விகளை மீளப் பார்ப்பதற்கான தேவை இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.

தாஹா ஜாபிர் அல் அல்வானி ஓர் உதாரணத்தைக் கூறுகின்றாh; (முகத்திமா ஃபி பிக்ஹ_ல் அகல்லியாத்) “ஒரு முஸ்லிம் பெண் முஸ்லிம் அல்லாத ஒருவரை திருமணம் செய்வது தடுக்கப்பட்டதா? அவர் என்ன செய்ய வேண்டும்” என ஒருவர் கேட்கிறார்.

அல்குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது போன்று, இறை மறுப்பாளருடனான ஒரு முஸ்லிம் பெண்ணின் திருமணம் மிகத் தெளிவான வகையில் சட்ட விரோதமானதாகும்: “அவர்கள் நிராகரிப்பாளர்களுக்கு (மனைவியாயிருக்க) ஆகுமானவர்கள் அல்லர். நிராகரிப்பாளர்களும் அவர்களுக்கு ஆகுமானவர்கள் அல்லர்.” (60:10)

இந்த வசனம் ஓரே ஒரு கருத்தைத்தான் முன்வைக்கிறது. அது என்னவென்றால், அத்தகையதொரு திருமணம் செல்லுபடியற்றதாகக் கருதப்படும. அதற்கு எந்தவொரு பெறுமானமும் கிடையாது என்பதுதான். ஆனால் “சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹின்” படி, இந்த கேள்வியை மீளப்பார்ப்பதன் மூலமாக, அதற்கான பதிலையும் மீளப்பெற வேண்டும். எனவேதான் தாஹா ஜாபிர் அல் அல்வானி இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில், சந்தர்ப்பங்களைப் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார்:

“அந்தப் பெண் இப்போதுதான் இஸ்லாத்திற்கு மதமாற்றமடைந்திருக்கிறார். அவருக்கு கணவரும் இரு சிறு குழந்தைகளும் இருக்கின்றனர். அந்த கணவர் எல்லா வகையிலும் குடும்பத்திற்கு ஆதரவு வழங்கக் கூடியவராகவும், ஆனால் இந்த நேரத்தில் இஸ்லாத்திற்கு மாறுவதற்கு விருப்பம் இல்லாதவராகவும் இருக்கிறார். இந்த பெண்ணோ மதம் மாறியதுடன் 20 வருடங்களாக தன்னுடன் வாழ்ந்த கணவனை உடனடியாக விவாகரத்துச் செய்ய வேண்டும் எனச் சொல்கிறார். இத்தகைய சந்தர்ப்பங்களில் இந்தக் கேள்வி இவ்வாறு அமைந்திருக்க வேண்டும்: “ஒரு முஸ்லிம் பெண் ஒரு முஸ்லிம் அல்லாத கணவருடன் திருமண பந்தத்தில் இருப்பதா அல்லது அவள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவதா? இதில் எது மோசமானது?’ இதற்கான பதில் என்னவென்றால், “இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவது படுமோசமானது. எனவே அவர் தனது திருமணப் பந்தத்தினை தொடர்வது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்”. மேலும் நியாயத் தீர்ப்பு நாளன்று அவள் அல்லாஹ்வின் முன்பு பதில் கூறக் கடமைப்பட்டவள்.” (தாஹா ஜாபிர் அல் அல்வானி; - ‘முகத்திமா பி ஃபிக்ஹ் அல் அகல்லியாத்’)

இதுதான் சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹ் கண்ணோட்டத்திலிருந்து வரக்கூடிய, முழுக்க முழுக்க சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாத ஒரு தீர்ப்பாகும்.

ஒரு பிரிட்டிஷ் பெண்மணி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது அவளது கணவன் முஸ்லிம் அல்லாதவனாக இருக்கக் கூடியதொரு சந்தர்ப்பம், இஸ்லாமிய சட்டத்துறைக்கு புதிதான பிரச்சினை ஒன்றன்று. நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் இப்படியான ஒரு பிரச்சினைக்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவர்களின் மகள் ஜைனப் (ரழி) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதே நேரத்தில் அவருடைய கணவர் முஸ்லிம் அல்லாதவராகவே இருந்து விட்டார். நபி (ஸல்) அவர்கள் தனது மகளை கணவனை விட்டு விலகி விடும்படியாக அறிவுறுத்தினார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தீர்க்கமான கட்டளைக்கு எதிராகப் போகவில்லை. ஏனெனில், அல்லாஹ்வின் வெளிப்படையான கட்டளைக்கு விரோதமாகப் போவதென்பது, இங்கு நிகழக் கூடிய மிகப் பெரியதொரு தீமையாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு தீமையைத்தான் சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹ் ஏற்றுக் கொள்கிறது. பிறரையும் ஏற்றுக் கொள்ள உற்சாகப்படுத்துகிறது.

எனவே இன்று இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாம் சட்ட நு}ல்களையும், அதன் மூலங்களையும் பின்னோக்கிச் சென்று பார்ப்பதற்கும், இஸ்லாமிய ஷரீஆச் சட்டத்தைச் சரியான முறையில் பெற்றுக் கொள்வதற்காக அவற்றைப் படித்தாய்வதற்குமான தேவை இருக்கிறது. மற்றெல்லாப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையிலும் கூட இதே முறைமைதான் கையாளப்பட வேண்டும்.

கேள்வியை மீளப்பார்ப்பது என்பது (முன்கர்) தீமையை நோக்கி இட்டுச் செல்வதாகும். இது ஷரீஆச் சட்டங்கள் வழிநடத்தி வந்த சட்டவாக்கங்களின் கருப்பொருளை விட மனித மனங்களையும், காணப்படும் உணர்வு நிலைகளையும் சட்டவாக்கங்களின் மூலாதாரங்களாகக் கொள்வதற்கு வழிசெய்கிறது. இந்தச் செயல்முறையின் காரணமாகத்தான் அல்லாஹ் வேதம் வழங்கப்பட்ட முந்தைய மக்களை சபித்தான்:
“உங்கள் நாவுகள் இன்ன பொருள் ஹலால் (அனுமதிக்கப்பட்டது) இன்ன பொருள் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று பொய்(சட்டங்)களை கூறுவது போன்று, அல்லாஹ்வின் மீது பொய்களை ஏற்றிச் சொல்லாதீர்கள். யார் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து உரைக்கின்றார்களோ, அவர்கள் ஒரு போதும் வெற்றியடைவதில்லை. (16:16)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சில அற்ப காரணங்களுக்காக அல்லாஹ் தடை விதித்தவற்றை தங்களுக்கு சட்டபூர்வமாக்கிக் கொள்வதற்காக எதை யூதர்கள் செய்தார்களோ, அவற்றை நீங்கள் செய்யாதீர்கள்” (நல்ல ஆதாரங்களுடன் அப்துல்லாஹ் பின் பத்தாஹ் இதனை அறிவிக்கிறார்கள். இப்னு கையூம் அல் ஜவ்ஸிய்யா- ‘இகாதத் அல் லஹ்ஃபான் மின் மஸாயித் அல் சைத்தான்’ இல் பதிவு செய்திருக்கிறார்கள@ மேலும், அல் திர்மிதி இது போன்றதொரு ஹதீஸை ஸஹீஹ் எனவும் அறிவிக்கின்றார்கள்.) இந்த முறைமையைக் கையாண்டு அவர்கள் முடிவு செய்து இருக்கின்ற மற்ற அம்சங்களில் சில பின்வருமாறு: அரசியலமைப்பில் முஸ்லிம்களை இரண்டறக் கலந்துவிடச்செய்தல், (றிபா) வட்டிக்கான அனுமதி, குஃப்ஃபார்களின் இராணுவங்களில் சேர அனுமதிப்பது, முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடுவது போன்றவை அவற்றில் சிலவாகும்.

No comments:

Post a Comment