அரசியல் ஈடுபாடு, அரசியலில்; இரண்டறக் கலந்து விடுதல் என்பவற்றின் அடிப்படைகளை மறுதலிப்பது.
1. செய்யதினா யூசுஃப்(அலை) அவர்கள் இறை நிராகரிப்புச் சட்டங்களை அமுல் செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது பற்றிய சர்ச்சை.
அல்குர்ஆன் நபி யூசுஃப்(அலை) அவர்களின் வரலாறை இவ்வாறு கூறுகின்றது: “யூசுஃப், ‘நாட்டின் கருவூலங்களுக்கு என்னை பொறுப்பாளராக்குங்கள். நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன் என்று கூறினார். மேலும் இவ்வாறு நாம் யூசுப்பிற்கு அந்த அதிகாரத்தை வழங்கினோம். அவர் அங்கே தாம் விரும்பும் எந்த இடத்திலும் தங்கி வாழும் உரிமை பெற்றிருந்தார்;. (12:55-56)
எகிப்து அரசரின் இஸ்லாம் அல்லாத ஓர் ஆட்சியமைப்பில் பங்கு கொள்வதற்கு நபி யூசுஃப்(அலை) அனுமதிக்கப்பட்டார்கள் என்பதை நிரூபிப்பதற்கான முயற்சியில் இந்த திருவசனம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இன்றைய முஸ்லிம்களும் இதே போன்று அனுமதிக்கப்பட வேண்டும் எனச் சிலர் வாதிக்கின்றனர். இதற்கோர் ஆதாரமாக பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர்: “மன்னனின் தீனின்படி (எகிப்து நாட்டு அரச சட்டப்படி) தம் சகோதரரைப் பிடித்து வைத்துக் கொள்வது அவருக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை. ஆனால் அல்லாஹ் அதனை நாடினாலே தவிர (12:76)
நபி யூசுஃப் (அலை) அவர்கள் மன்னனின் சட்டங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒரு திருடனை அடிமையாக்கி கொள்வதற்கு, நபி யஃகூப்(அலை) அவர்களின் ஷரீஆவைப் பயன்படுத்தி, தனது சகோதரர் மீது தீர்ப்பு வழங்க தன்னை அனுமதிக்கச் செய்வதற்காக மன்னனை ஏமாற்றியதாய் நிரூபிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதில் குறிப்பிடப்படும் எதிர்மறையான புரிதலின்படி (மஃப்ஹ_ம் அல் முகாலஃபா), யூசுஃப்(அலை) தனது சகோதரரைத் தவிர மற்றவர்களுக்கு மன்னனின் சட்டப்படி தீர்ப்பு வழங்கியதாக மறைமுகமாக தெரிவிக்கப்படுகிறது என அவர்கள் வாதிடுகின்றனர். இந்த ஆதாரங்களைப் பயன்படுத்தி நபி யூசுஃப்(அலை) அவர்கள் இஸ்லாம் அல்லாத ஒரு ஆட்சியமைப்பில் அதிகாரம் வகித்ததையும், ஷரீஆ அல்லாத ஒன்றைக் கொண்டு தீர்ப்பு வழங்கியதையும் நிரூபிக்க முயல்வது, ஒரு நபியின் தவறு செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்ட தன்மைக்கு எதிராக கூறப்பட்ட ஓர் அவது}றாகும். எனவே, இந்த வாதம் மிகத் தெளிவான முறையில் பிழையானதாகும். இந்த வாதத்தில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டுவதற்கு முன்பு, நாம் யூசுஃப்(அலை) அவர்கள் ஒரு குஃப்ர் ஆட்சியமைப்பில் ஒருபோதுமே பங்குபற்றவில்லை என்பதை முதலில் நிரூபிக்க விரும்புகிறோம்.
நபி யூசுஃப்(அலை) அவர்கள் மீது மாசு கற்பிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அல்குர்ஆன் வசனத்தை நாம் கவனத்திற் கொண்டு பார்ப்போம்: “யூசுஃப், ‘நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள். நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன் என்று கூறினார். மேலும், இவ்வாறு நாம் யூசுஃப்பிற்கு அந்த அதிகாரத்தை வழங்கினோம். அவர் அங்கே தாம் விரும்பும் எந்த இடத்திலும் தங்கி வாழும் உரிமை பெற்றிருந்தார்;. (12:55-56) இந்த திருவசனத்துக்கு சரியான விளக்கங்கள் இரு விதமாக இருக்க முடியும்: முதலாவதாக, நபி யூசுஃப்(அலை) வெறுமனே எகிப்தில் அறுவடையாகும் பொருட்களைச் சேகரித்து அவற்றைச் சேமித்து வைப்பதற்கும், அந்த சேமிப்புக் குதங்களைப் பாதுகாப்பதற்கும் உரிய பொறுப்பாளராக இருந்தார்கள். இது ஒரு நிர்வாகப் பதவியே தவிர ஆட்சிப் பொறுப்புக்கான பதவி அன்று. இப்னு கதீர்(றஹ்) அவர்கள் இந்தக் கருத்தை இந்த திருவசனத்துக்கான தனது தஃப்ஸீரில் கூறுகிறார்கள். சுஹைபா இப்னு நுஆமாவும் இதே அபிப்ராயத்தைத்தான் சொல்கிறார்கள். இப்னு கதீர் அவர்களுடைய தஃப்ஸீரில் நபி யூசுஃப்(அலை), “அறுவடை செய்யப்பட்ட பொருட்களின் களஞ்சியசாலைகளுக்கு பொறுப்பாய் இருந்தார்கள். அவர்கள் அரசருக்கு முன்னறிவிப்பு செய்த பஞ்சக் காலத்தில் பயன்படுத்துவதற்காக, விளைபொருட்களை இந்தக் களஞ்சிய சாலைகளில் சேகரித்து வைப்பார்கள். அவர்கள் அதன் பாதுகாவலராக இருக்க விரும்பினார்கள். ஏனென்றால் இந்த அறுவடையை அறிவார்ந்த முறையிலும், சிறந்த வகையிலும், எல்லோருக்கும் பயன்படும் விதத்திலும் வழங்க முடியும் என்பதற்காக. (இமாதுத்தீன் அலி அல் ஃபிதா இஸ்மாயில் இப்னு கதீர்- தஃப்ஸீர் அல்குர்ஆனுல் அழீம்) இந்த அபிப்பிராயமானது, யூசுஃப்(அலை) அவர்கள் குஃப்ரைக் கொண்டு ஆட்சி செய்தார்கள் என்பதையோ, இந்த ஆட்சியமைப்பில் எந்த வகையில் பங்கு பற்றினார்கள் என்பதையோ எந்த விதத்திலும் சுட்டிக் காட்டுவதாயில்லை. மாறாக, யூசுஃப்(அலை) அவர்கள் வெறுமனே ஒரு நிர்வாகப் பதவியையே வகித்தார்கள் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. இவ்வாறு பதவி வகிப்பது இன்றைய கால கட்டத்திலும் கூட ஹராமானதன்று. எனவே இன்று குஃப்ர் ஆட்சியமைப்பில் சத்தியப் பிரமாணம் எடுத்து, இஸ்லாத்தை அரையும் குறையுமாக அமுல் செய்து, மனிதனின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செயல்படுபவர்களைப் போன்று, ஒரு குஃப்ர் ஆட்சியமைப்பில் தீர்ப்பு வழங்குவதற்கும், ஈடுபடுவதற்கும் அப்பாற்பட்ட ஓரு விஷயமாகும். இரண்டாவது அபிப்பிராயம் என்னவென்றால், நபி யூசுஃப்(அலை) அவர்கள் முழு நாட்டினதும் முக்கிய பொருளாதாரப் பண்டங்கள் மீது அதிகாரம் கொண்டவர்களாக நாடு முழுமைக்குமான பொறுப்பு அவர்களிடம் கொடுக்கப்பட்டது என்பதாகும். இந்த அபிப்பிராயத்தை இமாம் அந்நபவி குறிப்பிடுகின்றார்கள். அரசர், யூசுஃப் (அலை) அவர்களுக்கு கீழ்ப்பட்டவராயும், அவர்களது அனுமதியின்றி எந்தவொரு தீர்ப்பையும் வழங்க முடியாதவராயும் இருந்தார் என அவர்கள் கூறுகிறார்கள். அல் சுயூத்தி, அப்துர் ரஹ்மான் இப்னு ஜைத் இப்னு அஸ்லம் ஆகியோர் கூறியுள்ளதாக இப்னு ஜரீர் அல் தாபரி அறிவிக்கிறார்கள்: யூசுஃப்(அலை) அவர்களுக்கு “அங்கு தான் விரும்பியதைச் செய்வதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்டது. (அபூ ஜாஃபர் முஹம்மத் இப்னு ஜரீர் அல் தாபரி- ஜாமி அல் பயான் அன் தாவீல் அல்குர்ஆன்)மன்னர், உண்மையில் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகக் கூறும் சில அறிஞர்களின் கூற்று இதற்கு வலுச் சேர்க்கிறது. முஜாஹிதும் இதே கருத்தைக் கொண்டிருப்பதாக இப்னு கதீர் குறிப்பிடுகின்றார்கள்.
மேலும், குஃப்ர் ஆட்சியமைப்புகளில் நடைபெறும் தேர்தல்களில் ஈடுபடக் கூடியவர்களுடைய தந்திரோபாயங்களுடன் இதற்கு ஒப்புமை வழங்க முடியாது. கொடுங்கோல் அரசன் ஒருவன் தனது அதிகாரத்தை நீதி, நியாயமுள்ள ஒருவரிடம் கையளிக்க வேண்டும் எனக் கோருவது அனுமதிக்கப்பட்டது என்பதை மிகச் சாதாரணமாக நிரூபிக்கக் கூடியதாகவே குறித்த திருவசனம் அமைந்திருக்கிறது என இமாம் அந்நஸஃபி குறிப்பிடுகிறார்கள். இதன் கருத்து, முழு அதிகாரமும் கைமாறுவதால் அரையும் குறையுமான ஓர் அமுலாக்கத்தை இது குறிப்பிடுவதாகக் கருத முடியாது என்பதாகும்.
ஒரு குஃப்ர் ஆட்சியமைப்பில் பங்கு கொள்வதையோ அல்லது இஸ்லாத்தை அரையும் குறையுமாக அமூலாக்குவதையோ இந்தத் திருவசனம் அனுமதிப்பதாக கருத்து கொள்ள முடியாது. இது உண்மையில் நினைத்தும் பார்க்க முடியாத, நடைபெற முடியாத ஒன்றாகும். குர்ஆனுக்கு இந்த முறையில் விளக்கம் அளிப்பது என்பது, இதனை மிகத் தெளிவாகத் தடை செய்யும் வேறு பல தீர்க்கமான வசனங்களுக்கு முரண்பாடானதாகும். அந்த வசனங்கள் அவ்வாறு செய்யக் கூடிய ஒருவனை ஒரு காஃபிர் என்றோ, ஃபாசிக் என்றோ, ழாலிம் என்றோ குறிப்பிடுகின்றன:
“மேலும், எவர் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அத்தகையோர் தாம் நிராகரிப்பவர்களாவர்.” (5:44)
“இன்னும், எவர் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அத்தகையோர் தாம் அநியாயக்காரர்களாவர்.” (5:45)
“இன்னும், எவர் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அத்தகையோர் தாம் பாவிகளாவர்.” (5:47)
தவறுகளிலிருந்து அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்ட நமது நேசத்துக்குரிய நபி யூசுஃப்(அலை) அவர்களுடன், இத்தகைய தன்மைகளை இணைத்து பார்ப்பதென்பது நிச்சயமாக சாத்தியமான ஒன்றன்று. இத்தகைய ஓரு கருத்தோட்டம், அவர்கள் சிறையில் இருக்கும் போது தனது இரு நண்பர்களையும் நோக்கிக் கூறும், அல்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ள நபி யூசுஃப்(அலை) அவர்களின் சொந்தக் கூற்றுக்கும் முரண்;பாடானதாகும்:
“ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்குமில்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியக் கூடாது என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுதான் முற்றிலும் நேரான வாழ்க்கை நெறியாகும். ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அறியாதிருக்கின்றனர் (12:40)
இந்தத் திருவசனத்திலிருந்து யூசுஃப்(அலை) அவர்கள், உண்மையில் அல்லாஹ்வின் ஷரீஆவைக் கொண்டு ஆட்சி செலுத்தாத ஒருவன், தனக்கென சொந்த தீனை ஏற்படுத்திக் கொண்டான் என்பதையே நம்பினார்கள் என்பது தெளிவாகிறது. இது அவர்களின் கூற்றான, “இதுதான் முற்றிலும் நேரான வாழ்க்கை நெறியாகும் என்பதைக் கொண்டு எடுத்துக் காட்டப்படுகிறது. மிகத் தெளிவாக கூறுவதென்றால், யூசுஃப் (அலை) அவர்களின் கருத்துப்படி, அல்லாஹ்வினுடைய ஷரீஆவின் அடிப்படையில் தீர்ப்பளிப்பதும் ஆட்சி செய்வதும், அகீதா (அடிப்படைக் கொள்கை), தௌஹீத்--அல்லாஹ்வின் ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை கொள்வது, அல்லாஹ்வின் தீர்ப்புக்கு கட்டுப்படுவது என்பவற்றைச் சார்ந்த ஒரு விஷயமாகும்.
அல்லாஹ்வின் நேரான வாழ்க்கை நெறியைப் பின்பற்றாத ஒருவனை ஒரு முஷ்ரிக் (இணைவைப்பவன்) என வர்ணிக்கும் யூசுஃப்(அலை) அவர்களின் வார்த்தைகளுக்கு, இவ்வாறுதான் இப்னு கதீர் அவர்கள் விளக்கமளிக்கிறார்கள். இப்னு கதீர் அவர்களுடைய விளக்கம் பின்வருமாறு: “ ‘இதுதான் முற்றிலும் நேரான வாழ்க்கை வழியாகும்’ என்பதன் கருத்தாவது, அல்லாஹ்வின் இந்த தௌஹீத், அவனிடத்தில் மட்டுமே வணக்க வழிபாடுகளின் எல்லாச் செயல்களையும் சமர்ப்பிப்பது... என்பவைதான், அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்ட சரியான, நேரான தீனாகும். அதற்காக ஆதாரங்களையும், நிரூபணங்களையும் அவன் தான் விரும்பியவற்றிலிருந்து வெளிப்படுத்துகிறான். ‘ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அறியாதிருக்கின்றனர் என்பது, அவர்களில் பெரும்பாலோர் ஏன் முஷ்ரிக்குகளாக இருக்கின்றனர் என்பதை உணர்த்துகின்றது.” (இமாதுத்தீன் அலி அல் ஃபிதா இஸ்மாயில் இப்னு கதீர்- தஃப்ஸீர் அல்குர்ஆனுல் அழீம்)
யூசுஃப் (அலை) அவர்கள் தனது சகோதரரின் மீது மன்னருடைய சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கவில்லை என்பதை விபரிக்கின்ற போது அல்குர்ஆன், மன்னருடைய சட்டத்தை சுட்டிக்காட்டுவதற்கு ‘தீன்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், மன்னருக்கு ஒரு தீன் இருந்தது@ யூசுஃப்(அலை) அவர்களுக்கு இன்னொரு தீன் இருந்தது: “மன்னனின் தீனின்படி (அதாவது, எகிப்து நாட்டு அரசுச் சட்டப்படி) தம் சகோதரரை(ஓர் அடிமையாக)ப் பிடித்து வைத்துக் கொள்வது அவருக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை- ஆனால் அல்லாஹ் அதனை நாடினாலே தவிர!” (12:76)முஸ்லிம்களே! இது எவ்வாறு இருக்க முடியும்? நமது நபி யூசுஃப்(அலை) அவர்கள், சிறையில் தனது நண்பர்களிடம், அல்லாஹ்வின் ஷரீஆதான் முற்றிலும் சரியான, நேரான தீனாகும் என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறிவிட்டு, மற்றொரு சந்தர்ப்பத்தில் அரசருடைய தீனைப் பின்பற்றுகிறார்கள்? இத்தகைய ஒரு அவது}றிலிருந்து அல்லாஹ்விடத்திலிருந்து நாம் பாதுகாப்புத் தேடுகிறோம்.
இமாம் நஸஃபி, இப்னு கதீர், இமாம் அஸ் சவ்கானி ஆகியோர் இந்தத் திருவசனத்தைப் பற்றி கூறும் போது, யூசுஃப்(அலை) தனது சகோதரருக்கு, யஃகூப் (அலை) அவர்களின் ஷரீஆவின்படி தீர்ப்பளித்தார்கள் என்பதே இதன் கருத்தாகும் எனத் தெரிவிக்கின்றார்கள். இந்த திருவசனத்தில் கூறப்படும் எதிர்மறையான புரிதல்(மஃப்ஹ_ம் முகாலஃபா) என்பது யூசுப்(அலை) ஏனையவர்கள் மீது மன்னரின் சட்டத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்கியதாகச் சுட்டிக்காட்டுவதாக சிலர் வாதிடுகின்றனர். மஃப்ஹ_முல் முகாலஃபா என்பது எண்ணிக்கை(அதத்), வர்ணனை(வஸ்ஃப்;) என்பவற்றைக் கொண்டு, அவை மிகத் தெளிவான மூலங்களுக்கு முரண்படாத வகையில் இருந்தால், ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முறையாய் இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் அது ஏற்புடையதன்று. இந்தக் குறிப்பிட்ட வசனத்தில் வரும் மஃப்ஹ_ம், மஃப்ஹ_ம் அல் லகப் என அறியப்படுகிறது. அதாவது ஒரு பெயர்ச் சொல்லிலிருந்து அல்லது ஒரு பெயரிலிருந்து (அதாவது யூசுஃப்(அலை) அவர்களின் சகோதரரிலிருந்து) ஓர் எதிரான கருத்தைக் கொண்டதாகும். ஆயினும் கீழே குறிப்பிடப்படும் விளக்கத்துக்கமைய இந்தப் பலவீனமான மஃப்ஹ_ம் வகையின் பயன்பாடு, இந்தச் சூழ்நிலையில் ஏற்புடையதன்று. இதனை அபுபக்கர் அல் தகாக்கும், இப்னு ஃபாரூக்கும் ஒப்புக் கொள்கின்றார்கள்.
இந்த வகையான பகுத்தாய்தலை விளக்குவதற்கு ஒரு சாதாரணமான உதாரணம் தரப்படுகிறது: “நான் ஜைதைக் கண்டேன்என்ற கூற்று, இ;ந்த வகையான மஃப்ஹ_மைப் பயன்படுத்தி விளங்கப்பட்டால், அதன் கருத்து, “ஜைதை அன்றி வேறு யாரையும் காணவில்லை என்றிருக்கும். இந்த உதாரணத்தில், யூசுஃப் (அலை) தனது சகோதரரை நபி யஃகூப் (அலை) அவர்களின் ஷரீஆவைக் கொண்டு தீர்ப்பளித்ததாகக் கூறும் அல்லாஹ்வின் திருவசனம், அவர்கள் மற்றவர்களை மன்னருடைய சட்டத்தின்படி தீர்ப்பளித்தார்கள் என்ற ஒரு கருத்தைத் தருகிறது. இஃது உண்மையில் மிக பலவீனமான மஃப்ஹ_ம் முகாலஃபா வகைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த வகையான பகுத்தாய்தலைப் பயன்படுத்துகின்றவர்களுக்கு, மொழிரீதியாகவோ, சட்டரீதியாகவோ, பகுத்தறிவுரீதியாகவோ, எந்தவொரு நியாயக் காரணமும் கிடையாது என இமாம் அஷ்ஷவ்கானி குறிப்பிடுகிறார்கள். இமாம் அவர்கள் தொடர்ந்து அது பற்றிக் குறிப்பிடும் போது, “ ‘நான் ஜைதைக் கண்டேன்’; எனச் சொல்லக் கூடிய ஒருவர், அரபிகளின் பேச்சு வழக்கின்படி ‘ஜைத் அல்லாத வேறு எவரையும் நான் பார்க்கவில்லை’ என்ற கருத்தை தெரிவிப்பவராக இருக்கமாட்டார். இந்தக் கருத்து சரியானது என மூலத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தால் ஆதாரமும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் (முஹம்மது இப்னு அலி அல் செவ்கானி- இர்ஷாத் அல் ஃபுஹ_ல் இலா தஹ்கீக் அல் ஹக் மின் இல்ம் அல் உசூல்)
இந்த வகையான மஃப்ஹ_ம் ஏற்புடையது என்றாலும் கூட, அது எந்த வகையிலும் மேற்குறிப்பிட்ட உதாரணத்தில் பயன்படுத்தப்பட முடியாது. இஃது ஏனென்றால், மஃப்ஹ_முல் லகபை ஆதரிப்பவர்கள் கூட, இதன் பயன்பாடு வெளிப்படையான மூலங்கள் போன்ற சில நிபந்தனைகளுடன் முரண்படக் கூடாது என்பதை ஏற்றுக் கொண்டனர். எனவே, சர்ச்சைக்குரிய இந்தத் திருவசனத்தின் மீது இந்த வகையான மஃப்ஹ_மைப் பயன்படுத்துவது என்பது குஃப்ரினால் வழங்கக் கூடிய தீர்ப்புகளைத் தடைசெய்கின்ற பல தெளிவான அல்குர்ஆன் வசனங்களுக்கு முரண்பாடாக அமைந்திருக்கிறது.
“ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை (12:40)
என்ற யூசுஃப் (அலை) அவர்களின் சொந்த வார்த்தைக்கும் இது முரணானதாகும். அப்படிப்பட்ட கருத்தைக் கொள்வது என்பது, அல்லாஹ்வின் மாபெரும் நபி ஒருவருக்கு எதிரான, மிகவும் கொடூரமான, வெறுக்கத்தக்க அபாண்டமாகும். அஃது அறிவுக்கு பொருத்தமற்ற ஒரு கருத்தையே தரமுடியும் என்பதினாலேயே, அல் தகாக், இப்னு ஃபாரூக் ஆகியோரும் கூட இங்கு மஃப்ஹ_முல் லகப் பயன்படுத்தப்படுவதை ஏற்க மறுத்திருக்கிறார்கள். எனவே இந்த சர்ச்சையில், நாம் அதனை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்.
1.1 வாதத்தில் காணப்படும் அடிப்படையான தவறு: முந்தைய ஷரீஆக்களைப் பற்றியது.
மேலே நாம் கூறியவை அனைத்தும், அவது}றுகளிலிருந்து நபி யூசுஃப் (அலை) அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கு மாத்திரமேயாகும். வாதத்தில் உள்ள அடிப்படையான பிழை என்னவென்றால், யூசுஃப்(அலை) அவர்கள் இஸ்லாம் அல்லாத ஓர் ஆட்சி முறையில் பங்கு கொண்டார்கள் என்பதும், அதன் விளைவாக அது நமக்கு அனுமதிக்கப்பட்டது என்பதும்தான். யூசுஃப்(அலை) அவர்களின் ஷரீஆ, நாம் பின்பற்றுவதற்கு உரியது என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது. இது ஓரு பலவீனமான விதிமுறையாகும். எனவே யூசுஃப்(அலை) அவர்கள் அரசருடைய தீனைக் கொண்டு நடாத்தப்பட்ட ஓர் ஆட்சி முறையில் பங்கு கொண்டிருந்தாலும் கூட (இது முற்றிலும் நினைத்துப் கூடப் பார்க்க முடியாத ஒன்று), இது எந்த வகையிலும் முஸ்லிம்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழப் போவதில்லை. ஏனென்றால் முஸ்லிம்கள், நபிமார்களில் இறுதியானவர்களான முஹம்மத்(ஸல்) அவர்களின் ஷரீஆவினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
எவ்வாறு இருந்த போதிலும், சில அறிஞர்கள் இந்த விதிமுறையை ஏற்றுக் கொள்கின்ற அதே நேரத்தில், அதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளை நிர்ணயிக்கிறார்கள்: ‘நமது முந்தைய (நபிமார்களின்) ஷரீஆக்கள், முஹம்மத்(ஸல்) அவர்களினால் கொண்டு வரப்பட்ட ஷரீஆவிற்கு முரண்படாத வரைக்கும், நமக்கும் ஒரு ஷாPஆவாகத் திகழ்கிறது.’ (அபுபக்கர் முஹம்மத் இப்னு அபீ ஸஹ்ல் அஹ்மத் அல் சரக்ஷி- உஸ_ல் அல் சரக்ஷி)
இந்த விஷயத்தில் ஈர் அபிப்பிராயங்கள் மட்டுமே இருக்கின்றன. இதனைத் தவிர வேறு எந்த ஓர் அபிப்பிராயத்தையும் வேறு எந்த அறிஞர்களும் கொண்டிருக்கவில்லை. முந்திய ஒரு நபியினுடைய சட்டம் அல்லது தீர்ப்பு, முஹம்மத் (ஸல்) அவர்களினால் கொண்டு வரப்பட்ட ஷரீஆவை ஒதுக்கித் தள்ளிவிடும் எனக் குறிப்பிடுவது எள்ளி நகையாடப்பட வேண்டிய ஒன்றாகும். தங்களின் செயல்களை நியாயப்படுத்துவதற்காக அவர்கள் முயற்சிக்கின்ற, பயன்படுத்துகின்ற வேறெந்த பலவீனமான, ஆனால் ஏற்கத்தக்க விதிமுறைகளும் கூட, இவ்வாறே அமையும். இவற்றுள் சில, மகாசிதுஷ் ஷரீஆ - ஷரீஆவின் நோக்கங்கள், மூலங்களின் உள்ளார்ந்த கருத்துக்கள், மஸாலிஹ் அல் முர்ஸலா-(பொது நலன்) அல்லது இரு தீமைகளுக்குள் குறைந்த தகுதியை உடையது என்பனவாகும். இவற்றில் எதனையும், மிகத் தெளிவான ஷரீஆ மூலங்களுக்கு முரண்படும் விதத்தில் பயன்படுத்த முடியாது. இமாம் கஸ்ஸாலி, ஆமிதி மற்றும் இப்னு ஹாஜிப் போன்றோர் ஒன்றாக (இஜ்மா-அறிஞர்களின் ஏகோபித்த முடிவு) அறிவித்திருக்கிறார்கள்: அஃதாவது, ‘எந்த ஒரு பொதுவான ஆதாரமும், ஒரு குறிப்பிட்;ட ஆதாரத்தை முதலில் தேடிப் பார்க்காமல், ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காகப் பயன்படுத்தப்பட முடியாது.’ எனவே பலவீனமான, ஆனால் ஏற்புடைய விதிமுறைகளான “முந்தைய ஷரீஆக்களில்” இருந்து இரண்டாந்தரமான சட்டவாக்க மூலங்களை நாடிப் போவதற்கு முன், நபி (ஸல்) அவர்களினால் கொண்டு வரப்பட்ட குறிப்பிட்ட ஆதாரம் கண்டிப்பாக நாடப்பட வேண்டும்.
நம் முன்னுள்ள விஷயத்தில் வலுவான அல்லது பலவீனமான எந்தவோர் அபிப்பிராயம் பின்பற்றப்பட்டாலும், யூசுஃப் (அலை) அவர்களின் செயல்முறைக்கும் இன்று குஃப்ர் ஆட்சி முறைகளில் பங்கு கொள்வதற்கும் எந்தவோர் ஒப்புமையும் காணப்பட முடியாது. இத்தகைய நடவடிக்கையானது முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஷரீஆவிலிருந்து முரண்படுவதாகும். பின்வரும் திருவசனத்தில் குறிப்பிடப்படுவதைப் போன்று, பல திருவசனங்களில் அல்குர்ஆன் இந்த கருத்தை முன்வைக்கிறது: “எனவே நபியே! அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கு ஏற்ப அவர்களுடைய விவகாரங்களில் தீர்ப்பளியுங்கள். அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர்கள். அவர்கள் உம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தி, அல்லாஹ் உம்மீது இறக்கியருளிய அறிவுரைகள் சிலவற்றிலிருந்து (உம்மை) இம்மியளவும் நழுவச் செய்திடாவண்ணம், நீர் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக!” (5:49) யூசுஃப்(அலை) அவர்களின் வரலாற்றை நாம் தொகுத்து நோக்கினால், அவர்கள் அந்த ஆட்சி அமைப்பில் ஒரு நிர்வாகியாக அன்றி ஆட்சி அதிகாரம் உள்ளவராக பங்கு கொள்ளவில்லை என்றிருந்தாலும் சரி, அல்லது அவர்கள் முழு ஆட்சி அதிகாரத்துக்கும் பொறுப்பாளராக இருந்தார்கள் என்றிருந்தாலும் சரி, அல்லது அவர்கள் கொண்டு வந்த ஷரீஆ இன்று ஏற்புடையதல்ல என்றிருந்தாலும் சரி, அல்லது முஹம்மத்(ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஷரீஆவிற்கு முரண்படாத வரையில் யூசுஃப்(அலை) அவர்களின் ஷரீஆ ஏற்புடையதாக இருந்தாலும் சரி - இவை அனைத்தும் உண்மையாகவும், சரியாகவும் தோற்றமளிக்கின்ற அபிப்பிராயங்களாக இருந்தாலும் கூட, அவை அனைத்தும் குஃப்ர் ஆட்சியமைப்பில் பங்கு கொள்வதை எந்த வகையிலேயும் நியாயப்படுத்துவதாக அமையவில்லை. அப்படிப்பட்ட ஒரு செயல்முறை அல்லாஹ்வுக்கு எதிரான மிகப் பெரிய வரம்பு மீறலாகும். ஏனென்றால் அது குஃப்ரைக் கொண்டு தீர்ப்பு வழங்குவதையும், சட்டங்களை இயற்றுவதையும் குறிப்பிடுவதாகவே கருதப்படும். இதில் நம்பிக்கை வைத்த ஆட்சியாளர் ஒரு காஃபிராகக் கருதப்படுவார். அவர் அதில் நம்பிக்கை கொள்ளவில்லை என்றாலும்கூட அவர் ஓர் அக்கிரமக்காரராகவோ அல்லது ஒரு பாவியாகவோதான் கருதப்படுவார்.
2. ஷரீஆவின் நோக்கம் (மகாஸித்) நலன் விளைவிப்பதே (இலாபம் தருவதே) என்ற கருதுகோள்.
இந்த கருத்தினை ஆதரிப்பவர்களில் ஒருவரான அல் அல்வானி எழுதுகிறார்: “முஸ்லிம் சமூகம் தனது முழுமையான அந்தஸ்தை தியாகம் செய்ய நிர்பந்திக்கப்படாத வரைக்கும், அவர்கள் ‘ஈடுபாடு கொள்வது’ அனுமதிக்கப்பட்டதும், அவர்கள் மீது கடமையானதுமாகும். சமூகத்தைப் பொறுத்தவரைக்கும் அது ஒருவகையான ஜிஹாதாகும். சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட உறுப்பினர் (ஆணோ, பெண்ணோ), தான் மார்க்கத்தில் மிக பலவீனமாக இருப்பதாய் உணர்ந்தால், அவர் நேரடியாக பங்கு கொள்ளாமல் அதற்கு பதிலாக பொருளாதார ரீதியாகவோ, அல்லது பிற வழிகளிலோ ஆதரவு வழங்குவதில் எந்தத் தீமையுமில்லை. எனவே முஸ்லிம்களாலேயே பெறப்பட்ட எந்தவொரு பதவி அல்லது ஆட்சிப்பொறுப்பு அல்லது அத்தகைய பதவிகளில் உள்ளவர்கள் மீது தமது செல்வாக்கைச் செலுத்தும் தன்மை ஆகிய அனைத்தும், அவர்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய இலாபங்களாகும். ஏனென்றால் அவர்கள் தங்கள் நிலைகளைச் சீர்படுத்திக் கொள்ள முடியும்@ அவர்களின் இருப்பைப் பாதிக்கும் அல்லது இஸ்லாமிய ஒழுக்க, தார்மீகத் தத்துவத்துடன் ஒத்திசையாத அமைப்புகளையும் சட்டங்களையும் மாற்ற முடியும். முஸ்லிம் மக்களுடன் தொடர்புடைய அரசியல் முடிவுகள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதும் கூட இதில் உள்ளடங்கும். இத்தகைய உயர்ந்த நோக்கங்களை அடைவதற்காக உதவக்கூடிய, சட்டரீதியான வழிமுறைகள் எதுவும் இதே விதமான ஹ_க்மைத்தான் பெற்றுக் கொள்ளும். ஒரு முஸ்லிம் தன்னை சிற்சில அரசியல் பதவிகளுக்கு முன்னிறுத்துவதும், ஒரு முஸ்லிமல்லாத வேட்பாளர் முஸ்லிம்களுக்கு அதிகமாக நன்மை செய்வபவராகவும் அல்லது குறைந்தளவு தீமை செய்பவராகவும் இருந்தால் அவரைத் தேர்ந்தெடுப்பதும், பணத்தைக் கொண்டு அவருக்கு உதவியளிப்பதும் கூட இதில் உள்ளடங்கும். பிரதிபலனாக எதனையும் பெறாமல் அவர்களைக் கண்ணியத்தோடு நடத்துவதற்கும், அவர்களுடன் நல்ல உறவுகளைப் பேணுவதற்கும் அல்லாஹ் நமக்கு அனுமதித்திருக்கிறான். அப்படியிருக்கும் போது, அத்தகைதொரு மனிதனுக்கு ஆதரவு வழங்குவதைக் கொண்டு நமக்கு மிகத்தெளிவான இலாபங்களும், நன்மைகளும் கிடைக்கின்றன என்றால், நாம் ஏன் அவரை ஆதரிக்கக் கூடாது?”
மஸ்லஹா எனப்படும் நன்மை, இலாபம், அனுகூலம், நலன் என்பதைக் கொண்டு அதனைப் பயன்படுத்துவதை ஆதரி;ப்பவர்கள் என்ன பொருள் கொள்கின்றனர்; தெரியுமா? ‘மஸ்லஹாவானது, சட்டகர்த்தாவான இறைவன் ஒரு ஷரீஆ ஆதாரத்தின் மூலமாக ஏற்றுக்கொள்ளாத அல்லது புறக்கணித்த ஒரு நன்மையாகும். மேலும் அதனை அடைவதற்காக அவன் ஒரு ஹ_க்மை(சட்டத்தை)த் தரவுமில்லை.’ அவர்களில் சிலர் அதற்கு இவ்வாறு வரைவிலக்கணம் கூறுகின்றனர்;: ‘அஃதானது, மக்களுக்கு அல்லது தனி நபர்களுக்கு ஒன்றில் நிரந்தரமானதாய் அல்லது பொதுவானதாய் அமையும் நன்மையை, அஃதாவது ஓர் இலாபத்தை, ஒருவர் அடைந்து கொள்வதற்காகக் கையாளும் ஒரு செயலைப் பற்றிய விளக்கமாகும்.’
மேற்கின் அரசியல் வாழ்க்கையில் பங்கு கொள்வதை ஆதரித்து பிரசாரம் செய்பவர்கள், தங்களின் இந்தப் புரிதல் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறுகின்றனர். மேலும் இஃது, “இரு நல்ல செயல்களில் எது சிறந்தது எனச் சீர் து}க்கிப் பார்த்து அதனைத் தேர்ந்தெடுப்பதையும், இரு நலன்களில் எது மிகப் பெரியது என்பதை அறிந்து, அவை இரண்டில் எது முக்கியத்துவம் குறைந்ததோ அதனைப் புறக்கணிப்பதையும், இரு தீமைகளில் எது தீமைகளில் குறைந்ததோ அதனை ஏற்று கொள்வதைக் கொண்டு இரு தீமைகளில் மோசமானதை விலக்குவதையும் அடிப்படையாகக் கொண்டதாகும் என்கின்றனர்.
கீழ்க்கண்ட கருத்துக்களின் காரணமாக, இந்தக் கண்ணோட்டம் தவறான வழியில் அழைத்துச் செல்லும் ஒரு வாதம் என்பதை நன்கு அறிந்து கொள்ளலாம்:
• நன்மை, தீமையைப் பற்றி நிர்ணயிக்கின்ற உரிமை உலகங்களின் நாயனான அல்லாஹ்வுக்கே உரியதாகும். எதையெதை எல்லாம் ஷரீஆ செய்யக் கோருகிறதோ, அவை அனைத்தும் இலாபம் தரக்கூடியதும், நலன் விளைவிப்பதுமாகும். மேலும் எதையெதை எல்லாம் ஷரீஆ தடுக்கின்றதோ, அவை தீமைகளாகும். அல்லாஹ்வின் திருவசனம் இந்தக் கருத்தைத்தான் தெரிவிக்கின்றது:
“போர் செய்யுமாறு உங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) கட்டளை இடப்பட்டிருக்கிறது. ஆனால் அதுவோ உங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது. ஒரு பொருள் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக் கூடும். மேலும், ஒரு பொருள் உங்களுக்கு தீமையாக இருக்கும் நிலையில், அதனை நீங்கள் விரும்பக் கூடும். (இவற்றை) அல்லாஹ் நன்கு அறிகின்றான். ஆனால் நீங்கள் அறிவதில்லை.” (2:216)
• முடிவு செய்யும் உரிமையை உள்ளத்திடம் கொடுத்தால், அந்த உள்ளம் குறுகலானது, மட்டுப்படுத்தப்பட்டது என்பதால், உண்மையான இலாபத்தையும், பலனையும் தரக்கூடிய விஷயத்தைத் தீர்மானிப்பதற்கு மக்கள் கஷ்டப்படுவார்கள். உள்ளமானது, மனிதனின் இயல்பையும், அவனது மெய்ப்பாட்டையும் சூழ்ந்து கொள்ளும் ஆற்றல் அற்றதாகும். அதனால் அவனுக்கு இலாபம் தரக் கூடியவற்றை தீர்மானிப்பதற்கு இயலாது. ஏனெனில், ஒன்று ‘இலாபம் தரக்கூடியதா? அல்லது தீமை விளைவிக்கக்கூடியதா?’ என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, அதன் மெய்ப்பாட்டை நிச்சயமாக அதனால் புரிந்து கொள்ள முடியாது. மனிதனின் மெய்ப்பாட்டை அவனது படைப்பாளனான இறைவனாலன்றி வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது. மனிதனின் படைப்பாளனான அல்லாஹ்வைத் தவிர வேறு யாரினாலும் அதன் இலாபங்களைப் பற்றி மிகத் துல்லியமாகவும், நுணுக்கமாகவும் தீர்மானிக்க முடியாது. ஆம், ஒரு பொருள் அல்லது விஷயம், ‘இலாபம் தரக்கூடியதா அல்லது தீங்கு விளைவிக்கக்கூடியதா?’ என்பது பற்றி மனிதனால் சிந்தித்து பார்க்க முடியும். ஆனால் அவனால் அதனைத் தீர்க்கமாக புரிந்து கொள்ள முடியாது. எனவேதான், அனுமானத்தின் அடிப்படையில் எஃது இலாபம் தருவது, நன்மை பயப்பது எனத் தீர்மானிக்கும் பொறுப்பை உள்ளத்திடம் விட்டுவிடுவது என்பது, அபாயத்தையும் பேரிடரையும் நோக்கி இட்டுச் செல்வதாகவே அமையும். ஏனென்றால், ஒன்று தீமையானது என்று நாம் நினைக்கக் கூடும். பின்னர், அது நன்மை பயப்பதாக அவனுக்கு தோற்றந் தரும். இதனால், அவன் ஏற்கனவே ஒரு நன்மையை தன்னிடத்திலிருந்து அகற்றிக் கொண்டு விடுகின்றான். நமக்கு தடுக்கப்பட்டவைகளில் இலாபம் இருக்கிறது என நாம் வாதிப்பதிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்!
• இதுதவிர, எல்லோராலும் மிகப் பகிரங்கமாகப் பார்க்கக்கூடிய விதத்தில் முஸ்லிம்களுக்கிடையே அபரிமிதமான சர்ச்சைகளும் பிணக்குகளும் இருந்து கொண்டிருக்கும் போது, ‘நலன்களை’ யார்தான் வரையறுப்பது? யதார்த்தத்தை உற்றுப் பார்க்கும் போது, மஸ்ஜிதுகளின் நிர்வாகத்தையும் அதன் நிதியையும் ஆதிக்கம் செலுத்துவதற்காக எத்தனை போராட்டங்கள் நடக்கின்றன. மேற்குலகில் மிகச் சொற்பமான மஸ்ஜிதுகளில் மட்டுமே இந்நிலை காணப்படுவதில்லை. இந்த உண்மையை யாவரும் அறிவர். இவ்வாறு இருக்கும் போது, நாம் இலாபங்களையும் நன்மைகளையும் பற்றி எவ்வாறு பேச முடியும்? யார்தான் இவை எவையெவை என நிர்ணயம் செய்யப் போகின்றனர்;? உதாரணமாக, முஸ்லிம்கள் தமக்கிடையில் கருத்து வேறுபாடு கொள்ளாத எந்த ஒரு தேர்தலாவது இருந்திருக்கிறதா? ஐக்கிய இராஜ்ஜியத்தில் நடந்த உள்ளுராட்சித் தேர்;தலில், முஸ்லிம்கள் சிலர் சுதந்திர ஜனநாயகக் கட்சியில் இணைந்தனர்; அல்லது அதற்கு வாக்களித்தனர்;. கிலாபத் நிர்மூலமாக்கப்படும் போது, இந்தக் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. வேறு சிலர், பழைமைவாத கட்சியில் இணைந்து கொள்வதற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இன்னும் சிலர், தாங்கள் தொழிற்கட்சியின் உறுப்பினராக இருக்கிறோம் என்ற உண்மையைப் பிறருக்கு வெளிக் காட்டுவதில் பெருமையடைந்தனர்.
• இந்தக் கருத்தை ஆதரிப்பவர்களைப் பொறுத்தவரையில், இலாபங்களுக்கான நிபந்தனையானது, இந்த இலாபங்களும், நன்மைகளும் அசலானதாகவும், சொந்த விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டவையாக அல்லாமலும் இருக்க வேண்டும் என்பதாகும். இருந்தபோதும், குஃப்ர் ஆட்சியமைப்பில் பங்கு கொள்வதன் மூலமாக இவற்றை அடைந்து கொள்ள அவாவுறும் இந்த மனிதர்கள் கிடைப்பதாகக் கூறும் இலாபங்களும் நன்மைகளும், பெரும்பாலும் கற்பனைத் தோற்றங்களாகவும், முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவுமே அமைந்திருக்கின்றன. மேற்குலகத்தினால் அடைந்து கொள்ளப்படும் இலாபங்களைத் தவிர வேறெவையும் அசலான இலாபங்கள் அல்ல.
• பங்கு கொள்வதன் மூலம் அல்லாமல் மஸ்ஜித்கள், பாடசாலைகள் மற்றும் ஏனைய உரிமைகளை அடைந்து கொள்ள முடியாது என இவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், முஸ்லிம்கள் கடந்த 30 ஆண்டுகளாக ‘அரசியல் ஈடுபாடு’ இல்லாமலேயே, மேற்கில் வாழ்ந்து வருகின்றனர்@ தங்களுக்கு மத்தியிலிருந்தே அவர்கள் மஸ்ஜித்களையும், பாடசாலைகளையும் நிறுவி வருகின்றனர்.
• முஸ்லிம்களின் வாக்குகளைக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களில் வெற்றியீட்டிய ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் உதாரணத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு படிப்பினை இருக்கிறது. முஸ்லிம்களில் அதிக எண்ணிக்கையானோர், இந்த மனிதர், நிறுவனங்களை அமைத்துக் கொள்வதற்கு தங்களை அனுமதிப்பதன் மூலமும், தங்கள் பிரதிபலிப்பைச் சீர்படுத்திக் கொள்வதற்கு உதவுவதன் மூலமும் பலஸ்தீன் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் ஆதரவை வழங்குவதன் மூலமும் இஸ்லாமிய நலன்களை அடைந்து கொள்வதற்கு துணைபோவார் என நினைத்தனர். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரப்பீடத்தில் அமர்ந்த உடனேயே, புதிய சிலுவை யுத்தத்திற்கான தீப்பொறியைப் பற்ற வைத்து, பயங்கரவாதம் என்ற போலிக் காரணத்தின் கீழ்; உலக முஸ்லிம்களைக் கொல்வதற்கும், நாடு கடத்துவதற்கும், துரத்துவதற்கும் ஆரம்பித்தார். ஐக்கிய இராஜ்ஜியத்தில்; தற்போதைய தொழிற்கட்சியைப் பற்றியும் இதே விதமாகவே கூற முடியும். இங்கு முஸ்லிம்களில் பலர், முஸ்லிம்களின் வாழ்வு எளிதானதாய் அமைந்து விடும் என எதிர்பார்த்து, இந்தக் கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால் அதற்கு மாறாக, அந்தக் கட்சியின் ஆட்சி முஸ்லிம்களுக்கு முழுக்க முழுக்க துன்பத்தையும் துயரத்தையும் தான் கொண்டு வந்தது.
மேற்கில் அரசியல் வாழ்வில் பங்கு கொள்வதனால் கிடைக்கும் இலாபங்கள் கற்பனையானவையே அன்றி அசலானவையல்ல என்று நிஜமானதும், உறுதியானதும், நன்கு உணரப்பட்டதுமான உண்மை நிலை நமக்கு உணர்த்துகிறது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால், அவர்கள் நமது வாக்குகளைத் தங்கள் சொந்த இலாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நாம் குஃப்ர் ஆட்சியில் பங்கு கொண்டோம் என்பதற்காகவோ அல்லது நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதற்காகவோ, அவர்கள் தங்களின் இலாபத்தைக் கருத்திற் கொண்ட கொள்கைகளை மாற்றி விடுவதுமில்லை@ தங்கள் முக்கிய நலன்களை கைவிடுவதுமில்லை.
அவர்கள் கூறுகின்றனர்: “அவர்கள் விவாதிக்கின்ற - ஆதாரங்களாக எடுத்துக் காண்பிக்கின்ற இலாபங்கள், அவற்றை அடைந்து கொள்வதற்காக சட்டகர்த்தாவான இறைவன் ஒரு சட்டத்தை தராததாகவும், ஷரீஆவின் நிரூபணங்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதா அல்லது புறந்தள்ளுவதா என்பதைச் சுட்டிக் காட்டாதவையாகவும் அமைந்திருக்கின்றன. (ஃபக்ருதீன் இப்னு முஹம்மத் அர்ராஸி- அல் மஹ்சுல் ஃபி இல்ம் உசூல் அல் ஃபிக்ஹ்@ அபூஹாமித் இப்னு முஹம்மத் அல் கஸ்ஸாலி- அல் முஸ்தஸ்ஃபா மின் இல்முல் உசூல்)
ஆனால்;, இலாபங்களை அடைந்து கொள்வதற்காக குஃப்ர் ஆட்சியில் பங்கு கொள்வதென்பது, மிகத் தீர்க்கமான ஆதாரங்கள் பழித்துக் கூறக்கூடிய ஒன்றாய் அமைந்திருக்கின்றது. இந்தத் திட்டவட்டமான நிரூபணங்கள், இம்முறையில் இலாபம் அடைந்து கொள்வதை நிராகரித்திருக்கின்றன@ மேலும் செல்லுபடியற்றதாக்கியிருக்கின்றன.
‘நன்மையான இரு செயல்களில் சிறந்தது எது எனச் சீர்;து}க்கிப் பார்ப்பதற்கும், இரு தீமைகளில் குறைந்த தகுதியுடையதைப் புறக்கணிப்பதற்குமான’ விதிமுறையானது, அதனைப் பின்பற்றுவோர்களுள், செயல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து செய்வதைத் தவிர தனக்கு வேறெந்த சாத்தியக்கூறுமில்லை என்ற நிலையிலுள்ள ஒரு முஸ்லிமுக்கு மட்டுமே பொருந்தும். இதற்கான ஓர் உதாரணமாக, ஒரு பெண்ணுடைய மறைவான பகுதிகள் வெளியான நிலையில், அவளை மரணத்திலிருந்து காப்பாற்றுவதற்கு ஒருவர் முயற்சி செய்யும் நிகழ்வைச் சுட்டிக்காட்டலாம். அந்தப் பெண்ணை இத்தகையச் சூழ்நிலையில் ஒருவன் கண்டால், அவளைக் காப்பாற்றுவதற்கு அவன் நிர்ப்பந்திக்கப்படுகின்றான். அப்பொழுது அவன், அவளது அவ்ரா எனும் மறைவான பகுதிகளைக் காண நேர்ந்தாலும், அவன் அவளைக் காப்பாற்றும் செயலை செய்தாக வேண்டும். இந்த நிலை தவிர்க்கப்பட முடியும் என்ற விஷயங்களில், இத்தகைய விதிமுறைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை. அப்படிப்பட்ட விஷயங்களைப் பொறுத்தவரையில், இரு தீமைகளில் குறைந்த தகுதியுடையது என்று ஒன்று கிடையாது.
சேக் அப்துல்லாஹ் பையாஹ், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சான்டா கிலாராவில் 1999ம் ஆண்டு நிகழ்த்திய உரையொன்றில் இவ்வாறு கூறியிருக்கின்றார்: “இந்த நாட்டில் அரசியல் வேட்பாளர்களைப் பற்றி மக்கள் அக்கறை கொள்ள வேண்டும் என்பது ஒரு முக்கியமான அம்சம் என உணர்கிறேன். முஸ்லிம்களைப் பற்றி உடன்பாடான மனப்பான்மையைக் கொண்டிருப்பதாக அறியப்படும் - முஸ்லிம்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய - எதிர்த்து நிற்கின்ற வேட்பாளர்களை விட நேர்மையான, சிறந்த மனிதர்கள் என்று அறியப்பட்ட வேட்பாளர்களுக்கு - நாம் ஆதரவு அளித்தால், உசூலி அறிவின்படி, இஃது இரு தீமைகளில் குறைந்த தகுதியுடையதொன்றைத் தேர்ந்தெடுப்பதாக இருக்கும்.
ஆனால் குஃப்ர் ஆட்சியமைப்பில் பங்கு கொள்வது என்பது, நம்மால் தவிர்த்துக் கொள்ள முடியுமான ஒன்றாகும். இதனாலேயே இந்த விதிமுறையை இங்கு பிரயோகிப்பது செல்லுபடியற்றதானதொன்று என்று நாம் குறிப்பிட்டோம். அது எந்த வகையிலும் தெளிந்த, சரியான அறிவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க முடியாது.
இரு நல்ல செயல்களுக்கு இடையில் சிறந்ததையும், இரு தீமைகளுக்கு இடையில் குறைந்ததையும் நிர்ணயம் செய்வது, ஷரீஆவே அன்றி மனிதனின் உள்ளமன்று. முஸ்லிம்கள், தங்களின் மனித உள்ளங்களுக்கு நிர்ணயம் செய்வதற்கும் சீர்து}க்கிப் பார்ப்பதற்குமான உரிமையை வழங்கியபோது -- தங்களின் உள்ளங்களிலும் அபிப்பிராயங்களிலும் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளின் காரணமாக, அதனை அவர்களால் செய்ய இயலாத நிலையில் -- இந்த விதிமுறைகளின் அடிப்படையில், ஐக்கிய இராஜ்ஜிய பொதுத் தேர்தலில் டோனி பிளேயரைத் தெரிவு செய்தனர். பழைமைவாதிகளைப் புறம்தள்ளினர். அதன் முடிவு என்னதாய் இருந்தது? இரு தீமைகளில் மோசமானதை அவர்களினால் தடுக்க முடிந்ததா? அல்லது அதனை முன்னுக்கு கொண்டு வர முடிந்ததா?
No comments:
Post a Comment