Monday, August 31, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... இறுதிப்பகுதி!

இதுதான் பாதை இது தான் பயணம்

கிரக நிலைகள் நிறைந்த வானத்தின் மீதும் வாக்களிக்கப் பட்ட (மறுமை) நாளின் மீதும் சாட்சிகள் மீதும் சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, விறகுகள் போட்டு எரிக்கும் நெருப்பு அகழ்வெட்டியோர் அழக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்) அதன் மேல் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில் விசுவாசிகளை (நோவினை) செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். (விசுவாசங்கொண்ட) அவர்களில் யாதொரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும் மிக்கப் புகழுடையோனும் (யாவரையும்) மிகைத்தோனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் விசுவாசித்ததையேயன்றி (இதனையே அவர்கள் குற்றமாகக் கண்டனர்) வானங்கள் ப10மியின் ஆட்சி அவனுக்குரியதே. (அவனை விசுவாசித்ததற்காகவே அவர்களை நோவினை செய்தனர்) அல்லாஹ்வோ (இவர்கள் செய்த) யாவற்றிற்கும் சாட்சியாக இருக்கின்றான். ஆகவே எவர்கள் விசுவாசங் கொண்ட ஆண்களையும் பெண்களையும் இவ்வாறு துன்புறுத்திப் பின்னர் (அதைப்பற்றி) அவர்கள் (பச்சாதாபப்பட்டு) மன்னிப்புக் கோhரவுமில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனையுண்டு. அன்றி சொந்தமாக அவர்களுக்கு (அவர்கள் விசுவாசிகளைப் பொசுக்கியவாறு நெருப்பால்) பொசுக்கும் வேதனையுமுண்டு. ஆயினும் எவர்கள் விசுவாசங் கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ நிச்சயமாக அவர்களுக்கு சதா நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளுமுண்டு. இது மகாபெரும் பாக்கியம். (நபியே இந்த விஷமிகளைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிகக் கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது) நிச்சயமாக அவன்தான் அவர்களை உற்பத்திச் செய்தான். (அவர்கள் மரித்தப் பின்னரும் அவர்களை) அவனே மீளவைப்பான். அவன் (விசுவாசங் கொண்டவர்களை) மிக்க மன்னிப்போனும் நேசிப்போனுமாக இருக்கின்றான். (அவன்தான்) மகத்தான அர்ஷ_டையவன். பெருந்தன்மையுடையவன். தான் விரும்பியதை எல்லாம் செய்யக் கூடியவன். (அல்குர்ஆன் 85:1-16)
இறைவனை ஏற்றுக் கொண்டவர்கள் அவர்களிலும் குறிப்பாக இஸ்லாத்தை நிலைநாட்டுவதை இலட்சியமாய்க் கொண்டவர்கள் மேலே கோடிட்டுக் காட்டிய இறைவனின் வரலாற்று வருணிப்பை ஊன்றிக் கவனித்திட வேண்டும். இஸ்லாத்தை இன்னும் ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் அதனை எடுத்துச் சொல்லிடுவோருக்கும் இந்த வரலாற்றில் அழகானதோர் பாடம் புதைந்து கிடக்கின்றது. வரலாற்றில் வருகின்ற நாள்களில் வாழ வருகின்ற அத்தனை இறை நம்பிக்கையாளர்களுக்கும் அவர்கள் எந்தக் காலத்தில் வாழ்ந்தாலும் சரியே. இதிலோர் ஆழமான அறிவுரை அமிழ்ந்து கிடக்கின்றது. அழுத்தமான இறைநம்பிக்கைக் கொண்டதோர் திருக்கூட்டம் ஒரு பக்கம் மறுபக்கம் அவர்களை இறைநம்பிக்கையிலிருந்து பிரித்தே தீருவோம் எனச் சங்கல்பம் செய்து கொண்டு தங்களால் ஆனது அனைத்தையும் செய்யும் கூட்டம். இந்த இரண்டாவது கூட்டம் இறைவனை ஏற்றுக் கொள்வதற்கு மனிதனுக்கிருக்கும் உரிமைகளை மறுத்தக்கூட்டம். மட்டுமல்ல அவர்களைச் சித்திரவதைகளுக்கு உட்படுத்திச் சுவைத்தக் கூட்டம். கொழுந்து விட்டெரியும் நெருப்புக் குண்டத்தில் போட்டுப் பொசுக்கிய பின்னரும் அந்த இறைநம்பிக்கையாளர்கள் தங்கள் ஈமானில் இறைநம்பிக்கையில் சற்றும் தளர்ந்திடவில்லை. இதனால் இந்த இறைநம்பிக்கையாளர்கள் அந்த ஈனப்பிறவிகளை விட எவ்வளவோ உயர்ந்து நின்றார்கள். இந்த உலகிலுள்ள கவர்ச்சிகள் அவர்கள் முன் மண்டியிட்டன. நெருப்பும் எரிப்பும் அவர்களை நெருப்பிலிடப்பட்ட தங்கமாய் மின்னிடச் செய்தன. காரணங்கள் அவற்றால் விளைந்த செயல்கள் என்ற காய்களை நகர்த்திப் பார்;த்தால் இந்த உலகைப் பொறுத்தவரை இறைநம்பிக்கை கொண்ட அவர்களின் மேல் அந்தக் கொடுமையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.
இன்னும் இந்த இறைவசனங்களுக்கு நமக்குக் கிடைக்கும் விளக்கங்களின்படி இந்த வன்னெஞ்சங் கொண்டவர்களை அல்லாஹ் இந்த உலகில் தண்டித்தானா? என்பது தெரியவில்லை. ஆனால் இதுபோன்று இறை நம்பிக்கையாளர்களை ஏளம் செய்தவர்களை கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டவர்களை அல்லாஹ் பலமுறை இந்த உலகிலேயே கடுமையாகத் தண்டித்திருக்கின்றான். இப்படித்தான் அந்த இறைவன் நபி நூஹ்(அலை) அவர்களின் சமூகத்தையும் நபி ஹ_து (அலை) அவர்களின் சமூகத்தாரையும் நபி ஸாலிஹ் (அலை) அவர்களின் கூட்டத்தாரையும் ஷ_ஐப் (அலை) அவர்களின் சமூகத்தையும் நபி லூத் (அலை) அவர்களின் கூட்டத்தாரையும் இந்த உலகிலேயே கண்டித்தான், கடுமையாகத் தண்டித்தான். அதேபோல்தான் ஃபிர்அவ்னின் பகட்டான படையையும் ஆணவமிக்க அதிகாரத்தையும் அதிரவைத்தான். அனைத்து ஆற்றல்களுக்கும் சொந்தமான அல்லாஹ். ஆனால் நாம் மேலே எடுத்துக்காட்டியுள்ள இறைவசனங்களில் வரும் நெருப்புக் குண்டத்தின் சொந்தக்காரர்களை அல்லாஹ் இந்த உலகிலேயே தண்டித்ததாய் தெரியவில்லை. இப்படிப் பார்த்திடும் போது அதாவது இந்த உலகை வைத்துப் பார்த்திடும் போது முடிவு வேதனையும் சோகமும் நிறைந்ததுதான் இறைவனை நம்பி நிற்கும் முஸ்லிம்களுக்கு.
ஆனால் இந்த விவகாரம் இத்தோடு முடிந்ததா? அத்தனை சோதனைகளுக்கிடையேயும் அல்லாஹ்வை நம்பி அதில் அணுவும் அசையாமல் அறுதிவரை உறுதியாய் நின்ற அவர்கள் ஒன்றுமே இல்லாமல் போய் விட்டார்களா? அந்த நெருப்புக் குண்டம் அவர்களை விழுங்கியதோடு அவர்களின் வாழ்வும் வரலாறும் முடிந்து போய்விட்டனவா? அல்லது அவர்களை நெருப்பிலே எறிந்து அவர்கள் துடியாய்த் துடிப்பதையும் அவர்கள் எரிந்ததையும் வேடிக்கைப் பார்த்து ஆனந்தம் கொண்டோர்தான் தண்டிக்கப்படாமல் விடப்பட்டு விட்டார்களா? இந்த உலகில் இந்தக் குரூரப் புத்தி கொண்டோர் தண்டிக்கப்படாமல் தப்பித்து விட்டார்களே என்பதை எண்ணும் போது தாங்கிட முடியவில்லை. ஆனால் அந்த அல்லாஹ்வின் வரலாற்றுப் பேழை நமக்கு வேறொரு பாடத்தையல்லவா புகட்டுகின்றது. அது வரப்போகும் வேறொரு யதார்த்தத்தை நமக்குப் பட்டாங்கமாய் சொல்லித் தருகின்றது. இறைநம்பிக்கையாளர்கள் வேதனையையும் சோதனையையும் எப்படி எடைபோட்டுப் பார்க்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. உலக வாழ்க்கையில் எதிர்ப்படும் சுகங்கள் சாதனைகள் சோதனைகள் விரக்திகள் வேதனைகள் அல்லாஹ்வின் எடை மேiடையில் எள்ளளவும் எடுபடுவதில்லை. இந்த உலகில் வெற்றி என்பதோடு வெற்றி என்பதன் பொருள் முற்றுப் பெற்றிடுவதில்லை. அல்லாஹ்வின எடை மேடையில் அனைத்து எடைகளையும் விஞ்சி நின்று எடுபடுவது ஈமானின் அல்லாஹ்வின் மேல்கொண்ட நம்பிக்கையின் எடையே. மனிதர்கள் எல்லோரும் மரணத்தைச் சந்திக்கின்றார்கள். ஆனால் எல்லோருடைய மரணமும் ஒன்றுபோல் இல்லை. சிலர் இலட்சிய வீரர்களாய் விதைக்கப்படுகின்றார்கள். இலட்சிய வீரர்களை உருவாக்குகின்றார்கள். இறைவனின் பாதையில் இலட்சிய வீரர்களாய் வீரமரணத்தைத் தழுவிடும் இந்த மறவர்கள் மறுமையில் மகத்தான நற்கூலிகளைப் பெற்று ஏனையோர் அடையமுடியாத உயர்வுகளைப் பெற்றுவிடுகின்றார்கள். இவர்கள்தாம் மனித வரலாற்றின் மகுடங்கள். இந்தச் சிலர் வேறு யாருமல்ல. இவர்கள்தாம் தாங்கள் மனமொப்பி ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக ஈமானுக்காக படைத்தவன் மேல் கொண்ட நம்பிக்கையின் பிடிப்பிற்காக தங்கள் வாழ்வை இந்த உலகில் இழந்தவர்கள். இந்த இறைநம்பிக்கையாளர்கள் விரும்பியிருந்தால் தங்களது இறைநம்பிக்கையை விட்டுக்கொடுத்து ஈமானைப் பேரம்பேசி இந்த உலகவாழ்வில் எதிரே வந்த சித்திரவதைகளிலிருந்து தப்பித்திருக்கலாம். இன்னும் சொன்னால் அவர்கள் இந்த உலகில் உல்லாசங்களில் தவழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் நன்றாக அறிவார்கள் இப்படிப் பெறப்படும் அத்தனை உல்லாசங்களும் இமைப்பொழுதில் இகத்தை விட்டு ஓடிவிடும். அந்த மரணத்தின் மடியில் வீழ்ந்தேயாக வேண்டும். பின் மறுமை என்ற மரணத்திற்குப் பின்னால்வரும் வாழ்க்கையில் நிரந்தர இன்னல்களுக்கு ஆளாகியாக வேண்டும். ஆதலால்தான் அவர்கள் இம்மையைவிட்டு மறுமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இந்த உலக வாழ்க்கையில் அவர்கள் மேற்கொண்ட எதிர்நீச்சலுக்கு எத்தனையோ சாட்சிகள். ஒரு சில மனிதர்கள்தாம் அங்கே சாட்சியாக இந்த இறைநம்பிக்கையாளர்கள் சித்திரவதைக்குள்ளானதற்கான சாட்சியாக இருந்தார்கள் என்றில்லை. வானவர்கள் இந்தப் ப10மியில் நடப்பவைகளின் நேரடி சாட்சிகள் அவர்களும் இந்த உலகில் நடப்பனவற்றில் பங்கெடுத்துக் கொள்பவர்கள். அவர்கள் மனித சமுதாயத்தின் அனைத்துத் தலைமுறைகளையும் கடந்து நிற்பவர்கள். இந்த வானவர்கள் கௌரவமானவர்கள். எண்ணிக்கையில் இந்த மனிதர்களைவிட எத்தனையோ மடங்கு அதிகமானவர்கள். இவர்கள் இந்த இறைநம்பிக்கையாளர்கள் என்ற இலட்சிய செம்மல்களைப் போற்றுகின்றார்கள். இதற்கெல்லாம் மேலாக மரணத்திற்குப் பின்னாலுள்ள வாழ்க்கை இருக்கின்றது. ஆகவே இந்த இறைநம்பிக்கையாளர்கள் ஈமான் கொண்டவர்கள் முஸ்லிம்கள் இந்த உலகில் ஏளனங்களையும் ஏகடியங்களையும் எரியும் நெருப்பையும் சந்தித்தாலும் அவர்கள் உயர்ந்தவர்கள் கண்ணியமும் மாட்சியுமிக்கவர்கள் நிரந்தர வெற்றியின் சொந்தக்காரர்கள். அல்லாஹ்வை நம்பி அந்த நம்பிக்கையில் அவர்கள் நிலைத்து நின்றதற்கு அல்லது நிற்பதற்கு ஓர் ஆறுதல் உண்டு. அல்லாஹ் கூறுகின்றான் :
மெய்யகவே விசுவாசங் கொண்டிருப்பவர்கள் அவர்கள் தாம். (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருநாமம் நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய இருதயங்கள் திருப்தியடைந்து விடுகின்றன. அல்லாஹ்வின் திருநாமத்தை நினைவு கூர்;வதால் (உண்மையான விசுவாசிகளின்) இருதயங்கள் நிச்சயமாகத் திருப்தியடையும் என்பதை அறிந்து கொள்ளும் (அல்குர்ஆன் 13:28)
நெருப்பில் பொசுங்கிய போதும் தங்கள் ஈமானில் இறைநம்பிக்கையில் எள்முனையளவு கூட விட்டுத்தராத உண்மையான உறுதியான அந்த விசுவாசிகளை நேசிக்க அந்த அல்லாஹ்வே வகை செய்கின்றான்.
எவர்கள் விசுவாசங் கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களை யாவரும் நேசிக்கும்படி ரஹ்மான் நிச்சயமாகச் செய்வான் (அல்குர்ஆன் 19:96)
அல்லாஹ்வின் அறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஒரு குறிப்பிட்ட அடியானின் குழந்தை இறந்து போனால் அல்லாஹ் வானவர்களிடம் வினவுகின்றான். நீங்கள் என் அடியானின் குழந்தையின் உயிரை பிரித்தீர்களா வானாவர்கள் பதல் சொல்வார்கள், ஆமாம் என்று. பின்னர் அல்லாஹ் கேட்பான் என்னுடைய அடியான் என்ன சொன்னான்? இதற்கு வானவர்கள் அந்த அடியான் அல்லாஹ்வைப் புகழ்ந்தான். இன்னும் கூறினான். நாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே மீளுவோம். பின்னர் அல்லாஹ் கூறுவோன் என்னுடைய அடியானுக்கு சுவர்க்கததில் ஒரு வீட்டைக் கட்டுங்கள். அதைப் புகழின் இல்லம் என்று அழையுங்கள். (திர்மிதி) இறைவனின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் இன்னும் சொன்னார்கள்:
புகழுக்கும் புகழ்ச்சிக்குமரிய அல்லாஹ் கூறுகின்றான் என் அடியான் என்னை எப்படி எடுத்துக் கொள்கின்றானோ அப்படியே நான் அவனுக்குச் சொந்தம். அவன் என்னை நினைவுகூரும் போது நான் அவனோடு இருக்கின்றேன். அவன் தனக்குள் என்னை நினைக்கும் போது நான் எனக்குள் அவனை நினைக்கின்றேன். அவன் ஒரு கூட்டத்தாரிடம் என்னைப் பற்றி குறிப்பிடும் போது நான் அவனை அதைவிட சிறந்ததோர் கூட்டத்தில் குறிப்பிடுகின்N;றன். அவன் சாண் அளவு என்னை நோக்கி வந்தால் நான் முழம் அளவு அவனை நோக்கி வருவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிவருவேன். (புகாரி, முஸ்லிம்). நிலைத்த ஈமானை நிரந்தரமாகக் கொண்டவர்களின் நன்மையில் வானவர்கள் ஆர்வமும் அக்கறையும் எடுத்துக்கொள்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான் :
அர்ஷை (அரபி மொழியில் அர்ஷ் என்பதற்கு சிம்மாசனம் என்று பொருள் அல்லாஹ்வின் அர்ஷைப் பற்றி அறிய இயலாது. அல்லாஹ் பேரண்டத்தைப் படைத்தபிறகு தனது எல்லையற்ற ஆட்சிக்கு கேந்திரமாகிய ஓர் இடத்திற்கு அர்ஷ் என்று கூறியிருக்கலாம். அல்லது அர்ஷ் என்பது ஆட்சி செலுத்தும் அதிகாரத்தைக் குறிக்கலாம். ஆக இவ்விரு பொருள் கொள்ளவும் இங்கு இடம் உண்டு. (நன்றி : திருக்குர்ஆன் மொழியாக்கம் இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் சென்னை 12)
சுமந்து இருப்பவர்களும் அதனைச் சூழ இருப்பவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு (அவனைத்)துதி செய்கிறார்;கள். அவனை விசுவாசிக்கின்றகள். விசுவாசங் கொண்டோரின் குற்றங்களை மன்னிக்கும்படியும் கோருகிறார்கள். எங்கள் இறைவனே நீ (உன்னுடைய) ஞானத்தாலும் கருணையாலும் யாவையும் சூழ்ந்து நிற்கிறாய். ஆகவே (பாபங்களைவிட்டு) விலகி உன்னுடைய வழியைப் பின்பற்றுவோருக்கு நீ மன்னித்து அவர்களை நரக வேதனையிலிருந்து நீ காத்துக் கொள்வாயாக (என்று பிரார்த்திக்கின்றார்) (அல்குர்ஆன் 40 : 7)
இறைநம்பிக்கையில் நிலைத்து நிற்கும் இலட்சிய வீரர்களுக்கு மரணம் அல்லாஹ் அளிக்கும் வாழ்வு.
விசுவாசிகளே அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்து) வெட்டப்பட்டோரை இறந்து விட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் நிச்சயமாக உயிரோடு இருக்கிறார்கள். (அன்றி) இறைவன் புறத்திலிருந்து அவர்களுக்கு ஆகாரமும் அளிக்கப்பட்டு வருகின்றது. அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைந்தவர்களாக இருக்கின்றார்கள். (அன்றி யுத்தத்தில் இறந்து) தங்களுடன் சேராமல் தங்களுக்குப்பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவாக்ளைப் பற்றியும் அவர்களுக்கு எவ்வித பயமும் ஏற்படாது. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் என்று கூறி மகிழ்ச்சியடைந்தவர்களாகவும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் (அருளினால் தாங்கள் அடைந்த) பாக்கியத்தைப் பற்றியும் மேன்மையைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளே (நற்) கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடுவதில்லை என்பதைப் பற்றியும் மகிழ்ச்சியடைந்து கொண்டிருப்பார்கள் (அல்குர்ஆன் 3: 169-171)
நிராகரிப்பில் வீழ்வோரைப் பொறுத்தவரை அல்லாஹ் ஒருவனே என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களைப் பொறுத்தவரை அல்லாஹ் மீண்டும் மீண்டும் உறுதி கூறுகின்றான் என்ன உறுதி? அவர்கள் மறுமையில் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவோர்கள் என்பதே அந்த உறுதி? அவர்கள் (அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்) இந்த ப10மியில் மிகவும் குறகியதொரு காலக்கட்டம் வரை வெற்றி பெறலாம். அந்த வெற்றிகள் தரும் ஆணவத்தில் ஆடிக்களிக்கலாம். ஆனால் அவர்கள் மரணத்திற்குப் பின்வரும் வாழ்க்கையில் அல்லாஹ்வின் பிடியில் சிக்கியேயாக வேண்டும். இங்கே முழு அழுத்தமும் மறுமை என்ற மரணத்திற்குப் பின்வரும் வாழ்க்கைக்கே வழங்கப்படுகின்றது. அல்லாஹ் இதனை இப்படித் தெளிவுபடுத்துகின்றான்:
(நபியே) நிராகரிப்போர் (பெரும் வர்த்தகர்களாகவும் தனவந்தவர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் திரிந்து கொண்டிருப்பது உம்மை மயக்கிவிட வேண்டாம். (இஃது) அற்ப சுகமாகும். இதற்குப் பின்னர் அவர்கள் புகுமிடம் நரகந்தான். அது தங்குமிடங்களில் மிகக்கெட்டது. (அல்குர்ஆன் 3:196-197)
(நபியே) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப்பற்றி அல்லாஹ் பாராமுகமாய் இருக்கின்றான் என நீர் எண்ணவே வேண்டாம். (அவர்களை வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம் திறந்த கண் திறந்தவாறே இருந்துவிடக் கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும் வரையில்தான். (அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது. (தறி கெட்டுப் பல கோணங்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது. அதனையே நோக்கிக் கொண்டிருக்கும் இவர்களுடைய இருதயம் திக்பிரமை கொண்டுவிடும். (அல்குர்ஆன் 14:42-43)
அல்லாஹ் இன்னும் கூறுகின்றான்: ஆகவே (நபியே) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரையில் அவர்கள் விளையாடிக்கொண்டும் (வீண்காரியங்களில்) ஆழ்ந்து கிடக்குமாறும் அவர்களை நீர் விட்டுவிடும். (நபியே) அவர்களுக்கு ஒரு நாளை நீர் ஞாபகமூட்டும். விக்கிரக ஆராதனை செய்வோர் அவர்களுடைய திருநாள்களில் (ப10ஜைக்காக நாட்டப்பட்ட) கொடிகளின் பால் விரைந்தோடுவதைப் போலவே சமாதிகளிலிருந்து வெளிப்பட்டு (மஹ்ஷருடைய மைதானத்திற்கு) வெகு தீவிரமாகச் செல்வார்கள். அவர்களுடைய பார்வை கீழ்நோக்கியிருக்கும். இழிpவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் (நபியே) இந்நாள்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும் (அல்குர்ஆன் 70 : 42-44)
ஆக நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போரின் அறுதி முடிவு உண்மைக்கும் பொய்க்கும் நடக்கும் போரின் அறுதி முடிவும் இங்கே இந்த உலகில் இல்லை. இந்த வெற்றி தோல்விகளின் முடிவு மறுமையில் மட்டுமே தெரியும். அதுவே அறுதியான நிரந்தரமான முடிவு. அங்கே அல்லாஹ்வை நம்பி அல்லல்களை ஏற்று நின்றவர்களே வெற்றியாளர்கள். இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைப்பது இஸ்லாத்தை இந்த உலகில் நிலைநாட்டுவது என்ற இலட்சியங்களும் இந்த இலடசியங்களுக்காக வாழ்ந்தவர்களும் பல்வேறு முடிவுகளைச் சந்தித்திருக்கின்றார்கள். நபி நூஹ்(அலை)அவர்களால் அழைப்பு வைக்கப்பட்டவர்கள் அழிக்கப்பட்டார்கள் நபி ஹ_த்;(அலை) அவர்களின் மக்களும் ஷ_ஐப் அவர்களின் மக்களும் லூத் அவர்களின் மக்களும் இதே முடிவைத்தான் சந்தித்தார்கள். ஆனால் இந்த வரலாறுகள் நமக்கோர் உண்மையை உணர்த்துகின்றன. அது சில நேரங்களில் தீமைகளைத் தூண்டுவோர் இறைவனை மறுப்போர் இறைவனை ஏற்போரை எதிர்ப்போர் தண்டிக்கப்படுகிறார்கள். இங்கே இந்த உலகில் இந்தத் தண்டனையோடு மறுமையிலும் மாறாத மகத்தான தண்டனைகளைப் பெறுகின்றனர். இன்னொரு வரலாறு ஃபிர்அவ்ன் என்ற இறை எதிர்ப்பாளர்கள் ஆணவத்தின் மொத்த உருவமாய் நின்ற இவனும் இவனுடைய படையும் பரிவாரமும் அல்லாஹ்வால் அழிக்கப்படுகின்றன. இறைநம்பிக்கையாளர்களின் பிரதிநிதியாய் இறைவனின் தூதராய் நின்ற நபி மூஸா (அலை) அவர்கள் இடம்பெயர்ந்து சென்றுவிடுகின்றார்கள். தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுகின்றார்கள். அந்த மக்கள் வரலாற்றில் மிகவும் இறையச்சமும் பக்தியும் கொண்டவர்களாக ஆகுகின்றார்கள். (பனூ இஸ்ராயீல்) இவர்கள் எல்லாவிதத்திலேயும் முழுமையானவர்களாக இருந்தார்கள். என்றில்லாவிட்டாலும் முன்னே நாம் குறிப்பிட்ட வரலாற்றைவிட மாறுபட்ட ஒரு வரலாற்றை உடையவர்களாக இருந்தார்கள். பிறிதொரு வரலாறு இதில் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்னே அழகியதோர் முன்மாதிரியாக நின்று கொண்டிருக்கின்றார்;கள். அல்லாஹ்வையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டோர் சிலர். அல்லாஹ்வையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களையும் அவர்களைப் பின்பற்றியவர்களையும் எதிர்த்து அழித்தே தீருவேன் என அணிதிரண்டோர் பலர். அல்லாஹ்வின் அணியாய் நின்ற அந்தச் சிறு கூட்டம் எத்தனையோ இன்னல்களை எதிர்கொள்கின்றது. உடைமை உயிர் ஆகியவற்றின் எதிர்ப்புகளை எதிர்கொள்கின்றது. இறுதியில் வெற்றியைத தருகின்றான் அல்லாஹ். முழுமையான வெற்றியைத் தருகின்றான் அல்லாஹ். மனித வரலாறு இன்றுவரை கண்டிராத அளவுக்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் சட்;டங்கள் நிலைநாட்டப்பட்டு விடுகின்றன. இப்படி வரலாற்றில் இறைநம்பிக்கையாளர்கள் பல நேரங்களில் வெற்றிப் பெற்றிருக்கின்றார்கள். இவ்வுலகில் பல நேரங்களில் அவர்கள் சோதனைகளை மட்டுமே எதிர் கொண்டு இறைநம்பிக்கையின் இறவா சாட்சியங்களாய் வாழ்ந்திருக்கின்றார்கள். அதே போல் இறைவனை மறுத்தவர்கள் எதிர்த்தவர்கள் இறைவனை நம்பியவர்களை இன்னல்களுக்கு ஆளாக்கியவர்கள் இவ்வுலகில் சில நேரங்களில் கடுமையான தண்டனைகளால் பீடிக்கப்பட்டிருக்கின்றார்கள். பல நேரங்களில் விடப்பட்டிருக்கின்றார்கள். வரலாறு இப்படி நமக்கு இருவகையான பாடங்களைத் தருகின்றது. ஆனால் நெருப்புக் குழியை வெட்டி நெருப்புக் குண்டங்களை வளர்த்தவர்களின் வாழ்க்கை தரும் படிப்பினையை நாம் மறப்பதற்கில்லை. இதில் இரண்டு பார தூரமான பாடங்கள்;

1. இறைநம்பிக்கையில் நிலைத்து நின்றவர்கள், அவர்கள் காட்டிய இறைநம்பிக்கையின் உறுதியின் பின்பும் அவர்கள் அந்த நெருப்புக்கு இரையாவதிலிருந்து தப்பிக்க இயலவில்லை.

2. அவர்களை இறைவனை நம்பி அதில் உறுதியாக நின்றவர்களை நெருப்பில் போட்டு அழித்தவர்கள் இவ்வுலகில் தண்டிக்கப்படவில்லை. இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டு அதை நிலைநாட்டிட உழைத்திடுவோர் அதற்காக அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைத்திடுவோர் ஆகியோர் இப்படியொரு முடிவைச் சந்திக்க வேண்டியது வரலாம். அதாவது இவர்கள் தங்கள் எதிரிகளால் சித்திரவதைகளுக்கும் உயிர் உடைமை ஆகியவற்றில் இழப்புகளுக்கும் உள்ளாக்கப்படலாம். அதிலிருந்து அவர்கள் தப்பிக்க இயலாமலும் போகலாம். அவர்களின் எதிரிகள் இந்த உலகில் தண்டிக்கப்படாமலும் போகலாம். சில வெற்றிகளையும் தட்டிச் சென்றிடலாம். இவற்றில் இறைநம்பிக்கiயாளர்கள் சபலங்களுக்கோ விரக்திகளுக்கோ உள்ளாக வேண்டியதில்லை. அவர்கள் எல்லா நிலைகளிலேயும் தங்கள் உறுதியில் நிலைத்து நின்றிட வேண்டும். இறைவனை நம்புவதிலேயும் அவனது பாதையில் மக்களை அழைப்பதிலேயும் அவனுடைய சட்டங்களை ஆளும் கொள்ககையாக ஆக்கிவிடுவதிலேயும் அவர்கள் நிலைத்து அறுதியாய் உறுதியாய் நின்றிடவேண்டும். இறைநம்பிக்கையாளர்கள் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றிட வேண்டும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவ்வளவு தான் அவர்களிடம் எதிர்பார்க்கப்படுவது. இப்படி விளைவுகளையும் எதிர்ப்புகளையும் பற்றிக் கவலைப்படாமல் கடமைகளை நிறைவேற்றி நிற்கும் அல்லாஹ்வின் அழகிய அணியினருக்கு இநத் உலகில் சில சன்மானங்களும் இல்லாமல் இல்லை. இந்த வகையில் அவர்கள் பெரும் முதல் பரிசு அல்லாஹ் தங்களிடம் ஒப்படைத்த கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுகின்றோம் என்ற மன திருப்தி. அடுத்து உலகக் கவர்ச்சிகளில் நாம் வீழ்ந்துவிடவில்லை. உலகில் உயர்ந்ததோர் கொள்கைக்குச் சொந்தக்காரர்களாய் ஆனோம். அதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற உவகை. இதோடு துன்பங்களையும் துயரங்களையும் தாங்கிடக் கற்றுக் கொண்டுள்ளோம் என்ற மனதிருப்தி. இவர்கள் பெறும் சன்மானத்தின் அடுத்த பகுதி வானவர்கள் இவர்களுக்குத் தரும் கண்ணியமாகும். வானவர்கள் இவர்களைப் புகழ்வார்கள். கண்ணியப்படுத்துவார்கள். அத்தோடு ப10மியில் இவர்களோடு வாழ்பவர்களும் இவர்களை இலட்சிய தீபங்களாய்ப் பார்த்துப் போற்றுவார்கள். இவர்களின் அடுத்த சன்மானம் இறைவன் அவர்கள் மேல் கொள்ளும் திருப்தியும் மகிழ்ச்சியுமாகும். இறைவன் தன் பணிகளைச் செய்வதற்கு இவர்களைத் தேர்ந்தெடுத்தான். ஆகவே இவர்கள் உயர்ந்த தகுதிகளைப் பெற்றவர்கள். இது இவர்கள் பெறும் இன்னொரு சிறப்பான வெகுமதி. இத்தனைக்கும் மேலாக நின்று இவர்களை நிரந்தரமாக மகிழ்விப்பது, மறுமை என்ற மரணத்திற்குப் பின்னால் வரும் நிரந்தர வாழ்க்கை. மனித வரலாற்றில் இணையற்றதோர் சமுதாயமாக இலங்கிடும் திருக்குர்ஆன் உருவாக்கிய அந்த முதல் ஒப்பற்ற சமுதாயம் மறுமையை முன்னிறுத்தியே உருவாக்கப்பட்டது. திருக்குர்ஆனின் வழியில் முஹம்மத்(ஸல்) அவர்கள் தந்த பயிற்சி அந்த மக்களை மறுமையை நோக்கியே இழுத்துச் சென்று கொண்டிருந்தது. அவர்கள் அல்லல்களுக்கு ஆட்பட்டு நின்ற போதெல்லாம் மறுமையில் கிடைக்கும் போகும் பெரும் பேறுகளே அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டன. அம்மார்(ரலி) அவர்கள் அவர்களுடைய தந்தை தாய் (அல்லாஹ் இவர்கள் அனைவர் மீதும் திருப்தியும் மகிழ்ச்சியும் கொள்வானாக) ஆகியோர் அத்தனை கொடுமைகளுக்கும் ஆட்படுதத்ப்பட்டார்கள். இந்தக் கொடுமைகளால் துவண்ட அவர்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாக்களித்ததெல்லாம் யாசிருடைய குடும்பத்தினரே பொறுங்கள் சுவர்க்கம் உங்களுக்குக் கிடைக்கும் என்பது தான். ஹப்பாப் பின் அல் அரத் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக) அவர்கள் அறிவிக்கின்றார்கள். பெருமானார்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலின் கீழ் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். அதுபோது நாங்கள் அவர்களிடம் முறையிட்டோம். நமக்கு உதவி செய்யும் பொருட்டு நீங்கள் ஏன் அல்லாஹ்விடம் இறைஞ்சக் கூடாது இதற்கு பெருமானார்(ஸல்) அவர்கள் இப்படிப் பதில் சொன்னார்கள்: உங்களுக்கு முன்னால் ஒரு சமூகத்தினர் இருந்தார்கள். அவர்கள் ஓர் இறைநம்பிக்கையாளரைப் பிடித்துக் குழியில் தள்ளுவார்கள். இரும்பால் செய்யப்பட்ட சீப்பைக் கொண்டு அறுப்பார்கள். கழுத்தில் (மரமறுக்கும்)வாளைக் கொண்டு அறுப்பார்கள். அவருடைய உடலும் தலையும் இருகூராக ஆகும் வரை இப்படியே செய்து கொண்டிருப்பார்கள். இத்தனையும் அவர்கொண்ட இறைநம்பிக்கையிலிருந்து அவரைத் திசை திருப்பிடாது. அல்லாஹ் நிச்சயமாக இந்த மார்க்கத்தை நிறைவுறச் செய்வான்.
ஒரு காலம் வரும் அதில் ஒரு பயணி ஸன்ஆவிலிருந்து ஹளரமௌத் வரை இறைவனைப் பற்றி அச்சம் ஒன்றைத் தவிர வேறு அச்சம் எதுவுமின்றி பயணம் செய்வார் (புஹாரி) அல்லாஹ்வின் ஆற்றலும் அறிவும் இந்த உலகில் நடப்பவை அனைத்திலும் அமிழ்ந்து கிடக்கின்றன. அவன் தான் இந்த உலகில் நடப்பவை அனைத்தையும் திட்டமிட்டு நிகழச் செய்கின்றான். இந்த உலகில் நடப்பவை எங்கே துவங்கும். எங்கே முடியும் என்பனவற்றை அவன் நன்றாக அறிவான். பல நேரங்களில் இந்த உலகில் நடப்பவை பார்ப்பவர்களுக்கு விநோதமாகவும் விந்தையாகவும் இருக்கின்றன. இவையெல்லாம் ஏன் நடக்கின்றன என்பதே யாருக்கும் புரிவதில்லை. இதனால் சிலர் ஆண்டவனையே கேள்வி கேட்க தலைப்பட்டு விடுகின்றனர். அல்லாஹ்வை நம்புகின்ற ஒரு முஸ்லிம் இப்படியொரு வினாவை எடுத்து அல்லாஹ்வின் மேல் எறிவதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கின்றான். ஏனெனில் அவன் நன்றாக அறிவான் இந்த உலகில் நடப்பவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியும் ஒரு குறிப்பிட்ட காரணத்தின் கீழும் தான் நடக்கின்றன என்பதை. அவனுக்குத் தெரியவில்லை என்பதனால் அவற்றிற்குப் பின்னால் எந்தக் காரணமும் இல்லை என்றில்லை. இந்த உலகில் இடம்பெறும் பல நிகழ்ச்சிகள் குறித்து நமக்கு எதுவுமே தெரிவதில்லை. அல்லாஹ்வும் அந்த நிகழ்ச்சிகள் ஏன் இடம் பெற்றன என்பதையோ அவைதரும் பாடம் என்ன என்பதையோ அந்தக் காலக்கட்டத்தில் வாழந்த மக்களுக்குத் தெரிவிப்பதில்லை.
பல தலைமுறைகள் தாண்டியபின் இறைவன் அந்த வரலாற்றையும் அந்த நிகழ்ச்சிகள் ஏன் இடம்பெற்றன என்பதையும் தெளிவுபடுத்துகின்றான். ஆகவே இங்கே அடியான் செய்ய வேண்டியதெல்லாம் தன் கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றிக் கொண்டே செல்வதுதான். இதில் திருக்குர்ஆன் தனியானதோர் பயிற்சியைத் தருகின்றது. அது மனித மனங்களைப் பக்குவப்படுத்துகின்றது. இந்தப் பக்குவத்தின் பயனாய் மனிதன் இறைவனின் பிரதிநிதி என்ற மகத்தான பொறுப்பைத் தாங்கிடும் மனநிலையைப் பெற்றுவிடுகின்றான். இந்த மனம் எந்தச் சோதனையையும் தாங்கி எதிர் நீச்சல் போட்டிடும் பக்குவத்;தைப் பெற்றுவிடுகின்றது. தான் தாங்கிய பொறுப்பை நிறைவேற்றிட எல்லாத் தியாகங்களையும் செய்திட தயாராகி விடுகின்றது. இந்தத் தியாகங்களுக்கெல்லாம் அது இந்த உலகில் எந்த எதிர்பார்ப்பையும் தன்னுள் வளர்த்தக் கொள்வதில்லை. மறுமை ஒன்றே அதன் மாறா இலட்சியம். ஏன் அவர்கள் தாங்கள் எடுத்திருக்கும் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணி இஸ்லாத்தை இங்கே நிலைநாட்டும் பணி என்ற மகத்தான இலட்சியங்களில் இநத் உலகில் தங்கள் கண்ணெதிரே வெற்றிகளை ஈட்டி விடுவோம் என்று கூட எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் இந்த இலட்சியங்கள் நிறைவேற எதையும் எதிர்பார்க்காமல் தங்களால் இயன்றவற்றை எல்லாம் செய்தார்கள். அதேபோல் தங்கள் இலட்சியப் பாதையில் தடைகளை வெட்டிப் போட்டவர்கள் அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் மறுத்தவர்கள் இன்னல்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தியவர்கள் சித்திரவதைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள், இவர்களெல்லாம் தங்கள் காலத்திலேயே தங்கள் கண்களின் முன்னாலேயே தண்டிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கூட தங்கள் நெஞ்சங்களிலே வளர்த்துக் கொள்ளவில்லை. இப்படி இந்த உலகில் இந்த இலட்சியத்திருக்கூட்டம் எதையுமே எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவானவுடன் அல்லாஹ் அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்கின்றான். அவர்களுக்கு வெற்றியையும் தருகின்றான். இந்த வெற்றியும் இந்த அதிகாரமும் அவர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கில்லை. அல்லாஹ்வின் நீதி அனைவருக்கும் கிடைத்திடும்படி செய்திடுவதற்கே அதாவது அல்லாஹ்வின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கே மனித வரலாற்றில் மாணிக்கப் பரல்களாய் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் திருக்குர்ஆன் வழி வாழ்ந்த அந்த முதல் சமுதாயம் எந்த உதவியும் வாக்களிக்கப்படாத காலத்திலேயே தங்களை இந்த மார்க்கத்தை நிலைநாட்டிட முழுமையாகத்த தந்திடத் தயாராக இருந்தார்கள். அல்லாஹ்வின் திருப்தி மகிழ்ச்சி மறுமையில் மாளா வெற்றி என்பவை அவர்களின் எண்ணத்தில் நினைப்பில் நிலைத்த பின்னர்தான் வேறு எந்த எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் எங்கேயும் தலைக்காட்டவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் அல்லாஹ் அவர்களுக்கு இந்த உலகில் வெற்றியைத் தருவது எனத் தன் அருள் மடையைத் திறந்தான். அந்த முதல் தலைமுறையினருக்கு வெற்றியை அறிவிக்கும் இறை வசனங்களும் போரில் கிடைக்கும் பொருள்களைப் பங்கு வைக்கும் வசனங்களும் நிராகரிப்பவர்கள் இறைநம்பிக்கையாளர்களின் கைகளால் தண்டிக்கப்படுவார்கள் என்பது பற்றி இறைவசனங்களும் மதீனா வாழ்க்கையின் போது மட்டுமே அருளப்பட்டன. இவையெல்லாம் இறைநம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் எள்ளளவு கூட எதிர்பார்ப்பாய் இடம்பெறாத போது தான் அருளப்பட்டன. அவர்கள் இன்னும் என்னென்னவற்றைத் தியாகம் செய்யலாம் என்ற எண்ணங்களில் தங்களைத் தோய்த்துக் கொண்டிருந்த போது தான் இந்த இறைவசனங்கள் அருளப்பட்டன. இந்த வெற்றியைப் பற்றிய இறைவசனங்களும் அவற்றைத் தொடர்ந்து அவர்கள் பெற்ற வெற்றியும் அவர்களைத் துன்புறுத்தியவர்களுக்கு நேர்ந்த கதியும் அவற்றைப் பற்றிய அறிவிப்புக்களும் அவர்கள் அதுவரை மேற்கொண்ட சிரமங்களுக்குச் சன்மானம் என்ற அளவில் அருளப்படவில்லை. அல்லாஹ் வெற்றியை இந்த உலகிலேயே தந்தது, அதன் பயனாய் அவர்கள் ஓர் இஸ்லாமிய அரசை நிறுவியது அனைத்தும் அல்லாஹ்வின் முடிவாக இருந்தது அவ்வளவு தான். இதனை இஸ்லாத்தை இலட்சியமாய் கொண்டவர்கள் அனைவரும் ஆழ்ந்து கவனித்திட வேண்டும். அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி எந்தக் காலக்கட்டத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரியே இதனை அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டால் அவர்கள் தங்கள் பாதையையும் பயணத்தையும் நன்றாகப் புரிந்து கொள்வார்கள். அத்தோடு தாங்கள் கடந்து சென்றிட வேண்டிய பாதையில் பயணம் செய்திடும்போது இடையே எதிர்ப்படும் காட்டாறுகளையும் நெருப்புக் குண்டங்களையும் கடந்திடும் போது விளைவுகளைப் பற்றியோ முடிவுகளைப் பற்றியோ அவர்கள் கிஞ்சிற்றும் கவலை கொள்வதில்லை. சிறைகள் சித்திரவதைகள் இரத்தப் பிரளயங்கள் வேலும் வாளும் உண்டாக்கும் பயங்கர இரத்த ஆறுகள் அதில் மிதந்துவரும் அண்ணன் தம்பிகளின் உற்றார் உறவுகளின் அறுந்த நரம்புகளும் முறிந்த எலும்புகளும் அவர்களை எள்ளளவும் கதிகலங்கிடச் செய்திட மாட்டா. இப்படி இந்த இலட்சியப் பயணத்தில் எதிர்ப்படும் எல்லா மைல்கற்களையும் கடந்து சென்றுவிட்டாலும் அவர்கள் இந்த உலகில் வெற்றியை எதிர்பார்க்கமாட்டார்கள். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே இடம்பெயறும் போரின் முடிவு இங்கே இந்தப் ப10மியில் முடிவு செய்யப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. அங்கே அந்த மரணத்திற்குப்பின் உள்ள வாழ்க்கையிலேயே அதை எதிர்பார்க்கின்றார்கள். அந்த அறுதிநாளில் கிடைக்கும் வெற்றியை இலக்காய் கொண்டு நடத்தப்படும் இந்தப் போரில் இந்த உலகில் அல்லாஹ் இவர்களைக் கொண்டே தன் வாழ்க்கை நெறியை நிலைநாட்டலாம். அல்லது இவர்கள் ஊட்டும் உணர்வில் காட்டும் தியாகத்தில் வளர்ந்துவரும் அடுத்த தலைமுறையைக் கொண்டு நிலைநாட்டலாம். அல்லது அவர்கள் தயாரிக்கும் தலைமுறையைக் கொண்டு நிலைநாட்டலாம். அத்தனையும் அந்த ஏகபோக அதிபதியாம் அல்லாஹ்வின் விருப்பம். அவன் பாதையில் அனைத்தையும் தியாகம் செய்து உழைப்பது அடியானின் கடமை பொறுப்பு. எது எப்படியானாலும் வெற்றிக்கும் உழைப்பின் வெகுமதிக்கும் இந்தப்ப10மியல்ல எதிர்பார்ப்புக்குள்ள இடம். இங்கே இன்னொன்றை மீண்டும் இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டவர்களின் பார்வைக்கு வைத்திட விரும்புகின்றேன். நான் எடுத்துக்காட்டிய இறைவசனத்தில் அல்லாஹ் நெருப்புக்குண்டத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றிக் குறிப்பாக ஒன்றைக் குறிப்பிடுகின்றான்: அல்லாஹ் கூறுகின்றான்:
விசுவாசங்கொண்ட அவர்களில் யாதொரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும் மிக்க புகழுடையோனும் யாவரையும் மிகைத்தோனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் விசுவாசத்தையன்றி (இதனையே அவர்கள் குற்றமாகக் கண்டனர்) (அல்குர்ஆன் 85:8)
இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டவர்கள் இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காகத் தங்களைத் தந்து களத்தில் நிற்பவர்கள் அதற்காக இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அனைவருக்கும் இதில் அழகியதோர் அறிவுரை அமிழ்ந்து கிடக்கின்றது. அது.. அல்லாஹ்வை ஏற்க மறுப்பவர்கள் இறைவன் ஒருவனே என்ற கொள்கையை ஏற்றிட மறுப்பவர்கள் ஈமான் கொண்டவர்களை இறைநம்பிக்கையாளர்களை இஸ்லாத்தை இலட்சியமாய்க் கொண்டவர்களைப் பகைவர்களாகவும் எதிரிகளாகவும் கருதுகின்றனர். காரணம் இந்த இறைநம்பிக்கையாளர்களின் நம்பிக்கைதான் அல்லாமல் வேறு காரணங்கள் இல்லை. எதிரிகளின் கோபம் இவர்கள் கொண்ட நம்பிக்கையின் மேல்தான் அல்லாமல் நம்பிக்கை கொண்டவர்களின் மேல் ஏற்பட்ட தனிப்பட்ட காழ்ப்புகளோ குரோதங்களோ அல்ல. அதே போல் இந்தக் கோபமும் பகையும் இனத்தின் அடிப்படையில் குலத்தின் அடிப்படையில் எழுந்ததன்று. அதே போல் அரசியல் காரணங்களோ பொருளாதார காரணங்களோ இந்தக் கோபத்திற்கும் குரோதத்திற்கும் காரணமாக அமைந்திடவில்லை. இங்கே கோபமும் குரொதமும் நம்பிக்கையா? அல்லது நிராகரிப்பா? ஜாஹிலிய்யா? இஸ்லாமா? என்பதை அடிப்படையாகக் கொண்டனவே. இதனால்தான் பல தெய்வங்கள் உண்டென்று அறிவிலிகளாய் மௌட்டிகத்திலும் மூடநம்பிக்ககைளிலும் மூழ்கிக்கிடந்த அந்த மக்கத்து மக்கள் இறைவனின் தூதர்(ஸல்) அவர்களிடம் இப்படிப் பேரம் பேசினார்கள். உங்களுக்கு ஆட்சிவேண்டுமா தந்துவிடுகின்றோம். அதிகாரம் வேண்டுமா தந்துவிடுகின்றோம் இந்த உலகில் என்ன வேண்டும் கேளுங்கள் தந்து விடுகின்றோம். இவற்றிற்கு கைமாறாக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். விட்டுவிடுங்கள் உங்கள் இறைவன் ஒருவனே என்ற பிரச்சாரத்தையும் நம்பிக்கையையும். முஹம்மத்(ஸல்) அவர்களை அந்த மக்கத்து மக்கள் நம்பிக்கைக்குரியவர் உண்மையாளர் என்றெல்லாம் போற்றினார்கள். எந்த நிலையிலும் அவர்கள் மேல் தனிப்பட்ட முறையில் அவதூறுகளைக் கூறிட அந்த மக்கத்து மக்கள் துணியவில்லை. ஆனால் இறைநம்பிக்கையின் ஏகத்துவத்தின் ஈமானின் பிரதிநிதியாக முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்வதை அதைப் பிரச்சாரம் செய்வதை அவர்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. பொங்கி எழுந்தார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் கண்ட போர்க்களங்கள் இறைநம்பிக்கையா? இல்லை அதற்கு எதிரான கொள்கைகளா? என்ற அடிப்படையில் எழுந்த போர்க்களங்களே. இன்று முஸ்லிம்களின் எதிரிகளாகத் தங்களை இனங்காட்டிக்கொண்டு கிளர்ந்து வருபவர்கள் தாங்கள் முஸ்லிம்களின் மேல் தொடுக்கும் போர்களுக்கு வேறு வேறு காரணங்களைக் கற்பிக்க முன்வரலாம். ஆனால் நம்பிக்கையாளர்கள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்திட வேண்டும். அது இந்த எதிரிகள் முஸ்லிம்களை எதிர்த்துக் கிளர்ந்ததற்கு மூலகாரணம் அவர்கள் உறுதியாய் நம்பி நிற்கும் இறைநம்பிக்கை ஈமான் அல்லாஹ்வை மட்டும் அடிபணிவேன் என அவர்கள் உறுதி கொண்டதால் தான் எதிரிகள் அவர்களைத் தாக்குகின்றார்கள். நாம் இங்கே விளக்கம் தர எடுத்துக் கொண்ட இறைவசனத்தில் நெருப்புக் குண்டத்தை வளர்த்தவர்கள் அதில் எறிக்கப்பட்டவர்களிடம் வேறு எந்தக் குற்றத்தையும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் ஈமான் கொண்டார்கள். இறைவனை நம்பி அதிலேயே நிலைத்து நின்றார்கள் என்பதைத் தவிர. இறைநம்பிக்கையாளர்கள் இந்த உண்மையை எப்போதும் நினைவுகூர வேண்டும். எதிரிகள் பல்வேறு காரணங்களைக் கற்பித்து நம்மை திசைதிருப்ப முனையலாம். ஆனால் நாம் இந்த ஏமாற்றுவலையில் வீழ்ந்திடக்கூடாது. சிலுவைப் போருக்குப் பின்னால் இப்படியே ஒரு காரணத்தைச் சொன்னார்கள். அது வேறு ஒன்றுமில்லை. ஆதிக்கவாதிகளுக்கும் அவர்களால் அடக்கிப் போடப்பட்டவர்களுக்கும் இடையே நடந்த போர் என்றே வருணித்தார்கள் ஏனெனில் அவர்களுக்குத் தங்கள் உண்மை முகத்தைக் காட்டிடும் துணிவில்லை. ஸலாஹ_த்தின் (அவர்களை அல்லாஹ் உயர் பதவிகளில் அமர்த்துவானாக) அவர்களின் ஈமானுக்கு முன் துறான்ஷா (அவர்கள் மேல் அல்லாஹ் திருப்தி கொள்வானாக) அவர்களின் இறைநம்பிக்கைக்கு முன் அந்த எதிரிகளால் எதையும் செய்ய முடியவில்லை. இவர்கள் தங்கள் தேசிய உணர்வுகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு இஸ்லாம் என்ற பதாகையின் கீழ் நின்று வெற்றி பெற்றார்கள். இந்தத் தோல்வியிலிருந்து திசைதிருப்ப கற்பனைக் காரணங்களைக் கற்பிக்கின்றார்கள் இன்று. இப்படி இவாக்ள் இறைநம்பிக்கையாளர்கள் மேல் தாங்கள் கொண்ட பகைமைக்கும் தாக்குதல்களுக்கும் வேறு காரணங்களைக் கற்பிப்பது ஏன் தெரியுமா? அவர்கள் முஸ்லிம்களைக வெற்றியின் பக்கம் இட்டுச் செல்லும் முக்கியமான ஆயதமாம் இறைநம்பிக்கையை அவர்களிடமிருந்து பிடுங்கி எறிந்திட விரும்புகின்றார்கள். முஸ்லிம்கள் இஸ்லாம் என்ற ஓரணியின் கீழ் திரளுவதைத் தடுத்திட விரும்புகின்றார்கள். ஆகவே நாம் இந்த திசை திருப்பும் சதிகளில் விPழ்ந்திடாமல் உண்மையை உணருவோம். விசுவாசங்கொண்ட அவர்களில் யாதொரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும் மிக்க புகழுடையோனும் யாவரையும் மிகைத்தோனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் விசுவாசித்ததையன்றி. (அல்குர்ஆன் 85:8) அனைத்தையும் அறிந்த அல்லாஹ் உண்மையையே பேசினான். ஏமாற்ற நினைக்கும் இந்த எதிரிகள் பொய்யர்களே.
முற்றும்.

No comments:

Post a Comment