கிலாஃபா இயக்கம்
கிலாஃபா இயக்கம் (1919-1924) 1919 செப்டெம்பரில் மௌலானா முஹம்மது அலி அவர்களின் சகோதரர் சௌகத் அலி, மௌலானா அப்துல் கலாம் ஆசாத், DR.முக்தார் அஹமத் அனசாரி, ஹஸ்ரத் மொஹானி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. கிலாஃபாவை எவ்வாறாவது பாதுகாப்பதே அவர்கள் நோக்கமாக இருந்தது. கிலாஃபா மாநாடுகளை இந்தியாவின் வடக்கு நகரங்களில் அவர்கள் ஒழுங்கு செய்தார்கள். கிலாஃபா இயக்கத்திலிருந்த அறிஞர்கள் வேறுபட்ட பின்னணியிலிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் ‘கைர் தக்லீதி’ (மத்ஹப்பை தக்லீத் செய்வது தடுக்கப்பட்டது) என்ற நிலைப்பாட்டிலிருந்தவர். எனினும் மௌலானா முஹம்மது ஹஸன் ஹனபி மதஹபை சார்ந்திருந்தார். ஆயினும் தமது வேறுபாட்டை கடந்து இவர்கள் அனைவரும் கிலாஃபாவை பாதுகாக்கும் நோக்கத்தில் ஒருங்கிணைந்தனர்.
இதன்படி 1919 பம்பாய் கிலாஃபத் குழு இரு முக்கிய இலக்குகளை வகுத்தது. முதலாவது ‘துருக்கிய சுல்தானின் பௌதீக ரீதியான அதிகாரத்தை தொடர்ந்து நிலைகொள்ள வலியுறுத்துவது’, இரண்டாவது ‘இஸ்லாமிய புனிதத் தளங்கள் மீதான சுல்தானின் கட்டுப்பாட்டை உறுதிப் படுத்துவது’.
1920ல் கல்கத்தாவில் இடம்பெற்ற வங்காள மாகாண கிலாஃபா மாநாட்டில் தலைமை உரையை ஆற்றிய மௌலானா ஆசாத் கிலாஃபாவின் முக்கியத்துவம் பற்றி பின்வருமாறு உரையாற்றினார்கள். “இந்த இயக்கத்தின் இலக்கு, முஸ்லிம் சமூகத்தை சரியான பாதையில் ஒழுங்குப்படுத்தி, நீதியை நிலைநாட்டி சமாதானத்தை உருவாக்கி, இறைவனின் வார்த்தைகளை உலகம் முழுக்கப் பரவச் செய்வதாகும். இவையனைத்தையும் செய்வதற்கு அதிகாரமிக்க கலீஃபா இருக்க வேண்டும்.” என அவர்கள் கூறினார்கள். இமாம் இல்லாத வாழ்வு இஸ்லாமிய முறையில் இருக்காது எனவும், இதனால் மரணத்தின் பின் இறைவனின் தண்டனையை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும் அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.
1920ல் மஸ்லா-ஏ-கிலாபத் என்ற நு}லை மௌலானா ஆசாத் அவர்கள் வெளியிட்டார்கள். அதில் “கிலாஃபா இல்லாமல் இஸ்லாத்தின் இருப்பு சாத்தியமில்லை” இந்திய முஸ்லிம்கள் அதற்காக முழுமுயற்சியுடன் உழைக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்கள்.
இரண்டு வகை அஹ்காம் ஷரிஆக்கள் இருக்கின்றன. ஒன்று தனிப்பட்ட ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய பர்ளுகளும் வாஜிப்களுமாகும். மற்றையது உம்மத்தினால் நிறைவேற்றப்பட வேண்டியதாகும். இது ஒரு கூட்டுப்பொறுப்பாகும். நாடுகளை கைபற்றல், அரசியல் பொருளாதார சட்டங்களை வகுத்தல் என்பன இதில் அடங்கும்” என இதே புத்தகத்தில் மௌலானா ஆசாத் அவர்கள் கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்களின் அரசியலையும் மதத்தையும் பிரிக்கும் ஒரு முஸ்லிமை நிராகரிப்பாளராகவே மௌலானா ஆசாத் கருதியதாக Peter Hardy தெரிவிக்கிறார். இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் பலம் பரிபோனமையும் கலீஃபாவின் அதிகாரத்துக்கு பல்வேறு சக்திகள் அச்சுறுத்தல்; விடுத்தமையும் முஸ்லிம் சமூகத்தலைவர்களை கவலையடையச்செய்தது. இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்ய வேண்டும் என பத்வா கொடுக்கும் அளவுக்கு அவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.“பிரித்தானியருக்கு ஒத்துழைக்காமல் இருப்பதற்கு மாற்றமாக ஹிஜ்ரத் செய்ய முடியும்” என 1920 ஜுலை 30ல் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் அஹ்லே ஹதீஸ் என்ற பத்திரிகையில் பத்வா வழங்கிருந்தார்கள்.மௌலானா அப்துல் பாரி பின்வருமாறு ஒரு பத்வாவை வழங்கிருந்தார்கள்.“இங்கு வாழும் முஸ்லிம்கள் யாரும் பிரித்தானியருக்கு ஒத்துழைப்புக் கொடுக்க கூடாது. அது சாத்தியமில்லை எனில் அவர்கள் ஹிஜ்ரத் செய்ய வேண்டும்”.அர்ப்பணிப்புள்ள முஸ்லிம்கள் யாவரும் இந்தியாவிலேயே தொடர்ந்து ஒத்துழைக்காமல் வேலை செய்வார்கள் என நம்புகிறோம். இது சாத்தியமாகாவிடில் அவர்கள் ஹிஜ்ரத் செய்யட்டும்” என கிலாஃபத் குழு சார்பில் மௌலானா சௌகத் அலி அறிக்கை வெளியிட்டார்கள். இந்த பத்வாவின் விளைவால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்து ஹிஜ்ரத் செய்ய விரும்பினார்கள்.கிலாஃபா என்பது அரசியலுடன் மட்டும் தொடர்புடைய ஒரு பிரச்சனையல்ல. நரகின் தண்டனைக்கும் நரக விடுதலைக்கும் இடையிலான ஒரு பிரச்சினையாகும். துருக்கி அதன் எல்லைகளை இழந்தால் இஸ்லாமிய சித்தாந்தம் அபாயத்துக்குள்ளாகிவிடும். 1923 டிசெம்பர் 7இல் நடந்த கிலாஃபத் மாநாட்டின் பத்தாவது அமர்வில் இதை உறுதிப்படுதிப் பேசிய மௌலானா சௌகத் அலி அவர்கள்,“ஜஸீரதுல் அரபின் ஒரு அங்குளமாவது முஸ்லிம் அல்லாதவரின் ஆக்கிரமிப்பிற்குற்பட்டால் முஸ்லிம்கள் மன நிம்மதியுடன் வாழ முடியாது” என கூறினார்கள். (The Muslims, Shan Muhammad, Meenakshi Prakashan, 1981, Vol 2 page 209)
மொஹமத் ஆஸிப் அலி 1921 நவம்பர் 2ல் எழுதிய கடிதமொன்றில் கிலாஃபாவை நிலைநாட்டுவதன் இஸ்லாமியப் பொறுப்பை பின்வருமாறு கோடிட்டு காட்டினார்கள்.“துருக்கியின் பெருமை இஸ்லாத்தின் பெருமைக்கு நிகரானது உஸ்மானிய சாம்ராஜியத்தி;ன் இருப்பு முஸ்லிம் இனத்தின் வளர்சிக்கு இன்றியமையாதது, உஸ்மானிய சாம்ராஜியத்தி;ன் வீழ்ச்சியுடன் இஸ்லாமிய நாகரீகத்தின் பலம் இல்லாமல் போய்விடும், துருக்கி வீழ்ந்து விட்டால் இஸ்லாத்தால் நிலைக்க முடியாது, ஆகவே துருக்கியே இஸ்லாத்தின் முதுகெலும்பாகும்”. இக் கருத்தை ஆதரித்த மௌலானா முஹமது அலி அவர்கள் முஸ்லிம்களின் பொதுவான கருத்தை இது பிரதிபலிக்கிறது எனக் கூறினார்கள்.
பிராங்கி மஹால் (Firanqi Mahal) இன் ஆதரவுடன் 1919 ஜனவரி 26ல் லக்னோவில் இடம்பெற்ற Anjuman- Moid-ul-Islam தின் கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் எட்டப்பட்டது. “பிராங்கி மஹால் (Firanqi Mahal) தனது உண்மையான நம்பிக்கையை சுல்தான் முஹம்மது 6 அவர்களுக்கு தெரிவிப்பதுடன், இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் துருக்கியின் தற்போதைய சுல்தான்தான் கலீஃபா என்றும், கிலாஃபத் தொடர்பான தீர்மானத்தில் முஸ்லிமல்லாதவர்களின் தலையீடு இருக்கக் கூடாதென்றும் அறிவிக்கிறது.”சைய்யத் சுலைமான் நத்வி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் கூட கலீஃபாவி;ன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியள்ளார்கள். “அல்லாமா நஸ்வி, இமாம் ராஸி, காஸி உலூத் ஆகியோர் இது தொடர்பில் விளக்கமாக ஆராய்ந்துள்ளனர். அவர்களின் முடிவே இறுதியானதாக இருக்க வேண்டும். பைஅத் இல்லாமல் மரணிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் ஜாஹிலிய்யத்தில் மரணிக்கிறார்கள் என சஹீஹ் முஸ்லிமில் ரஸ{ல்(ஸல்) கூறியதாகப் பதியப்பட்டுள்ளது. (The Muslim Outlook, March 1920).
(1920 இல் பாரிஸ் நகரில் ஆற்றிய உரையொன்றில் மௌலானா முஹமது அலி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார் “ கிலாஃபத்தே உலக முஸ்லிம்களின் முக்கியமான அமைப்பாகும், துருக்கிய சுல்தானே நம்பிக்கையாளர்களின் தளபதியும் கலீபாக்களின் வழித்தோன்றலுமாவார் என உலகின் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். கிலாஃபத்துக்கென்று போதுமான பிரதேசம் இருக்க வேண்டுமென்பதும் போதுமான இராணுவ வளங்களும் நிதி வளமும் இருக்க வேண்டும் என்பதும் இந்த அகீதாவின் முக்கிய பகுதியாகும்.
”முஹம்மது அலி உரையாற்றிய அதே கூட்டத்தில் சைய்யத் ஹ{சைன் பின்வருமாறு கூறுகிறார். “இஸ்லாம் இந்த உலகில் நிலைக்க வேண்டுமெனில் அதற்கு கிலாஃபத் இருக்க வேண்டியது மிகக் கட்டாயமாகும். 1400 ஆண்டுகால இஸ்லாமிய வரலாறும் இதையே காட்டுகிறது.” மௌலானா மொஹமத் அலி ஜோஹர் பின்வருமாறு கூறுகிறார் “துருக்கிய சுல்தானே கலீஃபா, அமீருல் முஃமினின், நம்பிக்கையாளர்களின் தலைவர், ரஸ{ல்(ஸல்)அவர்களின் வழித்தோன்றல். குர்ஆன் சுன்னா போன்றே கிலாஃபாவும் எமது மத விடயங்களில் ஒன்று” (My life a fragment, Mohamed Ali Johar p.g 41)
உலமாக்களே கிலாஃபா இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
1920 ஏபரல் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் இந்தியாவில் இடம்பெற்ற கிலாஃபா மாநாட்டில் பல்வேறு உலமாக்கள் கலந்து கொண்டு அங்கே பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில கீழ்வருமாறு:
1வது : கிலாஃபா தொடர்பில் மக்கள் அபிப்பராயத்தை ஏற்படுத்த உலமாக்கள் பாடுபட வேண்டும்.
2வது : கிலாஃபத்திற்கு எதிரான அறிஞர்கள் எனப்படுவோரும், முனாபிக்குகளும் புறக்கணிக்கப்படல் வேண்டும்.
7வது: தமது உயிரை கிலாஃபா பற்றி பேசவும் எழுதவும் அர்ப்பணிக்க வேண்டுமென தம்மை பின் பற்றுபவர்களிடம் உலமாக்கள் வாக்குறுதி வாங்க வேண்டும்.
9வது : அரசியலமைப்பு ரீதியிலான தேர்தல்களில் இருந்து முஸ்லிம்கள் விலகியிருக்க வேண்டும்.
டெல்லியில் 1920 நவம்பர் 19ம் 20ம் திகதிகளில் இடம்பெற்ற ஜம்மியதுல் உலமா ஹிந்தினுடைய அகில இந்திய நாட்டில் கிலாஃபாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆங்கிலேயர்களே முஸ்லிம்களின் பிரதான எதிரிகள், எனவே அவர்களை எதிர்ப்பது பர்ளாகும். உம்மத்தையும் கிலாஃபத்தையும் பாதுகாப்பது மிகத் தெளிவான இஸ்லாமியத் தேவையாகும். எனவே இந்த நாட்டிலுள்ள சகோதரர்கள் இதற்காக உதவிகளையும், ஒத்துழைப்பினையும் வழங்குவார்களேயானால் அதற்காக அவர்கள் நன்றிக்குறியவர்களாவார்கள்.
தாருல் உலும் தியோபத்தின் தலைவர் ஹெய்குல் ஹிந்த் மௌலானா மஹ்மூத் ஹஸன் அவர்கள் 1920 ஜுன் 8அன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். தனது விடுதலையின் பின்னர் கிலாஃபத் இயக்கத்தில் அவர் தன்னை ஈடுத்திக்கொண்டார்கள.; இதுகுறித்து மௌலானா ஹ{சைன் அஹமத் மதனி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“சிறையில் கடும் கஷ்டங்களை அனுபவித்துவிட்டு ஷெய்குல் ஹிந்த் இந்தியா திரும்பிய போது கூட காலனித்துவவாதிகளுக்கெதிரான அவரது போராட்ட மனப்பாங்கிலும், அவர் பிரித்தானியரை எதிர்த்த விதத்திலும் எவ்வித மாற்றமும் இருக்கவில்லை. martial law அமுலாக்கம்;, ரவ்லாத் சட்டத்தின் (Rawlatt law) அமுலாக்கம், நாட்டினுள் இடம்பெற்ற ஜாலியன்வாலா பாஹ் படுகொலைகள், உஸ்மானிய சாம்ராஜியத்திலிருந்தான பிரிவு, துருக்கிருக்கெதிராக இந்தியாவுக்கு வெளியே மனிதாபிமானமற்ற முறையில் இடம்பெற்ற நிகழ்வுகள் போன்றன அவரை கவலையடையச் செய்திருந்தன. அவர் பம்பாயில் காலடி எடுத்து வைத்தவுடன் மௌலானா அலியையும் கிலாஃபா இயக்கத்தின் மற்றைய உறுப்பினர்களையும் சந்தித்தார். லக்னோ Firqani Mahal இலிருந்து மௌலானா அப்துல் பாரியும் அஹமதாபாதிலிருந்து மகாத்மா காந்தியும் ஷெய்குல் ஹிந்தை வரவேற்க பம்பாய்க்குச்சென்றிருந்தனர். அவர்களுடனும் கிலாஃபத் இயக்கத்தின் ஏனைய உறுப்பினர்களுடனும் தனிப்பட்ட ரீதியிலும் பொதுவாகவும் கலந்துரையாடிய அவர்கள் இந்தியாவை விடுதலைக்காக அகிம்சைப் வழிப்போராட்டத்துக்கு ஒப்புக்கொண்டார்கள் (Naqsh - e – hayat, Vol 2, P. 247)
காலனித்துவவாதிகளுடன் ஒன்றாக செயற்படுவது தொடர்பில் ஷெய்க் அவர்கள் ஒரு பத்வாவை வழங்கியிருந்தார்கள். 1920இல் வெளியிடப்பட்ட அந்த பத்வா இன்றைய நிலைக்குக்குக்கூட பொருத்தமாக காணப்டுகிறது. அந்த பத்வாவில், “இஸ்லாத்தின் கௌரவத்தையும் மரியாதையையும் சீர்குலைக்க எதிரிகள் சகல வழிகளையும் கையாண்டுவிட்டனர். ரஸ{ல் (ஸல்) அவர்களினதும் ஸஹாபாக்களினதும் அதற்குப் பின் வந்தவர்களினதும் கடுமையான தியாகத்தின் விளைவாக வெற்றி கொள்ளப்பட்ட ஈராக், பலஸ்தீன், சிரியா ஆகியன பிரதேசங்கள் மீண்டும் எதிரிகளின் இலக்காகியுள்ளன. கிலாஃபத்தின் மரியாதை தடுமாறிக் கொண்டிருக்கிறது. பூமியிலுள்ள முஸ்லிம் உம்மத்தை ஒன்றிணைக்க வேண்டிய, இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய, முஸ்லிம்களின் உரிமைகளையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டிய அல்லாஹ்வின் வசனங்களை நிலைநாட்ட வேண்டிய கலீஃபா தற்போது எதிரிகளால் சு10ழப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இஸ்லாமியக்கொடி கீழிறங்கி பறக்கிறது. ஹஸ்ரத் அபூ உபைதா(ரழி), சாத் பின் அபி வகாஸ்(ரழி), காலித் பின் வலீத்(ரழி), அபூ அயூப் அன்சாரி(ரஹ்) போன்றோரின் ஆத்மாக்கள் இன்று அமைதியடையாமல் உள்ளன. முஸ்லிம்கள் தமது மதிப்பையும், கௌரவத்தையும், சுய மரியாதையும் இழந்தமையே இதற்குக்காரணமாகும். வீரமும், மார்க்கப்பற்றுமே அவர்களது விருப்பமாகவும் செல்வமாகவும் இருந்தது. கவனயீனத்தாலும், இலட்சியமின்மையாலும் அவர்கள் இதனை இழந்து விட்டார்கள்.”“முஸ்லிம்கள் சகல முஸ்லிம்களுக்கும் உதவாமலிருந்தது கஷ்டமான காலங்களில் மட்டுமல்ல. துரதிர்ஷ்டவசமாக காபிர்களின் நன்மதிப்பையும் நட்பையும் பெரும் பொருட்டு முஸ்லிம்களே தமது சகோதரர்களை கொலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். முஸ்லிம்களே தமது சகோதரர்களின் இரத்தத்தில் நீந்த ஆரம்பித்து விட்டார்கள்.”
“இஸ்லாத்தின் குழந்தைகளே ! இந்த தேசத்தை விரும்புவர்களே ! இஸ்லாமிய உலகை எரித்து கிலாஃபாவைத் தீயிட்ட இடியும் நெருப்பும் அரபிகளிடமிருந்தும் இந்தியர்களிடமிருந்தும் தான் பெறப்பட்டது என்பதை என்னை விட நீங்கள் நன்கு அறிவீர்கள். முஸ்லிம் தேசங்களை கட்டுப்படுத்த கிறிஸ்தவர்கள் பயன் படுத்திய அதிகாரத்தையும் வளத்தையும் உங்களின் கடும் உழைப்பிலிருந்தே அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.” “கிறிஸ்தவர்களுடன் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் விளைவுகளை அறியாத முட்டாள் முஸ்லீம்கள் யாரும் இருக்கிறார்களா(From Fatwa of Moulana Mahmood Hasan on 16th Safar 1339 Hijri, Corresponding to October 29th, 1920, Georgian year, The Prisoners of Malta, (Asira’h - e- malta), Moulana Syed Muhammed Mian, Jamiat ulama- l- hind, English edition, page 78-79.)
இன்றைய உலமாக்களில் பலர் கூறுவது போல் இஸ்லாமும் அரசியலும் வேறுபட்டது என்பதற்கு மாற்றமாக இஸ்லாமும் அரசியலும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத விடயங்கள் என்பதை அன்றைய உலமாக்கள் உணர்ந்திருந்தனர். கிலாஃபத்தின் வீழ்சிக்கு சில நாட்களுக்கு முன்பு ஜம்மியதுல் உலமா ஹிந்துடைய 4வது அமர்வு 1923 டிசம்பர் 24ல் காயாவில் நடைபெற்றது. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்த இஸ்லாமிய அறிஞர்கள், முஸ்லீம் சமூகத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து ஆழமாக கலந்து உரையாடினார்கள். நீண்ட ஆலோசனைகளின் பின் மதமும் அரசியலும் இஸ்லாத்தின் பிரிக்க முடியாத இரு அங்கங்கள் என்ற முடிவுக்கு வந்தனர்.இந்தியாவில் கிலாஃபா இயக்கத்தின் பரந்த அளவிலான செல்வாக்கினை பார்த்து இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படும் இந்துமதத்தைச் சார்ந்த மோகன்தாஸ் காந்தியும் கிலாஃபா இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரானார்.
முஸ்தபா கமாலினால் 1924 மார்ச் 3 அன்று கிலாஃபா வீழ்தப்பட்டதுடன் கிலாஃபா இயக்கமும் மறைந்துவிட்டது. கிலாஃபாவை மீளமைப்பது சாத்தியம்மற்றது எனக் கருதிய பலர் பின்நாளில் பிரத்தானிய காலனித்துவ வாதிகளிடமிருந்து இந்தியாவை விடுதலை அடையச் செய்வதில் கவனத்தை செலுத்தினர். கிலாஃபா வீழ்தப்பட்ட அடுத்த நாளின் மௌலானா முஹம்மது அலி கௌஷர் கூறியதாக TIMES பத்திரிகை 1924 மார்ச் 4ல் பின்வரும் செய்தியை வெளியிட்டது.
“கிலாபாவின் வீழ்ச்சி இந்திய முஸ்லிம்களின் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என எதிர்வு கூறுவது கடினமாகும். இஸ்லாத்திற்கும் நாகரிகத்திற்கும் இது ஒரு அழிவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இஸ்லாமிய ஒற்றுமையின் சின்னம் என முஸ்லிம் உலகால் அறியப்பட்ட அமைப்பின் வீழ்ச்சி ஒற்றுமையீனத்தை ஏற்படுத்தும்…”கிலாஃபாவின் வீழ்ச்சிக்குப்பின் அவர் கூறிய அதே விடயங்களை நாம் இன்று காண்கிறோம். எனினும் கிலாஃபா வீழ்தப்பட்டு 80 ஆண்டுகளைத்தாண்டியுள்ள நிலையில் கிலாஃபா என்பது மேற்கின் அரசியல்வாதிகளினதும், தலைவர்களினதும், சிந்தனையாளர்களினதும் பேசுபொருளாக மாறிவிட்டதுடன் கிலாஃபாவை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்ற உணர்வு முஸ்லிம்களிடையே வலுப்பெற்று வருவதைக்கண்டு அவர்கள் தயக்கம் கொள்வதை எம்மால் வெளிப்படையாகவே காண முடிகின்றது. 2006 அக்டோபர் அன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் ஜோர்ஜ் டபிள்யு புஷ் பின்வருமாறு கூறியிருந்தார்.
“ புத்திஜீவிகளை மிரட்டி மிதவாத அரசாங்களைக் கவிழ்த்து கிலாஃபத்தை நிலைநாட்டி விரிபுபடுத்த தீவிரவாதிகள் முயற்சிக்கின்றனர். தங்களது இலக்கை இடைய தீவிரவாத சக்திகள் மதத்தை உபயோகிக்கின்றனர். நாங்கள் வெளியேறுவதையே விரும்பும் அவர்கள் அரசுகளை கவிழ்க்க நினைக்கின்றனர். சுதந்திரத்துக்கு இடம் வழங்காத சித்தாந்த ரீதியான கிலாஃபத்தை; நிலைநாட்ட நினைக்கின்றனர்.”
கிலாஃபா இஸ்லாத்தின் உள்ளாந்த பகுதிகளின் ஒன்று என்பதை மேற்கு உணர வேண்டியிருக்கிறது. எனவே கிலாஃபத்தின் மீள்வருகைக்கு எதிராக பேசுவதை தவிர்த்துக்கொண்டு அது மீள வரும்போது எவ்வாறு அதனுடன் சேர்ந்து இயங்க முடியும் என்பதை சிந்திப்பதே அவர்களுக்கு சிறந்ததாகும்.
கிலாஃபாவின் அவசிய தேவையை இந்திய உபகண்ட முஸ்லிம்கள் மறந்து விடவில்லை. உபகண்டத்திற்குள்ளேயே அதை மீள நிலைநாட்ட இயக்கங்களும், சிந்தனையாளர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள் என்பது திருப்தியளிக்கிறது. எனினும் இன்னும் பாரிய முயற்சிகள் ஓர் தலைமைக்குக்கீழ் மேற்கொள்ளப்பட்டு முன்னெடுக்கப்படவேண்டும். கிலாஃபா மீள நிலைநாட்டப்படும் என்பதையும் அது இந்திய உபகண்டததை மீளவும் கைபற்றும் என்பதையும்; பின்வரும் ஹதீஸ் தெளிவாக குறிப்பிடுகிறது.
நபி (ஸல்) கூறியதாக அபு ஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,“உங்களில் ஒரு கூட்டம் இந்தியாவை கைபற்றும்”.
மற்றொரு ஹதீஸில்“இரு கூட்டத்தாரை அல்லாஹ் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து விட்டான். ஒரு கூட்டம் இந்தியாவை வெற்றிகொண்ட கூட்டம், மற்றையது ஈஸா இப்னு மர்யமுடன் இருக்கும் கூட்டம். (அஹமத், நஸாஈ)
எனவே மேல் குறிப்பிடப்பட்ட அல்லாஹ்வின் வாக்குறுதியை விசுவாசித்து எமது முன்னைய தலைவர்களின் தலைநிமிர்ந்த போராட்டங்களின் வழித்தடங்களிலே நாமும் விரைவாக முன்னேறுவதற்கு திடசங்கற்பம் பூணுவோம்.
No comments:
Post a Comment