Monday, June 1, 2009

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் - பகுதி 4

இந்தியாவை பிரித்தானியா ஆக்கிரமிப்புச்செய்தலும் இந்திய முஸ்லிம்களின் எதிர் நடவடிக்கைகளும்.

காலனித்துவவாதிகளின் தொடர்ச்சியான சதிகளும் முஸ்லீம்களின் அறிவார்ந்த வீழ்ச்சியும் இந்திய உபகண்டத்தை காபிர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தன. கி.பி 1600 இல் கிழக்கிந்தியக் கம்பனி பிரிட்டனால் இந்தியாவில் அமைக்கப்பட்டது. முஸ்லிம்களி;ன் நிலங்களையும் வளத்தையும் ஐரோப்பிய காலனித்துவ வாதிகள் படிப்படியாக விழுங்குவதற்கு ஆரம்பித்த அந்த காலப்பகுதியிலேயே சுதேசிகளான முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையே பகையுணர்வை வளர்ப்பதற்கும் இவர்கள் ஆரம்பித்தார்கள். பின்னர் 1819 இல் பிரித்தானியா இந்தியாவை நேரடியாக ஆக்கிரமித்த போது முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. இந்த யுத்தத்தில் முஸ்லிம்களுக்கும் பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தன. பிரித்தானியர் சுதேசிகளாக இருந்த சில இந்துக்களினதும், சீக்கியர்களினதும், பௌத்தர்களினதும் உதவிகளைப் பெற்றுக் கொண்டனர். எனினும் 1846 வரை முஸ்லிம்களுடன் போராடிய 27 வருட காலப்பகுதியில் பிரித்தானியரால் அங்கு நிலையான கட்டுப்பாட்டை கொண்டு வர முடியவில்லை.


இக்காலப்பகுதியில் முகலாய விலாயாவின்; அதிகாரம் இந்தியாவின் சில பகுதிகளில் பலவீனமடையத் தொடங்கியது. சில ஆட்சியாளர்கள் இஸ்தான்புல்லில் இருந்து கிலாஃபாவின் உதவியைக் கோரினார்கள். உதாரணமாக 1779 இல் கன்னூரின் (cannore) மகாராணி, சுல்தான் அப்துல் ஹமீதுக்கு தன்னை ஆங்கிலக் கிழக்கித்தியக்கம்பனியின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்குமாறு கோரி ஓர் இராஜதந்திரத் தகவலை அனுப்பியமையைக் கூறலாம். திப்பு கல்தான் தன்னை மைசூரின் ஆட்சியாளராக அங்கீகரிக்குமாறு கலீஃபாவிடமிருந்து ஒரு கடிதத்தைக் கோரிப் பெற்றுக்கொண்டார்.

பிரித்தானிய காலனித்துவவாதிகள் இந்தியாவிலிருந்து இஸ்லாமிய ஆட்சியை ஒழித்த போதும் இந்திய முஸ்லிம்கள் இஸ்தான்புல்லிருந்த கலீஃபாவுக்கு விசுவாசமாகவே இருந்து வந்தனர். அத்துடன் சைய்யித் அஹ்மத் ஷஹீத் போன்றோர் பிரித்தானியர்களுக்கெதிராக ஜிஹாதை தொடர்ந்து வந்தனர். உலமாக்களும் குறிப்பாக யகெஸ்டனில் (பிரித்தானியர்களின் இந்திய ஆட்சிக்காலப்பகுதியில் ஹேரட், கந்தஹார், சாபுல், கஸ்னி மற்றும் காபுல் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான பஸ்தூன் கோத்திரத்தவர்களின் பகுதியாகும்).கிரேக்க – துருக்கியப் போரில் உஸ்மானிய கிலாஃபா வெற்றி பெற்றதன் முகமாக சுல்தானை கொளரவிப்பதற்காக இந்திய முஸ்லீம்கள் மௌலானா அப்துல் பாரியின் தலைமையில் கீழ் லக்னோவில் கூடியதையும் பால்கனிலும் திரிபோலியிலும் கிலாஃபாவுக்கு பின்னடைவு ஏற்பட்ட போது கிலாஃபாவை வீழ்த்த மேற்கத்திய சக்திகள் மேற்கொண்ட செயல்களை இந்திய முஸ்லீம்கள் எதிர்த்ததையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.


இந்தியாவின் புகழ்பெற்ற பிரித்தானிய எதிர்ப்பாளரும் கிலாஃபத்தின் ஆதரவாளருமான மௌலானா முஹம்மது அலி யௌஷர் (ரஹ்) லிங்கன் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்து விட்டு 1914ல் London Times இல் வெளிவந்த ஒரு கட்டுரைக்குப் பதிலடியாக Choice of Turks என்ற கட்டுரையை எழுதினார்கள். 1912ல் பால்கான் யுத்தம் தொடங்கிய போது பாதிக்கப்பட்ட துருக்கியருக்கு உதவிகளைக் கோரியதுடன் அங்கு ஒரு மருத்துவக் குழுவினரையும் அனுப்பினார்கள். இவையெல்லாம் எவ்வாறு இந்திய முஸ்லிம்கள் முஸ்லிம் உம்மத்தின் ஒரே தலைமையான கிலாஃபத்தின் மீது தமது முழுமையான அக்கறையை வைத்திருந்தார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.


இந்தியாவில் புகழ்பெற்ற இஸ்லாமிய பல்கலைகழகமான தாருல் உலூம் தியோபந்தின் தலைவரான ஷெய்ஹ் அல் ஹிந்த் மௌலானா மஹ்மூத்; ஹஸன், பால்கன் மற்றும் திரிபோலி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிதி சேகரித்தார்கள். இவர் குறித்து மௌலானா ஹ{சைன் அஹ்மத் மதனி பின்வருமாறு கூறுகிறார்.“பால்கன் மற்றும் திரிபோலிய யுத்தம் மௌலானா மஹ்மூத் ஹஸன் மனதில் கடுமையான சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவர்கள் தாருல் உலூமின் ஸ்தாபகரில் ஒருவரான மௌலானா காசிம்; நனாவுட் (சோவியத் துருக்கிப் போரில் கலீஃபாவுடன் இணைந்து பணியாற்றியவர் ) பின்பற்றிய பாதையை தானும் தெரிவு செய்து கொண்டார்கள். அவர்கள் தன்னை இஸ்லாத்துக்காக அர்பணித்ததுடன் உஸ்மானிய சாம்ராஜியத்துக்கு தன்னாலான உதவிகள் பலவற்றை செய்தார்கள். அவர்கள் தாருல் உலூமை மூடி விடுமாறு பத்வா வழங்கியதுடன் உஸ்மானிய சாம்ராஜியத்திற்காக நிதி சேகரித்ததுடன் மாணவர் குழுக்களை துருக்கிக்;கு அனுப்பியதுடன் இதில் ஒரு குழுவுக்கு தானே தலைமை தாங்கிச் சென்றார்கள். எனினும் அவர் தான் உஸ்மானிய சாம்ராஜியத்துக்கு செய்த உதவிகளால் திருப்த்தியடையவில்லை. பால்கன் போரின் எதிர்விளைவுகள் இவரைப் போன்ற முஸ்லிம் இலட்சியவாதிகளைச் பெரிதும் சோர்வடைய செய்தது. ஐரோப்பியர்கள் இஸ்லாத்தின் ஒளியை அணைக்க சதி செய்வதை இவர்கள் உணர்ந்து கொண்டார்கள். மேலும் ஸ்குயிப் போன்ற பிரித்தானிய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயமும், ரஷ்யர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமைகளும், துருக்கியில் ஏற்பட்ட பிளவும் வெள்ளைக்காரர்களின் நீண்ட நாள் கனவு நனவாகப்போகிறது என்ற நம்பிக்கையை இவர்களிடையே ஏற்படுத்தியது (Nagsh – e - hayat , Vol2 , pg . 140 )


முதலாம் உலகப்போர் காலப்பகுதியில் இந்தியப்பள்ளிவாசல்களில் தொடர்ச்சியான தொழுகைகள் இடம்பெற்றதுடன் அவர்களின் குத்பாக்களில் சுல்தானினது நலன் வேண்டியும் அவரது இராணுவத்தின் வெற்றிவேண்டியும் பிரார்த்தனையும் செய்யப்பட்டது. இன்னுமொரு தலை சிறந்த தலைவரான மௌலானா சௌகத் அலியிடம் ஏன் உங்களது குத்பாவை துருக்கிய சுல்தானின் பெயரால் ஓதுகிறீர்கள்? எனக் கேட்கப்பட்டபோது “இஸ்லாமிய கலீஃபாவும் துருக்கி சுல்தானும் ஒரே நபராக இருக்கும்போது என்னைக் குறை கூற முடியாது”எனக்கூறினார்கள்(The Khilafah movement, Gail minault, Oxford University press, 1982,p.55 ).


இந்திய முஸ்லீம்களின் முயற்சியை கிலாஃபா அங்கீகரித்ததுடன் தனக்கு உதவிசெய்யுமாறும், பிரித்தானியருக்கெதிராக போராடுமாறும் கேட்டுக்கொண்டது. இஸ்தான்புல்லின் பிரசுரிக்கப்பட்டு வந்த கிலாஃபாவின் அராபியப் பத்திரிகையான “அல்ஜவைத்” இன் ஒரு பிரதியை இஸ்தான்புல்லிருந்து சுமார் 8000 மைல் தொலைவிலுள்ள இந்தியாவின் தாருல் உலூம் மாணவர்களுக்காக அப்பத்திரிகையின் முகாமையாளர் அனுப்பி வந்தாh(sawaneh Qasmi;Vol 2, p.329).

நாம் முன்பு குறிப்பிட்ட ஷெய்ஹ் அல் ஹிந்த் மௌலானா மஹ்மூத் ஹஸன் கிலாஃபாவிற்கு நேரடி ஆதரவு வழங்கியதுடன் அதன் செயற்பாட்டிற்காகவும் கடுமையாக உழைத்தார். அவர் ஹிஜாஸிற்கு பயணம் செய்தபொழுது கிலாஃபாவின் வாலியையும், கலீஃபாவின் உதவியாளர்களையும் மக்காவில் சந்தித்தார். பிரித்தானியாவுக்கெதிராக இந்தியாவில் போராடும் முஸ்லீம்களுக்கு உதவுமாறு கோரிய ஷேய்ஹிற்கு வாலி சில ஆவணங்களை வழங்கினார். இதில் முக்கியமானது அவர் இந்திய முஸ்லீம்களுக்கு எழுதிய கோரிக்கையாகும். அதில் பிரித்தானியாவுக்கெதிரான போராடத்தைத்தொடர்வற்காக ஷெய்ஹ் அல் ஹிந்தை பாராட்டியிருந்ததுடன் முஸ்லீம்கள் தமது உதவிகளை அதிகமாக வழங்கவேண்டும் எனவும் வழியுறுத்தியிருந்தார். கிலாஃபத்திலிருந்து இந்திய முஸ்லீம்களுக்கு தாம் பொருளுதவி அனுப்பவதாகவும் அதில் அவர் உறுதியளித்திருந்தார். மக்காவின் வாலி எழுதிய இந்த ஆவனம் ‘காலீப் நமாஹ்’ என்று அறியப்படுகிறது. 1334 இல் ஹஜ்ஜை நிறைவேற்றிய ஷெய்ஹ் அல் ஹிந்த் கிலாஃபாவின் அதிகாரிகளான அன்வர் பாஷாவையும், ஜமால் பாஷாவையும்; சந்தித்தார். பிரித்தானியாவுக்கெதிராகப் போராடும் இந்திய முஸ்லீம்களை பாராட்டி அன்வர் பாஷாவும் அவர்களுக்கு கடிதம் எழுதினார். ‘காலீப் நமாஹ்’ ஐ ஒத்திருந்த இக்கடிதமும் பிரித்தானியர்களுக்கெதிரான இந்திய முஸ்லீம்களின் போராட்டத்திற்கு உத்மானியா கிலாஃபா பொருளுதவி செய்வதாகவும் உறுதியளித்திருந்தது. மேலும் உத்மானிய கிலாஃபாவி;ன் ஊழியர்களும் பொதுமக்களும் ஷெய்ஹ் அல் ஹி;ந்திடம் நம்பிக்கை வைக்குமாறும் அவருக்கு பொருளுதவி செய்யுமாறும் இக்கடிதத்தில் வேண்டப்பட்டிருந்தனர். இக்கடிதததின் பிரதிகள் இந்தியாவுக்கு இரகசியமான கடத்தப்பட்டதுடன் பிரித்தானிய உளவுத்துறையின் சவால்களையும் தாண்டி யகெஸ்டன்; முழுதும் வினியோகிக்கப்பட்டன [The prisoners of malta(Asiran-e-malte),maulana Ulama-a1-Hind ]

பிரித்தானியாவின் பின்னணியிலிருந்து இயக்கிய ஷரீப் ஹ}சைனினதும் அவரது ஆட்களினதும் சதியை இந்திய முஸ்லீம்கள் அறிந்திருந்ததுடன் அவர்கள் பிரித்தானியாவால் மேற்கொள்ளப்பட்ட ஹிஜாஸ{க்கான உணவுத்தடையையும் கடுமையாக எதிர்தார்கள்.


Colonel T.E. Lawrence இன் விசமப்பிரச்சாரங்களும், அவர் அரபியில் ஆற்றிய உணர்ச்சி பூர்வமான உரையும், ஷரீப் ஹ{சைனுக்கும் சேர் ஹென்றி மெக்மேகனுக்குமிடையே இடம்பெற்ற ரகசிய ஒப்பந்தமும் ஹிஜாஸில் வசித்த மக்களை துருக்கிக்கு எதிராக கிளர்ந்தெழ எவ்விதத்திலும் உதவவில்லை. இந்த இலக்கை அடைய பிரித்தானிய அரசு இன்னும்பல காட்டுமிராண்டித்தனமாக மனிதாபிமானமற்ற பல திட்டங்களை கையாண்டது.
அவற்றை ஷெய்ஹ் அல்; இஸ்லாம் மௌலானா ஹ}சைன் அஹ்மத் மதானி பின்வருமாறு விளக்குகிறார்.“ஹிஜாஸ{க்கான உணவு வழங்கல் நிறுத்தப்பட்டுவிட்டது. ஹிஜாஸ{க்கான கடைசி உணவுக்கப்பல் ஹிஜ்ரி 1334 ஷபரில் வந்தடைந்தது. உணவு வழங்கல் நிறுத்தப்பட்டதால் விலைகள் பெருமளவில் உயர்ந்தன. மக்கள் பட்டினியில் வாடினார்கள். இந்திய முஸ்லீம்களின் போராட்டத்தின் காரணமாக ஹிஜ்ரி 1334 ஜமாதி அல் ஸானியில் Fairozi Aganboat சில ஆயிரம் அரிசி மூட்டைகளுடன் கல்கத்தாவிலிருந்து புறப்பட்டது.அந்த மூட்டைகள் கூட ஏடன் துறைமுகத்தில் பலவந்தமாக தரையிறக்கப்பட்டன. ஹிஜாஸிலிருந்து உத்மானிய சாம்ராஜ்ஜியத்தின் ஆதிக்கம் முற்றாக இல்லாமல் போன பிறகே அவை ஜித்தாவிற்குள் அனுமதிக்கப்பட்டன(The Prisonesrs of Malta (Asinain-e-malta), maulana Syed Muhammed miah, jamiat ulama-1-Hing, English edition, P.45)

ஷெய்ஹ் அல் ஹிந்த்; மௌலானா மஹ்மூத் ஹசனை பிரித்தானியார்கள்; 3 ஆண்டுகள் மோல்டாவில் சிறையிலடைத்தார். உஸ்மானியா கிலாஃபாவை விட்டுக்கொடுக்காமையும், சத்தியத்தின் பால் உறுதியாக நின்றமையுமே இதற்கு காரணமானது. உஸ்மானிய கிலாஃபத்துடனான விசுவாசத்தை நிறுத்திவிட்டு ஷரீப் ஹ}சைனுக்கு ஆதரவாக பத்வா ஒன்றை வழங்குமாறும் பிரித்தானியா அவரை மிகவும் பலவந்தப்படுத்தியது.


ஷெய்ஹ் அல்; ஹிந்த் ஹிஜ்ரி 1335 சபர் மாதம் பிறை 23 இல் (21, பெப்ரவரி 1917) துரோகி ஷரீப் ஹ{சைனினால் மக்காவில் வைத்து கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து மௌலானா ஹ{சைன் அஹ்மத் மதானி, மௌலானா அஸீஸ் குல், மௌலானா ஹக்கீம் நுஸ்ரத் ஹ{சைன், மௌலானா வாஹீத் அஹ்மத் போன்றோடும் பிரித்தானிய அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டு கெய்ரோவினூடாக மால்டாவிற்கு அனுப்பப்பட்டனர்.


மௌலானா மஹ்மூத் ஹஸன் 3 ஆண்டுகளும் 4 மாதங்களும் சிறைவாசம் அனுபவித்த பின் விடுதலை செய்யப்பட்டு 1920 ஜுன் 8 இல் பம்பாயை வந்தடைந்தார். இவர் மால்டாவில் இருந்து திரும்பிய அதே காலப்பகுதியிலேயே இந்தியாவில் கிலாஃபத் இயக்கம் தோன்ற ஆரம்பித்தது.
நிஸாரதுல் மாரிப்( அல் குர்ஆன் கற்றலுக்கான நிலையம் ) ஹிஜ்ரி 1321 இல் முஜாஹித் மௌலானா உபைதுல்லாஹ் சிந்தி அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை முறையடிக்கும் வகையில் முஸ்லீம் புத்திஜீவிகளை பயிற்றுவித்து இஸ்லாமிய சிந்தனைகளை பரப்புவது இந்த நிலையத்தின் நோக்கமாக இருந்தது. இந்த இயக்கத்தால் பிரித்தானியர்கள் எதிர்கொண்ட சவால்களை பிரித்தானிய அரசாங்கத்தின் மத்திய உளவுத்துறையின் The petition of the Brithsh Queen Vs Moulana Obaidullah Sindhi என்ற கீழ்வரும் அறிக்கையில் காணலாம்.

“மௌலானா உபைதுல்லாஹ் சிந்தி தாருள் உலூம் தியோபந்தை தனது மிஸனரிகளின் (முஜாஹீதீன்கள்) பயிற்சி முகாமாகப் பாவிக்க முடியாதிருந்தது. ஆகவே இந்த இலக்கை அடைவற்காக ஒரு மத்ரஸாவை (நிஸாரதுல் மாரிப்) டெல்லியில் அமைக்க அவர் முடிவுசெய்தார். அதன் பெயருக்கு ஒப்ப குர்ஆனை சரியான முறையில் போதிப்பதே அதன் நோக்கமாக இருந்தது. அங்கு அரபியும் கற்பிக்கப்பட்டதது.” ( The petiton of the Brithsh Queen Vs Moulana Obaidullah Sindhi, section 47 )

“நிஸாரதுல் மாரிப், இந்த போதனைகளுக்கு புறம்பாக புரட்சிக்காரர்கள் இரகசியமாகக் கூடுமிடமாகவும் இருந்தது.” (The petition of the British queen vs Maulana Obaidullah Sindhi, section 20)

இந்தியாவிலிருந்து பிரித்தானிய ஆட்சியை துடைத்தெரியும் நோக்குடன் செயற்பட்ட முஸ்லிம் புரட்சிக்காரர்களின் கூடும் இடமாக நிஸாரதுல் மாரிப் இருந்ததாக பிரித்தானியர்கள்; குறிப்பிடுகின்றனர். இதில் ஹக்கீம் அஜ்மல் கான், Dr. முக்தார் அஹ்மத் அன்சாரி, மௌலானா சௌகத் அலி, முஹம்மது அலி ஜௌகர், மௌலானா ஸபர் அலி கான், மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோரும் மேற்கூறிய நபர்களில் அடங்குவர்.


வெளிநாட்டு இறக்குமதிகளைப் புறக்கணிக்குமாறும், பிரித்தானிய அரசாங்கத்துக்கெதிராக ஒத்துழையாமையைக் கடைப்பிடிக்குமாறும் முஸ்லிம் உலமாக்களும், சிந்தனையாளர்களும் கேட்டுக் கொண்டனர். இதற்கு ஆதரவாக மக்களைத் திரட்டும் நோக்கில் தொழிலாளர் மாநாடு(Mo’tamar al-ansar) என்ற பெயரிலும் மௌலானா அப்துல் கலாம் ஆசாதின் பத்திரிகையான அல்ஹிலாலின் பெயரிலும், மௌலானா முகம்மது அலி ஜௌகரின் பத்திரிகையான The Comrade இன் பெயரிலும் கூட்டங்கள் ஒழங்கு செய்யப்பட்டன. மேலும் இவர்கள் பிரித்தானிய அரசுக்கெதிரான ஆக்கங்களை தமது பத்திரிகைகளில் பிரசுரித்தார்கள் என்ற குற்றத்திற்காக மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களும் மௌலானா முஹமது அலி ஜௌஹர் அவர்களும் கி.பி. 1911 – 1915ம் ஆண்டுவரை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
எனவே மேற்கூறிய ஆதாரங்களிலிருந்து பார்க்கும்போது இந்திய முஸ்லிம் தலைவர்களும், புத்திஜீவிகளும் கிலாஃபாவுக்கு வழங்கிய ஆதரவு சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்படுகிறது. “முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான ஒரே வாள் உஸ்மானிய சுல்தானிடமே இருக்கிறது” என்று மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் தனது பத்திரிகையான அல் ஹிலாலில் 1912 நவம்பர் 6 குறிப்பிட்டிருந்தார்கள். மேலும் “கிலாஃபத் என்பது ஷரிஆவின் ஒரு முக்கிய விடயமாகும். அது வஹி மூலம் கடமையாக்கப்பட்டுள்ளதுடன் அது அல்லாஹ்வின் நிறுவன அமைப்புமாகும். அதன் அதிகாரிகளுக்கு கட்டுப்படுவது பர்ள் ஆகும்.” எனவும் குறிப்பிட்டிருந்தார்கள்.

தொடர்ந்து வரும்...

No comments:

Post a Comment