சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹின் து}ண்கள்
சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹ் பற்றிய தத்துவத்தை முன்மொழிபவர்களினால் பல வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன. சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு கையாளப்படும் கருக்கோள்களுள் பின்வருபவை அடங்கும்:
1. புதிய பிரச்சினைகளைப் பற்றி ஷாPஆ மௌனம் சாதிக்கிறது. மேலும் வழக்கிலுள்ள இஸ்லாமிய முறைமை, இப்பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கு போதியளவு ஆற்றல் அற்று இருக்கின்றது.
2. காலத்திற்கும் இடத்திற்கும் தகுந்த விதத்தில் ஷாPஆ விதிமுறைகள் மாற்றமடைகின்றன. மேலும் இதற்கு ஆதாரமாக இமாம் ஷாஃபியின் ஃபிக்ஹை எடுத்துக் காட்டலாம்.
3. ஷாPஆ விதிமுறைகளைப் பற்றி நாம் கேட்கும் கேள்விகள் மாற்றமடைய வேண்டும்.
அரசியல் ஈடுபாடு குறித்தும், முஸ்லிம்களை இரண்டறக் கலந்துவிடச் செய்வதற்குமான தங்கள் வாதங்களுக்கு வலுச் சேர்ப்பதற்காக பல நியாயங்களை முன் வைக்கப்படுகின்றன. இவ்வாதங்களில் சில ஷாPஆ மூலங்களைத் தவறான வடிவத்தில் எடுத்து வைக்கின்றன. அதேவேளை, இவ்வாதங்களி;ல் பல பகுத்தறிவு hPதியான நியாயங்களாகும். அவர்கள் குறிப்பிடக்கூடிய கருக்கோள்களில் சில பின்வருமாறு:
1. யூசுப் (அலை) அவர்களின் வரலாறும், அவர்கள் எகிப்;து நாட்டை நிர்வகிக்கும் ஆட்சியில் பங்குபற்றினார்கள் என்ற வாதமும்.
2. முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் (அரசியல் ஈடுபாடுகளினால்) நன்மை (மஸ்லஹா) உண்டு.
3. அல்குர்ஆனின் புவியியற் கொள்கையைப் பின்பற்றுதல்.4. குடியுரிமை பற்றிய கருத்தியல்.
சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹின் அவசியத்தை மறுதலிப்பது
1. புதிய பிரச்சினைகளில் ஷாPஆ மௌனம் சாதிக்கிறது என்ற வாதம்.
சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹை ஆதரிப்பவர்கள்; ஷாPஆ புதிய பிரச்சினைகளில் மௌனம் சாதிப்பதாகவும், இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கு தற்போதைய இஸ்லாமிய முறைமையினால் இயலவில்லை என்றும் வாதிடுகின்றனர். இந்தக் கருத்தோட்டத்தை முன்வைக்கும் இவர்கள், ஒரு பெறுமதி வாய்ந்த ஹதீஸைக் குறிப்பிடுகின்றனர்: ஜர்தும் பின் நாஸிர் உடைய ஆதாரத்தோடு கூடிய இந்த ஹதீதில் அல்லாஹ்வின் து}தர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வல்லமை பொருந்திய அல்லாஹ், மார்க்கக் கடமைகளை விதிக்கின்றான். எனவே அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். அவன் வரம்புகளை அமைத்திருக்கின்றான். எனவே அவற்றைத் தாண்டிச் செல்லாதீர்கள். அவன் சிலவற்றை தடை செய்திருக்கின்றான். எனவே அவற்றை மீறாதீர்கள். அவன் உங்கள் மீதுள்ள கருணையினால் (மறந்ததினால் அல்ல) சிலவற்றைப்பற்றி மௌனம் சாதிக்கிறான். எனவே அவற்றைத் தேடிச் செல்லாதீர்கள்” (தாரகுத்னி, திர்மிதி, இப்னு மாஜா, ஹாக்கிம்)
மேற்கில் வாழும் முஸ்லிம்களுக்காக ஒரு முறைமையை வகுத்து கொடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டிருக்கும் தாரிக் ரமழான் என்பவர், தனது “ஓர் ஐரோப்பிய முஸ்லிமாக இருப்பதற்கு” என்ற நு}லில், இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் மௌனத்தைப் பற்றி, ‘இது அனுமதிக்கப்படுவதற்கான ஓர் அடிப்படை விதிமுறையைச் சுட்டிக் காட்டுவதாகக் குறிப்பிடுகின்றார். மேலும் அவர், ‘இந்த மௌனமானது, அதற்குப் பிறகு சமூக விவகாரங்களுக்குள் (முஆமலாத்); ஃபிக்ஹ் (சட்டவியல்) நீடித்து வளர்ச்சியடைவதற்கும், பரிணாமமடைவதற்கும், தோற்றம் பெறுவதற்கும் அனுமதிக்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றது’ என எழுதுகின்றார்.
“தெளிவான, வெளிப்படையான மூலம் ஒன்று இல்லாதவிடத்தில், அனுமதிப்பதற்கான கருத்தோட்டம் (இபாஹா) காணப்படுவதாக இப்புரிதல் மூலம் விளங்கிக் கொள்ளப்படுகிறது. முஸ்லிம்களின் நலன் கருதி அறிஞர்கள் மிக ஆழமாகப் படித்தறிந்து அபிப்பிராயங்களை உருவாக்குவதற்கான பகுதி இதுதான்” என இவர்கள் கருதுகின்றனர். பல்வேறு காரணங்களினால் இந்த அபிப்பிராயம் மிக பலவீனமானது ஆகும். அல்குர்ஆனினால் அல்லது ஸ_ன்னாஹ்வினால் தீர்ப்பு வழங்கப்படாத எந்தவொரு அம்சத்தையும் ஷாPஆ விட்டு வைக்கவில்லை. இஸ்லாமிய ஷாPஆவானது, முழுமையாகவும், பரந்த அளவிலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் மனிதனின் எல்லா நடவடிக்கைகளையும் சூழ்ந்து நிற்கின்றது. அல்லாஹ் பின்வரும் இறை வசனத்தில் மிகத் திட்டவட்டமான ஒரு கருத்தை முன்வைக்கிறான்:
“மேலும் உமக்கு இவ்வேதத்தை (அல்குர்ஆனை) இறக்கி அருளியுள்ளோம். அது யாவற்றையும் மிகத் தெளிவாக விபரிக்கக்கூடியதாய் இருக்கின்றது. முற்றிலும் (இறைவனுக்கு) கீழ்ப்படிந்து வாழும் மக்களுக்கு அது நேர்வழி காட்டக் கூடியதாகவும், அருளாகவும் ஒரு நற்செய்தியாகவும் இருக்கின்றது.” (16:89)
எனவே, ஒரு ஷாPஆ சட்டம் காணப்படாத சந்தர்ப்பங்களும் இருக்கின்றன என்றும் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தை கவனத்திற் கொள்ளாது அதனை ஷாPஆ முழுமையாக அலட்சியப்படுத்தி விட்டது என்றும் அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்திற்கான ஆதாரங்களை நிறுவித் தரவில்லை என்றும் வாதாடுவதற்கு எந்தவொரு முஸ்லிமுக்கும் உரிமை கிடையாது.
இத்தகையக் கண்ணோட்டத்தை கொண்டிருப்பதானது, அல்குர்ஆன் அல்லது ஸ}ன்னாஹ்விலிருந்து எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும், அல்லது அல்குர்ஆனும் ஹதீஸ_ம் ஒரு சட்டபூர்வமான ‘இல்லாஹ்’ எனப்படும் ஷாPஆ காரணியின் மூலமாக ஒரு குறியீட்டைத் தரவில்லை என்றும் கொள்வதாகும். இல்லாஹ் எனப்படும் ஷாPஆ காரணி என்பது வெளிப்படையாகவோ அல்லது குறியீடுகள் மூலமாகவோ மூலத்தில் குறிப்பிடப்படுகின்றன அல்லது அனுமானத்தின் மூலமாகவோ ஒப்புமை மூலமாகவோ பெறப்படுகின்றன. இஃது அந்த விதிமுறை, வாஜிப் (கட்டாயமானது), மன்து}ப் (பரிந்துரைக்கப்பட்டது), ஹராம் (தடுக்கப்பட்டது), மக்ரூஹ் (குற்றமானது), முபாஹ் (அனுமதிக்கப்பட்டது) என்பனவற்றுள் ஒன்றை விவரிப்பதற்கு உரியதாகும். எந்தவொரு முஸ்லிமும், இந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கக்கூடாது. ஏனென்றால் ஷாPஆ முழுமை வாய்ந்ததன்று என வாதிடுவதன் மூலம், அவன் ஷாPஆ மீது அவது}று கற்பிக்கிறான். மேலும், அவன் ஷாPஆ அல்லாத தீர்ப்புகளைத் தேடிப் பெறுவதைச் சட்டபூர்வமானதாக எடுத்துக் கொள்கிறான். இதன்மூலம் அல்லாஹ்வின் கூற்றுக்கு மாறு செய்தவனாக ஆகி விடுகின்றான்:
“இல்லை! (முஹம்மதே) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுக் கொண்;டு, பின்னர் நீர்; அளிக்கின்ற தீர்ப்பு குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாத வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆக மாட்டார்கள்.” (4:65)
ஷாPஆ ஒரு சட்டத்தைக் கொண்டு வரவில்லை எனக் கூறி, ஷாPஆ கொண்டு வராத ஒரு சட்டத்தை ஒரு முஸ்லிம் பின்பற்றினால், அவன் ஷாPஆ அல்லாத ஒன்றின் தீர்ப்பை எடுத்துச் செல்பவனாகின்றான். இது நிச்சயமாகத் தடுக்கப்பட்டதாகும். ஏனென்றால், அவன் எல்லா சந்தர்ப்பங்களுக்குமான சட்டங்களை ஷாPஆ கொண்டு வரவில்லை என வாதிடக் கூடியவனாக இருக்கின்றான். எனவே, ஒரு குறிப்பிட்டச் சட்டத்தை ஷாPஆ கொண்டு வரவில்லை எனக் காரணம் காட்டி, இஸ்லாம் அல்லாத ஒன்றிலிருந்து எடுத்தாள்வதற்கு அனுமதி உண்டு என வாதிடுவது, மிகத் தவறானதும் பிழையானதுமான ஒரு வாதமாகும்.
ஆகவே, ஷாPஆ மௌனமாய் இருக்கின்ற ஒவ்வொன்றும் முபாஹ் (அனுமதிக்கப்பட்டது) எனக் கூறுவது, நினைத்துப் பார்ப்பதற்கும் முடியாத ஒன்றாகும். ஏனென்றால், ஷாPஆ சில சட்டங்கள் மீது மௌனம் சாதிக்கின்றது என்றும், அச்சட்டங்களை நிறுவித் தரவில்லை என்றும் வாதிடுவது ஷாPஆவிற்கு எதிராக அவது}று கற்பிக்கும் ஒரு செயலாகும். மேலும், இது உண்மை நிலைக்கும் மாறானதாகும். ஏனென்றால் ஷாPஆ எதைப் பற்றியும் குறிப்பிடாமல் மௌனம் சாதிக்கவில்லை.
அல்லாஹ்வின் து}தர் (ஸல்) கூறினார்கள்: “ நிச்சயமாக அல்லாஹ் சில கடமைகளை விதித்திருக்கிறான்;. எனவே அவற்றைப் புறக்கணிக்காதீர்கள்...” இது மூலங்களில் ஷாPஆவினால் குறிப்பிடப்படாதவைப் பற்றி கேட்பதன் மீது தடை விதிக்கப்பட்டிருப்பதை உணர்த்துகின்றது.
இதைப் போன்று இன்னோர் ஹதீஸ_ம் காணப்படுகின்றது: “ முஸ்லிம்களுக்கு மத்தியில் படுமோசமான பாவிகள் யாரென்றால், தங்களுக்கு தடுக்கப்பட்டதைப் பற்றி கேள்வி கேட்பவர்களாவர். அவர்கள் அது பற்றி கேட்டதன் காரணமாக, பின்னர் அது அவர்களுக்கு தடை செய்யப்பட்டது.”
இதே கருத்தில் பல ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அல்லாஹ்வின் து}தர் கூறியதாக அறிவிக்கப்படுகின்றது: “ நான் உங்களுக்கு கூறாதவற்றைப் பற்றி என்னை நீங்கள் விட்டுவிடுங்கள். ஏனென்றால் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அதைப் பற்றி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்ததன் காரணமாகவும், தங்கள் இறை து}தர்களிடம் விவாதித்து கொண்டதன் காரணமாகவும் அழிந்து போனார்கள். எனவே நான் உங்களைத் தடுத்ததை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். மேலும் நான் உங்களுக்கு கட்டளை இட்டதைக் கொண்டும் உங்களால் முடிந்தளவுக்கு எடுத்து நடவுங்கள்.”
ஹதீஸ் நு}ல்களில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது: அல்லாஹ்வின் து}தர் (ஸல்) அவர்கள் ஒருமுறை “மேலும் அல்லாஹ் ஹஜ்ஜு செய்யுமாறு மக்களுக்கு கட்டளையிடுகிறான்…” என்ற வேத வசனத்தை ஓதினார்கள். இதன்போது ஒரு மனிதர் கேட்டார். “அல்லாஹ்வின் து}தரே! இது ஒவ்வொரு வருடமுமா?” அவர்கள் பதிலளிக்கவில்லை. எனவே, அந்த மனிதர் திரும்பவும் கேட்டார். “அல்லாஹ்வின் து}தரே! இது ஒவ்வொரு வருடமுமா?” மீண்டும் அவர்கள் பதிலளிக்கவில்லை. எனவே, அந்த மனிதர் மூன்றாவது முறையாகவும் கேட்டார். “அல்லாஹ்வின் து}தரே இது ஒவ்வொரு வருடமுமா?” இதன் பிறகு அல்லாஹ்வின் து}தர் இவ்வாறு பதிலளித்தார்கள்: “எனது ஆன்மா எவனுடைய கைவசத்தில் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக! நான் இதற்கு பதிலளித்தால் அது கடமையாகிவிடும். மேலும் அது கடமையாகி விட்டால் உம்மால் அதை நிறைவேற்ற முடியாது. மேலும் உம்மால் அதனை நிறைவேற்ற முடியாவிட்டால் நீர் பாவம் செய்தவராகி விடுவீர். எனவே நான் உமக்கு கட்டளையிடாதவை பற்றி (கேட்காதீர்) என்னை விட்டுவிடுங்கள்.“
எனவே, “உம்மத்தின் தவறையும், மறதியையும் அவர்கள் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதையும் அல்லாஹ் மன்னித்து விட்டான்“ என்றும், “...மேலும் அவன் சிலவற்றைப் பற்றி மௌனம் சாதிக்கிறான். இது மறதியினாலன்று. இது உங்கள் நாயனிடத்திலிருந்து தரப்பட்ட அருளாகும். எனவே அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்...“ என்றும் அல்லாஹ்வின் து}தர் கூறியிருப்பதன் கருத்தாவது, அல்லாஹ் உங்கள் மீதான கடமைகளை மென்மையாக்கியிருக்கிறான்- எனவே நீங்கள் உங்களை மேலதிகச் சுமையைத் தாங்குபவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டிவரும் என்பதனால் அதனைப் பற்றி கேள்வி கேட்காதீர்கள் என்பதாகும்.
உதாரணமாக, ஹஜ்ஜுக் கடமையைப்பற்றி பொதுவான வார்த்தைகளில் கட்டளையிடப்படுகின்றது. யாரோ ஒருவர் அது ஒவ்வொரு ஆண்டும் செய்யப்பட வேண்டுமா எனக் கேட்கின்றார். அல்லாஹ் மக்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக, உங்கள் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, இந்த கடமையை வாழ்நாளில் ஒருமுறை செய்ய வேண்டும் எனக் குறைத்திருக்கிறான். எனவேதான் அல்லாஹ்வின் து}தர்(ஸல்) அவர்கள், இந்தக் கேள்வியை கேட்டும் கேளாமல் இருந்து, இந்தக் கடமையை ஒவ்வொரு ஆண்டும் செய்யும் விஷயத்தில் மௌனம் சாதிக்கிறார்கள். இவ்வாறாக இவ்விஷயங்களில் துருவிப் பார்க்கக் கூடாது என்றும் அவற்றைப் பற்றி கேட்கக் கூடாது என்றும் தெளிவாகிறது. இதுதான் அதற்கான கருத்து என்பதற்கான ஆதாரம், அல்லாஹ்வின் து}தர்(ஸல்) அவர்களின் வார்த்தைகளாகும். “அவன் சிலவற்றை மன்னித்து விட்டான்” எனக் கூறியதன் பின்பு முஹம்மத் (ஸல்) அவர்கள் “எனவே அதைத் துருவிப் பார்க்காதீர்கள்” என மொழிந்ததாகும்.
எனவே, எவற்றின் தடை பற்றி வேத வசனங்கள் இறக்கி அருளப்படவில்லையோ, அவற்றைப் பற்றி கேள்வி கேட்பதினின்றும் முஸ்லிம்களைத் தடுப்பதே இப்போதைய பிரச்சினையாகும். இப்போதைய பிரச்சினை, அல்லாஹ் சில ஷாPஆச் சட்டங்களைக் கூறவில்லை என்பதன்று. ஏனென்றால் ஹதீஸின் வசனங்கள் அல்லாஹ்வின் கருணையைப் பற்றியும், சில விஷயங்களில் அவனது மன்னிப்பைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. வேறொரு அறிவிப்பில், “...மேலும் அவன் எவற்றைப் பற்றி மௌனம் சாதிக்கிறானோ, அவை உங்களுக்கொரு மன்னிப்பாகும்...” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ{ம் கூட பிரச்சினையானது, அல்லாஹ் உங்களுக்கு மென்மையாக்கி, மேலும் உங்களுக்கு தடுக்காததைப் பற்றி துருவிப் பார்ப்பதும் கேள்வி கேட்பதும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதோடு தொடர்புடையதுதான் என்பதை உணர்த்துகின்றது.
எனவே ஏதாவது ஒன்று தடை செய்யப்படவில்லை என்றால், அஃது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த ஒரு மன்னிப்பாகும். அதாவது, அதன் தடைபற்றி அல்லாஹ் மௌனம் சாதிப்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த மன்னிப்பைச் சுட்டிக் காட்டுகிறது. ஆதலினால் அதைப் பற்றி கேள்வி கேட்காதீர்கள். இதனை அல்லாஹ்வின் திருவசனம் ஒன்று இவ்வாறு பிரதிபலிக்கின்றது: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விசயங்கள் உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால், அவை உங்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தும். அவற்றைப் பற்றி நீங்கள் வினவாதீர்கள். ஆயினும் குர்ஆன் இறக்கி அருளப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால், அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாக கூறப்பட்டு விடும். நீங்கள் (இதுவரை) கேட்டவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும், சகிப்புத்தன்மை உடையவனாகவும் இருக்கின்றான்.“ (5:101)
இந்த வகையான அபிப்பிராயத்தின் விளைவாகவும், அல்லாஹ் வழங்கும் தீர்வுகளை கண்டறிவதற்கு மூலங்களைத் தேடிப் பார்ப்பதற்கு முன்வராத சோம்பேறித்தனமான மனப்பான்மையின் காரணமாகவும், சில முஸ்லிம்களை “விசேஷமான” ஒரு ஃபிக்ஹைப் பின்பற்றுவதற்கு அழைப்பு விடுக்க வைத்திருக்கிறது. அதனைத்தான் அவர்கள் “சிறுபான்மையினருக்கான சட்டவியல்” (பிக்ஹ_ல் அகல்லியாத்) எனப் பெயரிட்டு அழைக்கின்றனர்.
2. காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம் இஸ்லாம் மாற்றமடைகின்றது என்ற வாதம்
“காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம் இஸ்லாம் மாற்றமடைகின்றது” (கலாநிதி தாஹிர் ஜாபிர் அல் அல்வானி – ‘முகத்திமா ஃபி ஃபிக்ஹ் அல் அகல்லியாத்’ சிறுபான்மையினருக்கான பிக்ஹ் பற்றிய முன்னுரை) எனக்கூறி அப்படிப்பட்ட ஒரு விதிமுறை இருப்பதாக சிலர் வாதிடுகின்றனர். இந்த சிந்தனையை ஆதரிப்பவர்கள், இன்று நாம் நவீன யுகத்தில் மேற்குலகில் வாழ்ந்து வருவதன் காரணமாக, அஹ்காம் (சட்டங்)களைக் கொண்டு வருவதற்கு ஒரு புதிய முறைமை வகுக்கப்படவேண்டும் எனக் கூறுகின்றனர். முந்தைய உலமாக்கள் சிலர் இந்த விதிமுறையை பின்பற்றினார்கள்தாம். விஷேசமாக ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்தவர்களினால் இது பின்பற்றப்பட்டது. ஆனால் அவர்களுடைய அபிப்பிராயங்களுக்கு பின்னால் இருந்த கருத்தோட்டத்தை ஒருவர் புரிந்து கொள்வதற்கான அவசியம் இருக்கின்றது. புதிய முறைமையை கண்டு பிடிப்பதற்கு குரல் கொடுப்பவர்களின் அபிப்பிராயங்களுக்கு எந்த வகையிலும் அது ஒத்ததொன்றன்று. ஹனஃபி சட்டவியலாளர் இப்னு ஆபிதீனின் கருத்தின்படி, “மாற்றமடையும் சட்டங்கள்” என்பதன் அர்த்தமாவது, ‘காலத்திற்கும், நேரத்திற்கும் இணங்க மாற்றமடைவது ஷாPஆவின் சட்டங்களல்ல. மாறாக சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் (உர்ஃப்) என்பவற்றை அடிப்படையாகக்கொண்ட சட்டங்கள் அல்லது நடைமுறையிலிருக்கும் சம்பிரதாயங்களின் ஒளியில் பெரும்பாலும் வகுக்கப்பட்ட சட்டத்துறை அபிப்பிராயங்களை அடிப்படையாகக்கொண்ட ஃபிக்ஹ் சட்டங்கள்தாம் மாற்றமடைகின்றன. காலப்போக்கில் அவை எந்தச் சம்பிரதாயங்கள் மீது நிறுவப்பட்டுள்ளனவோ அந்தச் சம்பிரதாயங்கள் மாற்றமடைகின்ற போது, இந்த சட்டங்களை விட்டு விலகிச் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றது. ஆனால் அல்குர்ஆன், ஹதீஸினுடைய மூலங்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும் சட்டங்கள் ஒருபொழுதும் மாற்றமடைவதில்லை. உசூலுல் ஃபிக்ஹ் துறையைச் சேர்ந்த அறிஞர்கள், அல்குர்ஆன், ஸ{ன்னாஹ்வினுடைய மூலத்திற்கு முரணான ஒரு நடைமுறையோ அல்லது சம்பிரதாயமோ ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு சம்பிரதாயமாக கருதப்படும் (உர்ஃப் அல் ஃபாஸித்) என நிபந்தனை விதிக்கின்றனர்.’ (முஹம்மத் அமீன் இப்னு ஆபிதீன் - ‘நஸ்ர் அல் உர்ஃப் பைன பஹ்தல் அஹ்காம் அலா அல் உர்ஃப்’)
No comments:
Post a Comment