அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنْكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنْكَبُوتِ لَوْ كَانُوا يَعْلَمُونَஅல்லாஹ் அல்லாதவர்களை (தங்களுக்கு) பாதுகவலர்களாக எடுத்துக்கொண்டவர்களுக்கு உதாரணம் சிலந்திப்பூச்சியின் உதாரணத்தைப் போன்றதாகும், அது (தனக்காக) வீடு ஒன்றைக் கட்டடிக்கொண்டது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடாகும் இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே. ( 29 : 41 )
அல்லாஹ்(சுபு) இந்த வசனத்தில் சிலந்திப்பூச்சியின் வீட்டைப்பற்றிக் கூறும்போது அது வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமான வீடு என்று கூறுகிறான், அதுபோலவே வெளித்தோற்றத்தில் முதாலாளித்துவக்கொள்கை (capitalistic system) மிகவும் வளர்ச்சியடைந்த நவீனமான கொள்கை போன்று தோன்றினாலும் அல்லாஹ்(சுபு) கூறிக்காட்டுவதுபோல அது கொள்கைகளிலெல்லாம் மிகவும் பலவீனமான பிற்போக்குத்தனமான கொள்கையாகும்,
கடந்தசில நாட்களாக மேற்கத்திய நாடுகளிலுள்ள பழம்பெரும் வங்கிகளில் முன்னோடியான வங்கிகள் பலவும் நொறுங்கி வீழ்ந்து கொண்டிருக்கின்றன, முதன்முதலில் அமெரிக்காவின் AIG வங்கியின் திவால் (bankrupt) செய்தித்தாள்களில் அறிவிக்கப்பட்டது, அதன்பின்னர் அமெரிக்க அரசு அந்த வங்கியை விலைகொடுத்து வாங்கியது, பின்னர் லெஹ்மேன் பிரதர்ஸ் (Lehman Brothers) என்ற அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியும் அதன்பின்னர் மெரில் லைன்ச் (Meryl Lynch) என்ற வங்கியும் *பென்னீமி (Fenni Mae) மற்றும் *பிரடீமாக் (Freddie Mac) ஆகிய நிதிநிறுவனங்களும் தங்களது திவாலை (bankrupt) அறிவித்தன, இந்த வங்கிகளை விலைகொடுத்து வாங்குவதற்கோ அல்லது அவற்றில் முதலீடு செய்வதற்கோ எவரும் முன்வராத காரணத்தால் அவை நொறுங்கி வீழ்ந்துவிட்டன, இதன்விளைவாக உலகபொருளாதாரத்தில் ஒருவிதமான தேக்கநிலை ஏற்பட்டு விலைவாசிகள் உயர்ந்து உச்சத்தை அடைந்ததோடு பலர் தங்களது வேலையையும் இழந்துவிட்டனர்,
மேற்கத்திய நாடுகளிலிருந்து சிலஆயிரம் மைல் தூரத்திற்கு அப்பாலுள்ள இந்தியாவில் நாம் வசித்து வந்தபோதிலும் உலகளாவிய இந்த நிகழ்வின் தீயவிளைவிலிருந்து பாதுகாப்பு பெற்றவர்களாக நாம் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும், நடப்பு செய்தித்தாள்களில் மும்பை பங்குச்சந்தையும் தேசிய பங்குச்சந்தையும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன என்ற செய்தியை நாம் காண்கிறோம், கடந்த ஒரு வாரகாலத்தில் மும்பை பங்குச்சந்தை (BSE- Bombay stock exchange) 16% வீழ்ச்சியடைந்து கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகமோசமான பின்னடைவை சந்தித்துள்ளது, முன்பு ஒருபோதும் காணாத வகையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது ( ரூ 49,50), அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கின்ற வங்கிகளின் வீழ்ச்சியும் நிதிநிறுவனங்களின் (financial institutions) திவாலாவும் உலகமுழுவதிலும் கணிசமான அளவுக்கு பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது, இதன் விளைவுகள் சமீபத்தில் மும்பை பங்குச்சந்தையிலும் தேசிய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது,
இந்தோனீஸியாவின் பங்குச்சந்தை கடந்த சிலநாட்களாக திறக்கப்படவில்லை, சென்ற வாரத்தில் அது 20% விழ்ச்சியையும் கடந்த ஒருவருடத்தில் அது மொத்தமாக 47% வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது, வளைகுடா நாடான சவுதிஅரபியாவின் பங்குச்சந்தை 43% வீழ்ச்சியை சந்தித்துள்ளது,
இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது õ இந்த வீழ்ச்சிக்கு பின்னனியில் இருக்கும் காரணங்கள் என்ன? இந்த விவகாரத்தை முறையாக ஆய்வுசெய்தால் கிரடிட் கிரன்ச் credit crunch) என்று கூறப்படும் ஒரேயொரு விஷயம்தான் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம், இந்த விவகாரத்தைப் பற்றி நாம் விளக்கமாக அறிந்துகொள்ள வேண்டும் ஏனெனில் உலக பொருளாதாரம் தேக்கநிலைக்குச் சென்றிருப்பதற்கும் நிதிச்சந்தையில்(financial market) நெருக்கடிநிலை ஏற்பட்டிருப்பதற்கும் கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட உலகின் முன்னேற்றம் இப்போது சருக்குதலை அடைந்திருப்பதற்கும் பலநபர்கள் வேலையிழப்பை சந்தித்ததற்கும் மேற்குலகின் பொருளாதாரச் செழிப்பு வரண்டுபோய் உலக பொருளாதாரத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பணம் தொலைந்து போனதற்கும் கிரடிட் கிரன்ச்(credit crunch) என்று சொல்லப்படும் இந்த விவகாரம்தான் பின்னனி காரணமாக இருந்திருக்கிறது,
கிரடிட் கிரன்ச் (credit crunch) என்றால் என்ன? அதனால் ஏற்பட்ட விளைவகள் என்ன?
இந்த விவகாரம் எளிதாக புரிந்துகொள்ளக் கூடியதுதான், இன்றைய காலகட்டத்தில் முதலாளித்துவ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தங்களுக்கு சொந்தமாக வீடு வாங்கவேண்டும் என்று எண்ணும்போது தங்கள் கையில் அதற்குரிய பணம் இல்லாதநிலையில் கடனுக்கு பணம் பெற்று வீடு வாங்,குகிறார்க்ள், அவ்வாறு கடன் வாங்கும்போது ஒரு வங்கியோ அல்லது ஒரு நிதிநிறுவனமோ வட்டி அடிப்படையில் அதற்கு நிநியுதவி செய்கிறது, கடனைப்பெற்றவர் அசல்தொகையையும் வட்டித்தொகையையும் பின்னர் அவர் பல தவணைகளில் திருப்பிச் செலுத்தியாகவேண்டும், இதுதான் நிதியுதவி அளிக்கும் வங்கிகளின் நிபந்தனையாகும், தங்களது கையில் பணமில்லாத நிலையில் வீடு வாங்குபவர்களுக்கு இது எளிமையான வழியாகத் தோன்றுகிறது அதேவேளையில் நிதியுதவி செய்வதன் மூலம் வட்டித்தொகை கிடைப்பதால் வங்கிகள் இதை லாபம் ஈட்டும் நடவடிக்கையாக கருதுகின்றன, இந்த முறையில் வீடு வாங்குவதற்கு அடமானமுறை (mortgaging) என்று கூறப்படுகிறது,
அடமானமுறையில் வீடு வாங்குகிறவர்கள் நிதியுதவி அளித்த வங்கிகளுக்கு அசல் மற்றும் வட்டித்தொகையை திருப்பிச் செலுத்திய பின்புதான் அதை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளமுடியும், அவ்வாறு கடனை திருப்பிச் செலுத்தாதவிட்டால் வீடு பறிமுதல் செய்யப்பட்டு வேறொரு நபருக்கு விற்பனை செய்யப்படும்,
1940 ஆம் ஆண்டு கணக்கின்படி அமெரிக்க மக்களில் 40 சதவீதத்தினர் சொந்தமாக வீடு வைத்திருந்தார்கள், 1960 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 60 வதவீதத்தினர் சொந்தமாக வீடு வைத்திருந்தார்கள், தற்போதை நிலவரப்படி கிட்டத்தட்ட 70 சதவீதத்தினர் தங்களுக்கு சொந்தமாக வீடு வைத்திருக்கிறார்ளகள், வங்கியில் கடன்பெற்று வீடு வாங்கிய பின்பு அந்தக்கடனை அடைக்காத நிலையில் குடியிருப்பவர்களும் இதில் அடங்குவார்கள், அதாவது இன்றையநிலையில் வாடகை செலுத்தாமல் குடியிருப்பவர்கள் 70 சதவீதத்தினர் ஆவார்கள்,
தங்கள் கையில் பணமில்லாத காரணத்தாலும் வங்கியில் கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்தவதற்கு போதிய வருமானம் இல்லை என்பதாலும் சுமார் 25 சதவீதத்திலிருந்து 30 சதவீத மக்கள் வீடு இல்லாதநிலையில் அமெரிக்காவில் இருந்துவருகிறார்கள், வீடு வாங்குவதற்கு வழங்கப்படும் நிதியுதவி (housing loan) தொடர்பான சட்டங்களிலுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கும் கொள்கையை 1980 ஆம் ஆண்டு அமெரிக்கஅரசு கொண்டுவந்தது, இதன்காரணமாக அடமானமுறையில் கடனுக்கு வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது, அடமானமுறையில் நிதியுதவி வழங்கும் நிதிநிறுவனங்களின் நடவடிக்கைகள் அதிகரித்து உச்சகட்டமான லாபத்தை அவைகள் தங்கள் கணக்கு பதிவேடுகளில் பதியவைத்துக் கொண்டன,
இந்தவகை அடமானத்திற்கு சப்பிரைம் மார்ட்கேஜ் (subprime mortgage) என்று கூறுகிறார்கள், சாதாரணமான சூழலில் கடன் பெறமுடியாதவர்கள் கூட இந்தமுறையில் கடன் பெற்றுவிடலாம், அதேவேளையில் இந்தமுறையில் கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வட்டித்தொகை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது,
அமெரிக்காவில் வீடு இல்லாமல் இருக்கும் 25 சதவீத மக்களுக்காக அடமானமுறையில் வீடு வாங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது, 2007 ஆம் ஆண்டு துவக்கத்தில் அடமானமுறை கடன் திட்டத்தில் வங்கிகள் முதலீடு செய்த மொத்த தொகை சுமார் 1,3 டிரில்லியன் டாலராகும் அதாவது ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி அமெரிக்க டாலர் பணத்தை இந்த திட்டத்தில் நிதிநிறுவனங்களும் வங்கிகளும் வட்டி ஈட்டும் நோக்கத்தோடு முதலீடு செய்தன,
அமெரிக்க மக்கள் சொந்தமாக வீடு வாங்கும் ஆசையில் கண்மூடித்தனமாக செயல்பட்டதால் சொந்தமாக வீடு வாங்குகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது, கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உச்சகட்டத்தை எட்டியதால் சமாளிக்கமுடியாத அளவுக்கு நிதிநெருக்கடியை சந்தித்த அமெரிக்காவின் மிகப்பெரிய நிதிநிறுவனமான நியூசெஞ்சுரி இன்க்(New Century Inc) 2007 ஆம் ஆண்டு தனது திவாலாவை அறிவித்தது, இதுதான் அமெரிக்காவில் முதன்முதலில் ஏற்பட்ட வீழ்ச்சியின் அறிகுறியாகும்,
தங்கள் பொருளாதாரக் கொள்கையின் மீது வைத்த அதீதமான நம்பிக்கையின் காரணமாக கடன் பெற்றவாகளில் பெரும்பான்மையானவர்கள் கடனை திருப்பிச் செலுத்தவில்லையென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டார்கள், அதிகமாக பணம் ஈட்டவேண்டும் என்ற பேராசையில் அவர்கள் தங்களைத் தாங்களே அழிவுக்கு இட்டுச்சென்றதோடு உலக பொருளாதாரத்தையும் அழிவுக்கு இட்டுச்சென்று விட்டார்கள் õ
இத்தகையை மனிதர்களைப்பற்றி அல்லாஹ்(சுபு) இவ்வாறு கூறுகின்றான்.
أَلْهَاكُمُ التَّكَاثُرُஒருவரைவிட ஒருவர் அதிகமாக பொருளைப் பெருக்கவேண்டும் என்ற பேராசை உங்களை ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கிவிட்டது,,,,,,,,, (102 : 1 )
அமெரிக்கா நிதிச்சந்தையின் மாபெரும் ஜாம்பவான்களான *பிரடீமேக் (Freddie Mac) மற்றும் *பென்னிமி (Fenni Mae) ஆகிய நிதிநிறுவனங்கள் தாங்கள் திவாலான செய்தியை அறிவித்து விட்டன மேலும் தங்கள் நிதிநிறுவன நடவடிக்கைகளை அனைத்தையும் மூடிவிட்டன, பின்னர் அவைகள் கையில் அகப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் பொருளாதாரநிலை பற்றியோ அல்லது கடனை திருப்பிச்செலுத்தும் திறன் மற்றும் நாணயம் ஆகியவை பற்றியோ ஆய்வுசெய்யாமல் தங்களிடமுள்ள வீடுகளை கடனுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டன, ஆரம்பத்தில் 7% விலையை உயர்த்தி விற்பனை செய்தவர்கள் பிறகு 9,5% விலையை உயர்த்தி விற்பனை செய்தார்கள், வீட்டை வாங்களிவர்கள் திருப்பிச் செலுத்தவேண்டிய மாதத்தவணை இரட்டிப்பாக ஆனதால் அவர்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை, முதலாளித்துவ ரியல் எஸ்டேட் சட்டத்தின்படி சொத்தை அடமானத்தில் வாங்கியவர் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்தாதவரை சொத்தை விற்கமுடியாது, இந்நிலையில் அவர்கள் திருப்பிச் செலுத்தவேண்டிய தொகை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்து விட்டன, இந்த சட்டத்தின் அடிப்படையில் கடன்பெற்றவர்கள் தங்களிடம் மொத்தபணம் இருந்தாலும் ஒரேதவணையில் திருப்பிச் செலுத்த முடியாது, கடன் பெற்றபோது ஏற்றுக்கொண்ட தவணைக் காலத்திற்குரிய வட்டி முழுவதையும் திருப்பிக் கொடுக்காமல் கடனை அடைக்கமுடியாது அதாவது கடன் பெற்ற தொகையைப்போல இருமடங்கு தொகையை அவர் செலுத்தவேண்டும் , உதாரணமாக பத்துவருட தவணைக்கு கடன் வாங்கியவர் ஒரேமாதத்தில் மொத்த பணத்தையும் திருப்பிச் செலுத்த தயாராக இருந்தாலும் பத்துவருட காலத்திற்குரிய வட்டியை அவர் செலுத்தியே ஆகவேண்டும், இவ்வாறாக ஒவ்வொரு ஆயிரம் டாலர் கடனுக்கும் வட்டித்தொகை நீங்கலாக அவர் 350 டாலர் அதிகமாக செலுத்தவேண்டும், எனவே கடன் பெற்றவர்களால் கடன்தொகையை திருப்பிச் செலுத்த முடியவில்லை, இதனடிப்படையில் பல்லாயிரக் கணக்கானவர்கள் தவணை தவறிய கடன்காரர்களாக ஆகிவிட்டார்கள், ஒரு புள்ளிவிபரத்தின்படி இத்தகையவர்களின் எண்ணிக்கை சுமார் முப்பது லட்சமாகும்,
தவணை தவறிய கடன்காரர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த உதவிபுரியும் நோக்கத்தோடு புஷ் நிர்வாகம் ஐந்துவருட வட்டித்தொகை வசூலிப்பதை நிறுத்திவைத்தது, இந்நிலையில் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு மறுவிற்பனைக்கு தயாராக இருந்த வீடுகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் கொண்டே சென்றது ஆனால் வாங்குவதற்கு எவரும் முன்வரவில்லை, காலதாமதம் ஏற்பட்டதால் வீடுகளின் விலைமதிப்பு உயர்ந்துகொண்டே சென்றது இருந்தபோதிலும் அவற்றை வாங்குவதற்கு எவரும் தயாராக இல்லை, மேற்கூறிய அமெரிக்காவின் இரண்டு நிதிநிறுவனமும் இத்தகைய நெருக்கடியை சந்தித்தது, சமீபத்தில் அமெரிக்காவின் மற்றொரு மிகப்பெரிய வங்கியான லெஹ்மேன் பிரதர்ஸ் (Lehman Brothers) என்ற நிறுவனமும் இதுபோன்ற நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்று செய்திகள் கூறுகின்றன,
நிதிநிறுவனங்கள் கண்மூடித்தனமாக கடன்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது ஏன்?
கடன்வாங்கியவர்கள் ஒருவேளை கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் என்ன விளைவு ஏற்படும் என்று ஏன் அவர்கள் அஞ்சவில்லை? முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையில் அவர்கள் வைத்திருந்த குருட்டுத்தனமான நம்பிக்கை மற்றும் மேற்கத்திய முதலாளித்துவவாதிகளின் இயல்பான அலுச்சாட்டியம் ஆகியவை உண்மையை உணர்வதிலிருந்து அவர்களை தடுத்துவிட்டன, அத்துடன் அதிகமாக பணம் ஈட்டவேண்டும் என்ற பேராசையும் இதற்கு முக்கிய காரணமாகும், முறையான அடித்தளத்தை அமைக்காமல் கட்டிடம் கட்டுவதைப்போல ஒன்றின் மீது ஒன்றாக செங்கற்களை அடுக்கிக்கொண்டே போனார்கள் இறுதியில் அந்த கட்டிடம் நிலைகுலைந்து அவர்கள் மீதே சரிந்து வீழ்ந்துவிட்டது õ அல்லாஹ்(சுபு) இத்தகைய பேராசை பிடித்த மனிதர்களைப்பற்றி பின்வருமாறு கூறுகிறான்.
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّவட்டியை உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் எழுவதைப் போல் (மறுமையில்) எழுவார்கள், (2 : 275 )
ஷைத்தான் தீண்டியதின் காரணத்தால் பைத்தியம் பிடித்தவர்களைப் போல் வட்டியை உண்பவர்கள் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்(சுபு) கூறுகிறான், இதுபோன்ற நிலையில்தான் மேற்கத்திய முதலாளித்துவ வாதிகள் இருக்கிறார்கள். தாங்கள் செய்வது இன்னவென்று அறியாத பைத்தியக்காரர்களைப்போல் அவர்கள் செயல்படுகிறார்கள், தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு தீர்வு ஒன்றை அவர்கள் தேடிக் கொண்டிருந்தாலும் மென்மேலும் சங்கடத்தில் சிக்கிக்கொண்ட வண்ணம் விழிபிதுங்கி நிற்கிறார்கள்,
பெரும்நெருப்பு ஒன்று கொழுந்துவிட்டு எரியும்போது அதற்கு காரணமாக இருக்கும் எரிவாயுவை மூடுவதற்கு முயற்சிக்காமல் தண்ணீரை அள்ளித்தெளித்துக் கொண்டிருப்பவர்களைப் போல் மேற்குலகினர் செயல் படுகிறார்கள், அமெரிக்க மக்களில் சுமார் 20 சதவீதத்தினர் தங்கள் சொத்துக்களின் மதிப்பைவிட அதிகமான கடனைப் பெற்றவர்களாக இருந்துவருகிறார்கள், அமெரிக்க குடிமக்கள் மீது 6 டிரில்லியன் டாலர் கடன்சுமை இருந்து கொண்டிருக்கிறது ஆனால் 1,3 டிரில்லியன் டாலர் மட்டுமே அமெரிக்க பொருளாதாரத்தின் சுழற்சியில் இருக்கிறது,
ஒருநிறுவனம் நிதிச்சந்தையில் பங்குகொள்ளும்போது அதாவது ஒருநிறுவனம் பொதுத்துறை நிறுவனம் (PLC- public limited company) என்று அழைக்கப்படும்போது அது பங்குப்பத்திரங்களை விற்பனை செய்வதில் ஈடுபடுகிறது, மிகப்பெரிய அளவில் தங்கள் வருமானத்தையும் சொத்துக்களையும் பெருக்கிக் கொள்வதற்குத்தான் பங்குப்பத்திரங்களை அந்த நிறுவனம் வினியோகம் செய்கிறது, உதாரணமாக ஒருநிறுவனம் 10 மில்லியன் டாலர் சொத்துக்களை மட்டும் கொண்டதாக இருக்கும் நிலையில் பங்குச்சந்தையில் ஈடுபட்டு பங்குகளை விற்பனை செய்தால் ஓரிரவுக்குள் அதன் சொத்து மதிப்பு 50 மில்லியன் டாலராக ஆகிவிடுகிறது ஆனால் அந்த நிறுவனத்தின் உட்கட்டமைப்பின் எதார்த்தநிலையில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடுவதில்லை,
பங்குச்சந்தைகளில் ஏற்றஇறக்கம் காணப்படுவதால் லாபம் ஈட்டும் நோக்கத்தோடு மக்கள் பங்குகளை வாங்குவதிலும் விற்பதிலும் ஈடுபடுகிறார்கள், ஆகவே பங்குவிலையில் ஏற்றம் வரும் என்று எண்ணும்போது பங்குகளை வாங்குவதிலும் பங்குவிலையில் இறக்கம் வரும் என்று எண்ணும்போது பங்குகளை விற்பதிலும் முனைப்பு காட்டுகிறார்கள், தங்களிடம் இயல்பாக உள்ள பேராசையின் காரணமாகவும் நிறுவனங்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் இத்தகைய நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடுகிறார்கள், ஆகவே கேளிக்கை அரங்குகளில் சூதாட்டத்தில் ஈடுபடுகிறவர்களின் செயல்களுக்கு ஒப்பாக இது இருக்கிறது, பெரிய வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் விலைச்சரிவை சந்தித்தபோது அந்த நிறுவனங்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை காணாமல் போய்விட்டது எனவே அதன் பங்குகளை விற்பனை செய்துவிடுவதற்கு மக்கள் அலைமோதினார்கள், எவ்வளவுக்கு பங்குகளை விற்பனை செய்வதில் துரிதம் காட்டினார்களோ அவ்வளவுக்கு பங்குகளின் விலையில் சரிவு ஏற்பட்டது. இறுதியில் மிப்பெரிய நிறுவனங்கள் என்று கருதப்பட்ட அந்த வங்கிகள் நிலமணிநேரத்தில் வீழ்ந்து நொருங்கிப் போய்விட்டன, சிலநிறுவனங்களின் பங்குகள் 92% விலை வீழ்ச்சியை சந்தித்தன அதாவது 100 டாலருக்கு வாங்கிய பங்குகளை மக்கள் 8 டாலருக்குத்தான் விற்றார்கள் õ
இதற்கு முன்பு முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்பதை ஆய்வுசெய்வதன் மூலம் இன்றைய நெருக்கடிக்கு தீர்வு கண்டுவிடலாம் என்று மேற்கத்திய முதலாளித்துவவதிகள் கருதுகிறார்கள், முதலாளித்துவக்கொள்கை பிற்போக்கானது என்பதையும் தவறானது என்பதையும் ஒவ்வொரு முறையும் காலம் நிரூபித்துக் காட்டிவிட்டது, கம்யூனிஸம் அழிவை சந்தித்த அதேவிதத்தில் முதலாளித்துவமும் அழிவை சந்திக்க இருக்கிறது என்பதை மேற்கத்தியர்கள் அறிந்தும் தங்கள் அலுச்சாட்டியத்தில் நிலைத்து நின்றுகொண்டிருக்கிறார்கள், தாங்கள்தான் மிக்கபலம் கொண்டமக்கள் என்று ஆது சமுதாயத்தவர்கள் அலுசாட்டியத்திலும் அகம்பாவத்திலும் இருந்தது போல இவர்களும் தாங்கள்தான் பலமான மக்கள் என்று இறுமாப்பில் இருக்கிறார்கள்,
அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்.
فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآَيَاتِنَا يَجْحَدُونَமேலும் ஆது கூட்டத்தார் பூமியில் ஞாயமின்றி பெருமையடித்துக்கொண்டு எங்களைவிட வலிமையில் மிகுந்தவர்கள் யார்? என்று கூறினார்கள், அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களைவிட வலிமை மிக்கவன் என்பதை அவர்கள் விளங்கிக் கொண்டிருக்க வேண்டாமா? மேலும் நமது அத்தாட்சிகளை மறுத்தவர்களாகவே அவர்கள் இருந்தார்கள், (41 : 15 )
தங்கள் பொருளாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் முதலாளித்துவவாதிகள் தங்களுக்குத் தாங்களே முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், எனினும் அவர்கள் தங்கள் கொள்கையில் இன்னும் பிடிவாதமாக ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அதை பலமானது என்று கருதுவதோடு அதை புனிதப்படுத்தவும் செய்கிறார்கள் மேலும் அதை உலகமுழுவதிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அழைப்பு விடுக்கிறார்கள், அமெரிக்க பொருளாதாரத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக கணிசமான தொகையை அமெரிக்க காங்கிரஸ் அனுமதித்துள்ளது, இந்த விவகாரத்திற்காக 700 பில்லியன் டாலரை அமெரிக்க அரசு ஒதுக்கியிருக்கிறது, சிலதுளி நீரைத் தெளிப்பதின் மூலம் பெரும்தீயை அனைத்துவிடலாம் என்று முதாளித்துவவாதிகள் எண்ணுகிறார்கள், முதலாளித்துவ பொருளாதாரம் உலகெங்கிலும் ஏற்படுத்தியிருக்கும் இழப்பை ஒப்பிடும்போது 700 பில்லியன் டாலர் என்பது ஒன்றுமே கிடையாது,
பங்குச்சந்தை விவகாரத்தோடு விஷயம் முடிந்துவிடவில்லை
உங்கள் கைவசம் உள்ள பணத்தின் உண்மையான மதிப்பு என்னவென்று எப்போதேனும் நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? அதன் மதிப்பு காகிதமாகவும் அதில் அச்சடிக்கப்பட்ட எழுத்துக்களாகவும் இருக்கிறதேயன்றி வேறில்லை, அதன் உண்மையான மதிப்பு உங்கள் பொருளாதாரத்தில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான், மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதற்கு சமமான உத்திரவாதம் கொடுப்பதற்கு அரசிடம் தங்கம் கையிருப்பில் இல்லை, 1970 ஆம் ஆண்டோடு அனைத்து நாடுகளும் தங்கத்தை இருப்பில் வைத்துக்கொண்டு நாணயம் அச்சிடும் வழக்கத்தை கைவிட்டுவிட்டன,
ஆகவே இப்போதுள்ள அரசுகள் தங்கள் கடன்களுக்காக காகிதநாணயத்தை அச்சிட்டு வெளியிடுகின்றன ஆனால் அதற்கு ஈடான தங்கத்தை கையிருப்பில் வைத்துக்கொள்வதில்லை, இதே முறையைத்தான் அமெரிக்காவும் மற்றுமுள்ள இதர உலகநாடுகளும் கடைபிடிக்கின்றன, இன்றைக்குள்ள பொருளாதார சூழலில் காகிதநாணயத்தின் புழக்கம் அதிகமாக இருப்பதால் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன அதேவேளையில் நாணயத்தின் மதிப்பு குறைந்து கொண்டே செல்கின்றன,
இதை நாணயத்தின் கொள்முதல் திறனில் ஏற்படும் சரிவு என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள், எவ்வாறு இருப்பினும் மக்களின் கைவசத்தில் இருக்கும் பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டேயிருக்கிறது, தங்களின் வங்கி சேமிப்பில் இருக்கும் பணத்திற்கு வட்டி கிடைக்கிறது என்று மக்கள் திருப்தி அடைந்து கொள்கிறார்கள், ஆகவே உங்களிடமுள்ள 100 ரூபாயின் மதிப்பு அடுத்தவருடம் 88 ரூபாயாக குறைந்துவிடும் ஆனால் வட்டியாக வங்கிகள் கொடுக்கும் 14 ரூபாயை சேர்த்து உங்களிடம் 114 ரூபாய் இருப்பதாக நம்பிக்கொண்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்,
இதைத்தான் பணவீக்கம் என்று கூறுகிறோம், அரசு உத்திரவாதம் அளித்துள்ள மதிப்பிலிருந்து நாணயத்தின் உணமையான மதிப்பு வீழ்ச்சியடையும் போது பணவீக்கம் ஏற்படுகிறது, ஆனால் பணவீக்கத்தை ஈடுசெய்ய சேமிப்புகளுக்கு வங்கிகள் வட்டி கொடுக்கின்றன, பணவீக்கம் ஏற்படும்போது உண்மையான முறையில் பணம் ஈட்டும் ஏழைமக்கள் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது, இதனால் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகும்நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது,
பணம் ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் இந்தப்போட்டிப் பந்தயத்தில் முதலாளித்துவவாதிகள் எந்தவிதமான ஒழுக்கமுறைகளையும் பின்பற்றாத காரணத்தால் பொதுமக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர், உள்ளபடியே முதலாளித்துவவாதிகள் ஷைத்தான்களின் தோழர்களாக ஆகிவிட்டார்கள் மேலும் அவர்கள் ஷைத்தானின் கூட்டத்தில் உள்ளவர்காகவும் இருக்கிறார்கள்,
அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்.
اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَأَنْسَاهُمْ ذِكْرَ اللَّهِ أُولَئِكَ حِزْبُ الشَّيْطَانِ أَلَا إِنَّ حِزْبَ الشَّيْطَانِ هُمُ الْخَاسِرُونَஷைத்தான் அவர்களை மிகைத்து அல்லாஹவை நினைவுகூர்வதை விட்டும் தடுத்துவிட்டான் அவர்கள்தான் ஷைத்தானின் கூட்டத்தினர், அறிந்துகொள்ளுங்கள்õ நிச்சயமாக ஷைத்தானின் கூட்டத்தினர்தான் நஷ்டவாளிகள், (58 : 19 )
ஆனால் ஆது சமுதாயத்தவர்கள் வரம்புமீறி இறுமாப்பிலும் பெருமையிலும் நிலைத்திருந்ததால் அழிவை சந்தித்ததுபோல் தாங்களும் ஒருநாள் அழிவை சந்தித்தே ஆகவேண்டும் என்பதை மறந்தவர்களாக முதலாளித்துவவாதிகள் அச்சமற்று இருக்கிறார்கள், ஆது சமுதாயத்தவர்கள் போலவும் ஸமூது சமுதாயத்தவர்கள் போலவும் பெருமிதத்தில் இருக்கிறார்கள்,
அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்.
وَتِلْكَ عَادٌ جَحَدُوا بِآَيَاتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهُ وَاتَّبَعُوا أَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٍதங்கள் இரட்சகனின் அத்தாட்சிகளை நிராகரித்து அவனுடைய தூதருக்கு மாறுசெய்த ஆது கூட்டத்தினர் இவர்கள்தான் õ வரம்புமீறிய வம்புக்காரர்கள் ஒவ்வொருவரின் கட்டளையையும் அவர்கள் பின்பற்றினார்கள், (11 : 59 )
முதலாளித்துவவாதிகளைப் போலவே ஆது கூட்டத்தினர் அலுச்சாட்டியம் செய்தார்கள் மேலும் அவர்கள் தாங்கள்தான் பூமியில் பலமான மக்கள் என்று எண்ணிக்கொண்டு கர்வம் கொண்டவர்களாக அச்சமற்று இருந்தார்கள்,
இன்றைக்கு மேற்கத்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு யூகத்தின் அடித்தளத்தில் கட்டமைக்கப் பட்டிருக்கும் அவர்களின் பொருளாதாரமே பிரதான காரணமாக இருக்கிறது, தங்களுடைய அறிவையும் திறமையையும் பயன்படுத்தி அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள், பாளைவனத்தில் தோன்றும் கானல்நீரைப் போன்றது அவர்களின் இந்த நம்பிக்கை, தொலை தூரத்திலிருந்து பார்க்கும்போது அது தண்ணீரைப் போன்று காட்சியளிக்கும் ஆனால் அருகில் சென்று பார்க்,கும்போது வெறுமையைத் தவிர வேறொன்றையும் காணமுடியாது, முதலாளித்துவவாதிகளின் நிலை இதற்கு ஒப்பாகவே இருக்கிறது, இவ்வளவு வீழ்ச்சியை சந்தித்த பின்னரும் அவர்களின் கொள்கை குறையுள்ளது என்பதையோ அது பிற்போக்கானது என்பதையோ அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை, இத்தகைய கூட்டத்தினரைப்பற்றி அல்லாஹ்(சுபு) பின் வருமாறு கூறுகிறான்.
وَالَّذِينَ كَفَرُوا أَعْمَالُهُمْ كَسَرَابٍ بِقِيعَةٍ يَحْسَبُهُ الظَّمْآَنُ مَاءً حَتَّى إِذَا جَاءَهُ لَمْ يَجِدْهُ شَيْئًا وَوَجَدَ اللَّهَ عِنْدَهُ فَوَفَّاهُ حِسَابَهُ وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِமேலும் எவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கின்றார்களோ அவர்களுடைய செயல்கள் பாளைவனத்தின் கானல் நீரைப்போன்றதாகும், தாகித்தவன் அதை தண்ணீர் என்று எண்ணுகிறான் அதனிடம் அவன் வரும்போது ஒன்றையும் அவன் காணமாட்டான், ஆனால் அல்லாஹ் (விதித்த முடி) வை அங்கு அவன் காணுகின்றான், அவன் கணக்கை அவன் அங்கு முடித்துவைக்கிறான், கணக்குத் தீர்ப்பதில் அல்லாஹ் துரிதமானவன், ( 24 : 39 )

No comments:
Post a Comment