Monday, November 24, 2008

சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹ் - இஸ்லாத்தைச் சீரழிப்பதற்கான புதிய ஃபிக்ஹ் பகுதி 1

சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹின் அறிமுகம் -உள்வாங்கி ஜீரணிக்கப்படுவதற்கான ஒரு சட்டவியல்

இன்று இஸ்லாமிய உம்மத்தின் வாழ்க்கை மிகக் கடினமானதாகவும், மிகச் சிக்கல் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது. அவர்கள் எங்கு வாழ்கின்றார்கள் என்பது பிரச்சினையே அல்ல. இஸ்லாமிய உலகம் இன்று பொருளாதார, அரசியல், பாதுகாப்புப் பிரச்சினைகளால் பிய்த்தெடுக்கப்பட்டு கிடக்கிறது. 20 ஆம் நு}ற்றாண்டில் முஸ்லிம் உலகத்தை மூழ்கடித்த பொருளாதார, அரசியல் குழப்பங்கள் எத்தகையது என்றால், அது மூத்த தலைமுறையைச் சேர்ந்த பலரை மேற்கிற்கு சென்று நல்லதொரு வாழ்க்கையைத் தேடிக் கொள்ளத் து}ண்டியது. இவர்கள் மேற்கை வந்தடைந்த போது, பல நன்மைகளைக் கண்டு கொண்டனர்;. ஆயினும், இவர்கள் மேலும் புதிய பிரச்சினைகளைச் சந்திப்பதற்கும் அவற்றோடு அனுசரித்து போவதற்கும் ஆளாக்கப் பட்டனர்.

மேற்கில் முஸ்லிம்களை எதிர்நோக்கும் சவால்களில் முன்னணியில் நிற்பவை - மேற்கத்தியச் சமூகத்தில் முழுமையாக இரண்டறக் கலந்து விடுவதற்கும், இஸ்லாமிய தனித்துவ அடையாளம், குணாம்சங்கள் என்பவற்றின் வெளிப்படையான தோற்றங்களை உதறித் தள்ளுவதற்கும் தொடராக விடுக்கப்படும் அழைப்புகள்தாம். அரசாங்கங்களிலும், ஊடகங்களிலும் முஸ்லிம்களை எவ்வாறு இரண்டறக் கலந்து விடச் செய்வது என்பது பற்றி அடிக்கடி விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இது மேற்கில் தற்போது நிகழும் சூழ்நிலையை நன்கு உணர்த்துவதாகும். ஸல்மான் ருஷ்தியின் ‘சாத்தானிய வசனங்கள்’ வெளியீடு, ஈராக்கில் நடத்தப்பட்டு வரும் யுத்தம், சமூகத்தில் முஸ்லிம்களுக்கு காட்டப்படும் பாரபட்சம் போன்ற பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் கொண்ட நிகழ்வுகளுக்கான முஸ்லிம்களின் எதிர் விளைவுகள் கூட மென்மேலும் இந்த ‘ஒருமைப்பாட்டை’ நியாயப்படுத்துவதற்கான காரணங்களாகக் கொள்ளப்படுகின்றன.

மேற்குலகில் உண்மையில் முஸ்லிம்களுக்காகத் தீர்க்கப்பட வேண்டிய பெரும் பிரச்சினைகள் நிறையவே காணப்படுகின்றன. இவற்றுள் பல, அவர்களுக்கு மட்டும் சொந்தமான பிரச்சினைகள் அல்ல. மாறாக, உலகெங்கும் வாழும் முஸ்லிம்களுக்கான பிரச்சினைகளாகவும் அவை திகழ்கின்றன. இருந்தபோதிலும், மேற்கில் வாழும் முஸ்லிம்களின் சூழ்நிலையைத் தீர்மானிப்பதற்கான முயற்சிகள், எல்லா வகைகளிலும் எல்லா நேரங்களிலும் பிரிட்டன், அமெரிக்கா போன்ற மேற்கத்திய அரசுகளாலேயே முன்னெடுத்து செல்லப்பட்டிருக்கின்றன.

பிரச்சினை எவ்வாறு இருந்தபோதிலும், இவ்வரசுகளின் நிகழ்ச்சி நிரல் ஒருமைப்பாடு அல்லது இரண்டறக் கலந்துவிடல் என்பனவற்றையே சுற்றிச் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு புதிய பிரச்சினை தோன்றும் போதும், அது முஸ்லிம்களை உலையில் இட்டு உருக்கி மற்றெல்லோருடனும் இரண்டறக் கலந்து விடுவற்காகவும், முஸ்லிம்கள் தமது அகீதாவை கைவிட்டு மற்றவர்களுடன் சமரசம் செய்து கொள்வதற்காகவும், முதலாளித்துவக் கொள்கையை முற்றாகப் பின்பற்றச் செய்வதற்காகவும் உரிய ஒரு சந்தர்ப்பமாக இவ்வரசுகளினால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

மேற்கத்தையச் சமூகத்தில் வாழும் முஸ்லிம்களை இரண்டறக் கலந்து விடச் செய்யும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக, பல முஸ்லிம் குழுக்களும், பிரமுகர்களும் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். இத்தகையப் பணிகளை ஆதரிக்க அவர்கள் மறுக்கின்ற போது அவர்களுக்கு பதிலாக மற்றவர்களை இந்த அரசாங்கங்கள் தேடிக் கண்டு பிடிக்கின்றன. இதன் விளைவாக, முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறப்படும் அமைப்புகளும் தனிநபர்களும், அரசாங்கத்தின் கால் தடத்தைத் பின்தொடரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது எந்தளவுக்கென்றால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தின் போது நாம் கண்ணுற்றதைப் போன்று, உலகின் பல்வேறு பாகங்களில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கும் ஒரு நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இன்னும் சில முஸ்லிம்கள் இருக்கின்றனர். இவர்கள் மேற்குலக முஸ்லிம்களின் பிரச்சினைகளை உண்மையாகவே தீர்க்க நாடுகின்ற போது, உண்மை நிலைக்கும் இஸ்லாத்தின் இயற்கை தன்மைக்கும் முன் நின்று தாக்குப்பிடிக்க முடியாத வெறும் அனுமானங்களின் மீது அமைந்த, தங்களின் வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தங்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதன் விளைவாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தங்களின் அணுகுமுறைகளில் இவர்கள் சாதிக்கும் எதிர்பார்ப்புடன், மேற்கில் வாழ்பவர்களுக்காக ஒரு புதிய ஷரிஆவைக் கண்டுபிடிப்பதற்கு முனைகின்றனர்.

மறு கண்டுபிடிப்புப் போக்கு

முஸ்லிம்கள் 19ம் நு}ற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவம் மேலாதிக்கம் செலுத்துவதைக் கண்டனர். அதனிடம், தொழில் நுட்ப முன்னேற்றமும், முழுமையானதொரு செயல்பாட்டு அமைப்பும் இருந்தன. அதேவேளையில், முஸ்லிம்களிடமோ சரிந்து விழுந்து கொண்டிருந்த உதுமானிய கிலாஃபத்தை தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அடிப்படையில் முஸ்லிம்கள், இஸ்லாமிய சிந்தனை, அதன் நிறைவேற்று முறைமை, எவ்வாறு சிந்தனையும் அதன் முறைமையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை விடுவிக்க முடியாதளவுக்குப் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பன பற்றிய புரிதலை இழந்து காணப்பட்டனர்.

சிலர் மேற்கிற்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் மேற்கினால் பலமாக ஆட்கொள்ளப் பட்டனர். எகிப்;தைச் சார்ந்த ரிஃபா ராஃபி அல் தஹ்தாவி (1801-1873), பாரிஸிலிருந்து தான் திரும்பிய பிறகு, ‘தக்லிஸ் அல் இப்ரிஸ் இலா தல்கிஸ் பாரிஸ்’; (தங்கத்தை அடைந்து கொள்ளல் அல்லது பாரிஸ் பற்றிய மேலோட்டமான பார்வை, 1834) என அழைக்கப்பட்ட ஒரு வரலாற்று நு}லை எழுதினார். இதில் இவர், பாரிஸ் நகர மக்களின் சுத்தம், உழைப்புக்கான ஆர்வம், எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஒழுக்கப் பண்பு என்பனவற்றைப் புகழ்ந்து எழுதினார். நாம், பாரிஸில் செய்யப்படுவதை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் செய்ய வேண்டும் எனப் பிரகடனம் செய்தார். பெண்களை முற்போக்குடையவர்களாக்குவது, தீர்ப்பு முறைகளை மாற்றுவது போன்றவற்றில் இஸ்லாமியச் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தனது வாதங்களை முன்வைத்தார். இந்தச் சிந்தனைகளும், இது போன்ற ஏனையவையும் இஸ்லாத்தில் மறு கண்டுபிடிப்புப் போக்கை ஆரம்பித்து வைத்தன. இந்தப் போக்கு நவீன காலங்கள் வரை தொடர்ந்து வருகின்றது. இத்தகைய சிந்தனைகளின் அசல் ஆதரவாளர்களும் வாதிகளும் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளால் ஷெய்குல் அஸ்ஹர் (அல் அஸ்ஹர் பல்கலைக்கழக வேந்தர்) ஆக நியமிக்கப்பட்ட முஹம்மத் அப்துஹ_வைப் போன்றவர்களாவர்;. இருந்தபோதிலும் நாம் முதன்மையாக அக்கறை கொள்ள வேண்டியது, இந்த சிந்தனை, வழிமுறைகளால் உருவாக்கப்பட்ட உற்பத்திகளைப் பற்றியே அல்லாமல் அதன் தோற்றத்தைப் பற்றியன்று.

சிறுபான்மையினர்களின் குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, அவர்களுக்காக இஸ்லாத்தை (புதிதாக) மறு கண்டுபிடிப்பு செய்யும் முயற்சிகளின் மீது நமது பார்வையைச் செலுத்துவோம். இது ‘சிறுபான்மையினர்களுக்கான சட்டவியல்’ (ஃபிக்ஹ_ல் அகல்லியாத்) என அழைக்கப்படுகின்றது. இந்தச் சிந்தனையின் அடிப்படைகள், இதன் பிரயோகத்திலிருந்து மேலெழும்பும் சில முக்கிய முடிவுகள் என்பவற்றை நாம் சுட்டிக்காட்டி, இத்தகையதொரு சட்டவியல் நிலைத்திருப்பதற்கான ஒரு தேவை காணப்படுகின்றதா என்பதை இங்கு ஆராய்வோம்.

சிறுபான்மைக்கான பிக்ஹ் என்றால் என்ன?

இந்த புதுமையான முறைமையை மும்முரமாக முன்வைத்து வாதம் செய்பவர்களுள் முன்னணியில் நிற்கும் ஒருவரான கலாநிதி தாஹா ஜாபிர் அல் அல்வானி, ஃபிக்ஹ_ல் அகல்லியாத் அல்லது சிறுபான்மையினருக்கான சட்டவியல் என்னவென்று இவ்வாறு விளக்குகின்றார்: “…இதன் கருக்கோள் என்னவென்றால், முஸ்லிம் சட்ட நிபுணர், பொதுவான இஸ்லாமிய சட்டவியலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் குறிப்பிட்ட சூழ்நிலையுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். இவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வாழ்வதால், இவர்களுக்கு பொருத்தமாகக் காணப்படுபவை மற்றவர்களுக்கு பொருத்தமில்லாதவையாக அமையும்.”

மேலும், இவர் தொடர்கிறார்: “...சட்ட நிபுணர் இஸ்லாமிய அறிவுத்துறைகளில் வலுவான ஒரு பின்னணியைக் கொண்டவராக மட்டும் இருக்கக்கூடாது. அந்தச் சமூகத்துடன் சம்பந்தப்பட்ட சமூவியல், பொருளாதார, அரசியல், சர்வதேசத் தொடர்புகள் ஆகியவற்றிலும்கூட புலமை பெற்றவராக இருக்க வேண்டும்.”

“ஃபிக்ஹ_ல் அகல்லியாத்தின் நோக்கம்” பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்: ”இஸ்லாத்தை மீண்டும் (புதிதாக) உருவாக்குவதன்று@ மார்க்கத்தின் நெகிழ்வுத் தன்மைக்குள்ளே நின்று, குறிப்பிட்டச் சூழ்நிலையில் ஒரு சட்ட நிபுணர் எவ்வாறு பணியாற்றுவார் என்பதைத் தீர்மானிக்கும் வழிமுறைமைகளின் தொகுதியொன்றை உருவாக்குவதுதான்” என இவர் கோருகிறார்.

இந்தத் தத்துவத்தையும் அதன் நியாயங்களையும் கூர்ந்து பரிசீலித்தால், இந்த அணுகுமுறையானது, எதிர்கொள்ளப்படும் குறிப்பிட்ட சூழ்நிலையை அல்லது பொதுவில்; சுற்றாடலை, சட்டமியற்றுவதற்கான மூலமாகக் கொள்கிறது என்பதைக் கண்டு கொள்ளலாம். இது முற்றிலும் எப்படியேனும் சாதிக்கும் எதிர்பார்ப்புடன் கூடியதோர் அணுகுமுறையாகும். இதன் பின்விளைவாக, அல்குர்ஆன், சுன்னாஹ் ஆகியவற்றிலிருந்து நிச்சயத்தன்மையுடன் நிறுவப்பட்டவற்றுக்கு முரணாக, சிற்சில ஷாPஆச் சட்டங்களைப் புறக்கணிக்கும் நிலைக்கு இஃது இட்டு சென்றுள்ளது.

No comments:

Post a Comment