பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை பெரும்பணம் வைத்திருக்கும் மேற்கத்திய முதலாளிகளுக்கு சாதகமான முறையில் அவற்றின் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, பொதுத்துறை நிறுவனங்களில் வர்த்தகத்திற்கு வேண்டிய அளவு பணத்தையும் அதற்கு மேலாக மிகப்பெரும் தொகையையும் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும், அதேவேளையில் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில் அதில் அவர்களுக்கு எந்த விதமான பொறுப்புகளும் கிடையாது, அவர்களுக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் கடன் கொடுத்தவர்கள் அதில் எந்தவகையான ஈட்டுத் தொகையையும் பெறமுடியாது, இவ்வாறு பெரும் முதலாளிகளின் நலன்களை பாதுகாக்கும் விதத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது, நிறுவனத்தின் பங்குகளை வாங்குகின்ற சாதாரண மக்களை கட்டுப்படுத்தும் வகையிலும் அவர்களின் முதலீடுகளுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத வகையிலும் பொதுத்துறை நிறுவனங்ககளின் விதிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன, பொதுத்துறை நிறுவன அமைப்பின் தனித்துவ அம்சம் என்னவென்றால் நிறுவனத்திற்கு உண்மையான முதலாளிகளாக இருக்கும் நபர் வரையறுக்கப்பட்ட பொறுப்பு (limited liablities) உடையவராக மடடுமே இருப்பார், ஆகவே நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது என்றால் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்களும் பங்குகளை வைத்திருப்பவர்களும் நிறுவன முதலாளியின் சொத்துக்களிலிருந்து எதையும் நஷ்டஈடாக கோரமுடியாது நிறுவனத்தில் எஞ்சியிருக்கும் சொத்துக்களிலிருந்துதான் நஷ்டஈடு கோரமுடியும்.
பொதுத்துறை நிறுவனங்களின் உருவாக்கத்திலும் அதனை பொதுமக்களிடம் அறிவிப்பு செய்வதிலும் அரசுதான் முழுப் பங்களிப்பை மேற்கொள்கிறது, ஒரு நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக ஆக்கப்பட்ட அறிவிப்பை அரசுதான் மக்களிடம் அறிவிப்பு செய்கிறது, மேற்குநாடுகளைப் பொறுத்தவரை இது உறுதியான முறையில் ஏற்படுத்தப்பட்ட மரபாக இருந்து வருகிறது, பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய அறிவிப்பும் அதனுடைய வர்த்தகம் பற்றிய அறிவிப்பும் அதன் பங்குகளின் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பும் அரசின் சார்பில் வெளியிடப்படுகின்றன, மேலும் அந்த நிறுவனம் தொடர்பான கூட்டமைப்பு அறிக்கை (memorandum of Association) மற்றும் கூட்டமைப்பின் பிரதான விமுறைகள் ஆகியவற்றையும் அரசே வெளியிடுகிறது, பொதுத்துறை நிறுவன அமைப்பு கூட்டமைப்பு தன்மை (corporeal personality) கொண்டதாக இருப்பதால் அதன் முதலீட்டாளர்களிடமிருந்து சுதந்திரமாக செயல்படக் கூடியதாக இருக்கிறது, நிறுவனத்தில் சட்டரீதியாக உரிமை பெற்றவர்கள் மட்டுமே நிறுவன நடவடிக்கைகளில் அதிகாரம் செலுத்தமுடியும் பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு இந்த விஷயத்தில் எந்தவிதமான உரிமையோ அல்லது அதிகாரமோ கிடையாது, ஆனால் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனத்தில் எஞ்சியுள்ள சொத்துக்களில் மட்டும்தான் பங்கு வைத்திருப்பவர்களுக்கு உரிமை இருக்கிறது நிறுவன தலைவராக செயல்பட்ட முதலாளியின் சொத்துக்களில் எந்தவிதமான உரிமையும் கிடையாது.
பொதுத்துறை நிறுவனம் ஒன்றின் கூட்டமைப்பு (Association) பற்றிய அறிவிப்பை அரசு வெளியிடும்போது அதன் நிறுவனர்களில் (founders) அதாவது அந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களில் சிலரை தற்காலிக இயக்குநர்கள் குழுவாக (interim board of directors) அரசு நியமிக்கிறது, இதன் பின்னர் இயக்குநர்கள் குழு நிறுவனத் தலைவரை (chairperson)நியமனம் செய்கிறது, பின்னர் இயக்குநர் குழு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யத் துவங்கி விடுகிறது, இந்தப் பங்குகளை வாங்குகிறவர்கள் வரையறைக்கு உட்பட்ட சில உரிமைகளை பெற்றுக் கொள்கிறார்கள்.
நிறுவனத்தின் அதிகாரத்தை அடைந்து கொள்வதற்கு ஒருவர் பெரும்பான்மை பங்குகளை தமது கையில் வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை சில தருணங்களில் 5% பங்குகளையோ அல்லது 10% பங்குகளையோ வைத்திருப்பவர்கள் கூட மற்றவர்களின் ஆதரவோடு அதிகாரத்தை அடைந்து கொள்ளமுடியும், ஏனெனில் சிறிய அளவில் பங்கு வைத்திருப்பவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாது சிதறிக் கிடப்பார்கள் அல்லது பிரதானமான பங்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்படுவார்கள் அந்நிலையில் அவர்கள் இயக்குநர்கள் குழு தேர்தலில் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொள்வார்கள், இவ்வாறாக பங்குகளை வாங்கியவர்களிடமிருந்து பெற்றுள்ள முதலீட்டுத் தொகைகளை கையாள்வதற்கும் நிறுவன நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் கிடைத்து விடுகிறது, இதுதான் பொதுத்துறை நிறுவனங்கள் என்று கூறப்படும் டகஇ கம்பெனிகள் விஷயத்தில் மக்கள் தங்கள் கண்களால் காணுகின்ற உண்மை நிலையாகும், இந்த உண்மை நிலையின் அடிப்படையில் பங்குச்சந்தைகளில் பங்குகளை வர்த்தகம் செய்யும் உரிமையைத் தவிர்த்து பங்கு வைத்திருப்பவர்களுக்கு வேறெந்த உரிமையும் கிடையாது, அவர்கள் வைத்துள்ள பங்குகளை வினியோகம் செய்த நிறுவனங்களின் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதற்கோ அல்லது தாங்கள் முதலீடு செய்துள்ள பணத்தைக் குறித்து விசாரனை மேற்கொள்வதற்கோ அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது, பங்குகளை வைத்திருப்பவர்கள் அந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருப்பதில்லை, மாறாக பங்குச்சந்தைகளில் ஈடுபட்டு தாங்கள் வைத்திருக்கும் பங்குகளில் வர்த்தகம் செய்வதற்கும் பங்குகளின் விலையில் ஏற்றம் காணும்போது நிறுவனத்தின் அனுமதியைப் பெறாமலேயே தங்கள் விருப்பப்படி பங்குகளை மற்றவர்களுக்கு விற்பனை செய்வதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு.
எவர்களிடமிருந்தும் அனுமதி பெறாமலும் எவர்களுக்கும் தகவல் தெரிவிக்காமலும் பங்குச்சந்தைகளில் தாங்கள் எண்ணியபடி பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் பங்கு வைத்திருப்பவர்களுக்கு அதிகாரம் உண்டு, எனவே தங்களிடமுள்ள பங்குகளை விற்றுவிடுவதின் மூலம் நிறுவனத்தின் அதிகார பொறுப்பில் இருக்கும் ஒருவர் உள்ளபடியே தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளலாம், மேலும் அதே நிறுவனத்திலிருந்தோ அல்லது வேறொரு நிறுவனத்திலிருந்தோ அதிகமாக பங்குகளை வாங்கவேண்டும் என்று ஒருவர் விரும்பும்போது அந்த நிறுவனத்தின் அதிகாரத்தில் இருப்பவரின் அனுமதியோ அல்லது ஆலோசனையோ பெறவேண்டும் என்று அவசியம் இல்லை, துரிதமாக லாபம் அடையவேண்டும் என்ற பேராசையின் காரணமாகத்தான் ஒருவர் பங்குகளை வாங்குவதிலும் விற்பதிலும் ஈடுபடுகிறாரே ஒழிய அதற்கு வேறெந்த காரணமும் இல்லை, இவ்வாறாக ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலையில் இறக்கம் ஏற்படும்போது அவற்றை வாங்குவதிலும் அவற்றின் விலையில் ஏற்றம் ஏற்படும்போது விற்பதிலும் ஒருவர் ஈடுபடுகிறார், ஆகவே நிறுவனங்களிடமோ அல்லது அந்த நிறுவனங்களின் அதிகாரத்தில் இருப்பவர்களிடமோ அவர்களுக்கு எந்தவகையான விஸ்வாசமும் இல்லை, அதேபோல அந்த நிறுவனத்தின் வர்த்தகத்திலோ அல்லது அந்த நிறுவனத்தில் பணியாற்றுகறவர்களிடமோ அவர்களுக்கு எந்தவிதமான உறவோ அல்லது தொடர்போ கிடையாது, எனினும் சில பங்குச்சந்தைகளில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகளின் விலையில் ஏற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு சில பணக்கார முதலாளிகள் அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவோடு தொடர்பு வைத்துக் கொண்டு நிறுவன நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் உண்மையான பொருளாதாரத்திற்கும் பங்குச்சந்தைகள் என்று அழைக்கப்படும் நிதிச்சந்தைகளுக்கும் மத்தியில் உள்ள அகன்ற இடைவெளியைக் காட்டுகின்றன, பங்குச்சந்தைகளில் ஒரு குறிபிட்ட நிறுவனத்தின் பங்குகளின் விகிதாச்சாரத்தில் (ratio) ஏற்படும் ஏற்றஇறக்கத்தை கண்காணிப்பதற்கு வர்த்தகர்கள் கணக்கிடும் விகிதாச்சார முறை இந்த உண்மையை உறுதிப்படுத்துகிறது, ஒவ்வொரு பங்குகளுக்கும் வழங்கப்படும் வருடாந்திர லாபத்தின் (dividends) அடிப்படையில் பங்குகளின் நடப்புவிலை நிர்ணயிக்கப் படுகிறது, உதாரணமாக ஒரு பங்கின் வருடாந்திர லாபம் 2 டாலராகவும் பங்கின் விலை 40 டாலராகவும் இருந்தால் அந்த பங்கின் விகிதாச்சாரம் 20 டாலராகும் (பங்கு விகிதாச்சாரம் = பங்குவிலை/லாபம்) அதாவது ஒவ்வொரு பங்குகளுக்கும் லாபம் பங்குவிலையில் 5% ஆக இருக்கிறது, பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களின் விகிதாச்சார மதிப்புகள் ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களில் வெளியிடப் படுகின்றன, இந்த விகிதாச்சாரங்களை ஆய்வு செய்து பார்ப்போமானால் அவற்றில் பெரிய அளவில் வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம், சில நேரங்களில் சில நிறுவனங்களின் பங்குகள் 100% விலை உயர்வையும் சில நிறுவனங்களின் பங்குகள் 95% விலை சரிவையும் அடைகின்றன என்பதை நாம் காணலாம், பங்குச்சந்தைகள் அனைத்திலும் யூகவணிகமே ஆதிக்கம் பெற்றிருக்கிறது மேலும் தொடர்ச்சியாக ஏற்படும் விலைகளின் ஏற்றஇறக்கம் பங்குச்சந்தைகளின் தனித்துவ அம்சமாக இருக்கிறது, உண்மையான பொருளாதாரத்திற்கும் நிதிச்சந்தைகளுக்கும் மத்தியில் இருக்கும் பிளவை இது சுட்டிக் காட்டுவதோடு பங்குச்சந்தையில் இடம் பெற்றிருக்கும் நிறுவனங்களின் உண்மை நிலைகளையும் இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது, மேலும் பங்குச்சந்தைகள் ஒரு சூதாட்ட விடுதியாகவே செயல்படுகிறது என்பதையும் சூதாட்டத்தில் கைதேர்ந்த மேற்கத்திய பணமுதலைகள் வளரும் நாடுகளின் செல்வங்களை கொள்ளையடித்துச் செல்கின்றன என்பதையும் சந்தேகமில்லாத வகையில் விளக்கிக் காட்டுகிறது, இதுதான் பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்த உண்மைநிலையாகும்.
வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கி அமைப்பு - The usurious banking system :
வங்கிகளின் நடவடிக்கைகளில் சிலவகை மட்டும்தான் சட்டரீதியான செயல்களாக இருக்கின்றன. வங்கிகளின் முதலாளிகளில் பெரும்பான்மையானவர்கள் முதலாளித்துவ செல்வந்தர்களாக இருப்பதால் அவர்களுக்கும் அவர்கள் நடத்திவரும் நிறுவனங்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதற்கு முன்னுரிமை வாழங்கப் படுகிறது.
உண்மையான பொருளாதார நடவடிக்கைகளில் வங்கிகள் செலுத்தும் பங்களிப்பை விட மிக அதிகமான இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான பங்களிப்புகளை நிதிச்சந்தைகளில் செலுத்துகின்றன, ஏனெனில் பங்கு வர்த்தகம் செய்பவர்கள் அவர்களிடமுள்ள பணத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான மதிப்புடைய பங்குகளை வாங்கி வர்த்தகத்தில் ஈடுபடமுடியும் , உதாரணமாக; பங்குச்சந்தையில் 100 டாலராக இருக்கும் ஒருபங்கை ஒருவர் 5 டாலர் தன்னுடைய சொந்த பணத்தையும் 95 டாலர் வங்கியிடமிருந்து பெற்ற கடன் தொகையிலிருந்தும் விலைக்கு வாங்குகிறார். சில நேரங்களில் இந்த கடன் தொகையை தரகு நிறுவனங்கள் மூலமாக பெற்றுக்கொள்வார்; இந்த தரகு நிறுவனங்கள் வங்கியிடமிருந்து கடன்பெற்று அவர்களுக்கு கடன் அளிக்கின்றன, எனவே பங்குவர்த்தகர் ஒருவர் தன்னிடமுள்ள பணத்தைப்போல 20 மடங்கு விலை அதிகமாக உள்ள பங்குகளை விலை கொடுத்து வாங்கமுடியும், எனினும் இந்த வங்கிகள் பெரும் முதலாளிகளுக்கு மட்டும்தான் பங்குவர்த்தக கடன்களை அளிக்கின்றன, அதாவது பொதுமக்கள். வியாபாரிகள். வைப்புநிதி வைத்துள்ள நடுத்தர வகுப்பினர் ஆகியவர்களின் உழைப்பால் உருவான பணத்தை வங்கிகளிலிருந்து பெற்று அதை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து தங்கள் கொள்முதல் திறனையும் பெருக்கிக்கொண்டு தங்கள் ஆதிக்கத்தையும் சொத்துக்களையும் பலமடங்கு உயர்த்திக் கொள்ளும் முதலாளித்துவ செல்வந்தர்களுக்கு மட்டும்தான் இந்த வங்கிகள் கடன் வழங்குகின்றன.
பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்பவர்கள் வங்கிகளில் கடன் பெற்று பங்குகளை வாங்கி அவற்றின் விலை ஏற்றம் அடையும்போது விற்பனை செய்கிறார்கள் என்று மேலே குறிப்பிட்டிருந்தோம். அவ்வாறு வங்கிகளில் கடன் பெற்று பங்குகளை வாங்கிய பின்னர் சில நேரங்களில் பங்குகளின் விலையில் வீழ்ச்சி ஏற்படுகிறது இத்தகைய சந்தர்ப்பங்களில் பங்குகளின் உண்மையான மதிப்பைவிட வங்கிக்கடனின் மதிப்பு அதிகமாக இருக்கும், உதாரணமாக ஒரு வர்த்தகர் பங்குகளை வாங்கும்போது அவருக்கு 90 % கடனை வங்கி வழங்குகிறது, அவர் 1.000.000 டாலருக்கு பங்குகள் வாங்கினால் அவருக்கு வங்கி 9.00.000 டாலர் கடன்தொகை வழங்கும், இந்நிலையில் பங்குகளின் விலையில் 20 % விலைச்சரிவு ஏற்படும் பட்சத்தில் அவரிடமுள்ள பங்குகளின் மதிப்பு 8.00.000 டாலராக ஆகிவிடும், இப்போது அவரிடமுள்ள பங்குகளின் மதிப்பின் அடிப்படையில் வங்கியின் சட்டரீதியான கடன்தொகை 7.20.000 டாலராக குறைந்துவிடும் ஆகவே அவர் உடனடியாக வங்கிக்கு 1.80.000 டாலர் பணத்தை திருப்பிச் செலுத்தவேண்டும், ஏனெனில் அவர் சட்டரீதியாக 90 % கடன்தொகைதான் வங்கியிலிருந்து பெறமுடியும், இந்நிலையில் அவரிடம் பணம் இருக்கும் பட்சத்தில் இந்தத்தொகையை வங்கிக்கு திருப்பி செலுத்தி விடுவார், அவரிடம் பணம் இல்லாத பட்சத்தில் தன்னிடமுள்ள பங்குகளை விற்றுதான் பணத்தை வங்கிக்கு செலுத்தவேண்டும், இதுபோன்ற நிர்பந்தமான நிலை பல வர்த்தகர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவர்கள் அனைவரும் தங்களிடமுள்ள பங்குகளில் ஒரு பகுதியை பங்குச்சந்தையில் விற்றே ஆகவேண்டும், பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரை நிலவரம் எவ்வாறு இருக்கும் என்றால் பங்குகள் அதிகமாக கொள்முதல் செய்யப்படும்போது அவற்றின் விலை ஏற்றத்தை அடையும் அதேவேளையில் பங்குகள் அதிகமாக விற்பனை செய்யப்படும்போது அவற்றின் விலை வீழ்ச்சி அடையும், ஆகவே பல வர்த்தகர்கள் பங்குகளை விற்க முடிவு செய்யும்போது அவற்றின் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும், இந்தவீழ்ச்சி உச்சத்தை அடையும்போது வர்த்தகர்கள் மத்தியில் ஒருவிதமான அச்சம் ஏற்படுகிறது இதனால் பங்குகள் வைத்திருக்கும் அனைவரும் வேகமாக தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்பனை செய்துவிடவேண்டும் என்று எண்ணி விற்பனையில் துரிதமாக ஈடுபடும்போது பங்குச்சந்தைகளில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுகிறது, இந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து நிதிநெருக்கடிகளும் பொருளாதார பின்னடைவுகளும் இயல்பாக தோன்றுகின்றன.
ஆகவே முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளின் பங்களிப்பு என்னவென்றால் அவைகள் வர்த்தகத்திலும் விலைவாசிகளிலும் முறையற்ற ஏற்றஇறக்கங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன, எவ்வாறெனில் ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலையில் ஏற்றம் ஏற்படும்போது அவற்றில் வர்த்தகம் செய்யும் செல்வந்த முதலாளிகளுக்கு இந்த வங்கிகள் பெரும் தொகையை கடனாக கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பெரும் வட்டித்தொகையில் தங்கள் நிதி இருப்புகளை அதிகரித்துக் கொள்கின்றன, இத்தகைய வர்த்தகர்கள் ஒரு குறிப்பிட்ட பங்குகளின் விலை உயரும்போது அவற்றை அவசரஅவசரமாக வாங்குகிறார்கள், இதனால் பங்குச்சந்தை சூடுபிடித்து விலைகள் தொடர்ந்து ஏற்றத்தை அடைகின்றன, அதுபோன்றே ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் திட்டம் தோல்வி அடையும்போதோ அல்லது அதுபோன்ற வதந்திகள் ஏதேனும் பரவும்போதோ அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகள் விலை வீழ்ச்சி அடைகின்றன, அவ்வாறு விலை வீழ்ச்சி அடையும்போது பங்குகளின் மதிப்பு குறைவதால் வங்கிகளில் கடன்பெற்ற வர்த்தகர்கள் வங்கிகளுக்கு பணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது ஏனெனில் வங்கிகளின் சட்டப்படி விலை வீழ்ச்சியின் காரணமாக பங்குளின் மதிப்பில் ஏற்பட்ட குறைவுத்தொகை எவ்வளவோ அவ்வளவு தொகையை அவர்கள் உடனே செலுத்தவேண்டும், இந்நிலையில் வர்த்தகர்கள் தங்கள் கைவசம் இருக்கும் பங்குகளை விற்று வங்கிகளுக்கு பணம் செலுத்த எண்ணியவர்களாக பங்குச்சந்தைகளில் பங்குகளை விற்பதற்கு முடிவுசெய்யும்போது பங்குச்சந்தைகளில் ஒருவிதமான தேக்கநிலை ஏற்பட்டு விலைகள் சரிவை அடைகின்றன, இவ்வாறு விலைகள் தொடர்ந்து சரிவை அடையும் அதேவேளையில் வங்கிகளும் தொடர்ந்து தங்கள் கடன் தொகையை குறைத்துக் கொண்டே செல்கின்றன, இதனால் பங்கு வர்த்தகம் செய்பவர்களுக்கு மிகுந்த பணநெருக்கடி ஏற்பட்டு அதன் எதிரொலியாக நிதிச்சந்தையில் நெருக்கடிகளும் அதனைத் தொடர்ந்து நாட்டில் பொருளாதார தேக்க நிலைகளும் நாணயத்தின் மதிப்பில் வீழ்சியும் ஏற்படுகின்றன.
வங்கிகள் இவ்வாறு பெரும் தொகையை கடனாக அளிப்பதற்கு அவைகளுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும், வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வைப்புநிதிகளாக சேமித்து வைத்திருக்கும் பணத்தைத்தான் பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு வங்கிகள் கடனாக வழங்குகின்றன, வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் சேமிப்பு நிதியையே நம்பியிருக்கின்றன மேலும் ஒரு கணக்கிலிருந்து எடுக்கப்படும் பணம் மற்றொரு கணக்கில் கொண்டு வரப் படுவதால் மக்களின் பணம் பெரும்பாலும் வங்கிகளுக்கு மத்தியில்தான் சுழன்று கொண்டிருக்கின்றன, பணத்தை வங்கிகளில் வைப்புநிதியில் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு பணம் தேவைப்படும்போது அவர்கள் வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்கிறார்கள், இவ்வாறு வங்கிகளில் கொடுக்கல் வாங்கல் நடைபெறும்போது வங்கிகளின் கணக்கு பதிவேட்டில் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றப்படுகிறதே ஒழிய வங்கிகளின் உண்மையான பணஇருப்பில் மாறுதல் ஏற்படுவதில்லை, இவ்வாறு ஒரு வாடிக்ககையாளருக்கு இரண்டு கணக்குகள் வஙகிகளில் பராமரிக்கப் படுகின்றன, சேமிப்புக் கணக்கில் வரவுகள் பதிய வைக்கப்படுகின்றன கடன் கணக்கில் கடன்தொகைள் பதிவுசெய்யப் படுகின்றன, அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் வைப்புநிதியை ஒரே நேரத்தில் வங்கியிலிருந்து திருப்பி எடுக்க முடிவு செய்வார்களேயானால் வங்கிகள் ஒருபோதும் அவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது, ஏனெனில் வைப்புநிதியில் போடப்பட்ட பணத்தின் பெரும்பகுதி வங்கியிலிருந்து கடன் என்ற பெயரில் வெளியேறிவிட்டதுõ தங்கள் வைப்புநிதிகளை வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் திரும்பப்பெறுவதற்கு முடிவுசெய்த சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் வங்கிகள் மூடப்படும் நிலைமை ஏற்படுகிறது, இவ்வாறு நடைபெறும்போது வங்கிகளில் எஞ்சியுள்ள ரொக்கம் மற்றும் வங்கியின் சொத்துக்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் தொகை வாடிக்கயாளர்கள் மத்தியில் பங்கீடு செய்யப்படுகின்றன.
வங்கிகளின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் தங்கள் பணம் சேமிப்புக்கணக்கில் வங்கிகளின் இருப்பு பெட்டகங்களில்(bank lockers) பத்திரமாக இருக்கிறது என்ற எண்ணத்திலும் தேவைப்படும்போது தங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையிலும் வைப்புநிதியில் பணத்தை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள், இந்த நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் வட்டி அடிப்படையில் இயங்கிவரும் வங்கிகள் இருந்து கொண்டிருக்கின்றன, எனினும் இந்த நம்பிக்கை எதார்த்தத்தில் பெரும் மோசடியாக இருப்பதை வங்கிகளின் உண்மைநிலைகள் எடுத்துக் காட்டுகின்றன, வங்கிகள் திவாலை அறிவித்து மூடப்பட்டுவிட்ட நிலையில் வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்தவர்கள் தங்கள் முழுப் பணத்தையோ அல்லது அதில் பெரும் பகுதியையோ இழந்து விட்ட சம்பவங்கள் பல நேரங்களில் நடைபெற்றிருக்கின்றன, மேற்கு நாடுகளிலும் மற்ற உலக நாடுகளிலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வெறும் கானல்நீர்தான் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது, இத்தகைய தருணங்களில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதற்கு காகித நாணயங்களை (inconvertible paper money) அச்சடித்துக் கொள்ளும் முறையை மேற்கத்தியர்கள் கண்டுபிடித்துள்ளார்கள், இந்த காகித நாணயங்களுக்கு உண்மையான மதிப்பு ஏதும் இல்லை ஏனெனில் அவைகளுக்கு பின்னனியாக தங்கத்தை இருப்பில் எந்த அரசுகளும் வைத்துக் கொள்வதில்லை, ஆகவே அவைகளை ஒருபோதும் தங்கமாக மாற்றிக்கொள்ள முடியாது, நெருக்கடி ஏற்படும்போது அவ்வப்போது காகித நாணயத்தை அச்சடிக்கும் பணியை அரசு சார்பாக மத்தியவங்கி (இங்ய்ற்ழ்ஹப் ஆஹய்ந்) மேற்கொள்கிறது, இந்தியாவில் இது மத்திய ரிஸர்வ்வங்கி (Reserve Bank) என்று அழைக்கப்படுகிறது, வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளின் குளறுபடிகளை சமாளிப்பதற்காகவும் வங்கிகளின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பெரும் மோசடி செய்யப்படுகிறது என்பது வெட்டவெளிச்சம் ஆகாமல் மறைப்பதற்காகவும் வங்கிகளை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்காகவும் முதலாளித்துவக் கொள்கையில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் இத்தகைய நடவடிக்கைகளை முதலாளித்துவ அரசுகள் மேற்கொள்கின்றன.
மாற்றமுடியாத காகித நாணய முறை - inconvertible paper money :
உண்மையான மதிப்பு எதையும் பெற்றிராத மாற்றமுடியாத காகித நாணயங்களை (inconvertible paper money) அச்சடித்து நாடு முழுவதும் புழக்கத்தில் விடுவதற்கு மத்தியவங்கிக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது, நாட்டிலுள்ள மக்கள் தங்கள் நிதியியல் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இந்த காகித நாணயங்களை ஏற்றுக் கொள்வதற்கு அவர்களை அரசு சட்டத்தின் மூலம் நிர்பந்தம் செய்கிறது, குடிமக்களில் எவரேனும் தங்கள் பொருட்களுக்கோ அல்லது சேவைகளுக்கோ பட்டுவாடாவாக இந்த காகித நாணயத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில் சட்டமும் நீதித்துறையும் அதை ஏற்றுக்கொள்வதற்கு அவரை கட்டாயப்படுத்தும் இல்லையெனில் அவர் தனக்கு சேரவேண்டிய தொகையை பெற்றுக்கொள்ளும் உரிமையை இழக்கநேரிடும்.
அரசின் கொள்கையை நிறைவேற்றுவதற்கு அவசியமான நாணயத்தை அச்சிட்டு வெளியிடுவதற்கு மத்திய வங்கிக்கு உரிமை இருக்கிறது என்று இதற்கு அர்த்தமாகும், உதாரணமாக வரிகள் மற்றும் கட்டணங்கள் மூலமாக அரசு வசூலித்த பணம் முழுவதும் செலவளிக்கப் பட்டுவிடும்போது அரசுகருவூலகத்தில் (govt. treasury) பணம் இருப்பு இல்லாமல் ஆகிவிடும் அது போன்ற நேரங்களில் மாற்று வழி இல்லாத காரணத்தால் மத்திய வங்கியிடமிருந்து பணத்தை கடனாக பெற்றுக் கொள்வதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளும், இதனடிப்படையில் மத்தியவங்கியின் கருவூலக கணக்கில் ஒரு தொகை கடனாக பதிவு செய்யப்பட்டு அதன் பெயரில் வைப்புநிதியாக வைக்கப்படும், தனது செலவினங்களுக்கு பணம் தேவைப்படும்போது கருவூலகம் இந்தத் தொகையிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும், இந்தப் பணம் நாட்டின் புழக்கத்தில் வந்துள்ள புதிய பணமாக கருதப்படுகிறது, மக்களுக்கு கடன் வழங்குவதற்கு பணம் தேவை என்று மத்தியவங்கி கருதும்போது கருவூலக இருப்பில் பணம் இல்லை என்றால் நிதிப்பத்திரங்களையோ(exchequer bills) அல்லது நிறுவனங்களின் உறுதிப் பத்திரங்களையோ companies securities) பொதுமக்களிடமிருந்து மத்தியவங்கி கொள்முதல் செய்துகொள்ளும், இந்தப் பத்திரங்களை வினியோகம் செய்யும் நபர்கள் பெயரில் அதற்குரிய தொகை மத்தியவங்கியின் கணக்கிலோ அல்லது மற்ற வங்கிகளின் கணக்கிலோ பதிவு செய்யப்படும். இதுவும் நாட்டின் புழக்கத்தில் வந்துள்ள புதிய பணமாகவே கருதப்படுகிறது, 1987 ல் அமெரிக்காவில் நடந்த சம்பவம் இதற்குப் பொருத்தமான உதாரணமாக இருக்கிறது, நியூயார்க் பங்குச்சந்தைகளில் ஒரே நாளில் பங்குகளின் விலையில் 22 % சரிவு ஏற்பட்டது, உடனே அமெரிக்காவின் மத்திய வங்கி கணிசமான பெரும் தொகையை வங்கிகளுக்கு அளித்ததின் மூலம் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு முயற்சி மேற்கொண்டது, கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள நிறுவனங்களின் உறுதிப்பத்திரங்களை (companies securities) மத்தியவங்கி கொள்முதல் செய்து அதிலிருந்து பெற்ற பணத்தை வங்கிகளுக்கும் பங்குச்சந்தை வர்த்தகர்களுக்கும் கடனாக கொடுத்து பிரச்சினைக்கு தற்காலிகமான தீர்வை ஏற்படுத்தியது, வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கி அமைப்பால் ஏற்படும் பொருளாதார சீரழிவுகளை சீர்படுத்துவதற்கு முதலாளித்துவ அரசான அமெரிக்கஅரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் நியூயார்க்கின் முன்னனி வங்கியான சிட்டிபாங்க் (City Bank) மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது என்று பரவிய வதந்தியை அதனால் தடுக்க முடியவில்லை.
நாட்டிற்குத் தேவைப்படும் பணத்திற்காகவும் குடிமக்களின் சேவைகளுக்கு (services) கொடுக்க வேண்டிய பணத்திற்காகவும் முறையற்ற விதத்தில் காகித நாணயங்களை அச்சடித்துக் கொள்வது தவறான கொள்கையாகும் ஏனெனில் இதன் சுமைகள் அனைத்தும் சாமான்யர்களான பொதுமக்களின் தலையில்தான் சுமத்தப்படுகின்றன, இருந்தபோதிலும் பலசமயங்களில் இதன் விளைவுகளை மக்கள் உணர்ந்து கொள்வதில்லை, நாட்டில் பணப் புழக்கம் அதிகமாகும்போது நாணயத்தின் செலாவணி மதிப்பில் சரிவு ஏற்படுகிறது இதனால் பொருட்களின் விலைவாசிகளும் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சேவையின் (services) ஊதிய அளவுகளும் உயர்ந்து கொண்டே செல்கின்றன, இந்நிலையை பணவீக்கம் (inflation) என்று கூறுகின்றனர், மக்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்பில் சரிவு ஏற்படுவதால் அவர்கள் பெறும் ஊதியத்தின் மதிப்பில் குறைவு ஏற்படுகிறது, இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் வெகுவாக கீழ்நிலைக்குச் சென்றுவிடுகிறது வறுமையும் பசியும் அவர்களை வாட்டி வதைக்கிறது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் பிற்போக்குத்தனத்தின் காரணமாகவும் முதலாளித்துவ வாதிகளின் சுரண்டல் கொள்கையின் காரணமாகவும் உலக மக்கள் சமுதாயம் பெரும் சீரழிவுகளையும் கடுந்துயரங்களையும் அனுபவித்து வருகிறது, தந்திரமாக உருவாக்கப்பட்ட மோசடியான நம்பிக்கையை ஆதாரமாக வைத்து முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை இயங்கிக் கொண்டிருக்கிறது, காகித நாணயத்திற்கு உண்மையான மதிப்பு இல்லை என்றபோதும் அதற்கு மதிப்பு இருப்பதாக மக்களை ஏமாற்றும் விதத்தில் நம்பிக்கை ஏற்படுத்தப்படுகின்றது, இந்த நம்பிக்கையை முதலாளித்துவ அரசுகள் மக்கள்மீது நிர்பந்தமாக சுமத்தி இருப்பதோடு நீதியின் பார்வையில் இந்த நிர்பந்தத்தை சட்டரீதியாகவும் ஆக்கியிருக்கின்றன, ஒர் ஏழை நாட்டில் வருவாய் ஆதாரங்கள் வீழ்ச்சி அடையும் போது அதன் அரசியல் சூழல் பலவீனப்பட்டுவிடுகிறது என்பதை நாம் காண்கிறோம், அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பில் சரிவு ஏற்படும்போது மற்ற நாணயங்களின் செலாவணி மதிப்பை ஒப்புநோக்கி உள்ளூர் நாணயத்தின் மதிப்பை ஆட்சியாளர்கள் குறைப்பதையும் நாம் காண்கிறோம், மேலும் அவர்கள் பல்வேறு தந்திரங்களை கையாண்டு காகித நாணயங்களுக்கு உண்மையான மதிப்பு இருப்பதுபோல் காட்டி மோசடி செய்வதையும் நாம் காண்கிறோம்,
மேற்கத்திய பொருளாதாரக் கொள்கையின் அடிப்பûயில் இயங்கும் பங்குச்சந்தைகளின் உண்மைநிலை இவ்வாறு இருக்கிறது, தவறான அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த கொள்கையை உலக நாடுகள் அனைத்தும் கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றன, மக்களுக்குத் தேவையான எந்த பொருட்களையும் உற்பத்தி செய்யாத பணமுதலைகளின் ஆடம்பர வாழ்க்ûக்ககு வளம் அளிக்கும் ஆதாரங்களாக பங்குச்சந்தைகள் விளங்குகின்றன, இத்தகைய நிதிச்சந்தைகளில் வர்த்தகம் செய்வதின்மூலம் மிக எளிதாகக் கிடைக்கும் பெரும் லாபத்தை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள், பங்குச்சந்தைகள் அனைத்தும் சூதாட்டவிடுதிகள்தானே தவிர வேறொன்றும் இல்லை மேலும் அவைகள் எளிதாக அறுபடக்கூடிய சிலந்திவலை போன்றவை, உலக லாபத்தையும் உடல் இன்பத்தையும் லட்சியமாகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவவாதிகளின் பேராசையின் சின்னமாக பங்குச்சந்தைகள் விளங்குகின்றன, முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் இடம் பெற்றுள்ள பொதுத்துறை நிறுவனங்கள். வட்டியில் இயங்கும் வங்கிகள் மற்றும் உண்மையான மதிப்பு இல்லாத காகித நாணயங்கள் ஆகியவை இல்லாமல் இருக்குமானால் ஒட்டுண்ணிசந்தைகளான (parasite markets) இந்த பங்குச்சநிதைகள் தோன்றுவதற்கும் அவைகள் நிலைத்து நிற்பதற்கும் வாய்ப்போ வழியோ அறவே இருக்க முடியாது, மேற்குலகத்தால் உருவாக்கப்பட்டு உலக நாடுகள் அனைத்திலும் பரவியுள்ள பங்குச்சந்தை (ள்ற்ர்ஸ்ரீந் ம்ஹழ்ந்ங்ற்ள் ர்ழ் ச்ண்ய்ஹய்ஸ்ரீண்ஹப் ம்ஹழ்ந்ங்ற்ள்) குறித்த எதார்த்தமான உண்மைகள் இதுதான்,