Tuesday, October 21, 2008

கிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து...பகுதி 5

ஆதரவு தேடல்

துன்பம் மிகுந்த அந்த வருடத்திற்குப் பிறகு, நபிகளார் மக்காவைச் சுற்றியுள்ள கூட்டத்தாரை சந்தித்துப் பேசத் தவறவில்லை. புனித யாத்திரை நேரங்களில் மக்கா வரும் கூட்டத்தாரை சந்தித்து தமக்கு ஆதரவைத் தேடினார்கள். அல்லாஹ்(சுபு) தமக்களித்த செய்தியை அனைவருக்கும் உணர்த்தவைக்கும் வரை, தமது வாக்கை நம்பி அதற்கு மதிப்பளித்து தன்னை காக்க உதவுமாறு வேண்டினார்கள். தாக்விஃப், கிந்தா, பனு அமிர் பின் ஸசாஅ, பனு கால்ப் மற்றும் பனு ஹனிஃபா போன்ற பல கூட்டத்தாரை சந்தித்து தமக்கு ஆதரவு தேடினார்கள்.


'நாங்கள் உங்கட்கு பட்டம் சூட்டி இறையருளால் எதிரிகளை நீங்கள் வெற்றி கொள்ளும் பட்சத்தில் உங்கட்குப்பிறகு நாங்கள் அறியணையில் அமரலாமா? என பனு அமிர் கூட்டத்தார் வினவினர்." அதற்கு நபிகளார், "ஆட்சியதிகாரம் என்பது அல்லாஹ் விரும்பியபடியே அமைப்பான்" என அவர்களது ஆதரவை நிராகரித்துவிட்டார்கள். அதைப்போன்றே வேறெந்த கூட்டத்தாரிடமிருந்தும் ஆதரவைப் பெற முடியவில்லை.


இருந்தபோதிலும், மதீனாவிலிருந்த கஸ்ராஜ் கூட்டத்தாரை, அல்-அகாபா எனுமிடத்தில் சந்தித்த நபிகளார், அவர்களிடம் ஆதரவு கோரினார்கள். நபிகளாரின் அழைப்பை ஏற்று அவர்கள் இஸ்லாத்தை தழுவியது மட்டுமன்றி மதீனா சென்று தமது மக்களிடையேயும் இஸ்லாத்தை பரப்பினார்.
அடுத்த வருடம் அல்-அகாபாவில் அன்சார் கூட்டத்தாரின் 12 பேர் தமது ஆதரவை அளித்து இஸ்லாத்தை தழுவினர். அவர்களுடன் நபித்தோழர் முசாப் பின் உமைர்(ரலி) அவர்கள், மதீனா சென்று அங்குள்ள மக்களுக்கு இஸ்லாத்தை விவரித்தார்கள். அவர்களது சீரிய தஆவாவினால் மதீனா நகர் முழுதும் நபிகளார்(ஸல்) பற்றியும் இஸ்லாம் பற்றியும் செய்தி பரவியது.
அதனைத் தொடர்ந்த வருடம் முசாப் அவர்கள் 73 ஆண்கள் இரு பெண்கள் ஆகியோருடன் மக்காவில் நபிகளாரை சந்தித்தார்கள். அனைவரும் நபிகளாருக்கு சத்தியப்பிரமாணம் கொடுத்து நபிகளாருக்கு ஆதரவளித்துப் பாதுகாக்க முன்வந்தார்கள். (பைஅத் அல் ஹர்ப் எனும் போர் சத்தியப்பிரமாணம்) அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நபிகளார் தமது தோழர்களை மதீனாவிற்கு இடம் பெயரப் பணித்தார்கள். அதற்குச் சிலகாலம் கழித்து, அல்லாஹ்(சுபு) வின் கட்டளை வந்த பிறகு நபிகளாரும்(ஸல்) அபுபக்கர்(ரலி) அவர்களும் மதீனா சென்றனர். அங்கு நபிகளார் முதல் இஸ்லாமிய அரசை நிறுவினார்கள்.


பொதுஜனக் கருத்தின் முக்கியத்துவம்


சமூகத்தில் பொதுவாக பரவியிருக்கும் கருத்தே அந்த சமூகத்தின் மேலோங்கிய கருத்தாக அமையும். அந்த பொதுஜனக் கருத்தானது சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக நடைபெறும் ஒட்டுமொத்த செயல்களைச் சார்ந்துள்ளது. தனியொருவரது சிந்தனையோ நலனோ இதில் எடுபடாது. சமூகத்தின் ஒட்டுமொத்தக் கருத்தான இந்தப் பொதுஜனக் கருத்து தனிமனிதக் கருத்தை அடக்கிவிடும்.


குறைஷியர் தமது முஸ்லிம் புறக்கணிப்புப் போக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது, பொதுஜனக் கருத்தின் சக்திக்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அபு ஜஹலும் ஏனைய குறைஷியத் தலைவர்களும், முஸ்லிம் புறக்கணிப்புப்போக்கை, ஒரு புனிதமான, விதிமுறைக்கு உட்பட்ட ஒரு செயலாக மக்களிடையே விளக்கிக் கூறினார்கள். இருந்த போதிலும், அந்த சமூகத்தின் பொது ஜனக் கருத்து புறக்கணிப்பிற்கு எதிராகவே இருந்ததால் தலைவர்களும் புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவரவேண்டியதாயிற்று.
இஸ்லாமிய சமூகத்தில் அந்த பொதுஜனக் கருத்து இஸ்லாத்தின் அடிப்படையில் இருப்பது அவசியம். முசாப் அவர்கள் மதீனாவினின்றும் திரும்பி நபிகளாரை சந்தித்த போது, இஸ்லாம் அனைத்து இல்லங்களிலும் புகுந்து விட்டதாகக் கூறினார்கள். அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறவில்லை மாறாக இஸ்லாம் மக்கள் மத்தியில் மேலோங்கி நிற்பதாகவே அறிவித்தார்கள். இந்த அடிப்படையிலேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இல்லாதபோதும் மதீனாவை முதல் இஸ்லாமிய தேசமாக்க நபிகளார் முடிவெடுத்தார்கள்.


பொதுஜனத் தொடர்பின் முக்கியத்துவம்


பொதுஜனக்கருத்தை சமூகத்தில் ஏற்படுத்தவேண்டுமானால் அது பொதுஜனத் தொடர்பின் வாயிலாகவே அமையும். சமூகத்தை மாற்ற நினைப்போர், அந்த சமூகத்தினரிடையே வாழவேண்டும். தனித்திருத்தலும், பின்வாங்குதலும் பொதுஜனக்கருத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு உதவாது. சமூகத்தினை ஒரு நெடிய அரசியல் போராட்டத்தின் மூலமாகவே இஸ்லாமாக மாற்ற இயலும். அந்த முயற்சியில் ஈடுபடும் ஒரு இஸ்லாமியப் போராளி, முஸ்லிம் உம்மாவின் பிரச்சனைகளையும், நலன்களையும் முழுவதுமாக கருத்தில் கொள்ள வேண்டும். உம்மாவை ஆட்கொண்டுள்ள அடக்குமுறையை(சுல்ம்) ஒதுக்கித் தள்ளி அதன் உரிமைக்காகப் பாடுபடத் து}ண்டவேண்டும். அத்தகைய அடக்குமுறையிலேயே கொடியது, முஸ்லிம் உம்மாவை, அதன் நலன்களை, அதன் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் எதிரான குஃப்ர் முறைப்படி ஆட்சிசெய்வதாகும். இஸ்லாம் ஒன்றே தம்மை பாதுகாக்க முடியும் என்ற அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்தி அதற்கு எதிராக முஸ்லிம் உம்மாமீது திணிக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளை வெறுத்தொதுக்கவேண்டும். இஸ்லாமிய சமூகத்தை நிர்மாணிப்பதற்கான அடிப்படையாகவுள்ள இவற்றைச் செயல்படுத்தாமல் வெறும் இஸ்லாமிய அரசமைப்புச்சட்டத்தை மட்டும் நடைமுறைப்படுத்தினால் போதும் எனச் சிலர் எண்ணுகின்றனர். இது நபிகளாரின் வழிமுறைக்கு மாறானதாகும்.
நபிகளார், சமுதாயத்தோடு ஒன்றி, அந்த சமூகத்தின் உணர்வுகள் இஸ்லாத்தின் அடிப்படையில் இருக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தப் பாடுபட்டார்கள். அந்தச் சமூகம், அல்லாஹ்(சுபு) விரும்பியவற்றை விரும்பவும், அல்லாஹ்(சுபு) வெறுப்பவற்றை தவிர்த்துவிடவும் படியான ஒரு சூழலை உருவாக்கினார்கள். இஸ்லாம் அச்சமூகதின் மேலோங்கிய சிந்தனையாக இருக்கவும், அச்சமூகம் ஹலால்-ஹராம் அடிப்படையில் எவற்றையும் சீர்து}க்கிப் பார்க்குமாறும் செய்தார்கள். மதீனாவில் அது நடந்தேறியதால் அங்கே ஒரு இஸ்லாமிய சமூகம், இஸ்லாமிய அரசு தோன்றியது.


கிலாஃபா வெகு து}ரத்தில் இல்லை


இறைவிசுவாசிகள், அல்லாஹ்(சுபு) மீது முழு நம்பிக்கை கொண்டு, அவனது வெற்றியும் அதன்படியான கிலாஃபாவும் அமையப்பெறும் என்பதை உறுதியாக நம்பவேண்டும். கிலாஃபா அரசு மீண்டும் வரும் என்பதற்கு நபிகளார் சான்றுரைக்கிறார்கள்.


இமாம் அஹ்மத், நபிகளார் கூறியதாக பதிந்தது,


அல்லாஹ் நாடியவரையிலும் உங்களிடையே நபித்துவம் இருக்கும், அதன்பின் அவன் விரும்பினால் அதை நீக்கிவிடுவான். பிறகு நபித்துவத்தின் மாதிரியான ஒரு கிலாஃபா அரசு அல்லாஹ் விரும்பியவரையிலும் இருக்கும். அதன்பின் அவன் விரும்பினால் அதை நீக்கிவிடுவான். அதன்பின் வம்சாவழி ஆட்சி அல்லாஹ் விரும்பும்வரை இருக்கும். அதன்பின் அவன் விரும்பினால் அதை நீக்கிவிடுவான்.அதன்பின் அடக்குமுறை ஆட்சி அல்லாஹ் விரும்பும் வரையிலும் இருக்கும்.அதன்பின் அவன் விரும்பினால் அதை நீக்கிவிடுவான். அதன்பிறகு நபிவழியில் கிலாஃபா தோன்றும். என்கிறவரை கூறி அமைதிகாத்தார்கள்.


இந்த ஹதீத் நபித்துவத்தின் அடையாளம் காட்டும் ஹதீத் ஆகும். ஏனெனில் இது பிற்காலத்தில் நடைபெற உள்ளதை விளக்குகிறது. இதில் கூறப்பட்ட நபித்துவம், பிறகு கிலாஃபா-ராஷிதா, அதன்பின் வம்சாவழி ஆட்சி அதன்பிறகு அடக்குமுறை முடியாட்சி ஆகிய அனைத்தும் நடைபெற்றுள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். மீதமுள்ள ஒன்று கடைசியில் கூறப்பட்டவாக்கியம். அதாவது நபிவழியில் மீண்டும் கிலாஃபா ஆட்சி தோன்றும்.


இஸ்லாமிய அரசின் எல்லைகள் விரிவது குறித்த மற்றொரு ஹதீதில் இமாம் அஹ்மத் மற்றும் அத் தர்மிதி, அபுகுபாயில் அறிவிப்பதாக குறிப்பிடுகிறார்கள்.
நாங்கள் அப்துல்லா பின் அம்ர் பின் அல் ஆஸ் உடன் இருந்தபோது 'கான்ஸ்டான்டிநோபில் அல்லது ரோம் எது முதலில் (இஸ்லாத்திற்காக) திறந்துவிடப்படும்" என்ற கேள்வி எழுந்தது. ... அப்துல்லா கூறினார்கள்: நாங்கள் நபிகளாரைச் சுற்றியமர்ந்து எழுதிக்கொண்டிருக்கையில் அந்தக்கேள்வி எழுந்தது. அதற்கு நபிகளார் 'ஹராகுலிஸின் நகரம்(கான்ஸ்டான்டிநோபில்) முதலில் திறக்கப்படும்" என்று கூறினார்கள்.


பைசான்டைன் பேரரசு வலிமையாக இருந்த காலத்திலேயே அதன் முக்கிய நகரான கான்ஸ்டான்டிநோபில் இஸ்லாத்தின் கீழ்வந்துவிட்டதை காண்கிறோம். இரண்டாவதான ரோமபுரி இஸ்லாத்திற்காக திறந்துவிடப்படவேண்டியுள்ளது. அதனால் அதற்காக கிலாஃபா அரசு கண்டிப்பாக வெகுவிரைவில் அமையும்.


அல்லாஹ்(சுபு)வின் உதவி


ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான் (முஹம்மத் 47: 7)


அல்லாஹ்வை விசுவாசிப்போருக்கு கண்டிப்பாக வெற்றி உண்டு என்று கூறுகிறான்.


அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். ( அல்-ஹஜ் 22: 40)


வெற்றியை அல்லாஹ்(சுபு) நிர்ணயிக்கிறான். அவன் நாடிவிட்டால் அதனை அடையும் வழியை எளிதாக்கி அதற்கான சூழ்நிலையை விசுவாசிகட்காக ஏற்படுத்திவிடுவான். அல்லாஹ்(சுபு)வின் மீதும் அவனுடைய இத் தீனின் மீதும் நம்முடைய பற்று அதிகரிக்குமானால் அவனுடைய உதவியும் நம்மை சமீபிக்கும். இறைவனின் அந்த அருட்கொடையைப் பெற அவனது கட்டளைகட்கு நாம் செவிசாய்க்க வேண்டும். அவனே அனைத்திற்கும் அதிபதி அவனே வெற்றியை அருள்வான். என்ற முழு நம்பிக்கையை ஆழ்மனதில் கொண்டு நாம் பாடுபடவேண்டும்.


ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் து}தரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்ககூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்.(அல்-அன்ஃபால் 8:24 )

No comments:

Post a Comment