Friday, October 17, 2008

முஹம்மத்(ஸல்) அவர்களின் கண்ணியம் களங்கப்படுத்தப்படும்போது முஸ்லிம்கள் அமைதி காப்பதா ?


அமெரிக்க எழுத்தாளரான ஸெர்ரி ஜோன்ஸின் The Jewel of Madina என்ற தரம்கெட்ட நு}லை வெளியிட முனைவதன் மூலம் இன்னுமொருமுறை முஸ்லிம்களை சீண்டிவிட மேற்குலகம் முனைகிறது. இந்நு}லை அமெரிக்காவில் வெளியிட்டதன் மூலம் அங்கே எழுந்த சர்ச்சைகளுக்கு பின்னர், தற்போது இந்நு}லை பிரித்தானியாவிலும் வெளியிடும் சூழ்ச்சி அரங்கேறிக்கொண்டிருக்கிறது. கருத்துச்சுதந்திரம் என்ற பேரில் இஸ்லாத்துக்கு எதிரான Londonistan என்கின்ற நு}லை வெளியிட்ட பிரித்தானிய வெளியீட்டகமே The Jewel of Madina வயும் வெளியிட முன்வந்துள்ளமை குறித்து முஸ்லிம்கள் விழிப்படைய வேண்டும்.

எமது நேசத்துக்கும், மரியாதைக்குமுரிய முஹம்மது (ஸல்)அவர்களையும் அவரின் மனைவியான விசுவாசிகளின் அன்னை ஆஇஷா (ரலி) அவர்களையும் திட்டமிட்டு அவமதிக்க எத்தனிக்கும் மேற்குலகின் முயற்சியை, இப்புத்தகம் இதுவரையில் பிரித்தானியாவில் வெளியிடப்படாதபோதிலும், அதுகுறித்து வெளியான பத்திரிகை அறிக்கைகளிலிருந்து நாம் தௌளத்தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் Denise Spelberg என்பவர் இந்நு}லைப் படித்து விட்டு பின்வருமாறு விமர்சிக்கிறார்: ‘மிக அசிங்கமானதும் முட்டாள்தனமானதுமான இந்த நு}ல் முஸ்லிம்களையும்; அவர்களது வரலாற்றையும் கேளி செய்துள்ளது’. புனிதமான வரலாற்று நிகழ்வுகளை ஒரு ஆபாசச்சித்திரமாக சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது. இதனால் ஏற்படவுள்ளதைப் பொறுத்திருந்து பார்ப்போம்' என்கிறார். ஆகவே ஒரு மேற்குலக புத்திஜீவிக்கே இந்நு}லின் உள்நோக்கம் மிகத்துல்லியமாக புரிந்துள்ளதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக எழுந்த தொடர் இடர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்து வெளியிடப்பட்ட கேளிச்சித்திரங்கள் அல் குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என்ற அபத்தமான கோஷங்கள் போன்ற திட்டமிட்ட சதிகளின் வரிசையில் இதனையும் இணைத்து நாம் ஆராய வேண்டும். இவைதான் மேற்குலக அரசியல் தலைமைகளால் சகிப்புத்தன்மை, மிதவாதம் என சிலாகித்து பேசப்படும் விழிமியங்களின் நிஜமான முகத்தோற்றமாகும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய முக்கியமான தருணத்தில் முஸ்லிம்களாகிய நாம் இது போன்ற தாக்குதல்களின் பின்னணி குறித்தும், அவற்றை இஸ்லாத்தின் வழிகாட்டலின்படி எதிர்கொள்ளவது குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரால் மேற்குலக பெறுமானங்களையும், எண்ணக்கருக்களையும் முஸ்லிம்களைக் கட்டாயப்படுத்தி ஏற்றுக் கொள்ள வைப்பதே இவ்வாறான தாக்குதல்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது அவமதித்தல் என்பதைப் நாம் விரும்பாதபோதிலும் கருத்துச்சுதந்திரத்தின் அடிப்படையில் அவமதிப்பதற்கும் நிந்திப்பதற்கும் பிறருக்;குள்ள உரிமையை நாம் முழுமையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நாம் புனிதமாக மதிக்கின்ற அம்சங்கள் நிந்திக்கப்பட்டாலும்கூட பொறுமை காக்க வேண்டும் என அவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். எனினும் அவ்வாறானதோர் நிலைப்பாட்டை நாம் ஏன் தழுவ முடியாது என்பதை பின்வருமாறு விளக்கலாம்.

முதலாவது: இன்று மதச்சார்பற்றவர்களாலும் மற்றோராலும் இஸ்லாம் நிந்திக்கப்படுவது போன்று, எந்தவொரு வகுப்பாருடைய புனித நம்பிக்கைகளையும் விளையாட்டுத்தனமாகவேனும் அவமதிப்பதற்கு இஸ்லாம் ஒரு போதும் அனுமதித்ததில்லை.
இரண்டாவது: ஒரு தீமை இடம்பெறும் பொழுது அதனை தடுப்பது ஒரு முஸ்லிமின் தலையாய கடமையாகும். நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ஒரு தீமையை கையாலோ, நாவாலோ குறைந்தபட்சம் அத்தீமையிலிருந்து வெறுத்தொதுங்கி இருப்பதன் மூலமாகவேனும் தடுக்கும்படி பணித்தார்கள். இவ்வாறு தீமையை உள்ளத்தால் மட்டும் வெறுப்பது ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும் எனவும் சுட்டிக்காட்டினார்கள். இதன்படி தீமையை உள்ளத்தால் வெறுத்தல் என்ற ஈமானின் மிகப் பலவீனமான கட்டத்தையும் தாண்டி இஸ்லாத்தை நிந்திப்பதற்கு அனுமதிக்கின்ற வரம்பில்லாத கருத்துச் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்வது அடிப்படை ஈமானையே பாதிக்கின்ற விடயமாகும். இதனை ஏற்பது ஹராமாகும்.

மூன்றாவது: பேச்சுச் சுதந்திரம் என்ற மேற்குலக மாயை சமூகத்திலுள்ள அனேக அநீதிகளுக்கு காரணமாக அமைந்து விட்டதைக் காண முடிகிறது. ஐரோப்பாவிலே நபி ஈஸா (அலை)அவர்கள் கேளி செய்யப்படுவது ஒரு சாதாரண விடயமாகிவிட்டது. இத்தகைய பாரிய அநியாயத்தை மேற்குலகு, குறிப்பாக கிருஸ்தவர்கள் கண்டு கொள்வதில்லை. மேற்குலகு மனித வரலாற்றின் நாயகர்களை அவமதிப்பதை சதாரண விடயமாக எடுத்துக்கொள்கின்ற அதேநிலையில், தமது பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் அவமதிக்கப்படும் போது கவலைப்படுகிறது. இப்படி ஒரு முரண்பாடான நிலைப்பாடே இவர்களிடம் காணப்படுகிறது.இச்சமூகத்தைப் பொறுத்தவரையில் மட்டுப்படுத்தப்படாத பேச்சுச் சுதந்திரம் என்பது பிறரை அவமரியாதை செய்வதற்கான சுதந்திரமேயாகும். இவ்வாறான ஒரு சமூகத்தில் அமைதியோ சாந்தியோ நிலவ முடியாது. ஐரோப்பிய வரலாற்றை மீட்டிப்பார்க்கின்ற போது அவர்களால் பன்மைத்துவத்தை அனுசரித்துப்போக முடியவில்லை என்பது புலனாகின்றது. மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற உரிமை பிறரை அவமதித்து, அவர்களை ஒடுக்கும் உரிமையாக புது வடிவம் பூண்டுள்ளமையை காண முடிகிறது.
இந்தப்புத்தகத்தின் வெளியீடு முஸ்லிம்களை ஆத்திரமூட்டுவதற்கென்றே மேற்கொள்ளப்பட்ட ஒரு கீழ்த்தரமான செயற்பாடாக இருப்பினுமஇ;; ஆத்திரமூட்டலுக்கு எதிராக ஏதாவது வன்முறைகளில் முஸ்லிம்கள் ஈடுபடும் போது இந்தப்புத்தகத்துக்கான விளம்பரமாகவே அது அமைந்து அதன் வெளியீட்டாளர்களுக்கே மில்லியன் கணக்கான இலாபத்தை ஈட்டிக் கொடுக்க வாய்ப்பாகி விடும்.

எனவே இந்த சவாலை முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்கொள்வது?

1.இஸ்லாத்தினதும் முஸலிம்களினதும் நலனைப் பாதுகாக்கின்ற கிலாபா அரசொன்று இல்லாத நிலையில் இஸ்லாத்தின் கண்ணியத்தையும் முஸ்லிம்களின் சுயமரியாதையையும் காப்பது சாத்தியமில்லை என்பதை முஸ்லிம்கள் முதலில் உணர வேண்டும்.கிலாபா ஆட்சி நிலைபெற்றிருந்த போது அல்லாஹ்வையும் அவனது து}தர் (ஸல்) அவர்களையும் கேளி செய்வதற்கு எவரும் இலகுவில் துணியவில்லை என்பதற்கு வரலாறு சான்றாகும்.
ஆகவே கிலாபாவை மீண்டும் நிலைநாட்டுவது தான் இதற்கு நிரந்தரத்தீர்வாக அமையும்.இன்று மேற்குலக தலைவர்கள் சுரண்டலையும் ஆக்கிரமிப்பையும் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தாத ஜனநாயகம்இ சுதந்திரம் ஆகியவற்றை தமது விழுமியங்கள் எனக் கூறிக்கொண்டு அனைத்து நிலையிலும் அவற்றைக் காப்பதற்காக பாடுபடுகின்ற அதே வேளை எமது ஆட்சியாளர்களோ தமது சுயநலனை மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். அண்மையில் சஊதி அரச குடும்பம் தமக்கும் பிரித்தானிய அரசுக்குமிடையிலான ஆயுத விற்பனையோடு தொடர்பான ஊழல் பற்றிய வழக்கு விசாரணையை தமது செல்வாக்கைப் பயன்படுத்தி அகற்றிய சம்பவம் இதற்கொரு நடைமுறை உதாரணமாகும். ஆகவே இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கின்ற ஒரு கிலாபாவை மீண்டும் நிலைநாட்டுவதற்கான முயற்சிகளில் முழு ஆர்வத்துடனும் தியாகத்துடனும் முஸ்லிம்கள் இணைந்து கொள்ள வேண்டும். இது போன்ற இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான புதிய தாக்குதல்கள்; எழும்போதெல்லாம் கிலாபாவை நிலைநாட்டுவதற்கான எமது முயற்சிகள் பன்மடங்காக பெருக வேண்டும்.

2.இறைத்து}தர்களையே மதிக்காத ஒரு சமூகத்திலே சதாரண தனி மனிதனுக்கு மரியாதை கிட்டும் என எதிர்பார்க்க முடியாது. இதன் காரணமாகவே மேற்குலகிலே குற்றச் செயல்கள் மலிந்தஇ பாதுகாப்பும் அமைதியும் இல்லாத ஒரு சு10ழல் உருவாகியுள்ளது என்ற யதார்த்த நிலையை விவாதங்கள், கலந்துரையாடல்கள், கட்டுரைககள், வெகுஜன ஊடகங்கள் மூலம் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும். தேவையேற்பட்டால் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு ஊர்வலங்களில் கலந்து கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

3. இச்சந்தர்ப்பத்தில் முஹம்மது (ஸல்)அவர்களின் உண்மைத்தன்மை என்ன என்பது பற்றி அறிய பலர் முனைவார்கள். முஸ்லிம்களாகிய நாம் இதனை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி படைப்புகளிலே மிகச் சிறந்தவரும் மிக அழகிய உதாரண புருஷருமான முஹம்மது (ஸல்)அவர்கள் பற்றிய தெளிவான அறிவை உலக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.ஒருவேளை நெதர்லாந்து அரசியல்வாதியான புநநசவ றுடைனநச இஸ்லாத்துக்கு எதிராக தயாரித்த திரைப்படம் எந்த வெற்றியையும் அளிக்காதுஇ அதிகமானோரால் புறக்கணிக்கப்பட்டது போன்று இந்தப் புத்தமும் மக்களால் புறக்கணிக்கப்படலாம். அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக் கெதிரான கேளிச் சித்திரத்தை மேற்குலக அரசியல் வாதிகளும் வெகுஜன தொடர்பு சாதனங்களும் ஆதரித்தது போன்று இப்புத்தகத்தையும் ஆதரிக்கலாம்.எவ்வாறான நிலை ஏற்பட்ட போதிலும் முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்து எழுந்து இதனைக் கண்டிக்க வேண்டும். அத்தோடு நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் ஆழமாகவும், து}ய்மையாகவும் நேசிக்கின்றோம் என்பதற்கு அல்லாஹ்வுக்கு முன் சான்று பகர இச்சந்தப்பர்த்தை ஆர்வத்துடன் பயன்படுத்த வேண்டும்.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்...
ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, 'அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், 'நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது. ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள். (61:14)

No comments:

Post a Comment