Tuesday, October 21, 2008

கிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து...பகுதி 5

ஆதரவு தேடல்

துன்பம் மிகுந்த அந்த வருடத்திற்குப் பிறகு, நபிகளார் மக்காவைச் சுற்றியுள்ள கூட்டத்தாரை சந்தித்துப் பேசத் தவறவில்லை. புனித யாத்திரை நேரங்களில் மக்கா வரும் கூட்டத்தாரை சந்தித்து தமக்கு ஆதரவைத் தேடினார்கள். அல்லாஹ்(சுபு) தமக்களித்த செய்தியை அனைவருக்கும் உணர்த்தவைக்கும் வரை, தமது வாக்கை நம்பி அதற்கு மதிப்பளித்து தன்னை காக்க உதவுமாறு வேண்டினார்கள். தாக்விஃப், கிந்தா, பனு அமிர் பின் ஸசாஅ, பனு கால்ப் மற்றும் பனு ஹனிஃபா போன்ற பல கூட்டத்தாரை சந்தித்து தமக்கு ஆதரவு தேடினார்கள்.


'நாங்கள் உங்கட்கு பட்டம் சூட்டி இறையருளால் எதிரிகளை நீங்கள் வெற்றி கொள்ளும் பட்சத்தில் உங்கட்குப்பிறகு நாங்கள் அறியணையில் அமரலாமா? என பனு அமிர் கூட்டத்தார் வினவினர்." அதற்கு நபிகளார், "ஆட்சியதிகாரம் என்பது அல்லாஹ் விரும்பியபடியே அமைப்பான்" என அவர்களது ஆதரவை நிராகரித்துவிட்டார்கள். அதைப்போன்றே வேறெந்த கூட்டத்தாரிடமிருந்தும் ஆதரவைப் பெற முடியவில்லை.


இருந்தபோதிலும், மதீனாவிலிருந்த கஸ்ராஜ் கூட்டத்தாரை, அல்-அகாபா எனுமிடத்தில் சந்தித்த நபிகளார், அவர்களிடம் ஆதரவு கோரினார்கள். நபிகளாரின் அழைப்பை ஏற்று அவர்கள் இஸ்லாத்தை தழுவியது மட்டுமன்றி மதீனா சென்று தமது மக்களிடையேயும் இஸ்லாத்தை பரப்பினார்.
அடுத்த வருடம் அல்-அகாபாவில் அன்சார் கூட்டத்தாரின் 12 பேர் தமது ஆதரவை அளித்து இஸ்லாத்தை தழுவினர். அவர்களுடன் நபித்தோழர் முசாப் பின் உமைர்(ரலி) அவர்கள், மதீனா சென்று அங்குள்ள மக்களுக்கு இஸ்லாத்தை விவரித்தார்கள். அவர்களது சீரிய தஆவாவினால் மதீனா நகர் முழுதும் நபிகளார்(ஸல்) பற்றியும் இஸ்லாம் பற்றியும் செய்தி பரவியது.
அதனைத் தொடர்ந்த வருடம் முசாப் அவர்கள் 73 ஆண்கள் இரு பெண்கள் ஆகியோருடன் மக்காவில் நபிகளாரை சந்தித்தார்கள். அனைவரும் நபிகளாருக்கு சத்தியப்பிரமாணம் கொடுத்து நபிகளாருக்கு ஆதரவளித்துப் பாதுகாக்க முன்வந்தார்கள். (பைஅத் அல் ஹர்ப் எனும் போர் சத்தியப்பிரமாணம்) அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நபிகளார் தமது தோழர்களை மதீனாவிற்கு இடம் பெயரப் பணித்தார்கள். அதற்குச் சிலகாலம் கழித்து, அல்லாஹ்(சுபு) வின் கட்டளை வந்த பிறகு நபிகளாரும்(ஸல்) அபுபக்கர்(ரலி) அவர்களும் மதீனா சென்றனர். அங்கு நபிகளார் முதல் இஸ்லாமிய அரசை நிறுவினார்கள்.


பொதுஜனக் கருத்தின் முக்கியத்துவம்


சமூகத்தில் பொதுவாக பரவியிருக்கும் கருத்தே அந்த சமூகத்தின் மேலோங்கிய கருத்தாக அமையும். அந்த பொதுஜனக் கருத்தானது சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக நடைபெறும் ஒட்டுமொத்த செயல்களைச் சார்ந்துள்ளது. தனியொருவரது சிந்தனையோ நலனோ இதில் எடுபடாது. சமூகத்தின் ஒட்டுமொத்தக் கருத்தான இந்தப் பொதுஜனக் கருத்து தனிமனிதக் கருத்தை அடக்கிவிடும்.


குறைஷியர் தமது முஸ்லிம் புறக்கணிப்புப் போக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது, பொதுஜனக் கருத்தின் சக்திக்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அபு ஜஹலும் ஏனைய குறைஷியத் தலைவர்களும், முஸ்லிம் புறக்கணிப்புப்போக்கை, ஒரு புனிதமான, விதிமுறைக்கு உட்பட்ட ஒரு செயலாக மக்களிடையே விளக்கிக் கூறினார்கள். இருந்த போதிலும், அந்த சமூகத்தின் பொது ஜனக் கருத்து புறக்கணிப்பிற்கு எதிராகவே இருந்ததால் தலைவர்களும் புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவரவேண்டியதாயிற்று.
இஸ்லாமிய சமூகத்தில் அந்த பொதுஜனக் கருத்து இஸ்லாத்தின் அடிப்படையில் இருப்பது அவசியம். முசாப் அவர்கள் மதீனாவினின்றும் திரும்பி நபிகளாரை சந்தித்த போது, இஸ்லாம் அனைத்து இல்லங்களிலும் புகுந்து விட்டதாகக் கூறினார்கள். அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறவில்லை மாறாக இஸ்லாம் மக்கள் மத்தியில் மேலோங்கி நிற்பதாகவே அறிவித்தார்கள். இந்த அடிப்படையிலேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இல்லாதபோதும் மதீனாவை முதல் இஸ்லாமிய தேசமாக்க நபிகளார் முடிவெடுத்தார்கள்.


பொதுஜனத் தொடர்பின் முக்கியத்துவம்


பொதுஜனக்கருத்தை சமூகத்தில் ஏற்படுத்தவேண்டுமானால் அது பொதுஜனத் தொடர்பின் வாயிலாகவே அமையும். சமூகத்தை மாற்ற நினைப்போர், அந்த சமூகத்தினரிடையே வாழவேண்டும். தனித்திருத்தலும், பின்வாங்குதலும் பொதுஜனக்கருத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு உதவாது. சமூகத்தினை ஒரு நெடிய அரசியல் போராட்டத்தின் மூலமாகவே இஸ்லாமாக மாற்ற இயலும். அந்த முயற்சியில் ஈடுபடும் ஒரு இஸ்லாமியப் போராளி, முஸ்லிம் உம்மாவின் பிரச்சனைகளையும், நலன்களையும் முழுவதுமாக கருத்தில் கொள்ள வேண்டும். உம்மாவை ஆட்கொண்டுள்ள அடக்குமுறையை(சுல்ம்) ஒதுக்கித் தள்ளி அதன் உரிமைக்காகப் பாடுபடத் து}ண்டவேண்டும். அத்தகைய அடக்குமுறையிலேயே கொடியது, முஸ்லிம் உம்மாவை, அதன் நலன்களை, அதன் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் எதிரான குஃப்ர் முறைப்படி ஆட்சிசெய்வதாகும். இஸ்லாம் ஒன்றே தம்மை பாதுகாக்க முடியும் என்ற அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்தி அதற்கு எதிராக முஸ்லிம் உம்மாமீது திணிக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளை வெறுத்தொதுக்கவேண்டும். இஸ்லாமிய சமூகத்தை நிர்மாணிப்பதற்கான அடிப்படையாகவுள்ள இவற்றைச் செயல்படுத்தாமல் வெறும் இஸ்லாமிய அரசமைப்புச்சட்டத்தை மட்டும் நடைமுறைப்படுத்தினால் போதும் எனச் சிலர் எண்ணுகின்றனர். இது நபிகளாரின் வழிமுறைக்கு மாறானதாகும்.
நபிகளார், சமுதாயத்தோடு ஒன்றி, அந்த சமூகத்தின் உணர்வுகள் இஸ்லாத்தின் அடிப்படையில் இருக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தப் பாடுபட்டார்கள். அந்தச் சமூகம், அல்லாஹ்(சுபு) விரும்பியவற்றை விரும்பவும், அல்லாஹ்(சுபு) வெறுப்பவற்றை தவிர்த்துவிடவும் படியான ஒரு சூழலை உருவாக்கினார்கள். இஸ்லாம் அச்சமூகதின் மேலோங்கிய சிந்தனையாக இருக்கவும், அச்சமூகம் ஹலால்-ஹராம் அடிப்படையில் எவற்றையும் சீர்து}க்கிப் பார்க்குமாறும் செய்தார்கள். மதீனாவில் அது நடந்தேறியதால் அங்கே ஒரு இஸ்லாமிய சமூகம், இஸ்லாமிய அரசு தோன்றியது.


கிலாஃபா வெகு து}ரத்தில் இல்லை


இறைவிசுவாசிகள், அல்லாஹ்(சுபு) மீது முழு நம்பிக்கை கொண்டு, அவனது வெற்றியும் அதன்படியான கிலாஃபாவும் அமையப்பெறும் என்பதை உறுதியாக நம்பவேண்டும். கிலாஃபா அரசு மீண்டும் வரும் என்பதற்கு நபிகளார் சான்றுரைக்கிறார்கள்.


இமாம் அஹ்மத், நபிகளார் கூறியதாக பதிந்தது,


அல்லாஹ் நாடியவரையிலும் உங்களிடையே நபித்துவம் இருக்கும், அதன்பின் அவன் விரும்பினால் அதை நீக்கிவிடுவான். பிறகு நபித்துவத்தின் மாதிரியான ஒரு கிலாஃபா அரசு அல்லாஹ் விரும்பியவரையிலும் இருக்கும். அதன்பின் அவன் விரும்பினால் அதை நீக்கிவிடுவான். அதன்பின் வம்சாவழி ஆட்சி அல்லாஹ் விரும்பும்வரை இருக்கும். அதன்பின் அவன் விரும்பினால் அதை நீக்கிவிடுவான்.அதன்பின் அடக்குமுறை ஆட்சி அல்லாஹ் விரும்பும் வரையிலும் இருக்கும்.அதன்பின் அவன் விரும்பினால் அதை நீக்கிவிடுவான். அதன்பிறகு நபிவழியில் கிலாஃபா தோன்றும். என்கிறவரை கூறி அமைதிகாத்தார்கள்.


இந்த ஹதீத் நபித்துவத்தின் அடையாளம் காட்டும் ஹதீத் ஆகும். ஏனெனில் இது பிற்காலத்தில் நடைபெற உள்ளதை விளக்குகிறது. இதில் கூறப்பட்ட நபித்துவம், பிறகு கிலாஃபா-ராஷிதா, அதன்பின் வம்சாவழி ஆட்சி அதன்பிறகு அடக்குமுறை முடியாட்சி ஆகிய அனைத்தும் நடைபெற்றுள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். மீதமுள்ள ஒன்று கடைசியில் கூறப்பட்டவாக்கியம். அதாவது நபிவழியில் மீண்டும் கிலாஃபா ஆட்சி தோன்றும்.


இஸ்லாமிய அரசின் எல்லைகள் விரிவது குறித்த மற்றொரு ஹதீதில் இமாம் அஹ்மத் மற்றும் அத் தர்மிதி, அபுகுபாயில் அறிவிப்பதாக குறிப்பிடுகிறார்கள்.
நாங்கள் அப்துல்லா பின் அம்ர் பின் அல் ஆஸ் உடன் இருந்தபோது 'கான்ஸ்டான்டிநோபில் அல்லது ரோம் எது முதலில் (இஸ்லாத்திற்காக) திறந்துவிடப்படும்" என்ற கேள்வி எழுந்தது. ... அப்துல்லா கூறினார்கள்: நாங்கள் நபிகளாரைச் சுற்றியமர்ந்து எழுதிக்கொண்டிருக்கையில் அந்தக்கேள்வி எழுந்தது. அதற்கு நபிகளார் 'ஹராகுலிஸின் நகரம்(கான்ஸ்டான்டிநோபில்) முதலில் திறக்கப்படும்" என்று கூறினார்கள்.


பைசான்டைன் பேரரசு வலிமையாக இருந்த காலத்திலேயே அதன் முக்கிய நகரான கான்ஸ்டான்டிநோபில் இஸ்லாத்தின் கீழ்வந்துவிட்டதை காண்கிறோம். இரண்டாவதான ரோமபுரி இஸ்லாத்திற்காக திறந்துவிடப்படவேண்டியுள்ளது. அதனால் அதற்காக கிலாஃபா அரசு கண்டிப்பாக வெகுவிரைவில் அமையும்.


அல்லாஹ்(சுபு)வின் உதவி


ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான் (முஹம்மத் 47: 7)


அல்லாஹ்வை விசுவாசிப்போருக்கு கண்டிப்பாக வெற்றி உண்டு என்று கூறுகிறான்.


அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். ( அல்-ஹஜ் 22: 40)


வெற்றியை அல்லாஹ்(சுபு) நிர்ணயிக்கிறான். அவன் நாடிவிட்டால் அதனை அடையும் வழியை எளிதாக்கி அதற்கான சூழ்நிலையை விசுவாசிகட்காக ஏற்படுத்திவிடுவான். அல்லாஹ்(சுபு)வின் மீதும் அவனுடைய இத் தீனின் மீதும் நம்முடைய பற்று அதிகரிக்குமானால் அவனுடைய உதவியும் நம்மை சமீபிக்கும். இறைவனின் அந்த அருட்கொடையைப் பெற அவனது கட்டளைகட்கு நாம் செவிசாய்க்க வேண்டும். அவனே அனைத்திற்கும் அதிபதி அவனே வெற்றியை அருள்வான். என்ற முழு நம்பிக்கையை ஆழ்மனதில் கொண்டு நாம் பாடுபடவேண்டும்.


ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் து}தரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்ககூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்.(அல்-அன்ஃபால் 8:24 )

Friday, October 17, 2008

முஹம்மத்(ஸல்) அவர்களின் கண்ணியம் களங்கப்படுத்தப்படும்போது முஸ்லிம்கள் அமைதி காப்பதா ?


அமெரிக்க எழுத்தாளரான ஸெர்ரி ஜோன்ஸின் The Jewel of Madina என்ற தரம்கெட்ட நு}லை வெளியிட முனைவதன் மூலம் இன்னுமொருமுறை முஸ்லிம்களை சீண்டிவிட மேற்குலகம் முனைகிறது. இந்நு}லை அமெரிக்காவில் வெளியிட்டதன் மூலம் அங்கே எழுந்த சர்ச்சைகளுக்கு பின்னர், தற்போது இந்நு}லை பிரித்தானியாவிலும் வெளியிடும் சூழ்ச்சி அரங்கேறிக்கொண்டிருக்கிறது. கருத்துச்சுதந்திரம் என்ற பேரில் இஸ்லாத்துக்கு எதிரான Londonistan என்கின்ற நு}லை வெளியிட்ட பிரித்தானிய வெளியீட்டகமே The Jewel of Madina வயும் வெளியிட முன்வந்துள்ளமை குறித்து முஸ்லிம்கள் விழிப்படைய வேண்டும்.

எமது நேசத்துக்கும், மரியாதைக்குமுரிய முஹம்மது (ஸல்)அவர்களையும் அவரின் மனைவியான விசுவாசிகளின் அன்னை ஆஇஷா (ரலி) அவர்களையும் திட்டமிட்டு அவமதிக்க எத்தனிக்கும் மேற்குலகின் முயற்சியை, இப்புத்தகம் இதுவரையில் பிரித்தானியாவில் வெளியிடப்படாதபோதிலும், அதுகுறித்து வெளியான பத்திரிகை அறிக்கைகளிலிருந்து நாம் தௌளத்தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் Denise Spelberg என்பவர் இந்நு}லைப் படித்து விட்டு பின்வருமாறு விமர்சிக்கிறார்: ‘மிக அசிங்கமானதும் முட்டாள்தனமானதுமான இந்த நு}ல் முஸ்லிம்களையும்; அவர்களது வரலாற்றையும் கேளி செய்துள்ளது’. புனிதமான வரலாற்று நிகழ்வுகளை ஒரு ஆபாசச்சித்திரமாக சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது. இதனால் ஏற்படவுள்ளதைப் பொறுத்திருந்து பார்ப்போம்' என்கிறார். ஆகவே ஒரு மேற்குலக புத்திஜீவிக்கே இந்நு}லின் உள்நோக்கம் மிகத்துல்லியமாக புரிந்துள்ளதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக எழுந்த தொடர் இடர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்து வெளியிடப்பட்ட கேளிச்சித்திரங்கள் அல் குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என்ற அபத்தமான கோஷங்கள் போன்ற திட்டமிட்ட சதிகளின் வரிசையில் இதனையும் இணைத்து நாம் ஆராய வேண்டும். இவைதான் மேற்குலக அரசியல் தலைமைகளால் சகிப்புத்தன்மை, மிதவாதம் என சிலாகித்து பேசப்படும் விழிமியங்களின் நிஜமான முகத்தோற்றமாகும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய முக்கியமான தருணத்தில் முஸ்லிம்களாகிய நாம் இது போன்ற தாக்குதல்களின் பின்னணி குறித்தும், அவற்றை இஸ்லாத்தின் வழிகாட்டலின்படி எதிர்கொள்ளவது குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரால் மேற்குலக பெறுமானங்களையும், எண்ணக்கருக்களையும் முஸ்லிம்களைக் கட்டாயப்படுத்தி ஏற்றுக் கொள்ள வைப்பதே இவ்வாறான தாக்குதல்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது அவமதித்தல் என்பதைப் நாம் விரும்பாதபோதிலும் கருத்துச்சுதந்திரத்தின் அடிப்படையில் அவமதிப்பதற்கும் நிந்திப்பதற்கும் பிறருக்;குள்ள உரிமையை நாம் முழுமையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நாம் புனிதமாக மதிக்கின்ற அம்சங்கள் நிந்திக்கப்பட்டாலும்கூட பொறுமை காக்க வேண்டும் என அவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். எனினும் அவ்வாறானதோர் நிலைப்பாட்டை நாம் ஏன் தழுவ முடியாது என்பதை பின்வருமாறு விளக்கலாம்.

முதலாவது: இன்று மதச்சார்பற்றவர்களாலும் மற்றோராலும் இஸ்லாம் நிந்திக்கப்படுவது போன்று, எந்தவொரு வகுப்பாருடைய புனித நம்பிக்கைகளையும் விளையாட்டுத்தனமாகவேனும் அவமதிப்பதற்கு இஸ்லாம் ஒரு போதும் அனுமதித்ததில்லை.
இரண்டாவது: ஒரு தீமை இடம்பெறும் பொழுது அதனை தடுப்பது ஒரு முஸ்லிமின் தலையாய கடமையாகும். நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ஒரு தீமையை கையாலோ, நாவாலோ குறைந்தபட்சம் அத்தீமையிலிருந்து வெறுத்தொதுங்கி இருப்பதன் மூலமாகவேனும் தடுக்கும்படி பணித்தார்கள். இவ்வாறு தீமையை உள்ளத்தால் மட்டும் வெறுப்பது ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும் எனவும் சுட்டிக்காட்டினார்கள். இதன்படி தீமையை உள்ளத்தால் வெறுத்தல் என்ற ஈமானின் மிகப் பலவீனமான கட்டத்தையும் தாண்டி இஸ்லாத்தை நிந்திப்பதற்கு அனுமதிக்கின்ற வரம்பில்லாத கருத்துச் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்வது அடிப்படை ஈமானையே பாதிக்கின்ற விடயமாகும். இதனை ஏற்பது ஹராமாகும்.

மூன்றாவது: பேச்சுச் சுதந்திரம் என்ற மேற்குலக மாயை சமூகத்திலுள்ள அனேக அநீதிகளுக்கு காரணமாக அமைந்து விட்டதைக் காண முடிகிறது. ஐரோப்பாவிலே நபி ஈஸா (அலை)அவர்கள் கேளி செய்யப்படுவது ஒரு சாதாரண விடயமாகிவிட்டது. இத்தகைய பாரிய அநியாயத்தை மேற்குலகு, குறிப்பாக கிருஸ்தவர்கள் கண்டு கொள்வதில்லை. மேற்குலகு மனித வரலாற்றின் நாயகர்களை அவமதிப்பதை சதாரண விடயமாக எடுத்துக்கொள்கின்ற அதேநிலையில், தமது பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் அவமதிக்கப்படும் போது கவலைப்படுகிறது. இப்படி ஒரு முரண்பாடான நிலைப்பாடே இவர்களிடம் காணப்படுகிறது.இச்சமூகத்தைப் பொறுத்தவரையில் மட்டுப்படுத்தப்படாத பேச்சுச் சுதந்திரம் என்பது பிறரை அவமரியாதை செய்வதற்கான சுதந்திரமேயாகும். இவ்வாறான ஒரு சமூகத்தில் அமைதியோ சாந்தியோ நிலவ முடியாது. ஐரோப்பிய வரலாற்றை மீட்டிப்பார்க்கின்ற போது அவர்களால் பன்மைத்துவத்தை அனுசரித்துப்போக முடியவில்லை என்பது புலனாகின்றது. மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற உரிமை பிறரை அவமதித்து, அவர்களை ஒடுக்கும் உரிமையாக புது வடிவம் பூண்டுள்ளமையை காண முடிகிறது.
இந்தப்புத்தகத்தின் வெளியீடு முஸ்லிம்களை ஆத்திரமூட்டுவதற்கென்றே மேற்கொள்ளப்பட்ட ஒரு கீழ்த்தரமான செயற்பாடாக இருப்பினுமஇ;; ஆத்திரமூட்டலுக்கு எதிராக ஏதாவது வன்முறைகளில் முஸ்லிம்கள் ஈடுபடும் போது இந்தப்புத்தகத்துக்கான விளம்பரமாகவே அது அமைந்து அதன் வெளியீட்டாளர்களுக்கே மில்லியன் கணக்கான இலாபத்தை ஈட்டிக் கொடுக்க வாய்ப்பாகி விடும்.

எனவே இந்த சவாலை முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்கொள்வது?

1.இஸ்லாத்தினதும் முஸலிம்களினதும் நலனைப் பாதுகாக்கின்ற கிலாபா அரசொன்று இல்லாத நிலையில் இஸ்லாத்தின் கண்ணியத்தையும் முஸ்லிம்களின் சுயமரியாதையையும் காப்பது சாத்தியமில்லை என்பதை முஸ்லிம்கள் முதலில் உணர வேண்டும்.கிலாபா ஆட்சி நிலைபெற்றிருந்த போது அல்லாஹ்வையும் அவனது து}தர் (ஸல்) அவர்களையும் கேளி செய்வதற்கு எவரும் இலகுவில் துணியவில்லை என்பதற்கு வரலாறு சான்றாகும்.
ஆகவே கிலாபாவை மீண்டும் நிலைநாட்டுவது தான் இதற்கு நிரந்தரத்தீர்வாக அமையும்.இன்று மேற்குலக தலைவர்கள் சுரண்டலையும் ஆக்கிரமிப்பையும் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தாத ஜனநாயகம்இ சுதந்திரம் ஆகியவற்றை தமது விழுமியங்கள் எனக் கூறிக்கொண்டு அனைத்து நிலையிலும் அவற்றைக் காப்பதற்காக பாடுபடுகின்ற அதே வேளை எமது ஆட்சியாளர்களோ தமது சுயநலனை மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். அண்மையில் சஊதி அரச குடும்பம் தமக்கும் பிரித்தானிய அரசுக்குமிடையிலான ஆயுத விற்பனையோடு தொடர்பான ஊழல் பற்றிய வழக்கு விசாரணையை தமது செல்வாக்கைப் பயன்படுத்தி அகற்றிய சம்பவம் இதற்கொரு நடைமுறை உதாரணமாகும். ஆகவே இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கின்ற ஒரு கிலாபாவை மீண்டும் நிலைநாட்டுவதற்கான முயற்சிகளில் முழு ஆர்வத்துடனும் தியாகத்துடனும் முஸ்லிம்கள் இணைந்து கொள்ள வேண்டும். இது போன்ற இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான புதிய தாக்குதல்கள்; எழும்போதெல்லாம் கிலாபாவை நிலைநாட்டுவதற்கான எமது முயற்சிகள் பன்மடங்காக பெருக வேண்டும்.

2.இறைத்து}தர்களையே மதிக்காத ஒரு சமூகத்திலே சதாரண தனி மனிதனுக்கு மரியாதை கிட்டும் என எதிர்பார்க்க முடியாது. இதன் காரணமாகவே மேற்குலகிலே குற்றச் செயல்கள் மலிந்தஇ பாதுகாப்பும் அமைதியும் இல்லாத ஒரு சு10ழல் உருவாகியுள்ளது என்ற யதார்த்த நிலையை விவாதங்கள், கலந்துரையாடல்கள், கட்டுரைககள், வெகுஜன ஊடகங்கள் மூலம் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும். தேவையேற்பட்டால் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு ஊர்வலங்களில் கலந்து கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

3. இச்சந்தர்ப்பத்தில் முஹம்மது (ஸல்)அவர்களின் உண்மைத்தன்மை என்ன என்பது பற்றி அறிய பலர் முனைவார்கள். முஸ்லிம்களாகிய நாம் இதனை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி படைப்புகளிலே மிகச் சிறந்தவரும் மிக அழகிய உதாரண புருஷருமான முஹம்மது (ஸல்)அவர்கள் பற்றிய தெளிவான அறிவை உலக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.ஒருவேளை நெதர்லாந்து அரசியல்வாதியான புநநசவ றுடைனநச இஸ்லாத்துக்கு எதிராக தயாரித்த திரைப்படம் எந்த வெற்றியையும் அளிக்காதுஇ அதிகமானோரால் புறக்கணிக்கப்பட்டது போன்று இந்தப் புத்தமும் மக்களால் புறக்கணிக்கப்படலாம். அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக் கெதிரான கேளிச் சித்திரத்தை மேற்குலக அரசியல் வாதிகளும் வெகுஜன தொடர்பு சாதனங்களும் ஆதரித்தது போன்று இப்புத்தகத்தையும் ஆதரிக்கலாம்.எவ்வாறான நிலை ஏற்பட்ட போதிலும் முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்து எழுந்து இதனைக் கண்டிக்க வேண்டும். அத்தோடு நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் ஆழமாகவும், து}ய்மையாகவும் நேசிக்கின்றோம் என்பதற்கு அல்லாஹ்வுக்கு முன் சான்று பகர இச்சந்தப்பர்த்தை ஆர்வத்துடன் பயன்படுத்த வேண்டும்.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்...
ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, 'அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், 'நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது. ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள். (61:14)

Sunday, October 12, 2008

அரசியல் பார்வை


அரசியல் என்பது நபிகளார்(ஸல்) அவர்களின் சுன்னாவாகும் “மக்களின் நலன்களைப் பேணிக்காப்பது” என்பதே இஸ்லாத்தில் அரசியல் என வரையறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய அரசியலே கலீஃபாக்களால் நடைமுறையில் அமுல் செய்யப்பட்டது. அது இஸ்லாத்தை நிலைநாட்டுவதாகவும், தஃவாவை(அழைப்புப்பணியை) செயல்படுத்துவதாகவும் அமைகிறது.

அபுஹாசிம் அறிவிப்பதாக முஸ்லிமில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : “நான் அபுஹ_ரைராவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அடிக்கடி சொல்லிய ரசூலுல்லாவின்(ஸல்) கூற்று என்ன தெரியுமா? 'நபிமார்கள் மக்கள் நலன்களை பேணிக்காத்தனர். ஒரு நபியின் மறைவிற்குப்பின்னர் வேறு நபிகள் தோன்றினர். ஆனால் எனது மறைவிற்குப்பின்னர் வேறு நபி யாரும் வரமாட்டார்கள். ஆனால் அதிகமாக கலீஃபாக்கள் தோன்றுவார்கள்." என்பதாகும்." மேற்கண்ட கூற்றில் ‘மக்கள் நலன்’ என்பது ‘சியாசா’ எனும் (அரபி மூலம்) அடிப்படை வார்த்தையினின்றும் தோன்றியது. எனவே அரசியல் என்பது இஸ்லாத்தில் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளதுடன் அது மிக முக்கியமான நபிவழியுமாகும்.

அப்துல்லாஹ்-இப்ன்-உமர் அவர்களின் அறிவிப்பில் ரசு10லுல்லாஹ்(ஸல்) கூறியதாக புகாரியில் பின்வருமாறு பதியப்பட்டுள்ளது. “நீங்கள் ஒவ்வொருவரும் மேய்ப்பாளர்கள். உங்கள் ஒவ்வொருவர் மீதும் கேள்விகணக்குண்டு. அதேபோல ஒரு இமாம் மக்களைக்கட்டிக்காப்பவராவர். அவரிடமும் அவரது பொறுப்புகள் பற்றி மறுமைநாளில் வினவப்படும். இக்கூற்றின் அரபி மூலத்தில் 'ராயின்' எனும் வார்த்தை 'மேய்ப்போர்", 'கட்டிக்காப்பவர்" என்கிற இடத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இது மக்கள் நலன் என்கிற பொருளையே குறிக்கும். எனவே மக்கள் நலன் காப்பது என்பதே அரசியலாகும். அப்பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அரசியல்வாதியாவர். நாம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தோமேயானால் அதில் அரசியல் நடவடிக்கைகள் மிகுந்திருப்பதை அறிய முடியும். அவையே நமக்கு உள்நாட்;டு வெளிநாட்டு அரசியல் நடத்துவதன் சான்றும் வழிகாட்டியுமாகும். பத்ர் போருக்கு முன்னர் ஜிஹாத் கட்டளை வந்த பின்னர் நபிகளாரின்(ஸல்) நடவடிக்கைகள் அவரது அரசியல் இராணுவ விழிப்புணர்வையே எடுத்துரைக்கின்றன. ரஸ}லுல்லாவின்(ஸல்) தலைமையில் மதீனாவிலிருந்த இஸ்லாமிய அரசு குறைஷியர்களுக்கு எதிராக மேற்கொண்;ட போர் ஆயத்தப்பணிகள் அவர்களின் மத்தியில் ரஸ}லுல்லாவின்(ஸல்) அரசியல் உத்வேகத்தை உணரவைத்தன. அவை குறைஷியர்களின் பொருளாதாரத்தை குலையச்செய்தன. இன்றைய காலகட்டத்திலும் சில நாடுகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிரியினிடையே ஓர் அச்சத்தை ஏற்படுத்த வைக்கின்றன. இவை அரசியல் தந்திரம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதைப்போன்றே நபிகளாரின்(ஸல்) நடவடிக்கைகளும் அரசியலே என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் மற்றைய நாடுகளைப்போலன்றி அண்ணலாரின் நடவடிக்கைகள் தஃவாவை பரப்புவதற்காகவே அமைந்தது. ஹ_தைபியாவில் நடந்தவையும் அவற்றை தொடர்ந்தவையும் குஃப்பாருடனான நமது தொடர்பில் அரசியல் நடவடிக்கைகள் மிகுந்திருந்ததை உணர்த்துகின்றன. ஆனால் அம்மாபெரும் வெற்றியானது இக்காலத்தில் வேறுவிதமாக தவறுதலாக உணர்ந்துகொள்ளப்படுகிறது. இஸ்லாமிய நிலத்தை அபகரித்து அதில் குஃர் ஆட்சியை நிலைநாட்டுகின்ற இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை (என்று கூறப்படுகின்ற) செய்வதற்கு ஒப்பாக அது உதாரணமாகக் எடுத்து வைக்கப்படுகின்றது. ஸ_ரா அல்-பத்ஹ் யில் அல்லாஹ்(சுபு) கூறுகிறான். “நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக வெற்றியை உமக்கு அணித்தோம்.”(அல்-பத்ஹ் 1)

இதன் மூலம் எப்படியும் வெற்றி நமதே என எண்ணி எதுவுமே செய்யாமல் இருந்துவிடக்கூடாது. மாறாக ஒரு இஸ்லாமிய அரசை நிலைநாட்டவேண்டும் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் வேறு}ன்றி அதனை நிலைநாட்டும் முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும்.

'மிகச்சிறந்த வழித்தோன்றல்கள்" என்று நபி;(ஸல்) அவர்களால் குறிப்பிடப்பட்ட ஸஹாபாக்கள், அல்லாஹ்(சுபு) மற்றும் ரஸ}லுல்லாஹ்வின் கட்டளைகளை இவ்வெண்ணத்துடனே புரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டனர். அதன் மூலமே இஸ்லாமிய அரசின் எல்லையானது பரந்து விரிந்தது. நபிகளாருக்குப் பின்னர் ஸஹாபாக்களும் அவர்களின் கட்டளைகளை, தொழுகை போன்ற தனிநபர் நடவடிக்கைகளில் மட்டுமல்லாது அனைத்து சமுதாய அரசியல் முறைகளிலும் பின்பற்றி இஸ்லாமிய தஃவாவை முழு உலகிற்கும் சுமந்து சென்றனர்.

அல்லாஹ்(சுபு) அல்-பத்ஹ் ஸ_ராவின் மூலம் வெற்றியை உறுதியளித்த பின்பும் கூட அதை அடையும் முயற்சியில் நபிகளாரும் ஸஹாபாக்களும் முழு மூச்சுடன் ஈடுபட்டனர்.

ஹ_தைபியாவிற்கு முன்னர் ஒரு முறை நபிகளார் தாம் மஸ்ஜிதுல் ஹராமில் இருப்பதாக கனவு கண்டார். நபிகளாரின் கனவானது அல்லாஹ்(சுபு)வின் வாக்குறுதியாக இருந்த போதிலும் அதனை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவதினின்றும் நபிகளார் பின்வாங்கவில்லை.

இது குறித்து அல்லாஹ் திருமறையில் கீழ்வருமாறு கூறுகிறான். “திட்டமாக அல்லாஹ் உண்மையைக் கொண்டு தன்னுடைய து}தருக்கு அவர் கண்ட கனவை உண்மைப்படுத்திவிட்டான். அல்லாஹ் நாடினால் நிச்சயமாக மஸ்ஜிதுல் ஹராமில் அச்சமற்றவர்களாகவும் தலைகளை சிரைத்துக்கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அச்சமயம்) நீங்கள் (எவருக்கும்) பயப்படமாட்டீர்கள். ஆகவே நீங்கள் அறியாதிருந்ததை முன்னதாகவே அல்லாஹ் அறிவான். பின்னர் இதனையன்றி சமீபத்தில் ஒரு வெற்றியையும் ஆக்கினான்.( அல்-பத்ஹ் 27 )

'இதனையன்றி சமீபத்தில் ஒரு வெற்றியையும் ஆக்கினான்" என்பது பத்ஹ் அல் மக்கா வைக்(மக்காவின் வெற்றி) குறிக்காது. ஏனெனில் இங்கு 'இதனையன்றி" எனும் தெளிவான வார்த்தை உள்ளது. மாறாக இது கைபரிலிருந்த யூதர்களை வெற்றிகொள்வதையே குறிக்கிறது. மறுபடியும் இது அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்த வாக்குறுதியாகும். அதில் அதை நிலைநாட்டக்கூடிய செயல்களில் ஈடுபடுமாறு எவ்வித கட்டளைகளும் இல்லை. ஆனால் நபி(ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் ஜிஹாத் மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கான அஹ்காமை அறிந்திருந்தனர். அதனால் கைபரிலிருந்த யூதர்களை வெளியேற்றி அதனை கைப்பற்றினர். அஹ்சாப் போரில் நபி(ஸல்) அவர்கள் வஹீ மூலம் பாரசீகம் சிரியா மற்றும் எமன் பகுதிகள் இஸ்லாத்தை தழுவும் என அறிவிக்கப்பட்டிருந்தார். அவரது மறைவிற்குப்பிறகு ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் பாதையில் கடும்போர் புரிந்து அப்பகுதிகளை இஸ்லாத்தின் கீழ் கொண்டு வந்தனர். மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் மூலம் ஒரு முஸ்லிமின் மனநிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறியலாம். இறைவன் தெளிவான வசனங்கள் மூலம் வெற்றியை வாக்களித்திருந்த பொழுதும் அதனை நடைமுறைப்படுத்த அல்லாஹ்வின் பாதையில் செயல்படுவது அவசியமாகும்.

குர்ஆனிலும், சுன்னாவிலும், முந்தைய சமுதாயங்களைப்பற்றியும், அன்றைய இறைத்து}தர்கள், தீர்ப்புநாள், சொhக்கம், நரகம் ஆகியன பற்றியே அதிகமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது செயல்பாடுகள் பற்றி சில வசனங்களே கூறப்பட்டுள்ளன. அவ்வசனங்களினின்றும் அஹ்காம் ஷாPஆ பெறப்படுகிறது. அஹ்காம் ஷாPஆ என்பது நமது நடவடிக்கைகள் குறித்த இறைவனின் கட்டளைகளாகும். இமாம் மஹதி மற்றும் ஈஸா(அலை) அவர்களின் வருகை, கிலாஃபா மறுபடியும் ஏற்படும் என்ற உறுதிமொழி, ஸ_ரா அல் இஸ்ராவில் குறிப்பிட்டுள்ளபடி பனீ இஸ்ராயீலின் மக்களை தண்டித்தல் ஆகியவை வெறும் வசனங்களே. அவை வேறு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கக் கட்டளையிடவில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்களின் வழியைப்பின்பற்றி நாம் அவ்வசனங்களில் மறைந்துள்ள அஹ்காம் ஷாPஆவை புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் சிலரோ அஹ்காம் உள்ள வசனங்கட்கும் மற்றவற்றிற்குமுள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்கின்றனர். அதனால் அவர்கள் தேவையான நடவடிக்கை எதுவும் எடுக்காமலேயே வெற்றி தானாக வரும் என எண்ணி முஸ்லிம் உம்மாவை திசைதிருப்ப முனைகின்றனர். இவற்றின் மூலம் மனித சமுதாயத்தின் முன்னோடியாக இருக்கின்ற, ‘மிகச்சிறந்த உம்மா’ என்று அல்லாஹ்(சுபு) அழைக்கின்ற, இவ்வும்மாவின் அரசியல் கண்ணோட்டம் எவ்வாறு இருக்கவேண்டும் என அறியலாம். அதன்மூலமே நாம் அல்லாஹ்(சுபு) மற்றும் நபிகளாரின்(ஸல்) கட்டளையின்படி நடக்க முடியும்.

இறைவன் கூறுகிறான்

“விசுவாசம் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்விற்கு கீழ்படியுங்கள். (அவனது து}தருக்கும் கீழ்படியுங்கள். இன்னும் உங்களில் (அல்லாவிற்கும் அவனது து}தருக்கும் கீழ்படிந்து நடக்கும்) அதிகாரம் உடையவர்கட்கும் கீழ்படியுங்கள். ஆனால் யாதொரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக்கொண்டால் அதனை அல்லாஹ்விடமும் அவனது து}தரிடமும் திருப்பிவிடுங்கள். உணமையாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால் இதுதான் அழகான முடிவாக அமையும்.(அந் நிஷா 59)

உதுமானியக் கலீஃபாவான முஹம்மத் அல் பத்ஹ் (வெற்றியாளர்) அவர்களது செயல் எமக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாகும். அவர் 'கான்ஸ்டான்டிநோபில் மற்றும் ரோம் இஸ்லாத்தின் ஆளகைக்குள் வரும்" என்ற நபி(ஸல்) அவர்களின் முன்அறிவிப்பை ஒரு கூற்றாக மாத்திரம் எண்ணாமல் அதன் பின்னணியிலிருந்த அஹ்காமை புரிந்திருந்தார். அதனால் கான்ஸ்டான்டிநோபில் மீது போர் தொடுத்து அதனை இஸ்லாத்தின் கீழ் கொண்டுவந்தார். ஆனால் இன்னும் ரோமபுரி இஸ்லாத்தின் கீழ் வரவில்லை அதனால் அதைக்கைப்பற்ற அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆட்சிசெய்கின்ற ஒரு இஸ்லாமிய கிலாபாவை அமைத்து அதன் முலம் போராட முஸ்லிம்கள் முன்வர வேண்டும். நிச்சயமாக நமது வெற்றி இறைவனிடமிருந்தே அமையும்.

கிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து...பகுதி 5

இரண்டாம் கட்டம் : பகிரங்க அழைப்பு

ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக. இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக! உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம். இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள். (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள். ( 15:94- 96)

என்ற குர்ஆனிய வசனம் மூலம், நபிகளாரின் அழைப்புப்பணி, 'தனிநபரை பண்படுத்துதல்" என்ற கட்டத்தைத் தாண்டி, பகிரங்க அழைப்புக் கட்டத்தை தொடங்கியது. இந்த நிலையில், நபிகளார், குறைஷியர்களின் ஜஹிலிய பழக்கவழக்கங்களை நேரடியாக எதிர்க்கலானார்கள். 'அல்லாஹ்(சுபு)வைத் தவிர வேறுகடவுள் இல்லை என்பதை ஏற்று, அவனையே வணங்க வேண்டும்" எனக் குரல் கொடுக்கலானார்கள். பொதுமக்களின் கவனம் எப்பொழுதும் இஸ்லாத்தின் மேல் இருக்க வேண்டும் என்ற நோக்குடனே தமது நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டார்கள். முதலில், தமது வீட்டில் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்து, அதில் கலந்துகொள்ள தமது உறவினர்களை அழைத்தார்கள். அவர்களுள் குறைஷியர்களின் முக்கியத் தலைவர்களும் அடங்குவர். அந்த விருந்தில் அல்லாஹ்(சுபு)வைப் பற்றியும், தமது நபித்துவத்தைப் பற்றியும், இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் சொர்க்கலோகம் அடைவதைப்பற்றியும் நபிகளார் விவரித்தார்கள். ஏற்காவிடின் ஏற்படும் விளைவுகளான நரக நெருப்பின் தண்டனை பற்றியும் குறிப்பிட்டார்கள்.

நரகத்தை நோக்கி, 'நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது 'இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?" என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)! (50:30)

மற்றொரு சமயத்தில், நபிகளார் அஸ்ஸஃபா குன்றின் மீதேறி, அங்கு கூடியிருந்த குறைஷியரை நோக்கி 'குன்றின் பின்புறமிருந்து ஒரு படை தாக்க வருகிறது என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா" என்றார்கள். 'இதுவரை உம்மிடமிருந்து உண்மையைத்தவிர வேறு எதையும் கேட்டிராததால் அதை நாங்கள் நம்புவோம்" என்றனர். அதற்கு நபிகளார் ''மிகக் கடுமையான, துன்பமிக்க வேதனையைக் குறித்து உங்களை எச்சரிக்கவே நான் இங்கு அனுப்பப்பட்டுள்ளேன்" என்றார்கள்.

ஹம்சா(ரலி) அவர்களும் உமர்-அல்-கத்தாப்(ரலி) அவர்களும் இஸ்லாத்தை தழுவியது ஒரு மிகமுக்கிய நிகழ்வு ஆகும். அந்நிகழ்விற்குப்பின், நபிகளார், முஸ்லிம்களை, ஹம்சா(ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவாகவும், உமர்(ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவாகவும் ஆக்கி கஃபாவைச்சுற்றி ஊர்வலமாக வரச்செய்தார்கள். இதனைக் கண்ட மக்கா நகர மக்கள் அதிர்ச்சியடைந்தனர். முஸ்லிம்கள் முதன்முறையாக பகிரங்கமாக அந்த ஜஹிலிய சமூகத்தை எதிர்கொண்டனர். இதற்கு முன்னால் முஸ்லிம்கள் மறைமுகமாகவே தொழுதுவந்தனர். ஆனால் இந்த நிகழ்வுக்குப் பிறகு கஃபாவின் முன் கூடி தொழ ஆரம்பித்தனர்.

இந்த காலகட்டம், நபிகளாரும் அவரைப்பின்பற்றிய முஸ்லிம்களும் ஜஹிலிய சமூகத்தை பகிரங்கமாக எதிர்கொண்ட காலகட்டமாகும். அவர்கள் ஒரு அமைப்பாகச் செயல்பட்டு சமூகத்திலிருந்த பழக்கவழக்கங்கள், சட்டங்கள், நடைமுறைகள் ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ள ஆரம்பித்தனர். அதிகாரத்துவமும் பணத்தாசையும் மிக்க ஜஹிலிய சமூகத்தை எதிர்த்த விதத்தை குர்ஆன் விளக்குகிறது.

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹ{தமாவில் எறியப்படுவான். (104: 1-4 )


செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (102:1-3)

சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ளோரை கவனிக்காத மக்களை ஏமாற்றிய பொய்யர்களான குறைஷிய தலைவர்களை சபித்து அல்லாஹ் கூறுகிறான். (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் து}ண்டுவதில்லை. (107: 1- 3)

அவர்களது நடைமுறைகளை எதிர்த்து குர்ஆன் வசனம்

அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். (83: 1-3)

குறைஷிய தலைவர்களை நோக்கி,

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக அவனும் நாசமாகட்டும். அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). ( 111:1-5)

அல் வலீத் பின் அல் முகிராவைக் குறித்து அல்லாஹ் குறிப்பிடுகிறான்

எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர். (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர். அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர். (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன் வரம்பு மீறிய பெரும் பாவி. கடின சித்தமுடையவன், அப்பால் இழி பிறப்புமுடையவன். பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால் - நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், 'இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவன் கூறுகின்றான். விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம். (68: 8-16)

ஜஹிலியாவை எதிர்த்து நின்ற இந்த சிந்தனைப் போராட்டத்தால், நபிகளாரிடமும் முஸ்லிம்களிடமும் குறைஷியர்கட்கு ஒருவித கசப்புணர்வு தோன்றியது. மக்கள் முஸ்லிம்களைவிட்டும் விலகிச்செல்ல ஆரம்பித்தனர். குறைஷியர்கள், நபிகளாருக்கெதிரான எதிர்ப்புணர்வை பரப்பலாயினர். நபிகளாரின் பெரியதந்தை அபிதாலிப் அவர்களிடம் சென்று '' நம் மூதாதையர்கள் கேலி செய்யப்படுவதையும், நமது நடைமுறைகள் இழிவுபடுத்தப்படுவதையும், நமது கடவுளர் அவமதிக்கப்படுவதையும் இனிமேலும் பொருத்துக்கொள்ள இயலாது "" என முறையிட்டனர்.

மார்க்கப் போராட்டம்


சமூகத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் இத்தகைய காலகட்டத்தில், சஹாபாபெருமக்களின் மனதில் விதைக்கப்பட்டதைப் போல இஸ்லாத்தின் மேல் ஒரு ஆழ்ந்த நம்பிக்கையை, மக்கள் மனதில் விதைப்பது அவசியம். இந்த மாற்றம் மக்களின் சிந்தனை சம்பந்தப்பட்டது. எனவே இந்த மாற்றத்தை ஒரு அறிவுப் போராட்டத்தாலன்றி வேறெந்த போராட்டத்தாலும் ஏற்படுத்த முடியாது. அந்த சிந்தனைப் போராட்டம், இஸ்லாம் அல்லாத ஏனைய மார்க்கங்களையும் அதனைச் சார்ந்த நடைமுறைகளையும் ஒதுக்கித்தள்ளுகிறது. அத்தகைய அறிவுப் போராட்டத்தையே ஒரு இஸ்லாமிய இயக்கம் செயல்படுத்த வேண்டும். இஸ்லாம் அல்லாத ஏனைய மார்க்கங்களான கம்யூனிசம், முதலாளித்துவம்(கேபிடலிசம்) போன்றவற்றையும், அதனைச் சார்ந்த மக்களாட்சி, தேசீயம் போன்றவற்றையும் கேள்விக்குறிகளாக்குகின்ற ஒரு சிந்தனை அலையை மக்களிடையே உருவாக்க வேண்டும். இஸ்லாம் அல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

இஸ்லாமிய தஆவாவை எதிர்க்கின்ற எந்த ஒரு அரசையும் அதன் சூழ்ச்சியையும் மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும். அவர்களது நேரடி அல்லது மறைமுக இஸ்லாம் எதிர்ப்புப் போக்கை முஸ்லிம்களிடையே பகிரங்கப்படுத்துவது அவசியம். இதுவே நபிகளார் நமக்குக் காட்டிய வழியாகும். எவர் இத்தகைய கடமையை ஆற்றுவதினின்றும் தவறுகிறாறோ அவர் நபிவழியைப் பின்பற்றத் தவறுபவரே ஆவார்.

சமரசம்

தமது வாதத் திறமையினால், நபிகளாரைக்(ஸல்) கட்டுப்படுத்த குறைஷியர் முயன்றனர். ஆனால் அவர்கட்கு தோல்வியே மிஞ்சியது. அதன்பிறகு, நபிகளாரின் தஆவாவை அடக்க, எண்ணற்ற செல்வமும், மிகப்பெரும் அந்தஸ்தும், தலைமைப் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அதற்குப் பகரமாக ஆழைப்புப் பணியை நிறுத்திடவேண்டும் எனப் பேரம்பேசலாயினர். ஆனால் எந்நிலையிலும் எதற்காகவும் இறைப்பணியை விட்டுவிட நபிகளார் தயாராக இல்லை. எனவே எந்நிலையிலும் நபிகளார் தஆவாவில் சமரசப்போக்கை கடைபிடிக்கவில்லை.

இறைச் சட்டத்தை நிறைவேற்ற, நபிகளாரின் வழியைப் பின்பற்றி பாடுபடும் முஸ்லிம்கள், எந்நதவித சமரசப்போக்கையும் நிராகரித்துவிடவேண்டும். இஸ்லாமையும் ஜஹிலியாவையும் ஒன்றாக நடைமுறைப்படுத்த முடியாது. இஸ்லாம் பாதியும் இஸ்லாம் அல்லாதவை பாதியுமாக ஆட்சிபுரிவது இஸ்லாம் அன்று. அது ஜஹிலியாவே ஆகும். இறைவனின் ஷாPஆ சட்டம் ஒன்றே முழுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது இஸ்லாம் அல்லாத சட்டங்களே ஆகும்.

இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள். அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. ( 5:49)

எனவே இஸ்லாம் அல்லாத ஆட்சியமைப்பில் பங்கு கொண்டு, அதன் மூலம் இஸ்லாத்தை சில துறைகளில் மட்டும் சமூகத்தில் நடைமுறைப்படுத்துவது நபிவழியன்று. படிப்படியாக இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றுவதென்பது, இஸ்லாத்தையும் இஸ்லாம் அல்லாதவற்றையும், அதாவது உண்மையையும்(ஹக் ) பொய்யைபும்(பாதில்) கலப்பதாகவே அமையும். இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றுவதென்பது கிலாஃபா அரசை அமைப்பதே ஆகும். எனவே கிலாஃபா ஆட்சிமுறையை நிலைநாட்டப் பாடுபடும் முயற்சியில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரபு நாட்டின் அரியாசனத்தில் நபிகளாரை(ஸல்) ஏற்றுவதாக உறுதியளித்த பனு- அமிர் கூட்டத்தின் உதவியை நபிகளார் ஏற்க மறுத்தார்கள். ஏனெனில் நபிகளாருக்குப்பின்(ஸல்) தாமே அரியாசனத்தில் அமர வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்தனர். பாரசீகர்களைத் தவிர மற்ற அனைவரிடமிருந்தும் நபிகளாரைக் காப்பதாகக் கூறிய ஷிபான்-பின்-தலபா கூட்டத்தினரையும் அவர்கள் நிராகரித்தார்கள். ஏனெனில் உதவியானது வேறு எந்த நிபந்தனையுமின்றி இருக்கவேண்டும், அதன்மூலமே இஸ்லாமிய தஆவாவை பரப்ப முடியும் என்பதில் நபிகளார்(ஸல்) உறுதியாக இருந்தார்கள்.


அதிகாரம் பெறுவதற்காக ஆட்சியமைப்பில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. இஸ்லாமிய வழிமுறையை விட்டும் விலகி இஸ்லாம் அல்லாத முறையில் ஆட்சியைப் பிடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அல்லாஹ்(சுபு) கூறியுள்ளபடியான ஆட்சிமுறையை நிலைநாட்டி இஸ்லாமிய வழியில் வாழ்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும், இறைவனின் நன்மதிப்பைப் பெரும் வகையில் நமது வழிமுறைகளை அமைத்துக்கொள்வதே இஸ்லாமிய வழிமுறையாகும். எனவே தனிமனிதரோ அல்லது இயக்கமோ எதுவாயினும் தமது நடவடிக்கைகள் அனைத்தும் இறைவனை மகிழ்விக்கவேயன்றி வேறொரு எண்ணத்தைக் கொண்டிருக்கக் கூடாது. பாராட்டுதலைப் பெறுவதோ, புகழினை அடைவதோ அல்லது செல்வம் சேர்ப்பதோ தமது நடவடிக்கைகட்கு அடிப்படையாக அமையக்கூடாது. அந்த இயக்கத்தின் தலைமையின் மற்றும் அக்கொள்கைளை சுமந்து செல்லும் இயக்க உறுப்பினர்களின் முழு ஈடுபாடும் அவர்களது நடவடிக்கைகள் வாயிலாக உலகுக்கு உணர்த்தப்படவேண்டும். அதுவே வெற்றியின் பாதையை சிறப்புடையதாக்கும். மேலும் வெற்றியானது இறைவனால் மட்டுமே கொடுக்க முடியும்.

துன்புறுத்தும் வேதனை

பேச்சுவார்த்தையால் நபிகளாரை(ஸல்) அமைதிப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த குறைஷியர் வன்முறையை கடைபிடிக்கலாயினர். சமூக அமைப்பின் படியாக தப்பிவிட முடியாதபடி, அவர்கள், முஸ்லிம்களை கொடுமைப்படுத்தலாயினர். முஸ்லிம்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, கொடுமைக்காளாகி, கொல்லப்படவும் செய்தனர். அவது}றுப் பேச்சினாலும், பொய்ப்பிரசாரங்களினாலும் நபிகளாரைத் தாக்கிய குறைஷியர் உடலளவிலும் அவர்களைக் கொடுமைக்காளாக்க விழைந்தனர். அத்தகைய கொடுமைகளைக் கண்ட நபிகளார்(ஸல்) முஸ்லிம்களை, அல்லாஹ்(சுபு)விடமிருந்து உதவி வரும்வரை அபிசீனிய நாட்டில் தஞ்சம் புகப் பணித்தனர்.

உமர்(ரலி), ஹம்சா(ரலி) ஆகியோர் இஸ்லாத்தில் இணைந்ததும், முஸ்லிம்கள் அபிசீனிய நாட்டில் தஞ்சம் புகுந்ததும், இஸ்லாம் மேன்மேலும் பரவிவருவதும் குறைஷியரின் கோபத்தை அதிகரித்தன. அவர்கள் முஸ்லிம்களை முழுமையாக புறக்கணிக்க முடிவுசெய்தனர். முஸ்லிம்களிடம் எவ்வித பேச்சுவார்த்தைகளோ, திருமண பந்தங்களோ, வியாரபாரத்தொடர்போ இல்லாமல் முழுமையாக புறக்கணித்தனர். அதனால் முஸ்லிம்கள் மக்கா நகருக்கு வெளியே ஒரு பள்ளத்தாக்கில் தஞ்சம் புகுந்தனர். நபித்துவத்தின் ஏழாவது ஆண்டில் தொடங்கிய இப்புறக்கணிப்பு மூன்றாண்டுகள் வரை நீடித்தது. புறக்கணிப்பு முடிவுற்ற குறுகிய காலத்தில் கதீஜா அம்மையாரும் அதன்பின்னர் பெரியதந்தையாம் அபுதாலிப் அவர்களும் இயற்கைஎய்தினர்.

இத்தகைய மார்க்கப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற இஸ்லாமிய இயக்கமானது, ஜஹிலிய பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ள பொதுஜனத்தின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். நாட்டை ஆளும் அரசுகள் அவ்வியக்கத்தினரை துயரங்கட்காளாக்கி சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தவும் தயங்காது. இது தவிர்க்க இயலாததாக இருப்பினும், எவ்விதத்திலும் கொண்ட கொள்கையிலிருந்தும் விலகிவிடக்கூடாது.

தியாகம்

இஸ்லாத்தின் ஆட்சியானது கிலாஃபா மூலம் இவ்வுலகில் நடைபெறச் செய்ய தியாகங்கள் பல செய்ய நேரிடும். தமது குடும்பம், கட்டிக்காத்த சொத்துக்கள், ஆகியவற்றை கஷ்டத்திற்குள்ளாக்குகின்ற மாபெரும் சோதனையைத் தாங்கிக்கொள்ளும் மனோபலமும், பொறுமையும் வேண்டும். அத்தகைய துன்பங்களினால் தமது கொள்கையை விட்டும் விலகிச்சென்றுவிடாமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். நன்மை தீமையை, நல்லது கெட்டதை பிரித்தறிய அல்லாஹ்(சுபு)வின் சோதனை நிச்சயம் நடைபெறும். இதுவே நியதி. அல்லாஹ்(சுபு) தமது அருள்மறையிலே கூறுகிறான்.

'நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். ( 29: 2-3)

நபிமார்களும் அவர்களைப் பின்தொடர்ந்தோரும் கடுமையான துன்பங்கள் மூலம் சோதிக்கப்பட்டனர். அவர்கள் எதிர்கொண்ட நிலையை அல்லாஹ்(சுபு) விளக்குகிறான். உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று து}தரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். 'நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (2: 214)

இஸ்லாத்தின்மீது முழு நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டு இஸ்லாத்தை வாழ்வில் அமல்படுத்த, கிலாஃபாவை நிலைநாட்ட, அழைப்புப்பணியில் ஈடுபடும் ஒவ்வொரு முஸ்லிமும் இத்தகைய கஷ்டங்களுக்கு உள்ளாவது உறுதி. இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் இந்த அரசுகளின் அடக்கு முறை, நம்பிக்கை கொண்டோரின் அழைப்புப்பணியை எந்தவிதத்திலும் பாதித்துவிடக்கூடாது. அத்தகைய சோதனையான காலகட்டங்கட்குப்பிறகே அல்லாஹ்(சுபு) தமது இறைத்து}தருக்கு உதவியை அளித்ததாகக் கூறுகிறான்.
(நம்) து}தர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது( 12: 110)

எனவே, இறைவனின் உதவியும் வெற்றியும் உண்மையாக இறைவனின் கட்டளையை ஏற்றுப் பாடுபடும் ஒவ்வொரு விசுவாசிக்கும், சோதனைகட்குப்பிறகு கண்டிப்பாக வந்து சேரும். இறை ஆணையைவிட இந்தச் சொத்துக்கள் பெரிதல்ல. நாமும் நாம் இந்த உலகில் அனுபவிக்கும் ஒவ்வொரு இன்பமும் இறைக்கட்டளையைவிட உயர்வானதன்று.

(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் து}தரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (9:24)