Monday, January 11, 2010

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 03 (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

சோஸலிசமும் அதன் விளைவான கம்யூனிஸமும், மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றி கொண்டிருக்கும் சிந்தனை என்னவெனில், இவைகள் அனைத்தும் இயற்பொருளாகும் (Matter). எனவே அனைத்துப் பொருட்களுக்கும் இயற்பொருள்தான் பிறப்பு மூலமாக இருக்கின்றது என்பதுதான். பரிணாம வளர்ச்சியின் மூலமாக இந்த இயற்பொருட்கள் பல்வேறு பொருட்களாகவும், பல்வேறு உயிரினமாகவும் பரிணமித்து இருக்கின்றன. எனவே, இந்த இயற்பொருளுக்கு (Matter). அப்பாற்பட்டதாக எதுவுமே இல்லை. ஆகையால் இந்த இயற்பொருள் அழிவில்லாதது (Eternal). அது பிரிதொன்றாலும் படைக்கப்படாமல் ஆதியிலிருந்தே இருந்து வருகின்றது. அதாவது அது தவிர்க்க இயலாதது. (Indispensible - Waajab ul Wajoodஎன்றென்றும் சுயமாகவே இருப்பது. இவ்வாறு கூறுவதன் மூலம், கம்ய10னிஸ்டுகள், இயற்பொருள் ஒரு படைப்பாளனால் படைக்கப்படவில்லை என்று மறுக்கிறார்கள். பொருட்களின் ஆன்மீக அம்சத்தை மறுப்பதோடு, ஆன்மீக விஷயங்களை அங்கீகரிப்பது மனித வாழ்க்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதுகிறார்கள். இதன் முடிவாக, மதம் என்பது அறிவை மயக்கும் அபின் (Opium) என்றும், மனிதர்களின் செயல் வேகத்தை பங்கப்படுத்தும் காரணி என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். புலன் அறிவின் மூலம் அறிந்து கொள்ளும் இயற்பொருளைத் தவிர வேறு ஒன்றையும் இவர்ககள் நம்புவதில்லை. மேலும் சிந்தனையை மூளையில் ஏற்படும் பொருட்களின் பிரதிபலிப்பு (Reflection) என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆகவே, அவர்களைப் பொருத்தவரை இயற்பொருள்தான் சிந்தனைக்கும் மற்ற அனைத்துப் பொருட்களுக்கும் (மனிதன், வாழ்வு, பிரபஞ்சம்) மூலம் என்றும், இயற்பொருளின் பரிணாம வளர்ச்சியின் மூலமாகத்தான் அனைத்துப்பொருட்களும் உயிரினங்களும் தோன்றியிருக்கின்றன என்றும் எண்ணுகிறார்கள். இதனடிப்படையில் அனைத்திற்கும் ஒரு படைப்பாளன் இருப்பதை அவர்கள் மறுக்கிறார்கள். மேலும், இயற்பொருளை அழிவற்றது என்றும் கருதுகிறார்கள். இவ்வாறாக, உலக வாழ்க்கைக்கு முன்பு உள்ளதையும் அதற்கு பின்பு வரப்போவதையும் அவர்கள் மறுக்கிறார்கள். ஆகவே இந்த உலக வாழ்க்கையைத்தவிர வேறெதையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய கண்ணோட்டத்தில் இந்த இரண்டு சித்தாந்தங்களும் (முதலாளித்துவம், கம்யூனிஸம்) மாறுபட்ட போதிலும், மனிதனின் இறுதி லட்சியத்தை அடைவதற்கு உரிய உயர்ந்த மாண்புகளை மனிதனே வகுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் இந்த இரண்டு சித்தாந்தங்களும் உடன்பாடாகவே இருக்கின்றன. ஆகவே, மகிழ்ச்சி என்பது அதிகபட்சம் உடல் இன்பத்தை நுகர்வதுதான் என்பதும், மகிழ்ச்சியை அடைவதற்கு தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளும் மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான் என்பதும் அவர்களுடைய கண்ணோட்டமாக இருக்கிறது. இந்த இரண்டு சித்தாந்தங்களும் தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கும் விஷயத்தில் கருத்தொற்றுமை கொண்டுள்ளன. ஆகவே, மனிதன் ஒரு செயலில் மகிழ்ச்சியைக் காணும்வரை அவன் விரும்பியவாறும் அவன் எண்ணியவாறும் செயல்பட்டுக் கொள்ளலாம். ஆகவே தனிமனித நடத்தைகள் அல்லது தனிமனித சுதந்திரம் என்பது இந்த இரண்டு சித்தாந்தங்களும் புனிதப்படும் விஷயத்தின் அங்கமாகவே இருக்கிறது.
சமூகம் மற்றும் தனிமனிதன் குறித்த கண்ணோட்டத்தை பொருத்தவரை இந்த இரண்டு சித்தாந்தங்களும் வேறுபடுகின்றன. முதலாளித்துவம் என்பது சுயநலபோக்கு கொண்ட தனிமனிதனை சிலாகிக்கும் ஒரு சித்தாந்தமாகும். சமூகத்தை தனி மனிதர்களின் தொகுப்பு என்று அது கருதுகிறது. சமூகத்திற்கு அது இரண்டாம் தர முக்கியத்துவமே கொடுக்கிறது. அதே வேளையில் அதன் கவனத்தை தனிமனிதனுடைய நலனின் பக்கம் தீவிரமாக செலுத்துகிறது. ஆகவே, தனிமனித சுதந்திரத்தை பாதுகாப்பது மிக அவசியம் என்று அது கருதுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய சுதந்திரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகவே சமூகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆகவே, நம்பிக்கை சுதந்திரம் (Freedom of Belief) என்பது இந்த சித்தாந்தம் புனிதப்படுத்தும் ஒரு விஷயமாகும். சொத்துரிமை சுதந்திரமும் புனிதமாக கருதப்படுகிறது. தத்துவக் கொள்கைகள் அதனைக் கட்டுப்படுத்தாமல் அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அதன் உரிமைகளுக்கு உத்திரவாதம் கொடுக்க அரசே தலையீடு செய்கிறது. இந்த கட்டுப்பாடுகளை காவல்துறை மூலமும், சட்ட அமூலாக்கங்களின் மூலமும் அரசே நடைமுறைப்படுத்துகிறது. எனினும், அரசு என்பது ஒரு சாதனமாக செயல்படுமே ஒழிய இறுதி புகழிடமாக விளங்காது. ஆகவே, அரசாட்சி அதிகாரம் இறுதியில் தனிமனிதர்களுக்கு உரியதாக இருக்குமே ஒழிய அரசுக்கு உரியதாக இருக்காது. இதனடிப்படையில் வாழ்வியலிலிருந்து மதத்தை பிரிப்பது என்ற அறிவார்ந்த வழிகாட்டும் சிந்தனையை முதலாளித்துவ சித்தாந்தம் ஏற்றுக் கொண்டு அதன் வழிகாட்டுதல் அடிப்படையில் ஆட்சிமுறை போன்ற அதன் அனைத்து வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்துகிறது. அவற்றை பிரச்சாரம் செய்வதற்கும், உலகெங்கிலுமுள்ள அனைத்து நாடுகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொள்கிறது.
பொது உடமை கோட்பாட்டின் அடிப்படையிலுள்ள கம்ய10னிஸமும் ஒரு சித்தாந்தம் என்ற அடிப்படையில், சமூகத்தைப் பற்றிய அதன் கண்ணோட்டம் என்னவென்றால், பல மனிதர்களை உள்ளடக்கிய ஒரு கூட்டத்தில் இயற்கையோடு அவர்களுக்குள்ள தொடர்புதான் சமூகம் என்பதாகும். ஆகவே, இயல்பாகவும் தவிர்க்க இயலாமலும் மக்கள் இந்த தொடர்புக்கு பணிந்தாக வேண்டும். பல மனிதர்களைக் கொண்ட இந்த கூட்டம் மொத்தமாக முழுமையான ஒரே அமைப்பாக இருக்கும். அதாவது, மனிதன் இயற்கை மற்றும் இவை இரண்டிற்குமுள்ள தொடர்பு ஆகிய அனைத்தும் ஒரே அமைப்பாக இருக்குமே ஒழிய ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து இருக்காது. இயற்கை என்பது மனிதனின் தனித்துவ தன்மையின் ஒரு பகுதியாகும் (Part of Man's Personality) அவன் அதை தன்னுடன் பெற்றுக் கொண்டவனாக இருக்கிறான். இயற்கை என்ற அவனது தனித்துவ தன்மையோடு அவன் இணைக்கப்படாமல் அவனால் பரிணாம வளர்ச்சி அடைய முடியாது. ஏனெனில் மனிதனுக்கு இயற்கையோடு உள்ள தொடர்பு என்பது, ஒரு பொருளுக்கும் அதன் சாரத்திற்கும் (Essence) உள்ள தொடர்பைப் போன்றது. இதனடிப்படையில், சமூகம் என்பது முழுமையான ஒரே அமைப்பாகும் (unit) . அதன் மூன்று தனிமங்களான தனி மனிதன், சமூகம், அரசு ஆகியவை மொத்தமாகவே பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும், ஆகவே மனிதன் ஒரு சக்கரத்தின் ஆரத்தைப் போல (Spokes of a wheel) இந்த சமூக கூட்டத்தின் சுழற்சியில் சுழன்றே ஆக வேண்டும். எனவே, கம்யூனிஸ்டுகள் தனி மனிதனுக்கு நம்பிக்கை சுதந்திரமோ அல்லது சொத்துரிமை சுதந்திரமோ அளிப்பதில்லை. நம்பிக்கை மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டு விஷயங்களும் அரசின் விருப்பத்தைச் சார்ந்தது. இதன் முடிவாக இந்த சித்தாந்தம் புனிதப்படுத்தும் விஷயங்களில் ஒன்றாக அரசு (State) திகழ்கிறது. இந்த இயற்பொருள்வாத தத்துவத்திலிருந்து(Meterialistic Philosophy) வாழ்க்கைக்குரிய வழிமுறைகள் (System) பிறக்கின்றன. மேலும், பொருளாதார வழிமுறைகள் (Economic System) இதன்; அடித்தளமாகவும் இந்த சமூகத்தின் பிரதான அம்சமாகவும் விளங்குகின்றன. இவ்வாறாக, பொது உடமை தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் கம்யூனிஸம் ஒரு அறிவார்ந்த வழிகாட்டும் சிந்தனையை கொண்டதாக இருக்கிறது. அதுதான் இயற்பொருள்வாதம் (Meterialism) மற்றும் இயற்பொருள் பரிணாம வளர்ச்சி (Meterialistic Evolution) ஆகும். இதனடிப்படையில் அதன் ஆட்சிமுறையும் சட்டவிதிமுறைகளும் அமைக்கப்படுகின்றன. உலகெங்கிலுமுள்ள நாடுகளில் பிரச்சாரம் செய்யப்படுவதற்கும், இந்த சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் முயற்சிகள் செய்யப்படுகின்றன.
இஸ்லாத்தை பொருத்தவரை மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகிய இவற்றிற்கு அப்பால் ஒரு படைப்பாளன் இருக்கிறான் என்றும், அவன்தான் இவைகள் அனைத்தையும் படைத்துள்ளான் என்றும் கருதுகிறது. ஆகவே இஸ்லாத்தின் அடிப்படை அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை (Existence) மீதுள்ள நம்பிக்கையாகும். அனைத்துப் பொருட்களின் ஆன்மீக அம்சங்களையும் இந்த அகீதா நிர்ணயித்து இருக்கிறது. அதாவது மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகிய யாவும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டுள்ளன. ஆகவே, படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வுடன் படைக்கப்பட்ட மனிதனுக்கு உள்ள உறவுதான் மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றின் ஆன்மீக அம்சங்களாக இருக்கின்றன. ஆகவே, அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்வதுதான் ஆன்மா (Ruh) எனப்படுகிறது.
அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள நம்பிக்கை என்பது முஹம்மது(ஸல்) அவர்களுடைய து}துவத்தோடும், அவர்கள் கொண்டு வந்த செய்தியோடும், அல்லாஹ்(சுபு)வின் வார்த்தையான குர்ஆனோடும் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறாக அவர்(ஸல்) கொண்டு வந்த அனைத்து விஷயங்களிலும் நம்பிக்கை கொள்வது கடமையாகும். இதனடிப்படையில் இந்த உலக வாழ்க்கைக்கு முந்தியவனாக அல்லாஹ்(சுபு) இருக்கிறான் என்பதையயும், இந்த உலக வாழ்க்கைக்கு பிந்தியதாக உயிர்த்தெழும் நாள் இருக்கிறது என்பததையும், மனிதன் இந்த உலக வாழ்க்கையில் அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டவனாக இருக்கிறான் என்பதையும், இந்த ஏவல் விலக்கல் கட்டளைகள்தான் உலக வாழ்க்கைக்கு முன்பு உள்ளதுடனுள்ள உறவைக் குறிக்கிறது என்பதையும் நம்பிக்கை கொள்வதற்கு இஸ்லாமிய அகீதா கட்டாயப்படுத்துகிறது. மேலும் இதை கடைபிடிப்பது பற்றியும், கடைபிடிக்காமல் புறக்கணித்து விடுவது பற்றியும், மனிதன் கேள்வி கணக்கிற்கு உட்பட்டாக வேண்டும் என்கின்ற கட்டுப்பாட்டிற்கும் மனிதன் உட்பட்டவனாக இருக்கிறான். கேள்வி கணக்கிற்கு உட்படும் நிலை வாழ்க்கைக்கு பின்பு இருப்பதோடு உள்ள உறவை குறிப்பதாக இருக்கிறது. ஆகவே, தவிர்க்க இயலாதவாறு, ஒரு முஸ்லிம், செயலை மேற்கொள்ளும்போது அல்லாஹ்(சுபு)வுடன் தனக்குள்ள உறவை உணர்ந்தவனாக இருக்க வேண்டும். எவ்வாறெனில் அவன் தனது அனைத்து செயல்பாடுகளையும் அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக மேற்கொள்ள வேண்டும். இதுதான் இயற்பொருளோடு ஆன்மாவை ஒன்று கலப்பது (Mixing Matter With Spirit) என்பதன் அர்த்தமாகும். அல்லாஹ்(சுபு)வின் உவப்பை பெறுவது ஒன்றுதான், அவனுடைய(சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக செயல்களை மேற்கொள்வதன் இறுதி இலட்சியமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் செயல்களை மேற்கொள்வதன் உடனடி நோக்கம் செயல்கள் மூலம் விளையும் உலக பயன்களாக இருக்கிறது.ஆகவே, சமூகத்தைப் பாதுகாக்கும் மிகச்சரியான நோக்கங்களை மனிதர்கள் தாங்களாகவே அமைத்துக் கொள்வதற்கு இயலாது. மாறாக அவற்றை, என்றும் மாறாமல் நிலையாக இருப்பதும், உருவாக்கங்களுக்கு உட்படாததுமான அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகள்தான் ஏற்படுத்த முடியும். ஆகவே, மனித வாழ்வு, சிந்தனை, மனித கௌரவம், தனியுடமைகள், மதம், பாதுகாப்பு மற்றும் அரசு ஆகியவற்றை பாதுகாப்பதன் மூலமாக சமூகத்தை பாதுகாப்பது என்பது என்றும் மாறாததும் அபிவிருத்தியடையானதுமான மாறிலிகளாகும். இந்த நிலையான இலக்குகளை பாதுகாப்பதற்காக இஸ்லாம் கடுமையான அளவுகோள்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இலக்குகளைப் பாதுகாப்பது கடமையாகும். ஏனெனில் அவை அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகள் என்பதற்காகவே தவிர உலக பயன்களை கொடுக்கிறது என்பதற்காக அல்ல. இதனடிப்படையில் முஸ்லிம்களும், இஸ்லாமிய அரசும் அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளின்படி அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றனர். ஏனெனில், அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகள் மனிதர்களின் அனைத்து விவகாரங்களையும் ஒழுங்குபடுத்துகின்றன. அதற்கு தக்கவாறு செயல்பாடுகளை மேற்கொள்வது ஒன்றுதான் முஸ்லிம்கள் மன அமைதி பெறுவதற்குரிய ஒரே வழியாகும். இவ்வாறாக, மகிழ்ச்சி என்பது புலன் இன்பங்களை நிறைவு செய்து கொள்வது என்பதல்ல, மாறாக, அது அல்லாஹ்(சுபு)வின் உவப்பை பெறுவதேயாகும்.
மனிதன் தனது உடல்சார்ந்த (சேதனத்)தேவைகளையும் (Organic Needs) உள்ளார்ந்த உணர்வுகளையும் (Instincts) திருப்த்திப்படுத்துவதை உறுதிப்படுத்தும் விதத்தில் இஸ்லாம் அவற்றை ஒழுங்குபடுத்தியிருக்கிறது. அதாவது பசி, இனபெருக்கம், போன்ற அனைத்து தேவைகளையும் ஒழுங்குபடுத்தியிருக்கிறது. எனினும், அவற்றில் ஏதாவது ஒன்றைப் புறக்கணித்துவிட்டு மற்றொன்றை நிறைவு செய்து கொள்ளும் விதத்திலோ அல்லது ஏதாவது ஒன்றை தீவிரமாக தடுப்பதின் மூலம் மற்றொன்றை கட்டுப்படுத்தாமல் விட்டுவிடும் விதத்திலோ அல்லது அனைத்தையும் கட்டுப்பாடற்ற முறையில் விட்டுவிடும் விதத்திலோ இந்த ஒழுங்குமுறை நிறைவேற்றப்பட மாட்டாது. இதற்கு மாற்றமாக, மனிதனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விதத்திலும், இதமான முறையிலும், மிகத் துல்லியமான வழிமுறையின் மூலம் அவற்றை நிறைவு செய்யும்படியும், உள்ளார்ந்த உணர்வுகளின் கட்டுப்பாடற்ற தன்மையின் காரணமாக மனிதன் மிருக நிலைக்கு தாழ்ந்து விடாமல் தடுக்கும் விதத்திலும், அவை அனைத்தையும் இஸ்லாம் ஒருங்கிணைக்கின்றது.
உடல்சார்ந்த தேவை மற்றும் உள்ளார்ந்த உணர்வுகள் ஆகியவற்றை நிறைவு செய்து கொள்ளும் வழிமுறைகளை நிலைநிறுத்துவதற்கு ஏதுவாக சமூகத்தை ஒரு பகுக்க முடியாத முழு அமைப்பாகவும், ஒவ்வொரு தனிமனிதனையும் பிரிக்க முடியாத சமூகத்தின் அங்கமாகவும் இஸ்லாம் கருதுகிறது. எனினும் சமூகத்தின் அங்கமாக இருப்பதால் சமூகம் என்ற சக்கரத்தின் ஆரமாக தனிமனிதர் கருதப்பட மாட்டார். மாறாக, உடலில் கைகள் ஒரு பகுதியாக இருப்பதைப் போல முழுமையான அமைப்பின் ஒரு பகுதியாகவே அவர் கருதப்படுவார். ஆகவே, சமூகத்தின் ஒரு பகுதியான நபரின் மீது இஸ்லாம் அக்கறை எடுத்துக் கொள்கிறது. சமூகத்தை விட்டு அவரை பிரிந்து பார்க்காது, அவரை அக்கரையோடு கவனித்துக் கொள்வதால் சமூகம் பாதுகாப்பாக இருக்கும். அதே வேளையில் இஸ்லாம் சமூகத்தின் நலனையும் பேணிப் பாதுகாக்கிறது. அதன் பகுதிகளை புறக்கணித்துவிட்டு மேலோட்டமான விதத்தில் சமூகத்தை அது கையாள்வதில்லை. மாறாக, தனிமனிதன் என்னும் பகுதிகளால் ஒன்றுபட்ட முழுமையான அமைப்பாக அதை இஸ்லாம் கையாள்கிறது. எவ்வாறெனில், சமூகத்தை பேணி பாதுகாப்பதன் விளைவாக, தனிமனிதர்கள் பாதுகாக்கப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் சமூகத்தின் அங்கங்களாக இருக்கின்றனர். முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்(சுபு)வின் வரம்புகளை பேணி பாதுகாத்துக் கொள்ளும் சமூகத்தினருக்கும் அவற்றை மீறிக் கொண்டிருக்கும் சமூகத்தினருக்கும் உதாரணம் ஒரு கப்பலில் பயணம் மேற்கொள்ளும் மனிதர்களுக்கு சமமாக இருக்கிறது. சிலர் கப்பலின் மேல் தட்டிலும், சிலர் கீழ் தட்டிலும் இருக்கிறார்கள். கீழ்தட்டில் இருப்பவர்கள் தங்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு மேல் தட்டுக்குச் செல்ல வேண்டும். இந்நிலையில் கீழ் தட்டில் இருப்பவர்கள் மேல் தட்டிற்கு செல்லும் சிரமத்தை தவிர்ப்பதற்காக, கப்பலில் துளையிட்டு நீரை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். இப்போது மேல் தட்டில் இருப்பவர்கள் கீழ் தட்டில் இருப்பவர்கள் செய்ய விரும்பும் காரியத்தை நிறைவேற்றுவதற்கு விட்டுவிட்டால் கப்பலிலுள்ள அனைவரும் நீரில் மூழ்கி இறக்க வேண்டியதுதான். எனினும் அவர்கள் அதை தடுத்து விட்டாலோ அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள்.இத்தகைய சமூகத்தைப் பற்றியதும், தனி மனிதரைப் பற்றியதுமான கண்ணோட்டம், சமூகத்தைப் பற்றி ஒரு தனித்துவமான கருத்தை ஏற்படுத்துகிறது. சமூகத்தின் அங்கங்களான தனி மனிதர்கள் வாழ்க்கையிலும் எண்ணத்திலும் ஒருங்கிணைக்கும் சிந்தனைகளை தங்களுக்கிடையே கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஒரே விதமான உணர்வுகளையே (Mashaa’ir) பகிர்ந்து கொள்பவர்களாக இருப்பார்கள். இந்த உணர்வுகள் அவர்களை ஆதிக்கம் செலுத்துவதால் அதன் வழியில் அவர்கள் செயல்படுகிறார்கள். இதற்கு மேலாக அவர்கள் அனைவரின் வாழ்க்கை விவகாரங்களையும் அறிந்து கொண்டு அதற்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரு ஒழுங்குபடுத்தும் அமைப்பும் (Life System)அவர்களிடம் இருக்க வேண்டும். ஆகவே, சமூகம் என்பது தனிமனிதர், சிந்தனை, உணர்ச்சிகள் மற்றும் ஒழுங்குபடுத்தும் அமைப்பு (முறைமைகள்) ஆகியவற்றின் மொத்த தொகுப்பு ஆகும். மனிதன் தனது வாழ்க்கையில் இத்தகைய சிந்தனைகளாலும் உணர்ச்சிகளாலும் ஒழுங்குபடுத்தும் அமைப்பாலும் பிணைக்கப்பட்டவனாகவே இருக்கிறான். இவ்வாறாக, வாழ்வியலில் சிந்தனை, உணர்ச்சி, ஒழுங்குபடுத்தும் வழிமுறை (முறைமைகள்) ஆகியவற்றால் மனிதன் கட்டுப்படுத்தப்படுகிறான். ஆகவே, ஒரு முஸ்லிம் இந்த உலக வாழ்க்கையில் இஸ்லாத்தினால் கட்டுப்படுத்தப்பட்டவனாக இருக்கிறான். அவனுக்கு சுதந்திரம் என்பது அறவே இல்லை. ஆகவே முஸ்லிம்களை பொருத்தவரை அகீதா என்பது இஸ்லாத்தின் வரம்புகளால் கட்டுப்பட்டதாக இருக்கிறதே தவிர கட்டுப்படுத்தப்படாமல் விட்டுவிடப்படவில்லை. இதனாலேயே எவர் ஒருவர் இஸ்லாத்தை துறந்து விடுகிறாரோ அவர் பெரும் குற்றம் புரிந்தவராக கருதப்படுவார். அவர் பாவ மன்னிப்பு கோராத பட்சத்தில், பெரும் தண்டனைக்கு ஆளாக வேண்டும். இது போலவே தனிமனித விவகாரங்கள் இஸ்லாமிய ஆட்சிமுறை மூலமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. விபச்சாரம் என்பது பெரிய குற்றமாகும். எனவே அதன் பொருட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டவர் பகிரங்கமாக முறையில் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்.
அல்லாஹ்(சுபு) சுறுகின்றான்:
அவர்களுக்கு நிறைவேற்றப்படும் தண்டனையை விசுவாசிகளில் ஒரு கூட்டத்தினர் பார்க்கட்டும். (அந் நூர் :2)
மதுபானம் அருந்துவது குற்றமாகையால் அதுவும் தண்டனைக்கு உரியது. அதுபோலவே மற்றவர்களுக்கு எதிராக (வரம்பு மீறி) அநீதம் புரிவது, விபச்சாரம் பற்றி அவது}று கூறுவது, கொலை செய்வது முதலிய குற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் அதன் தன்மைக்கு ஏற்றவாறு தண்டனை வழங்கப்படும். பொருளாதார விவகாரங்களும் ஷரிஆவினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. தனிமனிதர்கள் சொத்துரிமை மூலமாக சொத்துக்களை அடைந்து கொள்வதற்கு ஷரிஆ அனுமதிக்கிறது. மேலும், இந்த தனியார் சொத்துக்களின் தன்மைகள் அதை உபயோகிக்க ஷரிஆ கொடுக்கும் அனுமதியை தீர்மானிக்கும்;. முடிவாக, இந்த கட்டுப்பாடுகளை மீறுவது குற்றமாக கருதப்பட்டு வரம்பு மீறும் தன்மைகளுக்கு ஏற்றபடி குற்றத்தின் வகைகள் ஆய்வு செய்யப்படும். உதாரணமாக, திருட்டு, கொள்ளையிடுதல் ஆகியவைகளை குறிப்பிடலாம். ஆகவே, தனிமனிதனையும், சமூகத்தையும் பாதுகாக்க அரசு அவசியமான ஒன்றாகும். மேலும், சமூகத்தின் மீது ஒழுங்குபடுத்தும் வழிமுறையை பிரயோகப்படுத்துவதற்கும் அரசு தேவைப்படுகிறது. இன்னும், ஒரு சித்தாந்தத்தை, அதை பின்பற்றுகிறவர்களிடம் ஆதிக்கம் செலுத்தச்செய்வதற்கு அரசு அவசியமாக இருக்கிறது. இதனால் அதன் பாதுகாப்பு என்பது மக்களிடமிருந்தே இயல்பாக பெற்றுக் கொள்ளப்படுகின்றது. இதனடிப்படையில், முழு சமூகத்தையும் கட்டுப்படுத்தவும், பாதுகாக்கவும் திறனுள்ள சித்தாந்தமாக இஸ்லாம் இருக்கிறது. அதே நேரத்தில் சட்ட விதிமுறைகளை நிறைவேற்றக் கூடியதாக அரசு திகழ்கிறது. ஆகவே, அதிகாரம் (Sultan) உம்மாவுக்குரியதாக (முஸ்லிம் சமூகம்) இருந்த போதிலும், அரசாட்சி உரிமை (இறைமை) (Sovereignty) ஷரிஆவிற்கு உரியதே தவிர அரசுக்கோ அல்லது உம்மாவிற்கோ உரியதல்ல. ஆனால் அரசாட்சி உரிமை அரசு மூலமாகவே வெளிப்படும். ஆகவே, இஸ்லாமிய சட்டங்களை தனிமனிதர்கள் பின்பற்றுவது இறையச்சத்தைச் சார்ந்திருந்தாலும் ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தும் வழிமுறையாக அரசு திகழ்கின்றது. எனவே, சட்ட விதிமுறைகளை அரசு நடைமுறைப்படுத்துவதும், இறையச்சத்தால் உந்துதல் பெற்ற விசுவாசிக்கு இஸ்லாத்துடன் இணக்கமாக இருப்பதற்கு வழிகாட்டுவதும் அவசியமாகிறது. எனவே, இஸ்லாம் என்பது அகீதா மற்றும் அதன் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் இஸ்லாமிய சித்தாந்தம் என்பது சிந்தனை (Fikrah) மற்றும் அதன் செயல்முறை(Tareeqah) ஆகியவற்றைக் கொண்டது. செயல்முறை என்பது சிந்தனையின் தன்மைக்கு ஏற்றதாக இருக்கும் அதேசமயம் அதன் வழிமுறை (System) அதன் அகீதாவிலிருந்து பிறக்கும். அதன் கலாச்சாரம் (Hadarah) தனித்துவம் கொண்ட வாழ்க்கை முறையாகும். இஸ்லாமிய அரசினால் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்படுவதும், அதன் அறிவார்ந்த தலைமையை அழைப்பு பணி மூலம் உலகிற்கு எடுத்துச் செல்வதும்தான் இஸ்லாமிய அழைப்புப் பணியின் (Daw'ah) வழிமுறையாக இருக்கிறது. இதுதான் இஸ்லாத்தை விளங்கிக் கொள்ளவும் கடைபிடிக்கவும் உள்ள அடிப்படையாகும். இஸ்லாமிய ஆட்சிமுறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சமுதாயத்தில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்படுவதுதான் இஸ்லாமிய அழைப்புப் பணியை எடுத்துச் செல்லும் வழிமுறை என்று கருதப்படுகிறது. ஏனெனில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது இஸ்லாத்தை பிரயோகிப்பதுதான் அழைப்புப் பணி மேற்கொள்வதற்குரிய நடைமுறை வழியாக கருதப்படுகிறது. இந்த நடைமுறைபடுத்தும் செயல்தான் விரிந்து பரந்த இஸ்லாமிய உலகத்தை உருவாக்குவதில் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடிய காரணியாக இருந்து வந்திருக்கிறது.
தொடரும்...

No comments:

Post a Comment