Sunday, January 31, 2010

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 04 (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

சுருக்கமாக விளக்கும் பட்சத்தில் உலகில் மூன்று சித்தாந்தங்கள் நிலைபெற்றிருக்கின்றன. அவையாவன: முதலாளித்துவம் (capitalismj) கம்யூனிஸம் (communism) மற்றும் இஸ்லாம் (Islam) ஆகியவைகளாகும். இந்த ஒவ்வொரு சித்தாந்தமும் அதற்குரிய அடிப்படை கோட்பாட்டை (Aqeedah - Doctrine) கொண்டதாக இருக்கின்றன. அதிலிருந்து அதன் வழிமுறைகள் (முறைமைகள்) (System) பிறக்கின்றன. அதில் மனிதர்களின் செயல்பாட்டிற்குரிய அளவுகோல்களும், சமூகத்தைப் பற்றிய குறிப்பிட்ட கண்ணோட்டமும், அதன் (ஆட்சிமுறை) வழிமுறையை நடைமுயைப்படுத்தும் வழிமுறைகளும் (Method) அடங்கியிருக்கின்றன.

அகீதாவை பொருத்தவரை கம்யூனிஸ சித்தாந்தத்தின் கருத்து யாதெனில், அனைத்து பொருட்களுக்கும் உயிரினங்களுக்கும் மூலம் இயற்பொருள்தான் (Matter), இயற்பொருளின் பரிணாம வளர்ச்சி மூலமாக அனைத்துப் பொருட்களும், உயிரினங்களும் தோன்றி இருக்கின்றன என்பதாகும். முதலாளித்துவ சித்தாந்தத்தின் கருத்து யாதெனில்: மனிதர்களின் உலகியல் வாழ்க்கை விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிப்பதாகும். இதன் விளைவாக அரசுக்கும் மதத்திற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது. ஆகவே, முதலாளித்துவாதிகள், படைப்பாளன் பற்றிய கருத்தை விவாதிக்க முன்வருவதில்லை. மேலும் அவர்களின் விவாதம் என்னவென்றால், படைப்பாளனுக்கு மனிதர்களின் விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்தவித உரிமையும் இல்லை, அவனுடைய உள்ளமையை (Existence) ஏற்றுக் கொண்டாலும் அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரியே என்பதுதான். முடிவாக, படைப்பாளனின் உள்ளமையை ஏற்றுக்கொண்டவர்களும் அதை மறுப்பவர்களும் முதலாளித்துவ சித்தாந்தத்தில் சமமானவர்களே. அதுதான் மதசார்பின்மை (Secularism) என்ற வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிப்பது என்பதாகும்.

இஸ்லாம், அல்லாஹ்(சுபு)வின் உள்ளமையையும், அவன்தான் படைப்பாளன் என்பதையும் நம்புகிறது. மனித இனத்தின்பால் அவனுடைய தூதர்களையும் தீர்க்கத்தரிசிகளையும் அவனுடைய தீனுடன் அவன்(சுபு) அனுப்புகிறான். மேலும், மனிதர்கள் தங்கள் செயல்களுக்காக நியாயத்தீர்ப்பு நாளில் கேள்வி கணக்கிற்கு உட்படுவார்கள். ஆகவே இஸ்லாத்தின் அகீதா என்பது அல்லாஹ்(சுபு)மீதும், வானவர்கள் மீதும், அவனது வேதங்கள் மீதும், அவனுடைய து}தர்கள் மீதும், இறுதிநாளின் மீதும், களாகத்ர் மீதும், நன்மைதீமை இவை இரண்டும் அல்லாஹ்(சுபு)விடமிருந்துதான் வருகிறது என்பதன் மீதும் நம்பிக்கை கொள்வதாகும்.

எனினும், அகீதாவிலிருந்து (அடிப்படைக்கொள்கை) வழிமுறை (முறைமை) பிறக்கும் முறையைப் பொருத்தவரை கம்யூனிஸமானது, உற்பத்திக்குரிய கருவிகளிலிருந்து வழிமுறை உருவாகிறது என்கிறது. எனவே, பிரபுத்துவ சமூகத்தில் ஆதிக்கம் பெற்ற உற்பத்தி முறையினால் (கோடாரி) (Axe) விளைந்த பலன்தான் (Product) பிரபுத்துவ முறைமையாகும். சமூகம் முதலாளித்துவ சமூகமாக பரிணாம வளர்ச்சி அடையும்போது இயந்திரங்களை உற்பத்திக் கருவியாக அது மாற்றியது. எனவே, இயற்பொருள்வாத பரிணாம வளர்ச்சி (Meterialistic Evolution) யின் மூலம் மேற்கண்ட உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ வழிமுறை (முறைமை) உருவாகியது. வாழ்வியலிலிருந்து மதத்தை பிரித்ததன் காரணமாக வாழ்க்கை வழிமுறைகளை மனிதனே உருவாக்கிக் கொள்ள வேண்டும என முதலாளித்துவம் கோருகிறது. எனவே, மனிதன் அவனது எதார்த்த நிலையிலிருந்து அவனது வழிமுறையை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து அதை அவனே விதிமுறை செய்து கொண்டான். எனினும் வாழ்க்கையின் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு அல்லாஹ்(சுபு) மனிதனுக்கு ஒரு வழிமுறையை நிர்ணயித்து இருக்கிறான் என்று இஸ்லாம் கருதுகிறது. அவன்(சுபு) இந்த வழிமுறையுடன் முஹம்மது(ஸல்) அவர்களை அனுப்பியிருக்கிறான். மனிதர்கள் அதை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்லாஹ்(சுபு) தனது அருள் வெளிப்பாடு (Revealation) மூலம் அவருக்கு(ஸல்) அதை அருளியிருக்கிறான். ஆகவே, ஒரு முஸ்லிம் தனது பிரச்சினையை ஆய்வு செய்து அதற்குரிய தீர்வை குர்ஆனிலிருந்து சுன்னாவிலிருந்தும் முடிவு செய்து கொள்கிறான்.

எமது செயல்பாட்டின் அளவுகோளாக இயற்பொருள் வாதத்தை (Meterialism), அதாவது இயற்பொருள்வாத வழிமுறைகளை இந்த உலக வாழ்வியலின் அளவுகோளாக கம்யூனிஸம் கருதுகிறது. ஆகவே, இயற்பொருள் பரிணமிப்பது போல அளவுகோளும் பரிணமிக்கும் என அது குறிப்பிடுகிறது. அதேபோல முதலாளித்துவம் செயல்களுக்கான அளவுகோளாக உலகப் பயன்களை கருதுகிறது. இதனடிப்படையில், செயல்பாடுகளின் மதிப்பீடுகள் வரையப்பட்டு செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இஸ்லாமோ, செயல்பாடுகளின் அளவுகோளாக ஹராம், ஹலாலை கருதுகிறது. அதாவது அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் பற்றிய கட்டளைகளை செயல்பாட்டின் அளவுகோளாக இஸ்லாம் கருதுகிறது. இதனடிப்படையில் ஹலாலான செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஹராமான செயல்கள் விலக்கப்படுகின்றன. இஸ்லாத்தில் அளவுகோள் பரிணமிப்பதுமில்லை, மாற்றமடைவதுமில்லை, உலக பயன்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவதுமில்லை. மாறாக, ஷரிஆவே அவற்றை தீர்மானிக்கின்றது.

சமூகம் தொடர்பான கண்ணோட்டத்தைப் பொருத்தவரை இயற்பொருளாக கருதப்படும் உற்பத்தி முறை, இயற்கை, மனிதன் ஆகியவை அடங்கிய பொதுவான ஒரு தொகுப்பே சமூகம் என்று கம்யூனிஸம் கருதுகிறது. இயற்கையும் அதில் அடங்கியிருப்பவைகளும் பரிணமிக்கும் போது மனிதனும் அதனோடு சேர்ந்து பரிணமிக்கின்றான். இவ்வாறு முழு சமூகமும் பரிணமிக்கின்றது என்கிறது. இறுதியாக சமூகம் இயற்பொருள்வாத பரிணாம வளர்ச்சியை (Meterialistic Evolution) பின்பற்றுகிறது. ஆகவே பரிணாம வளர்ச்சியின் செயற்பாங்கை (Process) ஊக்குவிப்பதற்கு முரண்பாடுகளை உருவாக்க வேண்டும். சமூகம் பரிணமிக்கும் போது தனிமனிதனும் அதோடு சேர்ந்து பரிணமிக்கின்றான். இவ்வாறு மனிதன் ஒரு சக்கரத்தில் அதன் ஆரம் சுழல்வதைப் போல சமூகத்தோடு சேர்ந்து சுழன்ற வண்ணம் இருக்கின்றான் என்கிறது.

முதலாளித்துவம், தனிமனிதர்களின் தொகுப்புதான் சமூகம் என்று கருதுகிறது. ஆகவே, தனிமனிதர்களின் விவகாரங்கள் மேலாண்மை செய்யப்பட்டு விட்டால், சமூகத்தின் விவகாரங்கள் மேலாண்மை செய்யப்பட்டுவிடும் என்று அது கருதுகிறது. ஆகவே, முதலாளித்துவ சமூகத்தில் தனிமனிதன் மீது மட்டும்தான் கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அரசு தனிமனித நலனுக்காக மட்டுமே செயலாற்றுகிறது. இதன் முடிவாக, இந்த சித்தாந்தம் சுயநல போக்கு கொண்டதாக திகழ்கிறது.

இஸ்லாத்தைப்பொருத்தவரை சமூகத்தின் அடித்தளமாக அகீதா இருப்பதாக இஸ்லாம் கருதுகிறது. அதில் அதன் சிந்தனைகள், உணர்ச்சிகள் (Mashaair) மற்றும் அதிலிருந்து பிறக்கும் சமுதாய வழிமுறைகள் (முறைமைகள்) (System of life) ஆகியவைகள் அடங்கும். ஆகவே இஸ்லாமிய சிந்தனைகளும் இஸ்லாமிய உணர்ச்சிகளும் மிகைக்கும் போதும் அதன் மீது இஸ்லாமிய ஆட்சிமுறை செயல்படுத்தப்படும்போதும் இஸ்லாமிய சமூகம் உருவாகின்றது. ஆகவே சமூகம் என்பது மனிதன், சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் சமூக வழிமுறைகள் (முறைமைகள்) ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கிறது. ஒரு நபர் மற்றொரு நபருடன் இணைந்து செயல்படும்போது ஒரு குழுவாக மாத்திரமே இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒரே விதமாக சிந்தனை மேற்கொள்ளாதவரை, ஒரே விதமான உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளாதவரை, ஒரே விதமான ஆட்சி அமைப்புக்கு கீழ் வராதவரை ஒரு சமூகமாக அவர்கள் ஆக மாட்டார்கள். இது ஏனெனில், தத்தமது நலனே (Maslaha) இரு மனிதர்களுக்கிடையில் உறவை ஏற்படுத்தும் காரணியாக இருக்கின்றது. எனவே, தமது நலன்கள் குறித்த அவர்களின் சிந்தனைகளும், அதனுடன் கூடிய உணர்ச்சியும் ஒத்த அடிப்படையில் இருக்கும்போதே அவர்களுக்கு மத்தியில் உறவு நிலைக்கின்றது. இதன்விளைவாக அவர்களின் ஏற்பும் (Acceptance - Ridah மறுப்பும் (Rejection - Ghadah) ஒரே விதமாகவும், அவர்களின் வாழ்வியல் விவகாரங்களை தீர்க்கும் வழிமுறையும் ஒரே விதமாகவும் இருக்கும். தமது நலன் தொடர்பான சிந்தனைகளும் உணர்ச்சிகளும் மாறுபாடாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் ஏற்பும் மறுப்பும் ஒன்றுபடாது. அல்லது அவர்களின் சமூக வழிமுறைகள் வேறுபாடாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குள் உறவு என்பது இல்லாது போய்விடும். பிறகு சமூகம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது.

ஆகவே சமூகம் என்பது மனிதன், சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் வழிமுறைகள் (System) ஆகியவற்றை உள்ளடக்கியது. ஏனெனில் இந்த விஷயங்கள்தான் மக்களிடையே உறவை ஏற்படுத்துவதற்கும். அவர்கள் ஒரு தனித்தன்மை வாய்ந்த சமூகமாக விளங்குவதற்கும் காரணமாக இருப்பவைகள்.

இவ்வாறாக ஒரு சமூகத்தின்; அனைத்து மக்களும் முஸ்லிம்களாக இருக்கும் நிலையில், அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள சிந்தனைகள் ஜனநாயகமாகவும், முதலாளித்துவமாகவும் இருந்து, அவர்களுடைய உணர்ச்சிகள் புரோகித தன்மையுடன் கூடிய ஆன்மீகமாகவும் அல்லது தேசப்பற்றாகவும் அல்லது தேசிய வாதமாகவும் இருந்து அவர்கள் மீது அமைந்துள்ள ஆட்சிமுறை முதலாளித்துவ ஜனநாயகமாகவும் இருக்கும்பட்சத்தில் அந்த சமூகத்திலுள்ள மக்கள் அனைவரும் முஸ்லிமாக இருந்தபோதிலும் அல்லது அவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிமாக இருந்த போதிலும் அந்த சமூகம் இஸ்லாமிய சமூகமாக கருதப்படமாட்டாது.

ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்துவது குறித்து கம்ய10னிஸம் கருதுவது என்னவென்றால், கடுமையான சட்டங்கள் மூலமாகவும், காவல்துறையின் ஆற்றல் மூலமாகவும் அரசு மட்டுமே அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைத்தான். அதன் அரசானது, ஆட்சி அமைப்பை உருவாக்கி சமூகத்தின் சார்பாகவும், தனிமனிதன் சார்பாகவும் அவற்றை செயல்படுத்தும். முதலாளித்துவத்திலோ அரசானது சுதந்திர உரிமைகளை (விடுதலையை) பாதுகாக்கும். ஒரு மனிதனின் சுதந்திரத்தின் மீது மற்றொரு மனிதன் வரம்பு மீறினால் அரசு அதில் தலையிட்டு அதை தடுத்துவிடும். எனினும், ஒரு நபர், மற்றொரு நபரின் சுதந்திரத்தில் தலையிடாமல் அவரை சுயநலத்திற்காக பயன்படுத்தினாலும், அவரது சம்மதத்தோடு அவரது உரிமையை எடுத்துக் கொண்டாலும் அரசு அதில் தலையீடு செய்யாது. ஏனெனில் அவரது சுதந்திரத்தில் வரம்பு மீறியதாக அச்செயல் கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில் இங்கு சுதந்திர உரிமைகளை பாதுகாப்பதற்குத்தான் அரசு செயல்படுகிறது.

தனிமனிதனின் இறையச்ச உணர்வின் அடிப்படையில் (முறைமைகள்) ஆட்சிமுறை நடைமுறைப்படுத்துவதாக இஸ்லாம் கருதுகிறது. மேலும் நீதி நிர்வாகம் குறித்த சமூகத்தின் உணர்வின் அடிப்படையிலும், ஆட்சியாளரோடு இஸ்லாமிய உம்மா வழங்கும் ஒத்துழைப்போடும், நன்மையை ஏவி தீமையை தடுப்பதின் மூலமும், அரசினாலும் அரசு அதிகாரத்தின் மூலமாகவும் ஆட்சிமுறை நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதன்படி சமூகத்தின் விவகாரங்களை அரசு கவனித்துக் கொள்ளும் அதேசமயம் தனிமனிதர் தன்னுடைய விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் ஆற்றல் பெறாதவரை அரசு அந்த விவகாரங்களில் கவனம் செலுத்தாது. இங்கு ஆட்சி அமைப்பு ஒருபோதும் பரிணமிப்புக்கு உட்படாது. எனினும் ஒரு விவகாரத்தில் இஜ்திஹாத் மூலம் பல அபிப்ராயங்கள் இருக்கும்பட்சத்தில், எதை சட்டமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தீர்மானிப்பதில் அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமை மனிதனின் இயல்போடு ஒத்துப்போவதாக இருக்கிறது. ஆழமான சிந்தனைகளைக் கொண்டதாக அது இருந்த போதிலும் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஒருவருடைய அறிவும் உள்ளமும் அதற்காக துரிதமாக திறந்து விடுகிறது. ஆவலோடு அதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. மேலும் அதன் விளக்கமான கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்து பாராட்டுகிறது. இது ஏனெனில் மனிதனிடம் இயல்பாகவே சன்மார்க்க உள் உணர்வு (Religious Instinct) அமைந்திருப்பதுதான். ஒவ்வொரு மனிதனும் தன் இயல்பினால் ஒரு மதவாதியாகவே இருக்கின்றான். ஏனெனில் அவனிடம் மத உணர்வு ஆழமாக இடம்பெற்றிருக்கின்றது. எந்த சக்தியாலும் இந்த இயற்கை தன்மையிலிருந்து அவனை பிரிக்க முடியாது. தன்னுடைய இயல்பான இயற்கை தன்மையின் காரணமாக மனிதன் தான் முழுமையற்றவன் என்பதையும் வணங்கி வழிபட வேண்டிய மகத்தான ஆற்றலுடைய ஒன்று இருக்கிறது என்பதையும் மனிதன் உண்மையாக உணர்கின்றான். மனிதனின் சன்மார்க்க உள்உணர்வு என்பது, அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் ஒரு படைப்பாளன் அவனுக்கு தேவைப்படுவதை உணர்த்தக் கூடியதாகவே இருக்கிறது. மேலும் மனிதனின் இயல்பான பலவீனத்திலிருந்து தோன்றும் இந்த சன்மார்க்க உள்உணர்வு மனிதனிடம் நிலையாக இடம் பெற்றிருக்கக் கூடியது. அது மனிதனிடம் குறிப்பிட்ட சில வழிகளில் வெளிப்படுகிறது. அதுதான் மனிதனின் வணங்கி வழிபடும் தன்மையாகும் (ஸஜ்தா செய்யும் தன்மை taqdees). முடிவாக, மனித இனம் மதவாத தன்மையுடன் வரலாற்றின் நெடிய பாதை முழுவதிலும் ஏதாவது ஒன்றை வணங்கி வழிபட்டே வந்திருக்கிறது. மனித சமூகம், விண்கோள், கற்கள், விலங்குகள், நெருப்பு ஆகியவற்றையும் இன்னும் பலவற்றையும் வணங்கி வழிபட்டுக்கொண்டே வந்திருக்கிறது. எனினும், இஸ்லாம் தனது உன்னத கோட்பாட்டின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மனிதனை படைக்கப்பட்ட பொருட்களை வணங்கும் இழிநிலையிலிருந்து மீட்டு அனைத்தையும் படைத்த அல்லாஹ்(சுபு)வை வணங்குவதற்கு வழிகாட்டுகிறது. அல்லாஹ்(சுபு)வையும் அவனுடன்(சுபு) நமக்குள்ள உறவையும் மறுத்தலிக்கும் இயற்பொருள்வாத சித்தாந்தம் (Meterialistic Ideology) தோன்றிய பிறகும் மனிதனின் இந்த உள்ளார்ந்த மதவாத தன்மையினை மாற்றியமைக்க இயலவில்லை. மாறாக அதிகாரம் தொடர்பான மனிதனின் எண்ணக்கருவை இது மாற்றியமைத்து மனிதன் தன்னை விட தனது ஆற்றலை பெரிதாகக்கருதும் அளவுக்கும் அதனை வணங்கி வழிபடும் அளவுக்கும் இந்த சிpத்தாந்தம் வழிவகுத்துவிட்டது. மேலும் அது இந்த ஆற்றலை மனிதனுக்குள் உருவாக்குவதிலும், அதற்கு மட்டுமே அவன் வழிபடச் செய்வதிலும் அனைத்தையும் மாற்றியமைத்தது. பின்நோக்கி செல்வது போல் ஒரு நிலை ஏற்பட்டு மனிதர்கள் அல்லாஹ்(சுபு)வை வணங்குவதற்கு பதிலாக அவனது(சுபு) அடியார்களை (மனிதர்களை) வணங்கினார்கள். அவனது(சுபு) வசனங்களை கனம் செய்வதற்கு பதிலாக படைப்பினங்களின் வார்த்தைகளை கனம் செய்தார்கள். இந்த வகையில் இது ஒரு பிற்போக்கேயாகும். இந்த நிராகரிப்பு கொள்கையினால் மனிதனின் சன்மார்க்க உள்உணர்வை அவனிடமிருந்து நீக்க முடியவில்லை. மாறாக, ஏமாற்றும் விதத்தில் அவனை பின்நோக்கி செல்லும்படி ஆக்கிவிட்டது. ஆகவே, இயற்பொருள்வாத சித்தாந்தத்தின் (கம்யூனிஸம்) அறிவார்ந்த தலைமை எதிர்மறையானதாகும் (Negative). மனிதனின் இயற்கை தன்மைக்கு முரண்பட்டதாகும் (Controdictive). எனவே இந்த கண்ணோட்டத்தில் இது ஒரு தோல்வியே ஆகும். மனிதர்களை தங்களின் இறைப்பை தேவையை நிறைவு செய்யும் காரியத்தின் பக்கம் மட்டும் சிறப்பாக கவனம் செலுத்தும்படி அது அவர்களுக்கு வழிகாட்டியது. ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும், வாழ்வில் தோல்வியடைந்தவர்களையும் அது சிறப்பாக கவர்ந்தது. சிந்தனைத்தரம் குறைந்தவர்களும், வாழ்க்கையை கோட்டை விட்டவர்களும், வாழ்க்கையை வெறுத்தவர்களும், இயல்பான மனநிலையிலிருந்து மாறி தம்மை ஞானிகள்; என்று அழைக்கப்படுவதை விரும்பியவர்களும் இதை பின்பற்றினார்கள். அவர்கள் இந்த இயற்பொருள்வாத தத்துவத்தை பிரசங்கிக்கும் போதே அதன் தவறான அடிப்படையும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் சேதமும், உண்மையாகவும் தெளிவாகவும் வெளிப்படுகிறது. மனிதர்களை இந்த சித்தாந்த்திற்கு அடிமைப்படுத்தவும், கட்டாயப்படுத்தவும் அது முயற்சிக்கிறது. ஆகவே, அடக்குமுறை, அநீதி, வன்முறை, குழப்பம் மற்றும் நிலையற்ற தன்மை ஆகியவை அதன் முக்கிய சாதனங்களாக இருக்கின்றன.

முதலாளித்துவ அறிவார்ந்த தலைமையும் மனிதனின் இயற்கை தன்மைக்கு அதாவது சன்மார்க்க உள்உணர்வுக்கு முரண்பாடாகவே இருக்கிறது. இது ஏனெனில் சன்மார்க்க உள்உணர்வு மனிதனின் வணங்கி வழிபடும் உணர்விலும், வாழ்க்கை விவகாரங்களை மேலாண்மை செய்வதிலும் வெளிப்படுகிறது. இந்த மேலாண்மையை மனிதன் கையில் எடுக்கும் நிலையானது இந்த சித்தாந்த வழிமுறையின் பொருந்தாத தன்மையும் அதன் வழிமுறையின் ஆற்றல் இன்மைக்கு சாட்சியளிக்கின்றன. முடிவாக, மதம் என்பது மனிதர்களின் வாழ்வியல் விவகாரங்களை சரியான முறையில் மேலாண்மை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். ஆகவே, மனித வாழ்க்கை விவகாரங்களிலிருந்து மதத்தைப் பிரிப்பது என்பது மனிதர்களின் இயற்கை தன்மைக்கு முரண்பாடாக இருக்கிறது. மனித வாழ்க்கையில் மதம் இடம் பெற்றிருப்பது என்பதன் பொருள். வாழ்க்கையின் செயல்பாடுகள் வெறும் மத சடங்குகளாக இருப்பது என்பதல்ல. மாறாக, மதம் இடம் பெற்றிருப்பதன் பொருள் அல்லாஹ்(சுபு) விதித்த விதிமுறைகளைக் கொண்டு மனிதனின் வாழ்வியல் விவகாரங்கள் தீர்க்கப்படுவதுதான். மனிதனின் இயற்கை தன்மையோடு பொருந்திப் போகின்ற அகீதாவிலிருந்து இந்த வழிமுறை பிறக்கின்றது. இந்த வழிமுறையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறொரு (கோட்பாட்டிலிருந்து) அகீதாவிலிருந்து பிறந்த வழிமுறையைக் கொண்டு வந்தால் அது மனித இயல்புக்கு பொருந்திப் போவதாக இருக்காது. ஆகவே, முதலாளித்துவத்தின் அறிவார்ந்த தலைமை மனித உள் உணர்வு அடிப்படையில் தோல்வியுற்ற ஒன்றாகவே இருக்கிறது. ஏனெனில், அது எதிர்மறையானதாக இருக்கிறது. மனித வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை அது பிரிக்கிறது. மனித வாழ்வில் இயல்பாக உள்ள மத உணர்வினை போக்கி விடுகிறது. மேலும் அதை தனிமனித விவகாரம் என்று கூறுவதோடு, அல்லாஹ்(சுபு) மனித வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வாக விதித்துள்ள வழிமுறையை போக்கிவிடுகிறது.

இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை உடன்பாடானது. ஏனெனில், அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை பற்றிய நம்பிக்கைக்கு அறிவை அது அடிப்படையாக அமைத்திருக்கிறது. மனிதனின் கவனத்தை மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் என்பவற்றின் மீது திருப்பி படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வின் உள்ளமையை உறுதியாகவும், தீர்மானமாகவும் நிலைநிறுத்துகிறது. மனிதன் உச்சமான நிறைவை (Utmost Perfection) தனக்குள்ளே தேடுகின்றான். ஆனால் அது அவனிடத்திலோ அல்லது அவனுடைய வாழ்விலோ அல்லது பிரபஞ்சத்திலோ காணப்படாத நிலையில், இஸ்லாம் அதைப்பற்றி அவனுக்கு விளக்கக் கூறுகிறது. அந்த உச்சமான நிறைவை பெற்றுள்ள ஆற்றலை (அல்லாஹ்(சுபு)வை) அவன் அறிவு ரீதியாக உணர்ந்து கொள்வதற்கும, அதன் (அல்லாஹ்(சுபு)வை) உள்ளமை மீதும், அதன் (அல்லாஹ்(சுபு)வை) மீதும் நம்பிக்கை கொள்வதற்கும் வழிகாட்டுகிறது.

கம்ய10னிஸத்தின் அறிவார்ந்த தலைமை இயற்பொருள்வாத கோட்பாட்டின்மீது நிறுவப்பட்டிருக்கிறதே ஒழிய, அறிவார்ந்த அடிப்படையில் மனித அறிவின் தீர்மானத்தின் மீது நிறுவப்படவில்லை. அது சிந்தனைக்கு (Thought) முன்பாகவே இயற்பொருள் இருந்து வருவதாக கருதுகிறது. மேலும் அனைத்திற்கும் மூலமாக இயற்பொருள் இருக்கிறது என்று கருதுவதனால் இயற்பொருள்வாத (Meterialistic) அடிப்படையில் அது இருக்கிறது. இவ்வாறிருக்க, பல நு}ற்றாண்டுகளாக அறிஞர்களுக்கும், கிருஸ்தவ மத குருமார்களுக்கும் மத்தியில் நடந்து வந்த ரத்தம் சிந்தும் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் கொண்டு வரப்பட்ட சமரச பேரத்தின் அடிப்படையில் முதலாளித்துவ அறிவார்ந்த தலைமை அமைக்கப்பட்டது. இந்த சமரசத் தீர்வுதான் மனித வாழ்வியல் நடைமுறை விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிக்கும் சிந்தனையாகும்.

ஆகவே, கம்ய10னிஸம், முதலாளித்துவம் ஆகிய இரண்டின் அறிவார்ந்த தலைமையும் தோற்றுப்போய் விட்டன. ஏனெனில் அவை மனிதனின் இயல்புக்கு முரண்பட்டதாக இருப்பதோடு அவை மனித அறிவின் மீது நிறுவப்பட்டவைகள் அல்ல.

முடிவாக, இந்த மூன்று அறிவார்ந்த தலைமைகளில் இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை மட்டும்தான் சரியானது. ஏனெனில் இது மனித அறிவின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. மனிதனின் இயற்கை தன்மையோடு ஒத்துப் போவதாக இருக்கிறது. அதனால் அதற்கு உடன்பாடான முறையில் பதிலளிப்பவனாக மனிதன் இருக்கின்றான். அதே வேளையில் மற்ற அறிவார்ந்த தலைமை தவறானதாக இருக்கின்றன. ஏனெனில் அவைகள் மனித அறிவின் மீது கட்டமைக்கப்படவுமில்லை. அவை மனித இயல்புக்கு பொருந்துவதும் இல்லை.
தொடரும்...

No comments:

Post a Comment