முன்னைய காலத்தில் மிகத்தெளிவாக முஸ்லிம்களால் புரிந்துகொள்ளப்பட்டு ஒழுகப்பட்ட இஸ்லாத்தினுடைய மிக முக்கிய எண்ணக்கருக்கள், சிந்தனைகள், விளக்கங்கள் எல்லாம் இன்றைய சூழலில் மிக மேலோட்டமான புரிதல்களுடன், அல்லது குறைபாடுடைய விளக்கத்துடன் அல்லது முற்றாகவே கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவது வேதனையளிக்கிறது. இவற்றுள் ஒன்றுதான் இஸ்லாமிய பூமி (தாருள் இஸ்லாம்), நிராகரிப்பின் பூமி (தாருள் குப்ர்) என்பவற்றிற்கிடையிலான வேறுபாட்டை வரையறை செய்து விளங்கிக் கொள்ளுதலாகும்.
இன்று முஸ்லிம் உலகில் காணப்படும் நாடுகளின் நிலை குறித்து புரிந்து கொள்வதற்கு தாருள் குப்ர், தாருள் இஸ்லாம் என்பவை குறித்த தெளிவு மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் சில நேரங்களில் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு இந்நாடுகள் குறித்த நிலைப்பாட்டுக்கு வந்துவிடுவதுண்டு. மாறாக இந்நாடுகளின் உண்மை நிலை என்ன என்பது குறித்து ஷரிஆவின் நிழலில் நோட்டமிடுவதை இவர்கள் மேற்கொள்வதில்லை. எனவேதான் சூடான் இன்றுவரையும் “தேசிய அரசு – Nation state” ஆக காணப்படும் நிலையில் கூட ஹஸன் அல் துராபி சூடானின் ஆட்சியில் அமர்ந்தபோது அதனை இஸ்லாமிய அரசு என பலர் அழைத்தனர். அதேபோன்றுதான் ஆயத்துல்லாஹ் கொமெய்னி ஈரானியப்புரட்சியின் மூலம் தாருள் குப்ரை தாருள் இஸ்லாமாக மாற்றிவிட்டார் என முந்தியடித்துக்கொண்டு பலர் வாதிட்டனர். ஆனால் உண்மையில் ஈரானிய அரசியலமைப்புக்கூட முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணானதாகும்.
முஸ்லிம் உலகில் புகழ்பெற்ற நபர்கள் உட்பட பல இஸ்லாமிய இயக்கங்கள் கூட தாருள் குப்ர், தாருள் இஸ்லாம் என்பவற்றை வரையறை செய்வதில் மிக மேலோட்டமான பாங்கை கையாள்வதை நாம் காண்கிறோம். இந்நிலை சிந்தனை ரீதியான பாதிப்பிலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாஹ்வும் தப்பிவிடவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. நாமும் கிலாபத்திற்காகத்தான் முயற்சிக்கிறோம், நாமும் இஸ்லாமிய அரசைத்தான் ஏற்படுத்தப்பாடுபடுகிறோம் எனக்கூறுபவர்கள் கூட உண்மையில் இவை குறித்த தௌ;ளத்தெளிவான விளக்கத்தையோ, அல்லது வரையறையையோ புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். சிலர் கிலாபத்தை உருவாக்குவோம் என்பதை ஒரு சுலோகமாகப் பாவிக்கிறார்களேயொழிய அதனை நடைமுறையில் அடைந்து கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதை காணக்கிடைப்பதில்லை. கிலாபத் என்றால் என்ன தாருள் இஸ்லாம் என்றால் என்ன என்பது குறித்து புரிந்து கொள்ளாது அதனை ஏற்படுத்த முனைகின்றோம் எனக்கூறுவது தொழுகையின் து}ண்கள் (அர்கான்) என்ன அதற்கான நிபந்தனைகள் (சுரூத்) என்ன என்பவை குறித்து அறியாமல் நாங்கள் தொழுகையை நிலைநாட்டப்போகிறோம் எனக்கூறுவதற்கு ஒப்பானதாகும்.
மோசடிமிக்க இன்றைய முஸ்லிம் நாடுகளை தாருள் குப்ர் என அழைப்பதற்கே சிலர் வெட்கப்படும் நிலையைப்பார்க்கிறோம். வேடிக்கை என்வென்றால் குப்பார்கள், குப்ரைக் கொண்டு ஆட்சி நடாத்தும் இந்தியா போன்ற நாடுகளைகூட தாருள் குப்ர் என்று அழைப்பதற்கு சிலர் தயங்குவதுதான்.
எனவேதான் தாருள் இஸ்லாம் மற்றும் தாருள் குப்ர் என்பவற்றிற்கிடையிலான வேறுபாட்டையும், அதன் வரைவிலக்கணத்தையும், அது தொடர்பான ஷாரீஆ ஆதாரங்களையும் விளக்குவது இன்றைய காலப்பரிவில் மிகவும் முக்கியமானது எனக் கருதுகின்றோம்.
வரைவிலக்கணம்
‘தார்’ (பன்மை: தியார்) என்பதற்கு அரபு அகராதியில் தங்குமிடம்(மஹல்லு), வீடு, வதிவிடம், நிலம்(பலத்) என்பவை போன்ற பல அர்த்தங்கள் உண்டு. இஸ்லாமிய ஷாரீஆவின் பரிபாஷையில் தாருள் இஸ்லாம் என்பதற்கு “ முற்றுமுழுதாக இஸ்லாமிய சட்டங்களைக்கொண்டு ஆட்சி செய்யப்பட்டுவருகின்ற, அதன் பாதுகாப்பு (அமன்) இஸ்லாத்தின் பாதுகாப்பினால் (அதாவது: நாட்டிற்குள்ளும், வெளியிலும் முஸ்லிம்களின் பாதுகாப்பு இஸ்லாமிய அதிகாரபீடத்தினாலும் வழங்கப்பட்டுவரும்) மாத்திரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலமாகும். அது பெரும்பான்மையாக முஸ்லிம் அல்லாதவர்களை கொண்ட நாடாக இருந்தாலும்கூட” எனப்பொருளாகும்.
தாருள் குப்ர் என்பது “ குப்ர் சட்டங்களைக்கொண்டு ஆட்சி செய்யப்படுகின்ற, அதன் பாதுகாப்பு இஸ்லாத்தின் பாதுகாப்பினால் வழங்கப்படாத நிலமாகும். இந்நிலம் பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்ட நிலமாக இருந்தாலும்கூட. ”
ஆகவே தாருள் குப்ர் என்பதும், தாருள் இஸ்லாம் என்பதும் நிலத்தை அடிப்படையாக்கொண்டோ, அல்லது அதன் குடிமக்களை அடிப்படையாகக்கொண்டோ வரையறை செய்யப்படுவதில்லை. மாறாக அந்த நிலத்தின் சட்டங்களையும், அதன் பாதுகாப்பையும் அடிப்படையாகக்கொண்டே அவை வரையறை செய்யப்படுகின்றன. ஆகவே எங்கே ஆட்சியும், பாதுகாப்பும் இஸ்லாத்தைக்கொண்டு முழுமையாக இருக்கின்றதோ அது தாருள் இஸ்லாம். எங்கே ஆட்சியும், பாதுகாப்பும் நிராகரிப்பைக்கொண்டிருக்கிறதோ அது தாருள் குப்ர். இங்கே இன்னுமொரு கேள்வியும் எழலாம். அது தாருள் ஹர்ப் (யுத்திற்கான நிலம்) குறித்தது. தாருள் ஹர்ப் என்பதும் தாருள் குப்ர் என்பதும் அதன் பாவணையைப்பொறுத்து வேறுபடுகிறதேயோழிய அவை ஒன்றையே குறிப்பிடுகின்றன. ஏனெனில் இஸ்லாமிய ஆட்சி முழு உலகிலும் பரப்பப்பட்டு நிலைநாட்டப்படும் வரை அதற்கான போராட்டம் தொடரும் என்பதால் இஸ்லாம் ஆட்சி செலுத்தாத பூமிகளை தாருள் குப்ர் என்று அழைப்பதைப்போலவே தாருள் ஹர்ப் என்றும் அழைப்பதுண்டு. எனினும் இஸ்லாமிய பூமியை நேரடியாக ஆக்கிரமித்துள்ள நாடுகளுக்கும், ஆக்கிரமிப்பில் ஈடுபடாத நாடுகளுக்குமிடையே அந்நிலங்களை வரையறை செய்வதிலே வேறுபாடு காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய பூமியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் போன்ற நாடுகளை தாருள் ஹர்ப் பிஃலன் (நிதர்சன யுத்த பூமி) என்றும், முஸ்லிம் நிலங்களை ஆக்கிரமிக்காத அல்லது முஸ்லிம் நிலங்களுடன் நேரடியாக யுத்தத்தில் ஈடுபடாத ஏனைய குப்ர் நாடுகளை தாருள் ஹர்ப் ஹீக்மன் ( சட்ட ரீதியான யுத்த பூமி) என்றும் வகைப்படுத்தப்படும். மேற்குறிப்பிட்ட வரைவிலக்கணங்கள் இஸ்லாமிய ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டவையும், இஸ்லாமிய வரலாற்றில் அறிஞர்களால் கலந்துரையாடப்பட்டவைகளுமாகும்.
ஆதாரங்கள்
‘தார்’ என்ற பதம் ரஸ}ல்(ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலும், அவர்களின் தோழர்களின் பாவணையிலும் ஒரு பிரதேசத்தை குறிப்பதற்கு அல்லது முஸ்லிம்களுடன் தொடர்புபட்டுவரும்போது இஸ்லாமிய அரசைக்குறிப்பதற்கு, நிராகரிப்பாளர்களுடன் தொடர்புபட்டுவரும்போது அவர்களின் ஆதிக்க நிலப்பரப்பைக் குறிப்பதற்கு பயன்பட்டு வந்துள்ளதை எம்மால் அவதானிக்க முடியும்.
சுலைமான் இப்ன் புரைதா(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
"...இஸ்லாத்தின் பக்கம் அவர்களை அழைப்பீராக. அவர்கள் உமக்கு பதிலளித்தால் அதை ஏற்றுக்கொள்வீராக. பிறகு அவர்களிடமிருந்து (போர் புரிவதிலிருந்து) விலகிக்கொள்வீராக, பின்னர் அவர்களின் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து முஹாஜிர்கள் வாழும் பிரதேசத்திற்கு ஹிஜ்ரத் செய்யும்படி அவர்களுக்கு அழைப்பு விடுப்பீராக. அவர்கள் இவ்வாறு செய்தால் பிறகு முஹாஜிர்களுக்கு உரியதைப் போன்ற சாதகங்களும் பாதகங்களும் (உரிமைகளும் கடமைகளும்) அவர்களுக்கும் உண்டு (என்று கூறுவீராக) ..."(ஸஹீஹ் முஸ்லிம் 4294)
இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் விஷயம் என்னவென்றால். அவர்கள் வாழும் நிலப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து முஹாஜிர்கள் (ஹிஜ்ரத் செய்தவர்கள்) வாழும் நிலப்பகுதிக்கு ஹிஜ்ரத் செய்யாவிட்டால் முஹாஜிர்கள் பெற்றுள்ள உரிமைகளை பெறமுடியாது. அதாவது இஸ்லாத்தின் நிலப்பரப்பில் வாழ்கின்ற முஸ்லிம்களின் உரிமைகளை பெறமுடியாது, ஆகவே இந்த ஹதீஸ் முஹாஜிர்கள் வாழும் நிலப்பகுதிக்கு ஹிஜ்ரத் செய்பவர்களுக்கும் ஹிஜ்ரத் செய்யாதவர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை தெளிவாக விளக்குகிறது, தாருல் முஹாஜிரீன் என்பது அல்லஹ்வின்தூதர்(ஸல்) காலத்தில் இஸ்லாத்தின் நிலப்பகுதியாக இருந்தது. அதாவது தாருல் இஸ்லாமாக இருந்தது. இதற்கு அப்பால் இருந்த அனைத்து நிலப்பகுதிகளும் தாருல்குப்ர் என்று கருதப்பட்டது.
இந்த ஹதீஸின் அர்த்தத்திலிருந்துதான் தாருல்இஸ்லாம் மற்றும் தாருல்குப்ர் ஆகிய சொற்களின் அர்த்தங்கள் பெறப்பட்டுள்ளன, ஆகவே ஒரு நிலப்பரப்பை இஸ்லாத்துடனோ அல்லது குப்ருடனோ அல்லது போருடனோ இணைத்துக் கூறும்போது அதில் இடம்பெற்றுள்ள அரசைப் பொறுத்தும் அதன் அதிகாரத்தைப் (sultan - authority) பொறுத்துமே இணைத்துக்கூறப்படுகிறது.
ஆகவே ஒரு நிலப்பரப்பின் (dar - land) அடையாளத்தை அதில் இடம்பெற்றுள்ள அதிகாரஅமைப்பின் (sultan - authority) அடிப்படையில் நிர்ணயிக்கமுடியும் என்பது தெளிவாக விளங்குகிறது, இரண்டு அம்சங்களின் அடிப்படையில் இந்த அதிகாரஅமைப்பின் அடையாளத்தை அறிந்துகொள்ளமுடியும்.
முதலாவதாக : மக்களின் நலனை பேணுவதற்கு அதில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள்
இரண்டாவதாக : குடிமக்களை பாதுகாப்பதற்கும் அவர்களுக்கிடையில் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் உரிய அதிகாரம்
ஆகவே மேற்கூறப்பட்ட இரண்டு நிபந்தனைகளின் அடிப்டையில்தான் இதை அறிந்து கொள்ளமுடியும்.
மேலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக உள்ள ஷரியாவின் ஆதாரமாவது :
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ
இன்னும் எவர் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சிபுரியவிûல்லையோ அவர்கள்தான் காபிர்கள் ஆவார்கள். ( அல்மாயிதா 5: 44)
மேலும் அவ்ப் இப்ன் மாலிக்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் தீய இமாம்கள் பற்றி கூறப்பட்டுள்ளதாவது.
"... அல்லாஹ்வின்தூதரே(ஸல்) அவர்களுக்கு எதிராக நாங்கள் போர் செய்யவேண்டாமா? என்று வினவப் பட்டது. "இல்லை உங்களுக்கு மத்தியில் அவர் ஸலாத்தை நிலைநிறுத்தும்வரை (அவ்வாறு செய்யவேண்டாம்)... என்று கூறினார்கள்(ஸல்)..."
பைஅத் தொடர்பாக உபாதா இப்ன் அஸ்ஸாமித் (ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
"... அல்லாஹ்விடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் வெளிப்படையான குப்ரை கண்டால் ஒழிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம் நீங்கள் சர்ச்சை செய்யவேண்டாம்..."
தப்ராணியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது. அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
"...வெளிப்படையான குப்ரை அவர்களிடமிருந்து நீங்கள் கண்டால் ஒழிய..."
ஆகவே அல்லாஹ்(சுபு) அருளிய சட்டங்களுக்கு அந்நியமான சட்டங்களைக் கொண்டு ஆட்சிபுரியும் நிலைதான் ஆட்சியாளர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் ஜிஹாது செய்வதை நிர்ணயிக்கும் விஷயம் என்பதை மேற்கண்ட ஷரியா உரைகள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் தாருல்இஸ்லாமாக இருக்கும் நிலப்பரப்பில் இஸ்லாத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது கட்டாய நிபந்தனை என்பதையும் அவ்வாறு நடைமுறைப் படுத்தவில்லை என்றால் அந்த ஆட்சியாளருடன் போர் செய்யவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டும் ஆதாரங்களாக இவை இருக்கின்றன.
பாதுகாப்பு - security – amaan :
தாருல்இஸ்லாமாக இருக்கும் ஒரு நிலப்பகுதியில் அதன் குடிமக்களின் பாதுகாப்பு அதிகாரம் இஸ்லாத்தின் பொறுப்பில் இருக்கவேண்டும் அதாவது முஸ்லிம்களின் கைகளில் இருக்கவேண்டும், கீழ்கண்ட அல்லாஹ்(சுபு) வின் வசனத்திலிருந்து இந்த ஆதாரம் பெறப்பட்டுள்ளது.
وَلَنْ يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا
மூமின்கள் மீது (ஆதிக்கம் செலுத்துவதற்கு) காபிர்களுக்கு அல்லாஹ் நிச்சயமாக எந்த வழியையும் ஆக்கமாட்டான். ( அந்நிஸா 4: 141)
அதாவது மூஃமின்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கு காபிர்களுக்கு அனுமதியில்லை ஏனெனில் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது முஸ்லிம்களின் பாதுகாப்பு குப்ரின் கையில் இருப்பதாகுமே ஒழிய இஸ்லாத்தின் கையில் இருப்பதாகாது.
மேலும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) முஸ்லிம்களின் அதிகாரத்திற்கு கட்டுப்படாத ஒவ்வொரு நிலப்பகுதிகள் மீதும் போர் தொடுப்பதற்கு கட்டளையிடுபவர்களாக இருந்தார்கள் என்பதோடு அந்த பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் அல்லது இல்லையென்றாலும் அவர்களுடன் போர் செய்வதில் அவர்கள்(ஸல்) ஈடுபட்டார்கள்.
அனஸ்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
"ஒரு கூட்டத்தினர் மீது அல்லாஹ்வின்தூதர்(ஸல்) தாக்குதல் நடத்தும்போது அதிகாலை நேரத்தில் மட்டுமே தாக்குதல் நடத்துவார்கள், அதான்(தொழுகைக்கான அழைப்பு) கூறும் சப்தம் கேட்டால் தாக்குதல் நடத்துவதை தவிர்த்துக் கொள்வார்கள் அதான் கூறும் சப்தத்தை கேட்கவில்லை என்றால் அதிகாலை நேரத்திற்குப் பின்னர் தாக்குதல் நடத்துவார்கள் "
எஸ்ஸாம் அல்முன்ஸி(ரலி) அறிவித்திருப்பதாவது.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) போர்ப்படைகளை அனுப்பும்போது பின்வருமாறு கூறுவார்கள். "நீங்கள் மஸ்ஜிதுகளை கண்டாலோ அல்லது (தொழுகையின்) அழைப்பொலியை கேட்டாலோ பிறகு ஒருவரையும் கொல்லவேண்டாம்"
மஸ்ஜித் மற்றும் அதான் ஆகியவை இஸ்லாத்தின் அடையாளங்களாக இருக்கின்றன என்பதால் அது அங்கு முஸ்லிம்கள் வசிப்பதை சுட்டிக்காட்டும் விஷயமாக இருக்கிறது, எனினும் இது போர் செய்வதை தடுக்கக்கூடிய விஷயமாக இல்லை மாறாக அங்கு வாழும் முஸ்லிம்கள் எவரையும் கொல்லக்கூடாது என்பதுதான் கட்டளையாக இருந்தது. அந்தப்பகுதி தாருல்ஹர்பாக (போர் பிரகடணம் செய்யப்பட்ட பகுதி) இருந்ததுதான் இதற்கு காரணமாகும் ஏனெனில் இஸ்லாத்தின் அடையாளங்கள் அல்லது இஸ்லாமிய சடங்குகள் அந்த பகுதியில் இடம்பெற்றிருந்த போதிலும் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) அதிகாரத்தின் கீழ் பாதுகாப்பு பெற்ற பகுதியாக அது இல்லை. அதாவது இஸ்லாத்தின் அதிகாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் உட்படாத பகுதியாக அது இருந்தது, ஆகவே தாருல்ஹர்பாக கருதப்பட்ட மற்ற பகுதிகளைப் போலவே முஸ்லிம்கள் வாழும் அந்த பகுதியும் தாருல் ஹர்பாகவே கருதப்பட்டது.
இந்த அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் இன்றுள்ள எல்லா முஸ்லிம் நாடுகளும் இஸ்லாத்தின் சட்டங்கள் விதித்துள்ள நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை, அவைகளின் பலபகுதிகளின் பாதுகாப்பு அதிகாரம் (அமான்) முஸ்லிம்களின் கைகளில் இருந்தபோதும். அவை முஸ்லிம்களின் பூமியாக இருந்தபோதும். அவற்றில் வாழ்கின்ற மக்கள் முஸ்லிம்களாக இருந்தபோதும் துர்பாக்கியவசமாக அவைகள் தாருல்இஸ்லாமாக கருதப்படமாட்டாது, ஏனெனில் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு அதிகாரம் ஆகியவற்றைப் பொறுத்து இவ்விஷயம் நிர்ணயிக்கப்படுகிறதே ஒழிய நிலப்பரப்பையும் அதில் வாழ்கின்ற மக்களையும் பொறுத்தல்ல.
ஸஹீஹ் அல் புஹாரியில் அரேபிய தீபகற்பத்திலுள்ள கைபர் என்ற நகர் தொடர்பாக இடம்பெற்றுள்ள அறிவிப்பு இதற்கு மேலும் சான்று பகர்கிறது. மதீனாவில் இஸ்லாமிய அரசு காணப்பட்ட சூழலில் கைபர் என்ற நகரத்தின் முழுமையான சனத்தொகையினரும் யூதர்களாக இருந்த போதிலும்கூட அது தாருள் இஸ்லாமாவே கருதப்பட்டது. ஏனெனில் அதனது அதிகாரம் இஸ்லாமிய அரசின் கைகளில் இருந்தது. ஹிஜ்ரி 7இல் கைபரை கைப்பற்றிய முஹம்மத்(ஸல்) அவர்கள் முழுமையாக யூதப்பகுதியாக விளங்கிய அந்நகரில் யூதர்கள் தமது நிலங்களில் விளைச்சலில் ஈடுபடும்படி கூறியதுடன் அவர்கள் கூறினார்கள். “ நான் அறுவடை செய்வதற்கே (நற்கூலியைப்பெறுவதற்கு)அனுப்பப்பட்டுள்ளேனே ஒழிய விளைச்சலில் ஈடுபடுவதற்கு அல்ல. என்று கூறினார்கள். மேலும் அங்கே அன்ஸார்களில் தலைவர்களை நியமித்ததுடன் அவர்கள் யூதர்களுக்கு மத்தியிலும் வாழ்ந்தார்கள்.
இப்னு உமர்(ரழி) அறிவித்ததாக புஹாரியில் பதிவாகியுள்ளது.
“ உமர்(ரழி) ஹிஜாஸிலிருந்து(அரேபிய தீபகற்பம் முழுதும்) முழுமையாக யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் வெளியேற்றினார்கள். முஹம்மத்(ஸல்) கைபரை கைப்பற்றிய போது யூதர்களை அங்கிருந்து வெளியேற்ற விரும்பினார்கள். ஏனேனில் அந்நிலம் அல்லாஹ்(சுபு)வினதும், அவனதும் தூதர்(ஸல்) அவர்களினதும், முஸ்லிம்களினதும் நிலமாகும். அவர்கள்(ஸல்) யூதர்களை வெளியேற்ற விரும்பிய போதும் யூதர்கள் தாம் அங்கே இருக்க விரும்புவதாகவும், தமது உழைப்பில் பாதியை இஸ்லாமிய அரசுக்கு செலுத்திவிட்டு பாதியை தாம் எடுத்துக்கொள்வதாகவும் விண்ணப்பித்தார்கள். இந்த நிபந்தனையின் அடிப்படையில் முஹம்மத்(ஸல்) அவர்கள் யூதர்களை அங்கே தாம் விரும்பும் காலக்கேடு வரை விட்டுவைப்பதாக தெரிவித்தார். பின்னர் உமர் (ரழி) யூதர்களை ‘தைமா’ மற்றும் ‘ஆரிஹா’வை நோக்கிச் வெறியேற வைக்கும் வரை யூதர்களும் அங்கே தொடர்ந்து வாழ்ந்து வந்தார்கள். (ஸஹீஹ் புஹாரி 2213)
மேலும் அபுஹீரைரா(ரழி) மற்றும் சைத் அல் குத்ரி (ரழி) அறிவிக்கின்ற ஹதீஸில். “ … முஹம்மத்(ஸல்) அன்ஸார்களான பனு அதிய் இன் சகோதரரை கைபருக்கு ஆட்சியாளராக்கினார்கள். (ஸஹீஹ் புஹாரி 4001)
தாருள் குப்ர் மற்றும் தாருள் இஸ்லாம் தொடர்பாக ஸஹாபாக்கள் கொண்டிருந்த கருத்துக்கள்
இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிப்பதாக புஹாரியில் பதிவாகியுள்ளது.
ஒருமுறை உமர் (ரழி) (இதன்போது உமர்(ரழி) கலீபாவாக இருந்தார்கள்) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்(ரழி), உரையாடிக்கொண்டிருந்தாகள். அவர்கள் கூறினார்கள். “ அவர்கள் மதீனா எனும் தாருள் ஹிஜ்ரா (ஹிஜ்ராவின் பூமி), தாருள் ஸ}ன்னா (நபிவழியின் பூமி), தார் அல் ஸலாமா (அமைதியின் பூமி) விற்கு இடம்பெயரும் வரை அவர்களுடன் கடுமையான முறையில் நடந்து கொள்ளாதீர்கள்.( சில ஹிஜ்ஜாஜ்கள் தொடர்பாக கூறினார்கள்). ( புஹாரி 3713)
இப்னு அப்பாஹ்(ரழி) அறிவித்ததாக ஜாபிர் பின் ஸியாத் (ரழி) அறிவித்தார்கள்.
“ தூதர்(ஸல்), அபு பக்ர்(ரழி), உமர்(ரழி) போன்றோர்கள் முஹாஜிர்களாவார்கள். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பாளர்களிடமிருந்து ஹிஜ்ரத் செய்தார்கள். அன்ஸார்களிலும் சிலர் ஹிஜ்ரத் செய்தார்கள். ஏனெனில் மதீனா தாருள் சிர்க்காக இருந்தபோது அவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்களை நோக்கி பையத்துல் அகபாவினுடைய இரவில் வந்தார்கள். (அந் நஸயீ)
அபு உபைத் (ரஹ்) அவர்களின் கிதாபுல் அம்வாலிலும், அபு யூசுப்(ரஹ்) அவர்களின் கிலாபுல் ஹரஜ்ஜிலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது...
காலித் பின் வலீத் (ரழி) ஹிரா (பஹ்ரைனுக்கு அருகிலுள்ள ஒரு பகுதி) என்ற பகுதிவாழ் மக்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தார்கள். அதிலே அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள். “ உங்களில் யாரேனும் முதியவர்களாகவோ, வசதியற்றவர்களாகவோ, நோயாளிகளாகவோ அல்லது பிறருடைய தயவில் வாழ்பவராகவோ மாறினால் அவ்வாறானவர்களிடமிருந்து நான் ஜிஸ்யா அறவிடமாட்டேன். மாறாக அவர்கள் பைத்துல் மாலிலிருந்து (திறைசேரி) நிதியையும் பெற்றுக்கொள்வார். அவரும் அவரது பிள்ளைகளும் இதற்கு உரிமையுடையவர்களாவார்கள். எதுவரையெனில் அவர்கள் தாருள் ஹிஜ்ராவில் அல்லது தாருள் இஸ்லாத்தில் வாழும் வரை. அவர்கள் இங்கிருந்து வெளியேறிவிட்டால் முஸ்லிம்கள் அவர்களுக்கு மேற்குறிப்பிட்டதை செய்வதற்கு கடமைப்படமாட்டார்கள். (அபு உபைத் - கிலாபல் அம்வால் பக்கம் 98, அபு யுசுப் - கிதாபல் ஹரஜ் பக்கம் 155 – 156)
தாருள் குப்ர் மற்றும் தாருள் இஸ்லாம் தொடர்பாக அறிஞர்களில் (உலமாக்கள்) கருத்துக்கள்.
இமாம் அல் கஸானி கூறினார்கள் (ஹி 587 இல் இறந்தார்கள்):
“ ஒரு நிலத்தில் இஸ்லாமிய சட்டங்கள் மேலோங்கும்போது தாருள் குபர் தாருள் இஸ்லாமாக மாறும் என்பதில் அஹ்னாப்களுக்கு (ஹனபி மத்ஹபின் அறிஞர்கள்) மத்தியில் எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லை. எனினும் எமது சகோதரர்கள் தாருள் இஸ்லாம் எவ்வாறு தாருள் குப்ராக மாறும் என்பதில்தான் சிறிது கருத்து வேறுபட்டிருந்தனர். எங்களது இமார் அபு ஹனீபா(ரஹ்) கூறினார்கள். “ தாருள் இஸ்லாம் தாருள் குப்ராக மூன்று சந்தர்ப்பங்களிலேயே மாற்றமடையும். அதாவது, 1. சட்டமும், ஒழுங்கும் குப்ராக (இறை நிராகரிப்பாக) மாறும்போதும், 2. இஸ்லாமிய அரசு, குபர் அரசொன்றுடன் எல்லையைக்கொண்டிருந்தும் அது அவ்வரசுடன் எத்தகைய உடன்படிக்கையையும் கொண்டிராதபோதும், அல்லது 3. அந்த அரசில் முஸ்லிம்களுக்கோ, திம்மிகளுக்கோ( இஸ்லாமிய அரசில் வாழ்ந்துவரும் மாற்று மதத்தினர்) எத்தகைய பாதுகாப்பும் இல்லாத நிலையிலும் ஆகும். ( பதா அஸஸனாய் - பாகம் 7, பக்கம் 131)
இமாம் அர்ஷர்கஸி ( ஹி 483 இல் இறந்தார்கள்) குறிப்பிடுகிறார்கள்.
“ தார் (நிலம்) தாருள் முஸ்லிமீனாக எப்போது மாறும் எனில் அங்கே இஸ்லாமிய சட்டங்கள் மேலாதிக்கம் செலுத்தும்போது ( அல்லது வெளிரங்கமாக இருக்கும்போது). (ஷர்கஸி - ஸரஹ் சீறா அல் கபீர் - பாகம் 5, பக்கம் 2197)
காதி அபு யஃலா (ஹி 458 இல் இறந்தார்கள்) சொல்கிறார்கள்.
“ எந்த நாட்டிலாவது இஸ்லாமிய சட்டமல்லாத குப்ர் சட்டமே காணப்படுமானால் அது தாருள் குப்ராகும். ( அல் முஃதமத் அல் உசூலுத்தீன் பக்கம் 276)
இப்னு கையூம் (ஹி 751 இல் இறந்தார்கள்) குறிப்பிடுகிறார்கள்.
“ பெரும்பான்மையான உலமாக்கள் குறிப்பிடுகிறார்கள் - முஸ்லிம்கள் சென்று குடியேறி அங்கே இஸ்லாமிய சட்டங்கள் மேலோங்கியிருக்கும்போது அந்நிலம் தாருள் இஸ்லாம் என்று. அந்நிலம் இஸ்லாமிய நிலத்திற்கு (அரசுக்கு ) மிகவும் அருமையில் அமைந்திருந்தாலும்கூட அங்கே இஸ்லாமிய சட்டங்கள் மேலோங்கியிருக்கவில்லை என்றால் அது தாருள் இஸ்லாம் ஆகாது. தாயிப் மக்காவுக்கு(மக்கா தாருள் இஸ்லாமாக மாறிய பின்னர்) பக்கத்தில் இருந்தாலும் கூட அது வெற்றிகொள்ளப்படும்வரை அது தாருள் இஸ்லாமாகக் கருதப்படவில்லை. (இப்னு கையூம் - கிதாப் அஹ்காம் அஹ்லல் திம்மாஹ் - பாகம் 01 , பக்கம் 366)
இப்னு முப்லிஹ் (ஹி 884 இல் இறந்தார்கள்) குறிப்பிடுகிறார்கள்.
“ இரண்டே இரண்டுதான் உள்ளன. தாருள் இஸ்லாம் அல்லது தாருள் குப்ர். இந்த நிலத்திலாவது இஸ்லாமிய சட்டங்கள் மேலோங்கியிருந்தால் அது தாருள் இஸ்லாம். இந்த நிலத்திலாவது குபர்(இஸ்லாம் அல்லாத) சட்டங்கள் மேலோங்கியிருந்தால் அது தாருள் குபர். இவ்வாறு இரண்டே இரண்டு அணிகள்தான் உள்ளன. ( அல் அதாப் அல் ஷாPஆ – பாகம் 01, பக்கம் 190)
இமாம் மவர்தி ( ஹி 885 இல் இறந்தார்கள்) குறிப்பிடுகிறார்கள்.
“ தாருள் ஹர்ப் என்பது தாருள் குப்ராகும். அங்கே குப்ர் சட்டங்களே மேலோங்கியிருக்கும். (அல் இன்ஸாப் - பாகம் 04, பக்கம் 122)
முஹம்மத் பின் அலி அஸ் ஸவ்கானி (ஹி 1255 இல் இறந்தார்கள்) குறிப்பிடுகிறார்கள்.
“ நாங்கள் நிலம் பற்றி குறிப்பிடும்போது அது யாருடைய வார்த்தை மேலாதிக்கபெற்றிருக்கிறது என்பதைப்பொருத்ததே. ஏவல்களும் விலக்கல்களும் முஸ்லிம்களின் கைகளில் இருக்கின்ற நிலையிலும், இஸ்லாம் அவருக்கு வழங்கியதைத்தவிர எந்த ஒரு குப்பாரும் தனது குப்ரைக்கொண்டு மேலாதிக்கம் செலுத்தமுடியாததுமான நிலமே தாருள் இஸ்லாமாகும்.” (அல் சைல் ஜரார் - பாகம் 01, பக்கம் 576)
அஷ்ஷஹீத் சையித் குத்ப்(கி.பி 1966 இல் தூக்கிலிடப்பட்டார்):
தனது பி லிலாலில் குர்ஆன் – ‘குர்ஆனின் நிழலில்’ என்ற தப்ஸீரில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “ இஸ்லாத்தின் பார்வையில் முழு உலகும் தாருள் இஸ்லாம், தாருள் ஹர்ப்(யுத்த பூமி) என்ற இரண்டு பிரிவுகளாகவே நோக்கப்படுகின்றது. தாருள் இஸ்லாம் என்பது ஷாPயத் மட்டுமே முழுமையாக அமுல்படுத்தப்படும் நிலமாகும். அந்நிலத்தின் குடிமக்கள் முழுவதும் முஸ்லிமாகவோ, அல்லது முஸ்லிம்களும், திம்மிகளும் கொண்ட கலவையாகவோ, அல்லது ஒரு சில முஸ்லிம்கள் மாத்திரமே அதிகாரத்தில் இருக்கும் நிலையில் ஏனைய அனைவரும் திம்மிகளா இருந்தாலும் சரியே. தாருள் ஹர்ப் என்பது குப்ர் சட்டங்கள் மேலாதிக்கம் செலுத்தும் நிலமாகும். அங்கே முழுக்குடிமக்களும் முஸ்லிம்களாக இருந்தாலும் சரியே. ( சையித் குத்ப் - பி லிழாலில் குர்ஆன் - பாகம் 02, பக்கம் 874)
முடிவு
மேற்கூறிய ஆதாரங்களின் பிரகாசத்தில் நோக்கும்பொழுது இன்றைய உலகில் ஒரு சாண் நிலமேலும் தாருள் இஸ்லாம் என நாம் கருத முடியாது. ஐம்பதிற்கும் மேற்பட்ட அனைத்து முஸ்லிம் நாடுகள் உட்பட ஏனைய அனைத்து நாடுகளும் தாருள் குப்ராகவே கருதப்படும். அல்லாஹ்(சுபு) வார்த்தைகள் புரக்கணிக்கப்பட்டு, இறைத்து}தரின் வழிகாட்டல்கள் உதாசீனம் செய்யப்பட்டு, ஸஹாபாக்களின் முன்மாதிரிகள் து}க்கியெறியப்பட்டு குப்ர் மட்டும் ஆட்சி செலுத்தும் பிராந்தியங்களாகவே எமது முஸ்லிம் நிலங்கள் உருமாறிப்போயிருக்கின்றன. இதையே தீர்க்க தரிசனமாக இமாம் அஹ்மத் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.
“ மக்களின் (முஸ்லிம்களின் ) விவகாரத்தை வழிநடாத்துவதற்கு ஒரு இமாம்(கலீபா) இல்லாது போகும்போது பித்னா உருவெடுக்கும்.”
இன்று எம்மை அல்குர்ஆனைக்கொண்டும், நபிவழியைக்கொண்டும் ஆட்சி செலுத்துவற்கும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பலஸ்தீன், ஈராக், காஸ்மீர் போன்ற எமது நிலங்களில் இடம்பெறும் அநியாயங்களையும் கொடுமைகளையும் கேடயமாக நின்று பாதுகாப்பதற்கும் ஒரு இஸ்லாமிய அரசோ, ஒரு இஸ்லாமியத்தலைமையோ(கலீபா) இல்லாத நிலை தொடர்கிறது.
எனவே முஹம்மத்(ஸல்) பின்பற்றிய வழிமுறையை மிக ஆழமாக விளங்கி அதன் வழித்தடத்தில் தாருள் குப்ராக விளங்கும் இப்பூமிகளை தாருள் இஸ்லாமாக மாற்றும் பாரிய அதே சமயத்தில் தவிர்க்முடியாத பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இப்பயணத்திற்காக விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்பதை நாம் எக்கணத்திலும் மறந்து விடக்கூடாது.
முஹம்மத்(ஸல்) அறிவித்ததாக முஆத் இப்னு ஜபல் (ரழி) அறிவிக்கிறார்கள்.
"இஸ்லாத்தின் சில்லுகள் எந்நேரத்திலும் சுற்றிக்கொண்டேயிருக்கும், எனவே நீங்களும் குர்ஆனைச்சுமந்தமடி அதனுடன் சுற்றிக்கொண்டிருங்கள். நிச்சயமாக குர்ஆனும், (இஸ்லாத்தின்) அதிகாரமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படும். இந்நிலையில் நீங்கள் குர்ஆனை விட்டும் பிரிந்து விடாதீர்கள். உங்கள் மீது ஆட்சியாளர்கள் வருவார்கள், அவர்கள் தமக்கு அனுமதிப்பவற்றை உங்களுக்கு தடைசெய்வார்கள். அவர்களுக்கு மாறு செய்தால் அவர்கள் உங்களை கொன்று விடுவார்கள். அவர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டால் அவர்கள் உங்களை வழிதவறச்செய்வார்கள். எனவே இத்தகைய சூழலில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு தூதர்(ஸல்) சொன்னார்கள். “ ஈஸா இப்னு மர்யம் (அலை) அவர்களை பின்தொடர்தோர்கள் செய்ததைப்போன்று நீங்களும் செய்யுங்கள். அவர்கள் வால்களால் வெட்டப்பட்டார்கள், கழுமரங்களில் ஏற்றப்பட்டார்கள். அல்லாஹ்(சுபு) கட்டுப்பட்டு மரணிப்பது, அவனுக்கு மாறு செய்து வாழ்வதை விட சிறந்ததாகும். (அத்தபரானி, முஃஜம் அல் கபீர்)
No comments:
Post a Comment