Thursday, October 29, 2009

கலீபாவை நியமனம் செய்யும் வழிமுறை : طريقة نصب الخليفة

கலீபா ஒருவரை நியமனம் செய்யவேண்டும் என்பதை ஷரியா முஸ்லிம் உம்மாவுக்கு கட்டாய கடமையாக ஆக்கியிருப்பதால் அவரை எவ்வாறு நியமனம் செய்யவேண்டும் என்ற வழிமுறையை (طريقة – method) அது விளக்கமாகக் கூறியுள்ளது, அதுதான் பைஅத் (البيعـة ) என்ற வழிமுறையாகும். குர்ஆன் சுன்னா இஜ்மாஅஸ்ஸஹாபா ஆகியவற்றிலுள்ள ஆதாரங்களின் வாயிலாக அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது, ஆகவே கலீ*பாவின் நியமனம் பைஅத் கொடுப்பதின் மூலமாக மட்டுமே நிறைவேற்றப்படுகிறது, முஸ்லிம்கள் அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) பைஅத் கொடுத்தார்கள் என்ற ஆதாரத்திலிருந்தும். இமாமுக்கு பைஅத் கொடுக்கவேண்டும் என்று அல்லாஹ்வின்தூதர்(ஸல்) முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டுள்ள ஆதாரத்திலிருந்தும் பைஅத் செய்யவேண்டும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது, அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) முஸ்லிம்கள் பைஅத் கொடுத்தது அவர்களின் நபித்தவத்திற்காக அல்ல மாறாக ஆட்சிஅதிகாரத்தை மேற்கொள்ளத்தான் முஸ்லிம்கள் அவர்களுக்கு(ஸல்) பைஅத் செய்தார்கள், ஏனெனில் அவர்கள் கொடுத்தது செயல்பாட்டின் மீதுள்ள பைஅத்தே தவிர நம்பிக்கையின் மீதுள்ள பைஅத் அல்ல, ஆகவே அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) கொடுக்கப்பட்ட பைஅத் அவர்கள்(ஸல்) ஆட்சியாளர் என்ற முறையில் உள்ளதே தவிர நபி என்பதற்காகவோ அல்லது ரஸþல் என்பதற்காகவோ அல்ல, ஏனெனில் நபியையும் அவர் கொண்டுவந்த செய்தியையும் ஏற்றுக்கொள்வது நம்பிக்கையுடன் தொடர்புடைய விஷயமே தவிர பைஅத்துடன் தொடர்புடைய விஷயமல்ல, பைஅத்தைப் பற்றி குர்ஆனிலும் சுன்னாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
நபியே! மூ*மினான பெண்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்குவதில்லை என்றும் திருடுவதில்லை என்றும் விபச்சாரம் செய்வதில்லை என்றும் தங்கள் குழந்தைகளை கொலை செய்வதில்லை என்றும் தங்கள் கைகளுக்கும் தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக்கொண்டு வருவதில்லை என்றும் இன்னும் நன்மையான காரியத்தில் உமக்கு மாறு செய்வதில்லை என்றும் அவர்கள் உம்மிடம் பைஅத் செய்தால் அவர்களுடைய பைஅத்தை ஏற்றுக்கொள்வீராக, மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் கிருபை உடையவனாகவும் இருக்கிறான், (ற்ம்வ் அல்மும்தஹினா 60 : 12)

إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ
உம்மிடம் பைஅத் செய்தவர்களெல்லாம் அல்லாஹ்விடம் பைஅத் செய்தவர்கள் ஆவார்கள். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை இருக்கிறது…… (அல்*பதஹ் 48 : 10)

உபாதா இப்ன் அஸ்ஸôமித் (ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

بايعنا رسول الله  على السمع والطاعة في المنشط والمكره، وأن لا ننازع الأمر أهله وأن نقوم أو نقول بالحق حيثما كنّا لا نخاف في الله لومة لائم
"நாங்கள் விரும்புகின்றவற்றிலும் வெறுக்கிள்றவற்றிலும் செவிமடுப்போம் என்றும் கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அதிகாரம் கொடுக்கப்ட்டவர்களுடன் சர்ச்சை செய்யமாட்டோம் என்றும் பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சாமல் எந்நிலையிலும் சத்தியத்தில் உறுதியாக இருப்போம் என்றும் அல்லாஹ்வின்தூதருக்கு நாங்கள் பைஅத் செய்தோம்."

அபூஉகைல் அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

فقد حدث أبو عقيل زهرة بن معبد عن جده عبد الله بن هشام وكان قد أدرك النبي  وذهبت به أمه زينب ابنة حميد إلى رسول الله  فقالت يا رسول الله بايعه، فقال النبي  هو صغير فمسح رأسه ودعا له
"அபூஉகைல் ஸஹ்ரா இப்ன் ம*பத் தனது பாட்டனார் அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாமிடமிருந்து அறிவிப்பதாவது. அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம் இறைத்தூதரிடம் வந்தார். அவருடன் அவர் தாயாரும் ஹமீதின் புதல்வியுமான ûஸனபும் வந்தார். ஃஃஅல்லாஹ்வின்தூதரே(ஸல்) இவரிடம் (அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம்) பைஅத் பெற்றுக்கொள்வீர்களாக என்று அவர் கூறினார், அதற்கு இறைத்தூதர்(ஸல்), அவர் சிறுவராக இருக்கிறார் என்று கூறி (பைஅத் பெற்றுக்கொள்ள மறுத்து) விட்டு அவரின் தலையை தடவிக்கொடுத்தவாறு அவருக்காக துஆ செய்தார்கள்."

அபூஹுரைரா(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم: رجل على فضل ماء بالطريق يمنع منه ابن السبيل، ورجل بايع إماماً لا يبايعه إلاّ لدنياه إن أعطاه ما يريد وفى له وإلا لم يف له، ورجل يبايع رجلاً بسلعة بعد العصر فحلف بالله لقد أعطي بها كذا وكذا فصدقه فأخذها ولم يُعط بها
"மூன்று விதமான மனிதர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவுமாட்டான் அவர்களை தூய்மைப் படுத்தவுமாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு, (அவர்கள் யாரெனில்) நடைபாதையின் பக்கமாக உள்ள அதிகமான தண்ணீரைப் (பயன்படுத்த இயலாதவாறு) வழிப்போக்கருக்கு தடுத்து வைத்துள்ள மனிதர். உலக நலனை நாடியவராக இமாமுக்கு பைஅத் செய்யும் மனிதர். அவர் நாடியது கொடுக்கப்பட்டால் அதை (பைஅத்தை) நிறைவேற்றுவார் இல்லையெனில் நிறைவேற்றமாட்டார். ஒரு மனிதருக்கு பொருளை வியாபாரம் செய்யும் மனிதர். அதை (எவருக்கும்) விற்காதபோதும் இன்னார் இன்னாருக்கு அதை விற்றதாக மாலைநேரத்தில் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்வார். உண்மை என்று எண்ணி அவரும் அதை வாங்கிச்செல்வார்"

இந்த மூன்று ஹதீஸ் அறிவிப்பிலிருந்து கலீ*பாவை நியமனம் செய்வதற்குரிய வழிமுறை பைஅத் செய்வதுதான் என்பது தெளிவாக விளங்குகிறது, உபாதா(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் தான் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) சொல்லை கேட்டுநடப்பதாகவும் அவர்களுக்கு கட்டுப்படுவதாகவும் பைஅத் கொடுத்ததாக கூறியுள்ளார், இந்த பைஅத் ஆட்சியாளர் ஒருவருக்கு கொடுக்கும் பைஅத்தாகும், அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம் அறிவித்துள்ள ஹதீஸில் தான் சிறுவராக இருந்ததால் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவரது பைஅத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார், இந்த பைஅத் ஆட்சியாளர் ஒருவருக்கு கொடுக்கப்படும் பைஅத்தாகும், அபூஹுரைரா(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது இமாமுக்கு கொடுக்கப்பட்ட பைஅத் என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கிறது, இமாம் என்பதற்கு இந்த ஹதீஸில் விளக்கம் கூறப்படாவிட்டாலும் மற்ற ஹதீஸ்களில் அதற்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் இப்ன் உமர் (ரலி) அறிவித்து முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

من بايع إماماً فأعطاه صفقة يده وثمرة قلبه فليطعه إن استطاع، فإن جاء آخر ينازعه فاضربوا عنق الآخر
"'எவரேனும் ஒருவர் தமது கரத்தால் கைலாகு(முஸ*பா) கொடுப்பதன் மூலமும் தமது இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஒரு இமாமுக்கு பைஅத் செய்தால் பிறகு அவர் இயன்றவரை அவருக்கு கட்டுப்பட்டு நடக்கட்டும், இந்நிலையில் மற்றாருவர் வந்து (அதிகாரத்தில்) அவரிடம் சர்ச்சை செய்தால் அவரது கழுத்தை வெட்டுங்கள்"

அபூஸயீது அல்குத்ரி (ரலி) அறிவித்து முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

إذا بويع لخليفتين فاقتلوا الآخر منهما
"இரண்டு கலீ*பாக்களுக்கு பைஅத் பெறப்பட்டால் இரண்டாவது நபரை கொன்றுவிடுங்கள்"

அபூஹிஸôம்(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பபட்டிருப்பதாவது.

நான் ஐந்துவருடங்கள் அபூஹுரைராவுடன் பிரயாணம் செய்திருக்கிறேன். அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அவர் அறிவித்துள்ளதை செவியுற்றிருக்கிறேன்.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

كانت بنو إسرائيل تسوسهم الأنبياء، كلما هلك نبي خلفه نبي، وأنه لا نبي بعدي، وستكون خلفاء فتكثر، قالوا: فما تأمرنا ؟ قال: فوا ببيعة الأول فالأول،

"பனூஇஸ்ராயீல் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒருநபி இறந்தபோது மற்றொரு நபி அவரிடத்திற்கு அனுப்பட்டார், நிச்சயமாக. எனக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள் ஆனால் கலீ*பாக்கள் வருவார்கள் அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், (அதுகுறித்து) ஃஃஎங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள் என்று ஸஹாபாக்கள் வினவினார்கள், அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்குப்பின் ஒருவராக பைஅத் கொடுங்கள்"

ஆகவே குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள உரைகள் கலீ*பாவை நியமனம் செய்யும் வழிமுறை பைஅத் செய்வதுதான் என்பதை தெளிவாகக் கூறுகின்றன, ஸஹாபாக்கள் அனைவரும் இதை விளங்கிக்கொண்டு பின்பற்றி வந்தார்கள், ஆகவே அபூபக்கருக்கு(ரலி) பனூஸôயிதாவின் புறநகர் பகுதியில் தனிப்பட்ட பைஅத்தும் பிறகு மதீனாவின் மஸ்ஜிதில் பொதுவான பைஅத்தும் நிûவேற்றப்பட்டது, அலீ இப்ன் அபூதாலிப்(ரலி) போன்றவர்கள் மஸ்ஜிதில் பைஅத் செய்யாவிட்டாலும் பிறகு தனிப்பட்டமுறையில் பைஅத்தை நிறைவேற்றினார்கள், மேலும் உமர்(ரலி) உஸ்மான்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோரும் பைஅத் பெற்ற பின்னரே கலீ*பாவாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள், ஆகவே முஸ்லிம்கள் கலீ*பாவை நியமனம் செய்வதற்குரிய ஒரே வழிமுறை பைஅத் செய்வதுதான் என்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பைஅத்தை நிறைவேற்றுவது குறித்த நடைமுறை செயல்பாடுகள் பற்றிய விளக்கத்தைப் பொறுத்தவரை. அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) மரணத்திற்கு பின்னர் வந்த நேர்வழி காட்டப்பட்ட கலீ*பாக்களான உமர்(ரலி) உஸ்மான்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோர் நியமனத்தில் அவை தெளிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன, இந்த நடைமுறையை அனைத்து ஸஹாபாக்களும் ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்கள், இந்த நடைமுறைகள் ஷரியாவிற்கு முரண்பாடாக இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவர்கள் அனைவரும் அவற்றை மறுத்திருப்பார்கள் ஏனெனில் இது முஸ்லிம்களின் ஒட்டுமொத்த நலனோடும் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடும் தொடர்புடைய மிகமுக்கியமான விஷயமாகும், இந்த கலீ*பாக்கள் நியமனம் செய்யபட்ட நிகழ்வுகளை ஆய்வுசெய்யும் பட்சத்தில் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) மரணத்திற்கு பின்னர் முதல் கலீ*பா நியமனம் செய்யப்பட்டபோது நிகழ்ந்த நடப்புகளை வைத்து இதற்குரிய வழிமுறையை அறிந்துகொள்ளலாம், அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) மரணத்திற்கு பின்னர் முஸ்லிம்கள் பனூஸôயிதாவின் புறநகர் பகுதியில் சந்தித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள், ஸ*து. அபூஉபாதா(ரலி). உமர்(ரலி) மற்றும் அபூபக்கர்(ரலி) ஆகியோர் மட்டுமே கலீ*பா பதவிக்கு முன்மொழியப் பட்டிருந்தார்கள், இந்த விவாதத்தின் முடிவில் முஸ்லிம்கள் அபூபக்கருக்கு (ரலி) பைஅத் கொடுத்தார்கள், மறுநாள் முஸ்லிம்கள் அனைவரும் மஸ்ஜிதிற்கு அழைக்கப் பட்டார்கள். அவர்கள் அனைவரும் அபூபக்கருக்கு (ரலி) பைஅத் கொடுத்தார்கள், இந்த பைஅத்தின் முடிவில் அபூபக்கர்(ரலி) முஸ்லிம்களுக்கு கலீ*பாவாக நியமிக்கப்பட்டார், அபூபக்கர்(ரலி) தனது நோயின் காரணமாக மரணத்தை உணர்ந்தபோது அவர் முஸ்லிம்களை அழைத்து யார் அடுத்த கலீ*பாவாக வரவேண்டும் என்பது பற்றி ஆலோசனை கலந்தார், இந்த ஆலோசனையின் மூலமாக உமர்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோரை மட்டுமே முஸ்லிம்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொண்டார் மேலும் இந்த ஆலோசனையை அபூபக்கர்(ரலி) தொடர்ந்து மூன்று மாதங்கள் மேற்கொண்டார், ஆலோசனை கலப்பதை அவர் முழுமையாக முடித்த பின்னர் முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் விரும்புவதை அறிந்துகொண்டு தனக்குப் பின்னர் உமர்(ரலி) கலீ*பாவாக வரவேண்டும் என்று அறிவிப்பு செய்தார், அபூபக்கர்(ரலி) மரணம் அடைந்தவுடன் முஸ்லிம்கள் மஸ்ஜிதிற்கு வந்து உமருக்கு(ரலி) பைஅத் செய்தார்கள், முஸ்லிம்கள் பைஅத் நிறைவேற்றப்பட்டவுடன் அவர் கலீ*பாவாக நியமிக்கப்பட்டார், அபூபக்கர்(ரலி) முஸ்லிம்களிடம் ஆலோசனை கலந்ததாலோ அல்லது ஆலோசனை முடிவை அறிவித்ததாலோ உமர்(ரலி) கலீ*பாவாக ஆகவில்லை மாறாக முஸ்லிம்கள் பைஅத் செய்து கிலா*பத் ஒப்பந்தத்தை நிறைவேற்றியதாலேயே அவர் கலீ*பாவாக நியமிக்கப்பட்டார், அதுபோலவே உமர் (ரலி) கத்தியால் குத்தப்பட்டபோது அவருக்கு அடுத்தபடியாக வரக்கூடிய கலீ*பாவை நியமனம் செய்யும்படி அவரிடம் முஸ்லிம்கள் வேண்டினார்கள் ஆனால் அதற்கு உமர்(ரலி) மறுத்துவிட்ôர், அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தவே ஸஹாபாக்களில் சிறந்தவர்களாக இருந்த ஆறு நபர்களை அவர் முன்மொழிந்தார், அவரது மரணத்திற்குப் பின்னர் அந்த அறுவர் குழு தங்களுக்குள் ஆலோசனை செய்து அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*பை (ரலி) முகவராக ஆக்கியது, அவர் முஸ்லிம்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக அவர்களுடன் ஆலோசனை செய்தார், பின்னர் அவர் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற உஸ்மானை(ரலி) கலீ*பாவாக முன்மொழிந்து பைஅத் செய்தார். பிறகு முஸ்லிம்கள் உஸ்மானுக்கு(ரலி) பைஅத் செய்தார்கள் அவர் கலீ*பாவாக நியமனம் செய்யப்பட்டார், பிறகு வந்த காலகட்டத்தில் உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்டார், அலீ இப்ன் அபூதாலிப்(ரலி) போட்டியின்றி தேர்ந்தெடுக்ப்பட்டார், அவருக்கு மதீனாவிலும் கூ*பாவிலும் இருந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் பைஅத் செய்தார்கள் அவர் கலீ*பாவாக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வுகளிலிருந்து கிலா*பத்திற்கு உரிய பைஅத்தை நிறைவேற்றும் நடைமுறை செயல்பாடு அறிந்துகொள்ளப்படுகிது, யார் கலீ*பாவாக வரவேண்டும் என்பது பற்றி முஸ்லிம்களிடம் ஆலோசனை நடத்துவதுதான் அந்த நடைமுறை செயல்பாடாகும், இவ்வாறு ஆலோசனை மேற்கொள்வதன் விளைவாக கலீ*பா பொறுப்பிற்கு வருவதற்கு குறிப்பிட்ட சிலர் மீது கருத்து உடண்பாடு ஏற்பட்டவுடன் அவர்களின் பெயர்கள் முஸ்லிம்கள் மத்தியில் அறிவிப்பு செய்யப்படும், அவர்களில் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவருடைய பெயர் அறிவிக்கப்படும், பின்னர் முஸ்லிம்கள் அவர் மீது பைஅத்தை நிறைவேற்றவேண்டும், மேலும் கலீ*பா பதவிக்கு போட்டியிட்ட மற்றவர்களும் அவர் மீது பைஅத்தை நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவார்கள், பைஅத் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர் கலீ*பாவாக நியமனம் செய்யப்படுவார்,
(ஸல்) மரணத்திற்குப் பின்னர் பனூஸôயிதா மைதானத்தில் கலீ*பாவாக வருவதற்கு தகுதி பெற்றவர்கள் என்று கருதப்பட்ட ஸ*து(ரலி). அபூஉபைதா(ரலி). அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோருக்கு மத்தியில் விவாதம் நடைபெற்றது, பின்னர் அபூபக்கருக்கு(ரலி) மீதமுள்ள மூவரும் பைஅத் செய்தது கலீ*பா பதவிக்கு அவரை தேர்வு செய்ததற்கு ஒப்பான நடவடிக்கையாக இருக்கிறது, ஆனால் அனைவரும் அவருக்கு பைஅத் செய்யும்வரை இந்த தேர்வு முஸ்லிம்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை, எனவே முஸ்லிம்களின் பைஅத் மூலமாகவே அபூபக்கர்(ரலி) கலீ*பாவாக ஆக்கப்பட்டார், அவர் இறக்கும் தருவாயில் கலீ*பா நியமனம் பற்றி முஸ்லிம்களிடம் ஆலோசனை மேற்கொண்டார், உம்ர்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோரில் உமருக்கு(ரலி) முஸ்லிம்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதை அறிந்துகொண்ட அபூபக்கர்(ரலி) உமரின்(ரலி) பெயரை அறிவித்தார், பிறகு முஸ்லிம்கள் அபூபக்கரின்(ரலி) தேர்வை அங்கீகரித்து உமருக்கு(ரலி) பைஅத் செய்து அவரை கலீ*பாவாக ஏற்றுக் கொண்டார்கள், உமர்(ரலி) இறக்கும் தருவாயில் முஸ்லிம்களின் ஆதவை பெற்றுள்ள ஆறு நபர்களை கலீ*பா பதவிக்கு முன்மொழிய முன்வந்தார், முஸ்லிம்களின் ஆதரவு பற்றிய கருத்துக்களை அவர்களிடம் கலந்தாலோசனை செய்தபின்னர் அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) உஸ்மான்(ரலி) பெயரை அறிவித்தார், முஸ்லிம்கள் அவருக்கு பைஅத் கொடுத்தபின்னர் அவர் கலீ*பாவாக ஆக்கப்பட்டார், உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்டபோது அலீ(ரலி) க்கு இணையான போட்டியாளர் எவரும் இல்லாதநிலையில் முஸ்லிம்கள் அவரை ஏகமானதாக தேர்வுசெய்து அவருக்கு பைஅத் கொடுத்து கலீ*பா பதவியில் அமர்த்தினார்கள்.

இவ்வாறுதான் கலீ*பாவை நியமனம் செய்யும் பைஅத் என்ற வழிமுறை நிறைவேற்றப்படுகிறது, முதலில் தகுதியுள்ள நபர்களை அறிந்துகொள்வதற்காக விவாதம் நடத்தப்படுகிறது. பின்னர் அவர்களில் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர் தேர்வு செய்யப்படுகிறார். பின்னர் தேர்வு செய்யப்பட்ட நபருக்கு முஸ்லிம்கள் பைஅத்தை நிறைவேற்றுகிறார்கள். பின்னர் அவர் கலீ*பாவாக நியமிக்கப்படுகிறார், அபூபக்கர்(ரலி) கலீ*பாவாக நியமிக்கப்பட்ட போது இந்த விஷயம் தெளிவாக தெரிந்தாலும் உஸ்மான்(ரலி) கலீ*பாவாக நியமிக்கப்பட்டபோது இதை திட்டவட்டமாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் அறிந்துகொள்ள முடிகிறது.

அல்மெஸ்வர் இப்ன் மஹ்ரமா(ரலி) விடமிருந்து ஹமீது இப்ன் அப்துர்ரஹ்மான் அறிவித்து. அவரிடமிருந்து அல் ஸýஹ்ரீ அறிவித்துள்ள ஹதீஸ் புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது.

'"உமர்(ரலி) நியமித்த அறுவர் குழுவில் இடம்பெற்றிருந்த ஸஹாபாக்கள் ஒன்றிணைந்து தங்களுக்குள் ஆலோசனை கலந்தார்கள், அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) அவர்களிடம். "இந்த விவகாரத்தில் நான் உங்களுடன் போட்டியிடப்போவதில்லை. ஆனால் நீங்கள் சம்மதிக்கும் பட்சத்தில் உங்களிலிருந்து ஒருவரை நான் தேர்வுசெய்ய தயாராக உள்ளளேன்ஃ என்று கூறினார், ஆகவே அவர்கள் இந்த பொறுப்புக்கு அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*பை(ரலி) நியமித்தார்கள், இந்த விஷயத்தை முஸ்லிம்கள் அறிந்தபோது அவர்கள் அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*பை(ரலி) சுற்றி குவிந்து விட்டார்கள், கலீ*பா பொறுப்புக்கு போட்டியிடும் மற்ற ஐந்து நபர்களிடம் விவாதிப்பதற்கோ அல்லது ஆதரவாக நிற்பதற்கோ ஒருவரையும் நான் காணவில்லை, அந்த இரவு முழுவதும் முஸ்லிம்கள் அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*புடன்(ரலி) ஆலோசனை கலந்தார்கள், காலையில் நாங்கள் எழுந்தபோது உஸ்மான்(ரலி) மீது கிலா*பத் தேர்வு முடிவு செய்யப்பட்டு விட்டதால் நாங்கள் அவருக்கு பைஅத் செய்தோம்"

மேலும் மெஸ்வர்(ரலி) அறிவிப்பதாவது

'"அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) எனது வீட்டின் கதவை தட்டினார் ( நாங்கள் இருவரும் கலந்தாலோசனை செய்தோம்) இரவின் ஒரு பகுதிவரை நான் விழித்திருந்தேன்(பின்னர் உறங்கிவிட்டேன்) "நீர் உறங்குவதை நான் காண்கிறேன் அல்லாஹ்வின் மீது ஆணையாக இன்றிரவு எனது கண்கள் உறக்கத்தை காணவில்லை, ஸýபைர்(ரலி) மற்றும் ஸ*து(ரலி) ஆகிய இருவரையும் அழைத்துவர ஏற்பாடு செய்வீராகஃ என்று அப்துர்ரஹ்மான்(ரலி) கூறினார், நான் அவர்களை அவரிடம் அழைத்துவந்தேன், அவர்களிடம் அவர் ஆலோசனை கலந்தார், பிறகு அவர் என்னை அழைத்து "அலீயை எனக்காக அழைத்துவருவீராகஃ என்று கூறினார், நான் அலீயை அழைத்துவந்த பின்னர் இரவு மறையும்வரை அவருடன் சப்தமின்றி மெதுவாக உரையாடினார், பிறகு சில எதிர்பார்ப்புடன் அலீ(ரலி) அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார், அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) அலீ விஷயத்தில் ஒருவித அச்சம் கொண்டிருந்தார், பிறகு அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) "உஸ்மானை எனக்காக அழைத்துவருவீராகஃ என்று கூறினார், நான் உஸ்மானை அழைத்துவந்த பின்னர் *பஜ்ர் தொழகைக்காக முஅத்தினின் அழைப்பு கேட்கும்வரை அவருடன் சப்தமின்றி மெதுவாக உரையாடினார், பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார், அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) *பஜர் தொழுகைக்கு இமாமத் செய்து முடித்த பின்னர் அந்த அறுவர்குழு மின்பர் அருகில் கூடியது, முஹாஜிர்கள் மற்றும் அன்ஸôர்களிலுள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார் மேலும் அந்த ஆண்டு உமருடன்(ரலி) ஹஜ் யாத்திரை மேற்கொண்ட இராணுவ தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார், அவர்கள் அனைவரும் மஸ்ஜிதில் கூடியபோது ஷஹாதத்தை ஓதியவாறு அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) கூறினார். "ஓ அலீயேõ நான் மக்களின் விவகாரத்தை ஆய்வுசெய்தேன். அவர்கள் உஸ்மானுக்கு இணையாக எவரையும் காணவில்லை, (إني نظرت في أمر الناس فلم أرهم يعدلون بعثمان) ஆகவே உம்மை நீர் சங்கடத்தில் ஆழ்த்திக் கொள்ளவேண்டாம் ஃ என்று கூறிவிட்டு உஸ்மானை நோக்கி. "நான் அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) மீதும் அவர்களுக்குப் பின்னர் வந்த இரண்டு கலீ*பாக்கள் வழிமுறையின் மீதும் உமக்கு பைஅத் செய்கிறேன்ஃ என்று கூறினார், ஆகவே அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) முஹாஜிர்கள் அன்ஸôர்கள் மற்றும் இராணுவத்தலைவர்கள் மற்றுமுள்ள முஸ்லிம்கள் அனைவரும் அவருக்கு பைஅத் செய்தார்கள். ஆகவே முஸ்லிம்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கிலா*பத்திற்கு உரிய போட்டியாளர் பட்டியலை உமர்(ரலி) ஆறுநபர்களுக்குள் கட்டுப்படுத்தினார், கிலா*பத்தின் போட்டியிலிருந்து அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) தன்னை விடுவித்துக் கொண்ட பின்னர் யார் கலீ*பாவாக வரவேண்டும் என்பது தொடர்பான முஸ்லிம்களின் கருத்தை அறிந்துகொண்டார், பின்னர் அவர் முஸ்லிம்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு அவர்கள் விரும்பும் நபரின் பெயரை அறிவித்தார், இந்த அறிவிப்புக்குப் பின்னர் உஸ்மானுக்கு(ரலி) பைஅத் செய்யப்பட்டு அந்த பைஅத்தின் மூலமாக அவர் கலீ*பாவாக நியமிக்கப்பட்டார், ஆகவே கிலா*பத்திற்கு முன்மொழியப்படும் போட்டியாளர்களின் பட்டியல் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவை பெற்றுள்ள குறிப்பிட்ட பிரதிநிதிகளுடன் மட்டும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் கலீ*பாவை நியமனம் செய்வது தொடர்பான ஹுகும்ஷரியாவாகும், இவ்வாறு பட்டியல் முடிவான பின்னர் அவர்களுடைய பெயர்கள் முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களில் ஒருவரை அனைத்து முஸ்லிம்களுக்கும் உரிய கலீ*பாவாக தேர்வுசெய்யும்படி கேட்டுக்கொள்ளப்படும், பெரும்பான்மையான முஸ்லிம்கள் எவரை தேர்வுசெய்துள்ளார்கள் என்பதை முறையாக அறிந்துகொண்ட பின்னர் அனைத்து முஸ்லிம்களிடமிருந்தும் அவருக்காக பைஅத் பெற்றுக்கொள்ளப்படும் மக்கள் அனைவரும் அவரை தேர்வுசெய்வதில் பங்கேற்றாலும் அல்லது பங்கேற்காவிட்டாலும் சரியே.

இதுதான் கலீ*பாவை நியமனம் செய்வதற்குரிய வழிமுறையாகும் ஏனெனில். கிலா*பத்திற்கு போட்டியிடுபவர்களின் பட்டியலை உமர்(ரலி) ஆறுநபர்களுக்குள் கட்டுப்படுத்தியபோது ஏற்பட்ட இஜ்மாஅஸ்ஸஹாபா. அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) யார் கலீ*பாவாக வரவேண்டும் என்பது குறித்த முஸ்லிம்களின் அபிப்ராயத்தை திரட்டியபோது ஏற்பட்ட இஜ்மாஅஸ்ஸஹாபா. "நான் மக்களின் விவகாரத்தை ஆய்வுசெய்தேன். அவர்கள் உஸ்மானுக்கு இணையாக எவரையும் காணவில்லை (إني نظرت في أمر الناس فلم أرهم يعدلون بعثمان)ஃ என்று கூறியபின்னர் முஸ்லிம்கள் உஸ்மானை தேர்வுசெய்துள்ளார்கள் என்று அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) தெளிவாக அறிவித்து மக்களை பைஅத் செய்யும்படி கேட்டுக்கொண்டபோது ஏற்பட்ட இஜ்மாஅஸ்ஸஹாபா. இவை அனைத்தும் கலீ*பாவின் நியமனம் குறித்த ஹுகும்ஷரியாவை தெளிவுபடுத்துகின்றன.

இந்த விஷயத்தில் இன்னும் இரண்டு விவகாரங்களை விளக்கவேண்டியிருக்கிறது, முதலாவதாக. கலீ*பாவை நியமனம் செய்யும் முஸ்லிம்கள் யார்? அவர்கள் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்களா? அல்லது குறிபிட்ட எண்ணிக்கையுள்ள சில முஸ்லிம்களா? அல்லது அனைத்து முஸ்லிம்க,ளுமா? இரண்டாவதாக. இந்த நூற்றாண்டின் நவீன தேர்தல்முறைகளிலுள்ள ஓட்டுப்பதிவு. ஓட்டுச்சீட்டை பயன்படுத்துதல். மற்றும் ஓட்டு எண்ணிக்கை ஆகிய செயல்முறைகள் இஸ்லாத்துடன் ஒத்துப்போகக்கூடியதா? அவற்றை இஸ்லாம் அனுமதிக்கிறதா அல்லது இல்லையா?

முதலாவது விவாகாரத்தைப் பொறுத்தவரை அல்லாஹ்(சுபு) ஆட்சிஅதிகாரத்தை முஸ்லிம் உம்மாவிற்கு வழங்கியதன் மூலம் கலீ*பாவை நியமனம் செய்வதை முஸ்லிம்களின் கடமையாகவும் உரிமையாகவும் ஆக்கியிருக்கிறான், மேலும் அவன்(சுபு) இதை முஸ்லிம்களிலுள்ள மற்ற கூட்டத்தினரை விலக்கிவிடும் வகையில் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினருக்கோ அல்லது மற்ற ஜமாஅத்தை விலக்கிவிடும் வகையில் ஒரு குறிப்பிட்ட ஜமாஅத்திற்கோ உரிமையாக்கி வைக்கவில்லை ஏனெனில் பைஅத் கொடுப்பது அனைத்து முஸ்லிம்களின் மீதுள்ள கட்டாய கடமையாக இருக்கிறது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية'
"எவர் தனது கழுத்தில் பைஅத் இல்லாத நிலையில் மரணம் அடைகிறாரோ அவர் ஜாஹிலியத்தில் மரணம் அடைந்தவர் ஆவார்"

இது முஸ்லிம்கள் அனைவருக்குமுள்ள பொதுவான கட்டளையாகும் , ஆகவே செல்வாக்கு பெற்ற முஸ்லிம்கள் மட்டும் கலீ*பாவை நியமனம் செய்வதற்கு ஏகபோக உரிமை பெற்றிருக்கவுமில்லை மற்ற முஸ்லிம்களின் பங்களிப்பை அவர்கள் புறக்கணிக்கவும் முடியாது, எந்வொரு நபருக்கும் இதில் ஏகபோக உரிமை கிடையாது, மாறாக விதிவிலக்கின்றி இந்த உரிமை அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானதாகும், இந்த உரிமையில் முஸ்லிம்களிலுள்ள தீயவர்களுக்கும் (*பாஜிர்) நயவஞ்சகர்களுக்கும் (முனா*பிகீன்) அவர்கள் புத்திசுவாதீனமுள்ள வயதுவந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் உரிமையுண்டு. ஏனெனில் இந்த விவகாரத்தில் ஷரியாஉரை வயதுக்கு வராத சிறுவர்களின் பைஅத்தை மறுப்பதைத் தவிர்த்து மற்ற முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவான முறையில் வந்திருக்கிறதே தவிர எவரையும் இதிலிருந்து கட்டுப்படுத்தும் வகையில் வரவில்லை, ஆகவே ஷரியாஉரையின் அர்த்தத்தை பொதுவான முறையில்தான் எடுத்துக் கொள்ளமுடியும்.

எனினும். இந்த உரிமையை எல்லா முஸ்லிம்களும் பிரயோகித்தே தீரவேண்டும் என்பது நிபந்தனையல்ல, மேலும் பைஅத் செய்வது கட்டாய கடமை என்றபோதும் அது *பர்லுல் கி*பாயாவாக(கூட்டுக்கடமை) இருக்கிறது என்ற அடிப்படையில் முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தினர் இதை நிறைவேற்றும் பட்சத்தில் மற்ற முஸ்லிம்கள் மீதுள்ள கடமை நீங்கிவிடுகிறது, ஆனால் கலீ*பாவை தேர்வுசெய்யும் விஷயத்தில் அனைத்து முஸ்லிம்களின் உரிமையும் நிலைநாட்டப்படும் விதத்தில் அவர்களின் அபிப்ராயம் அறிந்து கொள்ளப்பட வேண்டும். அவர்கள் இந்த உரிமையை செயல்படுத்த முன்வந்தாலும் முன்வராவிட்டாலும் சரியே, வேறுவகையில் கூறுவதென்றால் கலீ*பாவை தேர்வுசெய்யும் தேர்தலில் அனைத்து முஸ்லிம்களும் பங்குகொள்ளும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். அவர்கள் அனைவரும் இதில் பங்குகொள்ள ஆர்வம் காட்டினாலும் காட்டாவிட்டாலும் சரியே, அல்லாஹ்(சுபு) முஸ்லிம்கள் மீது விதித்துள்ள கடமையை நிறைவேற்றி பாவத்திலிருந்து மீளும் வகையில் கிலா*பத்தை நிலைநிறுத்தும் கடமையை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம்க் அனைவருக்கும் வாய்ப்பு வசதிகள் அமைத்து தரப்படவேண்டும் என்பதுதான் நிபந்தனையே தவிர இந்தக் கடமையை நிறைவேற்றும் பணியில் அனைத்து முஸ்லிம்களும் ஈடுபட்டே ஆகவேண்டும் என்பது நிபந்தனையல்ல, இதுஏனெனில் முஸ்லிம்களின் ஒப்புதலின் மீது கிலா*பத் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை அல்லாஹ்(சுபு) கட்டாயமாக ஆக்கியிருக்கிறானே தவிர அவர்கள் அனைவரும் இதில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கவில்லை, இந்த விவகாரத்தில் இரண்டு முடிவுகள் எய்தப்படுகின்றன, ஒன்று. கிலா*பத்தை நிலைநாட்டுவதில் அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதலை பெறும் நிலை, மற்றொன்று. அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதலை பெறமுடியாத நிலை, எனினும் இந்த இரண்டு நிலைகளிலும் முஸ்லிம்கள் அனைவரும் கலீ*பாவின் நியமனத்தில் பங்குகொள்வதற்கு ஏற்ப வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்பதுதான் கட்டாயமாகும்.

முதல்நிலையைப் பொறுத்தவரை உள்ள விளக்கமாவது:

கலீபாவை நியமனம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இருக்கவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. மாறாக கலீ*பாவுக்கு பைஅத் கொடுப்பதில் எத்தகைய எண்ணிக்கை உள்ள முஸ்லிம்களும் இடம்பெறுவதற்கு அனுமதியுண்டு, மேலும் மற்ற முஸ்லிம்கள் வெளிப்படுத்தும் மௌனத்தின் மூலமோ அல்லது கட்டுப்படுவதற்கு இணக்கம் காட்டுவதன் மூலமோ அல்லது வேறுவகையில் தங்கள் ஒப்புதலை வெளிப்படுத்துவதன் முலமோ இந்த பைஅத்திற்கு உரிய அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்படும், இதனடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட கலீ*பா அனைத்து முஸ்லிம்களுக்கும் கலீ*பாவாக ஆகிவிடுவார், மூள்றே மூன்று நபர்களால் நியமனம் செய்யப்பட்டாலும் அவர்தான் சட்டரீதியான கலீ*பாவாக இருப்பார் ஏனெனில் கலீ*பாவை நியமனம் செய்ததின் மூலம் முஸ்லிம்கள் மீதுள்ள கூட்டுக்கடமை(*பர்லுல் கி*பாயா) நிறைவேற்றப்பட்டு விடுகிறது, முஸ்லிம்கள் தங்கள் அபிப்ராயங்களையும் விருப்பங்களையும் தடையின்றி முழுமையாக தெரிவிப்பதற்குரிய வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் வெளிப்படுத்தும் மௌனம் அல்லது அவர்கள் கட்டுப்படுவதற்கு காட்டும் இணக்கம் அல்லது அவர்கள் சம்மதத்தை சுட்டிக்காட்டும் பல்வேறு நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் ஒப்புதல் உறுதிசெய்யப்படுகிறது, எனினும் முஸ்லிம்கள் அனைவரின் ஒப்புதலை பெறுவதை நிறைவேற்ற முடியதாபோது பெரும்பான்மை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக விளங்கும் ஒரு குழுவினர் இணைந்து கலீ*பா நியமனத்தை முறையாக நிறைவேற்றலாம் இந்தக் குழுவில் இடம்பெற்ற நபர்களின் எண்ணிக்கை எவ்வாறு இருந்தபோதிலும் சரியே, அவ்வாறு இல்லை என்றால் பிறகு கிலா*பத்தை நிலைநாட்ட முடியாது, இத்தயை தருணங்களில் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றவர்கள் பைஅத்தை நிறைவேற்றுவதன் மூலம் கலீ*பாவை நியமனம் செய்யலாம் என்று சில சட்டஅறிஞர்கள் தீôமானிக்கிறார்கள். ஏனெனில் கலீ*பா ஆவதற்கு தகுதிபெற்ற எந்த நபருக்கும் முஸ்லிம்களின் ஒப்புதலை பெறுவதற்கு ஆற்றல்பெற்றுள்ள செல்வாக்கு மிக்கவர்கள் ஒரு குழுவாக இணைந்து பைஅத் செய்வதன் மூலம் கிலா*பத்தை நிலைநாட்டலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள், ஆகவே இத்தகைய தருணங்களில் செல்வாக்கு மிக்க மனிதர்களின் பைஅத் கிலா*பத்தை நிலைநாட்டுவதில்லை அல்லது கிலா*பத்தை நிலைநிறுத்துவதற்கு செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள் பைஅத் செய்யவேண்டும் என்ற நிபந்தனையும் இல்லை. மாறாக செல்வாக்கு மிக்க மனிதர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக இருப்பதால் அவர்கள் பைஅத்தை நிறைவேற்றுவதும் மற்ற முஸ்லிம்கள் இதை ஏற்றுக்கொள்ளும் வகையில் மௌனத்தை வெளிப்படுத்துவதும் அவர்களின் ஒப்புதலை சுட்டிக்காட்டும் ஆதாரங்களாக இருக்கின்றன, ஆகவே முஸ்லிம்களின் ஒப்புதலுடன் செய்யப்படும் பைஅத்தை சுட்டிக்காட்டும் ஒவ்வொரு ஆதாரமும் கிலா*பத் ஒப்பந்தம் முறையாக நிறைவேற்றப்பட்டு கலீ*பா நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது, மேலும் இந்த பைஅத்தின் மூலம் நியமிக்கப்பட்ட கலீ*பா சட்டரீதியாக நியமிக்கப்பட்டவர்தான்.

இதனடிப்படையில் முஸ்லிம்களுக்கு தங்கள் ஒப்புதலை தெரிவிப்பதற்கு முழுமையான வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் பைஅத்தை நிறைவேற்றுதல் அல்லது முஸ்லிம் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் பைஅத்தை நிறைவேற்றுதல் அல்லது முஸ்லிம்களில் ஒருகுழுவினர் பைஅத்தை நிறைவேற்றும்போது மற்ற முஸ்லிம்கள் மௌனமாக இருந்து அதை ஏற்றுக்கொள்வதோடு தங்கள் கட்டுப்படுதலை நிறைவேற்றுவதற்கு துரிதம் காட்டுதல் அல்லது இதுபோன்ற எந்த முறைகளிலோ முஸ்லிம்களிடம் ஒப்புதலை பெற்றதற்குரிய ஆதாரங்கள் உறுதிப்பட்ட நிலையில் எந்த கூட்டத்தினரும் கலீ*பாவை நியமித்து கிலா*பத்தை நிலைநாட்டலாம் என்பதுதான் கிலா*பத்தை நிலைநிறுத்துவதற்குரிய ஷரியாவின் விதிமுறையாகும், இந்த கூட்டத்தினர் செல்வாக்கு பெற்ற மனிதர்களாக இருக்கவேண்டும் என்றோ அல்லது அவர்கள் நான்கு என்ற எண்ணிக்கையிலோ அல்லது நாநூறு என்ற எண்ணிக்கையிலோ இருக்கவேண்டும் என்றோ அல்லது அவர்கள் தலைநகரில் வசிப்பவர்களாக இருக்கவேண்டும் என்றோ அல்லது அவர்கள் மாகாணங்களில் வசிப்பவர்களாக இருக்கவேண்டும் என்றோ இறைசட்டம் (divine law - ஹுகும்ஷரியா) கூறவில்லை. மாறாக அனைத்து முஸ்லிம்களுக்கும் அவர்களின் அபிப்ராயங்களையும் விருப்பங்களையும் தடையின்றி வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஒப்புதலை சுட்டிக்காட்டுகின்ற ஆதாரம் முறையாக வெளிப்படும் வகையில் பைஅத் நிறைவேற்றப்படவேண்டும் என்றுதான் இறைசட்டம் கூறுகிறது.

அனைத்து முஸ்லிம்கள் என்பதன் பொருள் இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டு எல்லையில் வாழுகின்ற முஸ்லிம்கள் அனைவரும் என்பதாகும், அதாவது. கிலா*பத் அரசு நிலைபெற்றிருக்கும் பட்சத்தில் அதன் குடிமக்களாக இருப்பவர்கள் என்றும். கிலா*பத் அரசு இல்லாத பட்சத்தில் அதை நிலைநாட்டுவதற்காக கிலா*பத் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முஸ்லிம்கள் என்றும் பொருளாகும், இந்த பட்டியலில் அடங்காத உலகில் வாழும் இதர முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களின் ஒப்புதலை பெறுவது அவசியமல்ல ஏனெனில் அவர்கள் இஸ்லாமிய அதிகார அமைப்பிலிருந்து விலகியபடி வாழ்ந்துகொண்டிருக்கும் மூ*மின்கள் ஆவார்கள் அல்லது தாருல்கு*ப்ரில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூ*மின்கள் ஆவார்கள், எனவே அவர்கள் தாருல்இஸ்லாத்தின் செயல்பாடுகளில் பங்குகொள்ள முடியாது என்பதால் ஒப்பந்த பைஅத்தில் பங்குகொள்வதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது, ஆனால் அவர்கள் கட்டுப்படும் பைஅத்தில் கட்டாயம் பங்குகொள்ளவேண்டும் ஏனெனில் கட்டுப்படும் பைஅத்தை நிறைவேற்றாதவர்கள் இஸ்லாமிய அதிகார அமைப்புக்கு எதிராக கலகம் செய்கிறவர்கள் ஆவார்கள், தாருல்கு*ப்ரில் வாழ்கின்றவர்கள் உண்மையில் கிலா*பத்தை நிலைநாட்டாதவரையில் அல்லது கிலா*பத்தின் அதிகாரத்திற்குள் வராதவரையில் அவர்கள் இஸ்லாமிய அதிகார அமைப்பை பெறாதவர்களாகவே இருந்துவருவார்கள், ஆகவே சட்டரீதியாக கலீ*பாவை நியமனம் செய்வதன் மூலம் உண்மையாக இஸ்லாத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் முஸ்லிம்களுக்குத்தான் ஒப்பந்த பைஅத்தை நிறைவேற்றும் உரிமை இருக்கிறது. மேலும் அவர்களின் ஒப்புதலை பெறுவதுதான் கிலா*பத் ஒப்பந்தத்தை சட்டரீதியாக நிறைவேற்றுவதற்கு அவசியமாக இருக்கிறது, இத்தகைய கருத்து அறிவுரீதியான ஆய்விலிருந்து பிறந்த விளக்கம் என்றோ அல்லது இதற்கு ஆதாரம் இல்லை என்றோ கூறுவது தவறாகும், இந்த விளக்கத்தைப் பொறுத்தவரை இறைசட்டத்தை பிரயோகப்படுத்தும் விஷயத்தைக் (مناط subject) குறித்த விளக்கமே தவிர இறைசட்டத்தைக் குறித்த விளக்கமல்ல, இறைசட்டத்தை பிரயோகப்படுத்தும் எதார்த்த உண்மைகளை (realities) ஆய்வுசெய்வதற்கு ஷரியா ஆதாரம் தேவையில்லை, உதாரணமாக. இறந்தவைகளின் மாமிசத்தை உண்பதற்கு ஷரியா தடைசெய்துள்ளது, இறந்தவைகளின் மாமிசம் எதுவென்று ஆய்வுசெய்து அறிந்துகொள்வது அந்த சட்டத்தை பிரயோகப் படுத்துவதற்குரிய விஷயத்தை (مناط-subject) ஆய்ந்தறிவதாகும், ஆகசே சட்டத்தை பிரயோகப்படுத்தும் விஷயம் (subject)அதற்குரிய இறைசட்டத்தோடு தொடர்புடையதாகும், ஆகவே விஷயம் என்பதும் அதனுடன் தொடர்புடைய இறைசட்டம் என்பதும் வெவ்வேறானவை, விஷயத்தை (subject) ஆய்வுசெய்வதற்கு அதன் எதார்த்தநிலையை (Reality) ஆய்வுசெய்யவேண்டும், பிறகுதான் அந்த விஷயத்திற்குரிய இறைசட்டம் எதுவென்று அறிந்துகொள்ள முடியும், ஆகவே விஷயத்தின் எதார்த்தநிலையை ஆய்வுசெய்வதற்கு ஷரியா உரையின் ஆதாரம் தேவையில்லை, உண்மைப் பொருட்களின் எதார்த்தநிலை அல்லது விஷயத்தின் எதார்த்தநிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள அறிவுரீதியாக ஆய்வுசெய்ய வேண்டுமே ஒழிய ஷரியா ஆதாரத்தின் அடிப்படையில் அல்ல, ஆகவே முஸ்லிம்கள் கலீ*பாவை நியமனம் செய்யவேண்டும் என்பது இறைசட்டமாகும். மேலும் இந்த நியமனம் முஸ்லிம்களின் ஒப்புதல் மூலமும் தேர்ந்தெடுத்தல் மூலமும் நிறைவேற்றப்படவேண்டும் என்பதும் இறைசட்டமாகும், இந்த சட்டங்களுக்கு அவை இறைசட்டங்கள்தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரம் தேவையில்லை. ஆனால் எவர்களால் நியமனம் நிறைவேற்றப்படவேண்டுமோ அந்த முஸ்லிம்கள் யார்? அவர்களின் ஒப்புதலையும் விருப்பத்தையும் எவ்வாறு நிறைவேற்றுவது? இவைதான் மேற்கூறிய இறைசட்டங்களை பிரயோகப்படுத்துவதற்குரிய எதார்த்தவிஷயமாகும் (subject) அதாவது இவைதான் மேற்கூறிய இறைசட்டங்களை பிரயோகப்படுத்துவதற்குரிய மனாத் (مناط-subject) ஆகும், ஒரு குறிப்பிட்ட இறைசட்டத்தை அதற்குரிய மனாத்தின் மீது பிரயோகப்படுத்துவதுதான் அந்த இறைசட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதாகும், ஆகவே இறைசட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அதனோடு தொடர்புடைய மனாத்தை ஆய்வுசெய்வது அவசியமாகும்.

சட்டத்தின் விஷயமும் (manaat ul hukm - subject of the rule) சட்டத்தின் காரணமும் (illat ul hukm – reason of the rule)வெவ்வேறானவை. அவற்றை இணைத்துக் கூறுவது தவறாகும் ஏனெனில் இதற்கு ஆதாரம் இல்லை, இவ்விரண்டிற்கும் மத்தியில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது, இல்லத் (reason -காரணம்-علة) என்பது சட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்த சட்டம் வந்ததிற்குரிய காரணத்தை குறிப்பிடுகிறது, அதாவது இல்லத் என்பது சட்டத்தை வழங்கிய அல்லாஹ்(சுபு) அதை எதற்காக கொடுத்தான் என்பதற்குரிய நோக்கத்தை குறிப்பிடுகிறது, ஒரு இறைசட்டத்திற்கு இல்லத் இருக்கிறது என்பதற்கு ஷரியாஉரையில் அதை சுட்டிக்காட்டும் ஆதாரம் இருக்கவேண்டும், சட்டத்தின் இல்லத்தை அறிந்துகொள்வதன் மூலம் சட்டத்தை கொடுத்த அல்லாஹ்(சுபு) வின் நோக்கத்தை அறிந்துகொள்ள முடியும், ஆனால் மனாத் என்பது எந்த விஷயத்தின் மீது அந்த சட்டம் கொடுகப்பட்டிருக்கிறதோ அந்த விஷயம் மற்றும் அதன் எதார்த்தநிலை ஆகியவையாகும், ஆகவே ஒரு சட்டத்தை அது எந்த மனாத்தின் மீது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதன் மீது பிரயோகப்படுத்துகிறோமே தவிர அந்த சட்டத்தின் ஆதாரத்துடனோ அல்லது அந்த சட்டத்தின் இல்லத்துடனோ பிரயோகப்படுத்துவதில்லை, எந்த விஷயத்தின் மீது சட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அல்லது எந்த பிரச்சினைக்காக சட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அது அந்த விஷயத்திற்கோ அல்லது பிரச்சினைக்கோ தீர்வு வழங்குவதற்காகத்தான் கொடுக்ப்பட்டிருக்கிறது, ஆகவே சட்டம் எப்போதும் அதன் மனாத்தின் மீது தொங்கிக் கொண்டிருக்கும். அதேவேளையில் சட்டம் அதன் இல்லத்தோடு சுழன்று கொண்டிருக்கும், சட்டத்தின் மனாத் என்பது சட்டத்திற்குரிய ஷரியா ஆதாரத்திலிருந்து வேறுபட்டது மேலும் சட்டத்தை உறுதிசெய்வது சட்டத்தின் இல்லத்தை உறுதிசெய்வதிலிருந்து வேறுபட்டது, ஷரியாஉரைகளில் பொதிந்துள்ள தர்க்க வாதங்களை சரியாக புரிந்துகொள்வது இல்லத்தை ஆய்ந்தறிதல் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் இது ஷரியா ஆதாரங்களை புரிந்துகொள்வதாகுமே தவிர மனாத்தை புரிந்துகொள்வது ஆகாது ஏனெனில் மனாத் என்பது ஷரியா ஆதாரங்களிலிருந்து வேறுபட்டது. அது சட்டத்தை பிரயோகப்படுத்தும் எதார்த்தத்தையோ (reality -الواقع) அல்லது பிரச்சினையையோ(ல்ழ்ர்க்ஷப்ங்ம்-المسألة) அல்லது விஷயத்தையோ(subject-مناط) குறிப்பிடுகிறது.
உதாரணமாக. ஹமர் என்று அழைக்கப்படும் மதுபானம் ஹராமாகும், மதுபானத்தை அருந்துவதற்குரிய தடை அதன் இறைசட்டமாக இருக்கிறது, சிலவகை பானங்கள் அவை ஹராமானதா அல்லது இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக அவை மதுபானமா அல்லது இல்லையா என்ற விசாரணையை மேற்கொள்வதுதான் மனாத்தை ஆய்வுசெய்வதாகும், அதாவது அந்த குறிப்பிட்ட பானத்தின் தன்மைதான் இங்கு மனாத் என்று அழைக்கப்படுகிறது, ஆகவே ஒரு பானத்தை அது ஹராமா அல்லது இல்லையா என்பதை உறுதிசெய்ய அதில் மது (alchohol) இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை ஆய்வுசெய்வது அவசியமாகும், இந்த இடத்தில் பானத்தின் உண்மைநிலையை ஆய்வுசெய்வது மனாத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான், மற்றொரு உதாரணம். உலூ(الوضوء) செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட தண்ணீர் முத்தலக் நீர்(unrestricted water) என்று இறைசட்டம் கூறுகிறது, உலூ செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதா அல்லது இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்கு தண்ணீர் கட்டுப்படுத்தப்படாமல் ஓடிக்கொண்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதை ஆய்வுசெய்வதுதான் மனாத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் என்பதாகும், ஆகவே தண்ணீர் தடையின்றி ஓடிக்கொண்டிருக்கிறதா அல்லது தேங்கிக்கிடக்கிறதா என்பதை தீர்மானிப்பதற்கு அதன் உண்மைநிலையை ஆய்வுசெய்வது அவசியமாகும், இவ்வாறு தண்ணீரின் எதார்த்தநிலையை ஆய்வுசெய்வதைத்தான் மனாத்தை உறுதிப்படுத்திக் கொள்வது என்று குறிப்பிடப்படுகிறது, ஹதûஸ வெளிப்படுத்தியவர் (பின்துவாரத்தின் வழியாக காற்று வெளியேறுதல்) தொழுகையை நிறைவேற்றுவதற்கு உலூ செய்யவேண்டும் என்று கூறும்போது அந்த மனிதர் ஹதûஸ வெளிப்படுத்தியவராக (முஹ்தஸ்) இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை விசாரணை செய்வதுதான் மனாத்தை உறுதிப்படுத்துவதாகும், இன்னும் இவ்வாறு கூறிக்கொண்டே செல்லலாம், அல்முஆ*பகாத் (الموافقات) என்ற நூலில் அஷ்ஷாத்தபீ (الشاطبي) கூறியிருப்பதாவது: இந்த விஷயத்திலும் மற்றும் இதுபோன்றவற்றிலும் அவற்றின் மனாத்தை நாம் விளங்கிக் கொள்ளவேண்டியிருப்பதால் அவற்றின் எதார்த்தநிலைகளின் அடிப்படையில் ஷரியா ஆதாரங்களை எடுத்துக்கொள்ளவேண்டும், மனாத்தை ஆய்வுசெய்து உறுதிப்படுத்தும் செயலோடு இஜ்திஹாதை இணைக்கவேண்டும், அவ்வாறு செய்வதற்கு சட்டத்தை கொடுத்தவரின் (அல்லாஹ் -சுபு) நோக்கத்தைப்பற்றிய அறிவும் தேவையில்லை அரபிமொழிப் புலமையும் தேவையில்லை. ஏனெனில் இஜ்திஹாதை மேற்கொள்வதின் நோக்கம் சட்டத்தோடு தொடர்புடைய விஷயத்தை அதாவது மனாத்தை உள்ளபடியே அறிந்துகொள்வதுதான், ஆகவே மனாத் (விஷயம் -subject) என்னவென்று அறிந்துகொள்வதற்கு அறிவுத்திறன் தேவைப்படுகிறது. அது இல்லாமல் விஷயத்தை (மனாத்தை) தீர்மானமாக அறிந்துகொள்ள இயலாது, இதனடிப்படையில் முஜ்தஹிதாக உள்ளவர் அறிவுத்திறன் பெற்றவராக இருக்கவேண்டும். மேலும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் ஏற்படும் தேவையின் அடிப்படையில் இறைசட்டங்களை பிரயோகப்படுத்துவதற்கும் ஒரு முஜ்தஹித் அறிவுத்திறன் நிறைந்தவராக இருக்கவேண்டும்.

ஷரியா உரையில் பொதிந்துள்ள சட்டம் வந்ததற்குரிய காரணங்களை (நோக்கங்களை) ஆய்வுசெய்து அறிந்து கொள்வதுதான் இல்லத்தை(reason-காரணம்-علة) கண்டுபிடித்தல் என்று கூறப்படுகிறது, இது ஷரியா உரையை (شرعي النص) விளங்கிக்கொள்வதாகும். ஆகவே அது மனாத்திலிருந்து வேறுபட்டது, மனாத்தை உறுதிப்படுத்துதல் என்பது சட்டத்தை பிரயோகப்படுத்தும் விஷயத்தை அல்லது பிரச்சினையை அல்லது எதார்த்தத்தை கண்டுபிடித்தலாகும், இதனடிப்படையில் மனாத்தை ஆய்வுசெய்பவர் முஜ்தஹிதாகவோ அல்லது முஸ்லிமாகவோ இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாறாக அவர் அந்த விஷயத்தில் அறிவு பெற்றவராக இருக்கவேண்டும் என்பதுதான் அவசியமாகும், ஆகவே கலீ*பா நியமனத்தில் எத்தகைய முஸ்லிம்கள் பைஅத் செய்தால் அது அனைத்து முஸ்லிம்களின் அல்லது பெரும்பான்மை முஸ்லிம்களின் ஒப்புதலையும் ஏற்றுக்கொள்ளுதலையும் சுட்டிக்காட்டும் என்பதை ஆய்வுசெய்வது மனாத்தை ஆய்வுசெய்வதில் அடங்கும்.

இது முதல்நிலையைப் பொறுத்தவரை உள்ள விஷயமாகும், இரண்டாவது நிலையைப் பொறுத்தவரை. இன்றைய காலகட்டத்தில் நடந்துவரும் தேர்தல் முறையான இரகசிய ஓட்டுப்பதிவு. ஓட்டுச்சீட்டுகளையும் ஓட்டுப் பெட்டிகளையும் பயன்படுத்துதல் மற்றும் ஓட்டுக்களை எண்ணுதல் ஆகிய அனைத்தும் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்வதை நடைமுறைப்படுத்துவதற்கு பிரயோகிப்படும் செயல்முறைகளாகவும் சாதனங்களாகவும் (styles and means - الأساليب والوسائل) இருக்கின்றன. அவை இறைசட்டத்தின் எல்லைக்குள்ளோ அல்லது அந்த சட்டத்தை பிரயோகிக்கும் விஷயத்திற்குள்ளோ (மனாத்) இடம்பெறாது, ஏனெனில் இந்த செயல்முறைகளும் சாதனங்களும் முஸ்லிம்களின் செயல்பாடுகளிலோ அல்லது இறைசட்டத்தை பிரயோகிக்கும் மனாத்துடனோ எந்தவிதத்திலும் நேரடியாக தொடர்புடையவை அல்ல, முஸ்லிம்களின் செயல்பாடுகளில் இந்த சாதனங்களை பயன்படுத்துவதற்கு எந்த தடையும் கிடையாது. ஏனெனில் இறைசட்டம் முஸ்லிம்களின் செயல்பாடுகளோடு தொடர்புடைய விஷயமாகும். அதாவது கிலா*பத் முஸ்லிம்களால் நிலைநாட்டப்டவேண்டும் என்ற விஷயத்தோடு தொடர்புடையதாகுதம், ஆகவே இந்த விவகாரத்திற்குரிய இறைசட்டத்தின் நோக்கத்தோடு இத்தகைய தேர்வுமுறைகளுக்கும் அவற்றில் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது, பொதுவான ஷரியா உரைகள்(النص عاماً) அனுமதித்துள்ள விஷயங்களாக அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அவைகளை தடைசெய்யும் குறிப்பிட்ட ஆதாரங்கள் (دليل خاص) எதுவும் கிடையாது என்ற அடிப்படையில் அவைகள் முபாஹ்( مباحة) ஆகும், எனவே முஸ்லிம்கள் எத்தகைய செயல்முறை பாணியையும் எடுத்துக்கொள்வதற்கு அனுமதியுண்டு, முஸ்லிம்களின் ஒப்புதலோடும் அவர்களின் விருப்பத்தோடும் கலீ*பாவை நியமனம் செய்யும் *பர்லான செயல்பாட்டை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக உள்ள எத்தகைய செயல்முறை பாணியையும் எந்தவகை சாதனங்களையும் அவைகள் தடைசெய்யப்பட்டதற்குரிய ஷரியா ஆதாரங்கள் எதுவும் இல்லாதவரை அவற்றை பயன்படுத்துவதற்கு முஸ்லிம்கள் அனுமதிக்கப்ட்டே இருக்கிறார்கள், செயல்முறைபாணி (
styles-الأساليب) என்பது மனதர்களின் செயலில் உள்ளது அதை இறைசட்டங்களின் அடிப்படையில் மட்டுமே நிறைவேற்றமுடியும் என்றும். அதன் சட்டங்களை சுட்டிக்காட்டக்கூடிய ஷரியா ஆதாரம் அதற்கு இருக்கவேண்டும் என்றும் கூறுவது சரியல்ல, ஏனெனில் இறைசட்டங்களின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் மனிதனின் செயல்பாடுகளுக்கு அவற்றின் சட்டங்களை சுட்டிக்காட்டும் ஆதாரம் இருப்பது அசலான செயல்பாடுகளுக்கும்(action of origin–الفعل أصلاً) தனிப்பட்ட ஆதாரமுள்ள கிளை செயல்பாடுகளுக்கும் மட்டுமே பொருந்தக்கூடியது, இதற்கு உதாரணம் தொழுகையாகும். அதைக் குறிப்பிடும் ஷரியா ஆதாரம் அதனை நிறைவேற்றுவதுடன் மட்டும் தொடர்புடையது. தொழுகையோடு தொடர்புடைய மற்ற செயல்பாடுகள் இதில் அடங்காது. ஏனெனில் உலூ செய்தல் போன்ற தொழுகையோடு தொடர்புடைய கிளைசெயல்பாடுகளுக்கு தனிப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன, ஆகவே நிறைவேற்றப்படும் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் இறைசட்டத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு ஆதாரம் இருக்கவேண்டும், ஆனால் ஒரு செயல்பாடு அதன் அசலான செயல்பாட்டின் கிளையாக இருக்கும்நிலையில் அந்த கிளை செயல்பாட்டிற்கு தனிப்பட்ட ஆதாரம் இல்லாவிட்டாலும் அதன் அசலான செயல்பாட்டிற்குரிய பொதுவான ஆதாரமே அதை நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இருக்கும், ஒரு செயல்பாடு கிளை செயல்பாடாக இருக்கும் நிலையில் அது தடை செய்யப்பட்டதற்கு உரிய தனிப்பட்ட ஆதாரம் இல்லாவிடில் பிறகு அதை மேற்கொள்வதை தடை செய்யமுடியாது, ஆகவே இன்றைய தேர்தல்முறைகளில் இடம்பெறும் கிளை செயல்பாடுகளுக்கு தனிப்பட்ட சட்டம் இருக்கவேண்டும் என்று கோருவது ஒரு கிளை செயல்பாட்டை அதன் அசலான செயல்பாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்து அதற்கு புதிய சட்டத்தை கொடுக்கவேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பாக இருக்கிறது, கலீ*பாவை தேர்வுசெய்யும் செயல்பாடுகளில் இடம்பெறும் அசலான செயல்பாடு என்பது முஸ்லிம்களின் ஒப்புதலோடும் விருப்பத்தோடும் கலீ*பாவை நியமனம் செய்யவேண்டும் என்பதாகும், ஆனால் ஓட்டுப்போடுதல். ஓட்டுச்சீட்டையும் ஓட்டுப்பெட்டியையும் பயன்படுத்துதல் மற்றும் ஓட்டுக்களை எண்ணுதல் போன்ற அசலான செயல்பாட்டிலிருந்து ஏற்படும் கிளை செயல்பாடுகள் அனைத்தும் அசலான செயல்பாட்டின் சட்டங்களுக்குள் அடங்கிவிடும், இந்த கிளை செயல்பாடுகளுக்கு தனிப்பட்ட எந்த ஆதாரமும் தேவையில்லை, இவைகளில் எதுவொன்றையும் அசலான செயல்பாட்டின் சட்டங்களுக்கு வெளியில் கொண்டுவருவது என்றால் அதாவது அவற்றை தடைசெய்வது என்றால் அதற்கு ஆதாரம் இருக்கவேண்டும், மனிதனின் செயல்பாடுகளில் பின்பற்றப்படும் செயல்முறைபாணிகள் (styles-الأساليب) அனைத்திற்கும் இது பொருந்தும், ஓட்டுச்சீட்டு. ஓட்டுப்பெட்டி போன்ற சாதனங்களைப் பொறுத்தவரை இவை அனைத்தும் பொருட்களுக்குரிய சட்டங்களில் அடங்குமே ஓழிய செயல்பாட்டிற்குரிய சட்டங்களில் அடங்காது, இந்த விவகாரத்தில் பின்வரும் ஷரியா விதிமுறையே பிரயோகிக்கப்படும்.

"தடை செய்யப்பட்டதற்கு உரிய ஆதாரம் இல்லாதவரை எல்லா பொருட்களும் அனுமதிக்கப்பட்டதுதான்"

அதாவது ஹராமாக்கப்பட்ட பொருட்களைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் ஹலாலானவையே.

வழிமுறை (method-الطريقة) மற்றும் செயல்முறை பாணி (style-أسلوب) ஆகியவற்றுக்கு இடையிலுள்ள வேறுபாடு என்னவென்றால் வழிமுறை என்பது அசலான செயல்பாடுகளாகவோ அல்லது தனிப்பட்ட ஆதாரத்தைக் கொண்ட கிளை செயல்பாடுகளாகவோ இருக்கும். மாறாக செயல்முறை பாணி என்பது அசலான செயல்பாடுகளோடு இணைந்திருக்கும் துணை செயல்பாடுகளாகும். அவற்றிற்கு தனிப்பட்ட ஆதாரம் இருக்காது, ஆகவே அசலான செயல்பாடுகளுக்கு உரிய பொதுவான ஆதாரம் மட்டும் இருக்கும் நிலையில் அந்த அசலான செயல்பாடுகளோடு இணைந்திருக்கும் துணை செயல்பாடுகள் அனைத்தும் செயல்முறை பாணியில் அடங்கும் என்பதோடு அவற்றுக்கு தனிப்பட்ட ஆதாரம் எதுவும் ஷரியாவில் இருக்காது, ஆகவே வழிமுறை என்பது இறைசட்டமாக இருப்பதால் அது ஷரியா ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். எனவே அதை கட்டாயமாக பின்பற்றி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், வழிமுறையின் சட்டம் இபாஹாவில் (அனுமதிக்கப்பட்டவற்றில்) இல்லாதவரை இறைசட்டங்களை பின்பற்றுவதில் முஸ்லிம்கள் தங்கள் விருப்பப்படி நடந்துகொள்ள முடியாது, ஷரியா ஆதாரம் இல்லாத செயல்முறை பாணியிலிருந்து இது வேறுபட்டது என்பதோடு இது அசலான செயல்பாட்டின் சட்டங்களில் அடங்கக்கூடியது, ஆகவே இதை பின்பற்றவேண்டியது கட்டாயமாகும், மாறாக செயல்முறை பாணிகள் அனைத்தும் முபாஹ் என்பதால் ஒரு குறிப்பிட்ட பாணியை அல்லாஹ்வின்தூதர்(ஸல்) பின்பற்றினாôகள் என்றபோதும் அதை முஸ்லிம்கள் பின்பற்றவேண்டிய கட்டாயம் இல்லை, ஆகவே முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கு எத்தகைய செயல்முறை பாணிகளையும் எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் செயல்பாடுகளைப் பொறுத்தே செயல்முறைபாணி எத்தகையது என்று தீர்மானிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment