ஒருவருக்கு பதிலாக மற்றொருவரை நியமனம் செய்வது மூலமாகவோ அல்லது வாரிசுரிமை மூலமாகவோ கிலா*பத்திற்குரிய ஒப்பந்தம் நிறைவேறற்றப்படமாட்டாது, ஏனெனில் கிலா*பத் ஒப்பந்தம் என்பது முஸ்லிம்களுக்கும் கலீபாவாக தேர்வு செய்யப்படுபவருக்கும் மத்தியில் ஏற்படும் ஒப்பந்தமாகும், மேலும் முஸ்லிம்கள் பைஅத் கொடுப்பதும் கலீ*பாவாக தேர்வு செய்யப்பட்ட நபர் பைஅத்தை ஏற்றுக்கொள்வதும் ஒப்பந்தத்தின் ஷரத்தாக இருக்கிறது, ஒருவருக்கு பதிலாக மற்றொருவரை நியமனம் செய்யும் முறையோ அல்லது வாரிசுரிமை அடிப்படையில் நியமனம் செய்யும் முறையோ கிலா*பத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்றாது, ஆகவே இத்தகைய முறைகளை நிறைவேற்றுவதன் மூலமாக கிலா*பத்தை நிலைநாட்ட முடியாது, இதனடிப்படையில் கலீ*பாவாக பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர் தனக்கு அடுத்தபடியாக பதவி வகிப்பதற்கு ஒருவரை கலீ*பாவாக நியமித்தால் அது சட்டரீதியான கிலா*பத் ஒப்பந்தமாக ஏற்றக்கொள்ப்பட மாட்டாது. ஏனெனில் அவருக்கு அந்த உரிமை கிடையாது, அவ்வாறு பதவிக்கு வந்த ஒருவரை சட்டரீதியான கலீ*பாவாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது, கிலா*பத் என்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் உரிமையுள்ள விவகாரமே ஒழிய கலீ*பாவாக இருக்கும் நபருக்கு உரிமையுள்ள விகவாரம் அல்ல, மேலும் முஸ்லிம்கள் தாங்கள் விரும்பும் நபர்மீது அந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு உரிமை பெற்றிருக்கிறார்கள், ஆகவே கலீ*பா பதவியில் இருப்பவர் அடுத்த கலீ*பாவை நியமனம் செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் கலீ*பாவாக வருவதற்கு பரிந்துரை செய்வது ஆகிய செயல்பாடுகளை மேற்கொள்வது சட்டரீதியாக செல்லுபடியாகாது ஏனெனில் அவர் தனக்கு உரிமையில்லாத விஷயத்தில் வரம்பு மீறி செயல்படுகிறார், ஆகவே நடப்பு காலத்தில் கலீ*பாவாக இருக்கும் ஒருவர் அவரது மகனையோ அல்லது உறவினர்களில் ஒருவரையோ அல்லது தான் விரும்பும் நபரையோ அவருக்குப் பின்னர் பதவி வகிப்பதற்கு நியமனம் செய்யவும் முடியாது அல்லது பரிந்துரை செய்யவும் முடியாது அவர்மீது கிலா*பத் ஒப்பந்தத்தை நிறைவேற்றவும் முடியாது ஏனெனில் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ள ஒருவர் அதனை மற்றொருவர் மீது நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால் அது சட்டத்திற்கு முரண்பாடான முறையற்ற ஒப்பந்தமாகும்.
அபூபக்கர்(ரலி) உமரை(ரலி) நியமனம் செய்தார். உமர்(ரலி) கலீ*பா பதவிக்கு (தேர்வுசெய்ய) ஸஹாபாக்களிலிருந்து ஆறு நபர்களை நியமித்தார். ஸஹாபாக்கள் அனைவரும் இந்த செயல்பாட்டிற்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டார்கள் என்பதால் இது இஜ்மா அஸ்ஸஹாபாவாக இருக்கிறது என்பதுபோன்ற அறிவிப்புகளின் அடிப்படையில் கலீ*பாவாக இருக்கும் ஒருவர் தனக்குப் பின்னர் தனது பதவிக்கு ஒருவரை நியமனம் செய்வது சட்டரீதியானது என்று கூறமுடியாது. ஏனெனில் அபூபக்கர்(ரலி) உமரை(ரலி) கலீ*பா பதவிக்கு நியமனம் செய்யவில்லை. மாறாக அவர் கலீ*பாவாக யார் வரவேண்டும் என்று முஸ்லிம்களிடம் ஆலோசனை மேற்கொண்டார், இதனடிப்படையில் அவர் அலீ(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோரை பதவிக்கு முன்மொழிந்தார், பின்னர் அபூபக்கர்(ரலி) வாழ்ந்த மூன்று மாத காலகட்டத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் உமரை(ரலி) தேர்வு செய்தார்கள், அபூபக்கரின்(ரலி) மரணத்திற்குப் பின்னர் முஸ்லிம்கள் உமருக்கு(ரலி) பைஅத் செய்தார்கள், இவ்வாறாகத்தான் உமர்(ரலி) மீது கிலா*பத் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது, பைஅத் பெறுவதற்கு முன்பாக உமர்(ரலி) கலீ*பாவாகவும் இல்லை கிலா*பத் ஒப்பந்தம் அவர்மீது நிறைவேற்றப்படவும் இல்லை, அபூபக்கர்(ரலி) செய்த தேர்வின் அடிப்படையிலோ அல்லது முஸ்லிம்கள் அவரை தேர்வு செய்ததின் அடிப்படையிலோ உமர்(ரலி) கலீ*பாவாக நியமிக்கப்படவில்லை. மாறாக மதீனாவில் வாழ்ந்த ஸஹாபாக்கள் பைஅத் செய்து அவர் மீது கிலா*பத் ஒப்பந்தத்தை நிறைவேற்றியதால் மட்டுமே அவர் கலீ*பாவாக ஆனார், உமர் (ரலி) ஆறு நபர்களை கலீ*பா பதவிக்கு தெரிவு செய்த விவகாரத்தைப் பொறுத்தவரை. முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் அந்த ஆறு நபர்களை முன்மொழிந்தார், பின்னர் அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப் (ரலி) இந்த அறுவரில் எவருக்கு கலீ*பாவாக வருவதற்கு முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார், அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோர் வழிமுறையை பின்பற்றும் பட்சத்தில் அலீ(ரலி) கலீ*பாவாக வருவதற்கு தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் அதற்கு அவர் இசையவில்லை எனும் பட்சத்தில் உஸ்மான்(ரலி) கலீ*பாவாக வரவேண்டும் என்றும் முஸ்லிம்கள் கோரிக்கை வைத்தார்கள், அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோர் வழிமுறையை பின்பற்றுவதற்கு அலீ(ரலி) மறுத்துவிட்டதைத் தொடர்ந்து அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) உஸ்மானுக்கு(ரலி) பைஅத் செய்தார். அûத்தொடர்ந்து முஸ்லிம்கள் அவருக்கு பைஅத் செய்தார்கள், ஆகவே முஸ்லிம்கள் செய்த பைஅத்தின் அடிப்படையில் உஸ்மானுக்கு(ரலி) கிலா*பத் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது, உமர்(ரலி) அவரை முன்மொழிந்தார் என்பதற்காகவோ அல்லது மக்கள் அவரை தேர்வு செய்தார்கள் என்பதற்காகவோ அவர் மீது கிலா*பத் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை, முஸ்லிம்கள் அவருக்கு பைஅத் கொடுத்திருக்கவில்லை எனும் பட்சத்தில் அவர் மீது கிலா*பத் ஒப்பந்தம் ஒருபோதும் நிறைவேற்றப்பட்டிருக்காது, ஆகவே கலீ*பாவாக நியமனம் செய்யப்படும் ஒருவர் முஸ்லிம்களின் பைஅத்தை பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும், மேலும் இந்த ஒப்பந்தம் ஒருவருக்குப்பின் அவர் இடத்துக்கு மற்றொருவரை நியமிப்பதன் மூலமாகவோ அல்லது வாரிசுரிமை அடிப்படையிலோ ஒருபோதும் நிறைவேற்றப்படமாட்டாது ஏனெனில் பைஅத் என்பது கிலா*பத்திற்குரிய ஒப்பந்தமாக இருப்பதால் ஒப்பந்தம் தொடர்பான ஷரியாவின் சட்டங்கள் கட்டாயமாக அதில் பின்பற்றப் படவேண்டும்.
No comments:
Post a Comment