உலக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு கலீ*பாவிற்கு மேல் இருப்பதற்கு அனுமதியில்லை.
அப்துல்லாஹ் இப்ன் அம்ர்இப்ன்ஆஸ் அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
ومن بايع إماماً فأعطاه صفقة يده وثمرة قلبه فليطعه إن استطاع، فإن جاء آخر ينازعه فاضربوا عنق الآخر
"எவரேனும் ஒருவர் தமது கரத்தால் கைலாகு(முஸ*பா) கொடுப்பதன் மூலமும் தமது இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஒரு இமாமுக்கு பைஅத் செய்தால் பிறகு அவர் இயன்றவரை கட்டுப்பட்டு நடக்கட்டும், இந்நிலையில் மற்றாருவர் வந்து (அதிகாரத்தில்) அவரிடம் சர்ச்சை செய்தால் அவரது கழுத்தை வெட்டுங்கள்."
அபூஸயீது அல்லகுத்ரி(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
إذا بويع لخليفتين فاقتلوا الآخر منهما
"இரண்டு கலீ*பாக்களுக்கு பைஅத் பெறப்பட்டால் இரண்டாவது நபரை கொன்றுவிடுங்கள்"
அர*பஜா அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது. அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن يشق عصاكم أو يفرق جماعتكم فاقتلوه
"ஒரு மனிதரின் தலைமையில் (கலீ*பாவின்கீழ்) நீங்கள் ஒன்றுபட்டிருக்கும்போது உங்கள் பலத்தை குறைப்பதற்காகவோ அல்லது உங்கள் ஒற்றுமையை குலைப்பதற்காகவோ (கலீ*பாவிற்கு போட்டியாக) வேறொருவர் வந்தால் அவரை கொன்றுவிடுங்கள்"
அபூஹாஸிம் அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
அபூஹுரைராவுடன் நான் ஐந்து வருடங்கள் பிரயாணம் மேற்கொண்டிருக்கிறறேன் அப்போது அவர் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அறிவித்துள்ளதை செவியுற்றிருக்கிறேன்.
كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي وستكون خلفاء فتكثر، قالوا فما تأمرنا قال: فوا، ببيعة الأول فالأول وأعطوهم حقهم فإن الله سائلهم عما استرعاهم
"பனூஇஸ்ராயீல் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒருநபி இறந்தபோது மற்றொரு நபி அவரிடத்திற்கு அனுப்பட்டார், நிச்சயமாக. எனக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள் ஆனால் கலீபாக்கள் வருவார்கள் அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், "(அதுகுறித்து) எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள் என்று ஸஹாபாக்கள் வினவினார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்றன்பின் ஒன்றாக பைஅத் கொடுங்கள் அவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (பொறுப்பு) பற்றி அல்லாஹ் அவர்களிடம் விசாரிப்பான்."
ஒரே சமயத்தில் வெவ்வேறு இருநாடுகளில் கிலாபத் நிறுவப்பட்டால் அவற்றில் எதுவொன்றும் செல்லுபடி ஆகாது ஏனெனில் முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் இரண்டு கலீ*பாக்களை பெற்றிருப்பதற்கு அனுமதியில்லை, முதலில் பெறப்பட்ட பைஅத் சட்டரீதியானது என்று கூறுவது சரியல்ல ஏனெனில் கிலாபத்தை நிலைநாட்டுவது அவசியமானதே தவிர அதற்காக முறையற்ற போட்டியை ஏற்படுத்துவதற்கு அனுமதியில்லை, ஆகவே இரண்டு கலீபாக்கள் நிலைநிறுத்தப்படும் பட்சத்தில் விவகாரம் மறுபடியும் முஸ்லிம்களிடம் கொண்டு செல்லப்பட்டு முறையாக ஒரு கலீபாவை நிலைநிறுத்தவேண்டும், இவ்வாறு நிகழும்போது இருவருக்கிடையில் ஓட்டெடுப்பு நடத்தி ஒருவரை தேர்வுசெய்யவேண்டும் என்று கூறுவது தவறானது ஏனெனில் கிலாபத் என்பது ஒப்பந்தமாகும் எனவே ஓட்டெடுப்பை எவ்விதத்திலும் ஒப்பந்தமாக கொள்ளமுடியாது, அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்குப்பின் ஒருவராக பைஅத் கொடுங்கள் என்ற அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூற்றை இங்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் இது ஏற்கனவே கிலா*பத் நிலைநாட்ப்பட்டுள்ள நிலையில் கலீபாவிற்கு பைஅத் கொடுப்பது தொடர்பான அறிவிப்பாகும், ஏற்கனவே கிலாபத் நிறுவப்பட்டுள்ள நிலையில் முந்தைய கலீபாவிற்கு பதிலாக மற்றொரு கலீபாவை தோர்வுசெய்யும்போது இரு கலீபாக்கள் பைஅத் பெற்றால் முதல் நபரின் பைஅத் ஏற்றுக் கொள்ளப்பட்டு கிலாபத் ஒப்பந்தம் அவர்மீது நிறைவேற்றப்படும். இரண்டாவது நபர் பெற்ற பைஅத் செல்லுபடி ஆகாது, ஆனால் நாம் இங்கு விவாதித்துக் கொண்டிருக்கும் விவகாரம் அதுவல்ல. ஏற்கனவே கிலாபத் நிறுவப்படாமல் இருக்கும்நிலையில் ஒரே சமயத்தில் வெவ்வேறு இரண்டு இடங்களில் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களால் பைஅத் செய்யப்பட்டு இருநபர்களுக்கு கிலாபத் ஒப்பந்தம் சட்டரீதியாக நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையாகும், இத்தகைய தருணத்தில் இரண்டு ஒப்பந்தங்களுமே ரத்து செய்யப்பட்டு விவகாரம் மறுபடியும் முஸ்லிம்களிடம் கொண்டுவரப்படவேண்டும், முஸ்லிம்கள் இவர்கள் இருவரில் ஒருவருக்கு புதிதாக பைஅத் கொடுத்து ஒப்பந்தம் செய்வர்களேயானால் அது புதிய ஒப்பந்தமாக கருதி சட்டரீதியானதாக ஏற்றுக்கொள்ளப்படும், ஆனால் அது பழய ஒப்பந்தத்தை புதுப்பித்ததாக கருதப்படமாட்டாது, அவ்வாறு இல்லாமல் இவ்விரு நபர்களையும் விடுத்து வேறொரு நபருக்கு கிலாபத் ஒப்பந்தத்தை முஸ்லிம்கள் நிறைவேற்றும் பட்சத்தில் அதுவும் சட்டரீதியானதே, ஆகவே இந்த விவகாரம் முஸ்லிம்களின் உரிமையை பிரயோகித்து தீôக்கப்படுமே ஒழிய கலீபா பதிவிக்கு போட்டியிடும் நபர்களின் தகுதியையோ அல்லது செல்வாக்கையோ அல்லது உரிமையையோ அடிப்படையாக வைத்து தீர்க்கப்படாது, அதேபோல ஏற்கனவே கிலாபத் நிறுவப்படாதநிலையில் ஒரு பிரதேசத்தில் ஒரே சமயத்தில் இரண்டு கலீபாக்கள் தேர்வுசெய்யப்படும் பட்சத்தில் ஒருவருக்கு செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு இருந்து மற்றவருக்கு செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களின் சிறுபான்மை ஆதரவு மட்டும் இருக்குமாயின் அப்போது பெரும்பான்மை ஆதரவு பெற்ற நபருக்கே கிலா*பத் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும். அவர் முதலாவதாக அல்லது இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக தேர்வு செய்யபட்டிருப்பினும் சரியே, ஏனெனில் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் தேர்வுசெய்யும் நபரே கலீபாவாக கருதப்படுவார், கலீ*பா பதவிக்கு போட்டியிட்ட மற்ற நபர்கள் கிலாபத்தின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் பொருட்டு கலீபாவாக நியமனம் செய்யப்பட்டவருக்,கு பைஅத் கொடுக்கவேண்டும், அவர்கள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் முஸ்லிம்கள் அனைவரும் அவர்களுக்கு எதிராக போர்செய்யவேண்டும் ஏனெனில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஒப்பந்தம் செய்வது மூலமாகத்தான் கிலாபத் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும், இவ்வாறு கலீ*பாவாக நியமனம் செய்யப்படும் ஒருவருக்கு முஸ்லிம்கள் அனைவரும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பதோடு இதன்பின்னர் மற்றொரு நபரை கலீ*பாவாக தேர்வுசெய்ய முயற்சித்தால் அது ஹராமாகும்.
எனினும் ஆட்சியமைப்பு (ruling system – nidaamul hukm) விவகாரங்களில் நிலவும் உண்மைநிலைகளை கவனிக்கும் போது ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்கள் வழக்கமாக தலைநகரங்களில்தான் வாழ்ந்து வருகிறார்கள் ஏனெனில் அங்குதான் ஆட்சியமைப்பு விவகாரங்களின் உச்சகட்டமான செயல்பாடுகள் நடந்துவருகின்றன, தலைநகரில் ஒருவர் கலீபாவாக தேர்வு செய்யபட்ட நிலையில் மாகாணங்களின் பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மற்றொருவரை கலீபாவாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தலைநகரத்தில் கலீபாவாக தேர்வு செய்யப்பட்டவர் முதலில் பைஅத்தை பெற்றுவிட்டால் பிறகு தலைநகரில் பைஅத் பெற்ற நபர்தான் கலீபா பதவிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் ஏனெனில் தலைநகரில் உள்ளவர்கள் பைஅத் செய்வது செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவு இருப்பதை சுட்டிக்காட்டுகிறது, ஆனால் மாகாணங்களில் ஒருவர் கலீபாவாக முதலில் தேர்வு செய்யப்பட்டு செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களிடம் பைஅத் பெரும் பட்சத்தில் அவருக்கே கிலாபத் ஒப்பந்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் ஏனெனில் இதுபோன்ற தருணங்களில் மாகாணங்களில் உள்ள முஸ்லிம்கள் பைஅத் செய்வதில் முன்னிலை பெற்றுவிடுவதால் தலைநகரில் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் நிலை பலவீனம் அடைந்துவிடுகிறது, எவ்வாறு இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் ஒரு கலீபாவிற்கு மேல் இருப்பதற்கு அனுமதியில்லை.
No comments:
Post a Comment