Tuesday, September 29, 2009

கலீபாவிற்கான பைஅத் – البيعـة

பைஅத் செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள கட்டாய கடமையாகும் (வாஜிப்) மேலும் இது ஆண் பெண் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதுள்ள உரிமையாகும், பைஅத் செய்வது வாஜிப் என்பதற்கு குர்ஆன் வசனங்களும் நிறைய ஹதீஸ்களும் ஆதாரமாக இருக்கின்றன.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ
மூ*மின்கள் உம்மிடம் பைஅத் செய்தபோது நிச்சயமாக அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொண்டான்,. ( அல்*பதஹ் 48 :18 )

إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ
உம்மிடம் பைஅத் செய்தவர்களெல்லாம் அல்லாஹ்விடம் பைஅத் செய்தவர்கள் ஆவார்கள். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை இருக்கிறது (அல்*பதஹ் 48 : 10)

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ
நபியே. மூ*மினான பெண்கள் உம்மிடம் பைஅத் செய்யவரும்போது… ( அல்மும்தஹினா 60 : 12)

ஹதீஸ் ஆதாரங்கள்:

இப்ன்உமர்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்,

ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية
எவர் தனது கழுத்தில் பைஅத் இல்லாத நிலையில் மரணம் அடைகிறாரோ அவர் ஜாஹிலியத்தில் மரணம் அடைந்தவர் ஆவார்.

பைஅத் செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள உரிமை என்பதைப் பொறுத்தவரை பைஅத் செய்யும் முறையே அதனை சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் முஸ்லிம்கள்தான் கலீ*பாவிற்கு பைஅத் கொடுக்கவேண்டுமே தவிர கலீ*பா முஸ்லிம்களுக்கு பைஅத் கொடுக்கக்கூடாது, அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) முஸ்லிம்கள் பைஅத் கொடுத்த செய்தி ஹதீஸ் வாயிலாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது,.

உபாதா இப்ன் அஸ்ஸôமித்(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

بايعنا رسول الله  على السمع والطاعة في المنشط والمكره وأن لا ننازع الأمر أهله وأن نقوم أو نقول بالحق حيثما كنا لا نخاف في الله لومة لائم
நாங்கள் விரும்புகின்றவற்றிலும் வெறுக்கிள்றவற்றிலும் செவிமடுப்போம் என்றும் கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அதிகாரம் கொடுக்கப்ட்டவர்களுடன் சர்ச்சை செய்யமாட்டோம் என்றும் பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சாமல் எந்நிலையிலும் சத்தியத்தில் உறுதியாக இருப்போம் என்றும் அல்லாஹ்வின்தூதருக்கு பைஅத் செய்தோம்.

உம்முஅத்தீயா(ரலி) அறிவிப்பை ஹ*ப்ஸôவின் வழியாக அய்யூப் அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.
بايعنا النبي  فقرأ عليّ أن لا يشركن بالله شيئاً ونهانا عن النياحة فقبضت امرأة منّا يدها فقالت فلانة أسعدتني وأنا أريد أن اجزيها فلم يقل شيئاً فذهبت ثم رجعت
"'நாங்கள் அல்லாஹவின்தூதருக்கு பைஅத் செய்தோம், பின்னர் அல்லாஹ்வுக்கு நாங்கள் எதனையும் இணைவைக்கக்கூடாது என்றும் ஒப்பாரி வைத்து அழுவதிலிருந்து நீங்கிக்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் ஓதிக்காட்டியபோது எங்களிலுள்ள ஒரு பெண் தன்னுடைய கையை விலக்கிக்கொண்டு. "ஒரு பெண் என்னை மகிழ்ச்சி அடையச்செய்திருக்கிறாள் அவளுக்கு நான் பிரதிஉபகாரம் செய்யவேண்டும்" என்று கூறினார், அதற்கு அல்லாஹ்வின்தூதர் எதுவும் பதில் கூறவில்லை. எனவே அவர் சென்றுவிட்டு பின்னர் திரும்பிவந்தார்."

அபூஹுரைரா(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم: رجل على فضل ماء بالطريق يمنع منه ابن السبيل، ورجل بايع إماماً لا يبايعه إلاّ لدنياه إن أعطاه ما يريد وفى له وإلا لم يف له، ورجل يبايع رجلاً بسلعة بعد العصر فحلف بالله لقد أعطي بها كذا وكذا فصدقه فأخذها ولم يُعط بها
மூன்று விதமான மனிதர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவுமாட்டான் அவர்களை தூய்மைப் படுத்தவுமாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு, (அவர்கள் யாரெனில்) நடைபாதையின் பக்கமாக உள்ள அதிகமான தண்ணீரைப் (பயன்படுத்த இயலாதவாறு) வழிப்போக்கருக்கு தடுத்து வைத்துள்ள மனிதர். உலகநலனை நாடியவராக இமாமுக்கு பைஅத் செய்யும் மனிதர். அவர் நாடியது கொடுக்கப்பட்டால் அதை (பைஅத்தை) நிறைவேற்றுவார் இல்லையெனில் நிறைவேற்றமாட்டார். ஒரு மனிதருக்கு பொருளை வியாபாரம் செய்யும் மனிதர். அதை (எவருக்கும்) விற்காதபோதும் இன்னார் இன்னாருக்கு அதை விற்றதாக மாலைநேரத்தில் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்வார். அதை உண்மை என்று எண்ணி அவரும் அதை வாங்கிச்செல்வார்."

அப்துல்லாஹ் இப்ன்உமர்(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

كنا إذا بايعنا رسول الله على السمع والطاعة يقول لنا فيما استطعت
அல்லாஹ்வின்தூதருக்கு செவிமடுப்பதாகவும் கட்டுப்படுவதாகவும் நாங்கள் பைஅத் செய்தபோது. "இயன்றவற்றில்" என்று எங்களிடம் கூறுவார்கள்," ஜரீர் இப்ன் அப்துல்லாஹ்(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

بايعت النبي على السمع والطاعة فلقنني فيما استطعت والنصح لكل مسلم
அல்லாஹ்வின்தூதருக்கு செவிமடுப்பதாகவும் கட்டுப்படுவதாகவும் நான் பைஅத் செய்தபோது இயன்றவற்றில் (அவ்வாறு செய்யவேண்டும்) என்றும் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உபதேசம் செய்யவேண்டும் என்றும் என்னிடம் அறிவுறுத்தினார்கள்.

ஜுனாது இப்ன் அபூஉமைய்யா (ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

دخلنا على عبادة بن الصامت وهو مريض قلنا أصلحك الله حدث بحديث ينفعك الله به سمعته من النبي  قال: دعانا النبي  فبايعناه. فقال فيما أخذ علينا أن بايعنا على السمع والطاعة في منشطنا ومكرهنا وعسرنا ويسرنا وأَثَرَةً علينا وأن لا ننازع الأمر أهله قال إلاّ أن تروا كفراً بواحاً عندكم من الله فيه برهان
உபாதா இப்ன் அஸ்ஸôமித் நோயுற்று இருக்கும் நிலையில் நாங்கள் அவரது வீட்டிற்கு சென்றோம், அல்லாஹ் உம்மை ஸôலிஹான மனிதராக ஆக்குவானாக. இறைத்தூதரிடம்(ஸல்) நீர் கேட்டு பயன் பெற்றதைப்போல் நாங்களும் பயன் பெறும் வண்ணம் அவர்களிடம் நீர் செவியுற்ற செய்திகளை எங்களுக்கும் அறிவிப்பீராக என்று கூறினோம், அவர் கூறியதாவது. "இறைத்தூதர்(ஸல்) எங்களை (பைஅத் செய்ய) அழைத்தார்கள் நாங்கள் அவர்களிடம் பைஅத் செய்தோம்," மேலும் அவர் கூறியதாவது. "நாங்கள் விரும்புகின்றவற்றிலும் வெறுக்கிள்றவற்றிலும் இன்பமான நிலையிலும் துன்பமான நிலையிலும் எங்கள் சுயநலன்களிலும் (அவர்களுக்கு) நாங்கள் செவிமடுக்க வேண்டும் என்றும் கட்டுப்பட வேண்டும் என்றும். அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவான கு*ரை கண்டால் ஒழிய அதிகாரம் கொடுக்கப் பட்டவர்களுடன் நாங்கள் சர்ச்சை செய்யக்கூடாது என்றும் எங்களிடம் பைஅத் பெற்றார்கள்."
ஆகவே கலீ*பாவிற்கு பைஅத் கொடுக்கும் அதிகாரம் முஸ்லிம்கள் கைகளில் இருப்பதோடு அது அவர்களின் உரிமையாகவும் இருக்கிறது, அவர்கள் பைஅத் கொடுப்பதன் மூலமாக மட்டுமே கலீ*பாவின் நியமனம் நிறைவேற்றப்பட்டு கிலா*பத் நிலைநாட்டப்படுகிறது, கைலாகு (கை குலுக்குதல்) செய்வதன் மூலமாகவோ அல்லது எழுதிக்கொடுப்பதன் மூலமாகவோ ஆணோ பெண்ணோ எந்த வேறுபாடுமின்றி ஒப்பந்த பைஅத்தை நிறைவேற்றலாம், ஆண்கள் செய்வதைப்போலவே பெண்கள் பைஅத் செய்யும்போது கலீ*பாவுடன் கைகுலுக்கலாம்.

ஆயிஷா(ரலி) விடமிருந்து உர்வா அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஸஹீஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

"'அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்கக்கூடாது என்ற வசனத்தை ஓதிக்காட்டி அல்லாஹ்வின்துதர்(ஸல்) பெண்களிடம் பைஅத் பெறுவார்கள். அவர்களுக்கு உரிமை இல்லாத பெண்ணின் கையை ஒருபோதும் அவர்கள் தீண்டியதில்லை"

இந்த அறிவிப்பில் ஆயிஷா(ரலி) தான் அறிந்தவரை உள்ள விஷயத்தைப்பற்றி குறிப்பிட்டுள்ளார், அவர் அறிந்தவரை அல்லாஹ்வின்தூதர்(ஸல்) எந்த பெண்ணின் கையையும் (பைஅத் பெறும்போது) தீண்டியதில்லை, ஆனால் வேறுசில ஹதீஸ் அறிவிப்புகளில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கையை பிடித்தவாறு பெண்கள் பைஅத் செய்தார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, உம்மு அத்தீயா(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் எங்களில் ஒரு பெண் தனது கையை விலக்கிக் கொண்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, அந்தப்பெண் பைஅத் செய்தபோது அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கையை பிடித்திருந்தார் என்பதையும் அவர்கள்(ஸல்) ஒப்பாரி வைத்து அழக்கூடாது என்று கட்டளையிட்டபோது பைஅத்திலிருந்து தனது கையை விலக்கிக்கொண்டார் என்பதையும் இது சுட்டிக் காட்டுகிறது, மேலும் எங்களில் ஒரு பெண் தனது கையை விலக்கிக் கொண்டார் என்ற சொற்றொடர் மற்ற பெண்கள் பைஅத்திலிருந்து தங்கள் கைகளை விலக்கிக்கொள்ளவில்லை என்பதையும் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கையைப் பிடித்து பைஅத் செய்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது, இந்த ஹதீஸின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் ஆண்களும் பெண்களும் பைஅத் செய்யும்போது கலீ*பாவுடன் கைகுலுக்குவது கூடும் என்று குறிப்பிடுகிறது, ஆகவே ஆண்களும் பெண்களும் கைகுலுக்குவது மூலமோ அல்லது எழுதிக்கொடுப்பது மூலமோ பைஅத்தை நிறைவேற்றலாம்.

அப்துல்லாஹ் இப்ன் தினார்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

شهدت ابن عمر حيث اجتمع الناس على عبد الملك قال: كتب إني اقر بالسمع والطاعة لعبد الله عبد الملك أمير المؤمنين على سنة الله وسنة رسوله ما استطعت
அப்துல்மாலிக் இப்ன் மர்வானின் பக்கமாக மக்கள் கூடியிருந்தபோது. அல்லாஹ்வின் வேதத்தின்படியும் அவனுடைய தூதரின் சுன்னாவின்படியும் அமீருல் மூ*மினீன் அல்லாஹ்வின் அடிமை அப்துல்மாலிக்கிற்கு செவிமடுப்பதாகவும் கட்டுப்படுவதாகவும் நான் அறிவிப்பு செய்கிறேன் என்று இப்ன்உமர் எழுதிக்கொடுத்ததை நான் பார்த்தேன்"

எனினும் வயதுவந்தவர்கள் மட்டும்தான் பைஅத் செய்யமுடியும். சிறுவர்களோ அல்லது புத்திசுவாதீனம் இல்லாதவர்களோ பைஅத் செய்யமுடியாது, ஆகவே ஒரு முகல்ல*ப் (புத்திசுவாதீனமுள்ள வயதுவந்தவர்) மட்டுமே பைஅத் செய்யமுடியும்.

அபூஉகைல் அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

فقد حدث أبو عقيل زهرة بن معبد عن جده عبد الله بن هشام وكان قد أدرك النبي  وذهبت به أمه زينب ابنة حميد إلى رسول الله  فقالت يا رسول الله بايعه، فقال النبي  هو صغير فمسح رأسه ودعا له
அபூஉகைல் ஸஹ்ரா இப்ன் ம*பத் தனது பாட்டனார் அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாமிடமிருந்து அறிவிப்பதாவது. அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம் இறைத்தூதரிடம் வந்தார். அவருடன் அவர் தாயாரும் ஹமீதின் புதல்வியுமான ûஸனபும் வந்தார், அவர் கூறினார். "அல்லாஹ்வின்தூதரே (ஸல்) இவரிடம் (அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம்) பைஅத் பெற்றுக்கொள்வீர்களாகõ" அதற்கு இறைத்தூதர்(ஸல்). அவர் சிறுவராக இருக்கிறார் என்று கூறி (பைஅத் பெற்றுக்கொள்ள மறுத்து) விட்டு அவரின் தலையை தடவிக்கொடுத்தவாறு அவருக்காக துஆ செய்தார்கள்"

பைஅத் கொடுக்கும்போது கூறவேண்டிய வார்த்தைகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டுமே கூறவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை, ஆனால் அல்லாஹ்வின் வேதத்தின்படியும் அவனது தூதரின்(ஸல்) சுன்னாவின்படியும் கலீ*பா செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்ற அர்த்தத்தைக் குறிக்கும் வார்த்தைகள் முதலில் இடம்பெறவேண்டும், இரண்டாவதாக இன்பத்திலும் துன்பத்திலும் விரும்புகின்றவற்றிலும் வெறுக்கின்றவற்றிலும் கலீ*பாவுக்கு கட்டுப்படுவது குறித்த உறுதிமொழி அதில் இடம்பெறவேண்டும், முஸ்லிம்கள் பைஅத்தை நிறைவேற்றுவது மூலம் கிலா*பத் ஒப்பந்தம் ஒரு கலீ*பாவின் மீது நிலைநிறுத்தபட்டுவிட்டது எனில் பிறகு பைஅத் செய்தவர்கள் கழுத்தில் அது ஒரு பொறுப்பாக நிலைபெற்றிருக்கும். அவர் அதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளமுடியாது ஏனெனில் கிலா*பத் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை அது நிலைத்திருக்கும்வரை கலீ*பாவின் மீதுள்ள உரிமையாக அது இருக்கிறது, ஒருமுறை முஸ்லிம்கள் அதை அவருக்கு அளித்துவிட்டால் பிறகு அவர்கள் அவருக்கு கட்டுப்பட்டே நடந்தாகவேண்டும், அதிலிருந்து எவரேனும் விலகிக்கொள்ள நாடுவாரானால் அதற்கு ஒருபோதும் அனுமதியில்லை, அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.


إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ فَمَنْ نَكَثَ فَإِنَّمَا يَنْكُثُ عَلَى نَفْسِهِ وَمَنْ أَوْفَى بِمَا عَاهَدَ عَلَيْهُ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا
உம்மிடம் பைஅத் செய்தவர்களெல்லாம் அல்லாஹ்விடம் பைஅத் செய்தவர்கள் ஆவார்கள். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை இருக்கிறது. ஆகவே எவர் அதை முறித்துவிடுகிறாரோ அவர் தனக்கு எதிராகவே (அதை) முறித்துவிடுகிறார் இன்னும் எவர் அல்லாஹ்விடம் செய்த உடண்படிக்கையை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலி உண்டு ( அல்*பதஹ் : 10)

ஜாபிர் இப்ன் அப்துல்லாஹ் (ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஸஹீ ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

أقلني بيعتي " فأبى. ثم جاء فقال " أقلني بيعتي " فأبى، فخرج. فقال رسول اللهயிالمدينة كالكير تنفي خبثها وينصع طيبها
ஒரு நாடோடி அரபி அல்லாஹ்வின்தூதரிடம் (ஸல்) இஸ்லாத்திற்காக பைஅத் செய்தார். பின்னர் அவர் நோயுற்றபோது அல்லாஹ்வின்தூதரிடம் (ஸல்) வந்து கூறினார்.

"'எனது பைஅத்திலிருந்து நான் விலகிக்கொள்ளலாமா? என்று வினவினார். அதற்கு அவர்கள்(ஸல்) மறுத்துவிடவே அங்கிருந்து சென்றுவிட்டார், பிறகு அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

"'இந்நகரம் உருக்கு உலை போன்றது அது தன்னிடமுள்ள அசுத்தங்களை விலக்கிவிட்டு தூய்மையானவற்றை பாதுகாக்கிறது

இப்ன்உமர்(ரலி) தன்னிடம் கூறியதாக நா*பி* அறிவித்திருப்பதாவது.

من خلع يداً من طاعة لقي الله يوم القيامة لا حجة له
எவரேனும் ஒருவர் அல்லாஹ்விற்கு கட்டுப்படுவதிலிருந்து தனது கரத்தை விலக்கிக் கொண்டால் அவர் மறுமைநாளில் தன்னிடம் எந்தவிதமான ஆதாரமும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை சந்திப்பார்

கலீ*பாவிற்கு செய்த பைஅத்தை முறிப்பது அல்லாஹ்(சுபு) வுக்கு கட்டுப்படுவதிலிருந்து கையை விலக்கிக் கொள்வதற்கு ஒப்பாகும், இது முஸ்லிம்கள் ஒருவரை கலீ*பாவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு பைஅத் செய்வதைப் பொறுத்தவரை உள்ள நிபந்தனையாகும். அது கிலா*பத்திற்குரிய ஒப்பந்த பைஅத்தாக (contract of khilafat) இருந்தாலும் அல்லது கட்டுப்படும் பைஅத்தாக (contract of obedience) இருந்தாலும் சரியே, ஆனால் ஒருவர் ஆரம்பத்தில் ஒருவரை கலீ*பாவாக ஏற்றுக்கொண்டு பைஅத் செய்துவிட்ட நிலையில் மற்ற முஸ்லிம்கள் அவருக்கு பைஅத் செய்து கலீ*பாவாக ஏற்றுக்கொள்ளவில்லை எனும் பட்சத்தில் அவர் தன்னுடைய பைஅத்தை அவரிடமிருந்து விலக்கிக்கொள்வதற்கு அனுமதியுண்டு, ஆகவே இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது கலீ*பாவிற்கு செய்யப்பட்டு பைஅத்தைப் குறித்துதானே தவிர முஸ்லிம்கள் கலீ*பாவாக ஏற்றுக்கொள்ளாத நபருக்கு கொடுத்த பைஅத் குறித்தல்ல,

No comments:

Post a Comment