Friday, September 25, 2009

கிலாபத் ஒப்பந்தம் – انعقاد الخلافة

கிலா*பத் என்பது சுயவிருப்பத்துடன் தேர்வுசெய்யும் ஒரு ஒப்பந்தமாகும் ஏனெனில் அது அதிகாரத்தில் உள்ளவருக்கு கட்டுப்படுவதாக கொடுக்கப்படும் வாக்குறுதியாக இருக்கிறது, ஆகவே பைஅத் பெறுகின்ற நபர் கிலா*பத் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தெரிவிக்கும் சம்மதமும் பைஅத் கொடுப்பவர் குறிப்பிட்ட நபர் கலீ*பாவாக நியமிக்கப்படுவதற்கு தெரிவிக்கும் சம்மதமும் முக்கியமான நிபந்தனைகளாகும், இதனடிப்படையில் ஒருவர் கலீ*பா பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அல்லது தயக்கம் காட்டினாலும் அவரை வற்புறுத்தலுக்கு உள்ளாக்கக்கூடாது, அதற்கு மாற்றாக வேறொரு நபரை தேர்வுசெய்யவேண்டும், மேலும் மக்களிடம் நிர்பந்தமான முறையில் பைஅத் பெறுவதற்கும் அனுமதியில்லை ஏனெனில் இத்தகைய விதத்தில் பைஅத் பெற்றால் அது சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, மற்ற ஒப்பந்தங்களுக்கு உரிய ஷரத்து போலவே கிலா*பத் என்பதும் சுயசம்மதத்துடன் எந்தவிதமான வற்புறுத்தலோ அல்லது நிர்பந்தமோ இன்றி தேர்வுசெய்யும் ஒப்பந்தமாகும், எனினும் பைஅத் கொடுப்பதற்கு தகுதி உள்ளவர்கள் பைஅத்தை நிறைவேற்றிவிட்டால் அது சட்டரீதியானது என்பதால் தேர்வுசெய்யப்பட்டவர் அதிகாரத்திற்கு வந்துவிடுவார். அவருக்கு கட்டுப்படுவது மக்கள் அனைவரின் மீதுள்ள கட்டாய கடமையாகும், அதிகாரத்திற்கு வந்தபின்னர் அவருக்கு கொடுக்கப்படும் பைஅத் கட்டுப்படும் பைஅத்தாக இருக்குமே ஒழிய கிலா*பத்திற்குரிய ஒப்பந்த பைஅத்தாக இருக்காது, இந்நிலையில் அதிகாரத்தில் இருக்கும் நபர் மற்ற மக்களிடம் நிர்பந்தமாக பைஅத் பெறுவதற்கு அனுமதியுண்டு ஏனெனில் அது கீழ்படியும் பைஅத்தாக இருப்பதோடு வாஜிபாகவும் இருக்கிறது, கீழ்படியும் பைஅத் கிலா*பத்திற்குரிய ஒப்பந்த பைஅத் அல்ல. எனவே அதை வற்புறுத்தி பெறுவது சட்டத்திற்குப் புறம்பானது என்ற வாதம் தவறானது, இதனடிப்படையில் ஆரம்பநிலையில் பெறப்படும் பைஅத் ஒப்பந்த பைஅத்தாக இருப்பதால் சுயவிருப்பத்தின் அடிப்படையில் சம்மதம் தெரிவித்தால் அன்றி அது சட்டரீதியானதாக இருக்காது, ஆனால் கலீ*பாவிற்கு ஒப்பந்த பைஅத் கொடுக்கவேண்டியவர்கள் பைஅத் கொடுத்து முடித்துவிட்டால் பிறகு மற்ற முஸ்லிம்களின் பைஅத் அதிகாரத்தில் உள்ளவருக்கு கட்டுப்படும் பைஅத்தாகும், அல்லாஹ்(சுபு) வின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு மக்களை நிர்பந்தம் செய்வதற்கு அனுமதியுண்டு என்ற அடிப்படையில் நிர்பந்தமாக கட்டுப்படும் பைஅத்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு, நீதித்துறையில் நீதிபதியாக இருக்கும் ஒருவரை நியமனம் செய்வதற்கு ஒருவர் பொறுப்பாக இருப்பது போலவே. இமாரத்தில் அமீராக பொறுப்பு வகிப்பவரை ஒருவர் நியமனம் செய்வதுபோலவே கிலா*பத் என்பது ஒரு ஒப்பந்தமாக இருப்பதால் அந்த ஒப்பந்தத்தை சட்டரீதியானதுதான் என்று முடிவுசெய்ய எவரேனும் பொறுப்பாக இருக்கவேண்டும், ஆகவே கிலா*பத் ஆட்சிமுறையில் கலீ*பா பதவிக்கு வரும் நபரை எவரேனும் நியமனம் செய்யாமல் அவர் கலீ*பாவாக ஆகமுடியாது,.

இதன்முடிவாக. முஸ்லிம்கள் ஒருவரை கலீ*பா பதவிக்கு நியமனம் செய்யாமல் ஒருவரும் கலீ*பாவாக ஆகமுடியாது. மேலும் அவர் சட்டரீதியான ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ளாமல் கலீ*பாவின் அதிகாரத்தை அடைந்துகொள்ள முடியாது, இந்த ஒப்பந்தத்தை இரண்டு தரப்பினர்தான் நிறைவேற்றமுடியும், முதல்தரப்பில் உள்ளவர் கலீ*பாவாக பொறுப்பு வகிப்பதற்கு முன்மொழியப்பட்ட நபராவார். இரண்டாவது தரப்பில் உள்ளவர்கள் அவரை கலீ*பாவாக ஏற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் முஸ்லிம்களாவார்கள், ஆகவே கிலா*பத் ஒப்பந்தத்தை நிறைவுசெய்வதற்கு முஸ்லிம்களின் பைஅத் அவசியமானது(வாஜிப்) , இதனடிப்படையில் ஒருவர் வன்முறையான விதத்தில் அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டு தன்னை முஸ்லிம்களின் கலீ*பா என்று அவராகவே அறிவிப்பு செய்துகொண்டாலும் அவர் கலீ*பாவாக ஆகமுடியாது ஏனெனில் கிலா*பத்திற்குரிய ஒப்பந்தத்தை முஸ்லிம்கள் ஒருமித்து அவருக்கு அளிக்கவில்லை, இந்நிலையில் முஸ்லிம்களிடமிருந்து நிர்பந்மமான முறையில் பைஅத் பெற்றால் அந்த பைஅத்தின் அடிப்படையில் அவரை கலீ*பாவாக கருதமுடியாது ஏனெனில் நிர்பந்தமாக பெற்ற பைஅத் சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, கிலா*பத் என்பது சுயசம்மதத்துடன் தேர்வுùய்யும் முறையாக இருப்பதாலும். அதை வன்முறையில் நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்பதாலும். சுயவிருப்பத்தின் பேரில் தேர்வுசெய்து பைஅத் கொடுத்தால் மட்டுமே நியமனம் செய்யமுடியும் என்ற காரணத்தாலும் இத்தகைய முறையில் பெறும் பைஅத்தைக் கொண்டு கலீ*பாவை ஒருமித்து நியமனம் செய்யமுடியாது, எனினும் நிர்பந்தமான முறையில் அதிகாரத்தை கைப்பற்றிய ஒருவர் அதன்பின்னர் முஸ்லிம்களின் நம்பிக்கையை தனக்கு ஆதரவாக திருப்புவதன் மூலம் அவர்கள் பைஅத் கொடுப்பதற்கு சுயவிருப்பத்தின் பேரில் சம்மதம் தெரிவித்தால். அஹ்காம் ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்கு முஸ்லிம்கள் அவருக்கு பைஅத் கொடுக்கவேண்டும் என்ற அடிப்டையில் அவர்களிடமிருந்து முறையாக பைஅத் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஆரம்பத்தில் அவர் முறையற்ற விதத்தில் அதிகாரத்தை கைப்பற்றியிருந்தாலும் பைஅத் பெற்ற அந்த வினாடி முதலே அவர் கலீ*பா பொறுப்புக்கு வந்துவிடுவார், ஆகவே பைஅத் பெறுவதற்கு முயற்சிப்பவர் ஆட்சிஅதிகாரத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் கலீ*பாவாக வருபவருக்கு சுயவிருப்பத்தின் பேரில் தேர்வுசெய்து மக்கள் பைஅத் கொடுக்கவேண்டும் என்பது நிபந்தனையாகும்.

எத்தகைய மனிதர்களின் பைஅத்தைக் கொண்டு கலீ*பா நியமனம் செய்யப்படுகிறார் என்பதைப் பொறுத்தவரை: நேர்வழிகாட்டப்பட்ட கலீ*பாக்களின் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் ஸஹாபாக்கள் ஒருமித்து முடிவுசெய்த விஷயங்களையும் ஆய்வுசெய்வதன் மூலம் இதற்குரிய விதிமுறைகளை கொண்டுவரலாம், அபூபக்கர்(ரலி) காலத்தைப் பொறுத்தவரை மதினா நகரத்தில் வாழ்ந்த அஹ்லே அல்ஹல் வல் அக்த் (Ahle al-hal wal aqd) என்றழைக்கப்படும் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களிடம் மட்டும் பைஅத் பெறுவது போதுமானதாக இருந்தது. மக்காவில் வாழ்ந்த முஸ்லிம்களிடமோ அல்லது அரபிய தீபகற்பத்தின் மற்ற பகுதிகளில் வாழ்ந்த மற்ற முஸ்லிம்களிடமோ பைஅத் பெறத்தேவையில்லை என்ற நிலை இருந்துவந்தது, உண்மையில் இதுபற்றி அவர்களிடம் எந்தவிதமான அபிப்ராயமும் கேட்கப்படவில்லை, உமர்(ரலி) காலத்திலும் இதேமுறைதான் பின்பற்றப்பட்டது, உஸ்மான் (ரலி) பைஅத் பெற்றதைப் பொறுத்தவரை அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) ஆகியோர் காலத்தில் மதினாவின் செல்வாக்கு பெற்ற முஸ்லிகளிடத்தில் மட்டும் அபிப்ராயம் கேட்டதுபோல் அல்லாமல் உஸ்மானை(ரலி) தேர்வு செய்தபோது அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப் (ரலி) மதினாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களிடத்திலும் அபிப்ராயம் கேட்டார், அலீ (ரலி) கலீ*பாவாக தேர்வுசெய்யப்பட்டபோது மதினாவிலும் கூ*பாவிலும் வாழ்ந்த பெரும்பான்மை முஸ்லிம்களிடத்தில் பைஅத் பெறப்பட்டது, கலீ*பா பதவிக்கு அவர் ஏகமானதாக தேர்வுசெயய்யப்பட்டார். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் அவருடன் போர்செய்தவர்களும் அவர் பெற்ற பைஅத் சட்டரீதியானது என்று கருதினார்கள், ஏனெனில் அவர்கள் வேறொருவருக்கும் பைஅத் கொடுக்கவுமில்லை அவர் பெற்ற பைஅத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கவுமில்லை மாறாக. உஸ்மானின்(ரலி) இரத்தத்திற்கு பழிதீர்க்கவேண்டும் என்றே கோரினார்கள், அலீ(ரலி)க்கு எதிராக கலகம் செய்தவர்களைப் பொறுத்தவரை பழிதீர்க்கவேண்டிய ஒரு விஷயத்திற்காக கலீ*பாவின் மீது குற்றம் சுமத்தினார்கள், அவர்களுக்கு அதுபற்றி விளக்கிக்கூறவேண்டிய நிலையிலும் அவர்களுடன் போர்செய்யவேண்டிய நிலையிலும் கலீ*பா இருந்துவந்தார், ஆனால் கலகம் செய்த கூட்டத்தினர் வேறொரு கிலா*பத்தையும் நிறுவ முயற்சிக்கவில்லை.

கிலா*பத்தின் மற்ற மாகாணங்களை விட்டுவிட்டு தலைநகரான மதினாவில் வாழ்ந்த முஸ்லிம்களிடம் மட்டும் பைஅத் பெற்ற சம்பவங்கள் ஸஹாபாக்கள் அனைவர் முன்னிலையிலும் நிகழந்தது, மதினாவிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்களிடம் மட்டும் பைஅத் பெற்ற இந்தமுறையில் அவர்களில் ஒருவர்கூட கருத்துவேறுபாடு கொண்டதாகவோ அல்லது மறுப்பு தெரிவித்ததாகவோ அல்லது ஆட்சேபனை எழுப்பியதாகவோ எந்தவொரு அறிவிப்புகளும் இல்லை, ஆகவே ஆட்சியமைப்பு விவகாரங்களில்(Ruling Affairs) செல்வாக்கு பெற்றவர்களாகவும் உம்மத்திலுள்ள முஸ்லிம்களின் அபிப்ராயத்தை முகமை செய்யக்கூடிய(Representation) அந்தஸ்த்தில் உள்ளவர்களாகவும் விளங்கும் முஸ்லிம்கள் இணைந்து கலீ*பாவை நிலைநிறுத்தலாம் என்பது இஜ்மாஅஸ்ஸஹாபாவாக இருக்கிறது, இதுஏனெனில் அக்காலகட்டத்தில் செல்வாக்குபெற்ற முஸ்லிம்களும் மதினாவின் பெரும்பான்மை முஸ்லிம்களும் உம்மத்திலுள்ள மக்களின் அபிப்ராயங்களை முகமை செய்யக்கூடியவர்களாக இருந்துவந்தார்கள், அவர்கள் இஸ்லாமிய அரசின் அனைத்து பிரதேசங்களின் சார்பாக ஆட்சியமைப்பு விவகாரங்களில் உம்மத்தின் அபிப்ராயத்தை எடுததுக்கூறக்கூடிய அந்தஸ்த்தில் இருந்துவந்தார்கள்.

இதனடிப்படையில் நேர்வழிகாட்டப்பட்ட கலீ*பாக்கள் காலத்தில் உள்ளதுபோல் ஒருவருக்குப்பின் மற்றொருவர் கலீ*பாவாக தேர்வுசெய்யப்படும்போது முஸ்லிம் உம்மத்தின் பிரதிநிதிகளாக அந்தஸ்த்து பெற்றிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் பைஅத் செய்துவிட்டால் பிறகு கலீ*பாவை நியமனம் செய்துவிடலாம், ஆகவே இத்தகையவர்களின் பைஅத் கிலா*பத்திற்குரிய ஒப்பந்த பைஅத்தாக இருக்கிறது. மற்றவர்களின் பைஅத்தைப் பொறுத்தவரை அது கீழ்படியும் பைஅத்தாகவே இருக்கும். அதாவது அது கலீ*பாவிற்கு கட்டுப்படும் பைஅத்தாக இருக்குமே தவிர கிலா*பத்தை நிலைநிறுத்தும் ஒப்பந்த பைஅத்தாக இருக்காது.

ஒரு கலீ*பா இறந்த பின்னரோ அல்லது பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னரோ அவர் பொறுப்புக்கு மற்றொருவரை நியமனம் செய்வது தொடர்பாக உள்ள நிலையாக இது இருக்கிறது, ஆனால் ஹிஜ்ரி 1343 (1924 கி,பி,) ல் இஸ்த்தான்புல் கிலா*பா அகற்றப்பட்ட பின்னர் இன்றைய நாள்வரை உள்ள நிலைபோல் கலீ*பாவே இல்லை என்ற நிலை ஏற்படும்போது இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் செய்தியை த*வா மூலம் உலகம் முழுவதற்கும் எடுத்துச்செல்வதற்கும் முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கும் ஒரு கலீ*பாவை நியமனம் செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள கட்டாய கடமையாக இருக்கிறது, ஒரு கலீ*பாவை நியமனம் செய்வதன்மூலம் கிலா*பத்தை நிர்மாணிப்பதற்கு இஸ்லாமிய உலகத்திலுள்ள ஒவ்வொரு பிரதேசங்களும் தகுதி உடையவையாகவே இருக்கின்றன, அவ்வாறு ஒரு கலீ*பா நிலைநிறுத்தப்படும்போது அந்த பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் ஒப்பந்த பைஅத்தை அவர்மீது நிறைவேற்றிய பின்னர் மற்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்கள் அவருக்கு கீழ்படியும் பைஅத் அளிப்பது அவர்கள் மீதுள்ள கட்டாய கடமையாகும், கிலா*பத் நிறுவப்பட்ட பிரதேசம் எகிப்து. துருக்கி. இந்தோனீசியா போன்ற பெரிய பிரதேசங்களாக இருந்தாலும் அல்லது அல்பேனியா. காமரூன். லெபனான் போன்ற சிறிய பிரதேசங்களாக இருந்தாலும் கீழ்கண்ட நான்கு நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுதான் அளவுகோலாகும்.

1, அந்தப்பிரதேசம் சுயநிர்ணய அதிகாரத்தை பெற்றதாகவும் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதாகவும் இருக்கவேண்டும் அதாவது அது அந்நிய அரசுகளின் ஆதிக்கத்தில் இல்லாத முஸ்லிம் நாடாக இருக்கவேண்டும், கா*பிர்களின் தலையீடோ அல்லது அவர்களின் ஆதிக்கமோ அதில் கொஞ்சமும் இருக்கக்கூடாது.
2, இஸ்லாமிய அரசு என்ற அந்தஸ்த்தில் அதன் பாதுகாப்பு அதிகாரம் மற்றும் பாதுகாவல் பொறுப்பு ஆகியவை முஸ்லிம்களின் கையில் மட்டும் இருக்கவேண்டும், அதில் கா*பிர்களின் தலையீடோ அல்லது பங்களிப்போ அல்லது ஆதிக்கமோ அறவே இருக்கக்கூடாது.

3, இஸ்லாத்தை முழுமையாகவும் அடிப்படையாகவும் நிறைவாகவும் நடைமுறைப்படுத்தும் செயல்பாட்டை அந்த அரசு உடனே துவக்கிவிடவேண்டும். மேலும் இஸ்லாத்தின் த*வாவை உலகம் முழுவதற்கும் எடுத்துச்செல்லும் பணியையும் உடனே துவக்கிவிடவேண்டும்,
4, தேர்ந்தெடுக்கப்பட்ட கலீ*பா உபரியான நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டாலும் கிலா*பத் ஒப்பந்தத்திற்குரிய அடிப்படை நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டும் ஏனெனில் கிலா*பா ஒப்பந்தத்திற்குரிய நிபந்தனைகளை நிறைவேற்றுவது கட்டாயமாகும்.

ஆகவே இந்த நான்கு நிபந்தனைகளையும் அந்த அரசு நிறைவேற்றிவிடும் பட்சத்தில் அந்த பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களிடம் பைஅத் பெற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே கிலா*பத்தை நிலைநாட்டிவிடலாம், ஒட்டுமொத்த இஸ்லாமிய உம்மத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செல்வாக்குபெற்ற முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் பைஅத் செய்யாதபோதும் ஒரு பிரதேசத்தில் கலீ*பாவாக தேர்வுசெய்யப்பட்டு அங்குள்ள முஸ்லிம்களிடம் பைஅத் பெற்ற நபர்மீது கிலா*பத்தின் அதிகாரம் நிலைநிறுத்தப்படும் ஏனெனில் கிலா*பத்தை நிலைநாட்டுவது *பர்லுல் கி*பாயாவாக (கூட்டுக்கடமையாக) இருப்பதால் எந்த கூட்டத்தினர் இந்த கடமையை முறையாக நிறைவேற்றினாலும் அது விதிக்கப்பட்ட *பர்லை முழுமையாக நிறைவேற்றியதற்கு சமமாகும், ஏனெனில் கிலா*பத் ஏற்கனவே நிலைபெற்றிருக்கும் நிலையில் முந்தைய கலீ*பா மரணமடைந்த பின்னரோ அல்லது பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னரோ புதிய கலீ*பாவை நியமனம் செய்யும்போது மட்டும்தான் உம்மத்திலுள்ள செல்வாக்குமிக்க முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் பைஅத் செய்யவேண்டும் என்பது நிபந்தனையாகும், ஆனால் கிலா*பத் ஏற்கனவே இல்லாத நிலையில் அதை நிலைநாட்டுவது கட்டாய கடûமை என்றும் அதை மூன்று நாட்களுக்குள் நிலைநாட்ட வேண்டும் என்றும் ஷரியா நிபந்தனை விதித்திருந்தும் முஸ்லிம்கள் அதை நிறைவேற்றாமல் விட்டுவிட்ட நிலையில் கலீ*பா ஒப்பந்த்திற்கு உரிய தகுதிகளை பெற்றிருக்கும் நபருக்கு அங்குள்ள முஸ்லிம்கள் பைஅத் செய்து அவர் மீது கிலா*பத் அதிகாரத்தை நிலைநிறுத்துவது ஷரியாவிற்கு உடண்பாடான முறையில் நிறைவேற்றப்பட்ட செயல்பாடுதான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை, முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து ஷரியா விதித்துள்ள இந்த கடமையை நிறைவேற்றாமல் விட்டுவிட்ட காரணத்தால் அவர்கள் விரும்பும் நபரை கலீ*பாவாக தேர்வு செய்யும் உரிமையை அவர்கள் இழந்து விடுகிறாôகள்.

ஆகவே சிலமனிதர்கள் ஒன்றுகூடி இந்த கடமையை நிறைவேற்றும் பட்சத்தில் கிலா*பத்தை நிலைநாட்டுவதற்கு அது போதுமானதாக இருக்கும், மேலும் ஒருமுறை அந்த பிரதேசத்தில் கிலா*பத் நிறுவப்பட்டு பைஅத் மூலம் ஒரு கலீ*பாவிற்கு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் அதன்மீது அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து அந்த கலீ*பாவிற்கு கட்டுப்படும் பைஅத் செய்வது கடமையாகும். இல்லையெனில் அல்லாஹ்(சுபு) வுக்கு முன்னிலையில் அவர்கள் பாவம் செய்தவர்கள் ஆவார்கள், தேர்வுசெய்யப்பட்ட கலீ*பா அவர்களை பைஅத் செய்ய அழைக்கவேண்டும் அதற்கு அவர்கள் மறுக்கும் பட்சத்தில் அவர்கள் கலகம் செய்தவர்களாக கருதப்பட்டு கலீ*பாவின் அதிகாரத்திற்கு அவர்கள் கட்டுப்படும்வரை அவர்களுடன் போர்செய்யவேண்டும், ஒரு பிரதேசத்தில் சட்டரீதியான கிலா*பத் ஒப்பந்தத்தின் மூலம் ஒரு கலீ*பா தேர்வுசெய்யப்பட்ட பின்னர் அந்த பிரதேசத்திலோ அல்லது வேறொரு பிரதேசத்திலோ மற்றொரு கலீ*பா தேர்வு செய்யப்பட்டால் முதலில் தேர்வுசெய்யப்பட்டவர்தான் சட்டரீதியான கலீ*பா என்பதால் இரண்டாவதாக தேர்வுசெய்யப்பட்டவர் சட்டரீதியான கலீ*பாவின் அதிகாரத்திற்கு கீழ்படியும்வரை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அவருடன் போர்செய்யவேண்டும்.

அப்துல்லாஹ் இப்ன் அம்ர் அல்ஆஸ் அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

ومن بايع إماماً فأعطاه صفقة يده وثمرة قلبه فليطعه إن استطاع، فإن جاء آخر ينازعه فاضربوا عنق الآخر
'எவரேனும் ஒருவர் தமது கரத்தால் கைலாகு(முஸ*பா) கொடுப்பதன் மூலமும் தமது இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஒரு இமாமுக்கு பைஅத் செய்தால் அவர் இயன்றவரை அவருக்கு கட்டுப்பட்டு நடக்கட்டும், இந்நிலையில் மற்றாருவர் வந்து (அதிகாரத்தில்) அவரிடம் சர்ச்சை செய்தால் அவரது கழுத்தை வெட்டுங்கள்"

மேலும் கலீ*பா என்பவர் இஸ்லாத்தின் அடிப்படையில் முஸ்லிம்களை ஒன்றிணைக்கக்கூடியவராக இருக்கிறார். ஆகவே கலீ*பா ஒருவர் நிலைநிறுத்தப்படும்போது முஸ்லிம் உம்மத்தும் நிலைநிறுத்தப்படுகிறது, இந்நிலையில் முஸ்லிம் ஜமாஅத்துடன் இணைந்திருப்பது ஒரு முஸ்லிம் மீதுள்ள கட்டாய கடமையாகவும் ஜமாஅத்தை விட்டு பிரிந்து செல்லுதல் ஹராமாகவும் இருக்கிறது.

இப்ன் அப்பாஸ்(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸீல் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

من رأى من أميره شيئاً فليصبر عليه، فإنه من فارق الجماعة شبراً فمات إلاّ مات ميتة جاهلية
'எவரேனும் தமது அமீரிடம் (தான் விரும்பாதவற்றை) காணுவாரேயானால் அப்போது அவர் பொறுமையாக இருக்கட்டும் ஏனெனில் அறிந்துகொள்ளுங்கள். எவரேனும் ஒருவர் ஒருமுழம் அளவு ஜமாஅத்திடமிருந்து பிரிந்து சென்றநிலையில் மரணம் அடைவாரேயானால் நிச்சயமாக அவர் ஜாஹிலியாவில் மரணம் அடைந்தவர் ஆவார்."

இப்ன் அப்பாஸ்(ரலி) அறிவித்துள்ள மற்றொரு ஹதீஸீல் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

من كره من أميره شيئاً فليصبر عليه، فإنه ليس أحد من الناس خرج من السلطان شبراً فمات عليه إلا مات ميتة جاهلية
'எவரேனும் தமது அமீரிடம் அவர் விரும்பாதவற்றை காணுவாரேயானால் அப்போது அவர் பொறுமையாக இருக்கட்டும் ஏனெனில் அறிந்துகொள்ளுங்கள். எவரேனும் ஒருவர் இஸ்லாத்தின் அதிகாரத்திலிருந்து (சுல்தான்) ஒருமுழம் அளவு விலகிய நிலையில் மரணம் அடைவாரேயானால் நிச்சயமாக அவர் ஜாஹிலியா மரணத்தில் மரணம் அடைந்;தவர் ஆவார்."

இந்த இரண்டு ஹதீஸ்களும் முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் இஸ்லாத்தின் அதிகார அமைப்பான கிலா*பத்தையும் பற்றிப்பிடித்துக் கொள்ளவேண்டும் என்ற கட்டளையை சுட்டிக்காட்டுகின்றன.

பைஅத் கொடுக்கும் விஷயத்தில் முஸ்லிமல்லாதவர்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என்பதோடு அது அவர்கள் மீதுள்ள கடமையாகவுமில்லை, ஏனெனில் அது இஸ்லாத்தின் மீது செய்யப்படும் பைஅத்தாகவும் அல்லாஹ்(சுபு)வின் வேதத்தின் மீதும் அவனுடைய தூதரின்(ஸல்) சுன்னாவின் மீதும் செய்யப்படும் பைஅத்தாகவும் இருக்கிறது, இதற்கு இஸ்லாத்தின் மீதும் அல்லாஹ்(சுபு)வின் வேதத்தின் மீதும் அவனுடைய தூதரின்(ஸல்) சுன்னா மீதும் ஈமான் கொண்டிருக்கவேண்டும் என்பது கட்டாயமாகும், ஆகவே முஸ்லிமல்லாத ஒருவர் ஆட்சியமைப்பில் பங்கு கொள்வதற்கோ அல்லது ஆட்சியாளர்களை தேர்வுசெய்வதற்கோ அனுமதி கிடையாது. ஏனெனில் முஸ்லிம்கள் மீது அவர்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது என்பதன் அடிப்படையில் பைஅத் கொடுக்கும் விஷயத்தில் அவர்களுக்கு எந்தவிதமான பங்களிப்பும் இல்லை.

No comments:

Post a Comment