Wednesday, September 23, 2009

கலீபாவை நியமனம் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடு

கலீபாவை நிலைநிறுத்துவதற்கு முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடு இரண்டு இரவுகளாகும், ஆகவே தனது கழுத்தில் பைஅத் இல்லாதநிலையில் இரண்டு இரவுகளுக்கு மேலாக இருப்பதற்கு எந்த முஸ்லிமிற்கும் அனுமதியில்லை, முந்தைய கலீபா இறந்த பின்னரோ அல்லது பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னரோ அந்த நொடியிலிருந்து புதிய கலீ*பா ஒருவரை நியமனம் செய்வது *பர்லு என்பதால்தான் இரண்டு இரவுகள் அதிகப்பட்சமான காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது, ஆகவே கலீபாவை நியமனம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது இரண்டு இரவுகள் தாமதம் ஏற்படுவதற்கு அனுமதி இருக்கிறது, இரண்டு இரவுகளுக்குப் பின்னரும் முஸ்லிம்கள் கலீ*பாவை நிலைநிறுத்தவில்லை என்றால் பிறகு நிலைமை ஆய்வுசெய்யப்படும், முஸ்லிம்கள் கலீ*பாவை நியமனம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தும் சூழலின் சாதகமின்மை காரணமாக அவர்களால் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை என்றால் பிறகு அவர்கள் மீதுள்ள பாவம் நீங்கிவிடும் ஏனெனில் அவர்கள் கடமையை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருந்தும் சூழலின் நிர்பந்தம் காரணமாக தாமதத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

"'தவறுதலின் காரணமாகவோ அல்லது ஞாபக மறதியின் காரணமாகவோ அல்லது நிர்பந்தத்தின் காரணமாகவோ என் உம்மத்தின் மீது ஏற்படும் பாவம் நீக்கப்பட்டு விடுகிறது"

ஆனால் கடமையை நிறைவேற்றும் பணியில் அவர்கள் ஈடுபடவில்லை என்றால் பிறகு கலீ*பாவின் நியமனம் நிறைவேற்றப்படும் வரை அவர்கள் அனைவரும் பாவத்தில் இருந்துகொண்டிருப்பார்கள், கலீ*பாவை நியமனம் செய்வதை நிறைவேற்றும் தருணத்தில் அவர்களை விட்டு *பர்லு நீங்கியபோதும் அதை (குறிப்பிட்ட காலத்திற்கு) நிறைவேற்றாமல் விட்டுவிட்ட பாவம் அவர்கள் மீது இருந்துகொண்டிருக்கும், ஒரு *பர்லை நிறைவேற்றாமல் விட்டுவிடுவதன் மூலம் ஒரு முஸ்லிம் அல்லாஹ்(சுபு) வின் கட்டளைக்கு கீழ்படியாமல் இருப்பதால் எவ்வாறு கேள்விகணக்கிற்கு உட்பட்டாகவேண்டுமோ அவ்வாறே கலீ*பாவை நியமனம் செய்யும் *பர்லை நிறைவேற்றாமல் விட்டுவிட்ட முஸ்லிம்கள் அனைவரும் அவர்களின் கீழ்படியாத குற்றத்திற்காக அல்லாஹ்(சுபு) வின் கேள்வி கணக்கிற்கு நிச்சயமாக உட்பட்டே ஆகவேண்டும்,

கலீ*பாவை நியமனம் செய்யும் கடமையை நிறைவேற்றுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடு இரண்டு இரவுகள் என்பதைப் பொறுத்தவரை அது இஜ்மாஅஸ்ஸஹாபாவாக இருக்கிறது, அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) மரண செய்தியை பெற்றுக்கொண்டவுடன் ஸஹாபாக்கள் அனைவரும் பனூஸôயிதாவின் புறநகர் பகுதியில் சந்தித்து அல்லாஹ்வின் தூதரின்(ஸல்) இடத்திற்கு ஒருவரை நியமனம் செய்வதற்காக விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள், அவர்கள் தொடர்ந்து இந்த விவகாரத்தை புறநகர் பகுதியிலிருந்தவாறு விவாதித்து முடித்த பின்னர் இரண்டாவது நாளில் பைஅத் கொடுப்பதற்காக மக்களை மஸ்ஜிதில் கூடச்செய்தார்கள், இதற்குள் இரண்டு இரவுப்பொழுதும் மூன்று பகல்பொழுதும் கழிந்துவிட்டன, பின்னர் மக்கள் அபூபக்கருக்கு (ரலி) பைஅத் செய்து அவரை கலீ*பாவாக நியமனம் செய்தார்கள்.

இரண்டாவது கலீ*பா உமர்(ரலி) கத்தியால் குத்தப்பட்ட பின்னர் தனக்கு மரணம் நிகழ்வது நிச்சயம் என்பதை உணர்ந்தபோது புதிய கலீ*பாவை தேர்வு செய்யும் பொறுப்பை ஆலோசனைக்குழுவிடம் (people of shurah) ஒப்படைத்து மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்தார், கலீ*பா நியமனத்தில் மூன்று நாட்களுக்குள் கருத்து உடண்பாடு ஏற்படவில்லை என்றால் மூன்றாவது நாள் முடிவில் கருத்து வேற்றுமைக்கு காரணமானவர்கள் கொல்லப்படவேண்டும் என்று பரிந்துரை செய்தார், இதற்காக உமர்(ரலி) ஆயுதம் தரித்த ஐம்பது முஸ்லிம் வீரர்களை நியமித்திருந்தார், இந்த ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றிருந்த ஸஹாபாக்களில் உஸ்மான் இப்ன் அ*ப்*பான்(ரலி) அலீ இப்ன் அபூதாலிப் (ரலி) அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப் (ரலி) ஸ*து இப்ன் அபீவக்காஸ் (ரலி) ஜுபைர் (ரலி) மற்றும் தல்ஹா (ரலி) ஆகியோர் சுவனத்திற்கு நன்மராயம் கூறப்பட்ட பத்து ஸஹாபாக்களில் உள்ளவர்கள் ஆவார்கள், மூன்று நாட்களுக்குள் உடண்பாடு ஏற்படவில்லை என்றால் அவர்கள் அனைவரும் கொல்லப்படவேயண்டும் என்ற உமரின்(ரலி) கட்டளை அனைத்து ஸஹாபாக்கள் முன்னிலையில்தான் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு இருந்தபோதும் எவரும் இதற்கு மறுப்பு தெரிவித்ததாகவோ அல்லது ஆட்சேபனை தெரிவித்ததாகவோ எந்த அறிவிப்பும் இல்லை, எனவே இரண்டு இரவுகள் மற்றும் மூன்று பகல்பொழுது ஆகிய காலக்கெடுவுக்கு மேலாக முஸ்லிம்கள் கலீ*பா இன்றி இருப்பதற்கு அனுமதியில்லை என்பது இஜ்மாஅஸ்ஸஹாபாவாக இருக்கிறது, மேலும் குர்ஆன் மற்றும் சுன்னாவைப் போன்று இஜ்மாஅஸ்ஸஹாபாவும் ஷரியாவின் சட்டரீதியான ஆதாரமாக (legitmate shari’a daleel) கருதப்படுகிறது.

3 comments:

  1. அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

    "'தவறுதலின் காரணமாகவோ அல்லது ஞாபக மறதியின் காரணமாகவோ அல்லது நிர்பந்தத்தின் காரணமாகவோ என் உம்மத்தின் மீது ஏற்படும் பாவம் நீக்கப்பட்டு விடுகிறது"

    intha hadees yentha hadees book la varudhu....??

    ReplyDelete
  2. இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் இப்னு மாஜா, பைஹக்கி மற்றும் சில கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. jazakallahair bro.......bro im changing site bro....

    ReplyDelete