Wednesday, December 30, 2009

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 01 (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

மக்களின் சிந்திக்கும் தரம் வீழ்ச்சியுறுகின்றபோது, மக்களுக்கு மத்தியில், அவர்கள் ஒரே இடத்தில் வாழ்வதன் காரணமாக, தேசப்பற்று என்ற பிணைப்பு (Raabitah Al Wataniyyah) உருவாகின்றது. மனிதர்களிடம் காணப்படும் உயிர்வாழும் உள்உணர்வு (Survival Instincts) தாம் வாழும் நாட்டிற்கு ஆதரவாகவும், அந்நிய நாட்டிற்கு எதிராகவும், தம்மை தற்பாதுகாத்துக் கொள்வதற்காக போராடும் நிலையை நோக்கி அவர்களை தள்ளுகிறது. இதன் மூலம் தேசப்பற்று (Patriotic Bond) என்ற பிணைப்பு ஏற்படுகிறது. இத்தகைய பிணைப்பு மிகவும் பலவீனமானதும், தாழ்ந்த தரத்திலுள்ளதுமாகும். மனிதர்களைப் போலவே இப்பிணைப்பு விலங்குகளிடமும், பறவைகளிடமும் காணப்படுவதுடன், இது உணர்ச்சி பூர்வமாகவும் வெளிப்படுகிறது. ஆக்கிரமிப்பு மூலமாகவோ அல்லது தாக்குதல்கள் மூலமாகவோ அந்நிய நாட்டவர்களின் அச்சுறுத்தல்களுக்கு தாய்நாடு ஆளாகாத நேரங்களில், தேசப்பற்று என்ற இந்த பிணைப்பு மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. அந்நியர்கள் தாய்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவுடன் அல்லது விரட்டி அடிக்கப்பட்டவுடன் இதன் தாக்கம் காணாமல் போய் விடுகிறது. ஆகவே, இந்தப் பிணைப்பு குறைந்த தரத்திலுள்ள பிணைப்பாகும்.
மேலும், குறுகிய சிந்தனை போக்கு மக்களிடம் இருக்கும் போது தேசியவாதத்தின் மூலமான ஏற்படுகின்ற பிணைப்பு (Nationalistic Bond - Raabitah Al Qawmiyyah) உருவாகின்றது. பரந்த நிலையில் உணரப்பட்டாலும்; கூட அடிப்படையில் இது ஒரு குடும்பப் பிணைப்பாகும். ஏனெனில், தனி மனிதர்களிடம் உயிர்வாழும் உள் உணர்வு ஆழமாக காணப்படும்போது மேலாதிக்கத்தின் மீதான மோகம் அவனுள் ஏற்படுகின்றது. இந்த மேலாதிக்க மோகம் என்பது அறிவு மட்டம் குறைந்த தனிமனிதர்களிடம் காணப்படுகின்றது. மேலும் இந்தத் தனி மனிதனின் விழிப்புணர்வு விரிவடையும்போது, அவனுடைய மேலாதிக்க மோகமும் விரிவடைகிறது. இவ்வாறு அவன் தனது குடும்பத்தின் மீதான ஆதிக்கத்தை கைகொள்கின்றான். அவனது விழிப்புணர்வு மேலும் விரிவடையும்போது, தன் தாய்நாட்டு மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு வழிகோலுகின்றான். இதை அவன் நிறைவேற்றிவிட்டால், பிறகு மற்ற மக்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கு விழைகின்றான். முதலில் தனிமனிதனின் மேலாதிக்க மோகம் குடும்ப உறுப்பினர்களிடேயே சச்சரவு தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. இவ்வாறாக, குடும்பத்திற்குள் இடம்பெறும் ஆதிக்கப்போட்டி தீர்க்கப்பட்டுவிட்டால், பிறகு குடும்பங்களுக்கிடையில் சச்சரவுகள் உருவாகி ஒரு குடும்பத்திடமோ அல்லது பல குடும்பங்களின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவிடமோ ஆதிக்க சக்தி வந்தடைகிறது. இறுதியாக, இறைமைக்கும், உயர்தர வாழ்க்கைத்தரத்திற்குமாக இந்த மக்கள் ஏனைய மக்களுடன் முரண்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். ஆகவே இத்தகைய பிணைப்பால் பிணைக்கப்பட்டவர்களிடம் இனவாதம் (Tribalism - Asabiyyah) நிலைத்திருக்கிறது. இதன் விளைவாக, சலனங்களும் ஒரு இனத்துக்கு எதிராக மற்றொரு இனத்துக்கு உதவும் போக்கும் ஏற்படுகின்றது. முடிவாக, இத்தகைய பிணைப்பு (Bond) மனிதநேயத்திற்கு எதிரானதும், அந்நிய சச்சரவுகள் இல்லாத சந்தர்ப்பங்களில் உள்ளுர் சச்சரவுகளுக்கு (Local Conflict) வழிகோலக்கூடியதுமாகும்.

ஆகவே, கீழ்கண்ட மூன்று காரணங்களுக்காக தேசப்பற்று பிணைப்பு (Patriotic Bond) ஏற்றுக் கொள்ள முடியாதது. முதலாவதாக, இது மிக தாழ்ந்த நிலையிலுள்ள பிற்போக்கான பிணைப்பாகும். மறுமலர்ச்சியை நோக்கி மனிதனை இட்டுச் செல்வதற்கும், மனிதர்களுக்கிடையில் நல் உறவை ஏற்படுத்துவதற்கும் இது சிறந்தது அல்ல. இரண்டாவதாக, மனிதனின் உயிர்வாழும் உள்உணர்வினால் (Survival Instinct) அவன் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக, அவனது உணர்ச்சியால் உந்தப்பட்டு உருவாகின்ற பிணைப்பாகும். ஆகவே உணர்வின் அடிப்படையிலான இந்த பிணைப்பானது மாற்றத்திற்கும், மாறுபாடுகளுக்கும் உட்படக்கூடியதால், மனிதர்களிடத்தில் நிரந்தரமான பிணைப்பை ஏற்படுத்துவதற்கு இது பொருத்தமானது அல்ல. மூன்றாவதாக, பாதுகாப்பு அச்சுறுத்தல் தோன்றும் தருணங்களில் மட்டும் தோன்றக்கூடிய இந்த பிணைப்பு தற்காலிகமானதாகும். உறுதியான பாதுகாப்பு நிலை ஏற்பட்டுவிட்டால் இது மறைந்து விடக்கூடியது. ஆகவே, மனித சமூகத்திற்கு மத்தியில் நிலைபெறுவதற்கு தேசப்பற்றுப் பிணைப்பு (Patriotic Bond) பொருத்தமானதல்ல.
இதைப் போலவே தேசியவாத பிணைப்பும் (Nationalistic Bond) கீழ்கண்ட மூன்று காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. முதலாவதாக, இது இனவாத அடிப்படையிலுள்ள பிணைப்பாகும். எனவே மறுமலர்ச்சியை நோக்கிய மனித சமூகத்தை பிணைப்பதற்கு பொருத்தமாற்ற பிணைப்பாகும். இரண்டாவதாக, இப்பிணைப்பு மேலாதிக்க மோகத்தின் விளைவாக எமது உயிர்வாழும் உள் உணர்விலிருந்து தோன்றக்கூடிய ஒருவகை பிணைப்பாக இருக்கின்றது. மூன்றாவதாக, இது மனித நேயத்திற்கு பொருத்தமான பிணைப்பொன்றல்ல. ஏனெனில் மேலாதிக்கத்தை அடையும் நோக்கில் மனிதர்களுக்குள் சச்சரவுகளை இப்பிணைப்பு ஏற்படுத்துகிறது. ஆகவே, மனித சமூகத்திற்கு மத்தியில் நிலைபெறுவதற்கு இப்பிணைப்பு பொருத்தமானதல்ல.
மக்களின் மத்தியில் ஏற்புடையதற்ற இன்னும் சில பிணைப்புக்களும் காணப்படுகின்றன. இதற்கு சுயநலனை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற பிணைப்பு (Bond of Self Intrest - An - raabitah al - Maslahiyah) முறைமைகளை தோற்றுவிக்க முடியாத ஆன்;மீக பிணைப்பு (Spiritual Bond - Ar - raabitah al - ruhiyah) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சுயநல அடிப்படையில் எழுகின்ற பிணைப்பு தற்காலிகமானது. இது மக்களை ஒருங்கிணைப்பதற்கு பொருத்தமானதல்ல. ஏனெனில் அதிகளவில் உலகப் பயன்களை அடைய வேண்டுமென்ற முயற்சியில் இப்பிணைப்பு சமரசங்களுக்கு உட்படக்கூடியது. ஆகவே, சுயநலங்களுக்கு மனிதர்கள் முக்கியத்தும் கொடுக்க ஆரம்பிக்கும் போது இது தானாகவே மறைந்து விடுகிறது. தமது சுயநலங்களை செயல்படுத்த முயலும் வழிகளில் வேறுபாடு ஏற்படும்போதும், மனிதர்களுக்கிடையில் பிரிவு ஏற்பட்டு இப்பிணைப்பு இல்லாமல் போய்விடுகிறது. மேலும் அவரவர் சுயநலன்கள் நிறைவடையும்போது இந்த பிணைப்பு மறைந்து போய் விடுகிறது. ஆகவே, பின்பற்றுவதற்கு தகுதியில்லாத மிக ஆபத்தான பிணைப்பாக இது இருக்கிறது.
முறைமைகள் எதனையும் உள்ளடக்காத ஆன்மீக பிணைப்பு சன்மார்க்க உள்உணர்வு அடிப்படையில் (Religious Instincts) தோன்றுகிறது. ஆனால், எதார்த்த வாழ்க்கையில் இதன் நிலைபெறுதல் இருக்காது. ஆகவே, ஆன்மீக பிணைப்பு அரைகுறையானதும் நடைமுறைக்கு ஒத்துவராததுமாகும். வாழ்வியல் விவகாரங்களில் மனிதர்களுக்கிடையில் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு இது பொருத்தம் இல்லாதது. கிருஸ்தவத்தை தழுவியுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் கிருஸ்தவ கோட்பாட்டைக்கொண்டு பிணைப்பை ஏற்படுத்த இயலாமல் போய் விட்டமை இதலாலேயேயாகும். ஏனெனில் கிருஸ்தவம் முறைமைகள் ஏதுமற்ற ஆன்மீக கோட்பாடாகும்.
இறுதியாக, மனிதர்களுக்கிடையில் பிணைப்பை ஏற்படுத்தி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பொருத்தமான பிணைப்புகளாக மேற்கூறப்பட்ட எந்த பிணைப்பும் விளங்கவில்லை எனலாம். எனவே மானிட இனத்தை வாழ்வியலில் ஒருங்கிணைக்கவல்ல சரியான ஒரேயொரு பிணைப்பு, முறைமைகளை தோற்றுவிக்கக்கூடிய, அறிவார்ந்த அடிப்படை கோட்பாடான அகீதா (Aqeedah) விலிருந்து எழுகின்ற சித்தாந்தப் பிணைப்பாகும் (Ideological Bond Ar-raabitah al-Mabdaiyah).
சித்தாந்தம் (Ideology - Mabdah) என்பது அறிவார்ந்த அடிப்படை கோட்பாடாகும் (Aqeedah) அதிலிருந்து முறைமைகள் (System) தோன்றுகின்றன. அகீதா என்பது மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான சிந்தனையாகும். அது வாழ்க்கைக்கு முன்பு இருந்தது என்ன என்பது பற்றியும், வாழ்க்கைக்கு பின்பு என்ன வரப்போகிறது என்பது பற்றியும் இந்த உலக வாழ்க்கையோடு மேற்கூறப்பட்ட இரண்டு விஷயங்களுக்கும் மத்தியில் இருக்கும் தொடர்பு பற்றியும் உருவான அடிப்படை சிந்தனையாகும். அதே வேளையில் இது முழுமையான ஒரு சிந்தனையாகவும் இருக்கிறது. இந்த அகீதாவிலிருந்து பிறக்கும் முறைமைகளை எடுத்துக்கொண்டால் அவை மனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும், அந்த தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளையும், இந்த அகீதாவை பாதுகாக்கும் வழிமுறைகளையும், மற்ற மக்களுக்கு அதை பிரச்சாரம் செய்யும் வழிமுறைகளையும் கொண்டதாக இருக்கின்றன. தீர்வுகளை அமுல்படுத்தும் வழிமுறையும், அகீதாவை பாதுகாத்தலும், அதனை பிரச்சாரம் செய்வதும், வழிமுறையை (Method - Tareeqah) பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், அகீதாவும் அதிலிருந்து கிடைக்கும் தீர்வும் சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது (Fikrah -Thoughts). இதன்படி, சித்தாந்தம் (Ideology) என்பது சிந்தனையையும் (Thoughts - Fikrah) வழிமுறையையும் (Method Tareeqah) உள்ளடக்கியதாக இருக்கிறது.
தொடரும்...

Sunday, December 20, 2009

ஆட்டு மந்தைகள் போல் நடத்தப்படும் எனது உறவுகள் - பாகிஸ்தானில் எல்லை மீறும் அகதிப்பிரச்சனை!

முஸ்லிம் சிறுபான்மை நாட்டுக்கான பிஹ்க்!

இது குப்ரில் குழைத்த இஸ்லாமிய பச்சடி!
இனி முஸ்லிம் சிறுபான்மை நாட்டில் இதையே அச்சடி!!
அசல் copy ஜிப்ரீலுக்கு!
ரகீப், அதீதிற்கு விஷேட வகுப்பு!!

இங்கு எட்டாக்கனிகளுக்கு கொட்டாவி வேண்டாம்!!
ஏட்டுச் சுரக்காய்கள் இடையில் சுவைக்கத் தருவோம்!!!
முடவன் நீ கொம்புத்தேன் ஏன்?
கெட்ட கழுதைக்கு குட்டிச் சுவர்தான்!!
நாம் தருவோம் நாட்டுக்கொரு விருந்து!!!
குர்ஆன், சுன்னா இதில் கோழிச்சாயம்!!!
நன்றாய் உண்டு நலமே வாழ்ந்து
சுவனம் செல்ல short cut இதுதான்.

இது சற்று அதிகம்தான்!

இருள் சூழ்ந்த பொழுதுதினில்
இரத்தக் கசிவுடன் என் கண்கள்!
ஆழப்பதிந்த தீமையின் ஆணிவேர்கள்
அதிகார விருட்சங்களாய், அரக்கத்தனமாய்
ஆட்சி செலுத்த அடங்கிப்போக முடியாது!!

ஜாஹிலிய சதுரங்கத்தில்
பலிக்காய்களா என் சமூகம்?
விஷத்தை அமுதமாக்கிய
தேசிய சகதியில் சிதைந்ததோ தனித்துவம்!!
உனக்கென்ன உன் எல்லைக்கு அப்பால்
ஒரு முஸ்லிமின்
உயிர்…
உடமை…
மானம்… ஒன்றும் பெரிதல்ல!!


இஸ்ரேலோடு சமரசமும்
அமெரிக்கப் பாதுகாப்பும் எந்த
அகீதா கற்றுக் கொடுத்தது?
அடிப்படைகளைத் துவம்சம் செய்துவிட்டு
அழங்காரச் சுன்னாக்களில்
அதிசயமாக இஸ்லாமிய எழுச்சி வருமாம்!
பச்சைக் குப்ரையே சுத்த இஸ்லாம் என்பது
சற்று அதிகம்தான்!!

Wednesday, November 25, 2009

புனிதமானது ஓர் முஸ்லிமின் இரத்தம்!


துரதிஷ்டவசமாக இன்றைய உலகில் முஸ்லிம்களே முஸ்லிம்களின் இரத்தத்தை மிகச்சாதாரணமாக ஓட்டுகின்ற சம்பவங்களை நாம் அதிகளவில் பார்த்து வருகின்றோம். அல்லது கேள்விப்படுகின்றோம். அண்மைக்காலங்களில் பாகிஸ்தான், சோமாலியா, யெமன், பலஸ்தீனம் போன்ற நாடுகளில் இந்நிலை விருத்தியடைந்து வருகின்றமையை நாம் கண்டோhம். அண்மையில் வெளிவந்த அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையில் சோமாலியாவில் இரு முரண்பட்ட முஸ்லிம் தரப்புக்கள் மோதிக்கொண்டதில் 12 முஸ்லிம்கள் இரு தரப்பிலும் கொல்லப்பட்டுள்ளனர். அவ்வறிக்கை இதற்கு கிஸ்மாயோ எனும் சோமாலிய துரைமுக நகரை கைப்பற்றிக்கொள்வதற்காக அஸ்ஸபாப் அணியினரும், கிஸ்புல் இஸ்லாம் அணியினரும் மோதிக்கொண்டதே காரணமாகும் எனத் தெரிவித்திருந்தது. மறுபக்கத்தில் சவூதி அரேபியா மற்றும் ஈரானின் பின்னணியில் யெமனில் முஸ்லிம்கள் தமக்கிடையே மோதிக்கொள்வதைப் பார்க்கிறோம். மேலும் பலஸ்தீனத்தில் அல்பதாஹ் இயக்கமும் ஹமாஸ}ம் மோதிக்கொண்டு இரத்தம் சிந்தியதையும் நாம் மறக்க முடியாது. அதேபோல பாகிஸ்தானில் பாகிஸ்தானின் முஸ்லிம் அரச படைகள் தமது நாட்டையே சேர்ந்த ஸ்வாத் பிராந்தியி முஸ்லிம்களை இராணுவ hPதியாகத்தாக்குவதையும்;, தலிபான்களும் பாகிஸ்தான் துருப்புக்களும் தமக்கிடையே இரத்தம் சிந்திக்கொல்வதும் அப்பிராந்தியத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திவருவதைப்பார்க்கிறோம். வளர்ந்து வரும் இந்த கொடிய செயலை அல்லாஹ்(சுபு) முற்றாக தடைசெய்திருந்தும்கூட அது உதாசீனம் செய்யப்படுகிறது. எமக்கிடையான பிணக்குகளை ஷாPஆவின் அடிப்பiயில் தீர்க்காமல் ஒருவருடன் ஒருவர் பொருதிக்கொண்டு இரத்தம் சிந்தி அவற்றை தீர்க்க முனையும் இந்த வழிமுறை இவ்வுலகில் மாத்திரமல்லாது மறுமையிலும் மிகவும் பாரது}ரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் மிக ஆழமாக உணர வேண்டும்.

முஸ்லிம்கள் முஸ்லிம்களைக் கொல்வது ஹராமாகும்!

முஸ்லிமை கொலை செய்வதன் விளைவுகள் குறித்து அல்லாஹ்(சுபு) கீழ்வரும் திருமறை வசனத்தில் எச்சரிக்கிறான்.

“ மேலும் எவர், விசுவாசியை வேண்டுமென்றே கொலை செய்தால், அவருக்குரிய கூலி நரகமாகும். அதில் அவர் நிரந்தரமாக(த்தங்கி)இருப்பவர். இன்னும் அல்லாஹ் அவர் மீது கோபங்கொண்டு, அவரைச் சபித்தும் விடுவான். மகத்தான வேதனையையும் அவன் அவருக்குத் தயாராக்கி வைத்திருக்கின்றான். ( 4:93)

மேலும் கீழ்வரும் ஹதீஸில் முஸ்லிம்களை கொலை செய்வதும், துன்புறுத்துவதும் ஹராமாகும் என்பதை முஹம்மத் (ஸல்) தெட்டத்தெளிவாக உரைத்துள்ளார்கள்.

“ ஓர் முஸ்லிமை களங்கப்படுத்துவது அத்துமீறலாகும். அவருடன் போராடுவது நிராகரிப்பாகும்.” (புஹாரி, முஸ்லிம்)

ரஸ}ல்(ஸல்) “ முஸ்லிம்களில் இருவர் போராடுவதற்காக எதிர்கொண்டு ஒருவர் மற்றவரை கொலை செய்து விட்டால் கொலை செய்தவரும், கொல்லப்பட்டவரும் நரகத்தையே சென்றடைவர்.” என்றார்கள். அதற்கு ஸஹாபிகள் கேட்டார்கள் “ அல்லாஹ்வின் து}தரே! நரகம் கொன்றவக்கென்றால் சரி, ஏன் கொல்லப்பட்டவருக்கும் நரகம்” என வினவினார்கள். நபி(ஸல்) சொன்னார்கள். “ அவரிடம் தனது தோழரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது” என்றார்கள்.

ஆகவே முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நோக்குடன் யுத்தம் செய்தால் அவர்கள் மறுமையில் பாரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டியேற்படும். அதுமாத்திரமல்லாமல் ஒரு உயிரை, அது யாராக இருப்பினும் வீணாகக் கொலை செய்தால் இஸ்லாம் அதனை மிகப்பெரிய குற்றமாக நோக்குகிறது.ரஸ}ல்(ஸல்) கூறினார்கள்,

“ஒரு முஸ்லிமை கொலை செய்வதைவிட இந்த உலகம் அழிக்கப்படுவது அல்லாஹ்(சுபு) பார்வையில் மிகவும் அற்பமானதாகும்.” (திர்மிதி)

ஆகவே முஸ்லிம்களின் தலைமைகள் (ஆட்சியாளர்களோ அல்லது இயக்கத்தலைவர்களோ) ஆளுக்காள் போட்டிபோட்டுக்கொண்டு முஸ்லிம்களுடன் முஸ்லிம்கள் போரிடுவதற்காக அழைப்புவிடுக்கும் இக்காலப்பகுதியில் அத்தகைய பாரது}ரமான செயலிலிருந்து முஸ்லிம்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு கட்டுப்படாமல், அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் முஸ்லிம்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். தமது தலைமைகளை இத்தகைய கொடிய பாவத்தில் ஈடுபட வேண்டாம் என முஸ்லிம்கள் எச்சரித்து இந்தத்தீமையை முற்றாக ஒழிக்க வேண்டும். மாறாக தமது தலைமைகளும், தலைவர்களும் சொன்னார்கள் என்பதனால் இத்தகைய தீமையில் ஈடுபட்டுவிட்டு பின்னர் மறுமையில் அல்லாஹ்(சுபு)விடம் தமது செலுக்காக தலைவர்களை பொறுப்புச்சாட்டுவதில் எத்தகைய பயனுமில்லை. அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் கீழ்வருமாறு கூறுகிறான்.

“ அவர்களுடைய முகங்கள் (நரக) நெருப்பில் புரட்டப்படும் நாளில், “ நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே! (அவனுடைய) து}தருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே” என்று கூறுவார்கள். மேலும் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம், ஆகவே அவர்கள் எங்களை வழி தவறச் செய்து விட்டார்கள்.”(33:66-67)

இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்

முஸ்லிம்கள் எத்தகைய சமூகப்பின்னணிகளைக் கொண்டவர்களாக, எத்தகைய கருத்துமுரண்பாடுகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இடையிலான உறவு தாம் எல்லோரும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையிலேயே இருக்க வேண்டும். ஒரு முஸ்லிமை கொல்வது என்பது இன்னொரு முஸ்லிமுக்கு ஒரு தேர்வாகக்கூட இருக்கக்கூடாது. எமது தேசியங்களும், கோத்திரங்களும், மத்ஹப்களும், ஜமாஆத்களும் முஸ்லிம்கள் என்ற எமது அடையாளத்திற்கு முன்னால் வலுவிழந்தவைகள். அவை இரண்டாம் பட்சமானவை. முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவின் ஆட்சியாளாரானபோது முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்குமிடையில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார்கள். அவ்வொப்பந்தம் கீழ்க்கண்டவாறே ஆரம்பிக்கிறது.

“ இது அல்லாஹ்வின் து}தர் முஹம்மத்(ஸல்) அவர்களின் புறத்திலிருந்தான ஓர் ஒப்பந்தமாகும். இது குரைஷிகளைச்சேர்ந்த முஸ்லிம்களினதும்;, யத்திரிப்பின் முஸ்லிம்களினதும், அவர்களை பின்பற்றியவர்களினதும், அவர்களுடன் இணைந்து கொண்டவர்களினதும், அவர்களுடன் சேர்ந்து போரிட்டவர்களினதும் உறவை ஒழுங்குபடுத்தும் ஆவணமாகும். ஏனையவர்களிலிருந்து வேறுபட்ட இவர்கள் அனைவரும் ஓர் உம்மாஹ் (சமூகம்) ஆகும்.”

சகோரத்துவம் குறித்து அல்லாஹ்(சுபு) இவ்வாறு கூறுகிறான்.
“ நிச்சயமாக விசுவாசிகள் (ஒருவர் மற்றவருக்கு) சகோதரர்களே!” (49:10)

முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்பது குறித்து முஹம்மத்(ஸல்) இவ்வாறு கூறினார்கள்.

“ எவனுடைய கருத்தில் எனது உயிருள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் எவரும் சுவர்க்கம் புகமாட்டார் விசுவாசித்தவரைத் தவிர, உங்களில் எவரும் விசுவாசித்தவராக மாட்டார், நீங்கள் அல்லாஹ்வுக்காக ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை, நான் உங்களுக்கு மத்தியில் அன்பினை ஏற்படுத்தும் ஒன்று குறித்து வழிகாட்டாதிருக்கவா? உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் (சாந்தி) பரப்புங்கள்.” (முஸ்லிம்)

வேறுபாடுகளைத் தீர்ப்பதில் இஸ்லாம் கைக்கொள்ளும் வழிமுறை

உண்மையில் இன்று முஸ்லிம்களுக்கு மத்தியிலிருக்கும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அடிப்படைக்காரணம் முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை அமுல்செய்யக்கூடிய பொறுப்பும், து}ய்மையுமுள்ள தலைமை இல்லாமையே. பெரும்பாலும் இஸ்லாத்தின் நீதியும், பாதுகாப்பும் மட்டுமே, பிரச்சனைகள் தோன்றுவதற்கு முன்னாலேயே அவை உருவாகாமல் இருக்க வழி செய்து விடுகின்றன. எனினும் அதனையும் தாண்டி பிரச்சனைகள் தோன்றும் பட்சத்தில் இஸ்லாமியத்தலைமை அதனை ஷாPஆவின் பிரகாசத்தில் தீர்த்து வைத்துவிடுகிறது.

இஸ்லாம் ஒர் சம்பூரண வாழ்க்கைத்திட்டமாகையால் அது எவ்வகையான பேதங்களையும் தீர்த்துவைக்கும் ஆளுமையைக் கொண்டுள்ளது. அது கிலாபாவின் குடிமக்களுக்கும், கலீபாவுக்கும் இடையில் தோன்றும் பேதங்கள் தொடக்கம் வௌ;வேறு குழுக்கள், இயக்கங்கள் என்பவற்குக்கிடையில் தோன்றும் சச்சரவுகள் மற்றும் இஸ்லாம் தொடர்பாக எழும் கருத்துவேறுபாடுகளால் உருவாகும் பிரச்சனைகள் வரை அனைத்து வகையான சச்சரவுகளையும் தனக்கேயுரிய பாங்கில் தீர்த்து வைத்து விடுகிறது. எனவே முஸ்லிம்களுக்கு மத்தியிலிருக்கும் பேதங்களைக் களைந்து அவர்களை ஓரணியாக மாற்றி பிளவு எனும் பாரிய ஹராத்திலிருந்து பாதுகாப்பதற்கு கிலாபா ஒன்றினாலேயே சாத்தியமாகும்.
கிலாபத் ஆட்சியிலே குடிமக்களுக்கும், கலீபாவுக்குமிடையில் தோன்றும் பிரச்சனைகளை மஹ்கமத் அல் மதாழிம் (அநீதச்செயல்களுக்கான நீதிமன்றம்) என்ற விஷேட நீதிமன்றம் தீர்த்து வைக்கும். அதேபோல ஒரு குறித்த விடயத்தில் ஷாPஆவின் நிலைப்பாடு தொடர்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில் தோன்றும் கருத்து பேதங்கள், கலீபா அந்நிலைப்பாடுகளில் (இஜ்திஹாத்) ஒன்றைத்தேர்வு செய்து முஸ்லிம்கள் மீது அமுல்படுத்தும் அதிகாரத்தை கொண்டிருப்பதால் அச்சிக்கல் நடைமுறை hPதியாகத் தீர்க்கப்பட்டு முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையும், கிலாபத்தின் ஒறுமைப்பாடும் உறுதி செய்யப்படும். மேலும் தனிநபர்களோ, அல்லது குழுக்களோ தங்களுக்கிடையில் முரண்பட்டுக்கொண்டால் அவர்களுக்கென நியமிக்கப்படும் நீதிபதி அது குறித்து விசாரித்து அவர் மேற்கொள்ளும் தீர்மானம் இறுதித்தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இத்தகைய பிரச்சனைகளும் சுமூகமாக தீர்க்கப்படும். எனவே கிலாபத்தை உருவாக்குவதில் நாம் முனைப்புக்காட்டுவது எமது முரண்பாடுகள் பலவற்றை தீர்ப்பதற்காக நாம் எடுத்து வைக்கும் எட்டுக்களாகும். எனினும் கலீபா இல்லாத நிலையில் தாண்தோன்றித்தனமாக இப்பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. கலீபா ஒருவர் இல்லாத நிலையில் கூட முஸ்லிம் குழுக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால் ஷாPஆவிற்கு கட்டுப்பட்டு அல்குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் தமது முரண்பாட்டை தீர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இதன்போது எவர்களேனும் அல்லாஹ்வின் சட்டத்தை அத்துமீறி நடந்தால் அவர்களை அல்லாஹ்வின் சட்டத்திற்கு கட்டுப்பட வைப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முஸ்லிம்களுக்கு அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் கீழ்;வருமாறு கட்டளையிடுகிறான்.

“விசுவாசிகளிலுள்ள இரு கூட்டத்தார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருவருக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள். பின்னர் அவர்களில் ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரின்மீது அக்கிரமம் செய்து வரம்பு மீறினால் (வரம்பு மீறிய ) அக்கூட்டத்தவர் (அல்லாஹ்வுடைய கட்டளையின் பால்) திரும்பி வரும் வரை நீங்கள் போர் செய்யுங்கள். அக்கூட்டத்தார் அல்லாஹ்வுடைய கட்டளையின்பால் திரும்பிவிட்டால் அவ்விருவருக்கிடையே நீதியைக்கொண்டு சமாதானம் செய்து வையுங்கள். (இதில்) நீங்கள் நீதியாகவும் நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.” (49:9)

ஆகவே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றோ, அல்லது தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றோ அல்லது கிலாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் விடயத்தில் கூட வன்முறைகளில் ஈடுபட்டு முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்டு இரத்தம் சிந்துவதை இஸ்லாம் முற்றாக மறுத்துரைக்கிறது. இன்று முஸ்லிம் அரசுகளுக்கும் அதனை எதிர்த்து போராடும் போராட்டக்குழுக்களுக்குமிடையே இடம்பெறும் அதிகமான ஆயுதப் போராட்டங்களை எடுத்துக்கொண்டால் அவை இஸ்லாத்தின் அடிப்படையில் மாற்றத்தை அரச மட்டத்தில், சமூகத்தில் மட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என முனையும் கூட்டத்தாருக்கும், அவற்றை நசுக்க முனையும் அரசுக்மிடையிலான போராட்டங்களாகவே இருக்கின்றன. எனவே முஸ்லிம்களுக்கிடையிலான இந்த முரண்பாடுகளுக்கு காரணமான இந்த முக்கிய விடயம் குறித்து இங்கே மிகச்சுருக்கமாக குறிப்பிடுவது பொருத்தமாகும். இஸ்லாமிய அரசை ஏற்படுத்த அல்லது ஷாPஅத்தை அமுல்படுத்த முனையும் இயக்கங்கள் இஸ்லாம் இது குறித்து எத்தகைய வழிகாட்டலை வழங்குகிறது என்பதை நிதானமாக ஆராய வேண்டும். அத்துடன் கிலாபத்தை நோக்கிய பாதை இஸ்லாத்தின் வெளித்தில் தீர்க்கமாக தீர்மானிக்கப்பட வேண்டும். இதற்கு முழுமையாக ரஸ}ல்(ஸல்) அவர்கள் எவ்வாறு கிலாபத்தை நோக்கி இயங்கினார்கள் என்பதையும், அவர்களுடைய பாதை எவ்வித முரண்பாடுகளுமின்றி எவ்வாறு தெளிவாக அமைந்தது என்பதையும் ஆராய்வது மிக மிக முக்கியமாகும். அல்லாஹ்(சுபு) தனது து}தரிடம்(ஸல்) நீங்கள் வழிநடாத்தும் உங்கள் சமூகத்தை நோக்கி இவ்வாறு கூறுங்கள் என்று கீழ்கண்டவாறு சொல்கிறான்.

“(நபியே) நீர் கூறுவீராக! இதுவே எனது (நேரான) வழியாகும். நான்(உங்களை)அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின்மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கின்றோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் (அவனுக்கு) இணைவைப்போரில் உள்ளவனுமல்லன். (12:108)

கிலாபத்தை நோக்கிய ரஸ}ல்(ஸல்) அவர்களின் பயணத்தில் இராணுவ வழிமுறை உள்ளடங்கியிருக்கவில்லை என்பதை நாம் தெளிவாப்புரிந்து கொள்ள வேண்டும். மாறாக ரஸ}ல்(ஸல்) அவர்கள் மக்காவில் மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்து அவர்களை முற்றுமுழுதான இஸ்லாமிய முன்மாதிரிகளாக மாற்றினார்கள். இவ்வாறு எவரெல்லாம் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் அனைவரும் இஸ்லாத்தி;ன ஷரிஆவிற்கு முற்றிலும் கட்டுப்பட்டு சுவர்க்கத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற வரம்பற்ற அவாவுடன் உறுதியாக இஸ்லாத்திற்காக உழைத்தார்கள். பின்னர் ஈமானிலும், திருக்குர்ஆனிலும் நன்கு தோய்த்தெடுக்கப்பட்ட அந்த ஆரம்ப முஸ்லிம்கள் ரஸ}ல்(ஸல்) அவர்களின் தலைமையிலான ஒரு அரசியல் சமூகக் குழுவாக செயற்பட்டு மக்காவில் ஒரு அறிவார்ந்த போராட்டத்தையும், அரசியல் போராட்டத்தையும் மேற்கொணடார்கள். இதன்மூலம் அங்கு நிலவிவந்த பழக்க வழக்கங்களையும், சமூக, அரசியல் கட்டமைப்புக்களையும், அங்கு நிலைகொண்டிருந்த பாரம்பரியம், வழக்காறுகள் அனைத்தையும் இஸ்லாத்தின் துணைகொண்டு எதிர்த்தார்கள். இவ்வாறு ஜாஹிலிய சமூக வழமைகளையும், நம்பிக்கைகளையும் எதிர்த்து அதற்கு பகரமாக இஸ்லாமிய சிந்தனைகளையும், தீர்வுகளையும் முன்வைத்தார்கள். இவ்வாறு வளர்ந்த போராட்டத்திற்கு மத்தியில் இஸ்லாத்திற்கான உதவியை அதாவது நுஸ்ராவை சமூகத்தலைமைகளை நோக்கியும், ஆட்சி மற்றும் அதிகார வர்க்கத்தை நோக்கியும் கோருமாறு அல்லாஹ்(சுபு) முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டான். அந்த தீர்க்கமான பாரிய முயற்சியில் இடைவிடாது முயற்சித்துக்கொண்டிருந்த முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இறுதியாக நுஸ்ராவை யத்ரிபின் அன்ஸார்களிடமிருந்து அல்லாஹ்(சுபு) வழங்கினான். இந்த பரிணாம வளர்ச்சியையே நாமும் எமது உம்மத்தின் மத்தியில் பொறுமையுடன் ஏற்படுத்த வேண்டும். இது எமக்குளேயே நாம் ஐக்கியமிளந்து ஒருவரை ஒருவர் குறி வைக்கும் அழிவிலிருந்து பாதுகாக்கும்.

உம்மத்தின் பிளவும் காலத்துவ சக்திகளின் ஆதிக்கமும்


உண்மையில் முஸ்லிம்கள் தமக்குள்ளே யுத்தம் செய்து கொள்வதன் மிகப்பாரது}ரமான அடுத்த விளைவு காலனித்துவ குப்பார்கள் எம்மீது தமது இரும்புக்கரத்தை மென்மேலும் பிரயோகிப்பதற்கு வழிவிடுவதாகும். இது மிகவும் ஆபத்தான நிலையாகும். ஏனெனில் அமெரிக்கர்களும், ஐரோப்பியரும் முஸ்லிம் உம்மத்தின் பலத்தை குறைவாக எடைபோடவில்லை. ஐரோப்பாவின் ஒரு பாரிய பகுதியைக் கூட (அந்தலு}சியா - இன்றைய ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல் உட்பட்ட பகுதி) முஸ்லிம் உம்மத் கிலாபத்தின் கீழ் பல நு}ற்றாண்டுகளாக ஆட்சி செய்தது என்பதையும், முஸ்லிம் உம்மத்தை ஓர் கட்டமைக்கப்பட்ட உம்மத்தாக யுத்தத்தில் சந்திப்பது மிகவும் ஆபத்தானது என்பதையும் அவர்கள் இன்னும் மறக்கவில்லை. எனவே அவர்கள் முஸ்லிம் உம்மத்தை எவ்வாறெல்லாம் பலகீனப்படுத்த முடியுமோ அத்தகைய அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். எம்மை மென்மேலும் பிளவுபடுத்த முனைவார்கள். இது குறித்து ரஸ}ல்(ஸல்) கூறிய கீழ்வரும் ஹதீஸ் ஓர்; முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.

“எவ்வாறு ஒரு பெரிய உணவுப்பாத்திரத்தை நோக்கி மக்கள் சூழ்ந்து கொள்வார்களோ, அதேபோல உங்களை நோக்கி பல தேசங்கள் சூழ்ந்துகொள்ளும். “ அப்பொழுது நாங்கள் சிறிய எண்ணிக்கையில் இருப்போம் என்பதாலா அவ்வாறு ஏற்படும்” என ஒருவர் கேட்டபோது, இல்லை, அப்பொழுது உங்களுடைய எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும், எனினும் நீங்கள் வெள்ளத்தில் உருவாகும் நுரைகளைப்போலிருப்பீர்கள்.” (அபுதாவூத்)

எனவே நிராகரிப்பாளர்களின் நாடுகள் எமது பிளவுகளை வலுப்படுத்தி எம்மை ஆதிக்கம் செலுத்த முனைவார்கள் என்பதையும், இதனையே காலணித்துவ தசாப்த்தங்களில் அவர்கள் நேரடியாக மேற்கொண்டார்கள் என்பதையும் நாம் மறந்து விடலாகாது. காலனித்துவ நாடுகள் எம்மீது முதலாளித்துவம் என்ற குப்ர் கட்டமைப்பை திணித்து அவர்களின் அரசியற் கைதிகளாக வைத்துக்கொள்ள முனைந்தார்கள். இதன்மூலம் முஸ்லிம்களை அடிமைப்படுத்தி எமது வளங்களை அளவுகணக்கின்றி சுரண்டினார்கள். “ பிளவுபடுத்துதலும், ஆக்கிரமித்தலும்” என்ற இந்த யுக்தியை டி.ஈ. லோரன்ஸ் (லோரன்ஸ் ஒப் அரேபியா) பின்வருமாறு கூறுகிறான். “அவரது அரசியல் மாற்றம் ஓர் வன்முறையான அரசியல் மாற்றமாக உருவெடுக்க செய்துவிட்டால் இஸ்லாம் என்ற அந்த சக்தியின் மீதான எமது அச்சத்தை அழித்துவிடலாம். பிரிப்பதன் மூலம் இஸ்லாத்தை அதன் இதயத்திலேயே அதற்கு எதிராகவே திருப்பிவிடலாம். பின்னர் துருக்கியில் ஒரு கலீபா இருந்து, அரேபியாவில் ஒரு கலீபா இருந்து மதச்சண்டை உருவாகும். பின்னர் இஸ்லாம் ஒரு அச்சுறுத்தலான ஒன்றாக இருக்காது”. இந்த யுக்தியை பின்பற்றியே சைக் - பிக்கட் ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களின் பூமி பிரித்தானியாவுக்கும், பிரான்ஸிற்குமிடையே பங்கு போடப்பட்டது. இந்த ஒப்பந்தமும், ஏனைய ஐரோப்பிய சூழ்ச்சித்திட்டங்களுமே ஒரே கிலாபத்தின் கீழ் இணைந்திருந்த முஸ்லிம் தேசம் இன்று ஐம்பதுக்குமேற்பட்ட தேசங்களாக பிரிந்து முஸ்லிம்கள் தமக்குள்ளேயே மோதிக்கொள்ளும் அவல நிலையை தோற்றிவித்துள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பியர்களின் வழித்தடத்ததை பின்பற்றி அதற்கு தலைமைப்பொறுப்பை ஏற்று இன்று ஐக்கிய அமெரிக்கர் தொடர்ந்து வருகிறது. ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை பிளவுபடுத்தி எமது தேசத்தை தாம் விரும்பியவாறு பிரித்து, கூறுபோட்டு வரைந்தெடுத்த தேசப்படத்தை அமெரிக்கா திருப்த்தியுடன் பார்க்கவில்லை. மென்மேலும் அத்தேசங்களை கூறுபோட்டு தனது வேட்டைக்கேற்ற ஒரு புதிய தேச வரைபடத்தை வரைவதற்கு முஸ்லிம் தேசத்திற்குள் கால்பதித்து நிற்கிறது. முஸ்லிம் தேசங்களை மேன்மேலும் பிரிக்க நினைக்கும் அமெரிக்காவின் திட்டம் அமெரிக்க இராணுவ துருப்புக்களின் சஞ்சிகையொன்றில் 2006ம் ஆண்டு வெளிவந்திருந்தது. இத்திட்டத்தில் ஈராக், துருக்கி, பாக்கிஸ்தான், சவூதி அரேபியா உட்பட மேலும் பல முஸ்லிம் நாடுகளை மென்மேலும் பலகீனமான சிற்சிறு நாடுகளாக பிளவுபடுத்தும் சூட்சுமை அடங்கியிருந்தது. இந்தத்திட்டத்தின் அறுவடையையே ஈராக்கிலும், தற்போது பாக்கிஸ்தானிலும் நாம் கண்டு வருகிறோம். எனவே ஓர் உம்மத் என்ற கோட்பாட்டை இவர்கள் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. ஓர் உம்மத் என்ற கோட்பாடுடையவர்களை “உம்மைடிஸ்” என்று அழைக்கும் “ராண்ட்” என்ற அமெரிக்கச் சிந்தனைத் தளமொன்று ‘பிளவுபடுத்தி ஆக்கிரமிக்கும் வியூகம்’ என்ற தனது கட்டுரையில் எத்தகைய வெட்கமுமற்று.“ முஸ்லிம்களின் அடிப்படைவாதிகளுக்கு எதிராக பழமைவாதிகளுக்கு ஆதரவு அளியுங்கள். பழமைவாதிகளுக்கும், அடிப்படைவாதிகளுக்குமிடையில் கூட்டிணைவு ஏற்படுவதை மட்டந்தட்டுங்கள்” என்று தெரிவித்திருந்தது.

இவ்வாறு குப்பார்கள் தமது குறிக்கோளில் தெளிவுடன் வெளிப்படையாகவே எம்முடன் மோதிவரும் நிலையில் நாம் எமக்குள்ளேயே போரிட்டுக்கொண்டு அவர்கள் விரித்த வலையில் அதுவும் அவர்கள் இங்கே வலையை விரித்து வைத்துள்ளோம் என வெளிப்படையாகவே தெரிவிக்கின்ற பொழுதும்கூட நாம் அல்லாஹ்(சுபு) மாறு செய்த நிலையில் அதற்குள் சென்று அகப்பட்டுக்கொள்வோமானால் எம்மை எப்படி வர்ணிப்பது.

எனவே கிலாபத்தை நிலைநாட்டுவதன் மூலமாக முஸ்லிம்களை முரண்பாடுகளிலிருந்து பாதுகாத்து அவற்றை ஷாPஆவின் அடிப்படையில் தீர்த்து வைத்து எதிரிகளின் சவால்களுக்கு தக்க பதிலடி கொடுக்கக்கூடிய ஒரு நீதியான ஆட்சியாளரை அல்லாஹ்(சுபு) எமக்கு நல்குவானாக!
“நிச்சமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடைவர்தான். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் நன்கறிந்தவன். (யாவரையும்) நன்குணர்பவன்.”(49:13)

Saturday, November 21, 2009

ஆரோக்கியமற்றுப் பிறக்கும் fபல்லூஜா குழந்தைகள்!

“சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை” என்ற கூப்பாடோடு நடத்திய சமரில் 100 000 மக்களைக்கொன்றொழித்து, பல மில்லியன் முஸ்லிம்களை அகதிகளாக்கிவிட்டதுடன் முடிந்ததா அவர்களின் தாண்டவம்;!
அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஈராக்கில் விதைத்ததன் விளைவுகள் இவை. இங்கே அழுத்துங்கள்:http://www.guardian.co.uk/world/video/2009/nov/14/falluja-children-iraq-conflict

Thursday, November 19, 2009

இறை நம்பிக்கை கொள்வதற்கு இஸ்லாம் காட்டும் வழிமுறை:..இறுதிப் பகுதி!

இறைதூதர்கள் தேவை என்பதற்கான ஆதாரத்தை பார்ப்போமானால், மனிதன் அல்லாஹ்(சுபு)வினால்தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதையும், சன்மார்க்க உள்உணர்வு அல்லது பக்தி உள்உணர்வு (ஆன்மீக உள்ளுணர்வு )(Instinct of Religiousness) என்பது மனிதனின் இயற்கை தன்மையான உள்ளார்ந்த உணர்வுகளில் (Human Insticts) ஒன்றாக இருக்கிறது என்பதும் முன்பே நிரூபனமாகி விட்டது. ஆகவே இது மனிதனுடைய படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வை புனிதப்படுத்த அவனை து}ண்டுகிறது எனலாம் இதனால் அவன் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறான். இந்த வணக்க வழிபாடுதான் படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வுக்கும், மனிதனுக்கும் இடையிலுள்ள தொடர்பாக (Relation) இருக்கிறது. இந்த தொடர்பு சரியான வகையில் வழிநடத்தப்படாவிடில் குழப்பம் ஏற்பட்டு படைப்பாளனை விட்டுவிட்டு வேறு ஒன்றை வணங்கும் நிலைக்கு (வழிகேட்டின்பால்) மனிதனை இட்டுச் சென்றுவிடும். ஆகவே சரியான ஒரு வழிமுறையைக் கொண்டு இந்த உள்உணர்வு ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். இத்தகைய வழிமுறை (System) மனிதனிடமிருந்து வர முடியாது. ஏனெனில், படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனிடம் இல்லை. இதனால் படைப்பாளனுக்கும், மனிதனுக்கும் இடையில் உள்ள தொடர்பை மனித வழிமுறையைக் கொண்டு நிலை நிறுத்த இயலாது. ஆகவே நிச்சயமாக இதற்குரிய வழிமுறை (System) படைப்பாளனிடமிருந்துதான் வந்தாக வேண்டும். படைப்பாளனான அல்லாஹ்(சுபு) இந்த வழிமுறையை மனிதனிடம் எத்தி வைக்க வேண்டியதாயிருப்பதால் அவனுடைய (சுபு) மார்க்கத்தை (Deen of Allah) மனிதர்களிடம் எடுத்துச் செல்ல ஒரு து}தர் நிச்சயம் வேண்டியிருக்கிறது. இறைது}தர்களுக்கு ஆதாரமாக மேற்கூறிய விஷயங்கள் இருக்கின்றன.
மனிதன் தன் உள்ளார்ந்த உணர்வுகளையும் (Instincts) இயற்கை தேவைகளையும் நிறைவு செய்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கும் நிலை, மனிதர்களுக்கு வழிகாட்டுவதற்கு இறைது}தர்கள் நிச்சயம் அவசியம் என்பதற்கு கூடுதலான ஆதாரமாக இருக்கிறது. சரியான வழிமுறையின்படி இந்த நிறைவு செய்யும் செயல் வழிகாட்டப்படாவிடில் தவறான வழியிலும் இயல்புக்கு புறம்பான வழியிலும் இவை நிறைவு செய்யப்பட்டு மனிதனை பெரும் துன்பத்தில் வீழ்த்திவிடும். ஆகவே, மனிதனின் உள்ளார்ந்த உணர்வுகளையும் இயற்கை தேவைகளையும் (Organic Needs) நிறைவு கொள்வதற்கு சரியான வழிமுறை தேவைப்படுகிறது. இந்த வழிமுறை மனிதனிடமிருந்து வர இயலாது. ஏனெனில் மனிதன் வாழும் சூழலின் ஆதிக்கத்தினால் நிறைவு செய்யும் செயலின் வழிமுறைகளை அவன் புரிந்து கொள்வதில் பாகுபாடுகளும், வேறுபாடுகளும் முரண்பாடுகளும் இயல்பாக ஏற்பட்டுவிடும். எனவே ஒழுங்குபடுத்தும் காரியத்தை மனிதனிடம் ஒப்படைத்தால் அவனிடமிருந்து கிடைக்கும் வழிமுறை பாகுபாடுகளும், வேறுபாடுகளும், முரண்பாடுகளும் நிறைந்ததாக ஆகிவிடும். இதனால் மனிதன் பெரும் துயரங்களுக்கு ஆளாகிவிடுவான். ஆகவே இந்த வழிமுறை (முறைமை) (System) அல்லாஹ்(சுபு)விடமிருந்து மட்டுமே வர வேண்டும்.
இறைவேதமான குர்ஆன் அல்லாஹ்(சுபு)வினால்தான் அருளப்பட்டது என்பதற்கு ஆதாரமாக முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த வேத நு}லான குர்ஆன் அரபி மொழியில் உள்ளது என்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்று. ஆகவே இந்த வேதநு}ல் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்தோ, அல்லது அரபு மக்களிடமிருந்தோ அல்லது அல்லாஹ்(சுபு)விடமிருந்தோ வந்திருக்க வேண்டும். இந்த மூன்று மூலங்களைத் தவிர வேறு எந்த வழியிலும் அது வந்திருக்க முடியாது. காரணம் அது அரபி மொழியிலும் அசலாக அதன் பாங்கிலும் (Styles) உள்ளது.
அரபு மக்களிடமிருந்து அது வந்திருக்கக் கூடும் என்பது முற்றிலும் தவறானதாகும். ஏனெனில் திருமறை குர்ஆன் அதுபோன்ற ஒன்றை கொண்டு வருமாறு அரபு மக்களுக்கு அறைக்கூவல் விடுக்கிறது.
கூறுவீராக! இதுபோன்ற பத்து வசனங்களை யாராவது நீங்கள் கொண்டு வாருங்கள். (குர்ஆன் 11:13)
கூறுவீராக! இதுபோன்ற ஒரு வசனத்தையேனும் நீங்கள் கொண்டு வாருங்கள். (குர்ஆன் 10:38)
அரபு மக்கள் குர்ஆன் வசனம் போன்ற ஒன்றை கொண்டு வருவதற்கு முயற்சி செய்தும், அவர்களால் அதைக் கொண்டு வர முடியவில்லை. ஆகவே திருமறை குர்ஆன் அரபிகளிடமிருந்து வந்திருக்க முடியாது. ஏனெனில், அது அவர்களுக்கு அறைகூவல் விடுத்தும், அதை போன்ற ஒன்றை கொண்டு வர அவர்கள் முயற்சி செய்தும், அதைப் போன்ற ஒன்றை அவர்களால் கொண்டு வர இயலவில்லை. திருமறை குர்ஆன் முஹம்மது(ஸல்) அவர்களிடமிருந்து வந்திருக்கக் கூடும் என்பதும் தவறானதாகும். ஏனெனில் அவரும் அரபு சமூகத்தின் உறுப்பினர்தான். அவருடைய அறிவாற்றல் எவ்வளவுதான் உச்சத்தில் இருந்தாலும் அவர் மானிட இனத்தைச் சார்ந்தவராகவும், அரபு சமுதாயத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். அரபு மக்கள் குர்ஆன் வசனத்தைப் போன்ற ஒன்றை கொண்டு வர இயலாதவர்களாக இருந்த காரணத்தினால் இந்த கூற்று பொருத்தமற்றதாகும். மேலும் முஹம்மது(ஸல்) அவர்களுடைய (பேச்சான) ஸஹீ ஹதீஸ்களும், முத்தவாத்திர் ஹதீஸ்களும் இருக்கின்றன. இவைகளின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. இந்த ஹதீஸ்களில் எந்த ஒன்றையும் திருமறை குர்ஆன் வசனம் ஒன்றோடு ஒப்பிட்டுப் பார்ப்போமானால் அவைகளுக்கிடையிலுள்ள நடையில் (ளுவலடந) எந்த ஒற்றுமையையும் காண முடியாது. முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனால் அருளப்பட்ட (இறை) வசனங்களையும், ஹதீஸ்களையும் ஒரே நேரத்தில் கூறுவார். எனினும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ள நடையில் அல்லது பாணியில் பெரும் வேறுபாடு இருந்தது. எவரேனும் தன்னுடைய பேச்சை வேறுபடுத்தி காட்ட முற்படும்போதும் கூட, அவரின் மொழிநடை ஒரே மாதிரியாகவேயே இருக்கும். ஏனென்றால் அது அவரில் ஒரு பகுதியாகும். ஹதீஸ்களுக்கும், குர்ஆன் வசனங்களுக்கும் அதன் பாங்கில் எந்தவித ஒற்றுமையும் இல்லாத காரணத்தினால் திருமறை குர்ஆன் நிச்சயமாக முஹம்மது(ஸல்) அவர்களுடைய பேச்சாக இருக்க முடியாது. மேலும் அரபு சமுதாயத்தைச் சார்ந்த அரபு மொழியில் புலமையுள்ள எந்த மனிதரும் திருமறை குர்ஆனை, முஹம்மது(ஸல்) அவர்களின் பேச்சு என்றோ அல்லது அவரது (ஸல்) பேச்சை ஒத்து இருக்கிறது என்றோ குற்றம் சாட்டவில்லை. ஜப்ர் என்ற கிருஸ்தவ இளைஞனிடமிருந்து முஹம்மது(ஸல்) அவர்கள் அதைக் கற்றுக் கொண்டு வந்தார் என்ற ஒரே குற்றச்சாட்டை மட்டும் அரபு மக்கள் கூறி வந்தார்கள். அவர்களுடைய குற்றச்சாட்டை அல்லாஹ்(சுபு) மறுத்துக் கூறுகின்றான்.
அவருக்கு கற்றுக் கொடுப்பதெல்லாம் ஒரு மனிதர்தான் என்று அவர்கள் கூறுவதையும் நிச்சயமாக நாம் அறிவோம். எவரோடு இணைத்துக் கூறுகிறார்களோ அவருடைய மொழி அரபி அல்லாத மொழியாகும். ஆனால் இவ்வேதமோ மிக தெளிவான அரபி மொழியில் உள்ளதாகும். (குர்ஆன் 16:103)
திருமறை குர்ஆன் அரபு மக்களின் பேச்சாகவும் இல்லை, முஹம்மது(ஸல்) அவர்களுடைய பேச்சாகவும் இல்லை என்று தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டதால், நிச்சயமாக அது அல்லாஹ்(சுபு)வின் பேச்சாக மட்டுமே இருக்க முடியும். மேலும் அது அதைக் கொண்டு வந்தவருக்கான அற்புதமாகும்.
முஹம்மது(ஸல்) அவர்களுக்கு திருமறை குர்ஆன் அருளப்பட்டிருப்பதாலும் அது அல்லாஹ்(சுபு)வின் வார்த்தையாக, இறை சட்டங்களாக இருப்பதாலும், அல்லாஹ்(சுபு)வின் து}தர்களையும், தீர்க்க தரிசிகளையும் தவிர வேறு எவரும் அல்லாஹ்(சுபு)வின் ஷரிஆவை கொண்டு வர முடியாது என்ற காரணத்தாலும் இந்த அறிவார்ந்த ஆதாரங்களின் அடிப்படையில் முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்(சுபு)வின் து}தராகவும் (Razool-Messenger) தீர்க்கதரிசியாகவும் (Prophet - Nabee) இருக்கிறார் என்பது இங்கு தெளிவாக நிரூபனம் ஆகிறது.
(இந்த ஆதாரம்) அல்லாஹ்(சுபு) மீதும், முஹம்மது(ஸல்) அவர்கள் கொண்டு வந்த செய்தி (Message) மீதும், திருமறை குர்ஆன் அல்லாஹ்(சுபு)வின் வார்த்தை (Speech of Allah) என்பதன் மீதும், ஈமான் கொள்வதற்கு (மனிதர்களுக்கு) அறிவார்ந்த ஆதாரமாக இருக்கின்றன.
ஆகையால் அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள ஈமான் அறிவார்ந்த வழியின் மூலம் ஏற்பட வேண்டும். மேலும் அந்த ஈமான் அறிவார்ந்த வழியில் மட்டுமே இருக்க வேண்டும். நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டவைகள் மீதும், அல்லாஹ்(சுபு) அறிவித்துக் கொடுத்தவைகள் மீதும் நாம் ஈமான் கொள்வது இந்த அடிப்படையின் மீதுதான் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் அல்லாஹ்(சுபு) மீது ஈமான் கொள்கிறோம். அவனுடைய(சுபு) தெய்வீக பண்புகள் மீதும் நாம் ஈமான் கொள்கிறோம். அவன்(சுபு) நமக்கு அறிவித்துக் கொடுத்தவைகளை நாம் கண்டிப்பாக நம்ப வேண்டும். அவை நமது அறிவாற்றலுக்கு உட்பட்டவையாக இருந்தாலும் அல்லது நமது அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும் சரியே. ஏனெனில் அவற்றை அல்லாஹ்(சுபு) நமக்கு அறிவித்துள்ளான். உயிர்த்தெழும் நாள், சுவனம், நரகம், கேள்வி கணக்கு, தண்டனை, மலக்குகள், ஜின்கள், ஷைத்தான்கள் ஆகியவற்றின் மீதும் திருமறை குர்ஆன் மற்றும் முத்தவாத்திர் ஹதீஸ் ஆகிய இரண்டும் குறிப்பிட்டுள்ளவற்றின் அனைத்தின் மீதும் நாம் ஈமான் கொள்ள வேண்டும். இந்த ஈமான் வார்த்தை மற்றும் எழுத்து மூலமாக வந்தாலும் அது அறிவுப்ப10ர்வமானதுதான். ஏனெனில் அவைகளின் மூலங்கள் அறிவினால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே முஸ்லிம்களின் அகீதா பகுத்தறிவு சார்ந்ததாக இருக்க வேண்டும் அல்லது அதன் மூல ஆதாரம் பகுத்தறிவு ரீதியில் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு, அறிவார்ந்த அடிப்படையில் அறிவு ரீதியாக நிரூபிக்கப்பட்ட விஷயங்கள் அல்லது நிச்சயமாகவும் நம்பகத்தன்மையுடனும் கூடிய திருமறை குர்ஆன் மற்றும் முத்தவாத்திர் ஹதீஸ் ஆகியவற்றின் மூலம் நிரூபிக்கப்பட்ட விஷயங்கள் ஆகியவை மீது மட்டும்தான் முஸ்லிம்கள் ஈமான் கொள்ள வேண்டும். அறிவார்ந்த ரீதியில் நிரூபிக்கப்பட்டவை மற்றும் குர்ஆன், முத்தவாத்திர் ஹதீஸ் இந்த இரண்டு வகையில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களைத் தவிர மற்றவற்றின் மீது நம்பிக்கை கொள்வதிலிருந்து முஸ்லிம்கள் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் மிகமிக உறுதியான முறையில் அல்லாமல் அகீதா அமைக்கப்பட மாட்டாது.
ஆகவே, இந்த உலக வாழ்க்கைக்கு முன்னதாக அல்லாஹ்(சுபு) இருக்கின்றான் என்பதிலும், உலக வாழ்க்கைக்கு பின்பு நியாயத்தீர்ப்பு நாள் உள்ளது என்பதிலும் நாம் ஈமான் கொள்ள வேண்டும். இந்த உலக வாழ்க்கைக்கும் அதற்கு முன்பு உள்ள நிலைக்கும் இடையிலுள்ள தொடர்பையும், இந்த உலகத்திலுள்ள படைப்பினங்களுக்கு இடையிலுள்ள தொடர்பையும் உள்ளடக்கியதுதான் அல்லாஹ்(சுபு)வின் கட்டளைகள் (commands of Allah) என்பதாலும், இந்த உலக வாழ்க்கையில் ஒருவர் செய்யும் செயலுக்கும் மறுமை நாளுக்கும் இடையிலுள்ள தொடர்பு கேள்வி கணக்காக இருப்பதாலும், இந்த உலக வாழ்க்கைக்கும் இதற்கு முன்பாக இருப்பதற்கும் (அல்லாஹ் சுபு) அதற்கு பின்பாக இருப்பதற்கும் (மறுமை நாள்) நிச்சயமாக ஒரு தொடர்பு இருந்தாக வேண்டும். மேலும் இந்த தொடர்பு மனிதனுடைய உலக வாழ்க்கையை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. வேறு வகையில் கூறுவதென்றால், இந்த உலக வாழ்க்கையில் மனிதன் அல்லாஹ்(சுபு)வின் வழிமுறை (system) படிதான் இயங்க வேண்டும். இன்னும் நியாயத்தீர்ப்பு நாளன்று அல்லாஹ்(சுபு) மனிதர்களின் செயல்களுக்கு கேள்வி கணக்கு கேட்பான் என்பதையும் நம்ப வேண்டும்.
இந்த விரிவான விவாதத்தின் வாயிலாக மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவை பற்றியும், இந்த உலக வாழ்க்கைக்கு முன்பு உள்ளது (என்ன?) இந்த உலக வாழ்க்கைக்கு பின்பு உள்ளது (என்ன?) மேலும் வாழ்க்கைக்கு முன், பின் உள்ள நிலைகளுடன் இவ்வாழ்க்கைக்கான தொடர்பு என்ன? என்பதைப் பற்றியும் ஒரு ஞானமிக்க பிரகாசமான சிந்தனை (Enlightened Thought) நிறுவப்பட்டுவிட்டது. இவ்வாறாக, இஸ்லாமிய அகீதாவின் (Islamic Aqeedah) மூலம் மிகப்பெரிய பிரச்சினைக்கு முழுமையான தீர்வு எட்டப்பட்டுவிட்டது.இந்த தீர்வை எட்டிவிட்ட நிலையில் இப்போது மனிதன் அவன் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையின்பாலும் அதைப் பற்றிய உறுதியான மற்றும் ஆக்கப்ப10ர்வமான கருத்தின்பாலும் கவனம் செலுத்த முடியும். அவனுடைய வாழ்க்கையில் மறுமலர்ச்சியை கொண்டு வரக்கூடிய சித்தாந்தத்தின் அடித்தளமாக (Foundation of Ideology) இந்த தீர்வு விளங்குகிறது. இந்த சித்தாந்தத்திலிருந்து பிறக்கும் கலாச்சாரத்திற்கும் இதுவே அடித்தளமாக விளங்குகிறது. இன்னும் அனைத்து வழிமுறைக்கும் இஸ்லாமிய ஆட்சி அமைப்புக்கும் (system) இதுதான் அடித்தளமாக இருக்கிறது. இவ்வாறு சிந்தனை மற்றும் வழிமுறையை (fikrah and tareeqah) உள்ளடக்கிய இஸ்லாமிய அகீதாவின் அடித்தளத்தின் மீதுதான் இஸ்லாமிய மார்க்கம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய து}தரையும் அவன் தன்னுடைய து}தர் மீது இறக்கி வைத்த இவ்வேதத்தையும் முன்னர் அவன் இறக்கி வைத்த வேதங்களையும் ஈமான் கொள்ளுங்கள். இன்னும் எவர் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய து}தர்களையும் இறுதி நாளையும் நிராகரிக்கின்றாரோ நிச்சயமாக அவர் மிக து}ரமான வழிகேட்டில் வழிகெட்டுவிட்டார். (குர்ஆன் 4:136)
இந்த உண்மை இவ்வாறு நிரூபனம் ஆகிவிட்ட நிலையில், இதன் மீது நம்பிக்கை கொள்வது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டதால் ஒவ்வொரு முஸ்லிமும் முழு இஸ்லாமிய ஷரிஆவின் மீது நம்பிக்கை கொள்வது கட்டாய கடமையாகி விடுகிறது. ஏனெனில் இந்த விஷயம் மகத்துவமிக்க திருமறை குர்ஆனில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் இறைது}தர்(ஸல்) அவர்கள் இதனை நமக்கு எத்தி வைத்துள்ளார்கள். இதை நம்ப மறுப்பவர் காஃபிர் ஆவார். ஆகவே முழு அஹ்காம் ஷரிஆவையோ (Ahkam Sharia’h) அல்லது அதனுடைய உறுதியாக விளக்கப்பட்ட கட்டளைகளையோ மறுப்பது என்பது குஃப்ர் ஆகும். வணக்க வழிபாடு (Ibaadat) , கொடுக்கல் வாங்கல் (Muamalat) தண்டனை (Uqoobaat) உணவுகள் ஆகிய எந்த விஷயமானாலும் இதே நிபந்தனைதான் இருந்துவரும். எனவே இந்த வசனத்தை நிராகரிப்பது.
மேலும் நீங்கள் தொழுகையை நிறைவேற்றுங்கள் (குர்ஆன் 2:43) இந்த வசனத்தை நிராகரிப்பதற்கு சமமாகும்.
அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை தடுத்து விட்டான் (குர்ஆன் 2:275)
மேலும் பின்வரும் வசனங்களை நிராகரிப்பதற்கும் சமமாகும்.திருடனோ, திருடியோ அவ்விருவரின் கைகளை துண்டித்து விடுங்கள். (குர்ஆன் 5:38)
இறந்தவைகளும், இரத்தமும், பன்றியின் இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வில்லையோ அவைகளும் உங்கள் மீது (உண்ணுவதற்கு) தடுக்கப்பட்டுள்ளன. (குர்ஆன் 5:3)
ஷரிஆவின் மீதான ஈமான் அறிவு சார்ந்தது அல்ல, மாறாக அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்பட்ட அனைத்திற்கும் கட்டாயமாக ஒருவன் முழுமையாக சரணடைவது ஆகும்.
உமது இரட்சகன் மீது சத்தியமாக அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக்கி நீர் செய்யும் தீர்ப்பை தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியையும் பெறாமல் முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில் அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆக மாட்டார்கள். (குர்ஆன் 4:65)

Saturday, November 14, 2009

இறை நம்பிக்கை கொள்வதற்கு இஸ்லாம் காட்டும் வழிமுறை: பகுதி - 01

மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவை பற்றியும், இவைகள் அனைத்தும் தோன்றுவற்கு முன்பு என்ன இருந்தது, இவைகள் அனைத்தையும் தொடர்ந்து என்ன வர இருக்கின்றது, இவை எல்லாவற்றுக்கும் இடையிலுள்ள இடைத்தொடர்பு என்ன என்ற விடயம் தொடர்பாக மனிதன் கொண்டுள்ள சிந்தனைகளின் அடிப்படையில்தான் அவன் மறுமலர்ச்சி அடைகின்றான். ஆகவே மனிதன் மறுமலர்ச்சி அடைய வேண்டுமெனில் அவனுடைய தற்போதைய சிந்தனை ஆழமாகவும், அடிப்படையாகவும், முழுமையாகவும் மாற்றி அமைக்கப்பட்டு புதிய சிந்தனை அவனுள் புகுத்தப்பட வேண்டும். ஏனெனில் இந்த சிந்தனைதான் வாழ்க்கை பற்றிய (தெளிவான) கருத்தை ( எண்ணக்கருவை) (மனிதனிடம்) ஏற்படுத்துகிறது. (மேலும் அதனை உறுதியும் படுத்துகிறது. அதைக் கொண்டுதான் அவனுடைய எண்ணங்கள் வலுவடைய முடியும்) மனிதன் இந்த (உலக) வாழ்க்கைப் பற்றி கொண்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில்தான் அவனுடைய நடத்தைகளை வடிவமைக்கிறான். ஆகவே, தான் நேசிக்கின்ற ஒரு மனிதனைப் பற்றிய அவனது கருத்து ((concept - Maffaheem) அந்த மனிதரிடம் அவன் மேற்கொள்ளும் நடத்தையை (Behavior - Sulook) நிர்ணயிக்கிறது. இதற்கு மாறாக, தான் வெறுப்பு கொண்டிருக்கின்ற ஒரு மனிதனிடம் அவன் கொண்டுள்ள போக்கு வெறுப்பினால் ஏற்பட்ட கருத்தின் அடிப்படையில் இருக்கும். அதே வேளையில் தான் அறியாத ஒரு புதிய மனிதனைப் பற்றிய எந்தவொரு கருத்தும் அவனிடம் உருவாவதில்லை. எனவே, மனிதனுடைய நடத்தைகள் அவனுக்குள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் கருத்துக்களோடு (ஊழnஉநிவ) தொடர்புடையவைகளாகவே இருக்கின்றன. எனவே, சிந்தனையில் வீழ்ச்சியுற்ற ஒரு மனிதனின் நடத்தைகள் சீர்செய்யப்பட்டு மாற்றியமைக்கப்பட வேண்டுமெனில், அவனுடைய சிந்தனைகளும், கருத்துக்களும் முதலில் மாற்றியமைக்கப்பட வேண்டுமென்பது மிகமிக அவசியமாகிறது. அல்லாஹ் (சுபு) கூறுகின்றான்:
நிச்சயமாக எந்தவொரு சமுதாயத்திற்குரியதையும், அவர்கள் தங்களுக்குரியதை தாங்களாக மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அதனை மாற்றியமைப்பதில்லை. (குர்ஆன் 13:11)
வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையை மனிதனிடம் தோற்றுவித்து அவனுடைய கருத்தை மாற்றியமைப்பது ஒன்றுதான் அவனிடம் மனித வாழ்க்கை பற்றிய சரியான கருத்தை நிறுவுவதற்கு ஒரே வழியாகும். மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவைகளின் தற்போதைய நிலை இவைகளெல்லாம் தோன்றுவதற்கு முன்பு இருந்த நிலை, இவைகள் அனைத்தும் முடிந்து போன பின்பு ஏற்படப் போகின்ற நிலை, இந்த மூன்று நிலைகளுக்கும் இடையிலுள்ள இடைத்தொடர்பு குறித்த சிந்தனையை ஒரு மனிதன் (தன்னுள்) மேற்கொள்ளாதவரை வாழ்க்கையைப் பற்றிய அவனுடைய கருத்து ஆக்கப்ப10ர்வமான முறையில் உறுதி அடையாது. மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவை பற்றிய முழுமையான சிந்தனையை வழங்குவதன் மூலம் இதை சாத்தியமாக்க இயலும். ஏனெனில், மனித வாழ்க்கை பற்றிய அனைத்து சிந்தனைகளும் இந்த அறிவார்ந்த அடிப்படை சிந்தனையின் அடித்தளத்தின் மீதுதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த விஷயங்களைப் பற்றிய முழுமையான ஒரு சிந்தனையை வழங்குவதன் வாயிலாக மனிதனின் மிகப்பெரிய பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுவிட்டால், மற்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். ஏனெனில் மற்ற எல்லா பிரச்சினைகளும் இந்த மிகப் பெரிய பிரச்சினையின் கூறுகளாகவோ அல்லது அதன் கிளைகளாகவோதான் இருக்கின்றன. இத்தகைய தீர்வு, மனிதனின் இயற்கை தன்மையோடு பொருந்தக் கூடியதாகவும், அவனுடைய அறிவு ஏற்றுக் கொண்டதாகவும், அவனுடைய உள்ளம் அதனைக் கொண்டு அமைதி அடையக் கூடியதாகவும் இருக்கக்கூடிய சரியான ஒரு தீர்வாக இல்லாத பட்சத்தில், அது அவனை சரியான மறுமலர்ச்சியின் பால் இட்டுச் செல்லாது.
மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவை பற்றிய ஞானமிகுந்த சிந்தனையின் (ஆழமான முழுமைமையும் நிறைந்த சிந்தனை - Enlighten Thought ) மூலமாகத்தான் இத்தகைய உண்மையான தீர்வை எட்ட முடியும்.
ஆகவே மறுமலர்ச்சியையும், அறிவாற்றல் எழுச்சியையும் விழையும் ஒருவர், இந்த ஞானமிகுந்த பிரகாசமான சிந்தனையை பயன்படுத்தி சரியான முறையில் வாழ்வின் மிகப்பெரிய பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட வேண்டும். இந்த தீர்வு அகீதா (அடிப்படைக்கொள்கை ) என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை. அகீதா எனும் அறிவார்ந்த அடிப்படை சிந்தனையின் அடித்தளத்தின் மீதுதான் மனித வாழ்வின் செயல்பாட்டு வழிமுறைகள் (systems – முறைமைகள் ) மற்றும் அவனுடைய நடத்தைகள் பற்றிய விரிவான சிந்தனைகள் அனைத்தும் நிர்மாணிக்கப்படுகின்றன.
இஸ்லாம் மனிதனின் மிகப்பெரிய பிரச்சினையை ஆழமாக அறிந்துள்ளது. அவனுடைய இயற்கை தன்மைக்கு இணக்கமாகவும், அறிவுக்கு பொருத்தமாகவும் இதயத்துக்கு அமைதி ஏற்படுத்தும் விதத்திலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குகிறது. இஸ்லாத்தை தழுவும் ஒருவர் அறிவார்ந்த முறையில் சிந்தித்து இந்த தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதை ஒரு நிபந்தனையாக, அது அவர் முன் வைக்கிறது. ஆகவே, அறிவார்ந்த அடிப்படை சிந்தனை என்னும் அகீதாவின் அடித்தளத்தில் இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. அது, மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றின் பின்னணியில் ஒரு படைப்பாளன் இருக்கிறான் என்றும், அவன்தான் இவைகளையும், மற்ற அனைத்தையும் படைத்துள்ளான் என்றும் கூறுகிறது. அவன்தான் அல்லாஹ்(சுபு) என்ற படைப்பாளன். அவன் வெறுமை அல்லது இல்லாமையிலிருந்து (From Nothing) அனைத்தையும் படைத்துள்ளான். (உதாரணம். முதல் மனிதர் ஆதம் அலை). அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை (Existence - இருப்பு ) தவிர்க்க முடியாததாக (Indispensible) இருக்கிறது. அவன் யாராலும் படைக்கப்படவில்லை. அவ்வாறு இல்லையெனில் அவன் படைப்பாளனாக இருக்க முடியாது. அவன் படைப்பாளன் என்ற பேரூண்மை அவன் படைக்கப்படவில்லை என்பதையும் அவன் உள்ளமை (இருப்பு) தவிர்க்க இயலாதது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. ஏனெனில், அனைத்துப் படைப்பினங்களும் தாங்கள் நிலைத்திருப்பதற்கு அவனையே சார்ந்துள்ளன. அதே வேளையில் அவன் எந்தவொன்றையும் சார்ந்திருக்கவில்லை.
அனைத்து பொருட்களுக்கும் ஒரு படைப்பாளன் அவசியம் இருக்க வேண்டும் என்பதற்கு அறிவார்ந்த காரணம் என்னவெனில், மனிதனுடைய அறிவு (Mind) அறியக்கூடிய, மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகிய அனைத்தும் ஒரு வரையறைக்கு உட்பட்டதாகவும், பலவீனமானதாகவும், குறை உடையதாகவும், மற்றவைகளிடத்தில் தேவையுடையவைகளாகவும்; இருக்கின்றன என்பதுதான். மனிதன் ஒரு வரையறைக்கு உட்பட்டவனாக இருக்கிறான், ஏனெனில் அந்த வரையறையை விட்டு அவன் தாண்ட முடியாது. வாழ்வும் (life) ஒரு வரையறைக்கு உட்பட்டதுதான். ஏனெனில் அது தனிமனிதனிடமோ அல்லது ஒரு உயிரிடமோ தோன்றி அங்கேயே முடிந்து விடுகிறது. எனவே வாழ்வும் ஒரு வரையறைக்கு உட்பட்டதுதான். பிரபஞ்சமும் வரையறைக்கு உட்பட்டதுதான். ஏனெனில், பிரபஞ்சம் என்பது விண்வெளித்துகள்களின் தொகுப்பாகும். அந்த ஒவ்வொரு துகள்களும் வரையறைக்குட்பட்டவையாகையால் முழுப்பிரபஞ்சமுமே வரையறைக்குட்பட்டதாகும். ஏனெனில் வரையறைக்குட்பட்டவைகளின் தொகுப்பு வரையறைக்குட்பட்டதேயாகும். எனவே மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவை அனைத்தும் ஒரு வரையறைக்கு உட்பட்டவைகள்தான் (Limited). இத்தகைய வரையறைக்கு உட்பட்ட பொருட்களைப் பற்றி ஆழ்ந்த ஆய்வு செய்யும் பொது அவைகள் அனைத்தும் அழிவற்றதாக (Eternal - Azali) காணப்படவில்லை என்பதையும், அவை ஒர் எல்லைக்கு உட்பட்டுள்ளதால் அழியும் தன்மை உடையவை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். ஆகவே இவைகள் அனைத்தும் நிச்சயமாக மற்றொன்றால் படைக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றின் படைப்பாளனாகும். இந்த படைப்பாளனைப் பொருத்தவரை மூன்று விதமாக சிந்திக்கப் படலாம். ஒன்று: அவன் மற்றொன்றால் படைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு: அவன் தன்னைத் தானே படைத்திருக்க வேண்டும் மூன்று: எந்த ஒன்றாலும் படைக்கப்படாமலும், நிலையாக சுயமாக இருப்பவனாகவும் (Eternal - Azali) அவனது உள்ளமை (Existence) தவிர்க்க முடியாததாகவும் இருக்க வேண்டும். முதல் கருத்து முற்றிலும் தவறானது ஏனெனில் அவன் பிறிதொன்றினால் படைக்கப்பட்டிருந்தால், அவன் வரையறைக்கு உட்பட்டு விடுவான். இரண்டாவது கருத்தின்படி, அவன் தன்னைத் தானே படைத்துக் கொண்டான் என்பதும் தவறானது. ஏனெனில், அவனை படைப்பாளனாக பகுத்தறிவு ரீதியில் ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் அடிப்படையில் அவன் ஒரே சமயத்தில் படைப்பினமாகவும் படைப்பாளனாகவும் இருக்கிறான். இது அடிப்படையிலேயே அறிவுக்கு புறம்பான அபத்தமான கருத்தாகும். ஆகவே படைப்பாளன் என்பவன் அழிவற்றவனாகவும், சுயமாக இருப்பவனாகவும், எந்த ஒன்றையும் சார்ந்து இருக்க வேண்டிய தேவையற்றவனாகவும், அவனது உள்ளமை தவிர்க்க முடியாததாகவும் இருக்க வேண்டும். அவன்தான் அல்லாஹ்(சுபு).
அறிவாற்றல் கொண்ட எந்த ஒரு மனிதனும் தன் புலன் அறிவின் மூலம் அறிந்து கொள்ளும் பொருட்களிலிருந்து அவைகளுக்கு ஒரு படைப்பாளன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முடியும். அவை அனைத்து குறை உள்ளதாகவும், பலவீனமாகதாகவும், மற்றொன்றை சார்ந்து இருப்பவையாகவும் இருக்கின்ற காரணத்தினால், நிச்சயமாக அவைகள் படைக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. ஆகவே, பிரபஞ்சத்திலும் வாழ்விலும் மனிதனிடத்திலும் இடம்பெற்றுள்ள எந்த ஒரு விஷயமும் படைப்பாளனான ஒரு ஒழுங்குப்படுத்தும் நிர்வாகி (Creator and Organiser) இருக்கின்றான் என்பதை ஒருவருக்கு உணர்த்தக் கூடியதாக இருக்கின்றன. ஆகவே, பிரபஞ்ச வெளியில் இடம் பெற்றிருக்கும் எந்த ஒன்றைப் பார்த்தாலும் அல்லது மனித வாழ்வின் எந்த ஒரு நிலை பற்றி ஆய்வு மேற்கொண்டாலும் அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை பற்றி அவைகள் எடுத்துக் கூறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆகவே இந்த உண்மையின் பக்கம் கவனம் செலுத்துமாறும், அவைகளைக் குறித்தும் அவைகளை சூழ இருப்பவை குறித்தும், அவைகளோடு தொடர்புடையவை குறித்தும் ஆழ்ந்து சிந்தனை செய்யுமாறும், பிறகு அந்த ஆய்வின் முடிவாக அல்லாஹ்(சுபு) இருக்கின்றான் என்பதை அறிந்து நம்பிக்கை கொள்ளும்படியும் திருமறை குர்ஆன் மனிதர்களுக்கு கட்டளையிடுகிறது. ஆகவே மனிதன் உலகத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் மற்றொன்றின் மீது தேவை உடையதாக இருக்கிறது என்ற உண்மையின் அடிப்படையில் படைப்பாளனான அல்லாஹ்(சுபு) இருக்கின்றான் என்ற உறுதியான முடிவுக்கு வருகின்றன. நு}ற்றுக்கணக்கான திருமறை குர்ஆன் வசனங்கள் இந்த கருத்தை வலியுறுத்துகின்றன.சூரா ஆலஇம்ரானில் அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்:
நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியை படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன் 3:190)
சூரா அர்ரூமில் அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்:
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதையும், உங்களுடைய மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். அகிலத்தாருக்கு இதில் அத்தாட்சிகள் உள்ளன. (குர்ஆன் 30:22)சூரா அல்காஷியாவில் அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்:ஒட்டகத்தை அது எவ்வாறு படைக்கபட்டிருக்கின்றது என்பதையும், வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கின்றது என்பதையும், மலைகளை அது எவ்வாறு நாட்டப்பட்டிருக்கின்றது என்பதையும், ப10மியை அது எவ்வாறு விரிக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் அவர்கள் கவனிக்க மாட்டார்களா? (குர்ஆன் 89: 17-20)
சூரா அத்தாரிக்கில் அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்:
ஆகவே, மனிதன் தான் எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதை கவனிக்கட்டும். குதித்து வெளியாகும் நீரிலிருந்து அவன் படைக்கபட்டான். அது முதுகந்தண்டிற்கும் நெஞ்செலும்புகளுக்கும் இடையில் வெளிப்படுகிறது. (குர்ஆன் 86:5-7)
சூரா அல்பக்ராவில் அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்:
நிச்சயமாக வானங்களையும், ப10மியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மனிதர்களுக்கு பயன்தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி வைத்து, அதன் மூலம் ப10மியை அது இறந்தபின் உயிர்பிக்க வைப்பதிலும் ஒவ்வொரு விதமான பிராணியை அதில் பரவ விட்டிருப்பதிலும் காற்றுகளை திருப்பி விட்டுக் கொண்டிருப்பதிலும் வானத்திற்கும், ப10மிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மேகத்திலும் சிந்திக்கும் சமூகத்தவர்களுக்கு சான்றுகள் இருக்கின்றன. (குர்ஆன் 2:164)
இன்னும் இதுபோன்ற அனேக இறைவனங்கள் மனிதர்கள் தங்களை சூழ இருப்பவைகளைப் பற்றியும் அவற்றோடு தொடர்புடையவைகளைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து அதன் அடிப்படையில் ஒரு படைப்பாளன் இருக்கிறான் என்பதை பற்றியும் அவன்தான் அனைத்தையும் படைத்துள்ளான் என்பதைப் பற்றியும் அவன்தான் அனைத்தையும் ஒழுங்குப்படுத்தும் நிர்வாகி என்பதைப் பற்றியும் உறுதியான முடிவுக்கு வருவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றான். இவ்வாறாக, பகுத்தறிவு துணை கொண்டு சிந்தித்து தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் அல்லாஹ்(சுபு) மீதுள்ள ஈமான் உறுதியான முறையில் நிர்மாணிக்கப்பட வேண்டும்.
உண்மையில் படைத்தவனைப் பற்றிய நம்பிக்கை ஒவ்வொரு மனிதனிடத்திலும் இயல்பாகவே இருக்கத்தான் செய்கிறது. எனினும், இந்த உள்ளார்ந்த நம்பிக்கை உணர்ச்சிகளின் மூலமாகவே வெளிபடுகிறது. இந்த உணர்ச்சி சரியான முறையில் வழி நடத்தப்படாமல் அப்படியே விட்டுவிடப்பட்டால், பிறகு அது நம்பகமான முடிவுகளையும் நிலையான உறுதிபாட்டையும் ஏற்படுத்தாது. பெரும்பாலும் வெறும் உணர்ச்சிகள் (Emotion - Wijdaan) உண்மையான நம்பிக்கைகளுக்கு பதிலாக கட்டுக்கதைகளையும் ஆதாரமற்ற கற்பனை கருத்துக்களையும் மனிதனுக்குள் கொண்டு வந்துவிடும். இத்தகைய ஆதாரமற்ற விஷயங்கள் மீது மனிதன் வைக்கும் நம்பிக்கை அவனை சரியான நம்பிக்கையை நோக்கி இட்டுச் செல்லாமல் வழிகேட்டில் ஆக்கிவிடும். மேலும் நிராகரிப்பின் பாலும் அவனை வீழ்த்திவிடும். நம்பிக்கையை உணர்ச்சிகள் ஆதிக்கம் செலுத்துவதின் காரணத்தினால்தான் மனிதர்கள் சிலை வணக்கங்கள், மூட நம்பிக்கைகள், புராணக் கதைகள் ஆகிய தவறான வழிபாட்டு முறைகளின் பிணைக் கைதிகளாக காட்சியளிக்கிறார்கள். ஆகவே இத்தகைய உணர்ச்சிப10ர்வமான குருட்டு நம்பிக்கை, கற்சிலைகளுக்கு தெய்வீக பண்புக் கூறுகளை கற்பிப்பது, அல்லாஹ்(சுபு) பூமியில் அவதரிக்கிறான் என்று நம்புவது, படைப்பினங்களுக்குள்ள பண்புக்கூறுகளை அல்லாஹ்(சுபு)வுக்கு கற்பிப்பது, படைக்கப்பட்ட பொருட்களை ஆராதனை செய்வது மற்றும் அவற்றை வணங்கி வழிபடுவதின் மூலம் அல்லாஹ்(சுபு)வை நெருங்கி விடுவதற்கு சாத்தியம் இருக்கிறது என்று நம்புவது போன்ற இறைநிராகரிப்பின் பக்கமும் இணை வைக்கும் கொடிய செயலின் பக்கமும் மனிதர்களை இட்டுச் சென்று விடும் என்பதால், நம்பிக்கை கொள்வதற்கு ஒரே வழியாக உணர்ச்சிகளை மட்டும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. இது போன்ற குருட்டு நம்பிக்கைகள், கற்பனை எண்ணங்கள் ஆகியவற்றை உண்மையான ஈமான் விட்டொழித்து விடுகிறது. இதன் காரணமாகத்தான் ஈமான் கொள்வதற்கு உணர்ச்சியுடன் அறிவைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாம் வற்புறுத்துகிறது. மேலும் முஸ்லிம்களை அல்லாஹ்(சுபு)வின் மீது நம்பிக்கை கொள்வதற்கு அறிவை பயன்படுத்தி சிந்தனை மேற்கொள்ளுமாறு கட்டளையிடுகிறது. இன்னும் அகீதாவில் பின்பற்றுதலை (தக்லீது) மேற்கொள்வதற்கு தடை செய்துள்ளது. ஆகவே அல்லாஹ்(சுபு)வின் மீது ஈமான் கொள்வதை தீர்மானிக்கும் நீதிபதியாக இஸ்லாம் பகுத்தறிவை குறிப்பிடுகிறது. அகீதாவில் தக்லீதை தடை செய்கிறது.அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்:
வானங்களையும், ப10மியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருகதிலும் அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (குர்ஆன் 3:190)
இங்ஙனம், பகுத்தறிவை முழுமையான நீதிபதியாக்கி, ஆழமாக சிந்தனை மேற்கொண்டு, தீவிரமாக ஆய்வுசெய்து பிறகு அதன் அடிப்படையில் அல்லாஹ்(சுபு) மீது ஈமான் கொள்ள வேண்டியது முஸ்லிம்களுக்கு கடமையாக (Waajib) ஆக்கபட்டிருக்கிறது. பல்வேறு திருமறை அத்தியாயங்களின் நு}ற்றுக்கணக்கான இறை வசனங்களில், பிரபஞ்சத்தை ஆழ்ந்து நோக்கி அதில் நிகழ்கின்ற நிகழ்வுகளின் விதிமுறைகளை ஆய்வு செய்யும்படி மனிதர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. மேலும் இந்த வசனங்கள் மனிதனின் அறிவாற்றல் திறனை பயன்படுத்தி ஆழ்ந்து சிந்திக்கவும் தீவிரமான சிந்தனை மேற்கொள்ளவும் அவனுடைய நம்பிக்கைக்கு அடிப்படையாக பகுத்தறிவும் தெளிவான ஆதாரங்களும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. மேலும் தம் சொந்த அறிவைக் கொண்டு தீர்மானிக்காமல், அதைப்பற்றி நுட்பமாக ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் மேற்கொள்ளாமல் தமது மூதாதையர்கள் செய்த செயல்களை மேற்கொள்வது குறித்து இந்த வசனங்கள் மனிதர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றன. இதுதான் இஸ்லாம் அழைப்பு விடுக்கும் ஈமான் என்கின்ற நம்பிக்கை கொள்ளும் வழிமுறையாகும். இது நிச்சயமாக முன்சென்ற அறியாமை காலத்து மக்களின் வழிகேடான மார்க்கம் அல்ல. இது ஞானமும் உறுதியாகவும் முழுமையாகவும் நம்பிக்கை கொண்டவர்களின் மார்க்கமாகும். இவர்கள் தீவிரமாக தேடுதல் மேற்கொண்டும், ஆழமாக சிந்தனை மேற்கொண்டும் அதன் அடிப்படையில் ஏற்பட்ட தெளிவான சிந்தனையின் மூலமாக அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை (Existence) மீது உறுதியான முறையில் ஈமான் கொண்டவர்கள்.
பகுத்தறிவை பயன்படுத்தி சரியான நம்பிக்கைக்கு வருவதற்கு கட்டளையிடப்பட்டிருந்த போதிலும் தன் அறிவாற்றலின் எல்லைக்கும் புலன் அறிவின் எல்லைக்கும் அப்பாற்பட்டவைகளை மனிதனால் அறிந்து கொள்ள இயலாது. இது ஏனெனில், மனிதனின் அறிவாற்றல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அது எவ்வளவு வளர்ச்சி அடைந்த போதிலும் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்த போதிலும் நிர்ணயிக்கப்பட்ட அதன் எல்லையைக் கடக்க ஒரு போதும் அதனால் இயலாது. ஆகவே அதன் அறிந்து கொள்ளும் திறன் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாகும். இதன் காரணமாக அல்லாஹ்(சுபு)வின் எதார்த்த நிலையை (Essence of Allah) அறிந்து கொள்ளும் திறன் மனித அறிவுக்கு கிடையாது. ஏனெனில் அல்லாஹ்(சுபு) மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றின் எல்லைக்கு அப்பால் இருக்கிறான். மேலும், தன் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்றை அவனால் அறிந்து கொள்ள இயலாது. இவ்வாறாக, மனித அறிவுக்கு (Human Mind) அல்லாஹ்(சுபு)வின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ளும் திறன் இல்லை என்பது இங்கு தெளிவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. அல்லாஹ்(சுபு) வின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ள முடியாத மனிதனால் எவ்வாறு தனது அறிவை பயன்படுத்தி அவனை நம்பிக்கை கொள்ள முடியும் என்ற கேள்வி இங்கு முற்றிலும் பொருந்தாது. ஏனெனில் ஈமான் என்பது அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை பற்றிய நம்பிக்கையோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அல்லாஹ்(சுபு)வின் உள்ளமையை அவனுடைய படைப்புகளான மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றின் மூலமாகவும் அவற்றில் விரவிக் கிடக்கின்ற அத்தாட்சிகள் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ளலாம். இந்த படைப்புகளும் அதில் காணப்படுகின்ற அத்தாட்சிகளும் மனித அறிவு அறிந்து கொள்ளும் எல்லைக்குள் தான் இருக்கின்றன என்பதால் மனிதன் அவற்றை ஆராய்வதன் மூலம் அல்லாஹ்(சுபு) ஆகிய தனது படைப்பாளனை அறிந்து கொள்கிறான். ஆகவே அல்லாஹ்(சுபு)வின் (Existence) உள்ளமை பற்றிய நம்பிக்கை அறிவார்ந்ததும் மனிதனின் அறிவாற்றலின் எல்லைக்கு உட்பட்டதுமாகும். அல்லாஹ்(சுபு)வின் எதார்த்த நிலையை மனிதன் அறிந்து கொள்வது என்பது ஒருபோதும் இயலாத ஒன்றாகும். ஏனெனில் அவன்(சுபு) மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றிற்கு அப்பால் இருக்கிறான். ஆகவே அல்லாஹ்(சுபு) மனிதனின் அறிவாற்றல் திறனுக்கு அப்பால் இருக்கிறான் என்பது இங்கு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய விஷயமாகும். மனித அறிவு அதன் எல்லைக்கு அப்பால் இருப்பதை அறிந்து கொள்ளும் திறன் அற்றது. ஏனெனில் அதன் எல்லை வரையறைக்கு உட்பட்டது. மனித அறிவின் வரையறைக்கு உட்பட்ட இந்த தன்மை ஈமானை அதிகப்படுத்தும் காரணியாக இருக்கிறதே தவிர ஈமானில் குறையையும் ஐயப்படையும் ஏற்படுத்தக் கூடியதாக இல்லை. மேலும் அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள ஈமானை அறிவின் மூலமாக நாம் அடைந்து இருப்பதால் முழுமையாக நாம் அவனது(சுபு) உள்ளமையை அறிந்தவர்களாக இருக்கிறோம். அல்லாஹ்(சுபு) உள்ளமை பற்றிய நமது புலன் அறிவு நமது பகுத்தறிவோடு இணைந்து இருப்பதால் அவன்(சுபு) உள்ளமைப் பற்றிய நமது புலன் உணர்வு (Sensation) முற்றிலும் நிச்சயமான ஒன்றே. எனவே மேற்குறிப்பிட்ட விஷயம் படைப்பாளனைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளுதலையும் அவனுடைய (சுபு) தெய்வீக பண்புகள் குறித்து உறுதியான நம்பிக்கையையும் நமக்குள் கொண்டு வருகிறது. இவை எல்லாம் அல்லாஹ்(சுபு)வின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ளும் ஆற்றல் நமது அறிவுக்கு இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளும்படி செய்கின்றன. அதே வேளையில், நாம் அவன்(சுபு) மீது மிக உறுதியான ஈமான் கொண்டவர்களாக இருக்கிறோம். நமது அறிவின் வரையறைக்கு உட்பட்ட தன்மையையும் அல்லாஹ்(சுபு)வின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ளும் ஆற்றல் அதற்கு இல்லை என்று நமக்கு அவன்(சுபு) அறிவித்து கொடுத்ததையும் நாம் முற்றிலும் ஏற்றுக் கொண்டு அதற்கு உடன்பட்டவர்களாக இருக்கின்றோம். இது இயல்பாகவே மனித அறிவின் பலவீனமான தன்மையாகும். ஒப்பு நோக்கி அறிந்து கொள்ளும் வரையறைக்கு உட்பட்ட பாங்கிலேயே அது அமைக்கப்பட்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் எல்லைக்கு அப்பால் உள்ளதை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அதற்கு எல்லையற்ற அறிவுத்திறன் தேவைபடுகிறது. இத்தகைய அறிவை மனிதன் பெற்றிருக்கவுமில்லை, பெற்றுக் கொள்ளவும் அவனால் முடியாது.
தொடரும்...

Monday, November 9, 2009

கிலாபத் அமைப்பு தனித்துவஅம்சம் கொண்டது - نظام الخلافة نظام متميز

தனித்துவஅம்சம் கொண்ட கிலாபத் அமைப்பு -نظام الخلافة தொடர்பாக இங்கு விவாதிக்கப்படும் விஷயங்கள் ஒரு அரசியல் ஆய்வாகும், மேலும் இது ஆட்சியமைப்பின் மிகஉயர்ந்த பதவி குறித்தும் அதில் இடம்பெற்றுள்ள சிந்தைனைகள் குறித்தும் மேற்கொள்ளப்படும் ஆய்வாகும், முஸ்லிம்கள் அல்லாத வாசகர்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ள சிந்தனைகளின் உண்மைத்தன்மையை தீர்மானித்து அறிந்துகொள்வதற்கு எதார்த்த உண்மைகளைத் தவிர்த்து வேறு எந்த அளவுகோலின் அடிப்படையிலும் ஆய்வு செய்வார்கள் என்றால் அது மிக்பெரும் தவறாகும், அதுபோலவே முஸ்லிம்களும் அல்லாஹ்(சுபு) வின் வேதம் மற்றும் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) சுன்னா ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டே இந்த சிந்தனைகளை சீர்தூக்கி ஆய்வுசெய்து தீர்மானிக்கவேண்டும், இதுஏனெனில் இந்த சிந்தனைகளின் உண்மைத்தன்மையை இதனுடன் தொடர்பு இல்லாத வேறு சிந்தனையை வைத்து தீர்மானிக்க முடியாது, இந்த சிந்தனையை எதார்த்த உண்மைகளோடு பொருந்திப்போகும் தன்மையை வைத்தோ அல்லது சத்தியத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட இதன் அசலான விஷயத்தோடு (இஸ்லாம்) வைத்தோதான் தீர்மானிக்க முடியும், ஆகவே இந்நூலை படிக்கும் வாசகர்கள் இந்த சிந்தனைகளை துல்லியமாகவும் கவனத்துடனும் எதார்த்த உண்மைகள் பற்றிய விழிப்புணர்வுடனும் மட்டுமே படிக்கவேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறோம், ஆகவே இஸ்லாமிய நாடுகளில் இடம்பெற்றுள்ள ஆட்சியமைப்புகளிலும் உலகின் மற்ற பகுதிகளில் இடம்பெற்றுள்ள ஆட்சியமைப்புகளிலும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளையும் குழப்பங்களையும் வெளிப்டையாகவும் தெளிவாகவும் நாம் அறிந்திருக்கும் நிலையில் இந்த ஆட்சியமைப்பின் சிந்தனைகளை ஆழ்ந்து சிந்திப்பதின் மூலமாக உலகிலுள்ள ஆட்சியமைப்புகளில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வையும் மனிதர்கள் மீது ஆட்சிசெலுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் மக்களின் வாழ்வியல் விவகாரங்களை கவனித்துக் கொள்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியும், மக்களை ஆட்சிபுரியும் விவகாரத்தில் சரியான தீர்வுகள் காணப்படவேண்டுமானால் எதார்த்த உண்மைகளுக்கு பொருத்தமான முறையில் அல்லது இறைசட்டங்களுக்கு இணக்கமான முறையில் சிந்தனைகளை வழிநடத்தும் விதமாக அதன் அளவுகோல்கள் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ளவேண்டும், அதாவது சிந்தனையை மேற்கொள்வதற்கு ஒன்று எதார்த்த உண்மைகளை (reality-الواقع) அளவுகோலாக எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது ஷரியா ஆதாரங்களை(الدليل الشرعي - shar'ia evidence) அளவுகோலாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஆட்சியமைப்பு (ruling system-نظام الحكم) பற்றிய சரியான கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கு ஜனநாயக ஆட்சிமுறையை அளவுகோலாக ஆக்கிக்கொண்டு சிந்தனை மேற்கொள்வதோ அல்லது அதன் கருத்துக்களில் தாக்கம் அடைந்த நிலையில் சிந்தனை மேற்கொள்வதோ தவறான அனுகுமுறையாகும், பிரபலமான பல நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு ஜனநாயக ஆட்சிமுறை சிறந்த கொள்கை என்று கருதப்பட்டு உலகநாடுகளில் பரவியிருக்கின்ற காரணத்தால் அதன் அர்த்தத்தை விளங்கிக்கொண்டதில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் மேற்குநாடுகள் அதை ஏற்றுஅமல்படுத்திய பின்னர் கீழைநாடுகளும் அதை ஏற்றுஅமல்படுத்தின, அல்லாஹ்(சுபு) வும் அவனுடைய தூதரும்(ஸல்) கிலா*பாத்தை ஆட்சியமைப்பாக வழங்கியிருக்கிறார்கள் என்பதில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களும். கிலா*பத்தை முஸ்லிம்கள் நிலைநாட்டினார்கள் என்பதை தெளிவாக விளங்கியிருக்கும் முஸ்லிம்களும் வேறுபாடின்றி ஜனநாயகத்தின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர், ஜனநாயகம் என்ற பெயரில் அல்லது ஜனநாயக சிந்தனைகள் என்ற போர்வையில் இந்த முஸ்லிம்கள் தங்கள் அபிப்ராயங்களை மற்றவர்களுக்காக சமரசம் செய்துகொள்கின்றனர், ஆகவே கிலா*பத் பற்றிய இந்த சிந்தனைகளை ஆய்வுசெய்யும்போது வேறெந்த சிந்தனைகளையும் குறிப்பாக ஜனநாயக சிந்தனைகளை அளவுகோலாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மறுமுறையும் நாம் வாசகர்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம், உதாரணமாக. ஆட்சியமைப்புகள் பற்றி ஆய்வுசெய்யும் சிலர் தங்கள் நாடுகளில் பிரபலமாக இருக்கும் அரசமைப்புகளை (form of governments) கவனித்திருப்பார்கள். மேலும் வரலாற்றிலிருந்து சிலவகை அரசமைப்புகளை படித்தறிந்திருப்பார்கள், தர்க்கவாதத்தினால் ஏற்பட்ட யூகத்தின் அடிப்படையில் இந்த அரசமைப்புகளைப் பற்றி அவர்கள் சிலாகித்துக்கூற முற்படுகிறார்கள், ஓர் அரசில் அனைத்து மக்களும் அல்லது பெரும்பான்மை மக்கள் பொறுப்பு வகித்தார்கள் என்றால் அந்த அரசு ஜனநாயகஅரசு என்று அழைக்கப்படுகிறது. ஓர் அரசு சில மனிதர்களின் கைகளுக்குள் மட்டும் கட்டுண்டு கிடக்குமாயின் அது ஏகாதுபத்தியஅரசு என்று அழைக்கப்படுகிறது. இன்னும் ஓர் அரசில் ஆட்சிஅதிகாரம் ஒருவர் கையில் மட்டும் இருக்கும் நிலையில் மற்றவர்கள் அவரிடமிருந்து அதிகாரத்தை பெறுவார்களாயின் பிறகு அது மன்னராட்சி (monarchy) என்றோ அல்லது அரசகுடும்பத்தின் ஆட்சி(empire of royalty) என்றோ அழைக்கப்படுகிறது, ஆட்சியமைப்பு என்றால் சட்டம்இயற்றுதல் (legislation) மற்றும் ஆட்சிசெய்தல் (ruling) ஆகியவற்றின் அதிகாரத்தை பெற்றுள்ள அமைப்பு என்று பொருளாகும், இந்த இரண்டு அடித்தளங்கள் மீதுதான் ஆட்சியமைப்புகள் அனைத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்துதான் அரசுகளின் வகைகள். கூட்டாட்சி அமைப்புகளின் (federal governments) வகைகள். ஆகியவைகள் உருவாகின்றன, மேலும் இதிலிருந்துதான் அரசாங்க அமைப்புகளின் (government structures) வகைகள். தேர்தல்முறைகள். ஓட்டுரிமை மற்றும் இதுபோன்ற ஆட்சியமைப்பு விவகாரங்கள் அனைத்தும் பிறக்கின்றன.

ஜனநாய சிந்தனை இஸ்லாமிய ஆட்சியமைப்பு சிந்தனையிலிருந்து அடிப்படையிலும் அதன் விரிவாக்கத்திலும் முற்றிலும் வேறுபட்டது, அவைகளுக்கிடையிலுள்ள வேறுபாடு மிக ஆழமானதாகும் ஏனெனில் இஸ்லாத்தில் உள்ள ஆட்சியமைப்பு கிலா*பத்தாகும், இந்த ஆட்சியமைப்பின் மாதிரி (model) மற்ற எந்தவொரு ஆட்சியமைப்பிலிருந்தும் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது, இந்த ஆட்சிமுறையில் குடிமக்களின் விவகாரங்களை கவனித்துக்கொள்ளுதல் (உள்நாட்டு விவகாரம்) மற்றும் வெளிநாட்டு விவகாரம் ஆகியவற்றின் ஆட்சியமைப்பு அம்சங்களில் இடம்பெற்றுள்ள சட்டங்கள் அனைத்தும் ஷரியாவிலிருந்து பெற்ப்பட்டவையாகும், இந்த சட்டங்கள் மக்களிடமிருந்தோ அல்லது ஒருசில அறிவுஜீவிகளிடமிருந்தோ அல்லது எந்தவொரு தனிமனிதரிடமிருந்தோ பெற்பட்டதல்ல, இஸ்லாத்தை தழுவுகின்ற ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய அரபுமொழி அறிவின் அடிப்படையில் ஷரியாவை விளங்கிக்கொள்வதற்கும் ஷரியாஉரை இயம்புவதை புரிந்துகொள்வதற்கும் உரிமையுண்டு, மேலும் அரபு மொழியியல் வரம்புகளுக்கும் ஷரியாவின் வரம்புகளுக்கும் உட்பட்டு அவரது அறிவின் மூலம் ஷரியாஉரையிலிருந்து அவர் விளங்கிக்கொள்வதை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் அவருடைய அபிப்ராயத்தை ஷரியாவின் தீர்ப்பாக ஆக்கிக்கொள்வதற்கும் அவருக்கு பரிபூரணமான உரிமை உண்டு, அதுபோலவே அவர் விளங்கிக்கொண்ட அபிப்ராயத்தை ஷரியாவின் தீர்ப்பாக மற்றவர் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதற்கும் உரிமையுண்டு, அவர் ஒரு ஆட்சியாளராக இருக்கும்பட்சத்தில் இந்த அபிப்ராயத்தின்படி ஆட்சிபுரியவும். அவர் ஒரு நீதிபதியாக இருக்கும்பட்சத்தில் இந்த அபிப்ராயத்தின்படி தீர்ப்பு வழங்கவும் அவருக்கு உரிமையுண்டு, ஆனால் இஸ்லாமிய அரசின் தலைவராக உள்ள கலீ*பா ஏதேனும் ஒரு இஸ்லாமிய அபிப்ராயத்தை ஏற்றுஅமல்படுத்தினால்(adoption of rule) பின்னர் கலீ*பா ஏற்றுஅமல்படுத்தியது மட்டும்தான் இறைசட்டமாக இருக்கும். மேலும் இந்த இறைசட்டங்களை அனைத்து குடிமக்களும் ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டியது அவர்கள் மீது கடமையாகும், இதற்கு அவர்கள் அபிப்ராயங்களை கைவிட்டுவிடுவது என்று பொருளாகாது மாறாக அவர்கள் கலீ*பா ஏற்றுஅமல்படுத்தியுள்ள விதிகளின் வரம்புகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டியதும் அதற்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்கவேண்டியதும் அவர்கள் மீது சட்டரீதியாக உள்ள கடமையாகும், அதேவேளையில் அவர்கள் தங்கள் அபிப்ராயத்தின்படி மக்களுக்கு கல்வி கற்பிக்கவும் அதனடிப்படையில் மக்களை இஸ்லாத்திற்கு அழைக்கவும் அவர்களுக்கு எந்தவிதமான தடையுமில்லை, இஸ்லாம் கட்டமைக்கப்பட்டுள்ள அடித்தளமான இஸ்லாமிய அகீதாவின்(العقيدة الإسلامية) அடிப்படையில் சுதந்திரமாக சிந்தனை மேற்கொள்வதற்கு மக்கள் அனைவருக்கும் பூரண உரிமை வழங்கப்பட்டுள்ளது, ஆகவே அகீதாவிலிருந்து பிறந்துள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் சட்டம் இயற்றுதல் பற்றியும் சிந்திப்பதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு.

இது சட்டம்இயற்றுதல் மற்றும் சிந்தனை மேற்கொள்ளுதல் ஆகியவற்றைப் பொறுத்து உள்ள நிலையாகும். ஆட்சிபுரிதலைப் பொறுத்தவரை அது சட்டம்இயற்றுதலிருந்து வேறுபட்டது, அதாவது சுல்தான்(அதிகாரம்-السلطان) என்பதும் ஆட்சியமைப்பு (ruling system-نظام الحكم) என்பதும் வெவ்வேறுபட்ட விஷயங்கள், ஆட்சிசெய்யும் அதிகாரம்(சுல்தான்) என்பது இறைசட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய அதிகாரமாகும். ஆனால் ஆட்சியமைப்பு என்பது இறைசட்டங்களிலிருந்து உருவாக்கப்படும் செயலாக்கஅமைப்பாகும் نظام)-system), ஆட்சி செய்யும் அதிகாரம் என்பது ஆட்சியமைப்பில் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாவிற்கும் அதிலுள்ள ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் ஷரியா வழங்கியுள்ள அதிகாரமாகும், ஆகவே இந்த உரிமையை உம்மாவிலுள்ள அனைவரும் தேவைப்படும்போது பயன்படுத்தலாம், உம்மா பெற்றுள்ள இந்த அதிகாரத்தின் மூலமாக ஷரியாவை நடைமுறைப்படுத்தும் ஒருவரை தன்மீது நிலைநிறுத்திக் கொள்வதற்காக அல்லாஹ்(சுபு)வின் வேதத்தின் மீதும் அவனுடைய தூதரின்(ஸல்) சுன்னாவின் மீதும் தன்னுடைய ஒப்புதல் மற்றும் விருப்பத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பைஅத் செய்து ஒரு கலீ*பாவை நியமனம் செய்துகொள்கிறது, கலீ*பாவுக்கும் உம்மாவுக்கும் இடையில் நிறைவேற்றப்படும் கிலா*பத் ஒப்பந்தம் என்பது ஒரு பணிஒப்பந்தம்(service contruct) அல்ல ஏனெனில் அது ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஒப்பந்தமே தவிர உம்மா தனது உலகஆதாயத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தம் கிடையாது, இருந்தபோதிலும் ஷரியாவை நடைமுறைப்படுத்துதல் என்பது உம்மாவின் சேவையோடும் அதன் நலனோடும் தொடர்புடைய விஷயமாகும் ஏனெனில் ஷரியா என்பது உம்மாவிற்கும் மனிதகுலத்திற்கும் அல்லாஹ்(சுபு) புரிந்த அருட்கொடையாகும், எனினும் கிலா*பத் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் செயலின் நோக்கம் ஷரியாவை நடைமுறைப்படுத்துவதாக இருக்கிறதே தவிர உலகஆதாயமாக இல்லை, உடனடியாக உம்மா பெற்றுக்கொள்ளும் உலகஆதாயம் ஷரியாவிற்கு முரண்பாடாக இருக்கும்பட்சத்தில் ஷரியாவை நடைமுறைப்படுத்துவது மட்டுமே கட்டாயமாக கருதப்படும்.

ஆகவே ஒரு இறைசட்டத்தை விட்டுவிடுவதற்கு உம்மா கோரும்பட்சத்தில் அதற்கு ஒப்புக்கொள்வது கலீ*பாவின் கடமையல்ல மாறாக இவ்வாறு உம்மா செயல்படும்போது அது தனது நிலையை மாற்றிக்கொள்ளும்வரை அதனுடன் போர் செய்யவேண்டியது கலீ*பாவின் கடமையாகும், ஏனெனில் அவர் ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார், மேலும் தான் விரும்பும்போது கலீ*பாவை பதவிநீக்கம் செய்யும் உரிமையும் உம்மாவிற்கு இல்லை, அவர் இஸ்லாத்திற்கு அந்நியமானவைகளை நடைமுறைப்படுத்தும்போது அவருக்கு எதிராக ஜிஹாது செய்யும் உரிமையும் கடûயும் உம்மாவிற்கு இருக்கிறது என்றபோதும் கலீ*பாவை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் ஷரியாவிற்கே உரியது, அதாவது சட்டரீதியான முறையில் அவர்மீது உள்ள குற்றச்சாட்டு அநீதிசட்ட நீதிமன்றத்தில் (محكمة المظالم) நிரூபனம் செய்யப்பட்டால் மட்டுமே அவரை பதவிநீக்கம் செய்யமுடியும், ஆகவே கலீ*பாவை உம்மாதான் பதவியில் அமர்த்துகிறது என்றபோதும் அவர் பதவியில் அமர்ந்த பின்னர் அவர் விவகாரம் ஷரியாவின் கையில் இருக்கிறதே தவிர உம்மாவின் கையில் இல்லை.

ஆனால் ஆட்சியமைப்பு அதிகாரத்தில் உள்ள உம்மாவின் உரிமை கலீ*பாவை நியமனம் செய்வதோடு முடிந்துவிடுவதில்லை. மாறாக அந்த அதிகாரம் எப்போதுமே உம்மாவின் கையில்தான் இருந்துவரும், கிலா*பத் நிலைநாட்டப்பட்டு கலீ*பா இருக்கும்பட்சத்தில் ஷரியாவை மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தும் கடும்பணியையும் உம்மாவின் நலனை பாதுகாக்கும் பொறுப்பையும் அதன் விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் கடமையையும் ஷரியாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உம்மா தீர்மானிக்கும் முறையில் நிறைவேற்றும் அவரது செயல்பாட்டை தட்டிக்கேட்பது(ஹஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) உம்மா மீதுள்ள கடமையாகவும் உரிமையாகவும் இருக்கிறது, இந்த விவகாரத்தில் உம்மா அவரை தட்டிக்கேட்கும்போது அதற்கு அவர் கட்டுப்படுவதோடு அது ஆட்சேபிக்கும் விவகாரத்தின் சூழலையும் அது எழுப்பியுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வையும் அதனிடம் விளக்கிக் கூறவேண்டியது அவரது கடமையாகும், அவருக்கு எதிராக அது ஆயுதத்தை ஏந்தியபோதும் உம்மா கொண்டுள்ள ஆட்சேபனைகளையும் அதன் சந்தேகங்களையும் அகற்றும் வகையில் முறையான விளக்கத்தை அளிக்காதவரை அதற்கு எதிராக ஆயுதமேந்த அவருக்கு அனுமதியில்லை.

இதுதான் இஸ்லாத்திலுள்ள ஆட்சிமுறையாகும். இந்த அடிப்படை மீதுதான் ஆட்சியமைப்பு நிறுவப்பட்டுள்ளது, இந்த ஆட்சிமுறையை அமல்படுத்தும்போது அது கிலா*பத் என்ற இஸ்லாத்தின் ஆட்சியமைப்பாக இருக்குமே ஒழிய வேறெந்த ஆட்சிமுறையாகவும் இருக்காது, இந்த ஆட்சியமைப்பு ஒருமைத்துவம் கொண்ட ஆட்சியமைப்பாக(unitary system-نظام الوحدة) இருக்குமே தவிர யூனியன் ஆட்சியமைப்பாகவோ அல்லது கூட்டாட்சி அமைப்பாகவோ (union or federal system) இருக்காது, மேலும் கிலா*பத் ஆட்சியமைப்பில் அரசாங்க அமைப்பு (government structure) எதுவும் கிடையாது, கலீ*பாதான் இஸ்லாமிய அரசாக இருக்கிறார் அவரின்றி இஸ்லாமிய அரசு என்ற ஒன்று கிடையாது, ஆகவே அரசு(state) என்பதும் அரசாங்கம்(government) என்பதும் கலீ*பா மற்றும் அவரது உதவியாளர்கள்(المعاونون) என்ற ஒரே அமைப்பாகவே(single body) இருக்கும், கலீ*பாவை நியமனம் செய்யும் வழிமுறை. கலீ*பாவை தேர்வுசெய்வதில் அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதல் மற்றும் விருப்பத்தேர்வு ஆகியவை இணைந்திருக்கும் விதத்தில் பைஅத்தை நிறைவேற்றும் நடைமுறை. ஆகிய அனைத்து விஷயங்களும் கிலா*பத்திற்குரிய தனிப்பட்ட இறைசட்டங்களிலிருந்தும் ஒப்பந்தத்திற்குரிய பொதுவான இறைசட்டங்களிலிருந்தும் உருவாக்கப்பட்டிருக்கின்றன, சுததந்திர தேர்வுமுறை. அனைவரும் தங்கள் அபிப்ராயத்தை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய கண்ணோட்டதில் கிலா*பத் ஆட்சிமுறையும் ஜனநாயக ஆட்சிமுறையும் ஒன்றுபோல தோன்றினாலும் இந்த இரண்டு ஆட்சிமுறைகளும் ஒன்றுதான் என்று கருதுவது தவறானதாகும் ஏனெனில் ஜனநாயக ஆட்சிமுறையில் இந்த விஷயங்கள் சுதந்திர உரிமைகள்(freedom of rights) என்ற மனித அறிவிலிருந்து தோன்றிய கொள்கையிலிருந்து உருவாக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் கிலா*பத் ஆட்சிமுறையில் இவைகள் ஷரியாவிலிருந்து பெறப்பட்ட இறை சட்டங்களிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன, ஏனெனில் அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதலும் விருப்பமும் தேர்வில் இடம்பெற்றிருக்கவேண்டும் என்பது கிலா*பத் ஒப்பந்தத்திற்குரிய நிபந்தனை என்றும் இது நிறைவேற்றப்படா விட்டால் தேர்வுசெய்யப்படும் நபர் சட்டரீதியாக கலீ*பா பதவியை ஏற்கமுடியாது என்றும் ஷரியா விதித்திருக்கிறது.

தேர்வில் சுதந்திரத்திற்கு உத்திரவாதம் அளிக்கவேண்டும் என்பதற்கும் ஆட்சிக்குரிய ஒப்பந்தத்தில் மக்களின் ஒப்புதலும் விருப்பத்தேர்வும் கட்டாயம் பெறப்படவேண்டும் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது, முந்தய விஷயத்தில் சுதந்திரத்தை நிலைநிறுத்தவேண்டும் என்பதை மக்கள் முடிவுசெய்கிறார்கள், ஆகவே ஜனநாயகஆட்சி முறையில் பரிந்துரைக்கப்படும் இந்த சுதத்திரதேர்வு என்பது நிலைநிறுத்தப்படவில்லை என்றாலும் தேர்வு சட்ட ரீதியானதாகவே கருதப்படும், ஆனால் கிலா*பத் ஆட்சிமுறையில் மக்களின் ஒப்புதலும் விருப்பமும் கட்டாயம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்பது மக்கள் ஏற்படுத்திய சட்டமாக இல்லை மாறாக அது இறைசட்டமாக இருப்பதால் அது நிறைவேற்றப்படவில்லை என்றால் தேர்வும் நடைபெறாது ஆட்சிக்குரிய ஒப்பந்தமும் நிறைவேற்றப்படாது, கிலா*பத் ஆட்சிறை மற்றும் ஜனநாயக ஆட்சிமுறை ஆகியவை ஏகாதிபத்திய ஆட்சிமுறை அல்லது மன்னராட்சிமுறை அல்லது இராணுவ ஆட்சிமுறை அல்லது ராஜகுடும்ப ஆட்சிமுறை(empire of royalty) ஆகிய ஆட்சிமுறைகளிலிருந்து வேறுபட்டது என்றபோதும் இவ்விரண்டு ஆட்சிமுறையின் அடித்தளத்திலுள்ள சிந்தனைகள் முற்றிலும் வேறானவை, ஆகவே இஸ்லாமிய ஆட்சியமைப்பில் இடம் பெற்றுள்ள சிந்தனைகள் பற்றி ஆய்வுசெய்ய வேண்டுமானால் அது மற்ற ஆட்சிமுறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஆட்சிமுறை என்ற அந்தஸ்த்தில் அதை ஆய்வுசெய்யவேண்டும், மேலும் அது எதார்த்த உண்மைகளுக்கு இணக்கமாக இருப்பதைக் குறித்து ஆய்வுசெய்யவேண்டுமே ஒழிய மற்ற ஆட்சியமைப்புடன் அதை ஒப்புநோக்கக்கூடாது, மற்ற ஆட்சிமுறைகள் குறித்து ஆய்வுசெய்யும்போது அவை எதார்த்த உண்மைகளுக்கு இணக்கமாக இருக்கிறதா? என்பது குறித்தும். மனிதகுலத்தை உண்மையாக மனிதன் ஆட்சிசெய்வது சாத்தியமா? என்பது குறித்தும். அவ்வாறு ஆட்சிசெய்யும் பட்சத்தில் அதில் உயர்ந்த மாண்புகள் இடம்பெறுமா? என்பது குறித்தும். இந்த ஆட்சியமைப்புகளிலுள்ள சிந்தனைகளுக்கு மனிதர்களை படைத்து பரிபாலிக்கும் இறைவனான அல்லாஹ்(சுபு) விடமிருந்துள்ள ஷரியா ஆதாரம் (divine evidence) இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வுசெய்யவேண்டும்.

இதனடிப்படையில். மற்ற ஆட்சியமைப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட. முன்மாதிரியற்ற. தனித்துவம் பெற்ற ஆட்சியமைப்பு என்ற அந்தஸ்த்தில் கிலா*பத்தை ஆய்வுசெய்யவேண்டும் என்று வாசகர்களிடம் கோரிக்கை வைக்கிறோம், மேலும் தற்போது மனிதகுலத்தை ஆட்சிசெய்து கொண்டிருக்கும் ஆட்சியமைப்போடு ஒப்பிடும்போது அது மிஉயர்ந்த அந்தஸ்த்து பெற்றுள்ளது என்பதையும். அல்லாஹ்(சுபு) வின் வேதத்திலிருந்தும் அவனுடைய தூதரின்(ஸல்) சுன்னாவிலிருந்தும் பிறந்த இந்த ஆட்சியமைப்பு அது உருவான அடிப்படைக்கு முற்றிலும் இணக்கமாக இருக்கிறது என்பதையும். அதில் இடம்பெற்றுள்ள சிந்தனைகள் சரியானவை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எதார்த்த உண்மைகளை(reality-الواقع) ஆதாரமாகவும் அளவுகோலாகவும் வைத்து இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாம் வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, November 4, 2009

கலீபாவை பதவிநீக்கம் செய்தல் - عزل الخليفة

கலீ*பாவை பதவியிலிருந்து நீக்குவது அவசியம் என்ற விதத்தில் அவரது சொந்த விவகாரத்தின் சூழல் மாற்றம் அடையுமானால் உடனடியாக அவர் பதவிநீக்கம் செய்யப்படவேண்டும், மேலும் சில சூழலில் அவர் சட்டரீதியாக கலீ*பாவாக பதவியில் தொடரமுடியாது என்றநிலை ஏற்பட்டாலும் அவர் உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும், இந்த இரண்டு சூழலுக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்னவென்றால் முதல் விவகாரத்தில் அவர் பதவிநீக்கம் செய்யப்படும்போது அந்த விவகாரம் ஏற்பட்ட உடனேயே அவருக்கு கட்டுப்படும் கடமை முஸ்லிம்களை விட்டு நீங்கிவிடுகிறது. ஆனால் இரண்டாவது விவகாரத்தில் அவர் உடனேயே பதவிநீக்கம் செய்யப்பட்டாலும் பதவிநீக்கம் நிறைவேற்றப்படும்வரை அவருக்கு கட்டுப்படுவது கடமையாக இருக்கிறது, மூன்று விவகாரங்கள் அவரது சூழலை கடுமையாக பாதிக்கும்போது அதன் காரணமாக அவர் கலீ*பா பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்.
முதலாவது விவகாரம்: இஸ்லாத்தை விட்டு வெளியேறி முர்த்ததாக (مرتد ) ஆகிவிடுதல், இரண்டாவது விவகாரம்: புத்திசுவாதீனமற்ற நிலையை அடைந்த பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருத்தல்,மூன்றாவது விவகாரம்: கலீ*பாவை மிகைக்கக்கூடிய எதிரியால் அவர் பிடிக்கப்பட்டு அதிலிருந்து அவரை விடுவிக்க முடியாத நிலை ஏற்படுதல், இந்த மூன்று சூழல்களிலும் அவர் கலீ*பா பதவியிலிருந்து அகற்றப்படுவார், அவர் பதவிநீக்கம் செய்யப்படுவது பற்றிய முடிவு வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் உடனே அவர் பதவிநீக்கம் செய்யப்படுவார்.
ஆகவே இத்தகைய சூழலில் அவருக்கு கட்டுப்படுவது கட்டாயமல்ல என்பதோடு இந்த மூன்று விவகாரங்களில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டதற்குரிய ஆதாரம் தென்படுமாயின் அவருடைய கட்டளையை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் அதை செயல்படுத்த தேவையில்லை, இருந்தபோதிலும் அவரை பதவிநீக்கம் செய்வதற்கு காரணமாக உள்ள இந்த மூன்று விவகாரங்கள் ஏற்பட்டதற்குரிய ஆதாரங்கள் அநீதிசட்ட நீதிமன்றத்தில்(محكمة المظالم) நிரூபிக்கப்படவேண்டும், அநீதிசட்ட நீதிமன்றம் கலீ*பாவின் பதவிநீக்கம் பற்றி தீர்மானித்து அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டால் உடனேயே முஸ்லிம்கள் வேறொரு கலீபாவை நியமனம் செய்துகொள்ளவேண்டும்.

கீழ்கண்ட ஐந்து விவகாரங்கள் ஏற்படும்போது கலீ*பா பதவியிலிருந்து அவர் உடனடியாக விடுவிக்கப் படாவிட்டாலும் தொடர்ந்து அவர் பதவியில் நீடிக்கமுடியாது.

ஒன்று : வெளிப்படையான பாவச்செயல்களில் ஈடுபடுவதால் அவருடைய நீதிசெலுத்தும் தகுதிக்கு பங்கம் ஏற்படுதல்.

இரண்டு : அவர் பாலியல் மாற்றத்திற்கு உட்படுவதன் மூலம் பெண்ணாக மாறி இரட்டை பாலியல் பண்புகளை(bysexual) கொண்டவராக ஆகிவிடுதல்.

மூன்று : சில நேரங்களில் புத்திசுவாதீனமற்ற நிலைக்கு உட்படுதல், அவ்வப்போது இயல்புநிலைக்கு திரும்பினாலும் தொடர்ந்து பைத்தியம் பிடித்தநிலையில் இருத்தல், இந்நிலை ஏற்படும்போது அவருக்கு பாதுகாப்பாளரையோ அல்லது உதவியாளரையோ நியமிக்கமுடியாது ஏனெனில் கிலாபா ஒப்பந்தம் அவர் மீது தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தப் பட்டுள்ளது, எனவே இத்தகைய நிலை ஏற்படும்போது அவருக்கு பதிலாக மற்றொருவர் அவரது அதிகாரம் பெற்ற உதவியாளராக செயல்படுவதற்கு அனுமதியில்லை.
நான்கு : உடலில் ஊனம் ஏற்படுவதின் முலமோ அல்லது குணப்படுத்தமுடியாத நோய் ஏற்பட்டு செயல்படமுடியாத நிலைக்கு உட்படுவதன் மூலமோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ அவர் கலீபாவின் கடமைகளை சரியாக நிறைவேற்ற திறனற்ற நிலைக்கு உட்படுதல், தீனுடைய விவகாரங்களிலும் முஸ்லிம்களின் நலன்களை பேணும் விவகாரத்திலும் கலீபா மேற்கொள்ளவேண்டிய செயல்பாடுகளை நிறைவேற்றாமல் விட்டுவிடும் நிலை ஏற்படுதல், அதாவது நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் பணியை நிறைவேற்றாமல் இருத்தல், தற்போதைய கலீ*பாவை நீக்கிவிட்டு புதிய கலீபாவை நியமிப்பதன் மூலம்தான் இந்த பணியை நிறைவேற்றமுடியும் என்ற நிலை ஏற்படும்போது அவரை பதவிநீக்கம் செய்வது வாஜிபாகும்.

ஐந்து : கலீபா மீது மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவதால் ஷரியா அடிப்படையில் அவர் முஸ்லிம்களின் விவகாரங்களை நடத்திச்செல்ல முடியாத நிலை ஏற்படுதல், இந்நிலை ஏற்படும்போது கலீபாவின் பொறுப்புகளை நிறைவேற்றும் ஆற்றலை அவர் சட்டரீதியாக இழந்துவிடுகிறார். எனவே நிச்சயமாக அவர் பதவிநீக்கம் செய்யப்படவேண்டும், இரண்டு சூழல்களில் கலீபாவுக்கு இந்நிலை ஏற்படுகிறது.

முதலாவதாக : கலீபாவின் பரிவாரத்தில் இடம்பெற்றிருக்கும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கலீபா மீது ஆதிக்கம் செலுத்தி அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை ஏற்படுதல், இவ்வாறு ஏற்படும்போது அவர்கள் தங்கள் விருப்பப்படி விவகாரங்களை நடத்திச் செல்வதோடு கலீ*பாவை வற்புறுத்தி தங்கள் அபிப்ராயத்திற்கு ஒப்புக்கொள்ள வைப்பதன் மூலம் அவருடைய சொந்த அபிப்ராயத்தை விட்டுவிட்டு மற்றவர்களின் அபிப்ராயத்திற்கு செயல்படக்கூடும், இத்தகைய நிலை ஏற்படும்போது சூழல் ஆய்வுசெய்யப்படவேண்டும். மற்றவர்களின் ஆதிக்கத்திலிருந்து கலீபா மீட்சிபெறக்கூடும் என்ற நிலை இருந்தால் அதிலிருந்து மீள்வதற்கு அவருக்கு குறுகிய அவகாசம் கொடுக்கப்படவேண்டும். அதிலிருந்து அவர் மீண்டுவிட்டால் பிறகு அவர்மீது ஏற்பட்ட குறைபாடு நீங்கிவிடும் அவ்வாறு அவர் மீளவில்லை என்றால் அவரை உடனே பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்.

இரண்டாவதாக : ஆற்றல்மிக்க எதிரி ஒருவரால் கலீபா பிடிக்கப்பட்டுவிடுதல், இத்தகைய நிலை ஏற்படும்போது சூழல்கள் ஆய்வுசெய்யப்படவேண்டும், கலீபா அவர் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் அவருக்கு அவகாசம் அளிக்கப்படவேண்டும். எதிரியின் பிடியிலிருந்து அவர் மீள்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இருக்குமாயின் அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்.

மேற்கண்ட ஐந்து விவகாரங்களில் எந்தவொன்று ஏற்பட்டாலும் கலீபா பதவிநீக்கம் செய்யப்படுவார், குற்றச்சாட்டுகளை முஸ்லிம்கள் ஆதாரத்துடன் அநீதிசட்ட நீதிமன்றத்தில்(محكمة المظالم) சமர்ப்பிக்கும் பட்சத்தில் புதிய கலீபாவை மூன்று நாட்களுக்குள் முஸ்லிம்கள் நியமிப்பதற்கு ஏதுவாக நீதிமன்றம் அவர்மீது செய்யப்பட்ட கிலாபா ஒப்பந்தத்தை ரத்துசெய்து அவரை பதவிநீக்கம் செய்ய தீர்மானிக்கவேண்டும்.

Thursday, October 29, 2009

இது மாபெரும் ஜிஹாத்!

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8317446.stm

أَفْضَلُ الْجِهَادِ كَلِمَةُ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ


"ஜிஹாத்தில் சிறந்தது கொடுங்கோல் ஆட்சியாளனுக்கு முன் உரைக்கப்படும் நீதமான வார்த்தை"

(அபு தாவூத், திர்மிதி, இப்னு மாஜா)

கலீபாவை நியமனம் செய்யும் வழிமுறை : طريقة نصب الخليفة

கலீபா ஒருவரை நியமனம் செய்யவேண்டும் என்பதை ஷரியா முஸ்லிம் உம்மாவுக்கு கட்டாய கடமையாக ஆக்கியிருப்பதால் அவரை எவ்வாறு நியமனம் செய்யவேண்டும் என்ற வழிமுறையை (طريقة – method) அது விளக்கமாகக் கூறியுள்ளது, அதுதான் பைஅத் (البيعـة ) என்ற வழிமுறையாகும். குர்ஆன் சுன்னா இஜ்மாஅஸ்ஸஹாபா ஆகியவற்றிலுள்ள ஆதாரங்களின் வாயிலாக அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது, ஆகவே கலீ*பாவின் நியமனம் பைஅத் கொடுப்பதின் மூலமாக மட்டுமே நிறைவேற்றப்படுகிறது, முஸ்லிம்கள் அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) பைஅத் கொடுத்தார்கள் என்ற ஆதாரத்திலிருந்தும். இமாமுக்கு பைஅத் கொடுக்கவேண்டும் என்று அல்லாஹ்வின்தூதர்(ஸல்) முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டுள்ள ஆதாரத்திலிருந்தும் பைஅத் செய்யவேண்டும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது, அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) முஸ்லிம்கள் பைஅத் கொடுத்தது அவர்களின் நபித்தவத்திற்காக அல்ல மாறாக ஆட்சிஅதிகாரத்தை மேற்கொள்ளத்தான் முஸ்லிம்கள் அவர்களுக்கு(ஸல்) பைஅத் செய்தார்கள், ஏனெனில் அவர்கள் கொடுத்தது செயல்பாட்டின் மீதுள்ள பைஅத்தே தவிர நம்பிக்கையின் மீதுள்ள பைஅத் அல்ல, ஆகவே அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) கொடுக்கப்பட்ட பைஅத் அவர்கள்(ஸல்) ஆட்சியாளர் என்ற முறையில் உள்ளதே தவிர நபி என்பதற்காகவோ அல்லது ரஸþல் என்பதற்காகவோ அல்ல, ஏனெனில் நபியையும் அவர் கொண்டுவந்த செய்தியையும் ஏற்றுக்கொள்வது நம்பிக்கையுடன் தொடர்புடைய விஷயமே தவிர பைஅத்துடன் தொடர்புடைய விஷயமல்ல, பைஅத்தைப் பற்றி குர்ஆனிலும் சுன்னாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
நபியே! மூ*மினான பெண்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்குவதில்லை என்றும் திருடுவதில்லை என்றும் விபச்சாரம் செய்வதில்லை என்றும் தங்கள் குழந்தைகளை கொலை செய்வதில்லை என்றும் தங்கள் கைகளுக்கும் தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக்கொண்டு வருவதில்லை என்றும் இன்னும் நன்மையான காரியத்தில் உமக்கு மாறு செய்வதில்லை என்றும் அவர்கள் உம்மிடம் பைஅத் செய்தால் அவர்களுடைய பைஅத்தை ஏற்றுக்கொள்வீராக, மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் கிருபை உடையவனாகவும் இருக்கிறான், (ற்ம்வ் அல்மும்தஹினா 60 : 12)

إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ
உம்மிடம் பைஅத் செய்தவர்களெல்லாம் அல்லாஹ்விடம் பைஅத் செய்தவர்கள் ஆவார்கள். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை இருக்கிறது…… (அல்*பதஹ் 48 : 10)

உபாதா இப்ன் அஸ்ஸôமித் (ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

بايعنا رسول الله  على السمع والطاعة في المنشط والمكره، وأن لا ننازع الأمر أهله وأن نقوم أو نقول بالحق حيثما كنّا لا نخاف في الله لومة لائم
"நாங்கள் விரும்புகின்றவற்றிலும் வெறுக்கிள்றவற்றிலும் செவிமடுப்போம் என்றும் கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அதிகாரம் கொடுக்கப்ட்டவர்களுடன் சர்ச்சை செய்யமாட்டோம் என்றும் பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சாமல் எந்நிலையிலும் சத்தியத்தில் உறுதியாக இருப்போம் என்றும் அல்லாஹ்வின்தூதருக்கு நாங்கள் பைஅத் செய்தோம்."

அபூஉகைல் அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

فقد حدث أبو عقيل زهرة بن معبد عن جده عبد الله بن هشام وكان قد أدرك النبي  وذهبت به أمه زينب ابنة حميد إلى رسول الله  فقالت يا رسول الله بايعه، فقال النبي  هو صغير فمسح رأسه ودعا له
"அபூஉகைல் ஸஹ்ரா இப்ன் ம*பத் தனது பாட்டனார் அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாமிடமிருந்து அறிவிப்பதாவது. அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம் இறைத்தூதரிடம் வந்தார். அவருடன் அவர் தாயாரும் ஹமீதின் புதல்வியுமான ûஸனபும் வந்தார். ஃஃஅல்லாஹ்வின்தூதரே(ஸல்) இவரிடம் (அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம்) பைஅத் பெற்றுக்கொள்வீர்களாக என்று அவர் கூறினார், அதற்கு இறைத்தூதர்(ஸல்), அவர் சிறுவராக இருக்கிறார் என்று கூறி (பைஅத் பெற்றுக்கொள்ள மறுத்து) விட்டு அவரின் தலையை தடவிக்கொடுத்தவாறு அவருக்காக துஆ செய்தார்கள்."

அபூஹுரைரா(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم: رجل على فضل ماء بالطريق يمنع منه ابن السبيل، ورجل بايع إماماً لا يبايعه إلاّ لدنياه إن أعطاه ما يريد وفى له وإلا لم يف له، ورجل يبايع رجلاً بسلعة بعد العصر فحلف بالله لقد أعطي بها كذا وكذا فصدقه فأخذها ولم يُعط بها
"மூன்று விதமான மனிதர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவுமாட்டான் அவர்களை தூய்மைப் படுத்தவுமாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு, (அவர்கள் யாரெனில்) நடைபாதையின் பக்கமாக உள்ள அதிகமான தண்ணீரைப் (பயன்படுத்த இயலாதவாறு) வழிப்போக்கருக்கு தடுத்து வைத்துள்ள மனிதர். உலக நலனை நாடியவராக இமாமுக்கு பைஅத் செய்யும் மனிதர். அவர் நாடியது கொடுக்கப்பட்டால் அதை (பைஅத்தை) நிறைவேற்றுவார் இல்லையெனில் நிறைவேற்றமாட்டார். ஒரு மனிதருக்கு பொருளை வியாபாரம் செய்யும் மனிதர். அதை (எவருக்கும்) விற்காதபோதும் இன்னார் இன்னாருக்கு அதை விற்றதாக மாலைநேரத்தில் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்வார். உண்மை என்று எண்ணி அவரும் அதை வாங்கிச்செல்வார்"

இந்த மூன்று ஹதீஸ் அறிவிப்பிலிருந்து கலீ*பாவை நியமனம் செய்வதற்குரிய வழிமுறை பைஅத் செய்வதுதான் என்பது தெளிவாக விளங்குகிறது, உபாதா(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் தான் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) சொல்லை கேட்டுநடப்பதாகவும் அவர்களுக்கு கட்டுப்படுவதாகவும் பைஅத் கொடுத்ததாக கூறியுள்ளார், இந்த பைஅத் ஆட்சியாளர் ஒருவருக்கு கொடுக்கும் பைஅத்தாகும், அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம் அறிவித்துள்ள ஹதீஸில் தான் சிறுவராக இருந்ததால் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவரது பைஅத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார், இந்த பைஅத் ஆட்சியாளர் ஒருவருக்கு கொடுக்கப்படும் பைஅத்தாகும், அபூஹுரைரா(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது இமாமுக்கு கொடுக்கப்பட்ட பைஅத் என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கிறது, இமாம் என்பதற்கு இந்த ஹதீஸில் விளக்கம் கூறப்படாவிட்டாலும் மற்ற ஹதீஸ்களில் அதற்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் இப்ன் உமர் (ரலி) அறிவித்து முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

من بايع إماماً فأعطاه صفقة يده وثمرة قلبه فليطعه إن استطاع، فإن جاء آخر ينازعه فاضربوا عنق الآخر
"'எவரேனும் ஒருவர் தமது கரத்தால் கைலாகு(முஸ*பா) கொடுப்பதன் மூலமும் தமது இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஒரு இமாமுக்கு பைஅத் செய்தால் பிறகு அவர் இயன்றவரை அவருக்கு கட்டுப்பட்டு நடக்கட்டும், இந்நிலையில் மற்றாருவர் வந்து (அதிகாரத்தில்) அவரிடம் சர்ச்சை செய்தால் அவரது கழுத்தை வெட்டுங்கள்"

அபூஸயீது அல்குத்ரி (ரலி) அறிவித்து முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

إذا بويع لخليفتين فاقتلوا الآخر منهما
"இரண்டு கலீ*பாக்களுக்கு பைஅத் பெறப்பட்டால் இரண்டாவது நபரை கொன்றுவிடுங்கள்"

அபூஹிஸôம்(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பபட்டிருப்பதாவது.

நான் ஐந்துவருடங்கள் அபூஹுரைராவுடன் பிரயாணம் செய்திருக்கிறேன். அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அவர் அறிவித்துள்ளதை செவியுற்றிருக்கிறேன்.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

كانت بنو إسرائيل تسوسهم الأنبياء، كلما هلك نبي خلفه نبي، وأنه لا نبي بعدي، وستكون خلفاء فتكثر، قالوا: فما تأمرنا ؟ قال: فوا ببيعة الأول فالأول،

"பனூஇஸ்ராயீல் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒருநபி இறந்தபோது மற்றொரு நபி அவரிடத்திற்கு அனுப்பட்டார், நிச்சயமாக. எனக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள் ஆனால் கலீ*பாக்கள் வருவார்கள் அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், (அதுகுறித்து) ஃஃஎங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள் என்று ஸஹாபாக்கள் வினவினார்கள், அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்குப்பின் ஒருவராக பைஅத் கொடுங்கள்"

ஆகவே குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள உரைகள் கலீ*பாவை நியமனம் செய்யும் வழிமுறை பைஅத் செய்வதுதான் என்பதை தெளிவாகக் கூறுகின்றன, ஸஹாபாக்கள் அனைவரும் இதை விளங்கிக்கொண்டு பின்பற்றி வந்தார்கள், ஆகவே அபூபக்கருக்கு(ரலி) பனூஸôயிதாவின் புறநகர் பகுதியில் தனிப்பட்ட பைஅத்தும் பிறகு மதீனாவின் மஸ்ஜிதில் பொதுவான பைஅத்தும் நிûவேற்றப்பட்டது, அலீ இப்ன் அபூதாலிப்(ரலி) போன்றவர்கள் மஸ்ஜிதில் பைஅத் செய்யாவிட்டாலும் பிறகு தனிப்பட்டமுறையில் பைஅத்தை நிறைவேற்றினார்கள், மேலும் உமர்(ரலி) உஸ்மான்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோரும் பைஅத் பெற்ற பின்னரே கலீ*பாவாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள், ஆகவே முஸ்லிம்கள் கலீ*பாவை நியமனம் செய்வதற்குரிய ஒரே வழிமுறை பைஅத் செய்வதுதான் என்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பைஅத்தை நிறைவேற்றுவது குறித்த நடைமுறை செயல்பாடுகள் பற்றிய விளக்கத்தைப் பொறுத்தவரை. அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) மரணத்திற்கு பின்னர் வந்த நேர்வழி காட்டப்பட்ட கலீ*பாக்களான உமர்(ரலி) உஸ்மான்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோர் நியமனத்தில் அவை தெளிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன, இந்த நடைமுறையை அனைத்து ஸஹாபாக்களும் ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்கள், இந்த நடைமுறைகள் ஷரியாவிற்கு முரண்பாடாக இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவர்கள் அனைவரும் அவற்றை மறுத்திருப்பார்கள் ஏனெனில் இது முஸ்லிம்களின் ஒட்டுமொத்த நலனோடும் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடும் தொடர்புடைய மிகமுக்கியமான விஷயமாகும், இந்த கலீ*பாக்கள் நியமனம் செய்யபட்ட நிகழ்வுகளை ஆய்வுசெய்யும் பட்சத்தில் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) மரணத்திற்கு பின்னர் முதல் கலீ*பா நியமனம் செய்யப்பட்டபோது நிகழ்ந்த நடப்புகளை வைத்து இதற்குரிய வழிமுறையை அறிந்துகொள்ளலாம், அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) மரணத்திற்கு பின்னர் முஸ்லிம்கள் பனூஸôயிதாவின் புறநகர் பகுதியில் சந்தித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள், ஸ*து. அபூஉபாதா(ரலி). உமர்(ரலி) மற்றும் அபூபக்கர்(ரலி) ஆகியோர் மட்டுமே கலீ*பா பதவிக்கு முன்மொழியப் பட்டிருந்தார்கள், இந்த விவாதத்தின் முடிவில் முஸ்லிம்கள் அபூபக்கருக்கு (ரலி) பைஅத் கொடுத்தார்கள், மறுநாள் முஸ்லிம்கள் அனைவரும் மஸ்ஜிதிற்கு அழைக்கப் பட்டார்கள். அவர்கள் அனைவரும் அபூபக்கருக்கு (ரலி) பைஅத் கொடுத்தார்கள், இந்த பைஅத்தின் முடிவில் அபூபக்கர்(ரலி) முஸ்லிம்களுக்கு கலீ*பாவாக நியமிக்கப்பட்டார், அபூபக்கர்(ரலி) தனது நோயின் காரணமாக மரணத்தை உணர்ந்தபோது அவர் முஸ்லிம்களை அழைத்து யார் அடுத்த கலீ*பாவாக வரவேண்டும் என்பது பற்றி ஆலோசனை கலந்தார், இந்த ஆலோசனையின் மூலமாக உமர்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோரை மட்டுமே முஸ்லிம்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொண்டார் மேலும் இந்த ஆலோசனையை அபூபக்கர்(ரலி) தொடர்ந்து மூன்று மாதங்கள் மேற்கொண்டார், ஆலோசனை கலப்பதை அவர் முழுமையாக முடித்த பின்னர் முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் விரும்புவதை அறிந்துகொண்டு தனக்குப் பின்னர் உமர்(ரலி) கலீ*பாவாக வரவேண்டும் என்று அறிவிப்பு செய்தார், அபூபக்கர்(ரலி) மரணம் அடைந்தவுடன் முஸ்லிம்கள் மஸ்ஜிதிற்கு வந்து உமருக்கு(ரலி) பைஅத் செய்தார்கள், முஸ்லிம்கள் பைஅத் நிறைவேற்றப்பட்டவுடன் அவர் கலீ*பாவாக நியமிக்கப்பட்டார், அபூபக்கர்(ரலி) முஸ்லிம்களிடம் ஆலோசனை கலந்ததாலோ அல்லது ஆலோசனை முடிவை அறிவித்ததாலோ உமர்(ரலி) கலீ*பாவாக ஆகவில்லை மாறாக முஸ்லிம்கள் பைஅத் செய்து கிலா*பத் ஒப்பந்தத்தை நிறைவேற்றியதாலேயே அவர் கலீ*பாவாக நியமிக்கப்பட்டார், அதுபோலவே உமர் (ரலி) கத்தியால் குத்தப்பட்டபோது அவருக்கு அடுத்தபடியாக வரக்கூடிய கலீ*பாவை நியமனம் செய்யும்படி அவரிடம் முஸ்லிம்கள் வேண்டினார்கள் ஆனால் அதற்கு உமர்(ரலி) மறுத்துவிட்ôர், அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தவே ஸஹாபாக்களில் சிறந்தவர்களாக இருந்த ஆறு நபர்களை அவர் முன்மொழிந்தார், அவரது மரணத்திற்குப் பின்னர் அந்த அறுவர் குழு தங்களுக்குள் ஆலோசனை செய்து அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*பை (ரலி) முகவராக ஆக்கியது, அவர் முஸ்லிம்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக அவர்களுடன் ஆலோசனை செய்தார், பின்னர் அவர் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற உஸ்மானை(ரலி) கலீ*பாவாக முன்மொழிந்து பைஅத் செய்தார். பிறகு முஸ்லிம்கள் உஸ்மானுக்கு(ரலி) பைஅத் செய்தார்கள் அவர் கலீ*பாவாக நியமனம் செய்யப்பட்டார், பிறகு வந்த காலகட்டத்தில் உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்டார், அலீ இப்ன் அபூதாலிப்(ரலி) போட்டியின்றி தேர்ந்தெடுக்ப்பட்டார், அவருக்கு மதீனாவிலும் கூ*பாவிலும் இருந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் பைஅத் செய்தார்கள் அவர் கலீ*பாவாக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வுகளிலிருந்து கிலா*பத்திற்கு உரிய பைஅத்தை நிறைவேற்றும் நடைமுறை செயல்பாடு அறிந்துகொள்ளப்படுகிது, யார் கலீ*பாவாக வரவேண்டும் என்பது பற்றி முஸ்லிம்களிடம் ஆலோசனை நடத்துவதுதான் அந்த நடைமுறை செயல்பாடாகும், இவ்வாறு ஆலோசனை மேற்கொள்வதன் விளைவாக கலீ*பா பொறுப்பிற்கு வருவதற்கு குறிப்பிட்ட சிலர் மீது கருத்து உடண்பாடு ஏற்பட்டவுடன் அவர்களின் பெயர்கள் முஸ்லிம்கள் மத்தியில் அறிவிப்பு செய்யப்படும், அவர்களில் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவருடைய பெயர் அறிவிக்கப்படும், பின்னர் முஸ்லிம்கள் அவர் மீது பைஅத்தை நிறைவேற்றவேண்டும், மேலும் கலீ*பா பதவிக்கு போட்டியிட்ட மற்றவர்களும் அவர் மீது பைஅத்தை நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவார்கள், பைஅத் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர் கலீ*பாவாக நியமனம் செய்யப்படுவார்,
(ஸல்) மரணத்திற்குப் பின்னர் பனூஸôயிதா மைதானத்தில் கலீ*பாவாக வருவதற்கு தகுதி பெற்றவர்கள் என்று கருதப்பட்ட ஸ*து(ரலி). அபூஉபைதா(ரலி). அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோருக்கு மத்தியில் விவாதம் நடைபெற்றது, பின்னர் அபூபக்கருக்கு(ரலி) மீதமுள்ள மூவரும் பைஅத் செய்தது கலீ*பா பதவிக்கு அவரை தேர்வு செய்ததற்கு ஒப்பான நடவடிக்கையாக இருக்கிறது, ஆனால் அனைவரும் அவருக்கு பைஅத் செய்யும்வரை இந்த தேர்வு முஸ்லிம்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை, எனவே முஸ்லிம்களின் பைஅத் மூலமாகவே அபூபக்கர்(ரலி) கலீ*பாவாக ஆக்கப்பட்டார், அவர் இறக்கும் தருவாயில் கலீ*பா நியமனம் பற்றி முஸ்லிம்களிடம் ஆலோசனை மேற்கொண்டார், உம்ர்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோரில் உமருக்கு(ரலி) முஸ்லிம்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதை அறிந்துகொண்ட அபூபக்கர்(ரலி) உமரின்(ரலி) பெயரை அறிவித்தார், பிறகு முஸ்லிம்கள் அபூபக்கரின்(ரலி) தேர்வை அங்கீகரித்து உமருக்கு(ரலி) பைஅத் செய்து அவரை கலீ*பாவாக ஏற்றுக் கொண்டார்கள், உமர்(ரலி) இறக்கும் தருவாயில் முஸ்லிம்களின் ஆதவை பெற்றுள்ள ஆறு நபர்களை கலீ*பா பதவிக்கு முன்மொழிய முன்வந்தார், முஸ்லிம்களின் ஆதரவு பற்றிய கருத்துக்களை அவர்களிடம் கலந்தாலோசனை செய்தபின்னர் அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) உஸ்மான்(ரலி) பெயரை அறிவித்தார், முஸ்லிம்கள் அவருக்கு பைஅத் கொடுத்தபின்னர் அவர் கலீ*பாவாக ஆக்கப்பட்டார், உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்டபோது அலீ(ரலி) க்கு இணையான போட்டியாளர் எவரும் இல்லாதநிலையில் முஸ்லிம்கள் அவரை ஏகமானதாக தேர்வுசெய்து அவருக்கு பைஅத் கொடுத்து கலீ*பா பதவியில் அமர்த்தினார்கள்.

இவ்வாறுதான் கலீ*பாவை நியமனம் செய்யும் பைஅத் என்ற வழிமுறை நிறைவேற்றப்படுகிறது, முதலில் தகுதியுள்ள நபர்களை அறிந்துகொள்வதற்காக விவாதம் நடத்தப்படுகிறது. பின்னர் அவர்களில் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர் தேர்வு செய்யப்படுகிறார். பின்னர் தேர்வு செய்யப்பட்ட நபருக்கு முஸ்லிம்கள் பைஅத்தை நிறைவேற்றுகிறார்கள். பின்னர் அவர் கலீ*பாவாக நியமிக்கப்படுகிறார், அபூபக்கர்(ரலி) கலீ*பாவாக நியமிக்கப்பட்ட போது இந்த விஷயம் தெளிவாக தெரிந்தாலும் உஸ்மான்(ரலி) கலீ*பாவாக நியமிக்கப்பட்டபோது இதை திட்டவட்டமாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் அறிந்துகொள்ள முடிகிறது.

அல்மெஸ்வர் இப்ன் மஹ்ரமா(ரலி) விடமிருந்து ஹமீது இப்ன் அப்துர்ரஹ்மான் அறிவித்து. அவரிடமிருந்து அல் ஸýஹ்ரீ அறிவித்துள்ள ஹதீஸ் புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது.

'"உமர்(ரலி) நியமித்த அறுவர் குழுவில் இடம்பெற்றிருந்த ஸஹாபாக்கள் ஒன்றிணைந்து தங்களுக்குள் ஆலோசனை கலந்தார்கள், அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) அவர்களிடம். "இந்த விவகாரத்தில் நான் உங்களுடன் போட்டியிடப்போவதில்லை. ஆனால் நீங்கள் சம்மதிக்கும் பட்சத்தில் உங்களிலிருந்து ஒருவரை நான் தேர்வுசெய்ய தயாராக உள்ளளேன்ஃ என்று கூறினார், ஆகவே அவர்கள் இந்த பொறுப்புக்கு அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*பை(ரலி) நியமித்தார்கள், இந்த விஷயத்தை முஸ்லிம்கள் அறிந்தபோது அவர்கள் அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*பை(ரலி) சுற்றி குவிந்து விட்டார்கள், கலீ*பா பொறுப்புக்கு போட்டியிடும் மற்ற ஐந்து நபர்களிடம் விவாதிப்பதற்கோ அல்லது ஆதரவாக நிற்பதற்கோ ஒருவரையும் நான் காணவில்லை, அந்த இரவு முழுவதும் முஸ்லிம்கள் அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*புடன்(ரலி) ஆலோசனை கலந்தார்கள், காலையில் நாங்கள் எழுந்தபோது உஸ்மான்(ரலி) மீது கிலா*பத் தேர்வு முடிவு செய்யப்பட்டு விட்டதால் நாங்கள் அவருக்கு பைஅத் செய்தோம்"

மேலும் மெஸ்வர்(ரலி) அறிவிப்பதாவது

'"அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) எனது வீட்டின் கதவை தட்டினார் ( நாங்கள் இருவரும் கலந்தாலோசனை செய்தோம்) இரவின் ஒரு பகுதிவரை நான் விழித்திருந்தேன்(பின்னர் உறங்கிவிட்டேன்) "நீர் உறங்குவதை நான் காண்கிறேன் அல்லாஹ்வின் மீது ஆணையாக இன்றிரவு எனது கண்கள் உறக்கத்தை காணவில்லை, ஸýபைர்(ரலி) மற்றும் ஸ*து(ரலி) ஆகிய இருவரையும் அழைத்துவர ஏற்பாடு செய்வீராகஃ என்று அப்துர்ரஹ்மான்(ரலி) கூறினார், நான் அவர்களை அவரிடம் அழைத்துவந்தேன், அவர்களிடம் அவர் ஆலோசனை கலந்தார், பிறகு அவர் என்னை அழைத்து "அலீயை எனக்காக அழைத்துவருவீராகஃ என்று கூறினார், நான் அலீயை அழைத்துவந்த பின்னர் இரவு மறையும்வரை அவருடன் சப்தமின்றி மெதுவாக உரையாடினார், பிறகு சில எதிர்பார்ப்புடன் அலீ(ரலி) அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார், அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) அலீ விஷயத்தில் ஒருவித அச்சம் கொண்டிருந்தார், பிறகு அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) "உஸ்மானை எனக்காக அழைத்துவருவீராகஃ என்று கூறினார், நான் உஸ்மானை அழைத்துவந்த பின்னர் *பஜ்ர் தொழகைக்காக முஅத்தினின் அழைப்பு கேட்கும்வரை அவருடன் சப்தமின்றி மெதுவாக உரையாடினார், பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார், அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) *பஜர் தொழுகைக்கு இமாமத் செய்து முடித்த பின்னர் அந்த அறுவர்குழு மின்பர் அருகில் கூடியது, முஹாஜிர்கள் மற்றும் அன்ஸôர்களிலுள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார் மேலும் அந்த ஆண்டு உமருடன்(ரலி) ஹஜ் யாத்திரை மேற்கொண்ட இராணுவ தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார், அவர்கள் அனைவரும் மஸ்ஜிதில் கூடியபோது ஷஹாதத்தை ஓதியவாறு அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) கூறினார். "ஓ அலீயேõ நான் மக்களின் விவகாரத்தை ஆய்வுசெய்தேன். அவர்கள் உஸ்மானுக்கு இணையாக எவரையும் காணவில்லை, (إني نظرت في أمر الناس فلم أرهم يعدلون بعثمان) ஆகவே உம்மை நீர் சங்கடத்தில் ஆழ்த்திக் கொள்ளவேண்டாம் ஃ என்று கூறிவிட்டு உஸ்மானை நோக்கி. "நான் அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) மீதும் அவர்களுக்குப் பின்னர் வந்த இரண்டு கலீ*பாக்கள் வழிமுறையின் மீதும் உமக்கு பைஅத் செய்கிறேன்ஃ என்று கூறினார், ஆகவே அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) முஹாஜிர்கள் அன்ஸôர்கள் மற்றும் இராணுவத்தலைவர்கள் மற்றுமுள்ள முஸ்லிம்கள் அனைவரும் அவருக்கு பைஅத் செய்தார்கள். ஆகவே முஸ்லிம்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கிலா*பத்திற்கு உரிய போட்டியாளர் பட்டியலை உமர்(ரலி) ஆறுநபர்களுக்குள் கட்டுப்படுத்தினார், கிலா*பத்தின் போட்டியிலிருந்து அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) தன்னை விடுவித்துக் கொண்ட பின்னர் யார் கலீ*பாவாக வரவேண்டும் என்பது தொடர்பான முஸ்லிம்களின் கருத்தை அறிந்துகொண்டார், பின்னர் அவர் முஸ்லிம்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு அவர்கள் விரும்பும் நபரின் பெயரை அறிவித்தார், இந்த அறிவிப்புக்குப் பின்னர் உஸ்மானுக்கு(ரலி) பைஅத் செய்யப்பட்டு அந்த பைஅத்தின் மூலமாக அவர் கலீ*பாவாக நியமிக்கப்பட்டார், ஆகவே கிலா*பத்திற்கு முன்மொழியப்படும் போட்டியாளர்களின் பட்டியல் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவை பெற்றுள்ள குறிப்பிட்ட பிரதிநிதிகளுடன் மட்டும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் கலீ*பாவை நியமனம் செய்வது தொடர்பான ஹுகும்ஷரியாவாகும், இவ்வாறு பட்டியல் முடிவான பின்னர் அவர்களுடைய பெயர்கள் முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களில் ஒருவரை அனைத்து முஸ்லிம்களுக்கும் உரிய கலீ*பாவாக தேர்வுசெய்யும்படி கேட்டுக்கொள்ளப்படும், பெரும்பான்மையான முஸ்லிம்கள் எவரை தேர்வுசெய்துள்ளார்கள் என்பதை முறையாக அறிந்துகொண்ட பின்னர் அனைத்து முஸ்லிம்களிடமிருந்தும் அவருக்காக பைஅத் பெற்றுக்கொள்ளப்படும் மக்கள் அனைவரும் அவரை தேர்வுசெய்வதில் பங்கேற்றாலும் அல்லது பங்கேற்காவிட்டாலும் சரியே.

இதுதான் கலீ*பாவை நியமனம் செய்வதற்குரிய வழிமுறையாகும் ஏனெனில். கிலா*பத்திற்கு போட்டியிடுபவர்களின் பட்டியலை உமர்(ரலி) ஆறுநபர்களுக்குள் கட்டுப்படுத்தியபோது ஏற்பட்ட இஜ்மாஅஸ்ஸஹாபா. அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) யார் கலீ*பாவாக வரவேண்டும் என்பது குறித்த முஸ்லிம்களின் அபிப்ராயத்தை திரட்டியபோது ஏற்பட்ட இஜ்மாஅஸ்ஸஹாபா. "நான் மக்களின் விவகாரத்தை ஆய்வுசெய்தேன். அவர்கள் உஸ்மானுக்கு இணையாக எவரையும் காணவில்லை (إني نظرت في أمر الناس فلم أرهم يعدلون بعثمان)ஃ என்று கூறியபின்னர் முஸ்லிம்கள் உஸ்மானை தேர்வுசெய்துள்ளார்கள் என்று அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப்(ரலி) தெளிவாக அறிவித்து மக்களை பைஅத் செய்யும்படி கேட்டுக்கொண்டபோது ஏற்பட்ட இஜ்மாஅஸ்ஸஹாபா. இவை அனைத்தும் கலீ*பாவின் நியமனம் குறித்த ஹுகும்ஷரியாவை தெளிவுபடுத்துகின்றன.

இந்த விஷயத்தில் இன்னும் இரண்டு விவகாரங்களை விளக்கவேண்டியிருக்கிறது, முதலாவதாக. கலீ*பாவை நியமனம் செய்யும் முஸ்லிம்கள் யார்? அவர்கள் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்களா? அல்லது குறிபிட்ட எண்ணிக்கையுள்ள சில முஸ்லிம்களா? அல்லது அனைத்து முஸ்லிம்க,ளுமா? இரண்டாவதாக. இந்த நூற்றாண்டின் நவீன தேர்தல்முறைகளிலுள்ள ஓட்டுப்பதிவு. ஓட்டுச்சீட்டை பயன்படுத்துதல். மற்றும் ஓட்டு எண்ணிக்கை ஆகிய செயல்முறைகள் இஸ்லாத்துடன் ஒத்துப்போகக்கூடியதா? அவற்றை இஸ்லாம் அனுமதிக்கிறதா அல்லது இல்லையா?

முதலாவது விவாகாரத்தைப் பொறுத்தவரை அல்லாஹ்(சுபு) ஆட்சிஅதிகாரத்தை முஸ்லிம் உம்மாவிற்கு வழங்கியதன் மூலம் கலீ*பாவை நியமனம் செய்வதை முஸ்லிம்களின் கடமையாகவும் உரிமையாகவும் ஆக்கியிருக்கிறான், மேலும் அவன்(சுபு) இதை முஸ்லிம்களிலுள்ள மற்ற கூட்டத்தினரை விலக்கிவிடும் வகையில் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினருக்கோ அல்லது மற்ற ஜமாஅத்தை விலக்கிவிடும் வகையில் ஒரு குறிப்பிட்ட ஜமாஅத்திற்கோ உரிமையாக்கி வைக்கவில்லை ஏனெனில் பைஅத் கொடுப்பது அனைத்து முஸ்லிம்களின் மீதுள்ள கட்டாய கடமையாக இருக்கிறது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية'
"எவர் தனது கழுத்தில் பைஅத் இல்லாத நிலையில் மரணம் அடைகிறாரோ அவர் ஜாஹிலியத்தில் மரணம் அடைந்தவர் ஆவார்"

இது முஸ்லிம்கள் அனைவருக்குமுள்ள பொதுவான கட்டளையாகும் , ஆகவே செல்வாக்கு பெற்ற முஸ்லிம்கள் மட்டும் கலீ*பாவை நியமனம் செய்வதற்கு ஏகபோக உரிமை பெற்றிருக்கவுமில்லை மற்ற முஸ்லிம்களின் பங்களிப்பை அவர்கள் புறக்கணிக்கவும் முடியாது, எந்வொரு நபருக்கும் இதில் ஏகபோக உரிமை கிடையாது, மாறாக விதிவிலக்கின்றி இந்த உரிமை அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானதாகும், இந்த உரிமையில் முஸ்லிம்களிலுள்ள தீயவர்களுக்கும் (*பாஜிர்) நயவஞ்சகர்களுக்கும் (முனா*பிகீன்) அவர்கள் புத்திசுவாதீனமுள்ள வயதுவந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் உரிமையுண்டு. ஏனெனில் இந்த விவகாரத்தில் ஷரியாஉரை வயதுக்கு வராத சிறுவர்களின் பைஅத்தை மறுப்பதைத் தவிர்த்து மற்ற முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவான முறையில் வந்திருக்கிறதே தவிர எவரையும் இதிலிருந்து கட்டுப்படுத்தும் வகையில் வரவில்லை, ஆகவே ஷரியாஉரையின் அர்த்தத்தை பொதுவான முறையில்தான் எடுத்துக் கொள்ளமுடியும்.

எனினும். இந்த உரிமையை எல்லா முஸ்லிம்களும் பிரயோகித்தே தீரவேண்டும் என்பது நிபந்தனையல்ல, மேலும் பைஅத் செய்வது கட்டாய கடமை என்றபோதும் அது *பர்லுல் கி*பாயாவாக(கூட்டுக்கடமை) இருக்கிறது என்ற அடிப்படையில் முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தினர் இதை நிறைவேற்றும் பட்சத்தில் மற்ற முஸ்லிம்கள் மீதுள்ள கடமை நீங்கிவிடுகிறது, ஆனால் கலீ*பாவை தேர்வுசெய்யும் விஷயத்தில் அனைத்து முஸ்லிம்களின் உரிமையும் நிலைநாட்டப்படும் விதத்தில் அவர்களின் அபிப்ராயம் அறிந்து கொள்ளப்பட வேண்டும். அவர்கள் இந்த உரிமையை செயல்படுத்த முன்வந்தாலும் முன்வராவிட்டாலும் சரியே, வேறுவகையில் கூறுவதென்றால் கலீ*பாவை தேர்வுசெய்யும் தேர்தலில் அனைத்து முஸ்லிம்களும் பங்குகொள்ளும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். அவர்கள் அனைவரும் இதில் பங்குகொள்ள ஆர்வம் காட்டினாலும் காட்டாவிட்டாலும் சரியே, அல்லாஹ்(சுபு) முஸ்லிம்கள் மீது விதித்துள்ள கடமையை நிறைவேற்றி பாவத்திலிருந்து மீளும் வகையில் கிலா*பத்தை நிலைநிறுத்தும் கடமையை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம்க் அனைவருக்கும் வாய்ப்பு வசதிகள் அமைத்து தரப்படவேண்டும் என்பதுதான் நிபந்தனையே தவிர இந்தக் கடமையை நிறைவேற்றும் பணியில் அனைத்து முஸ்லிம்களும் ஈடுபட்டே ஆகவேண்டும் என்பது நிபந்தனையல்ல, இதுஏனெனில் முஸ்லிம்களின் ஒப்புதலின் மீது கிலா*பத் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை அல்லாஹ்(சுபு) கட்டாயமாக ஆக்கியிருக்கிறானே தவிர அவர்கள் அனைவரும் இதில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கவில்லை, இந்த விவகாரத்தில் இரண்டு முடிவுகள் எய்தப்படுகின்றன, ஒன்று. கிலா*பத்தை நிலைநாட்டுவதில் அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதலை பெறும் நிலை, மற்றொன்று. அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதலை பெறமுடியாத நிலை, எனினும் இந்த இரண்டு நிலைகளிலும் முஸ்லிம்கள் அனைவரும் கலீ*பாவின் நியமனத்தில் பங்குகொள்வதற்கு ஏற்ப வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்பதுதான் கட்டாயமாகும்.

முதல்நிலையைப் பொறுத்தவரை உள்ள விளக்கமாவது:

கலீபாவை நியமனம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இருக்கவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. மாறாக கலீ*பாவுக்கு பைஅத் கொடுப்பதில் எத்தகைய எண்ணிக்கை உள்ள முஸ்லிம்களும் இடம்பெறுவதற்கு அனுமதியுண்டு, மேலும் மற்ற முஸ்லிம்கள் வெளிப்படுத்தும் மௌனத்தின் மூலமோ அல்லது கட்டுப்படுவதற்கு இணக்கம் காட்டுவதன் மூலமோ அல்லது வேறுவகையில் தங்கள் ஒப்புதலை வெளிப்படுத்துவதன் முலமோ இந்த பைஅத்திற்கு உரிய அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்படும், இதனடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட கலீ*பா அனைத்து முஸ்லிம்களுக்கும் கலீ*பாவாக ஆகிவிடுவார், மூள்றே மூன்று நபர்களால் நியமனம் செய்யப்பட்டாலும் அவர்தான் சட்டரீதியான கலீ*பாவாக இருப்பார் ஏனெனில் கலீ*பாவை நியமனம் செய்ததின் மூலம் முஸ்லிம்கள் மீதுள்ள கூட்டுக்கடமை(*பர்லுல் கி*பாயா) நிறைவேற்றப்பட்டு விடுகிறது, முஸ்லிம்கள் தங்கள் அபிப்ராயங்களையும் விருப்பங்களையும் தடையின்றி முழுமையாக தெரிவிப்பதற்குரிய வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் வெளிப்படுத்தும் மௌனம் அல்லது அவர்கள் கட்டுப்படுவதற்கு காட்டும் இணக்கம் அல்லது அவர்கள் சம்மதத்தை சுட்டிக்காட்டும் பல்வேறு நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் ஒப்புதல் உறுதிசெய்யப்படுகிறது, எனினும் முஸ்லிம்கள் அனைவரின் ஒப்புதலை பெறுவதை நிறைவேற்ற முடியதாபோது பெரும்பான்மை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக விளங்கும் ஒரு குழுவினர் இணைந்து கலீ*பா நியமனத்தை முறையாக நிறைவேற்றலாம் இந்தக் குழுவில் இடம்பெற்ற நபர்களின் எண்ணிக்கை எவ்வாறு இருந்தபோதிலும் சரியே, அவ்வாறு இல்லை என்றால் பிறகு கிலா*பத்தை நிலைநாட்ட முடியாது, இத்தயை தருணங்களில் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றவர்கள் பைஅத்தை நிறைவேற்றுவதன் மூலம் கலீ*பாவை நியமனம் செய்யலாம் என்று சில சட்டஅறிஞர்கள் தீôமானிக்கிறார்கள். ஏனெனில் கலீ*பா ஆவதற்கு தகுதிபெற்ற எந்த நபருக்கும் முஸ்லிம்களின் ஒப்புதலை பெறுவதற்கு ஆற்றல்பெற்றுள்ள செல்வாக்கு மிக்கவர்கள் ஒரு குழுவாக இணைந்து பைஅத் செய்வதன் மூலம் கிலா*பத்தை நிலைநாட்டலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள், ஆகவே இத்தகைய தருணங்களில் செல்வாக்கு மிக்க மனிதர்களின் பைஅத் கிலா*பத்தை நிலைநாட்டுவதில்லை அல்லது கிலா*பத்தை நிலைநிறுத்துவதற்கு செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள் பைஅத் செய்யவேண்டும் என்ற நிபந்தனையும் இல்லை. மாறாக செல்வாக்கு மிக்க மனிதர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக இருப்பதால் அவர்கள் பைஅத்தை நிறைவேற்றுவதும் மற்ற முஸ்லிம்கள் இதை ஏற்றுக்கொள்ளும் வகையில் மௌனத்தை வெளிப்படுத்துவதும் அவர்களின் ஒப்புதலை சுட்டிக்காட்டும் ஆதாரங்களாக இருக்கின்றன, ஆகவே முஸ்லிம்களின் ஒப்புதலுடன் செய்யப்படும் பைஅத்தை சுட்டிக்காட்டும் ஒவ்வொரு ஆதாரமும் கிலா*பத் ஒப்பந்தம் முறையாக நிறைவேற்றப்பட்டு கலீ*பா நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது, மேலும் இந்த பைஅத்தின் மூலம் நியமிக்கப்பட்ட கலீ*பா சட்டரீதியாக நியமிக்கப்பட்டவர்தான்.

இதனடிப்படையில் முஸ்லிம்களுக்கு தங்கள் ஒப்புதலை தெரிவிப்பதற்கு முழுமையான வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் பைஅத்தை நிறைவேற்றுதல் அல்லது முஸ்லிம் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் பைஅத்தை நிறைவேற்றுதல் அல்லது முஸ்லிம்களில் ஒருகுழுவினர் பைஅத்தை நிறைவேற்றும்போது மற்ற முஸ்லிம்கள் மௌனமாக இருந்து அதை ஏற்றுக்கொள்வதோடு தங்கள் கட்டுப்படுதலை நிறைவேற்றுவதற்கு துரிதம் காட்டுதல் அல்லது இதுபோன்ற எந்த முறைகளிலோ முஸ்லிம்களிடம் ஒப்புதலை பெற்றதற்குரிய ஆதாரங்கள் உறுதிப்பட்ட நிலையில் எந்த கூட்டத்தினரும் கலீ*பாவை நியமித்து கிலா*பத்தை நிலைநாட்டலாம் என்பதுதான் கிலா*பத்தை நிலைநிறுத்துவதற்குரிய ஷரியாவின் விதிமுறையாகும், இந்த கூட்டத்தினர் செல்வாக்கு பெற்ற மனிதர்களாக இருக்கவேண்டும் என்றோ அல்லது அவர்கள் நான்கு என்ற எண்ணிக்கையிலோ அல்லது நாநூறு என்ற எண்ணிக்கையிலோ இருக்கவேண்டும் என்றோ அல்லது அவர்கள் தலைநகரில் வசிப்பவர்களாக இருக்கவேண்டும் என்றோ அல்லது அவர்கள் மாகாணங்களில் வசிப்பவர்களாக இருக்கவேண்டும் என்றோ இறைசட்டம் (divine law - ஹுகும்ஷரியா) கூறவில்லை. மாறாக அனைத்து முஸ்லிம்களுக்கும் அவர்களின் அபிப்ராயங்களையும் விருப்பங்களையும் தடையின்றி வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஒப்புதலை சுட்டிக்காட்டுகின்ற ஆதாரம் முறையாக வெளிப்படும் வகையில் பைஅத் நிறைவேற்றப்படவேண்டும் என்றுதான் இறைசட்டம் கூறுகிறது.

அனைத்து முஸ்லிம்கள் என்பதன் பொருள் இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டு எல்லையில் வாழுகின்ற முஸ்லிம்கள் அனைவரும் என்பதாகும், அதாவது. கிலா*பத் அரசு நிலைபெற்றிருக்கும் பட்சத்தில் அதன் குடிமக்களாக இருப்பவர்கள் என்றும். கிலா*பத் அரசு இல்லாத பட்சத்தில் அதை நிலைநாட்டுவதற்காக கிலா*பத் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முஸ்லிம்கள் என்றும் பொருளாகும், இந்த பட்டியலில் அடங்காத உலகில் வாழும் இதர முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களின் ஒப்புதலை பெறுவது அவசியமல்ல ஏனெனில் அவர்கள் இஸ்லாமிய அதிகார அமைப்பிலிருந்து விலகியபடி வாழ்ந்துகொண்டிருக்கும் மூ*மின்கள் ஆவார்கள் அல்லது தாருல்கு*ப்ரில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூ*மின்கள் ஆவார்கள், எனவே அவர்கள் தாருல்இஸ்லாத்தின் செயல்பாடுகளில் பங்குகொள்ள முடியாது என்பதால் ஒப்பந்த பைஅத்தில் பங்குகொள்வதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது, ஆனால் அவர்கள் கட்டுப்படும் பைஅத்தில் கட்டாயம் பங்குகொள்ளவேண்டும் ஏனெனில் கட்டுப்படும் பைஅத்தை நிறைவேற்றாதவர்கள் இஸ்லாமிய அதிகார அமைப்புக்கு எதிராக கலகம் செய்கிறவர்கள் ஆவார்கள், தாருல்கு*ப்ரில் வாழ்கின்றவர்கள் உண்மையில் கிலா*பத்தை நிலைநாட்டாதவரையில் அல்லது கிலா*பத்தின் அதிகாரத்திற்குள் வராதவரையில் அவர்கள் இஸ்லாமிய அதிகார அமைப்பை பெறாதவர்களாகவே இருந்துவருவார்கள், ஆகவே சட்டரீதியாக கலீ*பாவை நியமனம் செய்வதன் மூலம் உண்மையாக இஸ்லாத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் முஸ்லிம்களுக்குத்தான் ஒப்பந்த பைஅத்தை நிறைவேற்றும் உரிமை இருக்கிறது. மேலும் அவர்களின் ஒப்புதலை பெறுவதுதான் கிலா*பத் ஒப்பந்தத்தை சட்டரீதியாக நிறைவேற்றுவதற்கு அவசியமாக இருக்கிறது, இத்தகைய கருத்து அறிவுரீதியான ஆய்விலிருந்து பிறந்த விளக்கம் என்றோ அல்லது இதற்கு ஆதாரம் இல்லை என்றோ கூறுவது தவறாகும், இந்த விளக்கத்தைப் பொறுத்தவரை இறைசட்டத்தை பிரயோகப்படுத்தும் விஷயத்தைக் (مناط subject) குறித்த விளக்கமே தவிர இறைசட்டத்தைக் குறித்த விளக்கமல்ல, இறைசட்டத்தை பிரயோகப்படுத்தும் எதார்த்த உண்மைகளை (realities) ஆய்வுசெய்வதற்கு ஷரியா ஆதாரம் தேவையில்லை, உதாரணமாக. இறந்தவைகளின் மாமிசத்தை உண்பதற்கு ஷரியா தடைசெய்துள்ளது, இறந்தவைகளின் மாமிசம் எதுவென்று ஆய்வுசெய்து அறிந்துகொள்வது அந்த சட்டத்தை பிரயோகப் படுத்துவதற்குரிய விஷயத்தை (مناط-subject) ஆய்ந்தறிவதாகும், ஆகசே சட்டத்தை பிரயோகப்படுத்தும் விஷயம் (subject)அதற்குரிய இறைசட்டத்தோடு தொடர்புடையதாகும், ஆகவே விஷயம் என்பதும் அதனுடன் தொடர்புடைய இறைசட்டம் என்பதும் வெவ்வேறானவை, விஷயத்தை (subject) ஆய்வுசெய்வதற்கு அதன் எதார்த்தநிலையை (Reality) ஆய்வுசெய்யவேண்டும், பிறகுதான் அந்த விஷயத்திற்குரிய இறைசட்டம் எதுவென்று அறிந்துகொள்ள முடியும், ஆகவே விஷயத்தின் எதார்த்தநிலையை ஆய்வுசெய்வதற்கு ஷரியா உரையின் ஆதாரம் தேவையில்லை, உண்மைப் பொருட்களின் எதார்த்தநிலை அல்லது விஷயத்தின் எதார்த்தநிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள அறிவுரீதியாக ஆய்வுசெய்ய வேண்டுமே ஒழிய ஷரியா ஆதாரத்தின் அடிப்படையில் அல்ல, ஆகவே முஸ்லிம்கள் கலீ*பாவை நியமனம் செய்யவேண்டும் என்பது இறைசட்டமாகும். மேலும் இந்த நியமனம் முஸ்லிம்களின் ஒப்புதல் மூலமும் தேர்ந்தெடுத்தல் மூலமும் நிறைவேற்றப்படவேண்டும் என்பதும் இறைசட்டமாகும், இந்த சட்டங்களுக்கு அவை இறைசட்டங்கள்தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரம் தேவையில்லை. ஆனால் எவர்களால் நியமனம் நிறைவேற்றப்படவேண்டுமோ அந்த முஸ்லிம்கள் யார்? அவர்களின் ஒப்புதலையும் விருப்பத்தையும் எவ்வாறு நிறைவேற்றுவது? இவைதான் மேற்கூறிய இறைசட்டங்களை பிரயோகப்படுத்துவதற்குரிய எதார்த்தவிஷயமாகும் (subject) அதாவது இவைதான் மேற்கூறிய இறைசட்டங்களை பிரயோகப்படுத்துவதற்குரிய மனாத் (مناط-subject) ஆகும், ஒரு குறிப்பிட்ட இறைசட்டத்தை அதற்குரிய மனாத்தின் மீது பிரயோகப்படுத்துவதுதான் அந்த இறைசட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதாகும், ஆகவே இறைசட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அதனோடு தொடர்புடைய மனாத்தை ஆய்வுசெய்வது அவசியமாகும்.

சட்டத்தின் விஷயமும் (manaat ul hukm - subject of the rule) சட்டத்தின் காரணமும் (illat ul hukm – reason of the rule)வெவ்வேறானவை. அவற்றை இணைத்துக் கூறுவது தவறாகும் ஏனெனில் இதற்கு ஆதாரம் இல்லை, இவ்விரண்டிற்கும் மத்தியில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது, இல்லத் (reason -காரணம்-علة) என்பது சட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்த சட்டம் வந்ததிற்குரிய காரணத்தை குறிப்பிடுகிறது, அதாவது இல்லத் என்பது சட்டத்தை வழங்கிய அல்லாஹ்(சுபு) அதை எதற்காக கொடுத்தான் என்பதற்குரிய நோக்கத்தை குறிப்பிடுகிறது, ஒரு இறைசட்டத்திற்கு இல்லத் இருக்கிறது என்பதற்கு ஷரியாஉரையில் அதை சுட்டிக்காட்டும் ஆதாரம் இருக்கவேண்டும், சட்டத்தின் இல்லத்தை அறிந்துகொள்வதன் மூலம் சட்டத்தை கொடுத்த அல்லாஹ்(சுபு) வின் நோக்கத்தை அறிந்துகொள்ள முடியும், ஆனால் மனாத் என்பது எந்த விஷயத்தின் மீது அந்த சட்டம் கொடுகப்பட்டிருக்கிறதோ அந்த விஷயம் மற்றும் அதன் எதார்த்தநிலை ஆகியவையாகும், ஆகவே ஒரு சட்டத்தை அது எந்த மனாத்தின் மீது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதன் மீது பிரயோகப்படுத்துகிறோமே தவிர அந்த சட்டத்தின் ஆதாரத்துடனோ அல்லது அந்த சட்டத்தின் இல்லத்துடனோ பிரயோகப்படுத்துவதில்லை, எந்த விஷயத்தின் மீது சட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அல்லது எந்த பிரச்சினைக்காக சட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அது அந்த விஷயத்திற்கோ அல்லது பிரச்சினைக்கோ தீர்வு வழங்குவதற்காகத்தான் கொடுக்ப்பட்டிருக்கிறது, ஆகவே சட்டம் எப்போதும் அதன் மனாத்தின் மீது தொங்கிக் கொண்டிருக்கும். அதேவேளையில் சட்டம் அதன் இல்லத்தோடு சுழன்று கொண்டிருக்கும், சட்டத்தின் மனாத் என்பது சட்டத்திற்குரிய ஷரியா ஆதாரத்திலிருந்து வேறுபட்டது மேலும் சட்டத்தை உறுதிசெய்வது சட்டத்தின் இல்லத்தை உறுதிசெய்வதிலிருந்து வேறுபட்டது, ஷரியாஉரைகளில் பொதிந்துள்ள தர்க்க வாதங்களை சரியாக புரிந்துகொள்வது இல்லத்தை ஆய்ந்தறிதல் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் இது ஷரியா ஆதாரங்களை புரிந்துகொள்வதாகுமே தவிர மனாத்தை புரிந்துகொள்வது ஆகாது ஏனெனில் மனாத் என்பது ஷரியா ஆதாரங்களிலிருந்து வேறுபட்டது. அது சட்டத்தை பிரயோகப்படுத்தும் எதார்த்தத்தையோ (reality -الواقع) அல்லது பிரச்சினையையோ(ல்ழ்ர்க்ஷப்ங்ம்-المسألة) அல்லது விஷயத்தையோ(subject-مناط) குறிப்பிடுகிறது.
உதாரணமாக. ஹமர் என்று அழைக்கப்படும் மதுபானம் ஹராமாகும், மதுபானத்தை அருந்துவதற்குரிய தடை அதன் இறைசட்டமாக இருக்கிறது, சிலவகை பானங்கள் அவை ஹராமானதா அல்லது இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக அவை மதுபானமா அல்லது இல்லையா என்ற விசாரணையை மேற்கொள்வதுதான் மனாத்தை ஆய்வுசெய்வதாகும், அதாவது அந்த குறிப்பிட்ட பானத்தின் தன்மைதான் இங்கு மனாத் என்று அழைக்கப்படுகிறது, ஆகவே ஒரு பானத்தை அது ஹராமா அல்லது இல்லையா என்பதை உறுதிசெய்ய அதில் மது (alchohol) இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை ஆய்வுசெய்வது அவசியமாகும், இந்த இடத்தில் பானத்தின் உண்மைநிலையை ஆய்வுசெய்வது மனாத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான், மற்றொரு உதாரணம். உலூ(الوضوء) செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட தண்ணீர் முத்தலக் நீர்(unrestricted water) என்று இறைசட்டம் கூறுகிறது, உலூ செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதா அல்லது இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்கு தண்ணீர் கட்டுப்படுத்தப்படாமல் ஓடிக்கொண்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதை ஆய்வுசெய்வதுதான் மனாத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் என்பதாகும், ஆகவே தண்ணீர் தடையின்றி ஓடிக்கொண்டிருக்கிறதா அல்லது தேங்கிக்கிடக்கிறதா என்பதை தீர்மானிப்பதற்கு அதன் உண்மைநிலையை ஆய்வுசெய்வது அவசியமாகும், இவ்வாறு தண்ணீரின் எதார்த்தநிலையை ஆய்வுசெய்வதைத்தான் மனாத்தை உறுதிப்படுத்திக் கொள்வது என்று குறிப்பிடப்படுகிறது, ஹதûஸ வெளிப்படுத்தியவர் (பின்துவாரத்தின் வழியாக காற்று வெளியேறுதல்) தொழுகையை நிறைவேற்றுவதற்கு உலூ செய்யவேண்டும் என்று கூறும்போது அந்த மனிதர் ஹதûஸ வெளிப்படுத்தியவராக (முஹ்தஸ்) இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை விசாரணை செய்வதுதான் மனாத்தை உறுதிப்படுத்துவதாகும், இன்னும் இவ்வாறு கூறிக்கொண்டே செல்லலாம், அல்முஆ*பகாத் (الموافقات) என்ற நூலில் அஷ்ஷாத்தபீ (الشاطبي) கூறியிருப்பதாவது: இந்த விஷயத்திலும் மற்றும் இதுபோன்றவற்றிலும் அவற்றின் மனாத்தை நாம் விளங்கிக் கொள்ளவேண்டியிருப்பதால் அவற்றின் எதார்த்தநிலைகளின் அடிப்படையில் ஷரியா ஆதாரங்களை எடுத்துக்கொள்ளவேண்டும், மனாத்தை ஆய்வுசெய்து உறுதிப்படுத்தும் செயலோடு இஜ்திஹாதை இணைக்கவேண்டும், அவ்வாறு செய்வதற்கு சட்டத்தை கொடுத்தவரின் (அல்லாஹ் -சுபு) நோக்கத்தைப்பற்றிய அறிவும் தேவையில்லை அரபிமொழிப் புலமையும் தேவையில்லை. ஏனெனில் இஜ்திஹாதை மேற்கொள்வதின் நோக்கம் சட்டத்தோடு தொடர்புடைய விஷயத்தை அதாவது மனாத்தை உள்ளபடியே அறிந்துகொள்வதுதான், ஆகவே மனாத் (விஷயம் -subject) என்னவென்று அறிந்துகொள்வதற்கு அறிவுத்திறன் தேவைப்படுகிறது. அது இல்லாமல் விஷயத்தை (மனாத்தை) தீர்மானமாக அறிந்துகொள்ள இயலாது, இதனடிப்படையில் முஜ்தஹிதாக உள்ளவர் அறிவுத்திறன் பெற்றவராக இருக்கவேண்டும். மேலும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் ஏற்படும் தேவையின் அடிப்படையில் இறைசட்டங்களை பிரயோகப்படுத்துவதற்கும் ஒரு முஜ்தஹித் அறிவுத்திறன் நிறைந்தவராக இருக்கவேண்டும்.

ஷரியா உரையில் பொதிந்துள்ள சட்டம் வந்ததற்குரிய காரணங்களை (நோக்கங்களை) ஆய்வுசெய்து அறிந்து கொள்வதுதான் இல்லத்தை(reason-காரணம்-علة) கண்டுபிடித்தல் என்று கூறப்படுகிறது, இது ஷரியா உரையை (شرعي النص) விளங்கிக்கொள்வதாகும். ஆகவே அது மனாத்திலிருந்து வேறுபட்டது, மனாத்தை உறுதிப்படுத்துதல் என்பது சட்டத்தை பிரயோகப்படுத்தும் விஷயத்தை அல்லது பிரச்சினையை அல்லது எதார்த்தத்தை கண்டுபிடித்தலாகும், இதனடிப்படையில் மனாத்தை ஆய்வுசெய்பவர் முஜ்தஹிதாகவோ அல்லது முஸ்லிமாகவோ இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாறாக அவர் அந்த விஷயத்தில் அறிவு பெற்றவராக இருக்கவேண்டும் என்பதுதான் அவசியமாகும், ஆகவே கலீ*பா நியமனத்தில் எத்தகைய முஸ்லிம்கள் பைஅத் செய்தால் அது அனைத்து முஸ்லிம்களின் அல்லது பெரும்பான்மை முஸ்லிம்களின் ஒப்புதலையும் ஏற்றுக்கொள்ளுதலையும் சுட்டிக்காட்டும் என்பதை ஆய்வுசெய்வது மனாத்தை ஆய்வுசெய்வதில் அடங்கும்.

இது முதல்நிலையைப் பொறுத்தவரை உள்ள விஷயமாகும், இரண்டாவது நிலையைப் பொறுத்தவரை. இன்றைய காலகட்டத்தில் நடந்துவரும் தேர்தல் முறையான இரகசிய ஓட்டுப்பதிவு. ஓட்டுச்சீட்டுகளையும் ஓட்டுப் பெட்டிகளையும் பயன்படுத்துதல் மற்றும் ஓட்டுக்களை எண்ணுதல் ஆகிய அனைத்தும் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்வதை நடைமுறைப்படுத்துவதற்கு பிரயோகிப்படும் செயல்முறைகளாகவும் சாதனங்களாகவும் (styles and means - الأساليب والوسائل) இருக்கின்றன. அவை இறைசட்டத்தின் எல்லைக்குள்ளோ அல்லது அந்த சட்டத்தை பிரயோகிக்கும் விஷயத்திற்குள்ளோ (மனாத்) இடம்பெறாது, ஏனெனில் இந்த செயல்முறைகளும் சாதனங்களும் முஸ்லிம்களின் செயல்பாடுகளிலோ அல்லது இறைசட்டத்தை பிரயோகிக்கும் மனாத்துடனோ எந்தவிதத்திலும் நேரடியாக தொடர்புடையவை அல்ல, முஸ்லிம்களின் செயல்பாடுகளில் இந்த சாதனங்களை பயன்படுத்துவதற்கு எந்த தடையும் கிடையாது. ஏனெனில் இறைசட்டம் முஸ்லிம்களின் செயல்பாடுகளோடு தொடர்புடைய விஷயமாகும். அதாவது கிலா*பத் முஸ்லிம்களால் நிலைநாட்டப்டவேண்டும் என்ற விஷயத்தோடு தொடர்புடையதாகுதம், ஆகவே இந்த விவகாரத்திற்குரிய இறைசட்டத்தின் நோக்கத்தோடு இத்தகைய தேர்வுமுறைகளுக்கும் அவற்றில் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது, பொதுவான ஷரியா உரைகள்(النص عاماً) அனுமதித்துள்ள விஷயங்களாக அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அவைகளை தடைசெய்யும் குறிப்பிட்ட ஆதாரங்கள் (دليل خاص) எதுவும் கிடையாது என்ற அடிப்படையில் அவைகள் முபாஹ்( مباحة) ஆகும், எனவே முஸ்லிம்கள் எத்தகைய செயல்முறை பாணியையும் எடுத்துக்கொள்வதற்கு அனுமதியுண்டு, முஸ்லிம்களின் ஒப்புதலோடும் அவர்களின் விருப்பத்தோடும் கலீ*பாவை நியமனம் செய்யும் *பர்லான செயல்பாட்டை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக உள்ள எத்தகைய செயல்முறை பாணியையும் எந்தவகை சாதனங்களையும் அவைகள் தடைசெய்யப்பட்டதற்குரிய ஷரியா ஆதாரங்கள் எதுவும் இல்லாதவரை அவற்றை பயன்படுத்துவதற்கு முஸ்லிம்கள் அனுமதிக்கப்ட்டே இருக்கிறார்கள், செயல்முறைபாணி (
styles-الأساليب) என்பது மனதர்களின் செயலில் உள்ளது அதை இறைசட்டங்களின் அடிப்படையில் மட்டுமே நிறைவேற்றமுடியும் என்றும். அதன் சட்டங்களை சுட்டிக்காட்டக்கூடிய ஷரியா ஆதாரம் அதற்கு இருக்கவேண்டும் என்றும் கூறுவது சரியல்ல, ஏனெனில் இறைசட்டங்களின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் மனிதனின் செயல்பாடுகளுக்கு அவற்றின் சட்டங்களை சுட்டிக்காட்டும் ஆதாரம் இருப்பது அசலான செயல்பாடுகளுக்கும்(action of origin–الفعل أصلاً) தனிப்பட்ட ஆதாரமுள்ள கிளை செயல்பாடுகளுக்கும் மட்டுமே பொருந்தக்கூடியது, இதற்கு உதாரணம் தொழுகையாகும். அதைக் குறிப்பிடும் ஷரியா ஆதாரம் அதனை நிறைவேற்றுவதுடன் மட்டும் தொடர்புடையது. தொழுகையோடு தொடர்புடைய மற்ற செயல்பாடுகள் இதில் அடங்காது. ஏனெனில் உலூ செய்தல் போன்ற தொழுகையோடு தொடர்புடைய கிளைசெயல்பாடுகளுக்கு தனிப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன, ஆகவே நிறைவேற்றப்படும் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் இறைசட்டத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு ஆதாரம் இருக்கவேண்டும், ஆனால் ஒரு செயல்பாடு அதன் அசலான செயல்பாட்டின் கிளையாக இருக்கும்நிலையில் அந்த கிளை செயல்பாட்டிற்கு தனிப்பட்ட ஆதாரம் இல்லாவிட்டாலும் அதன் அசலான செயல்பாட்டிற்குரிய பொதுவான ஆதாரமே அதை நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இருக்கும், ஒரு செயல்பாடு கிளை செயல்பாடாக இருக்கும் நிலையில் அது தடை செய்யப்பட்டதற்கு உரிய தனிப்பட்ட ஆதாரம் இல்லாவிடில் பிறகு அதை மேற்கொள்வதை தடை செய்யமுடியாது, ஆகவே இன்றைய தேர்தல்முறைகளில் இடம்பெறும் கிளை செயல்பாடுகளுக்கு தனிப்பட்ட சட்டம் இருக்கவேண்டும் என்று கோருவது ஒரு கிளை செயல்பாட்டை அதன் அசலான செயல்பாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்து அதற்கு புதிய சட்டத்தை கொடுக்கவேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பாக இருக்கிறது, கலீ*பாவை தேர்வுசெய்யும் செயல்பாடுகளில் இடம்பெறும் அசலான செயல்பாடு என்பது முஸ்லிம்களின் ஒப்புதலோடும் விருப்பத்தோடும் கலீ*பாவை நியமனம் செய்யவேண்டும் என்பதாகும், ஆனால் ஓட்டுப்போடுதல். ஓட்டுச்சீட்டையும் ஓட்டுப்பெட்டியையும் பயன்படுத்துதல் மற்றும் ஓட்டுக்களை எண்ணுதல் போன்ற அசலான செயல்பாட்டிலிருந்து ஏற்படும் கிளை செயல்பாடுகள் அனைத்தும் அசலான செயல்பாட்டின் சட்டங்களுக்குள் அடங்கிவிடும், இந்த கிளை செயல்பாடுகளுக்கு தனிப்பட்ட எந்த ஆதாரமும் தேவையில்லை, இவைகளில் எதுவொன்றையும் அசலான செயல்பாட்டின் சட்டங்களுக்கு வெளியில் கொண்டுவருவது என்றால் அதாவது அவற்றை தடைசெய்வது என்றால் அதற்கு ஆதாரம் இருக்கவேண்டும், மனிதனின் செயல்பாடுகளில் பின்பற்றப்படும் செயல்முறைபாணிகள் (styles-الأساليب) அனைத்திற்கும் இது பொருந்தும், ஓட்டுச்சீட்டு. ஓட்டுப்பெட்டி போன்ற சாதனங்களைப் பொறுத்தவரை இவை அனைத்தும் பொருட்களுக்குரிய சட்டங்களில் அடங்குமே ஓழிய செயல்பாட்டிற்குரிய சட்டங்களில் அடங்காது, இந்த விவகாரத்தில் பின்வரும் ஷரியா விதிமுறையே பிரயோகிக்கப்படும்.

"தடை செய்யப்பட்டதற்கு உரிய ஆதாரம் இல்லாதவரை எல்லா பொருட்களும் அனுமதிக்கப்பட்டதுதான்"

அதாவது ஹராமாக்கப்பட்ட பொருட்களைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் ஹலாலானவையே.

வழிமுறை (method-الطريقة) மற்றும் செயல்முறை பாணி (style-أسلوب) ஆகியவற்றுக்கு இடையிலுள்ள வேறுபாடு என்னவென்றால் வழிமுறை என்பது அசலான செயல்பாடுகளாகவோ அல்லது தனிப்பட்ட ஆதாரத்தைக் கொண்ட கிளை செயல்பாடுகளாகவோ இருக்கும். மாறாக செயல்முறை பாணி என்பது அசலான செயல்பாடுகளோடு இணைந்திருக்கும் துணை செயல்பாடுகளாகும். அவற்றிற்கு தனிப்பட்ட ஆதாரம் இருக்காது, ஆகவே அசலான செயல்பாடுகளுக்கு உரிய பொதுவான ஆதாரம் மட்டும் இருக்கும் நிலையில் அந்த அசலான செயல்பாடுகளோடு இணைந்திருக்கும் துணை செயல்பாடுகள் அனைத்தும் செயல்முறை பாணியில் அடங்கும் என்பதோடு அவற்றுக்கு தனிப்பட்ட ஆதாரம் எதுவும் ஷரியாவில் இருக்காது, ஆகவே வழிமுறை என்பது இறைசட்டமாக இருப்பதால் அது ஷரியா ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். எனவே அதை கட்டாயமாக பின்பற்றி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், வழிமுறையின் சட்டம் இபாஹாவில் (அனுமதிக்கப்பட்டவற்றில்) இல்லாதவரை இறைசட்டங்களை பின்பற்றுவதில் முஸ்லிம்கள் தங்கள் விருப்பப்படி நடந்துகொள்ள முடியாது, ஷரியா ஆதாரம் இல்லாத செயல்முறை பாணியிலிருந்து இது வேறுபட்டது என்பதோடு இது அசலான செயல்பாட்டின் சட்டங்களில் அடங்கக்கூடியது, ஆகவே இதை பின்பற்றவேண்டியது கட்டாயமாகும், மாறாக செயல்முறை பாணிகள் அனைத்தும் முபாஹ் என்பதால் ஒரு குறிப்பிட்ட பாணியை அல்லாஹ்வின்தூதர்(ஸல்) பின்பற்றினாôகள் என்றபோதும் அதை முஸ்லிம்கள் பின்பற்றவேண்டிய கட்டாயம் இல்லை, ஆகவே முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கு எத்தகைய செயல்முறை பாணிகளையும் எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் செயல்பாடுகளைப் பொறுத்தே செயல்முறைபாணி எத்தகையது என்று தீர்மானிக்கப்படுகிறது.