Saturday, February 7, 2009

இஸ்லாத்தை வீழ்த்த அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்ற நூலிலிருந்து- பகுதி 01

முன்னுரை

கி,பி,1990ஆம் ஆண்டு ஏற்பட்ட சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி ஒரு அரசின்வீழ்ச்சியல்ல. மாறாக அது உண்மையில் ஒரு சித்தாந்தத்தின் வீழ்ச்சியாகும்,சர்வதேச அளவிலும் உலக அளவிலும் அந்த சித்தாந்தத்துக்கு ஏற்பட்ட முடிவாகும்,இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா தலைமையிலுள்ள மேற்கத்தியநாடுகளுக்கும் சோவியத் ரஷ்யா தலைமையிலுள்ள கீழ்திசை நாடுகளுக்கும்ஏற்பட்ட மோதல் என்னும் பனிப்போர் இரண்டு வல்லரசுகளுக்குள் ஏற்பட்ட சர்வதேசமோதல் மட்டும் அல்ல, மாறாக அது முதலாளித்துவ சித்தாந்தம் (Capitalism)கம்யூனிஸ் சித்தாந்தம் (Communism) என்கின்ற இரண்டுகொள்கைகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்துப்போராகும், இந்த சச்சரவின் எல்லைகள்ஐரோப்பாவுடன் நின்று விடவில்லை, முழு உலகத்தையும் வியாபித்தது, இறுதியில்கி,பி,1990 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா வீழ்ச்சியுற்று துண்டுகளாக சிதறியதோடுஅது முடிவுக்கு வந்தது, கார்ல் மார்க்ஸின் பொதுவுடமை தத்துவம் ஆட்சிமுறைஎன்ற விதத்திலும் அதன் மக்களிடமும் அதனை அமல்படுத்திய அதன்அரசுகளிடமும் வீழ்ச்சியுற்றது, இறுதியாக சர்வதேச அளவிலும் உலகளாவியஅளவிலும் அது மறைந்து போனது.
இயல்பாகவே சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியும் பொதுவுடமை கோட்பாட்டின்தோல்வியும். முதலாளித்துவ சித்தாந்தத்தை ஒரு கோட்பாடாகவும்.ஆட்சிமுறையாகவும். வாழ்வியல் நெறிமுறையாகவும் முன்நிறுத்தும் அமெரிக்கதலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு வெற்றியாகவே அமைந்தது, மேலும்அவர்கள் இந்த வெற்றியை முதலாளித்துவ சித்தாந்தத்துக்கு கிடைத்தவெற்றியாகவே பறைசாற்றிக் கொண்டார்கள், ஜப்பானிய தத்துவமேதை புஹியாமா(Fukiyama) இதை ஒரு சரித்திரத்தின் முடிவு என்று வர்ணித்தார்.
சித்தாந்தங்கள் அதை கடைபிடிக்கும் அரசுகள் வீழ்ச்சியுறுவதால் அழிந்து போய்விடுவதில்லை, அந்த சிந்தாங்களை நடைமுறைபடுத்தும் அரசுகள் வீழ்ச்சியுற்றுசெல்வாக்கு இழந்து போனாலும் துண்டு துண்டுகளாக சிதறினாலும் அது முடிவுக்குவந்து விடாது, மாறாக அதை கடைபிடிக்கும் மக்கள் அதை துறந்துவிட்டு வேறொருசித்தாந்தத்தை தழுவ ஆரம்பித்து அதன்படி தங்கள் வாழ்வியலை மாற்றிக் கொண்டுஅந்த அடிப்படையில் தங்கள் விவகாரங்களுக்கு தீர்வு தேடிக் கொள்ளும்போதுதான் அந்த சித்தாந்தங்கள் அழிவை சந்திக்கின்றன, இந்த நிலைதான் கார்ல்மார்க்ஸின் பொது உடமை சித்தாந்தத்துக்கு ஏற்பட்டது, அதை கடைபிடித்து வந்தஅனைத்து கீழ்திசை நாடுகளும் அதன் மக்களும் அதை புறக்கணித்துவிட்டுதழுவிக் கொண்டு அதன் அடிப்படையிலேயே தங்கள் வாழ்க்கை முறைகளைஅமைத்துக் கொண்டார்கள்.
இஸ்லாத்தை பொறுத்தவரை கி,பி,1924ஆம் ஆண்டு உதுமானிய கிலாபத் என்றஅதனுடைய அரசு வீழ்த்தப்பட்ட பிறகும் அதனுடைய சித்தாந்தம் உலகெங்கிலும்நிலைபெற்று வருகிறது, காரணம் அதனை பின்பற்றும் பல்வேறு வகையான மக்கள் அது ஆட்சி கட்டிலிலிருந்து அகற்றப்பட்டாலும் அன்றாட மக்கள் வாழ்வியல்விவகாரங்களில் தலையிடுவதை விட்டும் அது தடுக்கப்பட்டாலும். சர்வதேசஅரங்கத்தில் அது செயல்படுவதை விட்டும் முடக்கப்பட்டாலும் தொடர்ந்து மக்கள்அதனை தழுவிக் கொண்டுதான் இருக்கிறார்கள், வெறும் சித்தாந்தம் என்ற அளவில்அது சிதைக்கப்பட்டாலும் அதன் கொள்கைகளை நிலைநிறுத்தவும் உயர்த்திப்பிடிக்கவும் அரசு இல்லாத போதும் அதன் செல்வாக்கு உலக மக்களிடையேஉயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு சித்தாந்தம் அதனை பின்பற்றும் மக்கள் இருக்கும் காலமெல்லாம் இருந்து கொண்டேதான் இருக்கும், அதன் கொள்கைகள்ஒரு அரசின் மூலம் நிலை நிறுத்தப்படாவிட்டாலும் சரியே, எனினும் சர்வதேசஅளவில் அதன் கொள்கைகள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவதற்கு ஒரு அரசுஇல்லையெனில் அது வீழ்ச்சியுற்றே தீரவேண்டும், இவ்வாறே இறைதூதர்(ஸல்)அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதினாவில் இஸ்லாமிய அரசை நிறுவிய காலத்திலிருந்தேஇஸ்லாம் எனும் சித்தாந்தம் இருந்து வருகிறது.
இருபதாம் நூற்றாண்டின்துவக்கத்தில் அதன் அரசான உஸ்மானிய கிலாபத் எதிரிகளால் வீழ்த்தப்படும்வரை அது சர்வதேச அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான்இருந்தது,சோசலிசம் என்னும் பொதுவுடமை சித்தாந்தம் பத்தொன்பதாம் நூற்றாண்டின்இறுதியில் ஐரோப்பாவில் மக்கள் ஆதரவை பெற்ற போது செல்வாக்கு பெற்றது,ரஷ்யாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் கி,பி,1917ஆம் ஆண்டு அதன் அரசுஅமைக்கப் பட்டபோது சர்வதேச அரங்கில் அது ஆதிக்கம் பெற்றது, இந்தஅரசுதான் பிற்காலத்தில் சோவியத் யூனியன் என்று அழைக்கப்பட்டது.
1991ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா வீழ்ச்சி அடையும் வரை அது சர்வதேசஅரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்தது, சோவியத் அரசு வீழ்ச்சியுற்றதும்அதன் மக்கள் பொதுஉடமை சித்தாந்தத்தை புறக்கணிக்க ஆரம்பித்தார்கள்,முடிவாக மார்க்ஸின் பொதுஉடமை சித்தாந்தம் சர்வதேச அளவிலும் உலகளாவியஅளவிலும் முற்றிலுமாக கைவிடப்பட்டது, முதலாளித்துவ சித்தாந்தம் தொடர்ந்து சர்வதேச அளவில் கொள்கைகளையும்முடிவுகளையும் மேற்கொள்ள போட்டியாக வேறு எந்த சித்தாந்தமும் இப்போதுஉலகில் இல்லை என்ற காரணம்தான்.
.
உலகளாவிய அளவில் இன்று இரண்டு சித்தாந்தங்கள் இருக்கின்றன, ஒன்றுஇஸ்லாம் மற்றொன்று முதலாளித்துவ கோட்பாடு என்ற காபிடலிஸம் இந்த கோட்ôபடு சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்ற காரணத்தால் ஒரு புதியஉலக நாடுகள் அமைப்பு இப்போது உருவாகி வருகிறது, இந்த கண்ணோட்டத்துடன்பார்க்கும்போது புதிய உலக அமைப்பு The New World Oder என்ற கருத்துசரியானதே. ஆகவே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் புதிய உலக அமைப்புஉருவாகிவிட்டது என்று அறிவித்தது இயல்பான ஒன்றுதான், ஏனெனில்அமெரிக்காதான் முதலாளித்துவ நாடுகளின் தலைவராக இருந்து கொண்டு அந்தசித்தாந்தத்தை பரப்புவதற்கும் அதை நிலைநிறுத்துவதற்கும் நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறது.
ஒரு காலனி ஆதிக்க நாடாக நடவடிக்கை மேற்கொண்ட போதே உலகில் அதுஇந்த கோட்பாட்டை பரப்பும் வேலையை ஆரம்பித்துவிட்டது, ஏனெனில் காலனிஆதிக்கம் என்பது அதன் பழைய மற்றும் புதிய வடிவத்தில் முதலாளித்துவசித்தாந்தத்தை பரப்புவதற்குரிய ஒரு வழிமுறையாகும், எனினும் இன்றையசூழ்நிலை என்னவென்றால் இந்த கோட்பாடு சர்வதேச அரங்கில் செல்வாக்குபெற்றிருப்பதால் அதனைப் பரப்பவும் அதனை உலகநாடுகளில்நடைமுறைப்படுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது, இதே வழிமுறையின்படிதனது தோழமை நாடுகளின் உதவியோடு இந்தக் கோட்பாட்டின்கொள்கையாக்குவதில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டது, இப்போது அமெரிக்காஇந்த கோட்பாட்டை அனைத்துலக மக்களின் வாழ்வியல் நெறிமுறைகளாகஆக்குவதை விரும்புகிறது, இதன் அடிப்படையில் மக்கள் இந்த கோட்பாட்டைஆட்சிமுறையாக மட்டும் ஏற்றுக் கொள்ளாமல் அதனை நடைமுறைப்படுத்துவதைமட்டும் ஏற்றுக் கொள்ளாமல் அதன் சட்டங்களையும் அடிப்படைகளையும்.அளவுகோள்களையும். நம்பிக்கைகளையும் மற்றும் அதன் அனைத்து நெறிமுறைகளையும் வாழ்வின் அனைத்து துறைகளிலும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்க உலக மக்கள் அனைவரையும் வற்புறுத்துகிறது.
இந்த கோட்பாட்டை சர்வதேச உறவுகளிலும் மரபுகளிலும் சட்டங்களிலும்அடிப்படையாக்க அமெரிக்கா கடும் முயற்சி செய்து வருகிறது, ஐக்கிய நாடுகள் சபைஎன்ற சர்வதேச அமைப்பை உருவாக்கி. அதன் அஸ்திவாரமாக முதலாளித்துவகோட்பாட்டின் கொள்கைகளை அமைத்த நாட்களிலிருந்தே இந்த முயற்சிகள்தொடர்ந்து நடந்து வருகின்றன, என்றாலும் சோவியத் யூனியன் கீழ்திசை நாடுகளில்செல்வாக்குடன் இருந்த கால கட்டத்தில் அது பொதுஉடமை கோட்பாட்டை சர்வதேசஅரங்கில் செயல்படுத்திய காரணத்தால் அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு வெற்றிகிட்டவில்லை, இந்த காலகட்டத்தில் மேற்கத்திய காலனி ஆதிக்கத்தால்அடிமைத்தனத்திலும் வறுமையிலும் சீரழிந்த நாடுகளின் துன்ப நிலையினைபயன்படுத்தி மாஸ்கோ அமெரிக்காவின் ஆதிக்கமும் முதலாளித்துவ கோட்பாட்டின்உத்வேகமும் உயர்ந்து விடாமல் பார்த்துக் கொண்டது, காலனி ஆதிக்கத்தின்பேராசை. அச்சுறுத்தல். அநீதி. சுயநலம் ஆகிய அதன் கோர முகங்களை மக்களுக்குஎடுத்துக்கூறி மாஸ்கோ பிரச்சாரம் செய்து வந்தது, இதற்காக அது உலகம்முழுவதிலும் ஒரு கடுமையான பிரச்சார நடவடிக்கை மேற்கொண்டது, அந்தபிரச்சாரத்தில் காலனி ஆதிக்கத்தின் உண்மையான கொடி இயல்புகளை வெட்டவெளிச்சமாக்கி வந்தது, முதலாளித்துவமும் காலனி ஆதிக்கமும் ஒரு நாணயத்தின்இரண்டு பக்கங்கள்தான் என்பதையும். உண்மையில் விடுதலை என்பது பொதுஉடமை புரட்சியின் மூலமாகத்தான் கிடைக்கும் என்றும் பிரச்சாரம் செய்து வந்தது,இந்த பிரச்சாரம் பெரிய அளவில் வெற்றி பெற்றது, இதனால் ஈர்க்கப்பட்டபலநாடுகள் பொதுஉடமை கோட்பாட்டின் பக்கம் சாய்ந்தன, காலனிஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் பொது உடமை கோட்பாட்டைகோஷமிட ஆரம்பித்தன.
இந்நிலையில் முதலாளித்துவ சித்தாந்தத்தை அதன் அடிப்படை கொள்கையாககொண்டுள்ள மேற்கத்திய வல்லரசுகளுக்கு காலனி ஆதிக்கம் என்ற பழயமுகம்ஆபத்தானது என்பதை அமெரிக்கா உணர்ந்தது, ஆகவே அது தந்திரமாகசெயலாற்ற ஆரம்பித்தது, பொது உடமை கோட்பாட்டின் பக்கம் சாயும்நாடுகளையும் அதன் மக்களையும் கவர்வதற்கு அவைகளுக்கு பொருளாதாரஉதவிகள் செய்வது என்று அமெரிக்கா தீர்மானித்தது, பழய காலனி ஆதிக்கத்தின்துயரங்களிலிருந்து அவைகளை மீட்பது போல பாசாங்கு செய்தது, பல பொருளாதாரசலுகைகளுக்கிடையில் அவைகளின் விடுதலை அம்சங்களில் மறைமுகமாக பலகட்டுப்பாடுகளை கொண்டுவந்தது, புதிய வடிவில் காலனி ஆதிக்கத்தைமறைமுகமாக திணிக்கும் விஷமத் தனத்தை அமெரிக்கா மேற்கண்டது,பொருளாதாரம். அரசியல் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளிலும் ராணுவஒப்பந்தம். இருதரப்பு உறவு. இருதரப்பு பாதுகாப்பு. ஒப்பந்தம் பொருளாதாரம்மற்றும் நிதியுதவி திட்டம். கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகிய நடவடிக்கைகள் மூலமும்தனது ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது, இவ்வாறுதான் சுதந்திரம் மற்றும்விடுதலை போன்ற பகட்டான முகமூடிகளை அணிந்து கொண்டு பல நாடுகளில்புதிய காலனி ஆதிக்கத்தை அமெரிக்கா கொண்டு வந்தது, இந்நிலையில்கி,பி,1991ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா வீழ்ச்சியுற்று சிற்றுண்ட பிறகு.பொதுஉடமை கோட்பாடு அதன் சர்வதேச செல்வாக்கையும் ஆதிக்கத்தையும்இழந்துவிட்டபோது. சர்வதேச எல்லைகள் அமெரிக்காவிற்கு திறந்து விடப்பட்டது,இப்போது அமெரிக்காவின் ஆதிக்கத்தையும் அதன் முதலாளித்துவ சித்தாந்தத்தைபிரச்சாரம் செய்யும் நடவடிக்கைகளையும் ஒடுக்குவதற்கு சரியானபோட்டியில்லாமல் போய் விட்டது.
ஐக்கிய நாடுகள் சபை கி,பி,1940வரை சோவியத் ரஷ்யாவின் விட்டோஅதிகாரத்தின் காரணமாக எந்தவித அதிகாரமும் இல்லாத ஏட்டுச்சுரக்காய்வடிவமாகவே இருந்து வந்தது, அதன் நடவடிக்கையெல்லாம் சில சொற்பொழிவுகள்சில சம்பிரதாய நடவடிக்கைகள் என்பதற்குள் சுருண்டு கிடந்தது, ஆனால் இன்றுஅது மிகப்பெரிய சர்வதேச அமைப்பாகவும். அதிகாரம் பெற்ற அமைப்பாகவும்இருக்கிறது, அது இப்போது ஒரு பக்கம் அமெரிக்காவின் ஆதிக்கத்தைநிலைநிறுத்தும் முக்கிய கருவியாகவும் மறுபக்கம் சர்வதேச அளவில்அமெரிக்காவிற்கு உதவி செய்யும் அமைப்பாகவும். முதலாளித்துவ மரபுகளைவலுப்படுத்துவதற்கு அமெரிக்காவோடு ஒத்துழைக்கும் தோழனாகவும் இயங்கிவருகிறது.
முதலாளித்துவ கோட்பாடடை உலக மக்கள் அனைவரும் ஒரு வாழ்வியல்நெறியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டமிட்டநடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் தவிர வேறு எங்கும் அவ்வளவுஎதிர்ப்புகள் காணப்படவில்லை, ஏனென்றால் முதலாளித்துவ கோட்பாடடைஅமெரிக்க மக்கள் ஏற்றுக் கொண்டதை பின்பற்றி மேற்கு ஐரோப்பாவும் அவர்கள்வழிநடக்கும் கனடா. ஆஸ்திரேலியா. நியுஸிலாந்து மற்றும் ரஷ்யாவும் கிழக்கு திசைநாடுகள் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட பொதுஉடமை கோட்பாட்டைதுறந்து விட்டு முதலாளித்துவ கோட்பாட்டை தங்களது கொள்கை யாகமாற்றிக்கொண்ட நாடுகளும் இதில் அடங்கும், எனினும் சீனா. வடகொரியா.வியட்நாம். கியூபா போன்ற நாடுகள் பொது உடமை கோட்பாட்டை இன்னும்கோஷமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன, உண்மையில் அவைகள் இந்தகோட்பாட்டை நம்புவது இல்லை, சிறிது சிறிதாக அவைகள் வெளிப்படையானஅறிவிப்பு இல்லாமல் இந்த கோட்பாட்டை நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கின்றன,மற்ற நாடுகளான லத்தீன் அமெரிக்கா. தூரகிழக்கு நாடுகள் தென் கிழக்கு ஆசியநாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பழங்குடி இன நாடுகள் ஆகியவைகளுக்குஎந்தவித சித்தாந்தமும் கலாச்சாரமும் இல்லை, ஆகவே கொள்கை ரீதியாகமுதலாளித்துவ கோட்பாட்டிற்கு எதிர்ப்பு வருவதற்கு அங்கு வாய்ப்புகள் இல்லை,ஆகவே சித்தாந்த ரீதியாக இஸ்லாமிய சமூகமே முதலாளித்துவ கோட்பாட்டைஏற்றுக் கொள்ளாத நாடுகளாக இருந்து வருகின்றன.
இந்த சமூகம் தன்வசம்இஸ்லாம் என்ற சித்தாந்தத்தை வைத்துக் கொண்டுள்ளது, எனினும் இந்தசித்தாந்தத்தின் கொள்கைகள் அடிப்படையில் அந்த சமூகம் வாழ்வதுமில்லை,சர்வதேச அரங்கில் அதன் கொள்கைகளை நிலைநிறுத்தி உலகுக்கு அதை எடுத்துச்சொல்லி பிரச்சாரம் செய்வதுமில்லை, ஆகவே இயக்க வேண்டும் என்றஅமெரிக்காவின் அபிலாசை இஸ்லாமிய சமூகத்தில் மட்டும் தான் கடுமையாகஎதிர்க்கப்படுகிறது,இப்போதுள்ள இஸ்லாமிய நாடுகளில் அதன் அரசுகள் இஸ்லாத்தைநடைமுறைபடுத்துவதாக கூறிக் கொண்டாலும் அவைகள் உண்மையில் அவ்வாறுசெய்வது இல்லை, மாறாக முதலாளித்துவ கோட்பாட்டின் கொள்கைகளை அதன்மாறுபட்ட வடிவத்தில் அவைகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன, இஸ்லாமியசமூகம் கிலாöபத் அழிக்கப்பட்ட போதிலும் அழிந்து விடவில்லை, இந்த சமூகம்அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு தனது மறுமலர்ச்சி பாதையை கண்டுபிடித்துஅதில் நடைபோட ஆரம்பித்திருக்கிறது, ஆம்! கடந்த 1950 ஆண்டின் துவக்கத்தில்கிலாபத்தை நிறுவும் அரும்பணியினை இந்த சமூகம் இனம் கண்டு கொண்டது,இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே தனது வாழ்வை வடிவமைத்துக்கொண்டது, கிலாöபத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு குöப்பார்கள் அதில் பலபிரிவினைகளையும் கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தியிருந்த போதிலும் அந்தசமூகம் தன்னால்தான் மனித சமுதாயத்தை காப்பாற்ற முடியும் என்று நம்புகிறது.
அதனுடைய ஆட்சியாளர்கள் குöப்பார்களின் கங்காணிகளாக இருந்த போதிலும்அவர்கள் மேற்கத்திய குöப்பார்கள் இஸ்லாமிய நாடுகளில் ஏற்படுத்திய குப்ர்ஆட்சியை நிலை நிறுவுவதற்கு பாடுபட்டபோதிலும். இந்த சமூகம் இஸ்லாத்தின்மறுமலர்ச்சியை நோக்கி உறுதியாகவே நடைபோடுகிறது, இந்த இஸ்லாமியநாடுகளின் முஸ்லிம் ஆட்சியாளர்கள் குöப்பார்களின் நலன்கள்பாதுகாப்பவர்களாகவும். அவர்களின் செல்வாக்கை பலப்படுத்துகிறவர்களாகவும்தங்களது உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளை மேற்கத்திய எஜமானர்களின்கட்டளைப்படியும் அவர்களின் வழிகாட்டுதல் படியும் அமைத்துக்கொள்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.
இந்த சமூகத்தின் மறுமலர்ச்சி இன்னும் முழுமை அடையவில்லை, ஆனால்இந்த மாபெரும் பணியினை தங்கள் வாழ்வின் லட்சியமாக கொண்டு உழைக்கும்முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளையும். கொடுமைகளையும். அச்சுறுத்தல்களையும் மேற்கத்தியர்களின் அடிவருடிகளான இந்த முஸ்லிம்ஆட்சியாளர்கள் ஏவி விடுவதால் மறுமலர்ச்சி மிதமாகவே நடந்து கொண்டிருக்கிறது,குöப்பார்களின் திட்டப்படி செயல்பட்டு முஸ்லிம்களின் மீது தாக்குதலையும். கடும்தண்டனையையும் தம் சொந்த மக்காள் மீது குöப்பார்களின் அடிமை தனத்தின்அடையாளமான நுகத்தடியையும் சுமத்துவதற்கு இந்த ஆட்சியாளர்கள் சித்தமாகஇருக்கிறார்கள்.
இருந்த போதிலும் அமெரிக்காவின் தலைமையிலுள்ள மேற்கத்தியகுöப்பார்கள் இந்த சமூகத்தின் மறுமலர்ச்óசிக் குறித்து அச்சம் அடைந்தேஇருக்கிறார்கள், தனது மறுமலர்ச்சிக்குப் பிறகு அது முழுபலத்துடன் எழுந்துநிற்கும். மற்ற சமூகங்களிலிருந்து முற்றிலும் தனித்தன்மை உடையதாக ஒரேசமூகமாக கிலாöபத் என்ற ஒரே தலைமையோடு கூடிய அல்லாஹ்(சுபு)வின்ஆட்சியை இந்த புவியில் நிறுவும், பிறகு மேற்கத்திய குöப்பார்களினால் ஏற்பட்டசீரழிவிலிருந்தும். குழப்பத்திலிருந்தும். ஒழுக்கக்கேட்டிலிருந்தும் உலக மக்களைகாப்பதற்காக இஸ்லாமிய செய்தி எனும் சங்க நாதத்தை முழு உலகிற்கும் எடுத்துச்செல்லும் சந்தர்ப்ப வாதமும். சுயநலமும் பேராசையும் கொண்ட மேற்கத்தியகுöப்பார்களின் ஆதிக்கத்தால் உலகின் அமைதி சீர்குழைந்தது, பாதுகாப்பற்ற ஒருவனாந்திரத்தைப் போன்று இந்த உலகம் ஆகிவிட்டது.
அவர்களது சுயநலதிட்டங்களினால் மனித சமூகத்திற்கு அல்லாஹ்(சுபு) அருட்கொடையாக அளித்தவிஞ்ஞானமும் தொழில் நுட்பமும் பலன் தராது நெருக்கடியை ஏற்படுத்தி விட்டன,ஆகவே கடந்தகால சரித்திரத்தின் காட்சிகளை மனக்கண்ணில் நினைவு கூர்ந்தவண்ணம் இந்த குöப்பார்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள், நாடோடிகூட்டங்களாக சரித்திரத்தின் மூலையில் நின்றுகொண்டிருந்த அரபு இன மக்களை.இஸ்லாம் எவ்வாறு பண்பு நிறைந்தவர்களாகவும். தனித்தன்மை உடையசமூகமாகவும். உலகிற்கு சத்திய ஒளியை எடுத்துச் சென்றவர்களாகவும்உருவாக்கியது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் தோழர்களாகிய அந்த முஸ்லிம்கள் சொற்ப காலத்தில் உலகதலைவர்களாக உருப்பெற்றார்கள், அந்த பெருமக்களின் தலைமைத் துவம் பலநூற்றாண்டுகளை கடந்து நின்றது, அவர்களது ஆட்சிக்காலத்தில் நீதியும்.நேர்மையும். பாதுகாப்பும். உயர் பண்புகளும் உலகில் செழித்து வளர்ந்தது.
ஆகவே முஸ்லிம் சமூகம் மறுபிரவேசம் செய்து கிலாöபத்தை நிறுவி.தங்களுடைய நலன்களை அவர்கள் நாட்டிலும் உலகின் மற்ற இடங்களிலும்அழித்துவிடும் என்று குöப்பார்கள் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்,இவ்வுண்மையை அமெரிக்காவும். ஐரோப்பாவும் உணர்ந்துள்ள நிலையில்இஸ்லாத்தை வீழ்த்துவதற்காக அவர்களது திட்டமிட்ட நடவடிக்கைகளையும்பிரச்சாரங்களையும் உலகம் முழுவதும் முடுக்கிவிட்டிருக்கின்றார்கள்.
இந்தத் திட்டங்களின் பின்னனியில் வேறு நோக்கங்களும் அடங்கியிருக்கின்றன,அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தங்களுக்கே உரிய பாரம்பரிய பேராசையில்இஸ்லாமிய நாடுகளின் செல்வ வளங்களில் இச்சை கொள்கின்றன, அதன் பூகோளரீதியான மற்றும் போர் முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களின் மீதும். அதன் கனிமவளங்களின் மீதும். தங்களுடைய உற்பத்தி பொருட்களுக்கு அந்த நாடுகள் சிறந்தசந்தையாக இருக்கும் காரணத்தாலும். தங்களுடைய ஆலைகளுக்கு தேவையான கச்சாப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன என்றுநினைப்பதாலும் எல்லாவற்றிற்கும் மேலாக தங்களுடைய வாழ்க்கைக்கு மிகஅவசியமான அதனுடைய எண்ணெய் வளங்களுக்காகவும் அந்த நிலங்களைஆக்கிரமிப்பு செய்ய பேராவல் கொள்கின்றன.
அவர்களது முக்கியமான நோக்கம்இஸ்லாத்தின் மறுமலர்ச்சியை தடுத்து நிறுத்துவதுதான், எனினும் முஸ்லிம் சமூகம்மறுமலர்ச்சி பெற்று உலக மக்கள் அனைவரிடமும் இஸ்லாமிய செய்திசென்றடைந்தால். அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் இந்த அழிவு அவர்களைஅடைந்தே தீரும்,
அமெரிக்க பிரச்சார நடவடிக்கையின் தூண்கள்
இஸ்லாத்திற்கெதிரான அமெரிக்காவின் திட்டங்கள் பல தூண்கள் மீதுஅமைக்கப்பட்டுள்ளன.
முதல் தூண்
அதனுடைய சர்வதேச ஆற்றலும். செல்வாக்கும். உறவுகளும் இஸ்லாமியநாடுகளில் உறுதிபெற்று இருக்கின்றன, குறிப்பாக இரண்டாவது வளைகுடாபோருக்குப் பிறகு அதனுடைய செல்வாக்கு இஸ்லாமிய நாடுகளில்வலுவடைந்திருக்கிறது, இந்த ஆற்றல் மற்றும் செல்வாக்கின் காரணமாகஇப்போதுள்ள இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பணிந்து.அதனுடன் இணங்கி போக ஆரம்பித்து விட்டன, முதலாளித்துவ கொள்கைகோட்பாடுகளை முஸ்லிம்கள் தழுவுவதின் மூலமாக இஸ்லாத்தை வீழ்த்தும் தனதுதிட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கத்தோடு அமெரிக்கா அந்த நாடுகளுக்குமிகுந்த நெருக்கடி கொடுத்து வருகிறது.
இரண்டாவது தூண்
முதலாளித்துவ நாடுகளுக்கு அமெரிக்கா தலைமை ஏற்று இருந்தாலும். இந்தநடவடிக்கைகளில் தனது தோழமை நாடுகளும் பங்கெடுத்துக் கொள்ளும்வண்ணமாக அது செயல்படுகிறது, அந்த நாடுகளின் செல்வாக்கையும்.ஒத்துழைப்பையும் அது பயன்படுத்திக் கொள்கிறது, இஸ்லாமிய நாடுகளிலுள்ளஅவர்களின் கங்காணிகள் (Agents) இந்த திட்டத்தின் வெற்றிக்கு உத்திரவாதம்தருகிறார்கள், ஏனெனில் இஸ்லாத்தின் விஷயத்திலும் அதன் அச்சுறுத்தல்விஷயத்திலும் அதன் எழுச்சியினால் தங்கள் நலன்களும் செல்வாக்கும் பாதிப்புஅடையும் என்ற விஷயத்திலும் இவர்கள் அமெரிக்காவுடன் வேறுபடுவதில்லை.
மூன்றாவது தூண்
சர்வதேச விதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்ற கருவி. அமெரிக்காவின்தனித்தன்மை அதனுடைய திட்டங்களை செயல்படுத்தவும் சர்வதேச விதிகளுடன்ஒத்துப்போகும் விதத்தில் காரியங்களை அமைத்துக் கொள்ளவும் ஒத்துழைக்கும்அதனுடைய பல சர்வதேச அமைப்புகள். துணை அமைப்புகள் மற்றும் சர்வதேசநிறுவனங்கள் ஆகியவைகள், மேலும் அரசியல் நடவடிக்கைகள். பொருளாதாரமற்றும் இராணுவ நடவடிக்கைகள் இவைகளில் எது எப்போது தேவை என்றுகருதுகிறதோ அத்தகைய திட்டமிட்ட நடவடிக்கைகள் இவையாவும் அதனுடையமூன்றாவது தூணாக அமைந்துள்ளன.
நான்காவது தூண்
அமெரிக்கா மற்றும் அதன் சர்வதேச நாடுகளின் ஆதிக்கத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் செய்தி ஊடகங்கள் (News Media) இந்த செய்தி ஊடகங்கள் ஒருபயங்கர ஆயுதமாக அமெரிக்கா அதன் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறது, அவைகள் மூலமாக தனது கோஷங்களை உலகெங்கும் பிரச்சாரம்செய்கிறது, இந்த ஊடகங்கள் இஸ்லாத்தின் கொள்கைகளையும் அதனைபின்பற்றும் முஸ்லிம் மக்களையும் ஒரு தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும்படிபொய்யான தகவல்களை பரப்பி விடுவதில் கைத்தேர்ந்தவை, இஸ்லாத்தைஅடிப்படை வாதம் என்றும் பயங்கரவாதிகள் என்றும் சித்தரிப்பதை முழு மூச்சாகக்கொண்டு இவைகள் இயங்கி வருகின்றன.அமெரிக்காவின் இந்த கொடிய ஆயுதத்தை நாம் குறைவாக எடை போட்டுவிடக் கூடாது, தொலைதொடர்புதுறையில் கடந்த நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட முன்னேற்றம் உலகத்தை ஒருகிராமத்துக்குள் அடக்கி விட்டது, இப்போது வரி வடிவத்திலும். ஒலி வடிவத்திலும்.ஒளி வடிவத்திலும் இந்த ஊடகங்களின் பிரச்சாரம் உலகத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் ஒவ்வொரு குடியிருப்பு இல்லங்களிலும் சென்றடைந்துகொண்டிருக்கின்றன.
ஐந்தாவது தூண்
இதுதான் அனேகமாக அமெரிக்காவின் கோரம் நிறைந்த அதனுடைய ஆபத்தானதூணாகும், இஸ்லாமிய நாடுகளிலிருக்கும் அதன் கைபாவையான ஆட்சியாளர்கள்அதனுடைய கங்காணிகள். ஆட்சியாளர்களோடு கைகோர்த்து நிற்கும் நயவஞ்சகமுஸ்லிம்கள். சந்தர்ப்பவாதிகள். ஐந்தாம் படை வேலை செய்யும் எடுபிடிகள்.பணத்திற்காகவும். புகழுக்காகவும் பல்லிளிக்கும் உலக ஆதாய வாதிகள். மற்றும்குöப்பார்களின் கலாச்சாரத்தில் மோகம் கொண்ட போலிகள்,இவர்களெல்லாம் இஸ்லாமிய சமூகத்தின் அங்கங்களாகத்தான் இருக்கிறார்கள்என்பது வேதனைக்குரிய விஷயமாகும், இவர்களில் அனேகர் குöப்பார்களின்இழிவான கலாச்சாரத்தில் மோகம் கொண்டவர்களாக இருக்கும் நிலையில்இஸ்லாத்தின் மீது பற்றுள்ளவர்களைப் போல பாசாங்கு செய்பவர்கள், இவர்களில்சிலர் தங்களை அரசியல் அறிஞர்கள் என்று பறைசாற்றிக் கொள்பவர்கள், இன்னும்சிலர் சில இஸ்லாமிய(?) அமைப்புகளை வைத்துக் கொண்டு தங்களை பெரியமேதைகளாகவும் இஸ்லாமிய அறிவு பெற்றவர்களாகவும் இஸ்லாத்தில் தங்களுக்குநம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள், இவர்கள்அனைவரும் உண்மையில் உலக ஆதாய வாதிகள், முஸ்லிம்கள் தங்கள்வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மார்க்கத்தை பிரிக்க வேண்டும் என்று கோரும்மதசார்ப்பின்மை கொள்கை (Secularism) உடையவர்கள்.
இவைகள் அனைத்தும் இஸ்லாத்தை வீழ்த்துவதற்காக திட்டமிட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளும் அமெரிக்காவும் உபகரணங்களாகும், இதன்படிமுஸ்−ம்களை அவர்களுடைய மார்க்கத்தி−ருந்து பிரித்து முதலாளித்துவகோட்பாட்டின்படி வாழ வைக்க திட்டமிடப்படுகிறது, அந்த நோக்கத்தைநிறைவேற்றுவதற்கு செய்தி ஊடகங்கள் மூலமாக தவறான கருத்துக்களையும்செய்திகளையும் பரப்புதல். இஸ்லாத்தின் சட்டங்களையும் நெறிமுறைகளையும்திரித்துக் கூறுதல், இஸ்லாம் அல்லாத குöப்ர் சட்டங்களை முஸ்−ம்கள் மீதுதிணித்தல். இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த அவ்வப்போது பல சட்டங்களைக்கொண்டு வருதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, மேலும் இஸ்லாமியநாடுகளையும் அதன் மக்களையும் அடிமைப்படுத்த ஒப்பந்தங்கள் என்ற பெயரிலும்உடன்படிக்கைகள் என்ற பெயரிலும் தொடர்ந்து அவர்களை குöப்பார்களின்ஆதிக்கத்தில் வைப்பதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன,இதன்மூலம் அவர்களை ஏழ்மைப்படுத்தவும் அவர்களின் உயர் மாண்புகளைஅழிக்கவும். சதித்திட்டம் தீட்டப்படுகின்றன, அச்சத்தினையும் அச்சுறுத்தும் அத்துமீறல்களையும் அவர்கள் மீது ஏவிவிட்டு விழித்துக் கொண்ட இஸ்லாத்தின்வீரப்புதல்வர்களை அச்சம் கொள்ளச் செய்ய அவர்கள் மீது தாக்குதல்நடத்தப்படுகிறது, இதன்மூலம் அவர்கள் செயல்படாமல் மௌனமாகிவிட கவனமாகதிட்டம் தீட்டப்படுகிறது, இதனால் முஸ்−ம்கள் எவரும் இஸ்லாத்திற்காகஉண்மைக்காக குரல் எழுப்ப முடியாமல் போகும் என்று இந்த குöப்பார்கள்மனப்பால் குடிக்கிறார்கள், குöப்ருக்கும் குöப்பார்களுக்கும் பணிந்து போகும் படிஇஸ்லாமிய சமூகத்துக்கு அமெரிக்கா கட்டளையிடுகிறது.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வீழ்த்திடவும் அவர்களை குöப்ர்சட்டங்களுக்கு அடிபணிய வைக்கவும் அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்டநடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களையும் இது வரையில் கண்டோம்,இத்திட்டத்தின் ஒரு பகுதியான முதலாளித்துவ சித்தாந்தத்தின் பிரச்சாரம் நான்குவகையான கோஷங்களில் வெளிப்படுகின்றன,இந்த கோஷங்கள் இந்த சித்தாந்தத்தின் கருப்பொருளாகும்,
அவையாவன.
1. ஜனநாயகம் (DEMOCRACY)
2. பன்மை வாதம் (PLURALISM)
3. மனித உரிமை (HUMAN RIGHTS)
4. தாராள வர்த்தக கொள்கை (FREE MARKET POLICIES) ஆகியவைகளாகும்.
இந்த நான்கு கோஷங்களைப்பற்றியும் அடிப்படைகள் பற்றியும் பேசுவதற்குமுன்பு அவைகள் தவறான அடிப்படைகளில் உருவாகி இருக்கின்றன என்பதைவிளக்குவது அவசியமாகும்,இந்த கோஷங்களின் அடிப்படை முதலாளித்துவ சித்தாந்தமாகும், அதாவதுவாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிப்பது என்ற கொள்கையாகும், இந்தக்கொள்கை அறிவார்ந்த முறையிலோ அல்லது தர்க்க ரீதியாகவோ உருவாகவில்லை,மாறாக இருமுரண்பட்ட கருத்துக்களுக்குமிடையில் ஏற்பட்ட சமாதான பேரமாகும்,அதன் ஒரு கருத்தாவது. இது வரலாற்றின் இடைப்பட்ட காலத்தில் (Medieval Age) ஐரோப்பாவில் கிருஸ்தவ தேவ ஆலயங்களின் மதாச்சாரியார்களிடம் இருந்துவந்த கருத்து, இதன்படி வாழ்வின் அனைத்து விவகாரங்களும் மதத்தின்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், அதாவது கிருஸ்தவ மதத்தின் கட்டுப்பாட்டில்-இதன்மூலம் மக்களின் அனைத்து விவகாரங்களிலும் தலையிடும் அதிகாரம்கிருஸ்தவ ஆலயங்களின் மதாச்சாரியார்கள் கையில் இருந்தது,
இரண்டாவதுகருத்து, ஐரோப்பாவில் இருந்த சிந்தனைவாதிகள். தத்துவ மேதைகள் அரசியல்அறிஞர்கள். விஞ்ஞானிகள் ஆகியோரின் கருத்து, இதன்படி இந்த பிரபஞ்சத்துக்குசிருஷ்டி கர்த்தா என்ற படைப்பாளன் ஒருவன் இல்லை, எல்லா நிகழ்வுகளும்இயற்கையாகவே சுயமாக நடைபெறுகிறது என்பதாகும், அதாவது இறைநம்பிக்கையை நிராகரிக்கும் கொள்கை, இவ்விரு சாரர்களுக்குமிடையில் ஏற்பட்டசமாதான பேரமே முதலாளித்துவ சித்தாந்தம் என்பதாகும், அதாவது மனிதனின்வாழ்வியல் விவகாரங்களில் மதம் எந்த தலையீடு செய்யாமல் அதனை பிரித்துவிடுவது என்ற கொள்கையாகும்,இரண்டு உடன்பாடான கருத்துக்களுக்கிடையில் அவைகளில் சில வேறுபாடுஇருந்தாலும் சமாதானம் ஏற்படுவது என்பது நாம் புரிந்து கொள்ளக்கூடியது,
ஆனால் முற்றிலும் முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கிடையில் உடன்பாடுஏற்படுவதென்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக் முடியாததும். புரிந்து கொள்ளமுடியாததும் அறிவுக்கு பொருத்தம் இல்லாததும் ஆகும், ஒன்று இறைவன் ஒருவன்இருக்கின்றான் அவனே மனித இனத்தையும். அனைத்து உயிர்களையும்பிரபஞ்சத்தினையும் படைத்தான் என்றும் அவன்தான் மனிதன் வாழ்வுக்குவழிகாட்டுவதற்காக சட்டங்களையும் நெறிமுறைகளையும் வகுத்து தந்துள்ளான்என்றும் அவனே மரணத்துக்குப் பின்பு இந்த நெறிமுறைகளின்படி மனிதன்வாழ்ந்தானா? என்று விசாரணை செய்வான் என்றும் விவாதம் சொல்ல வேண்டும்அல்லது இறைவன் ஒருவன் இல்லை ஆகவே மனிதனுக்கு இறைநம்பிக்கையைபோதிக்கும் மதம் தேவையில்லை. மனிதனின் வாழ்வியல் விவகாரங்கள்அனைத்தி−ருந்தும் மதம் கற்பிக்கும் நம்பிக்கைகள் அகற்றப்படுவதற்கு ஏதுவாக இறை நம்பிக்கை என்ற ஆன்மீக சிந்தனையே மனிதனிடமிருந்து அகற்றப்படவேண்டும் என்றும் விவாதம் சொல்ல வேண்டும்,
அரசிய−ருந்து மதத்தை பிரிப்பது அல்லது மனிதன் வாழ்வியல்விவகாரங்களி−ருந்து மதத்தை பிரிப்பது என்பது எவ்வகையிலும் அறிவுக்குஒவ்வாத கருத்தாகும்,இறைவனைப் பற்றிய சிந்தனையும் அவன் இருக்கின்றானா அல்லது இல்லையாஎன்ற விவாதமும் முக்கியமான விஷயமில்லை என்ற முதலாளித்துவ வாதிகளின்மனித உள்ளம் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாகும், எனவே இறைவன்இருக்கின்றான் என்ற நம்பிக்கை உடையவர்களும் இறைவன் இல்லை என்றகருத்து உடையவர்களும் ஒருபோதும் ஒரே பாதையில் செல்ல முடியாது,
இந்தஇருசாரரும் முதலாளித்துவ சித்தாந்தத்தை அறிவுப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவேமுடியாது,மனிதன் வாழ்வு மரணம் பிரபஞ்சம் ஆகியவைகளைப்பற்றி ஆழ்ந்து சிந்தனைசெய்யும் ஒரு மனிதன் அறிவார்ந்த பல ஆதாரங்களின் அடிப்படையில் இறைவன்என்ற படைப்பாளன் இருக்கின்றான் என்றும். அவனே அனைத்தையும்படைத்துள்ளான் என்றும். அவனே மனிதனுக்கு தேவையான வாழ்வியல்சட்டநெறிமுறைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளான் என்றும்.மரணத்திற்கு பின்பு அவனே விசாரனை செய்வான் என்றும் உறுதியானநம்பிக்கைக்கு வந்தே ஆக வேண்டும் என்றும் இப்போது நமது விவாதம் இறைவன்இருக்கிறானா அல்லது இல்லையா என்பது பற்றியோ அவன் மனிதனுக்குவழிகாட்ட சட்டங்களை வழங்கியிருக்கிறானோ என்பது பற்றியோ அல்ல, மாறாகநாம் முதலாளித்துவ சித்தாந்தம் பற்றியும் அதன் தவறான அடிப்படையை வெளிக்கொணர்வது குறித்தும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த சித்தாந்தம்இருமுரண்பட்ட வெவ்வேறு இரண்டு கருத்துக்களின் கலவை என்பதையும் இதில்உண்மையின் அடிப்படை இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும்.
முதலாளித்துவ சித்தாந்தம் தவறு என்று நாம் நிரூபணம் செய்துள்ளது,அதன்மீது கட்டமைக்கப்பட்டுள்ள அனைத்து கொள்கைகளையும்நெறிமுறைகளையும் தவறு என்று நிரூபிக்க போதுமானதாகும், இதன் அடிப்படைஅம்சங்களை ஆழமாக ஆராய வேண்டிய அவசியம் நமக்கு இல்லை, ஆனால்இதன் கருத்துக்கள் உலகம் முழுவதும் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்.இவற்றின் சில அம்சங்களை முஸ்−ம்கள் ஏற்றுக் கொள்ள தயாராகிவிட்டார்கள்என்ற சூழ−ல். இந்த கோஷங்களிலும் இதை நடைமுறைப்படுத்த செய்யப்படும்அமெரிக்காவின் திட்டமிட்ட நடவடிக்கைகளிலும் இஸ்லாத்தையும் அதன்மக்களையும் நெறியற்ற முறையில் நசுக்குவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதால்.இதைப்பற்றி இங்கு விவாதிப்பது நமக்கு அவசியமாகிறது, அவைகளின் தவறானஅடிப்படையையும் அவை முற்றிலும் இஸ்லாத்திற்கு முரண்பட்டவை என்பதையும்நாம் எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளோம், எனவே முஸ்−ம்கள் இந்தகோட்பாட்டையும் அதனின்று பிறந்த அனைத்து கொள்கைகளையும்.நெறிமுறைகளையும். வழிமுறைகளையும் முற்றாக நிராகரிக்க வேண்டும், அவற்றைகடைபிடித்து இஸ்லாத்தில் தடை கோட்பாடுகளை பிரச்சாரம் செய்வதையும் அதைசெயல்படுத்தும் நோக்கத்தோடு செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம்கள் முழுபலம் கொண்டு எதிர்க்க வேண்டும்,

Monday, January 19, 2009

நன்றி யூதனே!

யூத அரக்கனுக்கு
இதயம் இருக்குமோ?
யுத்த இருள் நீங்க
உதயம் பிறக்குமோ?



மானுடம் உலகில்
மாண்டு விட்டதோ? இல்லை…
மாபாதகம் உலகை
ஆண்டு விட்டதோ?




ஆக்கிரமிப்பு என்றார்…
அமோக வரவேற்பு!
விடுதலை என்றோம்…
வெண் பொசுபரசு குண்டுகள்!




அழிப்போம் என்றார்…
சாட்டுப் பேசினர்!
அமைதி என்றோம்…
‘வீட்டோ’ வீசினர்!




மழலைகள் மடிந்தன என்றோம்…
இஸ்ரேல் மதில்களும் இடிந்தன என்றார்!
மானிடன் ஆத்மா என்றோம்…
இரண்டுமெ குற்றங்கள் என்றார்!




முஸ்லிமே!



முதல் கிப்லா தகர்ந்தது…
ஹரத்தில் கஃபா என்றோம்!


முஸ்லிம்கள் கதறினர்…
எல்லைக்கு வெளியே என்றோம்!



வாழ வழி கேட்டார்…
பாதையை வழி மறித்தோம்!



மீட்க படை கேட்டார்…
முகாமில் பூட்டி வைத்தோம்!



ஆக்கிரமிப்பை எதிர்த்தார்...
‘ஜிஹாத்’ அபத்தம் என்றோம்!



கலீபா எங்கே என்றார்...
பழங்கதை எதற்கு என்றோம்!



தொடர்ந்தோம்! தொடர்ந்தோம்!



இறை நேசர்களை
சிறைக்குள் அடைத்தோம்!


பொது எதிரியை
இமயமாய் வளர்த்தோம்!



தூய தியாகிகளை
தூக்கிலே போட்டோம்!



வீர வரலாற்றை
வீணே மறைத்தோம்!



இழிவு தரும் தீர்வுகள் பேசினோம்!
அழிவு தரும் அமைதிகள் காத்தோம்!!



பேசிய தீர்விலே
இஸ்லாம் இருந்ததா?
வீசிய பொதிகளில்
விமோசம் கிடைத்ததா?



முஸ்லிமே!


இனியொருமுறை போசோம்!!!


பேசோம்! பேசோம்!!


இனியொருமுறை போசோம்!!!


இனிப்பேச்சு புதுமொழியில்…

ஒரே அணியின் பொறிமுறையில்…



முஸ்லிமே!



தாஹ}த்தை வெட்டி வீழ்வோம்…


உம்மத்தாய் ஒட்டி வாழ்வோம்…


கிலாபத்தை எட்டி மீள்வோம்…


ஷஹாதத் கொடி நட்டி ஆழ்வோம்…


இன்ஷா அல்லாஹ்…



- ஒருவன்

Thursday, January 8, 2009

முஹர்ரமும், நவயுக பிர்அவ்ன்களும்!


இந்த முஹர்ரம் மாதத்திலே அருள்பாளி;க்கப்பட்ட ஆசுரா தினம் எம்மை விட்டு நகர்ந்து சென்றுள்ளது. முஹர்ரம் மாதம் என்பது அல்லாஹ்வினது புனித மாதமாகவும், முஸ்லிம்களினது மிக முக்கிய மாதமாகவும் இருக்கின்றது. இந்த மாதம் ஹிஜ்ரி நாட்காட்டியில் முதலாவது மாதமாகவும், அல்லாஹ் புனிதப்படுத்திய மாதங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது.அல்லாஹ் அத்தவ்பா 36ம் வசனத்தில் கூறுகிறான்“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை ( ஒரு வருடத்திற்குப்) பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவையாகும். (இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்படுவதற்குரிய) அதுதான் நேரான மார்கமாகும். எனவே அவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே நீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்.”

இந்த குர்ஆனிய ஆயத்தில் “நீங்கள் வரம்பு மீறாதீர்கள்” என்ற சொற்றொடருக்கு இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் விளக்கம் அளிக்கையில் “நீங்கள் வரம்பு மீறாதீர்கள் ” என்ற சொற்றொடர் அனைத்து பன்னிரெண்டு மாதங்களை சுட்டிக்காட்டிய பின், அவற்றிலிருந்து நான்கு மாதங்கள் விசேடமாக புனிதமானவையாக தேர்ந்தெடுக்கப்பட்டு கூறப்பட்டுள்ளதால், இந்த நான்கு மாதங்களிலும் செய்யப்படுகின்ற தவறுகள் மிகவும் பாரிய தவறுகளாகவும், அவற்றில் செய்யப்படுகின்ற நன்மைகள் நிறைந்த பலனை தரக்கூடியவை எனவும் தெரிவிக்கிறார்கள்.

இந்த நான்கு மாதங்களும் எவை என்பது குறித்து புஹாரியின் 2958ம் ஹதீஸில் பதிவாகியுள்ளது.ரஸ_ல்(ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ பக்றா (றழி) அறிவிக்கிறார்கள்“வருடம் என்பது பன்னிரெண்டு மாதங்களையுடையது. அவற்றில் நான்கு புனிதமானவை. துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் எனும் தொடர்ச்சியாக வருகின்ற மாதங்களும், ஜூம்மதுல் ஆகிருக்கும் ஸஃபானுக்கும் இடையே வருகின்ற ரஜப் மாதமுமாகும்.”
இவற்றிலிருந்து அல்லாஹ்வும், ரஸ_ல் (ஸல்) அவர்களும் இந்த மாதங்களுக்கு விஷேட முக்கியத்துவத்தினை வழங்கியுள்ளாரகள் என்பது புலப்படுகிறது.

இந்த மாதத்தின் சிறப்புக் குறித்து ரஸ_ல் (ஸல்) அவர்கள் கூறும் போது “ரமழானுக்கு அடுத்தபடியாக, நோன்பு நோட்பதிலே சிறப்பான மாதம் அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரமாகும்” என்றார்கள். (முஸ்லிம்-1982)
மேலும் இமாம் அஹ்மத் ஒரு ஹதீஸினை பதிந்துள்ளார்கள்“இந்த நாளில் (முஹர்ரம்)தான் ஜூது மலையில் நு}ஹ்(அலை)அவர்களின் கப்பல் ஒதுங்கியது. ஆகவே நு}ஹ்(அலை) அவர்கள் இந்நாளில் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காக நோன்பு நோற்றார்கள்.

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிப்பதாக இமாம் புஹாரி அறிவிக்கின்றார்கள்

“து}தர் முஹம்மத்(ஸல்)அவர்கள் மதீனாவுக்கு வந்த சமயத்தில், ஆசுராவினது தினத்தில் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதை அவதானித்தார்கள். அவர்கள் “இது என்ன” என வினவினார்கள். அதற்கு அவர்கள் “இது புனித நாளாகும். இந்நாளிலேதான் அல்லாஹ் இஸ்ரவேலர்களின் சந்ததியினரை அவர்களின் எதிரிகளிடமிருந்து பாதுகாத்தான். ஆகவே மூஸா(அலை)அவர்கள் இந்நாளில் நோன்பு நோற்றார்கள் என்றார்கள்” அதற்கு ரஸ_ல் (ஸல்) அவர்கள் “மூஸாவினிடத்தில் உங்களைவிட எங்களுக்கு உரிமை அதிகமுள்ளது” எனக் கூறி முஹம்மத்(ஸல்) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றார்கள். முஸ்லிம்களையும் அந்நாளில் நோன்பு நோட்கும்படி கூறினார்கள். (புஹாரி-1865)

மேலே சுட்டிக்காட்டப்பட்ட திருகுர்ஆன், மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் முஸ்லிம்கள் முஹர்ரம் பிறை 9,10ம் தினங்களில் நோன்பு நோற்று மூஸா(அலை) அவர்களையும், பிர்அவ்னின் காலகட்டத்தையும் ஞாபகப்படுத்தி வருவது நாமறிந்ததே. அதே போன்று திருமறை, பிர்அவ்ன் எவ்வாறு தனது மக்களை தன்னை “ரப்” ஆக ஏற்றுக்கொள்ளும்படியும், தனக்கு அடிபணியும்படியும் நிர்ப்பந்தித்து வந்தான் என்பதையும் எமக்கு ஞாபகப்படுத்துகிறது. மேலும் அவனது மிகப்பெரிய அறியாமையின் வெளிப்பாடாக தானே வாழ்வையும், சாவையும் நிர்வகிப்பவன் என்ற கருத்தை அவன் எவ்வாறு வெளிப்படுத்தி வந்தான் என்பதும் எமக்கு வரலாறு புலம்படத் தெரிவிக்கிறது.

தனது கருத்தை உறுதிப்படுத்துவதற்காக இரண்டு அடிமைகளை ஒன்று கூட்டி, அதில் ஒருவனை கொல்லும்படி கட்டளையிட்டான். மற்றைய அடிமையை விடுவித்தான்;. இத்தகைய ஒரு செயலை செய்ததன் ஊடாக தானே ஒரு மனிதனின் உயிரை பறிப்பவனும், வழங்குபவனும் ஆவேன் என வாதிட்டான்.எனினும் அல்லாஹ்வின் து}தர் மூஸா(அலை) அவர்கள் மிகவும் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு அவனது அறியாமைக்கு பதில் அளித்தார்கள். அல்லாஹ் தினமும் சூரியனை கிழக்கில் உதிக்கச் செய்து மேற்கில் மறையச் செய்கிறான். நீ சொல்லுவது உண்மையானால் இந்த தினத்திற்கு மறுநாள் சூரியனை மேற்கிலே உதிக்கச் செய்து, கிழக்கிலே மறையச் செய்ய முடியுமா? என வினவினார்கள். இந்த வினா அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் அது அவனது அறியாமையை அவனுக்கு புலப்படுத்திய போதும், அவனி;டமிருந்த அகம்பாவமும், பெருமையும் அவனை து}ய்மையான தௌஹீதை ஏற்க தடையாக இருந்து விட்டது.

இதுபோன்றே எப்பொழுதெல்லாம் சத்தியம், அசத்தியத்தை எதிர்கொள்கிறதோ அப்போதெல்லாம் அசத்தியம் சத்தியத்தியத்தின் முன்னால் மண்டியிடுகிறது. எனினும் அசத்தியவாதிகள் அவர்களது கர்வத்தின் காரணமாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்;;.

இன்று எமது உலகிலும் பல பிர்அவ்ன்களை நாம் காண்கிறோம். மூஸா(அலை) அவர்களையும், அவர்களது கூட்டத்தினரையும் கொடுமைப்படுத்திய பிர்அவ்னைப் போலவே எமது முஸ்லிம் தேசங்களை ஆட்சி செய்து கொண்டு முஸ்லிம் உம்மத்தினை மனிதகுலமே ஜீரணிக்க முடியாத அளவுக்கு ஈவிரக்கமற்ற முறையில் அக்கிரமத்துக்கு உள்ளாக்கும் முபாரக்;, இஸ்லாம் காPமோ, பஸார் அசாத், ஜோர்தான் அப்துல்லாஹ், சவூதி அப்துல்லாஹ், சர்தாரி, ஹாமிட் கர்சாய் போன்ற பல பிர்அவ்ன்களை நாம் காண்கின்றோம். காஸாவிலே இரத்தக்காட்டேறி இஸ்ரேல் எமது குழந்தைகளை குண்டுமழைபொழிந்து கொள்வதற்கு தனது விசுவாசத்தை இஸ்ரேலுக்கும் மேற்குலகுக்கும் காட்டுவதற்கு முபாரக் தனது எல்லைக்கதவை இழுத்து மூடி வைத்திருக்கிறான். சுமார் 450000 முஸ்லிம் துருப்புக்களை எகிப்த்துக்குள் பூட்டி வைத்திருக்கிறான். 220 மேற்பட்ட எப்ஃ 16 இராணுவ விமானங்களை துரப்பிடிக்க விட்டிருக்கிறான். அல்லாஹ் எகிப்த்தின் பிர்அவ்னை சமுத்திரத்தில் மூழ்கடித்தது மாதிரி இந்த முபாரக்கினையும் கடலிலே தள்ள வெகுகாலம் எடுக்காது.

மூஸா(அலை) காலத்து பிர்அவ்ன் தன்னை “ரப்” ஆக ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்தித்தான். அதே போன்று இன்றைய பிர்அவ்ன்களான இவர்கள் தம்மை தமது அதிபதியாக(ரப்) ஏற்றுக்கொள்ளும்படியும், அல்லாஹ்வின் சட்டங்களுக்கு பகரமாக தமது சட்டங்களை ஏற்றுக்கொள்ளும்படியும் முஸ்லிம்களை நிர்பந்திக்கிறார்கள்.

ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹ}சைன் முஸ்லிம்கள் மீது அல்லாஹ்வின் ஷரிஆவின் சட்டங்களுக்கு பதிலாக தனது கொடிய பாத்திஸத்தை திணித்து அட்டூழியம் புரியவில்லையா? லிபியாவின் அநியாயக்காரன் கடாபி முஸ்லிம்களை குர்ஆனை ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு தனது பசுமை நு}லை கடைப்பிடிக்குமாறு நிர்ப்பந்திக்கவில்லையா? முன்னாள் பாகிஸ்தானின் தலைவர் முஷர்ரப் இஸ்லாமிய சட்டங்களுடன் பொருந்திப்போகக்கூடிய அல்லது அதனையொத்த 5500 சட்டங்களை அறிமுகப்படுத்த எத்தனிக்கிறேன் என்று முஸ்லிம்களைப்பார்த்து கூறவில்லையா? அதாவது தனது குப்ர்ச் சட்டங்களுக்கு இஸ்லாமிய சாயம் பூச எத்தனித்து அவன் நாடகமாடவில்லையா? அதேபோன்றே உஸ்பகிஸ்தானின் அரக்கன் இஸ்லாம் கரிமோ தேசியவாச குப்ர் சிந்தனையின் பால் அந்நாட்டு மக்களை அழுத்தியதுடன் கிலாபத் மீதிருந்த அம்மக்களின் உணர்வு பூர்வமான ஈடுபாட்டை அடக்க முனையவில்லையா?

இவ்வாறு வரம்பு மீறி அநியாம் செய்யும் இந்த ஆட்சியாளர்கள் பற்றிதான் அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.

அல்லாஹ் சூறத்துல் மாயிதாவில் தெறிவிக்கின்றான். “எவரொருவர் அல்லாஹ் இறக்கியருளியதற்கு (சட்டங்களுக்கு) மாற்றமானதைக் கொண்டு ஆட்சி செய்கிறானோ அவன் காபிராவான்”

மூஸா(அலை) அவர்களது சமூத்தினருடன் பிர்அவ்னின் அடக்குமுறை எவ்வாறு இருந்ததோ அதேயொத்த அடக்குமுறையும், அநியாயமும் தற்போது தொடர்வதை இன்றைய உலகிலும் நாம் காண்கிறோம்.

இஸ்லாமிய ஷாPஆ சட்டங்களின் அடிப்படையில் ஆட்சியை மேற்கொள்ள முயன்ற தனிபான் ஆட்சியாளர்களை 9ஃ11 தாக்குதலை அடுத்து அமெரிக்கா எவ்வாறு இல்லாது செய்தது என்பதை சிந்தித்து பாருங்கள். உசாமா பின் லேடனை பிடிக்கப்போகிறோம் என்ற போலிவேடத்துடன் ஆப்கானிஸ்தானுக்குள் உள்நுழைந்த அமெரிக்க மற்றும் துணைப்படைகள் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களையும், பெண்களையும், குழந்தைகளையும் எவ்வாறு ஈவிறக்கமற்று கொன்றொழித்தார்கள் என்பதை சற்று மீட்டிப்பாருங்கள். இதன்போது தனது எல்லைகளையும், தனது அனைத்து வளங்களையும் திறந்து கொடுத்து ஆப்கானிய முஸ்லிம்களை கொன்றொழிப்பதற்கு எவ்வாறு முஷரப் அமெரிக்காவுடன் தோளோடு தோள் நின்றான் என்பதை சிந்தித்து பாருங்கள். இன்று பெருமளவில் நேட்டோ குப்ர் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள் ஆப்கானை மீண்டும் மீட்டு முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் கண்ணியத்தை பெற்றுத்தர தீவிரமான போராடிக்கொண்டிருக்கின்ற தலிபான் போராளிகளை கூட்டம் கூட்;டமாக கொன்றொழிப்பதற்கு அமெரிக்கா எடுத்துவரும் முயற்சி தொடர்பில் எவ்வாறு ஆப்கானின் அமெரிக்க அடிவருடி ஹாமி;த் ஹர்ஸாயும், முஷரப்பும் தமக்குள் கருத்து வேறுபாடு கொண்டு நடந்து கொண்டார்கள் என்பதை எண்;ணிப்பாருங்கள். அவர்கள் குப்பார்களிடமிருந்து முஸ்லிம்களையும், முஸ்லிம் போராளிகளையும் பாதுகாப்பதற்கு பதிலாக நாங்கள் பாக்கிஸ்தான் - ஆப்கான் எல்லையில் அமைந்துள்ள வர்க்கிஸ்தான் பஸ்து}ன் இன முஸ்லிம்களை முற்றாக அழிப்பதா? அல்லது அவர்களுள் மறைந்துள்ள தனிபான் முஜாஹித்களை இனம்கண்டு அழிப்பதா? என கேவலமான ஒரு வாதத்தில் எவ்வாறு இந்த இரு தலைவர்களும் ஈடுபட்டார்கள் என்பதை நீங்கள் நினைத்து பாருங்கள். முஷரப் தனது சுயசரிதை நு}லிலும், சிஎன்என் நேர்காணலிலும் தெரிவித்த கருத்தை எண்ணிபாருங்கள். பாக்கிஸ்தானை அமெரிக்க விமானங்கள் தாக்கியழித்து பாகிஸ்தானை மீண்டும் கற்காலத்துக்கு கொண்டு வந்துவிடுவோம் என்ற அமெரிக்கா அச்சுறுத்தியதற்காகவே ஆப்கானிஸ்தானை தாக்குவதற்கும், அல் கய்தாவையும், தலிபான்கiயும் வேட்டையாடுவதற்கும் நான் ஒத்தழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என மிகவும் கேவலமாகவும், கோழைத்தனமாகவும் அவன் தெரிவித்ததை நாம் கண்டு வெட்கப்படவில்லையா? அவனுடைய பார்வையில் பாகிஸ்தான் மக்களின் உயிரும், இரத்தமும் ஆப்கானிய முஸ்லிம்களின் உயிரிலும், இரத்தத்திலும் பெறுமதியாக தெரிகிறதா? இவன் போன்ற ஆட்சியாளர்கள்தான் முஸ்லிம் உம்மத்தினை தேசியவாதத்தின் அடிப்படையில் பிரித்துப்பார்ப்பவர்கள், இவன்போன்றவர்கள்தான் உம்மத்தின் செல்வங்களையும் வளங்களையும் செயற்கை எல்லைக்கோடுகளால் பிரிப்பவர்கள்.

ஆப்கானிய பூமி, பாக்கிஸ்தான் பூமியிலிருந்து வேறுபட்டதா? அல்லாஹ்வும், அவனது து}தரும் முஸ்லிம்களின் பூமியை பிரிக்கச் சொன்னார்களா? முஸ்லிம் சகோதரர்களை பிரித்தாள்வதற்காக பரித்தானியர்களால் செயற்கையாக போடப்பட்ட இந்த எல்லைகளை இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறதா? அல்லாஹ்வும், அவனது து}தரும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர்கள் முஸ்லிம் உம்மத்தின் மீது ஆட்சி புரிவதை ஏற்றுக்கொண்டுள்ளனரா?எமதருமை ரஸ}ல் (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸிலே குறிப்பிடுகிறார்கள்.

“நீங்கள் ஒருவரைக்கொண்டு ஐக்கியத்துடன் இருக்கின்ற நிலையில், உங்களது பலத்தை குழைப்பதற்காகவும், ஐக்கியத்தை பிளவுபடுத்துவதற்காகவும் எவரேனும் உங்களிடத்தில் வருவாரேயானால் அவரை கொன்றுவிடுங்கள”; என்று கூறி முஸ்லிம் உம்மத்தினை ஒருமைப்பாட்டை மிகவும் காத்திரமாக வலியுறுத்துகிறார்கள்.

மேலும் அரை நு}ற்றாண்டுக்கும் மேலாக பலஸ்தீனத்திலும், மத்திய கிழக்கிலும் அரங்கேற்றப்படும் அநியாயங்களையும், முஸ்லிம்கள் அனுபவித்துவரும் அவலங்களையும் பார்க்கிறோம். 1948ம் ஆண்டில் சட்ட விரோதமாக இஸ்ரேல் நிறுவப்பட்டதை தொடர்ந்து எத்தனை ஆயிரம் முஸ்லிம்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள் என்பதை கணக்கடுத்துப்பாருங்கள். தமது பச்சிளங்குழந்தைகளை எமது முஸ்லிம் தாய்மார்கள் தமது கண்களுக்கு முன்னாலேயே பறிகொடுத்த அவலத்தை எண்ணிப்பாருங்கள். எத்தனை சிறார்கள் அனாதைகளானார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள், எத்தனை விதவைகள், எத்தனை அங்கவீனர்கள் இவை எல்லாவற்றையும் ஆழமாக சிந்தித்து பாருங்கள். இவை எல்லாம் அந்த பிர்அவ்னின் கொடுமைகளை ஒத்தவைகள் இல்லையா? எனினும் இறுதியில் அல்லாஹ் எவ்வாறு மூஸா(அலை) அவர்களையும், பனு இஸ்ரவேலர்களையும் அவனது கட்டளைப்படி பிர்அவ்னின் படியிலிருந்து பாதுகாத்து, பிர்அவ்னையும் அவனது படைகளை அழித்தான் என்று குர்ஆன் விபரித்து உரைப்பதை பார்க்கும்போது குப்ர் ஆட்சியாளர்களுக்கும், அவர்களை ஆதரிக்கின்ற எமது முனாபிக் தலைவர்களுக்கும் இறுதியில் என்ன நடக்கப்போகின்றது என்பதை அல்லாஹ்; எமக்கு படிப்பினையாக கூறுகிறான்.

மூஸா (அலை) அவர்களின் சமூகத்தை அழிப்பதற்காக பிர்அவ்னின் படை பின்தொடர்ந்தபோது சமுத்திரத்திற்குள் குதித்த போது அல்லாஹ் எவ்வாறு மீண்டும் கடலை மூடச்செய்து பிர்அவ்னையும், அவனது படைகளையும் கேவலமான முறையில் அழித்தான் என்பதை ஞாபகப்படுத்தி பாருங்கள். அந்த நேரத்தில் பிர்அவ்னின் உயிரைக் கைப்பற்றுவதற்கு மலக்குல் மௌத் வந்த நேரம் அவன் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள முற்பட்டதையும், அதன்போது அவனது ஈமான் ஏற்றுக்கொள்ளப்படாது அவன் கைசேதப்பட்டதையும்; ஞாபகப்படுத்தி பாருங்கள்.

இன்று ஹமாஸ}க்கு எதிரான தாக்குதல்கள் என்ற போர்வையில் இன்று அரங்கேற்றப்படும் இனப்படுகொலைகளையும், ஹமாஸ் பலஸ்தீன தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் நிகழ்த்தப்பட்ட இஸ்ரேயிலின் அடாவடித்தனங்களையும், லெபனானின் மீதும், ஹிஸ்புல்லாஹ் போராளிகள் மீதும் இஸ்ரேல் மேற்கொண்ட அரக்கத்தனமான யுதத்தையும் எடுத்தப்பாருங்கள். ஆயிரக்கணக்கான முஸ்லிம் பொதுமக்களை காவு கொள்ளும் இத்தகைய யுத்தங்களில்; எமது அரபுலகத்தலைவர்களும், முஸ்லிம் நாட்டு தலைவர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள். நு}ற்றுக்கணக்கான முஸ்லிம் ஆண்களையும், பெண்களையும், சிறுவர்களையும் அநியாயமாக கொலை செய்து கொண்டும், கைது செய்து சிறைகளை நிரப்பிக்கொண்டிருக்கும் இஸ்ரேயிலுக்கு எதிராக ஒரு வார்த்தையையேனும் கூற முடியாத இந்த முனாபிக் தலைவர்கள் காஸா முஸ்லிம்களை முற்றுகைக்குள் வைத்து பொருளாதார மற்றும் போக்குவரத்து தடைகளை ஏற்படுத்திப பட்டினிபோட்டு படுகொலை செய்ய முயன்ற இஸ்ரேலின் நயவஞ்சக ஒப்பந்ததை மீறியதாகச் சொல்லி ஹமாஸினை கண்டிப்பதிலேயே குறியாக நிற்கிறது.
இதே நிலைப்பாட்டைத்தான் 2006ம் ஆண்டின் ஹிஸ்புல்லாஹ் - இஸ்ரேல் யுத்தத்தின் போதும் ஹிஸ்;புல்லாஹ் போராளிகளின் நியாயமான போராட்டத்தை ஆதரிக்காது அவர்கள் இரு இஸ்ரேல் துரப்புக்களை கடத்தியமைதான் அனைத்து அவலத்திற்கும் காரணம் எனக்கூறி ஹிஸ்புல்லாஹ் மீது சாடியமையை நாம் மறந்து விட முடியாது. இவர்கள் முஸ்லிம் உம்மத் அனுபவித்து வரும் அவலங்கள் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாது தமது பொழுதை கழிப்பது மாத்திரமல்லாது குப்பார்களுக்கு தமது பூரண ஆதரவினையும் வெளிப்படுத்தி வருவது முஸ்லிம்கள் தாம் யாருக்கு கீழ் வாழ்ந்து வருகிறோம் என்பதை பல முறை சிந்திக்க வேண்டியிருக்கிறது.

அதேநேரத்தில் அல்லாஹ்வினதும், முஸ்லிம்களினதும் பிரதான எதிரியாக விளங்கும் குப்பார்களின் தலைவனை பற்றி சிந்தித்துப்பாருங்கள். அவன் தான் அமெரிக்கா. அட்டூழிதத்தின் அச்சாணி. நவீன கால பிர்அவ்னின் அரக்க அரசு. மூஸா(அலை) அவர்கள் காலத்து பிர்அவ்னைப்போல அமெரிக்கா தன்னை அனைவரும் ரப் ஆக ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்கிறான். அணு ஆயுதங்களை தான் வேறொரு நாட்டு மக்கள் மீது பிரயோகித்து பரிசோதித்து பார்ப்பேன், எனினும் ஏனைய நாடுகள் அணு விஞ்ஞானத்தைக்கூட பரிசோதித்து பார்க்கக்கூடாது என்று அவன் நிபந்தனை விதிக்கிறான். அவன் ஈரானுக்கும், வடகொரியாவுக்கும் என்ன சொல்கிறான் என்பதை விசாரித்துப்பாருங்கள். நான் பயங்கரவாதிதான். எனினும்; எனக்கெதிராக போராடுகின்ற போராளிகளை வேரறுத்து விடுவதற்கான பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நான் முன்னெடுக்கும்போது எவரும் அதனை எதிர்த்துவிடக்கூடாது. மாறாக எனது அணியில் சேர்ந்துவிடவேண்டும்;. அவ்வாறு எனது அணியில் சேராது விலகிவிட்டால் பயங்கரவாதி என்ற பட்டியலில் நீங்கள் சேர்த்து விடுங்கள் என்று அவன் கட்டளையிடுகிறான். எனவே இத்தகைய ஒரு தீர்மானகரமான சூழலில் நாம் முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்க வேண்டுமாகவிருந்தால் எம்மை அல்லாஹ்வின் அணியிலும், அவனுக்கான மேற்கொள்ளப்படுகின்ற போராட்டத்திலும் நாம் இணைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இதற்கு முதலில் முஸ்லிம் உம்மத்தின் ஒரு அங்கமாக எம்மை நாம் புரிந்துகொண்டு, அதனை உணர்வு பூர்வமான உள்வாங்கிக்கொண்டு முஸ்லிம் உம்மத்தின் விவகாரங்களின் மிகவும் ஆழமான அறிவுடனும், ஆழமான ஈடுபாட்டுடனும் நாம் செயற்படவேண்டியிருக்கிறது.

முஹம்மது(ஸல்) அவர்கள் நவின்றார்கள். “எவனொருவன் முஸ்லிம்களின் விவகாரங்கள் குறித்த சிந்தனை இல்லாமல் தனது காலைப்பொழுதை அடைகிறானோ அவன் எம்மைச்சார்தவன் அல்ல” (முஸ்லிம்)

எனவே ஒவ்வோரு முஸ்லிமும் ஏனைய முஸ்லிம்களின் சூழ்நிலை பற்றிய சிந்தனையுடன் இருக்க வேண்டும். இது தொழுகை எவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையோ, அதே போன்று கடமையாகும். இந்த ஹதீஸ் உலகில் வாழும் எமது முஸ்லிம் உம்மத் தொடர்பான, எமது சகோதர, சகோதரிகளின் நிலை தொடர்பான விடயங்களை நாம் ஆழமாக ஆராய வேண்டும் என்பதை எமக்கு கட்டாய கடமையாக்குகிறது. அவர்களது பிரச்சினைகள் என்ன? அவை தீர்க்கப்படுகின்றனவா? யார் தீர்க்கிறார்கள்? இந்த தீர்வுகள் இஸ்லாத்திலிருந்து பெறப்பட்டனவா? என்பவை குறித்து ஆராய்வது தவிர்க்க முடியாதது.

முஸ்லிம்களே!

எங்களுடைய தாய்மார்களும், சகோதரிகளும் யூதர்களின் கொடூரக் கரங்களில் சிக்கி இரத்தக் கண்ணீர் வடிக்கும் போது,

எங்களுடைய வயது முதிர்ந்த பெரியோர்கள் தமது இல்லங்கள் குண்டுகளால் சிதறி தமது குடும்பங்களை இழந்து அநாதரவாக கதறும் போது

எமது சின்னஞ்சிறார்கள் காஸாவிலும், ஈராக்கிலும், ஆப்கானிலே யுத்தத்தினாலும், வறுமையினாலும் ஜீவமரணப்போராட்டத்தில் இருக்கும்போது

எமது கரங்கள் அவர்களை நோக்கி நீட்டப்படாது இருக்க, அல்லது அவர்களுக்கான மீட்சிப் பாதையை நோக்கி நாம் பயணிக்காதிருக்க எமக்கு என்ன நேர்ந்து விட்டது?

இமாம் அபூஹனீபா போன்ற அறிஞர்களை ஈன்றெடுத்த, காருன் அல் ரஷீத் போன்ற கலீபாக்களின் தலைநகரமாக விளங்கிய எமது ஈராக் பூமீ கயவர்களான அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும் சூறையாடலுக்குள் அகப்பட்டுக் கிடக்கிற நிலையில் அவற்றை அதன் கண்ணியத்துடன் மீட்பதற்கான முயற்சியில் நாம் ஈடுபடாதிருக்க எமக்கு என்ன நேர்ந்து விட்டது?

வளைகுடா யுத்தத்திற்குப்பின் சுமார் மில்லியன் முஸ்லிம்களை பொருளாதாரத்தடை என்ற பெயரில் கொன்றுகுவித்த அமெரிக்க ஆக்கிரமிப்பாளன் நாங்கள்தான் மீட்புப்படை எனக்கூறும் போது அதைக்கேட்டுக்கொண்டிருக்க எமக்கு எமது உம்மத்திற்கு வெட்கமில்லையா?
முஸ்லிம்களுடைய பரிதாப நிலையைப் பாருங்கள். குப்பார்கள் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள். எமது நாட்டை ஆக்கிரமிக்கிறார்கள், எமது முஸ்லிம்களை குடும்பம் குடும்பமாக கொன்றொழிக்கிறார்கள். எனினும் அவர்களுக்குரிய சரியான. முறையான பதிலடியினை கொடுப்பதற்குரிய அதிகாரமோ, பலமோ இல்லாத நிலையில் நாமிருக்கின்றோம்.

மறுபுறத்தில் மேற்குலக நாகரீகத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் எமது முஸ்லிம் நாடுகள் அகப்படடிருப்பதை காண்கிறோம். கேளிக்கூத்துக்களும், காமக்களியாட்டங்களும் எமது நாடுகளில் சர்வசாதாரணமாக நிறைந்து கிடக்கிறது. எமது நாடுகளில் “றிபா”வின் அடிப்படையில், அல்லது அதன் ஆதிக்கத்தின் கீழ் பொருளாதாரம் நகர்கிறது. ரமழானில் மட்டும் எமது நாடுகளில் இரவு களியாட்ட விடுதிகள் சம்பிரதாய பூர்வமாக மூடப்பட்டு பெருநாள் தினத்திலிருந்து அவை மீண்டும் திறந்து விடப்படுகின்றன. பங்களாதேஸ் போன்ற முஸ்லிம் நாடுகள் விபச்சாரத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதில் முன்னின்றதை நாம் காண்கின்றோம். பாகிஸ்தானில் றிபாவினை அனுமதிப்பதா? இல்லையா என விவாதம் நடந்ததை நாம் காண்டோம். இதுதான் எமது பரிதாப நிலை…

எனவே இந்த நு}ற்றாண்டுகளில் நாம் மிகவும் பலகீனமான நிலைக்கு சென்றிருக்கின்றோம். எமது இலட்சியம் குறித்த சிந்தனை பலகீனமான நிலைக்கு சென்றிருக்கிறது. இந்த இடைவெளிகளைப் பயன்படுத்திக்கொண்டு சைத்தானின் கூட்டாளிகளான குப்பார்கள் இந்த பூமியில் தமது அநியாயத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். அவர்களது கைகளால் இன்றுவரை சொல்லொண்ணா அநியாயங்களை நாம் சந்தித்து விட்டோம்.

சகோதரர்களே!

நாம் இந்த சைத்தானின் சக்திகளுக்கும், அடிப்படையிலேயே பலகீனமான குப்பார்களுக்கும் அஞ்சிவிட முடியாது. அல்லாஹ்வின் மீதும், தீனின் மீதும், அல்லாஹ் எமக்கு உறுதியாக வாக்களித்திருக்கின்ற இறுதி வெற்றியின் மீதும் நாம் நம்பிக்கையிழந்துவிட முடியாது.
அல்லாஹ் ஸ_றா ஆலஇம்ரானில் கூறுகிறான்

“அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை யாராலும் வெற்றி கொள்ள முடியாது. அவன் உங்களை கைவிட்டு விட்டால் அதற்கு பிறகு உங்களுக்கு உதவி செய்வதற்கு யார் இருக்கிறார்கள்? மேலும் இறை நம்பிக்கையாளார்கள் அல்லாஹ்வின் மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள்”(ஆல இம்ரான்-160)

எனவே முஸ்லிம் உம்மத் தமது பலத்தையும், அதிகாரத்தையும், ஐக்கியத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக தமது முழு வாழ்வையும், உடலையும், உயிரையும் கூடத் தியாகம் செய்து போராட வேண்டியுள்ளது. இதனு}டாக முஸ்லிம்கள் இந்த உலகை அக்கிரமங்களில் இருந்தும், அசிங்கங்களில் இருந்தும் பாதுகாத்து இஸ்லாத்தின் நிழலில் கீழ் அழகான, நீதியான வாழ்வை முழு உலகிற்கும் பெற்றுத்தர முடியும். அத்துடன் இன்று பலஸ்தீனத்திலும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும்,செச்சனியாவிலும், சோமானியாவிலும், காஸ்மீரிலும் இன்னும் பல முஸ்லிம் நாடுகளிலும் தொடர்ந்தேர்ச்சியான கொடுமைகளுக்கும், பொருளாதார தடைகளுக்கும் முகம்கொடுத்து வரும் எமது முஸ்லிம்களை மீட்டெடுத்து அமைதியான வாழ்க்கையை அவர்களுக்குப் பெற்றுத்தர முடியும்.

இன்று எமது முஸ்லிம் பெண்களை பாதுகாப்பதற்கு கலீபா முஹ்தஸிம்பில்;லாஹ்; (ரஹ்) இல்லை, பட்டினியியால் வாடும் தேசங்களுக்கு உணவு அனுப்பி பாதுகாக்க கலீபா உமர் (ரழி) இல்லை, முஸ்லிம் தேசங்களை நவீன சிலுவை யுத்தக்காரர்களிடமிருந்து மீட்பதற்கு ஒரு சலாஹ_தீன் ஐயூபீ (ரஹ்) இல்லை. மாறாக இன்று இந்த உம்மத்தினை பாதுகாப்பதற்கும், எமது இஸ்லாத்தின் பெருமையினையும், எமது பெண்களின் மானத்தையும் பாதுகாப்பகற்கும் நீங்கள்தான் பொறுப்புதாரிகளாக இருக்கின்றீர்கள். எம்மை உண்மையிலேயே பாதுகாக்கக்கூடிய அந்த கலீபாவினை, அந்த பாதுகாப்பு அரணை மீண்டும் ஏற்படுத்த நீங்கள்தான் அல்லாஹ்வால் நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.

வாக்குறதியளிக்கப்பட்டுள்ள அந்த கிலாபா அர்ராசிதாவினை நாம் மீண்டும் ஏற்படுத்துவதன் ஊடாக முஸ்லிம்களின் அனைத்து விவகாரங்களையும் மீண்டும் முஸ்லிம் உம்மத்தின் கரங்களால் பராமரிக்கச்செய்யலாம். எமது வளங்களையும், சொத்துக்களையும் இஸ்லாமிய ஷரிஆவின் அடிப்படையில் பாதுகாக்கலாம். பகிர்ந்தளிக்கலாம்.

அதன் பின்பு எமது யுத்தங்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவும், இஸ்லாம்pய பிரச்சாரத்திற்காகவும் முன்னெடுக்கப்படும். மாறாக அது எமது உம்மத்தை அழிப்பதற்காகவும், முதாளித்துவத்தை பிரச்சாரம் செய்வதற்காகவும் பிரயோகிக்கப்பட மாட்டாது.

உலகத்தின் அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும், உலகின் அனைத்து பிரச்சினைகள், முரண்பாடுகள், துன்பங்கள் தொடர்பானதுமான பொறுப்பு முஸ்லிம்களாகிய எமது தோளின் மேல் சுமத்தப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரணமான, ஓய்வு நேரத்தில் ஓடித்திரிகின்ற பணியல்ல. உண்டு கழித்து, மகிழ்ச்சியால் காலத்தை ஓட்டிக்கொண்டு இந்த பணியினை செய்ய முடியாது.
ஆகவே இந்த பணிக்காக நாம் மிகுந்த பொறுப்புடனும், அல்லாஹ்வின் கூலியின் மீதும், ஜன்னத்தின் மீதும், அவன் தர இருக்கின்ற வெற்றியின் மீதும் நம்பிக்கை வைத்து தியாதத்துடன் இயங்க வேண்டியிருக்கிறது. நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

“நம்பிக்கை கொண்டவர்களே, அல்லாஹ்வினதும், அவனது து}தரினதும் அழைப்பிற்கு பதில் கூறுங்கள். அது உங்களுக்கு வாழ்வளிக்கும்”

Wednesday, December 31, 2008

இன்சூரன்ஸ் ஹராம்!

ஆயுள் காப்பீடு, பொருள் காப்பீடு, வாகனக் காப்பீடு, சொத்துக் காப்பீடு அல்லது மற்ற எந்தவகையான காப்பீடு முறையாக இருந்தாலும் அவை அனைத்தும் ஓர் ஒப்பந்தமாகும் காப்பீடு நிறுவனத்திற்கும் காப்பீடு செய்து கொள்ளும் நபருக்கும் மத்தியில் ஏற்படும்ஒப்பந்தம்தான் இன்சூரன்ஸ் என்று அழைக்கப்படும் காப்பீட்டு முறையாகும், காப்பீடுசெய்யப்படும் பொருளுக்கு சேதமோ அல்லது அழிவோ ஏற்படும்போது அல்லது காப்பீடுசெய்துள்ள நபருக்கு விபத்து போன்றவற்றின் காரணமாக மரணம் ஏற்படும்போது ஒருகுறிப்பிட்ட தொகையை அல்லது ஒரு குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை அல்லது பொருளின்சந்தை விலையை தனக்கோ அல்லது தான் குறிப்பிடும் நபருக்கோ அல்லது தனது வாரிசுகளுக்கோகாப்பீடு நிறுவனம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காப்பீடு செய்யும் நபர் முன்வைக்கிறார்; அதற்காக காப்பீடு செய்யும் நபர் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறது,
ஆகவே ஒரு கோரிக்கையை காப்பீடு செய்பவர் முன்வைக்கிறார், அதை ஒரு நிபந்தனையின் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது, இவ்வாறு திட்டத்தை முன்வைத்தல் மற்றும் அதை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய ஒப்பந்தத்திற்குரிய நிபந்தனைகள் இதில் நிறைவேற்றப்படுவதால் இது ஓர் ஒப்பந்தம் என்று கருதப்படுகிறது,இதனடிப்படையில். காப்பீடு நிறுவனத்திற்கும் காப்பீடு செய்யும் நபருக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது, அதனடிப்படையில் காப்பீடு செய்யும் நபர்ஏற்றுக்கொண்ட நிபந்தனையின்படி குறிப்பிட்ட தவணைகளில் குறிப்பிட்ட தொகையை பிரீமியமாககாப்பீடு நிறுவனத்திற்கு செலுத்துகிறார், எதிர்பாராத விதமாக குறிப்பிட்ட கெடுவுக்குள் காப்பீடுசெய்யப்பட்ட நபருக்கு மரணம் ஏற்பட்டாலோ அல்லது காப்பிடு செய்யப்பட்டபொருளுக்கு சேதம் அல்லது அழிவு ஏற்பட்டாலோ அல்லது பொருள் திருடப்பட்டாலோ காப்பீடுசெய்யப்பட்ட தொகையை அல்லது இழப்பீட்டுத் தொகையை அல்லது பொருளின் சந்தைவிலையை அந்த நபருக்கு அல்லது அவர் குறிப்பிடும் நபருக்கு அல்லது அவருடைய வாரிசுகளுக்குகாப்பீடு நிறுவனம் கொடுத்துவிடுகிறது, இவ்வாறு காப்பீடு செய்தவருக்கு இழப்பீடு கொடுப்பது காப்பீடு நிறுவனம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பாகவும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்வது காப்பீடு செய்தவரின் உரிமையாகவும் இருக்கின்றன, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வு (விபத்து போன்றவற்றால் ஏற்படும் சேதம் அல்லது அழிவு) ஏற்படும்போது அது முறையானது என்றுநிறுவனம் கருதும் பட்சத்தில் அல்லது முறையானது என்று நீதிமன்றம் தீர்ப்புச் செய்யும் பட்சத்தில்நிறுவனம் உரிய தொகையை உரிய நபருக்கு செலுத்திவிடுகிறது,

இந்த ஒப்பந்தத்தில் - காப்பீடு – என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது, ஒரு நபருக்கோ அல்லது அவரது குடும்பத்திற்கோ அல்லது மனைவி. குழந்தைகள்போன்ற அவரது வாரிசுகளுக்கோ பயன் அளிக்கும் நோக்கத்தோடு காப்பீடு செய்யப்படுகிறது, இத்தகைய காப்பீட்டு முறையில் ஒரு நபருக்கோ. பொருளுக்கோ. சொத்திற்கோ.வாகனத்திற்கோ. அல்லது ஒருவருக்கு பயனளிக்கக்கூடிய எந்தவொரு விஷயத்திற்கோ (உதாரணம்:ஒர் ஓவியரின் தொழிலுக்கு அனுகூலமாக உள்ள அவருடைய கை அல்லது ஒரு பாடகருக்குஅனுகூலமாக உள்ள அவரது குரல் ஆகியவை) காப்பீடு செய்து கொள்ளலாம், இவ்வாறு காப்பீடுசெய்வதின் மூலமாக ஒருவர் காப்பீடு செய்யப்பட்டவற்றில் மக்களோடு கொடுக்கல் வாங்க−ல் ஈடுபடுகிறார், அவ்வாறு இல்லையெனில் அவர் தனது ஆயுளை காப்பீடுசெய்துள்ளார் என்று கூறமுடியாது. மாறாக அவருக்கு மரணம் ஏற்படும்போது ஒருகுறிப்பிட்ட தொகையை தனது மனைவிக்கோ அல்லது தனது குழந்தைகளுக்கோ அல்லது தான்குறிப்பிடும் நபருக்கோ வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துள்ளார் என்றே கூறமுடியும், இதேநிபந்தனைதான் காப்பீடு செய்யும் பொருட்களுக்கும் சொத்திற்கும் பிரயோகிக்கப்படும், உள்ளபடியே. தனது ஆயுளை காப்பீடு செய்து கொண்டவருக்கோ அல்லது காப்பீடு செய்யப்பட்ட பொருட்களுக்கோ இழப்போ அல்லது சேதமோஏற்படும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கிடும் உத்திரவாதம் என்பதுதான் காப்பீடு என்று கருதப்படுகிறது, இதுதான் இன்சூரன்ஸ் என்று கூறப்படும்காப்பீட்டு முறை பற்றிய உண்மை நிலையாகும்,
இதை ஆழமாக ஆய்வு செய்யும்போது இரண்டுகோணங்களில் இது ஷரியாவின் விதிமுறைகளுக்கு முரண்பாடாக இருக்கிறது என்பதைஅறியமுடிகிறது,முதலாவதாக: இரண்டு தரப்பினர்களுக்கு மத்தியில் ஏற்படும் உடன்படிக்கையாகஇருப்பதால் இது ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது, இதில் திட்டத்தை முன்வைத்தல்மற்றும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவை இடம் பெறுகிறது, காப்பீடுநிறுவனம் ஒரு திட்டத்தை முன்வைக்கிறது, அதை காப்பீடு செய்யும் நபர்ஏற்றுக்கொள்கிறார், இதை ஷரியாவின் அடிப்படையில் சட்டரீதியான ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் ஒப்பந்தத்திற்குரிய ஷரியாவின் விதிமுறைகள் இதில் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும், அப்போதுதான் அது சட்டரீதியானதாக இருக்கும், இல்லையென்றால் அது ஒருபொருளுக்கோ அல்லது ஒரு பலனுக்கோ உரிய சட்டரீதியானஒப்பந்தமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; மாறாக சட்டத்திற்கு முரண்பாடானதாவேகருதப்படும், ஏனெனில் விற்பது. வாங்குவது போன்ற வர்த்தக நடவடிக்கையின் அடிப்படையில் ஒருபொருளுக்கு மாற்றாக மற்றொரு பொருளை பெற்றுக் கொள்வது அல்லது அன்பளிப்பு வழங்குவதுஅல்லது இலவசம் வழங்குவது அல்லது ஒரு பயனை ஈடாக பெறும் பொருட்டு குத்தகை முறையில்ஈடுபடுவது அல்லது ஒரு பயனை ஈடாகப் பெறாமல் கடன் வழங்குவது ஆகிய அடிப்படைனளில்மட்டுமே சட்டரீதியான ஒப்பந்தம் ஏற்பட முடியும், அதாவது ஷரியாவின் அடிப்படையில்ஒப்பந்தம் என்பது பொருள் , அதன் பயன் மற்றும் சேவை ஆகியவற்றில் மட்டும்தான் ஏற்பட முடியும்,இதனடிப்படையில். காப்பீடு என்பது பொருள் அல்லது பயன் மற்றும் சேவைஆகியவற்றில் ஏற்படும் ஒப்பந்தமாக இல்லை,
மாறாக அது உத்திரவாதத்தில் ஏற்படும் ஒப்பந்தமாகவே இருக்கிறது, இந்த உத்திரவாதம் உபயோகிக்கக்கூடிய பொருளையோ அல்லது பெற்றுக் கொள்ளும் பயனையோ குறிப்பதாக இல்லை, எனெனில் இதில் ஒரு பொருளை குத்தகைக்கு விட்டு அதி−ருந்து பயனைபெற்றுக் கொள்வது என்ற நிலை இல்லை; பயனை பெற்றுக் கொள்ளாமல் கடன் கொடுப்பதுஎன்ற நிலையும் இல்லை; அல்லது இந்த உத்திரவாதத்தை வைத்து கடன் பெறும் நிலையும் இல்லை,

மாறாக இது ஒரு கொடுக்கல் வாங்கலாகவே இருக்கிறது, ஆகவே இன்சூரன்ஸ்என்பது பொருட்களின் மீதோ அல்லது அவற்றின் பயன்களின் மீதோ அல்லது சேவை மீதோஏற்படும் ஒப்பந்தம் அல்ல, ஏனெனில் பொருள் அதன் பயன் மற்றும் சேவை ஆகியவை தொடர்பாக ஏற்படும் ஒப்பந்தத்தில் இடம் பெறும் ஷரியா விதிமுறைகள் எதுவும் இதில்இடம் பெறவில்லை, ஆகவே இன்சூரன்ûஸ பொருட்கள் அல்லது பயன்கள் அல்லது சேவைஆகியவற்றில் ஏற்படும் ஒப்பந்தமாக ஏற்றுக் கொள்ள முடியாது,இரண்டாவதாக: சில நிபந்தனைகள் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் காப்பீடு செய்பவருக்கு ஒரு குறிப்பிட்ட வாக்குறுதியை அளிப்பதால் இதை நிறுவனங்கள்அளிக்கும் உத்திரவாதத்தில் ஏற்படும் ஒப்பந்தம் என்றே குறிப்பிட வேண்டும்,இதனடிப்படையில். இன்சூரன்ஸ் செய்வதை சட்டரீதியானதாக ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில்உத்திரவாதம்தொடர்பான ஷரியாவின் விதிமுறைகள் இதில் இடம் பெற்றிருக்க வேண்டும்,அப்போதுதான் அது சட்டரீதியான உத்திரவாதமாக ஏற்றுக் கொள்ளப்படும். இல்லையெனில் அதுசட்டரீதியான உத்திரவாதமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது,உத்திரவாதம் தொடர்பான ஷரியாவின் விதிமுறைகள் :ஒரு குறிப்பிட்ட உரிமையை நிறைவேற்றும்போது உத்திரவாதம் அளித்தவர் தனது பொறுப்பை உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டவரின் பொறுப்போடு இணைத்துக் கொள்கிறார், ஆகவே இன்சூரன்ஸில் ஒருவரின்பொறுப்போடு மற்றொருவரின் பொறுப்பை இணைக்கும் நிபந்தனை இடம் பெறவேண்டும்,மேலும் உத்திரவாதம் அளித்தவர், உத்திரவாதம் அளிக்கப்பட்டவர் , உத்திரவாதத்தை பெற்றுக் கொண்டவர் ஆகியவர்கள் அதில் இடம்பெற்றிக்க வேண்டும், ஆகவே உத்திரவாதம் என்பது ஓர் உரிமையைப் பொறுத்து கட்டாயம் நிறைவு செய்யவேண்டிய பொறுப்பாகும். அதில் எந்தவிதமான ஈட்டுத் தொகையையும்பெற்றுக் கொள்ளாமல் பொறுப்பு நிறைவு செய்யப்பட வேண்டும், நிகழ்காலத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய நிதியியல் சார்ந்த உரிமை அல்லது எதிர்காலத்தில் பெற்றுக் கொள்ளவேண்டியநிதியியல் சார்ந்த உரிமை ஆகியவை தொடர்பான நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தால் அந்தஉத்திரவாதம் சட்டரீதியாக செல்லுபடி ஆகக் கூடியதாக இருக்கும், ஆகவே உத்திரவாதம்நிகழ்காலத்தில் பெற்றுக் கொள்ள வேண்டிய நிதியியல் சார்ந்த உரிமை அல்லது எதிர்காலத்தில்பெற்றுக் கொள்ள வேண்டிய நிதியியல் சார்ந்த உரிமை ஆகியவை தொடர்பானதாகஇல்லையெனில் அது சட்டப்படி செல்லுபடி ஆகாது, ஏனெனில் உத்திரவாதம் என்பதுஓர் உரிமையை நிறைவு செய்வதில் உள்ள ஒருவருடைய பொறுப்பில் மற்றொருவர் இணைந்துகொள்வதாகும். எனவே உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டவரின் உரிமையை நிறைவேற்றுவதில்பொறுப்பு ஏற்கும் செயல் இடம் பெறாவிடில் பொறுப்பில் இணைந்து கொள்ளுதல் என்ற செயல்ஒருபோதும் நடைபெறாது, உரிமையை நிகழ்காலத்தில் நிறைவேற்றுவதைப் பொறுத்தவரையில் இதுதெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறையாகும்,உரிமையை எதிர்காலத்தில் நிறைவேற்றுவதைப் பொறுத்தவரை
“இன்ன மனிதரை திருமணம்செய்து கொண்டால் மஹருக்கு நான் உத்திரவாதம் கொடுக்கிறேன்” என்று ஒரு பெண்ணிடம்ஒருவர் கூறுவதற்கு ஒப்பாக இருக்கிறது, இந்த விவகாரத்தில். உத்திரவாதம் அளித்தவர் اபொறுப்பில் பிணை ஆக்கப்பட்டு இருப்பதைப்போல உத்திரவாதத்தைப் பெற்றுக்கொண்டவர் பிணையாக்கப்படும் விதத்திலும். உத்திரவாதத்தைப் பெற்றுக்கொண்டவரின் பொறுப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிற அதே முறையில் உத்திரவாதம் அளித்தவரின்பொறுப்பு உறுதி செய்யப்படும் விதத்திலும். உத்திரவாதம் அளித்தவர் தன்னுடைய
பொறுப்பை உத்திரவாத்தை பெற்றுக் கொண்டரின் பொறுப்போடு இணைத்துக்கொள்கிறார், அதேவேளையில் நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ நிறைவேற்ற வேண்டியபொறுப்பு இல்லையெனில் பிறகு உத்திரவாதம் அளிப்பதிலோ அல்லது ஒருவரின் பொறுப்பைமற்றவரின் பொறுப்போடு இணைப்பதிலோ எந்த அர்த்தமும் கிடையாது.
எனவே இத்தகையஉத்திரவாதம் சட்ட ரீதியாக செல்லுபடி ஆகாது,மேலும் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்ட நபருக்கு உடனடியாகவோ அல்லது பிறகோபயனை உறுதியான முறையில் பெற்றுக்கொள்ளும் உரிமை இல்லாவிடில் அந்த உத்திரவாதம்சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, ஏனெனில் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டவரின்பொருளுக்கு சேதமோ அழிவோ ஏற்படும்போது அல்லது அவர் கடனுக்கு ஆளாகும்போது அல்லதுஎதிர்பாராத விதத்தில் ஏற்படும் நிகழ்வால் அவர் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய நிதியியல்சார்ந்த பொறுப்பு அல்லது பிறகு அவர் நிறைவேற்ற வேண்டிய நிதியியல் சார்ந்த பொறுப்புஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு உத்திரவாதம் அளிப்பவர் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான்உத்திரவாதம் அளிப்பதற்கு நிபந்தனையாக இருக்கிறது,
ஆகவே உத்திரவாதம் அளிக்கப்பட்டவர்உடனடியாகவோ அல்லது எதிர்காலத்திலோ நிறைவேற்ற வேண்டிய பொறுப்பைநிறைவேற்ற தவறும்போது அவர் விஷயத்தில் எவர் உத்திரவாதம் அளித்தாரோ அவருடையஉத்திரவாதம் சட்டப்படி செல்லாததாக ஆகிவிடுகிறது, ஏனெனில் உத்திரவாதம் அளிக்கப்பட்டவர்நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கு அந்த விவகாரத்திற்கு எவர் உத்திரவாதம்அளித்தாரோ அவரும் பொறுப்பாளியாக இருக்கிறார்,இதற்கு உதாரணம் ஒன்றை இப்போது காண்போம் : ஒரு சலவைத் தொழிலாளி இருக்கிறார்,ஒருவர் மற்றொரு நபரிடம் கூறுகிறார். “அந்த சலவைத் தொழிலாளியிடம் துணிகளை அனுப்புங்கள்நான் அவற்றிற்கு உத்திரவாதம் அளிக்கிறேன்” என்கிறார்; பின்னர் அவரிடம் துணிகள்அனுப்பப்பட்டு அவை சேதமாகி விட்டன, இந்நிலையில் சேதமடைந்த துணிகளுக்கு சலவைத்தொழிலாளியின் சார்பில் நஷ்டஈடு கொடுப்பதற்குரிய பொறுப்பு உத்திரவாதம் அளித்தவருக்குஇருக்கிறதா அல்லது இல்லையா? இதற்குரிய பதில் பின்வருமாறு : சலவைத் தொழிலாளியின்செயல்பாடு காரணமாகவோ அல்லது அவரின் கவனக்குறைவு காரணமாகவோ துணிகள்சேதமடைந்திருந்தால் பிறகு உத்திரவாதம் கொடுத்தவர் எந்தவிதமான நஷ்டஈடும் கொடுக்கத்தேவையில்லை; ஏனெனில் உத்திரவாதம் கொடுக்கப்பட்ட சலவைத் தொழிலாளி சேதத்திற்குக்காரணமாக இருக்கவில்லை, ஆகவே உத்திரவாதம் கொடுக்கப்பட்டவர் இதில் பொறுப்பாளியாகஇல்லாத காரணத்தால் உத்திரவாதம் கொடுத்தவருக்கும் இதில் எந்தவிதமான பொறுப்பும் இல்லை,
எனவே உத்திரவாதம் பெற்றுள்ளவர் தமது துணிகளுக்கு உரிய நஷ்டஈட்டை மற்றொருநபரிடமிருந்துதான் பெற்றுக் கொள்ள முடியும், அந்த துணிகளை தயாரித்தவர்களிடமிருந்தோஅல்லது அவற்றை விற்பனை செய்தவர்களிடமிருந்தோ உடனடியாகவோ அல்லது ஒரு குறிப்பிட்டகாலத்திற்குப் பின்னரோ நஷ்ட ஈட்டை பெற்றுக் கொள்ளவேண்டும்,ஆகவே ஷரியா விதிமுறையின்படி உத்திரவாதம் பெற்றுள்ளவரின் உரிமை உடனடியாகவோஅல்லது எதிர்காலத்திலோ உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுதான் உத்திரவாதம் சட்டரீதியாகஇருப்பதற்கு நிபந்தனையாக இருக்கிறது, எனினும் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டவர் மற்றும் உத்திரவாதம் அளிக்கப்பட்டவர் ஆகியவர்களின் பெயர்கள்குறிப்பிடப்பட வேண்டும் என்பது நிபந்தனையல்ல, இவ்வாறாக இந்த இரு நபர்களின் பெயர்கள்குறிப்பிடப்பட்டாலும் அல்லது குறிப்பிடப் படாவிட்டாலும் உத்திரவாதம் சட்டரீதியாக செல்லபடிஆகக்கூடியதே, எனவே ஒருவர் மற்றொரு நபரிடம்
“உங்கள் துணிகளை சலவைத் தொழிலாளியிடம்கொடுங்கள்” என்று கூறுகிறார்; அதற்கு மற்றொருவர் “துணிகளை அவர் சேதப்படுத்தி விடுவார்என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறுகிறார், இந்நிலையில் முதல் நபர் கூறுகிறார். “சலவைத்தொழிலாளியிடம் துணிகளைக் கொடுத்து அவை சேதம் அடைந்தால் நஷ்ட ஈடு கொடுப்பதற்கு
நான் உத்திரவாதம் அளிக்கிறேன்” என்று சலவைத் தொழிலாளியின் பெயரைக் குறிப்பிடாமல்கூறினாலும் உத்திரவாதம் சட்டரீதியாக செல்லுபடி ஆகக்கூடியதுதான், இதனடிப்படையில் அவர்சலவைத் தொழிலாளியிடம் துணிகளைக் கொடுக்கிறார். பின்னர் அவை சேதமடைந்து விடுகின்றன,இந்நிலையில் உத்திரவாதம் அளிக்கப்பட்ட நபரின் (சலவைத் தொழிலாளி) பெயர் தெரியாதபோதும்உத்திரவாதம் அளித்தவர் சேதத்திற்கு பொறுப்பாளியாகி விடுகிறார், இதுபோலவே
“இன்ன மனிதர்சிறந்த சலவைத் தொழிலாளியாக இருக்கிறார் , எவர் அவரிடம் துணிகளைக் கொடுக்கிறாரோஅவருக்கு அவரது துணிகள் சேதப்படுவதி−ருந்து நான் உத்திரவாதம் அளிக்கிறேன்” என்று ஒருவர்கூறும்போது உத்திரவாதம் அளிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்படுகிறது. இந்நிலையிலும்உத்திரவாதம் சட்டப்படி செலலுபடி ஆகக்கூடியதுதான்,மேற்கூறப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் உத்திரவாதம் தொடர்பானஷரியாவின் தெளிவான ஆதாரங்களிபடி உத்திரவாதம் அளிக்கும்போது ஒருவரின் பொறுப்பு மற்றவருடன் இணைக்கப்படுகிறது என்பதையும் அந்த உத்திரவாதம் வாக்குறுதியைநிறைவேற்றுவதில் இருக்கும் பொறுப்போடு தொடர்புடையது என்பதையும் நாம்காண்கிறோம்,
மேலும் இந்த விவகாரத்தில் உத்திரவாதம் அளிப்பவர் உத்திரவாதம்அளிக்கப்படுபவர் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொள்பவர் ஆகியவர்கள்இடம் பெறுகிறார்கள் என்பதையும். உத்திரவாதம் கொடுப்பதற்கு ஈட்டுத்தொகை எதுவும்கோரப்படுவதில்லை என்பதையும் உத்திரவாதம் அளிக்கப்படுபவர் மற்றும் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொள்பவர் ஆகியவர்களின் பெயர்கள் குறிப்பிடபட்ட நிலையிலும் பெயர்கள்குறிப்பிடப்படாத நிலையிலும் உத்திரவாதம் அளிக்கப்படுகிறது என்பதையும் நாம் காண்கிறோம்,ஜாபிர் அறிவித்து அபூதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸில்கூறப்பட்டிருப்பதாவது :கடன் இருக்கும் நிலையில் அதை அடைப்பதற்கு எந்த ஏற்பாடுகளும் செய்யாதநிலையில் ஒரு மனிதர் மரணம் அடைந்து விட்டால் அவரின் ஜனாஸôவிற்குஅல்லாஹ்வின் தூதர் தொழுகை நடத்த மாட்டார்கள், ஒரு சமயம் ஒருமனிதரின் ஜனாஸô கொண்டு வரப்பட்டது. அவருக்கு ஏதேனும் கடன் இருக்கிறதா? என்றுஅல்லாஹ்வின் தூதர்  வினவினார்கள், ஆம் அவருக்கு இரண்டு தினார்கடன் இருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள், உங்கள் தோழருக்காக நீங்கள் தொழுது
கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் கூறிவிட்டார்கள், அப்போது.அல்லாஹ்வின் துதரே  அந்தக் கடனை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றுஅபூகதாதா கூறினார், பின்னர் அல்லாஹ்வின் தூதர் அவருக்காகதொழுகை நடத்தினார்கள், அல்லாஹ் ( ஜிஹாது மூலமாக ) அல்லாஹ்வின் தூதருக்கு சில நிலப்பரப்புகளை திறந்து விட்டபோது. “ஒவ்வொரு மூ*மின்களுக்கும்அவர்களைவிட அவர்கள் மீது நான் பொறுப்பு உடையவனாக இருக்கிறேன், ஆகவேஅவர்களில் எவரேனும் கடனை விட்டுச்சென்றால் அதை அடைப்பது என்மீதுபொறுப்பாக இருக்கிறது இன்னும் எவரேனும் சொத்துக்களை விட்டுச்சென்றால் அதுஅவர்களின் வாரிசுகளுக்கு சொந்தமாக இருக்கிறது” என்று கூறினார்கள்,
இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள ஆதாரத்தின் விளக்கமாவது :கடன் கொடுத்த ஒருவரின் கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பில் மரணமடைந்துவிட்ட ஒருவரின் பொறுப்போடு தனது பொறுப்பை அபூகதாதா இணைத்துக்கொண்டார் என்பதையும் இந்த விவகாரத்தில் உத்திரவாதம் அளித்தவர் (அபூகதாதா உத்திரவாதம் அளிக்கப்பட்டவர் (மரணமடைந்துவிட்டவர்). உத்திரவாதத்தை பெற்றுக் கொண்டவர்(கடன் கொடுத்தவர்) ஆகியவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் மரணமடைந்தவரும்அபூகதாதாவும் திருப்பிச் செலுத்துவதாக கொடுத்த உத்திரவாதம் கடன்கொடுத்தவருக்கு உரிய உரிமையோடும் உத்திரவாதம் கொடுத்தவர் நிறைவேற்ற வேண்டியபொறுப்போடும் தொடர்புடையது என்பதையும் அந்த உத்திரவாதம் எந்தவிதமானஈட்டுத்தொகையையும் பெற்றுக் கொள்ளாமல் அளிக்கப்பட்டது என்பதையும் உத்திரவாதம்பெற்றுள்ள நபரான கடன் கொடுத்த மனிதர் மற்றும் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள நபரானமரணமடைந்த மனிதர் ஆகியவர்களின் பெயர்கள் பற்றிய விபரங்கள் உத்திரவாதம்அளிக்கப்பட்டபோது குறிப்பிடப்படவில்லை என்பதையும் இந்த ஹதீஸின் ஆதாரம் தெளிவாகக்குறிப்பிடுகிறது,
இதனடிப்படையில் இந்த ஹதீஸ் உத்திரவாதம் சட்டரீதியாக இருப்பதற்குரியநிபந்தனைகள் எவை என்பதைக் கூறக்கூடியதாகவும் அந்த உத்திரவாதத்தின் அடிப்படையில்ஒப்பந்தம் செய்து கொள்வதற்குரிய நிபந்தனைகள் எவை என்பதைக் கூறக்கூடியதாகவும் இருக்கிறது,ஷரியாவின் விதிமுறைகள் அடிப்படையில் இவைகள்தான் உத்திரவாதம் தொடர்பான சட்டரீதியான நிபந்தனைகளாகும், இன்சூரன்ஸ் என்பது நிச்சயமாக ஒருஉத்திரவாதமாக இருப்பதால் உத்திரவாதம் தொடர்பான ஷரியாவின் விதிமுறைகளைஇன்சூரன்ஸ் முறை மீது பிரயோகம் செய்து ஆய்வு செய்யவேண்டும், அவ்வாறு செய்யும்போதுஉத்திரவாதம் மற்றும் அதை ஒப்பந்தம் செய்வது தொடர்பான ஷரியா விதிமுறைகள் எதுவும்இன்சூரன்ஸ் முறையில் இடம்பெறவில்லை என்பதும் இன்சூரன்ஸ் முறையில் இடம்பெற்றுள்ளஉத்திரவாதம் சட்டரீதியாக செல்லுபடி ஆகாதது என்பதும் தெளிவாகத் தெரிகிறது, இன்சூரன்ஸ்நிறுவனம் காப்பீடு செய்துள்ளவர் கொடுக்கவேண்டிய கடன் பொறுப்பில்எதையும் தன்னோடு இணைத்துக் கொள்வதில்லை என்ற காரணத்தால் இன்சூரன்ஸ் முறையில்ஒருவர் பொறுப்பை மற்றொருவர் பொறுப்புடன் இணைத்துக் கொள்ளும் எந்த நடைமுறையும்இடம்பெறுவதில்லை,
ஆகவே இதில் எந்தவிதமான சட்டரீதியான உத்திரவாதமும் இடம்பெறவில்லை என்பதால் இது சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, காப்பீடு செய்தவர்اகடனாளியாக இருக்கும் நிலையில் காப்பீடு நிறுவனம் கடன் கொடுத்தவருக்கு எந்தத்தொகையையும் வழங்குவதில்லை, காப்பீடு செய்யும் நபருக்கு இருக்கும் கடன் சுமையில்எந்தவிதமான பொறுப்பையும் காப்பீடு நிறுவனம் எடுத்துக் கொள்வதில்லை என்றகாரணத்தாலும் கடன் அளித்தவரின் நிதியியல் சார்ந்த உரிமையை எந்தவிதத்திலும்
நிறைவேற்றுவதில்லை என்ற காரணத்தாலும் காப்பீடு நிறுவனம் அளிக்கும் உத்திரவாதத்தைசட்டரீதியானது என்று ஏற்றுக் கொள்ளமுடியாது, காப்பீடு செய்யும் ஒருவருக்கு அவர்கொடுக்கவேண்டிய கடனைப் பொறுத்து எந்தவிதமான நிதியியல் சார்ந்த உரிமையையும் காப்பீடுநிறுவனம் அளிப்பதில்லை என்ற காரணத்தால் இன்சூரன்ஸில் எந்தவிதமான நிதியியல் சார்ந்தஉரிமையோ அல்லது ஷரியா அங்கீகரித்த உத்திரவாதமோ இடம்பெறுவதில்லை,
ஆகவேஇன்சூரன்ஸ்முறை சட்டப்படி செல்லுபடி ஆகாது,காப்பீடு செய்பவரிடமிருந்து ஒரு தொகையைப் முன்னதாகப் பெற்றுக்கொண்டுபின்னர் குறிப்பிட்ட நிபந்தனை அடிப்படையில் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாகவோ அல்லதுஇழந்த பொருளுக்கு விலையாகவோ காப்பீடு நிறுவனம் வழங்குவதை நிதியியல் சார்ந்தஉரிமை என்றோ அல்லது உத்திரவாதம் என்றோ ஏற்றுக் கொள்ளமுடியாது, காப்பீடு செய்தவர் நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ கொடுக்கவேண்டிய எந்தத் தொகைக்கும்காப்பீடு நிறுவனம் உத்திரவாதம் அளிப்பதில்லை என்ற காரணத்தால் அது கொடுக்கும்உத்திரவாதம் சட்டப்படி உண்மையான உத்திரவாதம் அல்ல, சட்டரீதியானஉத்திரவாதத்தில் உத்திரவாதம் அளிப்பவர் ,உத்திரவாதம் அளிக்கப்படுபவர் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொள்பவர் ஆகியோர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் இன்சூரன்ஸ் முறையில் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொள்பவர் எவரும்இடம் பெறுவதில்லை என்ற காரணத்தால் இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுக்கும்உத்திரவாதம் சட்டரீதியான உத்திரவாதம் அல்ல, உயிர் இழப்பு. பொருள் இழப்பு ஆகியவற்றிற்குகாப்பீடு நிறுவனம் நஷ்டஈடு கொடுப்பதற்கு முன்னதாக காப்பீடு செய்பவரிடமிருந்துபணத்தை(பிரீமியம்) பெற்றுக் கொள்கிறது. சட்டரீதியான உத்திரவாதத்தில் எந்தவிதமானஈட்டுத்தொகையயும் பெற்றுக் கொள்வதற்கு அனுமதியில்லை என்ற அடிப்படையில் காப்பீடுநிறுவனம் அளிக்கும் உத்திரவாதம் சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, ஷரியாநிர்ணயம் செய்துள்ள உத்திரவாதம் தொடர்பான ஷரத்துக்கள் எதுவும் இன்சூரன்ஸ் முறையில்இடம் பெறவில்லை என்பதாலும் உத்திரவாதத்தை சட்டரீதியாக ஆக்கும் நிபந்தனைகளைநிறைவேற்றுவதில் இன்சூரன்ஸ் முறை தவறிவிட்டது என்பதாலும் இன்சூரன்ஸ் செய்வதுசட்டவிரோதமானது, ஆகவே இன்சூரன்ஸ் நிறுவனம் அளிக்கும் வாக்குறுதி ஆவணம். உத்திரவாதம். இழப்பீடு. ஆகியவற்றில் சட்டரீதியான அம்சம் எதுவும்இல்லை என்ற காரணத்தால் ஒப்பந்தம் என்ற அடிப்படையிலும் உத்திரவாதம் என்றஅடிப்படையிலும் இன்சூரன்ஸ் முறையை ஷரியா அங்கீகரிக்கவில்லை,
ஆகவே இன்சூரன்ஸ்முறை ஷரியாவின் கண்ணோட்டத்தில் தடைசெய்யப்பட்ட விஷயமாக இருக்கிறது,இதனடிப்படையில். ஆயுள் காப்பீடு , சொத்துக் காப்பீடு வாகனக் காப்பீடு ,பொருள் காப்பீடு ஆகிய காப்பீடுகளும் இதரவகை காப்பீடுகளும் ஷரியாவினால் தடை செய்யப்பட்ட ஹராமான நிதியியல் நடவடிக்கைகளாகும், ஏனெனில் இன்சூரன்ஸ் என்று அழைக்கப்படும் காப்பீடு திட்டத்தில் இடம் பெறும்ஒப்பந்தம் மற்றும் வாக்குறுதி அடிப்படையிலேயே ஷரியாவின் விதிமுறைகளுக்கு முரண்பாடாக இருப்பதால் ஹராமானதாகும், ஆகவே இதி−ருந்து கிடைக்கும்பணம் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பான பணமாக இருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்வதும் ஹராமாகும்,

Thursday, December 25, 2008

சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹ் - இஸ்லாத்தைச் சீரழிப்பதற்கான புதிய ஃபிக்ஹ் - இறுதிப்பகுதி

4. குடியுரிமை பற்றிய கருத்தியலும், தேசியத்தைச் சார்ந்த நிறுவனங்களில் இணைவதும்.

இந்த முறைமைக்காக வாதாடுபவர்கள், குடியுரிமை பற்றிய கொள்கையும், ஒரு பிரஜையின் கடமையும், சர்வதேச சட்டமும், இராஜதந்திர உறவுகளும் இன்று காணப்படுபவை போன்று இதற்கு முன்னர் வடிவம் பெற்றிருக்கவில்லை எனக் கோருகின்றனர். முன்னைய காலங்களில், இராணுவச் சக்தியின் மொழிதான் மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இராணுவம் மேலும் முன்னேறிச் செல்வது கடினம் எனக் கண்டால்தான், ஒரு நாட்டின் எல்லைகள் நிறுவப்பட்டன. பூகோளமயமாதல் காணப்பட வில்லை. முந்தைய கால மக்கள், தீவுகள் கொண்ட ஒரு கோளத்தில் வாழ்ந்தனர்.

எனவே நாம் முன்னைய காலங்களின் நேர்பொருளிலான சட்டத்தீர்ப்புக்கள் குறித்து ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் சரியாகப் பார்த்தால், நாம் நவீன உலகத்திற்கு அவற்றை எவ்வாறு அமுல் செய்வது என்பதைப் பற்றி நன்கு புரிந்து கொள்வதற்கு, முந்தைய சட்டத்தீர்ப்புக்களின் முறைமையையும், விவேகத்தையும் ஆராய வேண்டும்.

மேலும் அவர்கள் கூறுகின்றனர்: “இன்று நாம் புரிந்து கொள்கின்ற விதத்தில், குடியுரிமை பற்றிய கருத்தியல், நமது பண்டைய கால சட்டநிபுணர்(ஃபுகஹா)க்கள் வாழ்ந்த உலகில் நிலை பெற்றிருக்கவில்லை. சரியாகச் சொல்லப் போனால், எது நிலை பெற்றிருந்ததென்றால், ஒரு மார்க்கக் கோட்பாட்டின் அளவுகோலின் மீது சார்ந்திருந்த, ஒரு குறிப்பிட்ட நாகரீகத்துக்குரிய கலாசார இணைப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட சாம்ராஜ்ஜியத்திற்குரிய அரசியல் இணைப்பு என்ற வகையான ஒன்றுதான். இத்தகைய இணைப்பு வகையானது, வேறுபட்ட நம்பிக்கை கொண்டவர்களுடன் மிக எச்சரிக்கையுடனும், சகிப்புத்தன்மை பற்றிய தராதரங்களில் மாறுபட்டும் நடந்து கொள்ளச் செய்தது. இதனை, ஸ்பானியர்களின் அடாவடித்தனமான தண்டனைக்கான (கடவுள் விரோதக் குற்றச்சாட்டு) விசாரணை தொடக்கம் திம்மிகளின் இஸ்லாமிய ஆட்சிவரை நாம் கண்டு கொள்ளலாம்.”

“குடிபுகுந்த இன்னொரு நாட்டில் அவன் பிறந்திருப்பது, நீண்ட நாள் தங்கியிருப்பது அல்லது திருமணம் செய்திருப்பது போன்ற உறுதியான அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு, தனது பூர்வீக நாட்டுக்கு வெளியே வசிக்கும் ஒருவனுக்கு முன்னைய காலங்களில் அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்படவில்லை. இன்னும் சரியாகச் சொல்லப் போனால், அந்நாட்டில் தங்கியிருப்பதற்காக வந்த ஒருவன், அந்நாட்டு மக்களின் நம்பிக்கை, கலாசாரம் என்பனவற்றில் முழுமையாக ஈடுபாடு கொண்ட போது, தன்னிச்சையாகவே ஒரு குடிமகனாக மாறிவிடக்கூடியதாயிருந்தது. இல்லாதபட்சத்தில், அவன் அந்த நாட்டில் எத்துணை நீண்ட காலம் வசித்தாலும் சரிதான், அவன் அந்த நாட்டு மக்களின் நம்பிக்கைகள், கலாசாரத்திலிருந்து வேறுபட்டிருப்பானாகில் ஓர் அந்நியனாகவே கருதப்படுவான்.

“சர்வதேச சட்டம் அல்லது இராஜதந்திர உறவுகள் என இன்று அழைக்கப்படுபவைப் பற்றி பழைய உலகம் அறிந்திருக்கவில்லை. இந்தச் சர்வதேச சட்டங்களும், இராஜதந்திர உறவுகளும் அதன் பூமியில் வசிக்கக்கூடிய பிற நாடுகளின் குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், தங்கள் நாட்டு குடிமக்களைப் போன்றே (தன் சொந்த நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்படக்கூடிய சிற்சில உரிமைகளைத் தவிர) அவர்களையும் சமமாக நடத்துவதற்கும் ஒவ்வொரு நாட்டையும் கடமைப்படுத்துகின்றன. (கலாநிதி தாஹா ஜாபிர் அல் அல்வானி- முகத்திமா ஃபீ ஃபிக்ஹ் அல் அகல்லியாத்)

எனவே, ஒரு குடிமகனாக இருக்கும் போர்வையின் கீழ், சில தனிப்பட்ட மனிதர்கள் தாம் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரஜைகள் என்றும், பிரிட்டிஷ் ராணி சகல அதிகாரம் உள்ள தமது ஆட்சித்தலைவர் என்றும், தங்கள் தலைவர் டொனி பிளேயர் என்றும், பிரிட்டிஷ் துருப்புகள் ‘தங்கள் பையன்கள்’ என்றும் உரிமை பாராட்டுவதை நாம் கேட்கக்கூடியதாய் இருக்கின்றது. பிரிட்டிஷ் இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம்கள் போரிட முடியும் என்பன போன்ற கூற்றுக்களையும் நாம் செவிமடுக்கின்றோம். இதற்கு உதாரணமாக குறிப்பிடுவதென்றால், அமெரிக்க ஆயுதப்படைகளின் ஒரு சிரேஷ்ட முஸ்லிம் மதகுருவாக இருக்கும் முஹம்மத் அப்துல் ரஷீத், இந்த குறிப்பிட்ட முறைமையைப் பின்பற்றக்கூடிய சில அறிஞர்களிடம், அமெரிக்க இராணுவத்துக்குள்ளிலிருந்து ஆப்கானிஸ்தானில் எதிர்த்து போரிடக்கூடிய முஸ்லிம்களின் பிரச்சினையைப் பற்றி கேட்ட போது, அவருக்கு கீழ்க்கண்ட பதில் தரப்பட்டது: “ஆக மொத்தத்தில், முஸ்லிம் அமெரிக்க இராணுவ வீரர்கள், தங்களுக்கு எதிராக பயங்கரவாதம் கட்டவிழ்;த்து விடப்பட்டிருக்கிறது எனத் தங்கள் நாடு தீர்மானிக்கிறவர்களுக்கு எதிராக, வரப்போகும் யுத்தங்களில் ஈடுபடுவது (அல்லாஹ் நாடினால்) ஏற்றுக் கொள்ளக்கூடியதாகும். முன்னர் விளக்கப்பட்டது போல், பொருத்தமான எண்ணத்தைக் கொண்டிருப்பதை இங்கு நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக, தங்கள் நாட்டின் மீதான அவர்களின் விசுவாசத்தைப் பற்றி எந்தவொரு சந்தேகமும் சுமத்தப்பட மாட்டாது அல்லது எதிர்பார்க்கக் கூடிய விதத்தில் தீங்கெதுவும் இழைக்கப்படுவதை விட்டும் அவர்கள் தவிர்க்கப்படுவர்.”

{மாபெரும் இஸ்லாமிய அறிஞரும் கதர்; நாட்டு சுன்னா மற்றும் சீரா கவுன்சிலின் தலைவருமான ஷேய்க் யூசுஃப் அல் கர்ளாவி;, எகிப்து அரச கவுன்சில் முதன்மை பதில் தலைவரான நீதிபதி தாரிக் அல் பிஸ்ரி, எகிப்தின் ஒப்பீட்டு சட்டம், ஷரீஆத் துறை விரிவுரையாளரான கலாநிதி முஹம்மத் எஸ். அல் அவா, சிரியா நாட்டு இஸ்லாமிய அறிஞரான கலாநிதி ஹைத்தம் அல் கையாத், எகிப்தைச் சார்ந்த இஸ்லாமிய நு}லாசிரியரும் பத்திரிகையாளருமான ஃபஹ்மி ஹ{வைதி, வட அமெரிக்க ஃபிக்ஹ் கவுன்சில் தலைவரான ஷேய்க் தாஹா ஜாபிர் அல் அல்வானி ஆகியோர் கையொப்பமிட்ட ஃபத்வா-- வெளியிடப்பட்ட திகதி: ரஜப் 10, 1422 ஃ செப்டம்பர் 27, 2001}

பின்னர், தெய்வீக மூலத்துடன் காணப்பட்ட முற்று முழுதான முரண்பாட்டைக் கண்ணுற்று, இந்த பத்வாவை வழங்கியவர்களில் சிலர் அதிலிருந்து பின்வாங்கிக் கொண்டனர். இந்த முறைமையினால் பயன்படுத்தப்படுகின்ற சீர்கெட்ட சிந்தனைப் படித்தரத்தை இங்கு நாம் அழுத்தமாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இது, பல்வேறு அறிவுக் கண்ணோட்டங்களிலிருந்து நோக்கப்படும் போது தவறானதாகவே காணப்படுகிறது:

குடியுரிமை என்பது, நாம் ‘தாபிஇய்யா’ என அழைக்கும் ஒன்றின் கருத்துக்கு இணக்கமான ஒரு சொற்றொடராகும். இஸ்லாமிய நாட்டின் தாபிஇய்யாவைச் சுமக்கின்ற ஒருவர், தாருல் இஸ்லாத்தில் வாழ்வதைத் தேர்ந்தெடுக்கின்ற போது, அவர்களின் விவகாரங்கள் பால், நிறம், மதம் என்ற வித்தியாசம் இல்லாமல் பேணப்படுவதற்கான உரிமையை கொண்டிருப்பார். இஸ்லாம், முஸ்லிம்களையும் முஸ்லிமல்லாதவர்களையும் பொறுத்தவரையில், அவர்களின் விவகாரங்களைக் கவனிப்பது, சட்டங்களை அமுல்படுத்துவது, உரிமைகளையும் கடமைகளையும் பேணுவது போன்ற வி;ஷயங் களில், சட்ட அமைப்பின் பார்வையில் சமமானவர்களாக வைத்திருக்கிறது. எந்த விஷயங்களில் மார்க்கம் குறிப்பிட்டுச் சொல்கிறதோ, அவற்றில் மட்டுமே ஒரு வேறுபாடு காணப்படுகிறது. மதீனா சட்டசாசனத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:“மேலும் நம்பிக்கையாளர்கள் போரிடுகின்ற காலத்தில், யூதர்கள் நம்பிக்கையாளர் களுடன் இருக்க வேண்டும். மேலும் யூதர்களில் யார் எம்மைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் உதவியையும் (அவர்களுடன் நடந்து கொள்ளும் விதத்தில்) நல்லுதாரணத்தையும் பெறும் உரிமை கொண்டவர்களாவர். மேலும், பனு அவ்ஃபைச் சேர்ந்த யூதர்கள், நம்பிக்கையாளர்களைச் சார்ந்த ஒரு சமூகமாகும். யூதர்கள் அவர்களுடைய சொந்த தீனும், முஸ்லிம்கள் அவர்களுடைய சொந்த தீனும் உடையவர்கள். (இப்னு ஹிஷாம்)

எனவே குடியுரிமை பற்றிய கருத்தியலானது, இப்போது இருக்கக் கூடிய விதத்தில் முன்னர் நிலைபெற்று இருக்காத ஒரு புதிய கொள்கை என யாராலும் சொல்ல முடியாது.

உண்மையில், பிறப்பு, திருமணம் என்பனவற்றை குடியுரிமை வழங்குவதற்கான நெறிமுறையாக மேற்கு கருதுவது, குடியுரிமையின் உண்மை நிலையை எந்த வகையிலும் மாற்றி விட முடியாது. ஏனெனில் ஒரு நாட்டில் அல்லது ஒரு குறிப்பிட்ட (தார்) பூமியில் வசிப்பதன் விளைவாகவே இந்த குடியுரிமை ஏற்படுகிறது. மேற்குறிப்பிட்ட வழிகளிலும், வேறு வழிகளிலும் அந்தக் குடியுரிமை அடைந்து கொள்ளப்படுகிறது. ஆயினும், வசித்தல் குடியுரிமையின் அடிப்படை அம்சமாகும். எனவேதான், இத்தகைய ஓர் அளவுகோலுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை@ அல்லது குடியுரிமை எனும் உண்மை நிலையின் மீது இஃது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவுமில்லை. அது மட்டுமல்லாமல், குடியுரிமையின் பலனாய் அமைகின்ற அஹ்காம்(சட்டங்)களிலும் இந்த நெறிமுறைகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவுமில்லை.

“சர்வதேசச் சட்டம் அல்லது இராஜதந்திர உறவுகள் என இன்று அழைக்கப்படுபவைப் பற்றி பழைய உலகம் அறிந்திருக்கவில்லை. இந்த சர்வதேசச் சட்டங்களும், இராஜ தந்திர உறவுகளும், அதன் பூமிகளில் வசிக்கக் கூடிய பிற நாடுகளின் குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், தங்கள் நாட்டு குடிமக்கள் போன்றே அவர்களையும் நடத்துவதற்கும் ஒவ்வொரு நாட்டையும் கடமைப்படுத்துகின்றன என அவர்கள் கூறுவது உண்மை நிலைகளுக்கும், இஸ்லாமிய வரலாற்றுக்கும் முரண்பட்ட ஒரு கூற்றாகும்.

இஃது ஏனெனில், “உடன்படிக்கையை ஏற்று நடப்பதுடன், (நல்ல) சுற்றுபுறத்தை முறைப்படி கடைப்பிடிப்பது (கலாநிதி தாஹா ஜாபிர் அல் அல்வானி) என்ற விதிமுறை அவர்கள் குறிப்பிடுகின்ற ‘பழைய உலகில் ஆதிக்கம் செலுத்தியது. இந்த விதிமுறை ஜாஹிலியாக் கால அரேபியர்களுக்கும், அபிஸீனியர்கள் போன்ற மற்றவர்களுக்கும் தெரிந்திருந்ததோடு மட்டுமில்லாமல், அவர்களினால் உபயோகப்படுத்தவும் பட்டது. இதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, அபிஸீனிய மன்னர் நஜ்ஜாஸி, முஹாஜிரீன் முஸ்லிம்களுடன் நடந்து கொண்ட நடைமுறை உதாரணமாகும்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும், அஃது ‘அல் அஹத் வல் ஜிவார்’ பற்றிய விதிமுறையைச் சட்டமாகத் தந்திருக்கிறது. அஃது இந்த விதிமுறையை அதனது தன்மைக்கு உகந்த விதத்தில் விளக்கியிருப்பதுடன், குடியுரிமை, தாபிஇய்யா ஆகியவற்றுக்கான சட்டங்களையும் வகுத்துத் தந்திருக்கின்றது@ அதன் விபரங்களையும், விதி;களையும் அமைத்துத் தந்திருக்கின்றது. இதற்கான ஆதாரம், குர்ஆனிலும், சுன்னாஹ் மூலங்களின் பல இடங்களிலும் காணப்படுகின்ற கூற்றுகளும், வரலாறு நெடுகிலும் இஸ்லாமியச் சமூகம் அதனை நடைமுறைப்படுத்தியதால் விளைந்த செயல்முறை உதாரணங்களுமாகும்.

அல்லாஹ்வின் து}தர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதாவூதிலும், அல் பைஹக்கியிலும் அறிவிக்கப்படுகிறது: “எவனொருவன் (நமது) உடன்படிக்கையின் கீழ் இருக்கும் ஒரு மனிதனைக் கொடுமைப்படுத்துகிறானோ அல்லது அவனைச் சிறுமைப்படுத்துகின்றானோ, அவனது ஆற்றலுக்கு அப்பாற்பட்ட வேலைகளை அவன் மீது சுமத்துகிறானோ அல்லது எத்தகைய உரிமையுமில்லாமல் அவனிடமிருந்து ஏதாவதொன்றை எடுத்து கொள்கின்றானோ, அத்தகையவனுக்கு எதிராக நியாயத் தீர்ப்பு நாளில் முறைப்பாடு செய்பவனாக நான் இருப்பேன்.

மேலும், மதீனாவின் அரசியலமைப்பு சட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது:“..மேலும், முஸ்லிம்கள் போரிடுகின்ற காலங்களில், யூதர்கள் நம்பிக்கையாளர்களுடன் இருக்க வேண்டும். மேலும் பனு} அவ்ஃப்பைச் சேர்ந்த யூதர்கள் நம்பிக்கை யாளர்களைச் சேர்ந்த ஒரு சமூகமாகும்.(இப்னு ஹிஷாம்)

இப்னு ஜன்ஜாவைஹ், கிதாப் அல் அம்வாலில் அறிவிக்கின்றார்: “ஒரு முதியவர் திம்மி மக்களிடம் யாசிப்பதை உமர் (ரழி); கண்டார்கள்;. எனவே, ‘என்ன விஷயம்?’ எனக் கேட்டார்கள்;. அந்த மனிதர் சொன்னார்: ‘என்னிடம் பணம் இல்லை. ஜிஸ்யா என்னிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.’ உமர் (ரழி) சொன்னார்கள்: ‘நாங்கள் உம்மை நியாயமாக நடத்தவில்லை. உம்முடைய முதிய (ஷைபா) வயதை நாங்கள் தின்று விட்டோம். அதற்கு பின்னர் உம்மிடமிருந்து ஜிஸ்யாவும் எடுக்கிறோம்.’ அதன்பின், உமர் (ரழி) தமது ஆளுநர்களுக்கு, ‘முதியவர்களிடமிருந்து ஜிஸ்யா பெற வேண்டாம்’ எனக் கடிதம் எழுதினார்கள்;.

குடியுரிமை பற்றிய கண்ணோட்டம், அரசியல் வாழ்விலோ அல்லது வேறெதற்காகவோ பங்கு கொள்வதை நியாயப்படுத்துவதாக அமையாது. இஃது ஏனெனில், உண்மை நிலையில் குடியுரிமை என்பது, ஒருவர் மற்றவருடன் வசிக்கும் ஓர் இடத்தை பகிர்ந்து கொள்வதனால் ஏற்படும் ஒரு தன்மை ஆகும். இயல்பாகவே, முஸ்லிம் அந்த இடத்தின் சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கீழ்படிய வேண்டும் என்ற ஒரு தேவை இருந்த போதும், அது ஷரீஆ மீது தீர்ப்பு வழங்குவதற்கோ அல்லது அதன் முழுமை வடிவிலான (முத்தலக்) மூலத்தைக் கட்டுப்படுத்துவதற்கோ, அதன் பொதுவான(ஆம்) மூலத்தை வரையறுத்துக் குறிப்பிடுவதற்கோ அல்லது அதன் தெளிவாகக் குறிப்பிடப் படாத (முஜ்மல்) மூலத்தைத் தெளிவாக்குவதற்கோ முடியாது. குடியுரிமையின் காரணமாக உதாரணத்திற்கு குஃப்ரில் பங்கு கொள்வது அனுமதிக்கப்பட்டால், அதே உரிமையின் அடிப்படையில் முஸ்லிமுடன் போராடுவதும் அனுமதிக்கப்பட வேண்டும். இது மிகப் பிழையானதாகும்.

குடியுரிமையை ஒரு நியாயப்பாடாக எடுத்துக் கொள்வது என்பது, குடியுரிமையை ஒரு சட்டவாக்க மூலக்காரணமாக எடுத்துக் கொள்வதாய் அமையும். இது ஹராமை அனுமதிப்பதற்கும், ஹலாலைத் தடுப்பதற்கும் வழி செய்யும். இஃது இஸ்லாத்துடன் முற்றிலும் முரண்பட்ட ஒன்றாகும்.



முடிவுரை

சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹ் பற்றிய இந்தச் சுருக்கமான எழுத்தாடலிருந்து தெளிவாக ஒன்றை விளங்கிக் கொள்ள முடிகிறது. அஃது என்னவென்றால், சீர்கெட்ட சிந்தனைப் படிமுறையின் ஓர் அறிகுறிதான், அதன் தீர்வுக்காக வல்லாதிக்கம் செலுத்தும் மேற்கை நோக்கித் திரும்புவதாகும். இந்தச் சிந்தனைப் படிமுறையானது, முதலாளித்துவத்தின் மோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, அந்தத் தரக் குறைவான--அழிந்து போகக் கூடிய கொள்கைவாதம் அமைத்துத் தந்திருக்கின்ற எல்லைகளுக்கு அப்பால் சென்று சிந்திக்கவே முடியாது.

இதற்காக வாதாடுபவர்களைப் பொறுத்தவரையில், மேற்கின் அரசியல் வாழ்வில் பங்கு கொள்வதன் நோக்கம் என்னவெனில், முஸ்லிம்களுக்கும் அவர்களுடைய பிரச்சினை களுக்கும் ஆதரவளிப்பது@ இஸ்லாமிய தஃவாவுக்கான சிறந்த சந்தர்ப்பத்தினை வழங்குவது@ எத்தகைய கஷ்டம் அல்லது இடையூறு இன்றி திருமணம், ஹலால் உணவு, பெண்களுக்கான உடையொழுங்கு, இன்னபிற போன்ற ஷரிஆச் சட்டங்களைப் பின்பற்றி ஒழுகுவதற்கு முஸ்லிம்களை இயலுமாக்குவது --போன்ற சில நன்மைகளை அடைந்து கொள்வதாகும்.

எவ்வாறு இருந்த போதிலும், அவர்கள் குறிப்பிடுவதற்கு மாற்றமாக, இஸ்லாம் அனுமதித்திருக்கும் ஷரீஆவின் பாதையைப் பின்பற்றிச் செல்வதன் மூலம், ஹராமை செய்வதற்கான தேவை ஏற்படாத விதத்திலும்; அல்லது அந்த ஹராத்தைச் சட்டப் பூர்வமாக அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிக் கொள்வதற்காக, ழரூராத்--அவசியத்தின் நிமித்தமான சட்டங்கள், மஸாலிஹ்--நன்மைக்கான சட்டங்கள், மஃபாஸித்--தீமையை எதிர்க்கின்ற சட்டங்கள் என்ற பிசகிய வழியை உபயோகிக்காமலும், இந்த நோக்கங்களை அடைந்து கொள்ள முடியும்.

அல்லாஹ் தனது முஹர்ரமாத்--தடுக்கப்பட்ட வரம்புகளுக்குள் வீழ்ந்து விடாமல் நம்மைத் தடுத்து நிறுத்துவதற்கு எவை போதுமானவையோ, அவற்றை நமக்கு வழங்கி இருக்கின்றான். மேலும் அவன் நமது கோரிக்கைகளை அடைந்து கொள்ள எவை போதுமானவையோ, அத்தகைய மாற்று வழிகளையும், நடைமுறைப் பாங்குகளையும் அனுமதித்திருக்கிறான்.