Tuesday, May 19, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 6

லா இலாஹ இல்லல்லாஹ_ என்பது இஸ்லாத்தின் வாழ்க்கை நெறி

லா இலாஹ இல்லல்லாஹ_ - அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. இது இஸ்லாத்தின் முதல் முழக்கம். ஈமான் என்ற இறைநம்பிக்கையின் முதற்பகுதியும் இதுதான். இதன் பொருள் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரையும் வழிபடவோ, கீழ்ப்படியவோ கூடாது என்பதாகும். முஹம்மதுர் ரஸ_லுல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்கள் அந்த அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள். இது இந்தப் பிரகடனத்தின் இரண்டாம் பகுதி. இதன் விசாலமான பொருள்: இறைவனைக் கீழ்ப்படிவது அவனுக்கு மட்டுமே அடிபணிவது என்பது அவனது திருத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படியே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே. இந்த இரண்டு பகுதிகளையும் உள்ளத்தில் பதித்து நாடி நரம்புகளிலெல்லாம் உறைய வைத்து தன் வாழ்வை வழிநடத்துபவனே முஸ்லிம் எனப்படுபவன். இஸ்லாத்தின் தூண்களான இதரப் பகுதிகள் இந்த அடிப்படை நம்பிக்கையின் ஊற்றாய்ப் பிறப்பனவே. இப்படி வானவர்கள் மீது நம்பிக்கை இறைவேதங்களின் மீது நம்பிக்கை இறைவனின் தூதர்கள் மேல் நம்பிக்கi மரணத்திற்குப் பின் வரும் மறு உலக வாழ்க்கையின் மேல் நம்பிக்கை இறுதித் தீர்ப்பு நாளின் மேல் நம்பிக்கை தொழுகை நோன்பு ஜகாத் என்ற ஏழைவரி, ஹஜ் என்ற இறை இல்லப் புனிதப் பயணம் ஆகுமானவற்றை ஏற்றுக் கொள்வது தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகி இருப்பது ஒழுக்கங்கள் பற்றிய பாடங்கள் இப்படி இன்னும் இருப்பவை அனைத்தும் முஹம்மத்(ஸல்)அவர்கள் காட்டிய வழியில் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவது என்பதன் ஊற்றாய்ப் பிறப்பனவே. முஸ்லிம் சமுதாயம் என்பது இத்தனையையும் முழுமையாக நடைமுறைப்படுத்தி வாழ்வதே. இந்த வழிகாட்டுதல்களை நம்பிக்கைகளை அந்த நம்பிக்கையின் ஊற்றாய்ப் பிறந்த நன்னடத்தைகளை நடைமுறைப்படுத்தாத சமுதாயம் முஸ்லிம் சமுதாயமல்ல. ஆக அல்லாஹ் ஒருவன் தான் என்பதை நம்புகின்றேன் என்பது ஒரு முழு வாழ்க்கை நெறியை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்ந்து காட்டுகின்றேன் என்பதன் பகிரங்கமான பிரகடனமாகும். அல்லாஹ் ஒருவன் தான் இறைவன் என்பதை அறுதியாகவும் உறுதியாகவும் நம்பாதவரை இந்த வாழ்க்கை நெறி நாட்டு நடப்பாக ஆகிட இயலாது. அல்லாஹ் ஒருவன் தான் என்ற இந்த அடிப்படையில் அல்லாமல் வேறு அடிப்படைகளைக் கொண்டு இந்த வாழ்க்கை நெறி அமைக்கப்படுமேயானால் அது இஸ்லாமிய வாழ்க்கை நெறி ஆகாது. அந்த வாழ்க்கை நெறியைப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள் எனச் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது. அதே போல் இந்த வாழ்க்கை நெறி, அல்லாஹ் ஒருவன் தான் இறைவன் என்ற அடிப்படையோடு வேறு அடிப்படைகளையும் சேர்த்து அமைக்கப்படுமேயானால், அந்த வாழ்க்கை நெறியையும் இஸ்லாமிய வாழ்க்கை நெறி என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தச் சமுதாயத்தை முஸ்லிம் சமுதாயம் என்றும் கூறிட முடியாது. அல்லாஹ் கூறுகின்றான்:
அவனையன்றி நீங்கள் வணங்குபவையாகவும் நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக்கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத் தவிர, உண்மையில் அவை ஒன்றுமே இல்லை. அல்லாஹ் இதற்கு யாதோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்கவுமில்லை. சகல அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்றொருவரையும்)நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளையிட்டிருக்கின்றான். இது தான் நேரான மார்க்கம் (திருக்குர்ஆன் 12: 40)

(எவன் அல்லாஹ்வுடைய)தூதருக்கு (முற்றிலும்)வழிப்பட்டு நடக்கின்றானோ அவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு நடக்கின்றான் (அல்குர்ஆன் 4:80)


அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த அல்லாஹ் காட்டிய வழியில் மட்டுமே வாழ்ந்திட வேண்டும். அந்த வழிகாட்டுதல் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய விதமே! இந்தத் தீர்க்கமான தெளிவான பிரகடனம் பல தெளிவான பாதைகளை நமக்கக் காட்டுகின்றது. முதன்முதலில் இது முஸ்லிம் சமுதாயம் எப்படி இருக்கும் என்பதைத்; தெளிவுபடுத்துகின்றது. இரண்டாவதாக இஸ்லாமிய சமுதாயம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துச் சொல்கின்றது. மூன்றாவதாக இது அஞ்ஞான சமுதாயங்களை (ஜாஹிலிய்ய சமுதாயங்களை)எப்படி எதிர்கொள்வது என்பதை எடுத்துச் சொல்லுகின்றது. நான்காவதாக மனித வாழ்வை எப்படி மாற்றி அமைத்திட வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றது. இவை அனைத்தும் இஸ்லாம் என்ற இந்தப் பேரியக்கத்தின் வளர்ச்சிப் பாதையில் மிகவும் முக்கியமானவையாகும். முஸ்லிம் சமுதாயத்தின் தனித்தன்மை என்ன? முஸ்லிம் சமுதாயத்தின் தனித்தன்மை இந்தச் சமுதாயத்தின் எல்லா விவகாரங்களும் அல்லாஹ் ஒருவனே என்ற அடிப்படையிலேயே ஒருங்கிணைக்கப்படும் என்பதே. இறைவன் ஒருவனே என்பதை நம்பாதவன் அல்லாஹ்வை மட்டுமே வணங்குகின்றவனாக மாட்டான். அல்லாஹ் கூறுகின்றான்:
(ஒன்றுக்கு பதிலாக) இரு தெய்வங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக (உங்களுடைய)ஆண்டவன் ஒரே ஒருவன் தான். ஆகவே (அந்த ஒருவனாகிய)எனக்கு நீங்கள் அஞ்சுங்கள். வானங்களிலும் ப10மியிலும் உள்ள யாவும் அவனுடையவையே அவனுக்கே (என்றென்றும்)வழிபடுவது அத்தியாவசியம் (ஆகவே)அந்த அல்லாஹ் அல்லாதவற்றிற்கா நீங்கள் அஞ்சுகின்றீர்கள்? (அல்குர்ஆன் 16 : 51,52)
அல்லாஹ்வோடு வேறு தெய்வங்களையும் வணங்குவோர் அல்லாஹ்வை வணங்கவில்லை. அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குபவர்களைப் போல் இவர்களும் இணைவைப்பவர்களே. (நபியே) நீர் கூறும் நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய தியாகமும் என் வாழ்வும் என் மரணமும் உலகத்தாரைப் படைத்துப் போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. அவனுக்கு யாதோர் இணையுமில்லை. அவ்வாறே நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே (அவனுக்கு வழிப்பட்ட)முஸ்லிம்களில் நான் முதன்மையானவன் (அல்குர்ஆன் 6: 162-163) அல்லாஹ் அருளிச் செய்த திருக்குர்ஆன் அதற்கோர் அழகிய விளக்கமாக வாழ்ந்து காட்டிய பெருமானார் (ஸல்)அவர்களின் வாழ்வு வாக்கு ஆகியவற்றை விட்டு வேறு அரசியல் அமைப்புச் சட்டங்களிலிருந்தும் வேறு வழிகாட்டுதல்களிலிருந்தும் சட்டங்களை வகுத்து அதன் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவர்களாக மாட்டார்கள். இதனை அல்லாஹ் இறைமறையாம் திருமறையில் இப்படி வினவுகின்றான்.
அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்க மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை (தெய்வங்)களும் அவர்களுக்கு இருக்கின்றனவா? (அல்குர்ஆன் 42:21)
இன்னும் இறைவன் கூறுகின்றான் :
தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் அவர் எதனை உங்களுக்குத் தடுத்துக்கொண்டாரோ அவற்றிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 59:7)
இது தான் முஸ்லிம் சமுதாயம். இந்தச் சமுதாயத்தில் நம்பிக்கைகள், தனி மனிதனின் எண்ணங்கள், செயல்கள், அவனது ஒழுக்கம், அன்றாட வாழ்க்கையில் அவன் கடைப்பிடிக்கும் சட்ட திட்டங்கள், அவனது சமுதாய நீதிகள், நியதிகள் இவையெல்லாம் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை அடிப்படையாகக் கொண்டு தான் அமையும். இந்த அடிப்படை அகற்றப்பட்டு விட்டால் அது முஸ்லிம் சமுதாயமாக அமைய முடியாது. இந்தப்பகுதியில் ஏதேனும் ஒன்றிலோ அந்த ஒன்றின் பகுதியிலோ அல்லாஹ் ஒருவனே இறைவன் என்ற அடிப்படை அல்லாதது கலந்து விடுமேயானால் அது முஸ்லிம் சமுதாயமாக அமைந்திடாது. இந்தச் சமுதாயத்தின் வாழ்வில் ஏதேனும் ஒரு சிறு பகுதியில் இதர கொள்கைகளோ கோட்பாடுகளோ புகுந்திடுமேயானால் அந்தச் சமுதாயம் முஸ்லிம் சமுதாயமாக ஆகிட இயலாது. ஏனெனில் அங்கே முஸ்லிம் சமுதாயம் அமைக்கப்பட வேண்டிய ஆதி அடிப்பபடையான அல்லாஹ் ஒருவனே இறைவன் முஹம்மத் (ஸல்)அவர்கள் அவனுடைய திருத்தூதர் ஆவார்கள் என்பதில் கலப்புகளும் சேர்ப்புகளும் இணைப்புகளும் ஏற்பட்டு விட்டன. ஆகவே இஸ்லாமிய சமுதாயமைப்பைப் புனரமைத்திட வேண்டும். அந்தச் சமுதாயமைப்பை அடிப்படையாகக் கொண்டு ஓர் இஸ்லாமிய அரசை நிலைநாட்டிட வேண்டும் என விரும்புவோர் முதன் முதலில் ஓர் அடிப்படைப் பணியைச் செய்திட வேண்டும். அந்த அடிப்படைப் பணி: இந்தச் சமுதாய அமைப்பில் அங்கம் வகிப்போர் அனைவருடைய உள்ளங்களையும் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதையும் முஹம்மத் (ஸல்)அவர்கள் அல்லாஹ்வுடைய அறுதித் தூதர் ஆவார்கள் என்பதையும் கொண்டு உறுதி பெறச் செய்திட வேண்டும். இதில் எள்ளளவு எள்ளின் மூக்களவு அந்த மூக்கின் முனையளவு கூட இடைச் செருகல்களோ கலப்படங்களோ சேர்ந்திடக் கூடாது. இப்படி லாயிலாஹ இல்லல்லாஹ_ முஹம்மதுர்ரஸ_லுல்லாஹ் என்ற அடிப்படையில் மட்டுமே நிலைத்து நிற்கும் சமுதாயம் தான் முஸ்லிம் சமுதாயம். இந்தச் சமுதாயம் மட்டுமே இஸ்லாத்தை நிலைநாட்டிட முடியும். இதன் பின்னர் இந்த அடிப்படையை ஏற்று ஓர் இஸ்லாமிய வாழ்க்கையை வாழ விரும்புவோர் அனைவரும் இந்தச் சமுதாய அமைப்பில் வந்து அங்கம் வகித்திடுவர். இந்த அடிப்படைகளை அழுத்தமாக நம்பிடுவோர் அனைவரும் ஒன்றாய் ஓரிறைவனின் அடிமைகளாய் லாயிலாஹ இல்லல்லாஹ_ முஹம்மதுர்ரஸ_லுல்லாஹ் என்பதன் மறுபதிப்பாய் வாழ்ந்திடுவார்கள். இப்படித்தான் அன்று அந்த முதல் முஸ்லிம் சமுதாயம் உருவானது. அந்தச் சமுதாயம் தான் அப்பழுக்கற்றதோர் இஸ்லாமிய அரசை நிலை நாட்டிற்று. இன்னும் சொன்னால் ஓர் இஸ்லாமிய சமுதாயத்தை அமைத்திட இருக்கும் ஒரே வழி இது தான். அல்லாஹ்வைத் தவிர வேறு உபாயங்கள் வழியாகவும் சிந்தனைகளின் வழியாகவும் வந்த எல்லா சட்டங்களையும் திட்டங்களையும் கோட்பாடுகளையும் வழிபாடுகளையும் உதறித் தள்ளிவிட்டு, அல்லாஹ்வின் வழிகாட்டுதல் வழிவாழும் சமுதாயத்தால் மட்டுமே ஓர் இஸ்லாமிய அரசை நிலைநாட்டிட இயலும்! இந்த அடிப்படையை ஏற்றுக் கொள்ளாத ஜாஹிலிய்ய சமுதாயங்கள் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் இந்தச் சமுதாயத்தோடு சங்கமித்திடலாம் அல்லது வேறுபட்டு நின்றிடலாம். அவ்வாறு அது வேறுபட்டு நின்றுவிட்டால், அது இந்த இஸ்லாமிய சமுதாயத்தோடு அமைதியாக வாழலாம். அதற்குத் தேவையான ஒப்பந்தங்களையோ உடன்படிக்கைகளையோ செய்திடலாம் அல்லது எதிரே நின்று எதிர்கொள்ளலாம். இதில் வரலாறு நமக்கோர் உண்மையை உணர்த்துகின்றது. அது இந்த அஞ்ஞான சமுதாயம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிரே நின்று போரிடுவதைத் தான் தன் விருப்பமாக ஆக்கிக் கொண்டது. அது அமைதியையோ சமாதானத்தையோ விரும்பவில்லை. இதுவே வரலாறு சொல்லும் உண்மை. இந்தப் போரை எந்த ஈவிரக்கமுமின்றி அது, இஸ்லாமிய சமுதாயத்தின் மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. மனித மாண்புகளையோ பொதுவான ஒழுக்கங்களையோ பற்றிக்கூட அது கவலைப்பட்டதில்லை. இந்தப் போரைத் தொடுத்திடவும் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் கட்டவிழ்த்து விட்டிட அந்த அஞ்ஞான சமுதாயம் எப்போதும் காலந்தாழ்த்தியதுமில்லை.
இந்த இஸ்லாமிய சமுதாயம் ஓர் சமுதாயமாகக் காலூன்றுவதற்கு முன்பே அந்த அஞ்ஞான சமுதாயம் தன் போரைப் பிரகடனப்படுத்திற்று. இஸ்லாமிய சமுதாயம் ஓரிரு தனி மனிதர்கள் என்று துவங்கியபோதே அந்த அஞ்ஞான சமுதாயம் தன் தாக்குதலைத் துவங்கிற்று. எங்கேயும் எந்த விதிவிலக்கும் இல்லாமல் அஞ்ஞான சமுதாயம் இஸ்லாமிய சமுதாயத்தை எதிர்கொண்டது. இப்படித்தான். ஏன்? இஸ்லாத்தின் அழைப்பு இஸ்லாத்தின் முதல் கொள்கை முழக்கம் அதன் காதில் வீழ்ந்ததும் அந்த அஞ்ஞான சமுதாயம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோர் மீது சீறித்தான் பாய்ந்;தது. வரலாறுகள் வரையிட்டுக்காட்டும் இந்த உண்மை நிலையை நாம் ஒத்துக் கொண்டாக வேண்டும். ஒத்துக் கொண்டால் மட்டும் போதாது பயனுள்ள பாடங்களையும் படித்தாக வேண்டும். அதாவது இந்தப் படிப்பினைகள் தரும் தெளிவானப் பாடம் இது தான். ஓர் இஸ்லாமிய சமுதாயம் அதனை அழிக்கத் துடிக்கும் அஞ்ஞான சமுதாயத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள போதுமான வலுவை வளர்த்துக் கொள்ளவில்லையென்றால், அது தலையெடுக்கவோ தலைநிமிரவோ தற்காத்துக் கொள்ளவோ இயலாமற் போய்விடும். இந்த இஸ்லாமிய சமுதாயம் போதிய அளவில் வலுவைப் பெறவில்லையென்றால் அது இந்தப்ப10மியில் உயிர் வாழ்வதே கடினம் இந்த வலுவும் பலமும் எல்லாத் துறைகளிலும் வந்தாக வேண்டும். எடுத்துக்காட்டாக இந்த இஸ்லாமய சமுதாயம் ஈமானை உறுதிப்படுத்தியாக வேண்டும். ஆன்மீகப் பலத்தையும் ஒழுக்க பலத்தையும் பெற்றாக வேண்டும். ஒரு சமுதாயத்தை அமைக்கவும் அதனை நிலைப்படுத்தவும் பலம் பெற்றாக வேண்டும். தேவையான ஆள் பலத்தையும் ஆயத பலத்தையும் பெற்றாக வேண்டும். ஏனைய ஜாஹிலிய்யா சமுதாயத்தை வெற்றி கொள்வதற்காக என்றில்லாவிட்டாலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவாவது இந்த இஸ்லாமிய சமுதாயம் போதுமான ஆள்பலத்தையும் ஆயுத பலத்தையும் பெற்றாக வேண்டும். இந்த அஞ்ஞான சமுதாயம் ஜாஹிலிய்யா சமுதாயம் என்பது தான் என்ன? இந்த மௌட்டிக சமுதாயத்தை இஸ்லாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? ஜாஹிலிய்யா சமுதாயம் என்பது முஸ்லிம் சமுதாயமல்லாத அத்தனை சமுதாயத்தையும் குறிக்கும். இன்னும் குறிப்பாகச் சொன்னால் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்ற கொள்கையை ஏற்று அதன்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாத சமுதாயந்தான் ஜாஹிலிய்யா சமுதாயம் அல்லது அஞ்ஞான சமுதாயம். இந்த வரையறையை வைத்துப் பார்த்தால் இந்தப் ப10மியில் இன்று வழக்கிலிரு;ககும் அத்தனை சமுதாயமும் ஜாஹிலிய்யா சமுதாயதமே அஞ்ஞான சமுதாயமே இதில் இன்றைக்கிருக்கின்ற கம்ய10னிச சமுதாயங்கள் அத்தனையும் அடங்கும். ஏனெனில் இந்தக் கம்ய10னிச சமுதாயங்கள் இறைவன் இருக்கின்றான் என்ற உண்மையை மறுக்கின்றன. இந்தக் கம்ய10னிச சமுதாயங்கள் இந்தப் ப10மியையும் இன்னும் இருப்பவற்றையும் படைத்தவன் இறைவன் தான் என்பதை ஏற்க மறுக்கின்றன. இந்தப் பிரபஞ்சம் தானாகவே தோன்றியது. அல்லது இயற்கையால் ஏற்பட்டது என வாதிக்கின்றன இந்தக் கம்ய10னிசக் கொள்கைகள். மனித வரலாறு என்பது ஒரு பொருளாதார போராட்டத்தால் ஆனது என்பது கம்ய10னிசத்தின் கோட்பாடு. உற்பத்திச் செய்வதும் உற்பத்திச் செய்ததைப் பங்கிட்டு உண்டு வாழ்வதும் தான் மனித வாழ்க்கை என்பது கம்ய10னிசத்தின் பாரம்பரிய கொள்கை ஒரு கம்ய10னிஸ்ட் கட்சிக்குக் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து அடிமைப்பட்டு வாழ்ந்திட வேண்டும் அல்லாமல் இறைவனுக்கோ அவனது வழிகாட்டுதல்களுக்கோ கீழ்ப்படிந்து வாழ்ந்திடக் கூடாது. கம்ய10னிச நாடுகளில் கம்ய10னிஸ்ட் கட்சி தான் மக்களைக் கட்டுப்படுத்தி கட்டாயப்படுத்தி கீழ்ப்படிய வைக்கின்றது. இது கம்ய10னிச சமுதாயங்களின் இறைவன் கம்ய10னிஸ்ட் கட்சி தான் என்பதைத் தெளிவாக விளக்குகின்றது. இந்தக் கொள்கைகளின் இயல்பான விளைவு என்னவெனில் மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்கும் விலங்குகளின் அடிப்படைத் தேவைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதே. விலங்கினங்களுக்கு எப்படி உணவு உடை உறையுள் காமம் இவை தேவையோ அதே போல் மனிதனுக்கும் இவை தேவை. மனிதன் விலங்கிலிருந்து எந்த விதத்திலேயும் மாறுபட்டவனல்ல. இப்படி மனிதனை மிருகத்தின் நிலைக்குத் தாழ்த்தி அவனது ஆன்மிகத் தேவைகளையும் ஒழுக்க விழுப்பங்களையும் அடியோடு மறந்து விடுகின்றது கம்ய10னிசம். மனிதனை விலங்கிலிருந்து உயர்த்தியும் வேறுபடுத்தியும் காட்டிடும் இந்த இயல்பான தேவைகளை மறந்துவிடுவதால் கம்ய10னிச சமுதாயங்களில் வாழ்வோர் மானுடமின்றி வதைபடுகின்றார்கள் ஆன்மிக வறுமையால் அழிகின்றார்கள். இறைவனை நம்புகின்ற சுதந்திரம் அவர்களுக்கில்லை. தங்கள் தனித்தன்மைகளை வெளிப்படுத்திடவும் தங்கள் திறமைகளை வளர்த்திடவும் கம்ய10னிசம் தனி மனிதர்களை விடுவதில்லை. தனி மனிதனின் இயல்புகள் அவனது திறமைகளை மறைக்க விரும்புவதில்லை. வளர்க்கவும் வெளிப்படுத்தவுமே விரும்புகின்றது. கம்ய10னிசம் இந்த இயற்கையை அமுக்கிவிடுகின்றது. தனி மனிதனின் திறமைகள் அவன் உழைத்துச் சேர்க்கும் சொத்துக்கள் உடைமைகள் விரும்பும் தொழிலைத் தேர்ந்தெடுத்து பெருக்கிடும் வளம் வாழ்வு இவற்றால் வெளிப்படும். தனிமனிதன் தொழிலால் அதில் காட்டும் சிறப்பான திறமையால் நுண்மாண்நுழைபுலத்தால் உயர்வான் வாழ்வான். இந்த சிறப்பான பண்புகளால் அவன் உயர்வின் எல்லைகளைத் தொடுவான். இதில் விலங்கினங்களை விட தான் உயர்ந்தவன் தனித்தவன் என்பதை உணர்த்துவான். ஆனால் கம்ய10னிச மண்ணையும் காற்றையும் நெருப்பையும் இன்னம் இவை போன்றவற்றையும் இறைவனுக்கு இணையாக வைத்து வணங்கும் அத்தனை சமுதாயங்களும் அஞ்ஞான சமுதாயங்களே. இத்தகைய சமுதாயங்களை இந்தியாவில் காணலாம். இன்னும் பிலிப்பைன்ஸ் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலும் காணலாம். இவற்றின் மௌட்டிகம் பின்வரும் மடமைகளில் முடங்கிக் கிடக்கின்றது. முதன் முதலாக இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ் அல்லாதவர்களையும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவற்றையும் இறைவனாக ஏற்றுக் கொண்டன. அல்லது இவை இறைவன் ஒருவனே என்பதை விடுத்து எண்ணற்ற வகையறாக்களை இறைவனாக எடுத்துக்கொண்டன. உயிருடன் இருப்பவை உயிரில்லாதவை இவற்றையெல்லாம் இவை இறைவனுக்கு இணையாகக் கற்பித்து வருகின்றன. இரண்டாவதாக இந்தச் சமுதாயங்கள் தங்கள் மௌட்டீகங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெரும் சமுதாயமைப்பை நிறுவி தங்கள் தேவைகளைத் துதிக்கவும் பெருமைப்படுத்தவும் செய்கின்றன. இது போல் இந்தச் சமுதாயங்கள் தங்களைக் கட்டுப்படுத்திடவும் தங்கள் வழக்குகளில் தீர்ப்பு வழங்கிடவும் அல்லாஹ்வின் சட்டங்களைப் பின்பற்றுவதில்லை. அல்லாஹ் அல்லாதவர்களின் வழியாய் வந்த சட்டங்களையே இவர்கள் பின்பற்றுகின்றார்கள். இவர்கள் பின்பற்றும் சட்டங்களை யாத்துத் தருபவர்கள் ஜோதிடர்கள் மந்திரவாதிகள் தந்திரங்களைச் சொல்லி மக்களை மயக்கி மாயங்களைச் செய்வோர் மத குருக்கள் என மக்கள் மத்தியிலே உலாவருவோர் தேசத்தில் சமுதாயத்தில் மூதாதையர்கள் மூத்தவர்கள் எனப்படுவோர் இவர்கள் தாம்.
இன்னும் சில சமுதாயங்களில் இந்தச் சட்டங்களை எழுதி இயற்றிடுவது மதச்சார்பற்ற நிறுவனங்களும் நிருவாகங்கள் எனப்படும் சட்டசபைகளும் சட்டப்பேரவைகளும் நாட்டையாளும் மன்றங்களும், இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ்வின் ஷாPஅத் சட்டங்களைப் பின்பற்றவில்லை. இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ் அல்லாதவர்கள் இயற்றிய சட்டங்களைக் கொண்டே தங்கள் வாழ்வை வடிவமைத்துக் கொள்கின்றன. ஆனால் உண்மையில் மனிதன் தன் வாழ்வை வழி நடத்தும் சட்டங்களாக அல்லாஹ்வின் சட்டங்களையே எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் அந்தச் சட்டங்களைப் பின்பற்றும் அழகிய முன்மாதிரி அல்லாஹ்வின் அறுதித் தூதர் முஹம்மத்(ஸல்)அவர்களின் வாழ்க்கையிலேயே இருக்கின்றது. இன்றைக்கிருக்கின்ற எல்லா ய10த சமுதாயங்களும் கிறிஸ்தவ சமுதாயங்களும் அஞ்ஞான ஜாஹிலிய்ய சமுதாயங்களே. இந்தச் சமுதாயங்கள் உண்மையான இறை நம்பிக்கைகளை உருக்குலைத்து விட்டன. இன்னும் இந்தச் சமுதாயங்கள் இறைவனுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரங்களையும் ஆற்றல்களையும் இன்னும் சிலருக்கும் இருப்பதாகக் கற்பிக்கின்றன. இப்படி இவர்கள் இறைவனுக்கு வை;ககும் இணை தேவகுமாரன் என இறைவனுக்கோர் மகனைக் கண்டு பிடித்துத் தந்ததிலும் பிதா சுதன் பரிசுத்த ஆவி என ஆண்டவனை கூறு போட்டுத் தந்ததிலும் வெளிப்படுகின்றது. இன்னும் சில நேரங்களில் இவர்கள் சில கடவுள் கொள்கைகளைக் கற்பிக்கின்றனர். இந்தக் கடவுள் கொள்கை உண்மையான இறை கொள்கையிலிருந்து வெகுதூரம் சென்று விடுகின்றன.
யூதர்கள் உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர் (இவ்வாறே)கிறிஸ்தவர்கள் மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். இவர்கள் தங்கள் வாய்களால் கூறும் இக்கூற்றானது இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றையே ஒத்திருக்கின்றது. அல்லாஹ் இவர்களை அழித்து விடுவானாகவும் (சத்தியத்தைப் புறக்கணித்து)இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர் (அல்குர்ஆன் 9:30)

நிச்சயமாக அல்லாஹ் (பிதா சுதன் பரிசுத்த ஆவி ஆகிய இம்)மூவரில் ஒருவன் தான் என்று கூறியவர்களும் மெய்யாகவே நிராகரிப்போராகி விட்டனர். ஏனென்றால் (ஒரே)ஆண்டவனைத் தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே (இவ்வாறு)அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிடில் (இவ்வாறு கூறிய)அவர்களிலுள்ள நிராகரிப்போர்களைத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக வந்தடையும் (அல்குர்ஆன் 5:73)


அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது என்று இந்த ய10தர்கள் கூறுகின்றனர் (அவ்வாறன்று)அவர்களது கைகள் தாம் கட்டப்பட்டிருக்கின்றன. அன்றி இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டனர். அல்லாஹ்வுடைய கைகளோ (எப்போதும்)விரிந்தே இருக்கின்றன. அவன் விரும்பியவாறெல்லாம் அள்ளிக் கொடுக்கின்றான். ஆனால் உம் இறைவனால் உமக்கு அருளப் பெற்ற இவ்வேதம் அவர்களில் பெரும்பான்மையினருக்கு அட்டூழியத்தையும் நிராகரிப்பையுமே அதிகப்படுத்தி விடுகின்றது. ஆகவே நாம் அவர்களுக்கிடையில் விரோதத்தையும் குரோதத்தையும் மறுமை நாள் வரையில் (இருக்கும்படி)விதைத்து விட்டோம். அவர்கள் (விசுவாசிகளுக்கிடையில்)யுத்த நெருப்பை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்துவிடுகின்றான். ஆனால் (இன்னும்)அவர்கள் ப10மியில் விஷமம் செய்து கொண்டே அலைகின்றார்கள். அல்லாஹ் விஷமம் செய்வோரை நேசிப்பதில்லை (அல்குர்ஆன் 5:64)


ய10தர்களும் கிறிஸ்தவர்களும் நாங்கள் அல்லாஹ்வுடைய குமாரர்களாகவும் அவனால் நேசிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றோம் என்று கூறுகின்றனர் (ஆகவே நபியே அவர்களை நோக்கி)நீர் கூறும் அவ்வாறாயின் உங்கள் குற்றங்களுக்காக அவன் உங்களை ஏன் (அடிக்கடி தண்டிக்கும் முறையில் )துன்புறுத்துகின்றான். (உண்மை)அவ்வாறன்று நீங்களும் அவன் படைத்த (மற்ற)மனிதர்கள் போன்று தாம். (நீங்கள் அவனுக்குப் பிறந்த குமாரர்களல். ஆகவே உங்களிலும்)அவன் விரும்பியவர்களை மன்னிக்கின்றான். அவன் நாடியவர்களை வேதனை செய்கின்றான். (ஏனென்றால்)வானங்கள் ப10மியுடையவும் இவைகளுக்கு மத்தியிலுள்ள யாவற்றினுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே அவனளவில் தான் (யாவரும்)செல்ல வேண்டியதாயிருக்கின்றது (அல்குர்ஆன் 5:18)


இந்தச் சமுதாயங்களெல்லாம் அஞ்ஞான சமுதாயங்கள் அல்லது மௌட்டீக சமுதாயங்கள் ஏனெனில் இவை இறைவனை வணங்கும் முறை இவை கடைப்பிடிக்கும் நடைமுறை பழக்க வழக்கங்கள் எல்லாம் தவறான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. துவறானவை மட்டுமல்ல. சிதைக்கப்பட்டவை திரிக்கப்பட்டவை. இந்தச் சமுதாயங்களெல்லாம் அஞ்ஞான மௌட்டீக சமுதாயங்கள் ஏனெனில் இவையெல்லாம் அல்லாஹ்வை வணங்கவில்லை. வழிபடவில்லை. இவை அல்லாஹ் அல்லாதவர்களின் சட்டங்களைக் கீழ்ப்படிந்து நடப்பவை. இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ்வின் சட்டங்களை ஏற்றுக் கொள்ளவுமில்லை. அல்லாஹ்வின் கட்டளைகள் தாம் அனைத்துச் சட்டங்களுக்கும் அடிப்படையாக அமைந்திட வேண்டும் என கருதவுமில்லை. மாறாக இவை மனிதர்களை அங்கமாகக் கொண்ட சட்டசபைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தச் சட்டப் பேரவைகள் தாம் சட்டங்களை ஏற்றிடும் அனைத்து அதிகாரங்களையும் பெற்றவை. இதன் மூலம் அல்லாஹ்வு;க்கு மட்டுமே சொந்தமான உரிமையைப் பறித்துக்கொண்டார்க்ள. திருமறையாம் திருக்குர்அன் அருளப்பட்ட நாள்களில் இந்த உரிமைப் பறிப்புகளைச் செய்யும் சமுதாயங்களை அல்லாஹ்வோடு ஏனையோரையும் இறைவனாக எடுத்துக் கொண்ட சமுதாயங்களாகவே சுட்டிக்காட்டிற்று. ஏனெனில் இந்தச் சமுதாயங்கள் பாதிரிமார்களையும் மதகுருக்களையும் சட்டம் இயற்றும் அதிகாரிகளாகவும் அடிபணிந்து நடக்க வேண்டிய ஆற்றலார்களாகவும் எடுத்துக்கொண்டன.

இவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகன் மஸீஹையும் (தங்கள்)தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றளர். எனினும் ஒரே ஆண்டவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்று இவர்கள் (யாவரும்)ஏவப்பட்டிருக்கின்றனர். வணக்கத்திற்குரிய நாயன், அவனையன்றி வேறொருவனும் இல்லை. அவர்கள் இணைவைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன் (அல்குர்ஆன் 9:31)

இவர்கள் தங்கள் மதகுருமார்களின் முன்னால் மண்டியிட்டு அடிதொழுது ஆதரிக்கவில்லை. ஆனால் இவர்கள் தங்கள் வாழ்க்கையை வழி நடத்தும் சட்டங்களை யாத்துத் தருகின்ற அதிகாரத்தை தங்கள் மத குருமார்களுக்கும் தங்கள் பாதிரிகளுக்கும் தந்தார்கள். இதன் மூலம் தங்கள் மதகுருமார்களையும் பாதிரிகளையும் இறைவனாக ஆக்கிக் கொண்டார்கள். திருக்குர்ஆன் அன்றைக்கு இவர்கள் மேல் இப்படியொரு தீர்ப்பை வழங்கியது என்றால் இன்றைக்கும் அவர்களுடைய நிலை இது தான். இன்றைக்கு ஒரு சிறு மாற்றம். அது இன்று இவர்கள் தங்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரின் கைகளில் அதிகாரம் அனைத்தையும் ஒப்படைத்து அவர் சொல்வதைப் போல் தங்கள் வாழ்க்கையை வழிநடத்துகின்றார்கள். இறுதியாக இன்றைக்கு முஸ்லிம் சமுதாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றவற்றில் அனேக சமுதாயங்கள் (ஜாஹிலிய்ய)அஞ்ஞான சமுதாயங்களே. இந்தச் சமுதாயங்களை அஞ்ஞான சமுதாயங்கள் என அழைக்கிறோம். காரணம் இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ் அல்லாதவர்களை நம்புகின்றன என்பதனால் அல்ல. அல்லது இந்தச் சமுதாயங்கள் தொழும் போது அல்லாஹ்வை விடுத்து அடுத்தவர்களையும் தொழுகின்றன என்பதனால் அல்ல. இந்தச் சமுதாயங்களை அஞ்ஞான சமுதாயங்கள் என அழைப்பதற்கான காரணம் இவர்களுடைய வாழ்க்கைகள் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை மட்டுமே கொண்டு வழி நடத்தப்படவில்லை. இவர்கள் அல்லாஹ் ஒருவனே இறைவன் வேறு இறைவன் இல்லை என்பனவற்றை அழுத்தமாக நம்புகின்றனர். ஆனால் தங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் சட்டங்களை இயற்றும் அதிகாரங்களை அல்லாஹ் அல்லாதவர்களிடம் ஒப்படைத்து, இந்த அல்லாஹ் அல்லாதவர்கள் இயற்றும் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றார்கள். பின்னர் இந்தச் சட்டங்களின் அடிப்படையில் சில வாழ்க்கை முறைகளையும் பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் நெறிமுறைகளையும் தாரதம்மியங்களையும் இங்கிதங்களையும் வளர்த்துக் கொள்கின்றனர். இவற்றை வாழ்க்கையில் கிஞ்சித்தும் வழுவாமல் கடைப்பிடித்து வாழுகின்றனர். வாழ்க்கையில் நாம் எப்படி ஒழுகுகின்றோமோ அதைக்கொண்டே நாம் எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இறைவன் நிர்ணயிக்கின்றான். இனை இறைவன் இப்படிக் குறிப்பிடுகின்றான்.


எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே (அல்குர்ஆன் 5:44)

எவர்கள் அல்லாஹ் அருளிய (வேதக்கட்டளை)பிரகாரம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அக்கிரமக்காரர்கள் தாம் (அல்குர்ஆன் 5:45)


சட்டங்களை இயற்றி அவற்றை மக்கள் மேல் திணிப்பவர்களைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறினான் என்றால் அந்தச் சட்டங்களைப் பின்பற்றுவோர் பற்றி இப்படிக் கூறுகின்றான்


(நபியே)உம்மீது அருளப்பட்ட (இவ்வேதத்)தையும் உமக்கு முன்னர் அருளப்பட்டுள்ள (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே தாங்கள் விசுவாசிப்பதாகச் சாதிக்கின்ற சிலரை நீர் பார்க்கவில்லையா? நிராகரித்து விட வேண்டுமென்று கட்டளையிடப் பெற்ற ஒரு விஷமியை அவர்கள் (தங்களுக்குத்)தீர்ப்புக் கூறுவோனாக ஆக்கிக் கொள்ள விரும்புகின்றனர். (விஷமியாகிய)அந்த ஷைத்தானோ அவர்களை வெகுதூரமான வழிகேட்டில் செலுத்தவே விரும்புகின்றான் (அல்குர்ஆன் 4:60)


..உம் இறைவன் மீது சத்தியமாக அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யம் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிபடாதவரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள் (அல்குர்ஆன் 4: 65)

இதற்கு முன்னால் இறைவன் ய10தர்களையும் கிருஸ்தவர்களையும் இறைவனுக்கு இணை வைத்ததாகக் குற்றம் சுமத்துகின்றான். அதே போல் அவர்கள் உண்மையான இறைவனை நம்ப மறுத்தார்கள் என்றும் குற்றம் சுமத்துகின்றான். இவற்றிற்கெல்லாம் அவர்கள் செய்த தவறு. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான உரிமைகளைத் தங்கள் பாதிரிகளுக்கும் சந்நியாசிகளுக்கும் கொடுத்து விட்டார்கள். இதே போல் இன்று முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான உரிமைகள் பலவற்றை தங்களுள் சில பல சர்வாதிகாரிகளுக்கும் உயர்குலத்தில் பிறந்நவர்கள் என்பவர்களுக்கும் கொடுத்து விட்டார்கள். ய10தர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் பாதிரிகளிடமும் ரிப்பிய10ன்களிடமும் அல்லாஹ்வின் உரிமைகளை ஒப்படைத்தது இணைவைப்பு என்றால், அந்தப் பாதிரிகளும் ரிப்பிய10ன்களும் சட்டம் என சாற்றியவை முன்பு சரணடைந்தது இணை வைப்பு என்றால் இதையே வேறு வடிவங்களில் முஸ்லிம்கள் செய்தால் அதுவும் இணைவைப்பே. பாதிரிகளும் ரிப்பிய10ன்களும் வைத்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது பாதிரிகளையும் ரிப்பிய10ன்களையம் தொழுவதுதான் என்றால் இன்று முஸ்லிம்கள் யாருடைய சட்டங்களைக் கீழ்ப்படிகின்றார்களோ அவர்களைத் தொழுகின்றார்கள் என்பதே உண்மை. கிறிஸ்தவர்கள் நபி ஈஸா(அலை)அவர்களை தேவகுமாரர் என்றும் சில நேரங்களில் தேவன் இறைவன் என்றும் கூறியது ஏகத்துவம் (தௌஹீத்)இறைவன் ஒருவனே என்ற அடிப்படைக் கோட்பாட்டிற்கு எதிராக எடுத்து வைத்தப் போர்ப்பிரகடனம். யூதர்கள் தங்கள் மதகுருமார்கள் இயற்றிய சட்டங்களுக்கு தலைதாழ்த்தியது அல்லாஹ்வின் வாழ்க்கை நெறிக்கு எதிராக செய்யப்பட்ட போர்ப்பிரகடனம். இந்த இரண்டு செயல்களுமே அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற அடிப்படைக்கு எதிராகக் கிளர்ச்சிச் செய்வது தான். இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் பகிரங்கமாகத் தங்களை மதச்சார்பற்றவர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்கின்றார்கள். எங்களுக்கும் மார்க்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறுத்தெறிந்துப் பேசுகின்றார்கள். இன்னும் சில முஸ்லிம்கள் அல்லாஹ்வின் அழகிய நிறைவான வழிகாட்டுதலாம் இஸ்லாத்திற்கு மதிப்பும் மரியாதையும் தருகின்றார்கள் உதட்டளவில். இந்த வாய்ச்சொல் வல்லுநர்க்ள, தங்களது நிஜ வாழ்க்கையிலிருந்து இஸ்லாத்தை முழுமையாக வெளியேற்றி விட்டார்கள். இன்னும் பல முஸ்லிம்கள் அல்லாஹ் வகுத்து வழங்கிய இந்த நிறைவான வாழ்க்கை நெறியின் நுழைவாயிலைக் கூடத் தீண்டியதில்லை. இவர்கள் நாங்கள் கண்களுக்குப் புலப்படாதவற்றை நம்பத் தயாராக இல்லை என்றும் நாங்கள் எங்கள் வாழ்க்கையை அறிவியலின் அடிப்படையில் விஞ்ஞானத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்ள விரும்புகின்றோம் என்றும் பிதற்றுகின்றனர். விஞ்ஞானம் என்ற அறிவியலும் கண்ணுக்குப் புலப்படாதவற்றை நம்புவதும் முன்னுக்குப் பின் முரணானவையாம். கண்ணுக்கும் காதுக்கும் ஒவ்வாதவையாம். இவர்களின் இந்தப் பிதற்றல் வடிகட்டின முட்டாள்தனமே அல்லாமல் வேறல்ல. ஏனெனில் முட்டாள்தனத்தை முன்னே விட்டுப் பின்னே செல்பவர்கள் முதன் முதலில் இப்படித்தான் பிதற்றித் தங்கள் முத்திரையைப் பதித்துக்கொள்வார்கள். (திருக்குர்ஆனின் நிழலில் எனற் செய்யித் குதுப் அவர்களின் திருமறை விளக்கவுரையில் இது குறித்து விரிவான விளக்கம் இடம் பெற்றுள்ளது). முஸ்லிம்களில் இன்னும் சிலர் சட்டங்களை வகுத்து வழங்கும் அதிகாரத்தை சிலருடைய விருப்பங்களுக்கு விட்டுவிடுகின்றார்கள். அதாவது அல்லாஹ் அல்லாத சிலரிடம் விட்டு விடுகின்றார்கள். இந்தச் சிலர் தங்களுக்குத் தோன்றியவற்றையும் தங்கள் விருப்பங்களுக்கு உகந்தவற்றையும் சட்டங்களாக ஆக்கிவைத்துவிட்டு இது தான் ஷாPஅத் அல்லாஹ்வின் சட்டங்கள் எனக் கூறுகின்றனர். இந்தச் சட்டங்களை அந்த மக்களும் பின்பற்றுகின்றார்கள். இந்தச் சமுதாயங்கள் எல்லாம் அல்லாஹ் ஒருவனைத் தவிர இறைவன் இல்லை என்ற கொள்கையிலிருந்து மாறுபட்டவை. இவர்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே வழிப்பட்டவர்களுமல்ல அவனை மட்டுமே தொழுபவர்களுமல்ல. இவற்றையெல்லாம் விளக்கி விட்ட பிறகு இஸ்லாம் இவற்றோடு வைத்துக்கொள்ள விரும்பும் உறவை ஒரே வரியில் சொல்லிவிடலாம். இஸ்லாம் இத்தகைய சமுதாயங்கள் அனைத்தையும் இஸ்லாத்திற்கு மாற்றமானவையாகவும் சட்டத்திற்குப் புறம்பானவையாகவும் கருதுகின்றது. இந்தச் சமுதாயங்கள் எந்தப் பெயரோடு வாழுகின்றன எந்தப் பெயரைக் கொண்டு தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றன என்பனவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை இஸ்லாம். இந்தச் சமுதாயங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தவையல்ல என்ற அடிப்படையில் ஒரே இனத்தைச் சார்ந்தவையே. இந்தச் சமுதாயங்களின் வாழ்க்கை அல்லாஹ்வின் நிறைவான வழிகாட்டுதல்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டவை அல்ல. இதில் இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களுக்கும் வாழ்க்கை நெறிகளுக்கும் இணைவைத்த ஏனைய ஜாஹிலிய்ய அல்லது மௌட்டீக சமுதாயங்களைப் போன்றவையே. இந்த விளக்கங்களுக்குப் பிறகு நாம் ஓர் அடிப்படை வினாவுக்கு விடை காண வேண்டும் அந்த வினா: மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்திட வேண்டிய கொள்கை எது? மனித வாழ்க்கையை வழிநடத்துகின்ற கொள்கைகளாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் தாம் இருந்திட வேண்டுமா? அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் தாம் பின்பற்றப்பட வேண்டுமா? இஸ்லாம் இந்த வினாவுக்கு மிகவும் தெளிவாகப் பதில் தருகின்றது. மனித வாழ்க்கையை வழி நடத்திடும் கொள்கைகளாக அல்லாஹ்வின் வழி காட்டுதல்களே இருந்திட வேண்டும். இதில் தடங்கல்களோ தயக்கங்களோ தடுமாற்றங்களோ ஏற்படுமேயானால் இஸ்லாத்தின் முதல் அடிப்படை நம்பிக்கையின் முதல் தூண் மண்ணிலே வீழ்ந்தது என்று பொருள். இஸ்லாமிய நம்பிக்கையின் முதல் தூண் அல்லாஹ் ஒருவனே இறைவன் முஹம்மத் (ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதராவார்கள் என்பதாகும். இதற்குச் சாட்சியம் சொல்ல வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும். அல்லாஹ்வால் வழங்கப்பட்ட வாழ்க்கை வழிகாட்டுதல் வழி நமது வாழ்வை வடிவமைத்திட நாம் முஹம்மத் (ஸல்)அவர்களின் அழகிய முன் மாதிரியைக் கீழ்ப்படிந்திட வேண்டும். இதையே அல்லாஹ் இப்படிக் கட்டைளையிடுகின்றான்.

..ஆகவே (நம்முடைய)தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமொப்பி)எடுத்துக் கொள்ளுங்கள் அவர் எதனை உங்களுக்குத் தடுத்துக் கொண்டாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 59:7)


யாருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றிட வேண்டும் என்ற வினாவுக்கு அல்லாஹ்வுடைய வழிகாட்டுதலையே பின்பற்றிட வேண்டும் என நறுக்கென்று பதில் தரும் இஸ்லாம் மனிதர்களின் பதிலுக்கு ஒரு வினாவை வைக்கின்றது. அல்லாஹ் அதிகமாக அறிவானா? அல்லது மனிதர்கள் அதிகமாக அறிவார்களா? இந்த வினாவுக்குப் பதிலும் தருகின்றது அல்லாஹ்வே அதிகமாக அறிவான் அவன் உங்களுக்க அறியத் தந்தது மிகவும் குறைவே இங்கே நாம் ஓர் உண்மையை ஒத்துக்கொண்டாக வேண்டும். எந்த இறைவன் நம்மைப் படைத்தானோ எந்த இறைவன் நம்மைப் பாதுகாத்து உணவளித்து வருகின்றானோ எந்த இறைவனிடம் நாம் மீண்டும் போய்ச் சேர்ந்திடுவோமோ அந்த இறைவனே நம்மை ஆட்சி செய்ய வேண்டும். அந்த இறைவனையே நாம் அடிபணிய வேண்டும். அந்த இறைவனின் வழிகாட்டுதல் வழியே நாம் வாழ்ந்திட வேண்டும். இந்த உண்மைக்கு நம்மை உட்படுத்திய பின்னர் பிறிதோர் அறிவுத் தெளிவை நாம் பெற்றாக வேண்டும். அதாவது மனிதர்களால் உருவாக்கப்பட்ட வாழ்க்கை நெறிகளைப் பொறுத்தவரை அவை மனிதர்களின் பலவீனங்களால் பாதிக்கப்பட்டவை. அவை காலப்போக்கில் நமது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராமல் போய்விடும். வழக்கிழந்துவிடும். ஏனெனில் அவை நமது அறிவின் எல்லைகளுக்குட்பட்டவை. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதா? குறையுடைய மனிதனின் அறிவில் அகப்பட்டவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவற்றைப் பின்பற்றுவதா? இதில் அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதே அறிவுடைமை. அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் புதிரானவையோ சிக்கலானவையோ அல்ல. அவை தெளிவானவை, திட்டவட்டமானவை. அவை தெளிவாக முஹம்மத் (ஸல்)அவர்களால் வாழ்ந்து காட்டப்பட்டவை. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் விளக்கங்களை இறைவனின் திருத்தூதர்(ஸல்)அவர்களின் வாழ்வு வாக்கு அவர்கள் வழங்கிய தீர்ப்புகள் அவர்கள் இட்டக் கட்டளைகள் தந்த விளக்கங்கள் காட்டிய சைகைகள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். இதைத்தான் நாம் வழங்கிடும் இரண்டாவது சாட்சியமாகிய முஹம்மத்(ஸல்)அவர்கள் இறைவனின் திருத்தூதராவர்கள் என்பதில் அறிவுறுத்துகின்றோம். அல்லாஹ்வின் வழிகாட்டுததல் ஒரு விவகாரத்தில் இருந்திடும் போது அதில் நாம் கருத்துச் சொல்ல எதுவுமில்லை. அங்கே சூழ்நிலைக்கேற்ப புதுவிதி வகுக்கின்றோம் என நமது விருப்பங்களை உள்ளே புகுத்திடக்கூடாது. இன்னும் நம்மிடம் எழும் எல்லா விவகாரங்களையும் அல்லாஹ் அருளியதைக் கொண்டும் பெருமானார்(ஸல்)அவர்கள் வாழ்ந்து காட்டிதைக் கொண்டுமே தீர்த்திட வேண்டும். இறைவன் தன் அருள்மறையில் இதை இப்படிக் குறிப்பிடுகின்றான்.


(விசுவாசிகளே)உங்களுக்குள் யாதொரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால் அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய)தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங் கொண்டவர்களாயிருந்தால் (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஒப்புக் கொள்ளுங்கள்)இது தான் நன்iயாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும். (அல்குர்ஆன் 4:59)

இஜ்திஹாத் என்ற சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்வது என்பதன் வரையறைகள் தெளிவாக இருக்கின்றன. அந்த முடிவுகள் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் வகுத்தளித்த வரைமுறைகளுக்கு வெளியே சென்றிடக் கூடாது. அதே போல் அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் (ஸல்)அவர்களும் தங்கள் வழிகாட்டுதல்களின் வழி வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு எதிராகவும் இருந்திடக்கூடாது. சூழ்நிலைக்கேற்ப விதிகளை வகுக்கின்றோம் எனக்கூறிக் கொண்டு தங்கள் விருப்பங்களையும் வெறுப்புகளையம் சட்டமாக ஆக்கி அதை ஷாPஅத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் என் முழங்கிக் கொண்டிருக்கின்றனர் பலர். எல்லா நிலைகளிலேயும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே சொந்தம் அல்லாஹ்வும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுமே இ;ஙகே இயற்றப்படும் சட்டங்களின் ஆதாரம் அடிப்படை என்பது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டாக வேண்டும். புதியதாக ஏற்படும் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை எடுத்திடும் போது அல்லாஹ்வின் அறுதி வழிகாட்டுதலாம் திருக்குர்ஆன் அவனது இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்)அவர்களின் வாழ்வு வாக்கு ஆகிய அடிப்படை ஆதாரங்கள் எதை விரும்புகின்றன என்பதை அறிந்திட முனைந்திட வேண்டும். இந்த முயற்சி மிகவும் அக்கறையும் முனைப்பும் கொண்டதாக இருந்திட வேண்டும். இதில் இன்றைய காலகட்டங்களில் நாம் ஒரு விஷயத்தில் கவனமாக இருந்திட வேண்டும். இன்றைய நாள்களில் சிலர் தங்கள் அதிகாரங்களைச் செலுத்திட முன் வருகின்றார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் பெயரையும் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இது தான் ஐரொப்பாவில் இடம் பெற்றது. அங்கே சிலர் கிறிஸ்தவ ஆலயங்களின் பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்தில் தங்களை அமர்த்திக் கொண்டார்கள். அதை போன்றதொரு அமைப்போ முறையோ இஸ்லாத்தில் இல்லை. இப்போது என்னிடத்தில் இறைவன் கூறினான் என்று பேசுகின்ற முறை இஸ்லாத்தில் இல்லை. பெருமானார்(ஸல்)அவர்களின் காலத்திற்குப்பின்னால் யாரும் இறைவன் கூறினான் என்னிடம் என்று இங்கே கூறிட முடியாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் மார்க்கம் இறைவனின் வழிகாட்டுதல்கள் வாழ்ந்து காட்டுவதற்கே. இதனை சிலர் அடிக்கடி தவறாகப் பயன்படுத்தகின்றார்கள். நிச்சயமாக இந்த மார்க்கம் வாழ்ந்து காட்டுவதற்கே இதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் எத்தகையதொரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதற்கு? அந்த வாழ்க்கை இந்த மார்;க்கம் என்னென்ன கொள்கைகளுக்காக வாழுகின்றதோ அந்தந்த கொள்கைகளுக்காக அமைந்திட வேண்டும். இந்தக் கொள்கைகளைப் போல் வழிமுறைகளும் இங்கே முக்கியம். இஸ்லாம் வழங்கும் இந்த வாழ்க்கை நெறியும் இஸ்லாம் கடைப்பிடிக்கச் சொல்லும் வழிமுறைகளும் இயற்கையோடும் மனிதனின் இயல்புகளோடும் முற்றாக இயைந்து செல்பவை. அத்தோடு இஸ்லாம் காட்டும் வாழ்க்கை வழி மனிதனின் அனைத்துத் தேவைகளையும் அப்படியே நிறைவேற்றுவது. ஏனெனில் இஸ்லாம் என்ற இந்த உன்னதமான வாழ்க்கை நெறி மனிதனைப் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது. அந்த அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன். அந்த அல்லாஹ் மனிதனின் உள்ளும் புறமும் விளையும் வினைகளை நன்றாக அறிந்தவன். அவன் கேட்கின்றான்.

(யாவையும்)சிருஷ்டித்தவன் (இருதயங்களில் உள்ளவைகளை)அறியமாட்டானா? அவனோ உட்கிருபையுடையோனாகவும் (யாவையும் வெகு)நுட்பமாக அறியக் கூடியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 67:14)


மனிதர்கள் தங்கள் விருப்பங்கள் போல் வாழ்ந்து விட்டு இது இஸ்லாம் காட்டிய வாழ்க்கை வழிதான் என வளைத்தும் திரித்தும் விளக்கங்களை கூறுகின்றார்கள். இதையெல்லாம் நியாயப்படுத்துவது இஸ்லாத்தின் வேலையல்ல. இஸ்லாம் ஓர் உரைகல். இஸ்லாம் வழங்கும் அடிப்படைகளையும் நெறிமுறைகளையும் வைத்துக் கொண்டு யாருடைய வாழ்க்கை இஸ்லாமிய முறைப்படி அமைந்திருக்கின்றது யாருடைய வாழ்க்கை இஸ்லாமிய முறைப்படி அமையவில்லை என்பதை வேண்டுமானால் வரையறுக்கலாம். அல்லாமல் இஸ்லாத்தை வளைத்து சிலர் வாழும் வாழ்க்கையை நியாயப்படுத்திட முடியாது. இது தான் இறைவனின் வழிகாட்டுதல்கள் வாழ்ந்து காட்டுவதற்கே என்பதன் இயல்பான பொருள். மனிதனின் நல்வாழ்வை மனதில் கொண்டே அல்லாஹ் ஷாPஅத் சட்டங்களை அமைத்துத் தந்திருக்கின்றான். அவற்றின் அடிப்படையில் மிகவும் அழகிய முறையில் வாழ்ந்து காட்டினார்கள் முஹம்மத் (ஸல்)அவர்கள். ஆகவே அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களாகிய் ஷாPஅத்தின் அடிப்படையில் வாழ்ந்திடும் போதே மனிதனின் வாழ்க்கை நிம்மதியும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும். இதைவிடுத்து எவரேனும் ஷாPஅத்திற்கு எதிராக வாழ்வதிலே தான் வாழ்க்கையின் பயன் கிடைக்கும் எனக் கருதினால் அவன் தன் சிந்தனையில் தடுமாறி விட்டான் என்றே பொருள். அத்தோடு இஸ்லாம் என்ற விசாலமான வளாகத்திற்கு வெளியே போய்விட்டான் என்று பொருள். இறைவன் கூறுகின்றான்.


அவர்கள் (தங்கள்)மனோ இச்சையையம் (வீண்)சந்தேகத்தையும் பின்பற்றுகின்றார்களேயன்றி வேறன்று. நிச்சயமாக அவர்களின் இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கின்றது. எனினும் அவர்கள் அதைப் பின்பற்றுவதில்லை. மனிதன் விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடுமா? ஏனென்றால் இம்மையும் மறுமையும் அல்லாஹ்வுக்குரியனவே (அவன் விரும்பியவர்களுக்கே அவற்றின் பாக்கியத்தை அளிப்பான்) (அல்குர்ஆன் 53:23 – 25)

சிந்தனையில் தடுமாறி அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக வாழ்வதிலே தான் பலனும் முன்னேற்றமும் இருக்கின்றன எனக் கருதும் இவர்கள் நிராகரிப்பாளர்களே. இப்படிக் கருதுபவர்களைக் கணமேனும் மார்க்கத்தன் மேதாவிகள் என ஒத்துக்கொள்ளக்கூடாது.

தொடர்ந்து வரும்...

No comments:

Post a Comment