Wednesday, May 6, 2009

என்ன நடக்கிறது? - 22 ஏப்ரல் 2009 (ஓர் செய்திப்பார்வை)

புஷ்ஷின் கொள்கைகளில் ஒன்றே ‘சித்திரவதை’

புஷ் நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு அல் - காயிதா சந்தேக நபர்கள் மற்றும் கைதிகளை சித்தரவதை செய்து விசாரணை செய்யும் வழிமுறையுடன் நேரடி தொடர்பிருப்பதை புதன் கிழமை வெளியிடப்பட்ட செனட் விசாரணை அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது. 232 பக்கங்களைக்கொண்ட சித்தரவதை தொடர்பான இந்த அறிக்கை, முன்னாள் பாதுகாப்புச்செயளர், பொல் வோல்ப்விட்ஸ் (Poul Wolfowitz) “சிலருடைய தவறான நடவடிக்கை” என்று முன்பு வெளியிட்ட கூற்றை பொய்ப்படுத்தியுள்ளது. அவ்வறிக்கை “கைதிகளின் சித்திரவதையை வெறுமனவே, சிலர் தன்னிச்சையாக தவறாக நடந்து கொண்ட ஒரு விடயமாக அர்த்தப்படுத்த முடியாது.” எனத்தெரிவித்துள்ளது. மேலும் அவ்வறிக்கையில் உண்மையில் ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் சட்ட ரீதியற்ற கொடூரமான சித்திரவதை உபாயங்களை எப்படி உபயோகிப்பது என்பதை அறிந்து கொண்டதோடு அவற்றுக்கு சட்ட ரீதியான அந்தஸ்த்தை கொடுப்பதற்கு சட்டங்களை மாற்றியதுடன், அவற்றை கைதிகளுக்கு எதிராக உபயோகிப்பதை அங்கீகரித்தனர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. மேலும் 2002ம் ஆண்டின் முற்பகுதியில் CIA மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்றுவிப்பாளர்கள் மூலம் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யும் உபாயங்கள் பயிற்றுவிக்கப்பட்டதுடன் இவ்வுபாயங்களின் மூலம் பெறப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்தும் எச்சரிக்கப்பட்டனர் எனவும் இவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

உலகளாவிய இழப்பு 4 டிரிலியன் டாலர்கள் - IMF தெரிவிப்பு

தற்போழுது ஏற்பட்டுள்ள உலக பொருளாதார வீழ்ச்சி கடந்த 60 வருடங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாக கருதப்படுகிறது. அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய பொருளாதார நிறுவனங்கள் 4 டிரிலியன் டாலர்களை இதன் காரணமாக இழந்ததாக IMF (சர்வதேச நாணய நிதியம்) செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அமெரிக்க பொருளாதார நிறுவனங்கள் 2.7 டிரிலியன் டாலர்களை இழக்கும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும், இது அக்டோபரில் எதிர்பார்க்கப்பட்ட 1.4 டிரிலியன் டாலர்களை விட இரு மடங்காகும் எனவும் IMF இன் அண்மைய உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை சம்பந்தமான அறிக்கை (Global financial stability report) குறிப்பிட்டுள்ளது. வாஷிங்டனில் இந்த வாரம் இடம்பெற்ற IMF கூட்டத்திற்கு முன்னர் வெளிவந்த மந்தநிலை அறிக்கை (Gloomy report) “ இந்த பொருளாதார நெருக்கடி மிகவும் ஆழமானதுடன், நீடித்து நிலைக்ககூடியதுமாகும்.” என எதிர்வு கூறியதுடன் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கான பண முதலீடு அனேகமாக முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது. IMF இன் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பண முதலீட்டுக்கு வளர்ந்த நாடுகளின் வங்கித்துறை சீரான நிலைக்கு வந்தாலும்கூட மேற்படி நிலைமையை சீர்திருத்த சில காலம் எடுக்கலாம் எனக் கூறியுள்ளார். நிதி நிறுவனங்கள் பணத்தை இழப்பதன் காரணமாக அவை அவற்றின் சொத்துக்களை விற்று பணம் சேர்க்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் IMF இன் அறிக்கை கூறுகிறது.

சோமாலியாவில் இஸ்லாமியச் சட்டம்!

சோமாலிய பாராளுமன்றம், இஸ்லாமிய சட்டத்தை ஏகமனதாக அங்கீகரித்துள்ளதானது சோமாலிய அரசாங்கத்திற்கு எதிராக போராடும் இஸ்லாமிய ஆயுததாரிகளின் ஆதரவை குறைத்து அரசாங்கத்தின் ஆதரவை மக்கள் மத்தியில் அதிகரிக்குமென அச்சட்டத்தை கொண்டு வந்தவர்கள் கூறுகின்றனர். கடந்த மாதம் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் தனது சட்ட மூலாதாரமாக குர்ஆனை, அதாவது ஷரீஆவை அடிப்படையாகக்கொண்டது எனத்தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற துணை சபாநாயகர் Osman Elmi Boqore வாக்கெடுப்பின் கூறுகையில் “அல்லாஹ் மிகப்பெரியவன்!, அல்லாஹ் மிகப்பெரியவன்! நாங்கள் இச்சட்டத்தை இன்று நடைமுறைப்படுத்தியதில் வெகுவாக மகிழ்ச்சியடைகின்றோம்” என்றார். நீதி அமைச்சர் Sheik Abdirahman Mohamoud Farah “ கடும்போக்குவாத எதிர்த்தரப்பினர் அரசாங்கத்தை தாக்குவதற்கு இனியும் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொள்ள முடியாது ” என சட்ட வகுப்பாளர்களைப்பார்த்து கூறிய கருத்து பகுதியளவில் ஷரீஆவை அவர்கள் அமுல்படுத்த முன்வந்தமைக்கு பின்னாலுள்ள நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.


பாகிஸ்தானிய இராணுவத்தை பயிற்றுவிப்பதில் அமெரிக்கா மிகவும் கரிசனை காட்டுகிறது

இஸ்லாமாபாத் தாலிபான்கள் மற்றும் ஏனைய ஆயுததாரிகளின் அச்சுறுத்தலுடன் போராடுவதற்கு ஓபாமா நிர்வாகம், பாகிஸ்தானுடன் விரிவான இராணுவ உடன்படிக்கையினை ஏற்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பென்டகன் அதிகாரியொருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். அமெரிக்க கொள்கைப்பாதுகாப்பு செயலாளர்( U.S. under secretary of defense for policy) Michele Flournoy வாஷிங்டனானது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் கிளர்ச்சியாளர்களை எதிர்கொண்டதில் அடைந்த விஷேட தேர்ச்சியை பாகிஸ்தான் இராணுவத்துக்கு பயிற்சியாக அளிப்பதுடன் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் உதவிகளை அளிக்கவுள்ளதாகவும் கூறினார். வாசிங்டனை தலைமையகமாகக்கொண்டியங்கும் Center for Strategic and International Studies இனால் ஒழுங்கு செய்யப்பட்ட ஓர் கூட்டத்தில் பேசும் போது “ நாங்கள் கணிசமான அளவு இராணுவ உதவிகளையை அதிகரிப்பதோடு அதன் வடிவத்தை பரவலாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். “அமெரிக்க அதிகாரிகள் கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ளும் பயிற்சியை பாக்கிஸ்தான் இராணுவத்திற்கு அளிக்க விரும்பினாலும் கூட பாகிஸ்தான் இராணுவ உயரதிகாரிகள் தமது பரம எதிரியாகக்கருதும் இந்தியாவிற்கு எதிரான மரபு ரீதியான இராணுவ கட்டமைப்பை மாற்றிக்கொள்வதற்கு விரும்பாதிருப்பதால் அது சாத்தியப்படவில்லை” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம் பொலிவூட் நடிகர்களுக்கு கூட வீடுகளை வாடகைக்குவிட இந்தியா தடைகளை ஏற்படுத்துகிறது

கடந்த மும்பாய் தாக்குதல்களை தொடர்ந்து இந்தியாவில் முஸ்லிம்கள் பாரபட்சத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிவூட் முஸ்லிம் நடிகர்கள் கூட ஹிந்துக்கள் வாழும் பிரதேசங்களில் வீடுகள் வாடகைக்கு எடுப்பதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர் என முன்னணி அமெரிக்க பத்திரிகையொன்று அறிவித்துள்ளது. மும்பாயிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் நிருபர் முன்னணி முஸ்லிம் பிரமுகர்களை நேர்காணல் செய்த போது அவர்கள் கூட வாடகைக்கு வீடு எடுப்பதில் சிரமப்பட்டதாக தெரிவிக்கின்றார்கள் என்கிறார். இந்நிலை இந்தியாவின் மதசார்பற்ற ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பல்வேறுபட்ட மதப்பிரிவினர்களின் தாயகமான இந்தியாவின் ஒரு பில்லியன் சனத்தொகையில் 200 மில்லியன் பேர் முஸ்லிம்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment