Friday, May 29, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 7

அனைத்தையும் தழுவியதோர் இயற்கை வாழ்க்கை நெறி

இஸ்லாம் தனது நம்பிக்கைகளையும் அந்த நம்பிக்கையின் வழியமைந்த வாழ்க்கையையும் ஓர் அடிப்படையின் கீழே தான் அமைத்திருக்கின்றது. அது இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதே. அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற இந்த வாழ்க்கை நெறியின் நுணுக்கமான விளக்கம் பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் தெளிந்து நிறைந்து நிற்கின்றது. இஸ்லாம் கூறும் உண்மைகளின் அடிப்படையில் இந்த அகிலமெல்லாம் படைத்தவன் அந்த அல்லாஹ் தான். அல்லாஹ் விரும்பிய போதே இந்த உலகம் உருவானது. இந்த உலகை உருவாக்கிய பின்னர் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த பின்னால் அவன் சில விதிகளை வகுத்துத்தந்தான். இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவை அனைத்தும் அல்லாஹ் வகுத்துத் தந்த இந்த விதிகளை அணுவும் பிரளாமல் அப்படியே பின்பற்றுகின்றன. அந்த அல்லாஹ் வகுத்துத் தந்த விதிகளை இந்த அகிலத்தில் இருப்பவை அனைத்தும் அப்படியே அடியொற்றி இயங்குவதால் ஓர் அசாதரணமான ஒழுங்குமுறை செயலில் இருக்கின்றது. அருள்மறையாம் திருமறை கூறுகின்றது.
நான் யாதொரு பொருளை (உண்டு பண்ண)க் கருதினால் அதற்காக நாம் கூறுவதெல்லாம் ஆகுக என்பது தான் உடனேயே அது ஆகிவிடுகின்றது. (அல்குர்ஆன் 16:40)

..அவனே யாவையும் சிருஷ்டித்து அவைகளுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன் (அல்குர்ஆன் 25:2)
இந்த அகிலத்தின் சீரான செயல்பாட்டின் பின் ஓர் இறைவிருப்பம் இயங்கிக் கொண்டிருக்கின்றது ஓர் அசாதாரணமான ஆற்றல் அதை அசைய வைத்துக் கொண்டிருக்கின்றது. ஓர் விதி அதை நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால் இந்தப் பிரபஞ்சம் இயக்கத்தில் எந்த முரண்பாடும் இல்லை. இந்தப்பிரபஞ்சத்தில் சுழன்று கொண்டிருப்பவை மோதிக் கொள்ளவில்லை. அது போல் அவற்றின் இயக்கத்தில் எந்தக் குளறுபடியுமில்லை. இவற்றின் இயக்கம் திடீரென நின்று விடுவதில்லை இறைவன் விரும்பினாலன்றி, இவற்றின் இயக்கம் இறைவன் விரும்புகின்றவரை தொடரும். இந்த முழு பிரபஞ்சமும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டே இயங்குகிறது. இறைவனின் விருப்பத்திற்கு எதிராக இவற்றால் இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவற்றால் செய்ல்படி இயலுவதில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவை அல்லாஹ்வின் விரு;பபத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதால் தான் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தில் எந்த முரண்பாடுகளுமில்லை. எந்த மோதலுமில்லை. அல்லாஹ் விரும்பினாலன்றி எந்த இடைய10யும் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தில் தலையிட முடியாது.
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் வானங்களையும் ப10மியையும் ஆறு நாள்களில் படைத்து அர்ஷின் மீது தன் ஆட்சியை நிலைநாட்டினான். அவனே இரவால் பகலை மூடுகின்றான். (பகலால் இரவை மூடுகின்றான்)அது தீவிரமாகவே அதனைப் பின்தொடருகின்றது. சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களு; அவன் கட்டளைக்கு உட்பட்டிருக்கின்றன. படைப்பும் (படைத்தலும்)அதன் ஆட்சியும் அவனுக்குடையதல்லவா? அகில உலகங்களையும் படைத்துப் போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க மேலானவன் (அல்குர்ஆன் 7:54)

மனிதன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் மனிதனின் இயல்புகளைக் கட்டுப்படுத்தும் விதிகளுக்கும் இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் ஏனையவற்றைக் கட்டுப்படுத்தும் விதிகளுக்கும் இடையே எந்த வேறுபாடுமில்லை. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவனும் மனிதனைப் படைத்தவனும் இறைவன் தான். மனிதனின் உடல் மண்ணிலுள்ள பொருட்களால் ஆனது. ஆனால் அல்லாஹ் மனிதனுக்குச் சில பண்புகளைக் கொடுத்திருக்கின்றான். இந்தப் பண்புகள் தாம் அவனை உயர்ந்தவனாகவும் சிறந்தவனாகவும் ஆக்கிவிடுகின்றது. மனிதனின் கட்டுப்பாட்டிற்கு உட்படாத செயல்கள் அனைத்தும் இறைவனின் நியதிபடி செயல்படுகின்றன. இன்னும் சொன்னால் இறைவனின் விருப்பப்படியே மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத எல்லாச் செயல்களும் நடைபெறுகின்றன. மனிதன் இறைவன் வகுத்து வழங்கியுள்ள விதிகளின்படியே உலகில் பிறக்கின்றான். அவன் எத்தனை நாள் எத்தனை நிமிடம் தாயின் கருப்பையில் இருந்திட வேண்டும் என்பது முதல் அனைத்தும் அல்லாஹ் வகுத்து வழங்கியுள்ள முறைமையின் படியே நடக்கின்றன. மனிதன் இறைவனின் காற்றையே சுவாசிக்கின்றான். எவ்வளவு காற்றை சுவாசிக்க வேண்டும் என நியமித்துள்ளானோ அவ்வளவு காற்றையே சுவாசிக்கின்றான். அதையும் இறைவன் எப்படிச் சுவாசிக்க வேண்டும் என விதி வகுத்துள்ளானோ அப்படியே மனிதன் சுவாசிக்கின்றான். மனிதனால் உணர்வுபெற முடிகின்றது. அவனால் இன்பத்தையும் துன்பத்தையும் உணர முடிகின்றது. இவற்றில் அவனுக்கும் ஏனைய படைப்பினங்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை. அவனால் வேதனைகளை உணர முடிகின்றது. பசி அவனுக்கு அவன் சொல்லாமலேயே வருகின்றது. தாகம் அவனைத் தண்ணீர் அருந்தத் தூண்டுகின்றது. இப்படி எத்தனையோ செயல்களில் அவன் அல்லாஹ்வின் சட்டங்களைப் பின்பற்றி வாழுகின்றான். இவற்றில் அவன் தன் விருப்பப்படி செயல்படலாம் என்றொன்று இல்லை. இவற்றில் அவன் கண்டிப்பாக ஏனைய உயிரினங்களைப் போல் இறைவன் வகுத்த விதிகளின்படி செயல்படுகின்றான். இப்படி மனிதனின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட செயல்கள் எப்படி நடந்திட வேண்டும் என எந்த இறைவன் விதிவகுத்துத் தந்தானோ அந்த இறைவனே மனிதனின் கட்டுப்பாட்டிற்குள்ளாலுள்ள செயல்களுக்கும் விதிகளை வகுத்துத் தந்துள்ளான். அதுவே ஷாPஅத் என்ற அல்லாஹ்வின் சட்டங்களாகும். இந்த ஷாPஅத் சட்டங்களை மனிதன் தன் கட்டுப்பாட்டிற்குட்பட்ட செயல்களிலும் பின்பற்றினால், அவனது இயற்கையோடு ஏற்புடைய சட்டங்களையே பின்பற்றுகின்றான். இதனால் அவன் தன் சொந்த இயல்போடு ஒத்துப்போகின்ற ஒரு வாழ்க்கையையே வாழுகின்றான். இந்த அடிப்படையில் மனிதனைக் கட்டுப்படுத்தும் ஷாPஅத் சட்டங்களம் இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களில் ஒரு பகுதியே ஏனெனில் மனிதன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே. இறைவனின் ஒவ்வொரு சொல்லும் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் விதியாகவே நின்று செயல்படுகின்றது. இறைவனின் சொல் என்பது சில நேரங்களில் நாம் நிறைவேற்றி வாழ்ந்திட வேண்டிய கட்டளைகளாக வந்திருக்கின்றன. சில நேரங்களில் நாம் ஒதுங்கியும் விலகியும் வாழ்ந்திட வேண்டிய விலக்கல்களாக வந்திருக்கின்றன. சில நேரங்களில் எச்சரிக்கைகளாக வந்திருக்கின்றன. சில நேரங்களில் அவை ஒரு விதி சில நேரங்களில் ஒரு வழி காட்டுதல். இப்படி பலவாறாகவும் வந்த இறைவனின் சொல் ஒவ்வொன்றும் இயற்கையின் விதி இவற்றைக் கொண்டு தான் இந்த உலகின் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவும் இயக்கமும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ் வழங்கிய ஷாPஅத் சட்டங்கள் மனித வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தி இயற்கையோடு இயைந்து செல்லச் செய்கின்றன. மனிதன் தன் இயல்போடு ஒத்ததோர் வாழ்;க்கையை வாழ்ந்திடவும் இயற்கையின் இதர விதிகளோடு ஒத்ததோர் வாழ்க்கையை வாழ்ந்திடவும் ஷாPஅத் சட்டங்களைப் பின்பற்றுவதைத் தவிர வேறு மாற்று வழிகள் எதுவுமில்லை. தன் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட விஷய்ஙகளிலும் அவன் ஷாPஅத் சட்டங்களைப் பின்பற்றினால் மட்டுமே அவன் நிம்மதியும் அமைதியும் நிறைந்ததொரு வாழ்க்கையை வாழ்ந்திட இயலும். இந்தப் பிரபஞ்சத்;தை இறைவனின் அற்புதமான விதிகள் இயக்கிக் கொண்டிருக்கின்றன. இவை துல்லியமாகவும் தெளிவாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தச்சட்டங்களை இந்த விதிகளை மனிதன் முழுமையாகப் புரிந்துகொள்வது இயலாத ஒன்றாகும். இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் பலவிதிகளைப் பார்த்து ஆச்சர்யப்படுவதைத் தவிர அவனால் வேறு எதுவும் செய்ய முடிவதில்லை. இன்னும் சொல்வதானால் மனிதன், தன்னையே இயக்கிக் கொண்டிருக்கும் விதிகளில் பலவற்றை இன்னமும் புரிந்துக் கொள்ளவில்லை. மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத (அனிச்சை செயல்கள்)செயல்களைக் கட்டுப்படுத்தும் விதிகளை அவன் புரிந்துகொள்ள இயலவில்லை என்பது மட்டுமல்ல அவற்றை விட்டு மயிரிழை அளவுகூட அவனால் விலகி நின்று செயல்படவும் முடிவதில்லை.

இதனால்தான் இந்த மனிதனால் தன்னை வழி நடத்திடும் கொள்கைகளையும் விதிகளையும் வகுத்திட இயலாது எனக்கூறுகின்றோம். அப்படி அவன் சில விதிகளைத் தான்தோன்றித்தனமாக யாத்திடுவானேயானால் அவை அவனுடைய இயல்போடு இடிக்கும். முன்னுக்குப்பின் முரண்பட்டு நிற்கும். மனிதனால் ஒருபோதும் அவனது உலகியல் தேவைகளுக்கும் (பௌதீக தேவைகளுக்கும்)ஆன்மீகத் தேவைகளுக்கும் ஒழுக்க மேம்பாடுகளுக்கும் தேவையான நிறைவான சட்டங்களை வகுத்திட இயலாது. அவனது இத்தனை தேவைகளையும் நிறைவேற்றிட நிறைவான விதிகளை இயற்றிட அவனைப்படைத்த அனைத்தும் அறிந்த இறைவனால் மட்டுமே முடியும். இந்த அகிலத்தையும் மனிதன் உட்பட அதிலிருப்பவை அனைத்தையும் படைத்திட்ட இறைவனால் மட்டுமே இயற்கையோடு மோதாத முரண்படாத விதிகளை வகுத்து வழங்கிட இயலும். அந்த இறைவன் தான் இந்த உலகிலுள்ளவற்றையும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளவற்றையும் மனிதனின் வாழ்வையும் கட்டுப்படுத்தி ஆட்டிப்படைத்து வருகின்றான். இவை அனைத்தும் அவன் விருப்பப்படியே நடக்கின்றன. ஆக ஷாPஅத் என்ற இறைவனின் சட்டங்களைக் கீழ்ப்படிந்து வாழ்வது எல்லா நிலைகளிலேயும் அவசியமும் பயன்பல பயப்பதாகவும் இருக்கிறது. இஸ்லாமிய நம்பிக்கைகளும் போதனைகளும் இதையே வலியுறுத்துகின்றன. ஷாPஅத் என்ற இந்தச் சட்டங்களை மட்டும் எல்லா நிலைகளிலேயும் பின்பற்றி வாழும் சமுதாயமே இஸ்லாமிய சமுதாயம் எனப்படும். இந்த ஷாPஅத் சட்டங்களை இறைவனின் சட்டங்களைப் பின்பற்றுவது என்பதன் நுணுக்கமான விளக்கங்களை பெருமானார்(ஸல்)அவர்களின் விளக்கமான வாழ்க்கையிலிருந்து விளங்கிடலாம். இந்த ஷாPஅத் சட்டங்களைப் பின்பற்றி இயற்கையோடு இயைந்து வாழ்ந்திடும் போது மட்டுமே மனிதன் முரண்படாத நிம்மதியானதோர் வாழ்க்கையை வாழ்ந்திட இயலும். மனிதன் இந்த இறைவனின் ஷாPஅத் சட்டங்களின் வழி வாழ்ந்திடும் போது மட்டுமே உள்ளும் புறமும் அலைமோதாத ஓர் வாழ்வைப் பெற முடியும். ஒரு மனிதன் தனது இயல்புகளோடும் இயற்கையின் நியதிகளோடும் ஒத்துப் போகின்ற ஓர் வாழ்க்கையை வாழ்ந்திடும் போது அவன் ஏனைய மனிதர்களிடமிருந்தும் ஏற்புடையதோர் உறவு வெளிப்படுவதைக் காண்கின்றான். இப்படி மனிதர்கள் அத்தனை பேரும் அவர்களைப் படைத்த அல்லாஹ்வின் ஷாPஅத்தைப் பின்பற்றி வாழ்ந்திடும் போது உலகில் மனிதர்களுக்கிடையே நிலையானதோர் அமைதி நிலவுகின்றது. இந்த அமைதி இயற்கையோடு முழுக்க முழுக்க ஒத்துப்போகும் நிலையானதோர் அமைதி நிம்மதி. இ;ப்படி மனித இனம் நிலையான நிம்மதியை அடைகின்றது. மனிதன் இயற்கையோடும் தனது இயல்போடும் மோதாமல் இயைந்து போகும் ஓர் வாழ்வை வாழும் போது அவனால் இயற்கையின் விதிகளை நெறிகளைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இயற்கையில் அமிழ்ந்து கிடக்கும் ஆயிரமாயிரம் விதிகளை அற்புதங்களைக் கண்டு அவன் அகம் மகிழ்கின்றான்.

புறவாழ்வால் அவற்றைத் தொட்டுப் பார்க்கின்றான். புதிர்களை அவிழ்க்கும் பொக்கிஷமாக அவன் தன்னைக் கண்டு ஆனந்தம் கொள்கின்றான். இந்த இறைவழியில் அவன் முன்னேற முன்னேற அவன் இயற்கையின் விந்தைகள் தன் சிந்தைக்குத் தெளிவதை உணர்கின்றான். இந்தப்புதிய அறிவை புதிய தெளிவை அவன் மானும் வாழ வழங்குகின்றான் அல்லாஹ்வின் சட்டங்களின் வழியில். இயற்கையோடு இணைந்து போகும் இந்த வாழ்க்கை நெறியை ஷாPஅத்தை மனிதன் ஏற்றுக் கொண்டு வாழவில்லையென்றால் தனது வாழ்க்கை இயற்கையோடு அடிக்கடி மோதுவதைக் காண்கின்றான். அவனுடைய மிருக இச்சைகள் இந்த இறை நெறியிலிருந்து அவனை மெல்ல மெல்ல தடம் பிறழச் செய்வதைக் காண்கின்றான். இதையே இறைவன் இப்படிக் குறிப்பிடுகின்றான்.

சத்தியம் அவர்களுடைய (தப்பான)விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் ப10மியும் அவற்றிலுள்ளவைகளும் அழிந்தேவிடும். ஆகவே அவர்களுக்கு நல்லுபதேசத்தையே அனுப்பினோம். எனினும் அவர்களோ தங்களிடம் வந்த அந்த நல்லுபதேசத்தையே புறக்கணித்துவிட்டனர் (அல்குர்ஆன் 23:71)


இதிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. உண்மை என்பது ஒன்றே ஒன்று தான். அதுதான் இஸ்லாம் என்ற இந்த இயற்கை மார்க்கத்தின் அடிப்படை. இந்த வானமும் ப10மியும் இந்த அடிப்படையில்; தான் நின்று கொண்டிருக்கின்றன. இந்த உலகின் விவகாரங்களும் இறப்பிற்கு பி;ன்னால் வரும் வாழ்க்கையும் இந்த அடிப்படையை அடியொற்றியே நிற்கின்றன. இந்த அடிப்படையின் அடிப்படையில் தான் மனிதன் அந்த இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் முன் பதில் சொல்லிட வேண்டியவனாக இருக்கின்றான். இந்த அடிப்படையிலிருந்து பிறழ்ந்து வாழ்ந்ததற்காகத்தான் மனிதன் தண்டிக்கப்படுகின்றான். இந்த அடிப்படையைக் கொண்டு தான் மனிதன் அந்த இறுதித் தீர்ப்பு நாளில கணிக்கவும் கணக்குக் கேட்கவும் படுகின்றான். இந்த அடிப்படை அல்லாஹ்வின் சட்டங்கள் தாம் இந்த அகிலம் அனைத்தையும் ஆண்டு வருகின்றது. இந்த அல்லாஹ்வின் சட்டங்களையே ஷாPஅத்தை மனிதன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இயற்கையின் தேவை. இறைவன் கூறுகின்றான் : உங்களுக்கு(ம் போதுமான) நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக நாம் உங்களுக்கு அருளி இருக்கின்றோம் (இனியாவது)நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? அக்கிரமக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து நாசமாக்கி விட்டோம். அவர்களுக்குப் பின்னர் (அவ்விடத்தில்)வேறு ஜனங்களை உற்பத்தி செய்தோம். அவர்களும் வேதனையின் அரவததைக் கேட்ட மாத்திரத்தில் (தங்கள் ஊரைவிட்டு)ஓட ஆரம்பித்தார்கள். (அது சமயம் அவர்களை நோக்கி) நீங்கள் ஓடாதீர்;கள் நீங்கள் மிக்க ஆடம்பரமாக (ச் சுக போகங்களை அனுபவித்துக் கொண்டு)வசித்திருந்த உங்கள் வீடுகளுக்கே நீங்கள் திரும்புங்கள் அங்கு நீங்கள் நன்கு உபசரிக்கப்படலாம் (என்று கூறினோம்). அதற்கவர்கள் எங்களுடைய கேடே நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறி (ப் பாவிகளாகி)விட்டோம் என்று கூக்குரலிட்டார்கள். அவர்களுடைய அந்தக் கூக்குரல் அறுவடை செய்யப்பட்ட வயலைப்போல (அவர்களை அழித்து)அசைவின்றி அமர்த்தும் வரை நீடித்திருந்தது. வானங்களையும் ப10மியையும் அவற்றின் மத்தியிலுள்ளவைகளையம் (வீண்)விளையாட்டுக்காக நாம் சிருஷ்டிக்கவில்லை. நாம் (வீண்)விளையாட்டுக்காரனாக இருந்து (விளையாட வேண்டும் என்று)நாம் கருதியுமிருந்தால் நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்துக்கொண்டிருப்போம். அவ்வாறன்று மெய்யாகவே பொய்யின் மீது எறிகின்றோம். அது (அதன் தலையை)உடைத்து விடுகின்றது. பின்னர் அது அழிந்தும் விடுகின்றது. (இவ்வாறு இறைவனைப் பற்றி அவனுக்கு மனைவி உண்டென்றும் சந்ததி உண்டென்றும் )நீங்கள் கூறுவதன் காரணமாக உங்களுக்குக் கேடுதான். வானங்களிலும் ப10மியிலும் உள்ள யாவும் அவனுக்குரியவையே அவனுடைய சந்ததியில் இருக்கக்கூடிய (முகர்ரபான மலக்குகளாயினும் சரி அவர்களும் அவனுடைய அடியார்களே அ)வர்கள் அவனை வணங்காது பெருமையடிக்கவோ சோர்வுறவோ மாட்டார்கள். அவர்கள் இரவு பகல் இடைவிடாது (எந்நேரமும்)அவனைத் துதிசெய்து போற்றிக் கொண்டேயிருக்கின்றனர். (அல்குர்ஆன் 21: 10-20) இந்த உலகம் அல்லாஹ்வால் படைக்கப்பட்டது. அவனுடைய விருப்பம் அவன் அமைத்துத்தந்த நியதி, சட்டங்கள் ஆகியவற்றிற்கு உட்பட்டே இயங்குகின்றது. இந்த உண்மைக்கு உட்பட்டே இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கின்றது. மனிதனின் இயல்பும் இயற்கையும் இதற்கு உட்பட்டதே. மனித இயல்பும் இயற்கையும் இந்த உலகம் அந்த ஏக இறைவனின் விதிகளுக்கு உட்பட்டே செயல்படுகின்றது என்ற உண்மையை விளம்பிக் கொண்டே இருக்கின்றன. இதனால் தான் இந்த உலகின் இயக்கத்தில் எந்தக் குளறுபடியும் இல்லை. நிச்சயமாக இந்தப் பிரபஞ்சத்திலிருப்பவை எந்தத் திட்டமுமில்லாமல், எந்த நெறியுமில்லாமல் இயங்கிக் கொண்டோ சுழன்றுகொண்டோ இருக்கவில்லை. ஏதோ இயங்க வேண்டுமே இயங்குவோம் என்றும் அவை இயங்கிக் கொண்டிருக்கவில்லை. அவற்றிற்கென ஒரு திட்டமும் சட்டமும் இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவை விளையாட்டாகப் படைக்கபட்டவையுமில்லை. அவற்றோடு யாரும் விளையாடிக் கொண்டும் இருக்கவில்லை. அவை அவற்றிற்கென விதிக்கப்பட்ட வரையறைக்குள் தரப்பட்ட தெளிவான நீண்டதிட்டத்தின் கீழ் முறையாகவும் சீராகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் வரையறைகளை வகுத்துத்தந்த இறைவன் தான் இவற்றிற்குத் திட்டங்களையும் தெளிவான பாதைகளையும் வகுத்து வழங்கிய இறைவன் தான் மனிதனுக்கும் வரையறைகளையும் விதிகளையும் அருளி இருக்கின்றான். இதில் குழப்பங்களும் கொந்தளிப்புகளும் எங்கே ஆரமபிக்கின்றன என்றால் மனிதன் இந்த இறைநெறிகளை வரையறைகளை மீறிடும் போதுதான். மனிதன் தானே தோன்றியவன் தானே எல்லாம் என்ற மமதைகளுக்குட்பட்டு தனது விருப்பம் தனது கருத்து என்பனவற்றிற்குக் கீழ்ப்படிந்து இறைவனை எதிர்க்கும் போதே மோதல்கள் ஏற்படுகின்றன. மனிதன் தனக்கும் இன்னும் இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவைகளுக்கும் உணவளித்து வாழவைத்துவரும் இறைவனின் வழிகாட்டுதல்கள் வழி வாழாமல் அவற்றிற்கு நேர் எதிரான விதிகளைப் பின்பற்றிடும் போதே இந்த உலகில் கொந்தளிப்புகள் ஏற்படுகின்றன. மனிதன் இறைவனின் வழிகாட்டுதல்களுக்குக் கீழ்ப்படியாமல் அவற்றிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்திடும் போது அவன் இயற்கைக்கு எதிராகவும் கிளர்ந்து விடுகின்றான் என்பதே உண்மை இஃதோடு மட்டுமல்லாமல் அவன்தன் இயல்புக்கும் இயற்கைக்கும் எதிராகக் கிளர்ந்து விடுகின்றான் என்று பொருள். இப்படி இயற்கைக்கும் தனது இயல்புகளுக்கும் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் விதிகளுக்கும் எதிராக மனிதன் கிளர்ந்து விடுவதால் மனிதர்களுக்குள் சண்டையும் சச்சரவுகளும் போர்களும் நிரந்தர நடப்புகாளகி விடுகின்றன. மனிதன் சொந்த இனத்தை அழிப்பதற்கே வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றான். இதற்காகவே தனது ஆற்றல்களையெல்லாம் பயன்படுத்துகின்றான். முடிவில் மனிதனின் வாழ்வுக்கும் வளத்திற்கும் பயன்பட்டிட வேண்டிய இயற்கை வளங்களும் அவனது அறிவும் அவனது அழிவுக்கே பயன்படுகின்றன. இங்கே நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அல்லாஹ்வின் சட்டங்களை அடிபணிந்து வாழ்வதென்பது இறப்பிற்குப் பின்வரும் மறுமை என்ற மறுவுலக வாழ்;க்கைக்கு மட்டுந்தான் எனச் சிலர் கருதுகின்றனர். இந்த உலக வாழ்க்கை மறுமை என்ற இறப்பிற்குப் பின்னால் வரும் வாழ்க்கை. இவை இரண்டும் வேறு வேறானவையல்ல. இவை இரண்டும் மனிதனின் மொத்த வாழ்க்கையில் இரண்டு பகுதிகள். ஒன்றுக்கு ஒன்ற துணை நிற்பது. ஒன்றோடொன்று இணைந்து நிற்பது. இறைவன் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் இந்த இரண்டு வாழக்க்கைகளுக்கும் இணைந்தே வழிகாட்டுகின்றன. இந்த உலகை அந்த மறுவுலக வாழ்க்கையைச் சுபிட்சமாக ஆக்கிடும் வகையில் நெறிப்படுத்தி வகைப்படுத்தித் தருகின்றன அல்லாஹ்வின் வழி காட்டுதல்கள். இந்தப் பிரபஞ்சம் அதில் சஞ்சரிக்கும் மனிதனின் வாழ்க்கை அந்த மனித வாழ்வின் இன்னொரு பகுதியாம் மறுமை வாழ்க்கை இவையனைத்தையும் சீராகவும் சிலாக்கியமாகவும் இயற்கையோடும் மனித இயல்போடும் இயைந்து போவதாக அமைத்துத் தருகின்றன அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள். இறைவனின் வழிகாட்டுதல்களுக்கு இப்படியோர் அலாதியான அற்புதமான சிறப்பும் தனித்தன்மையும் உண்டு. இந்தச் சிறப்பு இந்த அற்புத ஆற்றல் வேறு எந்த வழிகாட்டுதலுக்குமில்லை. மனித மூளையில் உருவாகும் வழிகாட்டுதல்களுக்கும் இல்லை. இந்தச் சிறப்புத் தன்மைகளால்தான் இந்த இறைவனின் வழிகாட்டுதல்களுக்குச் சில சிறப்பான தனிப் பொறுப்புகள் இருக்கின்றன. இதேபோல் இன்னும் சில கடமைகளும் இருக்கின்றன. வேறு எந்த வழிகாட்டுதல்களுக்கும் இந்தப் பொறுப்பும் கடமையுமில்லை. இந்த விளக்கங்களை மனதில் வைத்துப் பார்த்தால், ஷாPஅத் சட்டங்களை அல்லாஹ்வின் சட்டங்களைக் கீழ்ப்படிந்து நடப்பது மனித வாழ்க்கையை மனிதனின் இயற்கையோடும் நம்முன்னே விரிந்து நிற்கும் இயற்கையின் இதர விதிகளோடும் இணைந்து செல்ல வைப்பது என்றாகிவிடுகின்றது. இதனால் தான் மனிதன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் எந்த நிலையிலும் கீழ்ப்படிந்திடக் கூடாது எனப் பணிக்கப்பட்டுள்ளான். இதனால் தான் மனிதன் இதர மனிதர்களை அடிபை;படுத்தித் தனது விதிகளைத் திணித்திடக்கூடாது எனத் தடுக்கப்பட்டுள்ளான். இந்தப் பிரபஞ்சத்தின் இதர விதிகளை வகுத்து இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இறைவனின் விதிகளையே மனிதன் பின்பற்றிட வேண்டும். இந்த உண்மையை நபி இப்ராஹீம்(அலை)அவர்களுக்கும் நம்ரூத் என்ற ஆட்சியாளனுக்கும் இடையே இடம் பெற்ற வாதம் ஊர்ஜிதப்படுத்துகின்றது. நபி இப்ராஹீம்(அலை)அவர்கள் இறைவனுக்கு முற்றாக வழிப்பட்டவர்கள். இவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் தந்தை எனப் பெருமையோடு அழைக்கப்படுபவர்கள். நம்ரூத் தனது மக்களின் மேல் தனக்கு எல்லா அதிகாரங்களும் இருக்கின்றன என அதிர்ந்தவன். அந்த அப்பாவி மக்கள்மேல் அதிகார போதையில் அத்தனை அநியாயங்களையும் அவிழ்த்து விட்டவன். அவன் தனது அதிகாரத்தின் எல்லைக்குள் இல்லை என்று ஒத்துக்கொண்டவை வானமும் விண்மீன்களும் தாம். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் வானத்தின் மீதும் அதில் நீந்தும் விண்மீன்கள் மீதும் யாருக்கு அதிகாரம் இருக்கின்றதோ அவனே மனிதர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் பெற்றவன் என்று வாதித்தபோது நம்ரூத் வாயடைத்துப் போனான். இந்த விவாதம் பின்வருமாறு:
(நபியே) நீர் ஒருவனைக் கவனித்தீரா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சிக் கொடுத்ததற்காக அவன் (கர்வங் கொண்டு)இப்ராஹிமிடம் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கஞ் செய்தான். அது சமயம் இப்றாஹீம் எவன் உயிர்ப்பிக்கவும் மரிக்குமாறும் செய்கின்றானோ அவன் தான் என்னுடைய இறைவன் என்று கூறியதற்கு அவன் நானும் உயிர்ப்பிப்பேன் மரிக்குமாறும் செய்வேன் என்று கூறினான். (அதற்கு)இப்ராஹீம் அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்குத் திசையில உதயமாக்குகின்றான். நீ அதை மேற்குத் திசையில் உதயமாக்கு எனக் கூறினார். ஆகவே (அல்லாஹ்வை)நிராகரித்த அவன் (எவ்வித விடையும் அளிக்க வகையறியாது திகைத்து)வாயடைப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார ஜனங்களுக்கு (விடையளிக்க)வழிகாட்டுவதில்லை. (அல்குர்ஆன் 2:258)

அல்லாஹ்வுடைய மார்க்கத்தையன்றி வேறு மார்க்கத்தையா இவர்கள் விரும்புகின்றார்கள்? வானங்களிலும் ப10மயிலும் உள்ளவை யாவுமே (அவை)விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்ப்படிந்தே நடக்கின்றன. அன்றி (அவையாவும்)அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படும் (அல்குர்ஆன் 3:83)
தொடர்ந்து வரும்...

Tuesday, May 26, 2009

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் - பகுதி 3

விலாயா அம்மாவுக்கான (General Governorship) இஸ்லாமிய அனுமதி.
குலஃபாக்களால் இந்திய உபகண்டத்துக்கு விலாயா அம்மா வழங்கப்பட்டிருந்தது. இது ஷரியாவால் ஏற்றுக்கொள்ளபட்ட ஒரு நடைமுறையாகும். குலஃபாக்கள் விலாயாக்களை (மாகாணங்களை) பற்றி விசாரிக்கும் பொறுப்பில் கவனயீனமாய் இருந்தது உண்மையென்பதுடன் கவர்ணர்களை நேரடியாக தெரிவு செய்யாமல் பிராந்தியங்களில் தாமாக ஆட்சிக்கு வந்தவர்களை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த கவர்ணர்களை கலீஃபா ஏற்றுக்கொண்டதால் இவர்களுக்கு சட்டபூர்வ அதிகாரம் கலீஃபாவால் வழங்கப்பட்டது.
கிலாஃபத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் தலைசிறந்த உலமாக்களால் எழுதப்பட்ட (“The Ruling System of Islam”) “இஸ்லாமிய ஆட்சி முறை” என்ற புத்தகத்தில் இரு வகையான விலாயாக்களும் அவற்றுக்கான இஸ்லாமிய ஆதாரங்களும் விவரிக்கப்பட்டிருந்தன. இந்த நூலின் கீழ்வரும் பகுதிகள் இதனை வலியுறுத்தி நிற்கின்றன.“கவர்ணர் கலீஃபாவின் உதவியாளர்: கலீஃபா வழங்கிய அதிகாரத்தின்படியே அவர் செயற்படுவார். விலாயாக்களுக்கு வரையறைகள் இல்லை. ஆகவே ஆட்சி சம்பந்தமாக கலீஃபாவால் நியமிக்கப்பட்ட எவரும் கவர்ணராகலாம். கவர்ணர் எந்த பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை வரையறுக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
விலாயாக்கள் இருவகைப்படும். ஓன்று பொதுவானது (Genaral), மற்றையது சிறப்பானது (Specific). பொது விலாயாவில் விலாயாவிற்குட்பட்ட ஆட்சி தொடர்பான அனைத்தும் உள்ளடகப்பட்டிருக்கும். விலாயாவிக்கு ஒருவர் நியமிக்கப்படுகிறார் என்றார் அந்த நாட்டின் அல்லது மாகாணத்தின் இமாரா அவருக்கு வழங்கப்படுவதாகக் கொள்ளாமல் இங்கு மக்களின் சாதாரண செயற்பாடுகள் மேற்பார்வை செய்யப்படும். இங்கு மேற்பார்வை செய்வதற்கான பொதுவான பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கும். சிறப்பான இமாராவைப் பொருத்தவரை கவர்ணர் இராணுவத்தை நிர்வகித்தல், மக்களை நிர்வகித்தல், எல்லைகளைப் பாதுகாத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு போன்ற விடயங்களிலேயே அதிகாரம் வழங்கப்பட்டு ஏனையவை கலிஃபாவால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். அவருக்கு நீதித்துறை தொடர்பிலோ, கரஜ் (நிலவரி) மற்றும் சதகா வசூலிப்பு போன்ற அதிகாரங்கள் இருக்காது.
ரஸ{ல் (ஸல்) அவர்கள் பொதுவான வாலியை நியதித்ததற்கு சான்றாக அமர் பின் ஹஸ்மை (ரழி) யெமனுக்கு நியமித்தமையை கொள்ளலாம். அதே போன்று அலி பின் அபுதாலிபை (ரழி) யெமனின் நீதித்துறைக்கு விசேடமாக நியமித்தமையை விசேட (விலாயா காஸ்ஸா) உதாரணமாகக்கொள்ளலாம்.
குலஃபாக்களும் இது தொடர்பில் ரஸ{ல்(ஸல்) அவர்களைப் பின்பற்றியிருந்தனர். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் முஆவியா பின் அபு சுபியானை(ரழி) ஷாமிற்கு பொதுவான வாலியாக நியமித்திருந்ததுடன், அலி (ரழி) அவர்கள் அப்துல்லாஹ் பின் அப்பாஸை(ரழி) பஸராவுக்கான சிறப்பு வாலியாக நியமித்திருந்தார். இங்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ{க்கு(ரழி) நிதித்துறை தவிர்ந்த மற்றைய விடயங்களில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததுடன் நிதித்துறைப் பொறுப்பு சியாதிற்கு வழங்கப்பட்டிருந்தது.
இரண்டு வகையான விலாயாக்கள் முன்பு காணப்பட்டன. ஓன்று சலாஹ்வுக்கான விலாயா மற்றையது கரஜுக்கான விலாயா. இதனாலேயே வரலாற்று நூல்களில் விலாயாக்களுக்கு இரு வேறுபட்ட பெயர்கள் உபயோகிக்கப்பட்டன: ஒன்று சலாஹ்வுக்கான இமாரா, மற்றையது சலாஹ்வுக்கும் கரஜுக்குமான விலாயா. இங்கு சலாஹ் என்ற பதம் மக்களை தொழுவிப்பது என்பதை மட்டும் குறிக்காது மாறாக நிதித்துறை தவிர்ந்த சகல விடயங்கள் தொடர்பான ஆட்சியையும் குறிக்கும். சலாஹ் மற்றும் ஹராஜ் ஆகிய இரண்டு விலாயக்களும் ஒருவருக்கு வழங்கப்பட்டால் அது பொது விலாயா(விலாயா அம்மாவாக) கருதப்படும். ஒரு விலாயா சலாஹ் அல்லது கரஜுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டு இருந்தால் அது சிறப்பான விலாயாவாகக்கருதப்படும். விலாயாக்களை பொது விலாயா என்றோ சிறப்பு விலாயா என்றோ நீதித்துறை விலாயா என்றோ இராணுவத்திற்கான விலாயா என்றோ வரையறுப்பதற்கான அதிகாரம் கலீஃபாவுக்கு உண்டு. வாலிக்கான கடமைகளை ஷரீஆ வரையறுக்கவில்லை. இதனால் வாலிக்குரிய எல்லாக்கடமைகளையும் செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. எனினும் பொதுவாக வாலியினுடைய கடமையை ஆட்சி புரிவது எனலாம். மேலும் அவர் கலீஃபாவின் உதவியாளராக இருப்பதுடன் குறிப்பிட்ட பகுதிக்கு அமீராகவும் இருப்பார். இவை அனைத்தும் ரஸ{ல்(ஸல்) அவர்களின் செயற்பாடுகளில் இருந்து பெறப்பட்ட முடிவுகளாகும். வாலியை பொதுவான வாலியாகவோ சிறப்பான வாலியாகவோ நியமிக்க ஷரீஆவில் இடமுண்டு.
ரஸ{ல்(ஸல்) அவர்கள் ஃபர்வா பின் மூசாயிக்கை(ரழி) முராத், சுபைர் மற்றும் மிஸ்ஹாக் கோத்திரங்களுக்கு நியமித்தமையும் அவருடன் காலித் பின் சயீத் பின் அல் ஆஸை(ரழி) சதகாவுக்கான வாலியாக அனுப்பியமையும் இப்னு ஹிஷாமின் சீராவில் காணலாம். ரஸ{ல்(ஸல்) அவர்கள் சியாத் பின் லபீத் அல் அன்சாரியை(ரழி) சதகாவுக்கான வாலியாக ஹத்ரமவ்த்துக்கு அனுப்பியமையும் அலி (ரழி) நஜ்ராவுக்கு சதகாவையும் ஜிஸ்யாவையும் வசூலிக்க அனுப்பியமையும் அவரையே யெமனுக்கு நீதிபதியாக அனுப்பியமையும் அல் ஹாக்கிமில் பார்க்கலாம்.
“ரஸ{ல்(ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபலை(ரழி) அல் ஜனதின் மக்களிற்கு குர்ஆனையும் இஸ்லாமிய சட்டதிட்டங்களையும் கற்பிப்பதற்கும் அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதற்கும் அனுப்பிவைத்தார்கள்” என்ற விடயம் இஸ்திஆப் என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. யெமனின் ஆமில்களிடமிருந்து சதகா வசூலிப்பதற்கான அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ரஸ{ல்(ஸல்) அவர்கள் உஹதுக்கு படையெடுத்தபோது போது இப்னு உம் மக்தூமை(ரழி) மதீனாவின் சலாவிற்காக நியமித்தமையை இப்னு ஹிஷாமின் சீராவில் காணலாம். (The Ruling System in Islam)
தொடர்ந்து வரும்...

Wednesday, May 20, 2009

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் - பகுதி 2

அதிலிருந்து தொடர்ந்து வந்த 100 ஆண்டுகளில் டெல்லி சாம்ராஜியம் என அழைக்கப்பட்ட அவ்வாட்சி கிழக்கு நோக்கி வங்காளம் வரையும், தெற்கு நோக்கி டெக்கன் வரையும் விரிவடைந்தது. அந்த டெல்லி சாம்ராஜ்ஜியத்தை 5 வேறுபட்ட அரச பரம்பரையினர் ஆட்சி செய்தனர். அவர்கள் ஸ்லேவ் பரம்பரை(1206 - 1290), ஹல்ஜி பரம்பரை(1290 – 1320), துக்லக் பரம்பரை(1320 – 1413), சைய்யித் பரம்பரை(1414 -1451), லோடி பரம்பரை(1451 – 1526) என அழைக்கப்பட்டனர்.பின்னர் மத்திய ஆசியாவிலிருந்து தோன்றிய பாபரினால் டெல்லி சாம்ராஜியம் 1526 இல் கைப்பற்றப்பட்டு முகலாய சாம்ராஜியம் தோற்றம் பெற்றதுடன் அவரே முதலாவது முகலாய ஆட்சியாளராக தோற்றம் பெற்றார். அவரின் மரணத்திற்கு பின்னர் அவரின் மகன் ஹ}மையுன் (1530 – 1556) ஆட்சிக்கு வந்தார். போபாலில் அமைந்துள்ள அரச நு}லக ஆவனங்களின்படி பாபர் தனது மகனுக்கு பின்வரும் உயிலை எழுதினார் எனத் தெரிய வருகிறது. இந்த உயில் பாரின் தவறுகளையெல்லாம் தாண்டிப்பார்க்கும்போது அவர் இஸ்லாத்தினை நீதியான முறையில் அமுல்செய்யவேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார் என தெளிவாகக் காட்டுகிறது.

“ எனது மகனே! பின்வரும் விடயங்களை கவனத்திற்கொள். மத hPதியான பாரபட்சங்களுக்கு உனது மனதில் இடங்கொடுக்காதே. மக்களின் மத hPதியான உணர்வுகளையும், வழிபாடுகளையும் கவனத்திற்கு கொண்டு அவர்களுக்கு மத்தியில் நீதி செலுத்துவாயாக. இத்தேசத்தவர்களின் மனதை வெல்வதற்காக பசுக்களை அறுப்பதை தவிர்த்துக்கொள். அது உன்னை மக்களின் பால் நெருக்கமடையச்செய்யும். எந்த மதத்தினரின் வழிபாட்டிங்களையும் அழிக்கவோ, தேசப்படுத்தவோ கூடாது. நாட்டிலே அமைதி ஏற்படும்படி மக்கள் அனைவரின் மீதும் நீதி செலுத்து. இஸ்லாம் கொடுங்கோண்மை அக்கிரமம் எனும் ஆயுதத்தால் போதிக்கப்படுவதைவிட அன்பு ஆதரவு எனும் ஆயுதத்தால் சிறப்பாக போதிக்கப்படலாம். ஷியா , சுன்னி வேறுபாடுகளை புறம்தள்ளிவிடு. வேறுபட்ட பருவ காலங்களை காண்பதைப்போலவே மக்களின் வேறுபட்ட தன்மைகளையும் பார்.”
வரலாற்றை திரிபு படுத்தும் வரலாற்றாசிரியர்கள் நிறைந்திருக்கும் சூழலில் இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் ஆட்சி பற்றி நாம் எங்கிருந்து தகவல்களைப்பெறுகிறோம் என்பதில் மிகவுமே கவனம் செலுத்த வேண்டும். இந்திய முஸ்லிம் ஆட்சியாளர்கள் சிலர் சில இஸ்லாமிய சட்டங்களை பிழையாகப்பயன்படுத்தினார்கள் என்பதையும், சில அநீதிகளை செய்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். எனினும் இந்தியா இஸ்லாமிய கிலாஃபத்தின் ஒரு பகுதியாக இருந்ததும், அங்கே ஷரிஆ சட்டங்களே அமுல்படுத்தப்பட்டது என்பதும் மறைக்க அல்லது மறுக்க முடியாத உண்மையாகும். சில இந்திய மாநகரங்கில் காணப்படும் நிதிமன்ற ஆவணங்களை பார்க்கும்போது, மக்களின் பிரச்சனைகளைத்தீர்ப்பதில் இஸ்லாமிய ஷரிஆச் சட்டங்களைத்தவிர வேறொரு மூலாதாரத்தை அந்நீதிமன்றங்கள் கொண்டிருந்தாகத் தெரியவில்லை.
ஷரிஆச்சட்டங்களில் சிலதை தவறாகப்பயன்படுத்துவது என்பது, இஸ்லாமிய கிலாஃத்தின் ஆட்சியையும், வாலி(ஆளுநர்கள்),மற்றும் ஆமில் ( நகராதிபதி) ஆட்சியையும் இல்லாது செய்துவிடாது. பல ஹதீஸ்கள் ஆட்சியாளர்ளகள் அநியாயக்காரர்களாக இருந்தாலும் கூட அவர்கள் வெளிப்படையான குபர்ரினை (குபர் புவா) வெளிப்படுத்தாது அல்லது செய்யாது ஷாPஆவினை அமுல்படுத்தும வரை அவர்களுக்கு கட்டுப்படும்படி கூறுகின்றன.

அனஸ் இப்னு மாலிக் (ரழி) அல்லாஹ்வின் து}தர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறுகிறார்கள். “ உங்கள ஆட்சியாளர் காய்ந்த திராட்சைகள் போன்ற முடியுடைய அபிஸீனிய அடிமையாக இருந்தால்கூட அவருக்கு செவி சாயுங்கள், கட்டுப்படுங்கள்”
இன்னுமொரு அறிவிப்பில் “ அவர் அல்லாஹ்வின் கிதாபைக்கொண்டு வழிநடத்தினால்” என வந்துள்ளது. அவ்ப் இப்னு மாலிக்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “ ரஸ}ல்(ஸல்) சொல்ல நான் கேட்டேன், “ உங்களிடையே சிறந்த தலைவர்கள் என்பவர்கள் யாரென்றால் நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள், அவர்களும் உங்களை நேசிப்பார்கள். அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள், அவர்களும் உங்களுக்காக பிரார்த்திப்பார்கள். உங்களிடையே கெட்ட தலைவர்கள் யாரென்றால் நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள், அவர்களும் உங்களை வெறுப்பார்கள். நீங்கள் அவர்களை சபிப்பீர்கள், அவர்களும் உங்களைச் சபிப்பார்கள்.” அதற்கு நாங்கள் கேட்டோம். “எனவே அவர்கள் மீது நாங்கள் போர் அறிவிக்கக்கூடாதா?” ரஸ}ல் (ஸல்) கூறினார்கள், “ இல்லை, அவர்கள் உங்கள் மத்தியில் ஸலாஹ்வை நிலைநாட்டும் வரை. எச்சரிக்கை! எவரேனும் தம்மீது ஆட்சிசெலுத்தும் வாலி பாவம் செய்வதைக்கண்டால் அல்லாஹ்வுக்கு எதிராக செய்யப்படும் அந்த தீமையை அவர் வெறுக்கட்டும். ஆனால் அவர் கட்டுப்பாட்டிலிருந்து (பைஆ) தனது கையை எடுக்க வேண்டாம். (முஸ்லிம்)

அல்லாஹ்வின் து}தர்(ஸல்) கூறிய ஹதீஸை அபுதாவூத்திலும், அஹ்மத்திலும் பதிந்திருக்கிறார்கள். “அபு தர்ரே! போர் வெற்றிப்பொருட்களை கைப்பற்றி வைத்துக்கொண்டு அதனை உங்களுக்கு தருவதற்கு ஏவெரேனும் ஒரு வாலி (ஆளுநர்) மறுத்தால் அந்த விசயத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர் கூறினார் “ உங்களை சத்தியத்து}துடன் அனுப்பியவன் மீது ஆணையாக, நான் எனது வாளை உயர்த்தி உங்களை வந்து அடையும் வரை போராடுவேன்.” இதற்கு ரஸ}ல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் சொன்னதை விட சிறந்ததொன்றை நான் கூறட்டுமா? நீங்கள் பொறுமையைக்கடைப்பிடித்து என்னை வந்து அடையும் வரை அதனைப் பேணுவதாகும்.”

இந்தியா கிலாஃபத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது என்ற உண்மையை இந்து வரலாற்றாசிரியர்கள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். சுசி சர்மா என்ற இந்து எழுத்தாளர் தனது புத்தகமான “ “ Caliphs and Sultans – Religious Idealogy and Political Praxis” என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்.
“டெல்லி ராஜ்ஜியம் (1205–1526) இருக்கும் வரை அது அப்பாசிய கலீஃபாக்களின் கீழிருந்து முஸ்லீம்களின் சாம்ராஜியத்தின் ஒரு சட்டரீதியான பகுதியாகவே இருந்து வந்தது. சுல்தான்கள் தம்மை கலீஃபாவின் பிரதிநிதிகள் என்றே கருதியதுடன் அதன் மூலமான நிர்வாகத்திற்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தை பிரதிநிதிகள் என்ற நிலையிலேயே பெற்றுக்கொண்டனர். நிர்வாகத்தின் உச்ச அதிகாரம் கலீஃபாவிடமே இருந்ததால் ஏனைய நிர்வாகிகளும் சிற்றரசர்களும் கலீஃபாவின் சார்பிலேயே அரச அதிகாரத்தை பிரயோகித்தார்கள்”. (Caliphs and Sultans – Religious Idealogy and Political Praxis, page 247).
“மூன்றாம் பஹமனி முஹமது ஷாஹ் (1463-1482)அவர்கள் உத்மானிய சுல்தான் இரண்டாம் முஹம்மது அவர்களைப்பார்த்து “நீங்கள் கலீஃபாவாக இருக்கத் தகுதியானவர்கள்” எனப் பாராட்டுகிறார். அத்துடன் துருக்கிய உத்மானிய இலச்சினையை தமது அரச இலச்சினையாக பிஜாபுர் இராச்சியம் உபயோகப்படுத்தியிருந்தது. குஜராத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய மாலிக் அயாஸ் என்பவர் முதலாம் சுல்தான் சலீமை “உலகின் கலீஃபா” என தெரிவித்திருந்தார். முகலாய மன்னர்கள் துருக்கிய சுல்தான் மீது வைத்திருந்த மரியாதையை டெல்லிக்கும் இஸ்தான்புலுக்கும் இடையே பிரதிநிதிகள் சிலர் சென்று வந்தமை காட்டுகிறது. சுல்தான் சுலைமானுக்கு ஹ}மாயுன் ( இந்திய ஆட்சியாளர் ) எழுதிய கடிதத்தில் சுல்தான் சுலைமானை சிறந்த குணநலன்கள் கொண்ட கலீஃபா என வர்ணித்திருந்ததுடன் அவரின் ஆட்சி நிலைக்க வேண்டுமென பி;ரார்தித்திருந்தார்,“அவன் (அல்லாஹ்) உம்மை உலகின் கலீபாக அனுப்பி வைத்தான்” என்ற குர்ஆன் வசனத்தையும் அவர் மேற்கோள் காட்டியிருந்தார். சுல்தான் இப்ராஹீம் சாஜஹானுக்கு அனுப்பிய கடிதத்தில் “தாம் உலக அரசர்களின் பாதுகாவலர்” எனக்குறிப்பட்டதுடன் கலீஃபாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார். சுல்தானிடமிருந்து துருக்கிய பிரதிநிதியான அஹமத் அகா ஓளரங்கசீப்புக்கு 1690ம் ஆண்டு ஒரு கடிதத்தை கொண்டு வந்தார். அதில் சுல்தான் இஸ்லாத்தின் பிரதிநிதி (கலீஃபா) என்பதை வலியுறுத்தும் குர்ஆனிய வசனங்கள் அடங்கிருந்தன. 1723ம் ஆண்டு முகமது ஷாஹ் (1719-1748) இஸ்தான்புல்லுடன் தொடர்புகளை ஏட்படுத்தியிருந்தார். முஹமது ஷாஹ் சுல்தானுக்கு அனுப்பிய கடிதத்தில்;. “பெரும் சுல்தான்களின் பாதுகாப்பிடம்” “மரியாதைக்குரிய “ மன்னர்களின் பாதுகாவலன்” ஷரிஆவின் போதனையை பரப்புபவர்” என வாழ்த்துகிறார். ( Sasi S. Sharma, Caliphs and Sultans – Religious Ideology and Political Praxis, page 248-249).
இந்தியாவுக்கும் கிலாஃபாவுக்கும் இருந்த தொடர்பை சில தொல்பொருட்கள் கூட எடுத்துக்காட்டுகின்றன. உதாரணமாக இந்தியாவின் வாலியாக இருந்த சுல்தான் அல்தமாஷ் (1211-1236) உடைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளி நாணயங்களில் ஒரு பக்கத்தில் கலீஃபா அல்முஸ்தன்ஸிரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததுடன் மறுபுறம் கலீஃபாவின் உதவியாளர் என்ற அல்தமாஷ்ஷின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.1258ல் பக்தாத் வீழ்தப்பட்டு கலீஃபா அல் முஸ்தன்ஸிர் மரணமடைந்த போதும் அவர் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்களே இந்தியாவில்; பயன்படுத்தப்பட்டு வந்தன. ஷெய்க் அஹமத் சிரிந்தி போன்ற பெரும் இஸ்லாமிய அறிஞர்கள் கூட இந்தியா கிலாஃத்தின் கீழ்; இருக்கும்போதே உருவாகியிருந்தனர். பிக்ஹ{த்துறையின் அறிஞராக விளங்கிய இவர் முஜத்தித்; அல்ஃப் தானி என்றும் அறியப்பட்டார். அவர் மொத்தமாக 536 கடிதங்களை உத்மானிய ஆட்சியாளருக்கு அனுப்பியிருநதார். ஆது தோகுக்கப்பட்ட கடிதங்கள் அல்லது “மக்துபாத்” என்று அழைக்கப்பட்டது. அக்கடிதங்களினு}டாக அவர் தனது ஆலோசனைகளை கிலாஃபத்திற்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மற்றுமொருவர்தான் ஷாஹ் வலீயுல்லாஹ் டெஹ்லாவி (1703-1762) என்று அழைக்கப்பட்ட இந்தியாவில் பெரிதும் மதிக்கப்பட்ட உலமாவாகும். தெற்காசியா மற்றும் ஏனைய பகுதிகளிலும் பல இஸ்லாமிய இயக்கங்கள் அவரை ஏற்று மதிப்பளித்தனர். இஸ்லாம் தொடர்பான பல்வேறு தலைப்புக்களில் அவர் எழுதியுள்ளார். அவர் காலத்திலிருந்த பல அறிஞர்கள் குர்ஆனை அதன் மூல மொழினான அறபிலே மாத்திரம் கற்க வேண்டும் எனக் கருதிய போது குர்ஆனை உருதிலும் சமஸ்கிரதத்திலும் மொழிபெயர்த்த அவரின் மொழிபெயர்ப்புக்கள் காலத்தால் முந்தியவைகளாகும். காலப்போக்கில் அவரது செயற்பாட்டை இந்திய உலமாக்கள் ஏற்றுக்கொண்டனர்.
“ஹ{க்கத் அல் பலகா அம்த் அல்-தவ்ஹீமத் அல்-இலாஹியா” என்பது அவரின் புகழ்பெற்ற இன்னொரு ஆக்கமாகும். “இலாலத் அல் கஃபா” என்ற தனது ஆக்கத்தில் கிலாஃபத்தைப் பற்றியும் அவர் எழுதியிருந்தார். அதில் “ இஸ்லாத்தை நிலைநாட்டுவதினு}டாகவும், அதன் கிளைகளான மார்க்க கல்வி, மார்கக் கிரிகைகளை மேற்பார்வை செய்யும் நிறுவனம், ஜிஹாத்; எனும் கட்டமைப்பு…, இராணுவ வழிநடாத்தல், நீதித்துறை உருவாக்கமும் சட்ட அமுலாக்கமும், குற்றச்செயல் கட்டுப்பாடு… போன்றவற்றினுடாக மக்களின் பொதுநலன்களின் அடிப்படையில் உருவான ஓர் தலைமைத்துவமே கிலாஃபாவாகும். இந்த அனைத்து நடவடிக்கைகளையும் து}தர் (ஸல்) அவர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றோம் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டும்.” எனக் குறிப்பிடுகின்றார்.
தொடர்ந்து வரும்...

Tuesday, May 19, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 6

லா இலாஹ இல்லல்லாஹ_ என்பது இஸ்லாத்தின் வாழ்க்கை நெறி

லா இலாஹ இல்லல்லாஹ_ - அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. இது இஸ்லாத்தின் முதல் முழக்கம். ஈமான் என்ற இறைநம்பிக்கையின் முதற்பகுதியும் இதுதான். இதன் பொருள் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரையும் வழிபடவோ, கீழ்ப்படியவோ கூடாது என்பதாகும். முஹம்மதுர் ரஸ_லுல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்கள் அந்த அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள். இது இந்தப் பிரகடனத்தின் இரண்டாம் பகுதி. இதன் விசாலமான பொருள்: இறைவனைக் கீழ்ப்படிவது அவனுக்கு மட்டுமே அடிபணிவது என்பது அவனது திருத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படியே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே. இந்த இரண்டு பகுதிகளையும் உள்ளத்தில் பதித்து நாடி நரம்புகளிலெல்லாம் உறைய வைத்து தன் வாழ்வை வழிநடத்துபவனே முஸ்லிம் எனப்படுபவன். இஸ்லாத்தின் தூண்களான இதரப் பகுதிகள் இந்த அடிப்படை நம்பிக்கையின் ஊற்றாய்ப் பிறப்பனவே. இப்படி வானவர்கள் மீது நம்பிக்கை இறைவேதங்களின் மீது நம்பிக்கை இறைவனின் தூதர்கள் மேல் நம்பிக்கi மரணத்திற்குப் பின் வரும் மறு உலக வாழ்க்கையின் மேல் நம்பிக்கை இறுதித் தீர்ப்பு நாளின் மேல் நம்பிக்கை தொழுகை நோன்பு ஜகாத் என்ற ஏழைவரி, ஹஜ் என்ற இறை இல்லப் புனிதப் பயணம் ஆகுமானவற்றை ஏற்றுக் கொள்வது தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகி இருப்பது ஒழுக்கங்கள் பற்றிய பாடங்கள் இப்படி இன்னும் இருப்பவை அனைத்தும் முஹம்மத்(ஸல்)அவர்கள் காட்டிய வழியில் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவது என்பதன் ஊற்றாய்ப் பிறப்பனவே. முஸ்லிம் சமுதாயம் என்பது இத்தனையையும் முழுமையாக நடைமுறைப்படுத்தி வாழ்வதே. இந்த வழிகாட்டுதல்களை நம்பிக்கைகளை அந்த நம்பிக்கையின் ஊற்றாய்ப் பிறந்த நன்னடத்தைகளை நடைமுறைப்படுத்தாத சமுதாயம் முஸ்லிம் சமுதாயமல்ல. ஆக அல்லாஹ் ஒருவன் தான் என்பதை நம்புகின்றேன் என்பது ஒரு முழு வாழ்க்கை நெறியை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்ந்து காட்டுகின்றேன் என்பதன் பகிரங்கமான பிரகடனமாகும். அல்லாஹ் ஒருவன் தான் இறைவன் என்பதை அறுதியாகவும் உறுதியாகவும் நம்பாதவரை இந்த வாழ்க்கை நெறி நாட்டு நடப்பாக ஆகிட இயலாது. அல்லாஹ் ஒருவன் தான் என்ற இந்த அடிப்படையில் அல்லாமல் வேறு அடிப்படைகளைக் கொண்டு இந்த வாழ்க்கை நெறி அமைக்கப்படுமேயானால் அது இஸ்லாமிய வாழ்க்கை நெறி ஆகாது. அந்த வாழ்க்கை நெறியைப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள் எனச் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது. அதே போல் இந்த வாழ்க்கை நெறி, அல்லாஹ் ஒருவன் தான் இறைவன் என்ற அடிப்படையோடு வேறு அடிப்படைகளையும் சேர்த்து அமைக்கப்படுமேயானால், அந்த வாழ்க்கை நெறியையும் இஸ்லாமிய வாழ்க்கை நெறி என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தச் சமுதாயத்தை முஸ்லிம் சமுதாயம் என்றும் கூறிட முடியாது. அல்லாஹ் கூறுகின்றான்:
அவனையன்றி நீங்கள் வணங்குபவையாகவும் நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக்கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத் தவிர, உண்மையில் அவை ஒன்றுமே இல்லை. அல்லாஹ் இதற்கு யாதோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்கவுமில்லை. சகல அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்றொருவரையும்)நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளையிட்டிருக்கின்றான். இது தான் நேரான மார்க்கம் (திருக்குர்ஆன் 12: 40)

(எவன் அல்லாஹ்வுடைய)தூதருக்கு (முற்றிலும்)வழிப்பட்டு நடக்கின்றானோ அவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு நடக்கின்றான் (அல்குர்ஆன் 4:80)


அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த அல்லாஹ் காட்டிய வழியில் மட்டுமே வாழ்ந்திட வேண்டும். அந்த வழிகாட்டுதல் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய விதமே! இந்தத் தீர்க்கமான தெளிவான பிரகடனம் பல தெளிவான பாதைகளை நமக்கக் காட்டுகின்றது. முதன்முதலில் இது முஸ்லிம் சமுதாயம் எப்படி இருக்கும் என்பதைத்; தெளிவுபடுத்துகின்றது. இரண்டாவதாக இஸ்லாமிய சமுதாயம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துச் சொல்கின்றது. மூன்றாவதாக இது அஞ்ஞான சமுதாயங்களை (ஜாஹிலிய்ய சமுதாயங்களை)எப்படி எதிர்கொள்வது என்பதை எடுத்துச் சொல்லுகின்றது. நான்காவதாக மனித வாழ்வை எப்படி மாற்றி அமைத்திட வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றது. இவை அனைத்தும் இஸ்லாம் என்ற இந்தப் பேரியக்கத்தின் வளர்ச்சிப் பாதையில் மிகவும் முக்கியமானவையாகும். முஸ்லிம் சமுதாயத்தின் தனித்தன்மை என்ன? முஸ்லிம் சமுதாயத்தின் தனித்தன்மை இந்தச் சமுதாயத்தின் எல்லா விவகாரங்களும் அல்லாஹ் ஒருவனே என்ற அடிப்படையிலேயே ஒருங்கிணைக்கப்படும் என்பதே. இறைவன் ஒருவனே என்பதை நம்பாதவன் அல்லாஹ்வை மட்டுமே வணங்குகின்றவனாக மாட்டான். அல்லாஹ் கூறுகின்றான்:
(ஒன்றுக்கு பதிலாக) இரு தெய்வங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக (உங்களுடைய)ஆண்டவன் ஒரே ஒருவன் தான். ஆகவே (அந்த ஒருவனாகிய)எனக்கு நீங்கள் அஞ்சுங்கள். வானங்களிலும் ப10மியிலும் உள்ள யாவும் அவனுடையவையே அவனுக்கே (என்றென்றும்)வழிபடுவது அத்தியாவசியம் (ஆகவே)அந்த அல்லாஹ் அல்லாதவற்றிற்கா நீங்கள் அஞ்சுகின்றீர்கள்? (அல்குர்ஆன் 16 : 51,52)
அல்லாஹ்வோடு வேறு தெய்வங்களையும் வணங்குவோர் அல்லாஹ்வை வணங்கவில்லை. அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குபவர்களைப் போல் இவர்களும் இணைவைப்பவர்களே. (நபியே) நீர் கூறும் நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய தியாகமும் என் வாழ்வும் என் மரணமும் உலகத்தாரைப் படைத்துப் போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. அவனுக்கு யாதோர் இணையுமில்லை. அவ்வாறே நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே (அவனுக்கு வழிப்பட்ட)முஸ்லிம்களில் நான் முதன்மையானவன் (அல்குர்ஆன் 6: 162-163) அல்லாஹ் அருளிச் செய்த திருக்குர்ஆன் அதற்கோர் அழகிய விளக்கமாக வாழ்ந்து காட்டிய பெருமானார் (ஸல்)அவர்களின் வாழ்வு வாக்கு ஆகியவற்றை விட்டு வேறு அரசியல் அமைப்புச் சட்டங்களிலிருந்தும் வேறு வழிகாட்டுதல்களிலிருந்தும் சட்டங்களை வகுத்து அதன் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவர்களாக மாட்டார்கள். இதனை அல்லாஹ் இறைமறையாம் திருமறையில் இப்படி வினவுகின்றான்.
அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்க மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை (தெய்வங்)களும் அவர்களுக்கு இருக்கின்றனவா? (அல்குர்ஆன் 42:21)
இன்னும் இறைவன் கூறுகின்றான் :
தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் அவர் எதனை உங்களுக்குத் தடுத்துக்கொண்டாரோ அவற்றிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 59:7)
இது தான் முஸ்லிம் சமுதாயம். இந்தச் சமுதாயத்தில் நம்பிக்கைகள், தனி மனிதனின் எண்ணங்கள், செயல்கள், அவனது ஒழுக்கம், அன்றாட வாழ்க்கையில் அவன் கடைப்பிடிக்கும் சட்ட திட்டங்கள், அவனது சமுதாய நீதிகள், நியதிகள் இவையெல்லாம் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை அடிப்படையாகக் கொண்டு தான் அமையும். இந்த அடிப்படை அகற்றப்பட்டு விட்டால் அது முஸ்லிம் சமுதாயமாக அமைய முடியாது. இந்தப்பகுதியில் ஏதேனும் ஒன்றிலோ அந்த ஒன்றின் பகுதியிலோ அல்லாஹ் ஒருவனே இறைவன் என்ற அடிப்படை அல்லாதது கலந்து விடுமேயானால் அது முஸ்லிம் சமுதாயமாக அமைந்திடாது. இந்தச் சமுதாயத்தின் வாழ்வில் ஏதேனும் ஒரு சிறு பகுதியில் இதர கொள்கைகளோ கோட்பாடுகளோ புகுந்திடுமேயானால் அந்தச் சமுதாயம் முஸ்லிம் சமுதாயமாக ஆகிட இயலாது. ஏனெனில் அங்கே முஸ்லிம் சமுதாயம் அமைக்கப்பட வேண்டிய ஆதி அடிப்பபடையான அல்லாஹ் ஒருவனே இறைவன் முஹம்மத் (ஸல்)அவர்கள் அவனுடைய திருத்தூதர் ஆவார்கள் என்பதில் கலப்புகளும் சேர்ப்புகளும் இணைப்புகளும் ஏற்பட்டு விட்டன. ஆகவே இஸ்லாமிய சமுதாயமைப்பைப் புனரமைத்திட வேண்டும். அந்தச் சமுதாயமைப்பை அடிப்படையாகக் கொண்டு ஓர் இஸ்லாமிய அரசை நிலைநாட்டிட வேண்டும் என விரும்புவோர் முதன் முதலில் ஓர் அடிப்படைப் பணியைச் செய்திட வேண்டும். அந்த அடிப்படைப் பணி: இந்தச் சமுதாய அமைப்பில் அங்கம் வகிப்போர் அனைவருடைய உள்ளங்களையும் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதையும் முஹம்மத் (ஸல்)அவர்கள் அல்லாஹ்வுடைய அறுதித் தூதர் ஆவார்கள் என்பதையும் கொண்டு உறுதி பெறச் செய்திட வேண்டும். இதில் எள்ளளவு எள்ளின் மூக்களவு அந்த மூக்கின் முனையளவு கூட இடைச் செருகல்களோ கலப்படங்களோ சேர்ந்திடக் கூடாது. இப்படி லாயிலாஹ இல்லல்லாஹ_ முஹம்மதுர்ரஸ_லுல்லாஹ் என்ற அடிப்படையில் மட்டுமே நிலைத்து நிற்கும் சமுதாயம் தான் முஸ்லிம் சமுதாயம். இந்தச் சமுதாயம் மட்டுமே இஸ்லாத்தை நிலைநாட்டிட முடியும். இதன் பின்னர் இந்த அடிப்படையை ஏற்று ஓர் இஸ்லாமிய வாழ்க்கையை வாழ விரும்புவோர் அனைவரும் இந்தச் சமுதாய அமைப்பில் வந்து அங்கம் வகித்திடுவர். இந்த அடிப்படைகளை அழுத்தமாக நம்பிடுவோர் அனைவரும் ஒன்றாய் ஓரிறைவனின் அடிமைகளாய் லாயிலாஹ இல்லல்லாஹ_ முஹம்மதுர்ரஸ_லுல்லாஹ் என்பதன் மறுபதிப்பாய் வாழ்ந்திடுவார்கள். இப்படித்தான் அன்று அந்த முதல் முஸ்லிம் சமுதாயம் உருவானது. அந்தச் சமுதாயம் தான் அப்பழுக்கற்றதோர் இஸ்லாமிய அரசை நிலை நாட்டிற்று. இன்னும் சொன்னால் ஓர் இஸ்லாமிய சமுதாயத்தை அமைத்திட இருக்கும் ஒரே வழி இது தான். அல்லாஹ்வைத் தவிர வேறு உபாயங்கள் வழியாகவும் சிந்தனைகளின் வழியாகவும் வந்த எல்லா சட்டங்களையும் திட்டங்களையும் கோட்பாடுகளையும் வழிபாடுகளையும் உதறித் தள்ளிவிட்டு, அல்லாஹ்வின் வழிகாட்டுதல் வழிவாழும் சமுதாயத்தால் மட்டுமே ஓர் இஸ்லாமிய அரசை நிலைநாட்டிட இயலும்! இந்த அடிப்படையை ஏற்றுக் கொள்ளாத ஜாஹிலிய்ய சமுதாயங்கள் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் இந்தச் சமுதாயத்தோடு சங்கமித்திடலாம் அல்லது வேறுபட்டு நின்றிடலாம். அவ்வாறு அது வேறுபட்டு நின்றுவிட்டால், அது இந்த இஸ்லாமிய சமுதாயத்தோடு அமைதியாக வாழலாம். அதற்குத் தேவையான ஒப்பந்தங்களையோ உடன்படிக்கைகளையோ செய்திடலாம் அல்லது எதிரே நின்று எதிர்கொள்ளலாம். இதில் வரலாறு நமக்கோர் உண்மையை உணர்த்துகின்றது. அது இந்த அஞ்ஞான சமுதாயம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிரே நின்று போரிடுவதைத் தான் தன் விருப்பமாக ஆக்கிக் கொண்டது. அது அமைதியையோ சமாதானத்தையோ விரும்பவில்லை. இதுவே வரலாறு சொல்லும் உண்மை. இந்தப் போரை எந்த ஈவிரக்கமுமின்றி அது, இஸ்லாமிய சமுதாயத்தின் மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. மனித மாண்புகளையோ பொதுவான ஒழுக்கங்களையோ பற்றிக்கூட அது கவலைப்பட்டதில்லை. இந்தப் போரைத் தொடுத்திடவும் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் கட்டவிழ்த்து விட்டிட அந்த அஞ்ஞான சமுதாயம் எப்போதும் காலந்தாழ்த்தியதுமில்லை.
இந்த இஸ்லாமிய சமுதாயம் ஓர் சமுதாயமாகக் காலூன்றுவதற்கு முன்பே அந்த அஞ்ஞான சமுதாயம் தன் போரைப் பிரகடனப்படுத்திற்று. இஸ்லாமிய சமுதாயம் ஓரிரு தனி மனிதர்கள் என்று துவங்கியபோதே அந்த அஞ்ஞான சமுதாயம் தன் தாக்குதலைத் துவங்கிற்று. எங்கேயும் எந்த விதிவிலக்கும் இல்லாமல் அஞ்ஞான சமுதாயம் இஸ்லாமிய சமுதாயத்தை எதிர்கொண்டது. இப்படித்தான். ஏன்? இஸ்லாத்தின் அழைப்பு இஸ்லாத்தின் முதல் கொள்கை முழக்கம் அதன் காதில் வீழ்ந்ததும் அந்த அஞ்ஞான சமுதாயம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோர் மீது சீறித்தான் பாய்ந்;தது. வரலாறுகள் வரையிட்டுக்காட்டும் இந்த உண்மை நிலையை நாம் ஒத்துக் கொண்டாக வேண்டும். ஒத்துக் கொண்டால் மட்டும் போதாது பயனுள்ள பாடங்களையும் படித்தாக வேண்டும். அதாவது இந்தப் படிப்பினைகள் தரும் தெளிவானப் பாடம் இது தான். ஓர் இஸ்லாமிய சமுதாயம் அதனை அழிக்கத் துடிக்கும் அஞ்ஞான சமுதாயத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள போதுமான வலுவை வளர்த்துக் கொள்ளவில்லையென்றால், அது தலையெடுக்கவோ தலைநிமிரவோ தற்காத்துக் கொள்ளவோ இயலாமற் போய்விடும். இந்த இஸ்லாமிய சமுதாயம் போதிய அளவில் வலுவைப் பெறவில்லையென்றால் அது இந்தப்ப10மியில் உயிர் வாழ்வதே கடினம் இந்த வலுவும் பலமும் எல்லாத் துறைகளிலும் வந்தாக வேண்டும். எடுத்துக்காட்டாக இந்த இஸ்லாமய சமுதாயம் ஈமானை உறுதிப்படுத்தியாக வேண்டும். ஆன்மீகப் பலத்தையும் ஒழுக்க பலத்தையும் பெற்றாக வேண்டும். ஒரு சமுதாயத்தை அமைக்கவும் அதனை நிலைப்படுத்தவும் பலம் பெற்றாக வேண்டும். தேவையான ஆள் பலத்தையும் ஆயத பலத்தையும் பெற்றாக வேண்டும். ஏனைய ஜாஹிலிய்யா சமுதாயத்தை வெற்றி கொள்வதற்காக என்றில்லாவிட்டாலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவாவது இந்த இஸ்லாமிய சமுதாயம் போதுமான ஆள்பலத்தையும் ஆயுத பலத்தையும் பெற்றாக வேண்டும். இந்த அஞ்ஞான சமுதாயம் ஜாஹிலிய்யா சமுதாயம் என்பது தான் என்ன? இந்த மௌட்டிக சமுதாயத்தை இஸ்லாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? ஜாஹிலிய்யா சமுதாயம் என்பது முஸ்லிம் சமுதாயமல்லாத அத்தனை சமுதாயத்தையும் குறிக்கும். இன்னும் குறிப்பாகச் சொன்னால் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்ற கொள்கையை ஏற்று அதன்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாத சமுதாயந்தான் ஜாஹிலிய்யா சமுதாயம் அல்லது அஞ்ஞான சமுதாயம். இந்த வரையறையை வைத்துப் பார்த்தால் இந்தப் ப10மியில் இன்று வழக்கிலிரு;ககும் அத்தனை சமுதாயமும் ஜாஹிலிய்யா சமுதாயதமே அஞ்ஞான சமுதாயமே இதில் இன்றைக்கிருக்கின்ற கம்ய10னிச சமுதாயங்கள் அத்தனையும் அடங்கும். ஏனெனில் இந்தக் கம்ய10னிச சமுதாயங்கள் இறைவன் இருக்கின்றான் என்ற உண்மையை மறுக்கின்றன. இந்தக் கம்ய10னிச சமுதாயங்கள் இந்தப் ப10மியையும் இன்னும் இருப்பவற்றையும் படைத்தவன் இறைவன் தான் என்பதை ஏற்க மறுக்கின்றன. இந்தப் பிரபஞ்சம் தானாகவே தோன்றியது. அல்லது இயற்கையால் ஏற்பட்டது என வாதிக்கின்றன இந்தக் கம்ய10னிசக் கொள்கைகள். மனித வரலாறு என்பது ஒரு பொருளாதார போராட்டத்தால் ஆனது என்பது கம்ய10னிசத்தின் கோட்பாடு. உற்பத்திச் செய்வதும் உற்பத்திச் செய்ததைப் பங்கிட்டு உண்டு வாழ்வதும் தான் மனித வாழ்க்கை என்பது கம்ய10னிசத்தின் பாரம்பரிய கொள்கை ஒரு கம்ய10னிஸ்ட் கட்சிக்குக் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து அடிமைப்பட்டு வாழ்ந்திட வேண்டும் அல்லாமல் இறைவனுக்கோ அவனது வழிகாட்டுதல்களுக்கோ கீழ்ப்படிந்து வாழ்ந்திடக் கூடாது. கம்ய10னிச நாடுகளில் கம்ய10னிஸ்ட் கட்சி தான் மக்களைக் கட்டுப்படுத்தி கட்டாயப்படுத்தி கீழ்ப்படிய வைக்கின்றது. இது கம்ய10னிச சமுதாயங்களின் இறைவன் கம்ய10னிஸ்ட் கட்சி தான் என்பதைத் தெளிவாக விளக்குகின்றது. இந்தக் கொள்கைகளின் இயல்பான விளைவு என்னவெனில் மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்கும் விலங்குகளின் அடிப்படைத் தேவைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதே. விலங்கினங்களுக்கு எப்படி உணவு உடை உறையுள் காமம் இவை தேவையோ அதே போல் மனிதனுக்கும் இவை தேவை. மனிதன் விலங்கிலிருந்து எந்த விதத்திலேயும் மாறுபட்டவனல்ல. இப்படி மனிதனை மிருகத்தின் நிலைக்குத் தாழ்த்தி அவனது ஆன்மிகத் தேவைகளையும் ஒழுக்க விழுப்பங்களையும் அடியோடு மறந்து விடுகின்றது கம்ய10னிசம். மனிதனை விலங்கிலிருந்து உயர்த்தியும் வேறுபடுத்தியும் காட்டிடும் இந்த இயல்பான தேவைகளை மறந்துவிடுவதால் கம்ய10னிச சமுதாயங்களில் வாழ்வோர் மானுடமின்றி வதைபடுகின்றார்கள் ஆன்மிக வறுமையால் அழிகின்றார்கள். இறைவனை நம்புகின்ற சுதந்திரம் அவர்களுக்கில்லை. தங்கள் தனித்தன்மைகளை வெளிப்படுத்திடவும் தங்கள் திறமைகளை வளர்த்திடவும் கம்ய10னிசம் தனி மனிதர்களை விடுவதில்லை. தனி மனிதனின் இயல்புகள் அவனது திறமைகளை மறைக்க விரும்புவதில்லை. வளர்க்கவும் வெளிப்படுத்தவுமே விரும்புகின்றது. கம்ய10னிசம் இந்த இயற்கையை அமுக்கிவிடுகின்றது. தனி மனிதனின் திறமைகள் அவன் உழைத்துச் சேர்க்கும் சொத்துக்கள் உடைமைகள் விரும்பும் தொழிலைத் தேர்ந்தெடுத்து பெருக்கிடும் வளம் வாழ்வு இவற்றால் வெளிப்படும். தனிமனிதன் தொழிலால் அதில் காட்டும் சிறப்பான திறமையால் நுண்மாண்நுழைபுலத்தால் உயர்வான் வாழ்வான். இந்த சிறப்பான பண்புகளால் அவன் உயர்வின் எல்லைகளைத் தொடுவான். இதில் விலங்கினங்களை விட தான் உயர்ந்தவன் தனித்தவன் என்பதை உணர்த்துவான். ஆனால் கம்ய10னிச மண்ணையும் காற்றையும் நெருப்பையும் இன்னம் இவை போன்றவற்றையும் இறைவனுக்கு இணையாக வைத்து வணங்கும் அத்தனை சமுதாயங்களும் அஞ்ஞான சமுதாயங்களே. இத்தகைய சமுதாயங்களை இந்தியாவில் காணலாம். இன்னும் பிலிப்பைன்ஸ் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலும் காணலாம். இவற்றின் மௌட்டிகம் பின்வரும் மடமைகளில் முடங்கிக் கிடக்கின்றது. முதன் முதலாக இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ் அல்லாதவர்களையும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவற்றையும் இறைவனாக ஏற்றுக் கொண்டன. அல்லது இவை இறைவன் ஒருவனே என்பதை விடுத்து எண்ணற்ற வகையறாக்களை இறைவனாக எடுத்துக்கொண்டன. உயிருடன் இருப்பவை உயிரில்லாதவை இவற்றையெல்லாம் இவை இறைவனுக்கு இணையாகக் கற்பித்து வருகின்றன. இரண்டாவதாக இந்தச் சமுதாயங்கள் தங்கள் மௌட்டீகங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெரும் சமுதாயமைப்பை நிறுவி தங்கள் தேவைகளைத் துதிக்கவும் பெருமைப்படுத்தவும் செய்கின்றன. இது போல் இந்தச் சமுதாயங்கள் தங்களைக் கட்டுப்படுத்திடவும் தங்கள் வழக்குகளில் தீர்ப்பு வழங்கிடவும் அல்லாஹ்வின் சட்டங்களைப் பின்பற்றுவதில்லை. அல்லாஹ் அல்லாதவர்களின் வழியாய் வந்த சட்டங்களையே இவர்கள் பின்பற்றுகின்றார்கள். இவர்கள் பின்பற்றும் சட்டங்களை யாத்துத் தருபவர்கள் ஜோதிடர்கள் மந்திரவாதிகள் தந்திரங்களைச் சொல்லி மக்களை மயக்கி மாயங்களைச் செய்வோர் மத குருக்கள் என மக்கள் மத்தியிலே உலாவருவோர் தேசத்தில் சமுதாயத்தில் மூதாதையர்கள் மூத்தவர்கள் எனப்படுவோர் இவர்கள் தாம்.
இன்னும் சில சமுதாயங்களில் இந்தச் சட்டங்களை எழுதி இயற்றிடுவது மதச்சார்பற்ற நிறுவனங்களும் நிருவாகங்கள் எனப்படும் சட்டசபைகளும் சட்டப்பேரவைகளும் நாட்டையாளும் மன்றங்களும், இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ்வின் ஷாPஅத் சட்டங்களைப் பின்பற்றவில்லை. இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ் அல்லாதவர்கள் இயற்றிய சட்டங்களைக் கொண்டே தங்கள் வாழ்வை வடிவமைத்துக் கொள்கின்றன. ஆனால் உண்மையில் மனிதன் தன் வாழ்வை வழி நடத்தும் சட்டங்களாக அல்லாஹ்வின் சட்டங்களையே எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் அந்தச் சட்டங்களைப் பின்பற்றும் அழகிய முன்மாதிரி அல்லாஹ்வின் அறுதித் தூதர் முஹம்மத்(ஸல்)அவர்களின் வாழ்க்கையிலேயே இருக்கின்றது. இன்றைக்கிருக்கின்ற எல்லா ய10த சமுதாயங்களும் கிறிஸ்தவ சமுதாயங்களும் அஞ்ஞான ஜாஹிலிய்ய சமுதாயங்களே. இந்தச் சமுதாயங்கள் உண்மையான இறை நம்பிக்கைகளை உருக்குலைத்து விட்டன. இன்னும் இந்தச் சமுதாயங்கள் இறைவனுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரங்களையும் ஆற்றல்களையும் இன்னும் சிலருக்கும் இருப்பதாகக் கற்பிக்கின்றன. இப்படி இவர்கள் இறைவனுக்கு வை;ககும் இணை தேவகுமாரன் என இறைவனுக்கோர் மகனைக் கண்டு பிடித்துத் தந்ததிலும் பிதா சுதன் பரிசுத்த ஆவி என ஆண்டவனை கூறு போட்டுத் தந்ததிலும் வெளிப்படுகின்றது. இன்னும் சில நேரங்களில் இவர்கள் சில கடவுள் கொள்கைகளைக் கற்பிக்கின்றனர். இந்தக் கடவுள் கொள்கை உண்மையான இறை கொள்கையிலிருந்து வெகுதூரம் சென்று விடுகின்றன.
யூதர்கள் உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர் (இவ்வாறே)கிறிஸ்தவர்கள் மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். இவர்கள் தங்கள் வாய்களால் கூறும் இக்கூற்றானது இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றையே ஒத்திருக்கின்றது. அல்லாஹ் இவர்களை அழித்து விடுவானாகவும் (சத்தியத்தைப் புறக்கணித்து)இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர் (அல்குர்ஆன் 9:30)

நிச்சயமாக அல்லாஹ் (பிதா சுதன் பரிசுத்த ஆவி ஆகிய இம்)மூவரில் ஒருவன் தான் என்று கூறியவர்களும் மெய்யாகவே நிராகரிப்போராகி விட்டனர். ஏனென்றால் (ஒரே)ஆண்டவனைத் தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே (இவ்வாறு)அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிடில் (இவ்வாறு கூறிய)அவர்களிலுள்ள நிராகரிப்போர்களைத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக வந்தடையும் (அல்குர்ஆன் 5:73)


அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது என்று இந்த ய10தர்கள் கூறுகின்றனர் (அவ்வாறன்று)அவர்களது கைகள் தாம் கட்டப்பட்டிருக்கின்றன. அன்றி இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டனர். அல்லாஹ்வுடைய கைகளோ (எப்போதும்)விரிந்தே இருக்கின்றன. அவன் விரும்பியவாறெல்லாம் அள்ளிக் கொடுக்கின்றான். ஆனால் உம் இறைவனால் உமக்கு அருளப் பெற்ற இவ்வேதம் அவர்களில் பெரும்பான்மையினருக்கு அட்டூழியத்தையும் நிராகரிப்பையுமே அதிகப்படுத்தி விடுகின்றது. ஆகவே நாம் அவர்களுக்கிடையில் விரோதத்தையும் குரோதத்தையும் மறுமை நாள் வரையில் (இருக்கும்படி)விதைத்து விட்டோம். அவர்கள் (விசுவாசிகளுக்கிடையில்)யுத்த நெருப்பை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்துவிடுகின்றான். ஆனால் (இன்னும்)அவர்கள் ப10மியில் விஷமம் செய்து கொண்டே அலைகின்றார்கள். அல்லாஹ் விஷமம் செய்வோரை நேசிப்பதில்லை (அல்குர்ஆன் 5:64)


ய10தர்களும் கிறிஸ்தவர்களும் நாங்கள் அல்லாஹ்வுடைய குமாரர்களாகவும் அவனால் நேசிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றோம் என்று கூறுகின்றனர் (ஆகவே நபியே அவர்களை நோக்கி)நீர் கூறும் அவ்வாறாயின் உங்கள் குற்றங்களுக்காக அவன் உங்களை ஏன் (அடிக்கடி தண்டிக்கும் முறையில் )துன்புறுத்துகின்றான். (உண்மை)அவ்வாறன்று நீங்களும் அவன் படைத்த (மற்ற)மனிதர்கள் போன்று தாம். (நீங்கள் அவனுக்குப் பிறந்த குமாரர்களல். ஆகவே உங்களிலும்)அவன் விரும்பியவர்களை மன்னிக்கின்றான். அவன் நாடியவர்களை வேதனை செய்கின்றான். (ஏனென்றால்)வானங்கள் ப10மியுடையவும் இவைகளுக்கு மத்தியிலுள்ள யாவற்றினுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே அவனளவில் தான் (யாவரும்)செல்ல வேண்டியதாயிருக்கின்றது (அல்குர்ஆன் 5:18)


இந்தச் சமுதாயங்களெல்லாம் அஞ்ஞான சமுதாயங்கள் அல்லது மௌட்டீக சமுதாயங்கள் ஏனெனில் இவை இறைவனை வணங்கும் முறை இவை கடைப்பிடிக்கும் நடைமுறை பழக்க வழக்கங்கள் எல்லாம் தவறான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. துவறானவை மட்டுமல்ல. சிதைக்கப்பட்டவை திரிக்கப்பட்டவை. இந்தச் சமுதாயங்களெல்லாம் அஞ்ஞான மௌட்டீக சமுதாயங்கள் ஏனெனில் இவையெல்லாம் அல்லாஹ்வை வணங்கவில்லை. வழிபடவில்லை. இவை அல்லாஹ் அல்லாதவர்களின் சட்டங்களைக் கீழ்ப்படிந்து நடப்பவை. இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ்வின் சட்டங்களை ஏற்றுக் கொள்ளவுமில்லை. அல்லாஹ்வின் கட்டளைகள் தாம் அனைத்துச் சட்டங்களுக்கும் அடிப்படையாக அமைந்திட வேண்டும் என கருதவுமில்லை. மாறாக இவை மனிதர்களை அங்கமாகக் கொண்ட சட்டசபைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தச் சட்டப் பேரவைகள் தாம் சட்டங்களை ஏற்றிடும் அனைத்து அதிகாரங்களையும் பெற்றவை. இதன் மூலம் அல்லாஹ்வு;க்கு மட்டுமே சொந்தமான உரிமையைப் பறித்துக்கொண்டார்க்ள. திருமறையாம் திருக்குர்அன் அருளப்பட்ட நாள்களில் இந்த உரிமைப் பறிப்புகளைச் செய்யும் சமுதாயங்களை அல்லாஹ்வோடு ஏனையோரையும் இறைவனாக எடுத்துக் கொண்ட சமுதாயங்களாகவே சுட்டிக்காட்டிற்று. ஏனெனில் இந்தச் சமுதாயங்கள் பாதிரிமார்களையும் மதகுருக்களையும் சட்டம் இயற்றும் அதிகாரிகளாகவும் அடிபணிந்து நடக்க வேண்டிய ஆற்றலார்களாகவும் எடுத்துக்கொண்டன.

இவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகன் மஸீஹையும் (தங்கள்)தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றளர். எனினும் ஒரே ஆண்டவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்று இவர்கள் (யாவரும்)ஏவப்பட்டிருக்கின்றனர். வணக்கத்திற்குரிய நாயன், அவனையன்றி வேறொருவனும் இல்லை. அவர்கள் இணைவைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன் (அல்குர்ஆன் 9:31)

இவர்கள் தங்கள் மதகுருமார்களின் முன்னால் மண்டியிட்டு அடிதொழுது ஆதரிக்கவில்லை. ஆனால் இவர்கள் தங்கள் வாழ்க்கையை வழி நடத்தும் சட்டங்களை யாத்துத் தருகின்ற அதிகாரத்தை தங்கள் மத குருமார்களுக்கும் தங்கள் பாதிரிகளுக்கும் தந்தார்கள். இதன் மூலம் தங்கள் மதகுருமார்களையும் பாதிரிகளையும் இறைவனாக ஆக்கிக் கொண்டார்கள். திருக்குர்ஆன் அன்றைக்கு இவர்கள் மேல் இப்படியொரு தீர்ப்பை வழங்கியது என்றால் இன்றைக்கும் அவர்களுடைய நிலை இது தான். இன்றைக்கு ஒரு சிறு மாற்றம். அது இன்று இவர்கள் தங்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரின் கைகளில் அதிகாரம் அனைத்தையும் ஒப்படைத்து அவர் சொல்வதைப் போல் தங்கள் வாழ்க்கையை வழிநடத்துகின்றார்கள். இறுதியாக இன்றைக்கு முஸ்லிம் சமுதாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றவற்றில் அனேக சமுதாயங்கள் (ஜாஹிலிய்ய)அஞ்ஞான சமுதாயங்களே. இந்தச் சமுதாயங்களை அஞ்ஞான சமுதாயங்கள் என அழைக்கிறோம். காரணம் இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ் அல்லாதவர்களை நம்புகின்றன என்பதனால் அல்ல. அல்லது இந்தச் சமுதாயங்கள் தொழும் போது அல்லாஹ்வை விடுத்து அடுத்தவர்களையும் தொழுகின்றன என்பதனால் அல்ல. இந்தச் சமுதாயங்களை அஞ்ஞான சமுதாயங்கள் என அழைப்பதற்கான காரணம் இவர்களுடைய வாழ்க்கைகள் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை மட்டுமே கொண்டு வழி நடத்தப்படவில்லை. இவர்கள் அல்லாஹ் ஒருவனே இறைவன் வேறு இறைவன் இல்லை என்பனவற்றை அழுத்தமாக நம்புகின்றனர். ஆனால் தங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் சட்டங்களை இயற்றும் அதிகாரங்களை அல்லாஹ் அல்லாதவர்களிடம் ஒப்படைத்து, இந்த அல்லாஹ் அல்லாதவர்கள் இயற்றும் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றார்கள். பின்னர் இந்தச் சட்டங்களின் அடிப்படையில் சில வாழ்க்கை முறைகளையும் பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் நெறிமுறைகளையும் தாரதம்மியங்களையும் இங்கிதங்களையும் வளர்த்துக் கொள்கின்றனர். இவற்றை வாழ்க்கையில் கிஞ்சித்தும் வழுவாமல் கடைப்பிடித்து வாழுகின்றனர். வாழ்க்கையில் நாம் எப்படி ஒழுகுகின்றோமோ அதைக்கொண்டே நாம் எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இறைவன் நிர்ணயிக்கின்றான். இனை இறைவன் இப்படிக் குறிப்பிடுகின்றான்.


எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே (அல்குர்ஆன் 5:44)

எவர்கள் அல்லாஹ் அருளிய (வேதக்கட்டளை)பிரகாரம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அக்கிரமக்காரர்கள் தாம் (அல்குர்ஆன் 5:45)


சட்டங்களை இயற்றி அவற்றை மக்கள் மேல் திணிப்பவர்களைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறினான் என்றால் அந்தச் சட்டங்களைப் பின்பற்றுவோர் பற்றி இப்படிக் கூறுகின்றான்


(நபியே)உம்மீது அருளப்பட்ட (இவ்வேதத்)தையும் உமக்கு முன்னர் அருளப்பட்டுள்ள (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே தாங்கள் விசுவாசிப்பதாகச் சாதிக்கின்ற சிலரை நீர் பார்க்கவில்லையா? நிராகரித்து விட வேண்டுமென்று கட்டளையிடப் பெற்ற ஒரு விஷமியை அவர்கள் (தங்களுக்குத்)தீர்ப்புக் கூறுவோனாக ஆக்கிக் கொள்ள விரும்புகின்றனர். (விஷமியாகிய)அந்த ஷைத்தானோ அவர்களை வெகுதூரமான வழிகேட்டில் செலுத்தவே விரும்புகின்றான் (அல்குர்ஆன் 4:60)


..உம் இறைவன் மீது சத்தியமாக அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யம் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிபடாதவரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள் (அல்குர்ஆன் 4: 65)

இதற்கு முன்னால் இறைவன் ய10தர்களையும் கிருஸ்தவர்களையும் இறைவனுக்கு இணை வைத்ததாகக் குற்றம் சுமத்துகின்றான். அதே போல் அவர்கள் உண்மையான இறைவனை நம்ப மறுத்தார்கள் என்றும் குற்றம் சுமத்துகின்றான். இவற்றிற்கெல்லாம் அவர்கள் செய்த தவறு. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான உரிமைகளைத் தங்கள் பாதிரிகளுக்கும் சந்நியாசிகளுக்கும் கொடுத்து விட்டார்கள். இதே போல் இன்று முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான உரிமைகள் பலவற்றை தங்களுள் சில பல சர்வாதிகாரிகளுக்கும் உயர்குலத்தில் பிறந்நவர்கள் என்பவர்களுக்கும் கொடுத்து விட்டார்கள். ய10தர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் பாதிரிகளிடமும் ரிப்பிய10ன்களிடமும் அல்லாஹ்வின் உரிமைகளை ஒப்படைத்தது இணைவைப்பு என்றால், அந்தப் பாதிரிகளும் ரிப்பிய10ன்களும் சட்டம் என சாற்றியவை முன்பு சரணடைந்தது இணை வைப்பு என்றால் இதையே வேறு வடிவங்களில் முஸ்லிம்கள் செய்தால் அதுவும் இணைவைப்பே. பாதிரிகளும் ரிப்பிய10ன்களும் வைத்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது பாதிரிகளையும் ரிப்பிய10ன்களையம் தொழுவதுதான் என்றால் இன்று முஸ்லிம்கள் யாருடைய சட்டங்களைக் கீழ்ப்படிகின்றார்களோ அவர்களைத் தொழுகின்றார்கள் என்பதே உண்மை. கிறிஸ்தவர்கள் நபி ஈஸா(அலை)அவர்களை தேவகுமாரர் என்றும் சில நேரங்களில் தேவன் இறைவன் என்றும் கூறியது ஏகத்துவம் (தௌஹீத்)இறைவன் ஒருவனே என்ற அடிப்படைக் கோட்பாட்டிற்கு எதிராக எடுத்து வைத்தப் போர்ப்பிரகடனம். யூதர்கள் தங்கள் மதகுருமார்கள் இயற்றிய சட்டங்களுக்கு தலைதாழ்த்தியது அல்லாஹ்வின் வாழ்க்கை நெறிக்கு எதிராக செய்யப்பட்ட போர்ப்பிரகடனம். இந்த இரண்டு செயல்களுமே அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற அடிப்படைக்கு எதிராகக் கிளர்ச்சிச் செய்வது தான். இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் பகிரங்கமாகத் தங்களை மதச்சார்பற்றவர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்கின்றார்கள். எங்களுக்கும் மார்க்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறுத்தெறிந்துப் பேசுகின்றார்கள். இன்னும் சில முஸ்லிம்கள் அல்லாஹ்வின் அழகிய நிறைவான வழிகாட்டுதலாம் இஸ்லாத்திற்கு மதிப்பும் மரியாதையும் தருகின்றார்கள் உதட்டளவில். இந்த வாய்ச்சொல் வல்லுநர்க்ள, தங்களது நிஜ வாழ்க்கையிலிருந்து இஸ்லாத்தை முழுமையாக வெளியேற்றி விட்டார்கள். இன்னும் பல முஸ்லிம்கள் அல்லாஹ் வகுத்து வழங்கிய இந்த நிறைவான வாழ்க்கை நெறியின் நுழைவாயிலைக் கூடத் தீண்டியதில்லை. இவர்கள் நாங்கள் கண்களுக்குப் புலப்படாதவற்றை நம்பத் தயாராக இல்லை என்றும் நாங்கள் எங்கள் வாழ்க்கையை அறிவியலின் அடிப்படையில் விஞ்ஞானத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்ள விரும்புகின்றோம் என்றும் பிதற்றுகின்றனர். விஞ்ஞானம் என்ற அறிவியலும் கண்ணுக்குப் புலப்படாதவற்றை நம்புவதும் முன்னுக்குப் பின் முரணானவையாம். கண்ணுக்கும் காதுக்கும் ஒவ்வாதவையாம். இவர்களின் இந்தப் பிதற்றல் வடிகட்டின முட்டாள்தனமே அல்லாமல் வேறல்ல. ஏனெனில் முட்டாள்தனத்தை முன்னே விட்டுப் பின்னே செல்பவர்கள் முதன் முதலில் இப்படித்தான் பிதற்றித் தங்கள் முத்திரையைப் பதித்துக்கொள்வார்கள். (திருக்குர்ஆனின் நிழலில் எனற் செய்யித் குதுப் அவர்களின் திருமறை விளக்கவுரையில் இது குறித்து விரிவான விளக்கம் இடம் பெற்றுள்ளது). முஸ்லிம்களில் இன்னும் சிலர் சட்டங்களை வகுத்து வழங்கும் அதிகாரத்தை சிலருடைய விருப்பங்களுக்கு விட்டுவிடுகின்றார்கள். அதாவது அல்லாஹ் அல்லாத சிலரிடம் விட்டு விடுகின்றார்கள். இந்தச் சிலர் தங்களுக்குத் தோன்றியவற்றையும் தங்கள் விருப்பங்களுக்கு உகந்தவற்றையும் சட்டங்களாக ஆக்கிவைத்துவிட்டு இது தான் ஷாPஅத் அல்லாஹ்வின் சட்டங்கள் எனக் கூறுகின்றனர். இந்தச் சட்டங்களை அந்த மக்களும் பின்பற்றுகின்றார்கள். இந்தச் சமுதாயங்கள் எல்லாம் அல்லாஹ் ஒருவனைத் தவிர இறைவன் இல்லை என்ற கொள்கையிலிருந்து மாறுபட்டவை. இவர்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே வழிப்பட்டவர்களுமல்ல அவனை மட்டுமே தொழுபவர்களுமல்ல. இவற்றையெல்லாம் விளக்கி விட்ட பிறகு இஸ்லாம் இவற்றோடு வைத்துக்கொள்ள விரும்பும் உறவை ஒரே வரியில் சொல்லிவிடலாம். இஸ்லாம் இத்தகைய சமுதாயங்கள் அனைத்தையும் இஸ்லாத்திற்கு மாற்றமானவையாகவும் சட்டத்திற்குப் புறம்பானவையாகவும் கருதுகின்றது. இந்தச் சமுதாயங்கள் எந்தப் பெயரோடு வாழுகின்றன எந்தப் பெயரைக் கொண்டு தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றன என்பனவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை இஸ்லாம். இந்தச் சமுதாயங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தவையல்ல என்ற அடிப்படையில் ஒரே இனத்தைச் சார்ந்தவையே. இந்தச் சமுதாயங்களின் வாழ்க்கை அல்லாஹ்வின் நிறைவான வழிகாட்டுதல்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டவை அல்ல. இதில் இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களுக்கும் வாழ்க்கை நெறிகளுக்கும் இணைவைத்த ஏனைய ஜாஹிலிய்ய அல்லது மௌட்டீக சமுதாயங்களைப் போன்றவையே. இந்த விளக்கங்களுக்குப் பிறகு நாம் ஓர் அடிப்படை வினாவுக்கு விடை காண வேண்டும் அந்த வினா: மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்திட வேண்டிய கொள்கை எது? மனித வாழ்க்கையை வழிநடத்துகின்ற கொள்கைகளாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் தாம் இருந்திட வேண்டுமா? அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் தாம் பின்பற்றப்பட வேண்டுமா? இஸ்லாம் இந்த வினாவுக்கு மிகவும் தெளிவாகப் பதில் தருகின்றது. மனித வாழ்க்கையை வழி நடத்திடும் கொள்கைகளாக அல்லாஹ்வின் வழி காட்டுதல்களே இருந்திட வேண்டும். இதில் தடங்கல்களோ தயக்கங்களோ தடுமாற்றங்களோ ஏற்படுமேயானால் இஸ்லாத்தின் முதல் அடிப்படை நம்பிக்கையின் முதல் தூண் மண்ணிலே வீழ்ந்தது என்று பொருள். இஸ்லாமிய நம்பிக்கையின் முதல் தூண் அல்லாஹ் ஒருவனே இறைவன் முஹம்மத் (ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதராவார்கள் என்பதாகும். இதற்குச் சாட்சியம் சொல்ல வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும். அல்லாஹ்வால் வழங்கப்பட்ட வாழ்க்கை வழிகாட்டுதல் வழி நமது வாழ்வை வடிவமைத்திட நாம் முஹம்மத் (ஸல்)அவர்களின் அழகிய முன் மாதிரியைக் கீழ்ப்படிந்திட வேண்டும். இதையே அல்லாஹ் இப்படிக் கட்டைளையிடுகின்றான்.

..ஆகவே (நம்முடைய)தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமொப்பி)எடுத்துக் கொள்ளுங்கள் அவர் எதனை உங்களுக்குத் தடுத்துக் கொண்டாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 59:7)


யாருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றிட வேண்டும் என்ற வினாவுக்கு அல்லாஹ்வுடைய வழிகாட்டுதலையே பின்பற்றிட வேண்டும் என நறுக்கென்று பதில் தரும் இஸ்லாம் மனிதர்களின் பதிலுக்கு ஒரு வினாவை வைக்கின்றது. அல்லாஹ் அதிகமாக அறிவானா? அல்லது மனிதர்கள் அதிகமாக அறிவார்களா? இந்த வினாவுக்குப் பதிலும் தருகின்றது அல்லாஹ்வே அதிகமாக அறிவான் அவன் உங்களுக்க அறியத் தந்தது மிகவும் குறைவே இங்கே நாம் ஓர் உண்மையை ஒத்துக்கொண்டாக வேண்டும். எந்த இறைவன் நம்மைப் படைத்தானோ எந்த இறைவன் நம்மைப் பாதுகாத்து உணவளித்து வருகின்றானோ எந்த இறைவனிடம் நாம் மீண்டும் போய்ச் சேர்ந்திடுவோமோ அந்த இறைவனே நம்மை ஆட்சி செய்ய வேண்டும். அந்த இறைவனையே நாம் அடிபணிய வேண்டும். அந்த இறைவனின் வழிகாட்டுதல் வழியே நாம் வாழ்ந்திட வேண்டும். இந்த உண்மைக்கு நம்மை உட்படுத்திய பின்னர் பிறிதோர் அறிவுத் தெளிவை நாம் பெற்றாக வேண்டும். அதாவது மனிதர்களால் உருவாக்கப்பட்ட வாழ்க்கை நெறிகளைப் பொறுத்தவரை அவை மனிதர்களின் பலவீனங்களால் பாதிக்கப்பட்டவை. அவை காலப்போக்கில் நமது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராமல் போய்விடும். வழக்கிழந்துவிடும். ஏனெனில் அவை நமது அறிவின் எல்லைகளுக்குட்பட்டவை. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதா? குறையுடைய மனிதனின் அறிவில் அகப்பட்டவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவற்றைப் பின்பற்றுவதா? இதில் அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதே அறிவுடைமை. அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் புதிரானவையோ சிக்கலானவையோ அல்ல. அவை தெளிவானவை, திட்டவட்டமானவை. அவை தெளிவாக முஹம்மத் (ஸல்)அவர்களால் வாழ்ந்து காட்டப்பட்டவை. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் விளக்கங்களை இறைவனின் திருத்தூதர்(ஸல்)அவர்களின் வாழ்வு வாக்கு அவர்கள் வழங்கிய தீர்ப்புகள் அவர்கள் இட்டக் கட்டளைகள் தந்த விளக்கங்கள் காட்டிய சைகைகள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். இதைத்தான் நாம் வழங்கிடும் இரண்டாவது சாட்சியமாகிய முஹம்மத்(ஸல்)அவர்கள் இறைவனின் திருத்தூதராவர்கள் என்பதில் அறிவுறுத்துகின்றோம். அல்லாஹ்வின் வழிகாட்டுததல் ஒரு விவகாரத்தில் இருந்திடும் போது அதில் நாம் கருத்துச் சொல்ல எதுவுமில்லை. அங்கே சூழ்நிலைக்கேற்ப புதுவிதி வகுக்கின்றோம் என நமது விருப்பங்களை உள்ளே புகுத்திடக்கூடாது. இன்னும் நம்மிடம் எழும் எல்லா விவகாரங்களையும் அல்லாஹ் அருளியதைக் கொண்டும் பெருமானார்(ஸல்)அவர்கள் வாழ்ந்து காட்டிதைக் கொண்டுமே தீர்த்திட வேண்டும். இறைவன் தன் அருள்மறையில் இதை இப்படிக் குறிப்பிடுகின்றான்.


(விசுவாசிகளே)உங்களுக்குள் யாதொரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால் அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய)தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங் கொண்டவர்களாயிருந்தால் (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஒப்புக் கொள்ளுங்கள்)இது தான் நன்iயாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும். (அல்குர்ஆன் 4:59)

இஜ்திஹாத் என்ற சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்வது என்பதன் வரையறைகள் தெளிவாக இருக்கின்றன. அந்த முடிவுகள் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் வகுத்தளித்த வரைமுறைகளுக்கு வெளியே சென்றிடக் கூடாது. அதே போல் அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் (ஸல்)அவர்களும் தங்கள் வழிகாட்டுதல்களின் வழி வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு எதிராகவும் இருந்திடக்கூடாது. சூழ்நிலைக்கேற்ப விதிகளை வகுக்கின்றோம் எனக்கூறிக் கொண்டு தங்கள் விருப்பங்களையும் வெறுப்புகளையம் சட்டமாக ஆக்கி அதை ஷாPஅத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் என் முழங்கிக் கொண்டிருக்கின்றனர் பலர். எல்லா நிலைகளிலேயும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே சொந்தம் அல்லாஹ்வும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுமே இ;ஙகே இயற்றப்படும் சட்டங்களின் ஆதாரம் அடிப்படை என்பது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டாக வேண்டும். புதியதாக ஏற்படும் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை எடுத்திடும் போது அல்லாஹ்வின் அறுதி வழிகாட்டுதலாம் திருக்குர்ஆன் அவனது இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்)அவர்களின் வாழ்வு வாக்கு ஆகிய அடிப்படை ஆதாரங்கள் எதை விரும்புகின்றன என்பதை அறிந்திட முனைந்திட வேண்டும். இந்த முயற்சி மிகவும் அக்கறையும் முனைப்பும் கொண்டதாக இருந்திட வேண்டும். இதில் இன்றைய காலகட்டங்களில் நாம் ஒரு விஷயத்தில் கவனமாக இருந்திட வேண்டும். இன்றைய நாள்களில் சிலர் தங்கள் அதிகாரங்களைச் செலுத்திட முன் வருகின்றார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் பெயரையும் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இது தான் ஐரொப்பாவில் இடம் பெற்றது. அங்கே சிலர் கிறிஸ்தவ ஆலயங்களின் பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்தில் தங்களை அமர்த்திக் கொண்டார்கள். அதை போன்றதொரு அமைப்போ முறையோ இஸ்லாத்தில் இல்லை. இப்போது என்னிடத்தில் இறைவன் கூறினான் என்று பேசுகின்ற முறை இஸ்லாத்தில் இல்லை. பெருமானார்(ஸல்)அவர்களின் காலத்திற்குப்பின்னால் யாரும் இறைவன் கூறினான் என்னிடம் என்று இங்கே கூறிட முடியாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் மார்க்கம் இறைவனின் வழிகாட்டுதல்கள் வாழ்ந்து காட்டுவதற்கே. இதனை சிலர் அடிக்கடி தவறாகப் பயன்படுத்தகின்றார்கள். நிச்சயமாக இந்த மார்க்கம் வாழ்ந்து காட்டுவதற்கே இதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் எத்தகையதொரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதற்கு? அந்த வாழ்க்கை இந்த மார்;க்கம் என்னென்ன கொள்கைகளுக்காக வாழுகின்றதோ அந்தந்த கொள்கைகளுக்காக அமைந்திட வேண்டும். இந்தக் கொள்கைகளைப் போல் வழிமுறைகளும் இங்கே முக்கியம். இஸ்லாம் வழங்கும் இந்த வாழ்க்கை நெறியும் இஸ்லாம் கடைப்பிடிக்கச் சொல்லும் வழிமுறைகளும் இயற்கையோடும் மனிதனின் இயல்புகளோடும் முற்றாக இயைந்து செல்பவை. அத்தோடு இஸ்லாம் காட்டும் வாழ்க்கை வழி மனிதனின் அனைத்துத் தேவைகளையும் அப்படியே நிறைவேற்றுவது. ஏனெனில் இஸ்லாம் என்ற இந்த உன்னதமான வாழ்க்கை நெறி மனிதனைப் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது. அந்த அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன். அந்த அல்லாஹ் மனிதனின் உள்ளும் புறமும் விளையும் வினைகளை நன்றாக அறிந்தவன். அவன் கேட்கின்றான்.

(யாவையும்)சிருஷ்டித்தவன் (இருதயங்களில் உள்ளவைகளை)அறியமாட்டானா? அவனோ உட்கிருபையுடையோனாகவும் (யாவையும் வெகு)நுட்பமாக அறியக் கூடியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 67:14)


மனிதர்கள் தங்கள் விருப்பங்கள் போல் வாழ்ந்து விட்டு இது இஸ்லாம் காட்டிய வாழ்க்கை வழிதான் என வளைத்தும் திரித்தும் விளக்கங்களை கூறுகின்றார்கள். இதையெல்லாம் நியாயப்படுத்துவது இஸ்லாத்தின் வேலையல்ல. இஸ்லாம் ஓர் உரைகல். இஸ்லாம் வழங்கும் அடிப்படைகளையும் நெறிமுறைகளையும் வைத்துக் கொண்டு யாருடைய வாழ்க்கை இஸ்லாமிய முறைப்படி அமைந்திருக்கின்றது யாருடைய வாழ்க்கை இஸ்லாமிய முறைப்படி அமையவில்லை என்பதை வேண்டுமானால் வரையறுக்கலாம். அல்லாமல் இஸ்லாத்தை வளைத்து சிலர் வாழும் வாழ்க்கையை நியாயப்படுத்திட முடியாது. இது தான் இறைவனின் வழிகாட்டுதல்கள் வாழ்ந்து காட்டுவதற்கே என்பதன் இயல்பான பொருள். மனிதனின் நல்வாழ்வை மனதில் கொண்டே அல்லாஹ் ஷாPஅத் சட்டங்களை அமைத்துத் தந்திருக்கின்றான். அவற்றின் அடிப்படையில் மிகவும் அழகிய முறையில் வாழ்ந்து காட்டினார்கள் முஹம்மத் (ஸல்)அவர்கள். ஆகவே அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களாகிய் ஷாPஅத்தின் அடிப்படையில் வாழ்ந்திடும் போதே மனிதனின் வாழ்க்கை நிம்மதியும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும். இதைவிடுத்து எவரேனும் ஷாPஅத்திற்கு எதிராக வாழ்வதிலே தான் வாழ்க்கையின் பயன் கிடைக்கும் எனக் கருதினால் அவன் தன் சிந்தனையில் தடுமாறி விட்டான் என்றே பொருள். அத்தோடு இஸ்லாம் என்ற விசாலமான வளாகத்திற்கு வெளியே போய்விட்டான் என்று பொருள். இறைவன் கூறுகின்றான்.


அவர்கள் (தங்கள்)மனோ இச்சையையம் (வீண்)சந்தேகத்தையும் பின்பற்றுகின்றார்களேயன்றி வேறன்று. நிச்சயமாக அவர்களின் இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கின்றது. எனினும் அவர்கள் அதைப் பின்பற்றுவதில்லை. மனிதன் விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடுமா? ஏனென்றால் இம்மையும் மறுமையும் அல்லாஹ்வுக்குரியனவே (அவன் விரும்பியவர்களுக்கே அவற்றின் பாக்கியத்தை அளிப்பான்) (அல்குர்ஆன் 53:23 – 25)

சிந்தனையில் தடுமாறி அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக வாழ்வதிலே தான் பலனும் முன்னேற்றமும் இருக்கின்றன எனக் கருதும் இவர்கள் நிராகரிப்பாளர்களே. இப்படிக் கருதுபவர்களைக் கணமேனும் மார்க்கத்தன் மேதாவிகள் என ஒத்துக்கொள்ளக்கூடாது.

தொடர்ந்து வரும்...

Monday, May 11, 2009

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும்


கிலாஃபா முற்றாக அழிக்கப்பட்டு 85 வருடங்களையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் இன்றைய சூழலில் முஸ்லிம் உம்மத் தாம் உலகின் பற்திசைகளிலும் எவ்வாறு அதிகாரத்துடனும், கண்ணியத்துடனும் இருந்தோம் என்பதை விரிவாகவும், ஆழமாகவும் புரிவது இன்றியமையாததாகும். மேலும் கிலாஃபத்தின் வரலாறு குறித்தும் அது எவ்வாறு படிப்படியாக மறைய ஆரம்பித்து பின்னர் முற்றாக வீழ்த்தப்பட்டது தொடர்பாகவும் ஆராய வேண்டியதும் முக்கியமானதாகும், மேலும் சிலர் தவறாகக்கூறுவதைப்போல கிலாஃபத்தின் வீழ்ச்சியின் போது அப்போதிருந்த மார்க்க அறிஞர்களும் முஸ்லிம்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்ற கருத்தின் உண்மைநிலை குறித்தும் நாம் முற்றாக ஆராய வேண்டும். உண்மையில் அந்தக்கூற்று மிகவும் தவறானதாகும். ஏனெனில் து}ய்மையான முஸ்லிம்கள் பலர் கிலாஃபத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பதில் காட்டிய அக்கறையையும், அது தமது கண்முன்னால் அழிக்கப்படும்போது அதனால் அவர்கள் அடைந்த வேதனைகளையும் வரலாறு பதிந்து வைத்திருக்கிறது. இதற்கொரு சிறந்த சான்றே இந்திய முஸ்லிம்களும், இந்தியாவில் உருவான கிலாஃபத் இயக்கமுமாகும்.

கிலாஃபத் அழிக்கப்பட்டபோது இந்திய முஸ்லிம்களின் எதிர்நடவடிக்கை எவ்வாறிருந்தது என்பதை ஆராய முன் எவ்வாறு இஸ்லாமிய ஆட்சி இந்திய துணைக்கண்டத்தை வந்தடைந்தது என்பதை ஆராய்வது அவசியமாகும். இன்று முஸ்லிம்களின் உலக சனத்தொகையில் ஏறக்குறைய அரைப்பகுதியை அதாவது அரை பில்லியன் பேரை இன்றைய இந்தியாவின் 250 மில்லியன் முஸ்லிம்கள், பாகிஸ்தானின் 160 மில்லியன் முஸ்லிம்கள், பங்களாதேஸின் 120 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளடக்குகின்றனர் என்பதும், இன்றைய முஸ்லிம் உம்மத்தின் பெரும்பான்மையோரின் மொழியாக (அரபைவிடவும்) உருது மொழி மாறிவிட்டது என்பதும் இங்கே கவனத்திற்கொள்ளத்தக்கது.

இந்தியாவில் கிலாபத்தின் சுருக்க வரலாறு

முஸ்லிம் வர்த்தகர்கள் சிலர் கி.பி 711ம் ஆண்டு சிந்து நதிக்கரை ஓரமாக இந்து சமுத்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்தார்கள். இதன்போது இவர்கள் பயணம் செய்த கப்பல் கடத்தப்பட்டு கொள்ளையிடப்பட்டு பின் பயணம் செய்த அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். இந்தச் செய்தி இஸ்லாமியக் கிலாபத்தின் தலைமையகத்தை எட்டியது. அன்றைய கலிஃபா அல் வலித் இப்னு அப்துல் மலிக்; இதுபற்றி அறிந்து இடம்பெற்ற அநீதிக்காக சிந்தின் ஆட்சியாளர்களை மன்னிப்புக்கேட்குமாறும் சிறைப்பிடிக்கப்பட்ட முஸ்லிம்களை விடுவிக்குமாறும் கோரும்படி, பக்தாத்திலே தனது ஆளுநராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூசுபிற்கு பணித்தார்கள். இப்பாரிய பணிக்காக முஸ்லிம்களின் படையொன்றும் சிந்து பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் இஸ்லாமியப் படைக்குத் தலைமை தாங்கியபடி வெறுமனவே 17 வயதே நிரம்பிய முஹம்மது பின் காஷிம் அல் தகாபி தனது படையுடன் சிந்திற்கு புறப்பட்டார்.
இஸ்லாமியப்படை சிந்துப்பிரந்தியமான தபெலை (தற்போதைய கராச்சி) அடைந்தவுடன் படைத் தளபதி கலீஃபாவின் கோரிக்கையை சி;ந்தை ஆட்சி செய்துகொண்டிருந்த ராஜா தாஹிரிடம் முன்வைத்தார். எனினும்; இந்த நியாயமான கோரிக்கையை ராஜா தாஹிர் அடாத்தாக மறுத்தார். எனவே முஸ்லிம் படையினர் ராஜா தாஹிரை எதிர்த்து தோற்கடித்ததுடன் சிந்தை கைபற்றி கிலாஃபத்தின் கீழ் கொண்டு வந்தனர்.அல்லாஹ்வின்; கட்டளையை மேலொங்கச் செய்யும் நோக்குடன் முஹம்மது பின் காஸிம் முஸ்லிம்கள் சிந்தில் பெற்ற வெற்றியை மேலும் விரிவுபடுத்தினார். இஸ்லாமிய அகிதாவால் உந்தப்பட்ட இந்த இராணுவம் முன்;றே ஆண்டுகளில் முல்தான் வரை படையெடுத்து சிந்தை முழுமையாக கைபற்றியதுடன் பஞ்சாப்பின் கீழ்ப்பகுதியையும் கிலாஃபத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.இந்திய உபகண்டத்தின் வடமேற்கு பிரதேசத்தையும் கைபற்றிய இஸ்லாமிய இராணுவம் அங்கு சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டிருந்தவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து அவர்களை இஸ்லாத்தின் கீழ் கொண்டு வந்தது. முஹம்மது பின் காஸிமின் நிர்வாகம் முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் ஒரே விதமாகவே பரிபாலித்ததுடன் கைபற்றப்பட்ட பகுதிகளின்; அதிகாரிகளாக முன்பு கடமையாற்றிய முஸ்லிம் அல்லாதவர்களையே மீண்டும் அவர்களின் பதவிகளில் அமர்த்தியது. முஹம்மது பின் காஸிம் “மக்களுடனும், அரசுடனும் நேர்மையாக இருங்கள். மக்களின் இயலுமைக்கேற்ப வரிகளை தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என கிலாஃபத்தின் அதிகாரிகளிடம் பணித்தார்.

கலிஃபா இசாம் பின் அப்துல் மாலிக்கி;ன் ஆட்சிக் காலத்தில் (கிபி 724 - கிபி 743) முஸ்லிம்கள் காஷ்மிரையும் கங்ராவையும் கைபற்றினர். கிபி 754 கிபி - 775 காலப்பகுதியில் ஆட்;சி செய்த அப்பாசிய கலிஃபா அபு ஜாபர் அல் மன்சூரின் ஆட்சிக் காலத்தில் கந்தஹாரும் கைப்பற்றப்பட்;டதுடன் இந்திய உபகண்டம் முழுவதையும்; இஸ்லாமிய கிலாஃபத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்பு தீவிரம் பெற்றது.

கிபி 786 - கிபி 809 காலப்பகுதியில்; ஆட்சி செய்த கலீஃபா ஹாரூன் அர் ரஷீத்தின் காலப் பகுதியில் முஸ்லிம்கள் தமது எல்லையை சிந்துவின் மேற்கு பகுதியிலிருந்து குஜாராத் வரை விரிவடையச் செய்தனர். இக்காலப் பகுதியில் இஸ்லாமிய இராணுத்தினரும் அங்கே குடியமர ஆரம்பித்ததுடன் புதிய நகரங்களும் தோற்றம் பெற்றன. இக்காலப்பகுதியில் சாதி முரண்பாடுகளில் சிக்குண்டு குப்ருடன் முரண்பட்டுக்கொண்டிருந்த பெரும்பான்மை இந்தியர்கள் உலகச்சகோதரத்துவ இயக்கமான இஸ்லாமிய உம்மத்துடன் கோர்க்ப்பட்டனர். குப்ரின் காரிருளில் மூழ்கியிருந்தவர்கள் இஸ்லாத்தின் து}ய பரகாசத்திற்குள் நுழைந்தனர். சிலை வணக்கத்திலிருந்து முற்;றாக விடுபட்டு ஏக இறைவனான அல்லாஹ்வை அடிபணிய ஆரம்பித்தனர். இவ்வாறு இன்று மேற்குலகின் திட்டமிட்ட சதியால் பிரிக்கபட்டு இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர், பங்களாதேஸ் என இப்போது அழைக்கப்படும் அனைத்துப்பகுதிகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய கிலாஃபத்தின் கீழ் ஆழப்பட்டன.
எனவே இந்திய வரலாற்றைத் திரித்துக் கூறுபவர்களுக்கு மத்தியில் இந்தியா இஸ்லாமிய கிலாபத்தின் ஓரு பகுதி என்பதை நாம் உணர வேண்டும். சில கலிஃபாக்களின் கவனயீனத்தால் இந்தியா இஸ்லாமிய ஆட்சியின் மேற்பார்வையிலிருந்து சிறுகச் சிறுக விலகத் தொடங்கினாலும் அங்கு ஷாPஆ நிலைநாட்டப்பட்டு வந்ததுடன் பிரித்தானியர்கள்; இந்தியாவை கைபற்றும் வரை அது கிலாபத்தின் கீழே இருந்து வந்தது. முஸ்லிம் வரலாற்றாசிரியரான இப்னு கதPர் அல் திமிஷ்கி தமது புகழ் பெற்ற நு}லான அல் பதாயா வன்நிஹாயாவில் இந்தியா தாருள் இஸ்லாத்தின் ஒரு பகுதி எனக்குறிப்பிடுவதுடன் இந்தியாவின் கைப்பற்றுகை குறித்த பின்வரும் ஹதீஸையும் குறிப்பிடுகிறார்.
ரஸ}ல் (ஸல்) அவர்கள் கூரியதாக அபு ஹ_ரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள.
“இந்த உம்மத்தின் படை சிந்துக்கும், இந்தியாவுக்கும் அனுப்பபடும்”“அப்படையில் பங்கு பெற எனக்கு வாய்ப்பு கிடைத்து, நான் ஷஹீதானால் அது வெற்றியாகும். நான் இங்கு மீண்டும் திரும்பி வந்தால்; நான் விடுதலைபெற்ற அபு ஹ{ரைராவாவேன். அல்லாஹ் எனக்கு நரகிலிருந்து விடுதலை அழிப்பான் (அஹ்மத்)
கிபி 1556 - கிபி 1605 வரையான அக்பரின் ( அக்பர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கிறானார்) காலப்பகுதி தவிர கிபி1205 - கிபி 1526 வரை டெல்லி சுல்தானியக் காலப் பகுதியிலும் கிபி 1526 - 1557 முகலாயக் காலப்பகுதியிலும் இந்தியா கிலாஃபத்தின் ஒரு மாகாணமாகவே இருந்தது.12ம் நு}ற்றாண்டின் இறுதி காலப்பகுதியில் கஸ்னி, முல்தான், சிந்து லாஹ}ர், டெல்லி என பல பகுதிகளை முஹ்மது கஹ்ர்; வரிசையாக கைபற்றத் தொடங்கினார். இவரின் ஜெனர்ல்களில் ஒருவரான குதுபுத்தீன் அய்பக் டெல்லியின் சுல்தானாக பதவியேறறார். பின்பு 13ம் நு}ற்றாண்டின் சம்சுதீன் இல்துமிஷ் கிபி1211 - கிபி 1236 என்ற முன்னால் துர்கிக் (வுரசமiஉ) போராளி டெல்லியின் அதிகாரத்துக்கு வந்தார். இவரின் வருகை பின்னை நாள்; சுல்தான்கள் அனைவருக்கும் மற்றைய பகுதிகளையும் கைபற்ற வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.
தொடர்ந்து வரும்...

Friday, May 8, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 5

ஜிஹாத்

அல்லாஹ்வின் வழியில் போர் நாடறிந்த நாமறிந்த பேரறிஞர் இப்னுகைய்யும் இவர் எழுதிய நூல் சாத் அல்மாஅத். இந்த நூலில் ஒரு அத்தியாயம் அந்த அத்தியாயத்தின் பெயர் இறைத்தூதர் (ஸல்)அவர்கள் இறை மறுப்பாளர்களையும் நயவஞ்சகர்களையும் தன் திருத்தூது துவங்கியது முதல் தன் மரணம் வரை நடத்தியவிதம்: இந்த அத்தியாயத்தில் இந்த அறிஞர் அல்லாஹ்வின் வழியில் போரிடுவது என்பது என்ன? என்பதைச் சுருக்கமாக விளக்கியுள்ளார். அதனை இங்கே காண்போம். இறைவன் தன் திருத்தூதருக்கு அறிவித்த முதல் இறை அறிவிப்பு - முதல் இறை வெளிப்பாடு: படைத்த உமதிறைவனின் திருநாமத்தால் நீர் ஓதவீராக -- அல்குர்ஆன் : 96:1. இது தான் இறைத்தூதுத்துவத்தின் ஆரம்பம். இதை அல்லாஹ் தன் திருத்தூதரிடம் ஓதிடப் பணித்தான். இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதற்கான கட்டளை அப்போது இடப்படவில்லை. பின்னர் இறைவன் கூறுகின்றான். போர்த்திக் கொண்டிருப்பவரே எழுந்து எச்சரியும் இந்தக் கட்டளை பிரச்சாரம் செய்வதற்கானப் பிரகடனம். ஓதுங்கள் என்று ஆரம்பிக்கும் இறைவசனம் முஹம்மத்(ஸல்)அவர்களை இறைவனின் தூதராக நியமித்த நியமன ஆணை. போர்த்திக் கொண்டிருப்பவரே என்று ஆரம்பிக்கும் இறைவசனம் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனப் பணிக்கும் ஆணை. பின்னர் இறைவன் தன் திருத்தூதர்(ஸல்)அவர்களிடம் தன்னுடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிக்கும்படி பணித்தான். பின்னர் அவர்களைச் சார்ந்த அத்தனை பேரையும் எச்சரிக்கைக் கட்டளை இட்டான். தொடர்ந்து அரபு மக்கள் அத்தனைபேரையும் எச்சரிக்கப்பணித்;தான். பின்னர் அரேபியப் பெருநிலத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரையும் எச்சரிக்கப் பணித்தான். பின்னர் இந்த முழு உலகத்தின் முன்பும் இந்த எச்சரிக்கையை எடுத்து வைக்கச் செய்தான். 13 ஆண்டுகளாக அல்லாஹ்வின் பக்கம் மக்களைப் பிரச்சாரத்தின் மூலமே இறைவனின் தூதர் (ஸல்)அவர்கள் அழைத்தார்கள். இந்த 13 ஆண்டுகளிலும் போர்களோ ஜிஸ்யாவோ இருக்கவில்லை. (ஜிஸ்யா என்பது முஸ்லிம்களின் ஆட்சிக்கு உள்ளாலிருக்கும் முஸ்லிமல்லாதவர்கள் மீது விதிக்கப்படும் பாதுகாப்பு வரி இராணுவ சேவைக்காக அவர்களிடம் இவ்வரி வசூலிக்கப்படுகிறது. அவர்களைப் பாதுகாக்க இயலாமற் போனால் இந்த வரி திரும்பத் தரப்பட்டுவிடும்.) அந்த நிலையில் பெருமானார் (ஸல்)அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். பொறுமை சகிப்புத்தன்மை ஆகியவற்றையே மேற்கொள்ள வேண்டும் எனப் பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் இடம் பெயர்ந்திட வேண்டும். மக்காவை விட்டு வெளியேறி மதீனாவைச் சென்றடைய வேண்டும் - எனப் பணிக்கப்பட்டார்கள். பின்னர் போர் புரிவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதாவது இறைவனின் தூதர்(ஸல்)அவர்கள் மீதும் அவர்களைப் பின்பற்றிய முஸ்லிம்கள் மீதும் போர் தொடுத்தவர்களோடு போர்புரியும்படி கட்டளை இடப்பட்டார்கள். தங்கள் மீது போர் தொடுக்காதவர்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றே பணிக்கப்பட்டார்கள். இவற்றிற்கெல்லாம் பின்னர் தான் பெருமானார்(ஸல்)அவர்கள், பல தெய்வக் கொள்கையுடையவர்களை எதிர்த்து அல்லாஹ்வின் மார்க்கம் முற்றாக நிலைநாட்டப்படும் வரை போர்புரியும்படி கட்டளையிடப்பட்டார்கள். ஜிஹாத் என்ற அல்லாஹ்வின் வழியில் புரியும் போருக்கான கட்டளைப் பிறப்பிக்கப்பட்டபின் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் மூன்று பிரிவினராகப் பிரிக்கப்பட்டார்கள்.

ஒன்று முஸ்லிம்களோடு சமாதானம் செய்து கொண்டவர்கள்.
இரண்டு முஸ்லிம்களோடு போர்புரிந்து கொண்டிருப்பவர்கள்.
மூன்று இஸ்லாமிய ஆட்சியின் எல்லலைக்குள் இருப்பவர்கள்.
இவர்களின் உரிமைகளின் பாதுகாப்பிற்கும் உடைமைகளின் பாதுகாப்பிற்கும் உயிர்களின் பாதுகாப்பிற்கும் இஸ்லாமே பொறுப்பு (திம்மிகள் எனப்படுவோர் இவர்கள்தாம்)

யார் யாரோடு சமாதான உடன்படிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றார்களோ அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உடன்படிக்கையை மீறாதவரை முஸ்லிம்கள் உடன்படிக்கைக்குக் கண்டிப்புடன் கட்டுப்பட்டு நடந்திட வேண்டும். ஆனால் அவர்கள் இந்த உடன்படிக்கையை மீறிவிட்டால் - உடைத்துவிட்டால், அவர்கள் அதை உடைத்துவிட்டார்கள் என்பதைத் தெரிவித்திட வேண்டும். அதுவரைக்கும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுத்திடக்கூடாது. எந்தப் போர்ப் பிரகடனமும் செய்திடக்கூடாது. ஆனால் அவர்கள் உடன்படிக்கையை மீறுவதிலேயே நிலைத்திருந்தால் அவர்களோடு போர் புரியலாம். பராஅத் (இது அத்தௌபா என்ற திருக்குர்ஆனின் 9ஆவது அத்தியாயத்தின் இன்னொரு பெயர்) என்ற அத்தியாயம் வெளிப்படுத்தப்பட்டவுடன் இந்த மூன்று வகையான இறை எதிர்ப்பாளர்களையும் எப்படி நடத்திட வேண்டும் என்பது தெளிவாகிவிட்டது. இஸ்லாத்தின் பகிரங்கமான எதிரிகள் என அறிவிக்கும் வேதம் அருளப்பட்டவர்களான ய10தர்களோடும் கிருஸ்தவர்களோடும் போர் புரிய வேண்டும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது. இவர்கள் ஜிஸ்யா என்ற வரியைக் கொடுக்கும் வரை அல்லது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் வரை இந்தப் போர் தொடர வேண்டும். இறைவன் ஒருவன் தான் என்பதை மறுத்து, பல தெய்வங்களை வணங்குபவர்களைப் பொறுத்தவரைக்கும், அதே போல் நயவஞ்சகர்களைப் பொறுத்தவரைக்கும் இந்த அத்தியாயத்தில் அவர்கள் மீது ஜிஹாத் அறிவிக்க வேண்டும் எனக் கட்டளை இடப்பட்டது. இன்னும் அவர்களைக் கடினமாகவே நடத்திட வேண்டும் எனப் பணிக்கப்பட்டது. இறைவனின் தூதர்(ஸல்)அவர்கள் பல தெய்வக் கொள்கையுடையவர்கள் மீது ஜிஹாத் அறிவித்துப் போரிட்டார்கள். நயவஞ்சகர்களைப் பிரச்சாரம் அறிவார்ந்த வாதம் ஆகியவற்றைக் கொண்டு எதிர்கொண்டார்கள். இந்த அத்தியாயத்தின் கடைசியில் பல தெய்வக் கொள்கையைக் கொண்டவர்களோடு இருந்த ஒப்பந்தங்கள் அத்தனையையும் அவற்றின் காலக்கெடு முடிந்தவுடன் முடித்துவிட வேண்டும் எனப் பணிக்கப்பட்டார்கள் இறைவனின் தூதர்(ஸல்)அவர்கள். இந்த அடிப்படையில் முஸ்லிம்களோடு உடன்படிக்கைக் கொண்டிருந்தவர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டார்கள். முதலில் ஒப்பந்தத்தை உடைத்தவர்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டவற்றை நிறைவேற்றாதவர்கள். இவர்களோடு போரிடும்படி இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள். போரிட்டார்கள். வெற்றி பெற்றார்கள். இரண்டாவதாக யார் யாரோடு ஒப்பந்தங்கள் ஒரு குறிப்பிட்டக் காலம்வரை வைக்கப்பட்டிருந்தனவோ அவர்கள். இவர்கள் ஒப்பந்தத்தை உடைத்தவர்களுமல்ல இறைவனின் தூதல்(ஸல்)அவர்களைத் தாக்குவதில் யாருக்கும் உதவி செய்தவர்களுமல்ல. இவர்களைப் பொறுத்தவரை இவர்களுடன் இருக்கும் ஒப்பந்தங்கள் இவற்றின் காலம் முடியும்வரை கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அல்லாஹ் அறிவுறுத்தினான். மூன்றாவதாக எந்த ஒப்பந்தத்திலும் இல்லாதவர்கள் அவர்கள் பெருமானார்(ஸல்)அவர்களோடு போரிட்டுக் கொண்டிருந்தவர்களுமல்ல. இவர்களோடு எந்தக் காலக் கட்டுப்பாடும் கடப்பாடும் இருந்ததில்லை. இவர்களைப் பொறுத்தவரை இவர்களுக்கு நான்கு மாத கால அவகாசம் அளிக்கும்படி பணிக்கப்பட்டது. இந்த நான்கு மாதக் கெடு முடிந்தவுடன் அவர்களை பகிரங்க எதிரிகளாக பாவித்து அவர்களோடு போராடிட வேண்டும்.. ஆனால் இந்த நான்கு மாத கெடு அல்லது அவகாசம் முடிவதற்குள் இவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத (முஸ்லிமல்லாதவர்கள்)தங்கள் பாதுகாப்பு வரியான ஜிஸ்யாவைச் செலுத்தினார்கள். ஆக பாரஅத் என்ற அத்தியாயம் அருளப்பட்டபின் நம்பிக்கை கொள்ளாதவர்கள் அதாவது அல்லாஹ் ஒருவன் தான் இறைவன் என்பதை நம்பாதவர்கள் மூன்றுவகையாகிவிட்டார்கள்.

1. எதிரிகளாக நின்று போர் புரிந்தவர்கள்
2. ஒப்பந்தத்தால் சமாதானம் பேசி நின்றவர்கள்
3. இஸ்லாத்தின் உயர்வையும் ஆட்சியையும் ஒத்துக் கொண்டு தங்கள் பாதுகாப்பு வரியைச் செலுத்தி பிரஜைகளாகி வாழ்ந்தவர்கள்.

ஒப்பந்தத்தால் சமாதானம் பேசி நின்றவர்கள் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களாகி விட்டார்கள். இப்போது இந்த முழு உலகத்திலும் வாழ்ந்தவர்கள் மூன்று வகையாயினர்.

இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களாக வாழ்ந்து பெருமானார்(ஸல்)அவர்களின் தலைமையின் கீழ் நின்றவர்கள்
பெருமானார்(ஸல்)அவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள். இவர்கள் தாம் திம்மிகள் என அறிகின்றோம். பாதுகாப்பு வரியைச் செலுத்தி வாழ்ந்தவர்கள்.
பெருமானார்(ஸல்)அவர்களோடு போரிட்டுக் கொண்டிருந்தவர்கள்.

நயவஞ்சகர்களைப் பொறுத்தவரை இறைவன் பெருமானார்(ஸல்)அவர்களிடம் அவர்களுடைய புறத் தோற்றத்தை ஏற்றுக்கொண்டு அவர்களுடைய எண்ணங்களை இறைவனிடம் விட்டுவிடும்படி கட்டளையிட்டான். இவர்களுடன் விவாதம் அவர்களை திருத்துதல் ஆகியவற்றின் மூலம் ஜிஹாத் செய்யும்படி பணித்தான். அவர்களுடைய இறுதிச் சடங்குகளில் பிரார்த்தனை செய்யக் கூடாது என்றும் அவர்களை அடக்கிய இடங்களில் துஆ(இறைஞ்சுதல்) செய்யக்கூடாது என்றும், அவர்களுடைய பாவங்களை மன்னிக்க அல்லாஹ்விடம் மன்றாடக்கூடாது என்றும் பெருமானார் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இதனால் பெருமானார்(ஸல்)அவர்கள் இதையே நடைமுறைப் படுத்தினார்கள். மேலே நாம் மேற்கோள் காட்டிய இப்னு கைய்யும் அவர்களின் எழுத்துக்கள் இஸ்லாம் பணிக்கும் ஜிஹாத்ன் பல்வேறு படித்தரங்களையும் சுருக்கமாக விளக்குகின்றது. இங்கே நாம் இறைவன் பணிக்கும் ஜிஹாத் ஐப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம். நாம் முதன் முதலாகப் புரிந்து கொள்ள வேண்டியது. இஸ்லாம் என்ற இந்த இறைநெறி செயற்களத்தை மையமாகக் கொண்டது. இது மக்களை அவர்கள் எப்படி இருக்கின்றார்களோ அப்படியே எடுத்துக் கொள்கின்றது. இந்நிலையில் அவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படியே அவர்களை எதிர்கொள்கின்றது. இஸ்லாம் யதார்த்தத்தில் நடைமுறை வாழ்க்கையில் அஞ்ஞானத்தை அறியாமையை (ஜாஹிலிய்யாவை)எதிர்கொள்கின்றது. இந்த அஞ்ஞானம் மௌட்டிகம் வெற்றுக் கோட்பாடாக இருக்கவில்லை. அது ஓர் நடைமுறை வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த மௌட்டிகத்திற்கென ஓர் அரசியல் அமைப்பிருக்கின்றது. அரசியல் அதிகாரம் இருக்கின்றது. இந்த அஞ்ஞானத்தைப் பாதுகாக்கவும் உண்மையை ஓங்கி முழங்கிடுவோரைப் பாய்ந்து தாக்கிடவும் ஒரு பெரும் பட்டாளம் அதன் கீழ் இருக்கின்றது. இப்படி எல்லா பலமும் பெற்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்கும் மௌட்டிகத்தை இஸ்லாம் எதிர்கொள்கின்றது. ஆகவே இஸ்லாத்தின் வழிமுறையும் நடைமுறை வாழ்க்கை செயற்களம் என்பனவாக இருந்திட வேண்டும். அது கொள்;கையின் குவியலாக மக்களின் நாவிலே நயமுள்ள பேச்சிலே புழங்கினால் போதாது. அது மக்களின் வாழ்க்கையாக ஆகிவிட வேண்டும். அது அறியாமையை எதிர்கொள்ளும் விதத்திலேயே நாமும் எதிர்கொள்ள வேண்டும். மக்களின் மனதில் புதைந்து புரையோடிக் கிடக்கும் மடமைகளை அகற்றிட இஸ்லாம் வலுவான முறையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு மனித மனங்களைத் தூய்மைப்படுத்துகின்றது. மக்கள் மடமையிலேயே அமிழ்ந்து கிடக்க வேண்டும். அவர்களின் மடமையை அகற்றிட யாரும் எந்த அறிவார்ந்த விளக்கத்தையும் தந்திடக்கூடாது. அப்படி அறிவைப் பரப்பிடுவோரை நாங்கள் படைபலம் கொண்டு தடுப்போம் எனத் தடுப்பவர்களை அப்புறப்படுத்தி, மக்களை அறியாமையிலிருந்து விடுவிக்க இஸ்லாம் பலத்தைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை. மனிதன் மனிதனைத்தான் வழிபட வேண்டும் கீழ்ப்படிய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவோரின் கைகளைப் பிடிக்க இஸ்லாம் காலந்தாழ்த்துவதில்லை. படைகளைத் திரட்டி உருவியவாளோடு வாளை மிஞ்சும் வன்மையான ஆயுதங்களோடு தங்களைச் சூழ்ந்து கொண்டு உண்மையை இங்கே சொல்லாதீர்கள். மனிதர்கள் எங்களைக் கீழ்ப்படிவதிலிருந்து விடுவித்து. படைத்தவனின் பக்கம் திருப்பாதீர் எனப் பயங்கரவாதம் பேசுவோரை எதிர்கொள்ள பிரச்சாரமல்ல சரியான வழி. அவர்களின் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் அவர்கள் அடிமைகளாக ஆக்கி ஆட்சி செலுத்த விரும்பும் அப்பாவி மக்களை விடுவிக்கவும், ஆயதப் பிரயோகம் தவிர்க்க இயலாததாகிவிடுகின்றது. இதற்கு இஸ்லாம் தன்னைத் தயார்படுத்திக் கொள்கின்றது. தாக்குதலைத் தடுத்துத் தாக்குகின்றது. மக்களை மனிதனின் அடிமைகள் என்ற நிலையிலிருந்து விடுவித்து அல்லாஹ்வின் அடிமைகள் என்றாக்குகின்றது இஸ்லாம். அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு விட்ட சுயமரியாதையை மீட்டுத் தருகின்றது இஸ்லாம். அவர்களுக்கு மறுக்கப்பட்ட மனித உரிமைகளைப் பெற்றுத் தருகின்றது இஸ்லாம். அடுத்து இஸ்லாத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. இது படிப்படியாக முன்னேறும் ஒரு பண்பான மார்க்கம். இந்த வகையிலும் இஃது செயல்முறையை மையமாகக் கொண்ட ஒரு பேரியக்கம். படிப்படியாக முன்னேறிடும் இதனுடைய பாதையில் ஒவ்வொரு படியிலும் இது முன்னேறிட நடைமுறையில் என்னென்ன தேவையோ அதற்கான வழிவகைகளை ஏற்பாடு செய்து விடுகின்றது. ஒரு படியில் நிற்கும்போது, மேலே உள்ள அடுத்தக் கட்டத்தி;ற்கு என்ன தேவையோ அதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்கின்றது. இது நடைமுறையில் எதிர்ப்படும் சிக்கல்களை அவிழ்த்திட வெற்றுத் தத்துவங்களை விவாதித்துக் கொண்டிருப்பதில்லை. அதேபோல் ஒவ்வொரு கட்டத்திலும் நான் இப்படித்தான் இருப்பேன் என முரண்டு பிடிப்பதுமில்லை. வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் தன் வழிகளையும் வாய்ப்புகளையும் வளர்த்துக்கொள்ளும். இஸ்லாத்தில் ஜிஹாத் இறைவனின் பாதையில் போர் என்பது பற்றி பேசுகின்ற பலரும் இந்தப் பேச்சுக்களுக்குப் பக்கபலமாக திருக்குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டுவொரும் இந்த உண்மையைப் புரிந்து கொள்வதில்லை. அதே போல் இஸ்லாம் என்ற இந்தப் பேரியக்கம் என்னென்ன படிகளைக் கடந்து வளர்கின்றது என்பதையும் புரிந்து கொள்ளவில்லை. இன்னும் பல்வேறு காலகட்டங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட இறைவசனங்களின் இடையேயுள்ள பிணைப்புகளையும் இவர்கள் (ஜிஹாத் பற்றி பேசுவோர்)புரிந்து கொண்டதாகவும் தெரியவில்லை. இப்படி ஜிஹாத் இறைவனின் பாதையில் போர் பற்றிப் பேசுவோர் இந்தப் பேரியக்கத்தின் பாதையில் போர் புரிதல் பற்றிய பல்வேறு படித்தரங்களையும் குழப்பி விடுகின்றாhர்கள். இதனால் ஜிஹாத் இறைவனின் பாதையில் போர் என்ற இந்த முக்கியமான பணியின் விதிகளையும் நெறிகளையும் திரித்து வருகின்றனர். பின்னர் எந்த நியாயமுமில்லாத சில பொது விதிகளை வகுத்து மக்களைக் குழப்பத்தில் விட்டு விடுகின்றனர். இஃது எதனால் நிகழ்கின்றது என்றால். இவர்கள் திருக்குர்ஆனின் ஒரு வசனத்தைப் பார்த்தால் அந்த வசனமே இந்த மார்க்கத்தின் இறுதி வழிகாட்டுதல் அந்த விஷயத்தில் வேறு வசனங்களோ வழிகாட்டுதல்களோ இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். இவர்கள் இன்றைய உலக சூழலின் தாக்கத்தில் உருவானவர்கள். இவர்கள் இன்றைய உலக முஸ்லிம்களின் அவலங்களில் தவிர்க்க இயலாத ஒரு பகுதி. இவர்கள் இஸ்லாம் என்ற முத்திரையை மட்டும் சுமப்பவர்கள். இவர்கள்தாம் தோல்வி ஜூரத்தால் தங்கள் கைகளிலிருந்த வலுவான ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டவர்கள். ஆன்மிக ஆயுதத்தையும் அறிவாயுதத்தையுமே இவர்கள் தங்களிடம் வளர்த்துக் கொண்ட தோல்வி மனப்பான்மையால் தரையிலே போட்டுவிட்டவர்கள். இவர்கள் இஸ்லாம் தற்காப்புப் போர் ஒன்றைத்தான் கடமையாக்கி இருக்கின்றது எனப் பேசுகின்றனர். இப்படிப் பேசி இந்த மார்க்கத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான மிகவும் பலமான ஒரு வழிமுறையை வகைத்தெரியாமல் ஆக்கிவிட்டு தாங்கள் இஸ்லாத்திற்கு மிகப்பெரியதொரு சேவையைச் செய்து விட்டதாகப் பீற்றிக் கொள்கின்றனர். இவர்கள் பல்வேறு ஆழமான கருத்துக்களைப் புரிந்து கொள்வதில்லை. இந்த ஜிஹாத் தான் இறைவனின் பாதையில் புரியப்படும் புனிதப் போர்தான் இந்தப் ப10மியில் தோள் நிமிர்த்தி நிற்கும் அத்தனை அநீதிகளையும் அநியாயக்காரர்களின் கைகளிலிருந்து பாய்ந்து வரும் அட்டூழியங்களையும் தடுத்து நிறுத்துவது. எல்லா அநியாயங்களையும் பாரபட்சங்களையும் உரிமை மறுப்புகளையும் ப10மியிலிருந்து துடைத்தெறிவது இந்த ஜிஹாத் தான். இருட்டான கொள்கைகளின் இடுக்கிலே சிக்கிக் கொண்டு உண்மையான இறைவனைக் கண்டு கொள்ளாமல் அவனுக்கு அடிபணிவதிலிருந்து விடுபட்டு மனிதனுக்கு அடிமைப்பட்டு அடிப்படை உரிமைகளையும் சுயமரியாதைகளையும் இழந்து நிற்கும் மனிதர்களை மீட்டு அனைத்தும் படைத்த அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிபணிந்து வாழ்பவர்களாக மாற்றிக் காட்டும் மகத்தான பாதை அல்லாஹ்வின் வழியில் புரியப்படும் இந்தப் புனிதப் போராகும். இஸ்லாம் தன்னுடைய கொள்கைகளை இறைவன் ஒருவனே அவனுக்கே மனிதன் கீழ்ப்படிய வேண்டும் என்பதை எவர்மீதும் திணித்திட விரும்புவதில்லை. ஆனால் அது மனிதன் தன் விருப்பம்போல் இஸ்லாத்தை ஏற்கவோ மறுக்கவோ சுதந்திரமானதோர் சூழ்நிலையை உருவாக்கித் தந்திடுவதை தன் கடமை எனக் கருதுகின்றது. அநியாயம் செய்வோர் ஆட்சியாளர்களாக அமர்ந்து கொண்டு மக்கள் தாங்கள் விரும்பும் வழியை மார்க்கத்தை மதத்தை தேர்ந்தெடுத்துப் பின்பற்றிடும் உரிமையை மறுத்தால் இஸ்லாம் இந்த உரிமை மறுப்பாளர்களை அப்புறப்படுத்தி மக்களுக்குத் தாங்கள் விரும்பும் மார்க்கத்தைப் பின்பற்றிடும் உரிமையைப் பெற்றுத் தருகின்றது. இப்படி மக்கள் தங்கள் விருப்பம்போல் இஸ்லாத்தை ஏற்க அல்லது மறுக்க வழிவிடாமல் வழிமறித்து நிற்கும் ஆட்சியாளர்களை மட்டுமல்ல அரசியல் அமைப்புக்களையும் அரசியல் முறைகளையும் அப்புறப்படுத்திட இஸ்லாம் விரும்புகின்றது. ஒருமுறை இந்த அநீதியாளர்களை ஆட்சியாளர்களை ஆட்சிமுறைகளை ஆட்சியமைப்புக்களை அப்புறப்படுத்திவிட்டது என்றால் மக்களைச் சுதந்திரமாக விட்டு விடுகின்றது இஸ்லாம். அதன்பின் மக்கள் தாங்கள் விரும்பும் மார்க்கத்தை மதத்தைப் பின்பற்றலாம். அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம். இந்த மார்க்கத்தின் இன்னொரு (மூன்றாவது)தனித்தன்மை என்னவென்றால், இந்த மார்க்கம் ஒவ்வொரு படியாக முன்னேறிடும் போதும் ஒரு புதவழி முறையைத் தன்னோடு இணைத்துக் கொள்ளும் என்றாலும் இந்த மார்க்கம் எடுத்து வைக்கும் அடிப்படைக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் காணமுடியாது. இறைவனின் தூதர்(ஸல்)அவர்கள் எடுத்து வைத்த செய்தி ஆரம்பநாள் முதல் இறுதி நாள் வரை ஒன்றாகவே இருந்தது. அவர்கள் தொடக்க நாள்களில் தங்கள் குடும்பத்தவர்களிடம் எடுத்துச் சொல்லி ஏற்றுக் கொள்ளச் சொன்ன செய்தியேயானாலும் பின்னர் அந்தக் குறைஷிகளிடம் அவர்கள் எடுத்து வைத்தச் செய்தியேயானாலும் தொடர்ந்து அவர்கள் அந்த அரபுப் பெருநிலத்தில் வாழ்ந்தவர்களிடம் எடுத்துவைத்தச் செய்தியேயானாலும் கடைசியாக அவர்கள் இந்த முழு உலகை நோக்கி எடுத்து வைத்தச் செய்தியேயானாலும் அத்தனையும் ஒன்றேதான். அவர்கள் மக்களைத் தங்களைப் படைத்த இறைவனைப் பணிந்து நடந்திட வேண்டும் என்றும் வேறு யாருக்கும் எந்த நிலையிலும் அடிமைப்பட்டிடக் கூடாது என்றுமே பிரச்சாரம் செய்தார்கள். இந்தக் கொள்கையில் எந்தக் காலக்கட்டத்திலும் எந்தப் படித்தரத்திலும் எள்முனை அளவுகூட விட்டுக் கொடுத்ததில்லை. இதில் நெளிவோ நெகிழ்ச்சியோ அனுமதிக்கப்படவுமில்லை. இந்தக் கொள்கையைப் பரப்பிடவும் நிலைநாட்டவும் இஸ்லாம் ஓர் திட்டத்தைப் பின்பற்றுகின்றது. இந்தத்திட்டத்தில் சில் படித்தரங்கள் காலகட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் அது ஓர் புது உபாயத்தைத் தன்னோடு இணைத்துக் கொள்கின்றது. இஸ்லாத்தின் இன்னொரு தனித்தன்மை என்னவெனில் (நான்காவது)இஸ்லாம் தன்னை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் ஏனையோருக்கும் இடையே இருந்திட வேண்டிய உறவு முறைக்குத் தக்கதோர் சட்ட அடிப்படையை அமைத்துத் தருகின்றது. இந்த சட்ட அடிப்படையின் முதற்பகுதி இஸ்லாம். அதாவது அல்லாஹ்வின் சட்டங்களுக்கு முற்றாகக் கீழ்ப்படிந்து நடப்பது என்பதாகும். இது இந்த உலக மக்கள் அனைவரும் ஏற்று வாழ்ந்திட வேண்டிய ஒன்று. அவ்வாறு இந்த உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அதனோடு சமாதானம் அமைதி உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும். எந்த அரசியல் அமைப்பும் எந்த ஆட்சியும் எந்த அரசியல் முறையும் எந்த ஆதிக்க சக்தியும் இஸ்லாத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்குத் தடை விதித்திடக் கூடாது. அதேபோல் எந்தச் சிறு தடங்கல்களையும் ஏற்படுத்திடக்கூடாது. அதேபோல் ஒரு மனிதன் இஸ்லாத்தின் கொள்கைகளைச் செவிமடுத்து அதனை ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ சுதந்திரம் பெற்றிட வேண்டும். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள அல்லது நிராகரிக்க அவனுக்கிருக்கும் சுதந்திரத்தை யாரும் மறுத்திடக்கூடாது. ஒருவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள விருமபினால், அவனைத் தடுக்கவோ தடைகளை ஏற்படுத்தவோ யாருக்கும் எந்த உரிமையுமில்லை. அதிகாரமுமில்லை, இதனை யாராவது செய்தால் அவரை அப்புறப்படுத்தி சுதந்திரமானதோர் சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவது இஸ்லாத்தின் தலையாயக் கடமையாகும். ஆதேபோல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோர் என்பதற்காக ஒருவரோடு யாராவது சமருக்கு வந்தால் அவரோடு போரிடுவது இஸ்லாத்தின் கடமையாகும். இதில் அவர் கொல்லப்படும்வரை அல்லது அவர் தான் சரணடைந்துவிட்டேன் என்பதை அறிவிக்கும் வரை இந்தப் போர் தொடரும். தோற்றுப் போவோம் இனி நாம் பல்லிளித்துத்தான் காலந்தள்ள வேண்டும் என்றொரு மனப்பான்மையை தங்களிடையே வளர்த்துக் கொண்ட முஸ்லிம்கள் பலர் இருக்கின்றார்கள். இந்தத் தோல்வி மனப்பான்மையின் சொந்தக்காரர்கள் பலர் தங்களைப் பேச்சாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டு தங்கள் பேனாக்களின் முனைகள் மழுங்கிடும் வரை எழுதித் தள்ளுகின்றார்கள். இவர்கள் ஜிஹாத் இறைவழியில் போர் என்ற தலைப்பில் எழுதத் தலைப்பட்டால் தங்கள் கோழைத்தனத்தை அதில் தாராளமாகப் புரள விடுகின்றார்கள். இதில் அவர்கள் எல்லோரையும் குழப்பி விடுகின்றார்கள். இதில் இரண்டு விஷயங்களை எடுத்துக் கொள்கின்றார்கள். இந்த இரண்டையும் கடித்துக் குதறிப் படிப்பவரைச் சிந்தை கலங்கச் செய்து விடுகின்றார்கள். முதன் முதலில் இந்த மார்க்கம் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி யாரையும் நிர்பந்திப்பதில்லை. இன்னும் சொன்னால் அப்படிக் கட்டாயப்படுத்துவதை இந்த மார்க்கம் விரும்பவுமில்லை. இதை இந்தத் திருமறை வசனம் தெளிவுபடுத்துகின்றது. இஸ்லாம் மார்க்கத்தில் நிர்பந்தமே இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி(யடைவது எவ்வாறென்று)தெளிவாகிவிட்டது. ஆகவே எவன் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை விசுவாசிக்கின்றானோ அவன் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப்பிடித்துக் கொண்டான். அல்லாஹ் செவியுறுவோனும் அறிவோனுமாக இருக்கின்றான். – அல்குர்ஆன் : 2:256. இஸ்லாம் மார்க்கத்தில் நிர்பந்தமே இல்லை எனக் கூறுகின்ற இஸ்லாம் இன்னொன்றையும் தனது தலையாயக் கடமையாகக் கருதுகின்றது. அது இஸ்லாத்திற்கும் மனிதர்களுக்கும் இடையே தடையாக நிற்பவை எதுவாக இருந்தாலும் அதை அகற்றிடுவதாகும். அல்லாஹ்வை ஏற்றுக்கொள்வதிலிருந்து தடுத்து தங்களைக் கீழ்ப்படிந்திட வேண்டும் என விரும்புகின்ற அத்தனை சக்திகளையும் அகற்றி மனிதனுக்குத் தேவையான சுதந்திரத்தைப் பெற்றுத் தருகின்றது இஸ்லாம். இந்தச் சுதந்திரம் அவனுக்குக் கிடைத்தபின் அவன் இஸ்லாத்தை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். இந்த இரண்டு கொள்கைகளுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. கோழைத்தனம் குழப்பமான சிந்தனை தோல்வி மனப்பான்மை இவற்றைத் தங்கள் குணநலமாகக் கொண்ட சிலர் இந்த இரண்டையும் குழப்பி அடுத்தவர்களையும் குழப்புகின்றார்கள். இவர்கள் ஜிஹாத் என்பதை தற்காப்புப் போர் என்ற அளவோடு நிறுத்திக் கொள்ள விரும்புகின்றனர். இன்றைய நாட்களில் இடம்பெறும் போர்களுக்கும் ஜிஹாத் என்ற இறைவழியில் புரியப்படும் புனிதப் போருக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இன்றைய போர்களின் நோக்கம் வேறு இஸ்லாம் சொல்லும் ஜிஹாத் என்ற இறைவழி அறப்போரின் நோக்கம் வேறு. அதேபோல் இன்றைய போர்கள் வேயப்படும் வழியும் முறையும் வேறு. இஸ்லாம் சொல்லும் ஜிஹாத் செயல்படுத்தப்படும் வழியும் முறையும் வேறு. இஸ்லாம் சொல்லும் ஜிஹாத் ஏன் நடத்தப்படுகின்றது என்பது இஸ்லாத்தின் இலட்சியத்தோடும் இயல்போடும் சம்பந்தப்பட்டது. அதேபோல் அது இந்த உலகில் நிறைவேற்றிட வேண்டிய மகத்தான பணியோடு சம்பந்தப்பட்டது. இந்த மகத்தான பணி அனைத்தையும் அறிந்து அனைத்தையும் படைத்தத அல்லாஹ்வால் பணிக்கப்பட்டது. இந்தப் பணியை நிறைவேற்றிடத்தான் அல்லாஹ் தன் திருத்தூதரை அனுப்பினான். (அவர்கள் மீது அல்லாஹ்வின் ஆசியும் அருளும் உண்டாவதாக) இந்த இறைத்தூதர் முஹம்மத்(ஸல்)அவர்கள் அந்த இறைவனின் அறுதித் தூதர் ஆவார்கள். இந்த மார்;க்கம் மனிதனை அடிமைத்தளைகள் அனைத்திலிருந்தும் ஒட்டு மொத்தமாக விடுவிக்கும் ஓர் உலகப்பிரகடனம். இஸ்லாம் மனிதன் அவனைப் போன்ற மனிதனுக்குக் கீழ்ப்படிந்து தன் உரிமைகளை இழந்து நிற்பதிலிருந்தும் மனிதன் தன் சொந்த ஆசைகளுக்கு அடிமைப்பட்டு அலைக்கழிவதிலிருந்தும் விடுவிக்கின்றது. அனைத்தையும் படைத்துப் பாதுகாத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு மட்டுமே மனிதன் கீழ்ப்படிந்திட வேண்டும் எனப் பிரகடனம் செய்கின்றது. அல்லாஹ் அனைத்து ஆற்றல்களையும் பெற்றவன். அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன். இதன் இன்னொரு பொருள் மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் அனைத்து ஆட்சி முறைகளையும் அரசியல் அமைப்புக்களையும் இஸ்லாம் அறைகூவி அழைக்கின்றது என்பதே. இஸ்லாம் ஏன் இப்படி அறைகூவி அழைக்கின்றது என்றால் மனிதன் இறைவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்திட வேண்டியவன். அதாவது மனிதனைக் கீழ்ப்படிந்திட வைத்திடும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. மனிதன் மனிதனை அடிமைப்படுத்திடும் போது அவன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான ஓர் உரிமையை அபகரித்துக் கொள்கின்றான் என்று பொருள். ஆகவே தான் அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாம் அந்த உரிமையை அபகரித்துக் கொண்டவர்களை அநீதியாளர்களாகப் பார்க்கின்றது. அல்லாஹ்வின் அதிகாரத்தை உரிமையை அபகரித்துக் கொண்டவர்களிடமிருந்து அதை மீட்டு மீண்டும் அல்லாஹ்வுக்குரியதாக்கி விடுகின்றது. அதாவது மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் அவலத்தை அழித்துவிடுகின்றது. இறைவன் தன் இறுதி வழிகாட்டுதலாம் திருக்குர்ஆனில் இப்படிக் குறிப்பிடுகின்றான்.
வானத்திலும் அவன்தான் ஆண்டவன். பூமியிலும் அவன்தான் ஆண்டவன் (அல்குர்ஆன் 43:84)

...சகல அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கேயன்றி (மற்றெவருக்கும்)இல்லை அதனைத் தவிர மற்றெவரையும் நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளையிடுகின்றான். இது தான் நேரான மார்க்கம் (அல்குர்ஆன் 12:40)

(நபியே பின்னும் அவர்களை நோக்கி)நீர் கூறும் வேதத்தையுடையவர்களே எங்களுக்கும் உங்களுக்கும் (சம்மதமான)ஒரு மத்திய விஷயத்தின்பால் வருவீர்களாக (அதாவது)நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்கோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கோம். நம்மில் எவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் ஆண்டவனாக எடுத்துக் கொள்வோம் (என்று கூறுவீராக விசுவாசிகளே இதனையும்)அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி)நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே முற்றிலும் வழிபட்ட)முஸ்லிம்கள் என்று நீங்கள் சாட்சியங் கூறுவீர்களாக என்று நீங்கள் கூறிவிடுங்கள் (அல்குர்ஆன் 3:64)

அல்லாஹ்வின் சட்டங்களைப் ப10மியில் நிலைநாட்டுவது என்பதன் பொருள் கிருஸ்தவர்கள் செய்வதைப்போல் சில புனிதப்படுத்தப்பட்டவர்கள் பாதிரிமார்கள் கைகளில் ஆட்சியை ஒப்படைத்துவிடுவது என்பதல்ல. அதேபோல் கடவுள் என்னுள் இருக்கின்றார் என்று கூறுபவர்களின் கைகளில் ஒப்படைத்து விடுவதுமல்ல.

அல்லாஹ்வின் ஆட்சியைப் ப10மியில் நிலைநாட்டுவதின் பொருள் :-
இறைவன் வகுத்துத் தந்திருக்கின்ற சட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்
வழக்குகளிலும் பிணக்குகளிலும் வழங்கப்படுகின்ற அறுதித்தீர்ப்பு அல்லாஹ் அருளியதைக் கொண்டு வழங்கப்படுவதாக இருந்திட வேண்டும் என்பதாகும்.
அல்லாஹ்வின் ஆட்சியை - இறைவனின் ஆட்சியை நிலைநாட்டுவது
மனிதனின் ஆட்சியை - மேலாதிக்கத்தை - அப்புறப்படுத்துவது
இறைவனுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரத்தை அபகரித்துக் கொண்டவர்களிடமிருந்து அதிகாரத்தை மீட்டு அல்லாஹ்விடம் ஒப்படைப்பது.
அல்லாஹ்வின் ஷாPஅத் சட்டங்களை நிலைநாட்டுவது மனிதர்கள் யாத்த சட்டங்களின் செயல்பாட்டை நீக்குவது என்றெல்லாம் பொருள்படும்.

இவை அனைத்தும் வெறும் பிரச்சாரத்தால் முடிந்துவிடக் கூடியவையல்ல. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரத்தைத் தங்களுடையதாக்கிக் கொண்டவர்கள். இந்த அதிகாரம் தரும் பலத்தால் ஏனைய மனிதர்களை அடிமைகளாக ஆக்கிச் சுகங்கண்டவர்கள் நிச்சயமாக சில பிரச்சாரங்களைச் செவிமடுத்தவுடன் விட்டுவிடமாட்டார்கள். உண்மையிலேயே இவர்கள் இந்த அதிகார சுகத்தை அனுபவித்தோர் சில பிரச்சாரங்களைக் கேட்டவுடன் தங்கள் பதவியை விட்டுக் கீழே இறங்கிவிடுவார்கள் என்றிருந்தால் இறைவனின் தூதர்களின் பணி மிகவும் எளிதானதாக இருந்திருக்கும். இறைத்தூதர்களின் (அல்லாஹ்வின் அருளும் ஆசியும் அவர்கள் மீது உண்டாகட்டும்)வாழ்க்கையும் அந்த வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன்னல்களும் மனித வரலாறும் நமக்குச் சொல்லும் பாடம்: அதிகாரத்தில் இருப்போர் ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்து விட்டவர்கள் வெறும் பிரச்சாரத்தைக் கேட்டவுடன் மாறிவிடமாட்டார்கள். பதவியை விட்டுவிட மாட்டார்கள் என்பதே. ஆகவே பிரச்சாரத்தோடு அதன் பின்பலமாக ஒரு பேரியக்கமும் (இங்கே இயக்கம் என்பது பௌதீக பலம் என்பதைக் குறிக்கும்)இருந்து கொண்டிருக்க வேண்டும். எதிர் நம்பிக்கையையும் எதிர் கொள்கையையும் எதிர் கொள்ளப்பிரச்சாரம் பலத்தைப் பிரயோகித்து ஏற்படுத்தப்படும் தடைகளைக் களைந்திட இயக்கம் இந்த இரண்டும் ஒரே நேரத்தில் தேவைக்கத் தகுந்தாற்போல் பயன்படுத்தப்பட வேண்டும். இப்படி இந்த இரண்டு வழிகளின் வழி மனிதர்களுக்குத் தேவையான சுதந்திரத்தைப் பெற்றுத் தருகின்றது இஸ்லாம். இஸ்லாம் என்ற இந்த இறைமார்க்கம் பெற்றுத் தரும் சுதந்திரம் அரபுக்களோடு மட்டும் தொடர்புடையதன்று. அதேபோல் இந்த மார்க்கத்தின் கொள்கைகளும் வழிகாட்டுதல்களும் கூட அரபுக்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்றில்லை. இந்த மார்க்கம் தன் அழைப்பை இந்த முழு உலகத்தையும் நோக்கி வைக்கின்றது. இதன் கொள்கைகளும் வழிகாட்டுதல்களும் மனிதர்கள் அனைவருக்கும் சொந்தம். இந்த மார்க்கத்தின் செயற்களம் இந்த ப10மி முழுவதும் விரிந்து பரந்ததாகும். அல்லாஹ் அரபுக்களுக்கு மட்டுந்தான் உணவளிப்பவன் என்றிலலை. அல்லாஹ் உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவளிப்பவன். அதே போல் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுந்தான் உணவளிக்கின்றான் என்றில்லை. அவன் தன்னை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் தன்னை இல்லை என்று சொல்பவர்களுக்கும் உணவளிப்பவன். இந்த மார்க்கம் இந்த உலகம் முழுவதையும் அந்த உணவளிப்பவனிடம் கொண்டு வந்திட விரும்புகின்றது. இந்த முழு உலகையும் அதன் எந்த அங்கமும் வேறு யாருக்கும் அடிபணிந்திடக் கூடாது என விரும்புகின்றது. அத்தனை அடிமைத்தனத்திலிருந்தும் அத்தனை மனிதர்களையும் விடுவித்து அல்லாஹ்விடம் கொண்டுவந்திட விரும்புகின்றது. அதேபோல் மனிதர்கள் அல்லாஹ் வகுத்து வழங்கியுள்ள சட்டங்களுக்கு மட்டுமே அடிபணிந்திட வேண்டும். வேறு யார் வகுத்தச் சட்டங்களுக்கும் அடிபணிந்த நடந்திடக்கூடாது என விரும்புகின்றது. அல்லாஹ் அல்லாமல் வேறு யாருக்காவது மனிதன் அடிமையாகி ஏவல் செய்திட்டால் அவன் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு வெளியே சென்று விட்டான் என்று பொருள். அவன் நான் அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தான் பின்பற்றிக் கொண்டிருக்கின்றேன் எனப் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தாலும் சரியே. இறைவனின் தூதர் முஹம்மத்(ஸல்)அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள். இந்த ஷாPஅத் இன் விதிகளின்படி பிறரது சட்டங்களைக் கீழ்ப்படிந்து நடப்பது என்பது அவர்களை வணங்கி வழிப்படுவதேயாகும். வுழிபடுதல் கீழ்ப்படிதல் என்பதன் இந்தப் பொருளைப் பார்த்திடும்போது அல்லாஹ்வைக் கீழ்ப்படிய மறுத்த ய10தர்களும் கிருஸ்தவர்களும் இறைவனுக்கு இணைவைத்தவர்கள் போலாகி விட்டார்கள். அதீ பின் ஹாதிம் (ரலி)அவர்களின் அறிவிப்பாக திர்மீதி என்ற நபிமொழி தொகுப்பு பின்வரும் நிகழ்வை அறியத் தருகின்றது. பெருமானார் (ஸல்)அவர்கள் எடுத்து வைத்த ஏகத்துவ முழக்கம் அதீ பின் ஹாதிம் அவர்களை வந்தடைந்ததும் அவர்கள் சிரியாவுக்கு ஓடிவிட்டார்கள். அவர்கள் பெருமானார்(ஸல்)அவர்கள் தங்கள் ஏகத்துவ முழக்கத்தை எடுத்து வைப்பதற்கு முன் கிருஸ்துவத்தை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுடைய சகோதரியும் இன்னும் அவருடைய கோத்திரத்தைச் சார்ந்த சிலரும் போர்க் கைதிகளாகச் சிக்கி இருந்தார்கள். பெருமானார்(ஸல்)அவர்களிடம். இறைவனின் தூதர் (ஸல்)அவர்கள், அதீ-பின்-ஹாதிம் (ரலி)அவர்களுடைய சகோதரியை மிகவும் கனிவோடு நடத்தினார்கள். அத்தோடு அந்த சகோதரிக்குப் பல பரிசுப் பொருட்களையும் கொடுத்தார்கள். இந்தச் சகோதரி தன் சகோதரரிடம் சென்றார்கள். அவரை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தார்கள். அத்தோடு பெருமானார்(ஸல்)அவர்களை வந்து சந்திக்கும்படியும் விண்ணப்பித்தார்கள். அதீ(ரலி)அவர்கள் இதற்கு ஒத்துக்கொண்டார்கள். அதீ(ரலி)அவர்கள் மதீனா வருவதைக் காண மக்கள் மிகவும் ஆவலாய் இருந்தார்கள். அதீ(ரலி)அவர்கள் பெருமானார்(ஸல்)அவர்கள் முன்வரும் போது தங்களுடைய கழுத்தில் ஓர் வெள்ளிச் சிலுவையை அணிந்திருந்தார்கள். நெருங்கி வந்தபோது இறைவனின் தூதர்(ஸல்)அவர்கள், இவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகன் மஸீஹையும் (தங்கள்)தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் ஒரே ஆண்டவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடுடாதென்றே இவர்கள் ஏவப்பட்டிருக்கின்றனர் (அல்குர்ஆன் 9:31) என்ற இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். இதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பதை அதீ(ரலி)அவர்களே இப்படிக் கூறுகின்றார்கள். நான் (அதீ அவர்கள்)சொன்னேன் : அவர்கள் தங்கள் மதகுருமார்களை வணங்குவதில்லையே என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் சொன்னார்கள், அவர்கள் தங்கள் பாதிரிகளும் மதகுருமார்களும் எவற்றையெல்லாம் அனுமதிக்கப்பட்டவை எனக் கூறினார்களோ அவற்றையெல்லாம் அனுமதிக்கப்பட்டவையாக எடுத்துக் கொண்டார்களே அதே போல் எவற்றையெல்லாம் பாதிரிகளும் மதகுருமார்களும் கூடாதவை எனத் தடுத்தார்களோ அவற்றை ஆகாதவை என விலக்கிக் கொண்டார்களே இப்படி அவர்கள் தங்கள் பாதிரிகளையும் மதகுருமார்களையும் வணங்கினார்கள் - என்றார்கள். இறைவனின் தூதர் (ஸல்)அவர்கள் தந்த இந்த விளக்கம் பல தெளிவுகளைத் தருகின்றது. பிறரது சட்டங்களுக்கும், தீர்ப்புகளுக்கும் கீழ்ப்படிவது என்பது வணங்கி வழிபடுவது என்பதேயாகும். இதைச் செய்பவர் அல்லாஹ் அருளிய மார்க்கமான இஸ்லாத்திற்கு வெளியே போய்விட்டார் என்றே பொருள். இது அல்லாஹ் அல்லாதவரை யாருடைய சட்டங்களைக் கீழ்ப்படிகின்றார்களோ அவரை அல்லாஹ்வாக இறைவனாக ஆக்கிக் கொள்வதேயாகும். இஸ்லாம் இதனை ஒழிப்பதற்காவே அருளப்பட்ட மார்க்கமாகும். இஸ்லாம் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவைகளுக்கு மனிதன் அடிமையாய் அலுவல் செய்கின்ற அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வெளிவந்து அல்லாஹ்வை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பிரகடனம் செய்கின்றது. தனது நம்பிக்ககைகளை அடுத்தவர்கள் மீது திணித்திட வேண்டும் என இஸ்லாம் எப்போதும் விரும்பியதில்லை. ஆனால் இஸ்லாம் வெறுமனே நம்பிக்கைகளின் தொகுப்பும் அல்ல. நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியதைப் போல இஸ்லாம் ஓர் உரிமைப் பிரகடனமாகும். அத்தோடு அஃதோர் விடுதலை முழக்கமாகும். மனிதனை அவனைப் பிணைத்திருக்கும் அத்தனை தளைகளிலிருந்தும் விடுவித்து வெளியே கொண்டுவருவது இஸ்லாத்தின் முதல் கடமையாகும். அது மனிதனைப் பிணைத்திருக்கும் எல்லா அரசியல் அமைப்புக்களையும் மனிதர்களின் குறைமதி கண்டெடுத்த சட்டங்களுக்கு ஏனைய மனிதர்களைத் தலைதாழ்த்தச் செய்திடும் எல்லா அமைப்புக்களையும் அகற்றிடுவதைத் தன் தலையாயப் பணியாக ஆக்கிக் கொண்டுள்ளது. இப்படி இஸ்லாம் மனிதனைப் பிணைத்திருக்கும் அத்தனை அரசியல் ஆதிக்கங்களிலிருந்தும் விடுவித்துத் தன்னடைய தெய்வீக வழிகாட்டுதலை அவன் முன் வைத்து, அவனை அன்பாய் அழைக்கின்றது. இதை ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்க மனிதனுக்கு எல்லா உரிமையும் உண்டு. இப்படிச் சொல்லி விடுவதால் மனிதர்கள் தங்கள் மன இச்சைகளை விருப்பங்களை ஆண்டவனாக எடுத்துக் கொள்ளலாம் என்றில்லை. அதேபோல் அவர்கள் நாங்கள் எங்களுக்குப் பிடித்தவர்களுக்கு அடிமைகளாய் இருப்போம் எனவும் வீம்புக் கொண்டிடக்கூடாது. இந்த உலகில் எந்த அரசியல் முறை, பொருளாதார முறை, நீதிநெறிமுறை, நிலைநாட்டப் படுகின்றதோ அது, அல்லாஹ்வுடையதாக இருந்திட வேண்டும். அந்த அமைப்பு முறை தன்னை நெறிப்படுத்திடும் சட்டங்கள் அல்லாஹ்வுடையதாகவே இருந்திட வேண்டும். அல்லாஹ்வுடையதாக மட்டுந்தான் இருந்திட வேண்டும். இப்படி இஸ்லாம் இறைவனின் வழிகாட்டுதலை ஆட்சி செய்யம் ஓர் அமைப்பு முறையின் கீழ் அதன் பாதுகாப்பில் ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பும் மதத்தை மார்க்கத்தைப் பின்பற்றலாம். மார்க்கம் என்பது நம்பிக்கைகளால் மட்டும் ஆனதல்ல. மார்க்கம் என்பதன் உண்மையான பொருள் வாழ்க்கை நெறி என்பதாகும். இஸ்லாம் என்ற இந்த வாழ்க்கை நெறி ஆழமான அழுத்தமான நம்பிக்கைகளிலிருந்து பிறப்பதாகும். எனினும் ஓர் இஸ்லாமிய அமைப்பில் ஆட்சியில் எந்த மதத்தைப் பின்பற்றுபவர்களும் சுதந்திரமாக வாழ்ந்திட வழி இருக்கின்றது. அவர்கள் தாங்கள் விரும்பும் நம்பிக்கைகளைப் பின்பற்றலாம். ஆனால் அவர்கள் பொதுவான நடவடிக்கைகளில் இறைவனின் அல்லாஹ்வின் சட்டங்களின் வழி அமைந்த அந்த நாட்டின் சட்டங்களைக் கீழ்ப்படிந்திட வேண்டும். ஆக இஸ்லாம் மனிதன் தான் விரும்பும் நம்பிக்கையைப் பின்பற்றப் போதுமான சுதந்திரத்தைப் பெற்றுகத் தருகின்றது. இந்தச் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதைத் தன் கடமை எனக் கருதுகின்றது. அதற்காக எந்தப் போராட்டத்தையும் தேவையானால் போரையும் நடத்த அது தயங்குவதே இல்லை. இப்படி மனிதனுக்குச் சுதந்திரமானதொரு சூழ்நிலையைப் பெற்றத் தந்த பின்னர் அந்தச் சுதந்திரமான சூழ்நிலையில் அவன் இஸ்லாத்தை ஏற்க அல்லது மறுக்கப் போதுமான அவகாசத்தைத் தருகின்றது. அவன் இஸ்லாத்தை ஏற்றாலும் அல்லது மறுத்தாலும் இஸ்லாமிய அரசின் கீழ் தன் வாழ்க்கையைச் சுதந்திரமாக நடத்தலாம். இஸ்லாத்தின் இந்தத் தனிப்பெரும் சிறப்பைச் சரியாகப் புரிந்து கொள்பவர்கள் ஜிஹாத் பிஸ்ஸைய்ஃப் வாளைக் கொண்டு முயற்சி செய்தல் என்பதையும் எந்தக் குழப்பமுமினறிப் புரிந்து கொள்வார்கள். பிரச்சாரம் செய்வதற்கான தடையை நீக்குவதும் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதும் அதனை செவியுறுவோருக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அல்லது மறுக்க போதிய சுதந்திரத்தைப் பெற்றுத் தருவது இவையே (ஜிஹாத் பிஸ்ஸைய்ஃப்)வாளின் மூலம் ஜிஹாத் செய்வதன் நோக்கம் இதனைப் புரிந்து கொள்பவர்கள் இஸ்லாம் சொல்லும் ஜிஹாத் வெறும் தற்காப்புப் போரல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொள்வார்கள். இன்றைய சூழ்நிலைகளில் தற்காப்புப்போர் எனப் பேசப்படுவது இஸ்லாத்தின் பார்வையில் மிகவும் குறகலானதொரு பொருளைக் கொண்டது. இந்தக் குறகியப் பொருளையே இஸ்லாம் சொல்லும் ஜிஹாத் இறைவழியில் போர் என்பதற்கும் சிலர் சூட்டிவிட்டார்கள். இந்தச் சிலர் வேறு யாருமல்ல. இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றோம் என்பவர்கள்தாம். இவர்கள் இஸ்லாத்தின் எதிரிகள் தொடுத்த சொற்போரில் சற்றுத் தடுமாறிப் போய்விட்டார்கள். இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாம் சொல்லும் ஜிஹாத் என்பது குரூரமும் கடுமையும் நிறைந்தது எனத் தங்கள் பேனாக்களில் பட்டதையெல்லாம் கிறுக்கிவிட்டார்கள். ஜிஹாத் இன் உண்மைத் தன்மையை உருக்குலைத்து இந்த எதிரிகள் இடைவிடாமல் எடுத்து வைத்தப் பொய்யில் நமது எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் சற்றத் தடுமாறினார்கள். இவர்களின் கோழைத்தனம் இவர்களின் தடுமாற்றத்தை இன்னும் அதிகப்படுத்தி விட்டது. இதனால் இவர்களும் இஸ்லாத்தையும் இஸ்லாம் சொல்லும் ஜிஹாத்தையும் குறைத்தும் திரித்தும் எழுதவும் பேசவும் தலைப்பட்டுவிட்டனர். இஸ்லாம் சொல்லும் ஜிஹாத் ஒரு தற்காப்புப் போர் தான் என்பதற்கு நாம் அழுத்தம் கொடுக்க விரும்பினால் இந்தத் தற்காப்பு என்பதன் பொருளையே மாற்றிட வேண்டியதுதான். இனி தற்காப்பு என்பதன் பொருள் மனிதனைப் பாதுகாப்பது மனிதனின் உரிமைகளை மறுப்பவர்களை அகற்றி மனிதனின் உரிமைகளைப் பாதுகாப்பது மனிதன் சுதந்திரமாகச் சிந்திக்கவும் செயல்படவும் அவனுக்கிருந்திட வேண்டிய சுதந்திரத்தை மறுப்பவர்களை அவர்களை எதிர்க்கும் விதத்தில் எதிர்கொண்டு அப்புறப்படுத்தி விட்டு மனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்றிருக்க வேண்டும். மனிதனின் உரிமைகளை மறுப்பவர்கள் அவனுக்குச் சுதந்திரத்தை மறுப்பவர்கள் தனி மனிதர்களாக இருக்கலாம். சர்வாதிகார ஆட்சியாளர்களாக இருக்கலாம். அரசியல் அமைப்புக்களாக இருக்கலாம். அரசியல் அமைப்புக்களாக இருக்கலாம். இனம் குலம் நிறம் தேசீயம் இவற்றின் அடிப்படையில் பேதங்களைப் போதிக்கும் ஆட்சிகளாக இருக்கலாம். இஸ்லாம் இந்த உலகில் வந்த போது இந்த உலகம் இவற்றால்தான் சூழப்பட்டிருந்தது. இவற்றிலிருந்து மனிதனைப் பாதுகாப்பது என்று தற்காப்பு என்ற சொல்லின் பொருளை மாற்றிட வேண்டும். தற்காப்பு என்பதற்கு இந்த விரிந்து பரந்த பொருளை நாம் மேற்கொள்ளுவோம் என்றால் இஸ்லாத்தின் உண்மையான சிறப்பை நாம் எளிதில் புரிந்து கொள்வோம். இஸ்லாம் மனிதர்களின் உரிமைப் பிரகடனம், விடுதலை முழக்கம் என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம் இந்த விடுதலைப் பிரகடனம் மனிதர்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்த ஆதிக்கவாதிகளின் ஆட்சியாளர்களின் ஆணவத்தையும் சுயநலத்தையும் அழித்துவிடுகின்றது. அனைத்தையும் படைத்துப் பாதுகாத்துவரும் அளவற்ற அருளாளனாம் அல்லஹ்வின் சட்டங்களை அங்கே நிலைநாட்டுகின்றது. அதன்பின் மனிதர்கள் தங்கள் விருப்பங்களை அடுத்தவர்களுக்கு வழங்கும் தீர்ப்பாக ஆக்கிக் கொண்ட நிலை மாறி மனிதர்களின் விவகாரங்களில் தீர்ப்பு வழங்கும் சட்டங்களாக அந்த நீதி அரசனின் சட்டங்கள் வாழும். இஸ்லாம் சொல்லும் ஜிஹாதைத் தங்கள் திறமையால் பாதுகாக்கின்றோம் என்று பீற்றிக் கொள்பவர்கள் அதனை மிகக் குறுகிய கண்ணோட்டங் கொண்ட ஒரு தற்காப்புப் போர் என சாதிக்க வாதிக்கின்றனர். இவர்கள் சில் ஆராய்ச்சிகளைக் கூட செய்கின்றார்கள். இந்த ஆராய்ச்சிகளின் வழி இவர்கள். இஸ்லாம் மேற்கொண்ட அத்தனைப் போர்களும் இஸ்லாத்தின் எதிரிகள் எடுத்து வந்த படையெடுப்புகளிலிருந்து இஸ்லாத்தின் இடமாம் அரேபியாவைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டவையே என சாதிக்க முனைகின்றார்கள். இதில் பெரும்பாலோர் இஸ்லாம் அரேபியாவோடு கட்டுண்டது என்றும் இஸ்லாத்தின் ப10மி என்பது அரேபியாவை மட்டுந்தான் குறிக்கும் எனவும் எடுத்துக்கொள்கின்றார்கள். இவர்கள் இஸ்லாத்தின் இயல்புகளையும் புரிந்து கொள்ளவில்லை. இஸ்லாத்தின் தனித்தன்மையையும் புரிந்து கொள்ளவில்லை. ஏன்? இஸ்லாத்தின் உன்னதமான இலட்சியத்தைப் புரிந்து கொள்வதில் கூட இவர்கள் இன்னும் முழுமையடையவில்லை. இவர்கள் இன்றைக்கிருக்கின்ற இக்கட்டான சூழ்நிலைகளால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இல்லை இவர்கள் இன்றைய சூழ்நிலைகளால் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். சூதுமதியை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு இஸ்லாத்தின் வெற்றிக்குக் கட்டியங் கூறிடும் அணுகுமுறையாம் ஆயதமாம் ஜிஹாதை முஸ்லிம்களிடமிருந்து பிரித்துவிட வேண்டும் என்று இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாம் சொல்லும் ஜிஹாத்தின் மேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வந்தார்கள். வாளால் வாழ்ந்த மார்க்கம் தான் இஸ்லாம். வாள் கொண்டு ஆலத்தை அடக்கி ஆண்டவர்கள்தாம் முஸ்லிம்கள் என்று இந்த எதிரி எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் தொடுத்தப் போரில் துவண்டு போய்விட்டார்கள் ஜிஹாத்தைக் குறித்து பேசும் நமது எழுத்தாளர்களும் பேச்சாளர்களும். ஆரேபியப் பெருநிலத்தை ரோமர்களோ பாரசீகர்களோ தாக்கிடும் அபாயம் இல்லை என்றொரு நிலை இருந்திருந்தால் அப10பக்கர்(ரலி)அவர்களோ, உமர்(ரலி)அவர்களோ இஸ்லாத்தை அரேபியாவுக்கு வெளியே பரப்ப எந்த முயற்சியும் எடுத்திருக்கமாட்டார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? வலுவான எதிரிகள் வளைந்து கொண்டிருந்த நிலையிலும் பணபலமும் படைபலமும் ஒருசேர இஸ்லாத்திற்கு எதிராக முழு அளவில் பிரயோகப்படுத்தப்பட்ட நிலையிலும் இஸ்லாம் எப்படி இந்த அகிலமெலாம் பரவிற்று? இந்த உலகில் வாழும் மக்களையெல்லாம் அறியாமையிலிருந்தும் அடிமைத்தளையிலிருந்தும் விடுவிக்கும் ஒரு சத்திய முழக்கம் எழுப்பப்பட வேண்டும். அது பாரெல்லாம் பரவி மக்களை அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுவித்திட வேண்டும். ஆனால் அது வேதாந்த வியாக்யானங்களைத் தான் விளம்பிக் கொண்டிருக்க வேண்டும். அது மக்கள் எதிர்கொள்ளும் யதார்த்தமான பிரச்னைகளை எட்டிப்பார்த்திடக் கூடாது. அவர்களைத் தடுப்போரை தாக்குவொரைi அடிமைப்படுத்திடுவோரை எதுவும் செய்திடும் வலுவைப் பெற்றிடக் கூடாது என்றால் எப்படி இயலும்? சுதந்திரமும் சுயமாக சிந்தித்துச் செயல்படும் உரிமையும் இருக்கும் வரை இஸ்லாம் மனிதர்களிடம் அழகிய முறையில் பிரச்சாரம் செய்வதையே விரும்புகின்றது. ஏனெனில் அது தனது நம்பிக்கைகளையோ கொள்கைகளையோ எவர் மீதும் திணிக்க விரும்புவதில்லை. இஸ்லாம் மார்க்கத்தில் நிர்ப்பந்தம் கட்டாயம் இல்லை. ஆனால் பணம் படை சூது வாது பொய் திரித்தும் மறித்தும் பேசுதல் என்பனவற்றால் மனிதனின் சுதந்திரம் மறுக்கப்படும் போதும் சுயமாகச் சிந்திக்கும் உரிமையும் அவன் விரும்பும் நம்பிக்கையை ஏற்க அல்லது மறுக்க அனுமதி இல்லை என்று கூறிடும் போதும் இஸ்லாம் தன் வழிமுறைகளைப் பயன்படுத்திட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது. இஸ்லாத்தின் உண்மையான நோக்கம் முழமையான சுதந்திரத்தை மனிதர்களுக்குப் பெற்றுத் தந்திட வேண்டும் என்பதே. மேலெழுந்த வாரியாக முழமையான சுதந்திரம் என ஓங்கி முழங்கி விட்டு ஒதுங்கி இருந்திட இஸ்லாம் விரும்பவில்லை. இஸ்லம் சொல்வதைச் செயதிட முழுமையாக முயற்சி செய்வதால் இடையே ஏற்படுத்தப்படும் இடறுகளைக் களைந்திட (ஜிஹாத்)இறைவழியில் போர் என்ற உபாயத்தையும் பயன்படுத்திட வேண்டியதிருக்கின்றது. அல்லாமல் இஸ்லாம் ஆட்சியிலிருக்கும் பகுதிக்கு ஆபத்து தாருல் இஸ்லாம் என்ற இஸ்லாத்தின் ப10மிக்கு எதிரிகளால் ஆபத்து என்பவை பற்றிக் கவலை இல்லை. இஸ்லாத்தின் ப10மிக்கு அதாவது இஸ்லாம் ஆட்சியிலிருக்கும் பகுதிகளுக்கு அக்கம் பக்கத்திலிருப்பவர்களால் ஆபத்து இல்லை. அது மிகவும் பாதுகாப்பாகவே இருக்கின்றது. அதனால் இனி ஜிஹாத் தேவை இல்லை என்று கூறுபவர்கள் ஜிஹாதின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளவில்லை என்றே பொருள். இஸ்லாம் சொல்லும் ஜிஹாத் உலக மனிதர்களைக் கட்டுப்படுத்தி அமுக்கி வைத்து அவர்களை அடிமைப்படுத்தி அவர்கள் விரும்பும் மார்க்கத்தை ஏற்க அல்லது மறுக்க தேவையான சுதந்திரத்தை மறுப்பவர்களை அகற்றுவதற்கே அத்தோடு அவர்களுக்கு முழு விடுதலையையும் பெற்றுத் தருவதே இஸ்லாம் சொல்லும் ஜிஹாதின் நோக்கம். அதேபோல் மனிதர்களை மனிதர்கள் அடிமைப்படுத்திடும் அவலத்தை மாற்றி அடிபணிதலும் கீழ்ப்படிதலும் மனிதனையும் இன்னும் இருப்பவற்றையும் படைத்த அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானதாக ஆக்கிவிடுவதும் ஜிஹாதின் தலையாயப் பணி. பெருமானார்(ஸல்)அவர்களின் காலத்திற்குப் பின் அதாவது அல்லாஹ்வின் இறுதி இறைத்தூதர்(ஸல்)அவர்களின் காலத்திற்குப் பின் ஜிஹாதின் கடைசிப் பகுதிகளைத்தான் பின்பற்றிட வேண்டும். ஜிஹாதின் ஆரம்ப நிலையும் மத்திய பகுதிகளும் முடிந்துவிட்டன. அவை இனி இல்லை. இதைத்தான் அறிஞர் இப்னு கைய்யும் அவர்களும் அறிவுறுத்துகின்றார்கள். அறிஞர் இப்னு கைய்யும் அவர்கள் சுட்டிக் காட்டுவதைப் போல் பராஅத் என்ற அத்தியாயம் அருளப்பட்ட பின் இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ் என்பதை நம்பாதவர்கள் மூன்று வகையாவர். ஏதிரிகளாக நின்று போர் புரிந்தவர்கள் ஒப்பந்தத்தால் சமாதானம் பேசி நின்றவர்கள் இஸ்லாத்தின் உயர்வையும் ஆட்சியையும் ஒத்துக்கொண்டு தங்கள் பாதுகாப்பு வரியைச் செலுத்தி பிரஜைகளாக வாழ்ந்தவர்கள். ஒப்பந்தத்தால் சமாதானம் பேசி நின்றவர்கள் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களாகிவிட்டார்கள். இப்போது இந்த முழு உலகிலும் வாழ்ந்தவர்கள் மூன்று வகையாயினர்:

இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களாக வாழ்ந்து பெருமானார்(ஸல்)அவர்களின் தலைமையின் கீழ் நின்றவர்கள்.
பெருமானார்(ஸல்)அவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் இவர்கள் தாம் (திம்மிகள்)இஸ்லாத்தின் உயர்வை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பு வரியைச் செலுத்தி வாழ்ந்தவர்கள்.
பெருமானார்(ஸல்)அவர்களோடு போரிட்டுக் கொண்டிருந்தவர்கள்.

இவைதான் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் ஏனையோருக்கும் இடையே ஏற்படும் உறவு இன்றைய சூழ்நிலைகளால் தோற்றுப்போவோம் என்றொரு மனநிலையை வளர்த்துக் கொண்டு ஜிஹாதின் சிறப்பை சிதைத்து பேசியும் எழுதியும் வருகின்றார்களே அவர்கள் இதை நன்றாக உணர்ந்திட வேண்டும். முஸ்லிம்கள் மக்காவில் வாழ்ந்த காலம் வரைக்கும், பின்னர், அவர்கள் மதீனாவுக்கு இடம் பெயர்ந்து செல்லும் வரையும் அல்லாஹ் முஸ்லிம்களைப் போரிட வேண்டாம் எனத் தடுத்தான். உங்களுடைய கைகளைத் (தற்சமயம் யுத்தம் புரியாது)தடுத்துக் கொண்டும் தொழுகையை (உறுதியாக)க் கடைப்பிடித்தும் ஜகாத் கொடுத்தும் வாருங்கள் (அல்குர்ஆன் 4:77)
அடுத்து அல்லாஹ் அவர்களைப் போரிட அனுமதித்தான். ஏனெனில் முஸ்லிம்கள் அநியாயத்திற்குள்ளாக்கப்பட்டார்கள். தாக்குதல்களுக்குள்ளாக்கப்பட்டார்கள். போர் அனுமதிக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, அல்லாஹ் அவர்களுக்கு உதவியும் செய்தான். முஸ்லிம்கள் அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களாக இருந்தார்கள். இதற்கு அவர்கள் எந்தத் தவறையும் செய்துவிடவில்லை. அந்நிலையில் தான் அல்லாஹ் அவர்களிடம் பின்வருமாறு கூறினான்:
(நிராகரிப்போரால்) அநியாயத்திற்குள்ளானவர்களுக்கு (அவர்களை எதிர்த்து)யுத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டுவிட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையோனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:39)
இவர்கள் (எத்தகையோரென்றால்)நியாயமின்றித் தங்கள் வீடுகளிலிருந்து (விரோதிகளால்)துரத்தப்பட்டார்கள். எங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான் என்று கூறியதுதான் இவர்கள் செய்த குற்றம் .. மனிதர்களில் (அக்கிரமம் செய்யும்)சிலரை சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிPருந்தால் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும் அவர்களுடைய மடங்களும் ய10தர்களுடைய ஆலயங்களும் அல்லாஹ்வுடைய திருநாமம் அதிகமாக ஸ்தோத்திரம் செய்யப்படும் மஸ்ஜித்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கின்றானோ நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுக்கு உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பலவானும் யாவரையும் மிகைத்தோனுமாக இருக்கின்றான் (அல்குர்ஆன் 22:40)
பின்னர் அவர்கள் மேல் போர் தொடுத்தோரை எதிர்த்துப் போராடும்படி பணித்தான்.
அல்லாஹ்வுடைய பாதையில் (நீங்கள் செல்பத்தைத் தடுத்து) உங்களை எதிர்த்தோருடன் நீங்களும் யுத்தம் புரியுங்கள் ஆனால் நீங்கள் வரம்பு கடந்து விடவேண்டாம். (அல்குர்ஆன் 2: 190)
பின்னர் இணைவைத்து வணங்குவோர் அனைவர் மீதும் போரிடும்படி பணிக்கப்பட்டார்கள். அடுத்து அவர்களுக்கு வந்தக் கட்டளை:
(விசுவாசிகளே) வேதம் அருளப் பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசம் கொள்ளாமலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்தவைகளை ஆகாதவைகள் எனக் கருதாமலும் இந்தச் சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றாரோ அவர்கள் (தங்கள்)கையால் பணிவுடன் ஜிஸ்யா கட்டும் வரையில் நீங்கள் அவர்களுடன் யுத்தம் புரியுங்கள் (அல்குர்ஆன் 9:29)
இப்படி இமாம் இப்னு கைய்யும் அவர்கள் குறிப்பிடுவதைப் போல், முதன் முதலில் முஸ்லிம்கள் போர் புரிவதிலிருந்து தடுக்கப்பட்டார்கள். அடுத்து அவர்கள் போர் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள் அநியாயக்காரர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இவர்களை எதிர்த்துப் போர் புரியும்படி கட்டளைப் பிறந்தது. இறுதியாக அவர்கள் இணைவைப்பில் ஈடுபட்ட அனைவரோடும் போராடும்படி கட்டளை இடப்பட்டார்கள். திருக்குர்ஆன் ஜிஹாத் என்ற இறைவனின் பாதையில் புரியும் போருக்குத் தரும் முக்கியத்துவம். எம்பெருமானார் (ஸல்)அவர்கள் தங்களுடைய வாழ்வாலும் வாக்காலும் ஜிஹாத் என்ற இந்த இறைவழி அறப்போருக்குத் தந்துள்ள முக்கியத்துவமும் இறைவழியில் புரியப்படும் போரின் சிறப்புக்களால் நிறைந்து நிற்கும் இஸ்லாமிய வரலாறு, இவற்றையெல்லாம் அறிகின்ற யாரும் இன்றைக்கு ஜிஹாதின் முக்கியத்துவத்தைக் குறைத்தும் திரித்தும் பேசுவோரின் திரிபுவாதத்தை நம்பமாட்டார்கள். ஜிஹாத் இறைவனின் வழியில் போர் புரிய திருக்குர்ஆன் வசனங்களைச் செவிமடுத்தப் பின்பும் பெருமானார் (ஸல்)அவர்களின் வாழ்வையும் வாக்கையும் விளக்கமாகத் தெரிந்த பின்பும் இஸ்லாத்தின் வரலாற்றை ஊன்றிப் படித்த பின்பும் இஸ்லாம் சொல்லும் ஜிஹாத் அன்றைக்கிருந்த மாறிவந்த சூழலுக்கேற்ப தற்காலிகமாக கடமையாக்கப்பட்ட ஒன்றே அது சில் எல்லைகளைப் பாதுகாப்பதற்காகக் கட்டளை இடப்பட்ட ஒன்றே எனப் பேசிடுவோர் எந்த ரகத்தைச் சார்ந்த மனிதர்களோ! போர்புரியும் அனுமதியை வழங்கிடும் போது இறைவன் நம்பிக்கையாளர்களிடத்தில் முஸ்லிமகளிடத்தில் ஓர் உண்மையைத் தெளிவுபடுத்தினான். இந்த உலகில் அநியாயம் செய்யும் ஒரு கூட்டத்தை இன்னொரு கூட்டத்தைக் கொண்டு தடுப்பது அல்லாஹ்வின் நியதி இந்த நியதி ஏன் தெரியுமா? அப்போதுதான் இந்தப் ப10மி குழப்பம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டவர்களின் பிடியிலிருந்து விடுபடும். ஆநியாயத்திற்குள்ளாகி அட்டூழியங்களால் அலைக்கழிந்த தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அல்லாஹ்வின் வழியில் போர் புரியுங்கள் என அனுமதி வழங்கப்பட்டது மட்டுமல்ல. அல்லாஹ்வே அவர்களுக்கு உதவி செய்து வெற்றியையும் உயர்வையும் பெற்றத் தந்தான். இவர்கள் அல்லாஹ் ஒருவன்தான் இறைவன் என்று சொன்னதைத்தவிர வேறு எந்தத் தவறையு; செய்யவில்லை. மனிதர்களில் (அக்கிரமம் செய்யும்)சிலரை, சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும் அவர்களுடைய மடங்களும் ய10தர்களுடைய ஆலயங்களும் அல்லாஹ்வுடைய திருநாமம் அதிகமாக ஸ்தோத்திரம் செய்யப்படும் மஸ்ஜித்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கின்றானோ நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுக்கு உதவி செய்வான் (அல்குர்ஆன் 22:40) இப்படி அல்லாஹ் கூறியிருப்பதால் இந்தப் போராட்டம் காலத்தால் கண்டுண்ட தற்காலிகமான போராட்டமல்ல. இது ஒரு நிரந்தரப் போராட்டம் ஏனெனில் சத்தியமும் (இஸ்லாம்)அசத்தியமும் (பொய்யான கொள்கைகள்)ஒன்றோடொன்று இணைந்து வாழ்ந்திட முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே அனைத்து அதிகாரங்களும் இதில் யாருக்கும் எந்தப் பங்கும் இல்லை. அல்லாஹ்வின் ஆட்சி இந்தப்பார் முழுவதும் பரவி நின்றிட வேண்டும். அல்லாஹ்வின் அதிகாரம் மட்டுமே நிலைத்திட வேண்டும். மனிதன் யாருக்கும் எந்த நிலையிலும் கட்டுப்பட்டிடக் கூடாது. அவன் அல்லாஹ்வுக்கு மட்டுமே கட்டுப்பட்டிட வேண்டும். என்பனவாய் இஸ்லாம் மனித உரிமைப் பிரகடனங்களை உலக விடுதலைப் பிரகடனங்களைக் கொண்டு மானுடத்தை அழைத்தது. இந்த அழைப்பை இஸ்லாம் முன்வைத்தப்போதெல்லாம் அல்லாஹ்வின அதிகாரத்தை அபகரித்துக் கொண்டவர்கள் அதனை எதிர்க்காமல் இல்லை. மனிதர்களைத் தங்கள் அடிமைகளாக ஆக்கி ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் ஆள்பலமும் ஆயதபலமும் கொண்டு அதனை அழிக்க முனையாமல் இல்லை. அவர்கள் இந்த மனித உரிமைப் பிரகடனங்களை இந்த விடுதலை அழைப்பை சற்றேனும் அழைப்பை சற்றேனும் சிகித்துக் கொண்டதில்லை. ஆகவே இவர்களின் தாக்குதலைத் தடுத்து, எதிர்த்தாக்குதலைத் தொடுத்திட வேண்டியது இஸ்லாத்தின் மிக முக்கியமான பணியாகும். இந்த எதிர் நடவடிக்கையின் மூலம் இந்தப் ப10மியில் பரவி வாழும் எல்லா மனிதர்களையும் விடுவித்து, அவர்களை அல்லாஹ்வின் அடிமைகளாக வாழ்ந்திடச் செய்திட வேண்டும். மனிதர்களை விடுவிக்கும் இந்தப் போராட்டம் அல்லாஹ்வின் மார்க்கம் இந்த நீழ்நிலம் முழுவதும் நிலைநாட்டப்படும் வரை நிரந்தரமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆரம்ப நாள்களில் மக்கா வாழ்க்கையின் போது முஸ்லிம்கள் தங்கள் கைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்திடப் பணிக்கப்பட்டார்கள். இது மிகவும் தற்காலிகமானதொரு நிலையே. மிகவும் நீண்டதொரு பயணத்தில் மிகவும் தற்காலிகமாகப் போடப்பட்ட ஒரு கட்டுப்பாடே. இதே காரணத்தால்தான் அவர்கள் ஹிஜ்ரத்தை மேற்கொண்ட நாள்களிலும் போர் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த ஆரம்ப நிலைகளுக்குப் பின் ஜிஹாத் இறைவழியில் போர் என்பது மதீனாவைப் பாதுகாப்பதற்காக அனுமதிக்கப்படவில்லை. மதீனாவைப் பாதுகாப்பதும் முக்கியம் தான். ஆனால் அது தான் ஜிஹாதின் அறுதி இலக்காக இருந்திடவில்லை. அதன் அறுதி இலக்கு பிற்றை நாள்களில் மனிதர்கள் அனைவரையும் எல்லா அடிமைத் தளைகளிலிருந்தும் விடுவித்து சமுதாயத்தைப் பாதுகாப்பதே. மக்கா வாழ்க்கையின் போது போர் செய்வது தடுக்கப்பட்டிருந்ததற்கான காரணத்தை மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இறைவனின் தூதர் (ஸல்)அவர்கள் பனூ ஹாஷிம் குலத்தவர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்தார்கள். பெருமானார் (ஸல்)அவர்களின் சொந்த குலமாகிய இந்தக் குலம், மிகவும் உயர்ந்த குலமாகப் போற்றப்பட்டு வந்தது) ஆகவே இறைவனின் தூதர் (ஸல்)அவர்கள். தங்களது திருத்தூதை மிகவும் வெளிப்படையாக எடுத்துச் சொல்லிடும் சுதந்திரத்தைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் தனி மனிதர்களிடமும் சிறு சிறு கூட்டத்தார்களிடமும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லிட முடிந்தது. அவர்களுடைய இதயங்களைத் தட்டி மனங்களைத் திறந்து இஸ்லாத்தைப் போதித்திட முடிந்தது. பெருமானார் (ஸல்)அவர்கள் பிரச்சாரம் செய்வதைத் தடுத்திடும் அளவில் அங்கே ஓர் அரசியல் அமைப்பு இருக்கவில்லை. அந்நிலையில் பலப்பிரயோகம் செய்திடவேண்டிய போராடிட வேண்டியதொரு சூழ்நிலை அங்கே எழவில்லை. இவையல்லாமல் இன்னும் சில காரணங்களும் உண்டு. அவற்றை நான் என்னுடைய திருமறைவிளக்கமான திருக்குர்ஆனின் நிழலில் என்ற விளக்கவுரையில் குறிப்பிட்டிருக்கின்றேன். இந்த விளக்கம் பின்வரும் இறை வசனத்திற்கு விளக்கம் சொல்லும் போது இடம் பெற்றதாகும்.
உங்களுடைய கைகளைத் (தற்சமயம் யுத்தம் புரியாது)தடுத்துக் கொண்டும் தொழுகையை (உறுதியாக)க் கடைபிடித்தும் ஜகாத் கொடுத்தும் வாருங்கள் என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே)நீர் பார்க்கவில்லையா? யுத்தம் புரிய அவர்களுக்குக் கட்டளையிட்ட பொழுது அவர்களில் ஒரு பிரிவினரோ அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயந்து எங்கள் இறைவனே ஏன் எங்கள் மீது யுத்தத்தை விதியாக்கினாய் இன்னும் சிறிது காலத்திற்கு இதைப் பிற்படுத்த வேண்டாமா? என்று கூறினார்கள் (4:77)
இந்த விளக்கத்தின் சில பகுதிகளை இங்Nகு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் அவற்றை இங்கே குறிப்பிடுகின்றேன். ----மக்கத்து வாழ்க்கையின் போது போர் புரிவது தடை செய்யப்பட்டதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்றால் மக்கத்து வாழ்க்கையின் காலம் அந்த மக்களை குறிப்பிட்ட சூழ்நிலையின் கீழ் குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் பயிற்றுவிக்கும் காலமாகும். இந்தப் பயிற்சியின் மிக முக்கியமான பகுதி தனிப்பட்டதொரு அரபியை பயிற்றுவிப்பதாகும். அந்த அரபியை எதிர்ப்புகளைத் தாங்குவது எப்படியென்றும் பொறுமையாக இருப்பது எப்படியென்றும் பயிற்றுவிப்பதாகும். இந்த எதிர்ப்புக்கள் உற்றார், உறவினர்களிடமிருந்தும் அவர்களால் அதிகமாக நேசிக்கப்பட்டவர்களிடமிருந்தும் வந்ததாலும் அதனை சகிப்பது எப்படி என்பது பயிற்றுவிக்கப்பட்டது. அவர்கள் சுயநலத்திற்காகப் பழிவாங்காமல் இருப்பதற்காகவும் பயிற்றவிக்கப்பட்டார்கள். அதேபோல் அவர்கள் தங்கள் குடுமப உறுப்பினர்களுக்காகப் பழிவாங்குவதிலிருந்து விலகி இருக்கப் பயிற்றுவிக்கப்பட்ட பழிவாங்கும் பாதகத்தில் ஈடுபடாமலிருக்கப் பயிற்றுவிக்கப்பட்டார்கள். அவர்கள் தங்கள் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு விடாமல் இருப்பதற்கும் . தங்கள் நரம்பு நாளங்களைக் கட்டுப்படுத்திடவும் பயிற்றுவிக்கப்பட்டார்கள். இந்தப் பயிற்சி அவர்களுக்கு ஏன் தேவைப்பட்டது என்றால் அவர்கள் எளிதில் ஆத்திரமடைபவர்களாகவும் சாதாரண நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தங்களை இழந்து எதையாவது செய்து விடுபவர்களாகவும் இருந்தார்கள். ஆக அவர்கள் கண்ணியமான நன்னடத்தை நிதானமான அறிவுப்ப10ர்வமான செயல்கள் ஆகியவற்றில் பயிற்றவிக்கப்பட்ட வேண்டியவர்களாக இருந்தார்கள். பயிற்றுவிக்கப்பட்டார்கள். ஒரு சமுதாயத்தில் இருக்கும் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு அந்தச் சமுதாயத்தோடு இயைந்து வாழ்வது எப்படி? என்பதை அவர்களுக்குக் கற்றுத் தந்திடுவது அவசியமாயிருந்தது. ஒரு தலைமையின் கீழ் அந்தத் தலைமையின் கட்டளைகளை ஏற்றுக் கண்ணியத்தோடு வாழ்வது எப்படி என்பதை அவர்களுக்குக் கற்றுத் தந்திட வேண்டியதிருந்தது. கற்றுத்தரப்பட்டது. தங்களுடைய பழக்க வழக்கங்களைப் பெரிதாகப் பாவித்து வாழ்ந்த அந்த மக்களுக்கு தங்கள் விருப்பத்திற்கும் பழக்க வழக்கங்களுக்க எதிரான கட்டளைகள் தங்கள் இறைவனிடமிருந்து அந்த இறைவனின் திருத்தூதர் (ஸல்)அவர்களிடமிருந்து வந்தால், அவற்றை அட்டியின்றி ஏற்று வாழும் முறையை வழக்கப்படுத்திட வேண்டியதிருந்தது. அதற்கான நடைமுறைப் பயிற்சி தரப்பட வேண்டியதிருந்தது. தரப்பட்டது. ஆக அங்கே ஆரம்பகால மக்கா வாழ்க்கையின் போது நோக்கம் ஒழுக்கத்தில் சிறந்த தனிமனிதர்களை உருவாக்குவதாகவே இருந்தது. அவர்கள் பயிற்சியின் முடிவில் தங்கள் தலைவர்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தார்கள். ஒழுக்கத்தில் சீலமிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் தங்களிடம் உறைந்திருந்த மிருகத்தனமாக பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டார்கள். குலம் கோத்திரம் என்ற தான் தோன்றித் தனங்களிலிருந்தும் தற்பெருமைகளிலிருந்தும் விடுபட்டார்கள். இவையே அந்தப் பயிற்சியின் நோக்கமாகவும் இருந்தது. ஆரம்ப நாளில் மக்கா வாழ்க்கையின் போது அவர்களின் முஸ்லிம்களின் கைகளைக் கட்டிப் போட்டதன் காரணம் என்னவாக இருக்குமெனில் குறைஷிமக்கள் தங்களிடையே ஒரு வம்சாவழிப் பெருமையை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு கௌரவத்தைக் கண்டார்கள். அத்தகையதொரு சூழ்நிலையில் அந்த மக்களிடம் பிரச்சாரம் சிறந்ததொரு உத்தியாக இருந்தது. அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி தூண்டிவிடுவது பலன் பயப்பதாகவும் இருந்தது. தற்பெருமையாலும் குலப்பெருமையாலும் வம்சாவழிப் பெருமையாலும் செருக்குண்டுக்கிடந்த அந்த மக்களைப் பக்குவப்படுத்துவதற்கு முன்னால் போர் செய்வதை அனுமதித்தால் அவர்கள் கௌரவம் கருதி பழிதீர்க்கும் தங்கள் பரம்பரை போக்குக்கு அதைப் பக்கபலமாக்கி விடுவார்கள். அங்கே உண்மையில் குலச் சண்டையும் கோத்திரப் போர்களும் குவிந்து கிடந்தன. தாயிஸ், கபுராவு, பசுஸ் போன்ற போர்கள் பல ஆண்டுகள் நீடித்தன. இந்தப் போர்கள் பல குடும்பங்களையும் குலங்களையும் ப10ண்டோடு அழித்தன. இப்படி இரத்த ஆறகளை ஓட்டித் தறுக்கிக் கிடந்த அந்த மக்களிடம் எடுத்த எடுப்பிலேயே இஸ்லாமும் போர் என்பது பற்றி பேசி இருந்தால் தாங்கள் ஓட்டிய இரத்த நதிகளுக்கு இஸ்லாத்தையும் பக்கதுணையாக அழைத்திருப்பார்கள். இந்த இரத்த ஆறகளால் மனமுடைந்து நின்ற அந்த மக்களிலுள்ள நல்லவர்கள்கூட இஸ்லாமும் இதைத்தான் போதிக்கின்றதா எனப்பேசி இடிந்து நின்றிருப்பார்கள். இஸ்லாத்தின் மேல் வீழ்ந்துவிடும் இந்தக் கறையை அகற்றிடுவது ஒரு போதும் இயலாத ஒன்றாக ஆகியிருக்கும். இஸ்லாம் சத்தியத்தின்பால் உண்மையான இறைவனின் பக்கம் அழைக்கின்றது. ஈருலக ஈடேற்றத்தின் பால் அழைக்கின்றது. அது உலக மக்களை அறியாமையிலிருந்தும் அஞ்ஞானத்திலிருந்தும் விடுதலையடைய அழைக்கின்றது என்பனவற்றை மறந்தே இருப்பார்கள். குலத்தின் பெயரால் கோத்திரத்தின் பெயரால் இனத்தின் பெயரால் இரத்தம் சிந்த கிடைத்த ஓர் அனுமதிதான் இஸ்லாம் என்றாக்கியிருப்பார்கள். இன்னொரு காரணம் என்னவாக இருக்குமென்றால் ஒவ்வொரு வீட்டிலும் இரத்தம் சிந்துவதைத் தடுப்பதாக இருக்கும். அன்றைய நாள்களில் எந்த நிலையான அரசும் அரசமைப்பும் இருக்கவில்லை. ஆகவே ஓர் அரசியல் அமைப்பிலிருந்து சித்திரவதை தடை சிரமம் என்பவை அங்கே ஏற்படவில்லை முஸ்லிம்களுக்கு. அந்த நிலையில் அந்த ஆரம்ப நாள்களில் அல்லாஹ் ஒருவனே என்பதை உள்ளத்தால் ஏற்று உதட்டால் மொழிந்து வாழ்வால் வாழ்ந்துகாட்டிய மக்களைத் துன்புறுத்தியதும் குரூரங்களைச் செய்ததும் அந்த நம்பிக்கையாளர்களின் உற்றார் உறவினர்களும் சொந்த பந்தங்களும் தாம். அந்நிலையில் போரிட அனுமதி வழங்கப்பட்டிருந்தால் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு குடும்பமும் ஒரு போர்க்களமாக ஆகியிருக்கும். அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்குப் பதில, இஸ்லாத்தை எதிர்த்துப் பேசியிருப்பார்கள். இதுதான் இஸ்லாமா? ஏன வினாக்களாகவே வழைந்திருப்பார்கள். அல்லாஹ் அவர்களைக் கைகளைக் கட்டிக் கொண்டு இருக்கப் பணித்தபோதே அந்த மக்கள் பெருமானார் (ஸல்)அவர்கள், குடும்பங்களுக்குள் குழப்பங்களை ஏற்படுத்துகின்றார்கள் எனப் பழித்தார்கள். (இந்நிலையில் ஆயதமேந்திப் போராடுவதும் அனுமதிக்கப்பட்டிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்) அந்நிலையில் மக்காவுக்குப் புனித யாத்திரை வந்த மக்களிடமும் வியாபாரம் செய்ய வந்த மக்களிடமும் அந்த மக்கத்து மக்கள் பெருமானார் (ஸல்)அவர்கள் குடும்பங்களையும் குலங்களையும் குலைக்கின்றார்கள் என்பது மட்டுமல்ல தந்தையைக் கொலை செய்யும்படி மகனையம் மகனைக் கொலை செய்யும்படி தந்தையையும் தூண்டி விடுகின்றார்கள். இது என்ன மார்க்கம்? என வசைகளைப் பொழிந்து அந்த மக்களையெல்லாம் வெருளச் செய்திருப்பார்கள். இன்னொரு காரணம் என்னவாக இருக்கும் என்றால் அல்லாஹ் நன்றாக அறிவான், அந்த மக்கள் - முஸ்லிம்களைக் கொடுமைப்டுத்திக் கொண்டிருக்கும் மக்கள் - ஒரு நாள் இந்த மார்க்கத்தின் மிக முக்கியமான படைவீரர்களாக ஆவார்கள் என்பதை - முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தும் மக்களின் தலைவர்களே பின்னாளில் இஸ்லாத்தை ஏற்று அதன் படைக்கலன்காளாகப் பயன்படுவார்கள் என்பதை அல்லாஹ் நன்றாக அறிவான். ஏன்? உமர் பின் அல்கத்தாப்(ரலி)அவர்கள் அப்படித்தானே ஆனார்கள். இன்னொரு காரணம் என்னவாக இருக்குமெனில் அரபு மக்கள் ஒரு நல்ல பண்பையுடையவர்களாக இருந்தார்கள். ஒரு மனிதன் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டால் அவன் மீது அலாதியானதொரு அனுதாபத்தை வளர்த்துக் கொள்வார்கள் குறிப்பாக அந்த மனிதர் தன்னுடைய குலத்தைச் சார்ந்தவராக இருந்தால் இந்த அனுதாபம் இன்னும் அதிகமாகும். அந்தச் சித்திரவதை தொடர தொடர அவர்களின் அனுதாபம் அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சித்திரவதைக்கு உள்ளாகின்றவர் சித்திரவதைக்குப் பயந்து தன்னைக் கிஞ்சிற்றும் மாற்றிக் கொள்ளமாட்டார். சித்திரவதைக்கு உள்ளாகுகின்றவர். மக்களால் மதிக்கப்படுபவராக இருந்தால் அந்த அரபு மக்கள் அவர்பால் கொள்ளும் அனுதாபத்திற்கு அளவே இருக்காது. மக்காவில் இப்படிப்பல நிகழ்ச்சிகள் நடந்தன. எடுத்துக்காட்டாக அபுபக்கர் (ரலி) அவர்கள் வாழ்வைக் குறிப்பிடலாம். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நாள் முதல் அவர்கள் பல இன்னல்களுக்கும் அல்லல்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். இதனால் மனம் உடைந்த அவர்கள் மக்காவை விட்டு வேறு ஏதேனும் இடத்திற்குச் சென்றுவிடலாம் என முடிவு கட்டி பயணத்தையும் ஆரம்பித்துவிட்டார்கள். இப்னு தஃனா என்பவரால் இதைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. ஏனெனில் அபுபக்கர் போன்றதொரு நல்லவரை வெளியே விட்டுவிடுவது அரபுக்களுக்கே ஏற்படும் அவமானம் எனக் கருதினார் அவர். ஆகவே அபுபக்கர் (ரலி)அவர்களுக்குப் பாதுகாப்பபுத் தருவதற்கு முன்வந்தார். இதேபோல் ஒருமுறை பனூ ஹாஷிம் குலத்தவர்கள் சமுதாயப் புறக்கணிப்புச் செய்யப்பட்டு அபுதாலிப் என்ற பள்ளத்தாக்கில் இருக்கும்படி அனுப்பப்பட்டார்கள். இந்தச் சமூகப் புறக்கணிப்பின் காலம் நீடிக்கவே அந்த அரபு இளைஞர்களால் மனம் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. இப்படி அவர்களை புறக்கணிப்புச் செய்ததைத் தாழமாட்டாமல் ஓர் இளைஞன் அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தான். அந்த அரபு மக்களிடையே எத்தனையோ குற்றங்களும் குறைகளும் மலிந்து கிடந்தன. என்றாலும் அவர்களிடம் இப்படியொரு விநயமும் இருந்தது. ஆனால் ஏனைய எல்லாக் கலாச்சாரங்களிலும் சித்திரவதைக்கு உள்ளாகுகின்றவர்கள் படுகின்ற இன்னல்களை ரசிப்பவர்களே அதிகம். (ஆரம்பநாள் மக்கா வாழ்க்கையின் போது போர் புரிவது தடுக்கப்பட்டதற்கு அந்த அரபு மக்களின் இந்த இயல்பும் ஒரு காரணமாக இருக்கலாம்). ஆரம்ப நாளில் ஜிஹாத் அனுமதிக்கப்படாததற்கு இன்னொரு காரணம் என்னவாக இருக்கும் என்றால், அதுபோது முஸ்லிம்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தார்கள். அவர்கள் மக்காவில் மட்டுந்தான் வாழ்ந்தார்கள். இஸ்லாத்தின் செய்தி உலகின் பிற பகுதிகளுக்கு ஏன் அரேபியாவின் பிற பகுதிகளுக்கே போய்ச் சேர்ந்திடவில்லை. அப்படியே சேர்ந்திருந்தாலும் ஏதோ கேள்விப்பட்டோம் எனற அளவில்தான் இஸ்லாம் வெளியே சென்றிருந்தது. அரேபியாவில் குறைஷிகள் அல்லாத குலத்தவர்கள் ஏதோ குறைஷி குலத்துக்குள்ளால் சலசலப்பு என்றே எண்ணிக் கொண்டிருந்தார்கள். இநதச் சலசலப்பு சச்சரவாக மாறி சந்திக்கு வரட்டும் அது என்னது என்று தெரிந்து கொள்ளவலாம் என்றே காத்திருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் ஆயதமேந்தி போராடத் தரப்படும் அனுமதி, இநதச் சலசலப்புகளையும் சச்சரவுகளையும் சண்டைகளாக மாற்றி அங்கிருந்த குறைந்த அளவு முஸ்லிம்களையும் முற்றாக அழித்திருக்கும். இந்தச் சண்டையில் அவர்கள் தங்கள் எதிரிகளைப் பெருமளவில் அழித்திருப்பார்கள் என்றாலும், அவர்கள் முழுமையாக அழிந்திருப்பார்கள். இணைவைப்பு முழுமையாகத் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கும். இஸ்லாம் தன் முழுப் பரிமாணத்தையும் வெளிப்படுத்திடும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். இஸ்லாம் அந்த மக்களோடு கட்டுண்டு கிடக்க வந்த மார்க்கமன்று. அது அகிலத்திலுள்ளோர் அனைவரையும் உய்விக்க வந்ததோர் அருள்கொடை. ஆரம்ப நாள்களில் மக்காவில் எப்படி போரிடுவது தடுக்கப்பட்டிருந்ததோ அதேபோல் ஆரம்ப நாள்களில் மதினாவிலும் போரிடுவது தடுக்கப்பட்டிருந்தது. காரணம் இறைவனின் திருத்தூதர்(ஸல்)அவர்கள் அந்த மதினாவில் வாழ்ந்த ய10தர்களோடும் மதினாவைச் சுற்றி வாழ்ந்த அரபுக்களோடும் நிராகரிப்பவர்களோடும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்கள். இஃது அப்போதைய சூழ்நிலையில் மகிவும் தேவையான ஒன்றாக இருந்தது. முதன் முதலாக அங்கே இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்திடவும் மக்களை இஸ்லாத்தை ஏற்றிடும்படி அழைத்திடவும் வாய்ப்புக்கள் நிரம்ப இருந்தன. இந்த வாய்ப்புக்களை வழிமறிக்க அங்கே எந்த அரசியல் அதிகாரமும் இருக்கவில்லை. அந்த மக்கள் அனைவரும் அந்தப் புதிய முஸ்லிம் அரசை ஏற்றுக்கொண்டனர். அத்துடன் எல்லா அரசியல் விவகாரங்களிலும் இறைவனின் தூதர்(ஸல்)அவர்களை அந்த மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர். இறைவனின் தூதர்(ஸல்)அவர்களின் தலைமையையும் ஏற்றுக்கொண்டனர். அந்த ஒப்பந்தத்தில் யாரும் வேறு யாரோடும் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளவோ போர்ப் பிரகடனங்களைச் செய்யவோ வேறுவகையான உறவுகளை வைத்துக் கொள்ளவோ கூடாது என்றும் அப்படி ஏதேனும் செய்ய விரும்பினால் இறைவனின் தூதர் (ஸல்)அவர்களின் தெளிவான அனுமதியைப் பெற்றத்தான் செய்வார்கள் என்றும் எல்லோரும் ஒத்துக் கொண்டிருந்தனர். இப்படி மதினா வாழ்க்கையின் போது உண்மையான அதிகாரம் முஸ்லிம்களின் தலைமையிடம் இருந்தது. இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய முழுமையான சுதந்திரமிருந்தது. அங்கே தாங்கள் விரும்பும் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள முழுமையான உரிமையிருந்தது. இரண்டாவதாக (மக்கத்து) குறைஷிகள் இஸ்லாம் வேறு எந்தக் குலத்தவரையும் சென்றடைந்திடாமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். ஏனைய குலத்தவர்களெல்லாம் குறைஷி குலத்திலுள்ள முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையேயுள்ள சண்டையின் இறுதி முடிவு என்ன? என்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். இறைவனின் தூதர் (அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் சமாதானமும் அவர்கள் மீது உண்டாகட்டும்)அவர்களும் அந்தக் குறைஷி அல்லாதவர்களின் மனநிலையை அறிந்து தகவல் கொண்டுவர ஆட்களை அனுப்பினார்கள். அவ்வாறு அனுப்பப்பட்ட முதல் குழு ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களின் தலைமையில் சென்றது. இது பெருமானார் (ஸல்)அவர்கள் மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்த ஆறாவது மாதத்தில் நடந்தது. அது ரமலான் மாதமாகும். இதேபோல் அந்த மக்கத்து மக்களின் கருத்துக்களைக் கண்டுவர பல குழுக்கள் அனுப்பப்பட்டன. இரண்டாவது குழு ஹிஜ்ரத்திற்குப் பின் 9வது மாதத்தில் அனுப்பப்பட்டது. அதற்கடுத்து 13வது மாதத்திலும் அடுத்து 16வது மாதத்திலும் அந்த மக்களின் கருத்துக்களைக் கண்டுவர குழுக்கள் அனுப்பப்பட்டன. 17வது மாதத்தில் பெருமானார் (ஸல்)அவர்கள் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி)என்பவரின் தலைமையின் கீழ் ஒரு குழுவை அனுப்பினார்கள். இந்தக் குழு சில் எதிர்ப்புகளைச் சந்தித்தது. அதிலே கொஞ்சம் இரத்தம் சிந்த வேண்டியதாயிற்று. இது ரஜப் மாதத்தில் நடைபெற்றது. இந்த ரஜப் மாதம் புனிதமான மாதங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தில் இடம்பெறும் பின்வரும் இறைவசனம் இதை இவ்வாறு குறிப்பிடுகின்றது.
(நபியே துல் கஅதா துல்ஹஜ் ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் யுத்தம் செய்வதைப் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும் அவைகளில் யுத்தம் புரிவது பெரும் பாவந்தான். ஆனால் (மனிதர்கள்)அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் சேருவதைத் தடுப்பதும் அவனை நிராகரிப்பதும் (ஹஜ்ஜூக்கு வருபவர்களi)மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், விசுவாசங் கொண்டோரை அவர்களது இல்லங்களிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (அதைவிட) மிகப்பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர விஷமம் கொலையை விட மிகக் கொடியது. (அல்குர்ஆன் 2:217)
இந்த வருடத்தில் ரமலான் மாதத்தில் தான் பத்ரு போர் நடைபெற்றது. இதை அன்ஃபால் என்ற அத்தியாயத்தில் விவாதிக்கின்றான். இறைவன். (திருக்குர்ஆனின் எட்டாவது அத்தியாயம்) இஸ்லாம் என்ற இந்தப் பேரியக்கத்தின் இந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்தைச் சற்று ஊன்றிப் பார்த்தால் இஸ்லாம் சொல்லும் ஜிஹாதின் உண்மையான இயல்பு புரியும். இதைப் புரிந்து கொண்டால் ஜிஹாதை தற்காப்புப் போர் என்று இக்காலப் பாணியில் குழப்புவோருக்கு அரிய பல விளக்கங்கள் கிடைக்கும். அவர்கள் மேலை நாட்டு குறுமதியாளர்களின் தாக்குதலுக்குப் பயந்து மிரள வேண்டாம். அந்த மிரட்சியில் வந்ததையெல்லாம் விளக்கமென உளரவேண்டாம். மேலை நாட்டவர்கள் தொடுத்த தாக்குதலில் ஜிஹாதை வளைத்து விளக்கம் தரவந்த மேதாவிகள் முஸ்லிம்கள் தங்கள் புகழ்மிக்க வரலாற்றை விட்டும் இஸ்லாத்தை விட்டும் வெகுதூரம் போய்க் கொண்டிருக்கும் போது அவதாரம் எடுத்திருக்கின்றார்கள். இந்த நவீன சிந்தனையாளர்கள். இவர்கள் முஸ்லிம்களுக்குத் தந்த விளக்கங்களில் அவர்கள் இஸ்லாத்தை விட்டு இன்னும் அதிக தூரம் அகன்று போய்விட்டார்கள். எனினும் இஸ்லாம் உலக மக்களை அனைத்து அடிமைத் தளைகளிலிருந்தும் விடுவிக்கும் ஒரு மார்க்கம், அது இந்த நிலையிலிருந்து கிஞ்சிற்றும் தன்னை விலக்கிக் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் அதிகாரத்தை அபகரித்துத் தங்களை தாக்கிக் கொண்டவர்களிடமிருந்து அதை மீட்டு அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம் என்றாக்குவோம் என மார்தட்டி நிற்போர் விளைவுகளைக் கண்டு சற்றும் தடுமாறாமல் நிற்போர் சிலர் இருக்கவே செய்கின்றார்கள். அல்லாஹ்வின் நல்லருளால் இவர்களும் எழுதிக் கொண்டு தானிருக்கின்றார்கள். இவர்கள் இந்த உயர்ந்த இலட்சியத்தை நோக்கிப் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏனைய எழுத்தாளர்கள் இந்த மேலை நாட்டவர்களுக்கும் அவர்களுக்கு ஒத்து ஊதுகின்றவர்களுக்கும் திருப்திகரமான ஒரு விளக்கத்தைச் சொல்லுவதற்கு காரணங்கள் தேடியலைகின்றார்கள். இஸ்லாம் சொல்லும் ஜிஹாத் இறைவனின் பாதையில் போர் என்பதை நியாயப்படுத்த அல்லாஹ்வின் சொற்களாம் திருக்குர்ஆன் சொல்லும் காரணங்களும் விளக்கங்களுமே போதுமானவையாகும். அல்லாஹ் கூறுகின்றான். மறுமை வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்யவும். எவரேனும் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிந்து வெட்டப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம் அவர்களுக்க நிச்சயமாக அதி சீக்கிரத்தில் மகத்தான கூலியைக் கொடுப்போம். பலஹீனமான ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் சிறு குழந்தைக்காகவும் அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் யுத்தம் புரியாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோ (இறைவனை நோக்கி)எங்கள் இறைவனே அக்கிரமக்காரர்கள் வசிக்கும் இவ்வ10ரிலிருந்து எங்களை வெளிப்படுத்திவை. நீ எங்களுக்கு உன் புறத்தால் ஓர் இரட்சகரையும் அளித்தருள் நீ எங்களுக்கு உன் புறத்தால் உதவி செய்வோர் ஒருவரையும் அளித்தருள் என்று பிரார்த்தனை செய்கின்றனர்.
(ஆகவே இத்தகைய சமயத்தில், உண்மை)விசுவாகிகள் அல்லாஹ்வின் வழியில் (அவசியம்)யுத்தம் புரிவார்கள். நிராகரிப்போரோ (இவர்களுக்கு எதிராக)ஷைத்தானுடைய வழியில் தான் யுத்தம் புரிவார்கள். ஆகவே ஷைத்தானுடைய நண்பர்களுடைன் நீங்களும் யுத்தம் புரியுங்கள். நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலஹீனமானதே (அல்குர்ஆன்4:74-76)
(நபியே)நிராகரிப்போருக்கு நீர் கூறும் இனியேனும் அவர்கள் (விஷமம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுடைய)முந்திய குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். (அவ்வாறின்றி விஷமம் செய்யவே)முன் வருவார்களாயின், முன்சென்(ற இவர்கள் போன்)றோரின் வழி ஏற்பட்டே இருக்கின்றது. (அவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்) (விசுவாசிகளே இந்நிராகரிப்போரின்)விஷமத்தனம் முற்றிலும் நீங்கி அல்லாஹ்வுடைய மார்க்கம் முற்றிலும் நிலைபெறும் வரையில் (மக்கா வாசிகளாகிய நிராகரிக்கும்)அவர்களுடன் யுத்தம் புரியுங்கள். (விஷமம் செய்வதிலிருந்து)அவர்கள் விலகிக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான். அவர்கள் மாறு செய்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் பாதுகாவலன் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் (அவன்)பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன். உதவி செய்வதிலும் மிகச் சிறந்தவன் (அல் குர் ஆன் 8: 38 - 40)
(விசுவாகிகளே)வேதம் அருளப் பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங் கொள்ளாமலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்தவைகளை ஆகாதவைகளென கருதாமலும் இந்தச் சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றனரே அவர்கள் (தங்கள்)கையால் பணிவுடன் ஜிஸ்யா கட்டும் வரையில் நீங்கள் அவர்களுடன் யுத்தம் புரியுங்கள். ய10தர்கள் உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். (இவ்வாறே)கிறிஸ்தவர்கள் மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். இவர்கள் தங்கள் வாய்களால் கூறும் இக்கூற்றானது இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றையே ஒத்திருக்கின்றது. அல்லாஹ் இவர்களை அழித்து விடுவானாகவும் (சத்தியத்தைப் புறக்கணித்து)இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றார்கள். இவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகன் மஸீஹையும் (தங்கள்)தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் ஒரே ஆண்டவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் (யாவரும்)ஏவப்பட்டிருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி வேறெவனும் இல்லை. அவர்கள் இணைவைக்கும் இவைகளை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன். இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அனைத்து விட விரும்புகின்றனர். எனினும் இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை ப10ர்த்தியாக்கி வைக்காமல் இருக்கப் போவதில்லை. (அல்குர்ஆன் 9:29-32).
மேலே நாம் மேற்கோள் காட்டியுள்ள இறைவசனங்கள் இறைவழியில் போர் ஜிஹாத் என்பதற்குக் காரணங்களை வரையிட்டுக் காட்டுகின்றன. அவை பின்வருமாறு: அல்லாஹ்வின் அதிகாரத்தை ஆட்சியை ப10மியை நிலை நாட்டுவது. மனிதர்களின் வாழ்க்கையை முற்றாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் வழி அமைத்திடுவது. மனிதர்களுக்கிடையே எழும் விவகாரங்களில் அல்லாஹ் வழங்கிய சட்டங்களைக் கொண்டு தீர்ப்பு வழங்கிட தீர்மானித்திட வகை செய்வது. (ஷைத்தானின்) இறை எதிர்ப்பின் அல்லது இறைமறுப்பின் அடிப்படையில் அமைந்த அத்தனை சகத்களையும் வாழ்க்கை நெறிகளையும் ப10மியிலிருந்து முற்றாகத் துடைத்தெறிவது. மனிதன் மனிதனை அடக்கியாளும் அநியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது. மனிதர்கள் தங்கள் விருப்பங்களை சட்டங்களாகச் சமைத்து அவற்றை ஏனையோர் மீது திணிக்கும் தான்தோன்றித் தனத்தை அழிப்பது. இறைவனின் பாதையில் போர்ப் பிரகடனம் செய்திட இந்தக் காரணங்கள் போதுமானதாகும். எனினும் ஒருவர் ஒன்றை நிரந்தரமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் இஸ்லாம் மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை. அதாவது ஒருமுறை மனிதர்கள் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட பின், அவர்கள் இஸ்லாத்தை ஏற்கலாம் அல்லது ஏற்காமல் இருக்கலாம். ஆனால் பொதுவான வாழ்வில் புறவாழ்வில் சமுதாயத்தில் செயலிலிருக்கும் (ஷாPஅத் சட்டங்கள்) இறைவனின் சட்டங்கள் பின்பற்றிட வேண்டும். இதற்காக யாரும் தங்கள் நம்பிக்கையை கடவுள் நம்பிக்கையை மாற்றிடும்படி கட்டாயப்படுத்த மாட்டார்கள். இஸ்லாம் பணிக்கும் இறைவழிப் போர், மனிதர்களைப் பொய்யான கடவுள்களிடமிருந்தும் பொய்யான கொள்கைகளிடமிருந்தும் விடுவிக்கும் விடுதலைப் போராகும். இந்தப் பொய்யான கடவுள்களிடமிருந்து மனிதர்களை விடுவித்து உண்மையான இறைவனாம் அல்லாஹ்விடம் கொண்டு வந்து சேர்ந்திடுவதை இலட்சியமாகக் கொண்டது இஸ்லாம். இந்த இலட்சியம் தான் ஆரம்ப நாள்முதல் முஸ்லிம்களின் இதயத்திலே இருந்து வருகின்றது. இதற்காகத்தான் மனித இனத்தின் இந்த விடுதலைக்காகத்தான் அவர்கள் வாள் பிடித்தார்கள் வாழ்ந்தார்கள். அந்த இலட்சிய முஸ்லிம்களிடம் நீங்கள் ஏன் போரிட்டீர்கள் யுத்தம் செய்தீர்கள் எனக் கேட்டால் அவர்கள் எங்கள் நாடு ஆபத்தில் சிக்கிக் கொண்டது அதனை தற்காத்துக் கொள்ளவே தான் போரிடுகின்றோம். அல்லது பாரசீகர்களும் ரோமர்களும் எங்கள் மேல் போர் தொடுத்திருக்கின்றார்கள். அவர்களிடமிருந்து எங்களைக் காத்துக் கொள்ளவே நாங்கள் போராடுகின்றோம். அல்லது நாங்கள் எங்கள் ஆதிக்கத்தின் எல்லையை விசாலப்படுத்தவே போராடுகின்றோம். அல்லது எங்களுக்கு அதிகமானப் பொருள்களைக் கவர்ந்திட வேண்டும் என்றொரு ஆவல். ஆகவே நாங்கள் போராடுகின்றோம் என்று எப்போதும் பதில் சொன்னதில்லை. அவர்களில் யாருக்கும் எந்த நிலையிலும் இதுபோன்ற எண்ணங்கள் இருந்ததில்லை. இஸ்லாமிய வரலாற்றில் பெருமையும் புகழும்மிக்க கத்திஸிய்யா போரின் போது நடந்தது இதுவே. கத்திஸிய்யாவில் போர் ஆரம்பிப்பதற்கு முன்பு பாரசீகப் பேரரசின் தளபதி ருஸ்தும், ரபாய் பின் அமர், ஹ_ஸைபா பின் முஷ்ஷின், முகிர் பின் சுஹ்ஃப் ஆகியோரிடமும் ஒருவர் பின ஒருவராக பின்வரும் கேள்வியைக் கேட்டார். நீங்கள் எதற்காக இங்கே வந்திருக்கின்றீர்;கள்? இந்த வினாவிற்கு இவர்கள் அனைவரும் தந்த பதில் ஒன்றுதான்: மனிதர்களில் மனிதனுக்குப் பணிந்து வாழ்வதிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்வுக்கு மட்டுமே பணிந்து வாழ வேண்டும் என விரும்புகின்றவர்களை மனிதர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும் இந்த உலகின் குறகலான குளறுபடியான வாழ்க்கையிலிருந்து விடுவித்து இந்த உலகில் இறப்பிற்குப் பின்வரும் மறுவுலக வாழ்க்கையிலும் விசாலமானதோர் வாழ்க்கையைப் பெற்றிடச் செய்திட வேண்டும். மதங்கள் கட்டவிழ்த்து விடும் அட்டூழியங்களிலிருந்து விடுவித்து இஸ்லாம் வழங்கும் நியாயம் மனிதர்களுக்குக் கிடைத்திடச் செய்திட வேண்டும். இதற்காக இறைவன் தன் திருத்தூதரை நம்மிடம் அனுப்பி இருக்கின்றான். இந்தத் தூதர் (அல்லாஹ்வின் ஆசியும் அருளும் சாந்தியும் சமாதானமும் அவர்கள் மீது உண்டாகட்டும்) அவர்கள் அந்த இறைவனின் மார்க்கத்தை நம்மிடையே போதிக்கின்றார்கள். இந்த இறைவனின் மார்க்கத்தை இஸ்லாத்தை யாராவது ஏற்றுக்கொண்டால் நாங்கள் அவருடைய நாட்டை அவரிடம் கொடுத்து விடுவோம். நாங்கள் திரும்பி விடுவோம். யாரெல்லாம் (இந்த மார்க்கத்தை மறுத்துக்)கிளர்ச்சி செய்கின்றார்களோ அவர்களோடு நாங்கள் போர் செய்வோம். இதில் நாங்கள் வெற்றி பெறும்வரை அல்லது வீரமரணமடையும் வரை ஓயமாட்டோம். இதுதான் இறைவழியில் போர் ஜிஹாத் என்பதை நியாயப்படுத்துவதற்கான காரணம் இது இந்த மார்க்கத்தின் இயல்போடு சம்மந்தப்பட்டது. இதே போல் இஸ்லம் எடுத்து வைக்கும் உலக மனிதர்களின் விடுதலை என்ற முழக்கம் மனிதர்களை அவர்கள் எப்படியிருக்கின்றார்களோ அப்படியே அவர்களைச் சந்தித்திட வேண்டும் என்ற யதார்த்தம் இவையெல்லாம் ஜிஹாதை நியாயப்படுத்துகின்றன. இஸ்லாம் என்ற இந்தப் பேரியக்கம் தன் வளர்ச்சிப் பாதையில் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கேற்றாற்போல் புதிய அணுகுமுறைகளை மேற்கொண்டிடும் மகத்தான மார்க்கம். இந்த வளர்ச்சிப் பாதையில் மேற்கொள்ளும் அணுகு முறையில் அவசியமானதோர் அணிகலனாக நின்று இலங்குகின்றது. இறைவனின் பாதையில் புரியப்படும் போர்; ஜிஹாத். அல்லாமல் இஸ்லாம் குடியிருந்த பகுதிக்கு ஆபத்து முஸ்லிம்களுக்கு ஆபத்து என்பவற்றால் மட்டுமே இறைவழியில் போர் அவசியம் என்றில்லை. ஜிஹாத் இறைவழியில் போர் செய்தல் என்பதற்கான காரணங்கள் இஸ்லாம் எடுத்துச் சொல்லும் கொள்கைகளின் இயல்பு மனித சமுதாயங்களில் நிலவும் இயற்கையான சூழ்நிலைகள் இவற்றால் நியாயப்படுத்துவதே அல்லாமல் தற்காப்பு பாதுகாப்பு என்ற குறுகிய நிலையற்றக் காரணங்களால் அல்ல. ஒரு முஸ்லிம் தன் உடைமைகளையும் உயிரையும் முன்வைத்துப் போராடுகின்றான் அல்லாஹ்வின் பாதையில் கொள்கைகளுக்காக. அவன் தன் சொந்தக் கோபங்களைத் தணித்துக் கொள்வதற்காகவோ தனது வேட்கைகளைத் தணித்துக் கொள்வதற்காகவோ போராடுவதில்லை. போர்க் களத்தில் ஒரு முஸ்லிம் குதித்திடும் போது அவன் ஏற்கனவே ஒரு பெரும் போரில் வென்றே வந்து நிற்கின்றான். இந்தப் போராட்டம் அந்த முஸ்லிம் தனக்குள் நடத்தி வென்றதாகும். இந்தப் போரில் அவனுக்கு எதிராக நின்றவர்கள் அவனுடைய சொந்த ஆசாபாசங்கள் அவனுடைய சுயநலம் மனதில் அலைமோதிய ஆசைகள் குடும்ப நலம் கோத்திரப் பெருமை தன்னாசை தணியாத பொன்னாசை இவையே இப்படி இஸ்லாம் கொள்ளக் கூடாது எனப் பணித்தவற்றையெல்லாம் வாகை கண்டே அவன் அல்லாஹ்வை முன் நிறுத்திக் களத்தில் குதிக்கின்றான். அங்கு அவனைத் திசைத் திருப்பும் சபலங்களோ சலனங்களோ எவ்வளவு எள் முனையின் மூக்களவு கூட இல்லை. அவன் தனக்குள் நடத்தும் போரில் கிடைக்கும் வெற்றி அவன் களத்தில் எதிரிகளோடு போரிடும் போதும் வெற்றி நிச்சயம் என்றாக்கி விடுகின்றது. இஸ்லாம் சொல்லும் ஜிஹாத் இஸ்லாத்தின் ப10மியை அதாவது இஸ்லாத்தின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பாதுகாப்பதற்காகத்தான் என விவாதிப்போர் இஸ்லாம் காட்டும் வாழ்க்கை வழிகாட்டுதல்களைக் குறைத்து விடுகின்றனர். இவர்கள் இஸ்லாத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முடக்கிப் போட்டிட முனைகின்றார்கள். இது இஸ்லாத்தின் இயல்புமல்ல வழிமுறையுமல்ல. இவர்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் இன்றைய உலகில் உலாவரும் சிந்தனைப் போக்குகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சிந்தனைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. தாயகம் எங்கள் ப10மி என்றெல்லாம் மண்ணைப் புனிதப் படுத்தி அதை மாதா என்றும் இறைவன் என்றும் புகழ்ந்து வழிபடும் சிந்தனையும் செயலும் இஸ்லாத்திற்கு எதிரானது. அல்லாஹ்வின் ஆட்சி நிலைநாட்டப்பட்ட இடங்களை இஸ்லாத்தின் ப10மி எனக் கூறலாம். இந்த இடங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் வழி வாழ்பவர்கள் இருப்பதால் மட்டுமே அது ஒரு முக்கியத்துவத்தைப் பெறும். ஏனெனில் அது அல்லாஹ்வை நம்பி வாழ்வோரின் உறைவிடமாக அமைகின்றது. இந்த ப10மி இஸ்லாத்தின் ஆட்சிக்குட்பட்ட ப10மி. அல்லாஹ்வின் ஆட்சி நிலைநாட்டப்பட்ட இடம். இஸ்லாம் என்ற இந்தப் பேரியக்கத்தின் மையமாகவும் முக்கிய செயலகமாகவும் இருக்கின்றது. இறைவன் ஒருவனே என்பதை நம்பி வாழ்பவர்களின் உறைவிடமாகவும் இஸ்லாமியப் பேரியக்கத்தின் செயலகமாகவும் இருப்பதால் அதனைப் பாதுகாப்பது கடமையாகின்றது. இதற்காக ஜிஹாத் இறைவனின் வழியில் போர் என்பதன் ஒரே நோக்கம் இது தான் என்று கூறிடக்கூடாது. அப்படி கூறுவது ஜிஹாத் இறைவனின் பாதையில் போர் என்பதன் நோக்கத்தையும் பலனையும் குறைத்துக் கூறுவதாகும். ஜிஹாத் என்பதன் உண்மையான நோக்கம் மனிதர்களை ஏனைய மனிதர்களின் அரசியல் அமைப்புக்களின் பிடியிலிருந்து விடுவித்து அல்லாஹ்வுக்கு மட்டுமே கீழ்ப்படியச் செய்வதாகும். இந்த மார்க்கத்தின் களம், உலகமாந்தர் அனைவரும் அது இந்தப் ப10மியில் வாழும் அனைவருக்கும் சொந்தம். அல்லாஹ்வின் ஆட்சியை இநதப் ப10மியில் நிலைநாட்டுவதில் எத்தனையோ இடைய10றுகள். எத்தனையோ முட்டுக்கட்டைகள். இந்த இடைய10றுகளில் முந்திக் கொண்டு வருபவர்கள், மனிதர்கள் மீது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி ஆட்சி செய்து வரும் ஆட்சியாளர்கள். மௌட்டிகத்தையும் மூடப்பழக்கங்களையும் தங்கள் வாழ்வாகக் கொண்டு வாழும் சமுதாய அமைப்புக்கள். மக்களின் மத்தியில் புரையோடி நிற்கும் பரம்பரைப் பழக்கவழக்கங்கள். சுருக்கமாகச் சொன்னால் இன்றைக்கு உலகைச் சூழ்ந்திருக்கும் அத்தனை சூழ்நிலைகளும் அல்லாஹ்வின் ஆட்சியை நிலைநாட்டுவதில் எதிராக நிற்கின்றன. இஸ்லாம் இந்த இடைய10றுகளை அப்புறப்படுத்திடவே பலத்தைப் பிரயோகிக்கின்றது. இதன் நோக்கம் தனி மனிதர்களுக்கும் இஸ்லாத்திற்குமிடையே எந்தத் தடையும் எந்தச் சக்தியும் குறுக்கே நின்றுவிடாமல் பார்த்துக்கொள்வதே. இதனால் இஸ்லாம் மனிதர்களைச் சுதந்திரமாக அணுகித் தன் கொள்கைகளைச் சமர்ப்பிக்க முடிகின்றது. இதன் பின்னர் இஸ்லாத்தை ஏற்பது அல்லது நிராகரிப்பது அந்தத் தனிமனிதனின் சுதந்திரமாக ஆகிவிடுகின்றது. ஆகவே அன்பார்ந்த நவீன எழுத்தாளர்களே நாம் இன்றைய மேலை நாட்டவர்களின் எழுத்துக்களைக் கண்டு நிலைகுலைய வேண்டாம். ஜிஹாத் இறைவனின் வழியில் புரியும் போருக்கு இந்த மேலை நாட்டு மேதாவிகள் நம்பும்படியான காரணங்களைச் சொல்லிட வேண்டும் என முயற்சிகளைச் செய்ய வேண்டாம். இவர்களைத் திருப்திப் படுத்தும் முயற்சியில் அல்லாஹ் கற்பிக்க விரும்பாத புதிய காரணங்களை நீங்கள் கற்பிக்க வேண்டாம். அதன் மூலம் மனிதர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் ஓர் வலுவான வழிமுறையை குறைத்துக் கூறவேண்டாம். அன்று எப்படி ஜிஹாதின் தேவை இருந்ததோ அதே போல் இன்றும் அதன் தேவை இருக்கின்றது. இந்தத் தேவை என்றும் இருந்து கொண்டேயிருக்கும். வரலாற்று நிகழ்ச்சிகளை மீட்ப்பார்வை செய்திடும் போது நாம் இஸ்லாம் என்ற இந்த இயற்கை மார்க்கத்தின் இயல்புகளை மறந்திட வேண்டாம். இந்த மார்க்கம் மனிதர்களை விடுவிக்க எடுத்து வைக்கும் விடுதலை முழக்கத்தை மறந்திட வேண்டாம். இந்த விடுதலையைப் பெற்றுத்தர இந்த மார்க்கம் கடைப்பிடிக்க விரும்பும் நடைமுறை செயல்முறைகளையும் மறந்திட வேண்டாம். தற்காப்பு தற்காலிகமாகத் தேவைப்படுவது தான். அதற்கும் ஜிஹாத் தேவைதான். அதற்காக ஜிஹாதின் நீண்ட கால தேவையையும் திட்டத்தையும் மறக்கவோ புறக்கணிக்கவோ வேண்டாம். இந்த மார்க்கமும் அதை நம்பி வாழ்பவர்களும் தங்களைத் தாக்க வருவோர்களிடமிருந்து தங்களைத் தற்காத்திடுவது அவசியந்தான். இதில் ஐயங்கள் ஏதுமில்லை. இஸ்லாம் மனிதர்களை விடுவிக்க விரும்புகின்றது. அவர்களை இறைவனின் பக்கம் திருப்பிட விரும்புகின்றது. இன்றைக்கிருக்கும் அஞ்ஞான ஜாஹிலிய்யா தலைமையிலிருந்து அவர்களை வெளியேற்றி இஸ்லாம் என்ற இறைநெறியின் பால் கொண்டு வந்திட விரும்புகின்றது. இஸ்லாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் வழி வாழும் ஓர் நிரந்தர சமுதாயத்தை அமைத்திட விரும்புகின்றது. அல்லாஹ்வை மட்டுமே அடிபணிந்து வாழும் இந்தச் சமுதாயம் ஏனைய வழிமுறைகளை கொள்கைகளை வழிபட்டு வாழும் சமுதாயத்தை விட சிறந்தும் உயர்ந்தும் நிற்கின்றது. ஏனைய சமுதாயத்திலிருந்து வேறுபட்டும் நிற்கின்றது. இவற்றால் மனிதனை அடிமைப்படுத்தி தங்கள் அதிகாரத்தை அவர்கள் மேல் செலுத்தி வந்தவர்கள், இயல்பாகவே இஸ்லாத்தின் மேல் எரிந்து விழுகின்றனர். தங்கள் அரசியல் அமைப்பு தங்கள் தான்தோன்றித்தனமான ஆட்சிகள் தங்களது முரட்டுத்தனமான மூடப்பழக்கவழக்கங்கள் இவையெல்லாம் எங்கே வீழ்ந்துபட்டுவிடுமோ எனப் பதறுகின்றவர்கள் பாய்ந்து விழுந்து இஸ்லாத்தைக் கடித்துக்குதற விரும்புகின்றனர். தங்கள் ஆதிக்கத்திற்கு எதுவும் நேர்ந்து விடுமோ என அஞ்சுவோர் தொடுக்கும் ஆக்கிரமப்பிலிருந்து இஸ்லாமியச் சமுதாயம் தன்னைக் காப்பாற்றியாக வேண்டும் அதனடிப்படையில் அது தன்னைத்தற்காத்துக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய சமுதாயம் இப்படியொரு எதிர்ப்பை ஆதிக்க சக்திகளிடமிருந்து தாராளமாக எதிர்பார்க்கலாம். இஸ்லாம் தன் கொள்கைகளை எடுத்து வைக்கும் ஒவ்வொரு சமுதாய அமைப்பிலும் இப்படியொரு சூழ்நிலை ஏற்படவே செய்யும். இஸ்லாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இப்படியொரு நிலை இஸ்லாத்திற்கு வந்தே தீரும். அதாவது இஸ்லாம் தன் கொள்கைகளை எடுத்துச் சொல்லிடும் போது அஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் உண்மைகளின் தொகுப்பான இஸ்லாம் எங்கே தங்களை இல்லாமல் செய்து விடுமோ என அஞ்சும். ஆதனால் அந்தக் கொள்கைக்குச் சொந்தக்காரர்கள் இஸ்லாமிய சமுதாயத்தைத் தாக்கவும் தகர்க்கவும் எத்தனிப்பர். இந்நிலையில் போரும், போராட்டமும் அந்நிய சக்திகளால் இஸ்லாமிய சமுதாயத்தின் மேல் திணிக்கப்பட்டு விடுகின்றது. இந்தப் போரை போராட்டத்தை இஸ்லாமிய சமுதாயம் விரும்புகின்றதா? இல்லையா? என்பதைப் பற்றி அந்நிய சக்திகள் கவலைப்படுவதில்லை. இந்தப் போராட்டம் உண்மையைச் சாற்றும் இஸ்லாத்திற்கும், பொய்யை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளுக்கும் இடையே எழுந்திடும் இயல்பான போராட்டம். ஏனெனில் உண்மையும் பொய்யும் நீண்ட நாள்கள் ஏககாலத்தில் வாழ்ந்திட முடியாது. பொய் பதறும், உண்மையின்மேல் பாயும், இந்த யதார்த்தத்தை யாரும் மறுக்க முடியாது. இதனால் இஸ்லாத்திற்குப் பொய்களின் ஆக்கிரமிப்பிலிருந்து தன்னைத்தற்காத்துக் கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த உண்மையை விட இன்னும் முக்கியமானதோர் உண்மை இருக்கின்றது. அது: மனிதர்களை அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவதிலிருந்தும் வழிபட்டு வாழ்வதிலிருந்தும் விடுவித்திட வேண்டியது இஸ்லாத்தின் பொறுப்பு என்பதுதான், இதற்கான முதல் நடவடிக்கையை எடுத்திட வேண்டியதும் இஸ்லாத்தின் பொறுப்பே. பூமியின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் அந்தப் பகுதியில் மனிதர்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்பிடும் முயற்சி முதலில் இஸ்லாத்திடமிருந்து அல்லது இஸ்லாமியச் சமுதாயத்திடமிருந்துதான் வரவேண்டும். இதனால் ப10மியின் ஏதேனும் ஒரு பகுதியோடு கட்டுண்டு நின்று விடுவதில்லை இஸ்லாம். இஸ்லாம் ப10மியில் ஏதேனும் ஒரு பகுதியோடு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஏனைய பகுதிகளில் வாழ்பவாக்ளதை; தீமைகளுக்கும் அநியாயங்களுக்கும் மௌட்டீக வாழ்க்கை நெறிகளுக்கும் பலியாகட்டும் என விட்டுவிட முடியாது. இஸ்லாம் உலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்ட மார்க்கம். சில நேரங்களில் இஸ்லாத்தின் எதிரிகள் இப்படி நினைக்கலாம். இஸ்லாத்தை நாம் தாக்க வேண்டாம். ஆனால் நாம் மனிதர்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதையும் அவர்கள் மேல் நம்முடைய சட்டங்களைத் திணிப்பதையும் இஸ்லாம் தடுத்திடக்கூடாது. நம்முடைய ஆதிக்கத்திற்குட்பட்டப் பகுதிகளில் இஸ்லாம் தன்னுடைய செய்தியைச் சொல்ல வந்திடக்கூடாது. இஸ்லாம் தன்னை மனிதர்களை விடுவிக்க வந்த மார்க்கம் எனக் காட்டிக் கொள்ளலாம். ஆனால் அதை அது தன்னுடைய எல்லைக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும் (என இஸ்லாத்தின் எதிரிகள் பேசலாம்) இதனை இஸ்லாம் ஒத்துக் கொள்ளுமா? ஒரு போதும் முடியாது. அவர்கள் இஸ்லாத்தின் உயர்வை ஏற்றுக்கொண்டு ஜிஸ்யாவை செலுத்தினால் மட்டுமே அவர்கள் விடப்படுவார்கள். இதனைச் செய்தால் அவர்கள் இஸ்லாத்தின் உயர்வை ஒத்துக்கொண்டு இஸ்லாத்தை மக்களிடையே சுதந்திரமானதொரு சூழ்நிலையில் பிரச்சாரம் செய்திட அனுமதிக்கின்றார்கள். இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் பாதையில் தங்கள் ஆதிக்கப் பலத்தையோ ஆட்சி பலத்தையோ கொண்டு தடைகளை வெட்டிப் போடவில்லை என்று பொருள். இதுதான் இந்த மார்க்கத்தின் தன்மை. இதுதான் இந்த மார்க்கத்தின் பணி. ஏனெனில் இந்த மார்க்கம் மனித இனத்தை எந்த அடிமைத்தனத்திலும் விட்டுவிட விரும்பவில்லை. அது உலக மக்கள் அனைவரையும் உண்மையான இறைவனின் பக்கம் திருப்பிட விரும்புகின்றது. இந்த மகத்தானப் பணியை விட்டுவிட்டு சில எல்லைகளுக்குள்ளேயும் சில இனங்களோடும் இஸ்லாம் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டால் அது தான் விறுவிறுப்பையும் வேகத்தையும் தனித் தன்மையையும் இழந்துவிடும். இஸ்லாம எத்துணை விறுவிறுப்பான மார்க்கம் வேகமான மார்க்கம் எனபதைத் தெரிந்து கொள்ள ஓர் அடிப்படையைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த அடிப்படை இது தான் : இஸ்லாம் ஓர் வாழ்க்கை நெறி. இந்த வாழ்க்கை நெறி வாழ்வின் எல்லா பகுதிகளுக்கும் வழிகாட்டுகிறது. மனித வாழ்வின் எந்தப் பகுதிக்கும் வழிகாட்டாமல் இஸ்லாம் விட்டுவிடவில்லை. இந்த வழிகாட்டுதல்கள், அனைத்தையும் படைத்த, அனைத்தையும் அறிந்த அல்லாஹ்விடமிருந்து வந்தவை. இது மனிதர்களால் உருவாக்கப்பட்டதன்று. அதுபோல் இது ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டும் பேசிக்கொண்டிருக்கும் வெற்றுக் கொள்கையுமல்ல. அதேபோல் இஸ்லாம் என்ற இந்த மார்க்கம் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் பின்பற்றி வாழும் தனித்த தனிப்பட்ட மார்க்கமும் அல்ல. இந்த மிகப்பெரிய உண்மையை அடிப்படையை நாம் புறக்கணித்திட முடியாது. இந்த உண்மையை அடிப்படையைப் புறக்கணித்தால் மட்டுமே நாம் ஜிஹாதை நியாயப்படுத்த வெளிக்காரணங்களைத் தேடிட வேண்டும். அனைத்தையும் படைத்த இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வதா? அவனால் படைக்கப்பட்டவர்களால் படைக்கப்பட்ட சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதா? என்பதே இங்கே அடிப்படைக் கேள்வி. இஸ்லாம் உண்மையின் சொரூபமாக நின்று மக்களைத் தன் பக்கம் ஈர்த்திடும் தெய்வீகக் கொள்கை. உண்மையையும் அதன் பக்கம் மக்கள் விரைந்து செல்வதையும் பொய்யான கொள்கைகளாலும் போலியான வாழ்க்கை நெறிகளாலும் பொறுத்துக் கொள்ள இயலாது. இந்தப் போலிகள் இஸ்லாத்தைத் தாக்கித் தங்கள் போலித்தனத்தைத் தக்கவைத்துக்கொள்ள படை நடத்தி வருவார்கள். போலிகளின் போரை எதிர்கொள்ள இஸ்லாம் தன்னைத் தயார் நிலையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். அஞ்ஞான கொள்கைகள் ஜாஹிலிய்யா கொள்கைகள் இஸ்லாத்தின் மேல் தங்கள் தாக்கதலைத் தொடுத்திடும் என்பது அஞ்ஞானக் கொள்கைகளின் போலி வேடத்தோடும் இஸ்லாத்தின் உண்மையோடும் தொடர்புடைய ஒன்று. இப்படி இந்த இரண்டு கொள்கைகளும் தங்களது இயல்புகளால் எதிர் எதிரே நிற்பவை. இஸ்லாம் என்ற இந்தப் பேரியக்கத்தின் ஆரம்ப நாள்களில் அது தன்னைத் தாக்கிடுவோரை தடுத்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவே போரிட வேண்டியதாயிருந்தது. இஸ்லாம் என்ற இந்தப் பேரியக்கத்தின் பிந்திய நாள்களில் இஸ்லாம் தன்னுடைய உண்மையான வழிகாட்டுதல்கள் உலகமக்கள் அனைவரையும் சென்றடைந்திட வேண்டும் என விரும்பிற்று. இந்த உண்மையின் ஒளி மக்களைச் சென்றடைந்திடாமல் தடுத்திட விரும்பியவர்களை இஸ்லாம் அப்புறப்படுத்திட வேண்டியது அவசியமாயிற்று. இஸ்லாத்தை ஒரு தேசத்தோடு மட்டும் தொடர்புடைய கொள்கை என்று பார்த்தால் அந்த தேசத்திற்கு அல்லது அந்த நாட்டுக்கு ஆபத்து வந்திடும் போதே அது ஆயதங்களைத் தூக்கிட வேண்டும். இஸ்லாம் உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழியும் நல்வழியும் காட்டவந்த மார்க்கம் என்ற அடிப்படையில் பார்த்தால் அதற்கு எதிர்ப்பு எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆகவே அது எப்போது வேண்டுமானாலும் ஆயதம் தூக்கிட வேண்டியது வரலாம். நாம் அனைவரும் ஓர் உண்மையை அறிவோம். இஸ்லாம் உலகமக்கள் அனைவரையும் அறியாமையிலிருந்து காப்பாற்றி நேர்வழியில் நடத்திச் செல்லவந்த மார்க்கம். ஆகவே அது மக்களைச் சென்று அடைந்திடுவதில் தடைகளை ஏற்படுத்திடுவோரை அகற்றிடவும் தடைகளை அழித்திடவும் உரிமைப் பெற்றது. இந்தத் தடைகள் நிலைபெற்று நடத்தப் பெற்றுவரும் நிறுவனங்களாக இருக்கலாம். அல்லது பாரம்பரியம் பரம்பரை வழக்கம் இனத்தின் குலத்தின் வழக்கம் என்றெல்லாம் பேசி மக்களை இஸ்லாம் சென்றடைந்திடாமல் தடுத்திடும் தடைகளாக இருக்கலாம். இவற்றையெல்லாம் அகற்றிவிட்டு மக்களைச் சென்றடைந்திடுவது இஸ்லாத்தின் கடமையாகும். அது மக்களைச் சென்றடைந்தபின் தன்னை ஏற்றுக்கொள்வதைத் தவிர இன்னொரு வழி இல்லை என எவர் மீதும் தனது கொள்கையை நம்பிக்கையைத் திணித்திடுவதில்லை. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு இருக்கும் உரிமையைப் போல் மறுக்கவும் உரிமையுண்டு. இந்த உரிமையை மக்களுக்கு மறுப்பவர்களைத்தான் இஸ்லாம் அகற்றுகின்றது. மனிதர்களை ஏனைய மனிதர்களின் பிடியிலிருந்து விடுவித்து அல்லாஹ்வின் பக்கம் திருப்புவது இஸ்லாத்தின் உரிமை. இஸ்லாம் ஒரு வெற்று நம்பிக்கை மட்டுமல்ல அஃதொரு நடைமுறை வாழ்க்கை நெறி. ஆகவே அது மனிதர்களை விடுவித்து அவர்கள் விரும்புவதை நம்;பவும் ஏற்று நடக்கவும் உரிமைகளைப் பெற்றுத் தருவதிலும் நடைமுறையில் சாத்தியமான வழிகளை மேற்கொள்ளுகின்றது. ஆனால் பொய்யையும் புரட்டையும் மூலதனமாகக் கொண்டு மக்களை ஏற்த்து வாழும் கொள்கைகள், அந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்புக்கள் இஸ்லாத்திற்கு வழிவிடுவதில்லை. இவற்றை அழித்துவிட்டு மக்களைச் சென்றடைந்திட வேண்டியதிருக்கின்றது இஸ்லாம். இன்றைக்கு இஸ்லாத்தைப் போதிக்க வந்த நவீன முஸ்லிம்கள் இஸ்லாத்தின் இந்தத் தன்மையைப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் தற்கால சூழ்நிலைகளாலும் இன்றைக்கு வாழுகின்ற சிந்தனை போக்குகளாலும் பாதிக்கப்பட்டு விட்டார்கள். போர் அறிவிக்கும் முன்பே நாங்கள் தோற்றுப் போய்விட்டோம் என அறிவிக்கக் காத்துக் கிடக்கும் இவர்கள் மேலை நாட்டவர்களின் கருத்துப்படையெடுப்பில் கதிகலங்கி நிற்கின்றனர். இஸ்லாத்தின் தனித்தன்மையையும் தெய்வீக இயல்புகளையும் மேலை நாட்டவர்கள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்டவர்கள் தங்கள் மனங்களில் குடிபுகுந்துவிட்டக் காழ்ப்புகளால் வெளிக்காட்ட விரும்பவில்லை. இவர்கள் இஸ்லாம் வாள் கொண்டும் வன்முறைகளைக் கொண்டும் பரப்பப்ட்ட மார்க்கம் என இடைவிடாமல் எழுதி வந்தார்கள். இஸ்லாம் உருவிய வாளோடு தன்னுடைய நம்பிக்கைகளை அடுத்தவர்கள் மீது திணித்தது என்றும் பிதற்றி வந்தார்கள். இவர்கள் இந்த மேலைநாட்டு எழுத்தாளர்கள் நன்றாக அறிவார்கள் இவையெல்லாம் உண்மையல்ல என்பதை. ஆனாலும் அவர்கள் இந்தப் பொய்களை முழு மூச்சாய்ப் பரப்பி வந்தார்கள். காரணம் இதன் மூலம் அவர்கள் ஜிஹாதின் முக்கியத்துவத்தை மழுங்கச் செய்யலாம் என நினைத்தனர். இவர்களின் நினைப்பும் நம்பிக்கையும் வீண் போகவில்லை. முஸ்லிம்களே ஜிஹாதை இவர்களின் விருப்பப்படி குறைத்து மதிப்பிட்டனர். ஜிஹாதின் பலனை சில நிலபரப்புகளின் பாதுகாப்பு என்ற வட்டத்திற்குள் குறுக்கிவிட்டனர். இதனால் நமது எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் மிகவும் குறகியதொரு மனப்பான்மையை வளர்த்ததோடு ஒரு தோல்வி மனப்பான்மையையும் வளர்த்துக்கொண்டனர். இவர்கள் இந்தத் தோல்வி மனப்பான்மையால் வேறு வெளிக்காரணங்களைத் தேடி அலைந்தனர் இந்த மேலை நாட்டவர்களுக்குப் பதில் தந்திட. இஸ்லாம்தான் தன்னை மக்களிடம் கொண்டு சேர்ந்திட வேண்டிய முதல் நடவடிக்கை இஸ்லாத்திடமிருந்துதான் வந்திட வேண்டும் என்பதையும் மறந்தார்கள். நமது இந்த நவீன முஸ்லிம் அறிஞர்கள், இஸ்லாத்தையும் ஏனைய மதங்களைப் போன்றதொரு மதம் என்றே பார்க்கின்றார்கள். இந்த ஏனைய மதங்கள் பொய் நம்பிக்ககைளின் தொகுப்புத்தான். இவற்றிற்கும் மனிதனின் நடைமுறை வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மற்ற மதங்களைப் போல் இஸ்லாமும் ஒரு மதந்தான் என எடுத்துக்கொள்பவர்கள் மதம் போரை அனுமதிக்கின்றது என்றால் அது தன்னை அடுத்தவர்கள் மேல் திணித்திடத்தான் எனக் கருதுகின்றனர். இஸ்லாத்திற்கும் இது போன்ற கற்பனைகளுக்கம் எந்தச் சம்பந்தமுமில்லை. இஸ்லாம் இறைவனால் அருளப்பட்ட ஒரு வாழ்க்கை நெறி. அது அனைத்து மனிதர்களுக்காகவும் அருளப்பட்டது. இந்த வாழ்க்கை நெறி இறைவனின் ஆட்சியை அதிகாரத்தை மட்டுமே நிலை நாட்டிடும். அத்தோடு நடைமுறை வாழ்க்கையை அதன் நுட்பமான பகுதிகளையெல்லாம் நெறிப்படுத்திடும். ஜிஹாத் என்பது இந்தப் ப10மியில் அல்லாஹ்வின் ஆட்சியை மேலோங்க செய்வதற்குப் பயன்படுத்துவதே இது இந்த வாழயில் எடுக்கப்படும் எல்லா முயற்சிகளையும் எல்லாப் போர்களையும் போராட்டங்களையும் தழுவி நிற்பது. ஆக எங்கெல்லாம் இஸ்லாமிய சமுதாயம் வாழுகின்றதோ அந்த இஸ்லாமிய சமுதாயம் இறைவழி காட்டுதலின் உண்மையான பிரதிநிதியாக இருந்திடும்வரை அதற்கு இறைவன் கொடுத்த உரிமை ஒன்று இருக்கின்றது. அந்த உரிமை இஸ்லாம் தன்னை முன்னிறுத்தி அரசியல் அதிகாரத்தைத் தன்வயப்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் அது அல்லாஹ்வின் அதிகாரத்தையும் வாழ்க்கை முறையையும் நீதி நெறிமுறையையும் நிலைநாட்டலாம். அதே நேரத்தில் இஸ்லாத்தை இஸ்லாம் சொல்லும் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது என்பதை தனி மனிதர்களின் மனசாட்சிக்கும் விருப்பத்திற்கும் விட்டுவிடலாம். ஆரம்ப நாள்களில் அல்லாஹ் ஜிஹாதை இறைவனின் வழியில் போர் புரிவதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தடுத்து வைத்திருந்தான் என்றால் அது இந்தப் பேரியக்கத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு கட்டமே இஃது அந்த கட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட யுக்தியின் பாற்பட்டதே அன்றி ஒரு நிரந்தர கொள்கையல்ல. நாம் மேலே எடுத்துக் காட்டியவற்றின் அடிப்படையில் தான் இஸ்லாம் என்ற இந்தப் பேரிய்க்கத்தின் வளர்ச்சியோடு தொடர்புடைய பல்வேறு திருக்குர்அன் வசனங்களையும் பார்த்திட வேண்டும். இந்த வசனங்களை ஓதிடு;ம்போது இந்த இறைவசனங்கள் இஸ்லாம் என்ற இந்தப் பேரியக்கத்தின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்டக் காலக்கட்டத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை நாம் எப்போதும் மனதிற் நிறுத்திட வேண்டும். அதே நேரத்தில் இதே இறைவசனங்கள் ஒரு நிரந்தரமான படிப்பினையையும் நமக்குத் தந்துகொண்டே இருக்கும். திருக்குர்ஆன் வசனங்களுக்கு இஸ்லாமிய இயக்கத்தின் வளர்ச்சி காலக்கட்டத்தோடு சம்பந்தப்பட்ட பொருளையும் அது தரும் நிரந்தரப் படிப்பினை சம்பந்தப்பட்ட பொருளையும் நாம் போட்டுக் குழப்பிடக் கூடாது.
தொடர்ந்து வரும்...