Thursday, March 5, 2009

இஸ்லாத்தின் அரசியற்கோணம் எவ்வாறு இருக்கவேண்டும்? பகுதி 02

விசேட கோணம்

அரசியலிலே ஈடுபடும்போது முஸ்லிம்கள் தமது அரசியற்பார்வையையும், அரசியற்கோணத்தையும் மிகச்சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு முஸ்லிம்கள் மேற்கொள்ளாவிட்டால் பிறர் அவர்களை தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பயன்படுத்தி விடுவார்கள். தமது அரசியற்பார்வையிலும், அரசியற்கோணத்திலும் தெளிவில்லாத நிலை தொடருமானால் அது பலகீனமான அரசியல் நிலைப்பாட்டிற்கு வழிகோலுவதுடன், தமது இலக்குகளை அடைய முடியாத அல்லது கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

இஸ்லாத்தின் அடிப்படையிலிருந்து அல்லது அதன் கோணத்திலிருந்து அரசியலை மேற்கோள்வது அல்லது அதற்கான அரசியற்கோணத்தை ஏற்படுத்துவது தனித்துவமானது ஆகையால் அதனை விசேட கோணம் என நாம் அழைக்கலாம். இந்த விசேட கோணம் முஸ்லிம் அரசில்வாதிகளுக்கு ஒரு திசைகாட்டியாகத் தொழிற்படுவதுடன் அது மிகச் சரியான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் சரியான அரசியற் திசையில் பயணிப்பதற்கும் வழிகாட்டும்.

இந்த விசேட கோணத்திலிருந்து பார்க்கும்போது முஸ்லிம்கள் உலக நிகழ்வுகளை தமது சுயசிந்தனைப்படியோ அல்லது மனோவிச்சைப்படியோ பாராமல் இஸ்லாமிய அகீதாவிலிருந்து நோக்குவதற்கு வழிசெய்யும். இஸ்லாமிய மூலாதாரங்களின்படி இஸ்லாம் என்பது ஒரு முழுமையான வாழ்க்கை வழிகாட்டி. எனவே அனைத்து நிகழ்வுகளும் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற அடிப்படையிலிருந்து மாத்திரமே நோக்கண்பட முடியும். இதன்படி இஸ்லாமிய ஹ}க்ம் ஷரிஆவும், இஸ்லாமிய சிந்தாந்தமுமே ஒரு முஸ்லிம் அரசியல்வாதி உலகை பார்க்க பயன்படுத்தவேண்டிய வில்லைகளாகும்.

உலக நிகழ்வுகள், நிகழ்ச்சிகள், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்றவற்றை இஸ்லாத்தினதும், அதன் சட்டங்களினதும் அடிப்படையில் நோக்கும் வகையிலேயே இந்த விசேட அரசியற்கோணம் கட்டமைக்கப்பட வேண்டும். அது முதலாளித்துவ கோட்பாட்டைப்போல இலாபம் அல்லது நலனின் அடிப்படையிலோ அல்லது பயன்பாட்டின் அடிப்படையிலோ கட்டமைக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. இந்நிலை எந்தவொரு அரசியல்வாதியையும் அல்லது அரசியல் இயக்கத்தையும் அரசையும்கூட முறைகெட வைத்துவிடும். எனவேதான் வெறுமனவே ஏனைய அரசியல் இயக்கங்களினதும், அரசியல் அலகுகளினதும் நிகழ்ச்சிநிரல்களை ஏன்? எங்கே? எதற்காக? என ஆராய்ந்து புரிந்து கொள்வது மாத்திரம் அரசியலை காத்திரமான செயற்படுத்துவதற்கு போதாதாகும்.

இஸ்லாமிய அரசியற்கோணத்தை கட்டமைத்தல்

முஸ்லிமைப்பொருத்தவரை ஒரு சாதாரண சூழ்நிலையில் விசேட கோணத்தை ஏற்படுத்துவது இலகுவான விடயம். இஸ்லாம் அரசிலும், சமூகத்திலும் முழுமையாக நிலைநாட்டப்பட்டு அமுல்படுத்தப்படுமானால் இஸ்லாமிய சித்தாந்தம் சமூகத்திலும், அதனடிப்படையாக ஒவ்வொரு தனிமனிதனிலும் முழுமையாக நிலைநிறுத்தப்பட்டிருப்பதே அதற்கு காரணமாகும். எனினும் இன்றைய முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் துரதிஷ்ரமான நிலை என்னவெனில் அது பல்வேறுபட்ட சிந்தனைக்கலவைகளை கொண்ட குப்பையான ஒரு அடித்தளத்திலிருந்தே சிந்திக்கிறது, செயற்படுகிறது. முhறாக அது இஸ்லாமிய அடிப்படையிலிருந்து தொழிற்படவில்லை. எனவே அங்கிருந்து உருவாகின்ற சமூகமும், அரசியற்கோணமும் சேதமுற்ற ஒன்றாக அல்லது மாசுபட்டதாக அமைந்திருக்கிறது.

அரசியல் என்பது பொதுவாக மக்களின் விவகாரங்களை பராமரிப்பது என்றே வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. அதாவது அரசியல்வாதி மக்களின் தேவைகளையும், பிரச்சனைகளையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பரிந்துரைத்து வழிகாட்டுபவர்;. இன்று முஸ்லிம் உம்மா முற்றுமுழுதான அரசியல், இராணுவ, பொருளாதார, சமூக ஆக்கிரமிப்பிற்குள் இருக்கிறது, அது பசி, பட்டினி, உயிர்கொல்லி நோய் எனப்பீடிக்கப்பட்டுள்ளது. கல்விக்கும், சுகாதாரத்திற்கும் உரிய முறையான கட்டமைப்புக்கள் இல்லாது பின்தள்ளப்பட்டுள்ளது. எனவே உலக முஸ்லிம்களின் இந்த அவல நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பரிந்துரைக்கவும், வழிகாட்டவும் மக்களில் பலர் முனைவார்கள் என்பது யதார்த்தமான நிலையாகும்.

இவ்வாறான முஸ்லிம் உம்மாவின் அவல நிலையை மாற்ற அக்கறையுடன் செயற்பட்ட பலர் நாளடைவில் உம்மாவின் நிலையை மேலும் குழப்பகரமானதாக மாற்றியதுடன் அவர்கள் முஸ்லிம் ஆட்சியாளர்களின் கருவிகளாக மாறிவிட்டனர். முஸ்லிம் உலகின் வேறுசில இடங்களில் முஸ்லிகளின் நிலையை மேம்படுத்த செயற்பட்ட வேறுசிலர் அரசால் சிறைப்பிடிக்கப்பட்டும், சித்திரவதைக்குள்ளாகியும் பாதிக்கப்பட்டனர். இந்த நாடுகளில் வெறுமனவே மாற்றுக்கருத்துக்களை கூறினால் கூட அது அரசின் இருப்பிற்கு ஆபத்தானது எனக்கருதப்பட்டு அக்கருத்துக்களின் குரல்வளைகள் நெறிக்கபட்டன. இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் இயக்கங்கள் தோன்றுவதும் மறைவதுமாக மாறிவிட்டன. அல்லது அத்தகைய எதிர்ப்புக்களை எதிர்கொள்ள இயலாமல் தமது இயக்கத்தின் கொள்கையை அல்லது தமது ஸ்தாபக தலைவர்களின் இலக்கை விட்டு வெகுதொலை து}ரத்திற்கு சென்று விட்டன. எனவே முஸ்லிம்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தமது செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு முன், அல்லது மக்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்கு முன் தாம் செயலாற்றும் பாங்கை தீர்மானிக்கக்கூடிய மிகத்துல்லியமான அரசியற்கோணத்தை மிகச்சரியான அடிப்படைகளிலிருந்து தீர்மானிப்பது அவசியமாகும். இந்நிலையே எந்நிலையிலும் பின்வாங்காத, தீர்க்கமான தமது இலக்கை எட்டக்கூடிய அரசிற் செயற்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாததாகும்.

இஸ்லாமிய அரசியற்கோணம் இஸ்லாமிய சித்தாந்தத்திலிருந்து உருவாக்கப்படவேண்டும்.

இஸ்லாமிய சித்தாந்தமே ஒரு முஸ்லிம் தனது வாழ்வின் அனைத்து விவகாரங்களையும் மேற்கொள்ளும் அடிப்படையாக அமைவதைப்போல் தனது அரசியலையும் மேற்கொள்வதற்கான அடிப்படையாகும். எனவே முஸ்லிமின் அரசியற்கோணம் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைய வேண்டியதுடன், இஸ்லாம் என்றால் என்பது தொடர்பாக மிகச்சரியான புரிதலுடன் அது உருவாக்கப்பட வேண்டும். இந்த து}ய்மையான அரசியற்கோணத்திலிருந்தே அவர் உலக நிகழ்வுகளையும், நிகழ்சிகளையும் நோக்க வேண்டும்.

உதாரணமாக சில முஸ்லிம்கள் தற்போது நடைமுறையிலுள்ள அரசுடன் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதே இஸ்லாத்தை அமுல்செய்வதற்கான வழி எனப்பரிந்துரைத்தால், அல்லது அதனை அவர்கள் மேற்கொண்டு இஸ்லாத்தின் சில சட்டங்களை அவர்கள் அமுல்ப்படுத்துவதிலும் வெற்றி கொண்டால், சரியான இஸ்லாமிய அரசியற்கோணத்திலிருக்கும் ஒருவர் அவர்களின் இத்தகைய நிலைப்பாடுகளை மறுத்துரைக்க வேண்டியதுடன், இஸ்லாத்தை அறைகுறையாக அல்லது பகுதியாக அமுல்செய்யும் இம்முறை இஸ்லாமிய சித்தாந்தத்திற்கு முரணானது என விவாதிக்க வேண்டியதுடன், குப்ர் சட்டங்களுக்கும், இஸ்லாமிய சட்டங்களுக்குமிடையே சகவாழ்வு எப்போதும் இருக்க முடியாது என உறுதியாக நிறுவவேண்டும். இதுவே இஸ்லாமிய சித்தாந்தம் தொடர்பான அடிப்படை விளக்கமாக இருப்பதுடன், முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒரு விடயம் தொடர்பாக சரியான அரசியற்கோணத்தை ஏற்படுத்துவதற்கு அவசியமான பார்வையாகும்.

அல்லது வேறுசிலர் ஜனநாயம்தான் முஸ்லிம் உலகிற்கு சிறந்த விமோசனம் எனக்கோரினால் அவர் ஜனநாயகம் குப்ர் கோட்பாடாகும், அது இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரண்பாடானதாகும் என உறுதியாகச் சொல்ல வேண்டும். வேறுசிலர் கிலாபா மிகத்தொலைவான ஒரு விடயம், அது இன்றைய நிலையில் சாத்தியப்பாடானது அல்ல என வாதிட்டு நாம் உடனடியாக விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய எமக்கருகாமையில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்வதே சிறந்தது என்ற நிலைப்பாட்டை எடுத்தால் - அவருக்கு தமதருகில் இருப்பவர்களுக்கு உதவிசெய்வது சிறந்த விடயம்தான் - அது அல்லாஹ்வின் அருளைப்பெற்றுத்தரக்கூடியதுதான், ஆனால் கிலாபாவை நிலைநாட்டப் இயங்குவது இதனையும் விட அதி முக்கியமானது என அவருக்கு தெளிவுபடுத்தவேண்டும். கிலாபா நிலைநாட்டப்படுவது தொலைவான விடயமா? இல்லையா? என்பது தொடர்பான விவாதத்தில் சிக்குவதிலிருந்து அவரைப்பாதுகாக்க வேண்டும். இவ்வாறு இஸ்லாமிய சித்தாந்தம் தொடர்பான சரியான புரிதல், சரியான அரசியற்கோணத்திற்கு மிகவும் அவசியமாகும்.

எவரொருவரிடம் இஸ்லாமிய சிந்தாந்தத்தின் அடிப்படை பிழையாக அல்லது பலகீனமாக புரியப்பட்டிருக்கிறதோ, அவர் சமூக அரசியல் மாற்றத்திற்காக செயற்படும்போது வழிதவறவும், திசைமாறவும், அல்லது இலக்குகளையே விட்டு விலகி செல்லவும் முற்பட்டுவிடுகிறார். எனவே சமூக மாற்றத்திற்காக இயங்க முற்படுபவர்கள் தம்மை இஸ்லாமிய சித்தாந்தத்திலும், அதன் வழியில் அமைந்த அரசியற்கோணத்திற்கும் முற்றாக பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர் எதிர்கொள்ளும் முதற் சவாலிலேயே தடுமாற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். எனவே முதலில் இஸ்லாத்தின் அடிப்படையிலான சிந்தனைத்தளத்தை ஏற்படுத்திக்கொண்டு அதன் அடிப்படையில் தனது எண்ணக்கருக்களை உருவாக்கிக்கொண்டு அதன் பின்னேரே அவர் உலக நிகழ்வுகளையும், நிகழ்ச்சிகளையும் நோக்க வேண்டும். அது தொடர்பான அரசியல் நிலைப்பாடுகளுக்கு வந்து தனது அரசியற் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் நோக்குவோமானால் இன்றைய முஸ்லிம் உம்மாவின் அதி முக்கியமான அரசியற் திசை கிலாபாவை மேற்கொள்வதை நோக்கியே இருக்க வேண்டும் என்பதை ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment