Tuesday, June 24, 2008

நாங்கள் எங்கே செல்கிறோம்?


எப்போதும் நடைமுறை உலகம் எனும் மாயை சில உண்மைகளையும், நியாயங்களையும் புறந்தள்ளி பயணிக்க தலைப்படுகின்றது. அதன்போது பல புதிய பிரச்சனைகளையும், தீர்வுகளற்ற விளைவுகளையும் கொடுத்து இயல்பு வாழ்க்கையை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகின்றது. இன்றைய முஸ்லிம் சமூகமும், அது எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு முயற்சிகளும் இதற்கொரு சிறந்த உதாரணங்களாகும்.

1924ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி முஸ்லிம் சமூகத்தின் இன்றைய இருண்ட வரலாற்றிற்கான உத்தியோக பூர்வ அத்தியாயம் புரட்டப்பட்ட நாளில், தனது அரசியல் இராஜதந்திர பின்புலத்திற்கும், தனது ஒரே தலைமைக்கு கட்டுப்படும் அடிப்படையான வரலாற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டபோது முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதி அறிந்தோ, அறியாமலோ அந்த சதிகளிலே பங்களிப்புச் செய்ய, இன்னொரு பகுதி மௌனித்து அவதானித்துக் கொண்டிருந்தது! துருக்கியில் இஸ்லாமிய கிலாபத் வீழ்த்தப்பட்டது. அரபி - அஜமி என்ற பாகுபாடும், நாடு – தேசியம் என்ற வரையறைகளும் புதிய ஜாஹிலியத்தாக முஸ்லிம் சமூகத்தில் (மேற்கத்தேயம் முன்பே விதைத்த விதை) ஆல விருட்சமாகி எதிரிகளுக்கு கனிகொடுக்க ஆரம்பித்தது. இருளடைந்த அந்த நாட்களுக்குப்பின்னால் எதிர்நோக்கப்போகும் ஓர் கசப்பான வரலாறு அன்று மிகச்சரியாக பலரால் எதிர்கூறப்படவுமில்லை, எதிர்பார்க்கப்படவுமில்லை.

ஒருவகையில் பிந்தைய இஸ்லாமிய கிலாபத் அதிகாரம் பக்கச்சார்பான ஆளும் கொள்கைகளாலும், அதிகார துஸ்பிரயோகங்களாலும் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்திருந்தமை இதற்கொரு காரணமாக இருப்பினும், மேற்கத்தேய வாழ்க்கையின் வெளிக்கவர்ச்சியும், மாயையும் காலத்தின் தேவையாக, யதார்த்தம் எனும் போர்வையால் போர்த்தப்பட்டு மக்கள் முன் வைக்கப்பட்டபோது தனது இயல்பான அறிவுக் கண்களை மூடிய நிலையில் முஸ்லிம்கள் அதனுள் நுழைந்து கொண்டார்கள். கிழக்கும், மேற்கும் கொடுத்த கம்யூனிசம், முதலாளித்துவம் என்ற தத்துவங்கள் மாறும் புதிய உலகுக்கான தீர்வாக எடுத்து வைக்கப்பட்டது. ‘சுதந்திரம்’, ‘விடுதலை’ ‘ஜனநாயம்’ எனும் வார்த்தைகள் புதிய உலக ஒழுங்கு எனும் தலைப்பின் கீழ் வரைவிலக்கணப்படுத்தப்பட்டது. அல்குர்ஆன் மத அனுஷ்டானங்களுக்கான மந்திரப்புத்தகமானது.

ஓர் நல்ல கொள்கையானது தவறான பாதையூடாக பயணிக்கின்ற போது அதன் அடிப்படை எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக தவறான விளைவுகளை அது ஏற்படுத்தி விடும். அதேபோல் ஓர் தீய கொள்கையானது யதார்த்தமான பதையை தேர்ந்தெடுத்து பயணித்தாலும், சரியான விளைவுகளை அதனால் தர முடியாது என்ற யதார்த்தத்தை நாம் மிகச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சரியானது சரியான பதையில் பயணித்து நன்மைகளை அறுவடை செய்வதும், தவறானது எந்நிலையிலும் புறந்தள்ளப்படுவதும்தான் உண்மையிலேயே யதார்த்தமானதாகும். முஸ்லிம் சமூகம் இவ்விடயத்தில் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

முஸ்லிம் உலகை மறுமலர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பதற்காக கடந்த 84 வருட காலமாக தொடரும் முயற்சிகள் சமூகப் புனர்நிர்மாணத்திலோ, தனித்துவமான எம் வரலாற்றை மீள் கொண்டு வருவதிலோ காத்திரமான இலாபங்களை பெற்றுத்தரவில்லை. மாற்றமாக அவற்றினால் குழப்பமான கள நிலவரங்களையும், விகாரமான விளைவுகளையும் மிக அதிகமாக சந்தித்துக் கொண்டிருக்கிறோம். பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், பொஸ்னியா, துருக்கி, அல்ஜீரியா, சூடான், செச்னியா, காஸ்மீர், ஈராக், பிலிப்பைன்ஸ், உஸ்பெகிஸ்தான், தாஜிகிஸ்தான், பாக்கிஸ்தான்; என்று தொடர்ந்து கொண்டே போகக்கூடிய படிப்பினைகளையும், வரலாறுகளையும் சுமக்கமுடியாத சோகச் சுமைகளாக சுமந்த நிலையிலும் தொடர்ந்து கண்கள் கட்டப்பட்ட கழுதைபோல் அதே பாதையில் பயணிப்பது என்பதுதான் முட்டாள் தனமானதும், ஜீரணிக்க முடியாததுமாகும்.

மேற்கூறிய இந்த கருத்தானது விரக்தி நிலையிலோ, தோல்வி மனப்பாங்கிலோ சொல்கின்ற ஒரு கருத்தல்ல. மாற்றமாக முஸ்லிம் சமூகத்தின் போராட்டப்பாதை தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தவறாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்ததன் வெளிப்பாடேயாகும். இன்றுவரை எமது மனோநிலை தேசம், தேசியம், பிரதேசம் எனும் குறுநிலை வாதங்களினால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலை மிக ஆபத்தானது. இந்த உளப்பிரிகோடுதான் எதிரிகள் எம்மை ஆள்வதற்கும், ஆக்கிரமிப்பதற்கும் ஏதுவாக அமைந்து விட்டது. பலஸ்தீனைப் பற்றியும், ஈராக்கைப் பற்றியும், ஆப்கானைப்பற்றியும் நாமும் சிந்திக்கின்றோம் என்கிறோம், எனினும் எமது தேசிய வரையறைக்கு முக்கியத்துவம் கொடுத்து இரண்டாம் பட்சமாக! போராட்டத்திற்குள் வாழும் பலஸ்தீனியனும், ஈராக்கியனும், ஆப்கானியனும் கூட தமது தேசிய எல்லைகளுக்குள் நின்றுகொண்டுதான் சிந்திக்க பழக்கப்பட்டுள்ளான். இந்த நிலை மாறாத வரை எதிரிக்கு வெற்றியை நாம் அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டே இருப்போம் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய எமது தேவை என்ன? அதற்கான மிகச்சரியான பாதை என்ன? இதுகுறித்து மிகச் சரியாக நாம் சிந்திக்கத்தளைப்படவேண்டும். இதுதான் இன்றைய முஸ்லிம் உலகத்தின் மிகப்பெரிய சவால். அரசியல் இராஜதந்திர பின்புலத்தை இழந்து நிற்பதும் அதனை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்தும் இருப்பதும்தான் அந்த சிக்கலின் பிரதான காரணி. உதாரணமாக ரஷ்யர்களுக்கு எதிரான ஆப்கான் போரிலே நடந்தது என்ன? ஆப்கான் சகோதரர்களின் வீரத்தை, தியாகத்தை குறைசொல்ல முடியாது. மாற்றமாக ஆப்கான் விடுதலைப்போரில் பின்புல உதவியில் அமெரிக்கா இருந்ததை எம்மால் மறுக்க முடியாது.

எனவே எமது சக்திமிக்க அரசியல் இராஜதந்நிர பின்புலம் கிலாபத்தான் என்பதை மையப்படுத்திய சிந்தனை சரியான அடிப்படையில் முன்வைக்கப்பட வேண்டும். அந்த கிலாபத்தை அடைவதற்கான பாதையில் தவறான வழிமுறைகள் களையப்பட்டு சரியான அடிப்படை எல்லைப்படுத்தப்பட வேண்டும். தேசம், தேசியம், பிரதேசம் என்ற எல்லைகள் உள hPதியாகவும், உணர்வு hPதியாகவும் கைவிடப்பட வேண்டும். இந்நிலை ஏற்படாதவரை எமது முயற்சிகள் அர்த்தமற்றவை. அடிப்படை இல்லாதவை. உதாரணமாக கிலாபத்தை நோக்கிய எமது பாதையில் ஜனநாயகம் எனும் ஜாஹிலியத்தை எம்மால் பயன்படுத்த முடியாது. (மறுபுறம் அவ்வாறு பயன்படுத்தி பெரும்பான்மையை நிரூபித்தாலும் இஸ்லாத்தை நிலைநாட்ட அதன் எதிரிகள் விடவே மாட்டார்கள்;. அல்ஜீரியா, துருக்கி, பலஸ்தீன் போன்ற நாடுகள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்) அதேபோல் இஸ்லாமிய இராணுவ குழுக்களின் போராட்டங்களினாலும் நாம் கிலாபத்தை காண முடியாது. ஏனெனில் ரசூல்(ஸல்) அவர்களின் வழிகாட்;;டலில் கிலாபத் நிலை நாட்டப்பட இத்தகு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இன்றைய யதார்த்தத்திலும், குப்ரிய அரசியலும், ஆயுத வழிமுறைகளும் தோல்வியடைந்த பாதைகள் என்பதை சிந்திக்கக்கூடிய எவரும் ஏற்றுக்கொள்வார்கள். எனவே நாம் மேற்கூறிய கருத்துக்களின் மூலம் பின்வரும் விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

1. முஸ்லிம் சமூகம் தவறாக வழிநடாத்தப்படுகின்றது
2. முஸ்லிம் சமூகம் தவறாக சீர்திருத்தப்படுகின்றது
3. முஸ்லிம் சமூகம் தவறாக களமிறக்கப்பட்டுள்ளது

ஒரு விடயத்தை என்னால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. மீண்டும் மீண்டும் தோல்வியடைந்த பின்னாலும், ஏன் இவர்கள் தமது வழிமுறை பற்றி சீர்து}க்கிப் பார்க்கவில்லை, சிந்திக்கவில்லை. 84 வருடங்களில் நாங்கள் தேசியவாத சிந்தனையை மையப்படுத்தியோ, மன்னர் மரபை பயன்படுத்தியோ எத்தகைய அபிவிருத்தியை, முன்னேற்றத்தை கண்டு கொண்டோம்! சிந்திக்க வேண்டும், குறிப்பாக ‘ஜனநாயகத்தையும்’ தேசியவாதத்தையும் நம்பி இஸ்லாத்தை ஓர் சக்தியாக்க நினைப்பவர்கள் மிக அவசியமாக சிந்திக்க வேண்டும். குறிப்பாக இத்தகு பணிக்காக தமது வாழ்நாளை தியாகம் செய்து குப்ரிய அரசியல், பொருளாதார சிந்தனைகளுக்கும், சிறுபான்மை சமூக இலகுவாக்கல் பிக்ஹ் நிலைப்பாட்டுக்கும் இஸ்லாமிய சாயம் பூசி எழுதிவரும் தொடர் சுற்று தோட்டா எழுத்தாளர்களும், பீரேங்கிப்பேச்சாளர்களும் தம்மை மறுபரிசீலனை செய்து சிந்திக்க வேண்டும்.

இனியும், தாமதிக்கவோ, தவிர்ந்து கொள்ளவோ முடியாத ஓர் அவசியமான கடமை எமக்கு முன் உள்ளது. அது எமது ஒரே தலைமை(கிலாபத்) கோட்பாட்டை முன்னிறுத்தி, அதனை நிறுவும் விடயத்தில் அதற்கே உரிய சுன்னாவை அமுல்படுத்தி போராடுவதாகும். வெற்றிக்கான ஒரே வழிமுறை இதுதான். இந்த அரசியல் இராஜதந்திர பின்புலமற்ற நிலை (கிலாபத் அற்ற நிலை) மீண்டும் மீண்டும் ஓர் கசப்பான வரலாற்றை மீட்டுத்தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே எம் அறிஞர்களே! சகோதரர்களே! தேச, தேசிய, நிற, இன, வர்க்க வேறுபாடுகளை கடந்து நமது அழைப்பை ஓர்முகப்படுத்தும் அவசியப்பாட்டை உணர்ந்து கொள்ளுங்கள். அதற்காக பாடுபடுவதற்கும் எல்லைகளற்ற உம்மாவை முதல் சிந்தனையாக பிரகடனப்படுத்த முன்வாருங்கள். இம்மை மறுமை வெற்றிக்கான ஒரே பாதை அதுதான். மேலும் அல்லாஹ் யாவற்றையும நன்கறிந்தவன். மிக்க கிருபையுடையவன்.

யார் அந்த அந்நியர்கள்?



ஏகத்துவத்துவ கொள்கையை சுமந்து செல்லும் மனிதர்கள் பலவகைகளில் சோதிக்கப்படுவார்கள். பொறுமையும், ஈமானுமே அவர்களை எல்லாக் துயரங்களின் மத்தியிலும் இயங்க வைத்துக்கொண்டிருக்கும். அனைத்து விதமான சோதனைகளுக்கு பின்னும் எமது முன்னைய சமுதாயங்களுக்கு வெற்றி எப்படி கிட்டியதோ, அதேபோல் ஏகத்துவத்தை சுமப்பவர்களுக்கு வெற்றி கிட்டும். சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நபிமார்களும், அவர்களைப் பின்பற்றியோரும் பிற்காலத்தில் பெருந்தலைவர்களாக மாறிய வரலாறுகள் இதனையே எமக்கு உறுதியாக இயம்புகின்றன.

அல்லாஹ்(சுபு)வின் தீனிலிருந்து விலகி, உலகம் வழிகேட்டின்பால் அதீத வேகத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வழிகெட்ட மனிதர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக மதிக்கப்பட்டும், நேர்வழியிலுள்ளோர் வழிகேடர்களாக நோக்கப்பட்டும், பொய்யர்களின் கூற்று உண்மைப்படுத்தப்பட்டும், உண்மையாளர்களின் கூற்று இலகுவில் பொய்யாக்கப்பட்டும் விடுகின்றன. இத்தகைய புதுமையான யுகத்தில் தம் முன்னால் காணும் முரண்பாடுகளைப்பார்த்து புத்திஜீவிகளும் குழம்பிப்போயுள்ளனர்.

அல்லாஹ்(சுபு)வின் தீன் இந்த உலகில் நடைமுறையிலில்லாத ஒரு பொழுதில் அந்த தீனை முழுமையாக நடைமுறைப்படுத்தவென தோன்றும் சில புதுமையான மனிதர்கள் தமது குடும்பங்களினாலும், நண்பர்களினாலும், சமூகத்தினாலும் அந்நியர்களைப்போன்று நோக்கப்படுவார்கள். சோதனைகளும், கஷ்டங்களும் அவர்களை பலவழிகளில் தாக்குவதுடன் அவர்களின் வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டு விடுகின்றன. தமது சமூகத்தின் பார்வையில் இந்தக் கூட்டத்தினர் அந்நியர்களாக நோக்கப்பட்டாலும், அல்லாஹ்(சுபு)வின் பார்வையில் இவர்கள்தான் வெற்றியாளர்கள்.

இந்த அந்நியர்கள் யார்?

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள கீழ்வரும் ஹதீத் இந்தக் அந்நியர்கள் யார் என்பதை தெளிவுபடுத்துகிறது.

“இஸ்லாம் அந்நியமான ஒன்றாகவே ஆரம்பித்தது. அது மீண்டும் அந்நியமானதாக மாறிவிடும். ஆகவே அந்த அந்நியர்களுக்கு (அதாவது இஸ்லாத்தை அந்நியமான ஒன்றாக மக்கள் பார்க்கும்போது இஸ்லாத்தை சுமப்பவர்கள்) சுபசோபனம் உண்டாகட்டும்”

இந்த உலகிற்கு இஸ்லாம் முதன்முதலில் தோன்றிய போது மக்காவிலுள்ள காபிர்கள் இஸ்லாத்தின் செய்தியை மக்களுக்கு எடுத்துச்சொன்ன அழைப்பாளர்களுடன் கடுமையாக நடந்து கொண்டனர். இந்தச் செய்தி உண்மையானது எனத்தெரிந்து கொண்டும் அது அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றிவிடும் என்ற காரணத்தினால் அதை ஏற்க மறுத்து விட்டனர்.

நபி(ஸல்) அவர்களுக்கும் ஸஹாபாக்களுக்கும் மக்காவில் நடந்த கொடுமைகள் ஒன்றும் புதிதல்ல. எந்தவொரு புதிய செய்தியும் நடைமுறையிலுள்ள வாழ்க்கை முறைக்கு சவால் விடும்போது அந்த செய்தியை மேலோங்கச்செய்ய முனைவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள்தான் அவை. அந்தக் கொடுமைகள் மூலம் முஹம்மது(ஸல்) அவர்களின் செய்தியில் விட்டுக்கொடுப்புக்களை ஏற்படுத்தக் கூறி அவர்கள் வற்புறுத்தினர். ஆனால் ஒருபோதும் நபி(ஸல்0 அவர்களும், அவர்களது தோழர்களும் அதைச் செய்யவில்லை.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“ஒரு காலத்தில் தலைவர்கள் தோன்றுவார்கள். நீங்கள் அவர்களைப் பின்பற்றினால் அவர்கள் உங்களை வழிகேட்டின்பால் அழைத்துச் செல்வார்கள். அவர்களை நீங்கள் பின்பற்றாவிட்டால் அவர்கள் உங்களை கொன்று விடுவார்கள்.”அப்பொழுது “அந்த நிலையில் நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ நீங்கள் ஈஸா(அலை) அவர்களின் தோழர்கள்போல் பொறுமையாக இருங்கள். அவர்கள் அங்கு வாள்களால் அறுக்கப்பட்டார்கள், சிலுவைகளில் அரையப்பட்டார்கள். எவன் கையில் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, அல்லாஹ்(சுபு)வின் பாதையில் உயிர் துறப்பது அவனுக்கு அடிபணியாமல் வாழ்வதைவிட மேலானதாகும்” என்று கூறினார்கள்.

இந்நிலையே இஸ்லாமிய அழைப்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. எந்தக் கஷ்டத்தின் மத்தியிலும் அவர்கள் இஸ்;லாத்தின் செய்தியை சமரசமின்;றி முன்னெடுத்துச் செல்வார்கள். அவர்கள்படும் ஒவ்வொரு கஷ்டமும் அல்லாஹ்(சுபு)வுடனான அவர்களது தொடர்பை அதிகரிக்கச் செய்வதுடன் அவர்கள் தமது கொள்கை மீது கொண்டிருக்கும் உறுதியும் அதிகரித்துவிடும்.

இஸ்லாத்தை வாழ்க்கை முறையாக இந்த உலகிற்கு வழங்கும் ஒர் முக்கிய இலக்குடன் முஸ்லிம்கள் வாழ வேண்டும். அராஜகங்கள் இந்த உலகில் அரங்கேறிக்கொண்ருப்பதையும், அரசாங்கங்களே அதற்கு ஆதரவளிப்பதையும் நம் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று உலகமெங்கும் தாருள் குப்ராகவே இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் குப்ரின் ஆதிக்கமே நிலவுகிறது. இந்த நவீன ஜாஹிலியத்தை அகற்றி உலகிற்கு ஒளிர்வூட்டக்கூடிய இஸ்லாமிய முறைமையை அல்லது கிலாபத்தை ஏற்படுத்த நாம் முனைப்புடன் ஈடுபடவேண்டும். அந்த பணியினை மேற்கொள்ளும்போது எம்மை சமூகம் அந்நியர்களாக பார்க்கக்கூடும். எனினும் இஸ்லாம் எமது ஈமானாலும், பொறுமையாலும், தைரியத்தினாலும் அல்லாஹ்(சுபு)வின் உதவி கொண்டு வெற்றி பெறும்போது இன்றைய அந்நியர்களாகிய நாம்தான் நாளைய தலைவர்கள் இன்ஷா அல்லாஹ்.

Thursday, June 5, 2008

இஸ்லாத்திற்கான அரசியல் போராட்டம்


அரசியல் போராட்டம் என்பது எவரது கையில் அதிகாரம் இருக்கிறதோ, எவர்கள் ஆட்சியில் இருக்கின்றனரோ அவர்களுக்கெதிரான ஓரு போராட்ட ஓழுங்காகும். அது இரத்தம் சிந்தாத, பாரிய பொருளாதார நஷ்டத்தினை ஏற்படுத்தாத ஒரு கட்டமைக்கப்பட்ட போராட்டத்தினு}டாக நாம் விரும்புகின்ற ஒரு முழுமையான மாற்றத்தினையோ, அல்லது அந்த மாற்றத்தின் ஒரு பகுதியினையோ அடைந்து கொள்வதற்கான ஒரு போராட்ட ஒழுங்கு என்று கூட சொல்லலாம்.

அரசியல் போராட்டம் என்பது, எவ்வாறு உலக நாகரீகங்கள் பழமையானதோ அதே போன்று, மக்கள் ஒன்றாக, ஒரு சமூகமாக எப்போது வாழத்தொடங்கினார்களோ அல்லது ஒரு குறித்த நாட்டினராக வாழ எத்தனித்தார்களோ அக்கணத்திலிருந்தே ஆரம்பமாகிய ஒரு பழமையான போராட்ட ஒழுங்காகும். மக்கள் ஒரு சமூகமாக வாழும் போது அவர்களுக்குள் அடிப்படையான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற எண்ணம் எப்போதெல்லாம் தோண்றியதோ, எப்போதெல்லாம் சமூகத்தில் முறைகேடுகளும், அநியாயங்களும் தலைவிரித்தாடியதோ அப்போதெல்லாம் அதனை மாற்ற வேண்டும் என்ற கூட்டத்தினர் அந்த சமூகத்தலைமைகளுக்கு எதிராக தமது பலமான போராட்டங்களை தொடுத்தனர். சிலர் இதனை ஆயுதத்தினு}டாகவும், பலத்த பொருளாதார சேதத்துடனும் முன்னெடுத்தனர். சிலர் அதே மாற்றத்தினையே அரசியல் போராட்டத்தினு}டாக வெற்றி கொள்ள முயற்சித்தனர்;.

இந்த போராட்டங்கள் அந்த சமூகங்களுக்கு மத்தியில் இரண்டு வேறுபட்ட பிரிவுகளை ஏற்படுத்தியது. ஒரு புறம் பலமும், அதிகாரமும் பொருளாதார வளமும் கொண்ட ஆளும் தலைமைகள், அதிகார வர்க்கங்களுடனும், அதனது உள்ளக கட்டமைப்புகளுடனும், அதனது கொள்கை கோட்பாடுகளுடனும் பலமுடன் நின்றன. மறுபுறம் பலவீனமான, இளமையான ஒரு குழு தனது கொள்கைகள், மாற்று திட்டங்களுடன் மக்கள் மத்தியில் தனது கருத்திற்காக பணியாற்றிய வண்ணம் காணப்படுகின்றது.

எனவே மாற்றத்தினை எதிர்பார்த்து ஒரு அரசியல் போராட்டத்தில் குதிக்கின்ற ஒரு குழு சமகாலத்தில் தனக்கென ஒரு உறுதியான கொள்கையினையும், மாற்றம் குறித்த முழுமையான அறிவினையும் கொண்டிருக்க வேண்டியதுடன் அது தன்னம்பிக்கை கொண்டதாகவும், துணிவுமிக்கதாயும் காணப்பட வேண்டும். இந்த இடத்தில் மாற்றதிற்கான கொள்கை குறித்த அறிவு இல்லாத நிலையில் ஒரு புரட்சிக் குழுவிடம் காணப்;படும் அறிவு பயனற்றது. அதே நேரத்தில் கொள்கையில் தெளிவிருந்தாலும் அதனை வெற்றி கொள்ளச் செய்வதில் தியாகமும், திடகாத்திரமான துணிச்சலுமில்லாத எந்த குழுவும் இந்த அரசியல் போராட்டத்தில் வெற்றி பெற்றதில்லை, வெற்றி கொள்வதுமில்லை.

இங்கு நான் துணிச்சலும், தன்னம்பிக்கையும் எனத் தெரிவிப்பது அந்த இலட்சிய குழு நடைமுறையில் காணப்படும் முறையற்ற நடைமுறைகளுக்கும், கொள்கைகளுக்கும் எதிராக அதனை தலைமை தாங்கும் தலைவர்கள், அரசர்கள் போன்றோருக்கு எதிராக துணிச்சலான முடிவுகள் மேற்கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும் என்பதையாகும். ஏனெனில் எவருக்கு எதிராக அல்லது எந்த கட்டமைப்புக்கு எதிராக நாம் புரட்சி செய்கிறோமோ, அந்த தலைமையும், அதனது கட்டமைப்பும் எம்மை நசுக்குவதற்கு பல நடைமுறைகளை கட்டவிழ்த்து விடலாம். அது எமது அடித்தளத்தை வேறடி மண்ணோடு பிடிங்கிவிட முயற்சிக்கலாம். எமது உறுப்பினர்களை கொலை செய்யலாம். சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்யலாம். எமது வளங்களை பறிமுதல் செய்து எம்மை ஒரு மூலையில் முடக்கலாம். இவையெல்லாம் எம்மை பலகீனப்படுத்தலாம். எம்மை பல அடிகள் பின்னோக்கி நகர்தலாம்.
எனினும் எமது தியாகச்சுடர்; அணைந்துவிடக்கூடாது. இவற்றையெல்லாம் கண்டு நாம் அஞ்சிவிடக்கூடாது. இவற்றுக்கு எதிராக உறுதியாக எதிர்நீச்சல் போடுவதிலேயே எமது இலக்கின் வெற்றி தங்கியிருக்கிறது. ஒரு இஸ்லாமிய அணியை பொருத்த வரையில், அல்லாஹ்வின் கூட்டத்தினரைப் பொருத்த வரையில் அந்த ஒப்பற்ற அணி இயல்பாய் ஓர் உயரிய கொள்கையின்பால் தம்மை வடிவமைத்திருக்கிறது. அது இஸ்லாத்தின் செய்தியை இந்த உலகில் நிலைநாட்டவும், எத்திவைக்கவும் அதனது இலக்கை அடைந்து கொள்ளவும் மிக உறுதியான அறிவார்ந்த மற்றும் அரசியல் போராட்டத்தினை மேற்கொள்கிறது.

எனவே அந்த குழுவிடம் தனது உயரிய இலக்கான இஸ்லாத்தினை உலகின் ஏனைய வழிமுறைகளைவிட, சித்தாந்தங்களைவிட மேலோங்கச்செய்வதற்கான வீரியமும், அரசியல் பக்குவமும் ஒருங்கே காணப்படவேண்டும். அதாவது இஸ்லாத்தின் மீதும் அதனது இலக்கின் மீதும் உறுதியான நம்பிக்கையும், அதனை சாத்தியப்படுத்தும் பாதையில் வருகின்ற சவால்களை எதிர்கொள்ளும் தைரியமும் அதற்கு இருக்க வேண்டும். இந்த பண்பு இஸ்லாமிய இயக்கத்தின் பண்பாக மட்டும் மிளிர முடியாது. மாறாக அந்த இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரிடமும் இப்பண்பு பிரகாசிக்க வேண்டும்.

இந்த குழு அல்லது இஸ்லாமிய இயக்கம் நடைமுறையிலுள்ள குப்ரிய தலைமைகளிடமிருந்தும், அல்லது அதனது அடிவருடிகளிடமிருந்தும் தலைமைத்துவத்தை தனது கையில் எடுத்துக்கொள்வதற்கு போராட்டங்களை தொடர்ந்து தலைமைதாங்க வேண்டும். ஒரு சமூகமோ அல்லது நாடோ இஸ்லாமிய கொள்கையால் மாத்திரம் கவரப்படும் என நாம் எதிர்பார்ப்பது யதார்த்தமல்ல. மாறாக அந்த கொள்கையை தலைமை தாங்கும் தலைமையும், அதனது குழுவும் அந்த சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அறிவும், துணிவும் கொண்டதாக காணப்பட வேண்டும். எனவே இஸ்லாமிய இயக்கம் ஒரு உறுதியான தலைமைத்துவத்தால், அதனுடன் சேர்ந்த ஒரு உறுதியான குழவினால் வழிநடத்தப்படவேண்டும். அங்கு பயமோ, தடுமாற்றமோ காணப்படக்கூடாது என்பது மிக மிக அத்தியவசியமாகும்.

எனவே இத்தகைய இஸ்லாமிய அரசியல் இயக்கத்தில் காணப்படுகின்ற உறுப்பினர்கள் இஸ்லாத்தின் து}ய்மையான செய்தியை தாங்கிச் செல்வார்கள். அவர்கள் இஸ்லாத்திற்காக போராட வேண்டும். இஸ்லாத்தினை கொண்டு மட்டும் போராட வேண்டும். எனவே உடனடியாக அவர்கள் அல்குர்ஆன், அல் ஹதீஸின் பக்கம் தம்மை முழுமையாக திருப்பிக் கொள்ள வேண்டும். அதிலே தம்மை முற்று முழதாக வார்த்தெடுக்க வேண்டும்.

எவ்வாறு நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களை வார்த்தெடுத்தார்களோ அவ்வாறு அவர்கள் வார்த்தெடுக்கப்பட வேண்டும். அந்த ஸஹாபிகள் எவ்வாறு தஃவாவினை, தமது அரசியல் அறிவார்ந்த போராட்டத்தினை முன்னெடுத்தார்களோ அதே இயல்புடன் நாமும் அதனை முன்னெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் நாம் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. இருந்து விடமுடியாது.

இஸ்லாத்தின் அழைப்பை நாம் ஆழமாக ஆராய்ந்தால் அது எம்மை ஒரு உறுதியான அரசியல் போராட்டத்தின்பாலும் அரசியல் மறுமலர்ச்சின்பாலும் அழைத்துச் செல்வதை உணர்ந்து கொள்ளலாம். மேலும் இஸ்லாம் ஒரு நிலையில் எம்மை ஆயுத போராட்டத்தின்பாலும் கவர்ந்திழுப்பதையும் அவதானிக்கலாம். இஸ்லாத்தின் செய்தி முஸ்லிம்களை ஜிஹாதிய களங்காணும் மனிதர்களாகவும், தியாக புருஷர்களாகவும், வீரச்செம்மல்களாகவும் உருவாக்க விளைவதையும் அவதானிக்கலாம். இஸ்லாமிய செய்தி இஸ்லாம் அல்லாத அனைத்து வழிமுறைகளையும், மதங்களையும், இயக்கங்களையும், சித்தாத்தங்களையும் நிராகரித்து முழு உலக மானிடர்களையும், எவ்வித இன, மத, நிர, பிரதேச, கொள்கை வேறுபாடுகளையும் கருத்திற்கொள்ளாது சத்தியத்தின்பாலும், வெற்றியின்பாலும் அழைக்கிறது. அந்த இஸ்லாமிய அழைப்பு இஸ்லாத்தை மாத்திரமே இந்த உலகில் நிலைத்திருக்க அனுமதிக்கிறது.

இந்த உலகில் கடைசி முஸ்லிம் இருக்கும் வரையில் இஸ்லாம் மாத்திரம்தான் இவ்வுலகில் மேலோங்கியிருக்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் நிலைப்பாடு எந்த ஒரு பிரதேசத்திற்கும், எந்த ஒரு காலப்பிரிவிக்கும் பொதுவான நிலைப்பாடாகும். இதனை உறுதி செய்வதுதான் ஒவ்வொறு இஸ்லாமிய அழைப்பாளனினதும், இயக்கத்தினதும் கடமையாகும்.
இஸ்லாமிய அழைப்புப்பணியின் போது அது ஏனைய கொள்கைகளையும். அளவுகோள்களையும் எவ்வித சமரசமும் இன்றி, பயமும் இன்றி முழுமையாக எதிர்க்க வேண்டிய பண்பை திருமறை வசனங்களும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையும் எமக்குள் ஏற்படுத்துகிறது.

மாற்றுக்கொள்கையாளர்களை அல்லாஹ் எச்சரிக்கும்போது
“நிச்சயமாக நிராகரிப்பவர்களும், அல்லாஹ்வுக்குப் பகரமான உங்களின் பொய்யான தெய்வங்களும் நரகத்தின் எரிபொருளாகும்”(21:98) எனக் கூறுகிறான்.

இன்னுமொரு இடத்தில் குப்ரின் தலைவர்களை அல்லாஹ் எச்சரிக்கும்போது
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடையட்டும், அவனும் நாசமாகட்டும். (111:1) என மிகவும் தெளிவாகவும், நேரடியாகவும் எச்சரிக்கிறான்.
மேலும் அல்லாஹ் கூறுகிறான்

அன்றியும், இழிவானவனான அதிகமாக சத்தியம் செய்யுக்கூடிய ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்@ (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன். கோள்சொல்லிக்கொண்டு நடப்பவன். (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக்கொண்டிருப்பவன்@ வரம்பு மீறியவன்;@ பாவஞ் செய்பவன். கடின சித்தமுடையவன்@ அப்பால் இழிபிறப்புடையவன். (68:10-13)

இந்த திருமறை வசனங்கள் இஸ்லாத்தின் செய்தி, அதன் அடிப்படைகள், ஏனைய எந்த கொள்கையுடனோ, அல்லது நடைமுறைகளுடனோ அடிபணிந்து போவதையோ, அல்லது சமரசம் செய்வதையோ அனுமதிக்கவில்லை என்பதை காட்டுகின்றன. நாம் ஏனைய நடைமுறைகளுடனும், கொள்கையுடனும் செய்து கொள்ளும் சமரசம் அல்லது சிறிய விட்டுக்கொடுப்பு எம்மை எமது து}ய்மையான பாதையைவிட்டு எமது இஸ்லாத்தைவிட்டு திசை திருப்பிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இஸ்லாம் எமக்கு தெளிவாக விளங்கப்படுத்துகிறது.அல்லாஹ் கூறுகிறான்

“(சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், (உமக்கு) அவர்களும் தளர்ந்து செல்வதை விரும்புகின்றனர்” (68:9)

இன்னுமொரு இடத்தில் இந்த அழைப்பின் பண்பைப்பற்றி அல்லாஹ் வரையருக்கும் போது

“அத்தகையோரின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே நீர் அவர்களிடமிருந்து விலகியிரும். அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யும். மேலும் அவர்களின் மனங்களில் படும்;படி தெளிவான வார்த்தைகளைக் கூறும்” (4:63) எனக் கூறுகிறான்.

அபூஜஹ்ல் ரஸ{ல்(ஸல்) அவர்களிடம் வந்து தனது கையில் வைத்திருந்த உடைந்த எலும்புத்துண்டுகளைக் காட்டி இதைப்போன்று நான் மாறிய பின்பும் அல்லாஹ் என்னை உயிர்ப்பிப்பானா? என கிண்டலாக வினவிய போது ரஸ{ல்(ஸல்) அவர்கள் வெறுமனே அதற்கான பதிலை மட்டும் நேரடியாக அளிக்கவில்லை. மாறாக நீ இவ்வாறு ஆன பின்பு அல்லாஹ் மீண்டும் உன்னை உயிர்ப்பித்து நரகத்திலும் நுழைவிப்பான் என பதிலடி கொடுத்தார்கள்.

எனவே இத்தகைய துணிச்சலான, உறுதியான இஸ்லாமிய அழைப்பை நாம் காவிச்செல்;லும் போது அது பல தியாகங்களை எம்மிடம் எதிர்பார்க்கிறது. அத்தியாகங்கள் உயிரிழப்பாக, சித்திரவதையாக, ஒரு நிலையில் அது ஆயுத போராட்டங்களால் ஏற்படுகின்ற சோதனைகளாகக்கூட உருமாறலாம். ஏனெனில் இந்தப் பாதையில் இவைதான் யதார்த்தங்கள் என்பதை நபிமார்கள் அனைவரும் முஹம்மத் (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் எமக்கு காட்டிச்சென்றுள்ளார்கள். இத்தகைய சூழ்நிலைகளின் போது எமது பொறுமையையும், கட்டுப்பாட்டையும், உறுதியையும் அல்லாஹ் சோதிக்கின்றான். அதற்கு கூலியாக விரிந்த இந்த பிரபஞ்சத்தைவிட விசாலமாக சுவர்க்கத்தை எமக்கு தயார்ப்படுத்தி வைத்திருப்பதாக எமக்கு நன்மாராயம் கூறுகிறான்.

“ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும் வீணான (பேச்சு,செயல் ஆகிய) வற்றை விட்டு விலகியிருப்பார்கள்” (23:1-3)

“உங்களுக்கு முன்னிருந்தோருக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்துவிடலாம் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? அவர்களை (வறுமை,பிணிபோன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன“அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று து}தரும் அவரோடு ஈமான் கொண்டோரும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது”(என்று நாம் ஆறுதல் கூறினோம்)” (2:214)

“ விசுவாசங்கொண்டோரே! உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர் யார் என்றும், இன்னும் பொறுமையை கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றீர்களா?” (3:142)

ரஸ{ல்(ஸல்)அவர்கள் “சுவரக்கம்; இருக்கிறதே அது கஷ்டங்களினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. நரகமிருக்கிறதே அது ஆசைகளினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.” எனச் சொன்னார்கள்

மேலும் நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள் “நற்கூலி என்பது அனுபவிக்கும் கஷ்டங்களின் அளவிற்கு உயர்ந்திருக்கும்.”மேலும் நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள் “நீங்கள் ஈஸா (அலை) அவர்களின் தோழர்கள் போல் இருங்கள் அவர்கள் பலகையில் வைத்து ஆணிகளினால் அரையப்பட்டாரகள்” எவன்பால் எனது மீட்சி இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக அவனது நாட்டத்தைக்கொண்டு ஓருவன் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவனாக இறப்பது அவன் அடிபணியாமல் வாழ்வதைவிட சிறந்தது” என்றார்கள்.

நபி(ஸல்)அவர்களின் இந்த சொற்களுக்கு ஏதுவாக நபித் தோழர்கள் விளங்கியதை நாம் காண்கின்றோம். அவர்கள் பெரும் பணக்காரர்களாகவோ, படித்தவர்களாகவோ, அல்லது ஏழைகளாகவோ, அடிமைகளாகவோ இருந்த போதிலும் எவ்வித வேறுபாடும் இன்றி இறை நிராகரிப்பாளர்களின் கைகளினால் பட்ட துன்பங்கள் எமக்குத் தெரியும். யாசிருடைய குடும்பத்தாரினதும், பிலால்(றழி), கப்பாப்(றழி) போன்ற நபித்தோழர்களினது வரலாறுகளும் எமக்குத் தெரியும்.

எனவே நடைமுறையிலுள்ள சமூகத்தை மாற்றி அதனது கொள்கையையும், கட்டமைப்பையும் தான் விரும்புகின்ற ஒரு தர்மத்தின் வழியில் மாற்ற யார் எத்தனிக்கின்றார்களோ, அல்லது சமூகத்தலைமையை தாம் கைப்பற்ற நினைக்கின்றார்களோ அவர்கள் அக்காலப்பிரிவிலுள்ள அரசியல் தலைமைகளால் இத்தகைய தியாகங்களையும், கஷ்டங்களையும் அனுபவிக்க நேரிடும் என்பது தவிர்க்க முடியாதது. அது ஒரு முஸ்லிமுக்கோ, அல்லது முஸ்லிம் அல்லாதவருக்கோ பொருந்தும்.

சார் மன்னனை வீழ்த்துவதற்கான போராட்டத்தில் கம்ய10னிஸ்ட்கள் அனுபவித்த கஷ்டங்களும், தியாகங்களும் மிகப்பெரியது. சுதத்திரத்துக்காகவும், விடுதலைக்காகவும் என இடம்பெற்ற பிரஞ்சுப் புரட்சிக்காலத்தில் புரட்சிக்கு முன்னர் பாஸ்டில் சிறைச்சாலை புரட்சியாளர்களால் நிரம்பி வழிந்ததை கேள்விப்பட்டிருப்பீர்கள். இது போன்ற பல அண்மைக்கால வரலாறுகள் கூட எமக்கு சாட்சியாக அமைந்துள்ளன.

இந்நாளில் இஸ்லாத்தின்பால் அழைப்பதும், நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் என்ற இஸ்லாமிய அழைப்புப் பணி அல்லது அதற்கான அறிவியல், அரசியல் போரட்டம் என்பது மிக உயர்ந்;த இலக்கினைக் கொண்டது என்ற அடிப்படையில் நாம் குப்;பார்களைவிட அதிகளவில் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். இந்தப் பணிக்காக அல்லாஹ் எமக்கு வழங்கவிருக்கும் வெகுமதிகளைப் பார்த்தால் இந்தப் பாதையில்படும் கஷ்டங்கள் யாவும் மிகவும் இலகுவானதாக எமக்குத் தென்படும். எனவே நாம் தலைநிமிர்ந்தும், துணிவுடன் தியாகத்தை அடித்தளமாக கொண்டும் இந்தப் பணியினை செய்ய தயாராக வேண்டும்.
இந்த அரசியல் போராட்டத்தின் உயரிய நிலை குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும்போது
“மிகச் சிறந்த ஜிஹாத் என்பது கொடுங்கோல் ஆட்சியாளனுக்கு முன் நின்று ஹக்கினை சொல்வதாகும். இறைத்தியாகிகளின் தலைவர் ஹம்ஸாவாகும். மேலும்; கொடுங்கோல் மன்னனுக்கு முன்னால் சென்று ஹக்கினைக் கூறி அதற்காக கொல்லப்படுபவராகும்” என்றார்கள்.

எமது நாட்டைப் பொருத்தமட்டில் நாம் கொடுங்கோல் மன்னனுக்கு, அல்லது குப்ரிய தலைவர்களுக்கு முன்னால் நின்று ஹக்கினை கூறும் அளவிற்கு எமது அரசியல் போராட்டம் இப்போது விரிவடையவில்லை. எனினும் குப்ருக்கு எதிராகவும், குப்ர் சிந்தனைக்குப் பின்னால் முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்தும் முறைகெட்ட தலைவர்களுக்கு எதிராக சவால் விடும் அளவிற்கு எம்மை முதலில் தயார்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தப் பணியினை நாம் செய்யும் போது முதலில் சமூகம் எம்மை முழுமையாக எதிர்க்கலாம். எம்மிடமிருந்து வெருண்டோடலாம். கேலி செய்து சிரிக்கலாம். அல்லது எம்மை தமது இரும்புக்கைகளால் நசுக்க முற்படலாம். எனினும் இவையெல்லாம் எமது பாதையை விட்டும் எமது இலக்கை விட்டும் ஒரு அணுவளவும் எம்மை சறுகச்செய்து விடக்கூடாது. ஒரு கணப்பொழுதும் எம்மை தாமதப்படுத்தக்கூடாது. எனினும் இவற்றையெல்லாம் முகம் கொடுப்பதற்கு இந்த இஸ்லாமிய அரசியல் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களிடம் முக்கிய சில தகுதிகள் இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.

" இஸ்லாத்தின் கொள்கையின் மீது அசைக்கமுடியாத உறுதியான நம்பிக்கை இருத்தல்." இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கு மாத்திரம் முழுமையான கட்டுப்பட்டவர்களாக இருத்தல்." நிகரற்ற தன்னம்பிக்கையும், எதற்கும் அஞ்சாத துணிவும்; இருத்தல்."முழுமையாக எம்மை அர்ப்பணித்து சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்களாக இருத்தல்." இஸ்லாத்தை இந்த பூமியில் நிலைநாட்டல் அதனை மேலோங்கச்செய்தல் என்ற தமது இலக்கின் மீதும், அதற்காக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள அரசியல் பாதையின் மீதும் முழமையான நம்பிக்கை கொண்டிருத்தல்."குப்ருடனும், குப்ர் கோட்பாடுகளுடனும், குப்ர் அரசாங்களுடனும், அதன் பாராளுமன்றங்களுடனும் எவ்விதத்திலும் சமரசம் செய்யாதிருத்தல்."நிலைப்பாட்டில் விட்டுக்கொடுத்தலோ, அல்லது ஏமாற்றுதலோ செய்யாதிருத்தல்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அரசியல் போராட்டத்தில் அல்லாஹ்வுக்காக செய்கிறோம் என்ற து}ய்மையும், ஷரிஆவுக்கு பூரணமாக கட்டுப்பட்ட நிலையில் நகர்கிறோம் என்ற உறுதிப்பாடும் மிக மிக அவசியமாகும்.

எனவே குப்ருக்கு எதிரான எமது அரசியல் போராட்டத்தில் எம்மிடம் இத்தகைய பண்புகள் வந்துவிட்டால் அதற்கு மேல் வெற்றியை அல்லாஹ்விடம் விட்டுவிட வேண்டியதுதான். இதற்கு மேல் எமக்கு இடஞ்சல்களையும், அநியாயங்களையும் செய்து எம்மை நசுக்க நினைப்பவர்களை அல்லாஹ் பார்த்துக் கொள்வான். அல்லாஹ் சொல்கிறான்“நிச்சயமாக எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்தி; பின்னர், தவ்பா செய்து மீளவில்லையோ அவர்களுக்கு நரக வேதனையுண்டு@ மேலும் கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு” (85;10)

எனவே சகோதரர்களே!

கொடுங்கோலர்களின் முன் எழுந்து நின்று ஹக்கை சொன்ன ஹம்ஷா(றழி) போன்ற ஸஹாபிகள் தியாகிகளின் தலைவர்கள் ஆனதுபோல் நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளப் போகின்றீர்களா? அல்லது இஸ்லாமிய கிலாபத்தின் எல்லைகளை விஸ்தரிப்பதிலே களமிரங்கிய முஹம்மத் பின் காசிம் அல்லது தாரிக் பின் சியாத் போன்ற இளைஞர்களைப் பின்பற்றப் போகின்றீர்களா? அல்லது வெகு சீக்கிரத்திலே உலகளாவிய கொடுங்கோல் வல்லரசுகளை வீழ்த்தியபடி நிலைகொள்ளப்போகிற கிலாபத் ராஸிதாவின் ஸ்;தாபகர்களாக உருவெடுக்க போகிறீர்களா? என்பதை நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் எம்மை நேர்வழியில் செலுத்துவானாக. ஆமீன்.

அதிமுக்கிய பிரச்சனை 3


கிலாஃபாவை நிலைநாட்டி அல்லாஹ்(சுபு) அருளியதைக் கொண்டு ஆட்சி புரிவது ஒரு முக்கிய விவகாரமாகும்.முஸ்லிம்கள் இன்று சொல்லொணாத் துயரங்களையும் சோதனைகளையும் அனுபவிக்கின்றனர். இந்த நிலையை முற்றிலும் மாற்றும் நிவாரணி, முஸ்லிம்கள் தங்களை எதிர்நோக்கும் பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றிற்கேற்ப வாழ்வா?சாவா? பிரச்சனையாக கருதுவதில் அடங்கியுள்ளது. இந்த உணர்ச்சி முஸ்லிம்களின் உடல் பொருள் ஆவியில் ஊறாத வரையில் முஸ்லிம்கள் இந்த இழிநிலையினின்றும் எழ முடியாது. மற்றைய சமுதாயங்களுக்கு மேலான சமுதாயமாக மிளர எம்மால் முடியாது போய்விடும். ஆகையால் முஸ்லிம்கள் தங்களது முக்கிய விவகாரங்கள் எவை என உணர்ந்து அவை பற்றிய கண்ணோட்டத்தை தங்கள் மனதில் ஆழமாக பதிக்கவேண்டும்.
இன்றைய முஸ்லிம்களின் நிலைமை ஒவ்வொரு முஸ்லிமும் தெளிவாக உணர்ந்த விடயமாகும். அதை விளக்கவோ விவரிக்கவோ அவசியமே இல்லை. அவர்களுடைய நாடுகள் குஃப்;ர் அமைப்புகளைக் கொண்டு ஆளப்படுகின்றன. எனவே அவை குஃப்ரின் அகமாக மாறிவிட்டன. ஒட்டுமொத்த முஸ்லிம் உலகையும் எடுத்துப்பார்த்தால் அவை குறைந்தது நான்கு விதமான அரசமைப்புகளாக பிரிந்திருக்கின்றன. குடியரசுகளாகவும், இமாராக்களாகவும், சுல்தான் நாடுகளாகவும், அரபு ஷேக் அரசுகளாகவும் அவை இருக்கின்றன. காஃபிர் அரசுகளையும் சக்திகளையும் எதிர்நோக்கமுடியாத பலவீனமான நிலையே அவர்கள் நிலை. எனவே குஃப்ரின் அகமாக மாறிவிட்ட அனைத்து இஸ்லாமிய நிலங்களையும் மீண்டும் இஸ்லாமிய ப10மியாக மாற்றி அவை அனைத்தையும் ஒன்றிணைக்கவேண்டும். அவற்றை ஒரு கிலாஃபா அரசின் கீழ் கொண்டுவரவேண்டும். அனைத்து முக்கிய பிரச்சனைகளுக்கும் முதலானது இதுவே ஆகும். எனவே இதனை வாழ்வா?சாவா? விவகாரமாக கருதுவது மிக முக்கிய கடமையாகிறது.
முஸ்லிம்கள் வாழும் நிலப்பகுதியை தாருல்-இஸ்லாமாக மாற்றி அனைத்து இஸ்லாமிய நிலப்பகுதிகளையும் ஒன்றிணைப்பதே ஒரு முஸ்லிமின் மிக முக்கிய குறிக்கோளாகும். இந்த குறிக்கோளை அடைவதற்கான வழி கிலாஃபா ஆட்சி முறையை நிலைநாட்டுவதேயாகும். எனவே இன்றைய சூழலில் முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற ஒரு முக்கியப் பிரச்சனை, கிலாஃபா ஆட்சியை நிலைநாட்டுவதேயாகும். அதன் மூலமே இஸ்லாமிய நிலங்களை தாருல் இஸ்லாமாக மாற்றி ஒன்றிணைக்க முடியும். முஸ்லிம்கட்காக பேரளவில் ஒரு கலீஃபாவை நியமித்தால் போதாது. மாறாக அல்லாஹ்(சுபு) அருளிய ஆட்சி முறையில் கலீஃபாவை நியமிப்பதே அவசியமாகும்.
இப்ன் உமர் (ரழி), ரசூல்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்,
“கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட பைஆ (சத்தியப்பிரமாணம்) இல்லாத நிலையில் யார் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய மரணத்தை அடைந்தவராவர்.”
இஸ்லாமிய நிலங்களை ஒன்றிணைத்து தாருல் இஸ்லாமாக மாற்றுவது மட்டுமன்றி சமுதாயத்திலுள்ள குஃப்ர் முறையையும் ஒழித்துக்கட்டுவது கிலாஃபா ஆட்சியின் முக்கிய நோக்கமாகும்.
எனவே வெளிப்படையான குஃப்ரை அழிப்பதும் ஒரு முக்கிய விவகாரமாக மாறுகிறது. எனவே கிலாஃபாவை நிலைநாட்டுவதும் ஒரு முக்கிய விவகாரமாகிறது. நபிகளார்(ஸல்) ஒரு முஸ்லிமின் இரத்தம் சிந்துவதை தவிர்க்குமாறு கூறுகிறார்கள். எனினும் அதற்குரிய வரையறையாக “வெளிப்படையான குஃப்ரை காணும் வரை". என்ற விடயத்தை குறிப்பிடுகிறார்கள் என்பதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். எனவே கிலாஃபாவை நிலைநாட்டுவதை நமது வாழ்வா?சாவா? பிரச்சனையாக கருதி நடைவடிக்கை எடுப்பது முக்கிய கடமையாகிறது.
தமது நலன்களின் இருப்பும், பாதுகாப்பும் குஃபார்களினதும் நயவஞ்சகர்களினதும் கைகளில் வந்த காலம் தொட்டே முஸ்லிம்கள் அந்நிலையிலிருந்து விடுபட முனைந்தனர். ஆனால் அதனை அதிமுக்கிய பிரச்சனையாக வாழ்வா?சாவா? விவகாரமாக கருதத் தவறி விட்டனர். அதனால் முக்கியப் பிரச்சனை ஒன்றிக்கெதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய இறுக்கமான போராட்டத்தை மேற்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. அத்தகைய போராட்டத்திற்கே உரித்தான கொடுமையையும், துயரங்களையும் தாங்கும் மன உறுதி அவர்களிடம் இருக்கவில்லை. இதன் விளைவாக அவர்கள் மேற்கொண்ட சிறியளவான எதிர்ப்புக்களால் நிலையில் எத்தகைய முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கிலாபாவை நிலைநாட்டுவது ஒரு முக்கியப்பிரச்சனை என்பதை அறிய அதிகம் ஆராயவேண்டியதில்லை. நாம் இன்றைய சூழலை கவனித்தோமேயானால் அதன் தேவை எம்மை ஒரு நிமிடமேனும் தாமதிக்க வைக்காது. இஸ்லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை குஃப்பாரால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தெளிவானது. இதனால் தான் அத்தகைய இஸ்லாமிய ஆட்சியை (கிலாஃபாவை) மீண்டும் ஏற்படுத்த முனையும் முஸ்லிம்களை சொல்லொண்ணா கொடுமைகட்கும், துயங்கட்கும் அவர்கள் ஆட்படுத்தி வருகின்றனர்.
மேலும் முஸ்லிம் உலகை ஆட்சி செய்து வருவோர் தமது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்தையும் பாவித்து அல்லாஹ்(சுபு) அருளியதைக் கொண்டு ஆட்சி புரியும் ஒரு ஆட்சியமைப்பை உருவாக்க முயலும் விசுவாசிகட்கு எதிராகவும், அவர்களது கொள்கைகளுக்கு எதிராகவும் செயற்படுவதிலிருந்து அந்தப்பணியின் முக்கியத்துவத்தையும் அதன் வாழ்வா?சாவா? அளவுகோலையும் நாம் அறியலாம்.
எனினும் இந்தப் போராட்டத்தின் யதார்த்தத்தினை அறியாத முஸ்லிம்கள் தங்கட்கு இயலுமான இலகுவான வழிகளில் சமூக மாற்றமொன்றிற்காக முயன்று வருகின்றனர். அல்லது முயலத்துவங்கினர். ஆனால் இப்போராட்டத்தை ஒரு முக்கிய விவகாரமாக கருதி வாழ்வா?சாவா? அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிடில் வேறு எந்த முயற்சியாலும் எத்தகைய பலனையும் நாம் எதிர்பார்க்க முடியாது. இதற்கு குஃப்ர் ஆட்சியை அழிப்பதும் இஸ்லாமிய சட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் கிலாபாவை நிலைநாட்டுவதும் மாத்திரம்தான் ஒரேவழி என்பதை நாம் புரியத்தவறுவோமானால் நாம் மேற்கொள்ளும் பாரிய வேலைத்திட்டங்கள் கூட எத்தகைய பயன்களையும் பெற்றுத்தரமாட்டாது என்பது உறுதியாகும். எனவே முஸ்லிம்கள் தனிமனிதனாக இருந்தாலோ அல்லது குழுவாக இருந்தாலோ, இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் இடையேயான இப்போராட்டத்தில் வாழ்வா?சாவா? அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.
இறைத்து}தர்(ஸல்) அவர்களின் வழிமுறையின்படி பார்த்தோமேயானால் எத்தகைய விவகாரங்கட்கு எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும், அதிமுக்கிய பிரச்சனைகட்கு வாழ்வா?சாவா? அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதையும் தெளிவாக அறியலாம்.அல்லாஹ்(சுபு) அருளிய இஸ்லாமிய செய்தியை தஃவாவை மக்களிடையே எடுத்துச் செல்லும் ஒரு அறிவார்ந்த போராட்டத்தை அதிமுக்கிய பிரச்சனையாக வாழ்வா?சாவா? விவகாரமாக கருதி நபிகளார்(ஸல்) போராடியதை நாம் அறிகிறோம்.நபிகளாரின் தமையனாரும், பொறுப்பாளருமாகிய அபுதாலிப் அவர்கள் குரேஷியர்களின் எதிர்பார்ப்பை நபிகளாரிடம் எடுத்துரைக்கையில்
'விவகாரம் முற்றிவிட்டது. இன்னும் எதுவரை நாம் தனியாக குரைஷியர்கள் அனைவரையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்க முடியும்" என்றும் 'அன்பு மகனே, நான் தாங்க முடியாத அளவிற்கு சுமையை என்மீது சுமத்திவிடாதே!" என்றும் வினவியபொழுது நபிகளார் பின்வருமாறு பதிலளித்தார்கள்: “இறைவன் மீதாணையாக! இவர்கள் என் ஒரு கரத்தில் சூரியனையும், இன்னோரு கரத்தில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தாலும் கூட, இறைவன் இதனை மேலோங்கச்செய்யும் வரையில் அல்லது இதிலேயே நான் மரணிக்கும் வரையில் நான் இதனை கைவிட மாட்டேன்.”
மதீனாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தியபின்பு ஜிஹாதின் மூலம் இஸ்லாத்தை எடுத்துச்சென்ற நபிகளார், அதனை ஒரு அதி முக்கிய பிரச்சனையாக கருதி வாழ்வா?சாவா? என்ற அடிப்படையிலேயே நடவடிக்கை எடுத்தார்கள்.
ஒரு வரலாற்றுக்குறிப்பில் கீழ்கண்ட நிகழ்ச்சி காணப்படுகிறது. அல்-ஹ_தைபியாவின் நிகழ்வுக்குப் பின்னர் உம்ராவிற்காக புறப்பட்ட நபிகளார், மக்காவிற்கு அருகில் உஸ்பான் என்ற இடத்தில் இருந்தார்கள். அப்பொழுது பனீ-கஆப் சமூகத்தைச் சார்ந்த ஒருவரிடம் மக்காவின் நிலைமை பற்றி வினவினார்கள். அதற்கு பதிலளித்த அவர் 'தங்கள் வருகையை அறிந்த சிலர் சிறுத்தைத் தோலாலான கவசம் அணிந்து தங்களை மக்காவிற்குள் நுழையவிடாமல் தடுக்க ‘துதுவா’ என்ற இடத்தில் முகாமிட்டுள்ளனர். காலித்-இப்ன்-அல்வலித் ஏற்கனவே தனது படையை குரா அல்காமிமிற்கு அனுப்பிவிட்டார்." எனக் கூறினார். அதைக் கேட்ட நபிகளார் 'குரைஷியர்களுக்கு துன்பமுண்டாவதாக. போர் வெறி அவர்களை விழுங்கி விட்டது. என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் எனது பாதையில் பணிபுரியாமல் தடுக்க அவர்கட்கு என்ன வந்தது. அவர்கள் என்னைக் கொல்லட்டும். அல்லது அல்லாஹ்(சுபு) நாடி; அவர்கள் மீதான வெற்றியை எனக்கு அருளினால் அவர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் பிரவேசிப்பார்கள். அவர்கள் அவ்வாறு செய்யாதுவிட்டால் அவர்களிடம் படை பலம் இருக்கையில் அவர்கள் போரிடட்டும். எனவே குரைஷிகள் என்ன யோசிக்கிறார்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக, வெற்றி வரும் வரையில் அல்லது எனது ஸலிபா (கழுத்து) துண்டாடப்படும் வரையில் அல்லாஹ் என் மீது ஏவிய இப்பணிக்காக போராடுவதைவிட்டும் நான் ஒருபோதும் விலகமாட்டேன்." எனக் கூறினார்கள்.
மேற்கூறிய இரு நிகழ்சிகளிலும் அறிவார்ந்த போராட்டமாக தஃவா பணியை மேற்கொண்ட போதும் சரி, அல்லது ஜிஹாத் என்ற இராணுவப்போராட்டமாக அப்பணியை தொடர்ந்த போதும் சரி, நபிகளார் அவற்றை அதி முக்கியப் பிரச்சனையாக கருதி அதற்கு வாழ்வா? சாவா? அடிப்படையில் நடவடிக்கை எடுத்தார்கள். அதனாலேயே அவர்கள் “இறைவன் மீதாணையாக! இவர்கள் என் ஒரு கரத்தில் சூரியனையும், இன்னோரு கரத்தில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தாலும் கூட, இறைவன் இதனை மேலோங்கச்செய்யும் வரையில் அல்லது இதிலேயே நான் மரணிக்கும் வரையில் நான் இதனை கைவிட மாட்டேன்.” என்றும்,“அல்லாஹ்வின் மீது ஆணையாக, வெற்றி வரும் வரையில் அல்லது எனது ஸலிபா (கழுத்து) துண்டாடப்படும் வரையில் அல்லாஹ் என் மீது ஏவிய இப்பணிக்காக போராடுவதைவிட்டும் நான் ஒருபோதும் விலகமாட்டேன்." என்றும் கூறினார்கள்.

அத்தகைய வாழ்வா?சாவா? அடிப்படையில் போராட்டம் அமைந்திராவிடில் இஸ்லாம் பிரம்மிக்க வைக்கும் வெற்றிகளை அடைந்திருக்க முடியாது. இன்றைய முஸ்லிம்களின் நிலைமையும் அவ்வாறே உள்ளது. முஸ்லிம்கள் மீது குஃப்ர் அரசுகளும், நயவஞ்சகர்களது அதிகாரமுமே மேலோங்கியுள்ளன. இத்தகைய நிலையில் அதற்கு வாழ்வா?சாவா? அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிடில் வேறு எந்த வழியாலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்;படாது. எனவே குஃப்ர் ஆட்சியமைப்புகள் மேலோங்கியுள்ள, இஸ்லாமிய நிலப்பரப்பில் முஸ்லிம்கள் கிலாஃபாவை நிலைநாட்டி தாருல் குஃப்ரை, தாருல் இஸ்லாமாக மாற்றி மற்ற அனைத்து இஸ்லாமிய நிலங்களையும் ஒன்றுபடுத்த பாடுபடவேண்டும். அதன் மூலம் இஸ்லாத்தின் உயர்ந்த வெற்றியையும் நிலைநாட்ட வேண்டும். அத்தகைய முயற்சியும், போராட்டமும் முழுமையான விசுவாசத்துடனும், தியாகத்துடனும் நபிகளாரின் வழிமுறைக்;கிணங்கவும் அமையவேண்டும்.

Monday, June 2, 2008

இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் பூமி மீதான ஆக்கிரமிப்பிற்கு வயது அறுபதாகிறது!



“ தன் அடியாரை (கஅபாவாகிய) சிறப்புப்பெற்ற பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன்; (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால் நாம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கிறோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உமதிரட்சகனாகிய) அவனே, செவியேற்கிறவன், பார்க்கிறவன். (அல் இஸ்ரா:1)

அருள்பாலிக்கப்பட்ட பூமியான பலஸ்தீனை - இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த அந்த பூமியை – அதன் நகரான அல் குத்ஸின் அதிகாரத்தை மிகவும் பணிவுடன் நடந்து வந்து, எமது இரண்டாம் கலீபா உமர் இப்னு அல் கத்தாப் (றழி) அவர்கள் கைப்பற்றிக்கொண்டதன் விளைவாகவே அந்த ப10மி இஸ்லாத்திற்காக முதன்முதலாக திறந்து விடப்பட்டது. உமர்(றழி) அவர்கள் பலஸ்தீனத்தை தனது இஸ்லாமிய கிலாபத்தின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் நீதியையும், அமைதியையும் அந்த பூமியில் நு}ற்றாண்டுகளாக நிலைகொள்ளச் செய்வதற்கு வழி செய்ததுடன், அங்கே முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும், யூதர்களும் அக்கம் பக்கமாக, அண்டைவீட்டுக்காரர்களாக பிணைந்து வாழ்வதற்கும் அத்திவாரமிட்டார்.

எனினும் 1917ம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் பலஸ்தீன பூமி சூரையாடப்பட்டு, 1948ம் ஆண்டில் அந்த பூமியின் சொந்தக்காரர்களல்லாத, மேற்குலகில் அலைக்கழிந்து கொண்டிருந்த பிரிதொரு அந்நிய சமூகத்திற்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது. இதே பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய மேற்குலக அரசுகளால் படுகொலைகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆண்டாண்டு காலமாக ஆட்பட்ட ஐரோப்பிய யூத சமூகமே அந்த அந்நிய சமூகமாகும். எனினும் ஐரோப்பியர்களால் பெரிதும் துன்புறுத்தப்பட்ட யூதர்களை அகற்றுவதற்கு ஐரோப்பியர்கள் வழங்க நினைத்த பூமி ஐரோப்பியர்களுக்கு சொந்தமானதல்ல. மாறாக முஸ்லிம்களின் உணர்வுடனும், வரலாற்றுடனும் ஒன்றித்த பலஸ்தீன பூமியையேயாகும்.

எனவே இதனை சாத்தியப்படுத்துவதற்கு மிகக் கொடூரமான, இராணுவமயப்படுத்தப்பட்ட ஓர் இரும்பு அரசை அங்கே நிறுவ வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த யூத அரசு தனது 60 வருடகால வரலாற்றில் அதனது இருப்பிற்காக எத்தகைய அநியாயங்களையும், அட்டூழியங்களையும் எதுவித அச்சமுமின்றி மேற்கொண்டு வருவதை நாம் காண்கிறோம். மிலேச்சத்தனமான படுகொலைகள், வகைதொகையின்றிய கைதுகள், கொடூரமான சித்தரவதைகள், ஈவிரக்கமற்ற பொருளாதாரத்தடைகள் என்பவற்றை இஸ்ரேலிய அரசு பலஸ்தீன மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளது. இன்று எந்தளவிற்கென்றால், முஸ்லிம்கள் செறிந்து வாழும் காஸா பகுதிக்கு செல்லும் அனைத்து விநியோகப்பாதைகளையும் கட்டுப்படுத்தி அங்குள்ள முஸ்லிம்கள் பசியாலும், பட்டினியாலும், நோயாலும் வதைப்பட்டு மடிவதை கண்டு களிக்கும் அரக்கர்களாக இவர்கள் மாறியிருக்கிறார்கள்.

கண்ணியத்திற்குரிய முஸ்லிம்களே!

இந்த இருண்ட மணிநேரங்களில், பலஸ்தீன ஆக்கிரமிப்பின் ஆறு தசாப்த்த கால முடிவில் இஸ்லாத்திற்காக எழுந்து நிற்கும்மாறும், பலஸ்தீன முஸ்லிம்களின் விடுதலைக்காக இஸ்லாம் காட்டும் வழிமுறையில் வீறுகொண்டு போராடுமாறும் உங்களை வேண்டுகோள் விடுக்கிறோம். அதற்காக கீழ்வரும் மைற்கற்களை நீங்கள் துணிச்சலுடன் கடக்க தயாராகுங்கள்.

1. முதலில் பலஸ்தீன் மீதான இந்த ஆக்கிரமிப்பை (இஸ்ரேலிய அரசை) சட்ட hPதியானதாக நாம் ஏற்றுக்கொள்ளலாகாது. அதனை இஸ்லாமும் ஏற்றுக்கொள்ளாது – முஸ்லிம்களாகிய நாமும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இஸ்லாம் பலஸ்தீன பூமியின் ஓர் யாண் நிலத்தையேனும் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்க எந்த நிலையிலும் அனுமதிக்காது. எனவே 60 வருட கால ஆக்கிரமிப்பின் பின்னும் கூட முஸ்லிம்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்க வேண்டும். சீனா எவ்வாறு தாய்வானை ஏற்றுக்கொள்ளவில்லையோ – ரஸ்யா எவ்வாறு இன்னும் கொசோவாவை அங்கீகரிக்கவில்லையோ அதேபோல உலக முஸ்லிம்களும் இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முஸ்லிம்கள் கொண்டுள்ள இந்த நிலைப்பாட்டிற்கு, முஸ்லிம்களின் பூமியை எந்த நிலையிலும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கக்கூடாது என்று அல்லாஹ்(சுபு)வும், அவனது து}தர்(ஸல்) அவர்களும் இட்ட கட்டளையே காரணமோழிய வேறொரு நோக்கமும் அவர்களுக்கு கிடையாது.

2. பலஸ்தீனத்திலும், ஏனைய அனைத்து முஸ்லிம் உலகிலும் மேற்குலக காலனித்துவ தலையீட்டினை நாம் எதிர்க்க வேண்டியதுடன், அவர்களின் தலையீட்டினை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடவேண்டும். இத்தகைய அந்நியத்தலையீடுகள், தலையிடும் நாடுகளின் நலன்களை மாத்திரம் நோக்கமாக கொண்டெதேயல்லாமல், அது பலஸ்தீன பிராந்தியத்தில் தொடர்ந்தும் வன்முறையையும், இரத்தக்களரியையும் அதிகரிக்கவே வழிகுக்கும். 1948ம் ஆண்டில் கூட ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் பாதுகாப்பை பிரித்தானியா கருத்திற்கொள்ளவில்லை. மாறாக அதன் உள்நோக்கு வேறாகவே இருந்தது. இஸ்ரேல் அரசின் உருவாக்கத்திற்கு முன்னர் சுமார் 40 வருடங்களுக்கு முன்னரேயே பலஸ்தீன பிராந்தியத்தின் மீதான காலனித்துவத்தின் ஈடுபாடு வேறொன்றாக இருந்ததனை முன்னாள் பிரித்தானியாவின் பிரதம மந்திரி சேர். ஹென்றி கெம்மல் பென்னர்மேனின் கூற்று உறுதிப்படுத்துகிறது. அவர் பின்வருமாறு சொல்கிறார்.
“ அங்கே மக்கள் பரந்து விரிந்த பிராந்தியங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அங்கே அபரிமிதமான வளங்கள் மறைந்திருக்கின்றன. உலகின் முக்கிய போக்குவரத்து பாதைகளை அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்களுடைய பூமிகள் மனித நாகாPகத்தினதும், சமயங்களினதும் பிறப்பிடமாகவும், வளர்ப்பிடமாகவும் இருக்கிறது. இந்த மக்கள் ஒரே நம்பிக்கையை, ஒரே மொழியை, ஒரே வரலாற்றை, ஒரே அபிலாசையை கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் எந்தத்தடைகளாலும் இவர்களை ஒருவரிடமிருந்து ஒருவராக பிரிக்க முடியாதுள்ளது… … இவற்றையெல்லாம் மிகத் தீவிரமாக கருத்திற்கொண்டு, இந்த பூமி தனது கிளைகளையெல்லாம் ஓர் இடத்தில் குவித்து முடிவுறாத யுத்தங்களில் கூட தனது சக்தியை தொடர்ந்து வெளிப்பாச்சுவதை தடுப்பதற்காக, இந்த பூமியின் இருதயத்திலே ஓர் அந்நிய அலகினை (நாட்டினை) நாம் ஏற்படுத்த வேண்டும். அந்த அந்நிய அலகு, மேற்குலகு அந்த பூமியில் தனது இலக்கினை அடைந்து கொள்வதற்கான ஒரு தாவு தளமாகவும் இருக்க வேண்டும்.”

ஆகவே இஸ்ரேல் எனப்படும் இந்த சியோனிச அரசு என்பதுகூட மேற்குலகின் ஓர் கருவி என்பதற்கு மேலாக ஒன்றுமில்லை. இன்று 60 வருடங்களுக்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யூ புஷ் மத்திய கிழக்கிற்கு பயணித்தபோது கூட இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் காணவில்லை. ஐக்கிய அமெரிக்கா முஸ்லிம் உலகை மதச்சார்பற்ற உலகாக மாற்ற முயன்றுவரும் தனது வியூகத்தின் ஓர் அங்கமாக இஸ்ரேலின் கொடூரங்களிலும், படுகொலைகளிலும் தோளோடு தோள் நின்று ஒத்துழைத்து வருகின்றது. பிரித்தானியா எவ்வாறு இஸ்ரேலின் உருவாக்கத்தை முஸ்லிம்களினதும், இஸ்லாமிய ஆட்சியினதும் ஒற்றுமைக்கு பிரதான தடைக்கல்லாக கருதியதோ அதே போன்று அமெரிக்கா தனது “பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தின் (இஸ்லாத்திற்கு எதிரான யுத்தத்தின்)” பிரதான அங்கமாகவே இஸ்ரேலினை கருதுகிறது.

3. நாங்கள் இன்று மத்திய கிழக்கில் முன்னெடுக்கப்படும் போலியான சமாதான நடைமுறைகளின் உண்மைநிலையினை அம்பலப்படுத்த வேண்டும். இந்த சமாதான நடைமுறைகள் இஸ்ரேலை பாதுகாப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டுள்ளதே தவிர அவை முஸ்லிம்களுக்கு நீதியை வழங்குவதற்கோ, ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ மேற்கொள்ளப்படுபவையல்ல. யாரெல்லாம் பலஸ்தீனப் பிரச்சனைக்கு ‘இரு அரசுத் தீர்வை’ முன்வைத்து, அதற்காக குரல்கொடுக்கிறார்களோ, அவர்கள் பலஸ்தீன பூமியை அந்நியர்களுக்கு தாரைவார்க்கிறார்கள். மேலும் இஸ்ரேலின் கொடூரங்களையும், இனச்சுத்திகரிப்பையும் அங்கீகரித்து அவர்களை திருப்திப்படுத்த நினைக்கிறார்கள். ஓர் நாட்டின் குடிமக்களை தமது பலப்பிரயோகத்தைக் கொண்டு வெளியேற்றிவிட்டு அந்த நாட்டை சூரையாடிக்கொண்டவர்களுடன் எவ்வாறு நாம் பேச்சுக்களில் ஈடுபட முடியும்? மாறாக இஸ்ரேல் அரசு எந்த விலையினை செலுத்தியேனும் தனது சட்ட hPதியற்ற ஆதிக்கத்தினை தக்க வைத்துக்கொள்ளவே முனையும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே சமாதான முயற்சிகளால் உருவாகும் பலஸ்தீன அரசுக்கு உண்மையான விடுதலையோ, உண்மையான பலமோ, உண்மையான வளமோ எட்டப்போவதில்லை என்பதே யதார்த்தமாகும். இத்தகைய சமாதான நடைமுறைகளில் வாக்குறுதியளிக்கப்படும் பலஸ்தீன அரசு என்பது வெறும் பித்தலாட்டத்தனமேயொழிய வேறொன்றல்ல. மாறாக ‘இரு அரச தீர்வு’ எனும் செயற்திட்டம் இஸ்ரேல் தன்னை, அல்லது தனது இருப்பை சட்ட hPதியாக நியாயப்படுத்திக் கொள்ள எடுக்கும் ஓர் கடைசி முயற்சி என்பதை நாம் துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும். இதனாலேயே இஸ்ரேலின் இன்றைய பிரதம மந்திரி இவ்வாறு கூறுகிறார்.
“ எந்தத்தினத்தில் இரு அரசுத் தீர்வு என்ற எமது செயற்திட்டம் இடிந்து விழுகிறதோ, அன்று நாங்கள் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றதைப்போன்ற – வாக்குரிமைக்கான சம அந்தஸ்தினை பெற்றுக்கொள்ளும் ஒருவகைப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும். இந்த நிலை ஏற்படும் போது இஸ்ரேல் அரசின் கதையும் முடிந்துவிடும்.”
எனவே இதுதான் இந்த சமாதான முயற்சிகளின் பின்னாலுள்ள யதார்த்தமாகும். ஆகவே எவரேனும் இந்த சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் - அவர் கடந்த 60 வருடகாலமாக தொடரும் ஆக்கிரமிப்பிற்கும், அடக்குமுறைக்கும் ஆதரவு தெரிவித்தவராகின்றார். 4. இஸ்ரேலினை வாய்களால் மாத்திரம் சாடிக்கொண்டு அதேநேரத்தில் உண்மையில் ஆதரித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் உலகை ஆளும் அனைத்து கொடுங்கோண்மை ஆட்சியாளர்களையும் நாம் நிராகரிக்க வேண்டும். அவர்கள்தான் ‘சமாதான முயற்சிகள்’ என்ற பெயரால் ‘இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நிலைப்பதற்காகவும், அதனை பாதுகாப்பதற்காகவும், முன்னிலையில் நின்று உழைப்பவர்கள். அவர்கள்தான் தமது மேற்குலக காலனித்துவ எஜமானர்களின் அடிமைகளாகவும், இந்த போலியான சமாதான நடைமுறை மாத்திரமே முஸ்லிம்களுக்கு முன் இருக்கும் ஒரேயொரு தீர்வு எனக் கூவி விற்கும் வியாபாரிகளாகவும் இருக்கின்றனர். காட்டுமிராண்டித்தனமான இஸ்ரேலிய ஆக்கிரப்பை தணிக்கை செய்து உலகிற்கு வழங்குபவர்களும், இஸ்ரேலின் பிடியிலிருந்து பலஸ்தீன பூமியை மீட்க தத்தமது நாடுகளில் முனையும் முஸ்லிம்களை தமது அரச படைகளை பாவித்து அடக்கி அநியாயம் செய்வர்களும் இந்த முஸ்லிம் நாடுகளின் தலைவர்களேயாகும். எனவே இத்தகைய கொடிய கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து முஸ்லிம் உலகை மீட்டு அதனை கிலாபத்தின் கையில் ஒப்படைக்க வேண்டும்.

5. நாம் பலஸ்தீன பிரச்சனையை முழுமையாகக் கையாளக்கூடிய, பலஸ்தீன பூமியை மீட்டு அங்கே நீதியான ஆட்சியை நிலைநாட்டக்கூடிய, நு}ற்றாண்டு காலமாக அங்கு வாழ்ந்த அனைத்து சமூகங்களையும் நிம்மதியாக வாழ வைக்கக்கூடிய இஸ்லாமிய கிலாபத்தை மீள் நிர்மாணம் செய்யும் பணிக்கு முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும். உண்மையில் இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் புனித பூமியான பலஸ்தீனை மீட்பதற்கு - சதாப்தங்களாக நிலவும் ஆக்கிரமிப்பினையும், கொடுமைகளையும் தனது அனைத்து ஆளுமைகளையும் பிரயோகித்து முடிவுக்கு கொண்டு வரக்கூடிய கிலாபத்தினால் மட்டுமே முடியும். ஏழு நு}ற்றாண்டுகளுக்கு முன்னர் ஸலாஹ}த்தீன் அய்யூபி எவ்வாறு அந்நிய ஆக்கிரமிப்பை வெற்றி கொள்வதற்கு முன் முஸ்லிம் பூமிகளில் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்தி, முஸ்லிம்களின் வளங்களையெல்லாம் ஒன்று குவித்து நெறிப்படுத்தினாரோ – அதுபோலவே இந்த பணியினை மேற்கொள்வதற்கு கிலாபத்தினால் மாத்திரமே முடியும்.

கிலாபத்தின் பலஸ்தீன மீட்பானது யூதர்களை அநீதியாக நடத்துவதையோ, பலஸ்தீனர்களை யூதர்கள் இனச்சுத்திகரிப்பு செய்ததைப்போன்ற யூத இனச்சுத்திகரிப்பையோ குறிக்காது. யூதர்களும், முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும் இஸ்லாத்தின் பாதுகாப்பிலும், பராமரிப்பிலும் நு}ற்றாண்டு காலமாக எவ்வாறு கிலாபத்தின் கீழ் வாழ்ந்தார்களோ அதே போன்றதொரு சுபீட்சமான நிலையையே அது தோற்றுவிக்கும்.

ரஸ}ல்(ஸல்) சொன்னார்கள்.

“ எவரொருவர் திம்மி (கிலாபத்தின் கீழிருக்கும் முஸ்லிம் அல்லாத பிரஜைகள்)க்கு நோவினை செய்கிறாரோ, அவர் எனக்கு நோவினை செய்கிறார்.”

ஆகவே கிலாபாவின் மீள் உருவாக்கமே, அல்லாஹ்(சுபு) உதவியுடன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து பலஸ்தீனை விடுதலை செய்யும் ஒரேயொரு தீர்வாகும். கிலாபா மாத்திரமே பலஸ்தீனத்தில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கு நீதியையும், சுபீட்சத்தையும் மலரச் செய்யும் என்பதால் நாம் அனைவரும் அணிதிரண்டு கிலாபத்தை உருவாக்கும் போராட்டத்தில் சங்கமிப்போம்!

“ விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுக்கும்(அவனுடைய) து}தருக்கும் - உங்களைவ வாழ வைப்பதன்பால் (அல்லாஹ்வின் து}தராகிய) அவர் உங்களை அழைத்தால் பதில் அளியுங்கள். (அல் அன்பால்: 24)