Monday, March 24, 2008

கிலாபத்தின் வீழ்ச்சியே மனிதகுலத்தின் சாபக்கேடு!


முஸ்லிம் உலகின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாபா (இஸ்லாமிய அரசு) 1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதியில் (28 ரஜப் மாதம் ஹிஜ்ரி 1342) முஸ்தபா கமால் அதாதுர்க்கினால் துருக்கிய தலைநகரான ஸ்தான்புலில் நிர்மூலமாக்கப்படடு 2008ம் ஆண்டுடன் 84 வருடங்கள் கடந்துவிட்டன. கிலாபத்தை அழித்ததன் மூலம் காலனித்துவ பிரித்தானியாவும், முஸ்லிம் உலகிலே அவர்களின் கைம்பாவையாக தொழிற்பட்ட ஆட்சியாளர்களும் முஸ்லிம் உம்மத்திற்கு பாரியதொரு அதிர்ச்சியினையும், கேவலத்தினையும் ஏற்படுத்தினார்கள். இருபதாம் நு}ற்றாண்டு முழுவதும் முழு உலகும், முஸ்லிம் உம்மத்தும் ஒட்டுமொத்த அழிவை நோக்கி பயணிக்க வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் உம்மா பொருளாதார பலமற்ற, சர்வதேச பொருளாதார நிதியத்தினதும் (IMF), உலக வங்கியினதும் கால்களில் மண்டியிடும் சிற்சிறு தேசிய அரசுகளாக கூறுபோட்டு பிரிக்கப்பட்டது. முஸ்லிம் உம்மத் இராணுவ அரசுகளையும், சர்வாதிகார ஆட்சியாளர்களையும், ஜனநாயக கொடுங்கோலர்களையும், மிகவும் பின்தங்கிய அரசியல், பொருளாதார, தொழிற்நுட்ப கட்டமைப்பையும் கொண்ட சேதமுற்ற தேசமாக மாறிவிட்டது.

இருபதாம் நு}ற்றாண்டு முழுவதும் முஸ்லிம்களும், அவர்களின் நிலங்களும் குப்பார்களின் தொடர்ந்தேர்ச்சையான வன்முறைகளுக்கு இலக்காகியது. யூதர்கள், பிராஸ்ஸியர்கள், பிரித்தானியர்கள், இந்துக்கள், இத்தாலியர்கள், அமெரிக்கர்கள், சேபியர்கள், ரஸ்யர்கள், சீனர்கள் என அனைவர்களும் மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் அவலத்திற்கும், கண்ணீருக்கும் காரணகர்த்தாக்களாக இருந்துள்ளனர். ஸ்திரமற்ற பொருளாதார நிலையினையும், உணவுக்கும், வாழ்விடத்திற்கும் அகதிமுகாம்களில் தஞ்சம் புகும் அவலத்தையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டும், படுகாயமடைந்தும் இருக்கின்றனர். இந்த மனித அவலத்தினை விளங்கிக்கொள்ள உங்கள் மனக்கண்முன் பலஸ்தீனம், ஈராக், ஆப்கானிஸ்;தான், செச்னியா, காஷ்மீர், கொசோவா, பொஸ்னியா, அரிட்ரியா போன்ற எமது பூமிகளின் கொடூரமான நிலவரத்தினை நிலைநிறுத்திப்பாருங்கள். இந்த அகோர நிலை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா போன்ற நாடுகள் பின்பற்றும் மிகக்கொடூரமான உலக ஒழுங்கினால் மென்மேலும் மோசமடைந்துள்ளது. உம்மத்தின் வளங்கள் அனைத்தும், குறிப்பாக எண்ணெய் வளம் முழுவதும் இஸ்லாத்தின் எதிரிகளின் கைகளால் கட்டுப்படுத்தப்பட்டு இஸ்லாத்திற்கு எதிரான குப்பார்களின் போர் இயந்திரத்தினை பலப்படுத்த பயன்பட்டு வருகிறது. இதனு}டாக முழு முஸ்லிம் உம்மத்தினையும் தமது இரும்புச்சப்பாத்திற்குள் அடக்குவதற்கு எதிரிக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.

இருபதாம் நு}ற்றாண்டு இரு உலக மகா யுத்தங்களை சந்தித்ததுடன் அறுபது மில்லியன் மனித உயிர்களையும் அது பலிகொண்டது. பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், எங்கும் வியாபித்த வறுமை, சமூக நோய்கள், பயங்கரவாதம், வாழ்வியல் சிதைவுகள், மனித விழுமிய வீழ்ச்சிகள் போன்றன உலகில் எங்கும் வியாபித்து இருபதாம் நு}ற்றாண்டை அவல நு}ற்றாண்டாக மாற்றின. அணுவாயுத யுத்தங்களும், பொருளாதார அனர்த்தங்களும் முழு மனித வர்க்கத்திற்கே பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலக அரங்கில் நீதியின் அச்சாணியாகத் திகழ்ந்த இஸ்லாமிய அரசின் வீழ்ச்சியின் இயற்கையான பின்விளைவுகளே முஸ்லிம்களுக்கும், ஏனைய உலக மக்களுக்கும் எதிராக நிகழ்ந்த கொடூரமான மனிதப்படுகொலைகளும், இன அழிப்புகளுமாகும் என்பதை முழு உலகமும் சேர்ந்தாலும் மறுக்க முடியாது. இந்நிலையில் இஸ்லாமிய முறைமை அரச மட்டத்திலும், பொருளாதார, சமூக, அன்றாட வாழ்வியல் மட்டத்திலும் பரிபூரணமாக அமுல்படுத்தப்படுவதே, குப்ரின் கொடுமையில் களைத்துப்போன மனிதகுலத்திற்கு ஒரேயொரு விமோசனமாகும்.

“ (நபியே) உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை” (அல் அன்பியா: 107)
முஸ்லிம்களே! அல்லாஹ்(சுபு) எம்மை முழு மனிதகுலத்திற்கும் சாட்சியாளர்களாய் நியமித்துள்ளான் என்பதை மறந்து விட்டீர்களா?
அல்லாஹ்(சுபு) தனது திருமறையிலே கூறுகிறான்:

“ மேலும் (விசுவாசிகளே!) நீங்கள் ஏனைய மனிதர்களுக்கு சாட்சியாளர்களாக ஆகுவதற்காகவும், (நம் து}தர்) உங்களுக்கு சாட்சியாளராக இருப்பதற்காகவும் நீதி செலுத்தும் சமுதாயத்தினராக நாம் உங்களை ஆக்கினோம்.”(அல் பகறா: 143)

எனவே முழு மனிதகுலத்திற்குமான சாட்சியாளர்களாய் திகழும் பணி உறுதியான பலம், சுதந்திரமான அரசியல் நிலைப்பாடு, அரசியல் அதிகாரம் இவை எல்லாவற்றிற்கும் அடித்தளமான இஸ்லாமிய சிந்தனை என்பவற்றை கொண்ட ஒரு தலைமையின் கீழான முஸ்லிம் உம்மாவால் மாத்திரம்தான் முடியும்.
முஸ்லிம்களே! நாம் வாழ்ந்துவரும் சிதைவுற்ற வாழ்விலிருந்து து}ய்மைபெற்று இஸ்லாமிய வாழ்க்கை முறையை நோக்கி எழுச்சியடைய வேண்டிய பணி எமது கடமையும், அமானிதமுமாகும். இருபதாம் நு}ற்றாண்டில் நாம் இழந்த இஸ்லாமிய கிலாபாவை மீண்டும் நிலைநாட்ட வேண்டியது எமது அதிமுக்கிய கடமையாகும். ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு கலீபாவிற்கு தனது சத்தியப்பிரமாணத்தை (பையத்) செய்திருக்க வேண்டியது கடமையாகும்.
இப்னு உமர் (ரழி), ரசூல்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்,“கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் (பையத்) இல்லாத நிலையில் யார் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய மரணத்தை அடைந்தவராவர்.” (முஸ்லிம்)
முஸ்லிம்களே! முழு முஸ்லிம் உம்மத்தும் இன்றுவரை அனுபவித்துவரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இதுவரை காலமும் எமது மாநாடுகளிலும், கூட்டங்களிலும், நிறுவனங்களிலும், இயக்கங்களிலும் நாம் ஆராய்ந்து வரும் தீர்வுகள் முறையான நிவாரணத்தையும், நிரந்தரமான தீர்வினையும் வழங்கவில்லை என்பதை எம்மால் மறுக்க முடியாது. மாறாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அவலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதற்கு காரணம் எம்மை அழிக்க நினைக்கும் எதிரியை எதிர்கொள்வதற்கும், நாம் எதிர்நோக்கும் ஆபத்துக்களிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கும் இறைது}தர் கேடயமாக உவமித்த நேர்வழிபெற்ற கலீபா எமக்கு இல்லாமையேயாகும்.

நபிகளார் (ஸல்) கூறியதாக அபுஹ_ரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்:“ இமாம் ஒரு கேடயம் போன்றவர்;. அவர் பின் நின்றே நீங்கள் போராட வேண்டும். அவர் மூலமாகவே நீங்கள் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டும்.” (முஸ்லிம்)
முஸ்லிம்களே! கிலாபாவை மீண்டும் நிலைநாட்டுவது என்பது ஒரு சில நல்ல முஸ்லிம்களின் கனவல்ல. அதேபோல அது வெறுமனவே எமது விருப்பத்திற்குரிய ஒரு சிந்தனை மட்டுமல்ல. அது முஸ்லிம்கள் அனைவரினதும் கடமையும், மனிதகுலத்தின் தேவையுமாகும். அதற்கான முன்னெடுப்பு பிரார்த்தனை செய்வதுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, மாறாக அது ஒரு ஜீவ மரணப் போராட்டமாகும். முஸ்லிம்களே! கிலாபா என்பது ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தனது மரணத்திற்கு பின்னர் முஸ்லிம்களின் முக்கிய பொறுப்பாக விட்டுச்சென்றதாகும்.
அபுஹாசிம் அறிவிப்பதாக முஸ்லிமில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
“ நான் அபுஹ_ரைராவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அடிக்கடி கூறிய ரசூலுல்லாஹ்வின்(ஸல்) கூற்று: ''நபிமார்கள் மக்கள் நலன்களை பேணிக்காத்தனர். ஒரு நபியின் மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் தோன்றினர். ஆனால் எனது மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் யாரும் வரமாட்டார்கள். ஆனால் அதிகமாக கலீஃபாக்கள் தோன்றுவார்கள்."" அப்போது ஸஹாபாக்கள் ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்களிடம் “ அந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ” என வினவினார்கள். அதற்கு ரசூலுல்லாஹ்(ஸல்) கூறினார்கள் “ முதலாமவருக்கு பையத் செய்யுங்கள், பின்னர் அவரைத் தொடர்ந்து வருபவர்களுக்கும் பையத் செய்யுங்கள். அவர்களுக்கு அவர்களுடைய உரிமைகளை வழங்குங்கள். அல்லாஹ்(சுபு) அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள் குறித்து கவனித்துக் கொள்வான்.” என்றார்கள்.
கிலாபா ஆட்சி முறை என்பது அபு பக்ர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி), அலி (ரழி) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆட்சிமுறையாகும். மேலும் அந்த ஆட்சி முறைக்கு கீழ்த்தான் சுமார் 13 நு}ற்றாண்டுகள் முஸ்லிம் உம்மத் தனது விவகாரங்களை தொடர்ந்து பராமரித்து வந்திருக்கிறது. எனவே எமதருமை முஸ்லிம்களே! எம்மால் 21ம் நு}ற்றாண்டை கிலாபா ராஷிதாவின் மீள் வருகையால் ஒளிர்வூட்ட முடியுமா? ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை நாம் புதுப்பிக்க முடியுமா? அல்லாஹ்(சுபு)வும், ரசூலுல்லாஹ் (ஸல்)வும் எமக்கு வாக்களித்த கிலாபத்தின் மீள்வருகையின் பயணத்தில் நாமும் பங்காளர்களாக முடியுமா?
“ மனிதர்களே! உங்களில் விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை அதிபதிகளாக்கிய பிரகாரமே, நிச்சயமாக பூமிக்கு அதிபதிகளாக்கி வைப்பதாகவும், அவன் அவர்களுக்கு பொருந்திக்கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களுடைய பயத்திற்கு பிறகு அமைதியை கொண்டு நிச்சயமாக மாற்றிவிடுவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கின்றான். அவர்கள் எனக்கு யாதொன்றையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள். இதன் பின்னர் உங்களில் எவர் நிராகரிப்பவராகி விட்டாரோ நிச்சயமாக அவர்கள்தாம் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்காத பாவிகள்.” (அந்நு}ர்: 55)

முஸ்லிம்களே! எம் தோள்களிலே அல்லாஹ்(சுபு) சுமத்திய பணியை எம்மால் தாங்கிக்கொள்ள முடியுமா? வாழ்வில் மீண்டும் இஸ்லாத்தை கொண்டுவருவதன் மூலம் எமது கௌரவத்தை நாம் மீண்டும் பெற துணிவுடன் இருக்கின்றோமா? நீதி செலுத்தும் உம்மத் என்ற அடிப்படையில் முழுமனிதகுலத்திற்கும் சாட்சியாளர்களாக எம்மை நாம் மாற்றிக்கொள்ள எமக்கு தென்பிருக்கிறதா? கஃபாவை விட பரிசுத்தமான ஒன்றை பாதுகாப்பதற்காக எம்மால் உறுதிப்பிரமாணம் எடுக்க முடியுமா?

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“ ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கஃபாவை சுற்றி வரும் போது அதனைப் பார்த்து கூறினார்கள், “ உனது (கஃபா) சிறப்பு எத்தகையது! உனது (கஃபா) நறுமணமும், புனிதமும் எத்தகையது! ஆனால் எவனுடைய கரத்தில் இந்த முஹம்மத்தின் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக, ஒரு விசுவாசியின் ஒரு துளி இரத்தமும், அவனது உடமைகளும் அல்லாஹ்(சுபு) முன்னிலையில் உன்னை (கஃபா) விட புனிதமானது. நல்லதைக்கொண்டல்லாமல் ஒரு விசுவாசியை கருத வேண்டாம்” ( சுனன் இப்னு மாஜா)

எனவே முஸ்லிம்களே! முஸ்லிம் தேசத்தின் ஒரு அங்;குலத்தையேனும் நாம் விடுதலை செய்யாமல் விடமாட்டோம் என கங்கனம் கட்டுவோமா? முஸ்லிம் பெண்களின் கௌரவத்தை பாதுகாக்க உயிரையும் துரப்போம் என உறுதிபூணுவோமா? எமது சிறார்கள் பட்டினியால் மடிவதை இனியும் பொறுக்க மாட்டோம் என சத்தியம் செய்வோமா? முழு மனித சமூகத்திற்கும் இஸ்லாத்தின் அருளை பரப்ப சிடகங்கட்பம் பூணுவோமா?

முஸ்லிம்களே! எமது பாதை ஜன்னத்தின் பாதையா? எம்மை நாம் ஜஹன்னத்தின் பிடியிலிருந்து பாதுகாக்க முடியாதா? ஜாஹிலிய மரணமாக எமது முடிவு அமைவதை தவிர்க்க, அல்லாஹ்(சுபு) ஷாPயா இந்த பூமியில் நிலைபெற்றிருக்க, தாஹ}த்களுக்கு சாவுமணி அடிக்க மீண்டும் கிலாபத்தை நிலைநாட்டும் பணியில் நாம் களம் இறங்கக் கூடாதா?

“ விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், (அவனது) து}தருக்கும் - உங்களை வாழ வைப்பதன்பால் (அல்லாஹ்வின் து}தராகிய) அவர் உங்களை அழைத்தால் பதில் அளியுங்கள்.” (அல் அன்பால்: 24)

No comments:

Post a Comment