அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களினால் இஸ்லாமிய கிலாபத் எப்போது மதீனாவில் நிறுவப்பட்டதோ அன்றைய தினத்திலிருந்து உதுமானிய பேரரசு 1924ம் ஆண்டு முஸ்தபா கமால் அதாதுர்க்கினால் வீழ்த்தப்படும் வரை கிலாபத் இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. கிலாபத் வீழ்த்தப்பட்ட குறித்த இந்த காலகட்டத்தில் கிலாபத் அரசு பலகீனமடைந்திருந்ததுடன் அதனது தூய்மையான சிந்தனைத்தரம் வலுவிழந்திருந்தது. முஸ்லிம் தேசத்தை ஆக்கிரமிப்பதற்காக முஸ்லிம்களின் படைகளுடன் போராடிப்போராடித் தோல்வி கண்டு களைத்துப் போயிருந்த காபிர்கள் இனிமேலும் இவர்களுடன் ஆயுத ரியாக போராடி வெற்றி கொள்ள முடியாது என்ற மனோ நிலைக்கு வந்திருந்தார்கள். எனவே அவர்கள் மாற்று திட்டம் குறித்து சிந்திக்கத் தொடங்கியிருந்த வேலையில் முஸ்லிம்களின் அடிப்படை வலிமையான இஸ்லாமிய சிந்தனையினை பலகீனப்படுத்துவதற்கு இக்காலகட்டத்தில் கிலாபத்தில் காணப்பட்ட பலகீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
அவர்கள் தமது சிந்தனைகளையும் தமது கலாசாரங்ளையும் முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரப்டுத்தி இஸ்லாமிய அரசின் அடிப்படை பலமான இஸ்லாமிய சிந்தனையினை ஆட்டங்காண வைப்பதன் மூலம் அதனது அத்திவாரத்தினையே தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள்.
இதனை சாத்தியப்படுத்துவதற்காக கிலாபத் ஆட்சியினுள் அவர்கள் மிஷனரிகளை அனுப்பவதன் ஊடாகவும், தமது பாடசாலை, வைத்தியசாலைகள் அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகிபதன் ஊடாகவும் தமது கருத்துக்களை பிரச்சாரப்படுத்தியதுடன் சில இரகசிய ஸ்தாபனங்களையும் அமைத்தனர். அவர்கள் சமூகத்தின் பல்தரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள்ளும் ஊடுருவினர். இவற்றுள் அவர்கள் இராஜதந்திர ரியாக, கல்வியியல் ரியாக விடயங்களிலேயே தமது கவனத்தை அதிகமாக செலுத்தினர். இத்தகைய முயற்சிகளினூடாக அவர்கள் பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் புத்திஜீவிகள் போன்றோரை கவர்ந்தனர்.
வளர்ந்து வந்த இந்த சிந்தனைப்போக்கு மேற்குலகின் கலாச்சாரத்தையும், நீதிப்பரிபாலனத்தையும் தமக்குள் உள்வாங்கிக் கொள்வதற்கு முஸ்லிம்களை தூண்டியது. இவர்கள் இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களை கிளப்பியதுடன் அது தற்கால நவீன உலகிற்கு எந்தளவில் பொருத்தமுடையது என்பன போன்ற வினாக்களைத் தொடுத்தனர். இவர்கள் தாம் இஸ்லாத்தை பின்பற்றவதாக காட்டிக்கொண்டு மேற்குலகின் கவர்ச்சியை நோக்கியே இழுத்துச்செல்லப்பட்டனர். இதன் விளைவாக கிலாபத்தின் கட்டமைப்பும் அதன் அத்திவாரமும் ஆட்டம் காண ஆரம்பித்தது. இதனால் உலகில் இஸ்லாத்தின் தஃவா தடைபட்டது. எனினும் காபிர்களுக்கு தமது சிந்தனைகள் இஸ்லாமிய தேசத்தினுள் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது.
கிலாபத்தின் இந்த வீழ்ச்சியில் குப்ர் அரசுகள் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராஜதந்திர மற்றும் ஏனைய உயர்மட்டங்கள் அதிகளவிலான பங்களிப்பினை செய்தன. கிலாபத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த பலகீனமான நிலையை மிகவும் கச்சிதமாக அவதானித்த குப்ர் அரசுகள் கிலாபத்தின் எல்லைகளை பகுதி பகுதியாக ஆக்கிரமித்தனர்.
அனைத்து மேற்குலக நாடுகளும் பேராசையில் மிதக்க ஆரம்பதித்தனர். பிரித்தானியாவுடனும் பிரான்சுடனும் சேர்ந்து தமது பங்கினையும் பெற்றுக்கொள்வதில் ஜேர்மன், ரஷ்யா போன்ற நாடுகள் முனைப்புடன் செயற்பட்டன. தமக்குள் காணப்பட்ட முரண்பாடுகளை கடந்து இஸ்லாத்;தினையும், கிலாபத் ஆட்சினையும் அழிப்பதிலும் அவர்கள் ஒன்று திரண்டார்கள். அவர்கள், ஆட்சியிலும், அரசியல், சமூக விவகாரங்களிலும் இருந்து இஸ்லாத்தினை நீக்கி அதற்கு பகரமாக மேற்குலகின் நீதிப்பரிபாலனம், முதலாளித்துவம், ஜனநாயகம் போன்ற சிந்தனைகளை அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை கிலாபத்தை நோக்கிச் செலுத்த யோசித்தனர். 1850 ம் ஆண்டு ஐரொப்பிய நாடுகள் பேர்லின் மாநாட்டில் ஒன்று கூடினர். இந்த மாநாட்டில் பிரித்தானியாவின் பிரதம மந்திரியான டிஸ்ரேலி என்ற யூதனும், ஜேர்மனியை பிஸ்மார்க்கும் பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்த மாநாட்டில் இஸ்லாத்தின் ஆட்சினை தடைசெய்து தமது பொதுச்சிவில் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என எச்சரிக்கின்ற ஒரு எச்சரிக்கைக் கடிதத்தினை அன்றைய கலீபாவிற்கு அனுப்புவதற்கு இவர்கள் தீர்மானித்தார்கள்.
இந்த கடிதம் கலீபாவிற்கு (இதன்போது ஆட்சியிலிருந்த கலீபா மேற்குலகின் கலாச்சரத்திற்கு ஆட்பட்டிருந்தார்.) கிடைத்தவுடன் அவர் மேற்குலகின் சிவில் சட்டத்தினையே அமுல்படுத்த வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினார். இது கிலாபத்தை பாதித்ததுடன் இராஜதந்திர மற்றும் கல்வியியல் மட்டக்களில் இஸ்லாமிய சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுவடைய ஏதுவாக அமைந்தது. பின்பு 1858ம் ஆண்டில் உதுமானிய சட்டம் கோவை (Penal code) மற்றும் உரிமைகளுக்கும் வர்த்தகத்திற்குமான சட்டக் கோவை (Code of Rights and Commerce) போன்ற சட்டத்தொகுப்புகள் அமுல்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சட்டப்புத்தகம் (law book) பின்பற்றப்பட்டதுடன் ஒரு அலகாக இருந்த நீதிமன்றமானது மரபு மற்றும் நிர்வாக நீதிமன்றங்களாக இரண்டாக பிரிக்கப்பட்டது. 1878இல் அவர்களின் பீனல் சட்டமும், நீதித்துறைக்கான அடிப்படைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதில் விசித்திரமான விடயம் என்னவென்றால் இத்தகைய குப்ர் சட்டங்கள், மார்க்க பத்வா பெறப்பட்டே அமுல்படுத்தப்பட்டதாகும். ஏனெனில் இந்த சட்டங்களுக்கு மார்க்க ரியான ஒரு போர்வையை போர்த்தும் போது அது பெரும்பாலான முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் என்ற அடிப்படையிலேயேயாகும்.
எகிப்தைப்பொருத்தவரையில் அது பிரான்ஸின் கைபொம்மையான முஹம்மத் அலி மற்றும் அவனது புதல்வர்களால் ஆளப்பட்டதால் கிலாபத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட மேற்கத்தியமயமாக்கும் வழிமுறைகளை அதேபாணியில் இங்கு பின்பற்றவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கவில்லை. எனவே எவ்வித தாமதமும், தடங்களும் இல்லாமல் அரசாங்கம் மேற்கத்திய சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. 1883ம் ஆண்டில் நாட்டின் சிவில் சட்டங்கள் யாவும் பிரஞ்சுச் சட்டங்களிலிருந்து பிரதிபண்ணப்பட்டதாகவும் பிரஞ்சு மொழியிலுமே காணப்பட்டன. இந்த சட்டங்கள் முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் இராஜதந்திர மட்டங்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதுடன் படிப்படியாக கனகச்சிதமான முறையில் இஸ்லாமிய சட்டங்களுக்கு பகரமாக மேற்கத்திய சட்டங்கள் அமுலுக்கு வந்தன. இதனால் கிலாபத்தின் வீழ்ச்சியானது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. முஸ்லிம் உம்மத் இஸ்லாத்தை தமது சமூக வாழ்விலிருந்து அந்நியப்படுத்தத் தொடங்கியது. குறிப்பாக இது அரச பரிபாலன மட்டங்களிலும், நீதித்துறையிலும் ஏற்பட்டது. இதன் விளைவாக அவர்கள் இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை முதலாளித்துவ சட்டங்களினு}டாக மாற்றீடு செய்வதற்கு வழி பிறந்தது.
இந்த நிகழ்வுகளையெல்லாம் முஸ்லிம்கள் பெரிதொரு விடயமாக உணராத நிலையிலேயே கிலாபத்தின் வீழ்ச்சியும் நடந்தேரியது. இதனால் இந்த அழிவுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் அரிதாகவே காணப்பட்டது. முஸ்தபா கமால் அதாதுர்க் அதிகார பூர்வமாக கிலாபத்தினை வீழ்த்தியபோது உம்மத்திலிருந்து வெளிவந்த எதிர்ப்பலைகளின் பலகீனம் இதனை மிகத்தெளிவாக காட்டுகிறது. அவன் இங்கிலாந்தின் அடிவருடி என்பதை சமூகம் அறிந்திருந்தபோதிலும் அவனது இந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தி, மீண்டும் இஸ்லாத்தின் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. இதை விடக்கேவலமான விடயம் என்னவெனில் பிரித்தானியாவின் கிலாபத்திற்கெதிரான இந்த சதிமுயற்சிற்கு அன்றைய ஹிஜாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஷரிப் ஹ{சைன்- Hussain ( நபி (ஸல்) அவர்களின் பரம்பரையைச்சேர்ந்தவன் என்று பொய்யாகக் கூறப்படுபவன்) என்பவன் உறுதுணையாக இருந்தது.
இவ்வாறு ஒருவாராக கிலாபத் வீழ்த்தப்பட்டு இஸ்லாம், முஸ்லிம் உம்மத்தின் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் அதனுள் திணிக்கப்பட்;;டு, இஸ்லாத்தின் பூமி பல பலகீனமான தேசங்களாக பிளவு படுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குப்பார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களையே இந்த தேசங்களின் தலைவர்களாக ஏற்படுத்தி அவர்களினு}டாக இஸ்லாத்தினை அழிக்கின்ற முயற்சியில் வெற்றிகண்டது. அவர்கள் உண்மையில் காபிர்களையே பிரதிநிதித்துவப்படுத்தினர். முஸ்லிம்களையல்ல. அவர்கள் கிலாபத்தினை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று செயற்பட்ட முஸ்லி;ம்களை கடுமையாக தண்டித்தனர்.
இவ்வாறாக காபிர்கள் முஸ்லிம்களை கட்டுப்படுத்தியதுடன் முஸ்லிம்கள் மேற்கத்தைய சிந்தனைகளின் ஆளுகைக்குள் உட்பட்டனர். இதன் விளைவாக முஸ்லிம்களும் அவர்களின் நிலங்களும் மேற்குலகின் சிந்தனைகளையும் பொருட்களையும் உள்வாங்கிக்கொள்ளும் சிறந்த சந்தைகளாக மாற்றமடைந்தன. இந்த அவல நிலையை தொடர்ந்து பேணுவதற்காகவும் முஸ்லிம்கள் மீண்டும் கிலாபத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் தடைகல்லாகவும் இஸ்ரேலை அரபுலகின் மையத்தில் இவர்கள் ஏற்படுத்தினார்கள்.
முஸ்லிம் உம்மத் பிறரின் ஆளுகைக்குட்பட்டிருப்பதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. எனவே இஸ்லாம் அனைத்து மேலாதிக்கங்களுக்கும் மேலாக தன்னை உயர்த்திக் கொள்ளவதை வலியுறுத்தவதால் இதனை நாம் மீண்டும் கிலாபதை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.
விசுவாசிகளுக்கு மேலான எந்தவொரு (அதிகாரத்தையும்) வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான்.(4:141)
விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதுகாவலர்களாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்.(3:28)
விசுவாசிகளே! ஏன்னுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் உங்களுடைய உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டாம்.(60:1)
விசுவாசிகளே! உங்களையன்றி மற்றவர்களை உங்களுடைய அந்தரங்க செய்திகளை அறிபவர்களாக நீங்கள் ஆக்;கிக்கொள்ளவேண்டாம். (ஏனெனில்) அவர்கள் உங்களுக்கு தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. மேலும், நீங்கள் துன்புறவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்ச்சொற்களிலிருந்தே (அவர்களுடைய கடுமையான வெறுப்பு திடமாக வெளிப்பட்டு விட்டது.) எனினும் அவர்களின் மனதில் மறைந்திருப்பது இதைவிட மிகவும் மோசமானதாகும். (3:118)