Thursday, April 21, 2011

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது - பகுதி 02

'கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது' என்பதை மிக ஆழமாக ஆராயும், காலம் சென்ற பலஸ்தீனிய அறிஞர் அஷ் ஷேக் அப்துல் கதீம் ஸல்லும் (ரஹ்) எழுதிய 'கைப குதிமத்துல் கிலாஃபா' என்ற அரபு நூலின் தமிழாக்கத்தை இங்கே பகுதி பகுதியாக வழங்குகிறோம்! 


இஸ்லாமிய அரசிற்கு எதிராக ஐரோப்பிய அரசுகள் மேற்கொண்ட சதித்திட்டங்கள்


 முஸ்லிம்களின் நிலப்பரப்புகளை பங்கீடு செய்துகொள்வது தொடர்பாக காஃபிர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடுகள் இருந்துவந்த போதிலும் இஸ்லாத்தை அழிக்கும் சிந்தனையில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தை கொண்டிருந்தார்கள். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவர்கள் பல்வேறு வழி முறைகளை கையாண்டார்கள். துவக்கத்தில் முஸ்லிம்களை சிந்தனை ரீதியாக பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு தேசியவாதம் (Nationalism) தேசப்பற்று (Patriotism) மற்றும் விடுதலை (Freedom) ஆகிய குஃப்ர் சிந்தனைகளை அவர்களிடம் உருவாக்கினார்கள். மேலும் இஸ்லாமிய அரசிற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டதோடு பணத்தையும் ஆயுதத்தையும் அதற்காக விநியோகம் செய்தார்கள். செர்பியாவிலும், கிரேக்கத்திலும் இத்தகைய சதிச்செயல்களை அரங்கேற்றியதன் மூலம் ஐரோப்பிய அரசுகள் இஸ்லாமிய அரசின் முதுகில் குத்தும் இழிசெயலை மேற்கொண்டன. கி.பி. 1798ல் ஃபிரான்ஸ் எகிப்து பிராந்தியத்தை ஆக்கிரமித்தது. பின்னர் பாலஸ்தீனத்தின் மீது படையெடுத்து அதை ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. இஸ்லாமிய அரசுக்கு மரணஅடி கொடுக்கும் நோக்கத்தோடு ஷாம் பகுதி முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்ய அது திட்டமிட்டது. ஆனால் அடுத்து நிகழ்ந்த யுத்தத்தில் தோல்வியை தழுவியதால் தான் ஆக்கிரமிப்பு செய்துவந்த பகுதி களை இஸ்லாமிய அரசிடம் ஒப்படைத்துவிட்டு எகிப்திலிருந்து வெளியேறியது. 

வஹ்ஹாபிகளின் தோற்றமும் சவூதி அரசின் உருவாக்கமும் 


இஸ்லாமிய அரசிற்குள் இருந்தவாறு அதன்மீது தாக்குதல் மேற்கொள்ளும் விதமாக தனது கங்காணி (Agent) அப்துல் அஜீஸ் இப்னு முஹம்மது இப்னு சவூது மூலமாக பிரிட்டன் முயற்சி மேற்கொண்டது. இக்காலகட்டத்தில் இஸ்லாமிய அ ரசிற்கு எதிராக வஹ்ஹாபிகள் ஓர் அரசை உருவாக்கி, அதன் ஆட்சியாளர்களாக முஹம்மது இப்னு சவூதும் பின்னர் அவரது மகன் அப்துல் அஜீஸும் இருந்துவந்தார்கள். இவர்களுக்கு பிரிட்டன் ஆயுதங்களும் பணமும் வழங்கியது. பிரிவினை வாதத்தின் அடிப்படையில் இவர்கள் கலீஃபாவின் அதிகாரத்திற்கு உட்பட்ட இஸ்லாமிய நிலப்பரப்புகளை கைப்பற்றிக் கொள்வதற்கு திட்டம் வகுத்து செயல்பட்டார்கள். அவர்கள் கலீஃபாவுக்கு எதிμõக ஆயுதமேந்தி இஸ்லாமிய இμõணுவத்திற்கு எதிராக போர் செய்தார்கள்! அதாவது அமீருல் மூஃமினீனின் படைகளுக்கு எதிராக போர் செய்தார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ஆயுத தளவாடங்களை வழங்கி இஸ்லாமிய அரசிற்கு எதிராக கலகம் புரிவதற்கு பிரிட்டன் உறுதுணையாக இருந்தது. இஸ்லாமிய அரசின் கீழிருந்த நிலப்பரப்புகளை கைப்பற்றி அவற்றில் வஹ்ஹாபி மத்ஹப் அடிப்படையில் உள்ள ஆட்சியை நிறுவிடவும் தங்கள் மத்ஹபிற்கு முரண்படும் மற்ற மத்ஹபுகளை பலவந்தமாக வீழ்த்திடவும் வஹ்ஹாபிகள் விரும்பினார்கள். இதனடிப்படையில், அவர்கள் கி.பி. 1788ல் குவைத் பகுதியை சூறையாடி அதை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். பிறகு வடக்குமுகமாக முன்னேறி பாக்தாக் நகரை கைப்பற்றிக் கொண்டார்கள். கர்பலாவையும் அதில் அமைந்துள்ள ஹுஸைன் அவர்களின் கபுரையும் கைப்பற்றி, முஸ்லிம்கள் ஜியாரத் செய்வதை தடைசெய்யவும் அதை அழித்துவிடவும் திட்டமிட்டார்கள். இதன்பின்னர் மக்காவின் மீது தாக்குதல் தொடுத்து கி.பி. 1803ல் அதை கைப்பற்றிக் கொண்டார்கள். 





கி.பி. 1804ம் ஆண்டு துவக்கத்தில் மதினா மாநகர் அவர்களின் கைகளில் வீழ்ந்தது. அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறையை நிழலிட்டுக் கொண்டிருந்த பெரும் மண்டபத்தை உடைத்தெறிந்துவிட்டு அதில் பதிக்கப்பட்டிருந்த இரத்தின கற்களையும் பொன் ஆபரணங்களையும் பெயர்த்து எடுத்துவிட்டார்கள். ஹிஜாஸ் பகுதி முழுவதையும் கைப்பற்றிய பின்னர் ஷாமை நோக்கி அவர்கள் படையெடுத்தார்கள். கி.பி. 1810ல் ஹிம்ஸ் பகுதியை நெருங்கியவுடன், இரண்டாம் முறையாக டமாஸ்கஸ் நகரைத் தாக்கியதோடு நஜஃப் பகுதியையும் தாக்கினார்கள். டமாஸ்கஸ் நகரத்தில் நிலைகொண்டிருந்த இஸ்லாமிய இராணுவம் வீரத்துடன் போராடி தன்னை தற்காத்துக் கொண்டது. டமாஸ்கஸ் நகரை கைப்பற்றுவதற்கு தாக்குதல் மேற்கொண்ட வஹ்ஹாபிகள் அதே சமயத்தில் வடக்குமுகமாக முன்னேறி அலிப்போ பிராந்தியம் வரையுள்ள சிரியாவின் பெரும்பாலான பகுதிகளில் தங்கள் அதிகார எல்லையை விரிவாக்கிக்கொண்டார்கள். 





பிரிட்டனின் தூண்டுதலின் அடிப்படையில்தான் வஹ்ஹாபிகள் தங்களின் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்பது தெளிவான உண்மையாகும். ஏனெனில் முஹம்மது இப்னு சவூது பிரிட்டனின் கங்காணியாக இயங்கிவந்தார். வஹ்ஹாபி மத்ஹப் இஸ்லாத்தில் ஒரு மத்ஹபாகவும் அதை உருவாக்கிய முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ஒரு முஜ்தஹிதாகவும் இருந்த காரணத்தால் வஹ்ஹாபிகள் தங்கள் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு அதை தவறாக பிர யோகித்து வந்தார்கள். இஸ்லாமிய அரசிற்கு எதிராக கலகம் செய்யும் தங்களின் அரசியல் செயல்பாடுகளுக்கும், மற்ற மத்ஹபுகளுடன் மோதல் ஏற்படுத்துவதற்கும், பிரிவினைவாதத்தின் அடிப்படையில் உஸ்மானிய அரசுடன் போர் செய்வதற்கும் இந்த மத்ஹபை வஹ்ஹாபிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். வஹ்ஹாபிகளின் இந்த செயல்பாடுகள் குறித்து அந்த மத்ஹபை பின்பற்றி வந்த முஸ்லிம்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் சவூதியின் ஆட்சியாளர்களுக்கும் அதில் வசித்துவந்த அரபு மக்களுக்கும் இது முழுமையாக விளங்கியிருந்தது. ஏனெனில் பிரிட்டன் அரசுக்கும் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபிற்கும் மத்தியில் எந்தவிதமான தொடர்பும் இருந்துவரவில்லை. மாறாக பிரிட்டனுக்கும் அப்துல் அஜீஸ் இப்னு முஹம்மது இப்னு சவூதுக்கும் அதன் பின்னர் அவரது மகன் சவூதுக்கும் நேரடியான உறவு இருந்துவந்தது. ஹன்பலி மத்ஹபை பின்பற்றி வந்த முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பல்வேறு விஷயங்களில் இஜ்திஹாது மேற்கொண்டு வந்தார். இந்த விஷயங்களில் மற்ற மத்ஹபுகளை பின்பற்றி வந்த முஸ்லிம்கள் தன்னுடைய அபிப்பிராயங்களுக்கு முரண்படுவதாக முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் கருதினார். எனவே தனது அபிப்பிராயத்தை நோக்கி அவர் மக்களை அழைக்கத் துவங்கினார்.  தனது அபிப்பிராயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டதோடு மற்ற இஸ்லாமிய அபிப்பிராயங்களை கடுமையாக தாக்கினார். பல்வேறு அறிஞர்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. இஸ்லாமிய பிரதேசத்தின் பல்வேறு அமீர்களும், அறிஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அல்லாஹ்வின் வேதத்திலிருந்தும் அல்லாஹ்வின் தூதரின் சுன்னாவிலிருந்து தாங்கள் விளங்கிக் கொண்டதற்கு முரண்பாடாக முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் அபிப்பிராயங்கள் இருப்பதாக கருதினார்கள். உதாரணமாக, அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறையை ஜியாரத் செய்வது பாவமான செயல் என்றும் ஹராம் என்றும் அவர் கூறிவந்தார். மேலும் எவர் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறையை ஜியாரத் செய்ய பிரயாணம் மேற்கொள்கிறாரோ அவர் தொழுகையில் கஸர் செய்யக்கூடாது; ஏனெனில் ஒரு பாவமான செயலை மேற்கொள்வதற்காக பிரயாணம் மேற்கொள்கிறார் என்று கூறும் அளவுக்கு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் துணிந்தார். அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு ஹதீஸை தனது அபிப்பிராயங்களுக்கு ஆதாரமாக அவர் எடுத்துக் காட்டினார். 



""மூன்று மஸ்ஜிதுகளை தரிசிப்பதற்காக மட்டுமே பிராயாணம் மேற்கொள்ள வேண்டும்; அவை மஸ்ஜிதுன்னபவீ, மஸ்ஜிதுல் ஹரா ம் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகியவையாகும்.''(புஹாரி)



 இந்த மூன்று மஸ்ஜிதுக்கு பிராயாணம் மேற்கொள்வதைத் தவிர்த்து மற்றவைகளுக்கு பிμயாணம் செய்வது ஹராம் என்று இந்த ஹதீஸிலிருந்து முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் விளங்கிக் கொண்டார். ஆகவே ஒருவர் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறையை ஜியாராத் செய்ய பிராயாணம் மேற்கொள்வாரேயானால் அது மூன்று மஸ்ஜிதுகளுக்கு பிராயாணம் மேற்கொள்வதில் அடங்காது என்பதால் அது ஹராமானதும் பாவமான செயலுமாகும் என்று அவர் கூறினார். அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறையை ஜியாராத் செய்வது சுன்னா என்றும் நன்மையான செயல் என்று அதற்கு நற்கூலி உண்டு என்றும் மற்ற மத்ஹபுகள் கூறுகின்றன. 



 அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: ""கடந்த காலத்தில் கப்ருகளை ஜியாராத் செய்வதை நான் தடைசெய்திருந்தேன். ஆனால், இப்போது நீங்கள் கப்ருகளுக்கு சென்று வராலாம்.'' (முஸ்லிம்) 


பொதுவாக மண்ணறைகளுக்கு சென்று வருதல் அனுமதிக்கப் பட்டிருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறைக்கு செல்வது கூடும் என்பதற்கு இந்த ஹதீஸும் மற்ற சில ஹதீஸ்களும் ஆதாராமாக இருக்கின்றன. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் மஸ்ஜிதுகளை தரிசிப்பதற்கு பிரயாணம் மேற்கொள்வது தொடர்பான ஹதீஸை ஆதாராமாக காட்டுகிறார் என்றும் மஸ்ஜிதுகளுக்கு பிராயாணம் செய்தல் என்ற விஷயத்தோடு மட்டும் பொருந்தக் கூடியது என்றும் மற்ற விஷயங்களுக்கு இதை ஆதாராமாக கொள்ள முடியாது என்றும் மற்ற மத்ஹபுகளை பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஸைப் பொறுத்தவரை  பொதுவான ஹதீஸ் அல்ல. மாறாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி கூறும் ஹதீஸாகும். அதாவது, ""மூன்று மஸ்ஜிதுகளை தரிசிப்பதற்கு மட்டுமே பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறும் ஹதீஸ் பியாணம் செய்தல் என்ற விஷயத்தோடு மட்டும் தொடர்புடையது. எனவே இஸ்தான்பூல் நகரத்திலுள்ள அயாஸோஃபியா மஸ்ஜிதையோ அல்லது டமாஸ்கஸ் நகராத்திலுள்ள உமய்யா மஸ்ஜிதையோ தரிசிப்பதற்கு பிராயாணம் மேற்கொள்வது ஹராமாகும். ஏனெனில் இத்தகைய பிரயாணத்தை மேற்கொள்வது மூன்று மஸ்ஜிதுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வரையறை செய்துள்ளார்கள். எனவே வேறெந்த மஸ்ஜிதுகளை தரிசிப்பதற்கு பிரயாணம் மேற்கொள்வது முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வியாபாரம் செய்யும் நோக்கத்துடனோ அல்லது நண்பர்களையும் உறவினர்களையும் சந்திக்கும் நோக்கத்துடனோ அல்லது சுற்றுலா செல்லும் நோக்கத்துடனோ அல்லது இதுபோன்ற எத்தகைய நோக்கங்களுக்காகவோ இந்த இடங்களுக்கு பிராயாணம் மேற்கொள்வதற்கு அனுமதியுண்டு. ஆகவே, மூன்று மஸ்ஜிதுகள் உள்ள இடத்திற்கு அல்லது மற்ற இடங்களுக்கு பிராயாணம் செய்யக்கூடாது என்று திட்டவட்டமான மறுப்பு எதையும் இந்த ஹதீஸ் தெரிவிக்கவில்லை, மாறாக நன்மையை நாடி மூன்று மஸ்ஜிதுகளை தவிர்த்து மற்றவைகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்வதை மட்டுமே இந்த ஹதீஸ் தடைசெய்கிறது. இதுபோலவே முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் அபிப்பிμõயம் குர்ஆன், சுன்னா ஆகியவற்றிலிருந்து தாங்கள் விளங்கிக் கொண்டதற்கு முரண்பாடாக இருப்பதாக மற்ற மத்ஹபுகளை பின்பற்றுகிறவர்கள் எண்ணினார்கள். ஆகவே அவருக்கும் மற்றவர்களுக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்தபோது முஹம்மது அப்துல் வஹ்ஹாப் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 





எனவே, கி.பி. 1740இல் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அன்ஸா கோத்திர மக்களின் ஷேக் அமீர் முஹம்மது இப்னு சவூதிடம் புகலிடம் தேடிக்கொண்டார். அல்திரிய்யாவில் இருந்த உயய்னாவின் ஷேக்கிற்கும் அன்ஸாவின் ஷேக்கான அமீர் முஹம்மது இப்னு சவூதுக்கும் மத்தியில் சமூகமான உறவு இல்லாமல் இருந்து வந்தது. உயய்னாவிலிருந்து ஆறு மணி நேர பயண தூரத்தில் அல்திரிய்யா நகரம் அமைந்திருந்தது. அன்ஸாவின் ஷேக் முஹம்மது இப்னு, சவூத் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாவை நன்முறையில் வரவேற்று உபசரித்தார். அல்திரிய்யா மற்றும் அதனை சூழ்ந்துள்ள பகுதிகளில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தனது அபிப்பிராயங்களையும் சிந்தனைகளையும் பிரச்சாரம் செய்வதற்கு துவங்கினார். குறிப்பிட்ட சில காலத்திற்குப் பின்னர் அவருடைய சிந்தனைகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் ஆதரவு கிடைத்தது. சில ஆதரவாளர்கள் அவருக்கு கிடைத்தார்கள். அன்ஸாவின் ஷேக் அமீர் முஹம்மது இப்னு சவூது இந்த சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் ஆதாரவாளராக மாறினார். கி.பி. 1847ல் அமீர் முஹம்மது இப்னு சவூது, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் சிந்தனைகளையும் அபிப்பிராயங்களையும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தார். மேலும் இந்த சிந்தனைகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் ஆதரவளிப்பதாகவும் உறுதிப்பிராமாணம் செய்தார். இத்தகைய ஒரு கூட்டணியின் அடிப்படையில், வஹ்ஹாபி இயக்கம் உருவாக்கம் பெற்றது. மேலும் பிரச்சாரத்தின் மூலமும் ஆட்சி அதிகாரத்தின் மூலமும் அதற்காக மக்களிடம் அழைப்பு விடுத்து அதன் சட்டங்களை விளக்கிக் கூறினார். அதே வேளையில் தனது அதிகாரத்திற்கு கீழிருக்கும் மக்களிடம் முஹம்மது இப்னு சவூது சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். தஃவாவின் மூலமாகவும் அதிகாரத்தின் மூலமாகவும் வஹ்ஹாபி இயக்கம் அல்திரிய்யாவிலும் அதற்கு அடுத்துள்ள பகுதிகளிலும் பரவியது. அதில் வாழ்ந்து வந்த பல கோத்திரங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். அதே வேளையில் அமீர் முஹம்மது இப்னு சவூதின் அதிகாரமும், இந்த பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டது. இறுதியாக பத்து வருட காலத்தில் அமீர் முஹம்மது இப்னு சவூதின் அதிகாரமும் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் மத்ஹபும் முப்பது சதுர மைல் அளவுக்கு பரவியது. வஹ்ஹாபி இயக்கம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் தஃவா மூலமும் அன்ஸா மக்களின் ஷேக்கான அமீர் முஹம்மது இப்னு சவூதின் அதிகாரத்தின் மூலமும் பரவியபோது இதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை; இதற்கு எதிராக செயல்படவுமில்லை. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபை உயய்னாவை விட்டு வெளியேற்றிய அல் இஹ்ஸாவின் அமீரும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கி.பி. 1757வரை அவர் வஹ்ஹாபி இயக்கத்திற்கு எதிராக தனது படைகளை திரட்டவில்லை. எனினும் அதன் பின்னர் அமீர் முஹம்மது இப்னு சவூது அவரை வெற்றிகொண்டு அவருடைய அதிகாரத்தை கைப்பற்றினார். முடிவாக, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் மத்ஹப் சட்டங்களின் அடிப்படையிலும் முஹம்மது இப்னு சவூத் அதிகாரத்தின் அடிப்படையிலும் நிறுவப்பட்ட அன்ஸா இன மக்களின் ஆட்சி அல்திரிய்யாவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் அல்இஹ்ஸாவிலும் நிறுவப்பட்டது. இவ்வாறாக இந்த பிராந்தியங்களில் வஹ்ஹாபி மத்ஹப் மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அல் இஹ்ஸா ஆட்சியாளருடன் நிகழ்ந்த போரில் அமீர் முஹம்மது இப்னு சவூது வெற்றிபெற்றதால் அவரது அதிகாரம் முறியடிக்கப்பட்டு அவரது நிலப்பரப்புகள் கைப்பற்றப்பட்டன. இந்த தாக்குதலுக்குப் பின்னர் வஹ்ஹாபி இயக்கம் மேலும் பரவாமல் நின்றுபோனது. இதன் பின்னர், அந்த இயக்கம் தொடர்ந்து பரவியதாகவோ அல்லது மேற்கொண்டு எந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டதாகவோ எந்த தகவல்களும் அறியப்படவில்லை. மாறாக அந்த பகுதிக்குள் மட்டும் அந்த இயக்கம் சுருண்டு கிடந்தது. இந்த தருணத்தில் அமீர் முஹம்மது இப்னு சவூத் தனது போர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டதன் விளைவாக இந்த பகுதியின் எல்லைக்குள் வஹ்ஹாபி மத்ஹப் சுருட்டப்பட்டதோடு அந்த இயக்கம் தேக்கத்திற்கும் செயலற்ற நிலைக்கும் உள்ளானது. 





கி.பி. 1765இல் அமீர் முஹம்மது இப்னு சவூது மரணம் எய்தினார். அதன் பின்னர் அன்ஸா கோத்திரத்தின் ஷேக் பதவியை அவரது மகன் அப்துல் அஜீஸ் அடைந்து கொண்டார். அப்துல் அஜீஸ் தனது தந்தையாரின் அடிச்சுவடுகளை பின்பற்றி அவரது அதிகாரத்தின் கீழுள்ள பகுதிகளை ஆட்சிசெய்தார். எனினும் வஹ்ஹாபி இயக்கத்திற்கான எத்தகைய செயல்பாடுகளையும் அவர் மேற்கொள்ள வில்லை என்பதோடு அல்திரிய்யாவை சுற்றியுள்ள பகுதி களில் தனது அதிகாரத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. ஆகவே வஹ்ஹாபி இயக்கம் செயலற்ற நிலையில் இருந்தது. இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தோ அல்லது அது ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தோ அல்லது இந்த கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பு பற்றிய அச்சத்தைக் குறித்தோ எந்த தகவலும் இல்லை. எனினும் வஹ்ஹாபி இயக்கம் தோற்றம் பெற்ற 41 ஆண்டு களுக்கு பின்னர் கி.பி. 1747லிருந்து கி.பி. 1788 வரையுள்ள 31 ஆண்டுகளின் தேக்க நிலைக்குப் பின்னர் திடீரென்று அதன் செயல்பாடுகள் மறுபடியும் துவக்கப்பட்டன. தனது மத்ஹபை பிரச்சாரம் செய்வதற்கு அந்த இயக்கம் ஒரு புதிய வழியைக் கையாண்டது. அந்த இயக்கம் பரவியிருந்த எல்லைகளை தாண்டி இஸ்லாமிய அரசின் அனைத்து நிலப்பரப்புகளையும் மற்ற வல்லரசுகளின் நிலப்பரப்புகளிலும் விரிவான முறையிலும் மிகவும் அழுத்தமான விதத்திலும் மேற்கொள்ளப்பட்ட வலுவான பிரச்சாரத்தின் மூலம் அது அறிமுகப்பட்டது. இதன் விளைவாக அண்டை நிலப்பரப்புகளில் பிரச்சினைகளை தோற்றுவித்ததோடு இஸ்லாமிய அரசின் அனைத்து பகுதிகளிலும் அமைதியின்மையையும் பதட்டத்தையும் இந்த இயக்கம் ஏற்படுத்தியது.






 கி.பி. 1787ல் பரம்பரை வாரிசுமுறையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளு ம் ஆட்சியமைப்பை அப்துல் அஜீஸ் ஏற்படுத்தினார். இதன் மூலம் அப்துல் அஜீஸின் மகன் சவூது ஆட்சி அதிகாμத்தை பெற்றுக் கொள்வதற்கு வழி ஏற்பட்டது. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தலைமையில் ஒரு பெருங்கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் அப்துல் அஜீஸ் உரையாற்றினார். அப்போது ஆட்சியதிகாரம் தனது குடும்பத்திற்கு மட்டும் உரியது என்றும் தனக்குப் பின்னர் ஆட்சியதிகாரத்தை அடைந்து கொள்ளும் உரிமை தனது மகனுக்கு மட்டுமே உரியது என்றும் பிரகடனம் செய்தார். மேலும் தனது மகன் சவூதை ஆட்சியதிகாரத்திற்கு வாரிசாகவும், அவர் பிரகடனப்படுத்தினார். இவ்வாறாக முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் தலைமையில் ஒன்று திரண்டிருந்த இந்த மக்கள் கூட்டம் அப்துல் அஜீஸின் அறிவிப்பை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. எனவே ஒரு கோத்திரத்தின் ஆட்சி தலைமை என்பதைவிட பல்வேறு கோத்திர மக்களை உள்ளடக்கிய ஓர் அரசின் ஆட்சித் தலைமை ஒன்று இங்கு உருவாக்கப்பட்டது. இது குறித்து அறியப்படுவது என்னவென்றால் வஹ்ஹாபி மத்ஹபின் தலைமைத்துவமும் பரம்பரை வாரிசு முறையில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் குடும்பத்தினருக்கு மட்டும் உரியது என்று உறுதி செய்யப்பட்டது. ஆட்சி அதிகாரத்தின் தலைமைத்துவமும் வஹ்ஹாபி மத்ஹபின் தலைமைத்துவமும் பரம்பரை வாரிசுரிமையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து இந்த இயக்கம் தனது செயல்பாடுகளை மறுபடியும் துவக்கியது. ஆக்கிரமிப்புகளும் ஆட்சி எல்லைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. வஹ்ஹாபி மத்ஹபை பரப்புவதற்கு இந்த போர்கள் மேற்கொள்ளப்பட்டன. கி.பி. 1788ல் அப்துல் அஜீஸ் பெரும் இராணுவ தாக்குதலை மேற்கொள்வதற்காக ஆயுதங்களையும் போர்ப்படைகளையும் பெருமளவில் தயார் செய்தார். குவைத் மீது தாக்குதல் தொடுத்து அதை கைப்பற்றினார். உஸ்மானிய பேரரசின் அதிகாரத்திலிருந்துவந்த குவைத்தை கைப்பற்றுவதற்கு பிரிட்டன் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. ஜெர்மனி, ரஷ்யா மற்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் கடுமையாக எதிர்த்ததாலும் கிலாஃபா அரசு எதிரிகளுக்கு எதிராக கடுமையான தற்காப்பு யுத்தம் மேற்கொண்டதாலும் பிரிட்டனால் குவைத்தை கைப்பற்ற இயலவில்லை. இவ்வாறாக வஹ்ஹாபிகள் உஸ்மானிய கிலாஃபத்தின் அதிகாரத்திலிருந்து குவைத்தை துண்டித்து வடக்கு எல்லையில் தனது பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டார்கள். வஹ்ஹாபிகள் அடைந்த இந்த வெற்றி குறித்து உஸ்மானிய அரசும் மேற்கத்திய அரசுகளும் மிகுந்த ஆச்சரியம் கொண்டன. வஹ்ஹாபிகள் மேற்கொண்ட இந்த யுத்தங்கள் ஆன்மீக எழுச்சி போன்ற தோற்றத்தை பெற்றிருந்தாலும் உண்மையாக அவை இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டன. பல ஆண்டுகள் செயலற்ற நிலையிலிருந்த வஹ்ஹாபிகள் திடீரென்று தங்கள் செயல்பாடுகளை துவக்கியதன் பின்னணி இதுதான். அவர்கள் மற்ற மத்ஹபுகளை அகற்றிவிட்டு வஹ்ஹாபி மத்ஹபை நிலைநாட்டுவதற்காக போர் மூலம் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டார்கள். அதிகாரத்தின் மூலமாக தங்கள் மத்ஹபை நிலைநாட்டுவதற்கு முயன்றார்கள். குவைத்தை தாக்கி அதை ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்து தங்கள் செயல்பாடுகளை அவர்கள் துவக்கினார்கள். இதன் பின்னர் இதுபோன்ற பல்வேறு ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டார்கள். இதனடிப்படையில் அண்டைநிலை பரப்புகளிலும் அராபிய தீபகற்பத்திலும், ஷாம் மற்றும் ஈராக் போன்ற பகுதிகளிலுள்ள உஸ்மானிய கிலாஃபத்தின் நிலப்பரப்புகளிலும் பெரும் தொல்லைகளையும் பெரும் துயரங்களையும் ஏற்படுத்தி வந்தார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக போர் புரிவதற்காகவும் தங்கள் மத்ஹபைத் தவிர்த்து மற்ற மத்ஹபுகளை பின்பற்றும் முஸ்லிம்களை தடுப்பதற்காகவும் தங்கள் வாட்களை சுழற்றினார்கள். கலீஃபாவுடன் போர் செய்து வஹ்ஹாபிகள் இஸ்லாமிய நிலப்பரப்புகளை கைப்பற்றிக் கொண்டார்கள். கி.பி. 1792ல் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் மரணமடைந்தபோது தனது தந்தை அப்துல் அஜீஸின் ஆட்சியதிகாரத்தை அவரது மகன் சவூது எவ்வாறு அடைந்து கொண்டாரோ அதே முறையில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் மகன், வஹ்ஹாபி மத்ஹபின் தலைமைப் பதவியை அடைந்து கொண்டார். இதன்பின்னர் சவூதி ஆட்சியாளர்கள் உஸ்மானிய கிலாஃபா அரசை தாக்கும் ஆயுதமாகவும் முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைவாத போர்களை தூண்டும் கருவியாகவும் வஹ்ஹாபி மத்ஹபை ஆக்கிக்கொண்டு தங்கள் ஆட்சிப்பயணத்தை தொடர்ந்தார்கள்.


தொடரும்...

3 comments:

  1. assalamu alaikkum varah bro....very good article bro....na intha site yel ulla thagavalkaiya paditha peraku ennathu blogspot yel use panni varikerigan bro...na intha thagavalgai use pannalama bro???

    ungal pani serapaga amaiya allah(swt) arul purivanaga!!! ammeen....insha allah khilafah samathappata maylum neriya thogudhu tharavam......

    ReplyDelete
  2. Salam brother, Jazakallah for your comment and you are most welcome to use the materials for the purpose of Dawah.

    ReplyDelete
  3. WA ALAIKKUM SALAM VARAH, JAZAKALLAHAIR BRO...YA IM ONLY FOR DAWAH... BCOZ RIGHT NOW OUR UMMAH NEED FOR POLITICAL CHANGES..WHAT IS REAL ISALAM AND WHAT ABOUT REAL POLITICAL..IT IS WAY OF LIGHT OF AL QURAN AND OUR PROPHET MOHAMMAD (SAL) SUNNAH.....BRO THIS IS MY SITE NASHRUMINALLAH.BLOGSPOT.COM..PLZ VISIT AND GIVE UR COMMENTS BRO......

    WASALAM

    NASICK.S

    ReplyDelete