'கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது' என்பதை மிக ஆழமாக ஆராயும், காலம் சென்ற பலஸ்தீனிய அறிஞர் அஷ் ஷேக் அப்துல் கதீம் ஸல்லும் (ரஹ்) எழுதிய 'கைப குதிமத்துல் கிலாஃபா' என்ற அரபு நூலின் தமிழாக்கத்தை இங்கே பகுதி பகுதியாக வழங்குகிறோம்!
இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் இடையிலான போராட்டம்
இஸ்லாம் அருளப்பட்ட நாளிலிருந்து இஸ்லாமிய சிந்தனை களுக்கும் குஃப்ர் சிந்தனைகளுக்கும் மத்தியிலும் முஸ்லிம்களுக்கும் காஃபிர்களுக்கும் மத்தியிலும் போராட்டம் உருவாகிவிட்டது. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அனுப்பப்பட்ட துவக்க காலத்தில் இந்த போராட்டம் அறிவார்ந்த போட்டமாகவே (Intellectual struggle) இருந்து வந்தது. அதில் எத்தகைய ஆயுத போராட்டமும் இடம் பெறவில்லை. மதினா மாநகரில் இஸ்லாமிய அரசு நிறுவப் படும் வரை இத்தகைய சூழலே நீடித்து வந்தது. இஸ்லாமிய அரசு நிறுவப்பட்ட பின்னர் இராணுவமும் அதிகார அமைப்பும் உரு வாக்கப்பட்டன. அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அறிவார்ந்த போராட்டத்தை ஆயுதபோரட்டத்துடன் இணைத் தார்கள். இதைத் தொடர்ந்து ஜிஹாது தொடர்பான வசனங்கள் அருளப்பட்டன. காஃபிர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் போராட் டமும் தொடர்ந்தது. அறிவார்ந்த போராட்டத்துடன் இணைந்த இந்த இரத்தம் சிந்தும் ஆயுத போராட்டம் கியாமநாள் வரை தொடர்ந்து நடைபெறும் என்று அல்லாஹ்வின் தூதர் அறிவித் திருக்கிறார்கள். அந்த நாள் வரும்போது அல்லாஹ் பூமியையும் அதில் வசிப்பவர்களையும் சுவீகரித்துக் கொள்வான். இதன் காரணமாகத்தான் குஃபர் என்பது இஸ்லாத்தின் கடும்பகையாக இருந்து வருகிறது! இவ்வாறே இந்த உலகத்தில் குஃபர் இருக்கும் வரை காஃபிர்கள் முஸ்லிம்களுக்கு எதிரியாகவே இருந்து வருவார்கள்! மறுமை நாள் வரும் வரை முஸ்லிம்களுக்கும் காஃபிர் களுக்கும் இடையில் நடக்கும் இந்த போராட்டம் தொடர்ந்துகொண்டேயிருக்கும்! இது திட்டவட்டமானதும், என்றும் மாறாதது மான சத்தியமாகும். எனவே இந்த கருத்து எப்போதும் முஸ்லிம் களின் உள்ளத்தில் தெளிவாக நிலைத்திருக்க வேண்டும், மேலும் இந்த அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் இடையிலுள்ள உறவும் முஸ்லிம்களுக்கும் காஃபிர் களுக்கும் இடையிலுள்ள உறவும் தீர்மானிக்கப்பட வேண்டும்.
கடுமையும் உக்கிரமும் நிறைந்த திட்டவட்டமான அறிவார்ந்த போராட்டம் பதிமூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. இஸ்லாமிய சிந்தனைகளுக்கும் குஃப்ர் சிந்தனைகளுக்கும் மத்தியில் நடந்த இந்த கடுமையான போராட்டத்தில் இஸ்லாமிய சிந்தனைகள் வெற்றிபெற்றதன் விளைவாக அல்லாஹ் இஸ்லாத்திற்கு வெற்றியளித்தான். முஸ்லிம்களை பாதுகாக்கக்கூடியதும், இஸ்லாத் தின் பாதுகாப்பு கேடயமாக இருக்கக் கூடியதும், ஜிஹாது மூலமாக மக்களுக்கு நேர்வழியை காட்டுவதற்கு ஆற்றல் கொண்டதுமான ஓர் அரசு மதினாவில் நிறுவப்பட்டது. அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர்ச்சி யான யுத்தங்களில் இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் மத்தியிலும் முஸ்லிம்களின் படைகளுக்கும் காஃபிர்களின் படைகளுக்கும் மத்தி யிலும் உக்கிரமான போர்கள் நிகழ்த்தப்பட்டன. அனைத்து போர் களிலும் முஸ்லிம்கள் வெற்றியை தக்கவைத்துக் கொண்டனர். சில யுத்தங்களில் முஸ்லிம்களுக்கு பின்னடைவு ஏற்பட்டபோதிலும் எப்போதும் போர்க்களத்தில் முஸ்லிம்களே வெற்றிவாகை சூடி னார்கள். ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்கள் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டினார்கள்.
இந்த காலகட்டத்தில் இஸ்லாமிய அரசு முன்னணி அரசாகவும் முஸ்லிம்கள் உலகின் முன்னணி சமுதாயமாகவும் திகழ்ந்து வந்தார்கள். மானுட வரலாற்றில் முஸ்லிம்கள் நீங்கலாக வேறெந்த சமுதாயமும் இத்தகைய ஒரு மாபெரும் வெற்றியை அடைந்திட வில்லை. மாறாக இந்த ஒப்பற்ற வெற்றி இஸ்லாமிய அரசிற்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. எனினும் காஃபிர்கள் குறிப்பாக ஐரோப்பிய ஆட்சியாளர்களாக இருந்துவந்தவர்கள் இஸ்லாத்தின் இந்த வெற்றியை நோட்டமிட்டு வந்தார்கள். ஏனெனில் இஸ்லாத்தை தாக்கி அழித்துவிட அவர்கள் சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்கள் குறித்து காஃபிர்கள் தங்கள் நெஞ்சங்களில் வஞ்சக எண்ணம் கொண்டிருந்தார்கள், ஏனெனில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் எழுச்சியையும் அவர்கள் பெரும் அச்சுறுத்தலாகவே கருதினார்கள். ஆகவே
முஸ்லிம்களை சுவடுதெரியாமல் அழித்துவிட அவர்கள் விரும்பி னார்கள். வாய்ப்புகள் கிடைத்தபோதெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் தொகுப்பதிலும் இஸ்லாத்திற்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டுவதிலும் அவர்கள் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்கள்.
ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்திலும் (கி.பி. பதினோராம் நூற்றாண்டு) ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டின் துவக்கத் திலும் இஸ்லாமிய அரசின் மாகாணங்களில் (Wilayah) பிளவு ஏற்பட்டிருந்த நிலையையும், உள்விவகாரக் கொள்கை, நிதியியல், இராணுவம் மற்றும் அதிகாரம் ஆகிய விஷயங்களில் சில முக்கிய பிராந்தியங்களிலும் மாகாண ஆளுநர்கள் தன்னிச்சையாக செயல் பட்டு வந்த நிலையையும் காஃபிர்கள் கண்ணுற்றார்கள். ஒருமைத் துவம் கொண்ட அரசாக (Unitary state) இல்லாமல் கூட்டாட்சி முறையில் (Federal state) இயங்கும் அரசு போன்றே இஸ்லாமிய அரசு இயங்கிவந்து. மிம்பர்களில் நின்றவாறு கலீஃபாக்களுக்காக துஆ மேற்கொள்வது, கலீஃபாவின் பெயர் பொறித்த நாணயங்களை அச்சிடுவது மற்றும் கராஜ் நிதியின் ஒரு பகுதியை கலீஃபாவுக்கு அனுப்புவது போன்ற சில சம்பிதாயங்களை மட்டும் மாகாண ஆளுநர்கள் பின்பற்றுவது என்ற நிலைக்கு கலீஃபாவின் அதிகாரம் சுருட்டப்பட்டது. இந்த நிலையை கண்ணுற்ற ஐரோப்பிய அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராக சிலுவை யுத்தக்காரர்களை அனுப்பி கடும்போர் தொடுத்தன. கடுமையாக நடந்த இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் தோல்வியை தழுவினார்கள். பாலஸ்தீனம், லெபனான் மற்றும் சிரியா ஆகியவை அடங்கிய ஷாம் பிராந்தியத்தை காஃபிர்கள் கைப்பற்றினார்கள். இந்த பிராந்தியத்தை அவர்கள் பல ஆண்டுகளுக்கு தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். திரிபோலி என்ற பகுதியை ஒரு நூற்றாண்டிற்கு மேலாக தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருந்தார்கள்.
முஸ்லிம்களுக்கும் சிலுவையுத்தக்காரார்களுக்கும் மத்தியில் நடைபெற்ற யுத்தங்கள் ஒரு நூற்றாண்டு காலம் நடைபெற்று வந்தது. காஃபிர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீட்பதற்கு கடுமை யான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், இந்த யுத்தத்தின் விளைவாக முஸ்லிம் உம்மா குழப்பமான நிலையையே எதிர் கொள்ள நேரிட்டது. மேலும் இஸ்லாமிய அரசின் அந்தஸ்தை இந்தயுத்தம் வெகுவாக குறைத்துவிட்டது. இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் தோல்வியை தழுவினார்கள். அவர்கள் மீது காஃபிர்கள் தங்கள் வெற்றியை நிலைநாட்டினார்கள். இந்த யுத்தத்தில் காஃபிர்கள் திட்டவட்டமான வெற்றியை நிலைநாட்டினார்கள். இஸ்லாத்திற்கு எதிராக காஃபிர்கள் அறிவார்ந்த முறையிலோ அல்லது ஆன்மீக ரீதியாகவோ வெற்றி பெறுதல் என்பது ஒருபோதும் நிகழமுடியாது என்றபோதிலும் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு இழிவும் தலைக்குனிவும் முஸ்லிம்கள் மீது விழுந்தன. சிலுவை யுத்தங்களின் இறுதிக் கட்டத்தில் ஷாம் பிராந்தியத்தில் இருந்து காஃபிர்களை விட்டியடிப்பதில் வெற்றி கண்ட போதிலும் சிலுவை யுத்தம் நடந்த காலகட்டம் முஸ்லிம்கள் தோல்வியுற்ற காலகட்டமாகவே கருதப்படுகிறது. ஏனெனில், காஃபிர்களுடன் நிகழ்ந்த சிலுவை யுத்தத்தை முஸ்லிம்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் சிலுவை யுத்தம் முடிந்த உடனேயே மங்கோலியர்களின் படையெடுப்பும் பாக்தாத் நகரில் அவர்கள் நிகழ்த்திய படுகொலை சம்பங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இந்த பின்னடை வின் தொடர்ச்சியாக அதே வருடத்தில் (ஹிஜ்ரி 656, கி.பி. 1258) டமாஸ்கஸ் நகம் மங்கோலியர்களின் கைகளில் வீழ்ந்தது. இதன் பின்னர் (ஹிஜ்ரி 658, கி.பி. 1260) செப்டம்பர் 3ல் அய்ன் ஜாலூத் யுத்தம் நிகழ்ந்தது. அதில் மங்கோலியர்கள் முறியடிக்கப்பட்டனர். மங்கோலியர்களுக்கு எதிராக பெற்ற மாபெரும் வெற்றியின் காராணமாக முஸ்லிம்கள் உள்ளத்தில் பெரும் எழுச்சி தோன்றியது. அவர்கள் சிந்தனையில் ஜிஹாது பற்றிய புத்துணர்வு எழுந்து அலைமோதியது. உலகமெங்கும் இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்து கொண் டார்கள். எனவே, ஜிஹாதின் வழியிலான முஸ்லிம்களின் வெற்றிப் பயணம் மீண்டும் தொடர்ந்தது. பைஸாந்திய பேரரசிற்கு எதிரான ஜிஹாது மறுபடியும் தொடர்ந்தது. அடுத்தடுத்து யுத்தங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம்கள் வெற்றிக்குமேல் வெற்றியை ஈட்டினார்கள். ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டு வாக்கில் முஸ்லிம் உம்மா மறுபடியும் ஜிஹாது என்ற வெற்றிப் பயணத்தை தொடங்கியது; தொடர்ச்சியாக பல யுத்தங்கள் நிகழ்ந்தன. சில தருணங்களில் முஸ்லிம்கள் பின்னடைவு எய்தியபோதிலும் எப்போதும் அவர்களே வெற்றி வீரர்களாக திகழ்ந்தார்கள். பல யுத்தங்களில் வெற்றியை ஈட்டியதன் மூலமாக பல நிலப்பரப்புக்களை முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். ஹிஜ்ரி 12ம் நூற்றாண்டு (கி.பி. 18ஆம் நூற்றாண்டு) வரை அது உலகின் முன்னணி அந்தஸ்து பெற்ற மாபெரும் வல்லரசாக விளங்கியது!
பிற்காலத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த மாற்றங்கள் முஸ்லிம் உம்மத்தில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தின. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சி (Industrial revolution) உலக நாடுகளில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின. தொழிற்புரட்சியால் விளைந்த தாக்கங்களின் முடிவாக முஸ்லிம்கள் குழப்பம் அடைந்து செயலற்றுப் போகும் நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக உலக நாடுகளின் அரசியல் அணிகளிலும் அவற்றின் பலத்திலும் மாற்றம் ஏற்பட்டு இஸ்லாமிய அசு தனது உயர்ந்த நிலையிலிருந்து சிறிது சிறிதாக வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டது! இறுதியாக, ஐராரோப்பியர்களின் கட்டுக்கடங்காத பேராசைகளுக்கு இரையாகிப் போகும் கொள்ளைப் பொருளாக மாறி அழிவை எதிர்கொண்டது! இதன்விளைவாக இஸ்லாமிய அரசு வெற்றிகொண்ட நிலப்பரப்புகளையும் ஏற்கனவே அதன் அதிகாரத்தில் இருந்துவந்த நிலப்பரப்பு களையும் காஃபிர்களிடம் விட்டுவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இஸ்லாமிய அரசின் நிலப்பரப்புகளை காஃபிர்கள் சிறிதுசிறிதாக ஆக்கிரமித்தார்கள்.
இஸ்லாமிய அரசு பலவீனம் அடைந்துவிட்டதைவும் முஸ்லிம் களின் எழுச்சி முற்றாக முடிந்துபோய்விட்டதையும் இந்நிகழ்ச்சி உறுதிப்படுத்தியது! அதன் பின்னர் இஸ்லாமிய அரசை சர்வதேச அரசியல் அரங்கிலிருந்து முழுமையாக நீக்குவதற்கும் அதன் மூலமாக மக்களின் வாழ்க்கை விவகாரங்களிலிருந்து இஸ்லாத்தை அகற்றுவதற்கும், ஐரோப்பிய அரசுகள் திட்டம் தீட்டி செயல் பட்டன. வேறு வகையில் கூறுவதென்றால் முஸ்லிம்களின் மீது புதிய சிலுவையுத்தத்தை துவக்குவதற்கு ஐரோப்பியர்கள் திட்டம் வகுத்தார்கள்! எனிலும் முதல் சிலுவை யுத்தம் போல அல்லாமல் முஸ்லிம்களின் மீது போர் தொடுப்பது மற்றும் இஸ்லாமிய அரசை வெற்றி கொள்வது ஆகிய நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு பல வஞ்சக நோக்கங்களுடன் புதிய சிலுவை யுத்தம் தொடுக்கப்பட்டது. இந்த சிலுவை யுத்தத்தின் பின்னணியில் படுபயங்கரமான நோக்கங்களும் ஆழமான சதித்திட்டங்களும் இடம்பெற்றிருந்ததால் அதன் விளைவு மிக ஆழமானதாகவும் தீவிரமானதாகவும் இருந்தது. இஸ்லாமிய அரசை முற்றாக வீழ்த்தி அதன் ஆழமான வேர்களை அடிச்சுவடு தெரியாமல் அழித்துவிடுவது புதிய சிலுவையுத்தத்தின் நோக்கமாக இருந்தது. மேலும் சில புரோகித சம்பிரதாயங்களையும் ஆன்மீக சடங்குகளையும் தவிர்த்து இஸ்லாத்தின் வேறொன்று மில்லை என்ற சிந்தனையை உருவாக்குவதன் மூலம் முஸ்லிம்களின் உள்ளங்களிலிருந்து இஸ்லாத்தை வேரோடு பிடுங்கி எறிந்து
விடுவது புதிய சிலுவை யுத்தக்காரர்களின் நோக்கமாக இருந்தது.
No comments:
Post a Comment