Wednesday, July 15, 2009

வீழ்ந்தும் எழுவோம்!

உலக வரலாற்றில் எத்தனையோ பேரரசுகள் எழுந்து வீழ்ந்திருக்கின்றன; எத்தனையோ சமுதாயங்கள் உயர்ந்து உச்சத்தை அடைந்த வேகத்தில் பின்னடைவு எய்தியிருக்கின்றன, ஆனால் கி,பி, எட்டாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தில் தோன்றிய இஸ்லாமிய பேரரசு பல்வேறு கோணங்களில் வரலாற்றில் தனித்துவம் பெற்றதாக இருந்ததுபோல இஸ்லாமிய பேரரசின் சிற்பிகளாக விளங்கிய முஸ்லிம் சமுதாயமும் உலகில் தோன்றிய சமுதாயங்களில் தனித்துவம் பெற்ற சமுதாயமாக விளங்குகிறது.

பாலைவன பொட்டல் பூமியான அரேபிய தீபகற்பத்தில் அறியாமையின் அடர்ந்த இருளில் வாழ்ந்து கொண்டிருந்த அரபு மக்களிடம் இஸ்லாம் மறுமலர்ச்சியை கொண்டுவந்தது. இஸ்லாத்தின் ஒளியில் சீர்திருத்தம் அடைந்த அந்த மக்கள் மாபெரும் வீரர்களாகவும் மகத்தான அரசியல் விற்பன்னர்களாகவும் ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் தேர்ந்த ஈடு இணையற்ற உத்தமர்களாகவும் உயர்ந்து நின்றார்கள், இஸ்லாம் என்ற தீபத்தை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) முஸ்லிம்களிடம் ஒப்படைத்த நிலையில் ஹிஜ்ரி 13 ஆம் ஆண்டில் இவ்வுலகைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள், இஸ்லாத்தின் நுட்பங்களை அல்லாஹ்வின் தூதரிடமிருந்து(ஸல்) துல்லியமாக கற்றிருந்த முஸ்லிம்கள் அந்த இக்கட்டான சூழலில் விவேகமாக செயல்பட்டு அபூபக்கரை(ரலி) உம்மாவின் தலைவராக அதாவது கலீ*பாவாக தேர்வுசெய்தார்கள், இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகள். எதிர்ப்புகள். குழப்பங்கள். சதித்திட்டங்கள் ஆகியவற்றை அபூபக்கரின்(ரலி) தலைமையில் நின்று போராடி வெற்றி பெற்றார்கள், அன்று தொடங்கிய முஸ்லிம் உம்மாவின் வெற்றிப்பயணம் பதிமூன்று நூற்றாண்டுகள் தொடர்ந்து கொண்டிருந்தது, இஸ்லாத்தின் எதிரிகள் பின்னிய சதித்திட்டங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சிகள், வஞ்சக நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் முறியடித்து இஸ்லாமிய அரசு என்ற அரணின் பாதுகாப்பில் இந்த உம்மா வெற்றிநடை போட்டது, அவ்வப்போது சிறு குழப்பங்களும் பின்னடைவுகளும் ஏற்பட்டபோதும் அவற்றையெல்லாம் சீர்படுத்தி உலகின் முன்னணி சமுதாயமாக விளங்கியது, இந்நிலையில் முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாகவும் அவர்களை ஓரணியில் வழிநடத்திச் செல்லும் தலைமை கேந்திரமாகவும் விளங்கிய கிலா*பா எனும் இஸ்லாமியஅரசு 1924 ல் எதிரிகளின் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் முஸ்லிம் உம்மா சிதறடிக்கப்பட்டது. கிலா*பா அழிக்கப்பட்டு 85 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

ஓராயிரம் ஆண்டுகள் எதிரிகள் மேற்கொண்ட சூழ்ச்சிகள். இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் தீட்டிய சதித்திட்டங்கள். நயவஞ்சகர்களாக விளங்கிய முஸ்லிம் பெயர்தாங்கிகளின் துரோகம். சுயநலமிக்க ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம். உஸ்மானிய கிலா*பத்திற்கு எதிரான அரபுமக்களின் துவேஷம் இவையெல்லாம் கிலா*பா உடைந்துபோனதற்கு சில காரணங்கள் என்றபோதும் அதைவிட முக்கிய காரணிகள் சில இருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், முஸ்லிம் உம்மாவை மறுமலர்ச்சிக்கு இட்டுச்செல்வதை இலக்காக கொண்டு செயலாற்றும் விழிப்புணர்வு பெற்ற முஸ்லிம்கள் நிச்சயம் இவற்றை அறிந்துகொள்ள வேண்டும், அதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு படிப்பினை பெறவேண்டும், நம் முன்னோர்களான முஸ்லிம்களை குறைசொல்வதோ அல்லது குற்றம் பிடிப்பதோ நமது நோக்கமல்ல என்பதை தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம், அல்லாஹ(சுபு) அருள்மறை குர்ஆனில் முஸ்லிம்கள் படிப்பினை பெறும்பொருட்டு பல நபிமார்களின் வரலாறுகளை சொல்லிக் காட்டுகிறான். அதுபோன்று நாம் நமது முன்னோர்களான முஸ்லிம்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அதனை ஆய்வு செய்யவேண்டும், கடந்தகால தவறுகள் களைந்தெறியப்பட்ட புதிய சமுதாயம் ஒன்றை நிறுவி மறுபடியும் இஸ்லாத்தின் மகத்துவத்தை நிலைநிறுத்தவேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டவர்களுக்கு இத்தகைய ஆய்வுகள் நிச்சயம் தேவை.

அல்லாஹ்(சுபு) அருளிய சத்திய மார்க்கம் மேலோங்கவேண்டும். முஸ்லிம்கள் மறுபடியும் முழுமையான இஸ்லாமிய வாழ்க்கைமுறைக்கு திரும்பவேண்டும். இஸ்லாமியஅரசின் சீரிய தலைமையில் முஸ்லிம்கள் மறுபடியும் அணிவகுத்து நின்று அல்லாஹ்(சுபு) வழங்கிய இந்த மகத்தான செய்தியை(இஸ்லாத்தை) உலகின் கடைசி மனிதனுக்கும் எடுத்துச்சென்று மனித இனத்தை கு*ப்ரின் இருளிலிருந்து மீட்டு இஸ்லாத்தின் ரஹ்மாவிற்குள் கொண்டுவரவேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் இலட்சியம்.

முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்(சுபு) இஸ்லாத்தின் செய்தியை அறிவித்த அந்த தருணத்திலிருந்தே இஸ்லாத்திற்கும் அதனை பின்பற்றும் முஸ்லிம்களுக்கும் எதிரிகள் உருவாகிவிட்டார்கள், சந்தர்ப்பவாதிகள் நயவஞ்சகர்கள் உலக ஆதாயவாதிகள் ஆகியோர் முஸ்லிம்கள் மத்தியில் கலந்து இருந்துகொண்டு அவர்களின் துரோக செயல்களை அவ்வப்போது அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள், இஸ்லாத்தின் கொடிய எதிரிகள் தங்கள் செல்வங்களையும் ஆற்றல்களையும் மதிநுட்பங்களையும் ஒன்றிணைத்து முஸ்லிம் உம்மாவிற்கு எதிராக கடும்போரிட்டபோதும் அவர்களால் முஸ்லிம்களை முறியடிக்க முடியவில்லைõ அல்லாஹ்(சுபு) அவர்களின் திட்டங்களை சிலந்தி வலையாக ஆக்கினான் அவற்றை முஸ்லிம்கள் அறுத்து எரிந்துவிட்டார்கள், முஸ்லிம்கள் அல்லாஹ்(சுபு) மீதும் அவனுடையதூதர்(ஸல்) மீதும் இஸ்லாத்தின் மீதும் அசைக்க முடியாத ஆழமான ஈமான் கொண்டிருந்தவரையில் அவர்கள் வெல்ல முடியாத சமுதாயமாகவே விளங்கினார்கள், ஆனால் ஹிஜ்ரி எட்டாம் நூற்றாண்டு வாக்கில் சறுக்குதல் ஏற்பட்டது, இந்தியா. பாரசீகம். கிரேக்கம் ஆகிய நாடுகளின் கு*ப்ர் சிந்தனைகளான அந்நிய சிந்தனைகளில் கவர்ச்சியுற்று அவற்றை பயிலவும் அரபுமொழியில் அவற்றை மொழியாக்கம் செய்யவும் முற்பட்டார்கள், தொழிற்புரட்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வியந்து பாராட்டியவர்களாக மதிமயங்கி நின்றார்கள், ஐரோப்பிய மக்கள்மீதும் அவர்கள் கலாச்சாரத்தின்மீதும் அவர்களின் கல்விமுறையின் மீதும் கவர்ச்சிகொள்ள துவங்கினார்கள், இதன்விளைவாக இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்படுகின்ற அந்நியகலாச்சாரம் இஸ்லாமிய மண்ணில் நுழைந்தது. கு*ப்ரான அந்நிய சிந்தனைகள் முஸ்லிம்களின் நெஞ்சங்களை ஆட்கொண்டன, சிறந்த சமுதாயமாக இருந்து உலகமக்களை வழிநடத்திச் சென்ற முஸ்லிம் உம்மா தனது சிறப்பை மறந்து தனது கடமையைத் துறந்து தனது பாதையை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தது. அன்று தொடங்கிய இந்த உம்மாவின் வீழ்ச்சி இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகமக்களை அநீதியிலிருந்தும் அச்சுறுத்தல்களிலிருந்தும் பாரசீக உரோம கொடுங்கோல் ஆதிக்கத்திலிருந்தும் மீட்டு அவர்களுக்கு வாழ்வளித்த இந்த சமுதாயம் இன்று தன்னையே பாதுகாத்துக் கொள்ள முடியாமல் தடம்புரண்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறது, என்றாலும்.இந்த உம்மாவிற்கு அல்லாஹ்(சுபு) அளித்துள்ள வாக்குறுதியும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அறிவிப்பு செய்திருக்கும் நற்செய்தியும் நம்பிக்கை ஒளியாக நம் கண்முன்னே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

وَعَدَ اللَّهُ الَّذِينَ آَمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا
உங்களில் எவர் ஈமான்கொண்டு நற்செயல் புரிகிறார்களோ அவர்களை அவர்களுக்கு முன்பிருந்தவர்களை ஆக்கிவைத்ததுபோல் பூமிக்கு ஆட்சியாளர்களாக ஆக்கிவைப்பதாகவும் இன்னும் அவன் அவர்களுக்கு பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைபடுத்துவதாகவும் அவர்களுடைய அச்சத்திற்கு பதிலாக அமைதியைக்கொண்டு மாற்றித் தருவதாகவும் அல்லாஹ் வாக்களித்திருக்கிறான், (அந்நூர் 24:55)
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
உங்கள் தீனின் துவக்கம் நபித்துவமாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கும். பிறகு நபித்துவத்தின் அடிச்சுவட்டில் நடக்கும் கிலா*பாகவும் இருக்கும்........... பிறகு நபித்துவத்தின் அடிச்சுவட்டில் மீண்டும் கிலா*பா ஏற்படும். (அஹ்மது)
சிதறுண்டு கிடக்கும் முஸ்லிம்களை ஒன்றிணைத்து அவர்களின் கடந்தகால மகத்துவமிக்க நிலைக்கு இட்டுச் செல்வதற்கும் அவர்களிடம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி நபித்துவத்தின் அடிச்சுவட்டில் மீண்டும் கிலா*பாவை நிறுவுவதற்கும் இஸ்லாத்தின் மகத்தான செய்தியை உலகெங்கிலும் எடுத்துச்செல்வதற்கும் உம்மாவின் விழிப்புணர்வு பெற்ற அதன் வீரப்புதல்வர்கள் ஆர்ப்பரித்து எழுந்துவிட்டார்கள். இஸ்லாத்தின் சங்கநாதத்தை ஓங்கி ஒலித்தவர்களாக அணிவகுத்து நின்றுவிட்டார்கள். விடியலின் வெளிச்சம் மெல்ல மெல்ல எழுந்து உயர்ந்துகொண்டிருக்கிறது. அல்லாஹ்(சுபு) மீதும் இஸ்லாத்தின்மீதும் முஸ்லிம் உம்மா கொண்டுள்ள ஈமான் துருப்பிடித்த இரும்பல்ல அது நீறுபூத்த நெருப்பு என்பதை அகிலத்தார் அறிந்துகொள்ளும் அந்தநாள் தொலைவில் இல்லை.

Wednesday, July 8, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 10

ஒரு முஸ்லிமின் தேசியமும் அவனது இறை நம்பிக்கையும்

இஸ்லாம் மனிதர்களுக்கு மகத்தானதோர் வாழ்க்கை வழிகாட்டுதலை வழங்கிற்று. பண்பாடு நாகரிகம் அறிவியல் அத்தனையிலும் அது நேரானதோர் பாதையைப் போட்டுத்தந்தது. அதேபோல் இஸ்லாம் புதியதோர் மனித உறவையும் உறவின் முறையையும் வழங்கிற்று. இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் படி அனைத்து உறவுகளும் பிணைப்புகளும் அல்லாஹ்விடமிருந்து வருவதே. இஸ்லாம் மனிதர்களை அவர்களின் தான்தோன்றித்தனங்களிலிருந்து விடுவித்து இறைவனின் பக்கம் திருப்பிட வந்த மகத்தான மார்க்கம். இறைவன் ஒருவனே அவனே அனைத்தையும் படைத்து உணவளித்து வருகின்றான். அவனே பாதுகாவலன் அவனிடமிருந்தே வந்தோம். அவனிடமே மீண்டும் கொண்டு சேர்க்கப்படுவோம். இறைவன்மேல் கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் எழும் உறவை அழுத்தம் திருத்தமாக நிலைநாட்ட விரும்புகின்றது இஸ்லாம். ஏனைய உறவுகள் எல்லாம் இந்த உறவுக்கு முன் செல்லாக் காசாகி விடுகின்றன. இரத்த பந்தம் அல்லது இதர உறவுகள் என்பனவெல்லாம் அல்லாஹ்வின் அடிமைகள் என்ற இந்த உறவுக்கு முன் செயலிழந்தவையே. அல்லாஹ் கூறுகின்றான் :


(நபியே) எந்த ஜனங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் (மெய்யாகவே) விசுவாசங்கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கின்றார்களோ அவர்களை (நேசிக்கமாட்டார்கள்). அவர்கள் தங்களுடைய மூதாதைகளாயிருந்த போதிலும் அல்லது தங்களுடைய சந்ததிகளாயிருந்தபோதிலும் அல்லது தங்களது பந்தக்களாயிருந்த போதிலும் அவர்களுடன் இவர்கள் உறவாடுவதை நீர் காணமாட்டீர். இத்தகையோர்தாம் இவர்களுடைய இருதயங்களில் அல்லாஹ் விசுவாத்தைப் பதியவைத்துத் தன்னுடைய உணர்வைக் கொண்டும் இவர்களைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைக்கின்றான். சதா நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் இவர்களைப் புகுத்திவிடுகின்றான். அவற்றில் இவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். இவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வுடைய கூட்டத்தினர்தாம் சித்தியடைந்தோர்கள் என்பதை (நபியே நீர்) அறிந்துகொள்ளும் (அல்குர்ஆன் 58:22)


இந்த உலகத்தில் அல்லாஹ்வின் அணி ஒன்றே ஒன்று தான். மீதமுள்ளவையெல்லாம் இறைவனுக்கு எதிரியான ஷைத்தானின் அணிதாம். இந்த அணியினர் அனைவரும் கிளர்ச்சியாளர்களே. இந்த நிலையில் இறைவன் கூறுகின்றான்:


(உண்மை) விசுவாசிகள் அல்லாஹ்வின் வழியில் (அவசியம்) யுத்தம் புரிவார்கள். நிராகரிப்போரோ (இவர்களுக்கு எதிராக) ஷைத்தானுடைய வழியில் தான் யுத்தம் புரிவார்கள். ஆகவே ஷைத்தானுடைய நண்பர்களுடன் நீங்களும் யுத்தம் புரியுங்கள். (அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதே என்று தயங்காதீர்கள்). நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலஹீனமானதே. (அல்குர்ஆன் 4:76)


அல்லாஹ்வை சென்றடைவதற்கு ஒரே வழிதான் உண்டு. ஏனையவை இறைவனிடம் கொண்டு செல்வதில்லை.

நிச்சயமாக இது தான் என்னுடைய நேரான வழியாகும். ஆதனையே நீங்கள் பின்பற்றுங்கள். மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் பரிசுததவான்களாவதற்காக இறைவன் இவற்றை உங்களுக்கு நல்லுபதேசம் செய்தான் (அல்குர்ஆன் 6:153)

மனித வாழ்க்கைக்கு நேரான உண்மையான வழி ஒன்றே ஒன்றுதான். அதுவே இஸ்லாம் ஏனையவையெல்லாம் அஞ்ஞானிங்களே. மௌட்டீகக் காலத்துச் சட்டங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? உறுதியாக நம்பிக்கை கொண்ட மக்களுக்குத் தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வை விட அழகானவன் யார்? (அல்குர்ஆன் 5:50)


இந்த உலகில் பின்பற்றத்தக்க சட்டம் ஒன்றே ஒன்று தான். இந்த ஒரு சட்டத்திற்கு மட்டுமே மனிதனைக் கட்டுப்படுத்தும் தகுதி உண்டு. அதுவே ஷாPஅத் என்ற இறைவனின் சட்டம். இந்த ஷாPஅத் என்ற இறைவனின் சட்டம் அல்லாதவை அனைத்தும் சபலங்களே.

(நபியே நேரான) மார்க்கத்தின் ஒரு வழியில் தான் நாம் உம்மை ஆக்கி இருக்கின்றோம். ஆகவே அதனையே நீர் பின்பற்றி நடப்பீராக. அறிவற்றவர்களின் விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். (அல்குர்ஆன் 45:18)


உண்மை சத்தியம் ஒன்றே ஒன்றுதான் ஏனையவையெல்லாம் தவறானவையே. இஸ்லாத்தின் இருப்பிடம் என்று ப10மியில் ஒரே ஒரு இடந்தான் உண்டு. அதுதான் தாருல் இஸ்லாம் (இஸ்லாத்தின் ப10மி) எனப்படுவதாகும். இந்த இடந்தான் இஸ்லாத்தின் ஆட்சி நிலைநாட்டப் பெற்ற இடம். அங்கே இறைவனின் சட்டங்களாம் ஷாPஅத் சட்டங்களே முழுமையாக ஆட்சி செய்யும். அங்கே அல்லாஹ் வகுத்து வழங்கிய வரையறைகள் அப்படியே பின்பற்றப்படும். அங்கே வாழ்பவர்கள் தங்கள் விவகாரங்களை வழக்குகளை அல்லாஹ்வும் அவன் ரசூலும் வழங்கியதைக் கொண்டே தீர்;த்துக் கொள்வார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒவ்வொரு விவகாரத்திலும் கலந்தாலோசித்துக் கொள்வார்கள். இந்தப் பகுதியைத் தவிர ஏனையபகுதிகள் தாருல் ஹர்ப் என்ற பகைமையின் நிலங்கள். ஒரு முஸ்லிம் இந்தப் பகைமையின் ப10மியில் இரண்டே உறவுகளைத்தான் வைத்துக் கொள்ள முடியும். அவை உடன்படிக்கையின் கீழ் அமைதி அல்லது போர். எந்த நாட்டுடன் இப்படி ஒப்பந்தம் வைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றதோ அந்த நாட்டை இஸ்லாத்தின் இடம் ப10மி என அழைத்திட முடியாது.

நிச்சயமாக எவர்கள் விசுவாசங்கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் பொருள்களையும் தத்தம் செய்து யுத்தம் புரிந்தார்களோ அவர்களும் எவர்கள் அவர்களுக்கு (த்தங்கள் இல்லங்களில்) இடமளித்து வைத்துக் கொண்டு உதவி புரிந்தார்களோ அவர்களும் ஆகிய இத்தகையோர் ஒருவருக்கொருவர் நட்பில் மிக நெருங்கியவர்களாயிரு;ககின்றனர். ஆயினும் விசுவாசங்கொண்டவர்களில் எவர்கள் இன்னும் (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்படும் வரையில் நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திற்கும் பொறுப்பாளிகளல்ல. எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும். ஆயினும் உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு வகுப்பினருக்கு விரோதமாக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது. அல்லாஹ் நிங்கள் செய்பவைகளை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான். நிராகரிப்பவர்களில் சிலர், அவர்களில் சிலருக்கு நெருங்கியவர்களே (ஆகவே அவர்களில் சிலர் சிலருடைய பொருளைச் சுதந்திரமாக அடைய விட்டுவிடுங்கள்) இவ்வாறு நீங்கள் செய்யாவிடில் ப10மியில் பெருங்கலகமும் குழப்பமும் ஏற்பட்டுவிடும். எவர்கள் விசுவாசங்கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் யுத்தம் புரிகின்றார்களோ அவர்களும் எவர்கள் இவர்களுக்கு இடமளித்து (த்தங்கள் இல்லங்களில்) வைத்துக்கொண்டு (இவர்களுக்கு)உதவியும் செய்கின்றார்களோ அவர்களும் தாம் உண்மையான விசுவாசிகள். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு. கண்ணியமான ஆகாரமும் உண்டு. இதன் பின்னரும் எவர்கள் விசுவாசங்கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு உங்களுடன் சோந்து யுத்தம் புரிகின்றார்களோ அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே. (இனி) அல்லாஹ்வுடைய வேதக்கட்டளைப் பிரகாரம் பந்துக்களில் உள்ளவர்களே ஒருவர் மற்றொருவருக்கு மிக நெரு;ஙகியவர்கள் ஆவார்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தோனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:72-75)


இஸ்லாம் இப்படி மிகவும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கிற்று. அதன் வழிகாட்டுதல்கள் எந்தச் சந்தேகமுமில்லாமல் முழுமையானவையாகவும் இருந்தன. மனிதனை ஒரு குறிப்பிட்ட குறுகிய நிலத்தோடு கட்டிப் போட்டிட விரும்பவில்லை இஸ்லாம். நிலம், நிறம், தேசியம், மொழி ஆகிய குறுகிய வட்டங்களிலிருந்த மீட்டு அவனை உலகம் தழுவிய மனித சமுத்திரத்தின் உறுப்பு என்றதொரு மகத்தான நிலைக்கு அது உயர்த்திற்று. ஒரு முஸ்லிம் எந்த நிலப்பகுதியோடும் எந்தக் குறிப்பிட்ட தேசியத்தோடும் கட்டுண்டவனல்ல. அப்படி அவனைக் கட்டுப்படுத்தும் பகுதி ஒன்று உண்டென்றால், அது இறைவனின் சட்டங்களான ஷாPஅத் சட்;டங்கள் எந்தப் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றதோ அந்தப் பகுதியே. இந்தப் பகுதியில் உறவுகள் அனைத்தும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் வழியேதான் நிர்மாணிக்கப்படும். ஈமான் என்ற இறை நம்பிக்கையே ஒரு முஸ்லிமின ;தேசியத்தை முடிவு செய்யும். இந்த இறை நம்பிக்கை அவனை முஸ்லிம் மகாசமுதாயத்தின் ஓர் அங்கமாக ஆக்குகின்றது. இதன் பராமரிப்பும் பரிபாலனமும், இஸ்லாமிய ஆட்சி நிலைநாட்டப் பெற்ற தாருல் இஸ்லாமிடமிருந்து வருவது. ஒரு முஸ்லிம் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்பவனுக்கு இறைவனை நம்பி வாழ்பவர்களைத்தவிர வேறு உறவினர்களே இல்லை. அவனது உறவுகள் அனைத்தும் இறைநம்பிக்கை ஈமான் என்ற அடிப்படையைக் கொண்டு எழுவதே. தாய், தந்தை, சகோதரர்கள், மனைவி இன்னும் குடும்ப உறுப்பினர்கள் என அறியப்படுபவர்களுக்கும் ஒரு முஸ்லிமிற்கும் எந்த உறவுமில்லை. ஈமான் என்ற இறை நம்பிக்கை ஒன்றைத்தவிர. படைத்த அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டார்கள் ஈமான் கொண்டார்கள் என்ற முதல் அடிப்படை நிலைபெற்ற பின்னரே இதர உறவின் முறைகள் அங்கே அங்கீகரிக்கப்படும். அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டார்கள் என்பது ஊர்ஜிதமானால் உறவு ஏற்பட்டுவிட்டது. அதன்பிறகு உடன்பிறந்தவர்கள் இரத்த பந்தங்கள் என்பன வந்து ஒட்டிக் கொள்ளலாம். ஆனால் இவை மட்டுமே உறவையும் பிணைப்பையும் ஏற்படுத்தும் காரணங்களாக அமையமாட்டா. அல்லாஹ் பிரகடனப்படுத்துகின்றான்:

மனிதர்களே நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்திச் செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத:து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து அனே ஆண், பெண்களை (வெளிப்படுத்திப்) பரவச் செய்தான். ஆகவே அந்த அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் ஒருவருக்கொருவர் (வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்;கள். (அல்குர்ஆன் 4:1)

இறைநம்பிக்கையின் அடிப்படையில்தான் மனித உறவுகள் பிணைக்கப்பட வேண்டும். இப்படிச்சொல்லி விடுவதால் பெற்றோர்கள் ஈமான் கொள்ளவில்லை. அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அவர்களுக்குப் பிள்ளைகள் நிறைவேற்றிட வேண்டிய கடமைகளிலிருந்து பிள்ளைகள் விடுவிக்கப்பட்டு விடுவார்களா? இல்லை, இறைவனை ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் பெற்றவர்களுக்குரியவற்றைப் பிள்ளைகள் கொடுத்தே ஆகவேண்டும். இந்தப் பொதுவிதிக்கும் ஓர் நிபந்தனை உண்டு. அது அந்தப் பெற்றோர்கள் அல்லாஹ்வின் எதிரிகளோடு இஸ்லாத்தின் எதிரிகளோடு கைகோர்த்துக்கொண்டு முஸ்லிம்களை அழிக்க முனைபவர்களாக இருந்திடக்கூடாது. அந்தப் பெற்றோர்கள் அல்லாஹ்வவின் எதிரிகளோடு சேர்ந்து கொண்டு அதனைப் பகிரங்கமாகப் பிரகடனப் படுத்திடுவார்களேயானால் அவர்களிடம் இரக்கத்தோடு நடந்திட வேண்டியது கடமையல்ல. இந்நிலையில் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட பிள்ளைகளுக்கும் எதிர் அணியில் தன்னை இணைத்துக் கொண்ட பெற்றோர்களுக்கும் உள்ள உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன.

இந்த வகையில் அப்துல்லாஹ் (ரலி) என்ற அப்துல்லாஹ் பின் உபை அவர்களின் மகனார் நமக்கோர் எடுத்துக்காட்டை எடுத்துத் தந்துள்ளார்கள். இப்னு ஜாPர் அவர்கள் இப்னு சியாத் அவர்கள் அறிவித்ததாக அறிவிக்கின்றார்கள். (அல்லாஹ் இவர்கள் அனைவர்மீதம் தன் அருளைப் பொழிவானாக) இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் உபை அவர்களின் மகனார் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை அழைத்துக் கேட்டார்கள். உங்கள் தந்தை என்ன சொல்லி இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? அப்துல்லாஹ் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள். என் தந்தை உங்களுக்கு பரிகாரமாவார்களாக, அவர்கள் என்ன சொன்னார்கள்? இதற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். உங்கள் தந்தை நாம் மதீனா திரும்பினால் (இந்தப் போரிலிருந்து) கண்ணியத்திற்குரியவர்கள் இழிவானவர்களை வெளியேற்றிவிடுவார்கள் எனப் பேசி இருக்கின்றார்கள். இதைச் செவிமடுத்தும் அப்துல்லாஹ் (அல்லாஹ் அவர்கள் மீது தன் திருப்பொருத்தத்தைப் பொழிவானாக)அவர்கள் சொன்னார்கள். பெருமானார் (ஸல்) அவர்களே என் தந்தை உண்மையையே மொழிந்திருக்கின்றார். நீங்கள் தாம் கண்ணியத்திற்குரியவர்கள். அவர்தாம் இகழ்ச்சிக்குரியவர். இறைவனின் தூதர் (ஸல்)வர்களே மதீனாவில் வாழும் மக்கள் நன்றாக அறிவார்கள். நீ;ங்கள் மதீனா வருவதற்கு முன்னால் என்னைப் போல் யாரும் தங்கள் தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்ததில்லை. ஆனால் இப்போது கூறுகின்றேன். என் தந்தையின் தலையைக் கொய்து வருவதுதான் அல்லாஹ்வுக்கும் அவனுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் திருப்தியைத் தரும் என்றானால் கணமும் தாமதியாமல் அதனைச் செய்துவர, அவர்தலையைக் கொய்துவரத் தயாராக இருக்கின்றேன். இதற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள் வேண்டாம் எனச் சொல்லித்டுத்தார்கள். பின்னர் முஸ்லிம்கள் மதீனா திரும்பினார்கள். அப்துல்லாஹ் அவர்கள் (அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக) மதீனாவின் முகப்பில் நின்றுகொண்டார்கள். கைகளில் உருவிய வாள் தயாராக இருந்தது. வாளுக்குக் கீழே அவர்களது தந்தை அப்துல்லாஹ் பின் உபை அவர்களின் கழுத்து இருந்தது. அப்துல்லஹ் அவர்கள் (அல்லாஹ்வின் திருப்தியும் மகிழ்ச்சியும் அவர்கள் மேல் உண்டாகட்டும்) தங்கள் தந்தையிடம்: நாங்கள் மதீனா திரும்பினால் கண்ணியத்திற்குரியவர்கள் இகழ்ச்சிக்குரியவர்களை வெளியேற்றி விடுவார்கள் என்று சொன்னீர்களா? என்று கேட்டார்கள். பின்னர் அல்லாஹ்வின் மேல் ஆணையாக இப்போது நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கண்ணியமானவர்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணியமானவர்களா? என்பதை. இறைவன் மீது ஆணையாக. அல்லாஹ்வும் அவனுடைய தூதர்(ஸல்)அவர்கள் அனுமதித்தாலொழிய நீங்கள் மதீனாவுக்குள் நுழைந்திட முடியாது. நீங்கள் மதினாவில் அபயமும் தேடிக்கொள்ள முடியாது. என்று அழுத்தமாய்க் கூறிவிட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை அவர்கள் கதறி அழுதார்கள்: கஸ்ரஜ் குலத்தாரே என் மகள் என்னை என் வீட்டுக்குள் நுழையவிடாமல் தடுப்பதைப் பாருங்கள் என இரண்டு முறை ஓலமிட்டார்கள். இந்த ஒப்பாரிகளுக்கெல்லாம் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரே ஒரு மறுமொழியைத்தான் தந்தார்கள். அது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்)அவர்கள் அனுமதித்தாலன்றி நீங்கள் மதீனாவுக்குள் நுழைந்திட முடியாது என்பதே. தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட இந்தப் பிணக்கின் ஆரவாரத்தைக் கேட்ட சிலர் அங்கே வந்து குழுமினார்கள். அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் தந்தையை விட்டுவிடும்படி கோரினார்கள். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தங்கள் முடிவிலேயே உறுதியாக நின்றுவிட்டார்க்ள. சிலர் இறைவனின் தூதர் (ஸல்) அவர்களிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றார்கள். இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்துல்லாஹ்விடம் அவருடைய தந்தையை உள்ளே விட்டுவிடும்படி கூறுங்கள் என்றார்கள். இந்த அனுமதி கிடைத்தவுடன் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தங்கள் தந்தையிடம் இறைவனின் தூதர்(ஸல்)அவர்கள் அனுமதி வழங்கிவிட்டதால் நீங்கள் இப்போது மதீனாவுக்குள் நுழையலாம் என்றார்கள்.

ஈமான் இறைநம்பிக்கை என்ற உறவு நிலைநாட்டப்பட்டு விட்டது என்றால் இரத்த பந்தங்கள் இருக்கின்றனவோ இல்லையோ அவர்கள் தங்களுக்குள் நெருங்கிய உறவினர்கள் ஆகிவிடுவார்கள். அவர்கள் உடன்பிறந்த சகோதரர்களைவிட உறவில் நெருக்கமானவர்களாகி விடுவார்கள். இறைவன் கூறுகின்றான் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் சகோதரர்களே. இதைத் தொடர்ந்து இன்னும் கூறுகின்றான்:

நிச்சயமாக எவர்கள் விசுவாசங்கொண்டு (தங்கள்)ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் பொருள்களையும் தத்தம் செய்து யுத்தம் புரிந்தார்களோ அவர்களும் எவர்கள் அவர்களுக்குத் தங்கள் இல்லங்களில் இடமளித்து வைத்துக் கொண்டு உதவி புரிந்தார்களோ அவர்களும் ஆகிய இத்தகையோர் ஒருவருக்கொருவர் நட்பில் மிக நெருங்கியவர்களாயிருக்கின்றனர். (அல்குர்ஆன் 8:72)

இங்கே குறிப்பிடப்பட்ட நட்பு உறவு அவர்கள் தங்களுக்குள் வழங்கிய பாதுகாப்பு இவை அன்றைய நாளோடு போய்விட்டவையல்ல. அவை அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை இறை நம்பிக்கையாளர்களைப் பிணைத்துக் கொண்டிருக்கும் நட்பு உறவு பாதுகாப்பு. அத்தோடு இந்த உறவு இனிவரும் நாள்களில் எழப்போகும் முஸ்லிம் சமுதாயத்தையும் அப்படியே கட்டிப்போட்டிடும் அதிசய ஆற்றல் பெற்றதுமாகும். இந்த நட்பும் பிணைப்பும் அந்த மூத்த முதல் தலைமுறைகளையும் இன்று வாழும் இஸ்லாமிய சமுதாயத்தையும் இனி வரப்போகும் இஸ்லாமிய தலைமுறைகளையும் இணைக்கும் பாலமாகும்.

அன்றி (மதினாவிலுள்ள) எவர்கள் (மதீளாவையே தங்கள்) ஊராக (மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களாகிய அவர்களுக்கு முன்னதாகவே) கொண்டு விசுவாசமும் கொண்டிருந்தார்களோ அவர்களுக்கும் (அதில் பங்குண்டு) இவர்கள் ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வருவோரை அன்பாக நேசித்து வருவதுடன் (தங்களுக்குக் கொடுக்காது ஹிஜ்ரத் செய்துவரும்) அவர்களுக்கு (மட்டும்) கொடுக்கப்படுவதைப் பற்றியும் தங்கள் நெஞ்சத்தில் குறைவாகக் காண்பதில்லை. அன்றி தங்களுக்கு வறுமையே நேரினும் தங்களைவிட அவர்களுக்கே (கொடுக்கப்படுவதைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு எவர்கள் பேராசையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்கின்றார்களோ அத்ததையோர் தாம் சித்தி பெற்றோர். எவர்கள் (முஹாஜிர்களாகிய) இவர்களுக்குப்பின் (மதீனாவுக்கு) வந்தார்களோ அவர்களுக்கும் (அதில் பங்குண்டு) இவர்கள் எங்கள் இறைவனே எங்களையும் எங்களுக்கு முன் விசுவாசங்கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள் விசுவாசங் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இருதயங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே எங்கள் இறைவனே நிச்சயமாக நீ மிகக் கிருபையுடையோனும் இரக்கமுடையோனுமாய் இருக்கின்றாய் என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கின்றனர் (அல்குர்ஆன் 59:9-10).

திருக்குர்ஆன் இத்தகையதொரு பிணைப்பைத்தான் ஏற்படுத்துகின்றது அல்லாமல் பிறந்த இடம் பேசும் மொழி ஆகிய குறுகிய வட்டங்களுக்குள் சுழலுவதில்லை. அனைத்தையும் அறிந்த அல்லாஹ் திருக்குர்ஆனில் பல நபிமார்களுடைய சரித்திரங்களைப் பற்றிப் பேசுகின்றான். இந்த வரலாறுகளை இறை நம்பிக்கை கொண்டவர்கள் ஒரு படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்பதே அங்கே நோக்கம். ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் இந்த நபிமார்கள் (அவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) இறைநம்பிக்கை என்ற இந்தத் தீபத்தைக் கொண்டு மக்களை அவர்களைப் படைத்த இறைவனின் பக்கம் திருப்பி இருக்கின்றார்கள். இந்த இறைத்தூதர்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொண்டவர்களை இறை நம்பிக்கை என்ற உறவைக் கொண்டே பிணைத்திருக்கின்றார்கள். இந்த உறவின் முறையோடு வேறு உறவின் முறைகளை நாம் ஒப்பிட்டுப் பார்ப்போமேயானால் இதுவே உறுதியானதாகவும் பலன்பல பயப்பதாகவும் இருக்கும்.

(நூஹ் நபியின் மகன் அவரைவிட்டு விலகி நிராகரிப்போருடன் சென்றுவிடவே அவனும் அழிந்துவிடுவானென அஞ்சி) நூஹ் (அலை) தன் இறைவனை நோக்கி என் இறைவனே என் மகன் என் குடும்பத்திலுள்ளவனே (நீயோ என் குடும்பத்தினரை இரட்சித்துக் கொள்வதாக வாக்களித்திரக்கிறாய்) நிச்சயமாக உன்னுடைய வாக்குறுதி உண்மையானது. தீர்ப்பளிப்போர்களிலெல்லலாம் நீ மிகவும் மேலான நீதிபதி என்று (சப்தமிட்டுக்) கூறினார். அதற்கவன் நூஹே நிச்சயமாக அவன் உன் குடும்பத்திலுள்ளவனல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களையே செய்து கொண்டிருந்தான். ஆதலால் நீர் உமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி என்னிடம் (தர்க்கித்துக்) கேட்க வேண்டாம் என்று நான் நிச்சயமாக உமக்கு நல்லுபதேசம் செய்கின்றேன் என்று கூறினான். அதற்கவர் என் இறைவனே நான் அறிவாத விஷயங்களைப் பற்றி (இனி) உன்னிடம் கேட்காது என்னை இரட்சிக்குமாறு நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன். நீ என்னை மன்னித்து எனக்கு நீ கிருபை செய்யாவிடில் நிச்சயம் நானும் நஷ்டமடைந்தோரில் ஆகிவிடுவேன் என்று கூறினார் (அல்குர்ஆன் 11:45-47) தந்தை மகனைத் தன் குடும்பத்தில் உள்ளவன். ஆகவே அவனைக் காப்பாற்று என மன்றாடுகின்றார். இறைவன் அவன் அதாவது உங்கள் மகள் ஈமான் என்ற இறை நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் மாற்றுக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதால் குடும்ப உறுப்பினன் என்ற நிலையை இழந்தான் எனத் தெளிவுபடுத்துகின்றான். இஸ்லாம் என்ற இந்தக் கொள்கையைக் கொண்டு இதில் இணைத்தவர்கள் மட்டுமே குடும்ப உறுப்பினர்கள் என்ற உண்மையை இந்த வரலாறு நமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றது. இன்னொரு வரலாறையும் இறைவன் நமக்குப் பாடமாகச் சொல்லித்தருகின்றான். தவிர, இப்றாஹீமை, அவருடைய இறைவன் (பெரும் சோதனையால்) பல கட்டளைகளையிட்டுச் சோதித்த சமயத்தில் அவர் அவை யாவையும் பரிப10ரணமாகவே செய்தார். (ஆதலால் இறைவன் ) நிச்சயமாக நாம் உம்மை மனிதர்களுக்குத் தலைவராக ஆக்குகிறேன் எனக்கூறினான். அதற்கு (இப்ராஹீம்) என்னுடைய சந்ததிகளையுமா (தலைவர்களாக ஆக்குவாய்) எனக் கேட்டார். (அதற்கு உம்முடைய சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களை என்னுடைய வாக்குறுதி சாராது எனக்கூறினான் (அல்குர்ஆன் 2:124)

தவிர இப்றாஹீம் (இறைவனை நோக்கி) என் இறைவனே (மக்காவாகிய) இதை அபயமளிக்கும் ஓர் பட்டணமாக ஆக்கிவைத்து இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கிறாரோ அவருக்கு ஆதாரமாகப் பலவகைக் கனிவர்க்கங்களையும் அளித்துவா எனக் கூறியதற்கு இறைவன் (என்னை விசுவாசிப்பவருக்கு நான் ஆகாரமளிப்பது போலவே என்னை) நிராகரிப்பவனுக்கும் (ஆகாரமளித்து) அவனையும் சிறிதுகாலம் சுகமனுபவிக்க விட்டுவைப்பேன். பின்னர் நரகவேதனையின் பால் (செல்லும்படி) அவனை நிர்பந்திப்பேன். அவன் செல்லுமிடம் மிகக்கெட்டது என்று கூறினான். (அல்குர்ஆன் 2:126)

நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் தங்கள் தந்தையும் தங்களைச் சார்ந்த மக்களும் தவறு செய்வதிலேயே நிலைத்திருந்தபோது, அவர்கள் அவர்களிடமிருந்து மாறுபட்டார்கள். இந்நிலையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சொன்னார்கள்.

உங்களைவிட்டும் அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வமென) அழைப்பவைகளைவிட்டும் நான் விலகிக் கொள்கிறேன். என் இறைவனையே நான் பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன். என் இறைவனிடம் நான் செய்யும் பிரார்த்தனைகள் (எனக்குத்) தடுக்கப்படாதிருக்கும் என்று நம்புகின்றேன் என்று கூறினார் (அல்குர்ஆன் 19:48)

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாற்றை நமக்குச் சொல்லிக்காட்டுவதன் மூலம் அல்லாஹ் இறைவனை நம்புகின்றவர்களிடம் இருந்திட வேண்டிய உறவுகளையும் பிணைப்புக்களையுமே எடுத்துக்காட்டுகின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:

இப்றாஹீமிடத்திலும் அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் தம் ஜனங்களை நோக்கி நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவைகளிலிருந்தும் விலகிவிட்டோம். நிச்சயமாக நாங்கள் உங்களையும் (அவைகளையும்) நிராகரித்துவிட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரையில் எங்களுக்கும் உங்களுக்குமிடையில் விரோதமும் குரோதமும் ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள். அன்றி இப்ராஹீம் தம் (சொல்லைக்கேளாத தம்) தந்தையை நோக்கி அல்லாஹ்விடத்தில் உமக்காக (அவனுடைய வேதனையில்) யாதொன்றையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது. ஆயினும் உமக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்பைக் கோருவேன் என்று கூறி எங்கள் இறைவனே உன்னையே நாங்கள் நம்பினோம். உன்னையே நாங்கள் நோக்கினோம். உன்னிடமே (நாங்கள் யாவரும்) வரவேண்டியதிருக்கின்றது. (என்று பிரார்த்தித்தார்) (அல்குர்ஆன் 60:4)

குகைத் தோழர்கள் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கத்தோழர்கள் செய்தது என்ன? அவர்கள் தாங்கள் ஈமான் கொண்ட நிலையில் தங்கள் குடும்பத்தாரோடும் தங்கள் மக்களோடும் வாழ்ந்திட இயலாது என்பதை உணர்ந்தார்கள். ஆகவே அவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு வெளியே வந்துவிட்டார்கள். தங்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். காரணம் இதனால் அவர்கள் அல்லாஹ்வின் அடிமைகளாய் வாழலாம் என நம்பினார்கள்.

(நபியே) அவர்களுடைய உண்மையான சரித்திரத்தை நாம் உமக்குக் கூறுகின்றோம். நிச்சயமாக அவர்கள் சில வாலிபர்கள். தங்கள் இறைவனை விசுவாசித்தார்கள். (ஆகவே பின்னும்) பின்னும் நேரான வழியில் நாம் அவர்களைச் செலுத்தினோம். அன்றி அவர்களுடைய இருதயங்களையும் நாம் நிலைப்படுத்தி வைத்தோம். அக்காலத்திய அரசன் அவர்களை விக்கிரக ஆராதனை செய்யும்படி நிர்பந்தித்த சமயத்தில் அவர்கள் எழுந்துநின்று வானங்களையும் ப10மியையும் படைத்தவன் தான் எங்கள் இறைவன். ஆவனையன்றி (வேறெவரையும் ஆண்டவன் என) நாங்கள் அழைக்கமாட்டோம். (அவ்வாறு அழைத்தால்) நிச்சயமாக வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம் என்றார்கள். (அன்றி) நம்முடைய இந்த ஜனங்கள் அவனையன்றி வேறு நாயனை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குத் தெளிவான அத்தாட்சியை இவர்கள் கொண்டுவர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய்கூறுபவனைவிட அக்கிரமக்காரன் யார்? (என்றார்கள்) இவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவைகளிலிருந்தும் நீங்கள் விலகிக் கொண்ட பின்னர் நீங்கள் (அவர்களை விட்டுத்தப்பிக்க) இக்குகைக்குள் சென்று விடுங்கள். உங்கள் இறைவன் உங்கள் மீது தன் அருளைச் சொரிந்து (ஜீவனோபாயத்திற்குரிய) உங்கள் காரியங்களை எளிதாக உங்களுக்குச் சித்தப்படுத்தி விடுவான் (என்றும் தங்களுக்குள் கூறிக்கொண்டனர்) (அல்குர்ஆன் 18:13-16)

நபி நூஹ் (அலை) அவர்களின் மனைவியும் நபி லூத்(அலை) அவர்களின் மனைவியும் பிரிக்கப்பட்டு விட்டனர். காரணம் அவர்கள் கொண்ட இறைநம்பிக்கை வேறாயிருந்தன.

நிராகரிப்போருக்கு நூஹ_ (நபியினு)டைய மனைவியையும் லூத்து (நபியினு)டைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக ஆக்கி வைக்கின்றான். இவ்விரு பெண்களும் நம் நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும் இவ்விரு பெண்களும் தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்தனர். ஆகவே இவர்களிருவரும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து யாதொன்றையும் தடுத்துக் கொள்ளமுடியவில்லை. (இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களை நோக்கி) நரக நெருப்பில் புகுவோருடன் நீங்களிருவரும் புகுங்கள் என்றே கூறப்பட்டது. (அல்குர்ஆன் 66:10)

ஃபிர்அவ்னின் மனைவியிடத்தில் இன்னொரு வகையான எடுத்துக்காட்டு இருக்கின்றது. விசுவாசங்கொண்டவர்களுக்கு (ஃபிர்அவ்னுடைய மனைவியை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகின்றான்.

ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆஸியா) (ஃபிர்அவ்னுடைய அக்கிரமங்களைச் சகிக்காமல் தன் இறைவனை நோக்கி) என் இறைவனே உன்னிடத்திலுள்ள சுவனபதியில் எனக்கு ஒரு வீட்டை அமைத்து ஃபிர்அவனை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னை இரட்சித்துக் கொள்வாயாக. அன்றி அக்கிரமக்கார மக்களை விட்டும் நீ என்னை இரட்சித்துக் கொள்வாயாக என்ற பிரார்த்தனைச் செய்து கொண்டேயிருந்தார். (அல்குர்ஆன் 66:11)

இதைப் போலவே திருக்குர்ஆன் பல்வேறு உறவுகளையும் குறிப்பிடுகின்றது. நபி நூஹ் (அலை) அவர்களின் வாழ்க்கையில் தந்தை மகன் என்ற உறவு ஈமான் என்ற இறைநம்பிக்கை முன் என்னவாகும் என்பதைப் பார்த்தோம். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையில் மகன் தந்தை உறவுகள் ஈமான் என்ற அல்லாஹ் ஒருவனே இறைவன் வேறு இறைவனே இல்லை என்ற நம்பிக்கைக்கு முன் தவிடுபொடியாகும் என்பதைத் தரிசித்தோம். அதே போல் நாடு என்பதும், வீடு என்பதும், குடும்பம் என்பதும், குலம் என்பதும் ஈமான் என்ற இறை நம்பிக்கைக்கு முன் முற்றாகச் சரணடைந்ததைச் சந்தித்தோம். தாம்பத்திய உறவுகள் ஈமான் என்ற இறை நம்பிக்கைக்கு முன்னால் ஒன்றுமில்லை என்பதை நூஹ் (அலை) லூத் (அலை) ஃபிர்அவ்ன் ஆகியோருடைய வரலாற்றில் கண்டோம். ஈமான் என்ற இறைநம்பிக்கையின் உச்சத்தில் நிற்கும் நபிமார்களின் வரலாற்றை மேலே பார்த்தோம். இனி நடுத்தர மக்களின் வாழ்க்கையில் இந்த இறைநம்பிக்கை எப்படி உறவுகளையும் பிணைப்புகளையும் ஏற்படுத்திற்று என்பதைப் பார்ப்போம். இறைவன் கூறுகின்றான்:

அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பவர்கள் மீது அன்பு செலுத்துவரை (நபியே) நீர் காணமாட்டீர். அத்தகையோர் அவர்களுடைய தந்தையராயினும் அல்லது அவர்களுடைய தனையர்களாயினும் அல்லது அவர்களது சகோதரர்களாயினும் அல்லது அவர்களது குடும்பத்தவர்களாயினும் சரியே அவர்களின் இதயங்களில் அல்லாஹ் ஈமானை நம்பிக்கையைப் பதித்துவிட்டான். மேலும் தன் சார்பிலிருந்து ரூஹை வழங்கி அவர்களுக்கு வலிமை சேர்த்தான். மேலும் கீழே ஆறுகள் ஓடும் சுவனங்களில் அவன் அமர்களைப் புகச் செய்வான். அங்கே அவாக்ள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தான். அவர்களும் அல்லாஹ்வைக் கொண்டு திருப்தியடைந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்சியினராவர். அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் கட்சியினர் தாம் வெற்றியடையக் கூடியவர்கள். (அல்குர்ஆன் 58:22)

எம்பெருமானார் (ஸல்)அவர்களின் வரலாற்றில் நாம் உறவுகளின் உடைவுகளைத் தாராளமாகச் சந்திக்கலாம். பெருமானார்(ஸல்)அவர்களின் பெரிய தந்தை அப10லஹப் உறவினர் அம்ர் பின் ஹிஸ்ஸாம் (அப10ஜஹ்ல்)ஆகியோரின் உறவுகள் இறைநம்பிக்கையின் அடிப்படையில் சிதறிப் போயின. அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறிய மக்காவாசிகள் இதே ஈமான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தங்கள் குடும்பங்களோடு பொருதினார்கள். இவர்கள் தாம் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பதுருப் போரில் எதிர்கொள்வதற்காக உருவிய வாளோடு முன்வரிசையிலே நின்றார்கள். அதே நேரத்தில் மக்காவிலிருந்து இந்த இறைநம்பிக்கையின் அடிப்படையில் இடம் பெயர்ந்து மதீனா வந்த மக்கத்து முஸ்லிம்கள் மதீனாவிலே வாழ்ந்த முஸ்லிம்களோடு பிரிக்கவியலாததோர் உறவால் பிணைந்து நின்றார்கள். படிப்போர் நிச்சயம் வடிப்பார் கண்ணீர் என்பதை உறுதி செய்யும் ஓர் உடன்பிறப்பு முறை அங்கே உறைந்து உலக மக்களுக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டாய் மிளிர்ந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் செயலில் காட்டிய சகோதரத்துவம் இரத்த பந்தங்களால் பிறந்த சகோதரத்துவத்தை விஞ்சி நின்றது. ஈமான் எனற இறைநம்பிக்கையின் அடிப்படையில் அனைத்தையும் விஞ்சியதோர் அதிசய உறவின் உலகம் அங்கே உருவானது. இதில அரபுகளும் அரபுக்கள் அல்லாதாரும் உறவால் உடன்பிறப்புகளாய் நின்றார்கள். ரோம் நாட்டிடைச் சார்ந்த ஸ_ஹைப் (ரலி) அவர்கள், இந்த உறவின் உடன்பிறப்பு. பிலால்(ரலி)அவர்கள் எத்தியோப்பியாவைச் சார்ந்தவர்கள். இவர்கள் இந்த உலக சகோதரத்துவத்தில் இணைந்து, கேட்போரைப் பிணிக்கும் ஓர் உன்னத வரலாறாய் இஸ்லாமிய வரலாற்றில் உறைந்து அன்றைய முஸ்லிம்களுக்கும் இன்றைய முஸ்லிம்களுக்கும் உடன்பிறப்பாய் ஆனார்கள். ஸல்மான் (ரலி) அவர்கள் பாரசீகத்தைச் சோந்தவர்கள். இவர்கள் இந்த உறவின் வழியில் தங்களை இணைத்துக் கொண்டு முஸ்லிம்களின் அன்பு மழையில் நனைந்தார்கள். குலத்தின் வழியில் பெருமை அதனால் பாரபட்சம் இனத்தின் மேல் ஓர் இனம்புரியாத வேட்கை இவையெல்லாம் மண் மூடிப்போயின. ஈமான் இறைநம்பிக்கை இதனால் இறவா உறவு என்பதே அங்கே முழுமையாக ஆட்சி செய்தது. தேசியம் தேசம் அதனால் நட்பு பகை என்பனவெல்லாம் அங்கே நிரந்தரமாக விடைபெற்றுச் செய்தன. இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் அந்த மக்களைப் பார்த்துச் சொன்னார்கள். தேசியம் தேசம் குலம் கோத்திரம் என்பனவற்றை எடுத்தெறியுங்கள். இவையெல்லாம் மௌட்டீகமானவை. இவையெல்லாம் மடிந்து மனித உறவுகளும் உணர்வுகளும் விரிந்து பரந்து வானவீதியிலும் உயர்ந்து நின்றன. முனித உறவுகளைக்கட்டிப் போட்டிருந்த அத்தனை குறகிய எண்ணங்களும் உடைத்தெறியப்பட்டன. அந்த நாள் முதல் முஸ்லிம்களின் நாடு என்பது ப10மியின் ஒரு நிலப்பரப்பு என்றிருக்கவில்லை. மாறாக தாருல் இஸ்லாம் என்பதாக இருந்தது. அதாவது இறைநம்பிக்கை அல்லாஹ் ஒருவனே என்ற நம்பிக்கை. வாழும் ப10மி அங்கே இறைவனின் சட்டங்கள் ஷாPஅத் முழுமையாகச் செயலிலிருக்கும். இந்த இஸ்லாத்தின் ப10மியில் தான் தாருல் இஸ்லாத்தில் தான் முஸ்லிம்கள் அனைவரும் தஞ்சம் புகுகின்றார்கள். இந்த தாருல் இஸ்லாத்தைப் பாதுகாக்கவும் அதன் எல்லைகளை விரிவுபடுத்திடவுந்தான் முஸ்லிம்கள் தங்கள் உயிரையும் தருகின்றார்கள். இறைவனின் சட்டங்களை ஏற்றுக் கொள்வோர் அனைவருக்கும் இந்த தாருல் இஸ்லாம் சொந்தப10மி. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோர் அனைவரும் அனைத்து உரிமைகளையும் பெற்றக் குடிமக்கள் இந்த தாருல் இஸ்லாத்தில். இங்கே அரசின் அரசியல் நிர்ணயச் சட்டம் ஷாPஅத் சட்டங்கள்தாம். இங்கே அனைத்து விவகாரங்களும் அல்லாஹ்வுக்கும் அவனது அறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் கீழ்ப்படிந்தே நடக்கும். இறைவனின் இணையற்றச் சட்டங்களான ஷாPஅத் சட்டங்கள் செயலில் இல்லாத இடங்கள் அனைத்தும் பகைமையின் ப10மியே. ஒரு முஸ்லிம் இந்தப் பகைமையின் ப10மியோடு போராடிட எப்போதும் தயாராகவே இருப்பான். அது அவன் பிறந்த ப10மியாகவும் இருக்கலாம் அல்லது அவனுடைய உறவினர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ப10மியாகவும் இருக்கலாம். அந்த இடத்தில் அவனுக்குச் சொத்துக்கள் இருக்கலாம் அல்லது சொத்துக்களைப் போன்ற இதர பரிவர்த்தனைகள் இருக்கலாம். இப்படித்தான் முஹம்மத்(ஸல்) அவர்கள் தாங்கள் பிற்நத இடமாம் மக்காவுக்கு எதிராகவே போராடினார்கள். அவர்கள் பிறந்து வளர்ந்த மாநகரந்தான் அது. அவர்களின் உறவினர்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவாக்ளுக்கு வீடும் அவர்களுடைய தோழர்களுக்கு அங்கே வீடும் சொத்துக்களும் இருந்தன. இந்த இறைநம்பிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக அவர்கள் இவற்றையெல்லாம் துறந்து மதீனாவுக்கு வரவேண்டியதாயிற்று. பெருமானார்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் பிறந்து வளர்ந்த ப10மியாக மக்கா இருந்தும், அவர்களுக்கு வீடுகளும் மனைகளும் சொத்துக்களும் இருந்த இடமாக மக்கா இருந்தும், அவர்களுடைய உறவினர்களெல்லாம் வாழும் இடம் மக்காவாக இருந்தும் மக்கா தாருல் இஸ்லாமாக ஆகிடவில்லை. மக்கத்து வெற்றி என்று வரலாற்றில் உயர்ந்து நிற்கும் வாகை வரலாற்றுக்குப் பின்னர்தான் சூழ்ந்துவந்த இஸ்லாமியப் படைகளுக்கு மக்கா சரணடைந்த பின்னர்தான் அது தாருல் இஸ்லாம் என்ற தனிப்பெரும் இடத்தைப் பெற்றது. அங்கே ஷாPஅத் சட்டங்கள் நாட்டு நடப்பாக ஆகின. இஸ்லாம் சொல்லும் உறவின் முறையின் தெளிவான அடிப்படை இதுதான். இது தான் இஸ்லாம் இது தான் தாருல் இஸ்லாம் இந்தச் சமுதாய அமைப்பில் அங்கம் வகிப்போர் பின்வருமாறு நடந்து கொள்வார்கள்.

அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிப்படாதவரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)

அங்கே அனைத்து விவகாரங்களும் அல்லாஹ் அவனுடைய தூதர்(ஸல்) அவர்கள் ஆகியோரின் கட்டளைகள் வழிகாட்டுதல்கள் தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் நிருவகிக்கப்படும். இஸ்லாம் வழங்கியுள்ள அடிப்படைகளின் வழியில் ஒரு முஸ்லிம் தான் கொண்ட இறைநம்பிக்கையின் அடிப்படையிலேயே அறியப்படுகின்றான். அவன் சில அரசுகள் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையில் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் அவன் தன்னை பிணைத்துக் கொள்வதில்லை. உறவுகளை ஏற்றுக் கொள்வதில்லை. அவன் ஈமானைக் கொண்டே அறியப்படுகின்றான். அவன் ஓர் கொடியின் கீழ் போராடுகின்றான் என்றால் அந்தக் கொடியை அவன் தாயின் கொடி அல்லது தந்தையின் மணிக்கொடி என்றெல்லாம் பார்ப்பதில்லை. அந்தக் கொடி அவன் நாட்டின் கொடியுமல்ல. தனது பெருமையைப் புகழும் கொடியுமில்லை. இத்தகைய கொடிகளைப் பாதுகாக்க அவன் தன் உயிரைப் பணயம் வைத்துப் போராடுவதில்லை. அவன் தனது இறைநம்பிக்கiயைப் பாதுகாக்கவும் அந்த இறைவாக்கு மேலோங்கவும் அவன் போராடுகின்றான். தன் உயிரைத் தருகின்றான். இந்த இறை நம்பிக்கையைக் கொண்டவர்கள் இவர்கள் என்பதை உணர்த்தும் சமிக்ஞையாக அடையாளமாக வேண்டுமானால் அங்கே கொடிகள் பறக்கலாம். அவன் வெற்றி பெற்றான் என்றால் அந்த வெற்றி அவனது இனத்தின் வெற்றி என்றோ, அவனது நாடு என்ற நிலப்பரப்பின் வெற்றி என்றோ அவன் கொள்வதில்லை. அது அவன் விரும்பி ஏற்றுக்கொண்ட இறை நம்பிக்கையின் வெற்றி. அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிடும் போது (நபியே) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் திரள் திரளாக நுழைவதை நீர் காணும் போது நீர் உம் இறைவனைப் புகழ்ந்து கொண்டு அவனைத் துதிப்பீராக. நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோரிக்கையை பெரிதும் ஏற்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 110 : 1-3)

வெற்றி இறைநம்பிக்கை என்ற பதாகையின் கீழ் பெற்றதாகும். வேறு எந்தப் பெயரிலும் பெற்றதன்று. முயற்சி முழுக்க முழுழ்க அல்லாஹ்வுக்காகவே மேற்கொள்ளப்பட்டது. முயற்சி மேற்கொண்டதும் உயிரை விலையாகத் தந்து போர்க்களம் புகுந்ததும் அவனுடைய மார்க்கத்தை நிலைநாட்டவும் அவனை ஏற்றுக் கொண்டவர்களைப் பாதுகாக்கவும் அவனுடைய ஷாPஅத் இன் ஆட்சி நிலைபெற்றிருப்பதை தாருல் இஸ்லாத்தைப் பாதுகாக்கவுமே. போரில் கிடைக்கும் பொருள்களுக்காகவோ போரில் கலந்து கொண்டால் கீர்த்திப் பெறலாம் என்றோ நமது தேசத்திற்குக் கண்ணியமும் புகழும் கிடைக்கும் என்பதற்காகவோ அங்கே யாரும் போராட வரவில்லை. அப10மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒரு முறை பெருமானார்(ஸல்)அவர்களிடம் இவ்வாறு கேட்கப்பட்டது. இறைவனின் தூதர்(ஸல்)அவர்களே ஒருவர் தன்னுடைய வீரத்தை வெளிக்காட்டப் போரில் கலந்து கொள்கின்றார். இன்னொருவர் கௌரவத்திற்காகப் போரில் கலந்து கொள்கின்றார். இன்னொருவர் புகழுக்காகப் போரில் பங்கெடுத்;துக்கொண்டு போர் புரிகின்றார். இவர்களில் யார் இறைவனின் பாதையில் போராடுகின்றார்? பெருமானார்(ஸல்)அவர்கள் இப்படிப் பதில் சொன்னார்கள்: அல்லாஹ்வின் சொல் மேலோங்க வேண்டும் (அல்லாஹ்வின் சட்டங்கள் ஏனைய சட்டங்களை வாகை கண்டு ஆட்சி செய்ய வேண்டும்) என்பதற்காகப் போராடுபவனே அல்லாஹ்வின் பாதையில் போராடுகின்றான். அல்லஹ்வின் அழகிய வழிகாட்டுதல்கள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக போராடும் பாதையில் ஒருவன் கொல்லப்பட்டாலோ அவனது தியாகம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதுவல்லாமல் வேறு காரணங்களுக்காக அவன் போராடினால் அவன் தன் உயிரையே தந்திருந்தாலும் அவனுடைய தியாகங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. இறைவன் ஒருவனே என்ற நம்பிக்கையில் நிலைத்து நிற்கின்றான். அல்லது நிற்கின்றார்கள் என்பதற்காக ஒரு முஸ்லிமோடு அல்லது முஸ்லிம்களோடு போர் புரியும் நாடு, முஸ்லிம்கள் தங்கள் இறைநம்பிக்கையின் வழி அமைத்த வாழ்க்கை நெறிகளை செயல்படுத்துவதைத் தடுக்கும் நாடு ஷாPஅத் சட்டங்களை செயல்பட விடாமல் தடுக்கும் நாடு இவையெல்லாம் தாருல் ஹர்ப் என்ற இஸ்லாத்தோடு பகைமை பாராட்டும் நாடுகளே. இந்த நாடுகளில் ஒரு முஸ்லிமின் உறவினர்கள் குடும்பத்தவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். இந்த நாட்டில் அவன் பெருமளவில் மூலதனங்களைக் கொட்டி தொழில்கள் செய்து கொண்டிருக்கலாம். எனினும் அந்த நாடு தாருல் ஹர்ப் என்ற பகைமையின் ப10மியே. எந்த நாட்டில் ஷாPஅத் என்ற இறைவனின் சட்டங்கள் முழு அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனவோ அந்த நாடு தாருல் இஸ்லாம் இஸ்லாத்தின் ப10மி. இந்த நாட்டில் முஸ்லிம்களின் உறவினர்கள் இல்லாமலிருக்கலாம். அவன் அங்கே வியாபாரமோ கொடுக்கல் வாங்கல்களோ கூட இல்லாமலிருக்கலாம். எனினும் ஷாPஅத் அங்கே முழு அளவில் செயல்படுவதால் அது தாருல் இஸ்லாம். குடும்பம் கோத்திரம் குலம் தேசியம் நிறம் நாடு என்ற அடிப்படைகளில் மனிதர்களைப் பிரிப்பதும் பிளந்து போடுவதும் முட்டாள்தனத்தின் முதிர்ச்சியையே காட்டுகின்றது. இந்த அடிப்படைகளில் மனிதன் தன்னைக் கூறுபோட்டுக் கொண்டது நாகரிகம் பண்பாடு என்பனவற்றில் அவன் தலையெடுக்காத நாள்களில் தான். இறைவனின் தூதர்(ஸல்)அவர்கள் இவற்றை இறந்து போனவை மனிதனின் ஆன்மாவுக்கு எதிரானவை எதிர்த்துப் போராடி எடுத்து எறியப்பட வேண்டியவை என அழைத்துள்ளார்கள். நம்மை பணித்துள்ளார்கள். இனத்தால் குலத்தால் தேசியம் என்ற பிறந்த நாட்டால் நாங்கள்தாம் இறைவனால் தோந்தெடுக்கப்பட்ட சிறப்பான மக்கள் எனக் கர்வங்கொண்டு கிடந்த போது இறைவன் அவர்களின் கோரிக்கையை மறுத்தான். இறைநம்பிக்கை ஒன்றே மனிதர்களைக் கண்ணியத்திற்குரியவர்களாக ஆக்கிடும் எனத் தெளிவுபடுத்தினான். இறைவன் தன் திருமறையில் இப்படித் தெளிவுபடுத்துகின்றான்:

விசுவாசிகளை நோக்கி அவர்கள், நீங்கள் ய10தர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள். நேரான வழியை அடைந்து விடுவீர்கள் எனக் கூறுகின்றார்கள். அதற்கு அவ்வாறன்று நேரான வழியைச் சார்ந்த இப்றாஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைவைத்து வணங்கியவரல்ல என்று (கூறும்படி விசுவாசிகளுக்கு நபியே) நீர் கூறும். (விசுவாசிகளே) நீங்களும் கூறுங்கள். அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்ட இவ்வேதத்தையும் இப்றாஹீம் இஸ்மாயீல் இஸ்ஹாக் யஃகூப் முதலியவர்களுக்கும் இவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப்பெற்ற யாவற்றையும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும் மற்றைய நபிமார்களுக்கு இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் விசுவாசிக்கின்றோம். அவர்களிலிருந்து எவரையும் (நபியல்ல வென்று) நாம் பிரித்து விட மாட்டோம். அன்றி அவனுக்கே நாங்கள் முற்றிலும் வழிப்படுவோம். (விசுவாசிகளே) நீங்கள் எதன்மீது விசுவாசங் கொண்டீர்களோ அதேபோல் அவர்களும் விசுவாசங் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்துவிடுவார்கள். அவர்கள் புறக்கணித்து விடில் நிச்சயமாக (வீண்) பிடிவாதத்தில் தான் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி உங்களுக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன். மேலும் அவன் செவியுறுவோனும் நன்கறிந்தோனுமாக இருக்கின்றான் (அல்குர்ஆன் 2:135-137)

உண்மையில் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமுதாயம் முஸ்லிம் சமுதாயந்தான். இந்தச் சமுதாயந்தான் இனம் நிறம் நிலம் மொழி தேசியம் என்பனவற்றின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிப்பதுமில்லை. பாரபட்சமாக ஒருதலையாக நடந்து கொள்வதுமில்லை. இதற்கு அல்லாஹ் பின்வருமாறு நற்சான்றிதழை வழங்குகின்றான்.

(விசுவாசிகளே) நன்மையான காரியங்களை(ச் செய்யும் படி மனிதர்களை) ஏவி பாபமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசிக்கின்ற நீங்கள் தாம் மனிதர்களில் தோன்றிய சமுதாய்ஙகளிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள் (அல்குர்ஆன் 3:110)

இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட உன்னதமான சமுதாயத்தில்தான் அரேபியாவைச் சார்ந்த அப10பக்கர் (ரலி) அவர்களும் எத்தியோப்பாவைச் சார்ந்த பிலால்(ரலி)வர்களும் ரோமநாட்டைச் சார்ந்த ஸ_ஹைப்(ரலி)அவர்களும் பாரசீகத்தைச் சார்ந்த ஸல்மான் (ரலி)அவர்களும் ஈமான் எனற் இறைநம்பிக்கையின் அடிப்படையில் சகோதரர்களானார்கள். இவர்களைத் தொடர்ந்து வந்த தலைமுறையினரும் இப்படியே இருந்தனர். இவர்களின் தேசியம் இறைநம்பிக்கை இவர்களின் நாடு தாருல் இஸ்லாம் இங்கே ஆட்சிசெய்பவன் அல்லாஹ். ஆரசியல் நிர்ணயச் சட்டம் முதல் அனைத்துச் சட்டங்களும் அல்குர்ஆன். இந்தக் கொள்கைகளை இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டியாக வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்ட ஒவ்வொரு இலட்சியவாதியும் தன்னுடைய மனதில் மிகவும் ஆழமாகப்பதிய வைத்திடவேண்டும். அவர்கள் இநதக் கொள்கைகளிலிருந்து தங்களைத் திசை திருப்பும் அத்தனை முயற்சிகளிலிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். இவற்றிற்கு மாற்றமான மௌட்டீக கொள்கைகள் எங்கே இருந்து வந்தாலும் (பல நேரங்களில் இவை இன்றைய முஸ்லிம்களிடமிருந்தே வரலாம், வருகின்றன – மொழிபெயர்ப்பாளர்) அவற்றை வீழ்த்திட முஸ்லிம்கள் இந்த இலட்சியவாதிகள் விழிப்போடு இருந்திட வேண்டும். இணைவைப்பின் அதாவது நிராகரிப்பின் எல்லைகளைக்கூட எட்டிப்பார்த்திடக்கூடாது இந்த விவகாரங்களில் இஸ்லாத்தை இலட்சியாமாகக் கொண்ட என் உடன்பிறப்புகள். இங்கே இணைவைப்பது என்பது தாய்நாடு அதையே நீ ஆராதிக்க வேண்டும் எனவாய்ப் பேசப்படும் பேச்சுக்கள் முழக்கங்கள் உன்னுடைய வருவாயும் வாழ்வும் எந்த மண்ணிலிருந்து எந்த நிலப்பரப்பிலிருந்து வருகின்றதோ அதற்கே நீ விசுவாசமான இருந்திடவேண்டும் என்பனவாய் எடுத்து வைக்கப்படும் விவாதங்கள். எல்லா முஸ்லிம்களும் குறிப்பாக இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்ட இலட்சிய செம்மல்கள் அனைத்தையும் விட அல்லாஹ்வையும் அவனது இறுதித் தூதரையுமே அதிகமாக நேசிக்கவேண்டும். அவர்கள் தங்கள் இலட்சியத்தை அடையும் வரை அதாவது அல்லாஹ்வின் சொல்லை ஆட்சி செய்யும் சட்டங்களாக ஆக்கிடும் வரை அல்லது அந்த முயற்சியில் தங்களைத் தந்திடும்வரை எந்தத் தியாகத்தையும் செய்திடத் தயாராக இருந்திடவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே விசுவாசிகளை நோக்கி) நீர் கூறும் உங்களுடைய தந்தைகளும் உங்களுடைய மக்களும் உங்களுடைய துணைவர்களும் உங்களுடைய குடும்பத்தவர்களும் நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் பொருள்களும் நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து செய்துவரும் வியாபாரமும் உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள வீடுகளும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விடவும் அவனுடைய பாதையில் யுத்தம் புரிவதைவிடவும் உங்களுக்கு மிக்க விருப்பமானவைகளாயிருந்தால் (நீங்கள் உண்மை விசுவாசிகளல்ல. நீங்கள் அடையவேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும்வரையில் நீங்கள் எதிர்பார்த்திருங்கள். (உங்களைப் போன்ற) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 9:24)

இந்த இறைமொழிகள் அனைத்து முஸ்லிம்களுக்கும் தான். ஏதோ இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல. இன்னும் சொன்னால் இஸ்லாம்தான் அனைத்து முஸ்லிம்களின் இலட்சியமும். இந்த இலட்சியத்தில் அனைத்து முஸ்லிம்களும் எப்படி இருந்திட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே மேலே உள்ள இறைவசனம். இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டவர்கள் இஸ்லாத்தை நிலைநாட்டுவதை இஸ்லாமிய அரசை நிலைபெற்ச செய்வதை இலடசியமாகக் கொண்டவர்கள் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கின்ற இலடசியவீரர்கள் இவர்களைனவரும் ஜாஹிலிய்யா என்ற அஞ்ஞானத்தின் இயல்புகளை நன்றாக அறிந்து இருக்கவேண்டும். அதே போல் அவர்கள் தாருல் இஸ்லாம் தாருல் ஹர்ப் ஆகியவற்றின் இயல்புகளையும் நன்றாக அறிந்து இருக்கவேண்டும். இல்லையேல் குழப்பமே மிஞ்சும் அதேபோல் அல்லாஹ்வின் ஷாPஅத் முழமையாகச் செயல்படாத நிலபரப்பையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் முழுமையாகப் பின்பற்றப்படாத எந்த நிலப்பரப்பையும் தாருல் இஸ்லாம் என ஏற்றுக் கொள்வதற்கில்லை. இதிலும் நாம் மிகவும் தெளிவாக இருந்திட வேண்டும். தாருல் இஸ்லாம் என்பதில் இஸ்லாம் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அப்படியே பின்பற்றப்படும் அங்கே நிராகரிப்பு இணைவைப்பு மௌட்டீகம் ஆகியவற்றிற்குக் கிஞ்சிற்றும் இடமில்லை. அங்கே உண்மையும் வாய்மையும் ஆட்சியிலும் மக்கள் வாழ்க்கையிலும் உறைந்திருப்பதால் பொய்யும் மௌட்டீகமும் எங்கேயும் தலைகாட்டமாட்டா!.