Thursday, April 30, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 3

புரட்சி - திருக்குர்ஆனின் வழியில்

மக்காவில் அருளப்பட்ட இறைவசனங்களின் மூலம் இறைவன் உலகுக்கு தந்த ஒளி மக்காவில் அருளப்பட்ட திருமறையின் இறைமொழிகள் ஒரு கேள்விக்கு தெளிவாகவும் தீர்க்கமாகவும் விடை தந்து கொண்டே இருந்தன. 13 ஆண்டுகளாக இந்த விடை கொண்டு அந்த மக்கள் அல்லாஹ்வின் வழிநோக்கி அழைக்கப்பட்டார்கள். இந்த 13 ஆண்டுகளிலும் இந்தக் கேள்விக்கு விடைதந்த இறைவசனங்களின் அடிப்படைத் தன்மைகள் மாறவில்லை. ஆனால் இந்தக் கேள்விக்கு விடைதந்த பாங்கும் பாணியும் மாறிக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு முறையும் திருக்குர்ஆன் இந்தக் கேள்விக்குப் பதில் தந்த பாங்கில், அந்தக் கேள்வி அன்று தான் புதிதாக எழுப்பப்பட்டது போலும், அன்று தான் அதற்கான பதில் அருளப்பட்டது போலும் இருந்தது. மக்கமா நகர் காலம் முழுவதும் இந்த அடிப்படைக் கேள்விக்கு தெளிவு தருவதில், அதைக் கொண்டு அந்த மக்களை இந்தப் பேரியக்கத்தில் பிணைத்திடுவதில் திருக்குர்ஆன் தன் முழுக் கவனத்தையும் செலுத்திற்று. புதமையும் புரட்சியும் நிறைந்த இந்த மார்க்கத்திற்கு இந்தக் கேள்விக்கான பதில்தான் அடித்தளம். இந்தக் கேள்வி அதன்பதில் இரண்டு முக்கியமான அடிப்படைகளைக் கொண்டது.

முதலாவது அல்லாஹ்வின் ஏக இறைவனின் ஆளுமை ஆற்றல் அதிகாரம் ஆட்சி இவற்றின் எல்லை. இந்த ஏக இறைவனுக்கு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கும் அடியானின் பணிவும் பக்தியும் இரண்டாவது இறைவனுக்கும் அல்லாஹ்வுக்கும் அவன்பால் பணிவும் பக்தியும் கொள்ளும் மனிதனுக்கும் இடையேயுள்ள தொடர்பும் உறவும் பிணைப்பும் இந்த இரண்டு அடிப்படைகளுக்கும் தெளிவு தருகின்ற போது திருக்குர்ஆன் இந்த உலகம் முழுவதும் உள்ள மனிதர்களை ஒட்டுமொத்தமாக நோக்கத்தின் தெளிவையும் விளக்கத்தையும் வழங்கிற்று. அவர்கள் அரேபியாவில் வாழ்ந்தாலும் சரி அரேபியாவுக்கு வெளியே இந்த உலகம் முழுவதும் பரவி வாழ்ந்hலும் சரி அவர்கள் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்தாலும் சரி அதற்குப் பின்னே இந்த உலகத்தில் வாழவந்த மனித மகாக்கடலிலே கலந்தவர்களாக இருந்தாலும் சரி. அத்தனை மனிதர்களுக்கும் அத்தனை காலங்களுக்கும் பொதுவானவை திருக்குர்ஆன் தரும் தெளிவும் தீர்வும். இந்தத் தெளிவும் தீர்வும் மனிதனின் அடிப்படை இயல்புகளோடு தொடர்புடையன. அவை காலத்தால் ஞாலத்தில் வரும் மாறுதல்களால் மாறாதவை. எல்லாக் காலத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் ஏற்புடையவை. மக்காவில் ஆரம்பநாள்களில் அருளப்பட்ட இறைவசனங்களில் மனித வாழ்வின் தன்மைகள் இந்த உலகிலிருக்கும் ஏனைய படைப்பினங்களுக்கும் அவனுக்கும் உள்ள தொடர்புகள் ஆகியவை தெளிவுபடுத்தப்படுகின்றன.

· மனிதன் ஏன் படைக்கப்பட்டான்?
· அவன் இறுதியாக எங்கே செல்லவிருக்கின்றான்?
· அவனை உயிர் தந்து வாழவிட்டது யார்?
· அவனுடைய வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருவது யார்?
· அவன் காணவியலாத ஆனால் அவனால் உணரவும் அறியவும் முடிகின்ற அந்த ஒப்பற்ற ஆற்றல் மிக்கவன் யார்?
· வனப்பும் வியப்பும் மிக்க இந்த உலகைப் படைத்தது யார்?
· இந்த உலகை இயக்கிக் கொண்டிருப்பது யார்?
· இந்த உலகில் காணும் பல்வேறு அற்புதமான மாற்றங்களை யார் கண்பாணித்துக் கொண்டிருக்கின்றார்?
· இத்தனையையும் செய்து கொண்டிருக்கின்ற அல்லாஹ்விடம் மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

என்பனவற்றையெல்லாம் மக்காவில் அருளப்பட்ட அந்த இறைவசனங்கள் தெளிவுபடுத்தின. முதல் 13 ஆண்டுகளிலும் இவைபோன்ற அடிப்படை விஷயங்களுக்கே அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டது. தௌஹீத் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்ற அடிப்படையில் அத்தனை விளக்கங்களும் தரப்பட்டு அந்த மக்கள் இந்த அடிப்படையில் தோய்த்தெடுக்கப்பட்டார்கள். அவர்களின் உள்ளங்கள் இந்த அடிப்படைகளில் தெளிவடைந்து தேர்ச்சி பெற்ற பின்னரே ஏனையவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த அடிப்படைகளில் அந்த மக்கள் ஐயங்களுக்கு அப்பால் நின்றிட வேண்டும் என இறைவன் விரும்பினான் காரணம் இந்த மக்களைக் கொண்டுதான் இந்த மார்க்கத்தை நடைமுறைப் படுத்திடவும் இந்த உலகில் நிலைநாட்டிடவும் முடிவு செய்திருந்தான் இறைவன். இன்றைக்கு அல்லாஹ்வின் இந்த வழிகாட்டுதலை மீண்டும் நிலைநாட்டிட வேண்டும் என்பதை இலட்சியமாகக்கொண்டு செயல்படுவோர், இந்த வாழ்க்கை நெறியைப் பிரதிபலிக்கும் ஓர் உலக சமுதாய அமைப்பை உருவாக்க விரும்புவோர், இந்த அடிப்படையை ஆழ்ந்து கூர்ந்து கவனித்திட வேண்டும். இந்த அடிப்படைகளைத் தெளிவுபடுத்திட இந்த அடிப்படைகளில் அந்த சமுதாயத்தினரை தேற்சிப் பெறச் செய்திட திருக்குர்ஆன் 13 ஆண்டுகளை எடுத்திருக்கின்றது. இந்த 13 ஆண்டுகளிலும் இந்த சமுதாய் அமைப்பில் கொண்டுவரவிருக்கின்ற சட்டதிட்டங்கள் பற்றி விவாதிக்க வேண்டும் என்பதற்காக. இந்த அடிப்படை செய்தியிலிருந்து அணுவும் பிறழ்ந்திடவில்லை அல்குர்ஆன். இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்)அவர்களின் பணி தௌஹீத் இறைவன் ஒருவனே என்பதிலிருந்துதான் ஆரம்பித்தது. லா இலாஹ இல்லல்லாஹ_ அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற இந்த அடிப்படைதான். அத்தனை நபிமார்களும் மக்கள் முன்னே எடுத்து வைக்கும் முதற்செய்தியாக இருந்திட வேண்டும். இந்த அடிப்படையிலிருந்தே அவர்களின் புரட்சிப்பணி துவங்கிட வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டம் திட்டம். இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்)அவர்கள் மனித வரலாற்றில் ஒப்புவமையற்ற ஓர் சமுதாயத்தை உருவாக்கிக் காட்டினார்கள். அந்தச் சமுதாயத்தின் முன்பும் எடுத்து வைக்கப்பட்ட முதற்செய்தி இதுதான்.
அதாவது அந்த மக்கள் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற சத்தியத்திற்குச் சாட்சியங்களாக வாழ்ந்திட வேண்டும். உங்களுக்க உணவளித்து உங்களைப் பாதுகாத்து பராமரித்து வருபவன் அல்லாஹ்தான். இந்த அல்லாஹ்வை மட்டுமே நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதையே அந்த மக்களுக்கு விளக்கிச் சொன்னார்கள் இறைவனின் தூதர் (ஸல்)அவர்கள். அந்த மக்களின் அன்றைய நிலையை வைத்துப்பார்த்தால், அஞ்ஞான அந்தகாரத்தில் மூழ்கியிருந்த அந்த மக்கள் இந்த அடிப்படைக் கொள்கையை தௌஹீத் இறைவன் ஒருவனே என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வார்கள் என்பது நினைத்துப் பார்க்கவியலாத ஒன்று. அரபிமொழி அந்த மக்களுக்குத் தாய்மொழி. அரபி மொழியில் அதன் இலக்கியவளத்தில் தங்களை ஆழமாகப் பதித்துக் கொண்டவர்கள் அவர்கள். அந்த மொழியின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் நன்றாக அறிந்த அவர்கள் இலாஹ் இறைவன் என்ற சொல்லின் முழுப் பொருளையும் நன்றாக அறிவார்கள். அதேபோல் உளுகியாஃ என்றால் முழுமையான ஆளுமை எந்த இடைச் செருகலும் இடைத்தரகரும் இல்லாத ஏக அதிகாரம் ஆற்றல் என்பதையும் அந்த மக்கள் நன்றாக அறிவார்கள். இந்த முழமையான அதிகாரம் இந்த முழுமையான ஆற்றல் இந்த முழுமையான ஆளுமை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம் என்பதை ஏற்றுக்கொண்டால் தங்களிடம் அறுதியான அதிகாரம் செலுத்தி வந்த மதகுருமார்களின் கைகளிலிருந்து அதிகாரம் பறிக்கப்பட்டுவிடும். அந்த அதிகாரம் இனி அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். அதே போல் அந்த அதிகாரம் தங்கள் குலத்தின் தலைவர்களிடமிருந்து கோத்திரத்தின் தலைவர்களிடமிருந்து எடுக்கப்பட்டுவிடும். இனி அந்த ஏக இறைவனாம் அல்லாஹ்வே அதிகாரம் செலுத்துவான். அதே போல் செல்வத்தில் செழித்தவர்கள் என்பதனால் எல்லோர் மீதும் அதிகாரம் செலுத்தி வந்தார்களே அவர்களின் பிடியிலிருந்து அதிகாரம் அகற்றப்பட்டுவிடும். இனி அந்த அல்லாஹ்வுக்கே அனைத்து அதிகாரமும். இந்த உண்மைகள் அந்தத் (தௌஹீத்)இறைவன் ஒருவனே என்ற முழக்கத்தில் பளிச்சிட்டு பிரவாகமெடுத்து ஓடவதை அவர்கள் கண்ணெதிரே கண்டார்கள். லா இலாஹ இல்லல்லாஹ_ முஹம்மதர் ரசூலுல்லாஹ் அல்லாஹ் ஒருவனே இறைவன் முஹம்மத் (ஸல்)அவர்கள் அவனது திருத்தூதராவார்கள் என்ற திருக்கலிமாவை ஏற்றுக்கொண்டால் அடுத்த கணமே,

· எண்ணங்களில்
· இதயங்களில்
· மத அனுஷ்டானங்களில்
· வாழ்க்கை பிரச்சனைகளில்
· செல்வத்தை சேர்ப்பதில்
· செலவு செய்வதில்
· நீதி வழங்கப்படுவதில்
· திருமண ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில்
· வியாபார பரிவர்த்தனைகளில்
· பரிமாற்றங்களில்
· அண்டை அயலாரோடு உறவு வைத்துக் கொள்வதில்

சுருங்கச் சொன்னால் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் எல்லாத் துறைகளிலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களே வாழும். ஆதுவரை (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் வரை)பழகி வந்த பழக்கங்கள் சிந்தனைகள் கோட்பாடுகள் நடைமுறை நாகரிகங்கள் மதச்சடங்குகள் மூடப்பழக்கங்கள் அத்தனையும் எடுத்து எறியப்பட வேண்டும். இத்தனையையும் அந்த மக்கள் இந்த முழக்கம் தங்கள் காதுகளை எட்டியதும் உணர்ந்தார்கள் புரிந்தார்கள். அதே போல் அதிகாரம் எனக்குச் சொந்தம் என்று யார் யாரெல்லாம் அல்லாஹ்வுக்கச் சொந்தமான அதிகாரத்தை அபகரித்துக் கொண்டார்களோ அவர்களுக்கு நேருக்கு நேர் எடுத்து வைக்கப்படும் சவால்தான் இந்த அல்லாஹ் ஒருவன் என்ற முழக்கம் என்பதையும் அவர்கள் நன்றாக அறிவார்கள். லா இலாஹ இல்லல்லாஹ_ அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற இந்த சத்திய முழக்கம் மக்களைக் கட்டுப்படுத்தி தன் பிடிக்குள் வைத்திருந்த அத்தனை சடங்கு சம்பிரதாயங்களுக்கும் வாழ்க்கை வழிமுறைகளுக்கும் நெறிகளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்திட முன் வைக்கப்பட்ட ஓர் விடுதலை முழக்கமே. அல்லாஹ் அனுமதிக்காத அங்கீகரிக்காத சட்டங்களை ஏற்றி அவற்றை மக்கள் மேல் திணித்துக் கொண்டிருக்கும் அத்தனை ஆட்சியாளருக்கும் எதிராக எடுத்து வைக்கப்பட்ட முழக்கமே இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற இந்த உரிமைப்போர். இந்த விடுதலை முழக்கம் தௌஹீத் என்ற அறைகூவல் எடுத்து வைக்கப்பட்ட அரபி மொழியின் நெளிவு சுளிவுகளை அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அந்த மக்கள் நன்றாக அறிவார்கள். அந்த அரபு மக்கள் கண்டெடுத்து வைத்திருந்த வாழ்க்கை நெறிகளையும் சடங்கு சம்பிரதாயங்களையும் மூடப்பழக்க வழக்கங்களையும் அவர்களின் தலைவர்களையும் அதிகாரம் செலுத்தி ஆட்சி செய்பவர்களையும் சமருக்கு இழுக்கின்றது என்பதை உணர்ந்தார்கள். ஆகவே தான் அவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ_ என்ற இந்த முழுக்கத்தை வேறு சொற்களால் சொன்னால் இந்தப் புரட்சிப் பிரகடனத்தை வெறுப்பு குரொதம் கோபம் வன்முறை என்பனவற்றைக் கொண்டு எதிர்கொண்டார்கள். இந்தப் பிரகடனத்திற்கு எதிராக தங்கள் ஆற்றல்களையெல்லாம் ஒன்று திரட்டிப் போராடினார்கள். அவர்கள் எத்துணை வீம்போடும் வீறாப்போடும் எதிர்த்துப் போராடினார்கள் என்பதை வரலாறு நன்றாக அறியும். இங்கே சில வினாக்கள்.

· ஏன் இந்த பேரியக்கம் லா இலாஹ இல்லல்லாஹ_ என்ற முழக்கத்தை முன்வைத்து ஆரம்பித்தது?
· அனைத்தையும் அறிந்த இறைவன் ஏன் இந்த மகத்தான வாழ்க்கை நெறியை எல்லோரும் எதிர்க்கின்ற எதிர்த்துப் போராடுகின்ற ஓர் முழக்கத்தை (தௌஹீதை)முன்வைத்து ஆரம்பிக்கப் பணித்தான்?
· இந்த அழைப்பை இந்த முழக்கத்தை முன்வைத்து அழைக்கும் போது அந்த மக்கள், இந்த வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொண்டால் எண்ணற்ற துன்பங்களையும் துயரங்களையும் சந்திக்க வேண்டியது வரும் என்பதை அறிந்திருந்தும் அல்லாஹ் ஏன் இந்த முழக்கத்தை முன்வைத்து மக்களை இந்த வாழ்க்கை நெறியின் பக்கம் அழைக்கச் செய்தான்?
பெருமானார் (ஸல்)அவர்கள் ஏன் தேசியவாதத்தை முன் வைத்துத்தன் பணியைத் துவங்கவில்லை?

இறைவனின் இறுதித்தூதர் (ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற கண்ணியமிக்கப் பொறுப்பை ஏற்ற காலக் கட்டத்தில் அந்த அரேபியாவன் சூழல் என்ன என்பதைச் சற்று ஏறெடுத்துப் பார்ப்போம். அந்த அரபுநாட்டின் வளம் நிறைந்த பகுதிகள் எதுவும் அந்த அரபு மக்களின் கைகளில் இருக்கவில்லை. செழித்துக் கிடந்த பகுதிகளெல்லாம் அரபுக்கள் அல்லாத வேற்று மக்களின் பிடியிலேயே இருந்தன. அரபு நாட்டின் வடபகுதியில் ரோமர்களின் ஆதிக்கம் நிலை பெற்றிருந்தது. இந்த ரோமர்கள் தங்கள் ஆதிக்கத்திலிருந்த அரபு நிலப்பரப்பை; பரிபாலனம் செய்திட அரபுக்கள் சிலரையே நியமித்திருந்தார்கள். அரபு நாட்டு மக்களி;ன் கைகளில் இருந்ததெல்லாம் வறண்ட மணற்பாங்கான பகுதிகள் மட்டுமே. இவற்றில் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த நீர்ச்சுனைகளே. இவற்றிலிருந்த இந்த வறண்ட பகுதிகளிலிருந்த பெருஞ்செல்வம் (ஹிஜாஸ் திஹாமா நஜ்த் போன்ற பகுதிகள் இதில் அடங்கும்) இப்படி அரேபியாவில் வளம் வாழ்ந்த பகுதிகளெல்லாம் அரபுக்கள் அல்லாதவர்களின் ஆதிக்கத்திலிருந்த போது தான் பெருமானார்(ஸல்)அவர்கள் அந்த அரபுக்களால் நம்பிக்கைக்குரியவர்கள் உண்மையாளர்கள் என்றெல்லாம் புகழப்பட்டு போற்றப்பட்டு வந்தார்கள்.

முஹம்மத் (ஸல்)அவர்கள் நபி என்ற கண்ணியமிக்கப் பொறுப்பைப் பெறுவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அந்த அரபுக்களில் உயர்ந்த குலத்தினர் எனப் போற்றப்பட்டு வந்த குறைஷி குலத்தவர்கள் கஅபாவில் கருங்கல்லை எடுத்து வைப்பது யார்? என்ற வழக்கைத் தீர்த்திட முஹம்மத் (ஸல்)அவர்களை நடுவராக நியமித்தார்கள். இந்த அளவிற்கு அந்த மக்களின் நம்பிக்கை;குரிய நல்லவர்களாகத் திகழ்ந்தார்கள் முஹம்மத் (ஸல்)அவர்கள். இன்னும் முஹம்மத் (ஸல்)அவர்கள் அரபுக்களிடையே உயர்ந்த குலம் எனப் போற்றப்பட்டு வந்த குறைஷி குலத்தில் பிறந்தவர்கள். இந்த உயர்ந்த குலத்தில் உயர்ந்த கோத்திரம் எனப் பாராட்டப்பட்ட பனூஹாஷிம் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள்ட இத்துணை சீலமிக்க சிறப்புத் தகுதிகளைப் பெற்றிருந்தார்ள் முஹம்மத் (ஸல்)அவர்கள். அவர்கள் நினைத்திருந்தால் அரபு தேசியம் என்ற தேசியவாதத்தை முன்வைத்து அந்த மக்களின் உணர்வுகளைத் தூண்டி தங்களுக்குப் பின்னால் அணி திரள வைத்திருக்கலாம். இதை அவர்கள் மிக எளிதாகச் செய்திருக்க இயலும் ஏனெனில், மௌட்டிகத்தில் மூழ்கி இருந்த அந்த மக்கள் இனவாதம் பேசியே பழி தீர்த்தல் பழிக்குப் பழி தீர்த்தல் என ரத்தத்தை ஆறாக ஓட்டி பெருமை கொண்டாடியவர்கள். ஆகவே அரபு தேசியம் என்ற வெறியை ஊட்டி அந்த மக்களை ஒன்று திரட்டி ரோமர்களின் ஆதிக்கத்தையும் பாரசீகர்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துவிட்டு தனது ஆதிக்கத்தை அந்த மக்களிடையே நிலைநாட்டிய பின்னர் இறைவன் ஒருவன் தான் என்பதை எடுத்துச் சொல்லி இருந்தால் எதிர்ப்புகளைக் குறைத்திருக்கலாம்.
ஒரு பெரும் கூட்டத்தினரை முஹம்மத் (ஸல்)அவர்கள் தங்களுக்குப் பின்னால் அணி திரள வைத்திருக்கலாம். 13 ஆண்டுகாலம் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பெருவாரியாகக் குறைத்திருக்கலாம். ஆனால் முஹம்மத் (ஸல்)அவர்கள் எடுத்து வைத்தக் கொள்கை முழக்கமோ அரபுக்களிலேயே ஒரு பெரும் கூட்டத்தைத் தனக்கு எதிராகக் கிளர்ந்திடச் செய்துவிட்டது. காரணம் எல்லாம் அறிந்த அல்லாஹ் தனது திருத்தூதரை வேறு அடிப்படையில் வேறு வழிமுறையில் நடத்திட விரும்பவில்லை. அல்லாஹ் ஒளிவு மறைவின்றி ஐயங்களுக்கு அப்பாற் நின்று ஓர் உண்மையை அல்லாஹ் ஒருவனே என்ற உண்மையை அந்த மக்கள் ஆரம்பத்திலேயே ஒத்துக்கொள்ள வேண்டும் இந்த அடிப்படையை அடிப்படையாகக் கொண்டு தான் அந்த மக்கள் வளர வேண்டும் வாழ வேண்டும் என விரும்பினான். இந்தக் கொள்கையை அந்த மக்களிடம் எடுத்த எடுப்பிலேயே எடுத்து வைப்பதால் ஏற்படும் இன்னல்கள் எவையானாலும் தன் தூதர் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்றும் அல்லாஹ் விரும்பினான். தன் திருத்தூதர் மட்டுமல்ல தன் திருத்தூதருடன் அணிதிரளும் அத்தனை அடியார்களும் இதில் எதிர்ப்படும் எல்லா இன்னல்களையும் ஏற்றிட வேண்டும் என எதிர்பார்த்தான். நிச்சயமாக அல்லாஹ் தன் திருத்தூதரையும் தன்னை நம்பி தன் திருத்தூதரோடு சேர்ந்த நம்பிக்கையாளர்களையும் சிரமங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்க வேண்டும் என விரும்பியிருக்க மாட்டான். ஆனால் அவன் அறிவான் இந்தக் கொள்கையைத் தூய்மையாக நிலைநாட்டிட ஏற்புடைய வழி வேறொன்றுமில்லை என்பதை. அல்லாஹ்வின் அடிமைகள் ரோமர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு பாரசீகர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு அரபுக்களின் ஆதிக்கத்திற்கு ஆட்படுவது எந்த நியாயத்தின் கீழும் வராது என்பதை நீதிமிக்க அந்த இறைவன் நன்றாக அறிவான்.
அநியாயம் அடக்குமறை ஆதிக்கவெறி இவை எந்த உருவத்தில் வந்தாலும் யாரிடமிருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கில்லை. எல்லா நிலைகளிலேயும் அநியாயம் அநியாயமே. இந்த நீழ்நிலம் உலகம் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். இங்கே நீதிமிக்க அந்த அல்லாஹ்வின் ஆட்சியும் அதிகாரமும் மட்டுமே நிலைநாட்டப்பட வேண்டும். அல்லாஹ்வின் ஆட்சியை ஆளுமையை நிலைநாட்டிட அல்லாஹ் ஒருவனே இறைவன் என்ற இந்த உண்மை முழக்கமே முதன் முதலில் முன் நிறுத்தப்பட வேண்டும். அரபு மொழியை நன்றாக அறிந்த அந்த மக்களுக்கு இந்த (தௌஹீத்)முழக்கத்தைச் செவிமடுத்தவுடன், தேசியம் என்பது இந்த இறை நம்பிக்கையைக் கொண்டே நிர்ணயிக்கப்படும் அல்லாமல் மனிதன் பிறந்த இடத்தைக் கொண்டோ இன்ன பிறவற்றைக் கொண்டோ நிர்ணயிக்கப்பட மாட்டாது. இந்த வகையில் எந்த நிறத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அரபு தேசத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் ரோமன் தேசத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் பாரசீக தேசத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் இந்த இறை நம்பிக்கையின் அடிப்படையில் அனைவரும் சமமானவர்களே. திருக்குர்ஆனின் பார்வையில் இந்தத் திருக்கலிமா அதாவது தௌஹீத் முழக்கம் மட்டுமே மனிதர்களை ஒன்றாய்ப் பிணைக்கும் ஒரே சக்தி (என்ற உண்மைகள் நன்றாகத் தெரிந்தன).
தொடர்ந்து வரும்...

Friday, April 24, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 2

திருக்குர்ஆன் உருவாக்கிய ஒப்பற்ற சமுதாயம்

இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டிட வேண்டும். இஸ்லாத்தின் ஒளியில் முஸ்லிம்களைப் புனரமைத்திட வேண்டும் என் விழைவோர், ஓர் வரலாற்று உண்மையை ஊன்றிக் கவனித்திட வேண்டும். இது இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்திடவும் முஸ்லிம்களை முறையாகப் பயிற்றுவித்திடவும் பெரிதும் பயன்படும். வரலாற்றின் ஒரு காலக்கட்டத்தில் இந்தத் திருத்தூது இஸ்லாம் ஒரு பெரும் சமுதாயத்தை உருவாக்கிற்று. அந்த சமுதாயம் நபிகள் பெருமான்(ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற முதல் சமுதாயம் தான். இந்த முதல் சமுதாயத்தைப் போன்றதொரு சமுதாயத்தை வரலாற்றின் பிந்தைய காலக்கட்டத்தில் ஏன் மனித வரலாற்றின் எந்தக் காலக்கட்த்திலும் நாம் சந்திக்கவில்லை. இஸ்லாமிய வரலாற்றின் ஓட்டத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில மனிதப் புனிதர்கள் தோன்றுகின்றார்கள் என்றாலும் அந்த முதல் சமுதாயத்தைப் போன்றதொரு சமுதாயத்தை நாம் வரலாற்றில் சந்திக்கவே இயலவில்லை. அந்த முதல் சமுதாயத்தை உருவாக்கியவை இரண்டு பெரும் பொக்கிஷங்கள் அவை திருக்குர்ஆன் மற்றும் பெருமானார்(ஸல்) அவர்களின் சொல், செயல். இந்தத் திருக்குர்ஆன் அன்றுபொல் இன்றும் நம்மிடம் அப்படியே இருக்கின்றது. அது போலவே எம்பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் அணுவும் திரிபடாமல் நம்மிடம் இருக்கின்றது. சிலர் இப்படிக் கருதலாம் அன்று அந்த முதல் சமுதாயத்தினரிடையே எம்பெருமானார்(ஸல்) அவர்கள் இருந்தார்கள் இன்று நம்மிடையே அவர்கள் இல்லையே. இஸ்லாம் என்ற இந்த இறைவழிகாட்டுதல் நிலைநாட்டப்படவும் பலன்தரவும் பெருமானார்(ஸல்)அவர்கள் இருந்திட வேண்டியது நிரந்தரதேவை என்றிருந்திருந்தால் அல்லாஹ் இஸ்லாம் தான் இந்த உலகம் உள்ளவும் மனித இனத்திற்கு உள்ள இறுதி இறைவழி காட்டுதல் என்றாக்கி இருக்கமாட்டான். திருக்குர்ஆனை அறுதி நாள் வரை அப்படியே பாதுகாத்திடும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொணடிரு;கின்றான். ஏனெனில் அவன் நன்றாக அறிவான் இந்த இஸ்லாம் இந்த இறைவழிகாட்டுதல்கள் பெருமானார்(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னாலும் பலன் தரும். நிலைநாட்ட முடியும் (என்பதை இறைவன் நன்றாக அறிவான்) அதனால் தான் அந்தக் கருணையாளன் இறைவன் அந்த மனித மாண்பாளரைத் தன் கருணையின் பக்கம் அழைத்துக் கொண்டான். அதனால்தான் இந்த இஸ்லாத்தை இறைவனின் வழிகாட்டுதலை இந்த உலகம் உள்ளவரை மனிதனின் அறுதியான வழிகாட்டுதல் என அறிவித்தான். எம்பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் நம்மிடையே அப்படியே இருக்கும் போது பெருமானார்(ஸல்) அவர்கள் நம்மிடையே இல்லை என்பது நாம் நமது பொறுப்புக்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு கண்டெடுத்த வாதமே. இதனால் வரலாற்றில் அந்த முதல் சமுதாயத்தைப் போல் இன்னொரு சமுதாயம் அமையாமல் போனதற்கு வேறு காரணங்கள் உண்டு என்பதை நம்மால் உணர முடிகின்றது. இதனை ஆழ்ந்து கவனித்திடும் போது பல உண்மையான காரணங்கள் நமக்குத் தெரிகின்றன.


முதற்காரணம் : இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் உற்றத் தோழர்கள் தங்கள் தாகம் தணித்திட்ட முதல் தடாகம் திருக்குர்ஆன் தான் திருக்குர்ஆன் மட்டுந்தான். நபிகள் பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்வு வாக்கு என்பவையெல்லாம் இந்தத் தடாகத்தின் ஊற்றிலிருந்து பிறந்தனவே. ஆகவே தான் நம்பிக்கையாளர்களின் தாய் ஆயிஷா(ரலி)அவர்களிடத்தில் இறைவனின் தூதர் நபிகள் பெருமானார்(ஸல்)அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? என வினவப்பட்ட போது நபிகள் பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்க்கை திருக்குர்ஆனாக இருந்தது எனப் பதில் கிடைத்தது – அந்நஸயீ. அவர்கள் அப்படித் தங்களைத் திருக்குர்ஆனிடம் ஒப்படைத்து அதன் வழியில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதற்கான காரணம் அவர்களுக்கு அன்றைய சூழ்நிலையில் வழிகாட்டுவதற்கு வேறு மார்க்கங்களோ வழிகாட்டுதல்களோ நெறிமுறைகளோ இல்லை என்பதனால் அல்ல. அன்று


· அந்த மக்களிடையே ரோம நாட்டின் சட்டதிட்டங்கள் பண்பாடுகள் சித்தாந்தங்கள் சிந்தனைப் போக்குகள் இவையனைத்தும் இருக்கவே செய்தன.


· இந்த ரோம நாட்டுச் சட்டதிட்டங்களும் பண்பாடுகளும் தான் இன்று பீடுநடைபோடும் ஐரோப்பிய பண்பாடுகளின் அடிப்படைகள் எனப் போற்றப்படுகின்றன.


· அதே போல் கிரிஸ் நாட்டுப் பண்பாடுகளும் தத்துவங்களும் அறிவு விளக்கங்களும் அந்த மக்களிடையே பழக்கத்திலிருக்கவே செய்தன.


· பாரசீகத்துப் பண்பாடுகள் கலைகள் கொள்கைகள் மதவழிபாடுகள் அரசு முறைகள் இவையும் அந்த மக்களின் கைகளுக்கு எட்டவே செய்தன.


· சீனத்துச் சிந்தனைகளும்


· இந்தியாவின் புனஸ்காரங்களும் அந்த மக்களின் பார்வையில் படவே செய்தன.


· ய10தர்களின் பழக்கவழக்கங்களும்


· கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கைகளும் அவர்களிடையே செயலில் இருந்தன.


ஆகவே அந்த முதல் இலட்சியத் திருக்கூட்டம் திருக்குர்ஆனை மட்டுமே தங்களைத் தயாரிக்கும் ஆலையாக எடுத்துக் கொண்டது என்றால் வேறு கொள்கைகளோ கோட்பாடுகளோ வழிமுறைகளோ அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதனால் அல்ல. அவர்கள் வேற்றுக் கொள்கைகள் அவர்களை வழிநடத்துவதை விரும்பவே இல்லை. இதனால் தான் அன்று உமர்(ரலி) அவர்கள் தௌராத் வேதத்திலிருந்து சில வரிகளை எடுத்துக் காட்டியபோது இறைவனின் இறுதித் தூதர் நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் இறைவனின் பெயரால், நபி மூஸா(அலை) அவர்களே உங்களோடு இருந்தால் அவர்களுக்கும் என்னைப் பின்பற்றுவதைத்தவிர வேறு வழி இருந்திருக்காது என்று தெளிவு படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சி நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் அந்த முதல் சமுதாயத்தினரை முழுக்க முழுக்க இந்த இறைமறையாம் திருமறையிலேயே தோய்த்தெடுத்தார்கள். அவர்களை வேறு எந்தப் பாசறையிலும் பயிற்றுவிக்க விரும்பவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. அதனால் தான் உமர்(ரலி) அவர்கள் திருக்குர்ஆனுக்கு அப்பாற்பட்ட ஒரு வழிகாட்டுதலை எடுத்துக்காட்டிய போது தனது அதிருப்தியை வெளிக்காட்டினார்கள் நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள். இதையே வேறு சொற்களால் சொன்னால் இறைவனின் இறுதித் தூதர் நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் எண்ணத்தில் நினைப்பில் வாழ்வில் தூய்மையானதோர் சமுதாயத்தை உருவாக்க விரும்பினார்கள். அந்தத் தூய்மையான சமுதாயம் திருக்குர்ஆன் எனும் தூய்மையான பாசறையில் பயிற்சி பெறவேண்டும் என்று விரும்பினார்கள். ஆகவே அந்த முதல் சமுதாயத்தினர் வரலாற்றில் இணையற்றதோர் சமுதாயமாக இலங்கினார்கள். ஆனால் இதற்குப் பின்னால் வந்த சமுதாயத்தினர் திருக்குர்ஆனை மட்டுமல்லாமல் இதரக் கொள்கைகளிடமும் அடைக்கலம் தேடினார்கள். இவர்கள் தங்களைச் சுற்றி இருந்த சித்தாந்தங்களுக்கும் சிந்தனைப் போக்குகளுக்கும் தங்களை அடிக்கடி ஆட்படுத்திக் கொண்டார்கள். கிரேக்க நாட்டுத் தத்துவங்கள். பாரசீகத்துப் பெருங்கதைகள் ய10தர்களின் பழக்க வழக்கங்கள், கிறிஸ்தவ மத நம்பிக்கைகள் இவையெல்லாம் இந்தப் பிந்தைய சமுதாயத்தினரின் சிந்தனையைப் பாதித்தன. பின்னர் இவர்கள் திருக்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் தந்தபோது இந்த மாற்றுச் சிந்தனைகளின் தாக்கமும் உடனிருந்தன. பிந்தைய சமுதாயத்தினர் இந்த மாற்றுச் சிந்தனைகளுள் விரவிவந்த விளக்கங்களில் தங்களைத் தயாரித்துக்கொண்டதால் அவர்கள் அந்த முதல் சமுதாயத்தினரைப்போல் இருக்கவில்லை. இதை நாம் எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்லலாம்.


இரண்டாவது காரணம் : பின்னாளில் வந்த சமுதாயத்தினர் அந்த ஒப்புவமையற்ற முதல் சமுதாயத்தினரைப் போலல்லாமற் போனதற்கு இன்னொரு அடிப்படைக் காரணமும் உண்டு. அது திருக்குர்ஆனிலிருந்து பாடமும் படிப்பினையும் பெறும் பாங்கினைக் குறித்தது. அந்த முதல் சமுதாயத்தினர் வெறுமனே ஓசையிட்டு ஓதிவிட்டு ஒதுக்கி வைக்கின்ற ஒன்றாகத் திருக்குர்ஆனை அணுகவில்லை. அதே போல் சில பல புதிய தகவல்களைத் தருகின்ற தகவல் பெட்டகம் என்ற நிலையிலேயும் அவர்கள் திருக்குர்ஆனை அணுகவில்லை. அதே போல் சில விஞ்ஞானப் புதிர்களை அவிழ்க்கும் நூலாகவும் அவர்கள் திருக்குர்ஆனை அணுகவில்லை. அவர்கள் திருக்குர்ஆனின் பக்கம் திரும்பியதெல்லாம் தங்களது வாழ்வை எப்படி வழிநடத்த வேண்டும் என் அல்லாஹ் கட்டளை இடுகிறான் என்பதைத் தெரிந்து உடனேயே நடைமுறைப்படுத்துவதற்காகவே. போர்க்களத்தில் முன்வரிசையிலே நிற்கும் ஓர் போர் வீரன் தனது முதன்மை தளபதியிடமிருந்து என்னக்கட்டளை வரும் என்ன வழிகாட்டுதல் வரும் என எப்படி எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பானோ, இனி அந்தக் கட்டளைகள் வந்ததும் நிமிடமும் தாமதப்படுத்தாமல் எப்படிச் செயல்படுவானோ.. அதே போல் தான் அந்த மக்கள் திருமறையின் கட்டளைகளுக்குக் காத்துக்கிடந்தார்கள். அந்தக் கட்டளைகள் கிடைத்தவுடன் சற்றும் தயக்கமோ தாமதமோ காட்டாமல் அந்தக் கட்டளைகளை அசைபோட்டுக் கொண்டிருக்காமல் செயல்படுத்தினார்கள். அதாவது தங்கள் வாழ்வை அந்த வழிகாட்டுதல்களின் வழி அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் ஒரே நேரத்தில் ஏகமாய் அமாந்து பல வசனங்களை அல்லது பல அத்தியாயங்களை ஓதுவதில்லை காரணம் அப்படிச் செய்தால் ஒரே நேரத்தில் பல பொறுப்புக்களை தாங்கள் சுமந்திட வேண்டியது வரும் என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள். மிக அதிகமாக அhவ்கள் பத்துத் திருக்குர்ஆன் வசனங்களையே ஓதுவார்கள். மனதிற் நிறுத்திக் கொள்வார்கள். அவற்றின் வழியில் தங்கள் வாழ்வை வடிவமைத்துக்கொள்வார்கள். இப்படித்தான் அவர்கள் திருக்குர்ஆனை அணுகினார்கள் என்பதை நாம் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)அவர்கள் வழியாக அறிகின்றோம். திருக்குர்ஆனின் கட்டளைகள் வாழ்க்கையில் செயல் படுத்திடத்தான் என்ற உணர்வால் உந்தப்பட்டு அவர்கள் திருக்குர்ஆனின் கட்டளைகளைச் செயல்படுத்திய செயல்பாட்டு ஓட்டத்தி;ல் அவர்கள் திருக்குர்ஆன் அள்ளித்தந்த அறிவுப் பொக்கிஷங்களை அள்ளிப்பருக்pனார்கள். அதே போல் திருக்குர்ஆன் வழங்கிய இலக்கிய நயங்களை ரசித்தார்கள் சுவைத்தார்கள். அந்த முதல் தலைமுறையினர் திருக்குர்ஆனை ஓய்வாக அமர்ந்து ஒய்யாரமாய்ப் படித்து ரசித்திடத்தான் என்ற அடிப்படையில் அணுகி இருப்பார்களேயானால் அவர்கள்


· இறைவனை அஞ்சி வாழ்வதில்
· வேறு யாருக்கும் அஞ்சாது வாழ்வதில்
· ஒழுக்கத்தில்
· நீதியை நிலைநாட்டுவதில்
· தீமைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்திடுவதில்
· பிறர் உரிமைகளைப் பேணி நடந்திடுவதில்
· வழங்கி வாழ்வதில்
· வீரத்தில் விவேகத்தில்


அத்தகையதொரு ஈடிணையற்றச் சமுதாயமாக உருவாகி இருக்க இயலாது. திருக்குர்ஆனின் கட்டளைகள் தங்கள் வாழ்வை வடிவமைத்திட என்ற விழிப்புடன் அவர்கள் திருக்குர்ஆனை அணுகியதால் திருக்குர்ஆனின் போதனைகளைச் செயல்படுத்தித் தங்கள் வாழ்வை வடிவமைத்திடுவது அவர்களுக்கோர் பளுவாகத் தோன்றிடவில்லை. மகிழ்ச்சியான சாதாரண நடைமுறை சாத்தியமாகவே பட்டது. இதனால் அவர்கள் திருக்குர்ஆனின் கட்டளைகளின் நடமாடும் விளக்கங்களாக வாழ்ந்தார்கள். சிலரது அறிவில் வாழும் வழிகாட்டுதல்களாகவோ நூல்களில் வாழும் சித்தாந்தங்களாகவோ திருக்குர்ஆனின் கட்டளைகள் இருந்திடவில்லை. திருக்குர்ஆனின் கட்;டளைகள் அந்த மக்களின் வாழ்க்கையில் வெளிப்படும் வழிகாட்டுதல்களாக வாழ்ந்தன. அவர்கள் திருக்குர்ஆன் போதித்த நம்பிக்கையின் கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாக மிளிர்ந்தார்கள். இதனால் தான் அவர்களின் வாழ்க்கை மட்டும் மாறிப்போய் விடவில்லை. மனித இனத்தின் வரலாறே மாறிப்போய் விட்டது.


தங்கள் வாழ்வை திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்களின் வழி அமைத்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு அணுகுகின்றவர்களிடம் மட்டுமே திருக்குர்ஆன் தன் இரகசியங்களையும் அழகையும் வனப்பையும் திறந்து காட்டும்.


இன்னும் சொன்னால் திருக்குர்ஆன் வரலாற்றுக் குறிப்புகளின் பெட்டகமாகவோ விஞ்ஞான உண்மைகளை விளம்பும் குறிப்பிடமாகவோ இலக்கிய நயத்தில் இணையற்று இலங்கிட வேண்டும் என்பதற்காகவோ அருளப்பட்டதன்று. அது வாழ்க்கையை வடிவமைக்கும் வழிகாட்டுதல்களின் தொகுப்பு. இந்த வகையில் அது வரலாற்று குறிப்புகளையும், விஞ்ஞான உண்மைகளையும் கவின்மிகு இலக்கிய நடையையும் நயங்களையும் கொண்டது. திருக்குர்ஆன் எந்த வாழ்க்கை நெறி வாழ்க்கை முறை அல்லாஹ்வின படைத்தவனின் அங்கீகாரம் பெற்றது (என்பதை எடுத்துச்சொல்வது) அந்த மனிதர்களை நடமாடும் திருக்குர்ஆனின் வசனங்களாக ஆக்கிட வேண்டும் என்பதை மனதிற்கொண்டு அல்லாஹ் தன்னுடைய வழிகாட்டுதல்களை அந்த மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக அருளிச் செய்தான். அல்லாஹ் தன் அருள்மறையில் இதுபற்றி இப்படிக் கூறுகின்றான்.

மனிதர்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு இந்தக் குர்ஆனைப் பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதனைச் சிறுகச்சிறுகவும் இறக்கி வைத்தோம் - அல்குர்ஆன் (17:106)


திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள அத்தனை வசனங்களும் ஒரே நேரத்தில் ஒரேயடியாக இறக்கப்பட்டவையன்று. அவை அவ்வப்போது அந்த மக்களின் தேவைக்கேற்ப அருளப்பட்டவை. ஒரு வசனம் அல்லது ஓரிரு வசனங்கள் அந்த மக்களிடையே தோன்றிய சிறப்பான சூழ்சிலை குறித்து அருளப்படும். சில வினாக்கள் அந்த மக்களிடையே எழுந்தபோது திருக்குர்ஆன் வசனம் அல்லது வசனங்கள் அருளப்பட்டு அந்த மக்களின் ஐயங்கள் அகற்றப்பட்டன. இதனால் அவர்கள் செயற்களத்தில் எந்த நெருடலும் இல்லாமல் தொடர்ந்து இருந்து வந்தார்கள். இப்படி அந்த மக்கள் திருக்குர்ஆன் வசனங்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் வாழ்ந்து வந்தார்கள். இதனால் அந்த மக்களது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களின் வழி அமைந்து கொண்டிருந்தது. அவர்கள் வானவர்கள் புடைசூழ அல்லாஹ்வின் அழகிய அடியார்களாக வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் அன்பான வழிகாட்டுதல்கள் வழி அவர்கள் வாழ்ந்ததால் அவர்களுக்கு அல்லாஹ்வின் அருளும் அனுகூலங்களும் கிடைத்துக் கொண்டே இருந்தன. இதனை அவர்கள் உணர்ந்தார்கள். அகம் மகிழ்ந்து அல்லாஹ்வின் கட்டளைகளைக் காத்திருந்து காலந்தவறாமல் கடைப்பிடித்து வாழ்ந்தார்கள். ஆகவே நபிகளார்(ஸல்)அவர்களின் உற்றத் தோழர்கள் திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்கள் வாழ்ந்து காட்டுவதற்கே என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டார்கள். ஆனால் பிந்தைய தலைமுறையினர் திருக்குர்ஆனை ஓர் இலக்கிய நூல் என்றும் சில விஞ்ஞான உண்மைகளை அறியத்தரும் நூல் என்றும் அணுகினார்கள். ஆதலால் தான் இந்தப் பிந்திய தலைமுறையினரால் அந்த முதல் தலைமுறையினரைப் போல் தலையெடுத்து நிற்க இயலவில்லை.


மூன்றாவது காரணம் : பெருமானார்(ஸல்)அவர்களின் காலத்தில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் அந்தக்கணம் முதல் அவர் இஸ்லாம் அல்லாத தனது பழைய பழக்கவழக்கங்களிலிருந்து தனது முந்தைய சிந்தனைகளிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொள்வார். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்பது தனது வாழ்க்கையை முற்றாக மாற்றியமைத்துக் கொள்வதாகும் என்பதை நன்றாக உணர்ந்தார். தன்னுடைய முந்தைய வாழ்க்கை நிகழ்வுகளை எண்ணி எண்ணி வேதனைப்பட்டார். அறியாமையால் தான் செய்த தவறான செயல்களை எண்ணி உள்ளமெல்லாம் நொந்தார். அந்தப் பழைய பழக்கங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் கில்லி எறிந்தார். திருக்குர்ஆனின் ஒளியில் தனது வாழ்வை வடிவமைத்துக் கொண்டிருக்கும் போது எப்போதாவது தங்கள் மனம் அந்தப் பழைய இருண்ட நாள்களின் பக்கம் திரும்பினால் இந்த நேர்வழியிலிருந்து தாங்கள் சற்றேனும் தடம் மாறிட நேரிட்டால் தாங்கள் ஒரு பெரும் பாவத்தைச் செய்து விட்டதாகப் பதறினார்கள். பரிதவித்தார்கள் ஓடோடிச் சென்று பாவமன்னிப்பிற்காக மன்றாடினார்கள். இதனை அவர்கள் தங்கள் அடிமனதின் ஆழத்திலிருந்து செய்தார்கள். பின்னர் தங்கள் வாழ்வை திருக்குர்ஆனின் வழிகாட்டுதலின் வழி மாற்றிக் கொள்வார்கள். அவர்கள் தங்களைப் பிணைத்திருந்த அத்தனையையும் துறந்து திருக்குர்ஆனின் வழிகாட்டுதலுக்குள் தஞ்சம் புகந்த பின்னர் தங்களுடைய முந்தைய வாழ்விலிருந்து தங்களை முற்றாக விடுவித்துக் கொண்டார்கள் என்பது மட்டுமல்ல திருக்குர்ஆனின் நிழலில் தங்களது வாழ்க்கை அடி முதல் முடி வரை மாறிப்போய் விட்டதைக் கண்டார்கள். இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்ட நாள் முதல் அவர்கள் திருக்குர்ஆனின் நடமாடும் விளக்கங்களாக மாறினார்கள். ஜாஹிலிய்ய நாள்களின் பழக்கவழக்கங்கள் அறியாமை காலத்து இஸ்லாத்திற்கு முந்தைய காலத்து பழக்கவழக்கங்களை பண்பாடுகளை கொள்கைகளை கோட்பாடுகளை விட்டுவிடுவது தான் பல தெய்வ கொள்கையிலிருந்து விடுபடுவது என்று பொருள்படும். பின்னர் தம் வாழ்வை திருக்குர்ஆனின் வழியில் மட்டும் அமைத்துக் கொள்வது தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்று பொருள்படும்.

இதை அந்தத்தலைமுறையினர் நன்றாக அறிந்திருந்தார்கள். இப்படி அறியாமைக் காலத்துப் பழக்கவழக்கங்களிலிருந்து தங்களை விடுவித்திடவும் இஸ்லாத்தில் திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்களில் தங்களை முற்றாகப் பிணைத்திடுவதிலும் ஏற்படும் இழப்புகளை இன்னல்களை அவர்கள் இன்முகங்காட்டி வரவேற்றார்கள். அதில் அவர்கள் கிஞ்சிற்றும் கவலை கொள்ளவில்லை. நம்மைச் சுற்றியும் மௌட்டிகக் கொள்கைகள் பல தெய்வக் கொள்கைகள் மண்டிக் கிடக்கின்றன. அத்தோடு அறைகூவி அழைக்கவும் செய்கின்றன. இந்த அறியாமையை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் அன்றைய நிலையைவிட சற்று வலுவாக நம்மை வளைத்துப் பிடித்துள்ளன. இத்தோடு நில்லாமல் நம்மைச் சுற்றியிருக்கும் சுற்றுப்புறச்சூழல் அறியாமையில் புரையோடிக் கிடக்கின்றது. ஏன் அவை அறியாமையின் அசைக்கவியலாத பிடியில் சிக்குண்டு கிடக்கின்றன.

இந்த அறியாமையை அடிப்படையாகக் கொண்ட சூழ்நிலையின் தாக்கம் நமது எண்ணங்களில் நமது சிந்தனைகளில் நமது பழக்க வழக்கங்களில் நமது இங்கிதங்களில் நமது பண்பாட்டில் நமது கலாச்சாரத்தில் நமது கலையில் நமது இலக்கியங்களில் நமது நடைமுறை சட்டங்களில் திட்டங்களில் நிறைந்து காணப்படுகின்றது. எந்த அளவிற்கு என்றால் இவற்றில் பலவற்றை அதாவது இஸ்லாத்திற்கு எதிரான அறியாமையை அடிப்படையாகக் கொண்டவற்றை நாம் இஸ்லாம் என்று சொல்லிச் செயல்படுத்திடும் அளவிற்கு இவற்றின் தாக்கம் நம்முன் ஊடுருவிவிட்டது. இதனால் தான் பல இஸ்லாமிய எண்ணங்களும் கோட்பாடுகளும் நம் இதயங்களுக்குள் நுழைய மறுக்கின்றன. இதனால் தான் நமது உள்ளங்கள் இஸ்லாத்தின் போதனைகளால் விழிப்படையவும் விரிவடையவும் இயலாமற் போய்விட்டன. இப்படி மாற்றுச் சித்தாந்தங்களும் வேற்றுக் கொள்கைகளும் நம்முள் ஊடுருவி நிலைபெற்று விட்டதால்தான் நம்மால் அந்த முந்தைய சமுதாயத்தினரைப் போன்றதொரு சமுதாயமாக உருவாகிட இயலவில்லை. ஆகவே நாம் நமது பணியின் முதற்கட்டமாக இஸ்லாத்திற்கு எதிரான பழக்க வழக்கங்களையும் கொள்கைக் கோட்பாடுகளையும் விட்டொழிந்திட வேண்டும். இஸ்லாம் அல்லாத இந்த அறியாமைக் காலத்து சூழ்நிலைகளிலிருந்தும் அவை ஏற்படுத்திய நிறுவனங்களிலிருந்தும் நாம் பல பலன்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். அவற்றையும் விட்டுவிட்டு நாம் வெளியே வந்தாகவேண்டும் இவற்றால் நமக்கு எத்துணைப் பெரிய இழப்புகள் ஏற்பட்டாலும் சரியே இன்றைய இஸ்லாமிய இயக்கங்களின் முதல் தேவையும் இதுவே. அந்த முதல் சமுதாயத்தினரைப் போலவே நாம் வழி காட்டுதல் பெறும் அடிப்படைகளாக திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்களைக் கொள்ள வேண்டும்.


அல்லாஹ் எந்தவித வழிகாட்டுதல்களை இறுதிநாள் வரை பாதுகாப்பதைத் தன் பொறுப்பு என ஏற்றுக்கொண்டானோ அந்த வழிகாட்டுதலின் பக்கம் திரும்பியாக வேண்டும்.


திருக்குர்ஆன் என்ற இந்த அறுதி வழிகாட்டுதல்


· நாம் இந்த உலகை எப்படி அணுகிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றதோ
· இந்த உலக வாழ்க்கையை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றதோ
· நாம் நமது கொடுக்கல் வாங்கல்களை எப்படி நடத்திட வேண்டும் என எதிர்பார்க்கின்றதோ அப்படியே நமது வாழ்வை நாம் வடிவமைத்திட வேண்டும். இன்னும் நாம் எப்படிச் சிந்திக்க வேண்டும்

செயல்பட வேண்டும் என்பவையெல்லாம் இந்த அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களிலிருந்தே பெறப்பட வேண்டும். இதில் நம்மைச் சுற்றியுள்ள அறியாமையை (இஸ்லாம் அல்லாதவை)அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் எள்முனை அளவு கூட தங்கள் தாக்கத்தை ஏற்படுத்திவிடாமல் தடுத்திட வேண்டும். திருக்குர்ஆன் என்ற இந்தத் தூய்iமாயன வழிகாட்டுதலின் பக்கம் திரும்பிடும்போது அதன் வழிகாட்டுதல்களை அறிந்திட வேண்டும். அறிந்ததை அப்போதே அந்தக் கணமே அப்படியே செயல்படுத்திட வேண்டும். செவியில்பட்டதைச் செயலில் கொண்டுவந்தோம் என் வாழ்ந்திட வேண்டும். விவாதங்கள் செய்திட வேண்டும். அந்த விவாதம் தரும் இதத்தில் சுகங்காண வேண்டும் என்ற எண்ணங்கள் எங்கேயும் எந்த நிலையிலும் தலைகாட்டிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் நாம் எத்தகைய மனிதராக ஆகவேண்டும் எனத் திருக்குர்ஆன் எதிர்பார்க்கின்றதோ அத்தகையதோர் மனிதனாக நாம் மாறிட வேண்டும். இப்படி நம்மையும் நாம் சார்ந்த சமுதாயத்தையும் திருக்குர்ஆனின் வழியில் வடிவமைத்திடும் பாதையில் திருக்குர்ஆன் தரும் இலக்கிய நயம் சொற்சுவை எதுகை மோனையின் இயல்பான இணைப்பு. திருக்குர்ஆன் சொல்லும் வரலாற்று உண்மைகள் சமுதாயங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றிய குறிப்பான புதுமையான சுவைதரும் செய்திகள், திருக்குர்ஆனின் தர்க்கத்திறமை, எதிர்ப்போரை வாகைகாண அது எடுத்துவைக்கும் எதிர்வாதம், மறுமை என்ற இறப்பிற்குப் பின்னால் வரும் வாழ்க்கையின் இரகசியங்கள் சுவர்க்கத்தின் வனப்பு இவையெல்லாம் எதிர்ப்படும்.

இவற்றையெல்லாம் அனுபவித்துக் கொண்டே நாம் நம்மை நமது சமுதாயத்தை அதன்வழியில் வார்த்திடும் தலையாயப் பணியைத் தடுமாறாமல் செய்திட வேண்டும். இந்த மகத்தான பணியை நம்மைச் சீரமைப்பது திருக்குர்ஆனின் பாதையில் வடிவமைப்பது என்பதில் ஆரம்பித்து இந்த (ஜாஹிலிய்யா)அறியாமையில் உழலும் (இஸ்லாம் அல்லாத சமுதாயத்தை)சமுதாயத்தின் அடிப்படையையே மாற்றி, அதனையும் இஸ்லாமிய மயமாக்கிவிடுவது என்பதில் முடிந்திட வேண்டும். இந்த இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்துவதின் முதல் அடியாகத்தான் நம்மை இந்த (இஸ்லாம் அல்லாத)அறியாமைத் தத்துவங்களின் எல்லாவிதமான தாக்கங்களிலிருந்தும் விடுவித்திட வேண்டும். இதில் இந்த இஸ்லாத்திற்குப் புறம்பான கொள்கைகளின் தற்காலிகக் கவர்ச்சி எத்துணை அலங்காரமானதாக இருந்தாலும் அதனை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவற்றோடு ஊசிமுனை அளவுக்குக்கூட நாம் சமரசம் செய்திடக்கூடாது. நமது பாதை வேறு, அதன் பாதை (இஸ்லாம் அல்லாத இதரக் கொள்கைகளின் பாதை) வேறு. நாம் அவற்றின் வழியில் கடுகளவு தூரமே சென்று விட்டால் கூட நாம் நமது இலட்சியத்தில் முழுமையாகத் தோல்வியடைந்து விடுவோம். (அல்லாஹ் காப்பாற்றட்டும்). இன்றைய சூழ்நிலையில் இந்தப் பாதையில் (திருக்குர்ஆனின் பாதையில்) மட்டுமே நாம் பயணத்தைத் துவங்கினால், எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாகுவோம். நாம் கடுமையான விலைமதிப்பற்றத் தியாகங்களைச் செய்திட வேண்டியது வரும். இதையெல்லாம் நாம் நன்றாக அறிவோம். ஆனால் நாம் ஒப்புவமையற்ற அந்த முதல் சமுதாயத்தைப் போல் ஆகிவிட வேண்டும் என்றால் இதைத்தவிர நமக்கு வேறு வழியே இல்லை. ஆகவே இஸ்லாமிய எழுச்சியை ஏற்றிவைக்கும் முதல் நடவடிக்கையாக நாம் பெருமானார்(ஸல்)அவர்களின் உற்றத் தோழர்களைப் போல் இஸ்லாம் அல்லாதவற்றிலிருந்து வெளியேறிட வேண்டும். திருக்குர்ஆனிடம் முழுமையாகத் தஞ்சம் புகுந்திடவேண்டும்.

தொடர்ந்து வரும்...

Monday, April 20, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 1

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!


முஸ்லிம் உம்மத்தின் மறுமலர்ச்சிப்பாதை பற்றி 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூற்களில் அஷ்ஷஹீத் செய்யித் குத்ப் அவர்கள் இறுதியாக எழுதிய “இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்” என்ற நூல் முக்கியமானது. ஜமால் அப்துல் நாசரின் எகிப்து அரசாங்கம், அரசைக் கவிழ்க்க சதி செய்தார் என அவருக்கு எதிராக தயாரித்த குற்றப்பத்திரிகைக்கு இந்நூலிலிருந்தும் சான்றுகள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் அவர் எகிப்து அரசினால் தூக்கிலிடப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார். ஒரு ஷஹீதின் இறுதி வார்த்தைகளான இந்நூலின் பகுதிகளை உம்மத்தின் மறுமலர்ச்சி நோக்கி இயங்கும் முஸ்லிம்களுக்காக இங்கே தருகிறோம்.



இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்
ஆசிரியர் : ஷஹீத் செய்யித் குதூப் (ரஹ்)



இந்நூலுக்கு ஷஹீத் செய்யித் குதுப் (ரஹ்) அவர்கள் வழங்கிய முன்னுரை

மனித இனம் தனது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தேவைப்படும் மாண்புமிக்க நெறிகளை இழந்து நிற்கின்றது. இதனால் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றது மனித இனம். வளர்ச்சியில் வானத்தை எட்டி முட்டி நிற்கின்றோம் என மார் தட்டிய மேலைநாடுகள் கூட மனித இனம் மனித இனமாக வாழ்ந்திட வழி காட்டிட வழி தெரியாமல் அங்கலாய்த்து நிற்கின்றன. (செய்யித் குதுப் அவர்கள் எகிப்தின் முதன்மைக் கல்வி கண்காணிப்பாளராக இருந்த போது இந்த மேலைநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவற்றின் ஒழுக்க வீழ்ச்சியை நேரில் கண்டார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.) மேலை நாடுகள் இன்று வரை பிரஸ்தாபித்துப் பேசி வந்த தத்துவங்கள் அவற்றைக் காப்பாற்றிடவில்லை. கீழை நாடுகளைக் குறைத்தும் குத்தியும் பேசி வந்தன அந்த மேலை நாடுகள். ஆனால் பல நேரங்களில் இந்தக் கீழை நாடுகளை அண்டித்தான் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்திட்டன இந்த மேலைநாடுகள். இப்படிச் சொல்லி விடுவதால் இந்தக்கீழை நாடுகள் மேலை நாடுகளை விஞ்சிக் கீர்த்தி பெற்று விட்டன என்றில்லை. இந்தக்கீழை நாடுகளில் பல தங்களைக் கம்ய10னிசக் கொள்கையின் ஒளிவிளக்குகள் எனப் பிரகடனப்படுத்தின. உண்மையில் இந்த நாடுகள் எதிலும் கம்ய10னிசம் எள்ளளவும் வாழவில்லை. கம்ய10னிசம் என்ற இந்த மார்க்சிசம் வறுமையிலே மக்களை உழலவிட்டு உரிமைகளே அவர்களுக்கு இல்லை என ஆக்கி வேடிக்கை பார்க்கும் கொடுங்கோல் ஆட்சிகளிலே தான் எடுபடும். எங்கே எப்போது மனிதன் வறுமையிலிருந்தும் ஏழ்மையிலிருந்தும் விடுபட்டு விட்டானோ அந்த நொடியில் கம்ய10னிசம் அவனுடைய எதிரியாக மாறிவிடும். இதன் இன்னொரு வேதனையும் வேடிக்கையும் என்னவெனில் அநியாயமும் அக்கிரமும் செய்யும் ஆட்சியாளர்களின் மண்ணிலே கூட கம்ய10னிசம் எடுபடாமல் போய்க்கொண்டிருக்கின்றது.
கம்ய10னிசம் முழுமையாகச் செயல்படுகின்றது எனப் பிரகடனப்படுத்தப்படும் ரஷ்யாவிலேயே அது வாழ முடியாமல் வதைபடுகின்றது. (இன்று அது மாஸ்கோவில் மாண்டுவிட்டது. இது செய்யித் குதுப் அவர்கள் 1964களில் எழுதியது.) தனக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்திட இயலாமல் வேற்று நாடுகளிலிருந்தும் மாற்றுக் கொள்கையைக் கொண்டவர்களிடமிருந்தும் இறக்குமதி செய்து தனது தங்க வளத்தைத் தாரை வார்த்துத் தந்து கொண்டிருக்கின்றது கம்ய10னிசம். கழனிகளும் காடுகளும் அரசுக்கே சொந்தம் என்று பொதுவுடைமை பேசி அரசே விவசாயம் செய்யும், விநியோகம் செய்யும் என்ற பிடுங்கி பறிக்கும் கொள்கைகளால் ஏற்பட்ட குளறுபடி தான் கம்ய10னிச புரட்சி பேசிய நாடுகளில் உணவுப் பஞ்சம். சுருங்கச் சொன்னால் மனிதனின் இயற்கையான இயல்புக்கு எதிராகப் போர் தொடுத்திடும் போக்கைக் கொண்டது தான் கம்ய10னிசத்தின் மிகப் பெரிய பலவீனம். இதனால் அது அழிவைத் தேடி விரைந்தோடிக் கொண்டிருக்கின்றது. மேலை நாடுகளின் முதலாளித்துவக் கொள்கைகள் மனிதனுக்கு வேண்டிய உயரிய வழிகாட்டுதல்களை வழங்கத் தவறி விட்டதால், கீழை நாடுகள் அதாவது கம்ய10னிச நாடுகள் அழிவைத் தேடி ஓடிக்கொண்டிருப்பதால், இந்த உலகை காப்பாற்றிட ஒரு கொள்கை அவசரமாகத் தேவைப்படுகின்றது.
இந்த மேலைநாடுகள் அது போலவே இந்தக் கீழைநாடுகள் விஞ்ஞானத்தில் அறிவுத்துறையில் தாங்கள் பெற்றிருந்த வளர்ச்சியிலே தளர்ச்சிக் கண்டு விட்டன. ஆதலால் அவை மனித இனத்திற்கு வழிகாட்ட இயலாமற் போய்விட்டன என நான் கூறவில்லை. அறிவுத்துறையில் இந்த நாடுகள் ஈட்டிய வெற்றிகள் மனித இனத்திற்குப் பயன்பட வேண்டும் என்றால் ஓர் உன்னதமான வாழ்க்கை நெறி உடனேயே தேவைப்படுகின்றது. இந்த உலகை அழிவிலிருந்து காப்பாற்றி ஈடேற்றத்தின் பால் இட்டுச்செல்லும் இந்த வாழ்க்கை நெறி நிச்சயமாக மனிதனின் இயற்கையான இயல்புகளோடு இயைந்து சென்றிட வேண்டும் இல்லையேல் இன்னொரு மாபெரும் தோல்வியை மனித இனம் சந்திக்க வேண்டியது வரும். தேசியம் தேசியம் என்று கூவி மக்கள் மத்தியில் வெளிகளைய10ட்டி இடைக்காலத்தில் எடுபட்ட கொள்கைகளும் அந்தக் கொள்கைகளைச் சொல்லி வாழ்ந்த இயக்கங்களும் தங்கள் வலுவை இழந்து தளர்ந்து நிற்கின்றன. உள்ளதைச்சொல்வதனால் மனித மூளைகளால் உருவாக்கப்பட்ட கொள்ககைகளெல்லாம் தங்கள் தோல்வியை ஒத்துக் கொள்ளத்; துவங்கிவிட்டன. (1993 ஆம் ஆண்டில் மட்டும் 8000 ஜெர்மானியப் பெண்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இவர்கள் ஏன் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பதைக் கண்டறிய Human Sciences என்ற மனித விஞ்ஞானத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர் ஒருவர் முற்பட்டார். இந்த ஆய்வின் முடிவில் அவர் கூறிய உண்மைகள் இங்கே கவனிக்கப்பட வேண்டியவை. அவை: மேலைநாட்டுக் கொள்கைகள் பெண்களுக்குத் தேவையான ஒழுக்கப் பாதுகாப்பினை தர இயலவில்லை. இதனால் பெண்கள் மன அமைதி இழந்து சதாசர்வ காலமும் பீதியிலேயே வாழ்ந்திட வேண்டியதாயிருக்கின்றது. இஸ்லாம் ஒழுக்கப் பாதுகாப்பையும் ஆன்மீக விடுதலையையும் நிரந்தரமான அமைதியையும் தருகின்றது. (Islamic Voice Dec 1994) தொடர்ந்து வந்த தோல்விகளால் துவண்டு நிற்கிறது மனித இனம். இதை மீட்டு மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி இழுத்துச் செல்லும் வன்மையும் திண்மையும் வாய்ந்த ஒரே கொள்கை இஸ்லாம் தான். உலக அரங்கில் அறிவுத் துறையில் (விஞ்ஞானத்; துறையில்) மனித இனத்திற்கு நன்மை பயக்கும் நல்ல கண்டுபிடிப்புகளை இஸ்லாம் எதிர்ப்பதில்லை. ஏற்கின்றது, உற்சாகமூட்டி உதவிகளை அள்ளித் தந்து வளர்க்கின்றது என்பது மட்டுமல்ல மனிதனின் நல்வாழ்வுக்காகத் தான் நிறைவேற்றிட வேண்டிய கடமை எனக் கருதுகின்றது. உலகில் கொண்டு வரப்படும் எந்த விஞ்ஞான கண்டுபிடிப்பும் அது எத்துணை விந்தையானதாக இருப்பினும் அது இறைவனை மறந்ததாயோ, அவனை எதிர்க்கின்ற தொனியிலேயோ இருந்திடக்கூடாது. அறிவுத் துறையில் அதிசயங்களை நிகழ்த்துவோர் ஓர் உண்மையை மனதிற்கொண்டாக வேண்டும். இந்த உலகை படைத்தவன் ஒருவன் இருக்கின்றான். அவன் படைத்தான் அனைத்தையும் மனிதனுக்காக அந்த மனிதனைப் படைத்தான் அந்த மாண்புமிக்க இறைவனை மாட்சிமைப்படுத்தவும் நன்றி கூறவும். மானிட இனம் மானுடம் மன அமைதியோடு வாழ்ந்திட வேண்டும் என்றால் இந்த உண்மை ஒத்துக் கொள்ளப்பட்டாக வேண்டும். இந்த உண்மையை உலகில் செயல்படுத்திக் காட்டிடும் நடைமுறை வழிகாட்டுதலும் செயல் திட்டமும் அதனை செயல்படுத்திக் காட்டிய வரலாறும் இஸ்லாத்திற்கு மட்டுமே சொந்தம். ஆகவே தான் இறைமறை முஸ்லிம்களைப் பார்த்து இப்படிக் கூறுகின்றது:

(விசுவாசிகளே) அவ்வாறே (ஏற்றத் தாழ்வற்ற) நடுநிலையான சமுதாயத்தினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சியங்களாக இருங்கள். (நம்முடைய) தூதர் உங்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சியாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:143)

(விசுவாசிகளே) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி மனிதர்களை) ஏவி பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசிக்கின்ற நீங்கள் தாம் மனிதர்களில் தோன்றிய சமுதாயங்களிலெல்லாம் மிக்க மேலானவர்கள். (அல்குர்ஆன் 3:110)

இந்த உன்னத பொறுப்பை உலக முஸ்லிம்கள் ஏற்றிட வேண்டிய காலம் எதிரே ஓடி வந்து கொண்டிருக்கின்றது.


முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

இஸ்லாம் கொள்கை அளவில் ஈடு இணையற்றது. அதனால் அவனியில் தானாகவே நிலைபெற்றிடும் என்ற எண்ணத்தில் முஸ்லிம்கள் செயலிழந்து நின்றிடக் கூடாது. இஸ்லாம் அதனை ஏற்றுக் கொண்டோர் வாழ்க்கையில் செயலில் மிளிர்ந்திட வேண்டும். இஸ்லாம் காட்டும் வழிகளை வையகத்தில் வழிகாட்டியாகக் கொண்டு வாழும் ஓர் சமுதாயம் இருக்கின்றது. இதைத் தங்கள் நித்திய வாழ்க்கையை விளக்கிடும் வகையில் முஸ்லிம்கள் வாழ்ந்து காட்டிட வேண்டும். வனப்பான கொள்கை என்பதற்காக எந்தக் கொள்கையையும் அடுத்தவர்கள் ஏற்றிட முன்வர மாட்டார்கள்.
அவர்கள் அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது எனப்பார்ப்பார்கள். இன்றைய உலகில் மனிதன் எதையும் கூர்ந்து கவனிப்பவனாக இருக்கின்றான். எதையும் ஆழ்ந்து சிந்திப்பவனாக இருக்கின்றான். எதையும் நடைமுறையில் கண்டாலன்றி நம்ப மாட்டான். நடைமுறை வாழ்க்கையைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் இஸ்லாத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டார்கள். பல நூற்றாண்டுகள் இப்படியே வாழ்ந்து விட்டார்கள். இஸ்லாத்தை ஏற்று வாழும் முஸ்லிம்கள் எனப்படுவோர் ஏதோ ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்வோர் எனக் குறிப்பிடப்படுவதில்லை. அல்லது இன்ன காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்குப் பெயர் தான் முஸ்லிம்கள் எனக் குறிப்பிடப்படுவதுமில்லை. அது இஸ்லாம் என்ற கொள்கையை யதார்த்த வாழ்க்கையில் ஏற்று எல்லா நிலைகளிலேயும் அதை நடைமுறைப்படுத்தி வாழும் ஓர் சமுதாயத்தின் பெயர். ஆகவே இந்த சமுதாயம் எந்த அளவிற்கு இஸ்லம் சொன்ன கொள்கைகளை எடுத்து வாழ்கின்றது என்பதைக் கொண்டே அந்தக் கொள்கையின் பலமும் பலவீனமும் நிர்ணயிக்கப்படுகின்றது.

· எந்தச் சமுதாயத்தின் சிந்தனை முற்றாக இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றதோ

· எந்தச் சமுதாயத்தின் வாழ்க்கை முற்றாக இஸ்லாத்தின் வழிகாட்டுதலின் வழி அமைந்திருக்கின்றதோ

· எந்தச் சமுதாயத்தின் இங்கிதங்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றதோ

· எந்தச் சமுதாயத்தில் வழக்குகளும் பிணக்குகளும் அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் வழங்கியதைக் கொண்டு தீர்க்கப்படுகின்றனவோ

· எந்தச் சமுதாயத்தின் கட்டுப்பாடுகள் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றனவோ

· எந்தச் சமுதாயத்தின் இன்பமும் துன்பமும் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றனவோ

- அந்தச் சமுதாயமே இஸ்லாமிய சமுதாயம்.

இந்தப் பொன்னரிய வழிகாட்டுதலை முஸ்லிம்கள் புறக்கணித்து வாழ்ந்து வந்தால் நிச்சயமாக இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் மீது சாட்சியாக இருக்கின்றார்கள் எச்சரிக்கை. முஸ்லிம் சமுதாயம் அதனுடைய அசல் வடிவை மீண்டும் பெற வேண்டும். அப்போது மட்டுமே அது உலகை வழி நடத்தும் பொறுப்பைப் பெற முடியும். அப்போது மட்டுமே அந்தப் பொறுப்பை நிறைவேற்றிடும் தகுதியைப் பெற்றிட முடியும். பல நூற்றாண்டுகளாக தங்கள் கொள்கையிலே இருந்து தடம் மாறிப் போய் மனிதர்கள் கண்டெடுத்த வழிமுறைகளிலும் பழக்கவழக்கங்களிலும் தங்களை புதைத்துக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தை மீட்க வேண்டும். தனக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத இஸ்லாத்தோடு எந்த விதத்திலேயும் தொடர்பில்லாத கொள்கைகளின் அழுத்தத்தால் தனதின் தன்மை(களை)யை இழந்து நிற்கும் இந்த முஸ்லிம் சமுதாயத்தைப் புனரமைத்துப் புடம் போட வேண்டும். இப்படி இஸ்லாத்திற்கு வெகு தூரத்தில் வாழ்ந்து கொண்டே நாங்கள் இஸ்லாமியப் பெருங்குடியினர் எனச் சொல்லிக் கொண்டிருக்கின்;றனர் முஸ்லிம்கள். இஸ்லாத்தை விட்டுப் பிரிந்து விலகி வாழ ஆரம்பித்த காலத்திலே தான் மேலைநாடுகள் விஞ்ஞானத்தில் சாகசங்களை நிகழ்த்தி உலகில் விரிந்து பரந்து உலகத் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டன. கிடைக்கவியலாத இந்த இணையற்ற வழிகாட்டுதலாம் இஸ்லாத்தை விட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த முஸ்லிம் சமுதாயத்தைச் சீரமைப்பதற்கும் அது உலகத் தலைமையை ஏற்பதற்கும் இடையே அகன்றதோர் இடைவெளி இருக்கின்றது. என்றாலும் முஸ்லிம்களைப் புனரமைப்பது என்பது அவசியம் நிறைவேற்றியாக வேண்டியதொரு கடமை. அதற்கான முயற்சிகளை முறையாக உடனேயே ஆரம்பித்தாக வேண்டும். இந்த முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னால் நாம் எந்த அடிப்படைகளில் இந்தச் சீரமைப்பை ஆரம்பிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்திட வேண்டும். ஏனெனில் நாம் எடுத்த எடுப்பிலேயே தவறுகளைச் செய்திடக்கூடாது. அறிவுத் துறையில் விஞ்ஞான வானத்தில் அதிசயங்களை இஸ்லாமிய சமுதாயம் செய்து காட்டி மேலைநாடுகளை தலைகுனியச் செய்திட வேண்டும் என்றில்லை. இதை இப்போது இஸ்லாமிய சமுதாயம் செய்திடவும் முடியாது. இப்படியொரு போட்டியில் இறங்கியாக வேண்டும் என்பது அவசியமும் இலலை. ஏனெனில் இந்தப் போட்டியில் இறங்கி அதில் வென்றால் தான் உலகத் தலைமையைக் கைப்பற்றலாம் என்றொரு நிலை இங்கே இப்போது இல்லை. இப்படிச் சொல்லி விடுவதால் நாம் அறிவுத்துறையைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்திடலாம் என்றில்லை. அந்தத் துறையில் அமிழ்ந்திருக்கும் அழிவு சக்திகளை அப்புறப்படுத்தி அந்தத் துறையில் இன்னும் பல அதிசயங்களை நிகழ்த்தி மனித இனம் வாழ வழிகாட்டிட வேண்டும். எனினும் அதற்கு முன் இன்றைய உலகம் தடந்தெறியாமல் தட்டுத் தடுமாறி நிற்கின்றதே அதனை நிலைபெறச் செய்து நிலையாக வாழ வைக்கும் உன்னதமான மாண்புமிக்க பண்பாடு கலாச்சாரம் ஆன்மீக வழிகாட்டுதல் நம்மிடமிருக்கின்றன. இவற்றைச் செயல்படுத்திக் காட்டிட வேண்டியது அதைவிட அவசர அவசியம். இஸ்லாமிய சமுதாயத்தைப் புனரமைத்திடவும் ஓர் இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்திடவும் சில மைல்கற்களை இங்கே தொகுத்திருக்கின்றேன். இந்த மைல்கற்கள் ஓர் இஸ்லாமிய எழுச்சிக்குக் கட்டியங் கூறிடும். இதில் நான்கு அத்தியாயங்களை நான் எழுதிய திருக்குர்ஆனின் நிழலில்.. என்ற திருமறை விளக்கத்திலிருந்து எடுத்துத் தந்துள்ளேன்.

இந்த நான்கு அத்தியாயங்கள்

(1) புரட்சி – திருக்குர்ஆனின் வழியில்
(2) இஸ்லாமிய கோட்பாடுகளும் கலாச்சாரமும்
(3) அல்லாஹ்வின் வழியில் போர்
(4) முஸ்லிம் சமுதாயத்தின் புனரமைப்பும் அதன் இயல்புகளும்

ஏனைய அத்தியாயங்கள் ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் நான் எழுதியவை. ஓர் இஸ்லாமிய எழுச்சிக்கு இவை மைல்கற்களாக அமையும் என விழைகின்றேன். இன்னும் சில அத்தியாயங்களை இனிவரும் நாளில் இணைக்க இருக்கின்றேன்.

(இந்நூலையே காரணங்காட்டி செய்யித் குதூப் அவர்கள் தூக்கிலிடப்பட்டுவிட்டதால் இந்த அத்தியாயங்களை எழுதிட அவர்கள் உயிருடன் இருக்கவில்லை)

அல்லாஹ் இதனை நிறைவானதாக ஆக்குவானாக. அறுதியான அறிவும் வழிகாட்டுதலும் அல்லாஹ்விடமிருந்து கிடைப்பனவே.


இவன்
உங்கள் உடன் பிறப்பு
செய்யித் குதுப்.
தொடர்ந்து வரும்...

Sunday, April 19, 2009

பொதுவுடமை தத்துவத்திலிருந்து தோன்றிய கம்யூனிஸம் தானாக அழிவைத் தேடிக்கொண்டது போல் முதலாளித்துவமும் தானாகவே தனது அழிவைத் தேடிக்கொள்ளும்.

உலகப் பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கும் பொருளாதார சீரழிவுகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் இஸ்லாத்திற்கு மட்டுமே ஆற்றல் இருக்கிறது.

ரியல்எஸ்டேட் விவகாரத்தில் வெடித்துக் கிளம்பிய பொருளாதார நெருக்கடி அமெரிக்காவின் அடமானமுறை வீட்டுக்கடன் திட்டத்தை (subprime mortgage programme) மூழ்கடித்து விட்டது, இந்தத் திட்டத்தில் கடன் பெற்றவர்களில் பெரும்பான்மையினர் கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்காவின் பிரதான வங்கிகளில் சிலவும் முன்னனி நிதிநிறுவனங்களில் சிலவும் அழிவை சந்தித்துவிட்டன இன்னும் சில அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருக்கின்றன, கவர்ச்சிமிக்க சலுகைத்திட்டங்கள் மற்றும் பெரும்குவியலாக லாபம் கிடைக்கும் என்ற பகிரங்க அறிவிப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்டு சர்வதேச வங்கிகளின் பணமும் நிதிச்சந்தை ஜாம்பவான்களாக விளங்கும் பல பன்னாட்டு நிதிநிறுவனங்களின் பணமும் அமெரிக்காவின் அடமானமுறை கடன் திட்டத்தை நோக்கி குவிந்தன, இந்த திட்டம் படுதோல்வி அடைந்து பல்லாயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதால் இதில் முதலீடு செய்த அமெரிக்க வங்கிகளும் நிதிநிறுவனங்கும் நொறுங்கி வீழ்ந்துவிட்டன, இந்த வங்கிகளும் நிதிநிறுவனங்கும் சர்வதேச அளவில் நிதியியல் தொடர்புகள் வைத்திருந்ததால் இதன் தீயவிளைவு முழு உலகத்திலும் பரவ ஆரம்பித்துவிட்டது, அமெரிக்கா என்ற நோயாளி தும்மியதில் வெளிப்பட்ட நோய்க்கிருமி உலக முழுவதிலும் தொற்றிக்கொண்டு நோயை பரப்பிக் கொண்டிருக்கிறது.


அடமானமுறை வீட்டுக்கடன் திட்டத்தில் (subprime mortgage programme) ஏற்பட்ட இழப்பு அமெரிக்காவைப் பொறுத்வரை 300 பில்லியன் டாலர் என்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்ட இழப்பு 550 பில்லியன் டாலர் என்றும் நிதித்துறை அமைப்புகள் சில மதிப்பீடு செய்துள்ளன. இதனடிப்படையில் இந்த திட்டத்தால் பாதிப்பு அடைந்த நாடுகள் குறிப்பாக செல்வந்த நாடுகளின் அரசுகள் நிதிச்சந்தை குறித்த நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்காகவும் நிதிநிறுவனங்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உயிரூட்டுவதற்காகவும் கோடிக்கணக்கான டாலர் பணத்தை ஒதிக்கியிருக்கின்றன, உண்மையாகக் கூறவேண்டுமானால் பிரிட்டன் அரசு செய்ததைப்போல சிலநாடுகள் தங்கள் நாட்டிலுள்ள சில பெரிய வங்கிகளை தேசியமயமாக்கும் நடவடிக்கûயில் இறங்கியிருக்கின்றன.

முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம் என்று கருதப்படும் தாராள வர்த்தகம். தடையற்ற வர்த்தகம் என்ற தாரகமந்திரம் தவிடுபொடியான கதையை நாம் கண்கூடாகக் காண்கிறோம், இவ்விரு கோஷங்களும் முதலாளித்துவவாதிகளின் அடிப்படை நம்பிக்கையாக விளங்கிவந்தன, நிதித்துறை நடவடிக்கைகளில் காணப்படும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிட்டு நிதிச்சந்தையில் எத்தகைய கட்டுப்படுகளும் இருப்பதை தடைசெய்யும் சட்டத்தை டிசம்பர் 1999 ல் அமெரிக்கசெனட் கொண்டுவந்தது, முதலாளித்துவ கொள்கையை தலமையேற்று நடத்திச்செல்லும் அமெரிக்காவிலேயே இந்தத் தவறான கொள்கையின் தீயவிளைவு வெளிப்பட ஆரம்பித்தது, அடமானமுறை வீட்டுக்கடன் திட்டத்தில் சிக்கி நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் ஆகியவை வினியோகம் செய்திருந்த பங்குப்பத்திரங்களை கொள்முதல் செய்துகொள்வதன் மூலம் தங்களின் பொருளாதாரத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அமெரிக்க அரசுக் கருவூலகத்தின் செயலாளர் (US secretary of govt. treasury) ஹென்ரி பால்ஸன் (Henry Paulson) கொண்டு வந்த திட்டத்திற்கு 700 பில்லியன் டாலர் பெய்லவுட் (bailout) தொகையாக ஒதுக்குவதற்கு அமெரிக்க செனட்டும் அமெரிக்க காங்கிரஸýம் அங்கீகாரம் அளித்ததின் மூலமாக நிதிச்சந்தையில் அமெரிக்கஅரசு தலையீடு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது, இத்திட்டம் அக்கீகரிக்கப்பட்ட சில நிமிடத்திலேயே கருவூலக செயலாளர் அதை நடைமுறைப் படுத்திவிட்டார், நிதித்துறையில் அரசு எந்தவிதமான தலையீடும் செய்யக்கூடாது என்ற முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படைக் கொள்கை இப்போது மீறப்பட்டிருக்கிறது, இதன்மூலம் முதலாளித்துவ சித்தாந்தத்தை உலகம் முழுவதிலும் நடைமுறைப்படுத்தும் திட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ள அமெரிக்காவும் பிரிட்டனும் அதன் கொள்கைக்கு முரண்பாடாக செயல்பட்டிருக்கினறன, பொதுவுடமை கோட்பாட்டின் அடிப்பûயிலுள்ள கம்யூனிஸம் தோல்வியுற்று புதையுண்டு போன அதே முறையில் இப்போது முதலாளித்துவமும் மரணப்படுக்கையில் கிடக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.

அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஏற்பட்ட இந்த நிகழ்வுகளின் காரணமாக உலக நாடுகள் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன, ஐரோப்பாவின் பிரதான நாடுகளான பிரிட்டன். பிரான்ஸ். ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஆய்வு செய்வதற்காக முறையான சந்திப்புகள் நடைபெறவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன, அதுபோலவே G7 (ரஷ்யாவை இதில் சேர்த்துக்கொண்டால் G8 நாடுகள்) நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கிகளின் மேலாளர்களும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சந்தித்து விரிவான ஆய்வு நடத்தவேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகள் முதலாளித்துவ பொருளாதாரத்தைக் காப்பாற்றுமா?

முதலாளித்துவ பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர்கள் அது அழிவை சந்தித்துவிட்டது என்பதை அல்லது அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள், அதை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முதலாளித்துவவாதிகள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் அனைத்தும் தற்காலிகமான நிவாரணத்தை மட்டுமே ஏற்படுத்தக்கூடும் ஏனெனில் முதலாளித்துவ பொருளாதாரம் நொருங்கிப் போனதற்கு காரணம் அது தவறான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதுதான், மேலோட்டமான சீரமைப்புகளால் அதை ஒருபோதும் காப்பாற்றமுடியாது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம் தவறானது என்பதற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன அவற்றை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

1) இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட பிரட்டன் உட்ஸ் (Bretton woods) உடண் படிக்கையின் அடிப்படையில் நாணயங்களுக்கு ஏற்புநிறை மதிப்பீடாக(gold standard) தங்கம் மட்டும் இருந்ததை மாற்றி அதற்கு இணையாக அமெரிக்க டாலர் கொண்டுவரப்பட்டது, 1970 க்குப் பின்னர் ஏற்புநிறை மதிப்பீட்டில்(gold standard) தங்கத்தை அறவே நீக்கிவிட்டு முழுக்க முழுக்க அமெரிக்க டாலர் மட்டுமே ஏற்புநிறை மதிப்பீடாக கொண்டுவரப்பட்டது, இதன் மூலமாக அமெரிக்கநாட்டின் காகிதநாணயமான டாலர் தங்கத்திற்கு இணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, இதனடிப்படையில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற பாதிப்புகள் இயல்பாகவே உலக பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன ஏனெனில் பல்வேறு நாட்டு நாணயங்களும் செலாவணியில் (exchange) தங்கத்துடன் இணைக்கப்படாமல் அமெரிக்க டாலருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன, ஐரோப்பாவின் யூரோ நாணயம் அறிமுகப் படுத்தப்பட்ட போதிலும் அமெரிக்க டாலர் பல்வேறு நாட்டு நாணயங்களுடன் இணைக்கப்பட்டிருபதால் தொடர்ந்து அதன் மதிப்பு குறையாமல் இருந்து வருகிறது.

எனவே நாணயங்ளுக்கு ஏற்புநிறை மதிப்பீடாக(Gold standards) தங்கத்தை மறுபடியும் கொண்டு வந்தால் ஒழிய இத்தகைய பொருளாதார பாதிப்புகள் உலக நாடுகளுக்கு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும், இன்றைய சூழலில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் வீழ்ச்சி உலக நாடுகளின் பொருளாதாரத்தில் வீழ்ச்சியைக் கொண்டு வருகிறது, அமெரிக்க அரசின் சில கொள்கைகளால்(Policies) அமெரிக்க டாலரில் ஏற்படும் பாதிப்புகள் உலக நாடுகளின் நாணயங்களில் பிரதிபலிக்கிறது, உண்மையைக் கூறவேண்டுமானால் ஏகாதிபத்திய செல்வாக்கு பெற்றுள்ள எந்தவொரு நாட்டின் காகித நாணயமும் தங்கத்தின் மதிப்பு அதற்கு பின்னனியாக கொள்ளப்படா விட்டால் உலகப் பொருளாதாரத்தில் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துவது இயல்பான விஷயம்தான்.

2) வட்டி அடிப்படையில் கொடுக்கப்படும் கடன்களால் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடிகள் தோன்றுகின்றன, காலஓட்டத்தில் கடன் கொடுக்கப்படும் தொகையின் மதிப்பு சிறிதுசிறிதாக குறைந்துகொண்டு வருகிறது என்றபோதிலும் தனிமனிதராக இருந்தாலும் சரி அல்லது ஒருநாட்டு அரசாக இருந்தாலும் சரி பலசமயங்களில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது, இதன்காரணமாக பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டு நெருக்கடிகள் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, மேலும் மத்தியதர வகுப்பினர் கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் நிதித்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டு பொருட்களின் உற்பத்தியிலும் பெரிய பாதிப்புகள் உருவாகின்றன.
3) இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் பொருளாதாரக் கொள்கையின் காரணமாக பொருளாதார நடவடிக்கை. நிதிச்சந்தை. பங்குச்சந்தை. நிதியியல் உபகரணங்கள் (காசோலை (cheque) வரைவுகாசோலை (demand draft) ரொக்கப்பத்தரம் (cash certificate) போன்றவை) . வர்த்தகப் பொருட்கள். கொடுக்கல் வாங்கள்(business transaction) ஆகியவற்றில் யூகவர்த்தக முறை (speculative trading) பின்பற்றப்படுகிறது, இதனடிப்படையில் பொருட்கள் கையிருப்பில் இல்லாத நிலையில் யூகத்தின் அடிப்படையில் வர்த்தகம் நடைபெறுகிறது, இது முறையற்ற வர்த்தகம் என்பதோடு மிக ஆபத்தான பொருளாதார நடவடிக்கையாகவும் இருக்கிறது, பொருட்களின் விலையில் முறையற்ற ஏற்ற இறக்கம் ஏற்படுவதோடு பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் இது காரணமாக இருக்கிறது, பொருளாதார சந்தையில் அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு உடனடி காரணிகளாகவும் உண்மையான பொருளாதாரத்திலிருந்து மக்களை திசை திருப்பிவிடும் தவறான வர்த்தகமுறை (wrong commercial practice)) யாகவும் இருக்கிறது, லாபநஷ்டங்கள் யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் குறைகளும் பாதிப்புகளும் சரியான முறையில் அறிந்து கொள்ளப்படாமல் இறுதியில் பெரும் நெருக்கடிகள் எற்பட்டு விடுகின்றன.

4) மிகமுக்கியமான விஷயம் என்னவென்றால் கிழக்கு நாட்டவராக இருந்தாலும் அல்லது மேற்கு நாட்டவராக இருந்தாலும் சொத்துரிமை தொடர்பான எதார்த்தமான உண்மைகள் பற்றிய அறிவை பெறாதவர்களாகவே இருக்கிறார்கள், பொதுவுடமைக் கோட்பாட்டிலிருந்து தோன்றிய கம்யூனிஸ சித்தாந்தம் (communist ideology)அனைத்து சொத்துக்களின் உரிமைகளையும் அரசுடமை ஆக்கியிருக்கிறது எனவே தனிமனிதர் எவரும் எத்தகைய சொத்துக்களையும் அடைந்துகொள்ள முடியாது, அதேவேளையில் முதலாளித்துவ சித்தாந்தம் (capitalist ideology) சொத்துரிமை அனைத்தையும் தனியார்மயம் ஆக்கியிருக்கிறது மேலும் தனிமனிதரின் சொத்துரிமையில் அரசு எந்தவிதமான தலையீடு செய்யாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது ஏனெனில் இந்த சித்தாந்தம் தாராள வர்த்தகக் கொள்கையை ஆதரிப்பதோடு உலகமயமாக்கல் என்ற கோஷத்தையும் எழுப்பிவருகிறது.

சொத்துரிமை பற்றிய முழுமையான அறியாமையின் காரணமாக அரசுகளிடம் காணப்படும் தவறான கொள்கைகள் பொருளாதாரத்தில் அதிர்வுகளையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்துகின்றன, ஏனெனில் சொத்துக்களை வைத்துக்கொள்ளும் உரிமை அரசிற்கு மட்டுமோ அல்லது தனிமனிதருக்கு மட்டுமோ உரியதல்ல மாறாக சொத்துரிமையில் மூன்று வகைகள் இருக்கின்றன.

பொதுச்சொத்து :

பூமியின் இயற்கை வளங்களான எண்ணெய் வளங்கள். கனிம வளங்கள். நிலவாயு நிலக்கரி போன்ற எரிபொருள் வளங்கள். மின்சாரம் போன்ற ஆற்றல் வளங்கள். காடுகள் மற்றும் புல்வெளிகள் போன்ற பசுமை வளங்கள். ஆறுகள் மற்றும் கடல்கள் போன்ற நீர் வளங்கள் . பூமிக்குள் இருக்கும் புதையல்கள் ஆகியவை பொதுச்சொத்து இனங்களில் அடங்கும், இவைகளை அரசே நேரடியாக நிர்வாகம் செய்து அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கை தன் செலவினங்களுக்கு எடுத்துக்கொண்டு மீதியுள்ள நான்கு பங்கை பொதுமக்கள் நலனுக்காக செலவு செய்யவேண்டும்.

அரசு சொத்து :

அரசினால் வசூலிக்கப்படும் அனைத்து விதமான வரிகளின் (ற்ஹஷ்ங்ள்) மூலம் கிடைக்கும் பணம். தனியார் சொத்து இனங்களில் அடங்காத விவசாயம். வர்த்தகம். கனரக தொழிற்சாலை. ஆயுத தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பணம். யுத்த கனீமத் பொருட்களிலிருந்து கிடைக்கும் ஐந்தில் ஒரு பங்கு பணம். இயற்கை வளங்களிலிருந்து கிடைக்கும் ஐந்தில் ஒரு பங்கு பணம் ஆகியவை இதில் அடங்கும், இந்தப் பணம் முழுவதும் அரசு செலவினங்களுக்கும் பொதுமக்கள் நலப்பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.

தனியார் சொத்து :

தனிமனிதர்கள் தங்கள் உழைப்பு மூலமாகவோ அல்லது வாரிசுரிமை மூலமாகவோ அல்லது அன்பளிப்புகள் மூலமாகவோ அடைந்து கொள்ளும் அனைத்து சொத்துக்களும் இதில் அடங்கும், ஷரியாவின் விதிமுறைப்படி பொதுச் சொத்துக்களை தனியார் அடைந்து கொள்ள முடியாது அதுபோலவே தனியார் சொத்தையோ அல்லது பொதுச்சொத்தையோ அரசுசொத்தாக மாற்றமுடியாது.

இந்த மூன்று வகை சொத்துரிமைகளும் வெவ்வேறானவை அவை ஒவ்வொன்றும் ஷரியாவின் விதிமுறைப்படியே நிர்ணயிக்கப்படுகின்றன, கம்யூனிஸத்தில் உள்ளது போல் இவை மூன்றையும் ஏகபோகமாக அரசுடமை ஆக்கினாலும் அல்லது முதலாளித்துவத்தில் உள்ளது போல் மூன்றையும் ஏகபோகமாக தனியார்மயம் ஆக்கினாலும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியும் நெருக்கடியும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும், அனைத்து வகையான சொத்துரிமைகளையும் அரசு எடுத்துக்கொண்டு தனிமனித உரிமைகளைப் பறித்ததால் கம்யூனிஸ பொருளாதாரம் வீழ்ச்சியுற்றது, சோவியத் ரஷ்யாவின் கம்யூனிஸ ஆட்சிக்காலத்தில் எண்ணெய் வளம். கனிம வளம். மற்றும் கனரக தொழிற்சாலை ஆகியவை அரசு நிர்வாகத்தில் இருந்ததால் அதன்மூலம் அதற்கு கணிசமான வெற்றி கிடைத்தது அதேவேளையில் தனியார் வசம் இருக்க வேண்டிய சிறுதொழில். விவசாயம். வர்த்தகம் ஆகியவற்றை அரசு தனக்கு உரிமையாக்கிக் கொண்டு நிர்வாகம் செய்ததால் பெரும் தோல்வி ஏற்பட்டு அந்த அரசு வீழ்ச்சியை சந்தித்தது, அதுபோலவே மேற்கத்திய நாட்டின் முதலாளித்துவ அரசுகளும் தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கின்றன, முதலாளித்துவ நாடுகளில் பொதுச்சொத்துக்கள் தனியார்மயமாக ஆக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் நலனுக்கு பயன்படவேண்டிய பூமியின் அரியவளங்கள் அனைத்தும் ஒரு சில தனிமனிதர்களிடத்தில் குவிந்து கிடக்கின்றன, கனரக தொழிற்சாலைகள். ஆயுத தொழிற்சாலைகள். ஆகியவை தனியாருக்கு சொந்தமாக ஆக்கப்பட்டதால் வர்த்தக சந்தையில் தலையீடு செய்வதிலிருந்து அரசு ஒதுக்கப்பட்டதோடு ஒரு அரசு நிலைத்திருப்பதற்கு உரிய வருவாய் ஆதாரங்களும் அரசின் இயல்பான உரிமைகளும் அதனிடமிருந்து பறிக்கப் பட்டுவிட்டன, தாராள வர்த்தகம். தடையற்ற வர்த்தகம். அரசியல் தலையீடற்ற பொருளாதாரம். உலகமயமாக்கல் ஆகிய கோஷங்களின் பெயரால் இந்த அத்துமீறல்கள் அனைத்தும் அரங்கேற்றப்படுகின்றன, தவறான இந்த பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்தும் முடிவுகள் தவிர்க்க முடியாததுõ தொடர்ச்சியான வீழ்ச்சி வேகமான அழிவுõ நிதிச்சந்தைகளும் நிதிநிறுவனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நொறுங்கிவிழும் துயரம். இவைதான் தவறான கொள்கை ஏற்படுத்திய இயல்பான முடிவு.

தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக அன்று கம்யூனிஸ அரசு வீழ்ந்தது. தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இன்று முதலாளித்துவ அரசுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன.
எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தத் துயரங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் அழிவுகளுக்கும் ஒரே மாற்றுத் தீர்வு இஸ்லாம் மட்டுமேõ ஏனெனில் பொருளாதாரத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தையும் இஸ்லாம் மட்டுமே தடைசெய்திருக்கிறது.

நாணயங்களுக்கு ஏற்புநிறை மதிப்பீடாக(gold standard) தங்கத்தை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் கட்டாயம் ஆக்கியிருக்கிறது, காகித நாணயத்தை அச்சிடும் பட்சத்தில் அதற்கு ஈடான மதிப்பிற்கு தங்கத்தையும் வெள்ளியையும் அரசு இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் மக்கள் விரும்பும்போது நாணயங்களை தங்கமாகவோ அல்லது வெள்ளியாகவோ மாற்றிக் கொள்வதற்கு ஏதுவாக அரசு கருவூலகங்களில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் இருப்பு இருக்கவேண்டும் என்பதையும் இஸ்லாம் கட்டாயமாக ஆக்கியிருக்கிறது, இதன்முடிவாக ஒரு நாட்டின் நாணயம் மற்றொரு நாட்டின் நாணயத்துடன் பிணைக்கப் படுவதை இஸ்லாம் தடைசெய்துள்ளது, இதனடிப்படையில் ஒரு நாட்டின் நாணயம் இதர நாட்டின் நாணயத்திலிருந்து சுதந்திரமாக இயங்கவேண்டும் என்றும் ஒவ்வொரு நாணயத்திற்கும் நிலையான மதிப்பு இருக்கவேண்டும் என்றும் இஸ்லாம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

மேலும் வட்டியை அதன் அனைத்து வடிவங்களிலும் இஸ்லாம் தடைசெய்துள்ளது, தேவையுள்ளவர்களுக்கு எந்தவிதமான வட்டியோ அல்லது கட்டணமோ இல்லாமல் கடனுதவி செய்யவேண்டும் என்பதை இஸ்லாம் கட்டாயமாக ஆக்கயிருக்கிறது, பைத்துல்மால் எனறழைக்கப்படும் அரசு கருவூலகம்(govt. treasury) தேவை உள்ளவர்களுக்கும் விவசாயிகளுக்கும் வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் வகையில் தனிகணக்கில் பணம் வைத்திருக்க வேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.

இதுபோலவே பொருட்களை கையிருப்பில் வைத்திருக்காத நிலையில் யூகத்தின் அடிப்படையில் விற்பனை செய்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது, முறையற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பங்குப்பத்திரங்கள். நியியல் உபகர்ணங்கள் (செக்.டிரா*ப்ட் போன்றவை) ரொக்கப்த்திரங்கள் மற்றும் டிரைவேடிவ்ஸ்(அசலான மதிப்பு இல்லாத நிதியியல் உபகர்ணங்கள்) ஆகியவற்றில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதை இஸ்லாம் தடைசெய்திருக்கிறது, மேலும் சொத்துரிமை சுதந்திரம் என்ற பெயரில் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை அனுமதித்துள்ள யூகவணிகம் Lm (speculative trading) போன்றவற்றை மேற்கொள்வதற்கும் இஸ்லாம் தடைசெய்துள்ளது, பொதுச்சொத்து இனங்களில் அடங்குகின்ற எண்ணெய் வளங்கள். கனிம வளங்கள். நிலவாயு போன்ற ஆற்றல் வளங்கள் போன்றவற்றை தனிமனிதர்களோ அல்லது தனியார் நிறுவனங்களோ அல்லது அரசுத்துறை நிறுவனங்களோ தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது, பொதுமக்களுக்கு சொந்தமான இந்த சொத்துக்களை ஷரியா விதிமுறைகளின் அடிப்படையில் அரசு பராமரித்து வரவேண்டும் என்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் பலன்கள் பொதுமக்கள் மத்தியில் வினியோகம் செய்யப்படவேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது, இவ்வாறாக மனிதனின் வரம்புமீறிய சுயநலத்தினாலும் மனிதநேயத்திற்கு முரண்படும் பேராசைகளாலும் விளையும் அனைத்து பொருளாதார சீரழிவுகளையும் இஸ்லாம் விளக்கிக் கூறியிருப்பதோடு அவற்றைக் குறித்து எச்சரிக்கையும் செய்திருக்கிறது, இஸ்லாம் என்ற இந்த கொள்கை பிரபஞ்சத்தைப் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் இறைவனிடமிருந்து வந்துள்ளது அவன் தனது படைப்புகளுக்கு நன்மையானவை எவை என்பதை நன்கு அறிந்தவன்.

(அனைத்தையும்) படைத்த அவன் அறியமாட்டானா? அவன் (தன் படைப்புகளிடத்தில்) மென்மையும் கனிவும் கொண்டவனாகவும் (அவற்றை) நன்கு உற்று நோக்குகிறவனாகவும் இருக்கிறான், ( 67 :14)

முஸ்லிம்களே!

தனது தூதர் முஹம்மது(ஸல்) மூலமாக இஸ்லாம் என்ற உயர்ந்த மார்க்கத்தை உங்களுக்கு வழங்கியிருப்பதால் அல்லாஹ்(சுபு) உங்களுக்கு ஒப்பற்ற கண்ணியத்தை கொடுத்திருக்கிறான்; மேலும் அவன் உங்களை எச்சரிக்கை செய்தும் இருக்கிறான், இஸ்லாத்தின் பொருட்டாகத்தான் அனைத்து சமுதாயத்திலும் சிறந்த சமுதாயமாக உங்களை உயர்த்தியிருக்கிறான், இந்த தீனை முழுமையாக செயல்படுத்துவதில்தான் உங்களுடைய கண்ணியமும் உயர்வும் அடங்கியிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், இந்த உயர்வு உங்களுக்கு மட்டும் உரித்தானதல்ல மாறாக அது முழு மனித சமுதாயத்திற்கும் உரித்தானது ஏனெனில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தவறான கொள்கைகளையும். செயலாக்கஅமைப்புகளையும் (man made systems) பல நூற்றாண்டுகளாக எதிர்த்து நின்று இஸ்லாம் வெற்றி அடைந்திருக்கிறது.

சங்கைக்குரிய குர்ஆனை தடிப்பான அட்டைகளில் மூடி வைத்திருப்பதால் இந்த மகத்தான மார்க்கத்தை நடைமுறைப் படுத்திவிட முடியாது மாறாக இஸ்லாத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் சத்திய செய்தியை உலகம் முழுவதற்கும் அழைப்புப்பணி (Daw'ah) மூலம் எடுத்துச்செல்லக்கூடிய கிலா*பாவை அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களின் முன்மாதிரி அடிச்சுவட்டில் நிர்மாணிப்பதின் மூலமாகவே அதை செய்யமுடியும், மனித சமுதாயத்தின் பாதுகாப்பிற்கும் உயர்வுக்கும் செழிப்பிற்கும் கிலா*பா மட்டுமே உத்திரவாதம் அளிப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளது, ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் சுகபோகத்தில் மூழ்கி இருப்பீர்கள் எனில் அல்லாஹ்(சுபு) தனது வானவர்களை அனுப்பி கிலா*பாவை நிர்மாணிக்கப் போவதில்லை மாறாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மதினாவில் இஸ்லாமிய அரசை நிர்மாணித்ததைப் போல் அவர்களது தோழர்களான ஸஹாபா பெருமக்களும் அவர்களை பின்துயர்ந்து வந்த முஸ்லிம்களும் தொடர்ந்து அதை நிலைநிறுத்தியது போல் இஸ்லாமிய அரசை நிர்மாணிப்பதையும் தொடர்ந்து அதை நிலைநிறுத்துவதையும் அல்லாஹ்(சுபு) உங்களுக்கு கடமை ஆக்கியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

முஸ்லிம்களே!

உவகை கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ்(சுபு) வின் திருப்பொருத்தத்தை அடைந்து கொள்ளும் வாய்ப்பபை நீங்கள் பெற்றுள்ளீர்கள். எழுந்து நில்லுங்கள். உங்களை நீங்களே தயார் படுத்திக் கொள்ளுங்கள்õ அல்லாஹ்(சுபு) அருட்செய்துள்ள கூட்டத்தினரோடு இணைந்திருப்பதின் மூலமாக அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். அல்லாஹ்(சுபு) நமக்கு அதிகாரத்தையும் வாரிசுரிமையையும் வழங்குவதாக வாக்களித்துள்ளான். நபித்துவத்தின் அடிச்சுவட்டில் கிலா*பா ஏற்படும் என்று அண்ணலார்(ஸல்) நமக்கு நற்செய்தி கூறியுள்ளார்கள்.

முஸ்லிம்களே!

மனிதசமுதாயத்திற்கு தலைமை ஏற்பதற்கும் அல்லாஹ்(சுபு) வின் அனுமதி கொண்டு அதை நேர்வழியில் இட்டுச் செல்வதற்கும் உரிய தகுதியை உங்களிடம் மட்டும்தான் அல்லாஹ்(சுபு) வழங்கியுள்ளான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

இவ்வாறே உங்களை நாம் (நீதி செலுத்தக்கூடிய) நடுநிலைச் சமுதாயமாக ஆக்கியுள்ளோம் மக்கள் மீது நீங்கள் சாட்சியாளர்களாக இருப்பதற்காக ... (2 :143)

முஸ்லிம்களே!

நீங்கள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட தூதரும்(ஸல்) அவர்களுடைய தோழர்களும் அவர்களை பின்பற்றி வந்த முஸ்லிம்களும் கடந்து வந்த அடிச்சுவட்டை நீங்கள் அறிந்து கொள்ள வில்லையா? அவர்கள் தங்கள் பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றிய விதத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வில்லையா? அல்லாஹ்(சுபு) உங்கள் மீது வாஜிபாக ஆக்கிய கடமையை நிறைவேற்றுவதில் நீங்கள் அசட்டையாக இருந்து விடாதீர்கள். அனைத்து மார்க்கங்களையும் இஸ்லாமிய மார்க்கம் வெற்றி கொண்டே தீரும் என்று அவன்(சுபு) விதித்திருப்பதால் அதன் வெற்றிக்காக உங்களை நீங்களே அர்பணித்துக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள், (12 : 21)

Tuesday, April 7, 2009

பொருளாதாரக் கொள்கை

வழமையான, மேன்மை பொருந்திய வரலாற்றைக் கொண்ட இஸ்லாமிய சமுதாயம் இன்றுகடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியிருக்கிறது. முதலாளித்துவமும், ஊழலும்,தகுதிக்கேடும் இன்று இஸ்லாமிய சமூகத்தை பீடித்திருக்கிறது. இதற்கு, மக்களைகட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார அமைப்பும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள்மேற்கொள்ளும் தவறான ஆட்சி முறையுமே காரணம் ஆகும். இஸ்லாமிய சமூகம் தங்கள்பிடியில் இருக்கும் படியும், தங்களின் (குடியேற்ற நாடுகளின்) தலைமையே இஸ்லாமியசமூகத்தை ஆதிக்கம் செலுத்தும் வகையிலுமே குடியேற்ற நாடுகளின் பொருளாதாரக்கொள்கைகள் இருக்கின்றன.
இவ்வாறாக, அமெரிக்கா மற்றும் அதைப்போன்ற நாடுகள் ,இஸ்லாமிய நாடுகளை தங்களின் பொருட்களை விற்கும் சந்தையாகவே கருதுகின்றன.குடியேற்ற நாடுகளின் பிடியிலிருந்து மீள முஸ்லீம் ஆட்சியாளர்கள் கையாள வேண்டியபொருளாதாரக் கொள்கைகள் இங்கே விளக்கப்பட்டுள்ளன. மேலும் இஸ்லாமியபொருளாதாரக் கோட்பாடுகள் குர்ஆன் மற்றும் திருநபியின்(ஸல்) போதனைப்படி அமையும்வழியையும் ,இக்கட்டுரை சுட்டுகிறது.
தனி மனிதனின் தேவையைக் கணக்கில் கொள்ளாமல், சமதர்மத்தை நிலைநிறுத்துவதுபற்றியும், மொத்த தேசிய உற்பத்தியை பெருக்குவது பற்றியும் மட்டுமே குடியேற்றநாடுகள் வலியுறுத்துகின்றன. இதன் தொடர்பாக, மேலை நாடுகள், பொருளாதாரத்தைப்பற்றி புத்தகங்கள் பலவற்றை பிரசுரித்து, தொழில் முன்னேற்றம் கண்ட தங்களுடன் சரிநிலையை அடைய, இஸ்லாமிய நாடுகள் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கின்றன.
மொத்த தேசிய உற்பத்தியை பெருக்கி-அதன் அடிப்படையில் பொருளாதாரத்தை அமைக்கும் வழிமுறையும் சமதர்மக் கொள்கையும், சமூக நீதி திட்டமும், சமூகத்திற்கு எவ்வித பயனும்தராமல் உண்மை நிலையிலிருந்து விலகியே நிற்கின்றன. சமூக நீதி கொள்கையானது, முதலாளித்துவக்கொள்கைக்கு கைகொடுக்குமெயன்றி வேறொரு பயனும் அளிக்காது என்பதை சம கால வரலாறு கூறிநிற்கின்றது.
இஸ்லாமிய சட்டங்களை மாற்ற முடியாத காரணத்தினாலும், அவை மட்டுமே மனிதசமூகம் உயர வழி கோலும் என்பதாலும், முஸ்லீம்கள் நிலையற்ற அல்லது பிற நாட்டைச்சார்ந்த பொருளாதாரத்திட்டத்தை பின்பற்றுவது உபயோகமற்றதாகும்.
இஸ்லாமியர்களின்பொருளாதார அமைப்பு திருக்குர்ஆன் கூறும் ஷரியத் சட்டப்படியும், சுன்னாஹ் எனப்படும்நபிகளாரின்(ஸல்) வழிகாட்டுதலின் படியும், சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்வின்படியும்(இஜ்மா-அஸ்-ஸஹாபா), கியாஸ்(ஒப்புநோக்குதல்) படியும் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.
இந்த அடிப்படையில் பின்வரும் நான்கு கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.
1. ஒரு தனி நபருக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தனிப்பட்ட தேவைகள் உண்டு எனஇஸ்லாம் கருதுகிறது.
2. ஒரு மனிதன் வாழ அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என இஸ்லாம்கருதுகிறது.
3. தொழில் சுதந்திரத்தையும், வேலையில் யாவரும் சமம் என்ற நிலையையும்,இறைவனின் வளங்களிலிருந்து பயனடைதலின் மூலம் பெற முடியும் என இஸ்லாம்கருதுகிறது.
4. உறவு முறைகளின் முக்கியத்துவத்தையும், மனிதர்களிடையே உள்ள தொடர்பையும்இஸ்லாம் இதற்காக நிர்வகிக்கிறது.
ஆகவே, மனிதன் உழைப்பதின் மூலமும், மனிதர்களிடையே உள்ள தொடர்பைஉறுதிப்படுத்துவதின் வாயிலாகவும், தனி நபரின் முக்கியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், அவனுடைய வாழக்கைத் தரத்தை உயர்த்தவும், அவனை முன்னேற்றமடையச்செய்யவும் இஸ்லாம் வழி சொல்கிறது.
எனவே உற்பத்தியைப் பெருக்குவதோ, சமதர்மக்கொள்கையோ, சமூக நீதி திட்டமோ-இவை அனைத்தும் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையாகாது. முஸ்லிம்உம்மாவிடையே, அல்லாஹ்வின் வளங்களை சமமாக பங்கிடுதலின் மூலமாக, ஒவ்வொருமனிதனின் அடிப்படைத் தேவைகளையும், அதிகப்படியான தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும் என இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை கூறுகிறது.
வளங்களை சமமாக பங்கிடுதல் மட்டுமல்லாமல் நிலத்தை உழுவதின் மூலமாக செழுமைப்படுத்தியும் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று இஸ்லாம் பொருளாதாரத்தை விளக்குகிறது.
1. பொருளாதாரக் கொள்கை.
2. பொருளாதார முன்னேற்றம்(பொருள் உற்பத்தியும் பெருக்கமும்).
பொருளாதாரக் கொள்கை
பொருளாதாரக் கொள்கைகளை இரு வகைகளாக வகுத்து நோக்கலாம்.
1. பொருளாதாரத்தின் முக்கிய வருமான வழிகள்
2. அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய முறைகள்
பொருளாதார முன்னேற்றம்
வளங்களை வளர்க்கும் வழிமுறைகள் என்பது கூர்ந்து நோக்க வேண்டிய ஒரு விசயமாகும். மனிததேவைகளை கருத்திற்கொள்ளாது உற்பத்தியை மட்டும் கருத்திற் கொள்வதால், நாட்டிற்குநாடு இது வேறுபடுகிறது. இஸ்லாமிய நாட்டில் தொழிற் புரட்சியின் வாயிலாக விவசாயஉற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறையினை கண்டறிவதே இதன் முக்கிய நோக்கமாகும்.அதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழிற்சாலைகள் முக்கிய பங்காற்றுமாறுசெய்யலாம். இவ்வணுகுமுறையை நான்கு பகுதிகளாக நோக்கலாம்.
1. விவசாயக் கொள்கை
2. இயந்திரமயமாக்கற் கொள்கை
3. திட்டங்களுக்கான மூலதனம்
4. வெளிநாட்டுச் சந்தை உருவாக்கம்
விவசாயக் கொள்கை
இது பண்ணை உற்பத்தி அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். இது பின்வரும்முறைகளை உள்ளடக்கியுள்ளது.
மண்ணின் விளைச்சலை அதிகரித்தல் : இது அதி நவீன இயந்திரங்களையும், இரசாயணபொருட்களையும், உற்பத்தித்திறன் மிக்க விதைகளையும் உபயோகிப்பதன் மூலமாகநடைமுறைப்படுத்தப்படுகிறது. இவற்றை கொள்முதல் செய்யமுடியாத விவசாயிகட்கு மானியங்கள் வழங்குவதையும்(கடன்கள் அல்ல), முடியுமானோரை ஊக்குவிப்பதையும் அரசுமேற்கொள்ளும்.
உற்பத்திக்கான நில அளவை அதிகரித்தல்: நில அளவை அதிகரித்தல் என்பதுவிவசாயிகளிடம் இருக்கும் உற்பத்தி நிலங்களை அதிகரித்தலாகும். இது உலர் நிலங்களைவிவசாயத்திற்கு ஏற்ற முறையில் மாற்றியமைக்க உதவுவதோடு நிலமற்ற சிறிய அளவிலானவிவசாயிகட்கு அரசாங்கத்தின் கைவசம் இருக்கும் நிலங்களை வழங்குவதன் மூலமாகவும்நடைமுறைப்படுத்தப்படுகிறது. விளைநிலத்தை, விளைச்சலின்றி மூன்று ஆண்டுகள்வைத்திருப்பது ஹராம் ஆதலால் அவ்வாறு செய்வோரின் நிலங்களை அபகரித்துவிவசாயத்திற்கு ஈடுபடுத்தப்படும்.
இவ்விரு முறைகளின் மூலமாக விவசாய உற்பத்தியில் முன்னேற்றம் காணப்படுவதோடுவிவசாயக் கொள்கையின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறது. இக்கொள்கையை அமுல்படுத்தும்நிலையில் வேறு சில விசயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். விளைச்சலைஅதிகரிப்பதோடு அதன் தரத்தையும் அதிகரித்தல் அவசியமாகும். இது நவீனதொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலமாக சாத்தியமடைவதால் இயந்திரத்தொழிற்புரட்சியை ஏற்படுத்துதல் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது.
ஆகவே விவசாயத் திறனை அதிகரிப்பதில் பின்வரும் நோக்கங்கள் அடிப்படையாகஅமையவேண்டும்.
1. அன்றாடத் தேவை, நீண்ட கோடை, விளைச்சல் சரிவு, வர்த்கத் தடைஎன்பனவற்றை மனதிற்கொண்டு இச்சந்தர்ப்பங்களை முகம் கொடுக்கும் வகையில்உணவு உற்பத்தியில் முன்னேற்றம் காண வேண்டும். இதன் போது விவசாயம் மற்றும்கால்நடை வளர்ப்பு இரண்டிலும் கவனம் செலுத்துதல் அவசியம்.
2. ஆடை அணிகட்கு தேவையான பருத்தி, பட்டு, கம்பளி போன்றமூலப்பொருட்களின் உற்பத்தியல் முன்னேற்றம் காணல். இதன் முக்கிய நோக்கம்வர்த்தகத்தடையின் போது இறக்குமதியினை சார்ந்திராது சுயதேவையினை பூர்த்திசெய்து கொள்வதேயாகும்.
3. வெளிநாட்டு சந்தையில் கிராக்கி நிலவும் பொருள்களின் உற்பத்தியல்முன்னேற்றம். அது ஆடை அணிகலன்களானாலும் சரி அல்லது உணவுப்பொருட்களான பெரித்தம் பழம் போன்றவையானாலும் சரி.
அணைகள் கால்வாய்கள் கிணறுகள் அமைத்தல் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் மிகஅவசியமாயின் முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும். இதன் நோக்கம்விவசாயப்புரட்சியினை மட்டும் ஏற்படுத்துவதல்ல. மாறாக இயந்திரப் புரட்சியினை,விவசாயத்தை புறக்கணிக்காமல் ஏற்படுத்தி, உற்பத்தியினை அதிகரித்தலாகும். இதன்முக்கிய நோக்கம் பொருள் அபிவிருத்தியினை உண்டாக்குவதே. இது இயந்திரப்புரட்சியன்றி சாத்தியமாகாது.
இன்றைய முஸ்லிம் உலகின் பொருளாதாரம் ஒரு சில தொழிற்சாலைகளுடன்,விவசாயத்தை மட்டுமே முழுமையாக ஒன்றியதாக உள்ளதால் பொருளாதார பின்னடைவுபெற்றதாக காணப்படுகிறது. அதனால் இயந்திரப் புரட்சி ஏற்படுத்த அதிகளவிலான முயற்சிமிக அவசியமாகும். குடியேற்ற சக்திகளின் நோக்கம் ஏனைய நாடுகளை விவசாயத்தில்மட்டும் கவனம் செலுத்தச் செய்து, இயந்திர தொழில் முயற்சிகளை தடைசெய்து,அவ்வியந்திரங்கட்காக மேற்குலகை நம்பியிருக்கவைப்பதாகும்.
ஆகவே விவசாயத்தினைமட்டும் ஊக்குவிக்க முனையும் இவர்களின் திட்டங்களை அலட்சியப்படுத்துதல் மிகஅவசியமாகும். ஷாPஆ முடிவை இவ்விடம் கூறுவது பயனளிக்கும். ""சமூகத்திற்குபயன்தரக்கூடிய வீண்விரயமற்ற செயல்திட்டங்கட்கு பொருள் விநியோகிக்க முடியுமானவிடத்துஅதனை மேற்கொள்ளல் கடமையாகும்'' அதாவது மூலதனம் இருக்குமாயின் அதனைமேற்கொள்ளல் அவசியமானது. அச்செயல்திட்டம் அதி முக்கியமாக இல்லாவிடில் வரிவிதித்தல் மூலமாகவோ அல்லது தன் நாட்டு மக்களிடையே கடன் வாங்கியோ மேற்கொள்ளக்கூடாது.
இயந்திரமயமாக்கற்கொள்கை
இக்கொள்கையின் முக்கிய நோக்கம் நாட்டை இயந்திரமயமாக்கலாகும். இக்குறிக்கோளைஅடையக்கூடிய முக்கிய வழியானது இயந்திரங்களை உற்பத்தி செய்வதாகும். பின் மற்றையஉற்பத்தித் தொழிற்சாலைகளை மேற்கொள்ளலாம். இவ்விலக்கை அடைய மாற்று வழியேதும்இல்லாததால் இயந்திங்களை வடிவமைக்கும் தொழிற்சாலைகளை நிறுவுவதில்முக்கியத்துவம் அளித்தல் மிக அவசியமானது. இதன் மூலம் உள்நாட்டில் உற்பத்திசெய்யப்பட்ட இயந்திரங்களால் இயங்கும் தொழிற்சாலைகளை அமைக்கும் வாய்ப்புவாய்க்கிறது. ''இயந்திரங்களை உற்பத்தி செய்வதானது அதிக காலம் எடுக்கும் ஒருநடைமுறை ஆதலால் நுகர்வோர் பாவனை பொருள் உற்பத்தியினை மேற்கொள்ளும்தொழிற்சாலைகளை முதலில் அமைத்தல் வேண்டும்"" என்பது அடிப்படையற்ற நாசகாரத்தைநோக்கிய ஒரு கருத்தாகும். இது இஸ்லாமிய நாடுகளை தன் பொருட்களின் சந்தையாகமாற்றுவதற்காக மேற்கத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட ஒரு கருத்தேயன்றி வேறில்லை.
மேலும் இந்நோக்கை அடைய இயந்திரத் தொழில்நுட்ப அறிவுடைய மனிதவளத்தைமுதலில் உருவாக்க வேண்டும் என்பதும் தவறான கருத்தாகும். மேற்குலகில் அளவிற்குஅதிகமாக காணப்படும் பொறியியலாளர்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் ஒப்பந்தமுறையில் வேலைக்கு அமர்த்துவதுடன் முஸ்லிம் இளைஞர்களை வெளிநாடுகளில்இத்துறைகளில் கற்கவைக்கலாம். மேலும் கற்றுக் கொண்டிருப்போரையும் உபயோகிக்கலாம்.ஆகையால் சிறு அல்லது நுகர்வோர் பாவனை பொருட் தொழிற்சாலைகளை உருவாக்கமுனைவதன் மூலம் இயந்திரமயமாக்கல் முயற்சி வீணடிக்கப்படக்கூடாது . முதல் படியேஇயந்திரங்களை உற்பத்தி செய்தலாக அமையவேண்டும். இக்கொள்கைக்கானபடிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளப்படாது ஒரே சமயத்தில் மேற்கொள்ளவேண்டும். ஒரு படியினை நிறைவேற்றிய பின்பே மற்ற படியினை ஆரம்பித்தல் என்பதுஇம்முயற்சிக்கு எதிரான ஒரு தடையாகும்.
தற்போதுள்ள நுகர்வோர் பாவனை பொருள் உற்பத்தித் தொழிற்சாலைகளை மேலும்விரிவுபடுததுவதில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து இயந்திரமயமாக்கலில் முழுகவனத்தையும் செலுத்துதல் அவசியம். சுய உற்பத்தியை ஆரம்பிக்கும் வரையில்தற்போதுள்ள இறக்குமதி கொள்கையினை, இஸ்லாமிய பொருளாதார கொள்கையை,அமலில் வைக்கலாம். அரசின் கீழுள்ள கனிமப்பொருள் அகழ்வுத்துறையும் இதேநுணுக்கத்தை கையாளலாம். இஸ்லாமிய கொள்கைகளின் பிரகாரம் இத்துறையின்பிரதிநிதியான இஸ்லாமிய அரசு, இத்துறைக்குத் தேவையான உபகரணங்களை சுயஉற்பத்தியில் மேற்கொள்ள முனைய வேண்டும். இந்நிலையினை அடையும் வரைஇறக்குமதியை மேற்கொள்வதோடு தன் கவனத்தை சிதறடிக்காது இயந்திரமயமாக்கலில்முழுதாக செலுத்தவேண்டும்.
திட்டங்களுக்கான மூலதனம்
அரசும், தனியார் துறையும் பொறுப்பேற்க வேண்டிய திட்டங்கள் எவை என இஸ்லாத்தில்தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை முற்றுமுழுதாக தனியார் வசம்செல்வதோடு, மானியம் வழங்கல் கட்டடங்களுக்கான முதலீடு மற்றும் அபிவிருத்தித்திட்டங்கள் ஆகியவற்றில் அரசு பங்கேற்கும். ஆனால் இயந்திரமயமாக்கலில் அரசு மற்றும்தனியார் ஆகிய இரு துறையும் பங்கேற்கும். ஆனால் எண்ணை கனிமப்பொருள் அகழ்வுஎனபன அரசின் கீழ் வருதல் கட்டாயமாகும். ஏனெனில் பூமியினின்றும் கிடைக்கும்கனிமப்பொருட்கள் முஸ்லிம் உம்மாவுக்கு சொந்தமானது. எனவே அதன் பிரதிநிதியானஇஸ்லாமிய அரசே அதனை பேணிப்பாதுகாக்க வேண்டும்.
தனியார் மற்றும் அரசு இரண்டும் திட்டங்களுக்கான மூலதனம் திரட்டல் அவசியம்.தனியார் துறையை பொருத்தமட்டில் இது தனியொருவரோ அல்லது பங்காளர்கள்இணைந்தோ சட்டவிரோதமற்ற, இஸ்லாத்திற்கு எதிரான முறையில் இல்லாமல் அமைத்துக்கொள்ளலாம். அரசினை பொருத்தமட்டில் இதற்காக வெளிநாட்டு உதவிகளை தவிர்த்தல் அவசியம். இது வறுமையையும் வெளிநாட்டினை சார்ந்திருக்கும் நிலையையும்உண்டாக்குகிறது. அதுமட்டுமன்றி வெளிநாட்டு கடன்கள் வட்டியை அடிப்படையாகக்கொண்டதாகும். வட்டி இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டுக் கடன்களைவிலக்குதல் அவசியம். ஆகையால் திட்டங்களுக்கான மூலதனத்திரட்டல், அது அதிமுக்கியத்திட்டமாக இருப்பின், தன் மக்களிடம் வரிவிதித்தல் மூலம் மேற்கொள்ளலாம்.இதன்போது இஸ்லாமிய வரிவிதிப்புக் கொள்கை செயல்படுத்தப்படவேண்டும்.திட்டங்களுக்கான மூலதனத்திரட்டல் தவணை முறையாலும் மேற்கொள்ளப்படலாம்.இதன்போது அதன் கொள்ளளவு விலையிலும் அதிகமாக காணப்படுமாயின் அது வட்டி ரிதியாக அமையாது விலை ரிதியில் அமையுமாயின் மேற்கொள்ளலாம்.
வெளிநாட்டுச்சந்தை உருவாக்கம்
பொருள் சந்தைப்படுத்தலானது வருமானத்தை தரக்கூடிய முக்கிய வழியாகும். பலநாடுகள் தன் பொருட்களுக்கான சந்தை உருவாக்கலில் அன்றுபோல் இன்றும் மும்முறமாகஈடுபட்டுள்ளன. பல பொருளாதார வல்லரசுகள் இதன் மூலம் உருவாகியுள்ளன. ஆகையால்இஸ்லாமிய அரசும் தன் பொருள்களை வெளிநாட்டு சந்தையில் சந்தைப்படுத்தல்முக்கியமாகும். ஆனால் இது ஒரு தனி நோக்கமாக அமையாது. இயந்திரமயமாக்கலுக்குதேவையான பொருள் கொள்முதல், தழும்பலற்ற அன்னியச்செலாவணி திரட்டு, முஸ்லிம்இளைஞர்கட்கு பொறியியல் வைத்தியத் துறைகளில் கல்வி என்பவற்றை கருத்தில் கொண்டுஅமையவேண்டும். வர்த்தகம், இயந்திரமயமாக்கலை நோக்காக கொண்டு அமையவேண்டும்.இதன்போது "வர்த்தகமீதி" யில் கவனம் செலுத்துவது அவசியமற்றது. வர்த்தகமானது,இயந்திரமயமாக்கலுக்கும், இஸ்லாமிய து}து ஏனைய நாடுகளை அடையும் வகையில்இருப்பின், ஏற்றுமதி இறக்குமதியிலும் அதிகமாகவோ, சமமாகவோ அல்லது குறைவாகவோஅமைதலைப்பற்றி சிந்திக்கவேண்டிய அவசியம் கிடையாது. இவ்வர்த்தகக் கொள்கை மற்றஅனைத்து நாடுகளது வர்த்தகக் கொள்கையிலும் வேறுபட்டது. அனைத்து நாடுகளும்பொருட்கள் எங்கு உற்பத்தியாகின்றன என்பதை நோக்குகின்றது. எனினும் நம் கொள்கைவர்த்தகர்கள் எந்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதில் கவனம் செலுத்துகிறது. அதன் மூலமேஇஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ள முடியும். இஸ்லாமிய நாட்டைச் சார்ந்தவர்த்தகர்கள் இஸ்லாமிய ஷாரிஆவால் அனுமதிக்கப்ட்ட வகையில் வர்த்தகம் செய்வர்.வெளிநாட்டவர் தன் சொந்த கொள்கையினை பின்பற்றி வர்த்தகம் செய்வர். இம்முறைஉற்பத்தியை அதிகரிக்க உதவும்.
சுருக்கம்
நாம் இன்று மேலைத்தேய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையால் பலஇன்னல்களுக்கு ஆளாகியுள்ளோம். சுதந்திர வர்த்தக நடைமுறைகள்("FREE TRADE"), உலகநிதி நிறுவனம்(IMF) பின்பற்றும் கொள்கைகள்(இது அடிப்படை தேவைகளில் நிறைவற்றதன்மையை உருவாக்கும்), இன்றைய இஸ்லாமிய நாடுகளில் சுரண்டல் ஆகியவற்றால்அல்லாஹ் தன் அருளால் வழங்கிய வளம் வீணாகி உபயோகமற்றதாகிவிடுகிறது. தெளிவானஒரு தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள, குர்ஆன் மற்றும் சுன்னாவினால்அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முறையான கிலாஃபா முறைக்கு திரும்புவதற்கு இதுவே தக்கதருணமாகும்.முஸ்லிம்களின் நோக்கம் அல்லாஹ்(சுபு)வின் மார்கத்தை அமுல்படுத்தி, இதனை முழுமனித சமுதாயத்திற்கும் சென்றடைய செய்வதாகும். இஸ்லாமிய பொருளாதாரகொள்கையானது இயந்திரமயமாக்கல் மூலம் ஒரு வல்லரசாகி தஆவா, ஜிஹாத் மூலம்இஸ்லாத்தை மற்றையோருக்கு சென்றடைய செய்வதுடன் தன் குடிமக்களின் அடிப்படைதேவைகளை பூர்த்தி செய்வதாகும். எனவே அமெரிக்கர், பிரிட்டிஷ் மற்றும் ஏனைய முஸ்லிம்அல்லாதோர்களின் கொள்கைகளை பின்பற்றாது அல்லாஹ்(சுபு)வின் போதனையை ஏற்றுஇக்காபிர்களின் கொள்கையை பின்பற்றும் அதிகாரத்தை மீற்பதன் மூலமே நம் இலக்குகளைநாம் அடையமுடியும்.
மேலும், (நபியே!) அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக நீர்அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றியும் விடாதீர். அன்றியும், உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்ததில்சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பி விடாதபடியும், நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாகஇருப்பீராக. (உம்முடைய தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால், அப்போது அல்லாஹ்(சுபு)நாடுவதெல்லாம் அவர்களின் சில பாவங்களின் காரணமாக அவர்களை அவன் (தண்டிக்க) பிடிப்பதைத்தான்என்பதை நீர் அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாவர்.
அறியாமை காலத்துத் தீர்ப்பையா அவர்கள் தேடுகின்றனர். உறுதியாக நம்பிக்கை கொண்ட சமூகத்திற்குத்தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வை விடவும் மிக்க அழகானவன் யார்? (ஸ_ரா 5:49,50 )