Monday, September 22, 2008

கிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து...பகுதி 4

கிலாஃபாவை நிலைநாட்டும் வழிமுறை அது நபிகளாரின் வழிமுறை

முஸ்லிம்களாகிய நாம் எடுக்கும் எந்த முயற்சியும் நபிகளாரின் வழிவந்ததாகவே அமையவேண்டும். தொழுகை, ஹஜ் போன்ற தீனின் செயல்களில் நாம் இறைவனின் ஆணைப்படி நபிகளாரைப் பின்பற்றி நடப்பதைப் போல, "கிலாஃபாவை நிலைநாட்டுதல்" என்ற உயரிய கொள்கையிலும் நாம் நமது சுய எண்ணப்படி செயல்படாமல், நபிகளார்(ஸல்) அவர்கள் வகுத்த பாதையையே பின்பற்ற வேண்டும். ஏனெனில், தொழுகை, ஹஜ் ஆகியவற்றைப்போன்றே கிலாஃபா ஆட்சியில் வாழ்வதும் அது இல்லாத பட்சத்தில் கிலாஃபாவை நிலைநாட்டுவதும் ஒரு முக்கியக் கடமையேயாகும்.

அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை (அந்-நஜ்ம் 53: 3-4)
எவர் (அல்லாஹ்வின்) து}தருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்(அந்நிஸா 4: 80)

முதல் இஸ்லாமிய அரசை மதினாவில் நிறுவிய நபிகளார்(ஸல்), அதற்கான முயற்சியை இறைவனின் ஆணைப்படியே நடைமுறைப்படுத்தினார். எனவே நாமும் நபிகளாரின் வழியையே பின்பற்றவேண்டும். அதுவே இறைவன் காட்டிய வழிமுறையாகும்.

(நபியே!) நீர் சொல்வீராக! 'இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும். நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்." (யூசுப் 12: 108)

முதற்கட்டம்- பண்படுத்துதல்

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 'அலக்" என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.( அல் அலக் 96: 1-5 )
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக (அத்துஹா93:11)

ஆகிய சூராக்கள் மூலம் முஹம்மத்(ஸல்) அவர்களின் நபித்துவம் தொடங்கியது.

தமக்கு வந்த கட்டளையை முதன் முதலில் தமது குடும்பத்தினருக்கு எடுத்துரைத்தார்கள். பின்பு ஆருயிர்த்தோழர் அபுபக்கர்(ரலி) அவர்களிடம் விவரித்தார்கள். அதன்பின்னர் அபுபக்கர்(ரலி) அவர்களின் உதவியுடன் மற்றைய நம்பிக்கைக்குரிய நெருங்கியவர்களிடம் தமது து}துத்துவம் பற்றியும், ஓரிறைக்கொள்கை பற்றியும் எடுத்துரைத்தார்கள். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நபியவர்களின் செய்தி மக்கா நகர் முழுவதும் பரவியது.

இந்த ஆரம்ப காலகட்டமாகிய மூன்று ஆண்டுகளில் இஸ்லாமானது தனிநபர்கட்கு மட்டுமே போதிக்கப்பட்டது. தொழுவுருவங்களை வணங்கும் கூட்டத்தாரையும்(முஸ்ரிகீன்), அவர்களது அறியாமையையும்(ஜஹிலியா) நேரடியாக எதிர்நோக்கவில்லை. மாறாக இந்தக் காலகட்டத்தில், எதுவந்தாலும் எதிர்நோக்கத் தயாராகின்ற ஒரு மனோநிலையையும், குர்ஆனை வாழ்நாளில் நடைமுறைப்படுத்துகின்ற, உயர்ந்த ஒழுக்க நெறியை பிரதிபலிக்கின்ற பண்புகளையும், தமக்கு நெருங்கிய, தகுதியுடைய சிலரிடையே கற்பித்து, அவர்களைக் கொண்டு ஒரு கூட்டத்தினரை உருவாக்கினார்கள். அத்தகைய பண்புகள் மூலம் அவர்கள், தாம் வாழும் சமூகத்தை நேரிடையாக எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர்.

ஆனால், நபிகளாரும் அவரது குழுமத்தினரும் எதிர்கொண்ட சமுதாயம் இஸ்லாம் அல்லாத நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும், சட்டதிட்டங்களையும் கொண்டிருந்தது. அதாவது அந்தச் சமுதாயம் மொத்தத்தில் ஒரு ஜஹில் சமுதாயமாக இருந்தது. இந்தப் பின்னணியில்தான் நபிகளார் (ஸல்) தமது குழுமத்தினரிடையே இஸ்லாமிய அறிவை ஊட்டி, அல்லாஹ்(சுபு)வின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றை வலுவூட்டினார்கள். அவர்களது ஜஹில் நடைமுறைகளைத் தகர்த்து, தவ்ஹீது (ஓரிறைக்) கொள்கையையும், நடைமுறைகளையும் செறிவூட்டினார்கள். தமது நம்பிக்கைக்குறிய அந்த முஸ்லிம்களை, நபிகளார், தாருல் அர்காம் எனுமிடத்தில் கூட்டி குர்ஆனின் வழிகாட்டுதலை அவர்கட்கு விளக்கினார்கள்.
இன்றைய சமுதாயமும் அன்றைப்போலவே ஒரு ஜஹில் சமுதாயமாகவே உள்ளது. தனி ஆளாக நாம் ஒவ்வொருவரும் முஸ்லிமாக இருந்தபோதும், ஒரு சமுதாயமாக, அதன் சட்டதிட்டங்களும், சமூக அந்தஸ்துகளும் இஸ்லாமாக இல்லை. எனவே நபிகளாரின்(ஸல்) பாதையைப் பின்பற்றி நாமும் ஒரு குழுவினை தயார்படுத்தி, அவர்களிடையே இஸ்லாமிய அறிவையும் எதையும் தாங்கும் மனோபலத்தையும் உருவாக்க வேண்டும்.

கிலாஃபாவை நிறுவி இஸ்லாமிய வாழ்க்கை முறையை பின்பற்ற, முஸ்லிம்களை அழைக்கின்ற இந்தப் போராட்டத்தின் முதல் கட்டமாக இஸ்லாமிய மார்க்கத்தினைப் பற்றிய ஆழ்ந்த அறிவை பயிற்றுவித்து, பொறுமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட நபர்களை உருவாக்குதல் அவசியம். இஸ்லாத்தின் மீது அவர்கள் கொண்ட பற்றும் அவர்களது செயல்பாடும், மக்களிடையே இஸ்லாத்தின் மீதுள்ள நம்பிக்கையை வலுச்செய்யுமாறு இருக்க வேண்டும். மார்க்கத்தின் மீது தெளிவான அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு தஆவாவை மக்களிடையே சுமந்து செல்லும் ஒரு குழுவாக அதனை உருவாக்குதல் மிக அவசியமாகும்.

ஒரு கூட்டமாக செயல்படுவதன் அவசியம்.

தனியொருவரால் கிலாஃபாவை நிலைநாட்டுவதென்பது இயலாத காரியம் மட்டுமன்றி நபிவழியுமல்ல. அது முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயல்படுத்தவேண்டிய ஒரு கடமையாகும். நபிகளார், தம்மை பின்பற்றி வருவோர் யாரையும் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கவில்லை. முஸ்லிம்கள், தாருல்-அர்காம் எனுமிடத்தில் ஒன்றுகூடி இஸ்லாமை கற்றனர். அங்கு அவர்கள் ஒன்றாக தொழுது ஒரு குழுவாகவே செயல்பட்டனர். அது ஒரு தனித்தன்மை வாய்ந்த கூட்டமாகும்.

சஹாபாக்கள் ஒரு குழுமமாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. ஒருசமயம் சஹாபாக்கள் ஒன்றுகூடி விவாதித்துக் கொண்டிருந்தபொழுது, "நபிகளாரைத் தவிர வேறு யாரும் குர்ஆன் ஓதக் குறைஷியர்கள் கேட்டதில்லை" எனக் குறிப்பிட்டனர். அப்போது அப்து அல்லாஹ் பின் மசூது எனும் சஹாபி தாம் மறுநாள் குறைஷியர் முன் குர்ஆனை ஓதப்போவதாகக் கூறினார். மறுநாள் அவர் கஃபாவின் முன் சென்று, குறைஷியர்கட்கு கேட்கும்படி, சத்தமாக குர்ஆனை ஓதத் தொடங்கினார். அதைக் கேட்ட குறைஷியர் அந்த சஹாபியை தாக்கத் துவங்கினர். தமக்கு நேர்ந்ததை மற்ற சஹாபிகளிடம் அவர் கூறினார். அதற்கு அவர்கள் "இப்படித்தான் நடக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம்" என்றனர். அதைக்கேட்ட அந்த சஹாபி, தாம் மறுநாளும் அதேபோல ஓதப்போவதாக கூறியதைக்கேட்ட மற்ற சஹாபாக்கள் 'வேண்டாம். நீங்கள் இதுவரை செய்ததே போதும் அவர்கள் கேட்க விரும்பாததை நீங்கள் கேட்கச்செய்துவிட்டீர்கள்." எனக் கூறினர்.

மற்றொரு சமயத்தில், இஸ்லாத்தில் ஏசுநாதரின் இடம் பற்றிய குறைஷியரின் புகாருக்கு விளக்கம் கேட்டு, அபிசினியாவிலிருந்து முஸ்லிம்கட்கு அழைப்பு வந்தது. அதற்கு முஸ்லிம்கள் தமது குழுவை கூட்டி விவாதித்தனர். பின்னர் குர்ஆனிலுள்ளதை அப்படியே கூற முடிவெடுத்து, தமது சார்பாக ஜாஃபர் பின் அபுதாலிப் எனும் சஹாபியை அனுப்பிவைத்தனர். அந்த சஹாபியின் விளக்கம் கேட்ட அபிசினியாவின் நேகஸ் '' சாந்தமுடன் இருங்கள். உங்கட்கு இடையூறிழைப்பவர் தண்டனைக்குள்ளாவர். நீங்கள் விரும்பியபடி எங்கும் செல்லுங்கள். எனது நாட்டில் உங்கட்கு எப்பொழுதும் பாதுகாப்பு உண்டு."" என்றார்.

Friday, September 19, 2008

தேசியவாதம்


கடந்த 200 வருடகாலமாக மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள இஸ்லாமிய தேசங்கள் பாரிய வீழ்ச்சியையும் பின்னடைவையும் தழுவியுள்ளன. இந்நிலையிலிருந்து விடுபடுவதற்கும் எழுச்சிப் பாதையில் வெற்றி நடைபோடுவதற்கும் முஸ்லிம்கள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் மேலைத்தேய அரசியற் கருத்துகளின் அடிப்படையிலேயே தங்கள் விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டனர். இக் கருத்துகளிற் பிரதானமானது தேசியவாதமாகும்.

தேசியவாதம் இஸ்லாத்திற்கு முரணான ஒரு கருத்து ஆகும். இரண்டாம் உலக மகாயுத்த காலங்களின்போது முதன் முறையாக அரபுத் தேசியவாதம் தலை து}க்கியது. இதன் வெற்றுக்கோசங்களினால் முஸ்லிம்கள் கவரப்பட்டிருந்த போதிலும் 1950ம் ஆண்டு காலப்பகுதிகளில் தேசியவாதக் கருத்திற்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து முஸ்லிம்கள் தங்களின் விடுதலைக்கான சரியான வழியை இஸ்லாத்திலிருந்து தேட ஆரம்பித்தனர்.

ஓரு தேசத்தின் சிந்தனைத்தரம் நலிவடைகின்ற போது அத்தேசத்தில் தரமற்ற வாழ்க்கை பிணைப்புகளும் (bonds) சமூகப் பெறுமானங்களும் (values) தலை து}க்குகின்றன. இந்த வாழ்க்கை பிணைப்புகள் உயிர் வாழ்தல் என்ற உணர்வை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதாகவும் விலங்குகளில் காணப்படுகின்ற வாழ்க்கை பிணைப்புகளை ஒத்ததாகவும் காணப்படுகின்றன. இவை வெறும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதும் அடிக்கடி மாறக்கூடியதும் நிலையற்றதுமாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு தேசத்தின் மீது வெளிநாட்டு அக்கிரமிப்பு இருக்கின்ற போது அதிகமாகக் காணப்படுகின்ற இந்த வாழ்க்கை பிணைப்புகள் சமாதான காலங்களின்போது உணரப்படுவதில்லை. இவற்றில் மிகப்பிரதானமானவை தேசப்பற்றும் தேசியவாதமும் ஆகும்.

தேசப்பற்று என்பது ஒரு நிலப்பிரதேசத்தையும் அங்கு வசிக்கின்ற மக்களையும் இணைக்கின்ற ஒரு பிணைப்பு ஆகும். அதேபோல் தேசியவாதம் என்பது மனிதர்களுக்குள் காணப்படுகின்ற ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு ஆகும். ஒரு மனிதன் தனது ஆதிக்கத்தை தனது குடும்பம் அயலவர்கள் பின்னர் ஒரு பாரிய பிரதேசத்தவர்கள் என்று விரிவு படுத்துகின்றபோது தேசியவாதம் தலை து}க்குகின்றது. ஆதிக்க உணர்வு என்பது ஆதிக்கம் செலுத்தப்படுகின்றவர்களுக்கு மத்தியிலும் காணப்படும் ஒரு உணர்வு என்பதால் இது எப்பொழுதும் முரண்பாடுகளுக்கும் போராட்டங்களுக்குமே வழிகோலுகின்றது. எனவே இந்த வாழ்க்கைப்பிணைப்பு (தேசியவாதம்) மனிதாபிமானமற்றதும் இனவாதத்திற்கு வழி கோலுவதும் தரக்குறைவான சிந்தனையின் வெளிப்பாடுமாகும்.

அதுமட்டுமல்லாது தேசியவாதம் மனிதவாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஒரு வாழ்க்கை முறையையும் (ideology) மனிதர்களுக்கு வழங்குவதில்லை. எனவேதான் தேசிய சமத்துவம் (socialism) மற்றும் தேசிய முதலாளித்துவம் என்பவற்றை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே ஒரு சமுகத்தில் காணப்படவேண்டிய சரியான வாழ்க்கை பிணைப்பு வெறும் உணர்ச்சிகளை மாத்திரம் அடிப்படையாக கொண்டிராமல் அறிவார்ந்த அடிப்படையில் இருக்க வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கை பிணைப்பு என்பது அல்லாஹ்(சுபு)விடம் இருந்து இறக்கப்பட்டதும், அறிவார்ந்த அடிப்படையைக் கொண்டதும், சரியானதும் ஆகும். இஸ்லாமிய வாழ்க்கை பிணைப்பு நிறுவப்படுகின்ற போது இரத்தம், பிரதேசம் அல்லது ஆதிக்க உணர்வு என்பவற்றை அடிப்படடையாகக் கொண்ட பிழையான வாழ்க்கை பிணைப்புகள் அகற்றப்பட்டு விடுகின்றன. அல்லாஹ் திருக் குர்ஆனிலே கூறுகின்றான்.

“கூறுவீராக! உங்களுடைய தந்தைகளும், ஆண் மக்களும், சகோதரர்களும், மனைவியரும், குடும்பத்தினரும், சம்பாத்தியங்களும், நீங்கள் நஷ்டத்தைப் பயப்படுகின்ற வியாபாரமும், நீங்கள் விரும்புகின்ற வீடுகளும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், அவனுடைய பாதையில் போர் செய்வதையம் விட உங்களுக்கு விருப்பமானவைகளாக இருந்தால் அப்போது நீங்கள் (தண்டனையைப்பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் எதிர்பார்த்திருங்கள். மேலும் பாவிகளான கூட்டத்தினரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தவும் மாட்டான்.” (9-24)

இஸ்லாம் மாத்திரமே மனித இனத்திற்கான ஒரேயொரு சரியான வாழ்க்கைத்திட்டம். சோசலிஸம், முதலாளித்துவம் அனைத்துமே பிழையான வாழ்க்கைத்திட்டங்களே ஆகும். இரத்தப்பிணைப்பு பிரதேசப்பிணைப்பு போன்றவற்றிலிருந்து மனிதனுக்கு விடுதலையளிப்பதன் முலம் அவனுடைய அந்தஸ்தை உயர்த்துவதற்காகவே இஸ்லாம் இறக்கப்பட்டது. ஓரு முஸ்லிம் எந்தத் தேசத்தைக் கொண்டும் அடையாளம் காணப்படுவதில்லை. இறைசட்டம் (ஷரீஆ) அமுல்படுத்தப் படுகின்ற நிலம் மாத்திரமே ஒரு முஸ்லிமுக்குரிய தேசம். இஸ்லாமிய நம்பிக்கையைக்கொண்டு மாத்திரமே அவன் அடையாளம் காணப்படுவான். ஓரு முஸ்லிமின் சொந்தக்காரர்கள் இறை விசுவாசம் கொண்டவர்கள் மாத்திரமே. எனவே ஓரு முஸ்லிமுக்கு தாய் சகோதரர்கள் மனைவியர் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களிடம் கூட எந்த உறவும் கிடையாது, அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் தவிர. எனவே இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையிலே முஸ்லிம்கள் எல்லோரும் இணைக்கப்படுவார்கள்.

“மனிதர்களே நீங்கள் உங்கள் இரட்சகனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதற்குரிய ஜோடியையும் படைத்தான். இன்னும் அவ்விருவரிலிருந்தும் அனேக ஆண்களையும் பெண்களையும் பரவச்செய்தான். நீங்கள் எவனைக்கொண்டு உங்களுக்குரிய உரிமைகளைக் கேட்டுக்கொள்கின்றீர்களோ அவனையும் இரத்த சொந்தங்களைத் துண்டித்து விடுவதையும் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.” (4-1)

“நபியே உமதிரட்சகன் அவனைத்தவிர மற்றெவரையும் நீங்கள் வணங்கக்கூடாதென்றும் பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டிருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவருக்கும் ‘சீ’ என்று கூட சொல்ல வேண்டாம். அவ்விருவரையம் விரட்டி விடவும் வேண்டாம். அவ்விருவருக்கும் மரியாதையான வார்த்தையைக் கூறுவீராக” (17-23)

இந்தக் குர்ஆன் வசனங்களின் விளக்கம் என்னவென்றால் ஒரு முஸ்லிமுக்கு தன் பெற்றோர் மீது அன்பு காட்டுவது அவசியமானதுதான். என்றாலும் இஸ்லாத்தின் விரோதிகளுடன் அவர்கள் வெளிப்படையான தொடர்பை வைத்திருந்தால் அவர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்குமிடையில் எந்த உறவும் கிடையாது. அவர்களின் மீது அன்பு காட்டவேண்டிய அவசியமும் கிடையாது.

அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸைத் அறிவிக்கின்றார்கள்.
நபி(ஸல்)அவர்கள் அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு உபை (ரலி) அவர்களை அழைத்துக்கேட்டார்கள்- “உங்களின் தந்தை என்ன கூறினார் என்று தெரியுமா?" அப்துல்லாஹ் (ரலி) கேட்டார்கள் “எனது பெற்றோர் உங்களுக்குக் காணிக்கையாகட்டும். எனது தந்தை என்ன கூறினார்?" அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “நாங்கள் மதீனாவிற்குத் திரும்பினால் கண்ணியம் மிக்கவர்கள் வெறுக்கப்படுபவர்களை விரட்டியடிப்பார்கள்." அதற்கு அப்துல்லாஹ் (ரலி) கூறினார்கள் “இறை தூதரே அல்லாஹ் மீது சத்தியமாக அவர் உண்மையையே கூறினார். நீங்கள்தான் கண்ணியத்திற்குரியவர். அவர்தான் வெறுக்கப்படுபவர். “இறை தூதரே நீங்கள் மதீனாவிற்கு வருவதற்கு முன்பு என்னை விடவும் தந்தைக்கு அதிகமான கீழ்ப்படிவு உள்ளவர் வேறு எவருமில்லை என்பதை மதீனாவாசிகள் அறிவார்கள். ஆனால் இப்பொது அல்லாஹ்வும் அவனுடைய து}தரும் விரும்பினால் நான் அவருடைய தலையைத் துண்டாடுவேன்." எனக்கூறினார்கள். இதற்கு நபி(ஸல்) அவர்கள் மறுப்புத்தெரிவித்தார்கள்.
முஸ்லிம்கள் மதீனாவிற்குத்திரும்பிய போது மதீனா வாசலிலே தனது தந்தையைத் தடுத்து நிறுத்திய அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் தமது வாளை உருவி தந்தையின் தலைக்கு மேல் பிடித்தவர்களாகக் கூறினார்கள் “நாங்கள் மதீனாவிற்குத் திரும்பினால் கண்ணியம் மிக்கவர்கள் வெறுக்கப்படுபவர்களை விரட்டியடிப்பார்கள் என்று கூறினீர்களா? கண்ணியம் இறை து}தருக்குரியதா அல்லது உமக்குரியதா? என்பதை நீங்கள் இப்போது விளங்கிக் கொள்வீர்கள். அல்லாஹ்வும் அவனுடைய து}தரும் அனுமதி தரும் வரை சத்தியமாக நான் உங்களை மதீனாவிற்குள் அனுமதிக்கவும் மாட்டேன் அடைக்கலம் தரவும்மாட்டேன்" இதனைக்கேட்ட இப்னு உபை இரு முறை சப்தமிட்டுக் கூறினார்கள், ஹஸ்ரஜ் கூட்டத்தினரே எனது மகன் எனது வீட்டை விட்டும் என்னைத் தடுப்பதைப்பாருங்கள்." எத்தனையோ ஸஹாபாக்கள் கெஞ்சிக்கேட்டும் கூட அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இந்தச்செய்தி முஹம்மத்(ஸல்) அவர்களின் காதுகளை எட்டியது. கடைசியாக இப்னு உபையை அனுமதிக்கும்படி முஹம்மத்(ஸல்) அவர்களிடமிருந்து உத்தரவு வந்ததன் பின்னரே “நபி(ஸல்) அவர்களிடமிருந்து அனுமதி வந்திருப்பதால் உங்களை மதீனாவிற்குள் அனுமதிக்கின்றேன்" என்று கூறி தமது தந்தையை மதீனாவிற்குள் அனுமதித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தங்கள் மாமா அபு லஹப் தங்கள் சகோதரர் அபு ஜஹ்ல் போன்றவர்களின் இரத்த உறவைத் துண்டித்திருந்தமையும், அரேபியாவைச் சேர்ந்த முஹம்மத்(ஸல்) ரோமைச் சேர்ந்த சுஹைல் அபீஸீனியாவைச் சேர்ந்த பிலால் பாரசீகத்தைச் சேர்ந்த ஸல்மான் போன்றவர்கள் சகோதரர்களாக இருந்தமையும் வெளிப்படையான உண்மைகளாகும்.

ஓ முஸ்லீம்களே! ஈமானியக் கொடியின் கீழ் மாத்திரமே வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எமது போராட்டத்தின் இலக்கு இறை திருப்தியும் அல்லாஹ்வினுடைய சட்டங்களை நிலை நாட்டுவதும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதும் மாத்திரம் தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நமது போராட்டத்தின் இலக்கு சொத்துக்காக புகழோ நாட்டின் பெருமையோ இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
அபு முஸா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள் - “ஒரு மனிதர் சொத்துக்காகப் போராடுகின்றார் இன்னும் ஒருவர் புகழுக்காகப் போராடுகின்றார் இவர்களில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் யார்?" இதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “அல்லாஹ்வின் சட்டங்களை உயர்வு பெறச் செய்வதற்காகப் போராடுபவர்தான் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்"

அல்லாஹ் கூறுகின்றான்
“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது து}தரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே. (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்;. மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.”(58:22)

“நபி இப்றாஹீமிலும் அவருடன் இருந்தவர்களிலும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கின்றது. அவர்கள் தம் சமுகத்தாரிடம் கூறினார்கள் - நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவைகளில் இருந்தும் விலகி உங்களை நிராகரித்து விட்டோம். இன்னும் அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசங் கொள்ளும் வரை உங்களுக்கும் எங்களுக்கம் இடையில் விரோதமும் வெறுப்பும் என்றென்றும் வெளிப்பட்டுவிட்டது.” ( 60-4)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

“பிரிவினைவாதம் கெடுதியானது. அதை விட்டு விடுங்கள். பிரிவினை கோருபவன் அதற்காகப் போராடுபவன் அதற்காக உயிர் கொடுப்பவன் எவனும் எம்மைச்சார்ந்தவர்களல்ல.”

எனவே மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துகின்ற தேசியவாதம் என்பது மிகவும் பின்னடைவானதும் இஸ்லாத்திற்கு முரணானதுமான ஒரு வாழ்க்கைப்பிணைப்பு ஆகும்.

Thursday, September 4, 2008

இது நாளைய செய்தி!

எனது இலட்சியக்கனவுகளில்
கற்பனைகளில்
என் இறைவன் மீதாணை!

நளையை காண்கிறேன்...
கடந்த கால தீர்க்க தரிசன
அடைவுகளில் எதிர்காலத்தை
நிச்சயப்படுத்தி அந்த
சத்தியத்தின் சுபசெய்தி அது
'கிலாபத்தின்' நிழலில்
கண்ணியம் காக்கப்பட
அராஜகங்கள் மீது
நீதியின் மோதல்கள் - அதில்
'ஜிஸ்யா' வைத்தவிர
குறைந்தபட்சம் ஏதுமற்ற
'குப்ரின்' மீது சலுகை தவிர
அதிகமாய் எதையும்
விட்டு வைக்க மாட்டோம்.

பாரசீகக் கோட்டைகள்
யெமனின் கதவுகள்
நாம் தட்டித்திறந்ததுதான் - அதே
‘வஹியின்’ வாக்குறுதியில்
‘ரோமிலும்’ நுழைவோம்.
எமக்கு எல்லாம்
ஒரே கதவுதான்!
ஒரே வழிமுறைதான்!
கிர்ஸாவின் காப்புகளைப்போல்
கொன்ஸ்தாந்துநோபல் வெற்றிபோல்
நிச்சயிக்கப்பட்டது – அதில்
தேசிய சகதிக்குள் புதைந்த
எம் தேசங்களை மீண்டும் அந்த
இஸ்லாத்தின் வரைகோடு
எல்லைப்படுத்தும் - நிச்சயம்
பூச்சாண்டியற்ற பூகோள
சமத்துவம் நிஜப்படும்.

‘குத்ஸில்’ எம் சகோதரக்
குருதியோடு விளையாடும்
சியோனிசக் காட்டேறிகளை
கழுத்தறுத்து - மீண்டும்
‘கைபரை’ நினைவு கூர்வோம்.
சீனாவை ஊடறுத்து
சிந்துவரை நாம்தான்!
இலங்கையின் ஈனத்தன
இனத்துடைப்பு
காஸ்மீரின் கண்ணீர்க்கதை
சிரித்த முகத்தோடு
முடிவெழுதுவான்-ஓர்
சிந்துவின் சகோதர மைந்தன்.

அநீதிகளின் முற்றுப்புள்ளி
எம்மிடம்தான் - அன்று
முத்திரையிட்டு புரியவைக்கும்
முஹம்மதின்(ஸல்) படை – மீண்டும்
ஐரோப்பாவின் இதயமாகும்
துருக்கியும், ‘குவாண்டனாமோ’
விடுதலையும்-எம்
கடற்களங்கள் கரையேறும்
தென் அமெரிக்காவும்
முற்றுகையில் முதலாளித்துவ
ஏகாதிபத்திமும் நிச்சயம்தான்
எதிர் பார்த்திருப்போம்.

- புதியவன் -

Wednesday, September 3, 2008

ஒரே சமுதாயம் - ஒரே பிறை - ஒரே பெருநாள்

இது இந்தியாவில் வெளியிடப்பட்ட ஓர் துண்டுப்பிரசுரம்...

“மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னும் பிரிந்து விடாதீர்கள்”. ( 3:103)
ரமளான் நோன்பை ஆரம்பிப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட்டு செயல்படுவது கடமையாகும் (Fardh). இது அல்லாஹ் (சுபு) முஸ்லிம்களுக்கு விதித்த கட்டளையாகும். இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமைக்குரிய நிரூபணமாகும். ஆனால் தலைப் பிறையை தீர்மானிப்பதில் வட்டார வாரியான அளவுகோல் பின்பற்றப்படுவதால் முஸ்லிம்கள் பிளவுபட்டு நிற்கிறார்கள். இதனால் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், பெருநாள் கொண்டாடுவதும் வெவ்வேறு (மூன்று நாட்கள் வித்தியாசம்) நாட்களில் நிகழ்கிறது. அல்லாஹ் (சுபு) குறிப்பிட்ட பகுதி என்று எல்லையை பிரிக்காமல் அமைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவாகவே கட்டளையிட்டுள்ளான்.

“நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது. (இதனால்) நீங்கள் இறையச்சமுடையோர்களாக ஆகலாம்.” (3:183)
இங்கு அல்லாஹ் (சுபு) நம்பிக்கையாளர்களே என்று ஒட்டுமொத்தமாகவே குறிப்பிடுகிறான். எனவே நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், நோன்பை நிறைவு செயவதும் எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான கட்டளையாகும். எனவே ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை ஏனைய பகுதியினரை கட்டுப்படுத்தாது என்பது சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயலாகும். யாரெல்லாம் இப்பிரிவினைக்கு ஊக்கமளிக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் (சுபு) விற்கும், அவனுடைய தூதருக்கும் எதிராக செயல்படுகறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
“(தேய்ந்து வளரும்) பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். அவை மனிதர்களுக்கான காலங்காட்டியகாவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன என்று கூறுவீராக”. (3:183)

இவ்வசனத்தில் பிறைகளை முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது முழு மனித சமூகத்திற்கான காலங்காட்டியாக அல்லாஹ் (சுபு) குறிப்பிடுகிறான். எனவே பிறையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் சந்திர காலண்டர் இடத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடுவது முரண்பாடானதாகும். ஆனால் இன்றைய நடைமுறையில் சந்திரமாதத் துவக்கம் வட்டார வாரியாக வேறுபடுவதால் ஹிஜ்ரா காலண்டர் (சந்திர காலண்டர்) நடைமுறைக்கு ஒத்து வரவில்லையே என்பதாக முஸ்லிம்கள் வருந்துகின்றனர். ஆனால் சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காலண்டர் (Gregorian Calender) இத்தகைய வேறுபாடின்றி இருப்பதால் அதை முதன்மைப்படுத்த வேண்டிய அவல நிலையிலுள்ளனர்.
நபி (ஸல்) நோன்பின் ஆரம்ப நாளையும், பெருநாளையும் எவ்வாறு தீர்மானிக்க வேண்டு மென்பதை மிகத் தெளிவாக நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
“பிறையைப் பார்க்காதவரை நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காதவரை நோன்பை நிறைவு செய்யாதீர்கள். மேகமூட்டமாக இருந்தால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்”. (அபூஹீரைரா (ரலி) முஸ்லிம்)

“பிறையைப் பார்க்காதவரை நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காதவரை நோன்பை நிறைவு செய்யாதீர்கள். மேகமூட்டமாக இருந்தால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்”. (இப்னு உமர் (ரலி), புகாரி)

இங்கு பிறை பார்க்க இடப்பட்ட கட்டளை பொதுவான (aam) தாகவே உள்ளது. இந்த ஹதீஸில் இடம்பெறும் சூமூ (Soomoo) என்ற வினைச்சொல் பன்மையாகும். எனவே முழு உம்மாவையும் கட்டுப்படுத்தும். மேலும் ருஃயத் (Ru'yath) என்ற சொல்லும் பொதுவான பொருளிலேயே பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனவே உலகின் எந்தப் பகுதியிலும் பார்க்கப்படும் பிறை அனைத்து முஸ்லிம்களையும் கட்டுப்படுத்தும். நபி (ஸல்) காலத்தில் முஸ்லிம்கள் பல பகுதிகளில் வாழ்ந்து வந்த நிலையிலும், ஒரே நாளில் நோன்பை ஆரம்பித்தும், பெருநாள் கொண்டாடியுமுள்ளனர். எனவே நபி (ஸல்) காட்டித் தராத நடைமுறையை நாம் பின்பற்றக் கூடாது.
“ரமளானுக்காக ஷஅபான் மாதத்தை கணக்கிட்டு வாருங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்”. (அபூஹூரைரா (ரலி), திர்மிதி)
எனவே ரமளான் மாதத்தின் துவக்க நாளை சரியாகக் கணக்கிட்டு ஷஅபான் மாதத்தை துல்லியமாக கணக்கிட்டாக வேண்டும். ஷஅபான் சரியாக கணக்கிடப்பட வேண்டுமெனில் ரஜப் மற்றும் அதற்கு முந்தைய மாதங்களை சரியாக கணக்கிட்டிருக்க வேண்டும். இவ்வாறு கணக்கிட்டால்தான் முஸ்லிம்கள் ஒரே நாளில் ஒற்றுமையாக நோன்பையும், பெருநாளையும் கடைபிடிக்க இயலும்.
பிறையைப் பார்ப்பது என்பதைப் பொறுத்தவரை முஸ்லிமான ஒருவர் பார்த்து விட்டதாக சாட்சி கூறினாலே ஏற்கத்தக்கதாவிடும். நபி (ஸல்) முஸ்லிமான ஒருவர் பார்த்து சாட்சியமளித்த போது அதை ஏற்று செயல்பட்டுள்ளார்கள்.
“பிறையைப் பார்க்காத காரணத்தால் முஸ்லிம்கள் நோன்பை ஆரம்பிக்காம லிருந்தனர். அப்போது மதீனாவில் குடியிருக்காத ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பிறையைக் கண்டதாக கூறினார். நபி (ஸல்) அவரிடம் மு°லிமா? என்று வினவினார். அவர் ஆம் என்று பதிலளித்தார். உடனே நபி (ஸல்) அல்லாஹூ அக்பர்! ஒருவர் பார்த்தாலே அனைத்து முஸ்லிம்களுக்கும் போதுமானது என்றவர்களாக தானும் நோன்பு நோற்க ஆரம்பித்தார்கள். மக்களையும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள்”. (இப்னு அப்பாஸ் (ரலி), அபூதாவூது)
ஹனபி மத்ஹபின் பிரபலமான இமாமான ஸர்கஸி (ரஹ்) மேற்கண்ட ஹதீஸை சுட்டிக்காட்டி பிறை பார்க்காமல் நோன்பு நோற்கலாகாது என்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். (A1 - Mabsoot: 3: 52))
மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் நபி (ஸல்) அம்மனிதரிடம் எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்கவில்லை. இதே போன்று தகவலை ஏற்று செயல்பட்டதாக கிடைக்கப்பெறும் மற்ற ஹதீஸ்களிலும் நபி (ஸல்) தூரத்தை அளவுகோலாக நிர்ணயிக்கவில்லை. எனவே நபி (ஸல்) காட்டித்தராத நடைமுறையை நிர்ணயிக்க யாருக்கும் அதிகாரமில்லை. பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும். ஆனால் ஒரு பகுதி முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடும் போது பிறபகுதியினர் (ஒட்டிய பகுதியில் வாழ்ந்தாலும் கூட) நோன்பை தொடர்கின்றனர். இச்செயல் ஹீகும் ஷரியா விற்கு மாற்றமான பாவமான காரியமாகும்.

“நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரு தினங்களிலும் நோன்பு நோற்பதற்கு நபி (ஸல்) தடை விதித்தார்கள்” (ஆயிஷா (ரலி), முஸ்லிம்)
“யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்விட்டார்”. (அம்மார் (ரலி), புகாரி)

நபி (ஸல்) அவர்களும், முஸ்லிம்களுக்கு நோன்பு நோற்ற நிலையிலிருந்த போது பிற பகுதியிலிருந்து பிறை பார்த்தவர்கள் தகவலை காலதாமதமாக வந்து கூறியபோது நோன்பை தொடர அனுமதிக்காமல் உடனடியாக நோன்பை விட்டுவிட கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் இன்று பல பகுதிகளில் பெருநாள் கொண்டாடப்படும் தகவல் நமக்கு உடனுக்குடன் கிடைக்கப்பெற்றாலும் செயல்படுத்த தயங்குகிறோம். இதனால் அறிந்து கொண்டே பெருநாள் தினத்தில் நோன்பு நோற்கும் ஹராமான காரியத்தை செய்து வருகிறோம்.

“நாங்கள் முப்பதாம் நாள் காலை நேரத்தை அடைந்தோம். அப்போது இரு கிராமவாசிகள் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்பதாக சாட்சி கூறினார்கள். உடனே நபி (ஸல்) நோன்பை விட்டுவிடுமாறு மக்களுக்கு கட்டளையிட்டார்கள்”. (அபூமஸ்வூத் அல்அன்ஸாரி (ரலி), தாரகுத்னி)
"மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தென்படவில்லை. எனவே நாங்கள் நோன்பு நோற்ற நிலையிலிருந்தோம். அப்போது பகலின் இறுதிப்பகுதியில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபி (ஸல்) நோன்பை விடுமாறும் மறுநாள் பெருநாள் தொழுமாறும் கட்டளையிட்டார்கள். (அபூஉமைர் (ரலி), அபூதாவூது, அஹ்மது, தாரகத்னி)
வெவ்வேறு நாட்களில் நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை முடிவு செய்ய நபி (ஸல்) காலத்திற்கு பின்னர் இப்னு அப்பாஸ்(ரலி) காலத்தில் நடைபெற்ற பின்வரும் வரலாற்று சம்பவத்தை சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

"உம்முல் பழ்ல் (ரலி) என்னை ஷாமிலிருந்த முஆவியாவிடம் அனுப்பி வைத்தார்கள். நான் ஷாமிற்கு சென்று அவரது வேலையை முடித்தேன். நான் ஷாமிலிருக்கும்போது ரமளானின் முதல் பிறை எனக்கு தெரிந்தது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் இறுதியில் மதீனாவிற்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னை விசாரித்தார்கள். பிறகு பிறையைக் குறித்து கேட்டார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவு பிறையைப் பார்த்தோம் என்றேன். நீயே பிறையைப் பார்த்தாயா? என்றார்கள். ஆம். மக்களும் பார்த்தார்கள். நோன்பு நோற்றார்கள். முஆவியாவும் நோன்பு நோற்றார்கள். நாங்கள் சனிக்கிழமை இரவில் பிறையை பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பதை பூர்த்தியாகும் வரை நோன்பை தொடர்வோம் என்றார்கள். முஆவியா பார்த்ததும் நோன்பு நோற்றதும் போதாதா? என்றேன். அதற்கவர்கள் போதாது நபி (ஸல்) இவ்வாறு தான் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்று விடை யளித்தார்கள். (குரைப், முஸ்லிம்)
இது ஹதீஸ் அல்ல. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் கருத்து ஆகும். பிறை பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என்ற நபி (ஸல்) கட்டளையை இப்னு அப்பாஸ்(ரலி) ஒவ்வொரு பகுதியினரும் பார்த்தாக வேண்டும் என்று விளங்கிருந்ததால் அவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் பிறபகுதியில் பார்த்த தகவலை ஏற்று செயல்பட்டுள்ளதால் மேற்கண்ட சம்பவத்தை ஏற்கத்தக்க ஆதாரமாக கொள்ள முடியாது.
இதை இமாம் ஸவ்கானி (ரஹ்) உறுதி செய்கிறார்கள். அவர் நைலுல் அவ்தார் என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்: ஏற்றுக் கொள்ளத்தக்க ஆதாரம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்த நபி (ஸல்) அவர்களின் ஹதீஸில் தெளிவாக இருக்கிறது. இத்தகைய தெளிவான ஆதாரத்தை மக்கள் விளங்குவது போல் அவரது கருத்திலிருந்து பெற முடியவில்லை. எனவே ஷரியாவிற்கு முரணாகவோ அல்லது சந்தேகம் கொள்ளும்படியோ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று இருந்தால் அதை நாம் பின்பற்றத் தேவையில்லை. நபி (ஸல்) கூறியதையே நாம் பின்பற்ற வேண்டும்.

“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளவும்” (2:185) என்ற வசனத்தை வைத்து ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாட்களில் ரமளானின் துவக்க நாளை அடைவதாக சமீபகாலமாக தவறாக விளக்கப்பட்டு வருகிறது. இவ்வசனத்தில் அந்த மாதத்தை அடைந்து விட்டவர் மீது நோன்பு நோற்பது கட்டாயமாகும் என்பதாகத்தான் அல்லாஹ் (சுபு) குறிப்பிடுகிறான். ஒவ்வொரு பகுதியனிரும் வெவ்வேறு நாட்களில் ரமளானை அடைவதாக குறிப்பிடவில்லை. குர்ஆனை விளங்குவதற்கென்ற அடிப்படை விதிமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக விளங்கிக் கொண்டால் இத்தகைய ஃபித்னா ஏற்படவே செய்யும்.

“யார் எவ்வித ஞானமின்றி குர்ஆனைப் பற்றி பேசுகிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்”. (திர்மிதி, அஹ்மது) என்ற நபி (ஸல்) எச்சரிக்கையை சமர்ப்பிக் கின்றோம். குர்ஆனில் நாஸிக் (மாற்றக்கூடியது), மன்ஸூக் (மாற்றப்பட்டது) என்ற விதிமுறையுடைய வசனங்கள் உள்ளன. 2:184 வசனம் மன்ஸூக் ஆகும். 2:185 வசனம் நாஸிக் ஆகும், தப்ஸீர் இப்னு கதீரில் இதற்கு தெளிவான விளக்கம் கிடைக்கிறது. ஆரம்ப காலத்தில் நோன்பு நோற்பது கட்டாயம் என்ற நிலையிலிருந்து விதி சற்று தளர்த்தப்பட்டிருந்தது. அப்போது 2:183, 2:184 ஆகிய வசனங்கள் அருளப்பட்டிருந்தன. நோன்பு நோற்க சக்தியிருந்தும் நோற்கவில்லையெனில் ஒர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாயிருந்தது. இதனால் விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் (Fidya) செய்து வந்தனர். எனவே தான் “நோன்பின் நன்மையை நீங்கள் அறிவீர்களாயின் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்தை அறிந்து கொள்வீர்கள்”) என்பதாக அல்லாஹ் (சுபு) குறிப்பிடு கிறான். அதன்பின் இச்சட்டத்தை மாற்றி அந்த மா தத்தை அடைந்து விட்டாலே நோன்பு நோற்றாக வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. ஸலமா பின் அக்வஃ (ரலி) அறிவிக்கும் பின்வரும் ஹதீ° சான்று பகர்கின்றது.

“நோன்பு நோற்க சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கவில்லையெனில்) அதற்கு பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் என்ற (2:184) வசனம் அருளப்பட்டபோது விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் செய்து வந்தனர். பின்னர் இச்சட்டத்தை மாற்றி உங்களில் என்றவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் என்ற வசனம் (2:185) அருளப்பட்டது”. (புகாரி - 4507)

நாம் இங்கு பகல் நேரத்திலிருக்கும்போது உலகின் மற்ற பகுதியினர் இரவு நேரத்திலிருப்பர். எனவே நோன்பும், பெருநாளும் வெவ்வேறு நாட்களில் (மூன்று நாட்கள் வித்தியாசத்தில்) வந்தே தீரும் என்ற அடிப்படையற்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. பின்வரும் வசனத்தை சிந்தித்தாலே தெளிவு பிறக்கும்.
“இன்னும் ஃபஜ்ரு நேரம் எனற் வெள்ளை நூல் (இரவு என்னும்) கருப்பு நூலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். பின்னர் இரவு வரும்வரை நோன்பை நிறைவு செய்யுங்கள்.” (2:187)

இவ்வசனத்திலிருந்து நோன்பை ஆரம்பிக்கும் நேரமும் (Imsak), நோன்பை நிறைவு செ ய்யும் நேரமும் (Iftar) பூமியெங்கும் மாறுபடக்கூடியது என்பதை விளங்கிக் கொள்ளலாம். எனவே உலகெங்கும் நோன்பு நோற்க ஆரம்பிக்கும் நேரமும், அதை நிறைவு செய்யும் நேரமும் பகுதி வாரியாக மாறுபட்டாலும், அந்த நாள் என்பது மாறுபடாது. இதை இன்னும் இலகுவாக விளங்கிக் கொள்ள ஜூம்ஆ தினம் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என்பதை சிந்தித்தாலே விளங்கும். ஜூம்ஆ தொழுகை என்பது ஒரே நாளில்தான் பூமியெங்கும் நிறைவேற்றப்படுகிறது ஒரே நேரத்திலுமல்ல. ஒரே நாளுக்குள் (24 மணி நேரத்திற்குள்) உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றி முடிப்பதை நாம் அறிந்தே வைத்துள்ளோம். வெவ்வேறு நாட்களில் நிறைவேற்றப் படுகிறது என்று யாரும் கூறுவதில்லை. எனவே பெருநாள் தொழுகை என்பது பூமியெங்கும் வெவ்வேறு நேரத்தில் நிறைவேற்றப்பட்டாலும் ஒரு நாளுக்குள் (24 மணி நேரத்துக்குள்) நிகழ்ந்து விட வேண்டும். எனவே இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவிலிருப்போர் பிறையைக் கண்டு பெருநாள் கொண்டாடுவார்களாயின் அவர்களைப் பின்பற்றி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருப்போரும் அந்நாளில் பெருநாள் கொண்டாடியாக வேண்டும். ஜகார்தாவில் பார்க்கப்படுவது முழு முஸ்லிம் உம்மாவையும் கட்டுப்படுத்தும்.

மேலும் பிறையைப் பார்க்காமல் வானியலை (ஹளவசடிnடிஅல) மட்டும் அடிப்படையாகக் கொண்டு நோன்பையும், பெருநாளையும் முடிவு செய்யலாம் என்ற கருத்து ஹூகும் ஷரியவிற்கு மாற்றமானதாகும். ஆனால் வானியலை அடிப்படையாகக் கொண்டு முன்கூட்டியே மாதங்களைக் கணக்கிட்டு பின்னர் பிறையைப் பார்த்து முடிவு செய்ய தடை இல்லை. மத்ஹபு இமாம்களின் குறிப்புகளிலிருந்து உலகம் முழுவதும் ஒரே நாள்தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
ஹனபி மத்ஹபின் இமாம்களில் ஒருவரான கஸானீ (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்:- முழு உம்மத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட பிறை பார்த்தலை (பகுதிவாரியாக) பின்பற்றுவது என்பது பித்அத் ஆகும். இதிலிருந்து மற்ற கருத்துக்கள் அனைத்தும் எவ்வளவு பலவீனமாகது என்பதை இமாம் அவர்கள் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதை அறியலாம். இமாம் ஜூஸைரி (ரஹ்) ஹனபி மத்ஹபில் பிறையை தீர்மானிக்கும் விதத்தை குறிப்பிடும்போது: 1, எந் ஒரு முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவன், ஆண் அல்லத பெண் ஆகியயோர் பிறை பார்த்ததை அவர் ஃபாஸிக் ஆயிருந்தாலும் விசாரணையின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். 2. அவர் ஃபாஸிக் ஆனவரா? இல்லையா? என்பதை காதி (இஸ்லாமிய நீதிபதி) முடிவு செய்து கொள்வார். (Fiqh al Madhaahib al Arba’a)
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்:-

"ஒருவர் பிறை பார்த்ததை யார் உரிய நேரத்தில் அறிந்து கொள்கிறாரோ அவர் அதை பின்பற்றி நோன்பை ஆரம்பித்தல், நோன்பை முடித்துக் கொள்ளல், குர்பானி ஆகியவற்றை நிறைவேற்றிட வேண்டும். இதை குறிப்பிட்ட தூரத்திற்கோ அல்லது நாட்டிற்கோ வரையறைப்படுத்துவது ஷரியாவிற்கு மாற்றமானதாகும். (A1- Fatawa Volume 5, page, 111)
தாருல் உலூம் தேவ்பந்த் நிறுவனர் மவ்லானா ரசீத் அஹமது காங்கோஹி (ரஹ்):- கல்கத்தா மக்களுக்கு வெள்ளக்கிழமையன்று ரமளானின் பிறை தெரிந்தது. ஆனால் மக்காவிலோ வியாழக்கிழமை பிறை பார்க்கப்பட்டது. கல்கத்தா மக்களுக்கு இத்தகவல் பின்னர் தெரியவந்தால் மக்காவை பன்பற்றி பெருநாளை கொண்டாட வேண்டும் பிறகு விடுபட்ட முதல் நோன்பை களா செய்திட வேண்டும். (Sharh Tirmizi, Kaukab un Durri, pge - 336)
தமிழகத்தின் தாய்க்கல்லூரியான வேலூர் பாகியாத்துஸ்ஸாலிஹாத் நிறுவனர் அஃலாஹழரத் (ரஹ்) உலகில் எங்கு பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்று செயல்படுவது அவசியமாகும். (பாகியாத்துஸ்ஸாலிஹாத் ஃபத்வா தொகுப்பு)
தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவின் ஃத்வா: பிறை பார்க்கப்பட்ட தகவல் எங்கேனும் உறுதிப்படுத்தப்பட்டால் மக்கள் எவ்வளவு தொலைவிலிருப்பினும் ஆயிரக்கணக்கான மைல்கள். தூரத்திலிருப்பினும் அதை செயல்படுத்தியாக வேண்டும். (Fatawa Darul Uloom Deoband,Volu, 6, page - 380)
மௌலானா ஸஃபீகுர் ரஹ்மான் நத்வி, லக்னோ: ஒரு பகுதியில் பிறை பார்க்கப்பட்டது உறுதியாவிவிட்டால் அனைவர் மீதும் நோன்பு நோற்பது கடமையாகிவிடும். (Fikhul Myassir, page - 133)
இதே போன்று ஃபிக்ஹீ கிரந்தங்களிலும் தெளிவான சான்றுகள் கிடைக்கின்றன. ஓர் ஊரில் இறையச்சமுடைய ஒருவரால் பிறை பார்க்கப்படுமேயானால் அது இவ்வுலகிலுள்ள மற்ற அனைவர் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். (ரஹ்மத்துல் உம்ம)
தெளிவான அறிவிப்புகளின்படி கருத்து வேறுபாட்டிற்கு பிறை உதிக்குமிடத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. (ஃபதாவா ஆலம்கீரி, ஃபதாவா காழிகான்) பிறையைக் கண்டுவிட்ட செய்தி யாரையெல்லாம் சென்றடைகிறதோ அவர்கள் தொலை தூரக் கணக்கின்றி நோன்பு நோற்பது கடமையாகிவிடும் (மஜ்மஉல் ஃபதாவா)

ஓர் ஊரார் பிறையைப் பார்த்தால் அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். (அல்முஃனி, அன்இன்ஸாப்)
பிறையைப் பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். பிறையைப் பார்த்து நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) கூறியுள்ளதால் ஓர் ஊரார் பிறையைப் பார்த்திடும்போது அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். நபி (ஸல்) கட்டளை முழு உம்மத்தினரையும் முன்னிலைப்படுத்தியே கூறப்பட்டதாகும். எனவே இந்த உம்மத்தினிரில் எவரொருவர் எந்த இடத்திலாவது பிறையைப் பார்ப்பது முழு உம்மத்தினரும் பிறையைப் பாத்தது போன்றதாகும். (ஃபிக்ஹ் சுன்னாஹ்).

சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் வரை இந்தியத் துணைக் கண்டத்தின் முஸ்லிம்கள் கந்தஹாரிலிருந்து கொழும்பு வரை; அதே போன்று ரங்கூனிலிருந்து கராச்சி வரை ஒற்றுமையாக நோன்பை ஆரம்பித்தும், பெருநாள் கொண்டாடியும் மகிழ்ந்தனர். திடீரென்று ஒரு நவீனம் தோன்றி இந்த உம்மா பிளவுபடுத்தப்பட்டு (1947 தேசப் பிரிவினைக்குப் பின்னர்) வேறுபட்ட நாட்களில் நோன்பும், பெருநாளும் என்ற பித்அத் உருவாக்கப்பட்டது. மேலும் 1971 க்குப் பின்னர் வங்க தேச தகவலை (1971 வரை கிழக்கு பாகிஸ்தான்) ஏற்பதில்லை என்ற பித்அத்தை பாகிஸ்தான் முஸ்லிம்கள் உருவாக்கினர். அதே போன்று சில வருடங்களுக்கு முன்னர் வரை இலங்கை வானொலியின் அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்து ஒற்றுமையாக பெருநாள் கொண்டாடிய தமிழக முஸ்லிம்கள் மத்தியில் தத்தம் பகுதி தனிப்பிறை என்ற பித்அத் உருவாகியது. தமிழக முஸ்லிம்கள் கேரள மாநிலத்திலிருந்து தகவல் கிடைக்கப்பெற்றால் அதை ஏற்பதில்லை. ஆனால் அதைவிட தூரமான இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து கிடைக்கும் தகவலை ஏற்றுக் கொள்கிறார்கள். இது எதனால்? கேரளாவின் எல்லையை ஒட்டிய ஊர்களிலுள்ளோர் (கன்னியாகுமரி மாவட்டம்) பெரும்பாலான சமயங்களில் கேரளத்தையும், சில சமயங்களில் தமிழகத்தையும் பின்பற்றி முடிவெடுக்கின்றனர். தேசியம், வட்டாரம், மொழி உணர்வு போன்ற அளவுகோலைக் கொண்டு மனோ இச்சையின்படி முடிவெடுக்க நபி (ஸல்) கற்றுத் தந்தார்களா?
நபி (ஸல்) அவர்கள் இது குறித்து கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
“எவர் ஒருவர் அஸபிய்யாவிற்காக (தேசியவாதம்) மக்களை அழைக்கிறாரோ, அஸபிய்யாவிற்காக போராடுகிறாரோ, அஸபிய்யாவிற்காக மர ணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல”. (அபூதாவூது).


எனவே, முஸ்லிம்களே! உங்களில் ஓர் ஆடவரோ அல்லது மகளிரோ அவர் எந்த பகுதியை சார்ந்தவராயினும் பிறையைப் பார்த்தது உறுதி செய்யப்பட்டால் அதை ஏற்று செயல்படுங்கள். அத்தகவல் அஸ்ஸாம் மாநிலத்தின் டிக்பாய் பகுதியிலிருந்து அல்லது பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவிலிருந்து கிடைக்கப் பெற்றாலும் சரியே. எனவே எந்த மனிதருடைய காலதமாதமான அறிவிப்பிற்காக காத்திருக்க வேண்டாம். நீங்கள் நோன்பை நோற்பதும் அதை நிறைவு செய்வதும் அல்லாஹ் (சுபு) வின் திருப்பொருத்தத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அல்லாஹ் (சுபு) விற்கும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களக்கும் கட்டுப்பட்டு ஒரே உம்மாவாக செயல்பட அல்லாஹ் (சுபு) உலக முஸ் லிம்கள் அனைவர்களுக்கும் அருள்பாலிப்பானாக.

“எவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்த பிறகும் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையோர்களுக்கு மகத்தான் வேதனை உண்டு”. ( 3: 105)