“கிறிஸ்தவ தேவாலயமும், அதனைச் சாரந்திருந்த அரசர்களும்” என்ற ஒரு தரப்பினருக்கும், மேற்கிலே அக்காலத்தில் உருவாகியிருந்த “சிந்தனையாளர்களும், தத்துவஞானிகளும்” என்ற ஒரு தரப்பினருக்குமிடையே இடம்பெற்ற போராட்டங்களை தீர்க்கவென தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தீர்வே இந்த ‘சமரசம்’ என்ற எண்ணக்கருவாகும்.
முதற்தரப்பானது கிறிஸ்தவம் வாழ்வின் எல்லா சிக்கல்களையும் தீர்க்கக்கூடிய ஆளுமையுடன் காணப்படுகின்றது என வாதிட்டனர். அதே நேரம் மற்றைய தரப்பு அதனை ஏற்றுக்கொள்ளாததோடு, எல்லாவகையான பிற்போக்கு வாதங்களுக்கும், அடக்கு முறைகளுக்கும் கிறிஸ்தவமே காரணமாகும் என உறுதியாக கூறி வந்தது. மனிதனுடைய அறிவுத்திறன் மாத்திரமே மனிதகுலத்தை சிறந்த முறைமைக்குள் ஒழுங்குபடுத்துவதற்கும், அவ்வப்போது எழுகின்ற பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை வழங்கவும் சக்திமிக்கது என்;ற புதிய கருத்தை அவர்கள் கூறலானார்கள்.
நீண்டதோர் மோதலுக்குப் பின்னர், மேற்கண்ட இரு சாராரும் தமது சிந்தனைகளை விட்டுக்கொடுக்க முன்வந்து சமரசக்கோட்பாட்டின் அடிப்படையில் தீர்வு காண முயற்சித்தனர். இந்த சமரச முயற்சியின்போது மதமானது மனிதனுக்கும் அவனது கடவுளுக்கும் இடையில் காணப்படுகின்ற ஓர் தொடர்பாக மட்டும் வரையறை செய்யப்பட்டது. அதாவது அந்த மதத்திற்கு அல்லது அதனது சட்டங்களுக்கு இந்த உலக வாழ்வின் விவகாரங்களில்; எந்த விதமான ஆதிக்கமும் இனிமேல் இருக்கலாகாது என்பதே இங்கு முக்கிய நிபந்தனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே இந்த சமரசத்தின் பின்னால் மனிதன் தனது சுய அறிவினால் ஒழுங்கு படுத்தும் முறைமைகளிலேயே மக்கள் வாழவேண்டும் என்ற அடிப்படை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனு}டாக வாழ்வின் அனைத்து விவகாரங்களிலிருந்தும் மதத்தினை வேறாக்குவதற்கு அவர்கள் முடிவெடுத்தனர்.
இதுவே இன்றுவரை முதலாளித்துவ சிந்தனையின் அடிப்படை கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் அதனை மேற்குலகும் தனது கொள்கையாக ஏற்றுக்கொண்டது. அத்துடன் நின்றுவிடாமல் ஏனைய நாடுகளை காலனித்துவம் செய்வதன் ஊடாக முதலாளித்துவக்கொள்கையை உலகில் வளர்ப்பதற்கு மேற்குலகு தயாரானது.
எனவே யாரெல்லாம் மேற்குலகின் முதலாளித்துவக்கொள்கையை ஏற்றுக்கொண்டார்களோ, அல்லது அதனால் பாதிக்கப்பட்டார்களோ அவர்களிடம் அனைத்து மட்டங்களிலும் ‘சமரசம்’ எண்ணக்கருவின் தாக்கம் காணப்படுகின்றது. அது அரசியல், சட்டம், சமூகவியல் என அனைத்து மட்டத்திலும் ஊடுவியுள்ளது.
பலஸ்தீன விவகாரம் இதற்கோர் நல்ல உதாரணமாகும். முஸ்லிம்கள் பலஸ்தீனை தமது பூமியாக கருதுகிறார்கள். மாறாக யூதர்களோ தமக்கு கடவுள் வாக்குறுதியளித்த புனித பூமியாக அதனை நோக்குகின்றனர். அதனு}டாக அந்த நிலமும் அதிலுள்ள அனைத்தும் தம்முடையது என அவர்கள் வாதாடுகிறார்கள்.
இந்த இரண்டு கருத்துக்களுக்கும் இடையே 1947ம் ஆண்டில் மேற்குலக முதலாளித்துவ நாடுகள், முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்குமிடையே பலஸ்தீனை பிரித்து வழங்குதல் என்ற தீர்வை முன்வைத்தனர். இது இரு நாடுகளை பலஸ்தீனத்தில் உருவாக்கும் ஒரு சமரசத் தீர்வாகும். அதாவது முஸ்லிம்களுக்கு ஒரு நாடு. யூதர்களுக்கு இன்னுமொரு நாடு. இதே போன்ற தீர்வுத்திட்டங்களை காஸ்மீர், பொஸ்னியா, சைப்ரஸ் போன்ற பிராந்திரங்களுக்கான தீர்வாகவும் அநேகமான முதலாளித்துவ நாடுகள் முன்வைத்தன.
இவ்வாறாக முதலாளித்துவ நாடுகளின் அரசியலானது மோசடிகளையும், வஞ்சகத்தையும் அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. அவர்கள் சத்தியத்தை முழுமையாக அடைவதை இலக்காக கொள்வதில்லை. மாறாக அவர்கள் தமக்கு எது சாத்தியமானது எனக்கருதுகிறார்களோ அதனை அடைவதையே நோக்காக கொண்டுள்ளனர். எனவே அனைத்து கட்சிகளும், பிரிவினர்களும் தமது முழுமையான நோக்கத்தை, இலட்சியத்தை முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் அடைய முடிவதில்லை. மாறாக இத்தரப்புகள் சமரசத்தீர்வினு}டாக உருவாகுகின்ற ஒரு தீர்வினையே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே எந்தக்கோரிக்கை நியாயமானதோ அல்லது எந்த தீர்வு சரியானதோ அவ்வாறான தீர்வு பெறப்படுவதற்கு மாறாக அந்த தீர்வு பெறப்படும்போதுள்ள சூழ்நிலைகள், தீர்வில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினரிடையே யார் பலமானவர் என்ற காரணிகள் போன்றன கருத்திற்கொள்ளப்பட்டே தீர்வுகள் எட்டப்படுகின்றன. பொதுவாக பலவான், தான் விரும்பியதை அடைவதும், பலவீனன் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாததையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் உருவாவதும் இறுதியில் ஏற்படுகிறது.
இங்கு எமக்குள்ள பிரச்சினை என்னவென்றால் முஸ்லிம்களில் சிலர் ‘சமரசம்’ என்ற இத்தகைய ஆபத்தான கொள்கையையும், அதனது தவறுகளையும், பிழையான போக்கையும் சுட்டிக்காட்டி கண்டிக்க மறுப்பதோடு, இவற்றை இஸ்லாத்தின் ஒரு பகுதியாக பார்க்க தலைப்பட்டுள்ளனர். அவர்கள் இஸ்லாமும் இத்தகைய இயல்புகளின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற அளவிற்கு சென்று விடுகின்றனர்.
இஸ்லாம் ஆன்மீகத்துக்கும், சடவாதத்திற்கும் இடையிலும்;, தனிப்பட்ட வாழ்வுக்கும், கூட்டுவாழ்வுக்கும் இடையிலும், யதார்த்தவாதத்;திற்கும், இலட்சியவாதத்திற்கும் இடையிலும், படிப்படியான மாற்றத்திற்கும், சடுதியான மாற்றத்திற்கும் இடையிலும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கின்றனர். இஸ்லாத்தில் மேலதிகமான ஒன்றோ அல்லது குறைபாடோ காணப்படுவதில்லை. அதேபோல மிகைப்படுத்தலோ அல்லது புறக்கணித்தலோ காணப்படுவதும் இல்லை என இவர்கள் கூறுகிறார்கள். மேற்படி அடிப்படையை நிறுவுவதற்கு இந்த முஸ்லிம்கள் அவர்களின் மிக முக்கிய வாதமொன்றை முன்வைக்கின்றனர். அதாவது எல்லாவற்றுக்கும் இரு தீவிர நிலைகளும், ஒரு மத்திம நிலையும் காணப்படுகிறது, மத்திம நிலை எப்போதும் பாதுகாப்பான பாதை எனவும் அந்த மத்திம நிலைக்கு இரு மருங்கிலும் காணப்படும் இரு தீவிர நிலைகளும் பாதுகாப்பற்ற, பொருத்தமற்ற பாதை எனவும் முடிவுக்கு இவர்கள் வருகின்றனர். அந்த மத்திம நிலையே சக்தியின் மையமாகவும், இரு தீவிரங்களுக்குமிடையிலான சமநிலையாகவும் இவர்கள் கூறுகின்றனர். எனவே இஸ்லாத்தில் காணப்படுகின்ற இந்த மத்திம பாதையும், ‘சமரசம்’ என்ற அணுகுமுறையும் ஒத்த இயல்பைக்கொண்டுள்ளதால், இஸ்லாமும் சமரசமும் ஒன்றோடொன்று முரண்பட்டதொன்றல்ல என இவர்கள் விளக்கமளிக்கிறார்கள். எனவே இஸ்லாம், நம்பிக்கைக்கும், வணக்க வழிபாடுகளுக்கும், சட்டவாக்கத்திற்கும், நற்பண்புகளுக்கும் மத்தியில் நடுநிலையான பாதையை வகுத்துத்தந்துள்ளது என இவர்கள் அதிகம் அதிகம் எழுதுகிறார்கள். உரையாற்றுகிறார்கள்.
எனவே இவர்கள் தமது சொந்த அறிவைக்கொண்டு அல்லது தாம் யதார்த்தம் என கருதுவதைக்கொண்டு இஸ்லாத்தின் சட்டங்களை விளங்கிக்கொண்ட பின்புதான் ஷரீஅத் ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் என்ன சொல்கிறது எனப்பார்க்கத் தலைப்படுகின்றனர். தாம் ஏற்கனவே எடுத்த முடிவுகளுக்கு பொருத்தமாக ஏதேனும் மார்க்கச்சட்டங்கள் இருக்கின்றனவா அல்லது அந்த சட்டங்களை தமது கருத்துக்கேற்ப விளக்கமளிக்க முடியுமா என இவர்கள் ஆராய்கின்றனர். இதன் விளைவாக
“மேலும் (விசுவாசிகளே!) அவ்வாறே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், (நம் து}தர்) ரஸ}ல் உங்களுக்கு சாட்சியாளராக இருப்பதற்காகவும் நடு நிலையான சமுதாயத்தினராக நாம் உங்களை ஆக்கினோம்.” என்ற ஸ}ரத்துல் பகறாவினுடைய 143ம் இறை வசனத்திற்கு கீழ்கண்டவாறு விளக்கமளிக்கின்றனர்.
முஸ்லிம் சமுதாயத்தினுடைய அல்லது முஸ்லிம் உம்மத்தினுடைய நடுநிலை எவ்வாறானதெனில், அங்கே மிதமானபோக்கு அதன் வழிமுறைகளிலும் (மன்ஹஜ்) முறைமைகளிலும் (Systems) பேணப்படுவதாகும். இது கிறிஸ்த்தவர்கள் மார்க்கத்தில் காட்டிய பொடுபோக்குத் தன்மைக்கும், யூதர்கள் மார்க்கத்தில் காட்டிய தீவிரத்தன்மைக்கும் இடையில் ஒரு கோட்டை வரைவதற்கு ஒத்ததாகும் என இவர்கள் நடுநிலையான சமூகம் என்பதற்கு விளக்கமளிக்கின்றனர். மேற்படி திருமறை வசனத்தில் வருகின்ற ‘வசத்’ பதத்திற்கு ‘நீதி’ விளக்கமளித்தாலும் கூட நீதி என்பதற்கு இரு முரண்பட்ட எல்லைகளுக்கு இடையில் காணப்படும் நடுநிலைமையே நீதியாகும் என தவறான அல்லது பொருத்தமல்லாத ஒரு விளக்கத்தினை அளிக்கின்றனர். இதன்மூலம் நீதி என்பது அல்லது நடுநிலைமை என்பது முரண்பாடுகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் என்ற சமரசக்கோட்பாட்டின் விளக்கத்தை தமது விளக்கமாக முன்வைக்கின்றனர்.
எனினும் இந்த திருமறை வசனத்தை இஸ்லாதின் து}ய வடிவில் நாம் விளங்குவோமானால் அது இதற்கு முற்றிலும் மாறான ஒரு கருத்தையே தெளிவுபடுத்துகிறது. அதாவது இஸ்லாமிய சமுதாயமானது நீதி செலுத்துகின்ற ஓர் சமுதாயமாகும். இஸ்லாத்தின் பார்வையில் நீதி செலுத்துவது என்பது சத்தியத்தை அல்லது இஸ்லாத்தை நிலைநிறுத்துவதாகும். இந்த இஸ்லாமிய உம்மாவானது இஸ்லாத்தை அல்லது சத்தியத்தை மற்றைய சமுதாயங்களுக்கு காவிச்செல்வதன் ஊடாக அவர்களுக்கிடையில் சத்தியத்திற்கு சான்று பகரும். இந்த ஆயத்தானது ஓர் முஸ்லிம் உம்மத்திற்கான கட்டாயம் காண்ப்பட வேண்டிய ஒரு பண்பை சுட்டிக்காட்டுவதுபோல் அமைந்திருந்தாலும்கூட முஸ்லிம் உம்மத் அதனது து}தினை மற்றைய சமுதாயங்களுக்கு எத்திவைக்க வேண்டும் என்ற கட்டளையாகவும் இது அமைகின்றது. இஸ்லாமிய சமுதாயமானது இதனை செய்யாதுவிட்டால்(இஸ்லாத்தை எத்திவைத்தலை) அது பெரும் பாவமான விடயமாக மாறிவிடுகின்றது. “அல்லாஹ்வின் து}தர் உங்கள் மீது சாட்சியாக இருக்கட்டும்” என திருக்குர்ஆன் கூறுவதிலிருந்து எப்படி ரஸ{ல்(ஸல்)அவர்கள் இஸ்லாமிய உம்மத்திற்கு சத்தியத்தில் சான்று பகர்பவராக அமைந்தார்களோ, அதேபோன்று இஸ்லாமிய உம்மாவானது மற்றைய சமுதாயங்களுக்கு சான்றுபகர்கின்ற உம்மத்தாக விளங்கவேண்டும் என்பதையும் திருக்குர்ஆன் எமக்கு வலியுறுத்துகிறது. இதனையே ரஸ}ல்(ஸல்) அவர்கள் தனது இறுதிப்பேருரையில் “இங்கு வந்திருப்போர், வராதவர்களுக்கு எத்திவைப்பீர்களாக” என்ற வேண்டுகோளினு}டாக வலியுறுத்தினார்கள்.
இத்தகைய முஸ்லிம்கள் திருக்குர்ஆனின் இன்னுமொரு வசனத்தையும் தமக்கு ஆதாரமாக கொள்வது வழக்கம்.
“இன்னும் அவர்கள் எத்தகையோர் என்றால்,செலவு செய்தால் வீண்விரயம் செய்ய மாட்டார்கள் (முற்றுமுழுதாக) சுருக்கிக் கொள்ளவும் மாட்டார்கள்;. அவ்வாறு செலவு செய்வதானது அவ்விரண்டு நிலைகளுக்கும் மத்தியிலிருக்கும்.” (அல் புர்கான: 67)
எனவே செலவு செய்வதை எடுத்துக்கொண்டால் அதற்கு இரு தீவிர தன்மைகள் உள்ளன. அவை வீண்விரயமும் கஞ்சத்தனமுமாகும் என இவர்கள் புரிந்து கொள்கின்றனர். எனவே இதுதான் மத்திம நிலை அல்லது நடுநிலை என இவர்கள் விளக்கமளிக்கின்றனர். எனவே செலவழிக்கும் போது ஒரு பருமட்டாக செலவழிக்க வேண்டும் என்பதாக இவர்கள் கருதுகின்றனர்.
அவர்கள் இந்த திருக்குர்ஆன் வசனங்களில் மூன்று வகையான செலவு செய்தலை அல்லாஹ் குறிப்பிடுவதை தெளிவாக புரிந்து கொள்ள தவறிவிடுகின்றனர். அதாவது வீண்விரயம், கஞ்சத்தனம், மத்திமமான நிலை என்பவையே அந்த மூன்று வகைகளாகும். இஸ்லாத்தில் வீண்விரயம் என்பது குறைந்தளவிலோ அல்லது கூடிய அளவிலோ ஹராமான வழியில் செலவு செய்தலாகும். ஒரு மனிதன் ஒரு ரூபாயை செலவழித்து மது,சூது,ஊழல் போன்ற செயல்களில் ஈடுபட்டாலும்கூட அது வீண்விரயமாகவே கருதப்படும். அவ்வாறு செய்தல் ஹராமாகும். அதேபோன்று ஓரு ரூபாய் எனிலும் ஸக்காத் கொடுக்க வேண்டிய பொருளுக்கு ஸக்காத் கொடுக்காது விட்டால் அது கஞ்சத்தனமாகவே கருதப்படும். அவ்வாறு செய்வதும் இஸ்லாத்தில் ஹராமாகும்.
அதேபோன்று ஒருவரின் பொறுப்பிலுள்ளவர்களுக்கு செலவளிக்காவிட்டால் அதுவும் கஞ்சத்தனமாகும். அதுவும் ஹராமானதாகும்;. இங்கு மத்திமம் அல்லாஹ் குறிப்பிடும் நிலை என்னவெனில் ஷரிஅத்தின் அடிப்படையில் சிறியளவிலோ அல்லது பெரியளவிலோ ஹராம், ஹலாலைப் பேணி செலவு செய்தலாகும். ஆகவே ஓரு தனிப்பட்ட விருந்தினருக்காக ஓரு முழு ஓட்டகத்தினை, ஆட்டை அல்லது கோழியை அறுத்து விருந்தளிப்பது கூட நடுநிலையான செலவைத்தான் குறிக்கிறது. அவ்வாறு செய்தல் ஹாலாலாகும். ஏனெனில் அல்லாஹ்...அதற்கிடையில் (அல் புர்கான்-67) என்ற பதத்தினு}டாக வீண்விரயம், கஞ்சத்தனம், நடுநிலையாக செலவுசெய்தல் என்ற மூன்று நிலையையும் வௌ;வேறாக இங்கு குறிப்பிடுகிறான். இந்த மூன்று நிலைகளிலும் ஒன்று ஷாPஆவினால் அங்கீகரிக்கப்படுகிறது. அதுதான் நடுநிலையாக செலவு செய்தலாகும். ஏனெனில் இந்த திருமறை வசனத்தில் அல்லாஹ் “அதற்கிடையில்” எனக்குறிப்பிடுவதற்கு பதிலாக “இவை இரண்டுக்குமிடையில்” எனக்கூறிப்பிட்டு வீண்விரயம், கஞ்சத்தனம் என்ற இரண்டு எல்லைகளுக்கும் இடையில் நடுநிலையைப்பேணி செலவழிக்கும்படி அல்லாஹ் கட்டளையிடவில்லை என்பதை அவதானமாக புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தை பொருத்தவரை அங்கே மத்திம பாதை என்றோ சமரச தீர்வு என்றோ ஒன்றில்லை. மனிதனைப் படைத்த அல்லாஹ் அவனைப் பற்றி தீர்க்கமாக அறிந்தவன். அவன் மட்டுமே மனித வாழ்வின் விவகாரங்களை சரியாக வரையறை செய்யக்கூடியவன். இவ்விடயத்தினை வேறுயாரும் செய்ய முடியாது. மனிதகுலம் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்டது. அவற்றில் மத்திம பாதை, அல்லது சமரச தீர்வு என்று ஒன்றில்லை. மாறாக இஸ்லாத்தில் அல்லாஹ்
‘ஹ_தாத்’ (வரையரைகள்) என வரையறுக்கின்ற தீர்கமான தீர்வும், சரியான விளக்கமும் தெளிவும் மட்டுமே காணப்படுகின்றது. இவ்வரையறைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது
“இவை அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளாகும். அறிந்து கொள்ளும் சமூகத்தாருக்கு இவற்றை அவன் தெளிவு செய்கிறான்.(அல் பகராஹ்: 230)
எனக் குறிப்பிடுகிறான்.மேலும் அல்லாஹ் சூரா அல் நிஸாவின் 14ம் வசனத்தில் பின்வருமாறு கூறுகிறான்
“இன்னும் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய து}தருக்கும் மாறு செய்து (அல்லாஹ்வின்) அவன் (ஏற்படுத்திய) வரம்புகளை மீறிவிடுகிறாரோ அவரை அவன் நரகத்தில் புகுத்தி விடுவான். அதில் அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள்.”
அல்லாஹ்வின் து}தர் முஹம்மத் (ஸல்) அவர்களை அவரது சிறிய தந்தையின் ஊடாக குறைஷித்தலைவர்கள் இஸ்லாத்திற்கு பகரமாக பணத்தையும், பதவியையும், அதிகாரத்தையும் காட்டி சமரசம் செய்யும்படி கோரியபோது இந்த மத்திமப் பாதை, சமரசத்தீர்வு என்பன து}தரின் ஆளுமையான வார்த்தைகளில் எவ்வாறு அடிபட்டு போனது என்பதை சிந்தித்து பாருங்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் அபுதாலிப்பின் வேண்டுகோளுக்கு பின்வருமாறு பதிலளிக்கிறார்ள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது சிறிய தந்தையே... என் வலது கைகயில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் அவர்கள் கொண்டு வந்து தந்தபோதிலும், இந்த தீனை(மார்க்கத்தை) அல்லாஹ் மேலோங்கச் செய்யும் வரையில் அல்லது நான் மரணிக்கும் வரையில் கைவிடமாட்டேன்.
ரஸ_ல் (ஸல்) அவர்களிடம் பனீ ஆமீர் பின் ஸஸாஸாஹ் கோத்திரத்தார், தமது உதவியை (நுஸ்ரா) உங்களுக்கு வழங்குகிறோம்; ஆனால் அல்லாஹ்வின் து}தருக்குப் பின் எங்களுக்கு தலைமைத்துவம் வழங்கப்படவேண்டும் என வினவிய அல்லாஹ்வின் து}தர் “அதிகாரம் அல்லாஹ்வுக்குரியது; அவன் எவருக்கு நாடுகின்றானோ அவருக்கு அதையளிப்பான்” கூறி அவர்களின் உதவியைப்பெற மறுத்த விடயத்தில் சமரசத்தின் ஒரு பகுதியேனும் பொதிந்துள்ளது என எவராலும் கூறமுடியுமா?
ஆகவே மத்திமபாதை, சமரசத்தீர்வு என்பன இஸ்லாத்திற்கு வெகுது}ரமான ஓரு கோட்பாடாகும். மாறாக மேற்கத்pய நாடுகளும் அவர்களிடம் மண்டியிட்டு வாழும் முஸ்லிம்களில் சிலரும் நவீனத்துவம், விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை என்ற பெயரில் இஸ்லாத்தின் எல்லைக்குள் இந்த குப்ர் சிந்தனையை கொண்டு வர எத்தனிக்கின்றனர். இதனு}டாக நேர்மையான முஸ்லிம்கள் இஸ்லாத்தின் தெளிவான வரையறைகளை பேணி வாழ்வதிலிருந்து வழிபிறழ்ந்து செல்வதற்கு இவர்கள் எத்தனிக்கின்றனர் என்பதனை முஸ்லிம் உம்மத் அவதானத்துடன் புரிந்து கொள்ள வேண்டும்.
>>எந்த தீர்வு சரியானதோ அவ்வாறான தீர்வு பெறப்படுவதற்கு மாறாக அந்த தீர்வு பெறப்படும்போதுள்ள சூழ்நிலைகள், தீர்வில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினரிடையே யார் பலமானவர் என்ற காரணிகள் போன்றன கருத்திற்கொள்ளப்பட்டே தீர்வுகள் எட்டப்படுகின்றன.
ReplyDeleteThe first criticism in the article is about practical situations constraining settling for something less than perfect. Actually, the above differenc which is criticized using very strong words in the article is not something related to Aqeeda, rather it is how solutions are obtained in a crisis situation i.e. a particular section of methodology. So, let us keep in mind that the difference being discussed in the above article is about an alternative opinion, which is not the very foundation of the religion from the shari'a's point of view. And let us be firm that these such minor difference can never make our hearts apart; hearts which are united by the love of Allah, and his Rasool.
>>இஸ்லாம் ஆன்மீகத்துக்கும், சடவாதத்திற்கும் இடையிலும்;, தனிப்பட்ட வாழ்வுக்கும், கூட்டுவாழ்வுக்கும் இடையிலும், யதார்த்தவாதத்;திற்கும், இலட்சியவாதத்திற்கும் இடையிலும், படிப்படியான மாற்றத்திற்கும், சடுதியான மாற்றத்திற்கும் இடையிலும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கின்றனர்.
அதாவது எல்லாவற்றுக்கும் இரு தீவிர நிலைகளும், ஒரு மத்திம நிலையும் காணப்படுகிறது, மத்திம நிலை எப்போதும் பாதுகாப்பான பாதை எனவும் அந்த மத்திம நிலைக்கு இரு மருங்கிலும் காணப்படும் இரு தீவிர நிலைகளும் பாதுகாப்பற்ற, பொருத்தமற்ற பாதை எனவும் முடிவுக்கு இவர்கள் வருகின்றனர்
In general for almost all situations we can hypothize two extremes and a middle path. If I were asked that whether the middle path or one of the extremes would be safe in Islamic point of view, I would say ‘in most of the cases’ middle path would be safe. Again the safest path depends on what are given as extremes, and the middle path. It also depends on the person who is to chose between either of them. But in most of the situations and to a general person from the Muslim Ummah, the middle path would be much safer, don’t you agree?
We all will agree that Islam maintains a balance between Monasticism and total indulgence in worldly matters, Rejectionism and blind faith, etc… But the examples given in the article includes some ambiguous terms like in "a balance between ideological view and realistic view". Here, the term ideological is subjected to various interpretations.
Even the example of sacrificing one whole camel for a single visitor is subject to controversy. It could be justified given certain circumstances and not, given some other circumstances.
When talking about extremes and hudoodullah, Prophet (SAW) described hudoodullah as fences on both sides of a road. Again, I remind that the subjects discussed in the above article are controversial, and there may be Ulama’s on both sides, and both sides can be correct.
Jazzakallahu Khair Br. Irshad...
ReplyDeleteMay Allah(swt) guide us all.
நீங்கள் தெரிவித்திருக்கும் அதிகமான கருத்துக்கள் உங்களுடைய தனிப்பட்;ட கருத்துக்களாக தெரிகிறதேயல்லாமல் அது இஸ்லாமிய ஆதாரங்களுடனானதாக தென்படவில்லை. ஏனெனில் பிரச்சனைக்கு தீர்வு காணல் தொடர்பாக நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் இஸ்லாம் சொல்லும் வரையறைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். அது அகீதாவுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அல்லது இஸ்லாத்தின் ஏனைய பகுதிகளுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.
மேலும் ஒரு பிரச்சனைக்கான தீர்வாக இஸ்லாம் எதனைச்சொல்கிறதோ, எது சரியானது என கோடிட்டுக்காட்டுகிறதோ அதுதான் பிரச்சனைக்கான தீர்வு என ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்வதும், அதனைச்செயற்படுத்துவதும் அகீதாவுடன் சம்பந்தப்பட்ட விடயம்தான் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் முதலாளித்துவ சமூகத்தை பொருத்தவரையில் சமரசம் என்ற கோட்பாடு எவ்வாறு செயற்படுகிறதென்றால் சரிக்கும் பிழைக்கும் மத்தியில், இருளுக்கும் வெளிச்சத்திற்கும் மத்தியில், வெள்ளைக்கும் கறுப்புக்கும் மத்தியில் ஒரு தீர்வை காண்பதை வழங்கமாகக்கொண்டுள்ளது. எனினும் இஸ்லாம் இதற்கு மாறாக இருளையும், ஒளியையும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் தௌ;ளத் தெளிவாக பிரித்துக்காட்டுகிறது. அது மாத்திரமல்லாமல் இஸ்லாம் அனைத்து பிரச்சனைகளையும் இத்தகைய வழிமுறையினு}டாகவே தீர்க்க முற்படுகிறது. இக்கருத்து இஸ்லாமியக்கருத்துக்களில் ஒரு கருத்தல்ல. இது மாத்திரம்தான் இஸ்லாமிய ஷாPஆ ஆதாரங்களுடனான ஒரேயொரு கருத்தாகும்.
மேலும் பாதுகாப்பான பாதை என்பது இரண்டு தீவிரங்களுக்கு மத்தியிலுள்ளதா அல்லது வேறெங்கும் இருக்கிறதா என்பதல்ல ஒரு முஸ்லிம் ஆராய வேண்டியது. மாறாக அல்லாஹ்(சுபு) ஒரு விடயத்தில் கட்டளையிடுகின்ற பாதை மாத்திரம்தான் பாதுகாப்பான பாதை என்பதை அவன் ஈமான் கொள்ள வேண்டும். அது எமது பார்வையில் தீவிரமான பாதையாக அல்லது பாதுகாப்பற்ற பாதையாக தென்பட்டாலும் சரியே. ஏனெனில் ஒரு முஸ்லிமின் அனைத்து செயல்களும் ஷாPஆ ஆதாரங்களினால் வரையறுக்கப்பட்டதேயல்லாமல் அவன் சுயமாக எடுக்கின்ற முடிவல்ல. மேலும் ஒரு முஸ்லிம் பொதுப்படையாக ஒரு கருத்தையும் தெரிவிக்க முடியாது. அவன்தான் தெரிவிக்கின்ற அனைத்து கருத்துக்களுக்கும் முறையான ஷாPஆ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே கருத்துத் தெரிவிக்க வேண்டும்.
இலட்சியவாதம் என்பது ஒரு விடயத்தில் பூரணமான அடைவையும்,
யதார்த்தவாதம் என்றால் பூரணத்துவம் இருக்கிறதொ இல்லையோ நடைமுறையில் காணப்படும் அடைவையும் குறிக்கிறது. எனவே இவற்றுக்கு மத்தியில் ஒரு தீர்வினை இஸ்லாம் வழங்குகிறது என்ற சிந்தனைப்போக்கை பல நவீன அறிஞர்களின் நு}ல்களில் காணலாம்.
எனினும் அது தவறான சிந்தனை என்பதையே எமது கட்டுரையில் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். இதுவே யதார்த்த வாதத்திற்கும், இலட்சியவாதத்திற்கும் … என்ற ஒப்பீட்டில் நாம் குறிப்பிட்ட விடயம்.
மேலும் ஒட்டகத்தின் உதாரணம் காட்டப்பட்டமை ஒரு விடயத்தின் உச்ச நிலை காட்டப்படும் பட்சத்தில் அதன் கீழுள்ள நிலைகள் இலகுவாகப்புரிந்த கொள்ளப்படும் என்பதற்காகவேயல்லாமல் வேறொரு காரணத்திற்காக அல்ல. அத்துடன் ஒரு முஸ்லிமுக்கு உணவளிப்பதற்காக, அல்லது விருந்தளிப்பதற்காக ஒட்டகம் ஒன்றை அறுப்பதை இஸ்லாம் நிச்சயமாக தடைவிதிக்கவில்லை. எனினும் அது நடைமுறையில் தேவையில்லாத ஒன்று என்பது யாவரும் அறிந்ததே. அடுத்தது ஒட்டகத்துடன் சேர்த்து ஆடு, கோழி என்ற உதாரணங்களும் தரப்பட்டிருப்பது அந்த உதாரணங்களின் பின்னணியை சரியாக விளங்கப்படுத்தவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கட்டுரையில் தெரிவிக்கப்படும் கருத்தையும் அதற்கு மாற்றமான கருத்துக்களையும் தெரிவிக்கின்ற தரப்பினர்கள் இருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளீர்கள். எனினும் இரண்டு கருத்துக்களையும் முன்வைக்கின்ற தரப்பினர் இருக்கின்றனர் என்பதை இந்த கட்டுரையே விளக்கமாக கூறிவிட்டது என்பதை நாமும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறோம். எனினும் இரண்டு தரப்பினரும் சரியாக இருக்கலாம் என நீங்கள் ஊகித்து தெரிவித்திருப்பது முரண்பாடாக உள்ளது. ஏனெனில் முதலாளித்துவ எண்ணக்கருவான ‘சமரசம்’ என்ற கருத்தை உடையவர்களிடத்திலுள்ள புரிதலில் காணப்படும் முரண்பாடு குறித்து இந்த கட்டுரை ஆதாரங்களுடன் தனது ஆட்சேபனையை தெரிவித்து விட்டது. இந்நிலையில் இரண்டு கருத்துக்களும் எவ்வாறு சரியாக அமைய முடியும்?