Thursday, May 29, 2008

அதிமுக்கிய பிரச்சனை 2

இஸ்லாத்தை ஏற்றபின் மீண்டும் மதம் மாறுவோர்.நாம் குர்ஆனையும், நபிகள் நாயகத்தின்(ஸல்) சுன்னாவையும் ஆராய்ந்து பார்த்தோமேயானால் முக்கிய விவகாரங்கள் என இஸ்லாம் விளக்கியுள்ளவை எவை என தெளிவாக அறிய முடியும். மேலும் அதனை வாழ்வா?சாவா? பிரச்சனையாக கருதுவதை கடமையக்கியுள்ளது என்பதையும் அறியலாம். அதில் ஒன்றாக மதம்மாறும் பிரச்சனையை கருதலாம். ஒரு குழுமமாக இருந்தாலோ அல்லது ஒரு தனி மனிதனாக இருந்தாலோ இஸ்லாத்தினின்றும் வேறு மதத்திற்கு மாறுவதை ஒரு முக்கிய விவகாரமாக, வாழ்வா? சாவா? பிரச்சனையாக கருதுவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
இறைத்து}தர்(ஸல்) கூறுகிறார்கள்
“யார் இந்தத் தீனை ஏற்று பின்னர் அதினின்றும் மாறுகிறாரோ அவர் கொல்லப்படவேண்டியவர்.”
இப்ன்-மஸ்வூது (ரழி) அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகிறார்கள். ரசூலுல்லாஹ் கூறினார்கள்
“அல்லாஹ்(சுபு) வையும் அவனது து}தரையும் உளமாற ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிமின் இரத்தம் மிகவும் புனிதமானது. ஆனால் மூவருடையதைத்தவிர் விபச்சாரம் செய்தவர், கொலைகாரர் மற்றும் இத்தீனை விட்டும் விலகுபவர்.”
இவை முஸ்லிம்கள் உறுதியாகச் செயல்படுத்திய முக்கியக் விடயங்களாகும். ஆகவே இஸ்லாத்தினின்றும் மதம் மாறியோர் யாவரையும் கொன்றுவிடுவது கடமையாக இருந்தது. ஸஹாபாக்களும் அவர்களைத் தொடர்ந்த கலீஃபாக்களும். அதனை நடைமுறைப்படுத்தினர்.
அபு மூஸா அல் அஷ்ஹரி (ரழி) பின்வருமாறு ஒரு நிகழ்ச்சியை அறிவிக்கிறார்கள். ரசூலுல்லாஹ்(ஸல்) அபுமூஸாவை நோக்கி ஏமனுக்கு செல்லுமாறு கட்டளையிட்டார்கள். பின்பு முஆத் இப்ன் ஜபல்(ரழி) அவர்களையும் அங்கே அனுப்பினார்கள். முஆத் அவர்கள் ஏமன் சென்றபோது அவரை அபு மூஸா வரவேற்றார். அப்போது ஒருவர் கட்டிப்போடப்பட்டிருப்பதைக் கண்ட முஆத் அதைப்பற்றி வினவினார். அதற்கு பதிலளித்த அபுமூஸா “அவர் ஒரு யூதர் பின்னர் இஸ்லாத்தை தழுவினார். ஆனால் இப்பொழுதோ மீண்டும் யூதனாக மாறிவிட்டார்". எனக் கூறினார். அதைக்கேட்ட முஆத் “அவரைக் கொல்லும் வரை இங்கே தங்கமாட்டேன்" எனக் கூறினார்.

அபுதாவூத் பின்வருமாறு அறிவிக்கிறார்கள். இஸ்லாத்தினின்றும் மதம் மாறிய ஒருவர் அபுமுஸாவிடம் இழுத்துவரப்பட்டார். பாவமன்னிப்பு கோரி மீண்டும் இஸ்லாத்திற்கு வந்துவிடுமாறு அவரை அபுமூஸா இருபது இரவுகள் அழைத்தார். அவரோ அதனை மறுத்துவிட்டதனால், அபுமுஸா அவரை கொன்றுவிட்டார்.அல்குத்னி, அல் பைஹக்கியிடமிருந்து அறிவிக்கப்படும் ஒரு அறிவிப்பில் உம்மு ஹர்பாஹ் என்ற ஒரு பெண்மணி இஸ்லாத்தை தழுவியபிறகு சிறிது காலத்தில் மீண்டும் மதம் மாறினார். அவரை அபுபக்கர் (ரழி) மீண்டும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அழைத்தார். ஆனால் அப்பெண்மணியோ மறுத்துவிட்டார். அதனால் அபுபக்கர் (ரழி) அவரை கொன்றுவிட்டார். அதேபோல் இறைத்து}தர் என்று மக்களை ஏமாற்றிய “முஸைலமாஹ்" என்பவனின் பின் சென்ற எண்ணற்ற அரேபிய சமூகத்தினர் மீண்டும் இஸ்லாத்திற்கு வரும்வரை அபுபக்கர் (ரழி) அவர்களை எதிர்த்து போரிட்டார்.
எனவே சகாபாக்களும் அவர்களைத்தொடர்ந்த கலீஃபாக்களும், இஸ்லாத்தை ஏற்று பின் மதம் மாறியவர்களை கொல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அந்தக் கொள்கையை விட்டும் தளராதிருந்தனர். ஆனால் நாளடைவில் அந்தப்பிடி தளர்ந்தது. இஸ்லாத்தை நடைமுறைபடுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டது. அதனால் நாத்திகக் (கடவுள் இல்லை) கொள்கையும், இஸ்லாத்தினின்றும் மதம் மாறுவதும் சகஜமாகிவிட்டது. புதுப்புது குழுக்களும் தோன்றி புதிய தீன்களை உருவாகும் நிலை உருவானது. மன்னிப்பிற்கோ, மறுபரிசீலனைக்கோ இடமில்லாத மிக முக்கிய விவகாரமாக இது இருந்தாலும் இதனை நடைமுறைபடுத்துவதில் முஸ்லிம்களின் மத்தியில் ஒரு அச்சம் உருவானது.அந்நிலையில் முஸ்தபா கமால் போன்றோர், இஸ்லாத்திற்கு எதிராக, இஸ்லாமிய அரசிற்கு எதிராக போர் தொடுத்ததில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை. அந்நிலையில் அத்தகையோர் மீது இஸ்லாமிய ஷாPஆ மூலம் தண்டனை வழங்குவது இயலாமலிருந்தது. ஏனெனில் அது ஒரு முக்கிய விவகாரமாக, வாழ்வா?சாவா? பிரச்சனையாக கருதுவதினின்றும் மக்கள் மாற்றமடைந்திருந்தனர். எனவே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மீண்டும் அக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்குவது நமது கடமையாகும்.ஒற்றுமைமுஸ்லிம் உம்மாவின் ஒற்றுமையை நிலைநாட்டுவதும், ஒரே ஒரு இஸ்லாமிய அரசு மட்டுமே இருப்பதும் இஸ்லாத்தில் வரையறுக்கப்பட்ட முக்கிய விவகாரங்களில் ஒன்றாகும். அதனை வாழ்வா? சாவா? பிரச்சனையாக கருதுவது நம்மீது கடமையாகும். ஒன்றுக்கும் மேலாக கலீஃபாக்கள் தோன்றும்போதும், இஸ்லாமிய அரசை எதிர்த்து கலகம் செய்யும்போதும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என இஸ்லாம் குறிப்பிடுவனவற்றிலிருந்து இதனை அறியலாம்.
அப்துல்லாஹ் இப்ன் அம்ர் இப்ன் அல்ஆஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். ரசூலுல்லாஹ்(ஸல்) கூறுகிறார்கள்
“எவர் ஓர் இமாமிற்கு மனமுவந்து தன் சத்தியப்பிரமாணத்தை கொடுக்கிறாறோ, அவர் அந்த இமாமின் கட்டளைப்படி நடக்க வேண்டும். அந்த இமாமிற்கு போட்டியாக இன்னொரு இமாம் வந்தால் அந்த இரண்டாவது இமாமை கொன்றுவிடவேண்டும்."
மேலும் அபுசெய்யித் அல்குத்ரி (ரழி) ரசூலுல்லாஹ்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்
“இரண்டு கலீஃபாக்களுக்கு சத்தியப்பிரமாணம் கொடுக்கப்பட்டால் அவர்களுள் இரண்டாமவரை கொன்றுவிடவேண்டும்.”
இவை மூலம் ரசூலுல்லாஹ்(ஸல்) முஸ்லிம்களின் ஒற்றுமையை, ஒரே அரசு என்பதை எந்த அளவிற்கு ஒரு முக்கிய விவகாரமாக கருதினார் என அறியலாம். அர்ஃபாஜா (ரழி) அவர்கள் ரசூலுல்லாஹ்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்,
“யார் ஒருவர் உங்களிடையே பிளவு ஏற்படுத்த முனைகிறாரோ அவரை கொன்றுவிடுங்கள்.”
ஒரு முஸ்லிமாக இருந்தாலும்கூட அவர் பிளவு உண்டாக்க நினைத்தால் அவரை கொன்றுவிடுமாறு ரசூலுல்லாஹ்(ஸல்) கூறுவதினின்றும் முஸ்லிம் உம்மாவின் ஒற்றுமை என்பது எவ்வளவு முக்கியம் என அறியலாம். ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
“எவர் ஒருவர் இந்த ஒன்றுபட்ட உம்மாவிடையே கலகம் ஏற்படுத்த நினைக்கிறாரோ அவர் யாராயிருப்பினும் அவரை கொன்றுவிடுங்கள்."
இமாமினின்றும் பிரிந்துசென்று அவரது கட்டளையின்படி நடக்காது எதிர்ப்பவர்கள் கலகக்காரராவர். அவர்களை மன்னித்து அவர்களின் சந்தேகங்களை தீர்க்கவேண்டியது அவசியம். அவ்வாறு செய்த பின்பும் அவர்கள் மன்னிப்பு கோராது எதிர்த்து நின்றால் அவர்களை கொன்றுவிடவேண்டும்.பல அரசுகளாக அமைவது, முஸ்லிம் உம்மாவிடையே பிளவு உண்டாவது, ஆகியவை ஒரு முஸ்லிமின் இரத்தம் சிந்தினாலும் தடுக்கப்படவேண்டியவை என கூறியுள்ளதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை உணரலாம். அல்லாஹ்(சுபு) அதனை ஒரு வாழ்வா?சாவா? பிரச்சனையாக ஆக்கியுள்ளதை அறியலாம். முன்பு முஸ்லிம்கள் அதனின்றும் இம்மியளவும் பிசகாதிருந்தனர் என்பதை தக்க சான்றுகள் மூலம் உணரமுடியும்.
அலி(ரலி) முஆவியா(ரலி)விடம் எந்த பட்சாதாபமும் காட்டவில்லை. மேலும் அவர்களோ உமய்யத்துகளோ அப்பாசித்துகளோ, கவாரிஜ்களிடம் இம்மியளவும் கருணை காட்டவில்லை. ஆனால் எப்பொழுது மக்களிடையே இஸ்லாமிய சிந்தனை குறையத்தொடங்கியதோ அப்பொழுதிலிருந்து பேரழிவு தொடங்கியது. இஸ்லாமிய நிலங்கள் துண்டாடப்பட்டபொழுது முஸ்லிம்கள் அமைதி காத்தனர். இஸ்லாமிய நிலம் துண்டாடப்படுவது மிக முக்கிய விவகாரமாக இருந்தும் அதனை வாழ்வா சாவா பிரச்சனையாக கருதி போராடவில்லை. ஆகையால் இஸ்லாமிய நிலம் பல நாடுகளாக துண்டாடப்பட்டது. இஸ்லாமிய கிலாஃபாவும் அதில் ஒன்றாக மாறும் அளவிற்கு ஆனது. அதனினும் ஒரு படி மேலாக துண்டாடப்பட்ட நாடுகளை இணைத்து அமைப்பொன்றை நிறுவி அதில் கிலாஃபா அரசையும் ஒரு உறுப்பு நாடாக்கி, அந்நாடுகளை கிலாஃபா அரசு அங்கீகரிக்கும் அளவிற்கு நிலைமை சென்றது. முஸ்தபா கமால் துருக்கியை மற்ற நாடுகளினின்றும் பிரித்து ஒரு தனி அரசாக அறிவித்தான். துண்டாடப்பட்ட இஸ்லாமிய நாடுகளை குஃப்ரின் கைகளில் ஒப்படைத்து அதன் தலைவிதியையே மாற்றினான். முஸ்லிம்களும் குஃப்பாரைப்போல பல நாடுகளாக பிரிந்து வாழ்வதை ஏற்றனர். அதன் பின்னர் எண்ணற்ற துன்பங்களுக்கு உள்ளாயினர். இவையனைத்தும் முக்கிய விவகாரங்கள் எவை என்பதை மறந்ததன் விளைவுகளேயாகும். முஸ்லிம் உம்மாவின் ஒற்றுமை, ஓரரசு என்ற நிலைப்பாடு என்பவை முக்கிய விவகாரங்கள் என்பதை முஸ்லிம்கள் மறந்தனர். அதனை வாழ்வா?சாவா? பிரச்சனையாக கருதவும் மறுத்தனர்.
இந்த நிலைமை மாறி எவை முக்கியவிவகாரங்கள் என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும். அதனை வாழ்வா?சாவா? பிரச்சனையாகவும் கருதவேண்டும்.பகிரங்கமான குஃப்ரின் வெளிப்பாடுகுஃப்ர் (இறைநம்பிக்கையற்றோர்களின்) முறைகளை பகிரங்கமாக செயல்படுத்துவது ஒரு முக்கிய விவகாரமாகும். அதற்கான நடவடிக்கை வாழ்வா?சாவா? என்கிற அடிப்படையில் இருக்கவேண்டும் என இஸ்லாம் கருதுகிறது. அவூஃப் இப்ன் மாலிக் (ரழி) அவர்களின் ஹதீஸ் பின்வருமாறு விவரிக்கிறது. ரசூலுல்லாஹ்(ஸல்) கூறுகிறார்கள் “உங்களிடையே அமீர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் நல்லதையே செய்வார்கள். சில சமயம் கெட்டதையும் நடைமுறைபடுத்துவார்கள். அந்த கெட்;ட நடைமுறைகளை வெறுப்பவர்களும் அதனை எதிர்ப்பவர்களும் பாவத்தினின்றும் தப்புவார்கள். ஆனால் அங்கீகரித்து, அமைதிகாத்து, அவற்றை பின்பற்றுவோர் பாவத்திற்குள்ளாவார்கள்."பின்வரும் பகுதி இணைந்தும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகிறது.“இறைத்து}தரே, அவர்களுடன் நாம் வாள் கொண்டு போரிடவேண்டாமா?" என்றதற்கு ரசூலுல்லாஹ்(ஸல்) “வேண்டாம். அவர்கள் உங்களிடையே தொழுகையை நிலைநாட்டுவதை தொடரும் வரை வேண்டாம்." என்றார்கள். இன்னொரு குறிப்பில், அவர்களை எதிர்த்து நாம் போரிடக்கூடாதா என்றதற்கு ரசூலுல்லாஹ் கூறுகிறார்கள்.
“அவர்கள் உங்களிடையே தொழுகையை நிலைநாட்டுவதை தொடரும் வரை வேண்டாம்." என்றார்கள்.உபாதா இப்ன் உஸ்ஸமீத் கூறியதாக புகாரி (ரஹ்) அறிவிக்கிறார்கள்,
“ரசூலுல்லாஹ்(ஸல்) எங்களை அழைத்தார்கள். பகிரங்கமான குஃப்ரைக் காணும் வரை நாங்கள் ஆட்சியிலுள்ளோரை எக்காரணம் கொண்டும் எதிர்க்கமாட்டோம், அவர்களின் கட்டளைப்படி நடப்போம் என்ற சத்தியப்பிரமாணத்தை நாங்கள் அருக்கு அளித்தோம்". அஹ்மத் அவர்களின் கூற்றுப்படி
“ஆட்சியிலுள்ளோர் உங்கள் மீது பகிரங்கமாக பாவம் செய்யக் கட்டளையிடும்வரை" என உள்ளது. அல்அஸ்ஜாவினின்றும் அவூஃப் இப்ன் மாலிக் அறிவிக்கிறார்கள். ரசூலுல்லாஹ் கூறுகிறார்கள் “ஒரு சிறந்த இமாம் உங்களிடையே அன்பு செலுத்துவார். நீங்களும் அவரை அன்பு செலுத்துவீர்கள். அவர் உங்களுக்காக துஆ செய்வார்; நீங்களும் அவருக்காக துஆ செய்வீர்கள். உங்களின் ஒரு மேசமான இமாமோ உங்களை வெறுப்பார். நீங்களும் அவரை வெறுப்பீர்கள். அவர் உங்களை சபிப்பார். நீங்களும் அவரைச் சபிப்பீர்கள்." அதற்கு நாங்கள் கேட்டோம் “இறைத்து}தரே அவரை எதிர்த்து நாம் போரிட வேண்டாமா?" அதற்கு “அவர்கள் உங்களிடையே தொழுகையை நிலைநாட்டுவதை தொடரும்வரை வேண்டாம்” என ரசூலுல்லாஹ்(ஸல்) கூறினார்கள்.
இங்கே தொழுகை எனக் குறிப்பிடுவது "தீனை நிலை நாட்டுவது" என்றே பொருள்படும். இது இஸ்லாமிய ஷாPஆ விளக்கங்களினின்றும் தெளிவாகிறது. மேலும் பகிரங்க குஃப்ர் என்பது ஆட்சியாளர் செய்யும் குஃப்ர் ஆகும். அதாவது குஃப்ர் முறையில் ஆட்சி புரிவது. மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் ஒரு கலீஃபா இஸ்லாமிய பாதையினின்றும் விலகி குஃப்ர் முறையில் ஆட்சி செய்வதை எதிர்த்து போராட வேண்டும் என்பது தெளிவாகிறது. அல்பதஹ்ஹில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
“சுல்தானின் கட்டளைப்படி நடந்து அவருடன் சேர்ந்து ஜிஹாத் செய்யும் கடமையை பேரரிஞர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஏனெனில் அவை பெரும் உயிர் சேதத்தையும் பொருட் சேதத்தையும் தடுக்கும். ஆனால் சுல்தான் குஃப்ர் முறைப்படி ஆட்சி செய்தால் அவருக்கு கட்டுப்பட்டு நடப்பது நம்மீது தடுக்கப்பட்டதாகும். அவரை எதிர்த்து போரிடுவதே கடமையாகும்."
இமாம் அல்சவ்க்கானி அவரது புத்தகமான நயில் அல்அவ்தார் இல் கூறுகிறார், “தவறான வழியில் நடக்கும் சுல்தானை எதிர்ப்பது கடமை எனக்கூறுவோர், குர்ஆனையும் சுன்னாவையுமே தனது ஆதாரமாகக் கருதுவர்" இதன் மூலம் குஃப்ர் முறையில் ஆட்சி புரியும் ஆட்சியாளரை எதிர்த்துப் போரிடுவது ஒரு முக்கிய விவகாரமாகும்.

No comments:

Post a Comment