அபுதாவூத் பின்வருமாறு அறிவிக்கிறார்கள். இஸ்லாத்தினின்றும் மதம் மாறிய ஒருவர் அபுமுஸாவிடம் இழுத்துவரப்பட்டார். பாவமன்னிப்பு கோரி மீண்டும் இஸ்லாத்திற்கு வந்துவிடுமாறு அவரை அபுமூஸா இருபது இரவுகள் அழைத்தார். அவரோ அதனை மறுத்துவிட்டதனால், அபுமுஸா அவரை கொன்றுவிட்டார்.அல்குத்னி, அல் பைஹக்கியிடமிருந்து அறிவிக்கப்படும் ஒரு அறிவிப்பில் உம்மு ஹர்பாஹ் என்ற ஒரு பெண்மணி இஸ்லாத்தை தழுவியபிறகு சிறிது காலத்தில் மீண்டும் மதம் மாறினார். அவரை அபுபக்கர் (ரழி) மீண்டும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அழைத்தார். ஆனால் அப்பெண்மணியோ மறுத்துவிட்டார். அதனால் அபுபக்கர் (ரழி) அவரை கொன்றுவிட்டார். அதேபோல் இறைத்து}தர் என்று மக்களை ஏமாற்றிய “முஸைலமாஹ்" என்பவனின் பின் சென்ற எண்ணற்ற அரேபிய சமூகத்தினர் மீண்டும் இஸ்லாத்திற்கு வரும்வரை அபுபக்கர் (ரழி) அவர்களை எதிர்த்து போரிட்டார்.
Thursday, May 29, 2008
அதிமுக்கிய பிரச்சனை 2
அபுதாவூத் பின்வருமாறு அறிவிக்கிறார்கள். இஸ்லாத்தினின்றும் மதம் மாறிய ஒருவர் அபுமுஸாவிடம் இழுத்துவரப்பட்டார். பாவமன்னிப்பு கோரி மீண்டும் இஸ்லாத்திற்கு வந்துவிடுமாறு அவரை அபுமூஸா இருபது இரவுகள் அழைத்தார். அவரோ அதனை மறுத்துவிட்டதனால், அபுமுஸா அவரை கொன்றுவிட்டார்.அல்குத்னி, அல் பைஹக்கியிடமிருந்து அறிவிக்கப்படும் ஒரு அறிவிப்பில் உம்மு ஹர்பாஹ் என்ற ஒரு பெண்மணி இஸ்லாத்தை தழுவியபிறகு சிறிது காலத்தில் மீண்டும் மதம் மாறினார். அவரை அபுபக்கர் (ரழி) மீண்டும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அழைத்தார். ஆனால் அப்பெண்மணியோ மறுத்துவிட்டார். அதனால் அபுபக்கர் (ரழி) அவரை கொன்றுவிட்டார். அதேபோல் இறைத்து}தர் என்று மக்களை ஏமாற்றிய “முஸைலமாஹ்" என்பவனின் பின் சென்ற எண்ணற்ற அரேபிய சமூகத்தினர் மீண்டும் இஸ்லாத்திற்கு வரும்வரை அபுபக்கர் (ரழி) அவர்களை எதிர்த்து போரிட்டார்.
இஸ்லாமிய பெண்களின் உடை
ஹிஜாப் அல்லது ஹிஜாப் மற்றும் ஹிமார்(முக்காடு) என்பது இஸ்லாமிய கடமை அல்ல, மாறாக சுயவிருப்பின் பேரில் அணியும் உடையென முஸ்லிம்களில் சிலர் வாதிக்கின்றனர். பெண் கண்ணியத்தை பேணும் வகையில் இருக்குமேயானால் எவ்வித உடையையும் அணியலாம் என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது. உதாரணமாக இஸ்லாம் குறித்த பல புத்தகங்களின் ஆசிரியரும், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் (அல் இஹ்வானுல் முஸ்லிமூன்) ஸ்தாபகரின் சகோதரருமான எகிப்திய நாட்டைச் சார்ந்த கம்மல் பன்னா ''தலையை மறைத்தல் ஒரு கடமை அல்ல. இது குர்ஆன் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதன் விளைவாகும். ஹிஜாப் அணிவதோ அல்லது சிறு பாவாடை அணிவதோ தன் சுயவிருப்பத்திற்கேற்ப எடுக்கும் சுயமான முடிவே"" எனக் கூறுகிறார். மேலும் தனது விருப்பிற்கேற்ப உடை அணியும் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதாலேயே அத்தகைய ஹிஜாப்-எதிர்ப்புச் சட்டங்களை நான் ஆதரிப்பதில்லை என்றும் கூறுகிறார்.
அண்மைக் காலங்களில் மேற்கத்திய சிந்தனைகளின் பாதிப்பிற்கு உள்ளானோரால் இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இத்தகைய வழிதவறிய கருத்துக்கள் கடந்த கால இஸ்லாமிய வரலாற்றில் இருந்திருக்கவில்லை. இஸ்லாமிய கட்டளைகளும், விலக்கல்களும், குர்ஆனிலும் சுன்னாவிலும் பதியப்பட்டுள்ளவற்றின் மூலமாகவே நாம் பெற முடியும். இவற்றை ஆராய்வதன் மூலம் அல்லாஹ்(சுபு)வின் கட்டளை யாதென அறியலாம். மகரம் அல்லாத வேறு ஆடவர் முன்னிலையில் 'ஹிஜாப்" அல்லது 'ஹிமார்" உதவியுடன் தலைமுடியை மறைப்பது கட்டாயம் என்பது இஸ்லாத்தில் விளக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
அவர்கள் தங்கள் முந்தானையால்(குமுர்) தங்கள் கழுத்தையும் மார்பையும் மறைத்துக்கொள்ளட்டும்.(24-31)
குமுர் என்பது முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தைய குறைஷியப் பெண்களால் அணியப்பட்டது. இது தலையை மறைத்து, கழுத்தையும் மார்புப் பகுதியையும் வெளிக்காட்டியவாறு உடலின் பின்புறமாக கீழ்நோக்கி விழுந்து காணப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் அருளப்பட்ட இவ்வசனம் வெளிக்காட்டப்படும் கழுத்தையும் மார்பையும் தலையுடன் சேர்த்து மறைக்குமாறு கட்டளையிடுகிறது.
ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்
அஸ்மா-பின்-அபுபக்கர் அவர்கள் மெல்லிய ஆடை அணிந்தவராக நபிகளார்(ஸல்) அவர்கள் முன் வந்தபோது, நபிகளார்(ஸல்) முகத்தை அப்பாற் திருப்பியவாறு 'ஏ அஸ்மாவே, ஒரு பெண் பருவ வயதை அடைந்தால் இதையும் இதையும் தவிர ஏனையவற்றை காண்பித்தல் ஆகுமானதல்ல" எனக்கூறி முகத்தையும் மணிக்கட்டையும் காண்பித்தார்கள்.
அதிர்ஷ்ட வசமாக பல முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஒரு கடமை என அறிந்திருந்தாலும்கூட அடிக்கடி குழப்பத்திற்கும் தவறான கருத்திற்கும் உள்ளாக்கப்பட்டு இஸ்லாமிய உடைநெறி யாதென விளங்காத நிலையில் காணப்படுகின்றனர். ‘துப்பட்டா’ என அழைக்கப்படும் மிக மெல்லிய துணி மூலம் தலைமுடியையும் கழுத்தையும் மறைப்பதே போதும் என எண்ணுகின்றனர். அத்துணியின் ஊடாக அப்பகுதிகள் தெறிந்தாலும் தவறல்ல எனக் கருதுகின்றனர். வேறு சிலர் தலைமுடியின் ஒருபகுதி தெரியுமாறு தலைமுக்காடை தளர்த்தி அணிவது போதுமென எண்ணுகின்றனர். சிலரோ தலைமுடி, காது, கழுத்துப்பகுதி தெரியுமாறு 'பந்தனா" அணிகிறார்கள். ஒருசாரரோ தலைப்பகுதியை சரியாக மறைத்துப் பின்னர் உடலின் வடிவம் தெரியுமாறு டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அல்லது கணுக்காலுக்கு மேலான பாவாடையை கை கால் தெரியுமாறு அணிகின்றனர்.
பொது இடமானாலும் சரி தனிமையானாலும் சரி உடை சம்மந்தமான இஸ்லாமிய கட்டளைகள் சுயவிருப்பு, சுயகருத்து அல்லது கண்ணியம்பேணல் என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல. மாறாக அது அல்லாஹ்(சுபு)வின் கட்டளையாகும். அல்லாஹ்(சுபு) தொழுகையை கடைமையாக்கிய பின்னர் தொழும் முறையை அவரவர் விருப்பிற்கேற்ப விட்டுவைக்கவில்லை. தொழும் முறையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதைப்போன்றே உடலை மறைக்கும் உடை விசயத்திலும் அதைப்பற்றிய விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொழுகையைப் போன்றே உடை விவகாரத்திலும் இறைவனின் கட்டளைப்படி நடப்பது அவசியமாகும். சுயசிந்தனையோ அல்லது சுயவிருப்போ எவ்வாறு தொழுகையில் ஆதிக்கம் செலுத்தவில்லையோ அதைப்போல உடை விவகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவது கூடாது.
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
“ஆனால் உம் இறைவன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை தீர்ப்பளிப்பவராக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்புச்செய்தது பற்றி எவ்வித அதிருப்தியையும் தங்கள் மனதில் கொள்ளாது முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகள் ஆகமாட்டார்கள்.”(4:65)
அல்குர்ஆன் வசனங்கள் மூலமும் நபிகளார்(ஸல்) அவர்களின் வாக்குகளாலும் தெளிவாக கூறப்பட்டிருப்பதற்கேற்ப ஒவ்வொரு பருவமடைந்த பெண்ணும் கை, முகம் தவிர்த்து ஏனைய பகுதிகளை மகரமற்ற ஆண்கள் முன்னிலையில் மறைத்தல் கடமையாகும். ஆடையானது தோல் தெரியும் அளவிற்கு மெல்லியதாகவோ உடற்கட்டமைப்பை வெளிக்காட்டும் வகையிலோ இருத்தலாகாது. மணிக்கட்டு வரையிலான கை, முகம்; தவிர்த்து, கழுத்து, முடி உட்பட பெண்ணின் முழு உடம்பும் 'அவ்ரா" ஆகும் (யுறசயா) (மறைக்கப்படவேண்டிய பகுதிகளாகும்).
சூரா அந்நு}ரில் அல்லாஹ்(சுபு) விவரிக்கின்றான்
“இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.” (24:31)
இப்ன் அப்பாஸ் அவர்கள் 'வெளியில் தெரியக்கூடியவை" என்பதற்கு மணிக்கட்டு வரையிலான கைப் பகுதி மற்றும் முகம் என விளக்கமளித்துள்ளார்கள்.
மேலும் பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கிமாரையும் (தலை, கழுத்து, மார்புப் பகுதிகளை மறைக்கும் துணி) ஜில்பாபையும் (கழுத்திற்கு கீழ் உடலின் மற்ற அனைத்து பகுதிகளையும் மறைத்து மேலிருந்து நிலத்தை நோக்கி தொங்கும் ஒரு தனி ஆடை) அணியுமாறு கட்டளையிடப்பட்டுள்ளார்கள். அதாவது கிமாருடன் சட்டையும் பாவாடையுமோ அல்லது முழுக்கால் சட்டையுமோ அணிவது ஆகுமானதல்ல. அல்லமா இப்ன்-அல்-ஹசாம் எழுதுகிறார்கள் ''நபி அவர்கள் காலத்திலிருந்த அரபிமொழியில் ஜில்பாப் என்பது முழு உடம்பையும் மறைக்குமாறு அமைந்திருக்கும் தனி உடையாகும். முழு உடம்பையும் மறைக்க முடியாத உடையை ஜில்பாப் எனக் கூறமுடியாது."" (அல்-முஹல்லா தொகுதி 3)
பெண்கள் இவ்விரு உடையையும் அல்லாமல் வேறு உடையணிந்து வெளியில் நடமாடுவார்களாயின் அவர்கள் அல்லாஹ்(சுபு)வின் கட்டளைக்கு மாறிழைத்து பாவத்திற்கு ஆளாவார்கள். ஜில்பாபுக்கான ஆதாரங்களை அல்லாஹ்(சுபு) சூரா "அல்-அஹ்சாப்" யில் கூறுகிறான்.
“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் வெளி ஆடைகளால்(ஜிலாபீப்) முழு உடலையும் பாதுகாக்குமாறு கூறுவீராக.”(33:59)
மேலும் உம்மு அதியா(ரலி) கூறுகிறார்கள்
“அல்லாஹ்வின் து}தர் ஈத் பெருநாள் தினத்தன்று, இளம் பெண்கள், மாதவிடாய் பெண்கள், மற்றும் மறைப்பு அணிந்த பெண்கள் ஆகியோரை அழைத்து வர ஆணையிட்டார்கள். மாதவிடாய் பெண்கள் தொழும் இடத்திற்கு அப்பாலிருந்து பிரசங்கத்தை கேட்குமாறு அமரவைக்கப்பட்டார்கள். 'அல்லாஹ்வின் து}தரே ஜில்பாப் இல்லாத பெண்களின் நிலை என்ன" என வினவியதற்கு அவர்கள் கூறுகிறார்கள் 'ஏனைய சகோதரியிடம் ஒரு ஜில்பாபை இரவல் வாங்கி அணியட்டும்." என பதிலளித்தார்கள்.
ஆகவே நபி அவர்கள் ஜில்பாப் இல்லாவிட்டால் இரவல் வாங்கியேனும் அணியுமாறு கூறியுள்ளார்கள் என்பது அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறதல்லவா.
ஒரு முஸ்லிம் பெண் மேற்கத்திய பெண்களை ஒப்பாக்கி தாம் எதை அணியவேண்டும் என சுயமாக முடிவெடுத்தல் கூடாது. பனி-தமீம் இனத்தைச் சார்ந்த சில பெண்கள் மெல்லிய துணிகளை அணிந்து அவர்களை சந்தித்தபோது 'இது முஃமீனான பெண்ணிற்கு தகுந்த உடையல்ல. நீங்கள் முஃமீன்கள் இல்லாவிடில் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்." என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.
இன்றைய முஸ்லிம் பெண்கள் நபி (ஸல்) அவர்களின் மதிப்பிற்கும் அல்லாஹ்(சுபு)வின் பொருத்தத்திற்கும் ஆளான அன்றைய முஸ்லிம் பெண்களின் முன்மாதிரியை பின்பற்றி நடத்தல் அவசியம். அன்றைய நாளில் உடை சம்பந்தமான குர்ஆன் வசனம் இறக்கப்பட்ட போது அப்பெண்கள் ஒரு நிமிடமேனும் தாமதிக்காது கிடைத்தவற்றைக் கொண்டு அவ்ராவை மறைத்துக் கொண்டார்கள். சய்பாவின் மகளான சஃபீயா கூறியதாவது,
ஆகவே ஹிஜாப் என்பது கண்ணியம் பேணுதலுக்கான உடை அல்ல. பாரம்பரிய நடைமுறை பழக்கவழக்கம் என்பவற்றிற்காக அணியும் ஆடையும் அல்ல. இது இஸ்லாத்தின் ஒரு கடமையாகும். அதற்குறிய சட்ட விதிப்படி உடை அணிதல் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் மீதும் அல்லாஹ் (சுபு) விதித்துள்ள கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்(சுபு) எமது முஸ்லிம் பெண்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!
Friday, May 23, 2008
இஸ்லாத்தின் ஆட்சிக்கோட்பாடு
இஸ்லாமிய அரசு நான்கு அடிப்படைக்கோட்பாடுகளை கொண்டுள்ளது.
1. இறைமையும் சட்டமியற்றுதலும் இறைவனுக்குரியது
முஸ்லிம்களை கட்டுக்குள் வைத்திருப்பது தனிமனிதனின் கொள்கைகளல்ல, மாறாக அலலாஹ்(சுபு)வின் கட்டளைப்படியே அவர்களது ஒவ்வொரு அசைவும் அமைகிறது.
“உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் திர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாத வரையில் அவர்கள் நம்மை ஈமான் கொண்டவர்கள் ஆகமாட்டதர்கள்” (அல்குர்ஆன் 4:65)
“மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்ராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்விற்கும் அவனுடைய து}தருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்”
“எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்) படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பவர்களாவார்கள்” (அல்குர்ஆன் 5:44)
“எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் தான் அநியாயக்காரர்களாவார்கள்” (அல்குர்ஆன் 5:45)
எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்
(அல்குர்ஆன் 5:47)
எனவே இறைமை பரிபூரணமாக அல்லாஹ்வின் கட்டளைகளாகிய இஸ்லாமிய ஷரிஆவிற்கு மாத்திரமே சொந்தமானது என்பது மிகத்தெளிவாக விளங்குகிறது.
2. அதிகாரம் என்பது முஸ்லிம் உம்மாவிற்குரியது
இஸ்லாமிய ஆட்சியின் அதிகாரம் முழுமையாக முஸ்லிம் உம்மாவினிடமே காணப்படும். ஏனென்றால் கிலாபாவை நடைமுறைபடுத்துவதற்காக நியமிக்கப்படும் கலீஃபா என்பவர் முஸ்லிம்களால் சத்தியப்பிரமாணம் (பையத்) கொடுக்கப்பட்டு தம்மீது ஷாPஆவினை நடைமுறைப்படுத்துங்கள் என்ற நிபந்தனையுடன் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் மட்டுமே. எனவே அதிகாரம் முழுமையாக முஸ்லிம் உம்மத்திடமே காணப்படும். உபைதா இப்ன் உல் சாமித் (ரழி) அறிவிக்கிறார்கள் “நாங்கள் கஷ்டத்திலும், இலகுவான நிலையிலும் ரஸ}லுல்லாஹ்விற்கு முற்றிலும் செவிசாய்த்தும், கட்டுப்பட்டும் நடப்பதாக உறுதியளித்தோம்” எனக் கூறுகிறார்கள்.
ஜாPர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவிக்கிறார்கள்
“நாங்கள் ரஸ}லுல்லாஹ்விற்கு முற்றிலும் செவிசாய்த்தும், கட்டுப்பட்டும் நடப்பதாகவும், ஏனையோருக்கு அறிவுரை அளிப்பதாகவும் அவரிடம் பையத் செய்தோம்” எனக் கூறுகிறார்கள்.
எனவே இங்கு வாக்குறுதி மக்களால் கலீபாவிற்கு கொடுக்கப்படுகிறதே தவிர கலீபா மக்களுக்கு கொடுக்கவில்லை. அவர்களில் வாக்குறுதி யாருக்கு கொடுக்கப்படுகிறதோ அவரே அவர்களுக்கு ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்;. எவருக்கு வாக்குறுதி கொடுக்கப்படுகிறதோ அவர்தான் கலீஃபாவாக வரமுடியும். குலஃபா ராஷிதீன்கள் மக்களிடையே சத்தியப்பிரமாணம் வாங்கிய பின்னரே கலீஃபாவாக ஆகினர்.
அப்துல்லாஹ் இப்ன் உமர் அறிவிப்பதாக நஃபாஅ குறிப்பிடுகிறார்கள்
“ எவரொருவர் கட்டுப்பாட்டிலிருந்து தனது கையினை விலக்கிக்கொள்கிறாரோ அவர் நாளை மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் தனக்கான எத்தகைய ஆதாரமுமின்றி இறைவனை சந்திப்பார். மேலும் எவர் தனது கழுத்தில் பையத் இல்லாத நிலையில் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய்யாக்கால (அறியாமைக்கால) மரணத்தையே அடைகிறார்”
நபிகளார்(ஸல்) கூறியதாக இப்ன் அப்பாஸ் அறிவிக்கிறார்கள்.
“ அமீரினிடத்தில், தமக்கு விருப்பமில்லாத ஒரு செயலை ஒருவர் கண்டால் அவர் பொறுமையுடன் இருக்கவேண்டும். எவர் ஒருவர் ஒரு கைப்பிடி அளவேனும் இமாமை விட்டு பிரிந்து சென்ற நிலையில் மரணித்து விடுகிறாரோ, அவர் ஜாஹிலிய்ய மரணத்தையே அடைகிறார்.”
எனவே மேற்கூறிய விடயங்களிலிருந்து உம்மாவிடம் பைஅத் பெற்றபின்னரே ஒருவர் கலீஃபாவாக முடியும் என்பதும், அவ்வாறு அமீரினை தேர்ந்தெடுக்கின்ற அதிகாரமும் உம்மாவிடமே உள்ளது என்பதும், எனினும் தெளிவான குப்ரினை அந்த அமீர் செயற்படுத்தும் வரையில் தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக நாம் அவரின் அதிகாரத்திலிருந்து பிரிந்து செல்ல முடியாது என்றும் தெளிவாகிறது.
3. ஒரே ஒரு கலீஃபாதான்.
தம்மை ஆளும் பிரதிநிதியாக ஒரு கலீஃபாவை நியமிப்பது முஸ்லிம்களின் மீது கடமையாகும். கலீபாவின் ஒருமை குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன.ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது.
“இரண்டு கலீஃபாக்களுக்கு பைஅத்(சத்தியப்பிரமாணம்) கொடுக்கப்பட்டால், அவர்களில் இரண்டாமவரை கொன்றுவிடுங்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
4. இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் உரிமை கலீஃபாவுக்கு மட்டுமே உண்டு.
கலீபாவிற்கு மாத்திரமே இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. கலீஃபாவால் மட்டுமே முழுமையாகவும், முறையாகவும் அல்லாஹ்வின் சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் இஸ்லாமிய ஆட்சியை நிலைநிறுத்த முடியும். இஜ்மா-அஸ்-ஸஹாபா (சகாபாக்களின் ஏகோபித்த தீர்மானம்) விலிருந்து கலீபாவால் மட்டுமே இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றமுடியம் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இஜ்மா-அஸ்-ஸஹாபாவின்படி, “ஒரு இமாமினுடைய கருத்து மாத்திரமே வேறுபாடுகளை களைகிறது”, “ஒரு இமாமின் கருத்து மட்டுமே கட்டளையாக கொள்ளப்படுகிறது”, “ இமாம் மாத்திரமே சமூகத்தில் தோன்றுகின்ற புதிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தீர்மானித்து அமுல்படுத்தும் உரிமையை பெற்றிருக்கிறார்.” போன்ற அடிப்படைகளை நாம் இஸ்லாத்தில் புரிந்து கொள்ள முடிகிறது.
உலகை மயானமாக்கிவரும் ‘உலகமயமாக்கல்’
தாராளமயமாக்குதல் அல்லது உலகமயமாக்குதல் எனும் வார்த்தையை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரர்களும் உருவாக்கினர். சர்வதேச எங்கும் ஒரு பொருள் பாவனையிலுள்ளது, அல்லது உலகின் பல பகுதிகளிலும் அப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை விளக்குவதற்காக இந்த உலகமயமாக்கல் என்ற பதம் பிரயோகிக்கப்படவில்லை. மாறாக அப்பொருளை உற்பத்திசெய்பவர் உலகெங்கும் அதனை பொதுவான பொருளாக்கவேண்டும்; என்ற நோக்குடன் செயல்படும் முறைமையையே இவ்வார்த்தை குறிப்பிடுகிறது. ஒரு வியாபார நிறுவனம் ஒரு உற்பத்திக்கொள்கையை வகுத்துக்கொண்டு அப்பொருளின் உற்பத்திச்செலவு உலகில் எங்கு குறைவாக உள்ளதோ அங்கு உற்பத்தியை அதிகரித்துக்கொண்டு பின்னர் அதனை உலகெங்கும் விற்று இலாபம் ஈட்டுவது மட்டுமே அதன் கொள்கையாகும்.
அமெரிக்க வணிகச்சங்கங்களின் செயல்களை விளக்குவதற்காக 1980ற்குப்பிறகு தாராளமயமாக்கல் எனும் சொல் உருவாக்கப்பட்டது. 1981ல் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ரிகன் தனது நாட்டின் சர்வதேச அரசியல் பொருளாதார தொடர்புகளில் அதிரடியான மாற்றங்களை கொண்டுவந்தார். இதன் விளைவாக "பலம் பொருந்திய டாலர்" எனும் கொள்கை உருவாகியது. அயல் நாடுகளிலுள்ள செல்வந்தர்கள் அமெரிக்காவில் தமது முதலீடுகளை செய்வதற்கு அக்கொள்கைகள் வழிவகுத்தன. அதன் மூலம் வரும் பெரும் வருமானம் அமெரிக்காவின் ஆயுத பலத்தை அதிகரிக்கவும், அன்றைய சோவியத் நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும்; பயன்படுத்தப்பட்டது. இதுவே சோவியத் வீழ்ச்சியுற ஒரு காரணமாயிற்று.
திடமான டாலர் கொள்கையால் டாலரின் மதிப்பு ரிகனின் ஆட்சியில் உயர்ந்தது. டாலரின் மதிப்பைக்கொண்டு பொருள் உற்பத்தி செய்த அமெரிக்க நிறுவனங்கள் அதே பொருளை உற்பத்தி செய்த வெளிநாட்டு நிறுவனங்களோடு போட்டியிட முடியாமல் சில நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தன. இத்தகைய நிறுவனங்களுக்கு மறுவடிவம் கொடுத்து அவற்றை உயர்த்த சில அமெரிக்க ஆய்வாளர்கள் விழைந்தனர். மறுவடிவம் கொடுக்கும் முயற்சியில் பலர் வேலையிழந்தனர். அமெரிக்க நிறுவனங்களான Genaral Motors மற்றும் IBM நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் பலரை வெளியேற்றினர். வெளிநாட்டில் கிளைகள் தொடங்கியும் தங்கள் நஷ்டத்தை சீர் செய்ய இவை விழைந்தன.
இந்த டாலர் கொள்கையால் சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை மற்றும் மக்களின் ஊதியம் குறைந்திற்று. இந்தியா, தாய்லாந்து போன்ற ஏழை நாடுகளின் ஒரு மாதத்தின் ஒரு ஊழியனின் ஊதியமானது அமெரிக்காவில் ஒரு மணிநேர ஊதிய அளவைவிடக் குறைவாகும். வேலைவாய்ப்புகளை இழத்தல், நிறுவனங்கள் திடீரென நஷ்டமடைதல் போன்ற மேற்கூறப்பட்ட விளைவுகளினால் அமெரிக்க மக்கள் “இலாபம் ஒன்றே" தங்கள் நாட்டு நிறுவனங்களின் குறிக்கோள் என அந்த நிறுவனங்களை குற்றம் சாட்டினர். ஆனால் சர்வதேச அளவில் எழுந்த போட்டியினால்தான் அவை அவ்வாறு செய்ய வேண்டி ஏற்பட்டன என அந்நிறுவனங்கள் பதில் அளித்தன. அப்போது 1987 ல் அமெரிக்க மேல் சபையினர் ஒன்று கூடி உலகமயமாக்கல் பற்றி பேசத் தொடங்கினர். பின்னர் பல ஆராய்ச்சிகளின் மூலமும், பல பொருளாதார கொள்கைசார் நு}ற்களை பதித்தும் உலகமயமாக்கல் எனும் கொள்கையை அமெரிக்கா அறிவித்தது.
வேலையிழப்பினால் ஏற்பட்ட குழப்பங்கள், வேற்று நாடுகளில் குறைந்த ஊதியத்தில் வேலை வாங்குதல் போன்ற பலவற்றை இந்த ஆராய்ச்சிகள் வெளியிட்டன. புஷ் ஆட்சியின் போது கையெழுத்திட்ட (கனடா - மெக்ஸிகோ) உடனான ஒப்பந்தத்திற்கு கிளிண்டன் ஆட்சியில் காங்கிரஸ் ஒப்புதல் அளித்தமையால் கூலி குறைவாக உள்ள மெக்ஸிகோவில் பொருட்களை உற்பத்தி செய்ய வழி வகுத்தது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்கள் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டன. இதற்கு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இவ்வாறாக நடந்த பல சர்ச்சைகள் உலக மக்களிடையே “உலகமயமாக்குதலை" உறுதிப்படுத்தியது. 1992ல் நிதி மிகுந்த நிறுவனங்களின் சுய இலாபத்திற்காக இவ்வகையான சர்ச்சைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. இதன் விளைவாக படித்த அனுவத்தேவையுள்ள வேலைகள் அமெரிக்காவில் செய்யப்படும் எனவும், உடலுழைப்பு தேவைப்படும் கடுமையான வேலைகள் மட்டுமே அமெரிக்காவிற்கு வெளியில் வேற்று நாடுகளில் நடைபெறும் எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக இவ்வேலைகளின் பயன்களை அமெரிக்கர்கள் பெற முடியும் என்பது மட்டுமல்லாமல் முன்னேற்றம் வாய்ந்த தொழில்களில் அவர்கள் ஏற்றம் பெறுவர் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன்மூமம் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அமெரிக்கர்ளுக்கு மலிந்த விலையிலும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.
1992ல் பதவி வகித்த புஷ்ஷின் கொள்கைகள் ஏற்றுமதியைப் பெருக்குவதிலும், உலக வர்த்தக நிறுவனங்களை உருவாக்குவதிலுமே முனைப்பு காட்டின. எனினும் வர்த்தக நிறுவனங்களோ தாங்கள் தொடங்கிய நிறுவனங்களை சீர் செய்து இலாபம் ஈட்டவே முயன்றன. மேலே கூறப்பட்டது போல் பொருள் உற்பத்தி செய்யவேண்டிய வேலையை வெளிநாட்டில் செய்யவேண்டும் என்றும் அவை எண்ணம் கொண்டன. ஆகவே இந்நிறுவனங்கள் அனைத்தும் அயல்நாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடலாயின.
பல ஆண்டுகளாக பனிப்போரின் காரணமாக, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட தாம் பின் தங்கி இருப்பதாகவும், தற்போது பனிப்போர் முற்றுப்பெற்ற நிலையில் அந்நாடுகளைவிட அமெரிக்கா முன்னேற்றம் காணவேண்டும் எனவும் அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் வலியுருத்தின. மேலும் அந்நாடுகளுடன் எந்தவித சமரச கொள்கையும் வைத்திராமல் தீவிர போட்டியில் இறங்கவேண்டும் எனவும் கருத்து தெரிவித்தன.
இதற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக பின்னர் வந்த கிளிண்டன் அரசு அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை விற்க சந்தை தேடவும், குறைந்த கூலி உள்ள இடங்களில் பொருட்களை தயாரிக்கவும் ஆதரவு வழங்கியது. வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் பலவும் இதில் அடங்கும். பனிப்போரின் இறுதியில் உலகம் பொருளாதார அடிப்படையில் மூன்றாக பிரிக்கப்பட்டது. அவை (1) மேற்கு ஐரோப்பாவின் கீழ் ஐரோப்பாவும் (2) ஜப்பானின் கீழ் ஆசியாவும் (3) அமெரிக்காவின் கீழ் வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் என பிரிக்கப்பட்டது. தங்களின் வீழ்ச்சிக்கு இப்பிரிவுகள் வழிவகுக்கும் என நினைத்த அமெரிக்க நிறுவனங்கள் இதை நிலவாரியான பிரிவினை என குற்றஞ்சாட்டியது. இந்த நிறுவனங்கள் ஜப்பானும் ஐரோப்பாவும் கூட தங்கள் கருத்தைத்தான் வலியுருத்துகின்றன என கூறின. மாறாக உலகையே ஒரே சந்தையாக பார்க்க வேண்டும் என்றும் யாரும் எந்த பகுதியிலும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்றும் அமெரிக்கா தனது கருத்தை இதன்போது பிரகடனப்படுத்தியது.
இதை கிளின்டன் அரசு ஒப்புக்கொண்டது. இவ்வகையான பிரகடனங்கள், போலியான தரம் குன்றிய எண்ணங்கள் நன்கு திட்டமிட்டதாகவும் பனிப்போரின் வெற்றியை அமெரிக்காவிற்கு ஈட்டித்தருவது போன்றும் இருந்தது. இந்தக் கருத்துக்களை வளரும் நாடுகளிலும் பிரச்சாரப்படுத்தி உலக மக்களின் ஏகோபித்த ஒத்துழைப்பை பெற்றது அமெரிக்கா. இப்பொழுது அந்த பிரச்சாரங்கள் வெற்றி பெற்றுவிட்டன என்றுதான் கூறவேண்டும். அயல்நாட்டு ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டை அமெரிக்க பொருட்களுக்கு சந்தையாக ஆக்கி தங்கள் நாட்டு மக்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டனர் என்றுதான் கூறவேண்டும்.
உலகமயமாக்கல் என்னும் வார்த்தைக்குப்பின் உள்ள உண்மைகளாவன...
(1)சோவியத் நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் உலகில் நிலவியது ஒரே ஒரு பொருளாதாரக் கொள்கை அது தாராளமயமாக்கப்பட்ட வர்த்தகமாகும். இதன் மையப்பொருள் “மூலதனம்"(இலாபம் ஒன்றே குறிக்கோள்) என்பதாகும்.
(2)பன்னாட்டு நிறுவனம் எனக் கூறிக்கொள்ளும் நிறுவனங்கள் உண்மையில் பன்னாட்டு நிறுவனங்களே ஆகாது. ஏனெனில் அந்நிறுவனங்களின் தலைமை ஓரிடத்திலேயே உள்ளது. எனவே அவை அனைத்து நாடுகளிலும் ஈட்டும் இலாபம் ஒரு நாட்டையே அடைகிறது. இந்த நிறுவனங்கள் உலகெங்கிலும் உற்பத்தி செய்து வணிகம் செய்வதால் வளரும் நாடுகள் இதை வரவேற்க வேண்டிய அவசியத்தில் உள்ளன.
(3)உலகின் எந்த நாட்டு பணத்தையும் எந்த நாட்டிலும் மாற்றலாம். அதற்கு மிக எளிதான வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு மிக சாதாரணமாகியதால் எங்கிருந்தும் எதையும் கண்காணிக்க இயலும் என்ற நிலை உருவாகியுள்ளதால் இது மிக இலகுவாக செய்யக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது.
இதன் காரணமாக மூன்றாம் நிலை நாடுகளில், மேலைநாட்டின் பணத்தையும், அது தீர்மானிக்கின்ற சட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்ற தவறான நிலையும் உருவாகியுள்ளன. இத்தகைய போக்கிற்கு இசைவதைத்தவிர வேறு வழி இல்லை என்ற நிலைப்பாடு இந்த மூன்றாம் நிலை நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளன. இவ்வாறு உலகமயமாக்கலால் உலகளாவிய ரிதியில் மேற்கொள்ளப்படுகின்ற பொருளாதார ஆக்கிரமிப்பு கடந்த நு}ற்றாண்டுகளில் கிருஸ்தவ மிஸனரிகளின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட கலாச்சார ஆக்கிரமிப்பைவிட மிகவும் மோசமானதாகும்.
Friday, May 9, 2008
கால இட மாற்றங்களுக்கு ஏற்ப இஸ்லாமிய சட்டங்களும் மாற்றம் பெறுமா?
கால மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்கள் மாறுவது மறுக்கப்படமாட்டாது
இந்த அடிப்படையில் அவர்களுடைய நடத்தைகளில் தற்கால யதார்த்த உலகிற்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுப்பதைக் காண்கிறோம். இன்னும் பழக்கவழக்கங்களிலும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்வதையும் காண்கிறோம்.
அவர்களிடம் இஸ்லாமிய ஷாPஆ சட்டம் தொடர்பாக வினவப்பட்டால் அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உரியதாக இருந்ததாக கூறுவார்கள். இஸ்லாம் கால ஓட்டத்திற்கு ஏற்ப இயங்குவதைக் கடமையாக்கியுள்ளது என்பார்கள். கால மாற்றம் இட மாற்;றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே செயற்படவேண்டும் என்றும் சொல்வார்கள். இவர்கள் வட்டியோடு தொடர்புடைய வங்கிகள், வட்டியோடு தொடர்புடைய நிலையங்கள் இருப்பதையும் நியாயப்படுத்துவார்கள்.
இவை யாவும் யதார்த்தத்தில் முஸ்லிம்ளுக்கு பயனளிக்கக்கூடியவை, எனவே இவற்றை ஏற்றுக்கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் தடுக்காது. இஸ்லாம் நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய மார்;க்கம் என்றெல்லாம் இல்லாத அம்சங்களை இட்டுக்கட்டிக் கூறுவார்கள். இதேபோல் பெண்கள் தமது அழகை வெளிப்படுத்தும் வகையில் ஆடை அணிவதையும், இஸ்லாம் ஏற்றுக்கொள்ளாத தேவையற்ற அம்சங்களையும், அந்நியர்களோடு கலப்பதையும் அவை இன்றைய காலத்தின் தேவைகள், எனவே ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று கூறுவதையும் நாம் காணமுடிகிறது.
இதுபோன்று பலதாரமணம் காலம் கடந்துவிட்ட சட்டம் என்கின்றனர். அச்சட்டம் இன்று தேவை இல்லை என்கின்றனர். அதுமட்டுமன்றி திருடனின் கையை வெட்டுவது, விபச்சாரத்தில் ஈடுபடுவோரை கல்லடி கொடுத்துக் கொல்வது போன்றவை நவீன கால ஒழுங்கிற்கு பொருத்தமற்றவை, இது பற்றிய ஆய்வே அவசியமில்லை என்கின்றனர்.
இதைப்போன்ற அடிப்படை எண்ணங்கள் முஸ்லிம்களின் உள்ளங்களில் முற்றும் தவறான கருத்துக்களை ஆழமாக விதைத்திருப்பதைக் காணமுடிகிறது. இந்தக் கருத்துக்கள் யாவும் முழுமையாகவே இஸ்லாத்திற்கு முரணானவையாகும். இஸ்லாத்தின் அடிப்படைகளையும் விளக்கங்களையும் பாதிக்கக்கூடிய கருத்துகளாகும். உண்மையில் இவைகள் 19ம் நு}ற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட கடுமையான சிந்தனைத் தாக்கத்தின் அடையாளங்களாகும். பிறகு மேற்குலக ஏகாதிபத்தியம் இப்படியான கருத்துக்களை வளர்த்துவிட்டது.
இப்படியாக முஸ்லிம் உலகம் மிகக்கடுமையான சிந்தனை வீழ்ச்சிக்கு ஆழாகியிருப்பதைக் காண்கிறோம். இஸ்லாம் எப்படி நவீன காலத்திற்கு முரண்படுகிறது என்பதையும் மேலே கூறப்பட்ட காஇதாவின் யதார்த்த விளக்கம் என்ன என்பதையும் நாம் கட்டாயம் விளங்க வேண்டியுள்ளது. அதாவது அவர்கள் வாதிடுவது போன்று கால இட மாற்றங்களுக்கு ஏற்ப இஸ்லாமும் மாறுகிறதா? உண்மையில் இஸ்லாத்தின் சட்டங்கள் யாவும் மனிதனின் உடலியல் மற்றும் பாலியல் தேவைகளை தீர்த்து மனிதனுக்கு முழுமையான தீர்வைக் கொடுக்க வந்த சட்டங்களாகும்.
இஸ்லாமிய ஷாPஆ சட்டம் என்பது மனிதனின் செயற்பாடுகள் தொடர்பாக சட்டமியற்றக்கூடிய அல்லாஹ்வின் கட்டளைகளாகும். ஒவ்வொரு மனித செயலுக்கும் இது அல்லாஹ்வின் கட்டளை என்பதற்கான ஆதாரம் அவசியமாகும். அதாவது குர்ஆனிய வசனத்திலிருந்து, நபிகளாரின் ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சட்டம் மனித செயல் ஒவ்வொன்றிற்கும் அவசியமாகும். அதேபோன்று ஸஹாபாக்களின் ஏகோபித்த கருத்தாக (இஜ்மாவுஸ்ஸஹாபா) இருப்பதும் ஷாPஆ சட்டத்திற்கு போதுமானதாகும். எனவே ஷாPஆ சட்டங்களின் அடிப்படை ஒன்றுதான், வேறு இல்லை.
எனவே ஒரு மனிதன் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா-அஸ்-ஸஹாபா, கியாஸ் ஆகியவற்;றின் அடிப்படையில்தான் தனது பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஒழுங்குபடுத்தவேண்டும்.
இதேபோல் ஒரு இஸ்லாமிய சமூகம் இவற்றின் மூலமே தமது பிரச்சினைகளுக்;கான தீர்வைப் பெற்றுக்கொள்ளவேண்டும். காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவே கூடாது.
குர்ஆன் மற்றும் து}தருடைய ஹதீஸ் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட சட்டங்களைக் கொண்டே எத்தகைய சூழலுக்கும் தீர்வு சொல்ல வேண்டும் என்பதை அல்லாஹ{த்தஆலா கடமையாக்கியுள்ளான்.
ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் உள்ள கடமை யாதெனின் சமூகத்தில் ஷாPஆ சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது முதலில் சமூகத்தை மிக நுணுக்கமாக ஆராய்வது அவசியமாகும். பிறகு அல்லாஹ்வுடைய ஷாPஆ சட்டப்படி அதற்கு தீர்வைக்காணவேண்டும். இதன்படி இஸ்லாமிய அடிப்படைக்கு ஏற்ப சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். ஷாPஆவிற்கு மாறாக சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப இஸ்லாத்தை நிலைநாட்டுவது பிழையான, பாவமான காரியமாகும். இஸ்லாத்திற்கு முரண்படுகின்ற அத்தனையையும் நீக்குவது அவசியமாகும்.