Tuesday, April 29, 2008

ஆன்மீக அகீதாவும், அரசியல் அகீதாவும்!

1) மறுமையின் விடயங்களை கற்பதன் அடிப்படை அம்சமாக அகீதாவின் ஆன்மீகம் தொடர்பான பகுதி அமைகின்றது. அதேபோல லௌகீக விடயங்களை கற்பதன் அடிப்படையாக அகீதாவின் அரசியல் பரிமாணம் அமைகின்றது. ஒவ்வொரு விடயம் தொடர்பான சிந்தனையும் அடிப்படை அகீதாவிலிருந்தே தோற்றம் பெறுகின்றது. அந்த சிந்தனையிலிருந்து மேலும் பல உப சிந்தனைகள் தோற்றம் பெருகின்றன. அந்த சிந்தனை மறுமை தொடர்பாக அமையுமானால் அது அகீதாவின் ஆன்மீகப்பகுதியிலிருந்தே எழுகின்றது. மாறாக அந்த சிந்தனை இவ்வுலக வாழ்க்கை தொடர்பாக அமையுமானால் அது அகீதாவின் அரசியற்பகுதியிலிருந்து எழுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இறுதிதீர்ப்புநாள் விவகாரங்கள், நற்கூலி வழங்குதல், தண்டனை வழங்குதல், வணக்க வழிபாடுகள்; அல்லது இவற்றுடன் சம்பந்தப்பட்ட விடயங்களான மறுமை நாளின் விபாPதங்கள், அல்லாஹ்வின் தண்டனை குறித்த எச்சரிக்கைகள், அல்லாஹ்வின் வெகுமதியை பற்றிய சுபசோபனங்கள் போன்ற விடயங்கள் அகீதா எமக்கு எடுத்தியம்பும் ஆன்மீகம் தொடர்பான பகுதியாகும். அதே நேரத்தில் மனிதனின் இவ்வுலக விவகாரங்களுடன் தொடர்புடையதாக ஒரு சிந்தனையோ, சட்டமோ அமையுமானால் அது அகீதாவின் அரசியல் தொடர்பான வழிகாட்டலாகும். அதாவது இறை சட்டங்கள், நன்மை, தீமை என்ற வழிகாட்டல்கள், வியாபரம், பங்குடமை, வாடகை, திருமணம், வாரிசுரிமை, உம்மத்திற்காக அமீர் ஒருவரை நியமித்தல், அவருக்கு கட்டுப்படுதல், அவர் நேர்வழியில் ஆட்சி செய்ய உதவுதல், நீதி தொடர்பான சட்டங்கள், ஜிஹாத் போன்ற அனைத்து விடயங்களும் இஸ்லாமிய அகீதாவின் அரசியல் பரிமாணத்திலிருந்து தோற்றம் பெற்றுள்ளதை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்.


2) கிருஸ்தவ மதமானது வெறுமனவே ஆன்மீக அகீதாவிலிருந்தே தோற்றம் பெற்றுள்ளது. ஏனெனில் அது எடுத்தியம்பும் சிந்தனையும், சட்டங்களும் மறுமை விவகாரங்களுடன் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்று உலகில் மேலோங்கியுள்ள முதலாளித்துவ தத்துவத்தின் அடிப்படை அகீதா அரசியல் பரிமாணத்தை மட்டும் கொண்ட அகீதாவாகவே விளங்குகிறது. ஏனெனில் அதிலிருந்து உருவாகும் சிந்தனையும், சட்டவிதிகளும் உலக விவகாரங்களுடன் மாத்திரமே சம்பந்தப்படுகிறது. உதாரணமாக முதலாளித்துவக்கொள்கையிலிருந்து தோன்றியிருக்கும் சுதந்திரம், விடுதலை, ஜனநாயம், திறந்த பொருளாதாரக்கொள்கை போன்ற கொள்கைகளை நாம் காணலாம்.

சோஷலிசம், கம்யூனிசம் என்பனவும் அரசியல் அகீதாவாகவே விளங்குகிறது. ஏனெனில் இக்கொள்கைகளிலிருந்து உருவாகும் சிந்தனையும், விதிகளும் உலகியல் விவகாரங்களுடன் மாத்திரமே சம்பந்தப்படுகிறது. உதாரணமாக தனியுரிமையை கட்டுப்படுத்தல் அல்லது அதை முற்றாக கட்டுப்படுத்தல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், அரசற்ற வாழ்வியலை ஏற்படுத்தல் போன்றவற்றை நாம் நோக்கலாம். எனினும் இஸ்லாமிய அகீதா மாத்திரமே ஒரே சமயத்தில் ஆன்மீக அகீதாவாகவும் அரசியல் அகீதாவாகவும் விளங்குகின்றது. ஏனெனில் இஸ்லாம் எடுத்தியம்பும் சிந்தனைகளும், விதிகளும் மறுமை பற்றியும் இவ்வுலக வாழ்க்கை பற்றியும் தெளிவுபடுத்துகின்றது.


3) ஆன்மீகத்தை மாத்திரம் கொண்டுள்ள அகீதா இவ்வுலக விவகாரங்கள் தொடர்பான எத்தகைய எண்ணக்கருக்களையும் தோற்றுவிப்பதில்லை. ஏனெனில் அது இந்த வாழ்வுக்கு முன்னிருந்த விடயங்கள் பற்றியும், இந்த வாழ்வுக்கு பிறகு வரவிருக்கும் விடயங்கள் பற்றியுமே பேசுகிறது. அது இந்த உலகியல் விடயங்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாது இருப்பதால் எத்தகைய அரசியல் அகீதாவையும் (கொள்கையையும்) ஆன்மீக அகீதாவை மாத்திரம் கொண்ட சமுதாயத்தின் மீது பிரயோகிக்க முடிகிறது. எனினும் அரசியலை மாத்திரம் விளக்கும் அகீதாவை பொருத்த வரையில் அது இவ்வுலக வாழ்க்கை தொடர்பான நோக்கையும், அதிலிருந்து உருவாகியுள்ள எண்ணக்கருக்களையும் கொண்டுள்ளது. அது இவ்வுலக வாழ்க்கையின் அனைத்து விவகாரங்கள் தொடர்பான எண்ணக்கருக்களையும் விதிகளையும் உருவாக்குகிறது. எனவே மனிதனுடைய வாழ்க்கையை அதனது விதி முறைகளுக்கு ஏற்ப வடிவமைகிறது. அது தனது அகீதாவிலிருந்து எழுகின்ற சிந்தனையை அடிப்படையாக் கொண்டு இந்த வரையரைகளை ஏற்படுத்துகிறது. எனவே இந்த அரசியல் அகீதாவினை வேறொரு அரசியல் அகீதாவினை கொண்டிருக்கும் சமூகத்தில் அமுல்படுத்துவது முற்றிலும் சிரமமான காரியமாகும்.


அவ்வாறு அமுல்படுத்த வேண்டுமானால் அந்த சமூகம் பின்பற்றும் அகீதாவிலிருக்கும் குறைபாடுகளை சுட்டிகாட்டி இந்த அகீதாவிலுள்ள நிறைகளை விளங்கப்படுத்தி அதனை அந்த சமூகம் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்வதன் மூலமோ, அல்லது பாரிய பலப்பிரயோகத்தினு}டாகவோதான் சாதிக்க முடியும். இதனாலேயே மேற்குலகிற்கு எளிதாக கொங்கோவினை காலனித்துவம் செய்ய முடிந்த போதிலும் அல்ஜீரியாவினை பலப்பிரயோகத்தை பிரயோகித்தும் கூட காலனித்துவம் செய்து தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாமல் போனது.


4) முதலாளித்துவத்தை எடுத்துக் கொண்டால் அது இவ்வுலக வாழ்க்கை தொடர்பான ஒரு முழுமையான பார்வையை கொண்டுள்ளது. அத்துடன் அதனது முக்கிய இலக்காக இவ்வுலகில் மனிதன் அதியுச்ச இன்பமடைவதையும், அதனை அடைவதற்கான அடிப்படை அடிச்சுவடாக சுதந்திரம் என்ற தனது எண்;ணக்கருவையும் கொண்டுள்ளது. அதாவது கொள்கைத்தேர்விற்கான சுதந்திரம், பொருளுடமைக்கான சுதந்திரம், தனிமனித சுதந்திரம், கருத்து சுதந்திரம் என பல்வேறு சுதந்திரங்களை மனிதனுக்கு பெற்றுத்தர வேண்டும் என இக்கொள்கை கருதுகிறது. அதே போன்று ஷோசலிசம் சமூகத்தின் பரிணாம மாற்றத்தினை சமூக முன்னேற்றத்தின் அடிப்படை அம்சமாக நோக்குகிறது. அதாவது ஒரு குறித்த காலகட்டத்தில் நிலவும் சமூக முரண்பாடுகள் வளர்ச்சி கண்டு அந்த முரண்பாட்டிற்கான தீர்வாக புதியதொரு சமூக நிலை தோற்றுவிக்கப்படுகின்றது. இவ்வாறு மனித வாழ்வை முரண்பாடுகளுக்கிடையிலான பரிணாம வளர்ச்சியாக ஷோசலிசம் நோக்குகிறது. எனவே சமூகத்தில் பரிணாம வளர்ச்சி ஏற்படுவதற்கு நடைமுறையில் நிலவும் முரண்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுவதை வரவேற்க வேண்டும். தற்சமயம் முரண்பாடுகள் காணப்படாதிருந்தால் சமூகத்தில் பரிணாம வளர்ச்சி ஏற்படுவதற்காக முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் ஷோசலிசம் கருதுகிறது.


அதேவேளை இஸ்லாமும் இவ்வாழ்க்கை தொடர்பான முழுமையான பார்வையைக்கொண்டுள்ளதுடன், ஹலாலையும், ஹராமையும் மக்களது செயற்பாடுகளின் அளவுகோள்களாக நியமித்துள்ளது. மனிதன் ஷரிஆவிற்கு முழுமையாகக் கட்டுப்பட்டு வாழ்வது இந்த அளவுகோள்களை நடைமுறைப்படுத்தும் வழிமுறையாக இஸ்லாம் வகுத்துள்ளது. எனவே எவையெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளதோ அதிலிருந்து முற்றாக விலகியும், எவையெல்லாம் செய்யும் படி ஏவப்பட்டுள்ளதோ அதனை அமுல் செய்யும் படியும் இஸ்லாம் பணிக்கிறது.


5) மேற்குலகு முஸ்லிம் பூமிகளில் கலாச்சார hPதியான ஆக்கிரமிப்பினை முன்னேடுத்த போது இவ்வாழ்க்கை தொடர்பாக இஸ்லாம் கொண்டுள்ள பார்வையை விமர்சிப்பதை அவர்கள் இலக்கு வைத்தார்கள். அவர்கள் கழா கத்ர் தொடர்பில் கேள்வி எழுப்பினார்கள். நபித்துவத்தின் மீதும், ஸஹாபாக்கள் மீதும் கேள்வி எழுப்பினார்கள். தற்கால நடைமுறையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதில் ஷரிஆவிற்கு ஆளுமை உள்ளதா என்பதில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள்.இதன் அடிப்படையில் ஜிஹாத் தொடர்பான சட்டங்களை சுட்டிக்காட்டி இஸ்லாம் வன்முறையின் அடிப்படையில் அமைந்தது என இனங்காட்டி அது இந்த நாகாPகமடைந்த உலகிற்கு பொருத்தமானது அல்ல என நிரூபிக்க முற்பட்டனர். பலதாரமணம், விவாகரத்து தொடர்பாகவும் பல சந்தேகமான கேள்விகளை எழுப்பினார்கள். ஷரிஆவினை அதே வடிவில் எல்லாக்காலங்களிலும் அமுல்படுத்த முடியாது என்பது தொடர்பான பலகீனமான கருத்துக்களை சில இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைக் கொண்டே தோற்றுவித்தார்கள். பொதுநலன்(அல் மஸாலிஹ் அல் முர்ஸலா), நலனடைதல் (ரியாஅத் அல் மஸ்லஹா), வழக்காறுகளை அமுல் செய்தல் (தஹ்கீம் அல் உர்ஃப்), காலத்துக்கேட்ப விதிகளை மாற்றுதல் போன்ற இமாம்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகளுடன் காணப்படும் உசூல்களை, உறுதியான ஷாPஆ ஆதாரங்களுக்கு பதிலாக பயன்படுத்தி முஸ்லிம்கள் தமது செயல்களுக்கான அளவு கோலாக ஷரிஆவினை முழுமையாக பயன்படுத்துவதற்கு பதிலாக இலாபநோக்கை பயன்படுத்துவதற்கு து}ண்டினார்கள். இதன் விளைவாக முஸ்லிம்கள் தமது அளவுகோலாக ஹலால், ஹராம் கொள்வதை தவிர்த்து படிப்படியாக வேறு அளவுகோள்களை உள்வாங்க ஆரம்பித்தனர். சில அறிஞர்கள் எங்கெல்லாம் பலன் தெரிகிறதோ, அல்லாஹ்வின் சட்டமும் அதிலிருக்கிறது என்ற கொள்கைகளை முன்வைக்கத் தொடங்கினார்கள்.


மேற்குலகு இஸ்லாமிய பூமியை தமது நாசகார வேலைகளைக் கொண்டு ஆக்கிரமித்த வேளையில் அவர்கள் தமது அகீதாவை அங்கு அமுல்படுத்த முயற்சித்தனர். அதாவது மதத்தையும், வாழ்க்கையையும் வௌ;வேறாக பிரிக்கின்ற தமது அகீதாவினை முஸ்லிம் உலகில் நிறுவி, வாழ்வை ஹராம், ஹலால் அடிப்படையில் நோக்குவதற்கு பதிலாக இலாப நோக்கை அடிப்படையாக் கொண்டு நோக்கும் போக்கை அறிமுகப்படுத்தினார்கள்.
இதன் விளைவாக இலாபநோக்கை பல முஸ்லிம்கள் தமது வாழ்வின் அடிப்படையாக எடுத்துக்கொண்டனர். இதன் விளைவாக முஸ்லிம்களிடையே ஒருசில விடயங்களில் மாத்திரமே ஹராம், ஹலால் என்ற அளவுகோள் பயன்படுத்தப்பட்டது.


6) 1954ம் ஆண்டுகளில் இஸ்லாமிய உலகில் புதியதொரு வாழ்வியல் முறையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ச்சியடைந்தது. இந்த சிந்தனை தேசியவாதத்தையும், சோஷலிசத்தையும் பற்றி முஸ்லிம்கள் சிந்திப்பதற்கு வழிவகுத்தது. முதலாளித்துவத்தின் இலாபநோக்கையும், சோஷலிசத்தின் பரிணாம கோட்பாடு, சரித்திர வளர்ச்சியும் முன்னேற்றமும் போன்ற எண்ணக்கருக்களை பரிசீலிக்க முஸ்லிம் உலகு தயாரானது. உண்மையில் முதலாளித்துவத்தையும், சோஷலிசத்தையும் ஒன்றாக கலந்த ஒரு கலவை பற்றி சிந்திக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு பிரபலமான சிந்தனையாக மட்டும் இருந்ததேயொழிய இதனை யாரும் அமுல்படுத்தவில்லை. எனினும் காலப்போக்கில் உருவான புதிய சூழலில் முதலாளித்துவத்தின் பயன் என்ற எண்ணக்கரு இந்த இடத்தை நிரப்பியது. மேற்குலகின் திட்டமிட்ட முயற்சியினாலும், பரிதொரு வழிமுறையைக்கொண்டு முற்றுமுழுதாக சமூதத்தை மாற்றவேண்டும் என்ற சிந்தனை இஸ்லாமிய உலகில் மேலோங்கியிருந்ததாலும், மேற்குலகின் முன்னேற்றத்துடன் இணைந்து தாமும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் வலுப்பபெற்றிருந்ததாலும் இஸ்லாமிய உலகு வேறொரு வாழ்வியல் முறைக்குள் தள்ளப்பட்டது. இவ்வாறாக, இந்நிலை தொடர்ந்து 1964ம் ஆண்டுகளில் பெரும்பாலான புத்திஜீவிகளும், தலைவர்களும் முதலாளித்துவச்சிந்தனையை அமுல்படுத்த முன்வந்ததுடன், பொதுமக்களும் வழமைக்கு மாறாக இதனால் பாதிப்படைந்தனர்.


7) இதே வேளை இஸ்லாமிய அகீதாவோ வெறுமனே தனிமனிதனால் காவிச் செல்லப்படுகின்ற ஆன்மீக அகீதாவாக மாத்திரம் இருந்து வந்ததுடன் அது வாழ்வியல் ஒழுங்கில் தலையிடும் சக்தியை இழந்திருந்தது. எனவே வாழ்க்கை தொடர்பாகவும், வாழ்வின் வடிவமைப்பு தொடர்பாகவும் விளக்குகின்ற இஸ்லாமிய அகீதாவின் அரசியல் பரிமாணம் முஸ்லிம் உலகில் நடைமுறைப்படுத்தப்படாது செயலிழந்து போனதால் வாழ்வியல் விவகாரங்களுக்கான முஸ்லிம்களின் அளவுகோளாக ஹராம், ஹலால் கொள்ளப்படாது, இலாப நோக்கே முஸ்லிம்களின் வாழ்வின் இலட்சியமாக மாறியது.


8) எனவே முஸ்லிம்களின் உள்ளத்திலே, குறிப்பாக இஸ்லாமிய உலகிலே ஏற்பட்டுள்ள இந்நோயினை குணப்படுத்துவதற்கு இஸ்லாமிய அகீதாவின் அரசியல் பரிமாணத்தை காத்திரமான முறையில் முஸ்லிம்களுக்கு விளக்குவதுடன் அதனது ஆன்மீக பகுதியினை அதனுடன் இணைக்க வேண்டும். இதனை மேற்கொள்வதற்கு இஸ்லாமிய அகீதாவினை இந்த லௌகீக வாழ்க்கையுடன் இணைந்து சிந்திப்பதற்கு மக்களை து}ண்டவேண்டும். மேலும் அல்லாஹ்வின் மீதான ஈமானுடனும், குர்ஆனை ஏற்றுக்கொள்வதுடனும் முஹம்மது(ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்வதுடனும், அவரது வழிமுறைகளை பின்பற்றுவதுடனும், அவர் கொண்டு வந்த ஷரிஆவின்படி முஸ்லிம்கள் வாழ்வதுடனும் இதனை நாம் சம்பந்தப்படுத்தி தெளிவு படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது முஸ்லிம்கள் தமது வாழ்வுக்கான அளவுகோள் என்ன என்பதை இனம்கண்டு கொள்ள உதவும். ஓரு முஸ்லிமின் வாழ்வின் அளவுகோள் தற்போது நடைமுறையிலுள்ள இலாபநோக்கோ, பரிணாம கோட்பாடோ அல்ல, மாறாக அல்லாஹ்வால் தீர்மானிக்கப்பட்ட ஹராம், ஹலால் மாத்திரம்தான் அவர்களின் அளவுகோளாகும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.


உண்மையில் அகீதா என்பது மிக துல்லியமான, மிக உறுதியான நம்பிக்கையாகும் (அல் தஸ்தீகுள் ஜாஸீம்) உறுதிபாடு இல்லாவிடின் அது அகீதாக கொள்ளப்படாது. எனவே தயக்கமற்ற, மயக்கமற்ற இந்த நம்பிக்கைக்கான அடிப்படைகளை உறுதி செய்வதில் சிறிதளவேனும் மயக்கமுள்ள தரவுகளை, ஆதாரங்களை அடிப்படையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவற்றைக்கொண்டு அகீதாவை வரையறுக்கவும் முடியாது. இந்த விடயத்தை பொருத்தவரை மாற்று தீர்வுக்கள் எதுவுமில்லை. உதாரணமாக, சில அறிவிப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதிலே சிறிதளவில் மயக்கம் காணப்பட்டாலும் அது அகீதாவின் பகுதியாக கொள்ளப்படுவதில்லை. இஸ்லாத்தில் குறித்த ஒரு விடயம் அனுமதிக்கப்பட்டது என கூறப்பட்டால் உடனே அது அகீதாவாகக் கொள்ளப்படாது. மாறாக அது ஒரு சாதாரண நம்பிக்கையாகவே கொள்ளப்படும். உறுதியாக நம்பிக்கை கொள்வது எனும்போது அது குர்ஆனை நாம் நம்பிக்கை கொள்வதற்கு ஒத்தது. குர்ஆன் உறுதியாக நம்புவது என்பது அது அல்லாஹ்வின் வேதமாகும் என உறுதியாக நம்புவதாகும். ஆகவே அது மாத்திரம்தான் ஏற்றுக்கொள்ளத்தக்கது ஏனெனில் அது அல்லாஹ்வின் வேதமாகும். இந்த விடயத்தை பொருத்தவரையில் குர்ஆன் ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஏனையவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என கூறினால் அது உறுதியான நம்பிக்கையாக கொள்ளப்படாது. மாறாக அது சாதாரண நம்பிக்கையாகவே கொள்ளப்படும். அதேபோல ஹதீஸ்களை உறுதியாக நம்பிக்கை கொள்ளுவது என்பது, (தரமான அறிவிப்புக்களையுடைய ஹதீஸ்களாக அவை இருந்தால்) ரஸ}ல் (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் (சொல், செயல், அங்கீகாரம்) மாத்திரமே ஏற்றுக்கொள்ளக்கூடியது என நம்புவதாகும். ஏனெனில் அவையும் அல்லாஹ்வின் து}தாகும்.


மாறாக ஹதீஸ்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை, ஏனையவை ஏற்றுக்கொள்ளத்தக்கவையல்ல எனக்கூறினால் அது உறுதியான நம்பிக்கையாக கருத முடியாது. சாதாரண நம்பிக்கையாகவே கொள்ளப்படும். எனவே அகீதா என்பது உறுதிப்பாடுடன் தொடர்ப்புபட்டது. உறுதிப்பாடு குறைவாக இருந்தால் அது உறுதியான நம்பிக்கையாக கொள்ளப்படாது.
ஷரிஆவினை அகீதாவுடன் தொடர்புபடுத்தும்போது, ஓருவர் ஷரிஆ இலாபநோக்கு கருதியே வந்துள்ளது எனக்கருதுவாரானால் அவர் இலாபநோக்கு என்ற அடிப்படையைக்கொண்டு ஷரிஆவினை நோக்க முற்படுவதால் அவரது கருத்து இலாபநோக்கு என்ற எண்ணக்கருவினால் பாதிப்படைந்துள்ளது. எனவே ஷரிஆவினை அகீதாவுடன் அவர் தொடர்புபடுத்தும் விதத்தில் தவறு ஏற்பட்டு விடுகின்றது.

ஷரிஆவின் சட்டங்களானது, ஷரிஆவின் ஆதாரங்களைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது என்ற கருத்தை முன்வைப்பதன் மூலம் இந்தத்தவறான கருத்திலிருந்து அத்தகையோரை பாதுகாக்கலாம். அதாவது ஷரிஆவிற்கு ஆதாரம் அல்லாஹ்விடமிருந்து வஹியாக வந்தவையே ஒழிய இலாபநோக்கு அல்ல.
உதாரணமாக இந்தக்காலத்திற்கு ஷரிஆ சட்டங்கள் பொருத்தமானவையாக தெரியவில்லை, இன்றைய வளர்ச்சிபெற்ற உலகிற்கு இலாபநோக்கை அடிப்படையாக்கொண்ட விதிகள், அல்லது நடைமுறையிலுள்ள சட்டங்களே பொருத்தமானது என ஒரு முஸ்லிம் நம்புவாரானால் அவரது அகீதாவில் தவறிருப்பதுடன் அவரது பார்வையிலும் கோளாறு இருக்கின்றது.

அல்லாஹ்வையும், ரஸ}லையும் நம்பிக்கை கொள்ளும் விடயத்துடன் அவரது சிந்தனை முரண்படுகிறது என்பதை தெளிவுபடுத்துவதைக்கொண்டு அவரை நேர்வழிப்படுத்த வேண்டும். அல்லாஹ்வின் வேதம் எல்லாக்காலங்களுக்கும் பொருத்தமானது என அல்லாஹ்வின் வஹியில் அறிவிக்கப்பட்டுள்ளமையை அவருக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதனை அவர் ஏற்றுக்கொண்டால் இலாபநோக்கு என்ற சிந்தனையுடன் ஷரிஆவை இணைப்பதிலுள்ள தவறினை உணர்த்த நாம் முற்பட முடியும். அதாவது அல்லாஹ் கூறியுள்ள ஹராம், ஹலாலைக்கொண்டு மக்களின் வாழ்வை ஒழுங்குபடுத்துவதிலும், இலாபநோக்கு என்ற எண்ணக்கருவை கொண்டு வாழ்வை ஒழுங்குபடுத்துவதிலும் முரண்பாடு எதுவுமில்லை என அவர் கூறினால், அதற்கு விடையாக ஹராம், ஹலால் என்ற அளவுகோளுக்கு ஷரிஆ ஆதாரங்களே அடிப்படையாக உள்ளன, மாறாக பயன் அல்ல என்ற விடயத்தை விளக்குவதன் மூலம் அந்தச்சிந்தனையை நாம் திருத்த முடியும்.

ஜிஹாத் - மேற்குலகின் பிரச்சாரமும், உண்மை நிலையும்


கடந்த பல தசாப்தங்களாக மேற்குலகைப் பொருத்தவரையில் ஜிஹாத் என்பது ஒரு வாதப்பொருளாக இருந்து வருகிறது. இஸ்லாத்தின் உண்மையான சக்தியினை வெளிப்படுத்தி நிற்கிறது என்பதை உணர்ந்ததாலேயே, மேற்குலகு, ஜிஹாத் என்ற சொல்லிற்கு அஞ்சுகிறது. எனவே அதனது உண்மை அர்த்தத்தினை திரிக்க அவர்கள் முயற்சிப்பது ஒன்றும் முஸ்லிம்களுக்கு புதிதானது அல்ல.

முஸ்லிம் உம்மத்திற்கு எதிராக சிலுவைப்போர் மேற்கொள்ளப்படும் போதெல்லாம், ஜிஹாதினுடைய உண்மையான அர்த்தம் திரிக்கப்படுகிறது என்பதனை நாம் வரலாறு நெடுகிலும் காண்கின்றோம். ஆனால்; அதன் வடிவங்கள் வேறுபடக்கூடும். உதாரணமாக, டோனி பிளயெரின் கூற்றில் 'இஸ்லாம் ஒரு சமாதானத்திற்கான மார்க்கம்" என்பதாகவும், மேற்குலகை ஆதரிக்கும் இஸ்லாமியவாதிகளின் அர்த்தத்தில், "ஒருவர் தமது மனோ இச்சைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு விஷயம்" என்பதாகவும் இருக்கலாம்.

இவ்வாறான அர்த்தங்களை திரிக்கும் முயற்சிகள் ஒருபுறமிருக்க, மேற்குலகானது, ஜிஹாதினை ஒரு 'பயங்கரமான விஷயமாக" சித்தரிக்கின்ற உபாயங்களையும் தனது வழிமுறையாக கையாண்டு வருகிறது. உதாரணமாக, ஜிஹாத் தொடர்பாக உரை நிகழ்த்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு இங்கிலாத்திலுள்ள பின்ஸ்பெரி பார்க் பள்ளிவாசல் இழுத்து மூடப்பட்டதை நாம் ஊடகங்களினு}டாக அறிந்திருப்போம். பள்ளிவாசல்களை மூடப்படுவதைப்போன்ற இத்தகைய செயற்பாடுகள், ஜிஹாத் தொடர்பான இஸ்லாத்தின் கருத்துக்கள் பள்ளிவாசல்களில் பேசப்படுவதை பெரும்பாலும் தடுத்து விடுகின்றன. உம்மத்திற்கெதிராக அதிகளவில் அடக்குமுறைகள் இடம்பெறுகின்ற இன்றைய சூழலில் ஏன் நீங்கள் ஜிஹாத் தொடர்பாக பேச மறுக்கின்றீர்கள் என பொதுமக்கள் பள்ளிவாசல் நிர்வாகங்களை வினவும்போது, அவர்கள், 'பள்ளிவாசல்கள் இழுத்து மூடப்படுவதை நாங்கள் விரும்பவில்லை", என தெரிவிக்கின்றனர். இவ்வாறான எத்தகைய வழிமுறைகளையும் கடைப்பிடித்து, ஜிஹாதினுடைய உண்மையான அர்த்தத்தினை திரிபுபடுத்த முயற்சிப்பதில் அவர்கள் கண்ணும்கருத்துமாக இருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் நாம் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். ஏனெனில் யுத்தம் என்பது எமது வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். பாரம்பரியமாகவே, தமது இலக்கினை அடைந்து கொள்வதற்காக, மேற்குலகு, தமது பலத்தினை உபயோகப்படுத்த என்றும் தயங்கியதில்லை. அமெரிக்க கூட்டுப்படையின் ஈராக்கிய யுத்தம் இதற்கொரு சிறந்த உதாரணமாகும். ஆனால், 'இஸ்லாம் பலப்பிரயோத்திற்கு எதிரானது" என முஸ்லிம்களையே கூறவைக்கும் நயவஞ்சக முயற்சிகளை மேற்கொள்வதிலும் அவர்கள் வல்;;லவர்கள். இத்தகைய யுக்திகளை பயன்படுத்துவதன் மூலமாக முஸ்லிம்களின் மனோநிலையை பலவீனப்படுத்தி தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எளிதுபடுத்துவதில் அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு வெற்றிகண்டுள்ளார்கள்.

யுத்தம் ஏன் தவிர்க்கப்பட முடியாதது?

தனது இறையாண்மையை பாதுகாக்கும் தற்காப்பு உணர்வு உலகின் அனைத்து நாடுகட்கும் அதன் மக்கட்கும் உண்டு. அதனை பாதுகாப்பதற்காக அந்த தேசம் எந்த விலையினையும் கொடுக்கத் தயாராகி விடுகிறது. அதேபோன்று ஒவ்வொரு தேசத்திற்கும் அடிப்படையான இலக்குகளும் காணப்படுகின்றன. மகிழ்ச்சியின் உச்ச நிலையை அடைவதே மேற்கத்தியத்தின் அடிப்படை நோக்கமாகும். எனினும் இஸ்லாத்தினை பொருத்தமட்டில் அல்லாஹ் (சுபு) வின் திருப்தியை பெற்றுக்கொள்வதே அதனது ஏக இலக்காகும். எனவே இவற்றில் எந்த தேசத்தினை எடுத்துக்கொண்டாலும் அது தனது சித்தாந்தத்தை மேலோங்கச்செய்து தனது இலக்கினை அடைவதற்கு பலம் அவசியமாகும். இதற்காக உள்நாட்டிற்குள் காவல்துறையும் புலனாய்வுத்துறையும் செயற்படுத்தப்படுவதுடன் வெளிநாட்டுறவில் இராணுவமும் புலனாய்வுத்துறையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுவாக எந்தவொரு தேசத்தை பொருத்தவரையிலும் அதனது வரவுசெலவுத்திட்டத்தில் பெரும் ஒதுக்கீட்டை பெறுவது பாதுகாப்புத்துறையேயாகும். எனவே எவராவது ஒருவர் பலப்பிரயோகம் தேவையற்றது எனக்கூறுவாரேயானால் அவர் யதார்த்தத்தை மறுக்கிறார் என்பதே உண்மையாகும். பலம் இல்லாத நிலையில் குழப்ப நிலை தொடர்வது தவிர்க்க முடியாதது. இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொண்டால் எமது வாதம் யுத்தத்தை மறுப்பதாக அல்லாமல் அது எதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்பதை நோக்குவதாக இருக்கும்.

சோசலிஷவாதிகள், மனிதாபிமானவாதிகள் போன்றோர்களுடன் யுத்தம் தொடர்பாக உரையாடும்போது, 'யுத்தம் தவறானது" என்ற வாதத்தின் வாயிலாக இஸ்லாத்தினை யுத்தத்திற்கு எதிரான ஒன்றாக இனம்காட்டும் முயற்சியின்போதும், 'யுத்தம் குறித்து இஸ்லாத்தில் எவ்வித கொள்கையும் இல்லை' என்பதை நிறுவ முயற்சிக்கும் விஷயத்திலும் முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டும்.

விசுவாசம் கொண்டோரே! நிராகரிப்போரிலிருந்து உங்களை அடுத்து இருப்போருடன் போர் செய்யுங்கள்; அவர்கள் உங்களிடம் கடுமையையே காண வேண்டும்: இன்னும், நிச்சயமாக அல்லாஹ், பயபக்தியுடையோருடன் இருக்கின்றான். (அத்தவ்பா:123)

முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என இறை நிராகரிப்பாளர்கள் கூறும் வரையில் போர் புரியுமாறு நான் ஏவப்பட்டுள்ளேன்.

இதேபோன்று, அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச்செய்வதற்கான முயற்சியில் ஏற்படும் தடைகளை அகற்றும் பொருட்டு காபிர்களுடன் போராடுவதே ஜிஹாத் என்பதாக உலமாக்கள் ஏகோபித்த முடிவினைக் கொண்டுள்ளனர்...

இங்கு கவனிக்கத்தக்க முக்கிய இரு விஷயங்கள் இருக்கின்றன.
அதாவது.
செயல் குறித்தது: தடைகளை களைவதற்காக காபிர்களுடன் போராடுவது. நோக்கம் குறித்தது: அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வது.
அனைத்து சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் பொருத்தவரையிலும், அதனை மேலோங்கச்செய்வதிலும், பரப்புவதிலும், பாதுகாப்பதிலும் போராட்டங்களும் யுத்தங்களும் ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேற்குலகின் யுத்தத்திற்கான அடிப்படை உலக இலாபங்களை அடைந்து கொள்வதாகும். அதனை இவ்வாறு சொல்லலாம். ஆதாவது உலக இலாபங்களை அடைந்து கொள்ளும் முயற்சியில் ஏற்படும் தடைகளை அகற்றுவதற்காக போராடுதலாகும்.

இங்கும் கவனிக்கத்தக்க முக்கிய இரு விடயங்கள் இருக்கின்றன.
அதாவது

செயல் குறித்தது: தடைகளை களைவதற்காக எவருடனும் போராடுவது. நோக்கம் குறித்தது: உலக இலாபங்களை அடைந்து கொள்வது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்காக முதலாளித்துவ தேசமும் இஸ்லாமிய தேசமும் பலத்தையினை பிரயோகிப்பதை நம்மால் காணமுடிகிறது. எனினும் மிகத்தெளிவான வேறுபாடு அதனது நோக்கத்திலேயே இருக்கிறது. எனவே நோக்கத்தில் காணப்படும் இந்த அடிப்படை வேறுபாட்டினை புரிந்து கொண்டு காபிர்களின் வலையில் சிக்கிவிடுவதிலிருந்து முஸ்லிம்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

அதாவது ஜிஹாத்தினுடைய அர்த்தத்தினை தமது மனோ இச்சைகளுக்கு எதிரான போராட்டமாக மட்டும் இனம்காட்டுவதன் மூலம் அதனது உண்மை அர்த்தத்தினை மறைத்து முஸ்லிம்களை பாதுகாப்பற்ற ஒரு சூழலுக்குள் தள்ளுவதற்கான சகல முயற்சிகளையும் காபிர்கள் எடுப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜிஹாத் என்பது வெறுமனவே தமது மனோ இச்சைகளுக்கு எதிரான ஒரு போராட்டமா?

இந்த வினா இஸ்லாமிய ஷரியத்திலிருந்து விளங்கிக்கொள்ளப்படவேண்டும். ஜிஹாத் தொடர்பான மேற்குறித்த வாதமானது மிக அரிதான ஷரிஆ ஆதாரத்தின் அடிப்படையிலேயே விளங்கப்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில் ஜிஹாத்தினுடைய நேரடி மொழியியல் அர்த்தம் தொடர்பான விளக்கத்திலும்; அதனது ஷரிஆ hPதியான அர்த்தத்திற்குமிடையிலான வேறுபாட்டினையும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மொழியியல் ரிதியான ஜிஹாத் என்பதன் அர்த்தம் முயற்சித்தல் அல்லது போராடுதல் ஆகும்

எது பற்றி உனக்கு அறிவு (ஆதாரம்) இல்லையோ அதை எனக்கு நீ இணையாக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அவ்விஷயத்தில் நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம். ( லுக்மான்:15)
மேலும் அல்லாஹ்வுடைய வழியில் எவர் ஜிஹாத் செய்கிறாரோ அவர் ஜிஹாத் செய்வதெல்லாம் (அதன் பலனெல்லாம்) தனக்காகத்தான் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.
( அல் அன்கபூத்:6)
மேலும் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கிறோம். அன்றியும் எதைப்பற்றி உனக்கு அறிவு இல்லையோ அதை எனக்கு இணையாக்குமாறு (மனிதனே) அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விடயத்தில்) நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம். (அல் அன்கபூத்:8)
மேலும் விசுவாசம் கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் - அவர்களை நிச்சயமாக நாம் நல்லோர்களி(ன் கூட்டத்தாருடன் சுவனத்தி)ல் நுழைவிப்போம். (அல் அன்கபூத்:9)

மொழியியல் ரிதியாக ஜிஹாத்திற்கான அர்த்தம் வழங்கபடுவது மேற்குறிப்பிட்ட நான்கு ஆயத்களில் மாத்திரமேயாகும். இந்த ஆயத்துக்களும் மக்காவில் அருளப்பட்ட மக்கீ ஆயத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இந்த ஆயத்துக்களைப்பொருத்தமட்டில் அது உண்மையாகவே யுத்தத்தைக் குறிக்கவில்லை. எனவே இந்த ஆயத்துக்களுக்கு சண்டையிடுதல் அல்லது கொல்லுதல் என அர்த்தம் கற்பிப்பது தவறானதாகும். எனினும் சண்டையிடுவதையும் கொல்வதையுமே ஜிஹாத்திற்கான ஷரிஆ hPதியாக விளக்கமாகக் குறிக்கின்ற 120இற்கும் மேற்பட்ட ஆயத்துக்கள் குர்ஆனில் காணப்படுகின்றன.

விசுவாசிகளில் தங்கடம் உடையவர்களை தவிர (வீட்டில்) உட்கார்ந்து கொண்டவர்கள், (யுத்தத்திற்குச்சென்று) தங்களுடைய செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்வோருக்கு சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அறப்போர் புரிந்தோரை படித்தரத்தால் ( வீட்டில்) உட்கார்ந்து விட்டவர்களை விட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கிறான்.( அன்நிஸா:95)

இலேசாகவும் கவனமாகவும் ( இளைஞர்கள், முதியவர்கள், செல்வந்தர்கள், செல்வம் இல்லாதவர்கள், வாகனத்தில் ஏறியவர்கள், நடப்பவர்கள் ஆகியோர்) புறப்பட்டு, உங்களின் செல்வங்களாலும், உங்களின் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யுங்கள்: நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச்சிறந்ததாகும். ( அத்தவ்பா: 41)

(அத்தகைய வியாபாரமானது ) நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய (இத்) துதரையும் ஈமான் கொண்டு உங்களுடைய பொருட்களையும் உங்களுடைய உயிர்களையும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் (ஜிஹாத்) செய்யுங்கள். நீங்கள் அறியக்கூடியவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிகச்சிறந்ததாக இருக்கும். (அஸ்ஸவ்ப்:11)

இந்த ஆயத்துக்களை பொருத்தமட்டில் இவைகள் நேரடியான சண்டையிடுதலையே குறிப்படுகிறதேயொழிய இவற்றிற்கு நேரடி சொல் விளக்கத்தினை எடுப்பது தவறானதாகும்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து உலமாக்களும் ஜிஹாத்திற்கான ஷரிஆ அர்த்தமாக யுத்தம் புரிவதையே சரிகாண்கின்றனர்.

ஹனபி மத்ஹப் - பாதியா அஸ்ஸானியா மாலிக் மத்ஹப் - மன்ஹல் ஜலீல் ஷாபி - அல் இக்னா ஹன்பலி - அல் முஹ்னி சிலர் ஷரிஆ அர்த்தத்தை ( சண்டையிடுதல், கொல்லுதல்) பொருள் hPதியான அர்த்தத்தை(மனோஇச்சைகளுக்கு எதிரான போராட்டம்) விடவும் குறைவாக கணிக்கின்றனர். அதற்காக அவர்கள் கீழ்வரும் ஹதீஸினை முன்வைக்கின்றனர்.

நான் சிறிய ஜிஹாத்திலிருந்து பெரிய ஜிஹாதிற்கு திரும்பியுள்ளேன். இதற்கு ஸஹாபாக்கள் எது பெரிய ஜிஹாத் என நபிகளாரிடம் வினவியபோது அதற்கு அவர்கள் மனோ இச்சைகளுக்கெதிரான ஜிஹாத் என்றார்கள்.
மேற்கூறப்படும் ஹதீஸானது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதன்று. ஏனெனில் இது புனைந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹதீஸ் கலை நிபுணர் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் இப்ராஹீம் பீ அபி அப்லா என்வரின் கூற்று மட்டுமே என அறிவிக்கின்றார்கள்.

மேலும் கீழ்வரும் காரணங்களினால் இதனது கருத்தில் தவறு இருப்பது புலப்படுகிறது.

1. மேற்படி கூற்றானது ஜிஹாதின் மேன்மை குறித்த உறுதியான குர்ஆனின் கருத்திற்கு மாறுபாடானது.

விசுவாசிகளில் சங்கடம் உடையவர்களை தவிர (வீட்டில்) உட்கார்ந்து கொண்டவர்கள், (யுத்தத்திற்குச்சென்று) தங்களுடைய செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்வோருக்கு சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அறப்போர் புரிந்தோரை படித்தரத்தால் ( வீட்டில்) உட்கார்ந்து விட்டவர்களை விட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கிறான்.( அன்நிஸா:95)

2.மொழியியல் hPதியான பொருளானது பொதுவானதாகும். ஆதாவது அது 'நப்ஸ்" யிற்கு எதிராக போராடுவதையும் சண்டையிடுவதையும் உள்ளடக்கியுள்ளது. எனினும் அதனது ஷாPஆ hPதியான அர்த்தமானது காபிர்களுக்கு எதிரான போராட்டமேயாகும்.

3. மேற்படி ஹதீஸானது யுத்தம் செய்வதா, செய்யாது விடுவதா என்பது குறித்து தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கவில்;லை. இது யுத்தத்தினை தடை செய்வதற்கான எவ்வித அறிகுறியையும் தெரிவிப்பதாக இல்லை.

இதேநேரத்தில் சிலர் ஜிஹாதினை தற்பாதுகாப்பிற்கான ஒரு விடயமாக மாத்;திரம் இனம்காட்ட முயற்சிக்கின்றனர். இது மிகமிகத் தவறானதாகும். நபி (ஸல்) அவர்களின் வாழ்வை மேலோட்டமாக பார்த்தால் கூட இது தவறான கருத்து என புரிந்து கொள்ளலாம்.

முஅத்ஆ யுத்தமானது ரோமாபுரிக்கெதிராக முஸ்லிம்களாலேயே தொடுக்கப்பட்டது. இந்த யுத்தத்தில் 200,000 விரர்கள் கொண்ட ரோம இராணுவத்தினை 3000 முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். அதேபோன்று மக்காவெற்றியானது ஹ{னைன் யுத்ததினை தவிர்க்கமுடியாததாக மாற்றியமைத்ததையும் நாம் அறிவோம். தபூக் யுத்தமும் கூட முஸ்லிம்களாலேயே தொடுக்கப்பட்டு அது ரோமர்களை முற்றுமுழுதாக அழித்தொழிப்பதற்கு ஏதுவாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஸஹாபாக்களின் இஜ்மா ( ஏகோபித்த முடிவு) விலும் அவர்கள் ஜிஹாத்தினை ஷாம், ஈராக், ஈரான், எகிப்து, வட ஆபிரிக்கா போன்ற பிரதேசங்களில் ஆரம்பித்திருப்பதை நாம் காணலாம். மேலும் ஷஹீத்களின் அந்தஸ்த்தானது இஸ்லாத்தில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே எவ்வாறு ஜிஹாத்தானது ஏனைய விடயங்களை விட குறைவாக மதிப்பிடப்படலாம்?

இஸ்லாத்தை நோக்கிய முறையான அழைப்பிற்கு பின்பு காபிர்களை இஸ்லாத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்துவதை இஸ்லாம் தடைசெய்கிறது. மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதில் நிர்ப்பந்தம் இல்லை என்ற குர்ஆனியக்கருத்தும் இதனையே வலியுறுத்துகிறது. எனினும் உலகில் அனைவரையும் இஸ்லாத்தின் ஆளுகைக்குள் கொண்டுவருவதற்காகவே இந்த தீன் இறக்கப்பட்டுள்ளது. இதனை அடைந்து கொள்வதற்கான கருவியே ஜிஹாதாகும். ஜிஹாத் இல்லாமல் அல்லாஹ் கூறுவதைப்போன்று இஸ்லாம் மறைந்து விடும்.

அவன் எத்தகையோன் என்றால் அவன் தன்னுடைய து}தரை நேர்வழியைக்கொண்டும் உண்மையான மார்க்கத்தைக்கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்துக்கொண்டிருப்போர் வெறுத்தபோதிலும் மற்ற எல்லா மார்க்கங்களைவிட அதை மேலோங்கச்செய்யவே (தன் துதரை அனுப்பிவைத்தான்.)
( அஸ் ஸவ்ப்:9)

முஸ்லிம்கள் காபிர்களிடமிருந்தும் தம்முள் காணப்படும் காபிர்களின் முகவர்களிடமிருந்தும் இஸ்லாத்தினை பாதுகாக்க உறுதி கொள்ளவேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்

எவர் அல்லாஹ்வின்பால் (மனிதர்களை) அழைத்து(த் தாமும்) நற்கருமங்களையும் செய்து, நிச்சயமாக நான் (அல்லாஹ்விற்கு முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லிம்களில் உள்ளேன் என்றும் கூறுகின்றாரோ அவரைவிட சொல்லால் மிக்க அழகானவர் யார்? (புஸ்ஸிலத்:33)

முதலாளித்துவம்


முதலாளித்துவம் என்பது மேற்கத்திய நாடுகள் கடைபிடித்துவரும் ஒரு வாழ்க்கை வழிமுறையாகும். அவ்வழிமுறை தீனையும், துனியாவையும் வௌ;வேறாக பிரிக்கின்ற ஒரு வாழ்க்கைத்திட்டமாகும். இதன் அடிப்படையில் மனிதனே மனிதனின் வாழ்க்கை வழிமுறையினை அமைக்கின்றான். இது இஸ்லாத்திற்கு மாறான குஃப்ர் முறையாகும். இஸ்லாத்தில் மனிதனுக்கு வாழ்க்கைக்கான சட்டமியற்றும் உரிமை இல்லை. அல்லாஹ்(சுபு)வே அனைத்திற்கும் மூலமானவன். அவனே மனிதனின் இவ்வுலக வாழ்க்கைக்கான சட்டமனைத்தையும் இயற்றியவன். தனிமனிதன் சமூகம் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றிற்கான சட்டமனைத்தையும் இயற்றியவன் அவனே.

சுதந்திரம்! உரிமை!

முதலாளித்துவக்கொள்கையில் ஒரு குறிப்பிடப்படும்படியான அம்சம் மனிதஉரிமை மற்றும் அதனை பாதுகாத்தல் ஆகும். அவ்வுரிமைகளாவன, வழிபாட்டு உரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை மற்றும் தனிமனித உரிமைகளாகும். சொத்துரிமையானது இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவக் கொள்கையின் வழித்தோன்றலேயாகும். இதன் மூலம் தனியுடமைக்கம்பெனிகள் தோன்றி மக்களை காலனிகளாக்கி அவர்களின் வளங்களை அபகரிக்கத் து}ண்டுகின்றன.

மேற்கண்ட உரிமைகள் இஸ்லாத்திற்கு முற்றிலும் மாறுபட்டவையாகும். ஒரு முஸ்லிமிற்கு அல்லாஹ்வை தவிர வேறொரு கடவுளை வணங்க அனுமதியில்லை.

ஒருவர் இஸ்லாத்தை ஏற்று பின்னர் தனது தீனை மாற்றிக்கொண்டால் அவர் பின்னர் இஸ்லாத்திற்கு திரும்புமாறு அழைக்கப்படுவார். அவர் அதனை ஏற்காவிடில் அவருக்கு மரணதண்டனை வழங்கப்படும்.

நபிகள் நாயகம்(ஸல்) குறிப்பிடுகிறார்கள் :

“தீனினின்றும் மாறியவர் கொல்லப்படவேண்டியவர்"

இஸ்லாத்தின் கருத்துக்களைத்தவிர வேறு எந்தக்கருத்துக்களையு; ஏற்றுக்கொள்ள ஒரு முஸ்லிமிற்கு அனுமதியில்லை. சொத்துரிமை என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைவதேயாகும். முதலாளித்துவக் கொள்கையான “முடிந்தால் எந்தவகையான சொத்துக்களையும் எப்படிவேண்டுமானாலும் அடையலாம்" என்பது இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாத்தில் தனி மனிதனுக்கு தடுக்கப்பட்டவையான சொத்துக்களை அடைய முடியாது. வட்டி கொடுத்தல் வாங்குதல் மூலம் சம்பாதிப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபானம், விற்றல், பன்றி இறைச்சி மூலம் சம்பாதித்தல் போன்றவை தடுக்கப்பட்டுள்ளன. எனவே எவ்வௌ;வழிகளில் சொத்துக்களை சம்பாதிக்க முடியும் என்பதை இஸ்லாம் வரையறைசெய்துள்ளது.

தனிமனித சுதந்திரம் என்பது. இஸ்லாத்தில் இல்லை. எந்த மனிதனும் இஸ்லாமிய சட்டதிட்டங்கட்கு உட்பட்டே நடக்கவேண்டும். ‘ஃபர்த்’ ஆன விசயங்களை செய்யாவிடினும் தண்டனையே! ஹராமான விசயங்களை செய்தாலும் தண்டனையே! உதாரணமாக தொழுகையை நிறைவேற்றாத ஒரு முஸ்லிம் தண்டிக்கப்படவேண்டியவர். மது அருந்துபவர், விபச்சாரம் செய்தவர் தண்டிக்கப்படிவேண்டியவர். எனவே சுதந்திரம் என முதலாளித்துவக்கொள்கையில் வரையறுக்கப்பட்ட எவையும் சுதந்திரம் அல்ல. மேலும் அவை இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகளாகும்.

மக்களாட்சி!

முதலாளித்துவக்கொள்கையின் ஒரு முக்கிய அம்சம் மக்களாட்சியாகும். மக்களுக்காக மக்களால் மக்களாகவே நடத்தும் ஆட்சியே மக்களாட்சியாகும். இவ்வாட்சிமுறையில் அனைத்து ஆட்சி அதிகாரமும் மக்கட்கேயாகும். எனவே மக்களே தமக்காக சட்டமியற்றுபவர் ஆவர். அவர்களே தாம் விரும்பிய சட்டத்தை நடைமுறைபடுத்தும் அதிகாரம் பெற்றவர்கள். தமக்கு விருப்பமில்லாத சட்டங்களை அமுல் செய்வதினின்றும் தடுத்து விடுவதற்கும் மக்களுக்கு அதிகாரமிருக்கிறது. இந்த சட்டங்கள் அனைத்தையும் அனைத்து மக்களும் நேரடியாக பங்குபற்றி இயற்ற இயலாததால் தமக்காக ஒரு பொது பிரதிநிதியை நியமிப்பார்கள். இதன்படி தமது சார்பாக அவரிடமே சட்டமியற்றும் அதிகாரத்தை அளிக்கின்றனர். ஆட்சிசெய்யும் அதிகாரமும் மக்கட்கே. எனவே தமக்காக ஒரு பொது ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கின்றனர். எனவே மேற்கத்திய முதலாளித்துவ ஆட்சியில் மக்களே அனைத்து அதிகாரமும் படைத்தவராவர்.

ஆனால் இஸ்லாத்தை தழுவியவருக்கு இது ஒரு குஃப்ர் முறையாகும். ஏனெனில் இது ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட, இஸ்லாமிய ஷாPஆ ஏற்றுக்கொள்ளாத ஒரு விசயமாகும். எனவே மக்களாட்சிமுறையில் ஆள்வது இறைநம்பிக்கையற்ற முறையில் ஆள்வதாகும். மக்களாட்சி முறைக்காக அழைப்பு விடுப்பது குஃப்ர் முறைக்காக அழைப்பு விடுப்பதாகும். இஸ்லாத்தில் இது முற்றிலும் தடுக்கப்பட்டதாகும். மக்களாட்சிமுறை இஸ்லாமிய சட்டதிட்டங்கட்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில் ஒரு முஸ்லிம் நடைமுறைபடுத்தவேண்டிய சட்டம் அல்லாஹ்விடமிருந்தே வருவதாகும்.ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் அடிமை. ஆதலால் அல்லாஹ்(சுபு) அமைத்த பாதை வழி நடப்பதும், அவன் அனுமதிக்காதவற்றினின்று விலகியிருப்பதும் கடமையாகும். அனைத்து ஆட்சி அதிகாரமும் அல்லாஹ்(சுபு)விடமே இருப்பதால் முஸ்லிம் உம்மா தனது விருப்பப்படி நடக்க இயலாது. ஷாPஆவிடமே அனைத்து அதிகாரமும் இருப்பதால் அதன் வழி மட்டுமே செல்ல இயலும். சட்டமியற்றுபவன் அல்லாஹ் மட்டுமே. அதனால் முஸ்லிம் உம்மா தானாக சட்டமியற்ற இயலாது. முஸ்லிம் உம்மா அல்லாஹ்(சுபு) விலக்கியவற்றை (உதாரணம்:வட்டிப்பணம்) நடைமுறைப்படுத்த இசையுமானால் அச்சட்டத்திற்கு எவ்வித அங்கீகாரமும் இஸ்லாத்தில் இல்லை. அடிப்படையில் அது ஷாPஆவிற்கு எதிரானது. அதனை எதிர்த்து போராடுவது கடமையாகும். ஆனாலும் மக்களை ஆட்சி புரியவும், ஷாPஆவை நடைமுறைபடுத்தவும் அதிகாரம் படைத்த ஆட்சியாளரை தமக்காக தேர்ந்தெடுக்கும் உரிமை முஸ்லிம் உம்மாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆட்சியாளர் சத்தியப்பிரமாணம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே ஆட்சியாளர் என்பது அல்லாஹ்வின் சட்டமனைத்தையும் நடைமுறைபடுத்துபவரே! ஏனெனில் சட்டமனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே அருளப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களாட்சி முறை இஸ்லாமிய முறை அல்ல. மேலும் அது இஸ்லாத்திற்கு எதிரான ஒரு கோட்பாடாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Saturday, April 19, 2008

Friday, April 18, 2008

அதோ… கிலாபா வந்து கொண்டிருக்கிறது!


1991 ஆம் ஆண்டுடன் கம்யூனிஸம் வெறும் வரலாறாகி விட்டது. கம்யூனிஸ உலகின் வீழ்ச்சி அமெரிக்க ஆதிக்கத்தின் உதயத்திற்கான சிறந்த அறிகுறியாக அமைந்தது. இந்த நிகழ்வினால் ஐக்கிய அமெரிக்க இராச்சியம் உலகின் பலம் பெற்ற ஒன்றாகவும், உலகின் ஒரேயோரு தவிர்க்க முடியாத வல்லரசாகவும் மாறியது. இந்தக்கருத்தை சந்தேகித்த எவரும் உலகில் இருக்கமாட்டார்கள். ஆனால்; அந்த நிகழ்வே அமெரிக்க வீழ்ச்சியின் ஆரம்பமாகவும் அமைந்துவிட்ட யதார்த்தத்தை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்?

சோவியத் யூனியன் இடிந்து விழுந்து, ஐக்கிய அமெரிக்கா வல்லரசாக மாறியபோது – அது, அப்போது து}ங்கிக்கொண்டிருந்த மாபெரும் சக்தனான இஸ்லாத்தை எழுப்பிவிட்டது. அன்றுமுதல் நிலைமைகளை முறையாக ஊடுறுவிப்பார்த்தால் அமெரிக்கா இஸ்லாத்துடன் தோளோடு தோள் மோதுவதில் படுதோல்வியைக் கண்டு வருகிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். செயற்கையாக உருவாக்கப்பட்ட 9ஃ11 சம்பவமும், மட்றிட் ரயில் குண்டுவெடிப்பும்… மற்றும் தொடர்ந்தேர்ச்சியான துரோகத்தனங்களும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்பதிலும், ஆப்கானிஸ்தான், ஈராக் ஆக்கிரமிக்கப்படுவதிலும் போய் முடிந்தது. எனினும் இந்த நிகழ்வுகளெல்லாம் இவை அனைத்திற்கும் சூத்திரதாரியான அமெரிக்காவின் படுகுழியினை அமெரிக்காவே தோண்டுவதற்கே வழி வகுத்துள்ளதை இன்று அது உணர்ந்து வருகிறது.

பொய்யர்கள் ஒருபோதும் உண்மை பேசமாட்டார்கள் - எனினும் கதவிற்கு பின் நின்று அவர்கள் எழுப்பும் முணுமுணுப்பை எம்மால் கேட்க முடிந்தால் - அவர்களுடைய விரக்தி நிலையை எம்மால் மட்டிட முடிந்தால் - அவர்கள் து}ங்காத இரவுகளை கணக்கிட முடிந்தால் - அவர்களின் அழுகின்ற இதயங்களை கண்காணிக்க முடிந்தால் - அவை அனைத்தும் அமெரிக்கர்கள் முஸ்லிம்களுடனான மோதலில் தாம் வசமாக மாட்டிக் கொண்டதை எண்ணி களங்குவதை உணர்த்தும். அவர்கள் இஸ்லாத்தை தமது முதற்தர எதிரியாக நடத்துவதற்கு முயற்சித்து சோர்ந்து போயிருக்கிறார்கள். இஸ்லாம் எனும் அந்த சக்தன் பாரிய வலிமை கொண்டவனாகவும், இனிமேலும் எவரும் தன்னை அடிமைப்படுத்துவதை சகித்துக் கொள்ளாதவனாகவும் இன்று மாறி விட்டான்.

1924ம் ஆண்டு மார்ச் 3ம் திகதியில் கிலாபா முற்றாக வீழ்த்தப்பட்ட பின்னர், முஸ்லிம் உம்மத் ஓர் ஆழ்ந்த து}க்கத்தில் வீழ்ந்து விட்ட நிலையில், முழு மேற்குலகும் நீயா நானா எனப்போட்டி போட்டுக் கொண்டு, முழு முஸ்லிம் உலகையுமே மேய்ந்து மென்று ஏப்பமிட ஆரம்பித்தார்கள். அல்லாஹ்(சுபு) முஸ்லிம் உலகிற்கு வளங்கிய பாரிய வளங்களையெல்லாம் குப்பார்கள் தமது திறைசேரியை நிறைக்க பயன்படுத்திக்கொண்டார்கள். து}க்கத்திலிருந்த முஸ்லிம்களின் நிலை படிப்படியாக உணர்விழந்த ‘கோமா’ நிலைக்கு சென்றுகொண்டிருந்தது. இந்த நிலை தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்று முழு முஸ்லிம் உலகின் அயோக்கிய ஆட்சியாளர்களும் பிராத்தித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலை கண்டு ஆனந்தமடைந்த அமெரிக்காவும் முஸ்லிம்களை அந்த நிலையிலேயே பேணி வரலாம், அவர்களும் தொடர்ந்து அவ்வாறே இருந்து விடுவார்கள் என நினைத்திருந்தார்கள். எனினும் அவர்களின் கர்வமும், முட்டாள்த்தனமும் அவர்களைக் குளவிப்பொந்தில் நுழைந்த கதைபோல் ஆக்கிவிட்டது. அதிலும் முஸ்லிம்கள் குறித்து தப்புக்கணக்குப் போட்டு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்பதை ஆரம்பித்த அமெரிக்காவுக்கு இன்று கண்கள் பிதிங்கி விட்டன.

எனினும் இன்று முஸ்லிம் உலகு தனது உண்மையான மறுமலர்ச்சிக்கான தேட்டத்தை எட்டி விட்டிருக்கின்றது. இஸ்லாமிய வாழ்வியல் அமைப்பை மீண்டும் நிலைநாட்டுவதை தமது இலக்கின் மையமாகவும், இஸ்லாமிய ஷாPஆவை கொண்டு தாம் முற்று முழுதாக ஆளப்படுவதை மிக முக்கியமான கருத்தாடலாகவும் அவர்கள் மாற்றிவருகிறார்கள். அரசியல், சமூக, பொருளாதார, இராணுவ அனைத்துத் துறைகளிலும் ஷாPஆவின் முழுமையான அமுல்படுத்துதலை அவர்கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள். அல்லாஹ்(சுபு)வுக்கே எல்லாப் புகழும்!

முஸ்லிம்கள் தற்போது அரேபியாவை ‘சவூதி அரேபியா’ தன்னைத்தான் அழைப்பதைப் போல் அழைக்க மறுத்து வருகிறார்கள். ஏனெனில் சவூத்தின் குடும்பம் மோசடிக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், நயவஞ்சகர்கள் என்பதை உணர்;ந்து கொண்ட முஸ்லிம் உம்மா அரேபியாவை உம்மத்தின் சொத்தாக பார்க்க விளைந்துள்ளது. ஐக்கியமான ஒரு உம்மத்;தாக வாழ்வதும், ஒரு கலீபாவைக்கொண்டு ஆழப்படுவதும் மிகவுமே சாத்தியமானது என்பதை அவர்கள் உணரத் தளைப்பட்டுள்ளார்கள். உருவாக இருக்கும் பரந்து விரிந்த கிலாபத்திற்கு முன்னால் ஐரோப்பிய ஒன்றியமும், ஓர் உலக அரசும் (ழநெ றழசடன பழஎநசnஅநவெ)இ வல்லரசுகளும் ஒர் பொருட்N;ட அல்ல என்பதை அவர்கள் புரிந்து வருகிறார்கள். இவ்வாறு முஸ்லிம்கள் இன்னும் காலம் கடக்காமல் தற்போதாவது விழித்துக் கொண்டதில் அமெரிக்காவின் து}ர நோக்கற்ற திட்டங்கள் அதிகளவில் பங்களித்துள்ளன. அமெரிக்காவின் முட்டாள்தனமான இந்தத் திட்டங்களுக்காக நாம் நன்றி சொன்னாலும் தப்பில்லை.

கருணை, கொடூரத்தினால் ஜெயிக்கப்பட்ட, உண்மை பொய்யினால் மறைக்கப்பட்ட, வெளிப்படைத்தன்மை இராணுவச் சீருடையால் சுருட்டப்பட்ட இன்றைய உலகில் நீதியின் அர்த்தினைக் கூட உலகம் மறந்து விட்டுள்ளது. நீதியின் யெமனான அமெரிக்கா தானே பரப்பிய கொடூரத்தின், பொய்யின், அநீதியின் பிடியிலேயே சிக்கி அதன் அழுத்தத்தினால் சரிந்து கொண்டிருப்பதை, சிந்திக்கும் உலகம் கண்ணாரக் காண்கிறது. இதன் நடுவில் சவக்காளையான அமெரிக்காவை யார் ஆழ்வது என கிலாரியும், ஒபாமாவும், மெக்கைனும் போட்டி போடுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.

எனவே இன்றயை உலக ஒழுங்கு வெகு சீக்கிரத்தில் மாறப்போகிறது என்பதை நாம் தயங்காமல் சொல்லலாம் இன்ஷா அல்லாஹ்(சுபு). இது வெறுமனவே உணர்வுகளின் வார்த்தையல்ல, நடுநிலையாக உலக அரசியலை ஆராயும் எவரும் இந்த முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை. குற்றத்தின் மீது ஏறி நின்று மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவர்கள் குற்றவாளிகளாக கருதப்படாத இன்றைய தீய உலக ஒழுங்கில், அப்பாவி முஸ்லிம்களை இந்த உலகம் துரத்தித் துரத்தி ‘பயங்கரவாதிகள்’ எனப் பெயர் சூட்டுமானால் அந்த போலிக் குற்றச்சாட்டுக்களை கண்டு முஸ்லிம்கள் ஒருபோதும் சளைத்துப் போகத் தேவையில்லை. மாறாக இந்த பொய்க் குற்றச்சாட்டுகள் சிந்திக்கக் கூடிய மக்கள்; மத்தியில் வீழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய உலக ஒழுங்கிற்கு, இஸ்லாத்தினை ஒரு அறிவார்ந்த, சித்தாந்த hPதியான, அரசியல் மாற்றீடாக கைக்கொள்வது பற்றி சிந்திக்க து}ண்டும் என்பதை புரிந்து கொண்டு முஸ்லிம்கள் தலைசாய்க்காது போராடத்தை தொடர வேண்டும்.

Thursday, April 17, 2008

கானல் நீரும் ஒற்றைக்காலில் கொக்கும்!

முன்பொரு நாளில் பிடித்த மீன்களும்
ருசித்த சுவையும் இன்றும் அந்நாளுக்காய்
காத்திருக்க து}ண்டியது.

ஆர்வ மேலீட்டில் மெய்மறந்து
எதிர்பார்த்த போதும் இன்றும்
மீனைத்தான் (கிலாபத்தை) காணவில்லை!

வயதாகியும் தளராமல் இலக்கோடு
இலக்காய் உயர்த்திய ஒன்றைக் காலையும்
மாற்றி மாற்றி அலங்கரித்துப்பார்த்து
பொறுமையும் எல்லை மீறிவிட்டது!

இருந்தும் களக்கனவுகள்
ஓர் போராளியாய் உற்சாகத்தைகொடுத்தும்
காலங்கடந்து இன்றுநான் குளத்தில் அல்ல
காணல் நீர் நிலத்தில் (வழி பிறழ்ந்த இயங்கங்கள்) எனும் உண்மைபுரிந்த போது…

என் பின்னால்
இன்றும் சில ஆயிரங்கள்
அதே ஒற்றைக்காலில்!!

அது மஹ்தி (அலை) வரும் வரையா??
அல்லது மறுமையே வரும் வரையா???

Thursday, April 3, 2008

பொருளாதார மேற்பார்வை


இஸ்லாத்தின் பொருளாதார அமைப்பைப்பற்றி விவரிப்பதற்கு முன்னால், இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான 'பொருள் தேடல்", 'பணம் சம்பாதித்தல்' என்பதில் இஸ்லாத்தின் நிலை என்ன என்பது பற்றி விவரிப்பது அவசியம். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் 'துன்யா" எனும் இவ்வுலக வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது, சொத்துக்கள் சேர்ப்பது போன்றவற்றை ஒரு மோசமான செயலாக, இஸ்லாத்திற்கு தொடர்பற்ற ஒன்றாக கருதுகின்றனர்.

தீனையும் துனியாவையும் பிரித்துப்பார்ப்பது மேற்கத்திய கலாச்சாரத்தின் அம்சமாகும். ஆனால் அது முஸ்லிம்கள் மத்தியிலும் தீவிரமாகப் பரவிவிட்டது. அதன் விளைவாகவே பொருள் சேர்ப்பது என்பது ஒரு மட்;டமான விசயமாகவும், ஏனைய இபாபத்தான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதென்பது ஒரு உயர்ந்த செயலாகவும் கருதப்படுகிறது. இதனால் குழப்பத்திற்குள்ளான பல முஸ்லிம்கள் இரட்டை வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். அதாவது, பொருள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதன் மூலம் இபாபத்தான செயல்களை விட்டுவிட்டோமே என வருந்துகின்றனர்.

இஸ்லாமியப் பொருளாதாரம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதனாலேயே இத்தகைய குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. துறவறத்தை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை எதிர்ப்பதன் மூலம் இவ்வுலக இல்லற வாழ்வில் ஈடுபடுவதை இஸ்லாம் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி இவ்வாழ்விற்குத் தேவையான பொருள் சேர்ப்பதை இஸ்லாம் அனுமதித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் சில சமயங்களில் பொருள் தேடுவதை கட்டாயமாக்கியுள்ளது, அல்லாஹ்(சுபு) கூறுகிறான்

பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்(62:10)

அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் (2:275)

மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள். எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! (28:77)

நபிகளார்(ஸல்) அவர்களின் சுன்னாவை ஆராயும் பொழுது, நபிகளார் நமக்கு கற்றுத்தந்த துஆவின் மூலம் பொருள் தேடுவது ஹலாலாக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம். நபிகளார் (ஸல்) கற்றுத்தந்த அந்த துஆ பின்வருமாறு அமைகிறது.
'யா அல்லாஹ், இவ்வுலக வாழ்க்கையிலும் மறுமையிலும் எமக்கு நல்லதையே அருள்வாயாக"

இருந்த போதிலும் கீழ்கண்ட வசனங்கள் மூலம் அல்லாஹ்(சுபு) நம்மை எச்சரிக்கவும் செய்கிறான்.

இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (3:185)

செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது (102:1)

இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். (89:20)
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான் (100:8)

நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான். (11:10)

இவ்விரு வேறுபட்ட வசனங்களை நோக்கும் போது ஒரு விசயம் தெளிவாகிறது. அதாவது, நமது வாழ்வின் முக்கியக் குறிக்கோள் அல்லாஹ்(சுபு)வின் கட்டளைகட்கு கீழ்ப்படிந்து, அவன் காட்டிய, அவன் அனுமதித்த வழியில் நமது மனித வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாகும். எனவே இவ்வுலகில் வாழத் தேவையான அனைத்தையும் சம்பாதித்துக்கொள்வதென்பது அவசியம். எனினும் வாழ்வில் பொருள் தேடுவது என்பது அவசியம் என்பதற்கும், பொருள் தேடுவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளத் தவறியதே இஸ்லாமியப் பொருளாதாரத்தின் குழப்பத்தினை முஸ்லிம்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அந்த உண்மையான இஸ்லாமிய நோக்கம் இல்லாவிட்டால் இத்தகைய பொருள்தேடும் முயற்சிகள் இஸ்லாத்திற்கு எதிராகவே அமையும்.

எனவே இவ்வுலக வாழ்வில், பொருளாதார அடிப்படை, தனிமனிதனுக்கோ அல்லது சமுதாயத்திற்கோ இறைவன் கூறிய வழியிலேயே அமையவேண்டும்.
நபிகளார் கூறுகிறார்கள்
'என்றென்றும் வாழ்வது போல எண்ணி இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் தேடுங்கள், மறுநாளே இறப்பது போல எண்ணி மறுவுலகிற்காக அருள் தேடுங்கள்".

இஸ்லாத்தில் பொருளாதாரப் பிரச்சனை

மேற்குலகக் கொள்கையான மூலதனக் கொள்கையைப் போலல்லாமல், இஸ்லாம் பொருளாதரப் பிரச்சனையை வேறுவிதமாக அணுகுகிறது. அதாவது பொருளாதாரப் பிரச்சனையின் முக்கிய அம்சம் வளத்தினை மக்களிடையே சரியாகப் பங்கிடுவதேயாகும். ஆனால் மேற்குலகோ உற்பத்தியையே முக்கிய அம்சமாகக் கருதுகிறது. அதாவது, உலகின் வாழ்வாதாரங்கள் பற்றாக்குறையாக உள்ளதாகக் கருதி, உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் அப்பற்றாக்குறையை சரிசெய்துவிடமுடியும் எனக் கூறுகிறது. எவ்வளவுக்கெவ்வளவு உற்பத்தி பெருகுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு மக்கள் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என மேற்குலகு கருதுகிறது.

மக்களின் அடிப்படைத் தேவையான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை ஏனைய வசதிக்கான தேவைகளிடமிருந்து இஸ்லாம் பிரித்துப் பார்க்கிறது. மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றக் கூடிய அளவிற்கு வளங்கள் இவ்வுலகில் இருப்பதாக இஸ்லாம் கருதுகிறது. அதன்படி பொருளாதாரப் பிரச்சனை என்பது அவ்வளத்தைப் பகிர்ந்தளிப்பதிலேயே உள்ளது. உலகின் மூன்றாந்தர நாடுகளாகக் கருதப்படும் நாடுகளிலும் ஒருசில மனிதர்களிடம் செல்வம் குவிந்திருப்பது, சில நாடுகளில் அதிகப்படியான விளைச்சலை அழிக்கப்பட்டு வருவது போன்றவற்றைக் காண்கையில் அக்கூற்று உண்மையென்றே விளங்குகின்றது. இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட முதலாளித்துவக் கொள்கையின் படி, ஐரோப்பிய நாடுகளில் நடப்பதைப்போல உணவு விளைச்சலை வேண்டுமென்றே குறைப்பதும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகப்படியாக விளைந்த காபியை எரித்ததைப்போல அதிகப்படியான விளைச்சலை அழிப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் உணவுப் பயிருக்குப்பதிலாக பணப்பயிர்களை விளைவித்தது ஒருசிலரின் நன்மைக்காக மட்டுமே. எதியோப்பியாவில் பயங்கர பஞ்சம் ஏற்பட்டபோதும் கூட அந்நாடு கோடிக்கணக்கில் ஏற்றுமதி செய்துகொண்டுதான் இருந்தது.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்

“அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்துவானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்குவசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான். அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணிவிட முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.” (14:32-34)

“நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சொத்து)களை வழங்குகிறான். (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். (17:30)

இந்த வசனங்களின் மூலம் மனித வர்க்கத்திற்குத் தேவையானவற்றை நிவர்த்தி செய்யும் அனைத்து வளங்களையும் படைத்துவிட்டதாக அல்லாஹ்(சுபு) அறிவிக்கிறான்.


இஸ்லாம், உற்பத்தித் திறன் பற்றிய பொருளாதார அறிவையும், அதனை பகிர்ந்தளிக்கும் பொருளாதார அமைப்பையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. அதாவது சொத்துக்களை அடையும் வழிவகைகளையும் அதனை அனுபவிக்கும் அல்லது விற்பனை செய்யும் வழிவகைகளையும் தனது சட்டங்கள் வாயிலாக தெளிவாக விளக்கியுள்ளது.


இஸ்லாமிய பொருளாதார அமைப்பின் குறிக்கோள்


இஸ்லாமிய பொருளாதார அமைப்பின் முக்கியக் குறிக்கோள்களாவன,


1. இஸ்லாமிய அரசின் கீழுள்ள ஒவ்வொரு மனிதரின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்திசெய்தல்.


2. அதிகப்படியான வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள, அனுபவிக்க வழிவகை செய்து கொடுத்தல்.


3. மேற்கண்டவற்றை, ஒரு இயல்பான அமைப்பின் மூலம் செயல்படுத்தி, உழைப்பிற்கேற்ற கூலி என்ற வகையில் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலுதல்.

குறிக்கோளை அடையும் வழிமுறைகள்


சொத்துக்களை அடைதல் (சொந்தமாக்குதல்)


இஸ்லாமிய பொருளாதார அமைப்பின் குறிக்கோள்களை அடையும் வழிமுறைகளில் சொத்துக்களை சொந்தமாக்குவது ஒரு முக்கிய வழிமுறையாகும். சொத்தின் உரிமையாளர் மட்டுமே அதனை அனுபவிக்கவோ அல்லது விட்டுவிடவோ முடியும். இஸ்லாத்தில் சொத்துக்கள் அனைத்தும் அல்லாஹ்(சுபு) ஒருவனுக்கு மட்டுமே முழுமுதற்சொந்தம் என்பது தெளிவு. எனவே சொத்துக்களை அடைதல் என்பதற்கு அதன் தற்காலிக பாதுகாவலராக பொறுப்பேற்றுக்கொள்ளல் என்றே பொருள் கொள்ள வேண்டும்.


வளங்களை அடைவது இரண்டு வகையில் அடங்கும். தாம் நேரடியாக ஈடுபட்டு அதன் மூலம் உற்பத்திப் பெருக்கத்தால் லாபம் ஈட்டி சொத்துக்களை அடைதல் ஒருவகையாகும். மற்றொன்று மறைமுகமாக சொத்துக்களை அடைதல். அதாவது, அல்லாஹ்(சுபு)வே எல்லா சொத்துக்களுக்கும் அதிபதியாதலால் அவன் கட்டளைப்படி நேரடியாக உழைத்து வளங்களை அடைபவர் அதிலிருந்து ஒரு பகுதியை பிறருக்கு பங்கிடுவதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான வளங்களைப் பெறுவது இரண்டாம் வகையில் அடங்கும். அல்லாஹ்(சுபு) விவரிக்கிறான்


“அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக”(24:33)


இது ஷக்காத், கப்பராத், சதக்காத் மற்றும் பரம்பரைச் சொத்து போன்றவையாகும். இத்தகைய சொத்துக்களை, வளங்களை இறைவனின் கட்டளையை மீறாமல் பங்கிடுவது, அரசின் முக்கியக்கடமையாகும்.
இருந்த போதிலும் தனிமனிதன் அடையும் சொத்துக்களுக்கு உட்ச வரம்பு எதுவும் இஸ்லாத்தில் இல்லை. ஆனால் அவற்றினை அடையும் வழிகளை இஸ்லாம் கட்டுப்படுத்துகிறது. யூகத்தின் அடிப்படையில் லாபம் ஈட்டுதல், அதிஷ்;ட சீட்டிழுப்புகள், வட்டியின் அடிப்படையில் தொழில் புரிதல் போன்றவற்றை இஸ்லாம் தடைசெய்துள்ளது.


மேலும் சிலவகையான சொத்துக்கள் முஸ்லிம் உம்மா அனைத்திற்கும் பயனளிக்கின்ற வகையில், முஸ்லிம் உம்மாவின் நலன்களை பாதுகாக்கின்ற பிரதிநிதியான, கலீஃபா மூலம் நிறைவேற்றப்படும். அத்தகைய சொத்துக்களை தனிநபர் எவரும் அடைய முடியாது. நீர், மேய்ச்சல் நிலம், எரிசக்தி மூலங்கள் ஆகிய இயற்கை வளங்கள் இந்த வகையில் அடங்கும்.


சொத்துக்களை உரிமை கொள்ளும் அத்தகைய வழிமுறைகள் மூலம் ஒவ்வொருவரும் இறைவன் தமக்கு வழங்கியவற்றை பெற்றுக் கொள்வர். மேற்குலகின் மூலதனக் கொள்கையில் யார் நேரடியாக சொத்துக்களை அடையும் முயற்சியில் ஈடுபடுகிறாரோ, அவர் மட்டுமே பயனடைவார். மேலும் இஸ்லாத்தில் சொத்து சேர்ப்பதில் உச்ச வரம்பு இல்லாததால் தத்தம் உழைப்பிற்கேற்ப அதிக சொத்துக்களையும் வசதிகளையும் அடைய முடியும்.


பொருளாதார நிறுவனங்கள் வட்டி மற்றும் பணத்தை பதுக்கிவைத்தல்


வட்டியும் வட்டி சார்ந்த தொழில்களும் மேற்கத்திய பொருளாதாரத்தின் ஆதாரமாகும். தேவைக்கதிகமான பணத்தினை பதுக்கி அல்லது சேமித்து வைப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையில் வட்டி அளிப்பதனால், அது பொருளாதார முன்னேற்றத்திற்கு பயனளிக்கும் எனக் கருதுகின்றனர். ஆனால் இஸ்லாத்தில் அது முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.


“அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்” (2:275)


“இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!”(9:34)


எனவே செல்வம் படைத்தோர் அதனை தேக்கி வைக்காமல் வேறு ஏதேனும் தொழிலில் முதலீடு செய்தே ஆகவேண்டும். அல்லது பிறருக்கு அதன் ஒரு பகுதியை தர்மமாக வழங்கியே ஆகவேண்டும்.


அத்தகைய முதலீடுகளை செய்யும்போது தனி நபர் மட்டுமோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட்டாகச் சேர்ந்தோ தொழில் தொடங்கலாம். தனிநபர் மட்டும் முதலீடு செய்கையில் அதன் லாபநஷ்டம் அவரை மட்டுமே சாரும். ஒன்றுக்கு மேற்பட்டோர் கூட்டாகச் சேர்ந்து தொழில் தொடங்குகையில், அழைப்பினை முன்வைத்தல், அதனை ஏற்றுக் கொள்ளுதல் என இருவரும் சம்மதிப்பது, ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாக கொள்ளப்படுகிறது. அவ்வொப்பந்தத்தின் மூலம் இருவரும் முதலாளியாகிவிடுவதால் லாபநஷ்டமானது இருவரையும் சாரும்.

உதாரணமாக இருவரும் செல்வத்தை முதலீடு செய்தால் அதன் லாபநஷ்;டம் தத்தம் முதலீட்டு விகிதத்தில் அமையும். ஒருவர் மூலதனத்தையும் மற்றவர் உழைப்பையும் முதலீடு செய்யும் கூட்டுத்தொழிலில் நஷ்டம் அனைத்தும் பணத்தை முதலீடு செய்பவரைச் சாரும். அதேசமயம் உழைப்பை முதலீட்டாகச் செய்தவர் ஊதியத்தை இழக்க நேரிடும். இருவரும் உழைப்பையே மூலதனமாக்கி கூட்டுத் தொழில் செய்தால் அவரவர் உழைப்பிற்குத் தகுந்தவாறு லாபநஷ்டம் பிரிக்கப்படவேண்டும்.


இத்தகைய அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு பல்வேறு விதமான தொழில் ஒப்பந்தம் செய்ய இயலும். ஆனால் லாபமானது இருவரும் ஒப்புக்கொண்டபடியே பிரிக்கப்படவேண்டும். இஸ்லாத்தின் இத்தகைய பொருளாதார அமைப்பில், தொடர்ந்த முதலீடுகளால் வேலைவாய்ப்புகள் பெருகும். அனைவருக்கும் வசதி ஏற்படும்.

அரசின் பங்கு


இஸ்லாமிய பொருளாதார அமைப்பில் அரசின் பங்கு மிக முக்கியமானதாகும். ஒவ்வொருவருக்கும் உணவு உடை உறைவிடம் கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவை கிடைக்கச் செய்வது அரசின் கடமையாகும். அடிப்படைத் தேவைகள் போக வசதியான வாழ்கையினை அடையும் வழிமுறைகளை வகுப்பதும் அரசின் கடமையேயாகும். பொதுச் சொத்துக்களை திரம்பட நிர்வகிப்பதன் மூலமும் ஏனைய வழிகளிலும் வருவாய் ஈட்டுவதன் மூலமும், இத்தகைய அடிப்படைத் தேவைகளையும் பிற தேவைகளையும் அரசு நிறைவேற்றுகிறது.


இஸ்லாமிய அரசின் வருவாய்


இஸ்லாமிய அரசு பல்வேறு வழிகளில் பொருளீட்டி அதை மக்களிடையே பகிர்ந்து அளிக்கிறது.


ஃபயீ : போரோ படையெடுப்போ இன்றி எதிரிகளிடமிருந்து கைப்பற்றியது.
கனாயிம்: படையெடுப்பினால் கிடைக்கப்பெற்றவை.


கராஜ்(நிலவரி): இது இறைமறுப்பாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களின் மீது விதிக்கப்படும் வரி.


ஜிஸ்யா: முஸ்லிம் அல்லாதவர்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் மீது விதிக்கப்படும் வரி.


இவை தவிர இயற்கை வளங்களினால் பெறப்பட்ட செல்வம், அபராதத் தொகை, ஏனைய வரிவிதிப்புகள் என பல்வேறு வழிகளில் இஸ்லாமிய அரசு வருவாய் ஈட்டுகிறது.


அதிகப்படியான வசதிகளுக்கு வழிகோலுதல்


மக்களின் அடிப்படைத் தேவைகள் போக ஏனைய வசதிகளை அனுபவிக்கவும், அத்தகைய வசதிகள் கிடைக்கப்பெறச் செய்யவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்வது இஸ்லாமிய அரசின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.


தம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் உற்பத்தி செய்து, அவற்றினை வாங்கும் சக்தியை மக்களிடையே அதிகரிகச்செய்வது எந்த ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்றாகும். எனவே அத்தகைய அதிகப்படியான வசதிகளுக்கான சேவைகளையும், பொருட்களையும் பெருக்குவதும் அரசின் கடமையாகிறது. இத்தகைய குறிக்கோள்களை எந்த அளவு சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்பது அந்த அரசின் பொருளாதார சட்டதிட்டங்களைப் பொறுத்தே அமையும். அந்த சட்டதிட்டங்களே நாட்டின் பொருளாதார அமைப்பாகும். அந்த பொருளாதார அமைப்பு எந்த மார்க்கத்தை சார்ந்துள்ளது என்பது மட்டுமல்லாமல் வேறுசில காரணிகளும் பொருளாதார அமைப்பின் வெற்றிக்கு அடிப்படையாய் அமைகின்றன. அவையானவன.


1. அரசு மற்றும் அதன் பொருளாதார அமைப்பின் ஸ்திரத் தன்மை மற்றும் அதன் மீதுள்ள நம்பிக்கை.


2. மக்களின் இயல்பான வாழ்க்கை அமைப்புமுறைக்கு ஒத்துப்போகும் தன்மை. அதாவது உழைப்பிற்கேற்ற ஊதியம் எனும் அடிப்படையில் நடைமுறைப்படுத்தல்


3. சரியான வகையில் மக்களிடையே பகிர்ந்தளித்தல்.


இன்றைய காலகட்டத்தில் கேபிடலிசம் எனும் மூலதனக் கொள்கையின் அடிப்படையில் அமைந்த பொருளாதார அமைப்பையே நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் பொழுது அது அனைத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி சமுதாயத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த பொருளாதார அமைப்பாக அமையும்.


ஸ்திரத் தன்மை


எந்த ஒரு பொருளாதார நடவடிக்கையும் லாபநஷ்ட அடிப்படையிலேயே நடைபெறுகிறது. அதாவது பொருளை முதலீடு செய்வோர் தமது முதலீட்டை, அதாவது செல்வத்தையோ, பொருளையோ இழக்க நேரலாம் என்று தெரிந்தே முதலீடு செய்கிறார். ஆனால் செயற்கையாகவே இத்தகைய பாதுகாப்பற்ற ஸ்திரமற்ற ஒரு பொருளாதார நிலை உள்ளதாக ஒரு பொய்த்தோற்றத்தை ஏற்படுத்துவது அந்நாட்டின் பொருளாதார நடவடிக்கையை வெகுவாக பாதிப்படையச் செய்யும். அத்தகைய சில நிகழ்வுகளாவன.


1. ஏற்ற இறக்கம்


பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்ற இறக்கம் கேபிடலிசத்தின் முக்கிய நிகழ்வாகும். அதாவது சிலகாலம் சிலவகை வணிகம் சிறப்பாக இருக்கும், ஆனால் சில காலத்தில் அது வீழ்ந்து வெகுவாக பாதிக்கப்பட்டதாக ஆகும். இதற்கான காரணங்களை பல்வேறு பொருளாதார வல்லுனர்களும் பல்வேறு விதமாகக் கூறினாலும் எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் அந்த பொருளாதார அமைப்பே என விளங்கப்படுகிறது.


2. பணவீக்கம்


பணத்தின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருப்பது கேபிடலிச பொருளாதார அமைப்பின் முக்கிய அம்சமாக அமைகிறது.


3. பணச்சந்தை வீழ்ச்சி


திடீர் திடீர் என மாறும் வெளிநாட்டு பணமாற்ற விகிதமும், பங்குச்சந்தை வீழ்ச்சியும், பணச்சந்தை வீழ்ச்சியின் அறிகுறியாகும். இதற்கும் அந்த பொருளாதார அமைப்பே அடிப்படையாகும். எனவே இவை அனைத்தும் கேபிடலிச பொருளாhர அமைப்பின் கேடுகளாகும். அவற்றிற்கு காரணமாக கருதப்படுபவை


செயற்கைப் பணம்: அதாவது பணத்தை தமது தேவைக்கேற்ப அச்சடித்துக்கொள்ளுதல். அரசாங்கத்தின் இத்தகைய செயலை தடுக்க எவ்வித வழியுமில்லை. எனவே இத்தகைய காகிதப்பணம் உண்மையில் எந்தவித மதிப்பையும் கொடுக்காது. இதுவே பணவீக்கத்திற்கு முக்கியக் காரணமாகிறது.
மேலும் வங்கிகளில், இல்லாத பணத்தை, தத்தம் கணக்குகளில் இருப்பதாகக் காட்டி, அதன் மூலம் கடன் வழங்குவதும் ஒரு பொய்ப்பணப் பிரயோகமாகும். இதுவும் செயற்கைப்பணத்தின் உருவாக்கத்தின் காரணியாகும்.
இவற்றையெல்லாம் உற்று நோக்கும் பொழுது இஸ்லாமிய பொருளாதார அமைப்பிற்கும் கேபிடலிச பொருளாதார அமைப்பிற்குமுள்ள அடிப்படை வேறுபாட்டை அறிந்துகொள்ள முடியும். அந்த கேபிடலிச பொருளாதார அமைப்பு மக்களின் அடிப்படைத்தேவையை பூர்த்தி செய்யாமல் மக்களின் வெறுப்பை சம்பாதித்து தோல்வியை எதிர்நோக்கியுள்ளதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மேற்கத்திய கைப்பாவை அரசுகள் மூலம் கேபிடலிச பொருளாதார நடைமுறைகள் இஸ்லாமிய நிலங்களில் கட்டாயமாக திணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் மீதுள்ள வெறுப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே இஸ்லாமிய பொருளாதார அமைப்பினைப் பற்றிய அறிவு மக்களிடையே பெருகி அதுவே, உண்மையான, பிரச்சனைகளைத் தீhக்கும் வழி என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

அதிமுக்கிய பிரச்சினை!

தனது இறையாண்மையை பாதுகாக்கும் தற்காப்பு உணர்வு உலகின் அனைத்து நாடுகட்கும் அதன் மக்கட்கும் உண்டு. அதன்படி ஒவ்வொரு தேசத்திற்கும் சில விவகாரங்கள் முக்கியமாகின்றன. அதற்காக எந்த கேள்வியுமின்றி இரத்தம் சிந்தவும் மக்கள் தயாராகின்றனர். அத்தகைய விவகாரங்கள் உயிர்வாழ்வையோ, அல்லது தனது நிலையின் பாதுகாப்பையோ சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன.
எனவே பெரும்பலும் அவை அனைத்து மக்கட்கும் ஒன்றுபோலவே உள்ளன. ஆனால் அவை முக்கிய விவகாரங்களே அல்ல. மேலும் முக்கிய விவகாரங்கள் அனைத்தும் தற்காப்பு மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல. மற்ற விவகாரங்களும் உண்டு. "வழிபாட்டுணர்வு" சம்பந்தமாகவோ அல்லது "பாலுணர்வு" சம்பந்தமாகவோ மேலும் பல முக்கிய விவகாரங்கள் உள்ளன. ஆனால் அவையோ மனிதர்களைப்பொறுத்து மாறுபடுகின்றன. ஏனென்றால் ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையை அணுகும் முறை மாறுபடுகிறது. முஸ்லிம்கள் அனைவரும் ஒரு உம்மத்தை சார்ந்தவர்கள். அவர்கட்கும் தத்தம் வாழ்க்கையை பொறுத்து முக்கிய விவகாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவர்கள் வாழ்வை அணுகும் முறை இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளதால் அம்முக்கிய விவகாரங்களும் இஸ்லாத்தாலேயே வரையறுக்கப்படுகின்றன.

இஸ்லாம் மக்கட்கு முக்கிய விவகாரங்கள் எவை என விவரித்துள்ளது. மேலும் அவற்றை வாழ்வா?சாவா? பிரச்சனையாக கருத கடமையாக்கியுள்ளது. எனவே முஸ்லிம்கள் முக்கிய விவகாரங்கள் எவை என தாமாக முடிவெடுக்கமுடியாது. இஸ்லாம் எவற்றை முக்கிய விவகாரமாக வரையறுத்துள்ளதோ அவையே முஸ்லிமுக்கும் முக்கிய விவகாரமாகும். அவை எந்த அளவிற்கு வாழ்வா? சாவா? பிரச்சனை என்பதையும் இஸ்லாம் விவரித்துள்ளது. அதன்படியே செயல்படுவது முஸ்லிமிற்கு கடமையாகும். எந்த ஒரு இயக்கத்திற்கும் இஸ்லாமின் இறையாண்மையை பாதிக்கும் பிரச்சனை. வாழ்வா? சாவா? பிரச்சனையாகும். இஸ்லாமும் தனது நிலைக்கு அச்சுருத்திய வந்த எண்ணற்ற விவகாரங்களை சந்தித்துள்ளது. மேலும் அச்சமயங்களில் முஸ்லிம்கள் அந்த அச்சுருத்தல்களை சந்தித்து அகற்றியுள்ளனர்.

இஸ்லாம் மலர்ந்த பிறகு இஸ்லாத்திற்கும் "குப்ர்" க்கும் இடையேயான போராட்டம் உச்சத்தில் இருந்தது. அறிவு சார்ந்த போராட்டமாக இருந்தது, பின்னர் இஸ்லாமிய அரசு மதீனாவில் ஏற்படுத்தப்பட்ட பிறகு போராக உருவெடுத்தது. இவை அனைத்தும், இஸ்லாத்தை, அதன் முக்கிய விவகாரங்களை பாதுகாப்பதற்கே. எனவே முக்கிய விவகாரங்களை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. ஆகவே அவற்றை வாழ்வா? சாவா? பிரச்சனையாக கருதுவது மிக முக்கியமாகிறது. "ஜிஹாத்" ஒரு முக்கிய கடமையாக கருதப்பட்டதும் அதற்காகவே. ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் கூறினார்கள்...

"இஸ்லாத்தை பாதுகாப்பது தலையாய கடமை. தொழுகை அதன் து}ண்களாகும். ஜிஹாத் அதன் கூரையாகும்.மேலும் கூறுகிறார்கள், "அல்லாஹ்(சுபு) எனை அனுப்பியதிலிருந்து, உம்மாவின் கடைசி சந்ததியினர் தஜ்ஜாலுடன் போரிடும் வரை ஜிஹாத் மாறாது".

எனவே முஸ்லிம்கள் அம்முக்கிய விவகாரங்களைவிட்டும் ஒரு போதும் தளரவில்லை. அவற்றை வாழ்வா? சாவா? பிரச்சனையாக கருதத் தயங்கவில்லை. சிலுவைப்போரின் மூலம் இஸ்லாத்திற்கும் அதனது இஸ்லாமிய அரசிற்கும் ஆபத்து வந்த பொழுது, அதனை வாழ்வா? சாவா? பிரச்சனையாக கருதிய உம்மா, அவர்களுடன் ஓர்நு}ற்றாண்டுக்கும் மேலாக கடும் போர் புரிந்தது. அந்த ஆபத்தை சமாளிக்க முடிந்தது. அதேபோல் மங்கோலியர்களால் இஸ்லாத்திற்கு ஆபத்து வந்தபோது, இவ்வுலக இன்பத்தை கருதாத முஸ்லிம் உம்மா, அதனை வாழ்வா? சாவா? பிரச்சனையாக கருதி கடும் போர் புரிந்தது. அந்த ஆபத்தினின்றும் தவிர்த்தது.

ஆகவே முஸ்லிம்கள், இஸ்லாம் கூறிய முக்கிய விவகாரங்கள் எவை என்பதை அறிந்து அவற்றை வாழ்வா? சாவா?பிரச்சனையாக கருதி அதன்படி நடந்தனர். ஏனென்றால் அவை அனைத்தும் இஸ்லாத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஏற்றுக்கொள்ளாவிடில் வரும் பெரும் ஆபத்தையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால் எப்பொழுது அவர்களது இஸ்லாமிய நாட்டம் குறையத்தொடங்கியதோ அதினின்றும் ஆபத்தும் தொடங்கியது. ஆதலால் "குப்ர்" யின் இஸ்லாமிய எதிர்ப்பும் வலுவடைந்தது. அவற்றை எதிர்த்து போராடாது அமைதிகாத்தனர். அந்நிலையில் முக்கிய விவகாரங்கள் எவை என்பதையும் மறந்தனர். அவற்றை வாழ்வா? சாவா? பிரச்சனையாக கருதுவதினின்றும் தளர்ந்தனர். அதனால் இஸ்லாமிய அரசு வீழ்த்தப்பட்டது. இஸ்லாம் வாழ்க்கை நடைமுறைகளினின்றும் மறைந்து மசூதிகளில் மட்டுமே பாதுகாக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இஸ்லாம் வாழ்க்கையினின்றும் மறைந்துவிடும் இந்நிலையிலாவது, முஸ்லிம்கள் விழித்தௌவேண்டும். குர்ஆனிலும், சுன்னாவிலும் எவை முக்கிய விவகாரங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவற்றை ஏற்று அதன்படி செயல்படவேண்டும். இஸ்லாம் குறிப்பிட்டபடியே அவற்றை வாழ்வா?சாவா? பிரச்சனையாக கருதுவனின்றும் விலகிவிடக்கூடாது. இஸ்லாத்தின் இறையாண்மையை(தற்காப்பை) காப்பதினின்றும் நாம் தவறிவிடக்கூடாது.

கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் இஸ்லாத்திற்கு எதிரான போர்ப்பிரகடனம்!

“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள். நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும். நிச்சயமாக நாம் (இது பற்றிய) வசனங்களைத் தெளிவு படுத்திவிட்டோம். நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்). (அல் இம்ரான் 3:118)

ஐரோப்பா தனது அசிங்கமான முகத்தை மென்மேலும் விகாரப்படுத்தி வருகின்றது. ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் முஹம்மத் (ஸல்) அவர்களின் புனிதத்துவத்தையும், கண்ணியத்தையும் கலங்கப்படுத்தும் நோக்கில் முன்பு வெளியான கேலிச்சித்தரங்களை ஐரோப்பா முழுவதும் மறு பிரசுரம் செய்ய வேண்டும் என கோரியிருப்பது இதனை உறுதிப்படுத்துகிறது. இஸ்லாத்தையும், அல் குர்ஆனின் து}ய வழிகாட்டலையும் உலகிற்கு திரிபு படுத்திக் காட்டுவதற்காக வெளியாகியிருக்கும் டென்மார்க்கிய திரைப்படம் இந்த நோக்கத்தின் உச்ச நிலையைக் சுட்டிக்காட்டுகிறது.

இது ஒன்றும் புதிதல்ல!

மேற்குலகின் இஸ்லாத்திற்கு எதிரான போராட்டத்தில் இவை சமீபத்திய உதாரணங்கள் மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதேபோல இதற்கு முன்னர் நடந்த போதும் முஸ்லிம்கள் கோபப்பட்டு, வேகப்பட்டு, பின்னர் தணிந்து நாளடைவில் அவற்றை மறந்தும் விட்டனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
சில உதாரணங்கள்

அமெரிக்க ராணுவம் குர்ஆனை இழிவுபடுத்தியமை.அபு குரைப் சிறையில் முஸ்லிம்களை கொடுமைக்கும் இழிவுக்கும் ஆளாக்கியமை.பிரான்சில் பெண்கள் ஹிஜாப் அணியத் தடை விதித்தமை. ஹொலண்டில் இஸ்லாத்தை இழிவுபடுத்தத் திரைப்படம் தயாரித்தமை. போன்ற நிகழ்வுகளை எம்மால் மறந்துவிட முடியுமா?

இதற்கும் முன்னர், தஸ்லீமா நஸ்hPன்;, சல்மான் ருஷ்டி போன்ற கொடிய எழுத்தாளர்கள் தமது இஸ்லாத்திற்கு எதிரான போக்கினை வெளிகாட்டி எழுதியமைக்காக மேற்குலகு அவர்களை அரவணைத்து, அடைக்கலம் கொடுத்ததை எம்மால் மறக்கமுடியுமா?

அமெரிக்க சுப்hPம் கோர்ட்டில் ஒருகையில் வாளும் மறுகையில் குர்ஆனும் ஏந்திய நபிகள் (ஸல்) அவர்களின் உருவச்சிலை 1935ல் இருந்தே வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் பிரான்சின் ஜெனரல் கோரோ, சலாஹ_த்தீன் அய்யூபியின் கல்லறைக்குச் சென்று அதனை எட்டி உதைத்து வசைமாரி பொழிந்தமையும் வரலாறறியும். பிரான்சின் ‘என்சைக்ளோபீடியா’ (பொது அறிவுக்களஞ்சியம்) நபிகளாரை, கிறிஸ்தவ எதிர்ப்பாளர், பெண்களை கடத்தியவர், மனித சமுதாயத்தின் எதிரி என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய அவமதிப்புகள் மட்டுமன்றி இவர்கள் நேரடியாகவே முஸ்லிம்களை தாக்கி கொடுமைப்படுத்துவதில் முன்னிற்கின்றனர். இஸ்லாத்திற்கெதிராக அரசியல், சமூக, பொருளாதார, இராணுவ hPதியான அனைத்து வழிமுறைகளிலும் போராட்டங்களை முடுக்கி விட்டுள்ளனர்.
பொஸ்னியாவில் செர்பியப் படையினரால் எண்ணற்ற முஸ்லிம் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் கற்பழிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் வகைதொகையின்றி முஸ்லிம்கள்; படுகொலை செய்யப்படுகின்றனர். ஈராக்கில் இன்று வரை ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் செச்னியாவில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகளும், பாலஸ்தீன முஸ்லிம்கள் அனுபவிக்கின்ற துயரங்களும் இஸ்லாத்திற்கெதிராக குப்ரிய மேற்குலகு தொடுத்திருக்கும் போரின் வெளிப்படைகளே.

சுதந்திரம் எனும் ஒரு மாயை

“தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்காதிருக்கமாட்டான்.” ( அத்தௌபா 9-32 )

இந்த திருமறை வசத்திற்கு ஏற்ப முஸ்லிம்கள் விழிப்புடன் இருந்து இறை ஒளியை அணைக்க முயலும் குஃபார்களினது பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். இஸ்லாத்திற்கு தாம் சுமத்தும் அபாண்டங்களை தமது பேச்சுத் சுதந்திரம் எனக் கூறும் மேற்குலகு தமது அரசுகளில் பேச்சு சுதந்திரத்தை சிலருக்கு மட்டுமே ஏகபோகமாக்கியுள்ளது.9-11 தாக்குதலுக்கு பிறகு அந்த சம்பவத்துடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத எண்ணற்ற முஸ்லிம்கள் தமது கருத்தை கூறியதற்காக எவ்வித விசாரணையுமின்றி கைது செய்யப்பட்டபோது இவர்களின் பேச்சு சுதந்திரம் எங்கே போனது.
மேற்குலகின் மரபுப்படி இஸ்லாத்திற்கு எதிராக எவரும் பேசலாம். ஆனால் இஸ்ரேலுக்கு எதிராகப் எவரும் கூடாது. மேற்குலகைப் பொறுத்தவரை இஸ்ராயிலுக்கு எதிராகப் பேசுவது தீவிரவாதமாகும். 7-7 லண்டன் குண்டுவெடிப்புகளுக்குப்பிறகு இங்கிலாந்துப் பிரதமர் டோனி பிளேயர் 'இஸ்ரேல் நாட்டை நீக்க விரும்புவதும், முஸ்லிம் நிலங்களிலிருந்து மேற்கத்தியப் படைகளை வெளியேற்றுவதை ஆதரிப்பதும், ஷாPஆவை நடைமுறைப்படுத்த நினைப்பதும், கிலாஃபாவை நிலைநாட்ட முனைவதுமே தீவிரவாதம் ஆகும். அதை எதிர்த்து நாம் போராட வேண்டும்" எனக்குறிப்பிட்டிருந்தமை இதற்கு சிறந்த சாட்சியமாகும்.
மேலும் இவர்கள் இஸ்ரேல் பற்றிக் கூறப்படுவதை 'இனப்பாகுபாட்டை து}ண்டும் முயற்சி" என்று கூறுகின்ற அதேவேளை இஸ்லாத்திற்கெதிராக உலகளாவிய பிரச்சாரத்தை செய்யும்போது மௌனிகளாக இருந்துவிடுகின்றனர். எனவே பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதற்காக இவர்கள் பாவிக்கின்றார்களே தவிர உண்மையில் இவர்கள் அதற்கான அனுமதியை சிலருக்கு மாத்திரம்தான் வழங்கியிருக்கிறார்கள்.
இவர்களின் இன்னுமொரு மாயையான தனிமனிதச் சுதந்திரம் என்பதும் ஒரு பாரபட்ச நடைமுறையே. பிரான்சில் முஸ்லிம் பெண்கள் தம்மை கௌரவமாக மறைத்துக்கொள்ளுவதற்காக அணியும் ஹிஜாபினை தடைசெய்வதற்காக வெளிவந்த நீதிமன்ற தீர்ப்பு இதற்கு இன்றுள்ள மிகச்சிறந்த சான்றாகும். இவர்களின் நியாயப்படி அரச அலுவலகங்களில் குட்டைப்பாவாடை அணியலாம். ஆனால் பெண்களை கண்ணியப்படுத்தும் ஹிஜாபினை அணியக் கூடாது.

எனவே இவர்கள் தனிமனிதர்களுக்கும், சமூகத்திற்கும் சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கும் ‘சுதந்திரம்’ என்ற கோட்பாடு தம்மிடமுள்ளது என வாதாடுவது கேலிக்குரியதாகும். எனவே இவர்களின் (சுதந்திர) சமூகத்தில் சுதந்திரம் கிடையாது. மேற்குலகின் அனைத்து நாடுகளிலும் அவரவருக்கென்ற எல்லைப்படுத்தும் சட்டங்களை வரையறுத்துக்கொண்டே சுதந்திரம் என்ற ஒரு மாயை பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகின்றது. மனிதன் விரும்பியோ விரும்பாமலோ தனது வாழ்வை கட்டுப்படுத்துவதற்கான சட்டதிட்டத்தினைக் கொண்டே இன்றுவரை வாழ்ந்து வருகிறான். எனினும் அந்த சட்டதிட்டங்கள் மனிதானால் உருவாக்கப்பட்டதா அல்லது மனிதனை படைத்து பரிபாலிப்பவன் வகுத்துத் தந்ததா என்பது மட்டுமே வேறுபட்டு காணப்படுகின்றது. எனவே சுதந்திரம் என்பது வெறும் மாயை என்பதனை உணர்ந்து அதனை மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும்.

தீர்வு என்ன?

எவ்வித பயமும் இன்றி அல்லாஹ்வின் தீனை, இறைவனின் து}தர் நிலைநாட்டிய இஸ்லாத்தை இவ்வளவு வெளிப்படையாக எதிர்ப்பதும், அதற்கெதிராக பேசுவதும் இந்தக்காலத்தில் எப்படி சாத்தியமாயிற்று என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். கிலாஃபா எனும் இஸ்லாமிய ஆட்சி நிலவிய காலத்தில் அச்சமின்றி இவற்றை தொடர்ந்து செய்ய அவர்கள் சிந்தித்துப் பார்த்திருக்க முடியுமா?

சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத், கலீஃபாவாக இருந்த காலத்தில் (1900களின் ஆரம்ப காலத்தில்) பிரான்சில் தத்துவஞானி வால்டேரின் படைப்புகளின் அடிப்படையில் ஒரு நாடகம் அரங்கேரியது. அதில் நபிகளாரையும், ஆயிஷா(ரலி) அவர்களையும் கேலி செய்கின்ற விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டன. அதைக் கேள்வியுற்ற சுல்தான் அப்துல் ஹமீத் அந்த நாடகத்தை உடனே நிறுத்தாவிட்டால் உங்கள் மீது ஜிஹாத் பிரகடனப்படுத்தப்படும் என பிரான்சிற்கு கடிதம் எழுதினார். அதன் பின் உடனே அந்த நாடகம் நிறுத்தப்பட்டது. முஸ்லிம் பெண்மணியின் ஆடையைப் பிடித்து இழுத்த ‘பனீ கைநுகா’ இன யூதர்களினை எதிர்த்து நபிகளார்(ஸல்) போர் தொடுத்து அவர்களை தண்டித்தமை நாமறிந்ததே.

கலீஃபா முஹ்தசிம்பில்லாஹ் காலத்தில் ரோமில் ஒரு முஸ்லிம் பெண்மணி தகாத முறையில் நடத்தப்பட்டதாக செய்தி வந்தது. அந்த முஸ்லிம் பெண்மணி கற்பழிக்கப்படவில்லை, கொல்லப்படவில்லை, இன்றைய ஈராக்கில் நடைபெறுவதைப்போல தொண்டை கிழிக்கப்படவில்லை. பொஸ்னியா, குஜராத்தில் நடைபெற்றதைப்போல கர்ப்பப்பை கிழிக்கப்பட்டு குழந்தை வெளியே வீசியெறிந்து கொல்லப்படவில்லை. மாறாக இழிவு செய்ய முயற்சிக்கப்பட்டது. உடனடியாக கலீஃபா முஹ்தசிம் அவசரகாலத்தில் அழைக்கப்படும் அதானான ஆறாவது அதானை எழுப்பக்கூறி முஸ்லிம்களை மஸ்ஜித்திற்கு அழைத்தார். 'ரோமபுரியில் ஒரு முஸ்லிம் சகோதரி இன்னல் படுத்தப்பட்டதாக எனக்கு செய்திவந்தது. வல்லாஹி நான் ஒரு மிகப்பெரும் படையை அனுப்பப்போகிறேன். அங்குள்ள வலிமையான நகரைக் கூறுங்கள்"
என்றார். இந்தப்போரில் ரோமபுரியின் அமூரியா பகுதி இஸ்லாத்தின் கீழ் வீழ்த்தப்பட்டது. இவையே அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்களின் நிலையாகவும், முஸ்லிம்களின் கண்ணியத்தின் நிலையாகவும் இருந்தது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“இமாம் ஒரு கேடயம் ஆவார். அவர் பின்நின்றே முஸ்லிம்கள் போராடுகின்றனர். அவரைக் கொண்டே முஸ்லிம்கள் பாதுகாhப்பு பெறுகின்றனர்.

இன்னுமொரு முறை அவர்கள பின்வருமாறு கூறினார்கள்.

“சுல்தானானவர் பூமியில் இறைவனின் நிழல் ஆவார்.” (பைககி)

சலாஹ{த்தீன் அய்யூபி, அல்-குத்ஸ் பகுதியை கிறிஸ்தவ சிலுவைப் போராளிகளிடமிருந்து மீட்டார். சைபுதீன் குத்ஸ், மங்கோலியர்களிடமிருந்து ஈராக்கை மீட்டார். முகம்மத் பின் காசிம் ஹிந்தை இஸ்லாத்திற்காகத் திறந்துவிட்டார். இவற்றையெல்லாம் தனிமனிதர்களாக நின்று அவர்கள் சாதிக்கவில்லை. மாறாக ஒரு அரசின் நிழலில் ஒரு உம்மத்தாக நின்றே அவர்கள் இவற்றை சாதித்தனர். எனவே இன்றிருக்கின்ற பாரிய சவால்களை நாம் முகம் கொடுப்பதற்கு இஸ்லாமிய அரசு எமக்கு உடனடித்தேவையாக உள்ளது.

மேற்குலகிற்கு இணையாக இஸ்லாத்தை அவமதிப்பதில் இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்களும் சளைத்துவிடவில்லை. துருக்கியில் ஹிஜாப் தடைசெய்யப்பட்டது, எகிப்து, துனிசியா போன்ற நாடுகளில் தாடி வைத்தல், ஐவேளை தொழுதல் ஆகியவற்றிற்காக முஸ்லிம்கள் கண்காணிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவது. பாகிஸ்தானில் இஸ்லாமிய இயக்கங்கள் தடைசெய்யப்படுவது, சவூதியில் காஃபிர்கட்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்களிலும் அமெரிக்கப் படைகளை அனுமதித்தது என இவர்களின் கைவண்ணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“எந்த ஒரு விசயத்திலும் அதனை கெடுக்கக்கூடியது ஒன்று உண்டு. அதைப்போல இந்த தீனில் கேடுவிளைவிக்கக் கூடியது கொடூர ஆட்சியாளர்களாவர்.” (சயுதி)
இஸ்லாத்தின் எழுச்சி

ரஸ{ல் (ஸல்) அவர்களை அவமானப்படுத்து வகையில் அமைந்த கேலிச்சிந்திரங்களை வெளியிட்டமையை கண்டித்து உலகெங்கும் நடத்தப்பட்ட போராட்டங்களும், மக்கள் வெளிப்படுத்திய அவர்களின் மனோநிலையும் இஸ்லாத்தின் எழுச்சியை பறைசாற்றுகிறது. இந்த இஸ்லாமிய எழுச்சியைக் கண்டு மேற்குலகு அஞ்சுகிறது. ஏனெனில் இது இஸ்லாத்தின் அரசியல் பரிமாணத்தை அவர்களுக்கு காட்டி வருகின்றது. இஸ்லாமிய அரசியல் விழிப்புணர்சி ஏற்பட்டுவிட்டால் அது மேற்குலகிற்கு மட்டுமல்லாது இன்றைய இஸ்லாமியத் தலைவர்களின் ஆட்சியையும் பதம் பார்க்கும்.

இந்த அச்சத்துடன் அண்மையில் புஷ் ' ஜகார்த்தாவிலிருந்து ஸ்பெயின் வரையிலான தேசத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்." என்று விழித்துக் கூறுகின்றார்.

இந்தத் திருப்புமனையில் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்
இத்தகைய சூழ்நிலையில் முஸ்லிம் உம்மத் எந்த நிலையில் உள்ளது, அதன் மீதான குஃபார்களின் நேரடியான மற்றும் மறைமுகமான போராட்டங்களின் நிலைகள் என்ன, அதனால் உம்மதிற்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அவலங்கள் என்ன என்பது குறித்து துல்லியமாக நாம் அவதானிக்க வேண்டும். சிந்தனா hPதியாக இஸ்லாத்திற்கெதிராக காஃபிர்கள் முன்வைக்கும் வாதங்களை முறையாக தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த பதிலடிகளை வழங்குவதில் நாம் மிக வேகமாக தொழிற்படவேண்டும்.

வன்முறை இல்லாத போராட்டங்கள் வாயிலாகவும், ஊடகங்கள் மூலமாகவும் சிந்தனா hPதியான இந்த எதிர்ப்புகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டும். முக்கியமாக இஸ்லாமிய உலகை தமது அரக்கப்பிடியில் தொடர்ந்தும் வைத்துக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் நயவஞ்சகத்தனத்தை நாம் முஸ்லிம் உம்மத்திற்கு தெளிவாக தோலுரித்துக்காட்ட வேண்டும்.
இந்த நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு முஸ்லிம் உம்மாவிடையே மேற்குலகின் போலித்தனத்தையும் இஸ்லாம் எதிர்ப்புப் போக்கையும் அம்பலப்படுத்தி தஃவாவை வேகமாக மேற்கொள்ளவேண்டும்.

இன்றைய முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்கள் இஸ்லாத்திற்காக எதையும் இழக்கத் தயாராக இல்லை என்பதையும், இஸ்லாத்தினதும், அதன் து}தரினதும், முஸ்லிம்களினதும் கௌரவத்தை பாதுகாக்க அவர்கள் செயல்பட மாட்டார்கள் என்பதையும் மக்களிடையே பகிரங்கப்படுத்தி உண்மையான இஸ்லாமிய ஆட்சியான கிலாபத்தை நிலைநாட்டுவதற்காக முஸ்லிம்களை நாம் அணிதிரட்ட வேண்டும்.