Wednesday, August 20, 2008

கிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து - பகுதி 3

ஷரிஆ கொள்கை


நமது தீனை நிலைநாட்டி, அனைத்துத் துறைகளிலும் இறைச்சட்டங்களைநடைமுறைப்படுத்தவேண்டும் என்பது இஸ்லாமிய ஆதாரங்களினின்றும் தெளிவாக அறியப்பட்டஒன்று. ஆனால் அத்தகைய சட்டங்களை நிலைநாட்டும் அதிகாரம் படைத்த ஒரு ஆட்சியாளர்இன்றி அத்தகைய சட்டங்களை செயல்படுத்தி, பாதுகாக்க முடியாது. ஷரிஆவின் கருத்துப்படிஒரு வாஜிபை கடைபிடிப்பதற்காக செய்யவேண்டிய அனைத்து செயல்களும் வாஜிபாகும்.எனவே கலீஃபா எனும் தலைவர் ஒருவர் இன்றி எந்த ஷரிஆ சட்டத்தையும் நிலைநாட்டமுடியாது என்பதால் கலீஃபா ஒருவர் இருப்பது நமக்கு ஃபர்த் ஆகும். அதேபோல கலீஃபாஇல்லாவிடில் அந்த கலீஃபாவை நியமிப்பதும் அல்லது அத்தகைய நியமனத்திற்காக முயற்சிசெய்வதும் நமக்கு ஃபர்த் ஆகும்.ஷரிஆவை வாழ்வின் சகல துறைகளிலும் செயல்படவைப்பது கட்டாயம்என்பதற்கான குர்ஆனிய ஆதாரங்கள்கிலாஃபாவை நிலைநாட்டி அல்லாஹ்(சுபு) அருளிய சட்டதிட்டங்களைக் கொண்டு ஆட்சிபுரியும் ஒரு அரசின் கீழ் வாழ்வது முஸ்லிம்களுக்கு ஃபர்த்(கட்டாயக் கடமை) என்பதற்கானஆதாரங்கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன.
"அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக.உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்றவேண்டாம். "(5:48)
அல்லாஹ்(சுபு) தான் அருளியவற்றைக் கொண்டே மக்களிடையே தீர்ப்பளிக்குமாறுநபிகளாரிடம் கட்டளையிடுகிறான். அதன் மூலம் ஒவ்வொரு முஸ்லிமையும் அந்தச் சட்டங்களையேபின்பற்றுமாறு பணிக்கிறான். நபிகளாருக்கு(ஸல்) இடப்பட்ட கட்டளையானது, நபிகளாரை மட்டும்குறிப்பிடும்படியான சொற்பதம் இல்லாவிடில் அனைத்து முஸ்லிம்கட்கும் இடப்பட்டகட்டளையாகும். இந்தக் குர்ஆன் வசனத்தில் அத்தகைய கட்டளை எதுவும் இல்லை ஆதலால்இது அனைத்து முஸ்லிம்கட்கும் இடப்பட்ட கட்டளையாகும். இறைச் சட்டங்களை நிறைவேற்றகலீஃபா ஒருவர் இருப்பது அவசியமாகிறது.இந்த வசனத்தில் வரும் 'மா" எனும் வார்த்தையானது பொதுவாக அனைத்தையும்குறிக்கும். இதன் மூலம் வாழ்வின் அனைத்து சந்தர்பங்களிலும் அல்லாஹ்(சுபு)வின் கட்டளையைநடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தெளிவு. மேலும் இவ்வசனம் இரு வேறு அர்த்தம்கொள்ளும் படியான விதத்தில் அமையவில்லை. இது ஒரே பொருள் கொள்ளக்கூடியஆணித்தரமான வசனமாகும்.
"அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை."( 12:40)
அதிகாரம் அனைத்தும் அல்லாவிற்கே எனக் கூறும் இக்குர்ஆன் வசனத்தில் அதிகாரம்என்பது மனித சமுதாயத்தின் அனைத்து துறைகளுக்கமான
'ஹ{க்ம்" (சட்டமியற்றுதல்) ஆகும்.எனவே வாழ்வின் அனைத்து விசயங்களிலும், தனிமனிதனையோ அல்லது சமுதாயத்தையோகட்டுப்படுத்த செயல்படுத்தப்படும் சட்டதிட்டமானது அல்லாஹ்(சுபு)விடமிருந்து மட்டுமேபெறப்படவேண்டும். இதுவே தவ்ஹீதின் அம்சம். மேலும் அல்லாஹ்(சுபு)வே அல்-ஹாக்கிம்(நீதியாளன்) ஆவான்.
"எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள்நிச்சயமாக காஃபிர்கள்தாம். (5:44)
"எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோநிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே. (5:45)
"அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோஅவர்கள் தான்பாவிகளாவார்கள்." ( 5:47)
அல்லாஹ்(சுபு) அருளியவற்றைக்கொண்டும் நிர்வகிக்காதவர் 'காஃபிர்,அநியாயக்காரர்(தாலிம்), பாவிகள்(ஃபாசிக்)" என அல்லாஹ்(சுபு) கூறுகிறான். இதிலும் 'மா"எனும் வார்த்தை உள்ளது. இது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் குறிக்கும். எனவேநாட்டை ஆள்வதோ, சமுதாயத்தை நிர்வகிப்பதோ, தனி மனித நடவடிக்கைகளைசெயல்படுத்துவதோ எதுவுமே அல்லாஹ்(சுபு) அருளியபடியே அமைய வேண்டும். ஆதலால்அத்தகைய அமைப்பான கிலாஃபா இருப்பதும் அவசியமாகும்.
"நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்)து}தருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில்ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்)
து}தரிடமும்ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாகஇருக்கும்." (4:59)
இவ் வசனத்தில் அல்லாஹ்(சுபு) நபிகளாருக்கு(ஸல்) அடுத்தபடியாக அதிகாரத்தில்மேலுள்ளோருக்கு கட்டுப்படும்படி கட்டளையிட்டுள்ளான். எனவே அத்தகைய அதிகாரம் படைத்தஒருவர் (ஆட்சியாளர்) முஸ்லிம் உம்மாவிடையே இருப்பது அவசியமாகிறது. வாழ்க்கையில்,நடைமுறையில் இல்லாத ஒருவருக்கு கட்டுப்படும்படி ஒருபோதும் அல்லாஹ்(சுபு) கூறவதில்லை.எனவே ஆத்தகைய ஆட்சியாளர் இருப்பதும், இல்லாவிடில் அத்தகைய ஒருவரை ஏற்படுத்துவதும்முஸ்லிம் உம்மா மீது கடமையாகிறது.இங்கு 'அதிகாரத்தில் மேலுள்ள ஆட்சியாளர்' என்பது அல்லாஹ்(சுபு) அருளியசட்டதிட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்பவர் என்பதே பொருளாகும். அவர் மூலமாகவேஇஸ்லாமிய சட்டதிட்டங்களை அமல் செய்ய முடியும்.
அஸஸ்(ரலி) அறிவித்ததாக அஹ்மத்குறிப்பிடுகிறார்கள்.
நபிகளார்(ஸல்) கூறுகிறார்கள் : "அல்லாஹ்விற்கு கட்டுப்படாதோர்க்கு கட்டுப்படுதல் இல்லை."
இஸ்லாத்தில் ஆட்சியமைப்பு முறை இல்லை எனக் கூறுவோரின் கூற்றுக்கு மாறாக,முஸ்லிம் உம்மாவிடையே எப்பொழுதும் அல்லாஹ்(சுபு) அருளிய சட்டதிட்டங்களைக அமல்செய்யும் ஒரு பிரதிநிதி இருக்கவேண்டியது ஃபர்த் (கட்டாயக் கடமை) என்பதையே இவ்வசனம்குறிப்பிடுகிறது.
"உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மைநீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம்மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள்நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்."(4:65)
இஸ்லாமிய முறைப்படியான கிலாஃபா அரசு இல்லாவிட்டால் இறைவன் அருளியபடிதீர்பளிப்பது(சட்டங்களை நிறைவேற்றுவது) நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. இஸ்லாம்ஒரு முழுமையான மார்க்கம் எனக் கொண்டால் இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றுவதும்அதனை நிறைவேற்றும் ஒரு கிலாஃபா அரசு இருப்பதும் அவசியமாகிறது.''ஒரு இஸ்லாமிய அரசு இருந்தால் மட்டுமே மேற்படி ஆதாரங்கள் பொருந்தும். அப்படிஇல்லாவிடில் இந்த ஆதாரங்கள் பொருந்தாது. இன்றைய அரசியல் சமுதாய அமைப்பினைஏற்றுக்கொள்ளலாம்"" எனக் கூறுவோரும் உண்டு.
ஆனால் அத்தகைய நிபந்தனை எதுவும்மேற்படி எந்த வசனத்திலும் இல்லை. எனவே கலீஃபா ஒருவரும் கிலாஃபா எனும் இஸ்லாமியஆட்சியமைப்பும் இருப்பது ஃபர்த் ஆகும். ஃபர்த் ஆன காரியம் செய்ய மேற்கொள்ளப்படும்ஒவ்வொரு முயற்சியும் ஃபர்த் ஆகும்.உதாரணம் தொழுகைக்காக ஒது(ளு) செய்தல். ஆதலால்கிலாஃபா இல்லாத நேரத்தில் அதனை உருவாக்க முனைவதும் ஃபர்த் ஆகும்.கலீஃபாவை நியமிப்பதற்கான காலக் கெடுவும், அந்தக் கடமையைநிறைவேற்றத் தவறுவதன் விளைவுகளும்கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட பைஆ (சத்தியப்பிரமாணம்) இல்லாமல் இரண்டு இரவுகட்குமேல் இருப்பது ஒரு முஸ்லிமிற்கு ஹராம் ஆகும். இஜ்மா-அஸ்-ஸஹாபா (சஹாபாக்களின்ஒருங்கிணைந்த தீர்வு) மூலம் இதற்கான ஆதாரத்தை அறியலாம்.
நபிகளார் மறைந்த செய்தியைக் கேட்ட சஹாபாக்கள், பனு சாயிதாவின் இடத்தில் கூடி,முஸ்லிம்கட்கு அடுத்த பிரதிநிதியை நியமிப்பதற்காக விவாதித்தனர். இந்த விவாதத்தின்போதுநபிகளாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை. இரண்டு நாட்களாக இந்த விவாதம்தொடர்ந்தது. அடுத்த நாளில் அபுபக்கர்(ரலி) அவர்களுக்கு அனைவரும் பைஆ கொடுத்தனர்.பைஆ கொடுத்ததன் பிற்பாடே அவர்கள் நபிகளாரின் உடல் அடக்கத்திற்கான ஏற்பாடுகளைகவனிக்கத் தொடங்கினர்.
மரணப்படுக்கையிலிருந்த உமர்-இப்ன்-அல்-கத்தாப்(ரலி) தன்னால் மீண்டு வரமுடியாதுஎன்பதை அறிந்து, தனக்குப்பின்னர் முஸ்லிம் உம்மாவின் தலைவராக ஒரு கலீஃபாவை நியமிக்கஎண்ணி, மற்ற அனைத்து சஹாபாக்களையும்(ஷ_ரா) அழைத்து ''இறைத்து}தர் மறைந்துவிட்டார்கள். அவர்கள் குறைஷியரின் ஆறுபேரிடம் மிகுந்த திருப்தி கொண்டவர்களாகஇருந்தார்கள்."" எனக்கூறி அலி(ரலி), உத்மான், தல்ஹாஹ்-இப்ன்-உபைதுல்லாஹ்,அஸ்ஸ_பைர்-இப்ன்-அல்அவ்வாம் சவூத்-இப்ன்-அபி-வகாஸ் மற்றும் அப்துர்ரஹ்மான்-இப்ன்-அவுஃப்ஆகிய ஆறு பெயரை குறிப்பிட்டார்கள். ''அவர்கள் தங்களிடையே பேசி முடிவுசெய்துதங்களுக்குள் ஒருவரை இஸ்லாத்தின் பிரதிநிதியாக, கலீஃபாவாக தேர்ந்தெடுக்கட்டும்"" என்றும்கூறினார்கள். மூன்று நாட்களில் எந்த முடிவும் ஏற்படாவிடில், அந்த ஆறுபேரில், எதிர்ப்பவரைகொன்றுவிடுவதற்காக ஐம்பது முஸ்லிம் படை வீரர்களையும் நியமித்தார்கள்.
இவை அனைத்தும்சஹாபாக்களின் முன்னிலையிலேயே கூறப்பட்டது. எனினும் எந்த சஹாபாவும் எதிர்ப்போமறுப்போ கூறாமல் முழுவதுமாக ஒப்புக்கொண்டனர்.இஸ்லாத்தில் ஒரு முஸ்லிமை கொலைசெய்யச் சொல்வதென்பது மிகப் பெரியவிசயமாகும். ஒரு முஸ்லிமை காயப்படுத்துவதே ஹராமாக்கப்பட்டுள்ள நிலையில்நபித்தோழர்களையே கொல்வதென்பது எவ்வளவு பெரிய செயல். இந்த நிலையில் சஹாபாவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, அனைவரும் சம்மதித்தனர். இதன்மூலம் ஒருகலீஃபாவை நியமிப்பது எவ்வளவு முக்கியக் கடமை என்பதை அறியலாம். சஹாபாக்களின்உயிரே போனாலும், ஒரு கலீஃபாவை நியமிக்க வேண்டியது அவசியம் என்பது இதன் மூலம் இதுதெளிவாகிறது.மூன்று நாட்களுக்கு மேல் கலீஃபா ஒருவர் இல்லாமல் இருப்பது ஒவ்வொரு முஸ்லிமிற்கும்பாவமாகும். அதற்கான முயற்சியில் அவர்கள் உடனடியாக ஈடுபடவேண்டும். அவ்வாறாககலீஃபாவை நியமிக்க முயற்சி செய்யும் பொழுது அதில் வெற்றி கிடைக்காவிடினும் பரவாயில்லை.ஏனெனில் கலீஃபாவை நியமிக்கப்பாடுபடுவது கடமை, அதில் வெற்றி கிடைப்பது நமது சக்திக்குஅப்பாற்பட்டது. நமது செயல்பாடுகட்கு மட்டுமே நாம் கேள்விகணக்கிற்கு உள்ளாவோம்.அச்செயல்ளின் விளைவுகள் அல்hலாஹ்(சுபு)வின் ஆணைப்படியாகும்.
கிலாஃபாவை நிலைநாட்டவேண்டியது ஃபர்த் எனத் தெரிந்தபின்னரும் அக்கடமையைச்செய்யாமல் இருப்பது அதற்குறிய பாவத்தைத் தேடித்தரும். கிலாஃபாவால் மட்டுமே மற்றையஅனைத்து இஸ்லாமியச் சட்டங்களும் வாழ்வில் நடைமுறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும்.எனவே கிலாஃபாவிற்காக முயற்சிசெய்யாமல் இருப்பது மற்றைய சட்டங்களையும் பின்பற்றமுனையாமல் இருப்பதற்குச் சமம். அந்தப்பாவச்சுமையானது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும்உள்ளது. எவர் ஒருவர் கிலாஃபாவை நிலைநாட்ட முனைகிறாறோ அவரது பாவச்சுமைநீங்கிவிடும். எனினும் அவர் அம்முயற்சியை கிலாஃபா ஒன்று வரும் வரையோ அல்லது தமதுஉயிர் பிரியும் வரையோ தொடர்ந்து செய்ய வேண்டும். எனவே அல்லாஹ்(சுபு) நம்மீதுகடமையாக்கியுள்ள கிலாஃபா ஒன்று இருப்பதும், இல்லாவிடில் அதனை நிலைநாட்டமுயற்சிப்பதும், ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஃபர்த் என்பதை அறியமுடியும்.கிலாஃபாவின் ஒற்றுமைஇறைவன் வழங்கியருளிய இஸ்லாமியச் சட்டமனைத்தையும் பின்பற்றி நடக்கும் கிலாஃபாஆட்சிமுறையானது ஒரே ஒரு தலைமையும், ஒரே ஒரு நாடும் கொண்டதாகும். அது இன்றையகாலகட்டத்திலுள்ள "ஃபெடரல் சிஸ்டம்" போன்றதல்ல. ஒன்றுக்கு மேற்பட்டஇஸ்லாமிய அரசு இருப்பதும், ஒன்றுக்கும் மேற்பட்ட தலைமை இருப்பதும் இஸ்லாத்தில்கடுமையாக கண்டிக்கப்பட்ட ஒன்று. அதற்கான ஷரிஆ ஆதாரங்கள் உள்ளன.
அப்துல்லா இப்ன்அம்ர் இப்ன் அல்ஆஸ் அறிவிக்கிறார்கள். ரசூலுல்லாஹ்(ஸல்) கூறுகிறார்கள்
"எவர் ஓர் இமாமிற்கு மனமுவந்து தன் சத்தியப்பிரமாணத்தை கொடுக்கிறாறோ, அவர் அந்தஇமாமின் கட்டளைப்படி நடக்க வேண்டும். அந்த இமாமிற்கு போட்டியாக இன்னொரு இமாம்வந்தால் அந்த இரண்டாவது இமாமை கொன்றுவிடவேண்டும்."
மேலும் அபுசெய்யத் அல்குத்ரி ரசூலுல்லாஹ்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்.
"இரண்டு கலீஃபாக்களுக்கு பைஆ(சத்தியப்பிரமாணம்) கொடுக்கப்பட்டால் அவர்களுள்இரண்டாமவரை கொன்றுவிடவேண்டும்."
அர்ஃபாஜா அவர்கள் ரசூலுல்லாஹ்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்,
"யார் ஒருவர் உங்களிடையே பிளவு ஏற்படுத்த முனைகிறாரோ அவரை கொன்றுவிடுங்கள்."
மேற்கண்ட ஹதீஸ்கள் வாயிலாக ஒரு தலைமைக்கு மேல் இருக்கமுடியாது என்பதைஅறியலாம். ஒரு முஸ்லிமாக இருந்தாலுமே அவரைக் கொல்லுதல் வலியுறுத்தப்பட்டுள்ளதால், ஒருதலைமையும், ஒரே நாடும், ஒரே உம்மாவும் எவ்வளவு முக்கியம் என்பதனை அறியலாம்.கிலாஃபாவானது மீண்டும் ஏற்படும்பொழுது அதன் முக்கிய செயல்பாடுகளுள் ஒன்றுஇன்றைய முஸ்லிம் பகுதிகள் அனைத்தையும் கிலாஃபா அரசின் கீழ் கொண்டுவந்து "ஒரே நாடு,ஒரே மக்கள்" என முஸ்லிம்கள் அனைவரையும், அவர்களின் செயல்பாடுகளையும் ஒரே அரசின் கீழ் கொண்டுவருவதாகும். இன்று காணப்படும் எல்லைக்கோடுகள் செயற்கையாகஉருவாக்கப்பட்ட ஒன்றாதலால் அது தகர்த்தெரியப்படும்.

Thursday, August 7, 2008

கிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து… பகுதி 2


ஒரே தீர்வு!! கிலாஃபா!

அல்லாஹ்(சுபு) தன்னை மட்டுமே வணங்குமாறு கட்டளையிட்டுள்ளான். அதாவது நாம்,நமது கொள்கைகள், சட்டதிட்டங்கள், ஆட்சிமுறை போன்ற அனைத்தையும் அல்லாஹ்(சுபு)ஆணையிட்டுள்ளபடியே அமைத்திடவேண்டும். அவற்றை குர்ஆன் மற்றும் நபிகளாரின் சுன்னாஆகியவற்றிலிருந்து நாம் பெற முடியும். இதையன்றி வேறு எதையும் ஏற்றுக்கொள்வதென்பது
'லாயிலாஹ இல்லல்லாஹ்'(வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை)என்பதனையே மறுப்பதாகும். நம்பிக்கை கொள்வதை மட்டுமன்றி, இஸ்லாம், வாழ்வின்பிரச்சனைகட்குத் தீர்வையும் வழங்குகிறது. அத்தகைய தீர்வினை நமது வாழ்வில்நடைமுறைப்படுத்துவதும், நாம் அல்லாஹ்(சுபு)வினை வணங்குவதேயாகும். முஸ்லிம்கள்,வாழ்வின் அனைத்து துறைகளிலும் இஸ்லாமை நடைமுறைப்படுத்தியிருந்த பொழுது, இஸ்லாமியசமுதாயம், உலகின் மேலோங்கிய சமுதாயமாகத் திகழ்ந்தது. எப்பொழுது இஸ்லாத்தின்மீதிருந்த பிடி தளர்ந்ததோ, அப்பொழுதே, சிறந்த அரசாகவும், மேலோங்கிய சமுதாயமாகவும்விளங்கிய முஸ்லிம்களின் மேலாண்மையும் சிறிதுசிறிதாகத் தளர்ந்தது. இன்று, இஸ்லாம்,வாழ்க்கையினின்றும் மறைந்து, மசூதிகளில் மட்டுமே கடைபிடிக்கப்படுவதாயிற்று. அதனால்முஸ்லிம்கள் வீழ்ந்து, பின்தங்கி, இழிநிலைக்கு ஆட்பட்டு, எதிரிகட்கு எளிதாக இரையாவதைகண்கூடாகக் காண முடிகிறது.

இஸ்லாத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதன் சட்ட திட்டங்களை, தனி மனித அளவில்மட்டுமன்றி, சமூகம், அரசு என எல்லா மட்டத்திலும் செயல்படுத்தினால் மட்டுமே முஸ்லிம்கள்மறுமலர்ச்சியடைய முடியும். 'நம்பிக்கை கொள்ளுதல்" என்ற அளவில் நிறுத்திவிடாமல்,'நடைமுறைப் படுத்துதல்" என்பதையும் இணைத்தாலன்றி முஸ்லிம்கள் முன்னேற முடியாது.அல்லாஹ்(சுபு)வின் அருளைப் பெற்று மேலோங்கிய சமூகமாகத் திகழ இவ்விரண்டும் இணையவேண்டும். இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொள்ளும் மக்கள், இஸ்லாம் அல்லாத பிறசட்டதிட்டங்களையே நிறைவேற்றுவதால், முஸ்லிம்கள் தொடர்ந்து நலிந்து, ஏமாற்றப்பட்டேஇருக்கின்றனர். யாராலும் அசைக்கமுடியாதவாறு இருந்த இஸ்லாமிய அரசினை ஒருவிதஅச்சத்தோடு பார்த்த எதிரிகள், இன்று தமது கைப்பாவைகளின் உதவியுடன் செயல்படுத்தும்அடக்குமுறையின் மூலம், இஸ்லாத்திற்கு மாறான ஒரு ஆட்சியமைப்பை உருவாக்கி,முஸ்லிம்களின் வளங்களை சுரண்டி, முஸ்லிம்களை அடிமைப்படுத்தி, இஸ்லாத்தையே பின்பற்றமுடியாமல் செய்துவிட்டனர்.

இவை எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு, இறைவன் அருளியுள்ளபடியான ஒரு இஸ்லாமியஆட்சியை, அதாவது கிலாஃபாவை நிலைநிறுத்துவதேயாகும். இஸ்லாமிய நிலங்களை ஆளும்இன்றைய கைப்பாவை அரசுகளை து}க்கி எறிந்து, கிலாஃபாவை நிலைநாட்டுவது இன்றையமுக்கியத் தேவை மட்டுமன்றி அல்லாஹ்(சுபு) நமக்கு இட்டுள்ள கட்டளையுமாகும்.

கிலாஃபா என்பது என்ன?

இஸ்லாமிய ஆட்சிமுறைக்கு இடப்பட்டுள்ள பெயர் கிலாஃபா ஆகும். அல்லாஹ்(சுபு)அருளியுள்ள ஷாPஆ சட்டதிட்டங்களை அமல் செய்து இஸ்லாத்தை உலகின் மற்ற பகுதிகட்கும்ஏந்திச் செல்கின்ற ஒரு அமைப்பே கிலாஃபா ஆகும். இது உலகளாவிய முறையில், முஸ்லிம்கள்அனைவருக்குமான தலைமைத்துவமும், இஸ்லாமிய ஆட்சி முறையுமாகும்.கிலாஃபா என்பது இமாராஹ் எனவும் அழைக்கப்படும். இரண்டும் ஒரே பொருளைக்குறிக்கின்ற வௌ;வேறு வார்த்தைகளாம். இதனை விளக்குகின்ற ஏராளமான ஹதீத்கள்உள்ளன. வௌ;வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இரண்டும் ஒன்றையே குறிக்கும்,அதாவது அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களைக்கொண்டு ஆட்சிபுரிவது என்பதே அது.

கிலாஃபா ஆட்சியில் வாழ்வது ஒரு முஸ்லிமிற்கு கட்டாயக்கடமை(ஃபர்த்)ஆகும்.

கிலாஃபா ஆட்சியில் மட்டுமே இஸ்லாமிய சட்டப்படி நாம் நடக்கமுடியும் என்பதால்கிலாஃபா ஆட்சியல் வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கட்டாயக் கடமையாகும். அதன்படிஅத்தகைய கிலாஃபா இல்லாத சமயத்தில் அதனை நிலைநாட்டுவதும் ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் ஃபர்த் ஆகும். தொழுகையைப் பேணுவது எவ்வளவு முக்கியமோ அதைப்போலவேகிலாஃபாவை நிலைநாட்டுவதும் அதிமுக்கியக் கடமையாகும். இந்த கடமையிலிருந்து எவரும்ஒதுங்கிக்கொள்ள முடியாது. அவ்வாறு ஒதுங்கிக்கொள்பவர்கள், அல்லாஹ்(சுபு)வின்கேள்விகணக்கிற்கு பதில் சொல்லியே தீரவேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனைஉண்டு என்பதை விளக்குகின்ற குர்ஆனிய வசனங்களும் ஹதீத்களும் ஏராளமாக உள்ளன.

கிலாஃபாவை நிலைநாட்டுவது கடமை என்பதற்கான ஆதாரங்கள் குர்ஆனிலும்,நபிகளாரின்(ஸல்) சுன்னாவிலும், சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்விலும் (இஜ்மா-அஸ்-ஸஹாபா) காணப்படுகிறது.

சுன்னாவிலிருந்து ஆதாரம்

முஸ்லிம் உம்மாவின் நலன்களை பாதுகாக்க ஒரு இஸ்லாமிய அரசும், அதன் ஒரே ஒருபிரதிநியும் இருக்கவேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதையும், அத்தகைய அரசு இல்லாவிடில்அதனை நிறுவுவது முஸ்லிம் உம்மா மீது ஃபர்த்(கடமை) ஆக்கப்பட்டுள்ளது என்பதையும்ஹதீஸ்கள் மூலமும் விளங்கிக்கொள்ளலாம்.அப்துல்லா இப்ன் உமர் அறிவிப்பதாக நஃபிஅ குறிப்பிடுவிடுதாக முஸ்லிமில்பதியப்பட்டுள்ளது.

நபிகளார் கூறுகிறார்கள்: அல்லாவின் பாதையில் பைஆ செய்பவர் மறுமை நாளில் எந்தஆதாரமும் தேவையின்றி இறைவன் முன் தோன்றுவர். ஆனால் பைஆ(சத்தியப்பிரமாணம்)செய்யாத நிலையில் மரணிப்பவரோ ஜஹிலிய மரணமடைபவராவர்.ஒவ்வொரு முஸ்லிமும் கலீஃபாவிற்கு பைஆ(சத்தியப்பிரமாணம்) கொடுத்திருக்க வேண்டும்.அவ்வாறான பைஆ கொடுக்காத நிலையில் யாரேனும் மரணித்தால் அவர் ஜஹிலிய மரணத்தையேதழுவுவர். ஜஹிலிய மரணம் என்பது காஃபிராக மரணிப்பதன்று மாறாக ஜஹிலிய மரணமென்பதுஇஸ்லாம் தன்னை வந்தடைவதற்கு முன் மரணிப்பதாகும். பைஆ என்பது கலீஃபாவிற்கு மட்டுமேகொடுக்கப்படுகிறது. அத்தகைய பைஆ கண்டிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும் செய்திருக்கவேண்டும் என்பதை நபிகளார் ஃபர்த்(கட்டாயக் கடமை) ஆக்கியுள்ளார்கள்.இந்த ஹதீஸில் 'கலீஃபாவிற்கு பைஆ கொடுப்பதுதான் ஃபர்த்" எனக் கூறப்படவில்லை.மாறாக ஒவ்வொருவரும் பைஆ செய்திருக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. எனவேஒவ்வொருவரும் பைஆ செய்திருக்க வேண்டுமென்றால் கலீஃபாவும் இருக்கவேண்டும் என்பதுஃபர்த் ஆகிறது. கலீஃபா இல்லாத நிலையில் அவரை நியமிக்க வேண்டும் என்பதும்கடமையாகிறது.

அபுஹ_ரைரா(ரழி) அறிவித்ததாக ஹிஸான்-இப்ன்-உர்வா (ரழி) நபிகளார்(ஸல்) கூறியதாககுறிப்பிடுகிறார்கள்.

"எனது மறைவிற்குப் பிறகு உங்களை நிர்வகிக்க பிரதிநிதிகள்(கலீஃபாக்கள்) தோன்றுவர். இறைவிசுவாசமுள்ள பிரதிநிதி அவ்விசுவாசத்துடன் வழிநடத்துவார். இறைவிசுவாசமற்ற ஒருவரும்அதன்படி வழி நடத்துவார். அவர்களது கட்டளைகள் உண்மையைச் சார்ந்திருந்தால் அதனையேபின்பற்றுங்கள். அவர்கள் உண்மையுடன் நடந்தால் அது உங்கட்கு நன்மையாக அமையும்.அவர்கள் தீங்கு செய்தாலோ அது அவர்கட்கெதிராகவே கணக்கிடப்படும்."
நபிகளார்(ஸல்) கூறியதாக அபுஹ_ரைரா (ரழி) அறிவித்ததாக முஸ்லிமில்பதியப்பட்டுள்ளதாவது.

"இமாம் ஒரு கேடயம் ஆவார். அவர் பின் நின்றே நீங்கள் போராட வேண்டும். அவர் மூலமாகவேநீங்கள் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டும்."
அபுஹாசிம் அறிவிப்பதாக முஸ்லிமில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
நான் அபுஹ_ரைராவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அடிக்கடி சொல்லியரசூலுல்லாவின்(ஸல்) கூற்று: ''நபிமார்கள் மக்கள் நலன்களை பேணிக்காத்தனர். ஒரு நபியின்மறைவிற்குப்பின்னர் வேறு நபிகள் தோன்றினர். ஆனால் எனது மறைவிற்குப்பின்னர் வேறு நபியாரும் வருவாரிலர், ஆனால் அதிகமாக கலீஃபாக்கள் தோன்றுவர்.""

நபிகளார்(ஸல்) கூறியதாக இப்ன் அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்.
"உம்மாவின் அமீர் தமக்கு விருப்பமல்லாத செயலை செய்வதாக ஒருவர் கருதினால் அவர்பொறுமையுடன் இருக்கவேண்டும். எவர் ஒருவர் ஒரு கைப்பிடி அளவேனும் இமாமை விட்டுபிரிந்து செல்கிறாறோ அவர் அடைவது ஜஹிலிய மரணமேயாகும்."
மேற்கண்ட ஹதீஸ்களினின்று முஸ்லிம் உம்மாவின் நலன்களை பாதுகாக்க,அல்லாஹ்(சுபு)விற்கு அடிபணிந்து நடக்கும் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதுதெளிவாகிறது. மேலும் அத்தகைய இமாம் முஸ்லிம் உம்மாவின் கேடயம் எனக்குறிப்பிடப்பட்டதிலிருந்து இமாம் இருப்பதன் அவசியம் விளங்கிக்கொள்ளப்படுகிறது. இமாம் அன்றிமுஸ்லிம் உம்மாவிற்குப் பாதுகாவல் இல்லை. எனவே இமாம் இருப்பது ஃபர்த் ஆகிறது.அல்லாஹ்(சுபு) நபிகளாருக்கு(ஸல்) கட்டளையிடுகையில் ஒரு செயலினால் ஏற்படும்கெட்ட விளைவுகளை கூறினால் அது தடுக்கப்படவேண்டிய ஹராம் என அறிந்து கொள்ளலாம்.அதே போல அத்தகைய செயல் இஸ்லாத்தின் கட்டளைகளை நிறைவேற்ற தேவையாகஇருந்தாலோ அல்லது அத்தகைய செயலன்றி இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த முடியாமல்போனாலோ அச்செயல் ஃபர்த் ஆகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதாவது இஸ்லாமிய நலன்களைநிறைவேற்றுவது குலஃபா(கலீஃபாக்கள்) மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அத்தகையகுலஃபா இருப்பது கடமையாகிறது. மேலும் கலீஃபாவிடமிருந்து ஒரு கைப்பிடியளவேனும் பிரிவதுஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே கலீஃபா இருப்பது ஃபர்த் ஆகிறது.

நபிகளார்(ஸல்) கூறியதாக அப்துல்லா-இப்ன்-அப்ரு (ரழி) அறிவித்ததாக புஹாரியிலுள்ள கூற்று.
"தங்களுக்குள் ஒரு அமீரை நியமிக்காமல் மூன்று பேர் இருப்பது தடுக்கப்பட்டுள்ளது."
நபிகளார்(ஸல்) கூறியதாக சையீத் அறிவித்ததாக இமாம் அபு தாவூத் கூறுகிறார்கள்.
"மூன்று பேர் பயணம் புறப்பட்டால் அவர்களிடையே ஒரு அமீரை நியமிக்க வேண்டும்."
இந்த அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம் உம்மாவிற்கு அமீர் ஒருவர் இருப்பதுஅவசியமாகிறது. மூன்று பேருக்கே ஒரு அமீர் நியமிக்க வேண்டியது ஃபர்த் எனில் இந்த முஸ்லிம்உம்மாவிற்கு ஒரு அமீரை நியமிப்பது எவ்வளவு பெரிய ஃபர்த் என்பதை தெரிந்து கொள்ளலாம்.மேலும் அமீர் 'தங்களிடையே ஒருவர்" என்பதால் அவர் 'ஒருவரே' எனவும் 'முஸ்லிம்" எனவும்அறிந்து கொள்ளலாம்.

இஜ்மா-அஸ்-ஸஹாபாவினின்று கிலாஃபா என்பது ஃபர்த் என்பதற்கானசான்று
இஸ்லாமிய சட்டங்களின் ஆதாரங்கட்கு குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றை அடுத்துசஹாபாக்களின் இஜ்மா(ஒருங்கிணைந்த தீர்வு) ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இஜ்மா-அஸ்-ஸஹாபாவின் கருத்துப்படி அனைத்து ஸஹாபாக்களும் நபிகளாரின்(ஸல்) மறைவிற்குப்பின்னர்,ஒரு கலீஃபாவை நியமிக்க ஒப்புக்கொண்டனர். அதன்படியே அபுபக்கர்(ரலி) முதல் கலீஃபாஆனார். அவரது மறைவிற்குப் பின்னர் உமர்(ரலி), பின்னர் உத்மான்(ரலி) ஆகியோரும்கலீஃபாக்களாக ஆக அனைத்து சஹாபாக்களும் ஒப்புக்கொண்டனர். கலீஃபாவை நியமிப்பது ஒருமுக்கியக்கடமை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.
நபிகளாரின்(ஸல்) மறைவிற்குப்பின்னரோஅல்லது மற்ற கலீஃபாக்களின் மறைவிற்குப்பின்னரோ, யார் கலீஃபாவாக வரவேண்டும் என்பதில்கருத்து வேறுபாடு இருந்தாலும், கலீஃபா ஒருவர் இருப்பது ஃபர்த் என்பதில் அனைத்துசஹாபாக்களும் உறுதியுடனிருந்தனர். இதன் மூலம் கலீஃபா ஒருவர் இருப்பது கடமைஎன்பதற்கு இஜ்மா-அஸ்-ஸஹாபாவும் சான்றளிக்கிறது.கலீஃபாவை நியமித்து அவருக்கு பைஆ கொடுப்பது எவ்வளவு முக்கியக் கடமைஎன்பதை நபிகளார்(ஸல்) அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் சஹாபாக்கள் நடந்துகொண்ட விதத்தினின்றும் அறியலாம். முஸ்லிம் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை
எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அடக்கம் செய்வது இறந்தவரைச்சுற்றியுள்ளோருக்கு ஃபர்த் ஆகும். அதைவிடுத்து உடலை அடக்கம் செய்யாமல் வேறுவேலைகளில் ஈடுபடுவது ஹராம் ஆகும். எனவே சஹாபாக்கள் முதலில் நபிகளாரின்(ஸல்)உடலை அடக்கம் செய்வதிலேயே ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் சில சஹாபாக்கள்நபிகளாரின்(ஸல்) உடலை அடக்கம் செய்வதை விட்டு, ஒரு கலீஃபாவை, முஸ்லிம் உம்மாவின்தலைவரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டனர். இறந்த உடலை அடக்கம் செய்யாமல் வேறுவேலைகளில் ஈடுபடுவது ஹராம் ஆதலால் மற்ற சஹாபாக்கள் அதனை எதிர்த்திருக்க வேண்டும்.ஹராமாக்கப்பட்ட எதனையும் எதிர்க்கும் உறுதியுள்ள சஹாபாக்கள், அடக்கம் செய்யப்படுவது தாமதமாவதை எதிர்க்காமல் கலீஃபாவை நியமிக்க முனையும் சஹாபாக்கட்கு ஆதரவாகஅமைதிகாத்தனர். ஒரு குறிப்பில் நபிகளார்(ஸல்) திங்கட்கிழமை இறந்ததாகவும், அடுத்த நாள்அபுபக்கர்(ரலி) கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் புதன் கிழமையே நபிகளாரின் உடல் அடக்கம் தகனம் செய்யப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இமாம் மாலிக் அவர்களது குறிப்பில்அபுபக்கர்(ரலி) தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செவ்வாய்கிழமையே அடக்கம் செய்யப்பட்டதாககுறிப்பிடப்பட்டுள்ளது. அபுபக்கர்(ரலி) கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர் ஆற்றியசொற்பொழிவு அனைவரும் அறிந்ததே. அதன்பிறகே நபிகளாரின்(ஸல்) உடலை குளிப்பாட்டும்பணி தொடங்கியது. அதன்பிறகு எங்கு அடக்கம் செய்வது எனப் பிரச்சனை எழுந்தபோதுகலீஃபாவாகிய அபுபக்கர்(ரலி) அவர்களின் முடிவுப்படி நபிகளார் இறந்த இடத்திலேயே அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது.நபிகளாரின் உடலை அடக்கம் செய்வதையும் விட, முஸ்லிம்கட்கு ஒரு பிரதிநிதியைநியமிப்பது ஒரு முக்கியக் கடமையாகக் கருதிய சஹாபாக்கள் அனைவரும் அதன்படிசெயல்பட்டனர். இதன்படி ஒரு கலீஃபாவை நியமிப்பது முஸ்லிம்கட்கு ஒரு முக்கியக்கடமைஎன்பதை அறிந்து கொள்ளலாம்.

Friday, August 1, 2008

கலீஃபாவிற்கான தகைமைகள்


கலீஃபா

ஆட்சி, அதிகாரத்தில் உம்மத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஷாPஆவை நிலைநாட்டும் பொறுப்புடையவரே கலீஃபா. ஆட்சியும் அதிகாரமும் உம்மத்திற்கே உரியவை என இஸ்லாம் வழியுறுத்துகிறது. ஆகவே ஷாPஆவை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை அல்லாஹ்(சுபு) உம்மத்திற்கு கடமையாக்கியிருக்கிறான்.


கலீஃபா என்பவர் முஸ்லிம்களாலேயே நியமிக்கப்படுவதால் ஆட்சி, அதிகாரத்திலும், ஷாPஆவை நிலைநாட்டுவதிலும் அவர் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இதனால் உம்மத்தின் சத்தியப்பிரமாணத்தை (பைஆவை) பெறும்வரை ஒருவர் கலீஃபாவாக – மாட்டார். பையத் வழங்கப்பட்டால் மட்டுமே கலீஃபாவாக ஒருவர் நியமிக்கப்படலாம். கலீஃபாவுக்கு பையத்தை வழங்கிய பின் அவருக்கு கட்டுப்படுவது உம்மத்திற்கு கடமையாகி விடுகிறது.


கலீஃபா நியமிக்கப்படுவதற்கு பையத் ஒரு நிபந்தனை என்பதால், அதை உம்மத் வழங்கும் வரை, முஸ்லிம்களை ஒருவர் ஆட்சி செய்தாலும்கூட அவரை கலீஃபாஎன அழைக்க முடியாது.


பதவிப்பெயர்


கலீஃபாவை கலீஃபா, இமாம், அமீருல் முஹ்மினீன் என ஸஹாபாக்கள் அழைத்ததற்கான ஆதாரங்களை ஹதீஸ்களிலும், இஜ்மா ஸஹாபாவிலும் காண முடிகிறது.


கீழ்வரும் ஹதீஸ்கள் அதற்கு சில உதாரணங்களாகும்.


“ நீங்கள் இரண்டு கலீஃபாக்களுக்கு பையத் செய்தால் இரண்டாமவரை கொலை செய்து விடுங்கள்” (முஸ்லிம்)


ரஸ_ல் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு அல் ஆஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்.


“ எவரேனும் ஒருவர் தனது கைகளாலும், இதயத்தாலும் ஒரு இமாமுக்கு பையத் செய்திருந்தால் (அந்த இமாமுக்கு) அவரால் முடியுமான வரை கட்டுப்பட்டு நடக்கட்டும்…” (முஸ்லிம்)


ரஸ_ல் (ஸல்) அவர்கள் கூறியதாக அவ்ப் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள்.


“ உங்களுடைய சிறந்த இமாம்கள் யாரெனில் நீங்கள் அவர்களை விரும்புவீர்கள், அவர்களும் உங்களை விரும்புவார்கள். அவர்கள் உங்களுக்காக பிரார்த்திப்பார்கள், நீங்களும் அவர்களுக்காகப் பிரார்த்திப்பீர்கள்…” (முஸ்லிம்)


ஆகவே ஹதீஸ்களிலிருந்து இஸ்லாத்தின் சட்டங்களை அமுல்படுத்தும் ஆட்சியாளருக்கு இமாம் அல்லது கலீஃபா என்ற தலைப்பே வழங்ப்பட்டுள்ளதை காண்கிறோம்.


அமீருல் முஹ்மினீன் என்ற தலைப்பைப் பொருத்தவரை அது உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அபா பக்ர் இப்னு சுலைமான் இப்னு ஹத்மா அவர்களிடம் அமீருல் முஹ்மினீன் என்ற பதம் எழுத்துகளில் முதலில் எப்போது பயன்படுத்தப்பட்டது என வினவியபோது தனது பாட்டியான அஸ்ஸஃப்பா (ரழி) அவர்கள் கூறியதாக அபா பக்ர் இப்னு சுலைமான் இப்னு ஹத்மா பின்வரும் தகவலை அறிவிக்கிறார்கள்.

“உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஈராக்கைப்பற்றியும், அதனது மக்களைப்பற்றியும் அறிவதற்காக இரண்டு உறுதியான நபர்களை தன்னிடம் அனுப்பும்படி ஈராக்கின் ஆளுநருக்கு கடிதமொன்றை உமர் (ரழி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அதன்படி லபீத் இப்னு ராபிஆ மற்றும் அதீ இப்னு ஹாத்திம் ஆகிய இருவரையும் ஆளுநர் அனுப்பி வைத்தார். மதீனாவை வந்தடைந்த இந்த இருவரும் பள்ளிவாசலில் அம்ரு இப்னு அல் ஆஸ்(ரழி) சந்தித்தார்கள். அப்போது அமீருல் முஹ்மினீனை சந்திப்பதற்கு தமக்கு அனுமதி பெற்றுத்தருமாறு கோரினார்கள். இதன்போது அம்ரு இப்னு அல் ஆஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ் மீது ஆணையாக, நீங்கள் அவரை மிகச்சரியான பெயரைக்கொண்டே அழைத்தீர்கள்; - அவர் அமீர், நாங்களோ விசுவாசிகள்(முஹ்மினீன்) என்றார்கள். பின்னர் அவர் உமர் (ரழி) அவர்களை சந்தித்து அஸ்ஸலாமு அலைக்கும் அமீருல் முஹ்மினீனே! எனச் சொன்னார்கள். அதற்கு உமர் (ரழி) அவர்கள் இந்த பெயர் குறித்து சிந்திக்க உங்களை எது து}ண்டியது எனக்கேட்;டாகள். அதற்கு அல் ஆஸ் (ரழி) அவர்கள் சொன்னார்கள்: லபீத் இப்னு ராபிஆ மற்றும் அதீ இப்னு ஹாத்திம் ஆகிய இருவரும் வந்து அவர்களது ஒட்டகங்களை பள்ளிவாசல் வளாகத்திலே தரித்துவிட்டு என்னை வந்து சந்தித்து, அம்ரே அமீருல் முஹ்மினீனை சந்திப்பதற்கு எமக்கு அனுமதி பெற்றுத்தாருங்கள் என்றார்கள். உண்மையில் அவர்கள் உங்களுக்கு சரியான பெயரைத்தான் சூட்டியிருக்கிறார்கள். நாங்கள் முஹ்மீன்கள், நீங்களோ எமது அமீர் என்றார்கள். இந்த சம்பவத்திலிருந்து அமீருல் முஹ்மினீன் என்ற தலைப்பை எழுத்துகளில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.” என்றார்கள்.

அதன்பின்பு தொடர்ந்து வந்த குலஃபாக்களை ஸஹாபாக்களின் காலத்திலும் அவர்களுக்கு பின்வந்த காலத்திலும் அமீருல் முஹ்மினீன் என அழைத்து வந்தார்கள். ( அல் முஸ்தத்ரக், அத்தபரானி )

கலீஃபாவிற்குரிய நிபந்தனைகள்


ஒருவர் கலீஃபாவாக நியமிக்கப்படுவதற்கு அவர் ஏழு தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். அவற்றில் ஒன்றை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லையென்றால் அந்நபர் கலீஃபாவாக நியமிக்கப்பட தகுதியற்றவர். அத்தகுதிகளாவன,


1. கலீஃபாவாக நியமிக்கப்படுபவர் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும். காபிர் ஒருவர் கலீஃபாவாக நியமிக்கப்படுவதும், அவரைப் பின்பற்றுவதும் ஹராமாகும்.


பின்வரும் குர்ஆன் வசனங்கள் அதனை வழியுறுத்துகின்றன.


“ அல்லாஹ் ஒரு போதும் முஸ்லிம்களின் மீதான ஒரு வழியை(அதிகாரத்தை) நிராகரிப்பாளர்களுக்கு வழங்கமாட்டான்” (4:141)


“ ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும், அவனது து}தருக்கும், உங்களில்; அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் கட்டுப்படுங்கள்” (4:59)


மேலுள்ள குர்ஆன் வசனத்தில் உலில் அம்ர் என்ற சொல் முஸ்லிம்களையே குறிக்கிறது. ஆகவே கலீஃபாவாக நியமிக்கப்படுபவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.


2. கலீஃபாவாக நியமிக்கப்படுபவர் ஒரு ஆணாக இருக்க வேண்டும். பெண்களை கலீஃபாவாக நியமிப்பது தடைசெய்யப்பட்டள்ளது. இதனை கீழ்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது.


பாரசீக மக்கள் கிஸ்ராவின் மகளை தலைவியாக்கியபோது, அதனை செவியுற்ற முஹம்மத்(ஸல்) அவர்கள்

பெண்களைத் தக்கள் ஆட்சியாளர்களாக ஆக்கியவர்கள் எப்பொழுதும் வெற்றி பெற மாட்டார்கள்.” என்று கூறியதாக புஹாரி (ரஹ்) அறிவிக்கிறார்கள்.


மேற்கூறிய ஹதீஸில் பெண்களை ஆட்சியாளர்களாக்கியவர்கள் வெற்றிபெறமாட்டார்கள் என்று முஹம்மத் (ஸல்) முன்னறிவிப்பு செய்தமையிலிருந்து கலீஃபாவாக மட்டுமல்லாது வேறு எந்த ஆட்சிப் பதவிகளிலும் பெண்களை நியமிப்பது தடைசெய்யப்பட்டிருப்பது தெளிவாகிறது. நீதித்துறை, ஆலோசனை சபை நிர்வாகம் போன்ற ஆட்சியியலுடன் சம்பந்தப்படாத பதவிகளில் பெண்களை நியமிப்பது இஸ்லாத்தில் ஆகுமானது.


3. கலீஃபாவாக நியமிக்கப்படுபவர் பருவ வயதை அடைந்தவராக இருக்க வேண்டும். பருவ வயதை எய்தாத ஒருவரை கலீஃபாவாக நியமிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.


இதனை கீழ்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.


மூன்று தரப்பினர் தங்களுடைய செயல்களுக்கு பதில் சொல்லக்கடமைப்படவில்லை. அவர்கள் யாரெனில் து}க்கத்திலிருப்பவர் விழிக்கும் வரை, ஒரு சிறுவன் பருவ வயதை அடையும்வரை, புத்தி சுயாதீனமற்றவர் புத்தி சுயாதீனம் அடையும் வரை” (அபு தாவூத்)


புஹாரியில் பதிவாகியுள்ள இன்னுமொரு ஹதீஸில் ஸெய்னப் பிந்த் ஹ_மைர் (ரழி) அவர்கள் தமது மகனை பையத் செய்வதற்காக ரஸ_ல் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்ற போது ரஸ_ல் (ஸல்) “இவர் இன்னும் சிறுவர்தானே” என்று கூறி அவரின் தோழைத்தட்டிவிட்டு அவருக்காக பிரார்த்தனை புரிந்தார்கள்.ஆகவே சிறுவன் ஒருவனின் பையத்தே வலிதாக இல்லாத நிலையில் அவனை கலீஃபாவாக்குவது வலிதாக முடியாது. மேலும் சிறுவர்கள் தமது செயல்களுக்கு பதில் கூறக்கடமைப்பட்டவர்களில்லை. ஆகவே அவர்களால் முழு உம்மத்தினது செயல்களுக்கு நிச்சயமாக பதில் கூற முடியாது.


4. கலீஃபாவாக நியமிக்கப்படுபவர் புத்தி சுயாதீனமுடையவராக இருக்க வேண்டும். இதற்கான ஆதாரங்களை நாம் மேலே குறிப்பிட்ட அபுதாவூத்தில் இடம்பெற்ற ஹதீஸில் பார்த்தோம்.

5. கலீஃபாவாக நியமிக்கப்படுபவர் நீதமானவராக இருக்க வேண்டும். ஒரு ‘பாஸிக்’ கை கலீஃபாவாக நியமிக்க முடியாது.


அல்லாஹ்(சுபு) குர்ஆனிலே குறிப்பிடுகிறான்,

“ உங்களில் நீதமான இருவரை சாட்சியாளராக்கிக் கொள்ளுங்கள்” (65:2)


ஒரு கலீஃபா முழு உம்மத்திற்கே சாட்சியாளராக இருப்பதால் அவர் நீதமானவராக இருப்பது கடமையாகிறது.


6. கலீஃபாவாக நியமிக்கப்படுபவர் ஒரு அடிமையாக இருத்தலாகாது. ஏனெனில் ஒரு அடிமையால் அவரது விடயங்களையே சுயமான செய்ய முடியாத நிலையில் முழு உம்மத்தினதும் விடயங்களை அவர் கவனிப்பது சாத்தியமில்லை.

7. ஒரு கலீஃபா கிலாஃபத்திற்குரிய நடவடிக்கைகளை செய்வதற்கு ஆளுமையுள்ளவராக இருக்க வேண்டும். ஏனெனில் இது பைஆவில் உள்ளடக்கப்பட்;டுள்ள ஒரு விடயமாகும். கிலாஃபத்தினுடைய நடவடிக்கைகளை குர்ஆன், ஸ}ன்னா அடிப்படையில் மேற்கொள்ள முடியாதவர் கலீஃபா என்ற நிலைக்கு வர தகுதியற்றவர்.

சில முன்னுரிமைத் தகுதிகள்


மேற்கூறிய ஏழு தகுதிகளையே இஸ்லாம் ஒரு கலீஃபாவிடமிருந்து எதிர்பார்த்தாலும் சில சிறப்பு அல்லது முன்னுரிமைத் தகுதிகளையும் சொல்லியிருக்கிறது. அவை கட்டாயமானவையல்ல. எனினும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஏழு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்கும் பட்சத்தில் அவர்களில் ஒருவருக்கு முன்னுரிமை வழங்குவதற்காக அவை கருத்திற்கொள்ளப்படலாம். அவர் குறைஷிக் குலத்தை சேர்ந்தவராக இருத்தல், முஜ்தஹித்தாக இருத்தல், சிறந்த போர் வீரராக இருத்தல் போன்ற முன்னுரிமைகளே அவையாகும்.