Tuesday, May 11, 2010

இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு - இஸ்லாமிய முறைமை - System of Islam - Nidam Al Islam

முஹம்மது(ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்(சுபு) அருளிய மார்க்கம்தான் இஸ்லாம். அது மனிதர்களுக்கும் படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வுக்கும் இடையிலுள்ள உறவையும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள உறவையும் ஒழுங்குபடுத்துகிறது. மனிதர்களுக்கும் படைப்பாளனுக்கும் இடையிலுள்ள உறவு அகீதா என்ற அடிப்படை கோட்பாடு மற்றும் வணக்க வழிபாட்டு (IBADAH)  செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆகவே வாழ்வியல் குறித்த அனைத்து விவகாரங்களையும் பற்றி பேசக்கூடிய ஒரு சித்தாந்தமாக இஸ்லாம் விளங்குகிறது. எந்த வகையான புரோகித சடங்கு சம்பிரதாய விவகாரங்கள் குறித்து விவாதிக்கின்ற சமய தத்துவமாக அது விளங்கவில்லை. ஏகாதிபத்தியம் என்ற எதேச்சதிகாரத்திலிருந்து அது தன்னை தூரமாக்கிக் கொண்டுவிட்டது. ஏனெனில் புரோகிதர்கள் குழுவோ அல்லது வாழ்வியல் விவகாரங்களை மட்டும் கவனிக்கின்ற உலகாயுத குழுவோ இங்கு கிடையாது. இஸ்லாத்தை தழுவுகின்ற அனைவரும் முஸ்லிம்கள் என்றே கருதப்படுகிறார்கள். இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் கடமையிலும் உரிமையிலும் அனைவரும் சமமே. ஆகவே மதகுரு என்பவரோ அல்லது மதசார்பற்றவர் என்பவரோ இங்கு கிடையாது. ஏனெனில், இஸ்லாத்தின் ஆன்மீக அம்சம் என்பதன் பொருள் என்னவெனில், அனைத்துப் பொருட்களும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டு அவனுடைய கட்டளைப்படி ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பதாகும். மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றியும் அவைகளை சூழ்ந்துள்ளது எது என்பது பற்றியும் அவைகளோடு தொடர்புடையது எது என்பது பற்றியும் விளக்கும் இந்த மகத்தான கருத்து, கண்ணோட்டம் நமக்கு  காண்பிப்பது என்னவென்றால் இந்த அனைத்துப் பொருட்களும் குறையுள்ளவை (Naaqis)  முழுமையற்றவை (a’ajiz)  தேவையுள்ளவை (Multtaj)  என்பதைத்தான். இவை அனைத்தும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டு அவனுடைய கட்டளைப்படி நிர்வகிக்கப்படுகின்றன என்பதையும் மனிதன் இந்த வாழ்க்கையில் அவனுடைய உள்ளார்ந்த விருப்பங்களையும் (Instinct)  உடல்சார்ந்த தேவைகளையும் (Organic Needs)  நிறைவு செய்து கொள்ளும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு செயலாக்க அமைப்பு (System- Nidam) தேவை என்பதையும் எந்தவித சந்தேகமுமின்றி உறுதிப்படுத்துகிறது. மனிதன் முழுமையற்றவனாக இருப்பதாலும் நிறைவான அறிவற்றவனாக இருப்பதாலும் இந்த செயலாக்க அமைப்பு அவனிடமிருந்து உருவாக முடியாது. மேலும் இந்த அமைப்பை உருவாக்கும் மனிதனது ஆற்றல் வேறுபாடுகளுக்கும் மாறுபாடுகளுக்கும் முரண்பாடுகளுக்கும் உட்பட்டதாக இருக்கும். இது இந்த அமைப்பில் முரண்பாடுகளை உருவாக்குவதற்கும் மனிதனை துயரத்தில் ஆழ்த்துவதற்கும் வழிவகுத்துவிடும். ஆகவே செயலாக்க அமைப்பு அல்லாஹ்(சுபு)விடமிருந்துதான் வரவேண்டும். எனினும் இஸ்லாமிய செயலாக்க அமைப்புக்கு (System of Islam) இணக்கமாக இருக்கும் மனிதன் அது அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்துள்ளது என்பதை கருத்திற்கொள்வதைவிட இந்த அமைப்பின் உலகாயுத பயன்களை அடைந்து கொள்வதை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டால், அங்கே ஆன்மீக அம்சம் அற்றுப்போகிறது. ஆகவே மனிதன் செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது, ஆன்மா (RUH) அவனிடத்தில் இருக்கும் வகையில், அல்லாஹ்(சுபு)வுடம் அவனுக்குள்ள உறவை விளங்கிக் கொண்ட அடிப்படையில், அவனுடைய (சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக தன்னுடைய செயல்பாடுகளை கண்டிப்பாக ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். இது ஏனெனில், ரூஹ் என்பது அல்லாஹ் (சுபு)வுடன் மனிதனுக்கு உள்ள உறவை அவன் உணர்ந்து கொள்வதாகும். செயல்பாடுகளை மேற்கொள்ளும் தருணத்தில் அல்லாஹ்(சுபு)வுடன் மனிதனுக்கு உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வு மனிதனுக்கு ஏற்படுவதுதான் இயற்பொருட்களையும் (Matter)  ஆன்மாவையும் (RUH)  ஒன்று கலப்பது என்பதாகும். ஆகவே அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வின் அடிப்படையில் மனிதன் அவனுடைய (சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக செயல்படுகிறான். செயல் என்பது இயற்பொருளாகும் (Matter).  அந்த செயலை மேற்கொள்ளும்போது அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்ளும் உணர்வுதான் ஆன்மாவாகும் (Spirit). எனவே அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வோடு அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் விளங்கிக்கொண்ட உணர்வோடு அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளின்படி ஒருவரின் செயல் வழி நடத்தப்படுவதுதான் இயற்பொருளை ஆன்மாவுடன் கலப்பது என்பதாகும். இதனடிப்படையில் குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் கொண்டு வரப்பட்ட அஹ்காம் ஷரிஆவின் அடிப்படையில் ஒரு முஸ்லிம் அல்லாதவர் செயல்படும் போது அவரது செயல் ஆன்மாவினால் வழிநடத்தப்படுவதில்லை. மேலும் இயற்பொருளையும் ஆன்மாவையும் ஒன்று கலக்கும் அம்சமும் அவரது செயலில் இடம் பெறுவதில்லை. அவர் இஸ்லாத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை அவர் விளங்கிக் கொள்ளவில்லை என்ற உண்மைதான் இதற்கு காரணம். அவர் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பை (System of Islam) மட்டும் பாராட்டி ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் தன் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டார்.






அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வுடன் அவனது(சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு முஸ்லிமின் நிலைக்கு இது நேர் மாறானது. அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு ஒரு முஸ்லிம் இணங்கி நடப்பதன் நோக்கம் அவனுடைய(சுபு) உவப்பை பெறுவதற்கே தவிர அமைப்பின் உலக பயன்களை பெற்றுக் கொள்வதற்காக அல்ல. ஆகவே இயற்பொருட்களில் ஆன்மீக விஷயங்கள் இடம்பெற்றிருப்பதும் செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது மனிதனிடம் ஆன்மா இடம் பெற்றிருப்பதும் அவசியமாகும். அனைவருக்கும் தெளிவாக விளங்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆன்மீக விஷயம் (Spiritual Aspects) என்பதன் அர்த்தம் அனைத்துப் பொருட்களும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். அதாவது, படைப்பினங்கள் படைப்பாளனுடன் உள்ள உறவை உணர்வது என்பதுதான் ஆன்மா எனப்படும். ஆகவே ஆன்மா என்பது படைப்பாளனுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்வது, அதாவது அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்வது. இதுதான் ஆன்மா (ரூஹ்), ஆன்மீகம் (ரூஹான்யா), ஆன்மீக விஷயங்கள் (நாஹியத் ரூஹ்யா) ஆகியவற்றைப் பற்றிய மிகச்சரியான சிந்தனையாகும். மற்ற சிந்தனைகள் தவறானவை. மனிதன் வாழ்வு பிரபஞ்சம் ஆகியவற்றைப் பொருத்த தீர்க்கமான மற்றும் பிரகாசமான (Spiritual Aspects) கண்ணோட்டம் இதுதான். இந்த சரியான கண்ணோட்டம் சரியான விளைவுகளை நோக்கியும் சரியான சிந்தனையின் பாலும் இட்டுச் சென்றுள்ளது.







சில மதங்கள் (Religion) பிரபஞ்சத்தில் புலன் உணர்வுக்கு உட்பட்டது (Mahsoos) புலன் உணர்வுக்கு மறைவானது (Mughayyah) ஆகிய இரண்டு அம்சங்கள் இருப்பதாக வாதிடுகின்றன. ஆன்மீக உயர்வு மற்றும் உடல்சார்ந்த விளைவு ஆகிய இரண்டையும் கொண்டவனாக மனிதன் இருக்கிறான் என்றும், மனித வாழ்வு இயற்பொருள் அம்சத்தையும் (Meterialistic) ஆன்மீக அம்சத்தையும் உடையதாக இருக்கிறது என்றும் கூறுகின்றன. புலன் உணர்வுக்கு உட்பட்டவைகள் புலன் உணர்வுக்கு மறைவானவைகளோடு முரண்படக்கூடியவை என்றும், ஆன்மீக உயர்தன்மை உடல்சார்ந்த விளைவுகளோடு இருக்க முடியாது என்றும், இயற்பொருட்கள் ஆன்மாவிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த மதங்கள் கூறுகின்றன. அவை இரண்டின் தன்மையின் காரணமாக ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணிக் கொள்வதில் இம்மதங்கள் திருப்தியடைகின்றன. ஆகவே அவை இரண்டும் ஒன்று கலக்க முடியாதது என்றும், ஒன்றின் மிகுதி மற்றொன்டின் குறைவுக்கு வழிகோலும் என்றும் கூறுகின்றன. இதன் முடிவாக மறுமையை விழைபவர்கள் ஆன்மீக பரிமாணத்தை பெற்றிருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த கருத்தின் அடிப்படையில் கிருஸ்தவத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் உருவாகின. “சீஸருக்கு கொடுக்க வேண்டியதை சீஸருக்கு கொடு, தேவனுக்கு கொடுக்க வேண்டியதை தேவனுக்கு கொடு” என்பதாக கிருஸ்தவம் கூறுகிறது. இதன்படி ஆன்மீக அதிகார அமைப்பை கையில் வைத்துக் கொண்டிருந்த கிருஸ்தவ பாதிரிகளும், மதகுருமார்களும் ஆன்மீக விஷயங்களுக்கு முன்னுரிமை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வாழ்வியல் அதிகார அமைப்பை கையில் எடுத்துக் கொள்ள கடும் முயற்சி மேற்கொண்டார்கள். இதன் விளைவாக இவ்விரு சாரர்களுக்கும் இடையில் கடும் போராட்டம் உருவாகியது. இதன் உச்சகட்ட நிகழ்வாக கிருஸ்தவச் திருச்சபை ஆன்மீக அதிகாரத்தோடு மட்டும் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் வாழ்வியல் விவகாரங்களில் தலையீடு செய்வதை விட்டும் தடுக்கப்பட்டது. மதம் புரோகிதத்தைச் சார்ந்தது என்றபடியால் அது வாழ்வியலிலிருந்து பிரிக்கப்பட்டது.






வாழ்வியலிலிருந்து மார்க்கத்தை பிரித்து வைக்கும் இந்த கொள்கைதான் முதலாளித்துவ சித்தாந்தத்தின் அடிப்படை கோட்பாடாக இருக்கிறது. மேற்கத்திய நாகரீகத்திற்கும், அறிவார்ந்த தலைமைக்கும் இதுதான் அடித்தளமாக விளங்குகிறது. மேற்கத்திய காலனி ஆதிக்கவாதிகள் அழைப்பு விடுப்பதும் உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்வதும் இந்த கொள்கையைத்தான். அதன் கலாச்சாரத்தின் பிரதான தூணாக இந்த சிந்தனை விளங்குகிறது. இந்த கோட்பாட்டின் அடித்தளத்தில் நின்று கொண்டுதான் மேற்கத்தியர்கள் முஸ்லிம்கள் இஸ்லாத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை அசைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். கிருஸ்தவத்துடன் ஒப்புநோக்கி இஸ்லாத்தை அவர்கள் கணக்கிடுகிறார்கள். இவை இரண்டையும் மதங்கள் என்று எண்ணுகிறார்கள். எனவே வாழ்வியலிலிருந்து மார்க்கத்தை பிரிக்க வேண்டும் என்ற இந்த கருத்தை எவர் கொண்டிருக்கின்றாரோ அவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்கத்திய அறிவார்ந்த தலைமையினால் இயக்கப்படும் முகவர் (Agent)  ஆவார். அறிந்த நிலையிலோ அல்லது அறியாத நிலையிலோ மேற்கத்திய காலணி ஆதிக்கத்தின் முகவராகவே அவர் பணியாற்றுகின்றார்.






நமது புலனறிவு விளங்கிக் கொண்ட பொருட்களை இயற்பொருள்  (Matter)  என்றும், அவைகள் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டுள்ளன என்ற உண்மை அவைகளிடமுள்ள ஆன்மீக அம்சத்தை தீர்மானிக்கிறது என்றும் இஸ்லாம் கருதுகிறது. ஆன்மா என்பது அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்வதாகும். ஆகவே இயற்பொருளிலிருந்து அதன் ஆன்மீக அம்சம் எப்போதும் பிரியாதிருக்கின்றது. எனவே ஆன்மீக உயர்தன்மை என்ற ஒன்றோ அல்லது உடல்சார்ந்த விருப்பம் என்ற ஒன்றோ இங்கே இருப்பதில்லை. மாறாக, மனிதனுக்கு உடல்சார்ந்த தேவையும், உள்ளார்ந்த உணர்வுகளும் இருக்கின்றன. அவைகளை அவன் நிறைவு செய்ய வேண்டும். மனிதனிடம் இடம் பெற்றுள்ள உள்ளார்ந்த உணர்வுகளில், அடிபணியும் உள் உணர்வு (Reverence Instinct)  ஒன்றாகும். இதன் அர்த்தம் அவனுக்கு ஒழுங்குபடுத்தும் (Organiser)  ஒரு படைப்பாளன் தேவை என்பதாகும். இந்த உணர்வு அவனிடம் இயல்பாக இடம்பெற்றுள்ள உள்ளார்ந்த பலவீனத்தின் விளைவாகும். உள்ளார்ந்த உணர்வுகளை நிறைவு செய்து கொள்வதை இயற்பொருள் அம்சமாகவோ (Meterial Aspect)  அல்லது ஆன்மீக அம்சமாகவோ (Spiritual Aspect)  அழைக்க முடியாது. மாறாக, அதை நிறைவேற்றுதல் என்றே கருத வேண்டும். அல்லாஹ்(சுபு) அருளியுள்ள செயலாக்க அமைப்புக்கும் அவனோடு(சுபு) உள்ள உறவுக்கும் இணக்கமான முறையில் உடல் சார்ந்த தேவைகளையும் உள்ளார்ந்த உணர்வுகளையும் மனிதன் நிறைவு செய்து கொண்டால், இந்த நிறைவு செய்தல் ரூஹ்ஹினால் இயக்கப்படுகிறது என்று பொருள். அதே சமயத்தில் இந்த நிறைவு செய்தல் ஒரு செயலாக்க அமைப்பு இன்றியோ அல்லது அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்படாத ஒரு செயலாக்க அமைப்பின் அடிப்படையிலோ நிறைவு செய்யப்பட்டால் அது இயற்பொருள் (Meteialistic)  அடிப்படையில் நிறைவு செய்யப்படதாக இருக்கும். அது மனிதனின் துன்பத்திற்கு வழி வகுத்துவிடும். இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வு (procreation instinct) ஒரு செயலாக்க அமைப்பின்றியோ அல்லது அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்படாத ஒரு செயலாக்க அமைப்பின்படியோ நிறைவு செய்யப்பட்டால் அது மனிதனை துன்பத்திற்கு உள்ளாக்கிவிடும். இதற்கு மாறாக அல்லாஹ்(சுபு) அருளிய திருமணம் என்னும் செயலாக்க அமைப்பின்படி அதாவது இஸ்லாத்தின் அஹ்காம் ஷரிஆவின்படி நிறைவு செய்யப்பட்டால் அது மன அமைதியை விளைவிக்கின்ற திருமணமாக இருக்கும். அடிபணியும் உள்ளார்ந்த உணர்வு ஒரு செயலாக்க அமைப்பு இன்றியோ அல்லது மனிதர்களையும் சிலைகளையும் வணங்கி வழிபடுவது போன்ற அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்படாத செயலாக்க அமைப்பின்படியோ நிறைவு செய்யப்பட்டால் அது இணைவைத்தல் (ஷிர்க்) அல்லது நிராகரித்தலாகவே (குஃப்ர்) இருக்கும். இஸ்லாத்தின் அஹ்காம் ஷரிஆவின்படி அது நிறைவு செய்யப்பட்டால் அது இபாதத் ஆகும். ஆகவே மனிதனுக்கு அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வின் அடிப்படையில் ஒவ்வொரு பொருட்களிலும் ஆன்மீக அம்சத்தை அவசியம் உணர வேண்டும். மேலும் அனைத்து செயல்பாடுகளையும் அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக மேற்கொள்ள வேண்டும். வேறு வகையில் கூறினால் செயல்கள் யாவும் ஆன்மாவினால் இயக்கப்பட வேண்டும். ஆகவே செயல்பாடுகளில் இரண்டு பகுதி என்பது கிடையாது. உண்மையில் அது ஒன்றே ஒன்றுதான். அதுதான் செயல் (Action). ஒரு செயலை இயற்பொருள் அம்சத்தை மட்டும் உடையது என்றோ அல்லது ஆன்மாவினால் இயக்கப்பட்டது என்றோ விளக்குவது அந்த செயல்பாட்டைக் கொண்டு அல்ல, மாறாக இஸ்லாத்தின் விதிமுறைகளுக்கு (அஹ்காம் ஷரிஆ) ஏற்றபடி அது இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை பொறுத்ததுதான். உதாரணமாக ஒரு முஸ்லிம் எதிரியை போர்க்களத்தில் கொல்லும்போது அது ஜிஹாத் என்று கருதப்படுகிறது. அந்தச் செயலுக்கு நற்கூலி உண்டு. ஏனெனில் அந்த செயல் இஸ்லாத்தின் அஹ்காம் ஷரிஆவினால் இயக்கப்பட்டது. அதே மனிதர் முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத ஒரு அப்பாவி மனிதனைக் கொன்றால் அவரது செயல் ஒரு கொலையாக கருதப்படும். அதற்காக அவர் தண்டிக்கப்படுவார். ஏனெனில் அது அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு எதிரானது. இரண்டு செயல்களும் கொல்லுதல் என்ற ஒன்றுதான். மேலும் அவை மனிதனிடமிருந்தே வெளிப்படுகின்றன. எனினும் ஆன்மாவினால் இயக்கப்படும்போது கொல்லுதல் வணக்கமாகிவிடுகிறது (Worship - Ibadah).  அவ்வாறு நடைபெறாத போது அது கொலையாகி விடுகிறது. ஆகவே ஒரு முஸ்லிம் தன்னுடைய செயல்களை ஆன்மாவின்படி இயக்குவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளான். இயற்பொருளையும் ஆன்மாவையும் ஒன்று கலப்பது சாத்தியமானது மட்டும் அல்ல, மாறாக கடமையானதும்கூட. ஆன்மாவிலிருந்து இயற்பொருளை பிரிப்பதற்கு அனுமதியில்லை. வேறு வகையில் கூறுவதென்றால் மனிதனுக்கு அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வின் அடிப்படையில்; அவனுடைய(சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளின்படி செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் நிலையிலிருந்து எந்த செயலையும் பிரிப்பதற்கு அனுமதியில்லை. இதனடிப்படையில் இயற்பொருள் அம்சத்திலிருந்து ஆன்மீக அம்சத்தை பிரிப்பதை மறைமுகமாக குறிப்பிடும் அனைத்தையும் நீக்க வேண்டும். ஆகவே இஸ்லாத்தில் மதகுரு அல்லது மதப் புரோகிதர் என்பவர் கிடையாது. எந்தவிதமான புரோகித பணி செய்யும் ஆன்மீக அதிகார அமைப்பும் கிடையாது, மார்க்கத்திலிருந்து பிரிக்கப்பட்ட வாழ்வியல் விவகார அதிகார அமைப்பும் கிடையாது. மாறாக இஸ்லாம் என்பது ஒரு மார்க்கம். அதன் பிரிக்க முடியாத பகுதி இஸ்லாமிய அரசு ஆகும். தொழுகையைப் போன்ற அரசு என்பதும் அஹ்காம் ஷரிஆவின் ஒரு தொகுப்பு ஆகும். இஸ்லாத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும், இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழிமுறையாக அது இருக்கிறது. ஆகவே மார்க்கத்தை ஆன்மீக அச்சத்தோடு சுருக்கி, அதை அரசியலை விட்டும், ஆட்சியை விட்டும் பிரிக்கும் எந்த ஒன்றையும் கட்டாயம் அழித்துவிட வேண்டும். ஆகவே ஆன்மீக விவகாரங்களை மட்டும் பிரத்தியேகமாக கவனித்துக் கொள்ளும் அனைத்து அமைப்புகளையும் உடனே ஒழித்துவிட வேண்டும். இந்த வகையில் பள்ளிவாசல் திணைக்களங்கள் ஒழிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். ஷரிஆ நீதிமன்றங்களும் உரிமையியல் நீதிமன்றங்களும் ஒழிக்கப்பட்டு இஸ்லாத்தின் அடிப்படையில் நீதித்துறை ஒன்றாக மாற வேண்டும். ஏனெனில் இஸ்லாத்தின் அதிகார அமைப்பு ஒன்றுதான். இஸ்லாம் என்பது அகீதாவும் அதன் செயலாக்க அமைப்பும் (System-Nidam)  கொண்டது. அகீதா என்பது அல்லாஹ்(சுபு) மீதும், மலக்குகள் மீதும் வேதங்கள் மீதும், தூதர்கள் மீதும், நியாயத்தீர்ப்பு நாள் மீதும் நன்மை தீமை அல்லாஹ்(சுபு)விடமிருந்து வருகின்றன எனக்கூறும் அல்களாவல்கத்ர் மீதும் நம்பிக்கை கொள்வதாகும். பகுத்தறிவைக் கொண்டு அறிந்து கொள்ளும் விதத்தில் இஸ்லாம் அகீதாவை அறிவின் மீது கட்டமைத்து இருக்கிறது. இதில் அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை (Existence of God)  முஹம்மது(ஸல்) அவர்களின் தூதுத்துவம் மற்றும் இறைமறை குர்ஆன் ஆகியவை அடங்குகின்றன. நியாயத்தீர்ப்பு நாள், மலக்குகள், சுவனம், நரகம் ஆகிய புலன் அறிவுக்கு அப்பாலுள்ள அகீதாவின் விஷயங்கள் சங்கைமிக்க குர்ஆன் மற்றும் ஹதீஸ் முத்தவாத்திர் ஆகிய திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட ஆதார மூலங்களின் அடிப்படையில் நம்பப்படுகின்றன. இவை இரண்டும் அறிவார்ந்த ஆதாரத்தின் மீது நிறுவப்பட்டவைகள். இஸ்லாம், அறிவை (சட்ட ரீதியான) பொறுப்புக்கு அடிப்படையாக ஆக்கியிருக்கிறது.






இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு (System - Nidam)  அஹ்காம் ஷரிஆவாகும். அது மனிதர்களின் விவகாரங்களை ஒழுங்குபடுத்துகிறது. இஸ்லாமிய செயலாக்க அமைப்பு பொதுவான முறையிலும் பொதுவான அர்த்தங்களிலும் மனிதனின் அனைத்து விவகாரங்களையும் கையாண்டுள்ளது. இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும்போது, இந்த பொது அர்த்தங்களிலிருந்து அதன் விரிவான சட்டங்களை ஒருவர் பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே குர்ஆனும் சுன்னாவும் பொதுவான அர்த்தங்களைக் கொண்டது. மனிதன் என்ற அந்தஸ்த்தில் அது அவனது பிரச்சினைகளை கையாள்கிறது. இந்த பொது அர்த்தங்களிலிருந்து வெவ்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு இடங்களிலும் உருவாகும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை முஜ்தஹிதீன்கள் கொண்டு வருவார்கள்.





மனிதர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் இஸ்லாம் வேறுபாடு இல்லாத ஒரே அணுகுமுறையைக் கொண்டதாக இருக்கிறது. விளங்கிக் கொள்ளும்வரை பிரச்சினையை முழுமையாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்து, சரியாக அதை விளங்கிக் கொண்டு பிறகு அதனோடு தொடர்புடைய ஷரிஆ ஆதாரங்களை ஆய்வு செய்து இறுதியில் அந்த ஆதாரங்களின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை கொண்டு வருவதற்காக முஜ்தஹீதுகளை இஸ்லாம் வரவேற்கிறது. இவ்வாறுதான் ஒரு முஜ்தஹீத் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதற்காக ஷரிஆ ஆதாரங்களிலிருந்து குக்கும் ஷரிஆவை முடிவு செய்கிறார். வேறு எந்த வழிமுறைகளும், இஸ்லாத்திற்கு பயன்படாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் மனிதன் எதிர்கொள்கின்ற எந்த பிரச்சினையாக இருந்தாலும், அதை மனித வர்க்கத்தின் பிரச்சினையாகவே ஆய்வு செய்ய வேண்டும். பொருளாதாரம், சமூகம், அரசியல் அல்லது வேறு எந்த வகை பிரச்சினையாக இருந்தாலும் அதை தனிப்பட்ட துறைக்கு சார்புடையதாக ஆய்வு செய்யக்கூடாது. மாறாக, பிரச்சினைக்கு தொடர்புடைய அல்லாஹ்(சுபு)வின் குக்குமை அறிந்து கொள்ளும் பொருட்டு குக்கும் ஷரிஆ தேவைப்படும் மனித இனத்தின் ஒரு பிரச்சினையாகவே அதை ஆய்வு செய்ய வேண்டும்.







Monday, April 26, 2010

இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறை - (Daw'ah)

இஸ்லாமிய அழைப்புப்பணி பற்றி சிந்திக்கும்போது சில முக்கிய விடயங்களை தெளிவாக முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவற்றில் முக்கியமானதொரு விடயம்தான் இஸ்லாத்தை பின்பற்றுவதால் முஸ்லிம்கள் உலகில் பின்னடைவு எய்திடவில்லை. மாறாக, இஸ்லாத்தை பின்பற்றுவதை கைவிட்ட நாளிலிருந்துதான் அவர்களின் பிற்போக்கு நிலை துவங்கியது என்பதுபற்றிய விடயமாகும். அந்நியக் கலாச்சாரம் தங்கள் மண்ணில் நுழைவதற்கும், மேற்கத்திய சிந்தனை தங்கள் நெஞ்சங்களை ஆட்கொள்வதற்கும் முஸ்லிம்கள் அனுமதித்தார்கள். இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை கைவிட்டதாலும், அதனுடைய அழைப்புப் பணியை (Daw'ah) புறக்கணித்ததாலும், அதன் சட்டங்களை தவறாக செயல்படுத்தியதாலும் அவர்கள் வீழ்ச்சியுற்றார்கள். ஆகவே, இன்று முஸ்லிம்கள் வந்து அடைந்திருக்கும் அதளபாதாளத்திலிருந்து அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும் வேண்டுமெனில் முஸ்லிம்கள் முற்று முழுதாக இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு கட்டாயம் திரும்பிட வேண்டும். எனினும் இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்வதன் மூலமும், இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை உலகெங்கிலும் எடுத்துச் செல்வதன் மூலமும், ஒரு இஸ்லாமிய அரசை நிறுவினாலன்றி முழுமையான இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு முஸ்லிம்களால் திரும்பிவிட இயலாது. பின்னர் அந்த அரசு இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை அழைப்புப்பணி மூலம் உலகெங்கிலும் எடுத்துச் செல்லும்.ஏனெனில், இஸ்லாம் மட்டுமே உலகை சீர்திருத்தும் ஆற்றல் பெற்றது. மேலும் இஸ்லாத்தின் மூலமாக அல்லாமல் உண்மையான மறுமலர்ச்சியை கொண்டு வர இயலாது. அது முஸ்லிம்களுக்கு என்றாலும் அல்லது மற்றவர்களுக்கு என்றாலும் சரியே.







அறிவார்ந்த தலைமையாக உலகெங்கும் அழைப்புப்பணி எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதிலிருந்து செயலாக்க அமைப்பு (முறைமை) (System - நிதாம்) பிறக்கிறது. மேலும் அனைத்து சிந்தனைகளும் இந்த அறிவார்ந்த தலைமை மீதுதான் கட்டமைக்கப்படுகின்றன. மேலும் இத்தகைய சிந்தனையிலிருந்துதான் விதிவிலக்கு ஏதுமின்றி ஒருவரை ஆதிக்கம் செலுத்தும் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தின் அனைத்துக் கருத்துக்களும்(Concepts) பிறக்கின்றன.








கடந்த காலங்களில் அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட்ட அதே முறையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் உதாரணத்தோடு அவர்களின்(ஸல்) வழிமுறையிலிருந்து சற்றும் விலகிச் செல்லாமல் இன்றைய நாட்களிலும் அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும். கால மாற்றத்தின் வேறுபாட்டிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் இவை சாதனங்களிலும், தோற்றங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களே ஒழிய அடிப்படையில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை. யுகங்கள் மாறிய போதிலும், மக்களும் இடங்களும் மாறியப் போதிலும் வாழ்க்கையின் சாரமும் (Essence of life) உண்மை நிலையும் மாறிவிடவில்லை. அவை மாறவும் இயலாது.







ஆகவே அழைப்புப்பணி மேற்கொள்வதற்கு வெளிப்படையான அணுகுமுறையும், மன உறுதியும் ஆற்றலும் சிந்தனையும் தேவைப்படுகின்றன. மேலும், இஸ்லாத்தின் சிந்தனைக்கும் அதன் வழிமுறைக்கும் (Fikrah & Tareeqah - Thought and Method)  முரண்பாடாக உள்ள அனைத்தையும் தீவிரமாக எதிர்க்கக்கூடிய மனோதிடமும் வேட்கையும் அழைப்பின்போது தேவைப்படுகின்றன. அழைப்புப்பணியைச்சூழவுள்ள சூழலும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அழைப்பாளர்களுக்கு பாதகமாகவோ, அல்லது சாதகமாகவோ இருந்த போதிலும் சமூகத்தில் ஊடுருவியிருக்கின்ற தவறான அடிப்படைகளை வெட்ட வெளிச்சமாக்குவதும் அவற்றை எதிர்ப்பதும் அழைப்பாளர்களுக்கும் அதன் இயக்கத்திற்கும் மிக முக்கிய கடமையாகிறது.







இங்கே மக்களோடு ஒத்துப் போவதாக இருந்தாலும், அல்லது ஒத்துப்போகவில்லையென்றாலும், அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தாலும் மக்களின் மரபுகளுக்கு இணக்கமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இறுதியான இறையாண்மை (Sovereignty - Siyadah) இஸ்லாமிய சித்தாந்தத்திற்கே மட்டுமே உரியது என்பதை நிலைநாட்டும் விதமாக அழைப்புப்பணி மேற்கொள்வது அவசியமாகிறது.





அழைப்புப்பணி செய்பவர்கள் மக்களுக்கு முகஸ்துதி செய்ய மாட்டார்கள். அதிகாரமுடையவர்களுக்கு அடிபணிய மாட்டார்கள். மக்களின் மரபுகளையும், பாரம்பரியத்தையும் லட்சியம் செய்ய மாட்டார்கள். மக்கள் தங்களை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது ஏற்றுக்கொள்ளவில்லையா என்பதில் கவனம் செலுத்த மாட்டார்கள். மாறாக, அவர்கள் சித்தாந்தத்தை மட்டும் பின்பற்றுகிறவர்களாகவும், அதைத் தவிர வேறு ஒன்றையும் பொருட்டாக எண்ணாதவர்களாகவும், அதனை மட்டுமே முழுமையாக எடுத்துரைப்பவர்களாகவும் இருப்பார்கள். மேலும் ஏனைய சித்தாந்தங்களை பின்பற்றுகிறவர்களிடம் அதனை அவர்கள் பின்பற்றிவருமாறு கூறுவதற்கு எங்கும் அனுமதியில்லை. இதற்கு மாறாக, நிர்பந்தம் ஏதுமில்லாமல் இந்த சித்தாந்தத்தை (இஸ்லாம்) தழுவுவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஏனெனில் அழைப்புப் பணிக்கு தேவைப்படுவது என்னவென்றால், இஸ்லாத்திற்கு இணையாக எந்த சித்தாந்தமும் இருக்க முடியாது என்றும், இஸ்லாத்திற்கு மட்டும்தான் இறையாண்மை (Sovereignty - Siyadah)  உரியது என்றும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதும் அதனை எடுத்தியம்புவதும்தான்.






அவன்தான் தனது தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் ஏனைய தீன்களை(வாழ்வொழுங்குகளை) மிகைக்கும் பொருட்டு அனுப்பி வைத்தான். இதனை இணை வைப்பவர்கள் வெறுத்த போதிலும் சரியே. (அத்தவ்பா : 33)






இறைதூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மகத்தான செய்தியுடன் இந்த உலகத்திற்கு வந்தார்கள். முழு உலகத்திற்கும் வெளிப்படையாக அறைகூவல் விடுத்தார்கள். அவர்கள்(ஸல்) தனது சத்தியத்தை உறுதியுடன் விசுவாசித்தார்கள். மக்களை சத்தியத்தின் பால் அழைத்தார்கள். மேலும், கருப்பர்களையும், வெள்ளையர்களையும், ஆட்சியாளர்களையும், சாமானியர்களையும் அவர்களின் பாரம்பரியம், மரபு, மதம், கோட்பாடு ஆகியவற்றின் வேறுபாடு எதையும் பாராமல் அனைவரையும் இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். இஸ்லாத்தின் மகத்தான செய்தியை விடுத்து வேறு எது ஒன்றின்பாலும் அவர்கள் (ஸல்) கவனம் செலுத்தவில்லை. குறைஷியர்களின் பொய்யான தெய்வங்களை கடுமையாக சாடுவதின் மூலம் தங்கள் அழைப்புப்பணியை ஆரம்பித்தார்கள். அவர்கள்(ஸல்) தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தன்னந்தனியாக நின்ற போதிலும் குறைஷியர்களின் அடிப்படை கோட்பாட்டினை கடுமையாக எதிர்த்து அதை சாடினார்கள். அவர்களுக்கு (ஸல்) உதவி செய்பவர்கள் யாரும் இல்லை. அவர்கள்(ஸல்) அழைப்பு விடுக்கும் இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத தீவிரமான நம்பிக்கை ஒன்றைத் தவிர எந்தவிதமான ஆயுதமோ உதவியோ அவர்களிடத்தில்(ஸல்) இல்லை. அரபு மக்களின் பாரம்பரியம், மரபு, மதம் கோட்பாடு ஆகியவற்றை அவர்கள்(ஸல்) துளியளவு கூட லட்சியம் செய்யவில்லை. இந்த வகையில் அவர்கள்(ஸல்) எந்த விதமான மரியாதையையோ அல்லது பணிவையோ அவர்களிடம் காண்பிக்கவில்லை.







இதுபோலவே, அழைப்புப்பணி செய்பவர்கள் அனைத்தையும் எதிர்த்து ஆக வேண்டும். அவர்கள் எதிர்ப்பவற்றில் மக்களின் பாரம்பரியம், மரபு, தவறான சிந்தனை மற்றும் தவறான கருத்துக்கள் ஆகியவைகள் அடங்கும். வெகுஜனக் கருத்து (Public Opinion)  தவறாக இருக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக கடும் போராட்டம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதை செய்ய வேண்டும். அவற்றை பின்பற்றுகிறவர்களுடைய வெறித்தனங்களுக்கு ஆளாக நேரிடினும், உருக்குலைந்த கொள்கைகளில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களின் கடும் பகையை எதிர்கொள்ள நேரிடினும், அவர்களின் மதத்தையும், அடிப்படை கோட்பாட்டினையும் எதிர்த்தெ ஆக வேண்டும்.






இலேசான சலுகை கூட காட்டாமல், இஸ்லாமிய நெறிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கரிசனம் அழைப்புப்பணி மேற்கொள்கிறவர்களுக்கு அவசியமாக இருக்க வேண்டும். எந்தவிதமான சமரசத்தையோ, சலுகையையோ ஏற்றுக் கொள்ளக்கூடாது. கவனக்குறைவையும், காரியங்களை ஒத்திப்போடும் பழக்கத்தையும் அறவே விட்டொழிக்க வேண்டும். இதற்கு மாறாக பிரச்சினைகளை, முழுமையாக நிர்வாகம் செய்து, உறுதியான முறையில் அவறிற்கான உடனடித் தீர்வு காண வேண்டும். சத்தியத்திற்கு இடையூறான எந்த பரிந்துரையையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. தாக்கீஃப் கோந்திரத்தார், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு நிபந்தனையாக, தமது வழிபபாட்டுச்சிலையான அல் லாத்தை (Al laat)  உடைத்தெறியாது, மூன்று வருடங்கள் தம்முடன் வைத்துக் கொள்வதற்கும், தொழுகையிலிருந்து விலகி இருப்பதற்கும் அனுமதிகோரி அனுப்பி வைத்த தூதுக்குழுவினரின் வேண்டுகோளை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு வருடங்களுக்கு அல்லாத்தை விட்டு வைக்க வேண்டும். அல்லது ஒரு மாதத்திற்கேனும் அதை விட்டு வைக்க வேண்டும் என அவர்கள் கேட்டதைக்கூட இறைதூதர்(ஸல்) மறுத்துவிட்டார்கள். இந்த வேண்டுகோளை அவர்கள் உறுதியாகவும், இறுதியாகவும் எந்தவித தயக்கமோ அல்லது இரக்கமோ காட்டாமல் மறுத்து விட்டார்கள். இது ஏனெனில் ஒன்று மனிதன் விசுவாசம் கொள்ள வேண்டும் அல்லது நிராகரித்து விட வேண்டும். அதன் விளைவாக ஒன்று சுவனம் செல்ல வேண்டும் அல்லது நரகம் செல்ல வேண்டும் என்பதுதான். எனினும் தங்கள் கைகளால் அந்த உருவச்சிலை உடைபட வேண்டாம் என்ற அவர்களின் கோரிக்கையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதன்படி அபூ சுஃப்யானையும், அல்மூஹீரா இப்னு ஷீஆபாவையும் அதனை உடைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். முழு அகீதாவிற்கும், அதனை நடைமுறைப்படுத்த தேவையானவற்றிற்கும் குறுக்கே நிற்கும் எந்த ஒன்றையும் நிச்சயமாக அவர்கள்(ஸல்) ஏற்றுக் கொள்ளவில்லை. நடைமுறைப்படுத்துவதில் இடம்பெறும் சாதனத்தையும் (Means)  தோற்றத்தையும், அமைப்புகளையும் (Forms)  பொறுத்தவரை அவைகளுக்கு இஸ்லாமிய அகீதாவோடு எந்தவித தொடர்பும் இல்லை என்ற காரணத்தினால் அவற்றை அவர்கள் (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் தருணத்தில் இஸ்லாமிய சிந்தனையிலும் அதன் வழிமுறையிலும் (குமைசயா ரூ வுயசநநஙயா) எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் சிந்தனை மற்றும் அதன் செயலாக்க அமைப்பு (Fikrah & Tareeqah)  ஆகியவற்றை முழுமையாக பாதுகாக்கும் விதத்தில் செயல்பட வேண்டும். அதற்கு தேவைப்படும் எந்த சாதனத்தையும் (Means) பயன்படுத்துவதில் கேடு ஒன்றும் கிடையாது.






இஸ்லாமிய அழைப்புப்பணி மேற்கொள்ளப்படும்போது, ஒரு குறிப்பிட்ட இலக்கோடு ஒவ்வொரு செயலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பணியாளர்கள் எப்பொழுதும் இந்த நோக்கத்தைக் குறித்து விழிப்புணர்வோடு இருந்து அதை நிறைவேற்ற வேண்டும். இதில் அவர் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டு, அதை நிறைவேற்றுவதற்கு அயராது பாடுபட வேண்டும். ஆகவே, பணியாளர் செயலாக்கம் இல்லாத சிந்தனையில் நிறைவு கொள்ள மாட்டார். அவ்வாறெனில் அதை உறக்க நிலை தத்துவம் (Hyprotic Philosophy)  என்றோ அல்லது அலங்கார தத்துவம் (Fanciful Philosophy)  என்றோதான் கருதுவார். அதுபோலவே குறிக்கோள் இல்லாத சிந்தனையிலும் செயலிலும் அவர் நிறைவு அடைய மாட்டார். இறுதியில் அக்கறை இன்மையிலும், அவநம்பிக்கையிலும் முடிவுறும் சுழற்சி இயக்கமாகவே (Spiral Motion)  அதை கருதுவார். இதற்கு மாறாக, அழைப்புப் பணியாளர் சிந்தனையுடன் செயலை இணைப்பதை வலியுறுத்த வேண்டும். இவ்விரண்டையும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்திற்காக இணைத்து செயல்படுத்த வேண்டும். அது நடைமுறைக்கு ஏற்றாற்போலவும் குறிக்கோளை நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.








மக்கமா நகரத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். அங்குள்ள சமூகம் இஸ்லாத்தை செயலாக்க அமைப்பாக (System) ஏற்றுக் கொள்ளாது என்பதை உணர்ந்தபொழுது மதினாவின் சமூகத்தை தயார்படுத்தினார்கள். மதினாவில் அவர்கள்(ஸல்) இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். அதன் மூலம் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தினார்கள். இஸ்லாத்தின் செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு பின்னர் அதை எடுத்துச் செல்லும் விதமாக இஸ்லாமிய உம்மாவை தயார்படுத்தினார்கள். இறைத்தூதர்(ஸல்) காட்டித்தந்த அதே வழியில் இந்த பணியினை முஸ்லிம்கள் தொடர்ந்தார்கள். ஆகவே கிலாஃபா அரசு இல்லாத இந்த சூழலில், இஸ்லாமிய அழைப்புப் பணியினை மேற்கொள்ளும்போது இஸ்லாத்தை நோக்கி மக்களை அழைப்பது, இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தி, அதன் செய்தியை உலகெங்கிலும் எடுத்துச் செல்லும் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கு செயலாற்றுவதன் மூலம் மக்களை இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்பச் செய்வது ஆகிய பணிகள் அதில் அடங்கியிருக்க வேண்டும். இதன்மூலம், இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்காக உம்மாவில் மேற்கொள்ளப்படும் அழைப்புப்பணி உலகம் முழுவதையும் இஸ்லாத்தின்பால் அழைக்கும் இஸ்லாமிய அரசின் அழைப்புப்பணியாக மாற்றம் பெறும். மேலும் இஸ்லாமிய உலகில் மட்டும் மேற்கொள்ளப்படும் அழைப்புப்பணி (Local Da’wah)  அகிலம் அனைத்திற்கும் உரிய பொதுவான அழைப்புப்பணியாக மாற்றம் பெறும்.







தற்சமயம் நிலைபெற்றுள்ள அடிப்படை கோட்பாடுகளை (Doctrines- Aqeedah)  சரிபடுத்துவது, அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள தொடர்பை பலப்படுத்துவது ஆகியவற்றை தெளிவாக உள்ளடக்கியதாக இஸ்லாமிய அழைப்புப்பணி இருக்க வேண்டும். மேலும் எல்லா துறைகளிலும் அழைப்புப்பணி பிரகாசமாக மேற்கொள்ளப்பட்டு மக்களின் அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வுகள் வழங்கப்படும் விதமாக இருக்க வேண்டும். எனவேதான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் எதிர்நோக்கிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற ஒவ்வொரு வினாவுக்கும் முழுமையாக விடையளிக்கும்படியாக திருமறை வசனங்களை இறக்கிக்கொண்டேயிருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கீழ்கண்ட இறைவசனங்களை மக்காவில் ஓதுபவர்களாக இருந்தார்கள்.


அபூலஹபின் இருகரங்களும் நாசமடைவதாக. (அல் மஸ்த்:1)



நிச்சயமாக இது கண்ணியமிக்க ஒரு தூதரின் வார்த்தையாகும். இது கவிஞனின் வார்த்தையல்ல. நீங்கள் சொற்பமாகவே விசுவாசம் கொள்கிறீர்கள். (அல் ஹாக்க:40,41)



(அளவிலும், நிறுவையிலும்) மோசடி செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து வாங்கும் போது முழு அளவை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் மனிதர்களுக்கு கொடுக்கும் போது அளவையிலும், நிறுவையிலும் (குறைபதன்மூலம்) நஷ்டம் ஏற்படுத்துகிறார்கள். (அல் முதாஃப்பிஃபின்:1,3)




விசுவாசம் கொண்டு நற்கருமம் செய்பவர்களுக்கும் சுவனம் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதுதான் மகத்தான் வெற்றியாகும். (அல் புருஜ்:11)



மேலும் மதினாவில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.



தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத்தை கொடுத்து வாருங்கள். (அல்பகரா:43)



கனத்தவர்களாகவோ, இலேசானவர்களாகவோ புறப்படுங்கள். உங்கள் செல்வங்களைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் போராடுங்கள். (அத்தவ்பா:41)



மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதினார்கள்.



விசுவாசம் கொண்டவர்களே! உங்களுக்கிடையில் குறிப்பிட்ட தவணைக்கு கடன் கொடுக்கும் சமயத்தில் அதை எழுத்து மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள். (அல் பகரா:282)



உங்கள் மத்தியிலுள்ள செல்வந்தர்களுக்கு இடையில் மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்காதிருக்கும் பொருட்டு...(அல்ஹஷர்:7)



நரகத்தின் தோழமையைக் கொண்டவர்களும் சுவனத்தின் தோழமையை கொண்டவர்களும் சமமானவர்கள் அல்ல. சுவனத்தின் தோழமையை பெற்றுக் கொண்டவர்களெ வெற்றியாளர்கள். (அல் ஹஷ்ர்:20)



இவ்வாறு மனிதனை மனிதன் என்ற அந்தஸ்த்தில் வைத்து, அவனைப் பற்றி முழுமையாக இஸ்லாம் உரையாடுகிறது. அதன் மூலம் அவனிடம் முழுமையான மற்றும் தீவிரமான மாற்றத்தை அது கொண்டு வருகிறது. இதனடிப்படையில் இஸ்லாமிய அழைப்புப்பணியின் வெற்றி என்பது, மக்கள் தங்கள் அன்றாட வாழ்வியல் விவகாரங்களை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பை (System of Islam - Nidam al Islam)  அவர்களிடம் எடுத்துச் செல்வதிலேயே தங்கியிருக்கிறது. எனவே இந்த அழைப்புப்பணியை வாழ்வின் இலக்காகக்கொண்டு அழைப்புப்பணியாளர்கள் தமது பயணத்தை மிக மிக முனைப்புடன் தொடரவேண்டும்.






குறையற்ற வகையிலும், நிறைவாகவும், முழுமையாகவும் பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலை தங்களிடத்தில் ஏற்படுத்திக் கொள்ளாத வரையில் அழைப்புப் பணியாளர்கள் தீவிரமான முறையில் பணியாற்றி தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பது சாத்தியம் இல்லாத விஷயமாகும். நிரந்தரமாக சத்தியத்தை தேடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். எந்த அந்நிய சிந்தனையிலிருந்தும் தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும் விதமாக தொடர்ந்து சத்தியத்தை தேடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அவர்களிடத்தில் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ள அந்நிய சிந்தனைகளிலிருந்தும் அவற்றிற்கு நெருக்கமாக உள்ள சிந்தனைகளிலிருந்தும் அவர்கள் தங்களை தூரமாக்கிக் கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கை தாங்கள் சுமந்து செல்லும் சிந்தனையை பரிசுத்தமாகவும் தெளிவாகவும் வைத்துக் கொள்ள உதவிடும். சிந்தனையில் பரிசுத்தம் (Purity in Thought),  அதில் தெளிவு (Clarity in Thought)  ஆகிய இரண்டு மட்டும்தான் இஸ்லாத்தின் வெற்றிக்கும், தொடர்ந்து அந்த வெற்றியை நிலைபடுத்துவதற்கும் உத்திரவாதம் அளிக்கக்கூடியதாகும்.






அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்த கட்டளையாக எண்ணி இந்த கடமையை அழைப்புப் பணியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ்(சுபு)வின் உவப்பை மாத்திரம் எதிர்பார்த்தவர்களாக ஆனந்தத்துடனும், மிகுந்த உற்சாகத்துடனும் இந்த பணியினை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். மக்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டையோ அல்லது வேறு எந்த உலக இலாபங்களையோ நிச்சயமாக அவர்கள் தேடக்கூடாது. அல்லாஹ்(சுபு)வின் உவப்பை பெறுவதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது.